24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
என்னதான் இருந்தாலும் உலக வல்லரசெல்லே…இப்படி சட் எண்டு காலில் விழ ஒரு மாரி லஜ்ஜையாத்தான் இருக்கும்😂 ஆனால் மறைமுகமாக மத்திய கிழக்கு நாடுகள் மூலம் உதவி கோரப்பட்டு, உக்ரேனியர்களும் அங்கு அனுப்ப பட்டுள்ளனராம். உக்ரேனும் தாக்குதலுக்கு உள்ளாகும் என ஈரான் மிரட்டி உள்ளதாம். உக்ரேன் பார்க்காத அடியா, மிரட்டலா. செத்த கிளிக்கு சப்போர்ட் பண்ணாமல் இருந்திருந்தால் ஈரானுக்கு எதிராக உக்ரேன் இறங்கி இராது. ஈரானை தக்க நேரத்தில் செத்த கிளி கைவிட்டு விட்டது. தேவையில்லாமல் உக்ரேனை பகைத்ததே மிச்சம்.
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
யான் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகம் என்று எல்லோரையும் இந்தப் போருக்குள்ளே இழுத்து விடுவதே இந்த மனிசனின் நோக்கம். போர் தொடங்கும் போது இந்த நாடுகளிடம் விருப்பம் கேட்டு தொடங்கவில்லை .இப்போது வேணுமெண்டே எல்லாரையும் கொழுவுப்பட கொழுவுறான். கவனம். இந்த நாடுகளில் எங்கட சனங்கள் வாழுதுகள். ஏற்கனவே போர் வடுவைச் சுமந்து.
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
யுவானில் எரிபொருளுக்கு கட்டணம் செலுத்தும் கப்பல்களை ஈரான் கோர்மூஸ் ஊடாக செல்ல அனுமதிக்கும் என கூறியுள்ளதாம். https://www.bernama.com/en/world/news.php?id=2534372 பெட்ரோடொலருக்கு மாற்றீடு.
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
என்ன தம்பர்…. யூகே தேவையில்லை, நாம் வென்று விட்ட போரில் லேட்டா வந்து சேரமுடியாது எண்டு போன கிழமை சொன்னது என்னாச்சு? கொஞ்ச நாளைக்கு முதல் ஏனைய நேட்டோ வீரர்கள் ஆப்கானிஸ்தான், ஈராக்கில் யுத்த முனைக்கு போகவில்லை, பின்னரங்கில் நின்றவர்கள் என நீங்களும், வான்சும் கூவினது மறந்து போச்சோ😂. நீ தான் பெரிய ரவுடியாச்சே தனியாவே ஹோர்மஸ் நீரிணையை திறக்க்கிறது😂.
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
ட்ரம்ப் உக்கிரேனின் உதவி தேவையில்லை என கூறியுள்ளார், அதற்கு செலன்ஸ்கியின் எதிர்வினை. https://www.pravda.com.ua/eng/news/2026/03/13/8025403/ https://www.pravda.com.ua/eng/news/2026/03/13/8025443/
- Today
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இந்த தீர்மானம் எந்த தாக்கமும் செலுத்தாத ஒரு தீர்மானமாக இருக்கும் என கருதுகிறேன்.
-
இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்
இதை நேற்றே சொல்லி இருந்தேன் நாடு - சவூதி அரேபியா. எண்ணிக்கை 4-7 க்கு இடையில் மாறுபடுகிறது.
-
வீதியோரம்.
வீதியோரம் . மலர் . .......... 8. ஓரிரு வாரங்களாகி விட்ட நிலையில் வழமைபோல் கடை வியாபாரம் மிக நன்றாக நடக்கின்றது. இப்போது கடையில் இறால் வடை, மாலுபணிஸ், கட்டைசம்பல்,ரோஸ்பாண், அப்பங்கள் போன்ற சில சிற்றூண்டிகள் புதிதாக கண்னாடிப் பெட்டிக்குள் தென்படுகின்றன. அவையெல்லாம் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா வரும் யாத்திரீகர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றன. அது ஒரு மாலை நேரம் றோயல் என்பீல்ட் மோட்டார் சைக்கிள் ஒன்றில் நடுத்தர வயதிருக்கும் இருவர் வந்திறங்குகின்றனர்.அவர்கள் அன்றுதான் அந்தக் கடைக்கு முதன்முதலாக வருபவர்கள் போல் இருக்கிறது. அவர்களைக் கண்டதும் மது, போதைவஸ்து விற்பவனும் கூடவே அந்தத் தொழில் செய்யும் பெண்களும் அவர்களருகில் நடமாடுகின்றனர். இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட அவ் இருவரும் இவர்களுடன் சேர்ந்து காட்டுக்குள் போகின்றனர்.சிறிது நேரத்தில் அவர்களில் ஒருவன் வந்து கடையில் இறைச்சிப் பொரியல், கணவாய் மற்றும் றால் பிரட்டல் போன்ற சைட்டிஸ் ஆயிட்டங்களாக வாங்கிக் கொண்டு போகிறான்.அவன் சென்ற சிறிது நேரத்தில் மற்றவன் வந்து தேவையான சாப்பாடு,சிகரெட், சுருட்டு என்று வாங்கிக் கொண்டு போகிறான். காட்டுக்குள் ஒரே பைலாப்பாடல்களும், குத்துப்பாடல்களுமாய் கொண்டாட்டம் நடக்கின்றது. இரவாக ஆக எங்கும் சத்தங்கள் அடங்கி விடுகின்றன. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்தப் பெண்களும், சாராயம் விற்பவனும் கடைக்கு வந்து வாங்கில் அமருகின்றனர். பெண்கள் இருவரும் மிகவும் தளர்ந்து போய் இருந்ததால் மேசையில் முகம் குப்புறப் படுத்து இருக்கின்றனர். அவர்களது ஜாக்கட்டுக்குள் பெருமளவு பணநோட்டுகள் செருகப் பட்டிருக்கின்றன. அவர்களில் ஒருத்தி சே….