Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. ஜெர்மனியில் வாழ்க்கையை பரிபூரணமாக கொன்டு செல்வதற்கே வேலை செய்வதாக சொல்வார்கள். uk இல் வேலைசெய்வதற்கே வாழ்கை (எனவே சம்பளம் சராசரியாக குறைவு ) என்று ஜெர்மனியில் UK க்கு ஏளனமாக சொல்லப்படும் உரையாடல் அனல், uk (மற்ற ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து) அமெரிக்கா வேலை கலாசாரத்தை பின்பற்றி இருப்பதால் பானையில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாக, வேலை நேரமும் கூட (அமெரிக்கா போல் இல்லைத்தான்), அதனால் ஏற்கனவே குறைவாக இருந்த சம்பளம் மிகவும் இறங்கி விட்டது. அனால், இப்போதைய வறுமை பழமையாத கட்சி கொள்கையால் (அதன் தொடர்ச்சியால்) தூண்டப்பட்ட, உருவாக்கப்பட்ட செயற்கை வறுமை.
  3. அரசியல் சம்பந்தமான காரணங்களை வைத்துத்தான் புகலிடக் கோரிக்கை வைக்கமுடியும் என்ற இலக்கியவாதிகளின் எண்ணத்தை வாத்தியார் கணக்கு மாற்றிப் போட்டிருக்கிறது. புலம்பெயர் இலக்கிய வாதிகளோடு ஷோபா சக்திக்கு என்ன பிரச்சினையோ? கதை அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. வடமராட்சியில் பனைமுனை என்ற ஊரை எனக்குத் தெரியும். காடல்முனை அறியப்படாத ஊராக இருக்கிறது. எது எப்படியோ காடல்முனை ஆட்களை நம்பவே கூடாது.
  4. Today
  5. அவர் இரத்தம் மாற்றி தூய தமிழ் இரத்தம் பெற்று பாற்கடலில் நீத்தி செந்தமிழன் ஆகியது உங்களுக்கு தெரியாது போலும். அவர் மேடையில் பேசும் செந்தமிழை விட டெலிபோனில் தம்பிகளுடன் பேசும் செந்தமிழ் உயர்வானது.
  6. தங்கத்தின் விலை $5,500 தாண்டியது; இலங்கையில் ஒரு பவுண் 420,000 ரூபா! புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் வியாழக்கிழமை (29) தங்கம் அதன் அனல் பறக்கும் விலை ஏற்றத்தை நீடித்தது. அதன்படி, வியாழக்கிழமை காலை ஆரம்ப வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 5,600 அமெரிக்க டொலர்கள் என்ற சாதனையை எட்டியது. அதே நேரத்தில் வெள்ளி 120 அமெரிக்க டொலர்களை தாண்டியது. திங்களன்று முதல் முறையாக தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலர்களை விஞ்சியது, மேலும் இந்த வாரம் இதுவரை 10% க்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளது. வலுவான பாதுகாப்பான புகலிட தேவை, உறுதியான அமெரிக்க மத்திய வங்கி கொள்முதல் மற்றும் பலவீனமான டொலர் உள்ளிட்ட பல காரணிகளால் இந்த விலை ஏற்றத்துக்கு வழிவகுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2025 ஆம் ஆண்டில் 64% ஏற்றத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு தங்கம் 27% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இலங்கை நிலவரம்; கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (29) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 420,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 386,400 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1462139
  7. தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் உளவாளிகள் ஊடுருவல். தமிழரசுக் கட்சியின் இறுதிப் பொதுக்குழு கூட்டப்பட்ட போது சாணக்கியன் எம்.பி எமது கட்சியிலேயே இல்லை. தற்போது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள் உள் நுழைக்கப்பட்டுள்ளார்கள் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் சுமந்திரன் ஆதரவாளர்கள் தான் அதிகம் உள்ளனர். அவர்களால் புகுத்தப்பட்டவர்கள் தான் அங்கே அதிகம் உள்ளனர். பதில் செயலாளராக இருந்தவர் அந்தப் பதவியில் இருந்ததால் அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டார். அதேபோல் சாணக்கியன் எம்.பி எப்படி உள்வாங்கப்பட்டவர் என்று தெரியாமல் உள்வாங்கப்பட்டு விட்டார். உண்மையில் இறுதிப் பொதுக்குழு கூடிய போது சாணக்கியன் எமது கட்சியில் இல்லை. எப்படி அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டார் என்பது எனக்கு தெரியது. அது மர்மமாகவே இருக்கிறது. இது உளவாளிகளின் ஊடுருவல். திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் உள் நுழைக்கப்பட்டுள்ளது. பதவி ஆசையில் ஒருவர். கேவலம் கெட்ட தேசியபபட்டியலில் ஒருவர். இன்னொரு ஆள் பெட்டி வாங்கி எல்லோரையும் உள்வாங்கி, எல்லோரும் உள்ளுக்கு வந்து இன்றைக்கு கட்சியை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு துணிவிருந்தால் இந்த மக்களுக்கு முன்னால் பொதுக்குழுவை கூட்டுங்கள். நீங்களே தலைவராக வர முடியுமாக இருந்தால் பரீட்சித்துப் பாருங்கள் எனத் தெரிவித்தார். https://athavannews.com/2026/1462091
  8. 2025 ஆம் ஆண்டில் 9 சிறுவர் திருமணங்கள், 79 பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவு! 2025 ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 10,455 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் (NCPA) பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவான முறைப்பாடுகளில் 545 பாலியல் துன்புறுத்தல் தொடர்பானவை, 231 கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை. இதேவேளை, கடந்த ஆண்டு 79 பதின்ம வயது கர்ப்பங்கள் மற்றும் மூன்று கருக்கலைப்புகளையும் அதிகார சபை பதிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஒன்பது சிறுவர் திருமணங்கள், 38 பாலியல் வன்கொடுமை வழக்குகள், சிறுவர்களை குறிவைத்து 150 சைபர் துஷ்பிரயோக சம்பவங்கள் மற்றும் 20 சிறுவர் தற்கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் தொடர்பாக 42 முறைப்பாடுகளும், பெற்றோர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பின்தங்கியதாக ஒன்பது முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்த தொடர்ச்சியான கவலைகளை எடுத்துக்காட்டுகின்றன. இது தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் தலையீட்டின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2026/1462121
  9. உண்ணாவிரதம் இருந்த, மட்டக்களப்பை சேர்ந்த குகதாசன் வைத்தியசாலையில் அனுமதி. மட்டக்களப்பை சேர்ந்த குகதாசன் உடல்நிலை ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நிரந்த ஆசிரியர் நியமனம் வேண்டி பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து வருகின்றனர். உண்ணாவிரதம் இருந்த குகதாசன் என்பவரே இன்று நான்காவது நாள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். https://athavannews.com/2026/1462120
  10. கத்தோலிக்க பாதிரியார் மீதான தாக்குதல் சம்பவம் – 6 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பிணை! கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்றையதினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (29) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேவேளை, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் தலா ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க கம்பஹா நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது பணி இடைநீக்கத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவரை அடையாள அணிவகுப்பின் போது பாதிரியாளர் அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்களில் ஒருவரே தன்னைத் தாக்கியவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஏனைய இரு உத்தியோகத்தர்களும் அந்தத் தருணத்தில் அருகில் நின்றவர்கள் என மதகுரு தெரிவித்துள்ளார். இதை அடுத்து 6 பேருக்கும் பிணை வழங்கியதுடன் வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1462148
