Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. · Suivre oteprSdonst32ac42ia5tsu9 :1ctLl802r10aà a3c4 u6e1cm206af1a l · பரமார்த்த குருவும் சீடர்களும் பொரி வாங்கிச் சாப்பிட்டபடி மடத்துக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, பக்கத்துத் தெருவில் தெருக்கூத்து ஒன்று நடக்க இருந்தது. அதில் நடிப்பதற்காக, கிருஷ்ணர் வேடம் போட்டுக் கொண்டு அந்த வழியாக வந்தார் ஒருவர். அவரைப் பார்த்த சீடர்கள், நிஜமான கிருஷ்ணர் தான் வருகிறார் என்று நம்பினார்கள். “அதோ பாருங்கள் குருதேவா... கிருஷ்ண பரமாத்மா வருகிறார்” என்று குதித்தான் மட்டி. “ஆமாம் குருவே.. கையில் புல்லாங்குழல் கூட வைத்திருக்கிறார்” என்றான் மடையன். பரமார்த்தரும் அவரைக் கடவுள் என்றே நம்பினார்.. உடனே நன்றாக இருந்த தன் வேஷ்டியைக் கிழித்து விட்டுக் கொண்டார். “சீடர்களே, நீங்களும் உங்கள் துணிகளை இதே போல் கிழித்துக் கொள்ளுங்கள்” என்றார் பரமார்த்தர். “புதுத் துணிகளைக் கிழிப்பதா? ஏன் குருவே?” என்று கேட்டான், முட்டாள். “புத்தி கெட்டவனே.. ஏன் என்று கேட்காதே. சீக்கிரம் கிழி... அப்போதுதான் நாம் ஏழைகள் என்று அவர் நம்புவார்” என ஆணையிட்டார் பரமார்த்த குரு. சீடர்கள் ஐவரும், குருவின் கட்டளைப்படி கட்டியிருந்த வேட்டிகளைக் கிழித்துக் கந்தல் கந்தலாக ஆக்கினார்கள்.. உடனே பரமார்த்தர் வேகமாகச் சென்று, கிருஷ்ணர் வேடம் போட்டவர் காலில் விழுந்து வணங்கினார். “பாஞ்சாலிக்குப் புடவை கொடுத்து மானம் காத்த கிருஷ்ணா.. அதே போல் நீதான் எங்களுக்கும் ஆளுக்கு ஒரு புடவை கொடுத்து எங்கள் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டினார் பரமார்த்தர். “குருவே.. நமக்கு எதற்குப் புடவை?” என்று கேட்டான் மண்டு. “அதானே? நமக்கு வேட்டி அல்லவா தேவை” என்றான் மூடன். “கார்மேகக் கண்ணா.. இந்தா, பொரி உன் இஷ்டம் போல் கொரி..” என்றபடி கொஞ்சம் பொரியைத் தந்தான் மட்டி. கிருஷ்ணர் வேடம் போட்டவருக்கோ ஒன்றும் புரியவில்லை. “நான் கடவுள் இல்லை.. எனக்கு நேரமாகிறது, என்னைப் போகவிடுங்கள்” என்றார். “கண்ண பெருமானே எங்களை ஏமாற்ற நினைக்காதீர்கள்” எனக் கெஞ்சினான், முட்டாள். “கண்ணா.. அன்று குசேலர் கொடுத்த அவலை மட்டும் சாப்பிட்ட நீ, இந்த ஏழைப் பரமார்த்தர் தரும் பொரியைச் சாப்பிடத் தயங்குவது ஏன்?” என்றார் குரு. “கோபாலா கோவிந்தா.. தயவு செய்து கொஞ்சம் பொரியையாவது சாப்பிடு” என்றான் மடையன். “பொரியைச் சாப்பிடாவிட்டால் விடமாட்டார்கள்” என்று நினைத்து, கொஞ்சம் பொரியைச் சாப்பிட்டார் தெருக்கூத்து நடிகர். “பொரி கொடுத்ததற்கு நன்றி.. நான் போய் வருகிறேன்” என்று நகரத் தொடங்கினார் நடிகர். “என்ன? பொரியைத் தின்றுவிட்டு சும்மா போகிறீர்கள்? எங்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுங்கள்” என்றார் பரமார்த்தர். “வரமா?” அதென்ன?” “ஆமாம்.. குசேலர் வீடு பொன்னாக மாறியது போல எங்கள் மடமும் தங்கமாக மாற வேண்டும். எங்கு பார்த்தாலும் பொற்காசுகளும், வைரங்களும் மின்ன வேண்டும்” என்றான். “எங்கள் கந்தல் உடைகள் பட்டாடையாக மாற வேண்டும்” என்றான் முட்டாள். “வரம் தராவிட்டால் ஆளை விடமாட்டோம்” என்றான் மடையன். “சரி.. நீங்கள் நினைத்தபடியே நடக்க்கடவது..” என்று அருள்புரிவது மாதிரி கையைக் காட்டினார் தெருக்கூத்து நடிகர். “ஆஹா.. பொரிக்குப் பொன் கொடுத்த கிருஷ்ணா.. உன் கருணையே கருணை” என்றபடி குருவும் சீடர்களும் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள். ஆளைவிட்டால் போதும் என்று தெருக்கூத்து நடிகர் ஓட்டம் பிடித்தார். “அப்பாடா! கடவுளேயே நேரில் பார்த்து விட்டோம், அவரும் ஏமாந்து போய் வரம் கொடுத்து விட்டார்” என்றார் பரமார்த்தர். “குருவே! நாம் மடத்துக்குப் போகும்போது, மடமெல்லாம் தங்கமாக மாறி விட்டிருக்கும். மடம் முழுதும் பொற் காசுகள் குவிந்து கிடக்கும்.. அதனால் இனிமேல் நீங்கள் நடந்து போகக் கூடாது” என்றான் மட்டி. “எங்காவது பல்லக்குக் கிடைத்தால் வாங்கி விடலாம்” என்றான் மடையன். போகும் வழியில் ஒருவன் பாடை கட்டிக் கொண்டு இருந்தான். அதைக் கண்ட முட்டாள், “குருவே! இதோ பாருங்கள் பூப்பல்லக்கு.. இதையே விலைக்கு வாங்கி விடலாம்” என்றான் மடையன். பாடை கட்டியவனிடம் சென்ற மட்டி, “இந்தப் பல்லக்கு என்ன விலை?” என்று விசாரித்தான். “இது பல்லக்கு இல்லை” என்றான் பாடை கட்டியவன். “நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.. இது பல்லக்கே தான். உனக்கு வேண்டிய பணம் தருகிறோம்” என்றான் மடையன். சீடர்களின் தொல்லையைப் பொறுக்காமல், “நான் வேறு ஒன்று செய்து கொள்கிறேன்; நீங்கள் இதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான், அவன். பரமார்த்தரும் மகிழ்ச்சியோடு பாடையில் ஏறி அமர்ந்து கொண்டார். இருட்டத் தொடங்கியதும், முட்டாள் கொள்ளிக் கட்டையைத் தூக்கியபடி முன்னே நடந்தான். மற்ற சீடர்கள் பாடையைத் தூக்கி வந்தனர். சிறிது தூரம் வந்ததும், “ஒரே தாகமாக இருக்கிறது” என்றபடி பாடையை இறக்கி வைத்தார்கள், சீடர்கள். ஐந்து பேரும் தண்ணீரைத் தேடிச் சென்றபோது, பரமார்த்தர் விழித்துக் கொண்டார். “என்ன? யாரையுமே காணோம்?” என்றபடி சீடர்களைத் தேடி வேறு பக்கம் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த நாய் ஒன்று பாடையில் ஏறிப் படுத்துக் கொண்டது. திரும்பி வந்த சீடர்களோ, எதையும் கவனிக்காமல் பழையபடி பாடையை தூக்கிக் கொண்டு புறப்பட்டனர். மடத்தை நெருங்கியதும், நாய் விழித்துக் கொண்டது. “லொள், வள்” என்று குரைத்தது. அவ்வளவுதான்.. பாடையைத் “தொப்” என்று கீழே போட்ட சீடர்கள், “ஐயையோ! இதென்ன அதிசயம்? நம் குரு நாயாக மாறி இருக்கிறாரே” என அலறினார்கள். “அந்தக் கிருஷ்ணக் கடவுள் தான் ஏதோ மந்திரம் போட்டு விட்டார்” என்றான் முட்டாள். “நம் மடம் கூடத் தங்கமாக மாறாமல், பழையபடி அப்படியே இருக்கிறதே” என்று துக்கப்பட்டான் மண்டு. அப்போது இருட்டில் விழுந்தடித்து ஓடிவந்த பரமார்த்தர், “புத்திகெட்ட சீடர்களே! என்னைப் பாதி வழியிலேயே விட்டு விட்டு வந்து விட்டீர்களே” எனத் திட்டினார். “குருநாதா..” அந்தக் கிருஷ்ணக் கடவுளை நம்பினோம்.. அவரும் பொரி வாங்கித் தின்று விட்டு, நம்மைக் கைவிட்டு விட்டாரோ” என்று ஒப்பாரி வைத்தனர் சீடர்கள். பரமார்த்தரும் சீடர்களும் சேர்ந்து கொண்டு புலம்பினார்.. Voir la traduction.....!
