24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
இருதய சத்திரசிகிச்சைக்காக வரும் 25 - 30 வயதுக்குட்பட்ட இளையவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
மேலே 👆 இருப்பது, இலங்கையில், 2013 - 2023 இல் இறுதியாக தரவுகள் சேகரிக்கப் பட்ட போது அதிக மரணங்களை ஏற்படுத்தும் காரணங்களாகக் கண்டறியப் பட்டவை. மாரடைப்பினால் ஏற்படும் மரணம் 43% வீத அதிகரிப்பு, மூளை இரத்த அடைப்பி(Stroke) னால் ஏற்படும் மரண வீதம் 26% அதிகரிப்பு. அடுத்த தரவு சேகரிப்பில், இந்த வீதங்கள் இன்னும் அதிகரித்திருக்கும். தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணை, பொரித்த/கரித்த உணவுகளின் பிரபலம், உடலுழைப்பின்மை, ஆண்கள் 30 தாண்டும் முன்பே பெற்றுக் கொள்ளும் "மாறாத தொப்பை"- இவையெல்லாம் தான் காரணங்கள். பாடசாலை மட்டத்திலேயே ஏதாவது செய்ய வேண்டும். இல்லா விட்டால் இதை மாற்ற வழிகள் இல்லை! தரவு மூலம்: https://www.healthdata.org/research-analysis/health-by-location/profiles/sri-lanka
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
- ஏழு கோடித் தமிழர்களுடனும் உறவைப் பேணத் தவறியது ஏன்?; கஜேந்திரகுமார் எம். பி. கேள்வி
மக்களை எந்தவிதத்திலாவது ஏமாற்றி கவர வேண்டும் எனும் நோக்கத்தின் அடையாளம் தான் இது. ஸ்ராலின் மோடிக்கு கடிதம் எழுதுவது, தமிழக முதலைமைச்சர்கள் தம் பிரதமருக்கு கடிதம் எழுதுவது என்பது எல்லாம் அடிக்கடி நிகழும் எந்த பயனும் அற்ற, எந்த பயனும் ஏற்படக் கூடாது எனும் நோக்கில் மக்களை ஏமாற்றச் செய்யும் விடயம் எனும் மிக அற்பமான உண்மையை இவர் அறியாதவராக இருக்க மாட்டார். ஆனால், அதனையே ஒரு சாதனையாக உருப்பெருக்கம் செய்து தம் வங்குரோத்து அரசியலை நிரப்ப பார்க்கின்றார். இவர்கள் இப்படியே படம் காட்டிக் கொண்டு இருந்தால், முழு வடக்கும் தேசியக் கட்சிகளிடம் சரணடைவதைத் தவிர வேறு எதுவும் நிகழ்ந்து விடாது.- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மிகவும் கவலையான தகவல். சின்ன வயதில் இருந்து அப்பா, அம்மா, எனக்கு படிப்பித்த நல் ஆசான்கள், வாசித்த இலக்கியங்கள், கடந்து சென்ற நல்ல மனிதர்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்தது நல்லவர்களுக்கு பெரும் துயரமோ இழப்போ ஏற்படாது என்பதே. அறத்தின் வழி வாழ்கின்றவர்களுக்கு துன்பமும் இழப்பும் குறைவு என்பதே. ஆனால் வாழ்வில் நிகழ்வது அவ்வாறு இல்லை எனும் மிகவும் கசப்பான உண்மையைத் தான் நான் அடிக்கடி காண்கின்றேன். மோகனுக்கும், அவரது பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட இந்த இழப்பை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வாழ்வின் யதார்த்தம் முகத்தில் அறைந்து செல்கின்றது. முரண்பட்ட அறம் தான் இன்று கண் முன்னே விரிந்து செல்கின்றது. மோகன், உங்களைப் பார்த்து Be Strong, இந்த நேரத்தில் உறுதியாக இருங்கள் என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதை கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உங்களை அவதானித்ததில் இருந்து நான் உணர்ந்த விடயம். ஏனெனில் உங்கள் துணை சுகவீனம் அடைந்ததில் இருந்து நீங்கள் காட்டிய உறுதி என்னால் நினைத்துப் பார்க்க முடியாதது. எல்லா வழிகளும் அடைபட்டு போன பின்பு கூட நீங்கள் மனதளவில் உறுதியாக இருந்ததை கண்டுள்ளேன். யாழை நிர்வகிப்பதில் கூட எந்த தளர்வையும் நீங்கள் காட்டவில்லை என்பது சாதாரண விடயம் அல்ல. எந்த நிலையிலும் தளராமல் இருக்கும் இந்த மனவுறுதி தான் உங்கள் பிள்ளைகள் இருவருக்கும் இருக்கும் என நம்புகின்றேன். அக்காவுக்கு எனதும் என் குடும்பத்தினரதும் கண்ணீர் அஞ்சலிகள்.- ஏழு கோடித் தமிழர்களுடனும் உறவைப் பேணத் தவறியது ஏன்?; கஜேந்திரகுமார் எம். பி. கேள்வி
2020 இல் இரண்டு பா.உக்கள் (ஒன்று வாக்குகள் மூலம், ஒன்று "பின் கதவு" 😎எனப்படும் தேசியப் பட்டியல் மூலம்) கொண்டிருந்த கஜேந்திரகுமாரும் தான் ஏழு கோடி தமிழக தமிழர்களின் தலைவர்களைச் சந்திக்கவில்லை. இப்போது ஒற்றை ஆசனமாகக் குறைந்த பின்னர் தான் புதிய ஞானங்கள் பிறந்திருக்கிறதா? கீழே 👇 இருக்கும் செய்தி யாழில் பகிரப் பட்ட போது, எழுந்த எதிர்ப்போடு எப்படி இந்த கஜேந்திரகுமாரின் ஆதங்கத்தை இணைத்துப் பார்ப்பது? Gold FM NewsSri Lankan MPs attend World Tamil Diaspora Day celebratio...Sri Lankan MPs attend World Tamil Diaspora Day celebrations in Chennai. Most visited website in Sri Lanka.- இருதய சத்திரசிகிச்சைக்காக வரும் 25 - 30 வயதுக்குட்பட்ட இளையவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
இருதய சத்திரசிகிச்சைக்காக வரும் 25 - 30 வயதுக்குட்பட்ட இளையவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு Published By: Vishnu 15 Jan, 2026 | 06:47 PM (செ. சுபதர்ஷனி) அண்மைய நாட்களில் இருந்து இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 60 தொடக்கம் 70 வயதுக்குட்பட்டவர்களே இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு வருகை தருவது வழக்கமானதாக இருந்தபோதிலும், சமீபகாலமாக 25 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட இளையவர்களும் இந்த சத்திரசிகிச்சைக்காக வருகை தருவதாக விசேட வைத்திய நிபுணர் நாலக்க திஸாநாயக்க தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் மேற்கொள்ளப்படும் இருதய சத்திர சிகிச்சையில் 65 தொடக்கம் 67 சதவீதமானவை பைபாஸ் சத்திர சிகிச்சையாகும். அண்மைய நாட்களில் இருந்து இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் வயதில் பைபாஸ் சிகிச்சைக்காக வருகை தருபவர்களின் எண்ணிக்கையும், வீதமும் சடுதியாக அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. அத்தோடு தொற்றா நோய்களும் சமூகத்தில் அதிகரித்துள்ளன. நோய் தொடர்பான தெளிவும் அவதானமும் இல்லாமையே நோயாளர் அதிகரிப்புக்குப் பிரதான காரணமாக உள்ளது. ஆரம்ப காலத்தில் விலா எலும்புகளை அகற்றி இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் தற்போது நவீன சிகிச்சை முறைகளைப் பின்பற்றி எலும்புகளை அகற்றாது இடது பக்கமாக இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வயது வந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். இதய வால்வுகளில் ஏற்படும் அடைப்பால் மாரடைப்பு ஏற்படுகிறது. 60 தொடக்கம் 70 வயதுக்குட்பட்டவர்களே இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு வருகை தருவது வழக்கமானதாக இருந்தபோதிலும், சமீபகாலமாக 25 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட இளையவர்களும் இந்த சத்திரசிகிச்சைக்காக வருகை தருகின்றனர். இலங்கையில் கொழும்பு, கண்டி, காலி கராபிட்டிய ஆகிய தேசிய வைத்தியசாலைகளிலும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஒரு சில வைத்தியசாலைகளில் மாத்திரமே இருதய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சிகிச்சைகள் வழங்கப்படுவதால், சத்திரசிகிச்சைக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ள நோயாளர் காத்திருப்புப் பட்டியலில் ஒரு வருடத்துக்கும் அதிக காலத்துக்கு நீண்டுள்ளது. ஆகையால் இலங்கை போன்ற நாடுகளில் இவ்வாறான நோய்களில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதே சிறந்த தீர்வு. பொதுமக்கள் நோய்த் தடுப்புக் குறித்து அவதானம் செலுத்த வேண்டும். முறையான உடற்பயிற்சி, உணவுப் பழக்கம், மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளுதல் மற்றும் இரத்த கொலஸ்ட்ரோலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெறலாம் என்றார். https://www.virakesari.lk/article/236125- பிரான்ஸில் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் ; இலங்கைத் தமிழர் செய்த செயலால் ஒரு வருட சிறை