என்ன மனுசங்களடி அவங்கள்,பிசாசுகள் என்று சொல்ல மற்றவள் விடடி ஒரு மாதம் உழைக்கிற பணத்தை ஒரு நாளில் உருவியாச்சுது இப்ப இருக்கிற நிலைமையில அவங்கள் இரண்டு நாளைக்கு எழும்ப மாட்டாங்கள் போல் இருக்கின்றது, நிறைவெறில இருக்கினம் என்று சொல்கிறாள். அவள் மணிமேகலையைப் பார்த்து அக்கா தலை இடிக்குது இஞ்சி துருவிப் போட்டு நல்ல திக்காக டீ போட்டுத் தாக்கா என்று சொல்கிறாள். மற்றவர்களும் தங்களுக்கும் சேர்த்து சொல்கின்றார்கள். மணிமேகலையும் இரண்டு தேசிக்காயைப் பிழிந்து ஜுஸ் போட்டு பெரிய கிளாசில் ஊற்றி அதை பெண்களிடம் குடுத்து இதை இப்ப குடியுங்கோ என்று சொல்லிவிட்டு அவனுக்கு ஸ்ட்ராங்கா இஞ்சி டீ போட்டு எடுத்து வந்து பக்குவமாய் தருகிறாள். அவனும் நன்றி சொல்லிவிட்டு வாங்கிக் கொள்கிறான். அவன் சாராயம், போதைவஸ்து விற்பவனானாலும் அவற்றை விற்பதுடன் சரி. ஆனால் அவன் குடிப்பதுமில்லை “தம்” அடிப்பதுமில்லை. அவன் உடுத்தும் கந்தையில் அழுக்கு இருக்கும், அவன் சிந்தையில் துளியும் அழுக்கு இல்லை. ஏதோ அவன் பிழைப்பு இப்படியாகி விட்டது. என்பது மணிமேகலைக்குத் தெரிந்திருந்தது. அங்கே ஒரு மினிபஸ் வந்து கடைக்கு முன்னால் நிக்கிறது.அதில் இருந்து இறங்கியவர்கள் கடைக்குள் போகிறார்கள். சிலர் நேராக பின்னால் போகிறார்கள். அப்படிப் பின்னால் போனவர்கள் சில வினாடிகளில் அலறியடித்துக் கொண்டு ஓடி வருகிறார்கள். என்னவென்று பார்க்க விநோதனும் வேறு சிலரும் டார்ச் லைட்டுடன் போகிறார்கள். சுஜிதாவும் ஒரு பெட்றோல்மாக்சை எடுத்துக் கொண்டு பின்னால் போகிறாள். போனவர்கள் எல்லோரும் அங்கே அந்தக் கோரமான காட்சியைப் பார்க்கிறார்கள். அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் ஒருத்தனை குளத்தருகே முதலைகள் கடித்து இழுக்கின்றன. அவனோ ஈனஸ்வரத்தில் முனகுகிறான். நிறைவெறியில் இருந்தவனால் கத்தக்கூட முடியவில்லை. அந்நேரம் அவன் வெற்றுடலுடன் ஜட்டியோடு இருந்ததினால் முதலைகளும் அவனது முகம், தொடை, கை கால் என்று பிய்த்து புடுங்குகின்றன. வெளிச்சத்தையும் ஆட்களின் வருகையையும் சத்தத்தையும் தொடர்ந்து அவை வேகமாக குளத்தினுள் குதித்து மூழ்கிப் போய்விடுகின்றன. அவனது கை ஒன்று முழுதாக இல்லை, கால் எலும்புகளுடன் முறிந்திருக்கிறது,முகமெல்லாம் சிதைந்து கண் ஒன்றும் கிழிந்து போய் இருக்கு, ஆனாலும் உடலில் உயிர் இன்னமும் இருக்கு.இன்னும் கொஞ்சம் தாமதித்து இருந்தால் அவனது உடல் முழுதாக குளத்தினுள் இழுத்து செல்லப் பட்டிருக்கும். பின்பு அங்கே போலீசும் அம்புலன்சும் வந்து அவனையும் சிதறிக் கிடந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டு போக , போலீசார் மட்டும் அங்கிருந்து சில விசாரணைகளை செய்துவிட்டு இனிமேல் இங்கு இதுபோன்ற குடி, விபசாரம் மற்றும் தப்பான காரியங்கள் எதுவும் நடக்கக் கூடாது. ஏற்கனவே இங்கு தப்பான காரியங்கள் நடைபெறுவதாக புகார்கள் எங்களுக்கு கிடைத்திருக்கு, கவனம் என்று எச்சரித்து விட்டுப் போகிறார்கள். மற்றவன் இன்னும் வெறி முறியாமல் நினைவின்றி லொறிக்குள் கிடக்கிறான். வெளியே அவர்கள் ஓட்டிவந்த றோயல் என்பீல்ட் மோட்டார் சைக்கிள் அனாதரவாய் நிக்குது...... அடுத்தநாள் அதிகாலை அந்த இடத்தை விநோதனும் மணிமேகலையும் போய் பார்க்கிறார்கள். அப்போது அங்கு நின்ற சில முயல்களும் பறவைகளும் பாய்ந்து ஓடுகின்றன. அங்கு போத்தல்கள் தட்டுகள் மிச்சமான உணவுகள் எல்லாம் சிதறிக் கிடக்கின்றன. இரவு சில விலங்குகள்,பறவைகள் எல்லாம் வந்து சாப்பிட்ட அறிகுறிகளும் அடையாளங்களும் தென்படுகுது. விநோதனும் அவைகளைக் கைகளால் தொடாமல் ஒரு தடியால் தள்ளித் தள்ளி ஒதுக்கிக் கொண்டு வருகிறான். மணிமேகலையும் ஆங்காங்கே தென்பட்ட ரூபாய் நோட்டுகள் சில்லறை காசுகள் என்று எடுத்துக் கொண்டு வரும்போது பெல்ட்டுடன் தோலுறை ஒன்றைக் கண்டு அதை எடுத்துப் பார்க்க அதனுள் ஒரு கைத்துப்பாக்கி ஒன்று இருக்கிறது. கூடவே சில தோட்டாக்களும் ஒரு குழாயும் இருக்கின்றன. அதை அவள் அவனிடம் தருகிறாள். அதை வாங்கிய விநோதன்....ம் . ...இது ஒரு வெளிநாட்டுத் தயாரிப்பு என்று சொல்லி மிக லாவகமாய் அதைப் பிரித்து தோட்டாக்களை அதில் போட்டு அந்தக் குழாயை அதன் முனையில் பொருத்தி விட்டு சுற்றுமுற்றும் பார்க்க தூரத்தில் பற்றைக்குள் இருந்து முயல் ஒன்று எட்டிப் பார்க்கிறது. அவன் அனாசயமாய் அந்தக் கைத்துப்பாக்கியால் அதை நோக்கி சுடுகிறான்…..சிறு சத்தமும் வெளியே வரவில்லை ஆனால் அந்த முயல் மட்டும் வெளியே துள்ளி விழுகின்றது. மேகலை ஓடிப்போய் அதை பார்க்க சரியாக அதன் நெற்றியில் பொட்டு வைத்ததுபோல் சூடு பட்டிருந்தது.அதன் கண்கள் திறந்தபடி இருக்க விநோதன் அருகில் வந்து அந்தக் கண்களை கைகளால் மூடி விடுகிறான். அவனது செய்கைகளை வியப்பு விலகாமல் அவள் பார்க்கிறாள். அவன் எழுந்து ஒன்றும் பேசாமல் ரிவால்வருடன் வீடு நோக்கிப் போகிறான். மேகலையும் அந்த முயலைத் தூக்கிக் கொண்டு பின்னால் போகிறாள்...........! மலர் ........ 🪻 8.
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
ஐபிஎல்: கொல்கத்தா அணியில் முசரபானி கொல்கத்தா: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனையொட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஜிம்பாப்வே அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான பிளெசிங் முசரபானியை ஒப்பந்தம் செய்துள்ளது. ஐபிஎல் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், முசரபானி பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒப்பந்தத்தைக் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் முடிவடைந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் முசரபானி சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் தொடரில் அவர், 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட முசரபானி, 2017-ம் ஆண்டு அறிமுகமானது முதல் ஜிம்பாப்வே அணிக்காக அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். 89 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள முசரபானி, 106 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஓவருக்கு சராசரியாக 7.24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துளளார். முசரபானி தனது வேகப்பந்து வீச்சுத் திறமையை உலகம் முழுவதும் உள்ள டி 20 தொடர்களான சிபிஎல், ஐஎல்டி20, பிஎஸ்எல், இங்கிலாந்தின் விட்டாலிட்டி பிளாஸ்ட் ஆகியவற்றின் மூலம் நிரூபித்துள்ளார். முசரபானி ஐபிஎல் அணியுடன் இணைவது இது 2-வது முறையாகும். கடந்த 2025-ம் ஆண்டு சீசனின் இறுதி கட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தற்காலிக மாற்று வீரராக இடம் பெற்றிருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக முசரபானி வரும் 17-ம் தேதி கொல்கத்தா அணியுடன் இணைய உள்ளார். https://www.hindutamil.in/news/sports/musharrafani-in-kolkata-knight-riders
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
“தெ.ஆ. அணியின் முட்டாள் தனம்... இந்தியாவை வெளியேற்றி இருக்கலாம்” - மைக்கேல் வான் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 3வது முறையாகக் கோப்பையை வென்றதையடுத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் மண்டை காய்ந்து போய் தென் ஆப்பிரிக்கா அணிதான் இந்த உலகக்கோப்பையிலேயே முட்டாள் அணி, அவர்கள் நினைத்திருந்தால் இந்தியாவை வெளியேற்றியிருக்கலாம் என்று உளறிக்கொட்டியுள்ளார். இந்தியா 3-வது முறையாகக் கோப்பையைத் தட்டிச்செல்ல தென் ஆப்பிரிக்கா செய்த மடத்தனமே காரணம் என்று சாடியுள்ளார் மைக்கேல் வான். நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா மே.இ.தீவுகளை வெல்லச் செய்திருந்தால் இந்திய அணி வெளியேற்றப்பட்டிருக்கும். ஆனால் முட்டாள்தனமாக தென் ஆப்பிரிக்கா அந்தப் போட்டியில் வென்றதால் இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்து இங்கிலாந்தை பந்தாடி பிறகு இறுதியில் நியூசிலாந்தையும் பந்தாடி மகுடம் சூடியது. சூப்பர் 8 சுற்றில் இந்தியாவை 76 ரன்களில் அதிர்ச்சிகரமாக மண்ணைக்கவ்வச் செய்த தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு அரையிறுதியைக் கடினப்படுத்தியது. இதனையடுத்து ஜிம்பாப்வேயை வீழ்த்தினாலும் மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டி காலிறுதி போல் நாக் அவுட் ஆட்டமாக வாழ்வா சாவா ஆட்டமாக மாறி அதில் சஞ்சு சாம்சனின் அதியற்புத இன்னிங்சினால் வெற்றி கண்டது இந்தியா. இந்நிலையில் மைக்கேல் வான், “இந்த உலகக்கோப்பையில் முட்டாள் அணி எது என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். அது தென் ஆப்பிரிக்காதான். சூப்பர் 8 சுற்றில் மே.இ.தீவுகளை தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற விட்டிருந்தால் இந்திய அணி வெளியே போயிருக்கும். நான் கூறவருவது இதுதான் இந்தியாவை அப்புறப்படுத்தியிருந்தால் தென் ஆப்பிரிக்கா கோப்பையை வெல்ல வாய்ப்பிருந்திருக்கும். மே.இ.தீவுகளை அந்தப் போட்டியில் வீழ்த்தியதன் மூலம் தேரை இழுத்து தெருவில் விட்டு விட்டனர். இந்தியா அதன் பிறகு ஜிம்பாப்வேயையும் காலிறுதி போன்ற போட்டியில் மே.இ.தீவுகளையும் வீழ்த்தியது. பிறகு இங்கிலாந்தை வீழ்த்தினர். நான் இப்படிச் சொல்வதெல்லாம் போன்று ஒரு போதும் நடக்காது, நடந்ததும் இல்லை, நடக்கப்போவதும் இல்லை. அதாவது நீங்கள் உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் தொடரின் சிறந்த அணியை முன்னதாகவே வெளியேற்ற வேண்டும் என்பதையே.” என்றார். மைக்கேல் வான் பொதுவாகவே இந்தியா வெல்வதை எதிர்மறையாகவே பார்ப்பார். சச்சின் டெண்டுல்கர் சாதனையை ஜோ ரூட் கடக்க வேண்டும், சச்சின் டெண்டுல்கரிடம் அந்த சாதனை இருப்பது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று சர்ச்சை மிகுந்த கருத்துக்கள் இவருக்கு சர்வ சாதாரணம். ஆனால் இப்படியெல்லாம் உளறிக்கொட்டி இந்திய நெட்டிசன்களிடம் அவர் வாங்கிக் கட்டிக்கொண்டுதான் இருக்கிறார். இருந்தாலும் நாக்கை அடக்க மறுக்கிறார் வான். கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிரான இத்தகைய கருத்தை, அதாவது வேண்டுமென்றே தோற்க வேண்டும் என்ற கருத்தை ஒரு முன்னாள் வீரர், அதுவும் கிரிக்கெட்டில் பெரிய பிஸ்தா (ஆனால் பொட்டலம்) என்று சொல்லிக் கொள்ளும் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் இப்படிக் கூறியிருப்பது கிரிக்கெட்டின் ஓர்மைக்கு ஏற்பட்டுள்ள இழுக்காகும். “தெ.ஆ. அணியின் முட்டாள் தனம்... இந்தியாவை வெளியேற்றி இருக்கலாம்” - மைக்கேல் வான்
-
109 ஆவது பொன் அணிகளின் சமர்
109-வது 'பொன் அணிகளின் போர்': சமநிலையில் நிறைவு! Mar 14, 2026 - 09:19 PM 'பொன் அணிகளின் போர்' என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான 109-வது பெருஞ்சமர் சமநிலையில் நிறைவடைந்தது. இத்துடுப்பாட்டப் போட்டி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் கடந்த 12-ஆம் திகதி ஆரம்பமானது. போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பத்திரிசியார் கல்லூரி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய புனித பத்திரிசியார் கல்லூரி, முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த புனித பத்திரிசியார் கல்லூரி, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 49 ஓட்டங்கள் பின்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ்ப்பாணக் கல்லூரி, இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. மூன்றாம் நாள் ஆட்டமான இன்று (14), தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த யாழ்ப்பாணக் கல்லூரி 9 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. தொடர்ந்து 198 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த புனித பத்திரிசியார் கல்லூரி, ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதனால் போட்டி சமநிலையில் (Draw) முடிவடைந்தது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணியின் எஸ்.கே. ஹமிஸ் ஹர்மிஷன் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். இதுவரை நடைபெற்ற 109 போட்டிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி 35 தடவைகளும், யாழ்ப்பாணக் கல்லூரி 17 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. ஏனைய 32 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmmqhx1ew000p356pyuajctvv
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை Mar 14, 2026 - 08:46 PM ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக தமது கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். தனது 'Truth Social' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். பல நாடுகள் தமது வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பிற்காகப் போர்க்கப்பல்களை அனுப்பும் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் இராணுவ பலத்தை அமெரிக்கா 100 சதவீதம் அழித்துள்ள போதிலும், அவர்கள் இன்னும் ட்ரோன்கள், கண்ணிவெடிகள் மற்றும் குறுகிய தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாகவே, ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmqgvr2d000o356p67w8zxd2 வல்லரசுக்கு வந்த சோதனை!!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
opsdSreton5r3107m1af49à:m117566fa6L3e3 37m29tu5 7 8m07 21i1s · எத்தனை பேருங்க அடிச்சாங்க.... முதல்ல அபிஷேக் சர்மா அடிச்சாம்மா அப்புறம் சஞ்சு சாம்சன் அடிச்சாம்மா அப்புறம் இஷாந்த் கிஷன் அடிச்சாம்மா சரி இவனுங்களை அவுட்டாகிட்டால் போதும்டான்னு பாத்தால் ஷிவம் துபேன்னு ஒருத்தன் வந்தாம்மா அவன் பேட்டுல அடிச்சானா இல்லை ராக்கெட்ல அடிச்சானுன்னு தெரியலை அந்த அடி அடிக்கிறான் சரி அடிச்சிட்டு போங்கடான்னு விட்டுட்டு பேட்டிங் செஞ்சால் பும்ரான்னு ஒருத்தன் பந்து போட வந்தாம்மா அவன் பந்து போடுறானா இல்லை அணுகுண்டுகளை போடுறானான்னு தெர்லம்மா யாரையும் விட்டு வைக்கவே இல்லை அவன் பாட்டுக்கு போட்டுட்டே இருக்கான் அவுட்டாக்கிட்டு சாதாரணமா சிரிச்சிட்டு போயிட்டே இருக்கான்மா அப்புறம் அந்த சைலண்ட் வில்லன் அக்ஷர் பட்டேல்ன்னு ஒருத்தன் ஓவருக்கு ஒரு விக்கெட் எடுத்து எங்க சோலிய முடிச்சிட்டான்மா அப்புறம் அந்த பீல்டிங் நின்னானே திலக் வர்மான்னு ஒருத்தன் அவன் க்ரௌண்ட்ல விழுந்து பந்தை புடிக்கிர மாதிரியே புடிக்கலைம்மா எங்க பந்து போனாலும் நீச்சல் குளத்தில் குதிக்கிர மாதிரி நீண்டு நீண்டு உழுந்து உழுந்து பந்தை புடிச்சிட்டே இருக்கான்மா அந்த இஷாந்த் கிஷன் பயபுள்ள அவன் எங்க நின்னாலும் அவன்கிட்டயே பந்து போகுதும்மா கோழிகுஞ்சை கழுகு தூக்குர மாதிரி கேட்ச் புடிச்சிட்டே இருக்கான்மா நாக்அவுட்ல 24 வருசமா அவன்களை தோக்கடிச்சதுக்கு தொடர்ச்சியா இரண்டு உலக கோப்பை பைனல்ல வச்சி செஞ்சு விட்டுட்டானுங்கம்மா.... Share from fb......!