  3. ஞானபீடம் சர்ச்சையை முன் வைத்து. மரபின் மைந்தன் முத்தையா திரு சீமானுக்கு திரு.ஜெயமோகன் எழுதிய கடிதத்தில் தனக்கு அவர் தரப்பில் இருந்துவரும் வசை மொழிகளை தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்திருக்கிறார். அதில் “இலக்கியம் என்றால் விவாதம் வரும் பூசல் வரும் “என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவரும் சரி மற்றவர்கள் பலரும் சரி இந்த விவாதத்தை இலக்கியப்பூர்வமாக கொண்டு செலுத்தவில்லை. கவிஞர் வைரமுத்து படைப்பாளரே இல்லை என்பது போன்ற சித்திரத்தை நிறுவ முயலும் போதே விமர்சனம் விவாதம் என்பதெல்லாம் வெறும் அவதூறுகளாகத் திரிந்து விட்டன. கவிஞர் வைரமுத்து பற்றிய என்னுடைய புத்தகம் குறித்து திரு ஜெயமோகன் எழுதிய கட்டுரை இணையத்தில் பரவலாக கிடைக்கின்றது. “முழுக்கமுழுக்க நேர்நிலை நோக்கு கொண்ட கவிஞர் அவர். துயரங்கள் இல்லாதவர். கவிதை பொதுவாக மானுடனின் தவிர்க்கமுடியாத கையறுநிலைகளை நோக்கிச் செல்வது. அங்கே செயலற்று நின்று ஏங்குவது. அந்த அம்சம் வைரமுத்துவிடம் இல்லை. சாதாரணமாக கவிஞர்களில் இருக்கும் தனிமை ஏக்கம், இறந்தகால ஏக்கம் போன்றவையும் இல்லை. நவீன கவிதைகளில் உள்ள இருண்மையும் கைவிடப்பட்ட நிலையும் முற்றிலும் இல்லை. வைரமுத்துவின் கவிதைகள் வெயில் பரந்த தெற்கத்தி நிலம் போல பளீரென்று நான்கு பக்கமும் திறந்து கிடக்கின்றன.” இவை கவிஞர் வைரமுத்து கவிதைகள் பற்றி திரு ஜெயமோகன் எழுதியது. நவீன கவிதையின் போக்குக்கும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை பாணிக்கும் இருக்கிற வித்தியாசத்தை இவரே இவ்வளவு தெளிவாக சொல்லியிருக்கிறார். ஃபிரண்ட்லைன் பேட்டியில் கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல்கள் பல நேரங்களில் inappropriate என்று எழுதுவதும் இலக்கிய விவாதம் என்கிற அளவுகோலுக்குள் வரவே வராத அவதூறு. ஏனென்றால் கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல்கள் பற்றி அந்தக் கட்டுரையில் திரு.ஜெயமோகன் இப்படி எழுதுகிறார்… “வைரமுத்துவின் சிறப்பாக நான் காண்பதை இங்கே முத்தையாவும் சுட்டிக்காட்டுகிறார். அவர் தமிழ் மரபின் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவர். பாடல் [லிரிக்] என்பது எடுத்தாள்கை கவிதை [அப்ளைட் பொயட்ரி] ஒரு மரபின் சாரமான கவித்துவத்தை முழுக்க வேர்பரப்பி உறிஞ்சி தன் கவித்துவத்துடன் இணைத்து ஒன்றாக்கி இசைக்குள் பொருத்தும் கலை அது. தமிழின் பிற பாடலாசிரியர்கள் செவ்வியல் மரபில் இருந்து பெற்றுக்கொண்டதே அதிகம். நாட்டார் மரபில் இருந்தும் புதுக்கவிதை மரபில் இருந்தும் தமிழ்ச் செவ்வியல் மரபில் இருந்தும் ஒரேசமயம் பெற்றுக் கொண்ட பாடலாசிரியர் என்பதே வைரமுத்துவின் தனித்தன்மை.” தமிழ் கவிதையில் மரபுக் கவிதையை ஆழமாக பயின்று புதுக்கவிதையை தனித்தன்மை கொண்ட வீச்சுகளுடன் வெளிப்படுத்தி திரு ஜெயமோகனே சொல்வது போல நவீன கவிதையின் இருண்மை இல்லாமல் உருவாகும் படைப்புகள் கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள். சமீபத்தில் ஆனந்த விகடன் நேர்காணலில் கவிஞர் வைரமுத்து சொல்லியுள்ள ஒரு கருத்து இங்கு முக்கியமானது. “எதார்த்தத்தை அப்படியே எழுதுவது ஒரு வகை. கலைத்தன்மையோடு வெளிப்படுத்துவது இன்னொரு வகை” என்று சொல்லி இருக்கிறார். இரண்டு பாணிகளுமே படைப்பிலக்கியத்திலும் திரைப்பாட்டிலும் கொண்டாடப்படுபவை. நான் அடிக்கடி சொல்லும் உதாரணம் ஒன்று. ஒரு படத்தில் கதாநாயகி கண்ணீர் வடிக்கிறாள் என்றால் கவியரசர் கண்ணதாசன் ” ஏன் அழுதாய் ஏன் அழுதாய்! என்னுயிரே ஏன் அழுதாய்! நான் அழுது ஓய்ந்ததற்கு நன்றி சொல்லவோ அழுதாய்”என எழுதும்போது கேட்பவருடைய உள்ளங்கள் உருகி விடுகின்றன. வேறொரு படத்தில் அதே சூழலுக்கு கவிஞர் வைரமுத்து எழுதும்போது “கண்ணில் என்ன கார்காலம்? கன்னங்களில் நீர்க்கோலம்” என எழுதுவது கலைத்தன்மை கொண்டது. அவரைப் பிடிக்காதவர்கள் இதை அலங்கார அடுக்கு என்று சொல்லிவிட்டுப் போகலாம். ஒருவர் எவ்வளவு பெரிய படைப்பாளியாகவும் இருக்கலாம். அல்லது திறனாய்வு அறிஞராக இருக்கலாம். ஒரு படைப்பை வாசிக்கும் நேரத்தில் நான் ஒரு வாசகம் என்ற உணர்வுடன் வாசித்தால் திறந்த மனதுடன் அந்தப் படைப்பை பார்க்க முடியும். கவிஞர் வைரமுத்து எழுத்துகள் இவர்கள் முன்னிறுத்தும் வகைமையிலிருந்து வேறானது.இலக்கியச் செழுமை இலக்கணத் துல்லியம் ஆகியவற்றை உணர்ந்த உள்வாங்கிய எழுத்து நடை. இன்றளவும் இந்த வடிவம் தான் இலக்கியத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது. இளைஞர்களை மொழியின்பால் ஈர்ப்பது. இவர்கள் முன்னிறுத்தும் வகையில் இருந்து வேறானது என்பதாலேயே அது இலக்கியம் அல்ல என்று ஆகிவிடாது. இருபதாம் நூற்றாண்டிலும் 21ம் நூற்றாண்டிலும் கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை ஒரு வாசகன் என்ற முறையில் “காவிய மரபின் குறுநீட்சி” என்று வகைப்படுத்துகிறேன். இந்தச் சூழலில் அவர் படைப்பாளியே அல்லர் என்பது போன்ற அவதூறு யார் செய்தாலும் அது உண்மையின்நோக்கத்தில் இல்லாமல் உள்நோக்கத்தின் அடிப்படையில் வீசப்படும் வசை தான் என்பது உறுதி. இந்த அவதூறுக்கு இலக்கிய விவாதம் இலக்கியப் பூசல் என்றெல்லாம் நாகரீகச் சாயம் பூச முயலாதீர்கள். வல்லமை மிக்க தமிழ் மரபின் பின்புலத்தில் கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் துலங்கும் தன்மை பற்றி தொடர்ந்து எழுதுகிறேன். https://www.marabinmaindan.com/2026/03/20/ஞானபீடம்-சர்ச்சையை-முன்/?fbclid=IwdGRleAQrPChleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEex_omHbQiM_-FZaNBVoghJXLinLc5AWZHjVeqAR2-mgYGbOTekSx1JabubfE_aem_fm_nj37FkT9wDvQjKSlluQ
  4. சக்நோரிஸ் சின் பல படங்கள் நான்பார்த்திருக்கின்றேன் .......பின்பு அவர் நடிக்கும் டீ . வி சீரியல் தொடர்களும் விரும்பிப் பார்ப்பது வழக்கம் ......... அருமையான நடிகர் . ........!
  5. Today
  6. காகிதப்புலிகளை இவர் எதற்காக அழைத்தார்? அவர்களின் உதவி இவருக்கு தேவைப்படிருக்கு. ட்ரம்பின் தோல்வி, ஏமாற்றம், அவமானம் இப்படி வெளிவருகிறது. கோழைகளை அழைத்த இவர் மட்டும் வீரனாம்.
  7. நீங்கள் இப்படி ஓரிரு வரிகள் எழுதிச்செல்வதே மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கு ....... நன்றி .....! 👍
  8. இனி வருங்காலத்தில் அரபு நாடுகள் அமெரிக்காவை நம்பவோ அல்லது தமது நாடுகளுக்குள் அனுமதிக்கவோ விரும்பாது. ] அரபு நாடுகள் அமெரிக்காவை தங்கள் பாதுகாப்பிற்கு வைத்திருக்காமல் இருந்திருந்தால் ஈரானால் அந்த நாடுகள் லெபனான் போன்று நாசமாக்கப்பட்ட நிலைக்கு முதலே இருந்திருக்கும்.
  9. வடக்கில் நாலு தமிழருக்கு ஒரு இராணுவம் எனும் வீதத்தில் தமிழர் நிலங்களிலேயே இராணுவம் குடியிருக்கு, வடக்கில் வசிக்கும் சிங்கள மக்களுக்கும் அதிகமான விகாரைகள் அதுவும் தமிழரின் நிலங்களில் எழுந்து நிக்குது, தமிழரோ நிலம் இருந்தும் உறவுகள் வீட்டில், வாடகை வீட்டில், அகதிகளாக வாழுகிறார்கள். அப்படி இவர்களுக்கு என்னதான் பிரச்சனை? அப்படி பிரச்சனை இருந்தால், இங்கே காவற்துறை இருக்கிறது, நீதிமன்றங்கள் இருக்கின்றன. பிரச்சனை இருந்தால் அங்க முறையிடாமல் கொழுப்புக்கு ஏன் நடைபயணம்? ஓ.... அங்கே உள்ளவர்களை உசுப்பிவிடவேண்டுமென பிக்குகள் துடிக்கிறார்கள். அவர்களது போராட்டங்கள், மகாநாடுகளெல்லாம் பிசுபிசுத்துப்போனதால் இப்படி கிளம்பியிருக்கிறார்கள். படத்தில் தமிழிலும் எழுதி தாங்கி பிடித்திருக்கிறார்கள். இவர்கள் கொழுப்பிலிருந்து இறக்கப்பட்டவர்கள். அதில் சில பெண்கள் பொட்டு வைத்திருக்கிறார்கள், அருண் சிர்த்தாத்தின் ஆட்கள் போலிருக்கிறது. அடுத்து கோத்தா கைதை திசை மாற்றுவதற்கு பல நாடகங்கள் அரங்கேற்றுவார்கள் கள்ளர், கொலைகாரர் கூட்டம். ஏதேதோ செய்து பார்க்கிறார்கள், சவால் விடுகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள், ஒன்றும் யாரிடமும் எடுபடுவதாக தெரியவில்லை. விதைத்ததை அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது.
  10. 👌 நான் வாழ தயாராக இல்லாத தப்பிவந்த ஒரு வாழ்க்கை முறையை மற்றவர்களுக்கு பரித்துரைப்பது மிக மோசமான வழிகாட்டுதலாகும்.