செய்தியிலேயே குற்றவாளியின் குற்றப் பொறுப்பை நிராகரித்து வெள்ளையடித்திருக்கிறார்கள் போல தெரிகிறது! குடிவரவு நிலை பற்றிய மன அழுத்தம் இருந்தால் தண்ணியப் போட்டு விட்டு தனது பொறுப்பில் இருக்கும் அப்பாவிப் பெண்களைத் தாக்கலாம் போல, பிரச்சினை தீர்ந்து விடும்! இவர் போன்றவர்களை பிரான்சில் வைத்து சாப்பாடு போடாமல், சிறிலங்கா ஜெயிலுக்கு அனுப்பி வைப்பது தான் நல்ல தெரிவாக இருக்கும்!- Today
- நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
ஐக்கிய இராச்சிய பிரஜை ஒருவரினால் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு விசேட நிதி நன்கொடை 15 Jan, 2026 | 12:31 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு அருகில் வசிக்கும் ரிச்சர்ட் வுட் தம்பதியினர் (Mr and Mrs Richard Wood) 2,000 ஸ்டேர்லிங் பவுண் நன்கொடை வழங்கியுள்ளனர். இந்த நன்கொடை பற்றித் தெரிவித்து, ரிச்சர்ட் வுட் தம்பதியினர், ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் நிமல் சேனாதீரவிடம், அதற்கான பற்றுச்சீட்டுடன் கூடிய கடிதத்தை ஒப்படைத்துள்ளனர். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் இந்த நிதி நன்கொடை வழங்கப்பட்டதாகவும், கடந்த நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் மூன்று வாரங்கள் இலங்கையில் பயணம் செய்த தமக்கு, நாட்டின் இயற்கை அழகு, சுவையான உணவுகள் மற்றும் மக்களின் உயர்ந்த மனித குணங்கள் குறித்து நல்லெண்ணம் ஏற்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களுக்கு மத்தியிலும், நாடு வலுவாக மீண்டெழுந்து வருவதை காண முடிந்ததாகவும், எதிர்காலத்தில் தமக்கு மிக அண்மையில் உள்ள ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயத்துடன் நல்லுறவைப் பேண எதிர்பார்த்துள்ளதோடு, இலங்கையின் தேசிய தினத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/236081- மன்னாரில் ஜனாதிபதியால் காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.!
ஜனாதிபதி தலைமையில் மன்னார், Hayleys Fentons Limited 50 மெகாவோட் காற்றாலை மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் 15 Jan, 2026 | 05:08 PM 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, மன்னாரில் Hayleys Fentons Limited நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படும் 50 மெகாவோட் காற்றாலை மின் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று வியாழக்கிழமை (15) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. மன்னாரின் இயற்கை காற்று சக்தியைப் பயன்படுத்தி, 10 காற்றாலை விசையாழிகளைக் கொண்ட இந்த அதிநவீன காற்றாலை, ஆண்டுக்கு 207,000,000 கிலோ வோட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. ஒரு அலகு மின்சாரம் 0.0465 அமெரிக்க டொலர் அல்லது 14.37 இலங்கை ரூபாயில் வழங்கப்படுவதோடு, இந்த திட்டம் மார்ச் 2027 இல் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஓலைத்தொடுவாய் ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலைக்கு நவீன கல்வி வசதிகளுடன் கூடிய முழுமையான Smart வகுப்பறையை வழங்கும் ஆவணங்களை கையளித்தல், தேசிய நீர் வழங்கல் சபையுடன் இணைந்து 200 வீடுகளுக்கு குடிநீர் வசதிகளை வழங்குதல், இலங்கை மின்சார சபையுடன் இணைந்து மன்னார் பாலம் வழியாக தள்ளாடி நகரம் வரை நடைப்பாதைக்காக புதிய மின்விளக்குகள் பொருத்துதல், அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து, சுமார் 10 மில்லியன் ரூபா செலவில் இலகுவாக நீர் வழிந்தோடும் வகையில் புதிய நீர்வழிகளை உருவாக்கி, வெள்ளத்தைத் தடுக்க கால்வாய்களைத் தோண்டுதல், போன்ற பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வும் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது. இன்று ஆரம்பிக்கப்படும் இந்த திட்டம், நாட்டை புதுப்பிக்கத்தக்க வலுசக்தியால் பலப்படுத்துவதோடு, பிரதேச மக்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் நன்மைகளை வழங்கும் திட்டமாகும் என்று நிகழ்வில் உரையாற்றிய வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் என்ற வகையில், மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இந்தத் திட்டத்தின் பின்னணியில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும், மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதே உண்மையில் எமது தேவை என்றும் குறிப்பிட்டார். மன்னாரை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில், அந்தப் பகுதியில் உள்ள மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, மன்னார் பகுதி நாட்டிலேயே அதிக காற்று மின் உற்பத்தி திறன் கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். நாட்டின் அபிவிருத்திக்கு அந்த உயர் இயலுமையைப் பயன்படுத்த அரசாங்கத்தின் வலுவான தேவையை நிரூபிக்கும் நாளாக இன்றைய நாளை குறிப்பிடலாம். இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தி வரலாற்றில் மிகக் குறைந்த விலையில் ஒரு அலகு மின்சாரத்தை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்ட முதல் திட்டமும் இதுவாகும். அதன்படி, 0.0465 அமெரிக்க டொலர் விலையில் இந்த கொள்வனவு செய்யப்படுகிறது. மன்னார் பகுதியில் வேறு பல திட்டங்களும் நடைபெற்று வருகின்றன. கடந்த 2025 ஆம் ஆண்டு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் ஊடாக 1848 மெகாவோட் மின்சக்தியைப் பெறுவது எமது இலக்காக இருந்தது. இருப்பினும், அந்த இலக்கைத் தாண்டி 2,695 மெகாவோட் திறனைச் சேர்க்க எம்மால் முடிந்துள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டிற்கான இலக்கு 2078 மெகாவோட் ஆகும். தற்போது, இது 3,089.5 மெகாவோட் பெறுவதற்காக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. மேலும், 2027, 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டுகளுக்கான இலக்குகள் முறையே 2563, 3253 மற்றும் 3943 மெகாவோட்களாக இருந்தபோதிலும், நாம் ஏற்கனவே அந்த இலக்குகளை தாண்டி முறையே 3,822.5 மெகாவோட், 4332.5 மெகாவோட் மற்றும் 4,634.5 மெகாவோட் மின்சாரத்திற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதன்படி, 2025-2029 ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட மொத்த திறனான 9,759 மெகாவோட் மின் உற்பத்திக்கு பதிலாக 12,789.5 மெகாவோட் மின்சாரத்திற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட முடிந்தது. புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்குகளை அடைய மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை இது எடுத்துக்காட்டுகிறது. இப்பிரதேசத்தின் காற்று மின் உற்பத்தித் திறன் மற்றும் இப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பிரதேசத்திற்கு உரித்தான புவியியல் ரீதியான காரணிகள் குறித்து நாம் ஆராய்ந்தோம். குறிப்பாக, இப்பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளில் அரசாங்கத்தின் தலையீடு மிக அவசியமானது என்பதே இங்குள்ள மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, மன்னார் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக நாம் விசேட செயற்பாட்டுக் குழுவொன்றை நியமித்துள்ளோம். அதன் ஊடாக இப்பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, இங்குள்ள புவியியல் ரீதியான அமைவிடம் காரணமாக நீர் வழிந்தோடாமையினால் ஏற்படும் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது அதற்கான நில அளவீட்டுப் பணிகள் இடம்பெற்று வருவதுடன், அதன் முன்னேற்றம் குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டங்களை வகுத்து, மக்களுக்குத் தேவையான வசதிகளை விரைவாகச் செய்துகொடுக்க மாவட்டச் செயலாளரின் தலையீட்டுடன், அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. நாம் இந்த நடவடிக்கைகளை மின்சார உற்பத்தியுடன் மாத்திரம் மட்டுப்படுத்தவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்ற வகையில், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நிவாரணங்களை வழங்கி அதன் நன்மைகளை மக்களுக்கு ஈட்டிக்கொடுக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். நாம் எக்காலத்திலும் மக்களை மறந்துவிடவில்லை என்பதுடன், அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க அரசாங்கம் என்ற ரீதியில் கடமைப்பட்டுள்ளோம். எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கட்சிபேதமின்றி இதற்கு ஆதரவளிப்பார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம். இவை எமது அரசியல் நோக்கங்களுக்காகச் செய்யப்படும் விடயங்கள் அல்ல. எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கி இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வோம் என கேட்டுக்கொள்கிறேன். என்றும் தெரிவித்தார். இலங்கை நிலைபெறு சக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் விஜேந்திர பண்டார, இலங்கை மின்சார சபை பொதுமுகாமையாளர் பொறியியலாளர் கே.