24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
நீர்கொழும்பு, சிலாபம் பகுதிகள் நீங்கள் சொன்னவை போன்று மாறி, இப்பொழுது ஏறக்குறைய முற்றாகவே மாறிவிட்டன என்று நினைக்கின்றேன். அப்படியே மேலே வந்தால் உடப்பு.............. இன்றைய சனத்தொகையையும், இனப் பரம்பலையும் பார்த்தால், ஒரு ஐம்பது வருடங்களில் இந்திய உயர்ஸ்தானிகர் கிளிநொச்சிக்கே இப்படியான ஒரு நோக்கத்திற்காக வர வேண்டும் போல.......................
-
இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
அகப்பட்ட ஆள் வேற என்னைப் போலவே இருக்கின்றார்...................🤣. சில மாதங்களின் முன்னர் என்று நினைக்கின்றேன். தமிழ்நாட்டில் ஒருவர் தீ/பூ மிதிக்கும் போது, அப்படியே நெருப்பில் கால் தடுக்கி விழுந்துவிட்டார்............... அவசரமாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.....................
- Today
-
சிறு கதை - 205 / ஒட்டாவாவில் இருந்து மேலோக பயணம்! [கலையின் பல்லும் தாத்தாவின் ரகசியப் பயணமும்!]
சிறு கதை - 205 / ஒட்டாவாவில் இருந்து மேலோக பயணம்! [கலையின் பல்லும் தாத்தாவின் ரகசியப் பயணமும்!] பிப்ரவரி 01, 2026 ஒரு நாள், ஆறு அகவை, 'கலை'. தன் பாடசாலை நண்பர்களுடன் பேசி கொண்டிருக்கும் போது அவர்கள் பல்லுத் தேவதைப் பற்றி பேசி கொண்டிருந்தார்கள். ஒருவன் கேட்டான், அவங்க என்ன பண்ணுவாங்கடா.. இன்னொருவன் ' உனக்கு அவங்கள பத்தி தெரியாதடா' அவங்கதான் நம்ம பல்லு விழும் போது அதுக்கு பதிலா காசு குடுக்கக் கூடியவங்க.. அதெப்படி , 'கலை' இடை மறித்தான். அந்த பையன் எடுத்து கூறினான், அதாவது இப்போ உனக்கு பல்லு விழுதுன்னு என்று வச்சிப்போம், நீ அதை எடுத்து உன்னோட தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் தேவதை வருவாங்க. அவங்க உன்னோட பல்லை எடுத்துக்கிட்டு உனக்கு காசு கொடுத்திட்டு போய்டுவாங்க. கலை ஆர்வமானான். அந்த காச வச்சி நமக்கு என்ன தேவையோ அந்த பொருட்களை வாங்கிக்கலாம் என்றான் அந்தப் பையன். அதன் பிறகு கலை, அவனது அம்மாவை விடவில்லை. அம்மா எனக்கு எப்போ பல்லு விழும் என்று சொல்லுங்க என தினமும் நச்சரித்தான். அதே சமயத்தில் அவன் வகுப்பு நண்பர்கள் அந்த காசுகளை வைத்து பொருட்களை வாங்கி வந்தனர். ஒருவழியாக முதல் முறை கலைக்கு பல் விழுந்தது. அவன் குஷியில் துள்ளிக் குதித்தான். பிப்ரவரி 28, 2026 - இரவு 11:45 பல்லொன்று விழுந்ததடா - நம் கலைக்கு பக்குவமாய் பையினில் வைத்தானடா! மெத்தைக்கு அடியினில் ஒழித்து வைத்தான் - அங்கே தேவதை வருமெனக் காத்திருந்தான்! அக்கா 'ஜெயா' ஜொலிக்கும் ஜனவரி மகள் தம்பி 'இசை' மார்ச்சில் மலர்ந்த பூ! மே மாதம் பிறந்த அழகன் 'கலை' இன்று தேவதை ஆசிபெறத் தூங்குகிறான்! தாத்தாவும் பேரனும் ஒரே அறையில் - இன்று இருவரும் உறங்கினர் மகிழ்ச்சிக் கடலில்! ஒட்டாவா மண்ணில் அழகிய இரவு - என்றும் ஒப்பற்ற காவியமாய் இனி நிலைத்திருக்குமே! கனடாவின் ஒட்டாவா நகரில் இன்று கடும் குளிர். ஜன்னலுக்கு வெளியே பனித்துளிகள் வெண் சர்க்கரைப் பொடி போலத் தூவிக்கிடந்தன. உள்ளே, மென்மையான போர்வைகளுக்கு நடுவே 'கலை' ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவனது மேல் வரிசைப் பல் இரண்டு அன்று காலை விழுந்திருந்தது. "தேவதை வருவாள்" என்ற நம்பிக்கையில், அந்தப் பல்லை ஒரு சிறிய பட்டுப் பையில் போட்டு மெத்தைக்கு அடியிலே ஒளித்து வைத்திருந்தான். பக்கத்து கட்டிலில், அத்தியடியிலிருந்து பேரப் பிள்ளைகளைப் பார்க்க வந்திருந்த தாத்தா 'கந்தையா தில்லை' அவர்கள், "யாழ்ப்பாணத்து பனைமரம் போல நிமிர்ந்து நிக்க வேண்டியவன், இந்த 'பல் தேவதை' மேல வைச்சிருக்கும் நம்பிக்கையைப் பாரு" என வியந்தபடி கண்ணயர்ந்தார். சரியாக நள்ளிரவு 12 மணி. ஜன்னல் வழியாக ஒரு மின்னல் போன்ற வெளிச்சம்! ஒரு ஒற்றைக் கொம்புடன் இளஞ்சிவப்பு நிறச் சிறகுகளை அசைத்துக் கொண்டு ஒரு குட்டிக் குதிரை பறந்து வந்தது. அதன் மேல் வண்ண மலர்களைச் சூடிய 'மேப்பிள் இலை' வடிவிலான தேவதை தேவதை ஒன்று அமர்ந்திருந்தது. அதன் பற்களில் இருந்து பளீரிடும் ஒளி வெளிப்பட்டது. அது, அவர்கள் படுத்து இருந்த அறையின் காற்றோட்ட துவாரத்தினூடாக, தன்னை மாயாஜாலத்தால் சிறிதாக்கி உள்ளே நுழைந்தது. கலையின் பல்லுப் பையை எடுக்க அது குனிந்தபோது, தாத்தாவின் 'அத்தியடி ஸ்பெஷல்' குறட்டை சத்தம் (அது ஒரு லாரி ஹார்ன் போல இருந்தது!) தேவதையை அதிர வைத்தது. பயந்துபோன தேவதை நிலைதடுமாறி மந்திரக்கோலைத் தட்ட, அடுத்த நொடி... தாத்தாவும் கலையும் சுருங்கி ஒரு 'ஐஸ் ஹாக்கி பந்து' அளவில் அந்தப் பைக்குள்ளேயே இழுக்கப்பட்டனர்! பனிப்புகை போல அதே துவாரத்தின் வழியாக அவர்கள் விண்வெளிக்கு ஏவப்பட்டனர். அவர்கள் கண்ணைத் திறந்தபோது ஒரு பெரிய மேகக் கூட்டத்தில் நின்றனர். அங்கே சித்திரகுப்தன் ஒரு 'கனடா கூஸ்' ஜாக்கெட் (Canada Goose Jacket) அணிந்து, கையில் ஐபேடுடன் (iPad) நின்று கொண்டிருந்தார். சித்திரகுப்தன்: "நிறுத்துங்க! இது 'பல்லு' வர்ற கோட்டா (Quota). இதுல எதுக்கு ஒரு வெள்ளை வேட்டி கட்டின தாத்தாவும், ஒரு ஒட்டாவா பையனும் வந்திருக்கீங்க? உங்க விசா எங்கே?" என்று அதட்டினார். தாத்தா கந்தையா தில்லை: (கண்ணாடியைத் துடைத்தபடி) "தம்பி சித்திரகுப்தா, நான் விசிட்டர் விசால கனடா வந்தவன். என் பொண்ணு - அதாவது கலை மகனோட அம்மா - பையனைப் பத்திரமா பாத்துக்கச் சொன்னா. அவனோட பல்லுக்கு முறையான ரசீது தராம பல்லை எடுத்து செல்ல விட முடியாது!" என்றார் கடும் கோபத்தில். கலை: "ஆமா சார்! ஜனவரில என் அக்கா ஜெயா பர்த்டே [Birthday] கொண்டாடிட்டா. மார்ச் 13, என் தம்பி இசைக்கு அகவை நாள். மே மாசம் பொறந்த எனக்கு, இந்தத் தேவதை ஆசி கிடைச்சாதான் நான் கீழ போவேன்!" என்றான் பிடிவாதமாக. தேவர்கள் அனைவரும் கலையின் பல்லை ஒரு மைக்ரோஸ்கோப்பில் பார்த்தனர். பிரம்மா: "இந்தப்பல்லு ஏன் இவ்வளவு ஒட்டாவா மேப்பிள் சிரப் (Maple syrup) வாசனை அடிக்குது?" என்று முறைத்துப் பார்த்து கலையைக் கேட்டார். எமதர்மன்: "சார், 'இன்டெக்ரிட்டி' (Integrity) அல்காரிதம் (Algorithm) செக் [check] பண்ணிட்டேன். இந்தப் பையன் கலை ரொம்ப சமத்து. ஜனவரி மாசம் ஜெயா அக்காவை ரொம்ப வம்புக்கு இழுக்கல, தம்பி இசை கூட விளையாட்டுக் சாமான்களைப் பகிர்ந்துக்கிட்டான். அதனால இவனுக்கு 'ஸ்பெஷல் பிளெஸ்ஸிங்' ("Special Blessing) உண்டு!" என்றான். விடியற்காலை 5:30 மணி. மார்ச் 1-ஆம் தேதியின் முதல் சூரிய ஒளி கனடா பாராளுமன்றக் கட்டிடத்தைத் தொடுவதற்கு முன், தேவதை இவர்களை மீண்டும் ஒட்டாவா வீட்டுக்குக் கூட்டி வந்து, ஒரு ரகசிய லேண்டிங் [secret landing] செய்தது. "தாத்தா, சீக்கிரம் இறங்குங்க! அம்மா முழிச்சா நம்மளக் கண்டுபிடிச்சுடுவா!" என்று கலை பதறினான். அவர்கள் கட்டிலில் வந்து விழுந்த அடுத்த நிமிடம், தாத்தாவின் மகள் (கலையின் தாய்) தேநீருடன் உள்ளே நுழைந்தாள். மகள்: "என்னப்பா... இன்னைக்கு ரொம்ப சீக்கிரமா முழிச்சிட்டீங்க? உங்க தலை ஏன் 'நெபுலா'வுல ( விண்மீன் படலம் / Nebula) சுத்திட்டு வந்த மாதிரி தலையிருக்கு? ஒட்டாவா குளிர் உங்க மண்டைக்கு ஏறிடுச்சா?" என்று கேட்டாள். தாத்தா கந்தையா தில்லை: (தேநீரைப் பருகியபடி நிதானமாக) "இல்லம்மா... அது வந்து... ஹீட்டர் (Heater) வேலை செய்யுதான்னு செக் பண்ணினேன். கனடா குளிர் மனுஷனை என்னவெல்லாம் செய்யுது பாரு!" எனச் சமாளித்தார். கனடா விடியலில் மார்ச் முதல் நாள் - நம் கலைக்குக் கிடைத்ததே மெத்தைக்குள் பொன்னாள்! அக்கா ஜெயாவும் தம்பி இசையும் - தூக்கத்தில் அறியாரே தாத்தாவின் விந்தைப் பயணம்! மகளிடம் சொல்லாதே மேலோக ரகசியம் - சொன்னால் மனநல மருத்துவமனைக்கே நடக்கும் ஊர்வலம்! கந்தையா தில்லை - தன் புன்னகையால் சமாளித்து மகளிடம் இருந்து மறைத்தே தேநீரைப் பருகினார்! தலையணைக்கு கீழே இரண்டு 'டூனி' (Toonie) - கலை பார்த்துச் சிரித்தான் மார்ச் காலையில்! கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான் கலை கையில் காசு துள்ளிக் குதித்தது! [டூனி என்பது கனடாவின் இரண்டு டொலர் நாணயத்தை குறிக்கும்.] தாத்தாவின் ரகசியக் குறிப்பு: பரிசு: மகள் வெளியே சென்றதும் மெத்தைக்கு அடியில் பார்த்தார். பல்லுக்குப் பதில் ஒரு பளபளப்பான கனடிய நாணயம் (Toonie) அங்கே ஜாஸ்மின் (Jasmine) வாசனை அடித்துக்கொண்டிருந்தது! முக்கிய எச்சரிக்கை: மேலோகத்தில் எமதர்மனுடன் 'பல்லு மாற்று விகிதம்' (Exchange rate) பற்றி விவாதித்ததை மட்டும் மகளிடம் சொல்லவே கூடாது! சொன்னால், தாத்தாவுக்கு குளிர் ஏறிடுச்சுன்னு அத்தியடிக்கே பார்சல் பண்ணிடுவா! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 2105 [சிறு கதை - 205 / ஒட்டாவாவில் இருந்து மேலோக பயணம்! [கலையின் பல்லும் தாத்தாவின் ரகசியப் பயணமும்! https://www.facebook.com/groups/978753388866632/posts/34427841220197752/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 139 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 139 / பின் இணைப்பு - "இலங்கை நாளிதழ் ஆசிரியர்களால் புத்தர் துரோகம் செய்யப்பட்டாரா?" ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத்தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி, 1948, பக். 18 இல்: ‘அரசர் குலச்சிறையாரை நோக்கி, ‘சமணர்களைக் கழுவிலே ஏற்றுக’ என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச் சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டுவித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.' என்று பதியப்பட்டுள்ளது. ‘திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்கயாகப்பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவுபடுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச் சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கோவிலில் நடைபெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.' என்று மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் 68 இல் கூறுவதையும் கவனிக்க. 'மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித் "துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள் முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார் கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க" வென்று கூற' எனும் பெரியபுராணப் பாடல் சமணர் கழுவேற்றம் குறித்துச் சொல்கிறது. இதே நிகழ்வை பிற்காலப் புலவரான ஒட்டக்கூத்தர் தனது தக்கயாகப்பரணி எனும் நூலில் குறிப்பிடுகிறார். திருவிளையாடல் புராணமும் இதனைக் குறிப்பிடுகிறது. மேலும் மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகளில் இன்னும் இக்கழுவேற்றம் நடத்திக் காட்டப்படுகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. புனல் வாதம் / திருவிளையாடல் பாடல் 3220 இல்: 'ஊழின் வலியால் அமணர் அதற்கு உடன் பட்டார்கள் அஃது அறிந்து சூழி யானைக் குலைச் சிறையும் தச்சர் பலரைத் தொகுவித்துக் காழின் நெடிய பழு மரத்தில் சூல வடிவாய்க் கழு நிறுவிப்' எனும் அடியால், ஊழ் வலியால் சமணர்கள் ஒப்புக்கொண்டனர் என்றும் தச்சர்கள் சூல வடிவில் கழுமரங்கள் செய்துகொண்டு வந்து நிறுத்தினர் என்றும் அறிகிறோம். என்றாலும் கழுவேற்றமா அல்லது கழுவேறலா? என்பது ஒரு பிரச்சனை அல்ல. நடந்தது, நடத்தியது முற்றிலும் தவறான செயல் அல்லது எடுத்துக்காட்டு என்பது மட்டும் உண்மை! எனவே, சைவ துறவி திருஞானசம்பந்தமூர்த்தியின் தரப்பில் இது மிகவும் துக்கமான மற்றும் வெட்கப்பட வேண்டிய செயலாகும். ஆதி சங்கரர் [Aadi Sangarar] கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் கேரளாவிலிருந்து தனது மதக் கருத்து எண்ணங்களுடன் தமிழகம் வருகிறார். மேலும் அந்தக் காலகட்டத்தில், கி.