Jump to content

அமெரிக்காவை அடுத்து பிரித்தானியாவும் எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

UK_Flag.jpg

அமெரிக்காவை அடுத்து பிரித்தானியாவும், சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் தமது நாட்டவர்களுக்கு பயண எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வோர், வன்முறைகள் மற்றும் ஆட்கடத்தல்களுக்குப் பொறுப்பான ஒழுங்கமைக்கப்பட்ட, ஆயுதக்குழுக்கள் சிறிலங்காவில் செயற்படுவதை மனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

வெளிநாட்டவர்களுக்கு எதிரான வன்முறைகள் அரிதாகவே இடம்பெறுகின்ற போதிலும், அங்கு சிறார்கள் உள்ளிட்டவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. 

எனவே குறிப்பாக பெண்கள், தனியாகவோ சிறிய குழுவாகவோ பயணம் செய்யும் போது கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பிரித்தானியர்களுக்கு மட்டும் ஆபத்து உள்ளது என்று பரிந்துரைப்பதற்கு சான்றுகள் இல்லாத போதிலும், குறிப்பிட்ட குற்றக்குழுக்கள் சுற்றுலாப் பிரதேசங்களில் அதிகம் நடமாடுகின்றன. 

2011 டிசெம்பரில் பிரித்தானியர் ஒருவர் இத்தகைய குழுவொன்றினால் கொல்லப்பட்டார் என்றும் இந்த அறிக்கையில் நினைவூட்டப்பட்டுள்ளது. 

இதுபோன்ற எச்சரிக்கை அறிவிப்பை அமெரிக்காவும் கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. 

அதையடுத்து, விளக்கம் கோருவதற்காக நேற்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசனை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.puthinappalakai.com/view.php?20130703108597

Posted

வன்முறைகள் மற்றும் ஆட்கடத்தல்களுக்குப் பொறுப்பான ஒழுங்கமைக்கப்பட்ட, ஆயுதக்குழுக்கள் சிறிலங்காவில் செயற்படுகின்றன, அங்கு செல்வதை தவிர்க்குமாறு, தனது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது பிரித்தானியா.

இது தொடர்பில்,பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறிலங்காவில், வெளிநாட்டவர்களுக்கு எதிரான வன்முறைகள் அரிதாகவே இடம்பெறுகின்ற போதிலும், அங்கு சிறார்கள் உள்ளிட்டவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. 
 
எனவே பெண்கள், தனியாகவோ சிறிய குழுவாகவோ பயணம் செய்யும் போது கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் பிரித்தானியர்களுக்கு மட்டும் ஆபத்து உள்ளது என்று பரிந்துரைப்பதற்கு சான்றுகள் இல்லாத போதிலும், குறிப்பிட்ட குற்றக்குழுக்கள் சுற்றுலாப் பிரதேசங்களில் அதிகம் நடமாடுகின்றன. 
 
2011 டிசெம்பரில் பிரித்தானியர் ஒருவர் இத்தகைய குழுவொன்றினால் கொல்லப்பட்டார் என்றும் அந்த அறிக்கையில் நினைவூட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற எச்சரிக்கை அறிவிப்பை அமெரிக்காவும் கடந்த வாரம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilkathir.com/news/13350/58//d,full_art.aspx#sthash.bz1WUrbd.dpuf

Posted

ஆட்கடத்தல் குழுக்களும் பரப்புரையாளர்கள், தகவல் வழங்குவோர் மேற்கத்தைய நாடுகளில் ஒழிந்திருக்கிறார்கள்.

அவர்களை கைது செய்து விசாரிக்கவேண்டும்.

சில தமிழர்களை நாம் இழக்க வேண்டி வரும்  :D 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.