எஸ்.ஐ. குமார, Hayleys PLC நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டிதகே மற்றும் Hayleys Fentons Limited நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக்க ஆகியோரும் இங்கு கருத்துத் தெரிவித்தனர். வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோருடன் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உட்பட பாதுகாப்பு பிரிவு பிரதானிகள், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலைபெறுசக்தி அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகள், Hayleys PLC நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சரத் கணேகொட, Hayleys Advantis Ltd நிறுவனத்தின் பொது முகாமையாளர் ருவன் வித்யாரத்ன உள்ளிட்ட அதன் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/236114- ஜல்லிக்கட்டு செய்திகள் 2026
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 22 காளைகளை பிடித்தவருக்கு கார் பரிசு - முழு விவரம் 15 ஜனவரி 2026, 03:11 GMT புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 15) காலை தொடங்கி, 12 சுற்றுகளுடன் மாலையில் நிறைவடைந்தது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளை பிடித்த வலையங்குளம் பாலமுருகன் முதல் இடத்தை பிடித்தார். 17 காளைகளை பிடித்த கார்த்திக் இரண்டாவது இடத்தை பிடித்தார். ரஞ்சித் என்பவர் 16 மாடுகள் பிடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உள்பட 57 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 11 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக, திருப்பரங்குன்றம் அவனியாபுரம் சாலையில் குருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி கோவில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டது. காலை 7.30 மணிக்கு, தமிழ்நாட்டின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்ற பின்னர் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கேற்பதற்காக 600 வீரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருந்த நிலையில் 573 பேர் பங்கேற்க வந்திருந்தனர். இதில் 12 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 561 பேர் போட்டியில் பங்கேற்றனர். மொத்தம் இறுதிச் சுற்றோடு சேர்த்து 12 சுற்றுகள் நடைபெற்றன. மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டுக் காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். முதல் பரிசாக கார் படக்குறிப்பு,அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகளை வழங்கினார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளைப் பிடித்து, முதல் இடத்தைப் பிடித்த மதுரை மாவட்டம், வலையங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தில், 17 காளைகளை பிடித்த கார்த்திக் என்பவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல, சிறந்த மாடுகளுக்கான பரிசுகளில் முதல் இடத்தைப் பிடித்த விருமாண்டி சகோதரர்கள் காளைக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தைப் பிடித்த ஜி.ஆர் கார்த்திக் என்பவரின் காளைக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகளை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். பதினோராவது சுற்று நிலவரம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 11ஆம் சுற்று முடிவில், களம் கண்ட 870 மாடுகளில் 219 மாடுகள் பிடிபட்டன. இதில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற மொத்த வீரர்கள் - 36 வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: பாலமுருகன், வலையங்குளம் - 18 கார்த்தி, அவனியாபுரம் - 16 கார்த்திக், திருப்பரங்குன்றம் - 10 11ஆம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: அமரன், சிவகங்கை - 4 ஒன்பதாம் சுற்று நிலவரம் ஒன்பதாம் சுற்றின் முடிவில், களம் கண்ட 764 மாடுகளில் 190 மாடுகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: பாலமுருகன், வலையங்குளம் - 18 கார்த்தி, அவனியாபுரம் - 16 ரஞ்சித், அவனியாபுரம் - 9 9ஆம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: பாலமுருகன், வலையங்குளம் - 18 ராபின், செக்கானூரணி - 3 ராஜு, செக்கானூரணி - 2 https://www.bbc.com/tamil/articles/c5y5l9l2y31o- ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் இன்று ஆரம்பம்; இலங்கை உட்பட 16 அணிகள் பங்கேற்பு 15 Jan, 2026 | 12:01 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அடுத்த கிரிக்கெட் நட்சத்திர தலைமுறையினரின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், தைப்பொங்கல் தினமான இன்று ஆரம்பமாகிறது. ஸிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெறும் 16ஆவது 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அத்தியாயம் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய இளையோர் அணிகளுக்கு இடையில் ஸிம்பாப்வே, புலாவாயோவில் இன்று நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகும். சி குழுவில் இடம்பெறும் ஸிம்பாப்வேக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையிலான போட்டி ஹராரேயிலும் டி குழுவில் இடம்பெறும் அறிமுக அணி தன்ஸானியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான போட்டி விண்ட்ஹோக்கிலும் இன்று நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் யாவும் பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகும். ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜப்பானை விண்ட்ஹோக்கில் 18ஆம் திகதி சந்திக்கும். இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் 16 நாடுகளைச் சேர்ந்த 240 இளம் வீரர்கள் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் முதன் முதலில் அவுஸ்திரேலியாவில் அந்நாட்டின் 200 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் முகமாக நடத்தப்பட்டது. இதற்கு அமைய அங்குரார்ப்பண அத்தியாயம் 1988ஆம் ஆண்டு மெக்டொனல்ட்ஸ் பைசென்டினியல் இளையோர் உலகக் கிண்ணம் என பெயரிடப்பட்டிருந்தது. பத்து வருடங்கள் கழித்து ஐசிசி 19 வயதுக்குட்ட உலகக் கிண்ணம் (ஆண்கள்) என பெயரிடப்பட்டு 1998 இல் இருந்து இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அங்குரார்ப்பண அத்தியாயத்தில் விளையாடிய சனத் ஜயசூரிய, ரொமேஷ் களுவித்தாரண, சஞ்சீவ ரணதுங்க, சந்திக்க ஹத்துருசிங்க போன்றவர்கள் இலங்கை தேசிய அணியில் இடம்பெற்றனர். அவர்களில் சனத் ஜயசூரிய, ரொமேஷ் களுவித்தாரன ஆகிய இருவரும் 1996 உலக சம்பியன் அணியில் இடம்பெற்றதுடன் உலகக் கிண்ண வரலாற்றில் முதலாவது பெறுமதி வாய்ந்த வீரர் விருதை வென்ற பெருமை சனத் ஜயசூரியவை சாருகிறது. இந்த வருட ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் நடப்பு சம்பியனும் நான்கு தடவைகள் சம்பியனுமான அவுஸ்திரேலியா (1988, 2002, 2010, 2024), ஐந்து தடவைகள் சம்பியனான இந்தியா (2000, 2008, 2012, 2018, 2022), இரண்டு தடவைகள் சம்பியனான பாகிஸ்தான் (2004, 2006), தலா ஒரு தடவை சம்பியனான இங்கிலாந்து (1998), தென் ஆபிரிக்கா (2014), மேற்கிந்தியத் தீவுகள் (2016), பங்களாதேஷ் (2020) ஆகிய நாடுகளில் ஒன்று மீண்டும் சம்பியனாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏழு நாடுகள் உட்பட 16 நாடுகள் நான்கு குழுக்களில் மோதுகின்றன. ஏ குழுவில் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய அணிகளுடன் இலங்கை இடம்பெறுகிறது. பி குழுவில் பங்களாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகியன இடம்பெறுகின்றன. சி குழுவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஸ்கொட்லாந்து, ஸிம்பாப்வே ஆகியன பங்குபற்றுகின்றன. டி குழுவில் ஆப்கானிஸ்தான், தென் ஆபிரிக்கா, தன்ஸானியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன போட்டியிடுகின்றன. இந்த நான்கு குழுக்களிலும் முதல் சுற்று போட்டிகள் இன்று ஜனவரி 15 முதல் 24 வரை லீக் அடிப்படையில் நடத்தப்படும். ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பெறும் 12 அணிகள் இரண்டு குழுக்களில் தலா 6 அணிகள் வீதம் சுப்பர் 6 சுற்றில் விளையாட தகுதிபெறும். இந்த சுற்று ஜனவரி 25 முதல் பெப்ரவரி 1 வரை நடைபெறும். லீக் சுற்றில் கடைசி இடங்களைப் பெறும் 4 அணிகள் நிரல்படுத்தல் போட்டியில் விளையாடும். சுப்பர் 6 சுற்று முடிவில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாடுவதுடன் அவற்றில் வெற்றிபெறும் அணிகள் 19 வயதுக்குட்பட்ட உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும். அரை இறுதிப் போட்டிகள் பெப்ரவரி 3, 4ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி பெப்ரவரி 6ஆம் திகதியும் நடைபெறும். https://www.virakesari.lk/article/236080- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பயனாளியின் முகம் மறைக்கப்பட்ட படம். வங்கிப்பரிமாற்ற பிரதி.- ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணம் டி குழு: ஆப்கானிஸ்தான், தென் ஆபிரிக்கா, தன்ஸானியா, மெற்கிந்தியத் தீவுகள் Published By: Vishnu 14 Jan, 2026 | 08:49 PM (நெவில் அன்தனி) ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 16ஆவது அத்தியாயத்தில் டி குழுவில் மீண்டும் சம்பியனாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இரண்டு முன்னாள் சம்பியன்களான தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றுடன் ஆப்கானிஸ்தான், அறிமுக அணி தான்சானியா ஆகியன போட்டியிடுகின்றன. தென் ஆபிரிக்கா 2014இல் சம்பியனானதுடன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரவேற்பு நாடாக அரை இறுதிவரை முன்னேறி இருந்தது. 2016இல் சம்பியனான மேற்கிந்திய தீவுகள் எட்டு வருடங்களின் பின்னர் கிண்ணத்தை மீண்டும் வெல்வதற்கான முயற்சியில் இறங்கவுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் மிகக் குறுகிய வித்தியாசத்தில் அரை இறுதி வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் தவற விட்டிருந்தது. ஆப்கானிஸ்தான் இரண்டு தடவைகள் (2018, 2022) அரை இறுதிவரை வீறுநடை போட்டிருந்தது. ஆனால், 2024இல் முதல் சுற்றுடன் வெளியேறியது. தன்சானியா தனது அறிமுக உலகக் கிண்ணத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கவுள்ளது. ஆப்கானிஸ்தான் 2024 இளையோர் உலகக் கிண்ணப் போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அடைந்த ஆப்கானிஸ்தான், அதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அரை இறுதிவரை முன்னேறியது. இம் முறை அரை இறுதி அல்லது அதற்கும் அப்பால் முன்னேற ஆப்கானிஸ்தான் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆபிரிக்காவில் 2024இல் நடைபெற்ற உலகக் கிண்ண அத்தியாயத்தில் 3 நேரடி தோல்விகளுடன் முதல் சுற்றில் இருந்து ஆப்கானிஸ்தான் வெளியேறியது. எதிர்நீச்சல் போடக்கூடிய தன்மை கொண்ட ஆப்கானிஸ்தான், இம் முறை எதிரணிகளுக்கு சவாலாக விளங்கி எதையாவது சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் 2010ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் ஆப்கானிஸ்தான் தொடர்ச்சியாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் விளையாடி வருகிறது. அத்துடன் நான்கு தடவைகள் நொக் - அவுட் சுற்று வரை முன்னேறி இருந்தது. உசைருல்லா நியாஸாய், பங்களாதேஷுக்கு எதிராக 103 ஓட்டங்களைப் பெற்ற பைசால் கான் ஆகிய இருவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த போதிலும் குழு நிலை போட்டிகளுக்கு அப்பால் ஆப்கானிஸ்தான் முன்னேறவில்லை. 19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணித் தலைவராக விக்கெட் காப்பாளர் மஹ்பூப் கான் நியமிக்கப்பட்டுள்ளார். நூரிஸ்தானி ஓமர்ஸாய் மற்றும் ஸய்த்துல்லா ஷஹீன் ஆகிய இருவரும் அணியில் இடம்பெறும் சிறந்த பந்துவீச்சாளர்களாவர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் விளையாடிய எவரும் இந்த வருட அணியில் இடம்பெறவில்லை. தென் ஆபிரிக்கா இரண்டு வருடங்களுக்கு முன்னர் சொந்த மண்ணில் இறுதிப் போட்டி வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்ட தென் ஆபிரிக்கா, இம்முறை அதனைவிட சிறப்பாக செயல்படும் குறிக்கோளுடன் விளையாடவுள்ளது. இந்த வருடப் போட்டி ஆபிரிக்க கண்டத்தில் நடைபெறுவதால் ஸிம்பாப்வே, நமிபியா ஆடுகளங்களின் தன்மையை நன்கு அறிந்தவர்களாக தென் ஆபிரிக்க வீரர்கள் இலகு மனதுடன் ஆற்றல்களை வெளிப்படுத்தி தமது அணியை இரண்டாவது தடவையாக சம்பியனாக்க முயற்சிக்கவுள்ளனர். இந்தியாவுக்கு எதிராக 2024இல் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்து வெளியேறியது. அப்போது விளையாடிய வீரர்கள் எவரும் இந்த வருட அணியில் இடம்பெறவில்லை. தென் ஆபிரிக்க அணியின் தலைவராக முஹம்மத் புல்புலியா நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் புல்புலியா தலைமையிலான தென் ஆபிரிக்கா இரண்டாம் இடத்தைப் பெற்றது. அந்தத் தொடரில் விளையாடிய பெரும்பாலானவர்கள் உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெறுவதுடன் ஜோரிச் வென் ஷோக்வைக், அத்னான் லகாடியென் ஆகியோர் துடுப்பாட்டத்தில் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் நிட்டண்டோயென்கோசி சோனி, பயண்டா மஜோலா முக்கிய வீரர்களாக இடம்பெறுகின்றனர். தன்ஸானியா ஆபிரிக்க பிராந்தியத்தில் வளர்முக கிரிக்கெட் நாடுகளுக்கான உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் 13 நாடுகள் போட்டியிட்ட போதிலும் அவற்றை எல்லாம் பின்தள்ளி முதல் முறையாக ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தன்ஸானியா தகுதிபெற்றுள்ளது. முதலில் முன்னோடி தகுதிகாண் சுற்றில் விளையாடிய தன்ஸானியா அதில் வெற்றி பெற்று பிரதான ஆபிரிக்க தகுதிகாண் சுற்றில் விளையாட தகுதிபெற்றது. அங்கு ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற தன்ஸானியா தொடர்ந்து இறுதிப் போட்டியிலும் வெற்றியீட்டி 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது. தகுதிகாண் போட்டிகளில் ஈட்டிய வெற்றிகள் தன்ஸானியாவை உற்சாகம் அடையச் செய்துள்ளதுடன் முதல் தடவையாக ஆபிரிக்காவுக்கு வெளியே உள்ள அணிகளை எதிர்த்தாடவுள்ளது. ஆபிரிக்க தகுதிகாண் சுற்றில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய லக்ஷ் பக்ரானியா அணித் தலைவராக விளையாடுகிறார். சகலதுறை ஆட்டக்காரரான லக்ஷ் பக்ரானியா துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்ததுடன் பந்துவீச்சில் சிரான இடைவெளியில் விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 18 வயதான இடதுகை துடுப்பாட்ட வீரரான பக்ரானியா, தன்ஸானியாவின் சிரேஷ்ட அணியில் இடம்பெற்றதுடன் நமிபியாவுக்கு எதிரான போட்டி ஒன்றில் 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தி ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். ஹம்சா அலி மற்றும் ரேமண்ட் பிரான்சிஸ் ஆகியோருடன் இணைந்து வேகப்பந்துவீச்சில் காலிதி அமிரி பந்துவீச்சை வழிநடத்துவார். அக்ரே பஸ்கல் மற்றும் அகஸ்டினோ மவாமெலே ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரதான பங்களிப்பு செய்யவுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண வரலாற்றில் அற்புதமான சாதனைகளைப் பதிவுசெய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் 2016இல் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. ஆனால், அதன் பின்னர் கடந்த 10 வருடங்களில் நொக் அவுட் சுற்றை மேற்கிந்தியத் தீவுகள் நெருங்கவில்லை. 