பி 600 முதல் 700 வரை பௌத்தர்கள் மீது வெறுப்பு இருந்தது. உதாரணமாக சம்பந்த நாயனார், ஈழத்தின் மன்னாரில் உள்ள மாதோட்டத்தின் பாலாவி ஆற்றங்கரையில் அமைந்த திருக்கேதஸ்வர தலத்தை நோக்கி பாடும் பொழுது, "புனையப்பட்ட துகிலை உடையவராய்ப் புறம் பேசும் புத்தர்களாகிய அறிவிலாரும், ஏமாற்றும் இயல்பினராய் நின்றுண்ணும் மரபினர்களாகிய சமணரும், கூறும் அறியாமை உரைகளைக் கேளாதீர்" என ஆலோசனை அல்லது அறிவுரை கூறினார். "புத்தராய்ச் சில புனை துகில் உடையவர், புறன் உரைச் சமண் ஆதர், எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்மின்! மத்தயானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர், மாதோட்டத்து அத்தர், மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம் அடைமி(ன்)னே!" எனவே அப்போது பௌத்தர்கள் கூடுதலான எண்ணிக்கையில் இலங்கைக்கு குடிபெயர்ந்திருக்கலாம்? புத்தளம் முதல் திருக்கோவில் வரையிலான கடற்கரைப் பகுதியை தமிழர்கள் ஏற்கனவே அக்காலத்தில் ஆக்கிரமித்திருந்தனர் [Tamils were already occupying the coastal area from Puttalam to Thirukovil in the East.]. எனவே, புலம்பெயர்ந்த பௌத்தர்கள் உள்நாட்டிற்குள் ஊடுருவினர். இதனால் பௌத்தம் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு பெருமளவில் வந்து இருக்கலாம்? அதுமட்டும் அல்ல, சிங்களவர்களும் தமிழர்களும் கூட, கூடுதலாக பெரும்பாலோர், தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர்களே!. கி.பி 600 க்குப் பிறகு மோதல் வெடிக்கும் வரை, சைவம், பௌத்தம் மற்றும் சமண மதங்கள் தமிழ்நாட்டில் நீண்ட காலமாக இணைந்து வாழ்ந்தன என்பதும் வரலாறாகும். Part: 139 / APPENDIX – "Is BUDDHA BETRAYED by Lanka chronicles authors?" Aadi Sangarar is coming from Kerala with his form of religious concept almost during the same period. There was hatred against the Buddhist too during that period, about 600 to 700 A. D. The Buddhists must have then migrated to Ceylon in numbers. Tamils were already occupying the coastal area from Puttalam to Thirukovil in the East. The migrant Buddhists penetrated inland. The Buddhism thus came to Lanka from Tamil Nadu. Sinhalese and Tamils too came from Tamil Nadu to Lanka. Saivism, Buddhism, and Jainism co-existed in Tamil Nadu for a long time, till the eruption of the conflict after 600 A. D. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 140 தொடரும் / Will follow துளி/DROP: 2106 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 139 https://www.facebook.com/groups/978753388866632/posts/34427897846858756/?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே…. நில்லென்று கூறி நிறுத்தி வழி போனளே நின்றது போல் நின்றால் நெடுந்தூரம் பறந்ததேன் நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மணம் பெறுமோ வாழ்வே… ஆண் : செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் ஆண் : காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ… ஆண் : கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ…. ஆண் : மேகத்தை கூந்தலில் முடித்தவளோ விண் மீன்களை மலராய் அணிந்தவளோ மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ ......! --- அவள் செந்தமிழ் தேன் மொழியாள் ---
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
'தனிச்சின்னம் தான்.. உதயசூரியன் வேண்டாம்' : திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் என்ன? பட மூலாதாரம்,MNM/Facebook கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் "2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் பத்து தொகுதிகளில் போட்டியிட்டோம். 2021 சட்டமன்றத் தேர்தலில் நெருக்கடி இருந்ததால் ஆறு இடங்களைப் பெற்றோம். இந்தமுறை வலிமைக்கேற்ப ஒதுக்க வேண்டும் எனக் கூறிவிட்டோம்" என்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. 'தி.மு.க கூட்டணியில் ஒதுக்க உள்ள இரு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கூறுகின்றனர். இதனைக் கட்சித் தலைமை ஏற்கவில்லை' என, மக்கள் நீதி மய்யம் கூறுகிறது. 'ஆறு தொகுதிகளுக்குக் குறைவாகப் பெற மாட்டோம்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. கூட்டணியை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக, த.வா.க அறிவித்துள்ளது. அந்தவகையில், தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் சிக்கல் நீடிக்கிறதா? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு ஒருமாத காலம் அவகாசம் இருப்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் தி.மு.க தலைமை கவனம் செலுத்தி வருகிறது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 'அதே எண்ணிக்கை வேண்டாம்' - மார்க்சிஸ்ட் பட மூலாதாரம்,CPM/Facebook படக்குறிப்பு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- தி.மு.க இடையிலான பேச்சுவார்த்தை நிறைவடையாமல் உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டதால் அதே இடங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்குவதற்கு தி.மு.