  11. https://www.facebook.com/1457391262/posts/pfbid0Bj2uL1uwoc2ThhSpJFrjxzc2JRxQfaMLL9ofxBTy7LNpY4BekuBhRANm4vdYuNCWl/?mibextid=wwXIfr
  12. இந்திய பெருங்கடலில் போர் அபாயம்!!! --- --- --- *முதன் முதலில் 4ஆயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் ஈரான் தாக்குதல்... *ஆனால், உலகலாவிய அச்சுறுத்தல் அல்ல என்கிறது ஈரான் *டியாகோ கார்சியா மீதான தாக்குதல் அபாயத்தை ஏற்க மறுக்கும் அமெரிக்க - பிரித்தானிய ஊடகங்கள்... --- --- --- மத்திய இந்தியப் பெருங்கடலில் பூமத்திய ரேகைக்கு (Equator) தெற்கே அமைந்துள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல், அமெரிக்க - பிரித்தானிய கூட்டு செயற்பாட்டை தடுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நான்காயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் ஒரு நேர் வழிப் பாதையில் கூம்பு வெட்டாக பயணிக்கக் கூடிய (Intermediate-Range Ballistic Missiles - IRBMs) ஏவுகணைகளை ஈரான் தாக்குதலுக்கு முதன் முதலில் பயன்படுத்தியதாக, த வோள்ஸ்ட்ரீட் ஜேர்னல் (the wall street journal) செய்தி தளம் கூறுகிறது. டியாகோ கார்சியா ஈரானில் இருந்து 4 ஆயிரம் கிலோ மிற்றர் (2, 300 இல் இருந்து 2. 500 மைல்கள்) வரையான தூரத்தில் அமைந்துள்ளது. ஆகவே இத் தாக்குதல், அமெரிக்க - இந்திய கூட்டுப் படைத்தளத்திற்கு மாத்திரமல்ல. இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தோ - பசுபினக் பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் என்ற தொனியில் அச் செய்தி விமர்சித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தியப் பெருங்கடலின் மையத்தில் உள்ள அமெரிக்க - பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா மீது ஈரான் இரண்டு இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தவோல் ஸ்ரிற் ஜேர்னல் செய்தித் தளம் சுட்டிக்காட்டியுள்ளது. இடை மறிப்புச் செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் சிலர் கூறியபோதும், அதனை உறுதிப்படுத்த முடியிவ்லை எனவும் அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க போர்க்கப்பல் SM-3 இன்டர்செப்டர் (SM-3 interceptor) டியாகோ கார்சியா தரித்து நிற்கிறது. 30 கிலோ மீற்றர் சதுரப் பரப்பைக் கொண்ட டியாகோ கார்சியாவில் அமெரிக்க - பிரித்தானிய கூட்டுப்படைத் தளம் அமைந்துள்ளது. டியாகோ கார்சியாவில் ஆக குறைந்தது 4 அயிரம் பேர் மாத்திரமே வாழ்கின்றனர். படையினரும் படைகளுக்கு உதவியளிக்கும் பணியாளர்களும் அங்கு அதிகமாக வாழ்கின்றனர். இத் தாக்குதல் ஊடாக, உலகின் எந்தப் பகுதிகளுக்கும் தன்னால் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த முடியும் என்றும், அமெரிக்க தளங்களை இனம் காண முடியும் எனவும் ஈரான் காண்பித்துள்ளது. அமெரிக்க - பிரித்தானிய படை உயர் அதிகாரிகள், அதிர்ச்சியடைந்துள்ளதாக எக்கனமிக்ஸ் ரைம்ஸ் (economictimes) இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது. ஈரான் ஏவுகணை தாக்குதலை 2,000 கிமீ (1,250 மைல்கள்) வரை கட்டுப்படுத்தியுள்ளதாக. கடந்த மாதம் இந்தியா டுடேக்கு (India Today)அளித்த பேட்டியில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஆராச்சி கூறியிருந்தார். ஆனாலும், டியாகோ கார்சியா மீது ஈரான் நடத்திய தாக்குதல் உலகளாவிய அச்சுறுத்தலாக மாற முயற்சிக்கவில்லை என்று அப்பாஸ் ஆராச்சி சுட்டிக்காட்டியதாக எக்கனமிக்ஸ் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் அமெரிக்க - பிரித்தானிய நாடுகளை மையப்படுத்திய பிரதான ஆங்கில செய்தி ஊடகங்கள், தாக்குதல் பற்றிய “அச்சம்” - “ஆபத்து” போன்றவற்றை நேரடியாக ஏற்கத் தயங்குவதை அவதானிக்க முடிகிறது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-
  13. துருக்கி மற்றும் ஓமன் மீதான தாக்குதல்களுக்கும் ஈரானுக்கும் எந்த தொடர்பும் இல்லை: உச்ச தலைவர் கமேனி Published By: Vishnu 21 Mar, 2026 | 04:21 AM துருக்கி மற்றும் ஓமானைக் குறிவைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈரானிய ஆயுதப் படைகளுக்கோ அல்லது அவற்றின் கூட்டாளிகளுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்று ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி வலியுறுத்தியுள்ளார். இந்தத் தாக்குதல்கள் ஈரானால் எந்த வகையிலும் திட்டமிடப்படவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். இந்தத் தாக்குதல்கள் ஈரானின் எதிரிகளால் நடத்தப்படும் 'போலிக் கொடி' தாக்குதல்கள் என்றும், அல்லது பொறுப்பை மற்றொரு தரப்பின் மீது சுமத்தும் நோக்கத்தில் செய்யப்படும் சதிச் செயல்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அண்டை நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் சீர்குலைப்பதற்காக எதிரிகள் இத்தகைய தந்திரங்களைப் பயன்படுத்துவதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார். https://www.virakesari.lk/article/241523
  14. டியாகோ கார்சியா அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! 21 Mar, 2026 | 11:11 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளமான டியாகோ கார்சியா (Diego Garcia) மீது ஈரான் இரண்டு நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்த முயன்றதாக The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட தகவலின்படி, ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் குறித்த இராணுவத் தளத்தைத் தாக்கவில்லை. இதனால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல்களின் படி, ஒரு ஏவுகணை நடுவானில் பயணிக்கும்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளது. மற்றொரு ஏவுகணை தளத்தை நோக்கி வந்தபோது, அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று ‘SM-3’ வகை இடைமறிப்பு ஏவுகணையை ஏவி அதைத் தடுக்க முயன்றுள்ளது. எனினும், அந்த இடைமறிப்பு முயற்சி முழுமையாக வெற்றியடைந்ததா அல்லது ஏவுகணை தானாகவே கடலில் விழுந்ததா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. இந்தத் தாக்குதல் எப்போது இடம்பெற்றது என்பது தொடர்பான துல்லியமான கால விபரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், வெள்ளை மாளிகை அல்லது பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து இதுவரை அதிகாரபூர்வ கருத்து வெளியிடவில்லை. டியாகோ கார்சியா தளம், அமெரிக்காவின் நீண்ட தூர போர் விமானங்கள், கடற்படை நடவடிக்கைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான முக்கிய மூலோபாய மையமாகக் கருதப்படுகிறது. ஈரானிலிருந்து சுமார் 4,000 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்தத் தளத்தை குறிவைத்து தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது, பிராந்திய மோதல்கள் மேலும் விரிவடையும் அபாயத்தை சுட்டிக்காட்டுவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தச் சம்பவம், மத்திய கிழக்கு மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியங்களில் நிலவி வரும் இராணுவ மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களை மேலும் தீவிரப்படுத்தக்கூடியதாகக் கருதப்படுகிறது. மேலும் தகவல்கள் வெளியாகும் நிலையில், சர்வதேச சமூகத்தின் கவனம் இந்தச் சம்பவத்தின் மீது திரும்பியுள்ளது. https://www.virakesari.lk/article/241542
  15. மகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை - துரைராசா ரவிகரன் 20 Mar, 2026 | 04:33 PM (எம்.ஆர்.எம்.வசீம்) கடந்த 1988ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் மகாவலி அதிகார சபை வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி என்னும் பெயரில் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றது. எனவே மகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை. எமது தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியான இந்த மகாவலி அதிகாரசபையை எமது பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) இரண்டாவது நாளாக இடம்பெற்ற மத்திய கிழக்கின் போரினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர்அங்கு மேலும் உரையாற்றுகையில், நிலத்துடன் ஆழமாக இணைக்கப்பட்ட ஒரு காலசாரம் எமக்குள்ளது. என்று ஹிரிகம காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தில் அநுராதபுரத்தில் ஜனாதிபதி உரையாற்றியுள்ளார். பாராட்டுகின்றேன். இதனைத்தான் நாங்களும் எதிர்பார்க்கின்றோம். கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் நிலப்பறிப்பினாலேயே விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்தகால ஆட்சியாளர்களினால் பறிக்கப்பட்ட காணிகளை மீட்டெடுக்க மக்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கும் இந்நேரம் இப்போதைய ஜனாதிபதி நியாயமாக நடந்துகொள்வார் என்ற நம்பிக்கையுடனும் ஒருபகுதி மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் சமயம் இது. ஆனால் வவுனியாவடக்கு, முல்லைத்தீவு, தையிட்டி. வலிவடக்கு, கேப்பாப்புலவு, முள்ளிக்குளம், திருகோணமலை, அம்பாறை. மட்டக்களப்பு என வடக்கு கிழக்கெங்கும் தமது நிலமீட்பிற்காகத்தான் தமிழ்மக்கள் உரமாகப் போராடுகின்றார்கள். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பரப்பிலுள்ள தமிழ் மக்களுக்கும் தமது நிலம் தமது உறவுகளின் பின்னிப்பிணைந்த கலாசாரத்துடனான பூர்வீகத் தமிழ் மண்தான் என்பதை ஜனாதிபதிக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். ஜனாதிபதி அநுராதபுரத்தில் உரை நிகழ்த்திய அதே நாளில் கடந்த முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின், கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி என்னும் இடத்திலுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக விவசாயக் காணிகளை மகாவலி அதிகாரசபை ஆக்கிரமிக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. அந்தக்காணிகள் தமிழ்மக்களுடைய பூர்வீக தனியார் அறுதி உறுதிக் காணிகளாகும். நில அளவையாளர் நாயகத்தினால் அளந்து வரையப்பட்டு, பேணப்பட்டுவரும் (Top off pp 70 இலக்க) வரைபடத் தொகுதியில் தனியார் காணியாகவும், மேய்ச்சல் தரை நிலங்களாகவும் உள்ளன. எனவே மகாவலி அதிகாரசபைக்கு அந்த நிலங்களை நிர்வகிக்கும் அதிகாரம் கிடையாது. ஆனால் மகாவலி அதிகாரசபை கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் அதிகார எல்லைக்குட்பட்ட இந்த தமிழ்மக்களின் அறுதி உறுதிக் காணிகளைத் திருடி சிங்கள வர்த்தகருக்கு குத்தகைக்கு வழங்கும் சட்டவிரோத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மகாவலி அதிகாரசபையிடமிருந்து தமிழ்மக்களின் அறுதி உறுதிக் காணிகளை சட்டவிரோதமாகக் குத்தகைக்குப் பெற்றுள்ள அந்தநபர், அந்தக் காணியில் உப்பளம் அமைக்கும் வேலையைத் தொடங்கியதால் அங்கு ஒரு அமைதிக்குலைவு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவாகியிருந்ததது.இவ்வாறான இனவிரோத செயற்பாட்டைச் செய்தது மகாவலி அதிகாரசபையே . இவ்வாறான இனவிரோத செயற்பாடு தொடர்பாக உரிய விசாரணை முன்னெடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த 1988ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் வடக்கு மாகாணத்திலே மகாவலி அதிகார சபையினால் வடக்கிற்கான அபிவிருத்தி என்னும் பெயரில் அப்பகுதி தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்தல், தமிழ் கிராமப்பெயர்களை சிங்களப் பெயராக மாற்றி அங்கு சிங்களமக்களைக் குடியேற்றம் செய்தல் உள்ளிட்ட கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன மகாவலியின் இத்தகைய அத்துமீறிய அடாவடித்தனமான செயற்பாடுகளால் நாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையும், சமாதானக் குலைவும் ஏற்படுகின்றது. எனவே மகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை. எமது தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியான இந்த மகாவலி அதிகாரசபையை எமது பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு இந்த உயரிய சபையைக் கோருகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/241485
  16. அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதம் கானல் நீரா? வளைகுடா நாடுகளில் நிலவும் கோபமும் ஏமாற்றமும் பட மூலாதாரம்,FADEL SENNA / AFP via Getty Images கட்டுரை தகவல் பவுலா ரோசாஸ் பிபிசி நியூஸ் முண்டோ 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் கடந்த தசாப்தங்களில், லெபனான் மீது குண்டுகள் விழுந்தபோதும், இராக் நாட்டின் மக்கள் நெரிசல்மிக்க சந்தைகளில் தற்கொலைப் படைத் தாக்குதல்தாரிகள் தங்களை வெடிக்கச் செய்தபோதும் சிரியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்) கடத்தி கொடூரமான முறையில் தலையை துண்டித்தபோதும், துபை ஒரு தொடர்ச்சியான கொண்டாட்ட இடமாகவே இருந்தது. உலகின் செல்வந்தர்கள் அதன் கடற்கரைகளை ஒட்டி உள்ள செயற்கைத் தீவுகளில் மாளிகைகளை வாங்கினர், அபுதாபியின் லூவ்ரே அருங்காட்சியகத்தில் உலா வந்தனர் அல்லது கத்தார் பாலைவனத்தில் சஃபாரிகளை மேற்கொண்டனர். போர்கள், போராட்டங்கள் மற்றும் நிலையற்ற தன்மையால் உலுக்கப்பட்ட ஓர் அண்டைப்பகுதியில், பாரசீக வளைகுடா நாடுகள் பல ஆண்டுகளாகப் பாதுகாப்பு மற்றும் செழிப்பின் புகலிடமாக இருக்கும் பிம்பத்தை வளர்த்தெடுத்தன. அவர்களின் முயற்சிகள் மற்றும் அவர்களின் சாதகமான வரி கொள்கைகள் ஆயிரக்கணக்கான மில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தன. துபை, அபுதாபி அல்லது தோஹா போன்ற நகரங்களை உலகின் கோடீஸ்வரர்களுக்கும் சொகுசு சுற்றுலாவுக்கும், அதே போல் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மாநாடுகளுக்கும் விருப்பமான இடங்களாக மாற்றின. அந்தக் கானல்நீர் பிப்ரவரி 28 அன்று உடைந்தது. அன்று, இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் ஒரு போரைத் தூண்டியது, அதில் தெஹ்ரான் இஸ்ரேலிய நகரங்கள் மற்றும் இப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது குண்டுகளை வீசி பதிலடி கொடுத்தது மட்டுமல்லாமல், வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் பதிலடி கொடுத்துள்ளது. இந்த முடியாட்சிகள் தாங்கள் நாடாத ஒரு மோதலில் திடீரென சிக்கிக்கொண்டன. "அவர்கள் எக்காரணம் கொண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதில் ஈடுபட வேண்டாம் என்று தடுத்து நிறுத்த முயன்றனர்," என்று ஐரோப்பிய அமைதி நிறுவனத்தின் வளைகுடா நிபுணரான அன்னா ஜேக்கப்ஸ் கலாஃப் பிபிசி முண்டோவிடம் விளக்குகிறார். கத்தார், எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், செளதி மற்றும் ஓமானி மக்கள், அதே போல் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, இரானிய ஏவுகணைகள் திடீரென வணிக வளாகங்கள், சொகுசு வானளாவிய கட்டடங்கள் மற்றும் படகுகள் நிறைந்த துறைமுகங்களுக்கு அருகில் விழுந்தன. உலகின் மிகவும் ஆடம்பரமான சில ஹோட்டல்களையும் போர் எட்டியுள்ளது. இடைமறிக்கப்பட்ட ஒரு இரானிய ட்ரோனின் சிதறல்கள் துபை புர்ஜ் அல் அரப் மீது விழுந்தன, அதே நேரத்தில் பாம் ஜுமேரா செயற்கைத் தீவில் உள்ள ஃபேர்மாண்ட் தி பாம் நேரடியாகத் தாக்கப்பட்டது. மேலும் கடந்த புதன்கிழமை, ராஸ் லாஃபன் தொழில் வளாகத்தில் ஏவுகணைத் தாக்குதல்களால் "பரந்த சேதத்தை" சந்தித்ததாக கத்தாரின் அரசு எண்ணெய் நிறுவனம் கூறுகிறது. அவர்களின் சவுத் பார்ஸ் (South Pars) எரிவாயு வயல் வசதிகள் இஸ்ரேலிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளுக்குப் பிறகு, தான் "தீர்க்கமான நடவடிக்கை" எடுப்பேன் என்று இரான் விடுத்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்ட இடங்களுள் ராஸ் லாஃபனும் ஒன்றாகும். இதன் விளைவுகள் அழிவுகரமானதாக இருக்கின்றன, மேலும் வளைகுடா தலைநகரங்களில் கோபம் உச்சத்தில் உள்ளது. விமானங்கள், ஹோட்டல் முன்பதிவுகள், மாநாடுகள் மற்றும் பஹ்ரைன் மற்றும் செளதி அரேபியாவில் நடைபெறும் ஃபார்முலா 1 போன்ற சர்வதேச நிகழ்வுகள் ரத்தால் இந்த பணக்கார முடியாட்சி நாடுகளைத் தாக்கியுள்ளது. இதனுடன் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதும் சேர்ந்துள்ளது, இது அவர்களின் எரிபொருள் ஏற்றுமதியை முடக்கியுள்ளது. கானல்நீர் கரைந்ததா? "வளைகுடா நாடுகள் மத்திய கிழக்கில் பாதுகாப்பான புகலிடங்கள் என்ற பிம்பத்தை உருவாக்க உழைத்துள்ளன. கடந்த வாரத்தின் நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் அந்த பிம்பத்தை மங்கச் செய்துள்ளன," என்று குவைத் பல்கலைக்கழகப் பேராசிரியரும், குவைத் பிரதமரின் அமைச்சரவையின் முன்னாள் துணைத் தலைவருமான பத்ர் அல் சைஃப் பிபிசி-யிடம் ஒப்புக்கொண்டார். இந்த பிராந்தியம் ஆடம்பரத்திலும் பாதுகாப்பிலும் முதலீடு செய்துள்ளது. இப்பகுதியின் முடியாட்சி நாடுகள், அனைத்தும் சர்வாதிகார அமைப்புகள், கண்காணிப்பில் பெரும் முதலீடுகளைச் செய்துள்ளன, இது பயங்கரவாதத்திலிருந்து அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருந்தது, ஆனால் அவை அதிருப்தியாளர்களையும் அல்லது அவர்களின் பிம்பத்தைப் பாதிக்கக்கூடிய எதையும் வேட்டையாடின. பட மூலாதாரம்,Planet Labs PBC via REUTERS படக்குறிப்பு,இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் சிதறல்கள் ஜெபல் அலி துறைமுகத்தில் மோதின. உதாரணமாக, இந்த மூன்று வாரப் போரில், இரானிய தாக்குதல்களின் வீடியோக்களை வெளியிட்டதற்காக வெளிநாட்டினர் உட்பட டஜன் கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டினர், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சியில், இந்த பழமைவாத முஸ்லிம் நாடுகளில் குறிப்பிட்ட இடங்களில் மதுபானத்திற்கு அனுமதி; ஓரினச்சேர்க்கையின் பகிரங்க வெளிப்பாடுகளுக்கு அனுமதி இல்லை என சில வரம்புகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளன. இது, குறைந்த அல்லது வரி இல்லாத சூழலுடன் சேர்ந்து, கடந்த தசாப்தங்களில் அந்நாடுகளைப் பிரபலமாக்கியது, மேலும் ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் மாற்றியது. ஆனால், போர் இந்த அனைத்து முயற்சிகளையும் சோதனைக்கு உட்படுத்துகிறது. ஃபைனான்சியல் டைம்ஸ் மேற்கோள் காட்டிய உலகப் பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சிலின் தரவுகளின்படி, சுற்றுலாத் துறை மட்டும் இந்த பிராந்தியத்தில் ஒரு நாளைக்கு சுமார் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்து வருகிறது. இந்த கூட்டமைப்பு இந்தாண்டு இப்பகுதியில் சுற்றுலா மூலம் 207,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும் என்று கணித்திருந்தது. ஏர்பிஎன்பி மற்றும் விஆர்பிஓ போன்ற தளங்களில் செய்யப்பட்ட முன்பதிவுகளிலிருந்து ஏர்டிஎன்ஏ குழு சேகரித்த தரவுகளின்படி, மார்ச் 6 வாரத்தில் துபை நகரில் 80,000-க்கும் மேற்பட்ட குறுகிய காலம் வாடகைக்கு தங்கும் பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. விமான ரத்துகளும் மில்லியன் கணக்கான பயணிகளைத் தவிக்க விட்டுள்ளன. கடந்த தசாப்தங்களில், வளைகுடா பகுதி ஒரு உண்மையான சர்வதேச விமான இணைப்பு மையமாக மாறியுள்ளது, அங்கு தினமும் 500,000-க்கும் அதிகமான பயணிகள் கடந்து செல்கின்றனர். பிப்ரவரி 28 முதல், குறைந்தது மூன்று விமான நிலையங்கள் - துபை, குவைத் மற்றும் அபுதாபி - இரானிய ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களால் பாதிக்கப்பட்டுள்ளன, இது ஆயிரக்கணக்கான விமான ரத்துகளுக்குக் காரணமானது. பாதுகாப்பு பிம்பம் "ஒரு பகுதி செயற்கையானது, ஆனால் ஒரு பகுதி உண்மையானது, ஏனென்றால் வளைகுடா