2016இல் இந்தியாவை இறுதிப் போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றிகொண்டு மேற்கிந்தியத் தீவுகள் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இம்முறை டி குழுவில் அதேபோன்ற ஆற்றல்களை வெளிப்படுத்தினால் மேற்கிந்தியத் தீவுகள் குறைந்த பட்சம் சுப்பர் 6 சிக்ஸ் விளையாடுவதை உறுதிசெய்துகொள்ளும். மேற்கிந்தியத் தீவுகள் அணியில் 2024இல் விளையாடிய ஜோசுவா டோர்ன் இம்முறை அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இரண்டாவது உலகக் கிண்ணத்தில் ஜுவெல் அண்ட்றூ விளையாடவுள்ளார். இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் துடுப்பாட்டத்தில் டோர்ன மிகத் திறமையாக செயல்பட்டிருந்தார். அந்தத் தொடரில் ஜக்கீன் பொல்லார்ட், ஷக்வான் பெலே ஆகிய இருவரும் பந்துவீச்சில் திறமையாக செயல்பட்டதுடன் உப அணித் தலைவர் ஜொநதன் வென் லங்கே அதிரடிக்கு பெயர் பெற்றவராவார். போட்டி விபரங்கள் ஜனவரி 15 – தன்ஸானியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ஜனவரி 16 – ஆப்கானிஸ்தான் எதிர் தென் ஆபிரிக்கா ஜனவரி 18 – ஆப்கானிஸ்தான் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ஜனவரி 19 – தென் ஆபிரிக்கா எதிர் தன்ஸானியா ஜனவரி 21 – ஆப்கானிஸ்தான் எதிர் தன்ஸானியா ஜனவரி 22 – தென் ஆபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் https://www.virakesari.lk/article/236055- வெனிசுவெலா சிறையில் அடைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிப்பு
வெனிசுவெலா சிறையில் அடைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிப்பு 14 Jan, 2026 | 04:35 PM வெனிசுவெலாவில் சிறை பிடிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. வெனிசுவெலா நாட்டின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள எண்ணற்ற அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டிருக்கும் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இது, வெனிசுவெலாவின் இடைக்கால அதிகாரிகள் சரியான திசையை நோக்கி எடுத்த முக்கிய முடிவு என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெனிசுவெலாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பான போரோ பீனல் வெளியிட்ட செய்தியறிக்கையில், அரசியல் காரணங்களுக்காக சிறை பிடிக்கப்பட்ட 56 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், வெனிசுவெலா அரசு 400 பேரை விடுவித்திருக்கிறோம் என தெரிவித்துள்ளது. ஆனால், விடுவிப்புக்கான சான்றுகளையோ அல்லது எப்போது விடுவித்தது என்பது பற்றிய தகவலையோ வெளியிடவில்லை. விடுதலை செய்யப்பட்டவர்களின் அடையாளமும் வெளியாகவில்லை. இதனால் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக அல்லது பிற காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களா? என்ற விபரம் தெரியவில்லை. கடந்த ஜூலையில் வெனிசுவெலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 10 அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது. வெனிசுவெலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்க இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்ட பின்னர், வெனிசுவெலாவில் சிறை பிடிக்கப்பட்ட கைதிகளின் விடுவிப்பு விடயங்கள் அதிக கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236040- சிங்கப்பூர் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடம் : இலங்கை பாஸ்போர்ட் 93 ஆவது இடம்
சிங்கப்பூர் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடம் : இலங்கை பாஸ்போர்ட் 93 ஆவது இடம் 15 Jan, 2026 | 02:04 PM விசா இன்றி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வசதியின் அடிப்படையில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு (Henley Passport Index) – 2026 பட்டியலில், சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த பட்டியலின்படி, சிங்கப்பூர் குடிமக்கள் விசா இல்லாமல் 193 நாடுகளுக்குப் பயணம் செய்யும் உரிமையை பெற்றுள்ளனர். உலகளாவிய பயண சுதந்திரத்தில் இது மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது. 2-வது இடத்தில் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026 பட்டியலில் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த நாடுகளின் குடிமக்கள் விசா இன்றி பெரும்பாலான உலக நாடுகளுக்குப் பயணிக்க முடியும். 3-வது இடத்தில் ஐரோப்பிய நாடுகள் டென்மார்க், ஸ்பெயின், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தில் உள்ளன. இந்நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 186 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும். அமெரிக்கா 10-வது இடத்திற்கு சரிவு ஒரு புள்ளி சரிவுடன், அமெரிக்கா இந்த ஆண்டு பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. அமெரிக்க பாஸ்போர்ட் மூலம் 179 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய இயலும் என ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு தெரிவிக்கிறது. இந்தியாவின் நிலை இந்த பட்டியலில் இந்தியா 85-வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளுக்கே விசா இன்றி பயணம் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் நிலை இலங்கையின் பாஸ்போர்ட் உலகளாவிய ரீதியில் 93 ஆவது இடத்தில் உள்ளது. இது இலங்கை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு 39 நாடுகளுக்குக் விசா இல்லாமல் அல்லது விசா- ஒன் அரைவல் (visa-on-arrival) முறையிலேயும் பயணம் செய்யும் உரிமையை வழங்குகிறது. உலகளாவிய அரசியல், இராஜதந்திர உறவுகள் மற்றும் குடிவரவு கொள்கைகள் போன்றவை பாஸ்போர்ட் தரவரிசையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் இந்த ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026 பட்டியல் வெளிப்படுத்துகிறது. https://www.virakesari.lk/article/236093- நாடு தழுவிய ரீதியில் தை திருநாள் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்
