24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!
முடிவுவரை தொய்வில்லாமல் அலட்டாமல் சிறப்பாக எடுத்துள்ளார்கள்🙏🙏🙏
- Today
-
தையிட்டி விகாரைக்கெதிராக போராடியவா்களுக்கு சொந்தப் பிணை
நான், அனுரா செய்யும் நல்ல காரியங்களை வரவேற்கும் அதே நேரம் அடாவடிகளை விமர்சிக்கிறேன். நீங்கள் அதை கவனிப்பது இல்லை. இப்போ நான் விமர்ச்சித்த படியினாலேதான் இப்படி ஒரு பதிவை எனக்கெதிராக இட்டிருக்கிறீர்கள். சரி..... இப்ப சொல்லுங்கள், நான் எந்த அரசை வரவேற்கவேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள்? மஹிந்தா, கோத்தா, ரணில், மைத்திரி. இவர்களின் ஆட்சியில் இதைவிட மேலாக ஏதும் நடந்ததா? அவர்கள் போட்ட திட்டம், கட்டடங்கள்தானே இவையனைத்தும், அவர்களின் ஆலோசனைப்படிதான் இவைகள் நிறைவேற்றப்படுகின்றன. மெல்லெனப்பாயும் நீர் கல்லையும் உருக்கிப்பாயுமாம். சட்டம் அவர்கள் வீட்டுக்கதவை தட்டுமட்டும் அனுராவை விழுத்த அல்லது தமக்கு கீழ் அடிபணிய வைக்க முயற்சிப்பார்கள். அதையேதான் எதிர்கட்சிகள், விசேடமாக நாமல் சூழுரைக்கிறார்.
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
முன்பு ஈராக்கிலும் அணுஆயுதம் தயாரிக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தி அந்த நாட்டை சூறையாடி, நிர்வாகத்தை குலைத்து, மக்களை அகதியாகிவிட்டார்கள். ஆனால் அப்படி ஒரு அணு ஆயுத களஞ்சியத்தையோ, ஆய்வு கூடத்தையோ யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாடுகள் மேல் குற்றம் சுமத்தி, தனது ஆளுகைக்குள் கொண்டுவந்து, அந்த நாட்டிலுள்ள வளங்களை சூறையாடுவதும் அந்நாட்டின் நிர்வாகங்களை குழப்புவதுந்தான் அமெரிக்காவின் பிழைப்பு. இவர் மூன்றாம் உலக யுத்தத்தை ஆரம்பிப்பாரானால் அமெரிக்காவே முதல் அழிக்கப்படும்.
-
ரஷ்ய முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஊக்குவியுங்கள் - ரஷ்ய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை
ரஸ்ஸியாவின் அதிகாரியுடன் குமாரசாமியும் உடனிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவருக்குச் சொல்லாமல் இந்தச் சந்திப்பு நடந்திருக்கும் என்று நாம் நம்பவில்லை.
-
தையிட்டி விகாரைக்கெதிராக போராடியவா்களுக்கு சொந்தப் பிணை
இது நடப்பது நீங்கள் ஆதரிக்கும் அநுரவின் அரசில்த்தானே?
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Composite PMI score card பயன்படுத்தாமல் வெறுமனே PMI Index மற்றும் NMI Index மட்டும் புள்ளியிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். Composite PMI வெறும் மேலோட்டமான பொருளாதார பார்வைக்கு பயன்படுத்தப்படுகிறது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
https://tradingeconomics.com/united-states/non-manufacturing-pmi இது அமெரிக்காவின் NMI index NMI index 50% உம் மேல் அதிகரித்தால் பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது, மறுவளமாக 50 குறைந்தால் பொருளாதாரம் சுருங்குகின்ற நிலை ஏற்படுகிறது. https://tradingeconomics.com/australia/composite-pmi இது அமெரிக்காவின் உற்பத்தி மற்றும் சேவை துறை ஒன்றினைந்த குறிகாட்டி இது. PMI வெறுமனே உற்பத்திதுறையாகவும் NMI வெறுமனே சேவை துறையாகவும் இருக்கின்றது, இந்த இரண்டும் இணைந்த கொம்போசிட் பி எம் ஐ. தற்போதய நிலவரத்தின் படி அமெரிக்க உற்பத்திதுறை சிரமமான காலகட்டத்தில் உள்ளது ஆனால் சேவைத்துறை 50 மேல் உள்ளது, இது சாதகமாக தோன்றினாலும் கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது இது வீழ்ச்சி போக்கில் செல்கிறது. உற்பத்தித்துறையும் சேவைத்துறையும் ஒருங்கிணைந்த குறிகாட்டி கடந்த 3 ஆண்டுகளில் அதிகரிப்பினை காட்டுகிறது.