நாடுகள் தசாப்தங்களாக மோசமான பிராந்திய வன்முறையிலிருந்து தங்களை உண்மையில் தனிமைப்படுத்திக்கொள்ள முடிந்தது," என்று ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் பெல்ஃபார் மையத்தின் ஆராய்ச்சியாளர் எல்ஹாம் ஃபக்ரோ பிபிசி முண்டோவிடம் விளக்குகிறார். முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையை மீட்டெடுப்பது "சாத்தியம்" என்று ஃபக்ரோ கருதுகிறார், "ஆனால் அது மோதல் எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதைப் பொறுத்தது." ஏமாற்றமும் கோபமும் வளைகுடா நாடுகளை இலக்காக மாற்றிய இரான் உடனான போர் மிகவும் அதிக இழப்பை ஏற்படுத்துவதாக மாறி வருகிறது, இது அதன் குடிமக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் கோபத்தையும் ஏமாற்றத்தையும் உருவாக்குகிறது. போருக்குள் தங்களை இழுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை மிகவும் வெளிப்படையாக விமர்சித்த பொது நபர் எமிரேட்ஸை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் கலாஃப் அகமது அல் ஹப்தூர் ஆவார். "நமது பிராந்தியத்தை இரான் உடனான போருக்குள் இழுக்க அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? மேலும் இந்த அபாயகரமான முடிவை எடுக்க அவர் எதை அடிப்படையாகக் கொண்டார்?" என்று அல் ஹப்தூர் அமெரிக்க அதிபருக்கு எழுதிய சமீபத்திய கடிதத்தில் கேள்வி எழுப்பினார், அதில் அவர் "விசையை அழுத்துவதற்கு முன்பு கூடுதல் சேதங்களைக் கணக்கிட்டாரா?" என்றும் கேட்டிருந்தார். பட மூலாதாரம்,Christopher Pike/Getty Images படக்குறிப்பு,90% மக்கள்தொகையினர் வெளிநாட்டினராக உள்ள துபை போன்ற நகரங்கள், மத்திய கிழக்கை உலுக்கும் நிலையற்ற தன்மையிலிருந்து விலகி வாழ்வது போல் தோன்றியது. "வளைகுடா தலைநகரங்களில் நிலவும் வஞ்சிக்கப்பட்ட உணர்வு கணிசமானது, இருப்பினும் இது சிறிது காலத்துக்குப் பகிரங்கமாக வெளிப்பட வாய்ப்பில்லை," என்று எல்ஹாம் ஃபக்ரோ விளக்குகிறார். வளைகுடா நாடுகள் அமெரிக்காவுடனான தங்கள் உறவில் பெருமளவு முதலீடு செய்துள்ளன, மற்றவற்றுடன் அமெரிக்க ராணுவ தளங்களை ஏற்றுக்கொள்வது, தளவாடங்களை எளிதாக்குவது, மிகப்பெரிய முதலீடுகளைச் செய்ய உறுதியளிப்பது மற்றும் அமெரிக்காவின் பிராந்திய கொள்கையுடன் இணைந்திருப்பதால் ஏற்படும் உள்நாட்டு அரசியல் விலையை ஏற்றுக்கொள்வது ஆகியவை இதில் அடங்கும். "அதற்கு ஈடாக, தவிர்க்க முடியாமல் தங்களை இலக்குகளாக மாற்றும் ஒரு போருக்கு முன்பு, குறைந்தபட்சம் தங்களைக் கலந்தாலோசிப்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. அவர்கள் செய்த எதற்காகவும் அல்ல, மாறாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எடுத்த முடிவுகளால் இரானிய ஏவுகணைகள் அவர்களின் தலைநகரங்கள், விமான நிலையங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் நிதி மாவட்டங்களைத் தாக்கின," என்று ஃபக்ரோ குறிப்பிடுகிறார். லண்டனைத் தளமாகக் கொண்ட சேத்தம் ஹவுஸ் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர் நீல் குல்லியமும் வளைகுடா தலைநகரங்களில் இப்போது "பெரும் கோபம் உணரப்படுகிறது" என்பதை ஒப்புக்கொள்கிறார், இருப்பினும் தற்போதைக்கு "அவர்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது மற்றும் அவர்கள் அதை எந்தப் பொது மன்றத்திலும் வெளிப்படுத்த வாய்ப்பில்லை." என சொல்கிறார். அமெரிக்கா அவர்களைப் புறக்கணிப்பது இது முதல் முறையல்ல. 2015-இல் இரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானபோது, "தெஹ்ரானுடனான எந்தவொரு உடன்படிக்கையிலும் தாங்கள் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என்று எப்போதும் கோரி வந்த வளைகுடா நாடுகள் விலக்கி வைக்கப்பட்டன," எனவே இந்த புதிய ஓரங்கட்டப்படுதல் "அவர்களின் உணர்வுகளைப் பாதிக்கிறது." பாதுகாப்பு உத்தி ஷா ரேஸா பஹ்லவியை வீழ்த்தி இரான் இஸ்லாமியக் குடியரசை அறிவித்த புரட்சிக்குப் பிறகு வளைகுடா முடியாட்சி நாடுகள் தங்கள் பாரசீக அண்டை நாட்டுடன் பதற்றமான உறவையே கொண்டுள்ளன. இரான் ஒரு அரபு நாடு அல்ல, அது பெரும்பான்மையான ஷியாக்களைக் கொண்டுள்ளது - வளைகுடா நாடுகள் பெரும்பான்மையாக சுன்னி முஸ்லிம்களைக் கொண்டுள்ளன - மேலும் அது 1979 புரட்சிக்குப் பிறகு இப்பகுதியில் அமெரிக்காவின் பெரும் எதிரியாகத் தன்னைக் நிலைநிறுத்திக் கொண்டது, அதே அமெரிக்காவுக்கு அரபு முடியாட்சி நாடுகள் நட்பு நாடுகளாக உள்ளன. இந்த வழியில், வளைகுடா நாடுகள் குறிப்பாக செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார், அமெரிக்காவுடனான அந்தத் தொடர்பைச் சுற்றித் தங்கள் பாதுகாப்பைக் கட்டமைத்தன. "அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் நேட்டோவின் 5-வது விதிக்கு (ஒரு உறுப்பினர் தாக்கப்பட்டால் மற்றவர்கள் அவரது பாதுகாப்புக்கு வருவார்கள்) இணையான ஒன்றை அதாவது அவர்களைப் பாதுகாக்க அமெரிக்கா உறுதியளிக்க வேண்டும் என்ற நிலையை கொண்டிருக்க முயன்றனர்," என்று நீல் குல்லியம் பகுப்பாய்வு செய்கிறார். 1990-இல் சதாம் ஹுசைனின் இராக்கால் ஆக்கிரமிக்கப்பட்டு, வாஷிங்டன் தலைமையிலான கூட்டணியால் விடுவிக்கப்பட்ட குவைத்தின் முன்மாதிரியே இதற்கு குறிப்புப் புள்ளியாக இருந்தது. ஆனால் 2019-இல் இரான் செளதி அரேபியாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது குண்டு வீசியபோது அல்லது 2025-இல் கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் குண்டு வீசிக் கொன்றபோது, அமெரிக்கா கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தது. வாஷிங்டன் தங்கள் மீட்க வராது என்ற உணர்வு விரிவடைந்தது, மேலும் இந்த நாடுகளில் சில தங்கள் சொந்த பாதுகாப்புத் துறையை உருவாக்கத் தொடங்கியுள்ளன மற்றும் தங்கள் பாதுகாப்புத் தொடர்புகளைப் பன்முகப்படுத்தத் தொடங்கியுள்ளன. பட மூலாதாரம்,Anadolu via Getty Images படக்குறிப்பு,பஹ்ரைனின் மனாமாவில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளம் போன்ற வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் இரான் தாக்குதல் நடத்தியது. வளைகுடா நாடுகள் மூன்று தொடர்புடைய அனுமானங்களைச் சுற்றித் தங்கள் பாதுகாப்பைக் கட்டமைத்தன என்று எல்ஹாம் ஃபக்ரோ கூறுகிறார்: வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு எதிராக அமெரிக்கா முக்கிய உத்தரவாததாரராகச் செயல்படும், இரான் உடனான பதற்றக் குறைப்பு நேரடி மோதலின் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் சிலருக்கு இஸ்ரேலுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட உறவுகளை ஏற்படுத்துவது உத்தி ரீதியான நன்மைகளைத் தரும். இந்த உத்திகள் "வளைகுடா அரசுகளுக்கு அமெரிக்கா, இரான் மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு சமநிலையைப் பராமரிக்க அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன," என்று பெல்ஃபார் மைய ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார். இரான் போர் அந்த கூட்டணியின் வரம்புகளை அம்பலப்படுத்தியுள்ளது. சிலர் துருக்கி அல்லது பாகிஸ்தான் போன்ற பிற நாடுகளுடன் தங்கள் ராணுவ ஒத்துழைப்பைப் பன்முகப்படுத்தத் முடிவெடுக்கலாம், ஆனால் நீல் குல்லியத்தின் கருத்துப்படி, "அமெரிக்காவை விட்டு விலகிச் செல்ல அவர்களுக்கு நீண்ட காலம் எடுக்கும்", ஏனென்றால் அந்தப் பயிற்சி, ஆயுத அமைப்புகள் அல்லது விமான ஒப்பந்தங்கள் பல குறைந்தது 20 ஆண்டுகள் நீடிக்கின்றன. தலைக்கு மேல் தொங்கும் கத்தி தாங்கள் தேர்ந்தெடுக்காத ஒரு போரில் வளைகுடா நாடுகளுக்கு இன்று என்ன வழி உள்ளது? எளிதான வழி எதுவும் இல்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் மோதல் எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவு குறைவாகவே சேதம் இருக்கும். குறுகிய கால போர் நிறுத்தம் மீட்புப் பணிகளைத் தொடங்க அனுமதிக்கும் என்று எல்காம் ஃபக்ரோ குறிப்பிடுகிறார். ஆனால் ஒரு நீண்ட காலப் போர் மாதந்தோறும் சேதத்தை அதிகப்படுத்தும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வெளியேற்றத்தையும் துபை போன்ற பொருளாதாரங்கள் சார்ந்திருக்கும் மூலதனம் வெளியேறுவதையும் துரிதப்படுத்தும். அது மட்டுமல்ல. வளைகுடா நாடுகளுக்கு ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஒரு போர் நிறுத்தத்தின் மூலம் மட்டுமே நீடித்த முறையில் தடுக்க முடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்புவது போல வலிமையின் மூலம் ஒருபோதும் முடியாது என்று நீல் குல்லியம் கருதுகிறார். இழப்புகள் எப்படியிருந்தாலும் பெரிதாக இருக்கும், ஏனெனில் சில நாடுகள் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன, மேலும் போருக்கு முன்பு இருந்த நிலைக்கு அதை மீண்டும் கொண்டு வர அவர்களுக்கு குறைந்தது ஐந்து அல்லது ஆறு மாதங்கள் ஆகலாம். போர் இன்றே முடிவுக்கு வந்தாலும், அதன் வீழ்ச்சி தற்போதைக்கு நிகழ வாய்ப்பில்லை என்று தோன்றும் இரானிய ஆட்சியின் அச்சுறுத்தல், வளைகுடா மீது தலைக்கு மேல் தொங்கு கத்தி போல தொடர்ந்து தொங்கிக்கொண்டிருக்கும். "இன்னும் இரண்டு மாதங்களில், அணுசக்தி திட்டம் அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தில் ஏதேனும் நகர்வைக் கண்டறிந்திருப்பதாகவும், மீண்டும் தாக்குவதாகவும் இஸ்ரேல் கூறக்கூடும்," என்று சேத்தம் ஹவுஸ் ஆராய்ச்சியாளர் கூறுகிறார். "அப்போது இரானிய மக்கள் பதிலடி கொடுப்பார்கள்." ஐரோப்பிய அமைதி நிறுவனத்தின் அன்னா ஜேக்கப்ஸ் கலாஃப் குறிப்பிடுவது போல, வளைகுடா நாடுகள் "புவியியலை மாற்ற முடியாது", அவை 90 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு பரந்த நாட்டின் அண்டை நாடுகள். "மேலும் அவர்கள் தங்கள் நாடுகளுக்கும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுப்பதைத் தவிர்க்க இரானின் புதிய தலைவர்களுடன் இணைந்து வாழ்வதற்கான ஒரு வழியைக் கண்டறிய வேண்டும்." சமீபத்திய ஆண்டுகளில் அவர்கள் செய்து வந்தது போல சீனாவின் மத்தியஸ்தத்துடன் செளதி அரேபியாவும் இரான் நாடும் தங்கள் தூதரக உறவுகளை மீண்டும் நிலைநிறுத்தியபோல், மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்புவது ஒரு வழியாக இருக்கலாம். "வளைகுடா அரசுகள் இரான் நாட்டுடன் தங்கள் சொந்த நிபந்தனைகளின் அடிப்படையில் தங்கள் சொந்த உறவுகளைக் கட்டமைப்பதே ஒரே நீடித்த தீர்வு ஆகும்," என்று ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர் கருதுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy41l2kljemo