க முன்வந்தது. இதனை அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஏற்பதற்கு மறுத்துவிட்டார். "கடந்தமுறை போட்டியிட்டதை விட கூடுதலாக கொடுக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. தி.மு.க தலைவரிடம் பேசிவிட்டு சொல்வதாகக் கூறியுள்ளனர்" என செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். "நாங்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சி அல்ல" எனக் கூறிய பெ.சண்முகம், "அதிக கட்சிகள் இருக்கும்போது சிலவற்றைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்துள்ளோம். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" எனக் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு இடங்களை ஒதுக்குவதற்கு தி.மு.க தலைமை முன்வராததால் நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகளுடன் இரு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நிறைவடையாமல் உள்ளது. 'பேரம் பேச வேண்டாம்' - திருமாவளவன் தற்போது வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இரண்டு முறை தி.மு.க தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டன. முன்னதாக, 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் பத்து இடங்களில் அக்கட்சி போட்டியிட்டது. இதனை முன்னிறுத்தியே அதிக தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டு வருகிறது. இதைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய வி.சி.க பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி, "தொகுதி எண்ணிக்கை குறித்து தி.மு.கவிடம் கூறவில்லை. பல கட்சிகள் வந்துள்ளதை உணர்ந்துள்ளோம். அதேநேரம், எங்கள் கட்சியின் வலிமைக்கேற்ப ஒதுக்குமாறு கூறியுள்ளோம்" என்கிறார். "இடங்களைக் குறைத்துக் கொள்ளுமாறு தி.மு.க கூறவில்லை" எனக் கூறும் ரவிக்குமார், "பேரம் பேச வேண்டாம் என வி.சி.க தலைவர் கூறிவிட்டார். முதலமைச்சரிடம் பேசிவிட்டு தொடர்பு கொள்ள உள்ளதாக தி.மு.க தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் கூறியுள்ளனர்" எனத் தெரிவித்தார். "இந்த விவகாரத்தில் தி.மு.கவுக்கு வி.சி.க தரப்பில் நெருக்கடியைக் கொடுக்கவில்லை. அனைவருக்கும் கொடுத்து முடித்துவிட்டு எங்களுக்குக் கொடுக்குமாறு கூறினோம். எங்கள் வளர்ச்சியை அவர்களும் உணர்ந்துள்ளனர்" என அவர் தெரிவித்தார். "அதேநேரம், தி.மு.க கூட்டணியில் அதிக எதிர்பார்ப்புடன் இருக்க முடியாது. மக்கள் நீதிமய்யம், தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ உள்பட பல்வேறு கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டியுள்ளது" என்கிறார், ரவிக்குமார் எம்.பி. இதே தகவலை சனிக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த வி.சி.க தலைவர் திருமாவளவன், "கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிடக் கூடாது. பெரியளவில் தொகுதிகளை பெற முடியாத சூழலில் உள்ளோம்" எனக் கூறினார். "கூடுதல் தொகுதிகள் கிடைக்குமா என்பது இரண்டொரு நாளில் தெரிந்துவிடும்" எனக் கூறிய திருமாவளவன், "கட்சியின் நலன் எவ்வளவு முக்கியமோ அதற்கு மேல் கூட்டணியின் நலன்கள் முக்கியமானவை" என்கிறார். இன்றைய அரசியல் சூழல்களை கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். வெளியேறும் வேல்முருகன்? பட மூலாதாரம்,Velmurugan.T/Facebook தி.மு.க கூட்டணியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், இந்தமுறை கூட்டணியை மறுபரிசீலனை செய்யும் முடிவில் உள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதுகுறித்துப் பேசிய அவர், "பத்து முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தி.மு.க தலைமையிடம் மனு கொடுத்தேன். அதை நிறைவேற்றுவது குறித்து எந்தப் பதிலும் வரவில்லை. கூடுதல் இடங்களையும் தரவில்லை" எனக் கூறினார். கூட்டணியில் தொடர்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக வேல்முருகன் குறிப்பிட்டார். முன்னதாக, வன்னியர் 10.5 சதவீத இடஒதுக்கீடு, சுங்கச்சாவடிகளை அகற்றுதல், மாநில மக்களுக்கே 90 சதவீத வேலைவாய்ப்பு உள்பட பத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் வேல்முருகன் மனு கொடுத்திருந்தார். தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஓரிரு நாள்களில் வேல்முருகன் அறிவிக்க உள்ளதாக அக்கட்சித் தரப்பில் பேசப்பட்டு வருகிறது. 'நின்றால் டார்ச்லைட்.. இல்லாவிட்டால்' பட மூலாதாரம்,MNM/Facebook கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றது. தேர்தலில் அக்கட்சிக்கு ஓர் இடம் ஒதுக்கப்படவில்லையென்றாலும் ராஜ்யசபா இடத்தை ஒதுக்க உள்ளதாக தி.மு.க அறிவித்தது. வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு இரண்டு தொகுதிகளை தி.மு.க ஒதுக்க உள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இவ்விரு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தி.மு.க வலியுறுத்துவதாகத் தகவல் வெளியானது. வெள்ளிக்கிழமை (மார்ச் 20) அன்று சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஓட்டலில் இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விவாதித்துள்ளார். "தி.மு.க கூட்டணியில் கோவை தெற்கு, மயிலாப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இவற்றில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கூறுகின்றனர். இதைப் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது" என்கிறார், ம.நீ.மவின் மாநில நிர்வாகி ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அவ்வாறு போட்டியிட விரும்பினால் ம.நீ.ம.வில் இருந்து விலகி தி.மு.