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
இதுகுறித்த எனது அவதானிப்பை இங்கே பதிகிறேன். உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பினை எதிர்த்து நான் எழுதிய கருத்துக்களுக்கு குமாரசாமி தனது கருத்துக்களை முன்வைத்து வந்தார். அவ்வாறான வாதத்தில் ரஸ்ஸியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக உக்ரேனை ஆக்கிரமிப்பது நியாயமானதுதான் என்று எழுதினார். பின்னர் ஒருபடி மேலே சென்று இந்தியா தனது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு தமிழ் மக்களின் போராட்டத்தினை அழித்ததையும் தன்னால் புரிந்துகொள்ளமுடியும் என்று கூறி உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் பலவந்த ஆக்கிரமிப்பினை நியாயப்படுத்துவதற்கான உசாத்துணையாகப் பாவித்திருந்தார். இதற்காக நான் அவரைக் கடிந்துகொண்டபோதும் இன்றுவரை அவர் இக்கருத்தினை மீளப்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இந்தியாவின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த தான் சேர்ந்த இனமான தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டது நியாயமானதுதான் என்று கருதும் ஒருவர், எம்முடன் சம்பந்தப்படாத உக்ரேன் எனும் நாட்டின் இருப்பைத் தியாகம் செய்து, தான் போஷிக்கும் சோசலிஸ ரஸ்ஸியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று விரும்புவதை என்னால் புரிந்துகொள்ள முடியும்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
முன்னோடி குறிகாட்டிகள் (Leading Indicators) 3 இலிருந்து 6 மாதங்களுக்கு முன்னரே எதிர்வு கூறப்படுகிறது என கூறுகிறார்கள். முன்னோடி குறிகாட்டியில் முதலாவதாக Survey (கணக்கெடுப்பு) இல் PMI, NMI, Consumer confident ஆகிய 3 விடயங்கள் மட்டும் இந்த பகுதியில் உள்லடக்கப்பட்டுள்ளது. PMI index பொதுவாக நாட்டின் மொத்த உற்பத்தியில் தாக்கம் செலுத்தும் (25%) பெரு நிறுவனங்களினிடம் நடத்தப்படும் கருத்து கணிப்புகளினடிப்படையில் 5 பிரிவுகளினடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது புதிய ஒப்பந்தம் 30%, உற்பத்தி25%, வேலை 20%, வழங்கல் 15%, இருப்பு 10%. PMI index 50 50% மேல் அதிகரித்தால் பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது, மறுவளமாக 50 குறைந்தால் பொருளாதாரம் சுருங்குகின்ற நிலை ஏற்படுகிறது. https://tradingeconomics.com/united-states/business-confidence இது அமெரிக்க PMI index இதனை பார்க்கும் போது அமெரிக்க பொருளாதாரம் சுருக்க நிலைநோக்கி செல்கிறது. Fundamental analysist scorecard முறைமியினை பயன்படுத்தி எவ்வாற்றான தாக்கம் GDP இல் ஏற்படும் என குறிகாட்டிகளை தயாரிக்கிறார்கள்.
-
மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்
சாத்தான் வேதம் ஓதுகிறது.