  17. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஏப்ரல் 20 மீண்டும் ஆரம்பம்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி! யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு போர்ச் சூழல் தொடர்பான விவாதத்தின் போது, செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தற்போதைய அரசாங்கம் குறைகளை ஏற்றுக்கொண்டு செயல்படும் ஒரு இயக்கம் எனக் குறிப்பிட்டார். கடந்த 25 ஆண்டுகளில் செய்யப்படாத பல பணிகள் தற்போதைய குறுகிய கால ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 1999ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட செம்மணிப் புதைகுழியில், 2024ஆம் ஆண்டு வரை 25 வருட காலப்பகுதியில் வெறும் 15 எலும்புக்கூடுகளே கண்டெடுக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதன் தலைவர்களுக்கு அதிக அதிகாரம் இருந்தும், செம்மணி விவகாரத்தில் அவர்கள் ஏன் மௌனம் காத்தார்கள் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த கடந்த 17 மாதங்களில் மட்டும் 239 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இவ்வளவு அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது முறையற்றது என்றார். செம்மணி அமைந்துள்ள தொகுதியில் மக்கள் தங்களுக்கு வழங்கிய ஆணையின் அடிப்படையில், நீதித்துறை பொறிமுறையூடாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் ஏப்ரல் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இது தவிர மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளும் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். நீதி நிலைநாட்டப்படும் போது அதற்கான கால அவகாசம் தேவைப்படும் என்றும், சர்வதேச ரீதியில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். https://athavannews.com/2026/1469481
  18. யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர், மருமகனால் அடித்து கொலை! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தனது தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவைரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இதுகுறித்து விசாரணைகள் செய்வதற்காக யாழ்ப்பாண பொலிசார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடி ஆதாரமும் காணப்பட்டது. இந்நிலையில் பொலிசார் விசாரணைகளை முடுக்கிவிட்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்தது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்றையதினம் திருகோணமலை பகுதியில் வைத்து 19 வயதுடைய மனைவி மற்றும் 21 வயதுடைய கணவன் என இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் விரிவுரையாளரான குறித்த பெண், மருமகனின் தாக்குதலின் போது உயிரிழந்த விடயம் தெரிய வந்துள்ளது. மேலும் உயிரிழந்தவரது சடலத்தை எடுத்து சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு இடத்தில் வீசிவிட்டு இருவரும் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அந்தவகையில் குறித்த சடலம் எங்கே வீசப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், அந்த சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2026/1469477
  19. முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா! ஈரானுக்கு எதிரான போரில் தமது இலக்குகளை அடைவதற்கு அமெரிக்கா மிகவும் நெருங்கி வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்படி, இராணுவ நடவடிக்கைகளை நிறைவு செய்து போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருவதாக அவர் தனது ‘Truth’ சமூக ஊடகக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) பயன்படுத்தும் ஏனைய நாடுகள், அதனைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடும் அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில், ஈரான் மீதான எண்ணெய் விற்பனைத் தடையை அமெரிக்கா 30 நாட்களுக்குத் தற்காலிகமாக நீக்கியுள்ளது. அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் இது குறித்த அறிவிப்பை நேற்று (20) வெளியிட்டார். அமெரிக்க – இஸ்ரேலிய போர் பதற்றங்களுக்கு மத்தியில், எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்க இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 வரை கப்பல்களில் ஏற்றப்படும் ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய ‘பொதுவான உரிமம்’ வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பெசென்ட் தனது ‘X’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, “சுமார் 140 மில்லியன் பீப்பாய் ஈரானிய எண்ணெயை உலக சந்தைக்குக் கொண்டு வருவதன் மூலம், தற்காலிக எரிசக்தி தட்டுப்பாட்டை அமெரிக்கா சீர்செய்யும் , இது உலகளாவிய விநியோகச் சங்கிலியை விரிவுபடுத்த உதவும் என அவர் அதில் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் ரஷ்யாவைத் தொடர்ந்து, ஈரான் மீதும் அமெரிக்கா தனது தடைகளைத் தளர்த்துவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1469471
  20. காணாமல் போனவர்களுக்கு நீதி: புதிய சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் தயார் - அமைச்சர் ஹர்ஷண! 20 Mar, 2026 | 04:34 PM (எம்.ஆர்.எம்.வசீம்) யுத்தத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அவர்களின் குடும்பங்களுக்கு நீதி அவசியமாகும். அந்த நீதியை துரிதமாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கை எடுக்கும். இதன்போது புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டிய தேவை எழுமாக இருந்தால் அதனை கொண்டுவரவும் அரசாங்கம் தயாராக உள்ளது என நீதி மற்றும் தேசிய ஒருமைமப்பாடு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி.எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். சாணக்கியன் எம்.பி தனது கேள்வியின்போது, 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதி கட்டத்தில் காணாமல் போனவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை என்ன? அது புதுப்பிக்கப்பட்டுள்ளதா? காணாமல் போனவர்களைப் பற்றிய ஒருங்கிணைந்த, நம்பத்தகுந்த தேசிய தரவுத்தளம் இன்னும் இல்லையென அரசு ஏற்றுக்கொள்கிறதா? அத்தகைய தரவுத்தளத்தை உருவாக்க எவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? எனவும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை என்ன? உடற்கூறு ஆய்வு, அடையாளம் காணல் மற்றும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்கான கால அளவு என்ன? அத்துடன் யுத்தத்தின் இறுதி காலப்பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்ததாகக் கூறப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களைப் பற்றிய அரசின் நிலைப்பாடு என்ன? இலங்கையின் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான நடவடிக்கை என்ன? என்றார். இதற்க தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகையில், 2009 இறுதிக் கட்ட யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் குறித்த மதிப்பீடுகளில் கணிசமான எண்ணிக்கையிலான நபர்கள் இன்னும் கணக்கில் வராமல் உள்ளனர் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்கின்றது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு காலத்தில் மாறுபடுகின்றன. எவ்வாறாயினும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி அந்த எண்ணிக்கை 2,764 ஆகும். எவ்வாறாயினும் காணாமல் போனவர்களின் நம்பகமான ஒருங்கிணைந்த தரவுத்தளம் இல்லாதது ஒரு நீண்டகால சவாலாக இருந்து வருகிறது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. இதனால் இது தொடர்பில் சில வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பபடுகின்றன. குறிப்பாக நீண்ட காலத் தீர்வாகச் செயல்படும் வகையில், ஒரு விரிவான தரவுத்தள மேம்பாட்டு அமைப்பை நிறுவுவதற்கான நடவடிக்கை இடம்பெறுகின்றது. இதேவேளை 2025ல் கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி மனித புதைகுழி விடயத்தில் தடயவியல் பரிசோதனைக்கும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் நீதி அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான நீதியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் நீதிமன்றதத்தின் ஊடாக நடக்கும். நாங்களும் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து தீர்வு காண வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றோம். தடயவியல் பகுப்பாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் இதற்கான கால அளவை கூற முடியாது. எவ்வாறாயினும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதியை வழங்கும் ஒரு அறிவியல் பூர்வமான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுப்போம். அத்தடன் ஏனைய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள் தொடர்பிலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் காணாமல் போதல் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. யுத்தத்தில் எது சரி, தவறு என்று கூற முடியாது. ஆனால் எவராவது காணாமல் போயிருந்தால் அது தொடர்பில் நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். காணாமல் போனோர் விடயத்தில் இது வரையில் கவனம் செலுத்தப்படாத விடயங்கள் இருப்பின் அது தொடர்பில் கூறலாம். தேவையான நடவடிக்கைளை நாங்கள் முன்னெடுக்க தயாராக இருக்கின்றோம். இதேவேளை, பொறுப்புக்கூறல் விடயத்தில் வெளி பொறிமுறையுடன் அரசாங்கம் இணங்கவில்லை. வெளிவிவகார அமைச்சர் இது தொடர்பில் கூறியுள்ளார். எமது தேசிய வேலைத்திட்டங்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதனால் இவ்வாறாக தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும் காணாமல் போனவர்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி தேவையான நீதியை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கின்றோம். எவராவது தவறு செய்திருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடாகும். இன பேதமின்றி தேசிய பொறிமுறையில் நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுக்கவே விரும்புகின்றோம். இதற்காகவே உண்மை நல்லிணக்க ஆணைக்குழு அமைகிறது. காணாமல் போனவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி அவசியமாகும். இதற்காக புதிய சட்டம் தேவையென்றால் அதனை கொண்டுவரவும் அரசாங்கம் தயாராக உள்ளது. இதற்காக எதிர்வரும் 3 வருடங்களில் தேவையான அவதானத்தை செலுத்தி நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/241486