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
பாஜக கூட்டணிக்கு தயாராகிறதா தவெக? - மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திருப்புமுனையை ஏற்படுத்தும் கட்சியாகப் பார்க்கப்படுகிறது. தனது முதல் மாநாட்டிலேயே, "கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு" எனும் அதிரடி ஆஃபரை வெளியிட்டார் விஜய். இது திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக ஒரு மெகா கூட்டணிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, காங்கிரஸ் தங்களை நோக்கி வரும் என விஜய் நம்பினார். ஆனால், யதார்த்தம் வேறாக அமைந்தது. காங்கிரஸ் மீண்டும் திமுக-வுடனேயே பயணிக்க முடிவு செய்தது, விஜய்யின் ஆரம்பகட்ட வியூகத்துக்குப் பின்னடைவாக அமைந்தது. அதிகாரப் பகிர்வு எனும் துருப்புச்சீட்டு கையில் இருந்தும், ஒரு தேர்தலைக்கூட சந்திக்காத தவெக-வின் வாக்கு வங்கி மற்றும் எதிர்காலம் குறித்த ஐயப்பாட்டால், மற்ற கட்சிகள் தவெக பக்கம் தலைவைக்கத் தயங்கின. இது ஒருபுறமிருக்க, சிறிய மற்றும் செல்வாக்கான கட்சிகளைத் தன்பக்கம் இழுக்க தவெக போட்ட திட்டங்களை, பாஜக மேலிடம் மிக சாதுர்யமாக முறியடித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது தவெக தலைவரைச் சுற்றி அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பலவாறாக நெருக்கடிகள் சூழ்ந்துள்ளன. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை, 'ஜனநாயகன்' பட வெளியீட்டுச் சிக்கல்கள் மற்றும் குடும்ப விவகாரங்கள் என விஜய் கடுமையான அழுத்தத்தில் இருக்கிறார். அதேசமயம் தவெக தனித்துப் போட்டியிட்டால் அது வாக்கு பிரிப்புக்கு வழிவகுத்து, இறுதியில் திமுக கூட்டணிக்கே சாதகமாக முடியும் என்பதை பாஜக-வும் நன்கு உணர்ந்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு, தவெக-வை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. ஏற்கெனவே திரைமறைவில் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது இறுதி முயற்சியாக பாஜக மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் தான், 'பாஜக-வுடன் கூட்டணி அமைக்கலாமா?' என்ற யோசனை விஜய் தரப்புக்கும் வந்திருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. இது குறித்து விவாதிக்க, நேற்று தவெக மாவட்டச் செயலாளர்களுடன் ஆன்லைன் வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார் பொதுச்செயலாளர் ஆனந்த். அதில், மாநாட்டில் அறிவித்த ‘கொள்கை' மாறாமல் தனித்தே நின்று பலத்தைக் காட்டுவதா அல்லது, தற்போதைய நெருக்கடிகளைச் சமாளிக்க கூட்டணியில் கைகோப்பதா? ஒரு வேளை, பாஜக-வுடன் கூட்டணி அமைத்தால், ஏற்கெனவே அவர்களை ‘கொள்கை எதிரி' என்று அறிவித்ததற்குப் பொதுமக்களிடம் என்ன பதில் சொல்வது என்பது குறித்தெல்லாம் பலவாறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர்களில் சிலர், "புதிதாகக் களம் காண்பதால் கட்சிக்கும், தலைவருக்கும் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்க்க இப்போதைக்கு பாஜக-வுடன் கூட்டணி அமைப்பதே பாதுகாப்பு" என வெளிப்படையாகக் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், விஜய் எந்த முடிவெடுத்தாலும் கட்டுப்படுவோம் என மாவட்டச் செயலாளர்கள் உறுதி அளித்ததாகச் சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இன்று (மார்ச் 14) விஜய் டெல்லி செல்கிறார். நாளை அவரிடம் விசாரணை நடைபெற உள்ள நிலையில், ஒருநாள் முன்னதாகவே அவர் டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இன்று இரவு டெல்லி ஹோட்டலில் தங்கும் விஜய், பாஜக தேசியத் தலைவர்களை ரகசியமாகச் சந்தித்துப் பேசக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அப்படியான சந்திப்புகள் நடந்தால் கிட்டத்தட்ட பாஜக அணியில் தவெக இணைவது உறுதியாகி விடும். https://www.hindutamil.in/news/tamilnadu/is-vijay-joining-nda
-
இந்திய அனுமதியுடன் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்த ஈரான் போர்க்கப்பல்: பணியாளர்களுக்கு தங்குமிடம்
இந்தியாவில் இருந்த ஈரானிய கடற்படையினர் நாடு திரும்பினர்! Mar 14, 2026 - 07:59 PM இந்தியாவின் கொச்சின் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த ஈரானுக்குச் சொந்தமான ‘ஐரிஸ் லவான்’ (IRIS Lavan) கப்பலில் இருந்த மாலுமிகளில் ஒரு தொகுதியினர் நேற்று (13) ஈரான் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 183 பணியாளர்களைக் கொண்ட அந்தக் கப்பலில் இருந்த ஒரு தொகுதியினரை விசேட விமானம் மூலம் ஆர்மீனியாவிற்கு அழைத்துச் செல்ல ஈரான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த மாலுமிகளும், இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் உடல்களும் ஆர்மீனியாவிலிருந்து தரைவழியாக ஈரானுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்தியாவில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியில் கலந்துகொள்ள வந்த மற்றொரு ஈரானியப் போர்க்கப்பலில் இருந்த 204 மாலுமிகள் தற்போது இலங்கையின் வசம் உள்ளதுடன், அவர்கள் வெலிசர கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஈரானிய தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் இடம்பெற்ற கடற்படைப் பயிற்சியை முடித்துக்கொண்டு மீண்டும் ஈரான் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ‘ஐரிஸ் டெனா’ (IRIS Dena) கப்பல், இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் வைத்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டார்பிடோ (Torpedo) தாக்குதலுக்கு உள்ளானது. இதன்போது கப்பலில் இருந்த 32 மாலுமிகள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர். அக்கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளின் சடலங்களும் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையின் நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சடலங்கள் நேற்று (13) விசேட விமானம் மூலம் ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டன. சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 32 மாலுமிகளில், குணமடைந்த 28 பேர் தற்போது கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். மேலும் நான்கு ஈரானிய மாலுமிகள் தொடர்ந்தும் அந்த வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmqe4h5c000m356pocae3hwc