நாடு தழுவிய ரீதியில் தை திருநாள் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம் 15 Jan, 2026 | 12:59 PM நாடு தழுவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (15) தைப்பொங்கல் திருநாள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருவதோடு,இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன. நீர்கொழும்பு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று காலை நீர்கொழும்பு ஸ்ரீ சிங்க மகா காளியம்மன் கோயிலில் பரமேஸ்வர குருக்கள் தலைமையில் விசேட பூஜை நடைபெற்றது. அம்பாளுக்கு அபிஷேகம், பூஜை, தீபாராதனை, சூரிய பூஜை, வசந்த மண்டப பூஜை என்பன இடம்பெற்றதை அடுத்து அம்பாள் உள்வீதி வலம் வருதல் தொடர்ந்து இடம் பெற்றது. இந்த விஷேட பூஜையில் அதிக எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (15) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன. காலை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆலய முன்றிலில் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. ஆலயத்தின் வண்ணக்கமார்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பொங்கல் படைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன. பேரிடர்களிலிந்து மக்களை பாதுகாக்கவும் நாட்டு மக்களுக்கு நல்லாசிவேண்டியும் விவசாயிகள் சிறந்த விளைச்சலைபெறவேண்டியும் மாமாங்கேஸ்வரருக்கு பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன. இன்றைய தைத்திருநாள் விசேட பொங்கல் பூஜையில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் பொங்கல் வாழ்த்துகளையும் தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டனர். இதேபோன்று இன்று அதிகாலை முதல் வீடுகளிலும் பொங்கல் படைக்கப்பட்டு சூரியனுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. திருகோணமலை தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினமான இன்று திருகோணமலையில் உள்ள தமிழ் மக்களின் வீடுகளிலும் விசேட பொங்கல் பூஜை நிகழ்வுகள் இடம் பெற்றன. குறிப்பாக ஆலயங்களிலும் ,வீடுகளிலும் விசேட வழிபாடுகள் தைப்பொங்கல் நாளான இன்று இடம் பெற்றன. சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நோக்கில் விசேடமாக பூஜை வழிபாட்டுடன் பொங்கல் இடம் பெறுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் குடும்பங்களாக சேர்ந்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். குறிப்பாக திருகோணமலை திருக்கோணேஸ்வரம், திருகோணமலை பத்திரகாளி அம்பாள் போன்ற ஆலயங்கள் மற்றும் வீடுகளில்,பொது இடங்களிலும் தைப்பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இன்று பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிசேக பூஜைகளை தொடர்ந்து, விநாயகப் பெருமானுக்கு பக்தி பூர்வமாக பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. ஆலயப்பிரதமகுரு திருவேரகசர்மா குருக்களினால் இப்பூஜை வழிபாடுகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பூஜையின் நிறைவில் பக்தர்களுக்கு கைவிசேஷமும் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும். https://www.virakesari.lk/article/236087- சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்.
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம். சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு சட்டவாக்க உறுப்பினர்களின் வாக்கெடுப்பைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமரால் அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவி இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குழுவொன்றின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பொய்யான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பின்னரே அவரது பதவி இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது நாடாளுமன்றஉறுப்பினர் பதவியும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியும் தொடர்ந்து நீடிக்கும். ஆனால், மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களின் போது முதலில் பதிலளிக்கும் உரிமை போன்ற சலுகைகளை அவர் இழப்பார் என்று சிங்கப்பூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று மணிநேர விவாதத்திற்குப் பிறகு, சிங் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கு நாடாளுமன்றம் ஆதரவு அளித்துள்ளது. ஆனால் தொழிலாளர் கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்றும் அந்த ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் சட்டவாக்க உறுப்பினர் ரயீஸா கான், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணொருவரிடம் பொலிஸார் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதை தான் கண்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்ததே இந்த வழக்குக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. பின்னர் அவர் தனது கூற்று உண்மையல்ல என்பதை ஒப்புக்கொண்டார். இது தொடர்பான நாடாளுமன்ற குழுவின் விசாரணையில், சிங் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் இந்த பொய்யான தகவலை அறிந்திருந்த போதிலும், அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு அவருக்கு அறிவுறுத்தியமை தெரியவந்தது. பின்னர் கான் கட்சியிலிருந்தும் நாடாளுமன்றத்திலிருந்தும் இராஜினாமா செய்ததுடன், பொய்யான தகவல்களைக் கூறியமை மற்றும் நாடாளுமன்றபாராளுமன்ற சிறப்புரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் அவருக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கானின் வழக்கை விசாரிக்கும் போது நாடாளுமன்ற குழுவின் முன் ஆஜராகி சத்தியப்பிரமாணம் செய்து பொய் கூறியமை தொடர்பில் சிங்கிற்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்ததுடன், அவருக்கு பல்லாயிரக்கணக்கான டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணைகள் முழுவதும் தான் நிரபராதி என்று கூறிய சிங், உணர்வுபூர்வமான விடயமொன்றைக் கையாள்வதற்கு கானுக்கு அவகாசம் வழங்கவே வேண்டும் என விரும்பியதாகத் தெரிவித்தார். எவ்வாறாயினும், வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட அவர், அத்தீர்ப்பிற்கு எதிராகச் செய்த மேன்முறையீடும் தோல்வியடைந்தது. https://athavannews.com/2026/1460081- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்களும், அனுதாபங்களும் மோகன் மற்றும் குடும்பத்தினருக்கு. மீள்வதற்கும் எனது பிரார்த்தனைகள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்
ஈரானில் வெடிக்கும் வன்முறைகள், போராட்டங்கள்! : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2571ஆக அதிகரிப்பு 14 Jan, 2026 | 02:17 PM ஈரானில் அரசுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2571ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 2403 பேர் போராட்டக்காரர்கள், 147 பேர் அரசு தரப்பினர், 12 பேர் சிறுவர்கள் கொல்லப்பட்டதோடு போராட்டங்களில் பங்கேற்காத பொதுமக்களில் 9 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்துக்காக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தபோதும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு அதிகமாக ஈரானில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போராட்டங்களை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான மோதல் இடம்பெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் கண்மூடித்தனமாக எந்த ஆயுதங்களுமின்றி நிற்கும் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதாக போராட்டக்கார்கள் கூறுகின்றனர். கட்டடங்களின் மேற்கூரைகளிலிருந்து நின்று படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக தெரிவிக்கின்றனர். இப்போராட்ட நிலை காரணமாக ஈரானில் கைப்பேசி மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது சில தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்துக்காக கைது செய்யப்பட்ட எர்பான் என்ற 26 வயதுடைய இளைஞனுக்கு இன்று (14) ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக வெளியான அறிவிப்புகள் அந்நாட்டில் மேலும் குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236016- ஜல்லிக்கட்டு செய்திகள் 2026