  11. இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு! அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இந்திய ரூபாவின் பெறுமதியானது இன்று (29) வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. அதன்படி அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் பெறுமதி இன்று காலை 92 ஆக காணப்பட்டது. பலவீனமான வெளிநாட்டு மூலதன ஓட்டம் மற்றும் டொலர் தேவையில் கூர்மையான அதிகரிப்பு ஆகியவற்றால் இந்த நிலை ஏற்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான முதல் கொள்கை முடிவின் முடிவில் விகிதங்களை மாற்றாமல் வைத்திருப்பதாக அமெரிக்க மத்திய வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து, டொலர் குறியீடு அதன் 4-1/2 ஆண்டு குறைந்த அளவிலிருந்து உயர்ந்த பின்னர் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு இதுவரை, ரூபாய் மதிப்பு 2% சரிந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதிக்கு அதிக வரிகளை விதித்ததிலிருந்து இது கிட்டத்தட்ட 5% குறைந்துள்ளது. இந்தியா வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த போதிலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2% வளர்ச்சியடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2026/1462133
  12. சீனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை விதிப்பு! மியன்மாரில் ஆள்கடத்தலில் ஈடுபட்ட 11 பேருக்கு சீன அரசாங்கம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. மியான்மரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக் கடத்திச் சென்று, அவர்களை அடிமைகளாக வைத்து இணைய மோசடிகளில் ஈடுபடுத்தி வந்த பிரபல குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுக்குச் சீன அரசாங்கம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள கோகாங் பிராந்தியத்தில் குறித்த மோசடி மையங்கள் இயங்கி வந்தன. இந்தக் குடும்பம் அந்தப் பகுதியில் மிகச் செல்வாக்குமிக்க ஒரு மாஃபியா கும்பலாகச் செயல்பட்டு வந்தது. இவர்கள் சீன குடிமக்களைக் குறிவைத்து தொலைபேசி மற்றும் இணையம் ஊடாகப் பல கோடி ரூபாய் மோசடிகளைச் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த கும்பல், சட்டவிரோத ஆயுதக் குழுக்களைப் பராமரித்தல் மற்றும் கொலைச் சம்பவங்களில் ஈடுபடுதல், வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி ஆயிரக்கணக்கான சீன மற்றும் ஏனைய நாட்டு இளைஞர்களைக் கடத்திச் சென்று, மோசடி மையங்களில் கட்டாயப்படுத்தி வேலை வாங்கல், இலக்குகளை அடையாத ஊழியர்களைச் சித்திரவதை செய்தல் மற்றும் சிறைவைத்தல் மற்றும் முதலீட்டு மோசடிகள் மூலம் சீனாவிற்குள் பாரிய பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தனர். இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சீன அரசாங்கம் மியான்மர் இராணுவ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து, இந்தக் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் சீனாவிற்குக் கடத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர். சீன நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களது குற்றங்கள் மனிதாபிமானமற்றவை மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவை என நிரூபிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், அக்குடும்பத்தின் தலைவர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் இயங்கும் இவ்வாறான மோசடி மையங்களை வேரோடு அழிப்போம் எனச் சீனா சூளுரைத்துள்ளது. இந்த மரண தண்டனை நிறைவேற்றம், எல்லை தாண்டிய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விடுக்கப்பட்ட ஒரு கடும் எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2026/1462134
  13. சிறுவர் பாதுகாப்பில் நெருக்கடி: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியீடு 29 January 2026 2025 ஆம் ஆண்டில் மட்டும் சிறுவர்கள் தொடர்பாக 10,455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 8,514 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் தொடர்பானவை என்றும் 1,941 முறைப்பாடுகள் அந்த நோக்கத்துடன் நேரடியாக தொடர்புடையவை அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 545 முறைப்பாடுகளும், பாரிய பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து 231 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. அத்துடன் 38 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டில் 79 சிறுவயதுக் கர்ப்பங்கள், 3 கருக்கலைப்புகள் மற்றும் 9 சிறுவர் திருமணங்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறைகள் தொடர்பாக 150 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக 20 சிறுவர்கள் உயிர் மாய்ப்புக்கு முயற்சித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் குறித்து 42 முறைப்பாடுகளும், 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கைவிட்டுவிட்டுத் தாய்மார்கள் வெளிநாடு சென்றமை தொடர்பாக 9 முறைப்பாடுகளும் அதிகார சபைக்குக் கிடைத்துள்ளன. இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டே, சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் சமூக ஊடகக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Hiru Newsசிறுவர் பாதுகாப்பில் நெருக்கடி: அதிர்ச்சியூட்டும் புள்ளிவ...சிறுவர் பாதுகாப்பில் நெருக்கடி: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியீடு . Most visited website in Sri Lanka.
  14. சுண்ணக்கல் அகழ்வால் பரபரப்பான தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வடக்கு யாழ்ப்பாணம் - தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தென்மராட்சி பிரதே செயலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.இளங்குமரன் தலைமையில் நேற்று (28) குறித்த கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராமநாதன் அர்ச்சுனா, தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன் இக்கூட்டத்தின் போது சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வு, நாவற்குழி சிங்கள வீட்டுத்திட்டம், பிரதேச சபை மலக்கழிவுகள் அனுமதியின்றி விவசாய நிலப் பிரதேசங்களில் கொட்டப்படுதல், பொருளாதார மத்திய நிலையத்தை மீளவும் குத்தகைக்கு விடுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmkz4tktf04klo29nmv4km5zg
  15. கிழக்கும் கவனிக்கப்பட வேண்டும் மொஹமட் பாதுஷா வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வளங்களில் வெளிநாடுகள் கண்வைக்கத் தொடங்கி நெடுங்காலமாயிற்று. இதற்கிடையில் வடக்கில் இதற்கு மக்களின் எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன. அல்லது மக்கள் மிகக் கவனமாக ஒவ்வொரு நகர்வையும் உற்றுநோக்கி வருகின்றனர். கிழக்கில் உள்ள திருகோணமலை துறைமுகம், எண்ணெய்க் குதங்கள், சுற்றுலா சார் வளங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் குறி மேலோங்கியிருப்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம் தான். ஆனால் மக்கள் பெரிதாக இதில் அக்கறை கொண்டாக தெரியவில்லை. இந்தப் பின்னணியில் வடக்கு போன்ற சில மாகாணங்களுக்கு கொடுக்கப்படுகின்ற அளவுக்கு முக்கியத்துவம் கிழக்கிற்குக் கொடுக்கப்படுகின்றதா என்பது ஒரு ஐயப்பாடாக உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டன. ஒப்பீட்டளவில் வட மாகாணத்திலேயே இந்த பாதிப்பு அதிகமுள்ளது. தமிழ் அரசியல்வாதிகள்; வருடக் கணக்காக உரிமை பற்றியே பேசி வருகின்ற ஒரு பின்புலத்தில் வடக்கின் பல பகுதிகளில் வாழ்வாதார உதவிகள் தேவையான மக்கள் இன்றும் இருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகள் சற்று முன்கூட்டி இடம்பெற்றமையால் மக்கள் வாழ்வில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும் அபிவிருத்திகள், நலனோம்பு