-
சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
இந்த செயலை யார் செய்தார் என்ற கேள்விக் குறி ஒரு புறமிருக்க..இவர் தீ பற்ற வைக்கும் மட்டும் ஏன் மற்றப் பயணிகள் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்பதும் ஒரு வித கேள்விக் குறியாகவே இருக்கிறது..குறிபிட்ட நபரின் நடவடிக்கை சரியில்லை என்று நடத்துணரிடம் சொல்லி இருக்கலாம்..அப்படி யாராவது செய்திருப்பின் இத்தனை இழப்புக்கள் ஏற்பட்டு இருக்காது.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
- இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு
ஜப்பானிய பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி அலுவலகத்திற்கு விஜயம் Mar 14, 2026 - 05:57 PM இலங்கையின் முன்னணி சுற்றுலா நிறுவனமான Connaissance De Ceylan நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள 11 பேரடங்கிய ஜப்பானிய பிரதிநிதிகள் குழுவினர் இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட வருகை தந்தனர். இலங்கையின் வரலாறு, பௌத்த மதத்தின் வருகை மற்றும் அதன் பரவல், பாரம்பரிய கலாசாரம், ஆயுர்வேதம், பாரம்பரிய சடங்குகள், உணவு முறைகள் மற்றும் பொருளாதாரப் பயிர்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிந்துகொள்வதே இந்தத் தூதுக்குழுவின் நோக்கமாகும். இதன் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய தலையீடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடிய அவர்கள், தாம் பெற்றுக்கொண்ட அறிவை ஜப்பானிய மக்களுடன் பகிர்ந்து கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். அத்துடன், ஜப்பானில் இலங்கையை ஒரு முன்னணி சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல், கொழும்பு, அனுராதபுரம், சிகிரியா, மஹியங்கனை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு இலங்கையின் கலாசார மரபுகளை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்லுதல் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு மேலதிகமாக, சப்புகஸ்கந்த புராதன விகாரை, மிஹிந்தலை, அனுராதபுரம், சிகிரியா, தம்பானை, மல்வத்து மகா விகாரை மற்றும் கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களையும் பார்வையிட்டனர். https://adaderanatamil.lk/news/cmmqae4il000j356pkl2g81d0- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அண்ணை, தனித்திரி திறந்தால் கண்ணில படுமே என கும்பல்ல கோவிந்தாவா போட்டுவிட்டால் கண்ணில எண்ணெய் விட்டபடி தான் நீங்கள்!- ஈரானில் 3.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு
ஈரானில் 3.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு Mar 14, 2026 - 04:28 PM அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் மோதல்கள் காரணமாக, ஈரானில் தற்போது 3.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையகம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தலைநகர் தஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தொடர்ந்து நிலவும் மோதல் சூழல் காரணமாக, இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். அத்துடன், மோதல்கள் ஆரம்பமானது முதல் இதுவரையிலான காலப்பகுதியில் ஈரானைச் சேர்ந்த 25,000 இற்கும் அதிகமானோர் ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmq7p0yc000g356p3k8rhicf- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
சைமனு… 1988 இல் இருந்து ஜெயலலிதாவோடு ஓருயிர், ஈருடலாய் வாழ்ந்து கொள்ளை மேல், கொள்ளை அடித்த சசி மாற்றம் வரவேண்டும் என கட்சி ஆரம்பிக்கிறார்…அதை நீங்க வரவேற்கிறீங்க😂 இதில 60 வருட மோசமான (அதில் பாதி ஜெ-சசி ஆட்சி) ஆட்சிக்கு மக்களும் பொறுப்பு என மக்கள் மீதே குற்றம் வேற சொல்கிறார். இதனால்தான் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் மூக்கிலேயே குத்தி டெபாசிட்டை காலி பண்ணுகிறார்கள்😂.- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
தலைவர் பெயரை சொல்லி இயக்கம் நடத்தி கொண்டு, தலைவரின் ஆளுயர படத்தின் முன் நின்று, புலிகள் அழித்தொழிக்க படவேண்டிய தீய சக்தி என இலங்கை அரசு கூட நிறைவேற்றாத தீர்மானத்தை தமிழக சட்ட சபையில் நிறைவேற்றிய ஜெயை ஈழத்தாய், அவருக்கு வாக்கு போடுங்கள், போட்டால் ஈழம் மலரும் என சொன்னார் சீமான். எடப்பாடியை சந்திக்க தலைவர் படம் போட்ட புத்தகத்தோடு போனார் காளி. முதலாவதை ஊக்குவித்த உங்களுக்கு, இரெண்டாவது உறுத்துவதாக சொல்லுவது வினோதமானது😂. தனக்கு பதவி ஏற்கும் போது தலைவர் பெயரால் என சொல்லி பதவி ஏற்க ஆசை என உருகியவர் காளி. அது மட்டுமா, நீ அதிமுக க்குதான் வாக்கு போடுவேன்னா செத்துரு என்று கூட்டத்தில் பேசியவர் 😂. ஒரு எம் எல் ஏ சீட், துணை கொ ப சே க்கு இன்று எல்லாவற்றையும் கூவி கூவி விற்று விட்டார்😂. சீமான் தன்னை போலவே பச்ச்சோந்திகளையும், முகவர்களையும் உருவாக்கி உள்ளார் என்பதற்கு காளி நல்ல உதாரணம். இப்போதும் தலைவருக்காக கிடைக்கும் கொஞ்ச வாக்கையும் இழக்க விரும்பாத சுயநலமே அவர் புத்தகத்தை தூக்கி போனது:- அமெரிக்கா – தென்கொரியா ‘ப்ரீ டம் ஷீல்ட்’ பயிற்சிக்கு பதிலடி: வடகொரியா – ஜப்பான் கடலுக்கு வெளியே ஏவுகணை சோதனை!