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியின் கள நிலவரம் - நேரலை 15 ஜனவரி 2026, 03:11 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். காலை 7 மணி அளவில் வீரர்களின் உறுதி ஏற்பு நிகழ்வுடன், ஜல்லிக்கட்டு தொடங்கியது. திருப்பரங்குன்றம் அவனியாபுரம் சாலையில் குருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி கோவில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டுக் காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மொத்தம் எட்டு சுற்றில் இருந்து 12 சுற்று வரை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இதுவரை 7 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. ஆறாம் மற்றும் ஏழாம் சுற்று நிலவரம் ஆறாம் சுற்றின் முடிவில், மாடுபிடி வீரர்கள் 23 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 15 பேர் மற்றும் பார்வையாளர்கள் 6 பேர் என மொத்தம் 44 பேர் காயமடைந்தனர். அதன் பிறகு நடைபெற்ற ஏழாம் சுற்றில், களம் கண்ட 616 மாடுகளில், 149 மாடுகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: கார்த்தி, அவனியாபுரம் - 16 ரஞ்சித், அவனியாபுரம் - 9 பிரகாஷ், சோழவந்தான் - 7 விஜய், ஜெய்ஹிந்தபுரம் - 7 ஏழாம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: ரஞ்சித்குமார், அவனியாபுரம் - 3 முத்துவன்னி, மதுரை - 3 நாகராஜ், மதுரை - 3 கோபி கிருஷ்ணன், திண்டுக்கல் - 3 மாயக்கண்ணன், சிவகங்கை - 2 ஹரிஹரன், மதுரை - 2 கண்ணன், மதுரை - 2 வேல்முருகன், திருப்பரங்குன்றம் - 2 பட மூலாதாரம்,X/pmoorthy21 ஐந்தாம் சுற்று நிலவரம் ஐந்தாம் சுற்று முடிவில், களம் சென்ற 464 மாடுகளில், 109 மாடுகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: கார்த்தி, அவனியாபுரம் - 16 ரஞ்சித், அவனியாபுரம் - 9 பிரகாஷ், சோழவந்தான் - 6 5ம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: விஜயகுமார், அய்யனார்குளம் - 5 அரவிந்த், குன்னத்தூர் - 4 பொன்பாண்டி, கருப்பாயூரணி - 4 அருண்பாண்டி, கருப்பாயூரணி - 2 பட மூலாதாரம்,X/pmoorthy21 நான்காம் சுற்று நிலவரம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் நான்காவது சுற்றின் முடிவில் மொத்தம் 376 மாடுகள் களம் சென்றன. அவற்றில் 89 மாடுகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: கார்த்தி, அவனியாபுரம் - 16 ரஞ்சித், அவனியாபுரம் - 9 பிரகாஷ், சோழவந்தான் - 6 4ம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: ரஞ்சித், அவனியாபுரம் - 9 டேவிட் வில்சன், புகையிலைப்பட்டி - 4 பரணி, அய்யம்பாளையம் - 2 ராகுல், அவனியாபுரம் - 2 மொத்தம் 12 வீரர்கள் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறார்கள். பட மூலாதாரம்,X/pmoorthy21 மூன்றாம் சுற்று நிலவரம் 10 மணி வரையிலான தரவுகளின்படி, பரிசோதனைக்கு சென்ற 356 காளைகளில், 332 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன. 24 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மூன்றாவது சுற்று முடிவில் களம் சென்ற மொத்த மாடுகளின் எண்ணிக்கை 288. அதில் 61 மாடுகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: அதிக காளைகளைப் பிடித்து முன்னணியில் உள்ள வீரர்களின் பட்டியல் கார்த்தி, அவனியாபுரம் - 16 பிரகாஷ், சோழவந்தான் - 6 விக்னேஷ், சாப்டூர் - 3 முத்துப்பாண்டி, பேரையூர் - 3 ரிஷி, அவனியாபுரம் - 2 முரளி, மாடக்குளம் - 2 முதல் சுற்று காலை 8 மணி நிலவரப்படி, பரிசோதனைக்கு வந்த மொத்தம் 137 காளைகளில் 126 காளைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு, பரிசோதனையில் 11 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. முதல் சுற்று முடிவில் 11 மாடுகள் பிடிபட்டுள்ளன. இந்த சுற்றில் 11 வீரர்கள் தலா ஒரு மாடு மட்டுமே பிடித்துள்ளதால் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள் ஜல்லிக்கட்டுக்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் காயம் பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இங்கு மொத்தம் 15 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன, காயத்திற்கு உள்ளாகும் காளை மாடுகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் வகையில் கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பாக ஆங்காங்கே ஸ்கிரீன்கள் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒளிபரப்பப்படுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y5l9l2y31o- ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணம் : குழு சி இல் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஸ்கொட்லாந்து, ஸிம்பாப்வே Published By: Vishnu 13 Jan, 2026 | 09:35 PM (நெவில் அன்தனி) 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிக்கான சி குழுவில் முன்னாள் சம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஸ்கொட்லாந்து, ஸிம்பாப்வே ஆகியன இடம்பெறுகின்றன. ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் சம்பியனான பாகிஸ்தான், மிகுந்த நம்பிக்கையுடன் உலகக் கிண்ணப் போட்டிகளை எதிர்கொள்ளவுள்ளது. 2024இலும் 2006இலும் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் 19 வயதுக்குட்பட்ட உலக சம்பியனான பாகிஸ்தான் 3ஆவது தடவையாக சம்பியானாகும் குறிக்கோளுடன் இந்த உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ளது. அதேவேளை, 38 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இரண்டாவது 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அத்தியாயத்தில் சம்பியனான இங்கிலாந்து, இரண்டாவது சம்பியன் பட்டத்துக்கு குறிவைத்து விளையாடவுள்ளது. அவுஸ்திரேலியாவில் 1988இல் நடைபெற்ற அங்குரார்ப்பண உலகக் கிண்ண அத்தியாத்தைத் தவிர்ந்த மற்றைய 14 அத்தியாயங்களிலும் ஸிம்பாப்வே பங்குபற்றியதுடன் ஸ்கொட்லாந்து 11ஆவது தடவையாக களம் இறங்குகிறது. இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண வரலாற்றில் ஐந்து நாடுகளே இதுவரை சம்பியன் பட்டத்தை சுவிகரித்துள்ளன. அவற்றில் ஒன்றான இங்கிலாந்து, 1998இல் உவைஸ் ஷா தலைமையில் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. சம்பியனான அந்த அணியில் தற்போதைய இங்கிலாந்து பணிப்பாளர்நாயகம் ரொப் கீ இடம்பெறுவதுடன் க்ரேம் ஸ்வோனும் விளையாடி இருந்தார். நான்கு வருடங்களுக்கு முன்னர் அன்டிகுவாவில் 2022இல் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டிவரை இங்கிலாந்து முன்னேறி இருந்தது. ஆனால், இந்தியாவிடம் தோல்வி அடைந்து உப சம்பியன் பட்டத்துடன் திருப்தி அடைந்தது. இங்கிலாந்தில் நடத்தப்படும் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடும் பல வீரர்கள் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெறுகின்றனர். அணித் தலைவர் தோமஸ் ரீவ் (சமர்செட்), பர்ஹான் அஹ்மத் (நொட்டிங்ஹாம்ஷயர் சகலதுறை வீரர்) ஆகிய இருவரும் இங்கிலாந்து அணியில் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர். கவுன்டி கிரிக்கெட் சம்பியன்ஷிப்பில் 8 போட்டிகளில் 13 விக்கெட்களைக் கைப்பற்றிய பர்ஹான் அஹ்மத், தனது அணி சம்பியனாவதில் பெரும் பங்காற்றி இருந்தார். அவர்கள் இருவரைவிட ஜேம்ஸ் மின்டோ (டேர்ஹாம்), ஈசாக் மொஹம்மத் (வூஸ்டர்ஷயர்) ஆகியோரும் கவுன்டி கிரிக்கெட் அனுபவத்துடன் அணியில் இடம்பிடித்துள்ளனர். எவ்வாறாயினும் அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 5 என்ற ஆட்டக் கணக்கில் இங்கிலாந்து தோல்வி அடைந்திருந்தது. இது இங்கிலாந்து அணிக்கு நெருக்கடியைக் கொடுத்திருந்தாலும் இளையோர் உலகக் கிண்ணத்தில் சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் பங்குபற்றவுள்ளது. பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவை 191 ஓட்டங்களால் வெற்றிகொண்டு ஆசிய சம்பியனான சூட்டோடு பாகிஸ்தான் இந்த உலகக் கிண்ணத்தில் பங்குபற்றவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சமீர் மின்ஹாஸ் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 172 ஓட்டங்களைக் குவித்ததுடன் அவர் மொத்தமாக 471 ஓட்டங்களைப் பெற்றார். இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் ஐந்து தடவைகள் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடியுள்ளதுடன் 2004இலும் 2006இலும் சம்பியன் பட்டத்தை சூடியிருந்தது. 