திட்டங்களில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் இருக்கவே செய்கின்றார்கள். இந்த விடயத்தில், வடக்கையும் கிழக்கையும் விட மலையக தோட்டப்புற மக்கள்தான் அதிகமாகப் பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர். சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு கிழக்கு மாகாணத்திற்குப் பல அபிவிருத்தித் திட்டங்கள் வந்தன. கிழக்கு விடுக்கப்பட்ட பிறகு அதாவது 2007ஆம் ஆண்டிலிருந்து இது இன்னுமொரு பரிமாணத்தை எடுத்தது. ஆனால், ஒப்பீட்டளவில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகக் கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை எந்த அரசாங்கமும் முன்னெடுக்கவில்லை. வீதிகள், கட்டிடங்கள் அமைக்கப்பட்டாலும் நீண்டகால நோக்கிலான செயற்றிட்டங்கள், சமூகத்திற்குப் பரவலாகப் பயன்படக் கூடிய பாரிய முதலீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது குறைவாகும். அரசாங்கங்களுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இதோ இந்தப் பிரதேசத்தை துணையாக, சிங்கப்பூராக மாற்றப் போகின்றோம் என்று வாயால் வடை சுட்டுக் கொண்டு காலத்தைக் கடத்தினார்களே தவிர, கிழக்கில் இரு முஸ்லிம் அரசியல்வாதிகளைத் தவிர, மற்ற யாருமே குறிப்பிடத்தக்க அபிவிருத்திகளைக் கொண்டு வரவில்லை. சமகாலத்தில், தமிழ் அரசியல்வாதிகள் வடக்கைப் போல, கிழக்கிலும் உரிமை அரசியலையும் அபிவிருத்தி அரசியலையும் சமாந்திரமாக முன்கொண்டு செல்வதற்குத் தவறி விட்டனர். அபிவிருத்தி திட்டங்களுக்கான அழுத்தங்களையாவது அவர்கள் கொடுக்காமல் விட்டதால் அவர்கள் ஊடாக அபிவிருத்திகள் பெரியளவில் கிழக்கிற்கு வந்து சேரவில்லை எனலாம். இப்போது, நிலைமைகள் சற்று மாறி வருகின்றது. புதிய அரசாங்கம் எல்லா மக்களுக்கும் அபிவிருத்தியை சமமாகப் பகிர்ந்து கொடுப்பதற்கு முயற்சிகளை எடுக்கின்றது. இருப்பினும், ஒரு காலத்தில் கிழக்கிற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இப்போது கொடுக்கப்படுவதில்லையா என்ற சந்தேகம் எழவே செய்கின்றது. ஆனால், வேறு அரசியல் மற்றும் பரப்புரை சார் காரணங்களுக்காக வட மாகாணத்திற்கு இப்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதான ஒரு தோற்றப்பாடு, பிம்பம் கட்டியெழுப்பப்படுகின்றதா? என்றும் அந்த விடயத்தில் கிழக்கு இரண்டாம் பட்சமாக நோக்கப்படுகின்றதா? என்பதும் ஒரு சாதாரண பொது மகனுக்கு எழுகின்ற சந்தேகமாகும். தமிழ் மக்களை அரவணைக்க வேண்டிய தேவையும் அதனூடாக சர்வதேச சமூகத்தை ஆசுவாசப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் கடந்த அரசாங்கங்களுக்கு இருந்தது. 13ஆவது திருத்தம், வடக்கு, கிழக்கு இணைப்பு, மாகாண சபைத் தேர்தல், அதிகாரப் பகிர்வு என்றெல்லாம் ஒரு படத்தை ஓட்டிக் கொண்டு இருந்தார்கள். அந்த நிர்ப்பந்தம் இந்த அரசாங்கத்திற்கும் ஏற்பட்டிருப்பது யதார்த்தமானதே. இந்தப் பின்னணியில் ஒரு அவதானிப்பு இருக்கின்றது. அதாவது, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போதும், தற்போது, அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக இருக்கின்ற போதும், வடக்கிற்கான விஜயங்கள் கிழக்கிற்கான விஜயங்களைவ விட அதிகமாக இடம்பெற்றதை, இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. அரசுக்கு எதிரான தமிழ்த் தரப்பின் அழுத்தத்தைக் குறைப்பது, இந்தியாவைக் கையாள்வது, தமிழ் மக்களை மனம் குளிரச் செய்வது என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக, ஒரு மாகாணத்திற்கு முக்கியத்துவம், அந்த நிர்ப்பந்தம் இல்லாத மாகாணத்திற்கு வேறு ஒரு அணுகுமுறையும் பின்பற்றப்படுகின்றதா என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது. வடக்கிற்கு அபிவிருத்தி செய்தால் எமக்கும் தர வேண்டும் என்று பொறாமைக் கண்ணுடன் கிழக்கு மக்கள் கேட்கின்றார்கள் என்று இதனைத் தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் அதிக அபிவிருத்திகள் இடம்பெற்றபோது, நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள மக்கள் எங்களுக்குத் தாருங்கள் என்று போராட்டம் நடத்தவில்லை. கிழக்கில் அபிவிருத்திகள் பெருவீச்சில் இடம்பெற்றபோது, வடக்கு, மலையக மக்கள் அதனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்களே தவிர, விமர்சிக்கவில்லை. எனவே, இப்போது வட மாகாணத்திற்கோ அல்லது நாட்டின் வேறு பகுதிகளுக்கோ அதிக கவனம் செலுத்தப்படுவது கிழக்கு போன்ற ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கு சந்தோசமான செய்திதான். ஆனால், அதே கவனம் தங்கள் மீது ஏன் செலுத்தப்படவில்லை என்று அவர்களது மனக் கிடக்கை நியாயமானதுதானே.?! வடக்கில் தமிழ் மக்கள் பெருமளவுக்கு வாழ்கின்றனர். அங்கு நடக்கின்ற விடயங்கள் சர்வதேச முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே, இதில் மக்கள் சேவைக்கு அப்பால் ஆளும் கட்சிக்கு ஒரு அரசியலும் இருக்கின்றது எனலாம். கிழக்கில் நிலைமைகள் வேறு மாதிரி உள்ளன. கிழக்கு மாகாணம் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணமாகும். முஸ்லிம்களுக்கு அடுத்தபடியாக தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அதுமட்டுமன்றி, சிங்களவர்களும் கணிசமாக உள்ளனர். எனவே, வடக்கில் செய்கின்ற அரசியலைக் கிழக்கில் அதே பாணியில் செய்ய முடியாத ஒரு சிக்கல் கடந்த அரசாங்கங்களுக்கும் ஏற்பட்டிருந்தது. அந்த நிலையிலேயே என்.பி.பி. அரசாங்கமும் இருப்பதாக கருதுவதற்கு இடமுள்ளது. எது எப்படியாயினும், நாட்டின் எல்லாப் பாகங்களுக்கும் அபிவிருத்திகள் சரியாக பகிரப்படப்பட வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் என்ற வகையில் வடக்கும், கிழக்கும் இரு கண்கள் போன்று பார்க்கப்பட வேண்டும். கிழக்கிற்கும் அபிவிருத்திகள், அரச அலுவலகங்கள் வர வேண்டும். பாரிய செயற்றிட்டங்கள், முதலீடுகள் கொண்டு வரப்பட வேண்டும். வடக்கைப் போல, கிழக்கிற்கும் அரச தலைவர்கள், அமைச்சர்கள் அடிக்கடி விஜயம் செய்து மக்களைச் சந்திக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் கடந்த பல வருடங்களாக அபிவிருத்தியில் பாரிய தேக்க நிலை ஒன்று உருவாகியுள்ளது. மக்களின் காணி உள்ளிட்ட பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மேலே குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் வடக்கிற்குக் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் கிழக்கு மாகாணத்திற்குக் கொடுக்கப்படுவதாக ஆறுதல் கொள்ள முடியாத நிலைமைகளே உள்ளன. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் சுமார் 75,000 ஏக்கர் காணிகளின் பிரச்சினைகள் உள்ளன. அவ்வாறே தமிழ், சிங்கள மக்களுக்கும் காணிப் பிணக்குகள் உள்ளன. கிழக்கைச் சேர்ந்த இலட்சக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். பல நூறுபேர் ஒவ்வொரு வாரமும் கடவுச்சீட்டு எடுப்பதற்காக நெடுந்தூரம் செய்கின்றனர். அப்படியிருந்தும் ஏன் கிழக்கில் ஒரு அலுவலகமாவது இதுவரை திறக்கப்படவில்லை? கிழக்கு மாகாணத்திலும் எதிர்காலத்தில் சர்வதேச விளையாட்டு மைதானம் நிறுவப்படுவதுடன் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கக் கூடிய முதலீட்டுத் திட்டங்களும் தொழில்பேட்டைகளும் உருவாக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. பெரிய கனவுகளோடும் பெரும் பொருட்செலவிலும் அமைக்கப்பட்ட ஒலுவில் துறைமுகம் அதன்மூலம் எதிர்பார்க்கப்பட்ட பலனில் கால்வாசியைக் கூட பெற்றுத் தரவில்லை. கிட்டத்தட்ட ஒன்றுக்கும் உதவாத ஒரு செயற்றிட்டமாக மாறிக் கொண்டிருக்கின்றது. எனவே, ஏனைய துறைமுகங்களை மேம்படுத்துவது போல, அனுர அரசாங்கம் ஒலுவில் துறைமுகத்தையும் கண்கொண்டு பார்க்க வேண்டியுள்ளது. திருகோணமலை துறைமுகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இந்தியா போன்ற வெளிநாடுகளின் செல்வாக்கை அதிகரிக்க விடாமல் தடுப்பதுடன், நமது மக்களுக்கும் நாட்டுக்கும் பயன்தரக் கூடிய விதத்தில் இத்துறைமுகமும் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். வாழைச்சேனை காகித ஆலை, இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலை, ஹிங்குரான சீனித் தொழிற்சாலை மற்றும் ஆடைத் தொழிற்சாலைகள் என கிழக்கில் பல தொழிற்சாலைகள் ஒன்றில் மூடப்பட்டுள்ளன அல்லது தூர்ந்து போயுள்ளன. இவற்றை மறுசீரமைக்கவும் இதுபோன்ற திட்டங்களைக் கிழக்கிலும் அமுல்படுத்தவும் வேண்டிய கடப்பாட்டைச் சமத்துவம் பேசும் என்.