அமெரிக்கா – தென்கொரியா ‘ப்ரீ டம் ஷீல்ட்’ பயிற்சிக்கு பதிலடி: வடகொரியா – ஜப்பான் கடலுக்கு வெளியே ஏவுகணை சோதனை! Published By: Digital Desk 1 14 Mar, 2026 | 01:39 PM அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் 11 நாட்கள் நடைபெறும் ‘ப்ரீ டம் ஷீல்ட்’ என்ற கூட்டு இராணுவ பயிற்சியை தொடங்கிய நிலையில், வடகொரியா இதனை தமது நாட்டிற்கு எதிரான படையெடுப்பு ஒத்திகை எனக் கண்டித்து, அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் தனது ஏவுகணை சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளை இலக்காகக் கொண்டு, ‘சோ ஹியோன்’ எனும் அதிநவீன போர்க்கப்பலில் இருந்து கடந்த 11 ஆம் திகதி குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டு, கடலில் உள்ள இலக்குகளை துல்லியமாகச் சேதப்படுத்தியது. இந்த சோதனையை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது 13 வயது மகள் கிம் ஜு ஏ உடன் நேரில் பார்வையிட்டார். சோதனைக்குப் பிறகு கிம் ஜாங் உன் கூறுகையில், "நமது நாடு எப்போதுமே வலிமையான மற்றும் நம்பகமான அணுஆயுதத் தற்காப்புத் திறனைப் பெற்றிருக்க வேண்டும். எதிரிகளின் எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது கடற்படை தயாராக இருப்பதை இந்த சோதனை நிரூபித்துள்ளது" என்று எச்சரித்தார். இதையடுத்து, அமெரிக்கா – தென்கொரியா நடத்தும் வருடாந்திர இராணுவ பயிற்சியை கண்டித்து, ஜப்பான் கடற்பகுதியை நோக்கி சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வடகொரியாவில் இன்று சோதனை செய்யப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்ததன்படி, ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே உள்ள கடலில் விழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதனை மதிப்பிடவும், ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும், ஜப்பான் பிரதமரின் அவசர முகாமைத்துவ மையம் சிறப்பு குழுவை அமைத்துள்ளது. வடகொரியாவின் இந்த சோதனையால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழ தொடங்கியுள்ளன, மற்றும் வடகொரிய-தென் கொரியா-அமெரிக்கா இடையேயான பதற்ற நிலை அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம், உலக அரங்கில் கொரியாவின் பாதுகாப்பு நிலை மற்றும் வடகொரியா – தென் கொரியா – அமெரிக்கா இடையேயான இராணுவ உறவுகள் மீண்டும் பரபரப்பாக மாறியுள்ளதை காட்டுகிறது. https://www.virakesari.lk/article/240942- ஒன்றுக்கும் மேற்பட்ட பிரபஞ்சங்கள் உள்ளனவா?
ஒன்றுக்கும் மேற்பட்ட பிரபஞ்சங்கள் உள்ளனவா? பட மூலாதாரம்,Victor de Schwanberg/Science Photo Library via Getty Images கட்டுரை தகவல் எலன் சாங் பிபிசி உலக சேவை 48 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் எங்காவது ஒரு இணையான பிரபஞ்சத்தில் உங்களை ஒரு ராக்ஸ்டார் அல்லது விண்வெளி வீரராக நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா? ஒரு "மல்டிவர்ஸில்" பல பிரபஞ்சங்கள் உள்ளன என்ற யோசனை பகற்கனவுகளையும் அறிவியல் புனைகதைகளையும் ஒருசேரத் தூண்டியுள்ளது - ஆனால் இது சில விஞ்ஞானிகளால் தீவிரமாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் இது பெரும்பாலும் ஹாலிவுட்டில் சித்தரிக்கப்படுவதைப் போல் இல்லாமல் இருக்கலாம். அது உண்மையில் என்னவாக இருக்கும் என்பதில் யாருக்கும் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. துல்லியமாக வடிவமைக்கப்பட்ட பிரபஞ்சம் நாம் நிச்சயமாக இருக்கும் இந்த பிரபஞ்சம் நமக்காக மிகச் சரியாக வடிவமைக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. "உதாரணத்திற்கு, ஈர்ப்பு விசை பலவீனமாக இருந்திருந்தால், நமது நட்சத்திரங்களும் கிரகங்களும் உருவாகியிருக்காது," என்று அமெரிக்காவின் செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் இயற்பியலாளரும், 'தி அலூர் ஆஃப் தி மல்டிவர்ஸ்' புத்தகத்தின் ஆசிரியருமான பேராசிரியர் பால் ஹால்பெர்ன் விளக்குகிறார். "மறுபுறம், ஈர்ப்பு விசை மிகவும் வலுவாக இருந்திருந்தால், பிரபஞ்சம் அதன் ஆரம்பத்திலேயே அழிந்திருக்கும்," என்று அவர் கூறுகிறார். உண்மையில், இயற்கையின் 'அடிப்படை மாறிலிகள்' என்று அழைக்கப்படுபவை சுமார் இரண்டு டஜன் உள்ளன - அவற்றின் துல்லியமான மதிப்புகள் நமது இயற்பியல் விதிகளைச் செயல்பட வைக்கின்றன. ஆனால் அவை எங்கிருந்து வந்தன? பட மூலாதாரம்,Roberto Machado Noa/Getty Images படக்குறிப்பு,நமது பிரபஞ்சத்தில் நாம் காணும் ஈர்ப்பு விசையின் குறிப்பிட்ட வலிமை, ஒளியின் வேகம், எலக்ட்ரானின் நிறை மற்றும் பல்வேறு மதிப்புகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் நமக்குத் தெரிந்த உயிர் வாழ்க்கையைச் சாத்தியமாக்குகின்றன. சிலர் இவை ஒரு தெய்வீகப் படைப்பாளரை - நமது பிரபஞ்சத்தைக் கவனமான துல்லியத்துடன் வடிவமைத்த ஒரு கடவுளைச் சுட்டிக்காட்டுவதாக வாதிடுகின்றனர். இருப்பினும் மற்றவர்கள் ஒரு மல்டிவர்ஸ் இருப்பதாகக் கூறி அவற்றை விளக்குகிறார்கள். இந்த மாறிலிகளின் குறிப்பிட்ட கலவையைக் கொண்டிருக்கும் எண்ணற்ற பிரபஞ்சங்கள் எப்படியோ இருந்தால், அறிவுள்ள உயிரினங்கள் இருக்கக்கூடிய ஒரு சரியான பிரபஞ்சத்தில் நாம் தற்செயலாக இருக்கிறோம். இவ்வளவு அதிர்ஷ்டசாலியாக இருப்பதற்கான வாய்ப்புகள் என்ன? உயிரற்ற அந்த பிரபஞ்சங்களில் நாம் வாழ்ந்திருக்க மாட்டோம் என்பதால் இந்தக் கேள்வியைப் பற்றி அங்கே சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் வாய்ப்புகள் மிக அதிகம் என்று சிலர் கூறலாம். இது மானுடவியல் தத்துவம் (Anthropic