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
இந்த காணொளியினை முன்பு வேறு ஒரு திரியில் இணைத்துள்ளேன். இவரது கட்சி இரஸ்சியாவில் 3ஆவது பெரிய கட்சி என குறிப்பிடுகிறார்கள், இந்த சதிக்கோட்பாடு பற்றி ட்ரம்பின் மீது இரஸ்சியாவின் ஆதிக்கம் பற்றிய சதிக்கோட்பாடு பற்றியது, இதில் வெனிசுலா பற்றியும் கூறியுள்ளார். குறித்த நபர் இறந்து விட்டார் 2022 என நினைக்கிறேன். இந்த காணொளியினை பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன், இது பற்றிய உங்கள் கருத்து என்ன.
-
"எங்கள் பேத்தி ஜெயாவின் பிறந்தநாள் இன்று!" (ஜனவரி 6, 2026)
தில்லை உங்கள் பேத்தியின் பிறந்தநாளை உங்களுடன் சேர்ந்து நாங்களும் கொண்டாடுகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயா.
-
மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்
நான் குடித்ததில்லை. ஆனால் குடிக்கு எதிரானவனும் அல்ல. ஆனால் திட்டமிட்ட இன ஒழிப்பின் ஒரு அங்கமாக, வகை தொகையின்றி எமது பகுதியில் பார்கள் திறந்து விடப்பட்டுள்ள நிலையில்… ஊரில் போதை கலாச்சாரம் பற்றியும் அதன் தாக்கம் பற்றியும் இந்த யாழில் எத்தனை அருமையான பதிவுகள், திரிகள்…. அத்தனைக்கும் பிறகும்….மக்கள் நலன் பேண வேண்டிய ஒரு எம்பி….. கள்ள கொமிசனுக்க்காக பார் லைசன்ஸ் வாங்கி கொடுத்து விட்டு…. பிடிபட்டு விடுவோம் என பயந்து ஆனுர அரசு சொல்லும் சகல விடயத்துக்கும் ஒரு பணய கைதி போல் ஓம்படுகிறார்… இந்த கள்ளனுக்கு வக்காலத்து வாங்கவும் சிலர்🤦♂️.
-
மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்
முதலீடு என்றால் பார் திறப்பதுதானே ? நாம் வசிக்கும் நாட்டில் escorts எனப்படும் ஒரு பெண் சுயமாக பாலியல் தொழில் செய்வது சட்டபூர்வம். போவதும் விடுவதும் தனிமனித சுதந்திரம். ஆம்ஸ்டடார்ம் போன்ற நகரில் ஒரு படி மேலே. ஆகவே இந்த தொழிலை இலங்கையில் ஒரு தமிழ் எம்பி குத்தகைக்கு எடுத்து செய்யலாம்? உங்கள் கருத்தை நான் சரியாக விளங்கி கொண்டேனா?
-
தையிட்டி விகாரைக்கெதிராக போராடியவா்களுக்கு சொந்தப் பிணை
இவற்றிற்கு நீதிமன்றம், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள், அவைதான் இந்தப்பிரச்னைக்கு காரணம் என்றும் சுட்டிக்காட்ட யாரும் முன்வரவும் மாட்டார்கள். போன பௌர்ணமிதினத்தன்று மக்கள் அமைதியாக தெரு ஓரத்தில் கூடாரம் அமைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டுக்கொண்டிருந்தனர், போலீசார் அவர்களின் கூடாரங்களை பிடுங்கி, அராஜகம் புரிந்தனர். அது ஜனநாயகத்திற்கு எதிரானதில்லையோ? எப்படியும் நாட்டில் ஒரு இனவன்முறையை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்ற மாட்டோமா எனும் நப்பாசையில் ஒருவரும், இவர்களை உசுப்பிவிட்டால் தம் ஊழலுக்கான தண்டனையில் இருந்து தாம் தப்பிவிடாலெமென்கிற கனவில் ஊழல்வாதிகளும் பிக்குகளுக்குப்பின்னால் அலைகிறார்கள். முற்றுந்துறந்த துறவிகள் தமிழரின் காணிகளை அடாத்தாக பிடிப்பதற்கு, மண்ணாசை கொண்டு நாட்டை கொழுத்தியே தீருவோமென கொழுத்தாடு பிடிக்குதுகள். இதுகளின்ர காவியை கழட்டி வீட்டுக்கனுப்ப வேண்டும்.