  21. அமெரிக்க ராணுவ தளங்கள் மீதான இரான் தாக்குதலால் ஏற்பட்ட சேதம் எவ்வளவு? பட மூலாதாரம்,Planet labs PBC and Airbus படக்குறிப்பு,அல் சாதர் மற்றும் அல் ருவைஸ் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆகிய இடங்களில் உள்ள ரேடார் தளங்களுக்கு ஏற்பட்ட சேதம் கட்டுரை தகவல் டேனியல் புஷ், வாஷிங்டன் செய்தியாளர் மற்றும் பால் பிரௌன் & அலெக்ஸ் முர்ரே, பிபிசி வெரிஃபை 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா பயன்படுத்தும் ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட இரானிய தாக்குதல்களால், போரின் முதல் இரண்டு வாரங்களில் 800 மில்லியன் டாலர் மதிப்புக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதாக புதிய பகுப்பாய்வு கூறுகிறது. இதில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரை தொடங்கிய ஒரு வாரத்திற்கு பிறகு இரான் நடத்திய ஆரம்பகட்ட பதிலடி தாக்குதல்களில் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டதாக, வியூகம் மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (CSIS) ஆய்வறிக்கை மற்றும் பிபிசி மேற்கொண்ட பகுப்பாய்வின்படி தெரியவந்துள்ளது. அப்பிராந்தியத்தில் அமெரிக்க சொத்துகள் மீது நடத்தப்பட்ட இரானிய தாக்குதல்களால் ஏற்படுத்தப்பட்ட முழு சேதத்தின் அளவு இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அமெரிக்க ராணுவ உள்கட்டமைப்பின்மீது 800 மில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, முன்பு வெளியான தகவலைவிட அதிகமாக உள்ளது, இது இந்த மோதல் நீடிக்கும் நிலையில் அமெரிக்காவுக்கு அதிக செலவு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது. "அப்பிராந்தியத்தில் அமெரிக்க தளங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் அவ்வளவாக பதிவு செய்யப்படவில்லை," என சிஎஸ்ஐஎஸ்-ன் மூத்த ஆலோசகரும் அந்த ஆய்வறிக்கையின் இணையாசிரியருமான மார்க் கேன்சியன் கூறுகிறார். "இது அதிகமானதாக தோன்றினாலும், மேலதிக தகவல்கள் கிடைக்கும் வரை முழு தொகை குறித்து தெரியவராது." இதுகுறித்த கருத்தை பெற பிபிசி அமெரிக்க பாதுகாப்பு துறையை தொடர்புகொண்டது. அத்துறை இந்த போரை வழிநடத்தும் அமெரிக்க மத்திய கட்டளை பிரிவிடம் கேட்குமாறு கூறியது. ஆனால், அங்குள்ள அதிகாரிகள் இதுகுறித்து கருத்து கூற மறுத்துவிட்டனர். ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகள் முழுவதிலும் உள்ள அமெரிக்காவின் வான் பாதுகாப்பு மற்றும் செயற்கைக்கோள் - தொடர்பு அமைப்புகள் உள்ளிட்ட மற்ற சொத்துகள் மீது இரான் குறிவைத்து பதிலடி தாக்குதலை நடத்திவருகிறது. ஜோர்டானில் உள்ள வான் பாதுகாப்பு தளத்தின் தாட் (Thaad) ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான அமெரிக்க ரேடார் மீது குறிப்பிடத்தக்க அளவில் சேதம் ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்க பாதுகாப்பு துறையின் பட்ஜெட் ஆவணங்களை சிஎஸ்ஐஎஸ் மதிப்பாய்வு செய்ததன்படி, இந்த ரேடார் அமைப்பு சுமார் 485 மில்லியன் டாலர் மதிப்புடையது. நீண்ட தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிப்பதற்கு இத்தகைய வான் பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்பிராந்தியத்தில் அமெரிக்க படைகளால் பயன்படுத்தப்படும் அமெரிக்க தளங்கள் மற்றும் ராணுவ தளங்களின் கட்டடங்கள், வசதிகள் மற்றும் மற்ற உள்கட்டமைப்புகள் மீது இரான் நடத்திய தாக்குதல்களால் மேலும் கூடுதலாக 310 மில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிபிசி வெரிஃபையால் ஆய்வு செய்யப்பட்ட செயற்கைக்கோள் படங்களின்படி, குறைந்தது மூன்று வான் பாதுகாப்பு தளங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இரான் தாக்கியுள்ளது. குறிப்பிட்ட அமெரிக்க சொத்துகளை குறிவைக்கும் இரானின் முயற்சிகளை இந்த தொடர்ச்சியான தாக்குதல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் குறித்து டெஹ்ரானுக்கு ரஷ்யா உளவுத்தகவலை வழங்கியதாக கூறப்படுகிறது. குவைத்தில் உள்ள அலி அல்-சலீம், கத்தாரில் உள்ள அல்-உதெய்த் மற்றும் சௌதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் ஆகிய மூன்று வான் பாதுகாப்பு தளங்கள் மீது இந்த மோதலின் வெவ்வேறு கட்டங்களில் புதிய சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. பிப்ரவரி 28 அன்று இரான் மீது தாக்குதல்களை தொடங்குவதில் இஸ்ரேலுடன் அதிபர் டொனால் டிரம்ப் இணைந்ததிலிருந்து, அமெரிக்கா ராணுவ சேவை உறுப்பினர்கள் 13 பேரையும் இழந்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்பட்டுவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் செய்தி முகமை (Hrana) ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 1,400 குடிமக்கள் உட்பட 3,200 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இரானின் அணுசக்தி திட்டத்தை அழித்தல், அதன் ராணுவ வலிமையை சிதைத்தல் மற்றும் பிராந்தியத்தில் இரான் ஆட்சிக்கு ஆதரவாக உள்ள குழுக்களை முடிவுக்குக் கொண்டு வருதல் எனும் தன்னுடைய இலக்குகளை அடைவதில் அமெரிக்கா தொடர்ந்து பயணிக்கிறது என டிரம்ப் தெரிவித்தார். "நாங்கள் இரானில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுவருகிறோம்," என வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரம்ப் தெரிவித்தார். ஆனால், கிட்டத்தட்ட மூடப்பட்ட ஹோர்மூஸ் நீரிணை, மோதல் எவ்வளவு காலம் நீடிக்கும் மற்றும் மோதலுக்காக டிரம்ப் துருப்புகளை தரையில் களமிறக்குவாரா என்பதில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் உலக பொருளாதாரம் மீது தாக்கம் ஏற்பட்டது. பட மூலாதாரம்,Source: Planet Labs PBC, 2026 படக்குறிப்பு,தாக்குதலுக்கு முன்பு பட மூலாதாரம்,Source: Planet Labs PBC, 2026 படக்குறிப்பு,தாக்குதலுக்கு பின் அமெரிக்காவைச் சேர்ந்த முக்கிய சேவை வழங்குநர்கள் செயற்கைக்கோள் படங்களை வெளியிடுவதற்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளால், அப்படங்களின் பகுப்பாய்வு தடைபட்டுள்ளது. ஆனால், அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ நலன்களுக்கு எதிரான இரானின் பதிலடி நடவடிக்கைகளில் சில குறிப்பிட்ட போக்குகளைக் கண்டறிய இயலும். பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது இரான் தாக்குதல் நடத்தியதிலிருந்தே, ரேடார் மற்றும் செயற்கைக்கோள் அமைப்புகள் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நவீன ராணுவ நடவடிக்கைகளின் மிகவும் முக்கிய மையமாக அவை திகழ்கின்றன. குறிப்பாக, செயற்கைக்கோள் படங்கள் இரு ரேடார் குவிமாடங்கள் மீது ஏற்படுத்தப்பட்ட சேதங்களை காட்டின - அவை மிகவும் முக்கியமான உபகரணங்களை பாதுகாப்பதற்கான அமைப்புகளாக உள்ளன. சேதத்தின் அளவைக் கணிக்க இயலாவிட்டாலும், அந்த அமைப்புகளே சேதமடைந்திருக்க அதிக வாய்ப்புள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளமான அரிஃப்ஜான் முகாம் மற்றும் சௌதி அரேபியாவில் அமெரிக்க விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரின்ஸ் சுல்தான் வான் பாதுகாப்பு தளத்தில் உள்ள ரேடார் தளங்கள் தாக்கப்பட்டன. பிரின்ஸ் சுல்தான் வான் பாதுகாப்பு தளம் குறித்த படங்கள், தாட் வான் பாதுகாப்பு அமைப்பின் ரேடார் பாகம் ஒன்றிலிருந்து புகை எழுவதைக் காட்டுகின்றன. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களில், தாட் அமைப்புகளுக்கு மேலும் அதிகமான சேதம் ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த சேதத்தின் மதிப்பு குறித்து தெளிவாக தெரியவில்லை. இந்த சேதங்களால், தாட் அமைப்புகளை தென் கொரியாவிலிருந்து மத்திய கிழக்குக்கு அமெரிக்கா இடமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது. இரானின் பதிலடித் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள், போருக்காக அமெரிக்காவுக்கு ஏற்பட்ட மொத்தச் செலவுகளில் ஒரு சிறு பகுதியாகும். போரின் முதல் ஆறு நாட்களுக்கு 11.3 பில்லியன் டாலர் செலவானதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்ததாகக் கூறப்படுகிறது. சிஎஸ்ஐஎஸ் (CSIS) தகவலின்படி, முதல் 12 நாட்களுக்கு 16.5 பில்லியன் டாலர் செலவானது. போருக்கு நிதியளிக்க மேலும் 200 பில்லியன் டாலரை அமெரிக்க பாதுகாப்பு துறை கோரியுள்ளது. பாதுகாப்பு துறை செயலாளர் பீட் ஹெக்சேத் அத்தொகை "மாறக்கூடும்" என தெரிவித்தார். "கெட்டவர்களை கொல்வதற்கு பணம் தேவைப்படுகிறது," என ஹெக்சேத் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg45g7jqlro