principle) என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பிரபஞ்சங்கள் எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பதற்கான அனைத்து வகையான கற்பனை யோசனைகளையும் இயற்பியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர், இவை பெரும்பாலும் சிக்கலான கணிதத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றில் இரண்டை மட்டும் எடுத்துக் கொள்வோம். பல உலகங்கள் விளக்கம் முதலாவது எலக்ட்ரான்கள் போன்ற சிறிய துகள்களின் விசித்திரமான உலகமான குவாண்டம் மெக்கானிக்ஸில் இருந்து வருகிறது. இந்த நுண்ணிய உலகத்தை நாம் உற்றுநோக்கும்போது, ஒரு துகளின் பண்புகள் இயல்பாகவே நிலையானவை அல்ல என்று குவாண்டம் இயற்பியலாளர்கள் கூறுகிறார்கள். ஒரு எலக்ட்ரான் இங்கேயோ அல்லது அங்கேயோ இருப்பதில்லை. மாறாக, அது இங்கேயோ, அங்கேயோ அல்லது சாத்தியமான வேறு எந்த இடத்திலோ இருப்பதற்கான சில நிகழ்தகவுகளைக் கொண்டுள்ளது. கிளாசிக்கல் கோட்பாட்டின்படி, யாராவது அந்தத் துகளைப் பார்க்கும்போது, அந்த நிகழ்தகவுகள் ஓர் ஒற்றை எதார்த்தமாகச் சுருங்குகின்றன - எலக்ட்ரான் ஒரு நிலையான இடத்தைப் பெறுகிறது. அது அனைத்தும் நமக்குத் தெரிந்த பிரபஞ்சத்திற்குள் நடக்கிறது. இதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம், ஆனால் இன்று அறிவியலில் குவாண்டம் மெக்கானிக்ஸ் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பட மூலாதாரம்,Antonio Masiello/Getty Images படக்குறிப்பு,ஆஸ்கார் விருது வென்ற 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' திரைப்படம் மல்டிவர்ஸை மையமாகக் கொண்ட பல அறிவியல் புனைகதை திரைப்படங்களில் ஒன்று, ஆனால் இது விஞ்ஞானிகள் பொதுவாகப் பேசும் வகை அல்ல என்று ஹால்பெர்ன் கூறுகிறார். கடந்த 1957-ஆம் ஆண்டில், ஹக் எவரெட் III என்ற மாணவர் ஒரு மாற்று யோசனையை முன்வைத்தார், அது பின்னர் 'பல உலகங்கள் விளக்கம்' என்று அழைக்கப்பட்டது: அதாவது ஒரு குவாண்டம் துகள் ஒரே ஒரு நிலையான எதார்த்தத்தை எடுப்பதில்லை. மாறாக, அது ஒரே நேரத்தில் சாத்தியமான அனைத்து எதார்த்தங்களாகவும் கிளைத்துச் செல்கிறது, ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த பிரபஞ்சத்தில் இருக்கின்றன. யாராவது இந்த குவாண்டம் துகளைப் பார்க்கும்போது, அந்த நபரின் உணர்வுள்ள இருப்பு பிரிகிறது என்று ஹால்பெர்ன் விளக்குகிறார்: ஒருவர் ஒரு எதார்த்தத்தைப் பார்க்கிறார், அவரது பிற பதிப்புகள் மற்றவற்றைப் பார்க்கின்றன. ஆனால் அந்த மாற்று வடிவங்கள் திரைப்படங்களில் நாம் காணும் அற்புதமான இணையான வாழ்க்கையைக் கொண்டிருப்பவர்கள் அல்ல என்று அவர் வலியுறுத்துகிறார். "நீங்கள் ஒரு சினிமாவுக்கு செல்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள், அந்தப் படம் ஒருவரைப் பற்றியது, அவர் ஒரு எலக்ட்ரானை பூஜ்ஜிய நானோமீட்டர் தூரத்திலிருந்து கவனிப்பதற்குப் பதிலாக, ஒரு நானோமீட்டர் தூரத்திலிருந்து கவனிக்கிறார்," என்று ஹால்பெர்ன் கூறுகிறார். இத்தகைய நுட்பமான வேறுபாடுகள் "ஹாலிவுட் பாணியிலான கதையாக இருக்காது". இந்த மல்டிவர்ஸ் யோசனைக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். ஆனால் இது சிலரை அருவருப்படையச் செய்கிறது, அவர்கள் இதைச் சோதிக்க முடியாது என்கிறார்கள்: சரி பார்க்க நாம் நம்மை மற்றொரு பிரபஞ்சத்திற்கு அனுப்ப முடியாது இல்லையா? தத்துவஞானி கார்ல் பாப்பர் கருத்துப்படி, ஒரு கோட்பாடு தவறு என்று நிரூபிக்கப்படாவிட்டால், அது உண்மையான அறிவியல் அல்ல. பட மூலாதாரம்,Universal History Archive/Getty Images படக்குறிப்பு,ஆங்கில இடைக்கால பிரான்சிஸ்கன் துறவி வில்லியம் ஆஃப் ஓக்காம், 'ஓக்காம்ஸ் ரேஸர்' என்ற கொள்கைக்காகப் பாராட்டப்படுகிறார் - சமமான வாய்ப்புள்ள இரண்டு விளக்கங்களில் எளிமையானதைத் தேர்ந்தெடுப்பது மற்றும் தேவையற்ற ஊகங்களை நீக்குவது என்பதே அது. அந்த வாதம் சிட்னி பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் நிபுணரான பேராசிரியர் ஜெரான்ட் லூயிஸை பாதிக்கவில்லை. ஒரு நாள் நாம் மற்றொரு பிரபஞ்சத்திற்குச் செல்ல முடியலாம் என்று அவர் கூறுகிறார். "எதையாவது சாத்தியமற்றது என்று ஒதுக்கித் தள்ளுவது என்றால் உங்களிடம் முழுமையான படம் இருக்க வேண்டும், ஆனால் நம்மிடம் இன்னும் அது இல்லை," என்று லூயிஸ் வாதிடுகிறார். அவர் ஒரு மாறுபட்ட எதிர்ப்பைச் சுட்டிக்காட்டுகிறார்: ஓக்காம்ஸ் ரேஸர் என்று அழைக்கப்படும் கொள்கை. "மிக அதிகமானவற்றை விளக்க உங்களுக்கு மிக எளிமையான சமன்பாடுகள் தேவை," என்று அவர் கூறுகிறார். "உங்கள் சிக்கலைத் தீர்க்க எண்ணற்ற பிரபஞ்சங்களை அழைப்பது, உங்கள் சிக்கலை முடிந்தவரை எளிமையாக்குவது போலத் தெரியவில்லை." நிலையான வீக்கம் மற்றொரு மல்டிவர்ஸ் யோசனை நமது அண்டத்தின் ஆரம்ப தருணங்களை மையமாகக் கொண்டுள்ளது. தற்போதைய முன்னணி கோட்பாடுகளின்படி, பிரபஞ்சம் ஒரு விநாடியின் மிகச்சிறிய பகுதியில் மிக வேகமாக விரிவடைந்தது. "அதிவேக விரிவாக்கத்திற்கு வழிவகுத்த ஒரு குறிப்பிட்ட ஆற்றல் இருந்தது," என்று ஹால்பெர்ன் விளக்குகிறார். அது நின்றதும், அந்த ஆற்றல் பருப்பொருள் மற்றும் ஒளியாக மாறியது, இதைத்தான் நாம் பெரும்பாலும் பெருவெடிப்பு என்று நினைக்கிறோம், இது இன்று நம்மைச் சுற்றி நாம் காணும் பிரபஞ்சத்திற்கு வழிவகுத்தது. பட மூலாதாரம்,Nasa/Esa/CSA/STScI/Michael Ressler (Nasa-JPL) படக்குறிப்பு,பருப்பொருள் தோன்றுவதற்கு முன்பு பிரபஞ்சம் ஒரு நுண்ணிய கணம் விரிவடைந்ததாகவும் அதன் மூலம் நமது பால்வீதி போன்ற நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது என்றும் தற்போதைய கோட்பாடுகள் கூறுகின்றன. இந்த அண்ட வீக்கம் நமது விண்வெளிப் பகுதியில் ஏன் தொடங்கியது அல்லது நின்றது என்பது சரியாகத் தெரியவில்லை. 