பி.பி. அரசு கொண்டுள்ளது. கிழக்கிற்கான புகையிரத பாதையை பொத்துவில் வரைக்கும் விஸ்தரிப்பதற்கான செயற்றிட்டத்தை அனுர அரசு மேற்கொள்ளுமாயின், அம்பாறை மாவட்ட மக்கள் அளித்த வாக்கின் பலனை அடுத்த தலைமுறையிலும் உணர்வார்கள். இன்று நாட்டில் எத்தனையோ அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. இவற்றைக் கணிசமான வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், வடக்கு அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதன் முதற்கட்டம் முடிவடைந்து விட்டது. ஆனால், பெயருக்காவது கிழக்கு நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டம் என்ற ஒன்றை அரசாங்கம் பிரகடனப்படுத்தவில்லை. எனவே கிழக்கில் உள்ள மக்கள் சுமார் 200 கிலோ மீற்றர் பயணித்தே குருணாகல் அல்லது மாத்தறை நெடுஞ்சாலையில் ஏற வேண்டியிருக்கின்றது. கிழக்கு மக்களுக்கும் இதன் தேவைப்பாடு உள்ளது என்பதை இந்த அரசாங்கமாவது உணர்ந்து கொள்ள வேண்டும். தங்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமெனக் கிழக்கு மக்கள் கருதுவது நியாயமில்லை என்று எந்த நியாயவாதியாவது கூற முடியுமா? https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கிழக்கும்-கவனிக்கப்பட-வேண்டும்/91-371643
  16. ’ஈரான் மீதான தாக்குதலுக்கு துணைபோக மாட்டோம்’ ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சவூதி பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானும், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது, ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதில் சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டை இளவரசர் உறுதிப்படுத்தினார். மேலும், ‘ஈரானுக்கு எதிரான எந்த ஒரு ராணுவ நடவடிக்கைக்காகவும் சவூதி அரேபியா தனது வான்வெளியையோ, நிலப்பரப்பையோ பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது. எந்த ஒரு நாடாக இருந்தாலும் இவ்விஷயத்தில் சவூதி அரேபியா உறுதியுடன் இருக்கும். பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றம் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட எந்த ஒரு முயற்சிகளுக்கும் சவூதி அரேபியா ஆதரவு அளிக்கும்’ என்று இளவரசர், ஈரான் ஆட்சியாளரிடம் உறுதிபட தெரிவித்தார். இதையடுத்து, சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் அதிபர் பாராட்டு தெரிவித்தார். மேலும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதற்கான பட்டத்து இளவரசரின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஈரான்-மீதான-தாக்குதலுக்கு-துணைபோக-மாட்டோம்/50-371716
  17. இது, நம்புகின்ற மாதிரி இல்லையே… 😁 “கேட்கிறவன் கேனையன் என்றால்… 🐃—-, ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.” 😂 🤣
  18. அரச உத்தியோகஸ்தர்களைக் கண்காணிக்கவே பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது adminJanuary 29, 2026 அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கருத்து தெரிவித்தமையால் பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் கடும் அமளி ஏற்பட்டது. பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் நடைபெற்றது. அதன் போது , தவிசாளரால் பிரஜாசக்திக்கு எதிராக தீர்மானம் சபையில் கொண்டு வரப்பட்டது. அதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. அதன் போது , கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் , அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் அரசாங்கத்திற்கு உண்மையாக இல்லை. அதனால் அவர்களை கண்காணிக்கவே பிரஜா சக்தி உருவாக்கப்பட்டு , அதனை குழுக்கள் கூடாக கண்காணிக்கின்றோம் என தெரிவித்தார். குறித்த உறுப்பினரால் சபையில் கடுமையான அமளி ஏற்பட்டு , குறித்த உறுப்பினரின் கருத்துக்கு தவிசாளர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் தமது கண்டனங்களை சபையில் பதிவு செய்தனர். பிரஜா சக்திக்கு எதிராக தவிசாளரால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு பருத்தித்துறை பிரதேச சபையின் 20 உறுப்பினர்களில் , தமிழரசு கட்சியின் 09 உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்கள் , பிரஜா சக்திக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்த்து வாக்களித்தனர். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் 4 உறுப்பினர்களும் , சுயேச்சை குழுவின் ஒரு உறுப்பினரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்துள்ளனர். அதேவேளை சுயேச்சை குழுவை சேர்ந்த ஒருவர் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை. அந்நிலையில் , பிரஜாசக்திக்கு எதிரான தீர்மானம் சபையில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/227802/
  19. அரசியல் – சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்படும் அவதூறுகளுக்கு கண்டனம். adminJanuary 29, 2026 மன்னார் மாவட்டத்தில் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக போலி முக நூல்களில் முன்னெடுக்கப்படுகின்ற அவதூறு செய்திகளுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, பொறுப்புள்ள அதிகாரிகள் குறித்த போலி முக நூல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை (29) காலை மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஒன்றியத்தின் தலைவி மகாலட்சுமி குரு சாந்தன் தலைமையில் ஊடக சந்திப்பு இடம் பெற்றது. மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த ஊடக சந்திப்பில் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்கள்,சமூக செயல்பாட்டாளர்கள்,மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது கலந்து கொண்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,, அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் சமூக மாற்றத்திற்கும் ஜனநாயக வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்று கின்றனர். இருப்பினும் இன்றைய சமூக ஊடக தளங்களில் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் அவதூறுகள்,இழிவுரைகள் பாலின அடிப்படையிலான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான தகவல் பரப்பல்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன. இந்த வகையான சமூக ஊடக தொல்லைகள் பெண்களின் கருத்துச் சுதந்திரத்தை அடக்குவதோடு, அவர்கள் அரசியல்,பொதுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் தலைமைப் பொறுப்புகளை ஏற்கும் துணிவையும் தளர்த்துகிறது. பெண்களை மௌன படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்கள் ஜனநாயகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாகும். அரசியல் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை. ஆனால் அவை பெண்களின் பாலினத்தை குறிவைத்து இழிவுபடுத்தும் அவமானப்படுத்தும், மிரட்டும் அல்லது வன்முறையைத் தூண்டும் வகையில் வெளிப்படுத்தப்படுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். குறிப்பாக