2006இல் தலைவராக விளையாடிய சப்ராஸ் அஹ்மத், 2017இல் அணித் தலைவராக ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத்தில் பாகிஸ்தானை சம்பியன் ஸ்தானத்திற்கு உயர்த்தி இருந்தார். 2014க்குப் பின்னர் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறாத போதிலும் கடந்த 4 அத்தியாயங்களில் அரை இறுதிகளில் விளையாடி இருந்தது. ஸ்கொட்லாந்து தமது சொந்த மண்ணில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய தகுதிகாண் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற ஸ்கொட்லாந்து தகுதிபெற்றது. அந்த சுற்றுப் போட்டியில் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றியீட்டிய ஸ்கொட்லாந்து, இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை 20 ஓட்டங்களால் வெற்றிகொண்டு ஐரோப்பிய தகுதிகாண் சம்பியன் என்ற அந்தஸ்துடன் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுகின்றது. கடைசி எட்டு உலகக் கிண்ண அத்தியாயங்களில் ஏழில் விளையாடியுள்ள ஸ்கொட்லாந்து, இதுவரை குழுநிலை போட்டிகளில் வெற்றியை சுவைத்ததில்லை. எனினும், இந்த வருடம் ஸ்கொட்லாந்து தலைகீழ் முடிவுகளை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஸ்கொட்லாந்து அணிக்கு தோமஸ் நைட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்கொட்லாந்து தனது ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வேயை ஹராரேயில் எதிர்த்தாடும். ஸிம்பாப்வே சொந்த மண்ணில் விளையாடும் ஸிம்பாப்வே அணியினர் தமது நாட்டின் சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர்களாக திறமையாக விளையாடி அடுத்து சுற்றுக்கு முன்னேற முயற்சிப்பர் என நம்பப்படுகின்றது. இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளில் ஒன்றை ஸிம்பாப்வே வெற்றிகொண்டால் அதன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கும். ஆனால், அது சாத்தியப்படும் என எதிர்பார்க்க முடியாது. முன்னாள் வீரர் எல்டன் சிக்கும்புரா பயிற்றுவிக்கும் ஸிம்பாப்வே அணிக்கு சிம்பராஷே மட்ஸெங்கெரே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 1999 முதல் 2010 வரை ஸிம்பாப்வே அணியில் விளையாடிய அண்டி ப்ளிக்நோட்டின் புதல்வர்களான கியான், மைக்கல் ஆகிய இரட்டையர்கள் இளையோர் அணியில் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். அண்மையில் இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆபிரிக்காவுடனும் பங்களாதேஷுடனும் விளையாடிய ஸிம்பாப்வேயினால் ஒரு வெற்றியையும் பெற முடியாமல் போனது. ஆனால், வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் மஸவிட்டேரெரா 25.00 என்ற சராசரியுடன் 11 விக்கெட்களைக் கைப்பற்றி தனது சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தி இருந்தார். போட்டி விபரங்கள் ஜனவரி 15: ஸிம்பாப்வே எதிர் ஸ்கொட்லாந்து ஜனவரி 16: இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் ஜனவரி 18: ஸிம்பாப்வே எதிர் இங்கிலாந்து ஜனவரி 19: பாகிஸ்தான் எதிர் ஸ்கொட்லாந்து ஜனவரி 21: இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ஜனவரி 22: ஸிம்பாப்வே எதிர் பாகிஸ்தான் https://www.virakesari.lk/article/235964- 2026 பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய வழிகாட்டல்
2026 பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய வழிகாட்டல் Published By: Vishnu 15 Jan, 2026 | 03:12 AM 2026 ஜனவரி 21 முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நிலையில், 1ஆம் தரத்திற்கு புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழான பாடத்திட்டக் கற்றல் செயல்பாடுகள் ஜனவரி 29 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 6ஆம் தரத்திற்கான புதிய பாடத்திட்டம் 2027 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டில் 6–13ஆம் தரங்களுக்கு தினசரி பாடவேளைகள் எட்டாகவும், ஒவ்வொரு பாடவேளையும் 40 நிமிடங்களாகவும் அமையும். மேலும், 2026 இலும் கடந்த ஆண்டின் பாடத்திட்டமே தொடரப்படுவதுடன், மாணவர்கள் பயன்படுத்திய பாடப்புத்தகங்களையே முதன்மையாக பயன்படுத்த வேண்டும் என்றும், புதிய சீர்திருத்தங்களுக்கு உரிய முன்னோடித் திட்டம் சில மாகாணங்களில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/236061- ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்
‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் Published By: Vishnu 14 Jan, 2026 | 10:17 PM கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள லோட்டஸ் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் www.rebuildingsrilanka.gov.lk உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. MIT மற்றும் டயலாக் (Dialog) நிறுவனங்களின் முன்மொழிவுக்கு அமைய, அந்த நிறுவனங்களினால் அரசாங்கத்திற்காக www.rebuildingsrilanka.gov.lk இணையத்தளம் வடிவமைக்கப்பட்டது. நாடு எதிர்கொண்ட அனர்த்தத்தின் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக பொதுமக்கள், தனியார் துறை மற்றும் சர்வதேச சமூகத்தை ஒரே மேடைக்குக் கொண்டு வந்து, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நம்பகமான செயல்முறையை உருவாக்குவதே இந்த இணையத்தளத்தின் பிரதான நோக்கமாகும். இந்த இணையத்தளத்தின் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களுக்கு நிதி ரீதியாகவும் அத்துடன் பொருட்கள், காணி மற்றும் ஏனைய வளங்களை நன்கொடையாக வழங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு, நன்கொடையாளர்கள் தமது நன்கொடைகள் தொடர்பான தகவல்களை வெளிப்படைத்தன்மையுடன் அவதானிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கிடைக்கப்பெறும் நிதி நன்கொடைகள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படும். மேலும், மாவட்ட ரீதியாக ஏற்பட்ட சேதங்கள், தமது நிதியின் மூலம் முன்னெடுக்கப்படும் மீளக் கட்டியெழுப்பும் திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் ஆகியவற்றை இந்த இணையத்தளத்தின் ஊடாக பொதுமக்கள் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ள முடியும். அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது இதன் முக்கிய அம்சமாகும். இந்த இணையத்தளமானது வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நன்கொடை முகாமைத்துவம், சமூக நீதி, நிலையான அபிவிருத்தி மற்றும் பொறுப்புக்கூறலுடனான ஆட்சி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள், பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கமைய, www.rebuildingsrilanka.gov.lk இணையத்தளம் ‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் நம்பகமான தகவல் மையமாகச் செயற்படும். https://www.virakesari.lk/article/236057- நாவற்குழியில் கோர விபத்து; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு
நாவற்குழியில் கோர விபத்து; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு Jan 15, 2026 - 01:17 PM யாழ்ப்பாணம் - மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (15) அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமே, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் கிளிநொச்சி, வட்டக்கச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும், மற்றவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmkf5cyo003ybo29nf06wgdlk - ஏழு கோடித் தமிழர்களுடனும் உறவைப் பேணத் தவறியது ஏன்?; கஜேந்திரகுமார் எம். பி. கேள்வி
Important Information
By using this site, you agree to our Terms of Use.