1980-களில், சில இயற்பியலாளர்கள் வீக்கம் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் முடிவடையவில்லை என்று பரிந்துரைத்தனர். ஒருவேளை அது நமது பகுதிக்கு அப்பால் தொடர்ந்து கொண்டிருக்கலாம். இந்த "நிலையான வீக்கம்" யோசனையின் ஒரு பதிப்பில், வீக்கம் எங்கு நின்றாலும், விண்வெளியின் அந்தப் பகுதி அதன் சொந்த பிரபஞ்சமாகப் பிரிந்துவிடும். மேலும் ஒவ்வொரு பிரபஞ்சமும் வித்தியாசமாக இருக்கும்: சில மிக வலுவான ஈர்ப்பு விசையைக் கொண்டிருக்கலாம், மற்றவை எதையும் கொண்டிருக்காமல் இருக்கலாம். "அவற்றில் பெரும்பாலானவை உயிரற்றவையாகவும் மலட்டுத்தன்மையுடனும் முடியப் போகின்றன," என்கிறார் லூயிஸ். "அவ்வப்போது நீங்கள் வசிக்கக்கூடிய சிலவற்றைப் பெறுவீர்கள்." ஆனால் ஒரு குவாண்டம் மல்டிவர்ஸை போலவே, நமக்கிடையே எப்போதும் விரிவடைந்து கொண்டிருக்கும் அந்த இடைவெளி இருப்பதால், இந்த மற்ற பிரபஞ்சங்களைத் தொடர்பு கொள்ள முயல்வது சற்றே கடினமான காரியமாகும். தடயங்களைத் தேடுதல் இருப்பினும், இரண்டு பிரபஞ்சங்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கொன்று நெருக்கமாக உருவானால், அவை பிரிக்கப்படுவதற்கு முன்பு குறுகிய காலம் மோதியிருக்க வாய்ப்புள்ளதாக மல்டிவர்ஸ் ரசிகர்கள் கருதுகின்றனர். வானியலாளர்கள் இந்த மோதல்களின் வடுக்களை அண்ட நுண்ணலை பின்னணியில் (CMB) தேடுகிறார்கள் - இது நமது ஆரம்பக்கால பிரபஞ்சத்தின் வழியாகப் பயணிக்கும் முதல் ஒளியின் எச்சங்கள். அது பின்னர் நுண்ணலை கதிர்வீச்சாகக் குளிர்ந்துள்ளது, விண்வெளி முழுவதும் அதைப் பார்க்க நாம் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தலாம். ஹால்பெர்ன் கருத்துப்படி, இந்த வடுக்கள் "ஒரு வகை புல்ஸ்-ஐ வடிவம் அல்லது இலக்கு வடிவம் போல் இருக்கும்." பட மூலாதாரம்,Esa/Planck Collaboration படக்குறிப்பு,ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் பிளாங்க் தொலைநோக்கி CMB-ஐ வரைபடமாக்கியுள்ளது, அங்கு சிறிய வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் ஆரம்பக்கால பிரபஞ்சத்தில் பருப்பொருளின் வெவ்வேறு அடர்த்திகளைப் பிரதிபலிக்கின்றன. சுற்றியுள்ள பகுதிகளைவிட வித்தியாசமாக குளிர்ச்சியாகத் தோன்றும் 'குளிர் புள்ளி' (Cold spot) போன்ற CMB-இல் உள்ள விசித்திரமான அம்சங்களையும் சில வானியலாளர்கள் உற்றுநோக்கியுள்ளனர். மற்றொரு பிரபஞ்சம் நம்மைக் கவர்ந்ததால் இது ஏற்பட்டதாகச் சிலர் வாதிட்டனர். "எனக்குத் தெரிந்தவரை, ஒவ்வொரு முறையும் யாராவது ஒரு கருத்தை முன்வைக்கும்போது, மற்ற குழுக்கள் புள்ளிவிவர பகுப்பாய்வுகளைச் செய்து: 'இல்லை, அந்த கருத்து தவறு' என்று கூறியுள்ளன". 'வெறும் சில கருத்துகளின் தொகுப்பு' CMB-இல் திட்டவட்டமான வடுக்களை நாம் கண்டறிந்தாலும், மற்ற பிரபஞ்சங்களை நாம் ஒருபோதும் சந்திக்கவில்லை என்றால் அவை இருப்பதாக நம்புவதற்கு அது போதுமானதாக இருக்குமா? "அறிவியலில் நாம் மறைமுக ஆதாரங்களை ஏற்றுக்கொள்ளும் பல சந்தர்ப்பங்கள் உள்ளன," என்று ஹால்பெர்ன் கூறுகிறார். உதாரணமாக, பூமியின் மையப்பகுதிக்கு நாம் ஒருபோதும் சென்றதில்லை என்றாலும், அது இரும்பு மற்றும் நிக்கலால் ஆனது என்று நாம் நம்புகிறோம். உண்மையில், பிற பிரபஞ்சங்கள் என்ற யோசனையை அவர் விரும்புகிறார். "அதைவிடச் சிறந்த மாதிரியை நாம் கண்டுபிடிக்கும் வரை, இப்போதைக்கு நிலையான வீக்கத்தை நம்புபவராக என்னை நான் நிறுத்திக் கொள்வேன்," என்று அவர் வெளிப்படுத்துகிறார். லூயிஸ் ஏதோ ஒரு வடிவிலான மல்டிவர்ஸ் இருப்பதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார். ஆனால் பல போட்டியிடும் யோசனைகள் முன்வைக்கப்படுவதால் அதை உண்மையில் வரையறுப்பதில் இருந்து நாம் வெகு தொலைவில் இருக்கிறோம் என்று அவர் கூறுகிறார். கடந்த 2025-ஆம் ஆண்டு ஆய்வறிக்கை ஒன்றில், மல்டிவர்ஸ் தற்போது "வெறும் ஒரு கருதுகோள்கூட அல்ல, வெறும் சில கருத்துகள் மற்றும் யூகங்களின் தொகுப்பு மட்டுமே" என்று அவர் எழுதுகிறார். "நாம் மல்டிவர்ஸை பற்றி ஒரு பொது இடத்தில் விவாதிக்கப் போகிறோம் என்றால், அதற்கு முதல் படி நாம் எதைப் பற்றி விவாதிக்கிறோம் என்பதை வரையறுப்போம்," என்று அவர் பிபிசியிடம் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y4z7w78d4o- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
“சூரியக் கட்சியில், முக்கியமான ஒரு அணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார், முன்னாள் பிரதமர் பெயர்கொண்ட அந்த நிர்வாகி. கொங்கு மண்டலத்தில் சீட் எதிர்பார்த்து, வீட்டையெல்லாம் மாற்றிக்கொண்டு சென்றவருக்கு, ‘ஜெயில் மாஜி’யின் தலையீட்டால் சீட்டே கிடைக்காத சூழல் உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலில் அவரது கட்சிப் பொறுப்புக்கும் பங்கம் வந்துவிட்டதாம். ‘கடந்த ஐந்து வருடங்களில், அன்பான மாண்புமிகுவின் தயவால் ஏகப்பட்ட டெண்டர்களை வாரிக் குவித்துவிட்டார்’ என்று ரிப்போர்ட் அளித்துவிட்டதாம் உளவுத்துறை. சின்னவருக்கும் விஷயம் போகவும், அவரைக் கட்சிப் பொறுப்பிலிருந்து தூக்கியடிக்க முடிவாகியிருக்கிறது. டம்மியான ஒரு அணியின் பதவியை அளிக்கவும் ஆலோசனை நடந்தது. தகவல் கேள்விப்பட்டதிலிருந்து, தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அத்தனை கதவுகளையும் தட்ட ஆரம்பித்திருக்கிறாராம் அந்தப் பிரமுகர்” என்றபடி சிறகுகளை விரித்தார். நன்றி-ஜூனியர் விகடன் - இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு
Important Information
By using this site, you agree to our Terms of Use.