சமூக ஊடகங்களில் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உடல், குணாதிசயம் ஆகியவற்றைக் குறி வைக்கும் தாக்குதல்கள் மனித உரிமை மீறல் களாகும். பெண்களுக்குப் பாதுகாப்பான, மரியாதையான மற்றும் சமத்துவமான சமூக ஊடக சூழல் உருவாக்கப் படுவது அரசின் சமூகத்தின் ஊடக நிறுவனங்களின் மற்றும் சமூக ஊடக நிர்வாகங்களின் பொறுப்பாகும். சமூக ஊடகங்களில் நடைபெறும் பாலின அடிப்படையிலான மேற்கொள்ளப்பட தொல்லைகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி பாதுகாப்பும், நீதியும், உளவள ஆதரவும் வழங்கப்பட வேண்டும். அண்மையில் மன்னாரில், அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் மீது சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அனைத்து விதமான அவதூறுகளையும் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றது. பெண்களின் அரசியல் பங்கேற்பை தடுக்கும் எந்தவொரு செயலையும் பொறுப்புள்ள சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது . பெண்களின் குரல்,உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த இங்கு சமூகமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பெண்கள் அச்சமின்றி தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும்,அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் சம உரிமையுடன் தலைமைப் பொறுப்புகளில் பங்கேற்கவும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே எங்களின் உறுதியான நிலைப்பாடாகும். மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிராக போலி முக நூல்களில் முன்னெடுக்கப்படுகின்ற அவதூறு செய்திகளுக்கு நாங்கள் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு,பொறுப்புள்ள அதிகாரிகள் குறித்த போலி முக நூல்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஊடக சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். https://globaltamilnews.net/2026/227804/
  20. சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் பரிசீலனை Published By: Digital Desk 3 29 Jan, 2026 | 09:18 AM 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் அரசாங்கம் பரீசிலனை செய்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதை முழுமையாக தடை செய்ய அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும், சமூக ஊடக தளங்களை அணுகுவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் பல நாடுகள் ஏற்கனவே பாடசாலை மாணவர்களிடையே சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன எனவும், இலங்கையும் அத்தகைய மாதிரிகளை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுவர்கள் இணையத்தை பயன்படுத்தும் போது ஒழுக்க ரீதியாக தீங்கு விளைவிக்கும் மற்றும் துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை குறைக்க அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம் செய்துள்ளது, இதற்கு ஏற்கனவே அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237293
  21. 'ஓடுபாதை தெரியவில்லை' - அஜித் பவார் பயணித்த விமானத்திலிருந்து வந்த செய்தி என்ன? பட மூலாதாரம்,ANI 28 ஜனவரி 2026 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மகாராஷ்டிராவில் நேரிட்ட விமான விபத்தில் அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானார். அவருக்கு வயது 66. விமான விபத்தின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விரிவான தகவல்களை வழங்கியுள்ளது. புனே (கிராமப்புற) எஸ்பி சந்தீப் சிங், ''இன்று (புதன்கிழமை) காலை 8.40 மணிக்கு தரையிறங்குவதற்கு முன்பு விமானம் விபத்துக்குள்ளானது, அதில் ஐந்து பேர் இருந்தனர்.'' என்றார். பிபிசி மராத்தி செய்தியின்படி, அஜித் பவாருடன் இறந்த மற்ற நபர்களின் பெயர்கள் சுமித் கபூர், ஷாம்பவி பதக், விதிப் ஜாதவ் மற்றும் பிங்கி மாலி. 'தரையிறங்கும் போது ஏதோ பிரச்னை தெரிந்தது, விமானம் விபத்துக்குள்ளாகலாம் என்று தோன்றியது' என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் எதிர்வரும் மாவட்ட ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களுக்காகப் பிரசாரம் செய்ய அஜித் பவார் பாராமதியில் நான்கு பொதுக்கூட்டங்களில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். அதற்காக, அவர் மும்பையிலிருந்து விமானம் மூலம் பாராமதிக்குச் சென்று கொண்டிருந்தார். விமானம் பாராமதியில் தரையிறங்குவதற்கு முன்பு விமானிக்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புக்கும் இடையிலான உரையாடலின் விவரங்களையும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது. அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர், மகாராஷ்டிரா முதல்வர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகம் என்ன கூறியது? விபத்து தொடர்பாக, விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையை, பத்திரிகை தகவல் பணியகம் வெளியிட்டுள்ளது. அதில், பாராமதி விமான தளம் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC)) கோபுரம் இல்லாத தளம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போக்குவரத்துத் தகவல்கள் பாராமதியில் அமைந்துள்ள விமானி பயிற்சி அமைப்பின் (Flying Training Organisation) பயிற்றுநர்கள் அல்லது விமானிகளால் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது. ஷார்ட் வீடியோ Play video, "விமான விபத்தில் அஜித் பவார் மரணம் - என்ன நடந்தது?", கால அளவு 0,56 00:56 காணொளிக் குறிப்பு,என்ன நடந்தது? டிஜிசிஏ கூறியுள்ளது என்ன? சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டை (ATC) கையாண்ட நபர் அளித்த தகவல்களின்படி, ஜனவரி 28, 2026 அன்று, விமானம் VI-SSK காலை 8:18 மணிக்கு பாராமதியுடன் முதல் தொடர்பை ஏற்படுத்தியது. அந்த விமானம் பாராமதிக்கு 30 நாட்டிகல் மைல் தூரத்தில் இருந்து, பாராமதி நோக்கி வருவதாகத் தகவலைத் தெரிவித்தது. அப்போது புனே விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் இருந்து விமானம் விடுவிக்கப்பட்டு பாராமதி நோக்கி நோக்கி பறக்க அனுமதிக்கப்பட்டது வானிலையை பொறுத்து அவருடைய சொந்த கணிப்பின்படி தரையிறங்க அதன் விமானி அறிவுறுத்தப்பட்டார். காற்று மற்றும் தெரிவுநிலை (visibility) குறித்து விமான குழுவினர் விசாரித்தனர். காற்று சீராக இருப்பதாகவும், தெரிவுநிலை சுமார் 3,000 மீட்டர் என்றும் அவர்களிடம் கூறப்பட்டது. பட மூலாதாரம்,Getty Images பின்னர் விமானம் ஓடுபாதை 11-ல் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குழுவினர் கூறினர். ஆனால், குழுவினரால் ஓடுபாதையைப் பார்க்க முடியாததால், அவர்கள் தங்கள் முதல் முயற்சியில் தரையிறங்கும் முடிவை கைவிட்டு திரும்பிச் சென்றனர். அதன்பின், விமானத்தின் நிலை குறித்து குழுவினரிடம் கேட்கப்பட்டது. பின்னர் விமானக் குழுவினர் ஓடுபாதை 11-ல் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளில் இருப்பதாகத் தெரிவித்தனர். ஓடுபாதை தெரிகிறதா தகவலை தெரிவிக்க அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு, "ஓடுபாதை தற்போது தெரியவில்லை. அது தெரியும்போது அழைப்பதாக" பதிலளித்துள்ளனர். சில வினாடிகளுக்குப் பிறகு, ஓடுபாதை தெரிவதாக குழுவினர் கூறியுள்ளனர். காலை 8:43 மணிக்கு, விமானம் ஓடுபாதை 11-ல் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது, ஆனால் தரையிறங்கும் அனுமதி குறித்து விமானக் குழுவினரால் எந்த உறுதியும் வழங்கப்படவில்லை. பின்னர், காலை 8:44 மணிக்கு, ஓடுபாதை 11-க்கு அருகில் தீப்பிழம்புகள் எழுவதை ATC கவனித்தது. பின்னர் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்தன. விமானத்தின் சிதைந்த