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
இதுதான் (புட்டின் காதலால்) ஏற்பட்டுள்ள பச்சை இரெட்டைதன்மை. அமெரிக்கா உக்ரேன் ஒப்பந்தத்தின் போது நீங்கள்தான் உக்ரேனில் வளமுள்ளது அதை அமெரிக்கா சுரண்டுகிறது என எழுதினீர்கள். ஆனால் அதையே ரஸ்யா செய்தால் - அது வளக்கொள்கை அல்ல, பாதுகாப்பு 😂. இதையேதான் டிரம்பும் சொல்கிறார். எண்ணை என்பது அமெரிக்காவின் பொருளாதார-பாதுகாப்பு சம்பந்தபட்டது என்று. இங்கே உக்ரேனை ஆதரித்த எவரும், வெனிசுவேலா மேலான அமெரிக்க தாக்குதலை ஆதரிக்கவில்லை. மாறாக கடுமையாக கண்டித்துள்ளனர். ஆனால் நீங்கள் ? புட்டினுக்கு ஆலவட்டம் பிடிப்பதற்க்காக… இலங்கையில் இந்தியா நடந்து கொண்டவிதம் சரி என எழுதும் அளவுக்கு போனவர். யார் நடு ரோட்டில் நிற்கிறார்கள்… யார் சொந்த இனத்தின் போராட்டத்தை கூட புட்டினுக்காக கொச்சை படுத்தி விட்டு நடுரோட்டில் மகாராஜாவின் உடையோடு பவனி வருகிறார்கள் என்பதை களம் அறியும். இதுவும் தனிமனித தாக்குதல் அல்ல.
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
நான் எப்போதும் நடுத்தெருவில்தானே அண்ணை. நீங்களும் உங்கள் சகாக்களும் கூட அடி கடி நடுநிலை ந**கி என புகழ்வீர்களே ? மறந்து போச்சா?
-
ரஷ்ய முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஊக்குவியுங்கள் - ரஷ்ய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை
இல்லை சுவை அப்படி எதுவும் நினைப்பதில்லை. நானும் வருடாவருடம் ஊருக்கு போய் வருகிறேன். 35 மணிநேரம் தொடர்ந்து பயணம் செய்ய எனக்கும் ரொம்ப கஸ்டமாகவே உள்ளது. பலாலியில் போய் இறங்கினால் எனக்கும் சந்தோசமே.
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
ஆயுதபலம், செல்வம் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. எங்கள் சரிதத்தை பார்த்தால் அங்கும் ஆயுதபலமே தீர்ப்பு எழுதியுள்ளது. வெனிசுவெலா அதிபர் எப்படிப்பட்ட அயோக்கியன் என எமக்கு தெரியாது. அதே சமயம் டிரம்ப் அவர்கள் யோக்கியன் என கூறுவதற்கு இல்லை. எவருக்கும் ஒரு பக்கம் ஆதரவும், ஒரு பக்கம் எதிர்ப்பும் காணப்படும். உங்களைப்போலவே நானும் எனது சொந்த கருத்துக்களை, புரிதலை வெளிப்படுத்துகின்றேன். நடைமுறை உலகை பார்த்தால் வெனிசுவெலா அதிபரின் கடத்தலின் பின் பங்கு சந்தையில் அமெரிக்க நிலவரம் உயர்ந்துள்ளது. அமெரிக்க யுத்த கப்பல்கள், போர் விமானங்கள், படைகள் வெனிசுவெலாவை கண்காணிப்பதாக கூறப்படுகின்றது. அதாவது வெனிசுவெலா அமெரிக்காவின் முற்றுகைக்குள் உள்ளது. தமக்கு தேவையான நேரத்தில் வெனிசுவெலா மீது தாக்குதல் நடாத்துவது, ஆட்களை தொடர்ந்து கடத்துவது, கொல்வது அமெரிக்க படைகளுக்கு இலகுவான ஒரு விடயம். அமெரிக்காவின் அனுமதி/அனுசரனை இல்லாமல் வெனிசுவெலா அரசாங்கத்தினால் செயற்பட முடியாது என சொல்லப்படுகின்றது. அதாவது ஆயுதபலம் மூலம் அமெரிக்கா வெனிசுவெலாவை முடக்கியுள்ளது. சீனா, ரஷ்யா போன்றவற்றை பொருத்தமட்டில் ஐயோ வடை போச்சே எனும் நிலமைதான்.