  22. வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் திடீர் விஜயங்களின் பின்னணி என்ன? - முன்னாள் அமைச்சர் அலி சப்ரி 20 Mar, 2026 | 04:36 PM (நா.தனுஜா) இலங்கைக்கு சடுதியாக வருகைதரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு என்பது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. மாறாக நாம் இப்போது உலக வல்லரசுகளின் போட்டி எனும் ஈர்ப்பு விசைக்குள் இழுக்கப்பட்டு வருகிறோம். இது நாம் குழப்பத்தை அன்றி, தெளிவை வெளிக்காட்டவேண்டிய தருணமாகும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்திருக்கும் பின்னணியில், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர் நாட்டுக்கு வருகை தந்திருக்கிறார். இந்நிலையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் திடீர் விஜயங்கள் குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி செய்திருக்கும் பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கை புவிசார் அரசியல் போட்டிகளுக்கான ஒரு களம் அல்ல. இதனை எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி தெளிவாகக் கூறவேண்டும். எமது நாடு, எமது துறைமுகங்கள் மற்றும் எமது கடற்பரப்பில் எந்தவொரு போர்வையிலும் வெளிநாட்டு இராணுவத்தின் அல்லது உளவுத்துறையின் கூறுகள் இருக்கக்கூடாது. நாட்டின் இறையாண்மை என்பது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதோ, நீர்த்துப்போகச் செய்யக்கூடியதோ அல்லது கட்டம் கட்டமாக சமரசம் செய்துகொள்ளப்படக்கூடியதோ அல்ல. எமது பிரத்யேக பொருளாதார மண்டலம், கடல் வழித்தடங்கள் உள்ளடங்கலாகத் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும். அவற்றை 'ஒத்துழைப்பு' எனும் பெயரில் முன்வைக்கப்படும் நீண்டகால மூலோபாய விளைவுகளைக் கொண்ட உடன்படிக்கைகள் மூலம் விட்டுக்கொடுக்கமுடியாது. நாம் சகல நாடுகளுடனும் இணைந்து செயலாற்றுவோம். ஆனால் எவருடனும் அணிசேர மாட்டோம். இந்து சமுத்திரப்பிராந்தியத்தை ஒரு 'அமைதி நிலவும் மண்டலமாகப்' பேணுவதற்கு இலங்கை தொடர்ந்து முனைப்புடன் குரலெழுப்பி வருகிறது. இது வெறும் சொல்லாடல் அல்ல. மாறாக இது நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தீர்மானத்தையும் வழிநடத்தும் ஒரு கொள்கையாகும். இது பிற நாடுகளின் விவகாரங்களில் சிக்குண்டு தத்தளிப்பதற்கான நேரம் அல்ல. மாறாக இது நாம் உறுதியாக நிற்பதற்கும், எமது இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், துணிச்சலுடன் செயலாற்றுவதற்குமான நேரமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/241487
  23. இரான் எண்ணெய் ஏற்றுமதிக்கான அமெரிக்க தடைகள் நீக்கம் பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தற்போது கடலில் உள்ள இரானிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்க கருவூலத் துறை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதன் மூலம் அதை பெரும்பாலான நாடுகளுக்கு விற்க முடியும். உலக சந்தையில் எண்ணெய் விலைகளைக் குறைவாக வைத்திருப்பதே அமெரிக்காவின் இந்த முடிவின் நோக்கமாகும். அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், "இந்தக் குறுகிய கால அங்கீகாரம், சுமார் 140 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உலகச் சந்தைகளில் நுழைய அனுமதிக்கும்" என்று கூறினார். இந்த விற்பனையிலிருந்து கிடைக்கும் எந்தவொரு நிதிப் பலன்களையும் இரான் "பெறுவது கடினமாக இருக்கும்" என்று பெசண்ட் கூறினார். "இந்த அங்கீகாரம், ஏற்கெனவே வந்துகொண்டிருக்கும் எண்ணெய்க்கு மட்டுமே கடுமையாக வரையறுக்கப்பட்டுள்ளது, மேலும் புதிய கொள்முதல் அல்லது உற்பத்தியை இது அனுமதிக்காது. இதன் விளைவாக, எண்ணெய் விலைகளைக் குறைவாக வைத்திருக்க, இரானின் பீப்பாய்களையே அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவோம்," என்று பெசண்ட் கூறினார். போர் தொடங்கியதிலிருந்தும், மத்திய கிழக்கில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான இரானியத் தாக்குதல்களைத் தொடர்ந்தும், எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 112 டாலரை எட்டியுள்ளது. இரான் எண்ணெய் ஏற்றுமதிக்கான அமெரிக்க தடைகள் நீக்கம்
  24. வடக்கு, கிழக்கில் 2500 மீள்குடியேற்ற வீடுகள் மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்: ரீ.பீ. சரத் 20 Mar, 2026 | 05:36 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் 2500 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, இந்த வீடுகளை எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிர்மாணித்து வீட்டுப்பிரச்சினைக்கு தீர்வுகாண்போம் என வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் ரீ. பீ. சரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரனால், நல்லாட்சி காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக வன்னி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் முழுமையடையமல் இருப்பது தொடர்பில் எழுப்பப்பட்ட இடையீட்டு கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடத்தில் வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் 2500 வீடுகளுக்காக எங்களால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீடொன்றுக்காக இதுவரை காலம் 9 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி இந்த பிரதேச மக்கள் தொடர்பில் விசேட அவதானத்தை செலுத்தி வீடொன்றுக்காக 20 இலட்சம் ரூபாவை வழங்குமாறு கூறியுள்ளார். இதன்படி அந்தத் தொகை வழங்கப்படும். அத்துடன் அங்கு 2500 மீள்குடியேற்ற வீடுகளை நிர்மாணிக்கவும் எதிர்வரும் 3 வருடங்களில் அந்த வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு, கிழக்கில் இந்தப் பிரச்சினைக்கு மூன்று வருடங்களில் தீர்வு காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/241499
  25. அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி! Mar 20, 2026 - 09:37 PM ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு உதவாத நேட்டோ கூட்டாளிகளை 'கோழைகள்' என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். "அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி!" என்றும் டிரம்ப் தனது 'ட்ரூத்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் “அணுசக்தியால் இயங்கும் ஈரானைத் தடுக்கும் போராட்டத்தில் அவர்கள் சேர விரும்பவில்லை. இப்போது, அவர்களுக்கு மிகக் குறைந்த ஆபத்துடன், அந்தப் போராட்டம் இராணுவ ரீதியாக வெல்லப்பட்டுவிட்ட நிலையில், தாங்கள் செலுத்த நிர்பந்திக்கப்படும் அதிக எண்ணெய் விலைகளைப் பற்றிப் புகார் கூறுகிறார்கள். ஆனால், அந்த அதிக எண்ணெய் விலைகளுக்கு ஒரே காரணமாக இருக்கும் ஒரு எளிய இராணுவ நடவடிக்கையான ஹோர்முஸ் நீரிணையை திறக்க உதவ அவர்கள் விரும்பவில்லை. மிகக் குறைந்த ஆபத்துடன், இதைச் செய்வது அவர்களுக்கு மிகவும் எளிது. கோழைகள், நாங்கள் இதை நினைவில் கொள்வோம்!” என நேட்டோ உறுப்பு நாடுகளை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு நடவடிக்கைக்கு முன்பு, டிரம்ப் உதவுமாறு வலியுறுத்திய எந்த நாடுகளும் ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட மறுத்துவிட்டன. இதனால் சமீப நாட்களாக நேட்டோ மீதான தனது விமர்சனங்களை ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார். பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, வளைகுடா பிராந்தியம் முழுவதும் தெஹ்ரான் பதிலடித் தாக்குதல்களை தொடர்ந்துவருகிறது. மேலும் ஹார்முஸ் நீரிணையையும் மூடியுள்ளது. இதனால் உலகெங்கும் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. https://adaderanatamil.lk/news/cmmz3drp1000b356pt06kl7ui
  26. இராக்கில் அமெரிக்க தூதரகம் மீது மீண்டும் தாக்குதல் - புதிய தகவல் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சமீபத்தில், இராக்கின் பாக்தாத்தில் வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன (கோப்புப்படம்). இராக்கில் உள்ள இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் (Islamic Resistance) என்ற ஆயுதக் குழு, கடந்த 24 மணி நேரத்தில் 27 நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அதில் “இராக் மற்றும் பிராந்தியத்தில் உள்ள எதிரி இலக்குகளுக்கு எதிரான" டஜன்கணக்கான ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களும் அடங்கும் என்றும் கூறியுள்ளது. பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே அமெரிக்க தூதரகத்தின் மீது மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எங்களுக்குத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும் வேளையில் இது நிகழ்ந்துள்ளது. அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் தூதரக மற்றும் தளவாட மையத்தின் மீது குறைந்தது மூன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்குத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மூன்றாவது தாக்குதலுக்குப் பிறகு அந்தத் தளத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டதை ஓர் அதிகாரி ஏஎஃப்பி-யிடம் உறுதிப்படுத்தினார். சில நாட்களுக்கு முன்புதான், இராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது பல ஆளில்லா விமான மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன; கடந்த வாரமும் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது. இராக்கில் அமெரிக்க தூதரகம் மீது மீண்டும் தாக்குதல் - புதிய தகவல்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.