க உறுப்பினராக வேண்டும். அப்போது தான் போட்டியிட முடியும்" எனக் கூறுகிறார். "இதனால் கட்சியின் அடையாளம் தொலைந்துவிடும்" எனக் கூறிய அவர், "கடைசியில் ஒரு தொகுதியிலாவது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தி.மு.க தரப்பில் கூறுகின்றனர்" என அவர் தெரிவித்தார். கட்சி நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் பேசும்போது, "இந்த தேர்தலில் மதவாத சக்திக்கு இடம் கொடுக்கக் கூடாது. டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவோம் அல்லது தேர்தலில் நிற்காமல் இருப்போம்" எனப் பேசியதாகவும் அந்த நிர்வாகி தெரிவித்தார். கூட்டணி தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கமல் பேசும்போது "இந்தக் கூட்டணி நாட்டுக்குத் தேவை. அதனால் தான் கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்" எனப் பதில் அளித்தார். சின்னம் தொடர்பான பிரச்னை குறித்து, மக்கள் நீதிமய்யத்தின் செய்தி தொடர்பு மாநில செயலாளர் முரளி அப்பாஸிடம் கேட்டபோது, "கூட்டத்தில் இருப்பதால் பிறகு பேசுகிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அழுத்தமா? பட மூலாதாரம்,Stalin/Facebook மக்கள் நீதி மய்யம் வரிசையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு சிறிய கட்சிகளை தி.மு.க தலைமை வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் அக்கட்சி போட்டியிட உள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு இடங்களிலும் அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகளை தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது. இவற்றில் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடுகிறது. "விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இதேபோன்ற பிரச்னை உள்ளதா?" என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரிடம் பிபிசி தமிழ் கேட்டது. "மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் எங்கள் சின்னத்தில் போட்டியிடுவோம்" எனக் கூறிய அவர், "தே.மு.தி.கவுக்கு முரசு சின்னம் பறிபோய்விட்டது. அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்களா எனத் தெரியவில்லை" என்கிறார். தே.மு.தி.க நிர்வாகிகளிடம் தி.மு.க தரப்பு இன்னமும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதியிடம் பிபிசி தமிழ் பேசியது. "நாங்கள் போட்டியிடக் கூடிய தொகுதிகள் குறித்த விவரங்களை இன்னும் பேசவில்லை. இரண்டொரு நாளில் இதுதொடர்பாக பேசுவோம்" என்று மட்டும் பதில் அளித்தார். 'அடையாளம் போய்விடும்... ஆனால்?' ஆனால், உதயசூரியன் சின்னத்தில் சிறிய கட்சிகளை போட்டியிட வைப்பதன் பின்னணியில் வேறு சில காரணங்கள் உள்ளதாகக் கூறுகிறார், மூத்த ஊடகவியலாளர் ஜென்ராம். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தேர்தலுக்குப் பிறகான சூழல்களை மாற்றியமைக்கும் முயற்சியில் பா.ஜ.க தரப்பில் ஈடுபட்டால் அதனைத் தவிர்க்கவே அதிக இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது" என்கிறார். ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட தொகுதிகளைவிட கூடுதல் தொகுதிகளைக் கேட்டால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். "இதனால் சிறிய கட்சிகளுக்கான அடையாளம் போய்விடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை" எனக் கூறும் ஜென்ராம், "தேர்தல் களத்தில் உதயசூரியன், இரட்டை இலை ஆகிய சின்னங்கள் பிரபலமாக உள்ளன. அடுத்ததாக, கை சின்னமும் தாமரை சின்னமும் உள்ளது" என்கிறார். மாம்பழம், பானை சின்னம் போன்றவை சில மாவட்டங்களில் பிரபலமாக உள்ளதாகக் கூறும் அவர், "இவற்றைத் தாண்டி சிறிய கட்சிகளின் புதிய சின்னங்களுக்கு வாய்ப்பளிப்பதில் சிக்கல்கள் உள்ளன" எனக் கூறுகிறார். தேர்தல் முடிவில் பெரும்பான்மை கிடைக்காமல் போவதைத் தவிர்க்கும் வகையில் இப்படியொரு நடைமுறையை தி.மு.க மேற்கொள்வதாகக் கூறும் ஜென்ராம், தேர்தலில் போட்டியிடுவது என்று இல்லாமல் உறுதியாக வெற்றி பெறுவது என்ற மனநிலையில் தி.முக. உள்ளது" என்கிறார். 'அழுத்தங்கள் உள்ளன' - ஆர்.எஸ்.பாரதி தி.மு.க அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "எங்கள் கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளன. அதற்கேற்ற வகையில் அழுத்தங்களும் உள்ளன" எனக் கூறினார். ஒரு சில கட்சிகளுக்கு மட்டும் இடங்களை ஒதுக்க வேண்டியுள்ளதாகக் கூறிய ஆர்.எஸ்.பாரதி, "அதுவும் விரைவில் முடிந்துவிடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேசி முடிவெடுக்கப்படும். வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி குறித்து நான் பதில் அளிக்க முடியாது" என்கிறார். "வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாக அனைத்து பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டுவிடும். தொகுதிப் பங்கீட்டை நாங்கள் மட்டுமே தொடங்கியுள்ளோம். அதற்கான பணிகளை எதிர்க்கட்சிகள் தொடங்கவில்லை. அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை" எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy01gd3kp4ko
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
செந்தமிழ் தேன் மொழியாள் .......! 😍
-
இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
பூ மிதி அண்ணை!
-
இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
🤣................... 'அம்மா திரௌபதி அம்மனே, அவரைக் கூட்டி வந்து தீ மிதிக்க வைக்கின்றேன்..............' என்று ஒரு நேர்த்தி வைக்கவில்லையே என்று சந்தோசப்பட வேண்டும், அண்ணா........... நாங்கள் அங்கு போவதற்கு சில நாட்கள் முன்னரேயே தீ மிதிக்கும் விழா நடந்திருந்தது..................🤣.