பாகங்கள் ஓடுபாதை 11-க்கு அருகில் இடது பக்கத்தில் காணப்பட்டன. பட மூலாதாரம்,ANI விமான போக்குவரத்து அமைச்சகம் கூறுகையில், "விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணையை மேற்கொண்டுள்ளது. விசாரணையை நடத்த AAIB இயக்குநர் ஜெனரல் விபத்து நடந்த இடத்திற்கு செல்லவுள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது பகிரப்படும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ட் வீடியோ Play video, "சௌந்தர்யா முதல் அஜித் பவார் வரை - வான் விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள்", கால அளவு 1,45 01:45 காணொளிக் குறிப்பு,சௌந்தர்யா முதல் அஜித் பவார் வரை - வான் விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள் விமானக் குழுவினர் பற்றி தெரியவந்தது என்ன? சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கூற்றுப்படி, விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர். ஒரு விமானி 15,000 மணிநேர விமானப் பயண அனுபவமுள்ளவர். இரண்டாவது விமானிக்கு 1,500 மணிநேரம் பறக்கும் அனுபவம் இருந்தது. பட மூலாதாரம்,ANI நேரில் கண்டவர்கள் கூறியது என்ன? விபத்தை நேரில் கண்ட ஒருவர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம், "நான் அதை என் கண்களால் பார்த்தேன். இது மிகவும் வேதனையானது. விமானம் கீழே விழும்போது, அது தரையிறங்க முடியாது என்று தோன்றியது, அதுதான் நடந்தது. அதன் பிறகு, அந்த விமானம் வெடித்தது. அந்த விமான வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்தது. அதன்பின், நாங்கள் விமானம் தீப்பிடித்து எரிந்ததைக் கண்டோம்." என்றார். "பின்னர் விமானத்தில் மேலும் நான்கு அல்லது ஐந்து வெடிப்புகள் ஏற்பட்டன. அதன் பிறகு, பொதுமக்கள் பலரும் சம்பவ இடத்திற்கு வந்து விமானத்தில் இருந்தவர்களை வெளியேற்ற முயன்றனர். ஆனால் தீ மிகவும் கடுமையாக இருந்ததால், மக்களால் உதவ முடியவில்லை. அஜித் பவாரும் விமானத்தில் இருந்தார், இது எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது..." காணொளிக் குறிப்பு,அஜித் பவார் உயிரிழப்பு - விமான விபத்தை நேரில் கண்டவர் கூறியது என்ன? மற்றொரு நபர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறுகையில், "நாங்கள் இங்கே வசிக்கிறோம், எங்களுக்குப் பின்னால் ஒரு விமான ஓடுபாதை உள்ளது. ஒரு விமானம் வருவதைக் கண்டோம், ஆனால் அது தரையிறங்கவில்லை. அது முன்னோக்கிச் சென்றது, பின்னர் சிறிது நேரம் கழித்து அது திரும்பி தரையிறங்கத் தொடங்கியது. ஆனால் அது ஓடுபாதைக்கு சற்று முன்பு விபத்துக்குள்ளானது." என்றார். "இதைப் பார்த்தவுடன், ஓடுபாதையைச் சுற்றியுள்ள எங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நாங்கள் தகவல் தெரிவித்தோம், அதன் பிறகு காவல்துறையினரும் மற்றவர்களும் உடனடியாக வந்தனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm24p673px7o
  22. புதிய அரசியலமைப்பு வரைவுக்கு பல் தரப்பு செயலணி அவசியம்; முந்தைய முயற்சிகளை கருத்தில் கொள்ள பரிந்துரை Published By: Vishnu 29 Jan, 2026 | 05:16 AM (இராஜதுரை ஹஷான்) இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை வரைவதற்கான செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக ஏற்புடைய அரச அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பல் தரப்பு செயலணியொன்றை நிறுவ வேண்டும். அந்த செயலணியானது 1995-2000 மற்றும் 2015 ,2018 ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் முன்னெடுத்த செயற்பாடுகளை கருத்திற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஆலோசனை செயல்முறையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பிணக்கற்ற மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் அங்கிகரிப்பதற்காக ஒரு அரசியலமைப்பு கோட்பாடு கட்டமைப்பை வரைதல் அவசியமாகும் என புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து சட்டத்தரணிகள் மற்றும் பேராசிரியர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு 06 முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான உரையாடலை முன்னிட்டு சட்டத்தரணி லால் விஜேநாயக்க,பேராசிரியர் பிரியங்க துனுசிங்க,கலாநிதி அதுலசிறி சமரகோன், சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே, சட்டத்தரணி விரஞ்ஞன ஹேரத், சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம தஸநாயக்க,சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ்,சட்டத்தரணி ஷிரால் லக்திலக, பேராசிரியர் சரித ஹேரத்,சட்டத்தரணி நிமல்கா பெர்னாண்டோ,கருணாரத்ன பரணவிதாரன, சட்டத்தரணி சமன் சேனாதீர,சட்டத்தரணி ஜகன ரணதுங்க ஆகியோர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதல் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட வலியுறுத்தலை நாங்கள் வரவேற்கிறோம். அத்தகைய அர்ப்பணிப்பு கொண்ட ஒரு அரசாங்கம் இருப்பது இலங்கையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு கிடைத்த ஒரு வரலாற்று ரீதியான வாய்ப்பாகும்.புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொள்ளல் என்பது இலங்கைக்கு முக்கியமான சவாலாகும். அது அனைத்து மக்கள் பிரிவினரையும் பிரிதிநித்துவப்படுத்தும் ஒரு அரசியலமைப்பு ரீதியிலான தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். இதில் அனைவரையும் உள்ளடக்குவதும் சவால்மிக்கதாகும். தற்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு இதுவரையில் 21 முறை திருத்தங்களுக்குட்படுத்தப்பட்டுள்ளது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவைச அரசாங்கத்தின் தேவைகளை பிரதிப்பலித்துள்ளதே தவிர மக்களின் நிலைப்பாட்டை பிரதிப்பலிக்கவில்லை.அரசியலமைப்பின் 17,19 மற்றும் 21 ஆம் ஆகிய திருத்தங்கள் மாத்திரமே மக்களை பிரதிபலிக்கின்றன. கடந்தகால அனுபவங்கள் மற்றும் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு இலங்கையின் சமூக- அரசியல் சூழலுக்கு பொருத்தமான அரசியலமைப்பு சீர்த்திருத்த மாதிரியை பின்பற்றுவதற்கான சாத்தியம் குறித்து பரிசீலனை செய்யுமாறு நாம் முன்மொழிகின்றோம். அதன்படி பின்வரும் முன்மொழிவுகளை முன்வைக்கிறோம். இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை வரைவதற்கான செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக ஏற்புடைய அரச அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பல் தரப்பு செயலணியொன்றை நிறுவுதல், அந்த செயலணியானது 1995-2000 மற்றும் 2015 ,2018 ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் முன்னெடுத்த செயற்பாடுகளை கருத்திற்கொள்ள வேண்டும். எதிர்கால அரசியலமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்ட அடிப்படை அரசியலமைப்பு கோட்பாடு கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்காக விரிவான அடிப்படையாகக் கொண்ட எவர் ஒருவரையும் தவிர்க்காத வகையில் அனைவரும் பிரதிநிதித்துவப்படுத்தும் விரிவான மக்கள் சார் ஆலோசனை செயல்முறையை உருவாக்க வேண்டும். அத்துடன் பொதுமக்கள் ஆலோசனை செயல்முறையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பிணக்கற்ற மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் அங்கிகரிப்பதற்காக ஒரு அரசியலமைப்பு கோட்பாடு கட்டமைப்பை வரைதல் அவசியமாகும். மக்களால் அங்கிகரிக்கப்பட்ட அரசியலமைப்பு கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு அரசியலமைப்பை வரைவதற்காக அரசியல் கட்சிகள், கல்வியியலாளர்கள்,சிவில் சமூகம், சமூக விஞ்ஞானிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறையை ஸ்தாபிக்க வேண்டும்.டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி பொதுமக்களின் கருத்துக்களும் கோரப்பட வேண்டும்.மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்புசார் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு சட்டவரைவை தயாரித்தல் வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் விதித்துரைக்கப்பட்டுள்ளவாறு,இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் மக்கள் தீர்ப்பு மூலம் நிறைவேற்றிக்கொள்வதையும் உள்ளடக்கிய வகையில் ஒரு அரசியலமைப்பு சீர்த்திருத்த செயன்முறையை பின்பற்றுதல் வேண்டும். அரசாங்கத்தின் வளமான நாடு – அழகான வாழ்க்கை கொள்கைக்கு அமைய புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும். https://www.virakesari.lk/article/237283