-
ஜப்பான் பிரதமர் முன்பு ‘பேர்ல் ஹார்பர்’ குறித்துப் பேசிய டிரம்ப்
‘பேர்ல் ஹார்பர்’ குறிப்பு : ஜப்பான் பிரதமரை சங்கடப்படுத்திய ட்ரம்ப் 21 Mar, 2026 | 12:10 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பேர்ல் ஹார்பர் தாக்குதல் குறித்து நகைச்சுவையாகக் குறிப்பிட்டது, ஜப்பான் பிரதமரை சங்கடமான நிலைக்கு தள்ளியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகையில் ஜப்பான் பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பு மற்றும் பத்திரிகையாளர் மாநாட்டின் போது இந்த சம்பவம் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு, முக்கிய கனிம வளங்கள் மற்றும் பொருளாதார திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் இடம்பெற்ற பின்னர் ஊடக சந்திப்பு நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பின் ஆரம்பத்தில், ஜப்பான் பிரதமரின் ஆங்கிலத் திறனைப் பாராட்டிய டிரம்ப், மொழிபெயர்ப்பின்றி உரையாடுவது குறித்து நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்தார். “நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? உங்களுக்கு மொழிபெயர்ப்பு தேவையில்லை என்பது மிகவும் நன்றாக உள்ளது,” என டிரம்ப் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, “அடுத்த முறை உங்கள் மொழியில் பேச முயற்சிப்பேன்” என்ற விளையாட்டுத்தனமான குறிப்பும் இடம்பெற்றது. இந்த கட்டத்தில், சந்திப்பு இயல்பான மற்றும் நட்பான சூழலில் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களுக்கு முன்பாக நட்பு நாடுகளுக்கு ஏன் முன்னறிவிப்பு வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது, டிரம்ப் உரையின் திசையை மாற்றினார். “நாங்கள் யாருக்கும் முன்னதாகச் சொல்லவில்லை, ஏனெனில் எங்களுக்கு திடீர் தாக்குதல் தேவைப்பட்டது. திடீர் தாக்குதல் பற்றி ஜப்பானை விட வேறு யாருக்குத் தெரியும்?” எனக் கூறிய அவர், பின்னர் ஜப்பான் பிரதமரை நோக்கி “நீங்கள் ஏன் பேர்ல் ஹார்பர் குறித்து எங்களிடம் சொல்லவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார். இந்தக் கருத்து, அங்கு இருந்தவர்களிடையே சங்கடமான அமைதியை ஏற்படுத்தியதுடன், ஜப்பான் பிரதமர் அதற்கு பதிலளிக்காமல் அமைதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, சர்வதேச அரசியல் வட்டாரங்களில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. வரலாற்று உணர்வுகள் தொடர்பான விஷயங்களில் தலைவர்கள் பயன்படுத்தும் மொழி மற்றும் அணுகுமுறை குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். 1941 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதி, ஜப்பான் அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் உள்ள பேர்ல் ஹார்பர் கடற்படைத் தளத்தை திடீரெனத் தாக்கியது. இந்த தாக்குதலில் 2,400-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நேரடியாக இணைந்ததுடன், 1945 ஆம் ஆண்டு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் வீசப்பட்டதன் பின்னர் ஜப்பான் சரணடைந்தது. இந்நிலையில், தற்போதைய உலக அரசியல் பதற்றங்களின் மத்தியில், இத்தகைய வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுவது சர்வதேச உறவுகளில் நுணுக்கமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், இந்த சம்பவம் அமெரிக்கா – ஜப்பான் உறவுகளின் நுட்பமான தன்மையையும், உலக அரசியல் மேடையில் உரையாடல்களின் முக்கியத்துவத்தையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/241551
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
உண்மை தான் சகோ. சுயநலத்துடன் தன் தன் வேலைகளை செய்தவர்கள் கேள்வி கேட்க தம்மால் முடிந்ததற்கும் மேலாக செய்து நின்றவர்கள் அடிக்கடி தீக்குளித்து நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருப்பதும் போற்றுதற்குரியது தான். கருத்து களத்தில் உங்கள் கருத்தை ஏற்க வைக்க நீங்கள் இந்த ஆயுதத்தை கையில் எடுப்பது புதிதல்ல. தொடருங்கள்.
-
அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
மிகவும் சிறப்பான முயற்சி ........ கவிதையும் நன்றாக இருக்கு...... அதை நீங்கள் திருத்திய 2 வது கவிதை சிறப்பு.....! 👍 நான் "வீதியோரம்" கதைக்கு AI யால் படங்கள் போட முயற்சி செய்தேன். அது நன்றாக வந்தது. ஆனால் பலமுறை முயற்சித்தும் யாழில் ஓட்ட முடியவில்லை....... பின்பு தான் கூகுள் படங்களை எடுத்து ஓட்டினேன் .......!
-
இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு
எரிபொருள் விநியோக அளவு அதிகரிப்பு – கியூ. ஆர். முறையில் புதிய அளவுகள் அறிவிப்பு 21 Mar, 2026 | 08:34 PM நாட்டில் அமுலில் உள்ள கியூ. ஆர். முறைமையின் கீழ் வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவுகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த புதிய மாற்றங்கள் இன்று சனிக்கிழமை (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தை சீரமைத்து, பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். புதிய எரிபொருள் வழங்கல் அளவுகள்: * கார்கள்: 25 லீற்றர் * முச்சக்கர வண்டிகள் (ஆட்டோ): 20 லீற்றர் * வேன்கள்: 50 லீற்றர் * லொறிகள்: 200 லீற்றர் (மாற்றமில்லை) * மோட்டார் சைக்கிள்கள்: 08 லீற்றர் * பஸ்கள்: 100 லீற்றர் * விவசாய வாகனங்கள்: 40 லீற்றர் * Quadricycle வாகனங்கள்: 08 லீற்றர் இந்த அதிகரிப்பு நடவடிக்கை மூலம் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, கியூ. ஆர். முறைமை தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றும், அதன்மூலம் ஒழுங்குமுறைப்பட்ட விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் எரிபொருள் விநியோக நிலையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப எதிர்காலத்திலும் இதுபோன்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோக அளவு அதிகரிப்பு
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். கள்ளிக்காட்டு இதிகாசமும் மற்றும் இவரின் ஒரு சிறுகதை தொகுப்பும் இருக்கின்றது. இரண்டுமே மிகச் சாதாரணமானவை. அதிலும் அந்த சிறுகதை தொகுப்பு..................... கடவுளே....... யாழ் களத்தில் கள உறவுகள் எழுதும் சிறுகதைகள் பலவுமே அதைவிட மேலானவை. கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ரா (கி. ராஜநாராயணன் அவர்கள்). வைரமுத்து அவரை நெருங்கவே முடியாது. பாவிகள்...... தங்கள் செல்வாக்கால் அவருக்கு கிடைக்க வேண்டியதை மறுத்துவிட்டார்கள். இதுவே தான் அசோகமித்திரனுக்கும் நடந்தது. ஏழைகளின் சொற்கள், அவை எவ்வளவு மேம்பட்டது என்றாலும், அம்பலம் ஏறாத, ஏற விடாத அற்ப மனிதர்கள் நிறைந்த தேசம் இந்தியாவும், தமிழ் நாடும். இப்படி நடந்து கொண்டிருக்க, தன்னை ஒரு இலக்கியவாதி, தமிழ் செழிக்க உழைக்கும் ஒரு தலைவன் என்றிருந்த கருணாநிதி கண்டும் காணாது இருந்தார். இதனால் அவரும் இந்த இழிநிலைக்கு ஒரு பிரதான காரணம். தன்னை ஒரு இலக்கியவாதியாக முன்னிறுத்துவதிலேயே அவர் முனைப்பாக இருந்தார். ஆனால் ஒரு சிறு குளம் போல தேங்கி விட்ட அவருக்கு ஜீவநதிகளையும், பரந்த கடல்களையும் பார்க்க துணிவு வரவில்லை. கருணாநிதி அவர்களின் எந்த ஆக்கம் இன்று பொருட்படுத்தப்படுகின்றது, எது ஒரு இலக்கிய வழிகாட்டியாக சொல்லப்படுகின்றது..................... இதுவே தான் தகுதிக்கு மேல் விளம்பரப்படுத்தப்படும் படைப்பாளிகளுக்கும், படைப்புகளுக்கும் காலம் கொடுக்கும் தண்டனை.................
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
நடன்ஸ் அணுசக்தி நிலையத்தை அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்கியதாக ஈரான் தகவல் நடன்ஸ் அணுசக்தி நிலையம் |கோப்புப் படம் மோகன் கணபதி Updated on: 21 Mar 2026, 4:54 pm 2 min read தெஹ்ரான்: ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டின் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி அமைப்பு வெளியிட்ட அறிக்கை குறித்து தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று காலை இந்த தாக்குதல் நடந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கதிரியக்கக் கசிவு குறித்து எந்த தகவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது நாட்டின் எதிரிகளுக்கு தலைசுற்ற வகை்கும் அடியை கொடுத்ததாக ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி கூறிய நிலையில், சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புதிய அலையை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்ததாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ள வளைகுடா நாடுகள் மிதும் ஈரான் தாக்குதலை தொடங்கியுள்ளது. குறிப்பாக, வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளங்களை குறிவைத்து இந்த தொடர் தாக்குதல்களை ஈரான் நடத்தி வருகிறது. இது ஈரானின் 70-வது தொடர் தாக்குதல் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அச்சுறுத்தல்: ஈரானுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலப்பரப்பில் இருந்து மேலும் ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் ராஸ் அல் கைமா துறைமுக நகரை நொறுக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. பஹ்ரைன் மீது தாக்குதல்: ஈரானில் இருந்து ஏவப்பட்ட மேலும் இரண்டு ஏவுகணைகளை பஹ்ரைனின் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்துள்ளன. பிப்.28 முதல் இதுவரை மொத்தம் 143 ஏவுகணைகளையும், 242 ஆளில்லா விமானங்களையும் அழித்துள்ளதாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா: தங்கள் நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏவப்பட்ட அதிக அளவிலான ஆளில்லா விமானத் தாக்குதல்களை சவுதி அரேபியா இடைமறித்து அழித்ததாக அதன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மூன்று மணி நேரத்துக்குள் 38 ஆளில்லா விமானங்களைக் கொண்ட ஒரு வலுவான தாக்குதல் உட்பட 47 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சவுதி அரேபிய படைகள் தெரிவித்துள்ளன. குவைத் ஆலை மீது தாக்குதல்: குவைத்தின் மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில், நாள் ஒன்றுக்கு சுமார் 7,30,000 பீப்பாய் எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கெண்ட மிகப் பெரிய ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தப் போர் இன்று 4-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த போர் காரணமாக ஈரானில் இதுவரை 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 204 குழந்தைகள் உட்பட 1,444 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் கூறியுள்ளது. நடன்ஸ் அணுசக்தி நிலையத்தை அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்கியதாக ஈரான் தகவல்
-
டியாகோ கார்சியா அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
எதிரிகள் நினைத்ததை விட அதிக தூரம் பாயும் ஈரானிய ஏவுகணைகள்! Mar 21, 2026 - 07:30 PM சாகோஸ் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள டியாகோ கார்சியா தளம் மீது ஈரான் இரண்டு பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அந்நாட்டின் அரை-அரசு செய்தி நிறுவனமான 'மெஹர்' இன்று (21) உறுதிப்படுத்தியுள்ளது. "இது ஒரு குறிப்பிடத்தக்க தாக்குதல்... ஈரானிய ஏவுகணைகளின் எல்லை எதிரி முன்னதாகக் கணித்ததை விட அதிகமானது என்பதை இது குறிக்கிறது" என்று அந்தச் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான கடற்படைத் தளமாக டியாகோ கார்சியா தளம் கருதப்படுகிறது. இந்தத் தளத்தின் மீது ஈரான் இரண்டு நடுத்தர தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாகவும், எனினும் இதனால் தமது தளத்திற்கு சேதம் ஏற்படவில்லை என்றும் அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்கு அருகாமையில் அமெரிக்காவினால் 'ஐரிஸ் டெனா' (Iris Dena) போர்க்கப்பல் மீது டார்பிடோ தாக்குதல் நடத்திய நீர்மூழ்கிக் கப்பல், இந்தத் தீவிலிருந்தே வந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmn0e3zp2000s356pvato46ti
-
‘மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாமிய பேரவை’ அமைக்க ஈரான் அதிபர் அழைப்பு
‘மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாமிய பேரவை’ அமைக்க ஈரான் அதிபர் அழைப்பு ‘அனைத்துப் பிரச்சினைகளையும் பேசித் தீர்க்க தயார்’ ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் வெற்றி மயிலோன் Updated on: 21 Mar 2026, 4:32 pm 2 min read தெஹ்ரான்: “நாங்கள் பிற இஸ்லாமிய நாடுகளுடன் மோதலை விரும்பவில்லை. மத்திய கிழக்கின் இஸ்லாமியப் பேரவை ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்தப் பிராந்திய நாடுகள் நமது எதிரிகள் அமைக்கும் கண்ணிகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது” என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்தார். நவ்ரூஸ் மற்றும் ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் சனிக்கிழமையன்று வெளியிட்ட தனது செய்தியில், “இந்தப் பகுதியில் அமைதியின்மையை நாங்கள் விரும்பவில்லை என்பதை உலகுக்கு அறிவிக்கிறோம். எந்தவொரு நாடும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவே ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் குவித்து வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி, தங்கள் எல்லைகள் தாக்கப்படுமோ, இல்லையோ என்று எப்போதும் அச்சத்துடன் காத்திருக்கும் நிலையை நாங்கள் விரும்பவில்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது குறித்து நாங்கள் எந்த வகையிலும் சிந்திக்கவில்லை. இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை சீர்குலைவதை நாங்கள் துளியும் விரும்பவில்லை. இது நாம் அனைவரும் ஒன்றிணைந்து, கைகோத்துச் செயல்படுவதன் மூலம் நாமே தீர்த்துக்கொள்ளக் கூடிய ஒரு விஷயமாகும். இந்தப் பிராந்திய நாடுகளுக்கான செய்தி இது: இந்தப் பகுதியில் நிலவும் உறுதியற்ற தன்மைக்கு ஈரானே காரணம் என்ற ஒரு கதையை உங்கள் சொந்த மக்களிடம் பரப்ப ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இந்தப் பகுதியில் நிலவும் அமைதியின்மை, உறுதியற்ற தன்மை, இனப்படுகொலைச் செயல்கள், பயங்கரவாதம் மற்றும் நாசவேலைகளுக்கு இஸ்ரேலே பொறுப்பு என்பதை நீங்கள் உணர்ந்து புரிந்துகொள்ள