  23. 'வைரல்' பென்குயின் போல வேறு எந்த உயிரினங்கள் கூட்டத்தை விட்டு தனியே செல்கின்றன தெரியுமா? பட மூலாதாரம்,Thinkfilm/Werner Herzog கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 28 ஜனவரி 2026 "அந்த கூட்டத்தில் ஒன்று மட்டும் எங்களின் கவனத்தை ஈர்த்தது. நடுவில் இருந்த அந்த பென்குயின், பனியின் எல்லையில் உள்ள அதன் உணவருந்தும் பகுதிக்கும் செல்லவில்லை, அதன் காலனிக்கும் திரும்பிச் செல்லவில்லை. சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தது." சமூக ஊடகங்களில் வைரலாக உள்ள பென்குயின் காணொளியில் பின்னணியில் ஒலிக்கும் குரல் இது. அந்தக் காணொளியில், ஒரே ஒரு பென்குயின் மட்டும் தனது கூட்டத்துடன் செல்லாமல் பனி போர்த்திய மலையை நோக்கி நடக்கத் தொடங்கும். அண்டார்டிகாவில் 2007-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட "என்கவுன்டர்ஸ் அட் தி என்ட் ஆஃப் தி வேர்ல்ட்" என்கிற ஆவணப்படத்தில் அந்தக் காணொளி இடம்பெற்றது. வெர்னர் ஹெர்ஸோக் இயக்கிய இந்த ஆவணப்படத்திற்கு பீட்டர் ஸெயிட்லிங்கர் ஒளிப்பதிவு செய்திருந்தார். பென்குயின் பற்றி நம்மில் பலரும் அறிவியல் புத்தகங்களில் படித்து தெரிந்திருப்போம், ஆவணப்படங்களிலும் பார்த்திருப்போம். தென் துருவ உயிரினமான பென்குயின் பெரும்பாலும் அண்டார்டிகாவிலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை ஒட்டிய பகுதிகளிலும் அதிகம் வாழ்கின்றன. கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் இந்த பென்குயின் பற்றிய பதிவுகளை அதிகம் பார்க்க முடிகிறது. அந்தக் காணொளியில் இருந்த பின்னணிக் குரல் தரும் செய்தியும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி பல அரசியல்வாதிகளும், திரை மற்றும் விளையாட்டு பிரபலங்களும் கூட ஒற்றை பென்குயினுடன் இருப்பது போல புகைப்படங்களை எடிட் செய்து பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆவணப்படத்தின் இயக்குநர் வெர்னர் காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,Werner Herzog படக்குறிப்பு,இயக்குநர் வெர்னர் ஹெர்ஸோக் காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், "20 ஆண்டுகளுக்கு முன்பு நான் படம்பிடித்த பென்குயின் ஒன்று இன்றும் பலரின் கற்பனைகளைத் தூண்டுவதைப் பார்க்கையில் ஆச்சரியமாக உள்ளது. இதற்குப் பின்னால் ஒரு கதை உள்ளது. அந்த பென்குயின் தனது மரணத்தை நோக்கி கண்டத்தின் உள்பகுதியில் உள்ள மலைகளை நோக்கி நடக்கத் தொடங்கும். பென்குயின் பற்றி ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் அவற்றின் விநோதத்தன்மை பற்றி என்னிடம் பேசியுள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார். ஆவணப்படத்தில் உள்ள தனது பின்னணிக் குரல் பற்றி குறிப்பிடுகையில், "நான் தீர்க்கப்படாத மர்மங்கள் பற்றிய நிறைய கிரைம் திரில்லர்களைப் பார்ப்பேன். அதில் வருகின்ற தொனியில் தான் இந்த ஆவணப்படத்திற்கும் குரல் கொடுத்திருப்பேன்," என்றார். அதன் வசிப்பிடத்திலிருந்து 80 கிலோமீட்டருக்கு அப்பால் சென்ற இதே போன்றதொரு பென்குயினைப் பார்த்ததாக அந்த ஆவணப்படத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். "அந்த பென்குயின் மரணம் நேரிடும் வரை இன்னும் பல கிலோமீட்டர் அப்படியே நகர்ந்து கொண்டே இருக்கும்," என்று வெர்னர் தனது குரலில் பதிவு செய்திருப்பார். இதே காணொளியில் கடல் சூழலியலாளர் டேவிட் ஐன்லியிடம் பென்குயின்கள் விநோதமாக நடந்து கொள்ளுமா எனக் கேள்வி முன்வைக்கப்பட்ட போது, "அவை சில நேரங்களில் திசைமாறிப் போய் கடலுக்கு மிகத் தொலைவில் சென்றுவிடும்." என்றார். அந்த பென்குயினை மீட்டு மீண்டும் அதன் காலனிக்கு அழைத்து வந்தாலும் அது மீண்டும் மலையை நோக்கியே செல்லும் என்றும் அந்த ஆவணப்படத்தில் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Thinkfilm/Werner Herzog படக்குறிப்பு,கடல் சூழலியலாளர் டேவிட் ஐன்லி கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை முறை அவை வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் என்கிறார் உலக காட்டுயிர் நிதியத்தின் இணை இயக்குநரான வினோத் மலயிலேது. "கடல் உயிரினங்களைப் பொருத்தவரை வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள சேர்ந்து வாழும். முட்டையிடுவதற்கும், இரை தேடியும் தான் அவை வேறு இடங்களுக்கு தனித்துச் செல்கின்றன. சில உயிரினங்கள் அடிப்படையில் சேர்ந்து வாழக்கூடியவை, ஆனால் சில உயிரினங்கள் பல்வேறு காரணங்களால் தனித்துச் செல்லும்," என்றார். இதனை உதாரணங்களுடன் விளக்கிப் பேசிய அவர், "டால்பின்கள் பல இணைந்து ஒன்றாக உலவும். ஆனால் திமிங்கலங்கள் நீண்ட தூரம் பயணங்கள் மேற்கொள்ளக்கூடியவை. நீலத் திமிங்கலங்கள் (blue whales) தனியாக வாழக்கூடியவை. இரைதேடி நீண்ட தூரம் செல்லும் திமிங்கலங்கள் அவை வழக்கமாக உலவும் கடற்பகுதியைத் தாண்டிச் சென்றால் இரை கிடைக்காமல் போகக் கூடும். அதனால் தான் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கும் சம்பவங்களைப் பார்க்கிறோம்." என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை முறையும் அவை வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் (கோப்புப் படம்) தனித்து வாழ்வது அல்லது தனித்துச் செல்வது என்பது பல உயிரினங்களிலும் காணப்படுகிறது. உணவு, வாழ்விடம், இனப்பெருக்கம், உடல்நிலை என்று பல்வேறு காரணங்களுக்காக விலங்குகளும் பறவைகளும் தனித்துச் செல்கின்றன. இவ்வாறு விலங்குகள் தனித்துச் செல்வது குறுகிய காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கான யானையும் இதற்கு விதிவிலக்கல்ல. குழுக்களாக வாழும் 'சமூக விலங்காக' அறியப்படும் யானையும் சில சந்தர்ப்பங்களில் தனித்துச் செல்லும் என்கிறார் ஊட்டி அரசு கல்லூரி வனவிலங்கு உயிரியல் துறையின் தலைவரும் பேராசிரியருமான ராமகிருஷ்ணன். இவர் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பில் ஆசிய யானைகளுக்கான சிறப்புக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். அவரின் கூற்றுப்படி, தாய்வழிச் சமூகமாக வாழும் யானைகளில், ஆண் யானைகள் 14, 15 வயது ஆன உடன் தனித்து விடப்படும், அவை மற்ற ஆண் யானைகளுடன் இணைந்து வாழ்கின்றன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆண் யானைகள் 14, 15 வயது ஆன உடன் தனித்து விடப்படும், அவை மற்ற ஆண் யானைகளுடன் இணைந்து வாழ்கின்றன. "இந்த ஆண் யானைகள் 25 வயது ஆகிறபோது பிற கூட்டங்களில் தனக்கான இணையைத் தேடும். ஒருவேளை வலுவான ஆண் யானையால் தோற்கடிக்கப்பட்டால் திரும்பிச் சென்றுவிடும். சிறிது காலம் கழித்து மீண்டும் இணை தேடிச் செல்லும். இணை கிடைக்கின்ற வரை ஆண் யானைகள் தனியாகவே வாழும்," என்றார். யானைகளில் தந்தம் இல்லாத ஆண் யானையான 'மக்னா யானை' தான் பெரும்பாலும் தனித்தே வாழ்வதாக அவர் குறிப்பிடுகிறார். "பெண் யானைகள் வலுவான ஆண் யானைகளைத் தான் தேர்வு செய்யும். இதனால் தந்தம் இல்லாத மக்னா யானைகள் தனித்து