வேண்டும். முதலில், நமது நாட்டின் உன்னத மக்களுக்கு, நமது உன்னத தலைவரின் வீரமரணத்துக்காகவும், இந்த தேசத்தின் அர்ப்பணிப்புள்ள சேவகர்களுக்காகவும் எனது இரங்கலைத் தெரிவிப்பது அவசியமாகக் கருதுகிறேன். நாங்கள் அண்டை முஸ்லிம் நாடுகளுடன் மோதலை நாடுவதில்லை. நாங்கள் இஸ்லாமிய நாடுகளுடன் போரைத் விரும்பவில்லை; அவர்கள் எங்கள் சகோதரர்கள். நமக்குள் உருவாகியுள்ள பிளவுகள், முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்த முயலும் ஒரு துரோக எதிரியின் செயல். நாம் அனைத்து மனக்கசப்புகளையும், வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்து பாடுபட வேண்டும். ஈரானைச் சூழ்ந்துள்ள எங்கள் அன்பான அண்டை நாடுகளே, நீங்கள் எங்கள் சகோதரர்கள். நமது உறவுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய எந்தவொரு தவறான புரிதல்களுக்கும் அல்லது பாதிப்புகளுக்கும், இந்த வேறுபாடுகளை நீக்க இறைவன் உதவ வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். அன்பானவர்களே, உங்களுடன் அனைத்துப் பிரச்சினைகளையும் பேசித் தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, மத்திய கிழக்கு நாடுகளிடையே ஓர் இஸ்லாமியப் பாதுகாப்பு கட்டமைப்பு நிறுவப்பட வேண்டும். அது பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும். பிராந்தியத்தில் வெளிநாட்டு தலையீடு தேவையில்லை. நம் பாதுகாப்பு, பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் உறவுகளை ஒருங்கிணைக்க, நாம் ஒன்றிணைந்து 'மத்திய கிழக்கின் இஸ்லாமியப் பேரவை' ஒன்றை உருவாக்கலாம். ஒருவருக்கொருவர் சண்டையிட நமக்கு உரிமை இல்லை. எந்தவொரு காரணத்தைக் கொண்டும், நமது எதிரிகள் நமக்காக அமைத்துள்ள கண்ணிகளில் நாம் சிக்கிக்கொள்ளக் கூடாது" என்று அவர் கூறினார். ‘மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாமிய பேரவை’ அமைக்க ஈரான் அதிபர் அழைப்பு
-
இளம்தாய் உயிருடன் மீட்கப்பட்ட கிணற்றினுள் இருந்து அழுகிய சடலமொன்று கண்டுபிடிப்பு ; வயல் பகுதியில் இரண்டரை வயது குழந்தையும் மீட்பு
அத தெரண நேற்று வந்த தகவல்களையே வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்தி அப்படியே போட்டுவிட்டு, புதிய தகவல் வெளியானதாக செய்தியை வெளியிட்டு இருக்கின்றது. இலங்ககை தமிழ் / முஸ்லிம் ஊடகங்கள் எல்லாம், பொலிஸார் தரும் அறிக்கைகளையே செய்திகளாக தருபவை. கொஞ்சம் கூட நிருபர்களை சம்பவ இடங்களுக்கு அனுப்பி வைத்தோ, ஆராய்ந்தோ செய்திகளை வெளியிடுபவை அல்ல. கடும் சோம்பேறிக் கூட்டங்கள் இவர்கள். இவர்களை விட சிங்கள ஊடகவியலாளர்கள் பல மடங்கு மேல்.
-
ஒன்பது மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கிளைக் காரியாலயங்கள்!
ஒன்பது மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கிளைக் காரியாலயங்கள்! Published By: Digital Desk 1 21 Mar, 2026 | 02:37 PM நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புதிய கிளைக் காரியாலயங்களை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். தற்போது இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகள், கொழும்பை மையமாகக் கொண்டே செயற்படுவது நடைமுறைச் சிக்கல்களைத் தோற்றுவிப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/241567
-
கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
கத்தார் எரிவாயு ஏற்றுமதி சகஜநிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்! தோஹா: வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதித் திறன் 17 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் என கத்தார் எனர்ஜி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், அந்நாட்டின் எரிசக்தித்துறை அமைச்சருமான சாத் அல்-காபி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: ஒரு சகோதர முஸ்லிம் நாடான ஈரானிடமிருந்து, அதுவும் இந்த புனிதமான ரமலான் மாதத்தில் இத்தகைய வேதனை மிகுந்த தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே மீண்டும் உற்பத்தியைத் தொடங்க முடியும். இந்தத் தாக்குதலில் கத்தாரில் சேதமடைந்த கட்டமைப்புகளைச் சீரமைக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும். இதனால் ஆண்டுக்கு 12.8 மில்லியன் டன் எரிவாயு விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் பெரும் எரிசக்தி தட்டுப்பாட்டை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். கத்தார் எரிவாயு ஏற்றுமதி சகஜநிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்!
-
முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!
என்னண்டாலும் சட்டுபுட்டெண்டு சண்டையை முடிக்கச் சொல்லுங்க அண்ணை! வெக்கை ஏறிக்கொண்டு போகுது, மின்சாரம் தடைப்பட்டால் எங்கேயும் தண்ணிக்கை தான் போயிருக்கவேணும்!
-
முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!
ஒரு பக்கத்தால் பச்சைக் கொடி காட்டிக் கொண்டு மறுபக்கத்தால் காலாட்படைகளை உள்ளே அனுப்பப் போகிறார்கள்.
-
162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு - உயிர்நீத்த வீரர்களுக்கு கௌரவம்!
162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு - உயிர்நீத்த வீரர்களுக்கு கௌரவம்! Published By: Digital Desk 1 21 Mar, 2026 | 02:41 PM நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த பொலிஸ் அதிகாரிகளை நினைவுகூரும் 162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு இன்று சனிக்கிழமை (21) காலை கொழும்பில் நடைபெற்றது. பம்பலப்பிட்டி பொலிஸ் களத் தலைமையகத்தில் அமைந்துள்ள பொலிஸ் நினைவுத் தூபிக்கு அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கடமையின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் மரியாதையுடன் கௌரவம் அளிக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இதுவரை 5,789 பொலிஸ் அதிகாரிகள் உயிர்நீத்துள்ளனர். இதில் கடந்த மூன்று தசாப்த கால பயங்கரவாத யுத்தத்தின் போது மாத்திரம் 2,598 அதிகாரிகள் வீரமரணமடைந்துள்ளனர். அதேநேரம், யுத்த காலப்பகுதியில் மற்றும் கடமையின் போது காயமடைந்து ஊனமுற்ற நிலையில் 2,575 அதிகாரிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வின் போது பொலிஸ் மா அதிபரால் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிரிழந்த அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களும் தமது உறவுகளுக்கு கண்ணீர் மல்க மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த உள்ளிட்ட உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241565
-
அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
வாசிக்கவே தலையை சுத்துது. எப்படி இதையெல்லாம் தயாரிப்பது? பாராட்டுக்கள்.
-
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
இனி வேற பெயரில வித்தால் வாங்குவார்கள் என நினைக்கிறேன்!