விடப்படுகின்றன," என்றும் தெரிவித்தார். யானை குழு என்றால் தலைமை தாங்கும் பெண் யானை மற்றும் அதன் வழிவந்த யானைகள் அடங்கும் எனக் கூறும் ராமகிருஷ்ணன் அதில் பெண் யானையின் பங்கு தான் முதன்மையானது என்றும் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,Getty Images அதனை விளக்கிப் பேசிய அவர், "யானைகள் பெரும்பாலும் முதுமை அல்லது உடல்நலக் குறைவு காரணமாக மட்டுமே தங்களது குழுவை விட்டுச் செல்கின்றன. அதிலும் ஒரு வேறுபாடு உள்ளது, மூத்த பெண் யானை உடல்நலம் முடியாமல் போகும்போது மற்ற யானைகள் அதனை விட்டுச் செல்வதில்லை. அவை வசிக்கின்ற பகுதியில் உணவு கிடைக்காமல் போகும் பட்சத்தில் மட்டுமே மற்ற யானைகள் அதனை விட்டுச் செல்லும். "பெண் யானைகள் தனித்து வாழ பழக்கப்பட்டவை அல்ல என்பதோடு ஒரு யானை குழுவிற்கும் பெண் யானைகளின் இருப்பு அவசியமாகிறது. ஒரு பெண் யானை அதன் குட்டிகளை மட்டுமல்லாது, குழுவில் உள்ள மற்ற யானைகளின் குட்டிகளையும் கவனித்துக் கொள்ளும். மாறாக ஆண் யானைகள் குழுவை விட்டுச் சென்றால் மற்ற யானைகள் அதனை பின்தொடர்ந்து செல்லாது. அதன் இடத்தை இன்னொரு ஆண் யானை வந்து நிரப்பும். சிறு வயதிலிருந்தே ஆண் யானைகள் அதிக காலம் தனித்து வாழ பழக்கப்பட்டதும் இதற்கு ஒரு காரணம்." என்றார். இவ்வாறு குழுவிலிருந்து தனித்துச் செல்லும் தன்மை பறவைகளிடமும் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார் பிபிசி தமிழிடம் பேசிய பறவைகள் ஆய்வாளரும் மெட்ராஸ் நேச்சுரலிஸ்டிக் சோசைடியின் உறுப்பினருமான சாந்தராம். சமூக ஊடகங்களில் வரும் அனுமானங்களை முழுமையாக நம்பிவிடக்கூடாது எனக் கூறும் அவர், "பறவையினங்கள் மத்தியிலும் இந்த பழக்கம் பரவலாகவே இருந்து வருகிறது. ஒரு குறிப்பிடட பறவை மட்டும் இவ்வாறு நடந்து கொள்ளும் எனக் கூறிவிட முடியாது. கூட்டமாக வாழும் பறவைகள் உணவு, கூடு அமைப்பது மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் வழிதவறிச் செல்வது போன்ற காரணங்களால் தனித்துச் செல்கின்றன." என்று தெரிவித்தார். "உணவு கிடைக்கவில்லை என்றாலும் கூடு அமைப்பதற்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும் பறவைகள் தனித்துச் செல்லும். பெரும்பாலும் சிறிய பறவைகள் தான் வழிதவறிச் செல்கின்றன. குழுக்களாகவே வாழும் பறவைகள் கூட இனப்பெருக்க காலத்தில் தனித்துச் செல்கின்றன," என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவில் காணப்படும் தேரை இனம் புதிய வாழ்விடத்தை தேடி தனித்துச் செல்லும் வழக்கம் கொண்டுள்ளது (கோப்புப் படம்) விலங்குகள் தனிமைப்படுத்திக் கொள்வது அவற்றின் பரிணாம வளர்ச்சியின் மீது தாக்கம் செலுத்துவதாக 2018-ஆம் ஆண்டு புனித ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐரோப்பாவில் பாறை எறும்புகள் (டெம்னோதோராக்ஸ் யூனிஃபாசியேட்டஸ் - Temnothorax unifasciatus) என அறியப்படும் எறும்புகள் பூச்சிக் கொல்லி மருந்துகளால் தாக்கப்பட்டால் உயிரிழக்கின்ற வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. "தனது கூட்டில் வாழும் மற்ற எறும்புகளிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் தொற்று பரவுவதில் இருந்து காத்து மற்ற எறும்புகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கிறது," என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் காணப்படும் தேரை இனம் புதிய வாழ்விடத்தை தேடி தனித்துச் செல்லும் வழக்கம் கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆசிய சிங்கங்கள் (கோப்புப் படம்) வன உயிரினங்கள் மத்தியிலும் தனித்துச் செல்லும் வழக்கம் இருப்பதாகக் கூறுகிறார் மூத்த விஞ்ஞானியும் வன உயிர் ஆய்வாளருமான ஒய்.வி.ஜாலா. இதற்கு உளவியல் என்பதைவிடவும் பரிணாம வளர்ச்சியே காரணம் என்றும் அவர் குறிப்பிடுகிறார், பூனை குடும்பத்தின் கீழ் வரும் உயிரினங்கள் தனித்து வாழப் பழகி இருந்தாலும் சூழலுக்கு ஏற்ப அவை சேர்ந்தும் வாழ்வதாகக் குறிப்பிடுகிறார். அவர்களின் வாழ்விடத்தை யார் கட்டுப்படுத்துவது என்பதைப் பொருத்தே இவை தீர்மானிக்கப்படுகின்றன என்றார். "சிங்கங்களைப் பொருத்தவரை அவை வாழும் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறையும் மாறும். ஆசிய சிங்கங்கள் மற்றும் ஆப்ரிக்க சிங்கங்கள் இடையே பல வேறுபாடுகள் உள்ளன." சிங்கங்கள் குழுக்களாகவே வாழும் என்கிறார் ஜாலா. "பெண் சிங்கங்கள் எப்போதும் குட்டிகளுடன் குடும்பமாக வாழும் சூழலில் ஆண் சிங்கங்கள் தனித்து விடப்படும். இவை சில சூழல்களில் பிற ஆண் சிங்கங்களுடன் சேர்ந்து குழுக்களாக வாழும் அல்லது வேறு குழுக்களுடன் இணைந்து கொள்ள முயற்சிக்கும். இதில் முதுமையடைந்த, இளம் சிங்கங்களுடன் போட்டி போட முடியாத சிங்கங்கள் தனியாகச் செல்கின்றன." என்றார். பட மூலாதாரம்,Roop Singh Meena புலிகள் சேர்ந்தும் தனித்தும் வாழ்வதாகக் குறிப்பிடும் அவர், "பெரிய இரைகளை வேட்டையாடும்போதும் இனப்பெருக்க காலத்தின் போதும் மட்டுமே புலிகள் சேர்ந்து கொள்ளும். மற்ற நேரங்களில் ஆண் புலி தனித்தே வாழும். ஆண் புலிகள் பெண் புலிகளையும் அதன் குட்டிகளையும் சேர்த்துக் கொள்வதில்லை. இதில் விதிவிலக்காக இரை உபரியாக கிடைக்கும் இடங்களில் புலிகள் சேர்ந்திருக்கக் கூடும். பெண் புலிகள் தங்களின் குட்டிகளுக்கு வயதானாலும் அவர்களுக்கு அருகிலே வாழும்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8d085v1r55o
  24. தொழிற்சங்க மிரட்டல்களுக்கு அடிபணிந்து தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை - சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு 28 Jan, 2026 | 03:10 PM (செ.சுபதர்ஷனி) எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிப்பனிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை எனச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 213 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரைய யாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், சுகாதார சேவையில் நிலவும் மனிதவள பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மக்களுக்குத் தரமான சேவையை வழங்குவதே எமது இலக்காகும். வெளிநாடுகளில் அதிக சம்பளம் கிடைப்பதாகக் கூறிக்கொண்டு, நாட்டை விட்டு வெளியேறப்போவதாக மிரட்டி சம்பள உயர்வுகளைக் கோரும் எந்தவொரு தரப்பினரின் கோரிக்கைகளுக்கும் அரசாங்கம் பணியப்போவதில்லை. இவ்வாறானவர்களுக்கு எதனை வழங்கினாலும் அவர்கள் நாட்டை விட்டுச் செல்வது உறுதி. ஆனால், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டுக்காகத் தங்கி நின்று சேவையாற்றும் ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும். கடந்த ஓராண்டு காலத்தில் சுகாதார அமைச்சுக்கு 10 ஆயிரம் ஊழியர்களை இணைத்துக்கொள்ள அனுமதி பெறப்பட்டு, அதில் 8 ஆயிரம் பேர் ஏற்கனவே சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக 4,141 தாதியர்கள் ஒரே கட்டமாக இணைக்கப்பட்டனர். 2021 ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்த பரீட்சைகள் தாமதமாகி, தற்போது 2025 இல் நடத்தப்பட்டு இந்த 213 உதவியாளர்களும் இன்று நியமனம் பெற்றுள்ளனர். அரசியல் அதிகாரங்களும் அமைச்சர்களும் மாறலாம், ஆனால் அரச சேவை நிலையானதாக இருக்க வேண்டும். பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் வைத்தியர்கள் முதல் அனைத்து ஊழியர்களுக்கும் முறையான பொறிமுறை எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படும். புதிய நியமனம் பெற்றவர்கள் இடமாற்றங்கள் குறித்துச் சிந்திக்காது, மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முன்வர வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237243

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.