- Yesterday
-
மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்
பார் என்பது கெட்ட செயலா?அல்லது கெட்ட தொழிலா? மூலைக்கு மூலை பார்கள், பார்டிகள் உள்ள நாடுகளில் தானே நாமும் வசிக்கின்றோம். எம் பிள்ளைகளும் வாழ்கின்றார்கள்.அந்த பார்களால் யார் எப்படி கெட்டுப்போனார்கள் என சொல்ல முடியுமா? மதுபான கடைகள் யாரையும் வலிந்து அழைப்பதில்லை.எல்லாம் அவரவர் தனிப்பட்ட விடயம்.
-
ரஷ்ய முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஊக்குவியுங்கள் - ரஷ்ய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை
ஆகா....அமெரிக்கா பலாலியிலை வந்து இறக்கிக்கிக்காட்டீட்டுது. இனி இந்திய கூட்டாளி ரஷ்யாவும் யாழ்ப்பாண பக்கம் ... தகிட ததிமி தகிட ததிமி தம்தானா... இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா... தகிட ததிமி தகிட ததிமி தம்தானா... இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா... இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா... என் கதை எழுதிட மறுக்குது என் பேனா... இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா..🤣
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
யாழ்களத்தில் கருத்து எழுதும் எனக்கு.......அநேகமான செய்திகளில் கருத்து எழுவது என் சுய கருத்துக்கள். அது சரியா பிழையா என்பது இரண்டாம் பட்சம். மற்றவர்கள் ஆதரிக்கும் ஒரு விடயத்தை நான் ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை என நினைக்கின்றேன். எனக்கு ரஷ்யாவின் ஒரு சில செயற்பாடுகள் சரியாக தெரிகின்றது. அது சார்பாக நான் கருத்து எழுதுகின்றேன். நீங்களோ மற்றவர்களோ விரும்பும் ஆதரிக்கும் விடயத்திற்கு சார்பாக நான் கருத்து எழுத வேண்டும் என்றால்..... உங்களுக்கும் ரஷ்ய-அமெரிக்க கொள்கைவாதிகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? உங்கள் பாதை எப்படி உங்களுக்கு சரியோ அதே போல் தான் அமெரிக்க ரஷ்ய கொள்கைவாதிகளும் சரியான பாதையில் போகின்றனர். தற்போதைய ஐரோப்பிய ஒன்றியம் போல் நடுத்தெருவில் நிற்பது போல் நீங்களும் நிற்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.🤣 இது தனிமனித தாக்குதல் அல்ல.🎉
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
பாதுகாப்பிற்கான ஆக்கிரமிப்பு காரணத்தையும் திருடுவதற்கான ஆக்கிரமிப்பு காரணத்தையும் சேர்த்து சாம்பார் ஆக்கியுள்ளீர்கள். மற்றும் படி.... கற்காலம் தொடக்கம் இன்றைய கணணிக்காலம் வரைக்கும் பலம் வாய்ந்தவன் ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டு தான் இருக்கின்றான். என்ன ஒன்று.....ஆக்கிரமிப்பிற்கான காரணங்கள் இடத்திற்கு இடம் வேறுபட்டுக் கொண்டிருக்கின்றது.அவ்வளவுதான்.
-
அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பூரணப்படுத்த எவ்வளவு பணம் வேண்டும் என்பதை வட்ஸ் அப்பில் எழுதி விடவும். உங்கள் கருத்து சரியானதே. இருந்தாலும் சில இடங்களில் தனி நபர்களுக்கு நேரடியாக உதவி செய்யப்போய் ஏமாற்றப்பட்டதுதான் மிச்சம். அடிப்படை உதவிகள் செய்ய வெளிக்கிட்டு கடைசியில் தேவையில்லாத தேவைகளுக்கும் பணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.அதில் எனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை வைத்து செய்யக்கூடாத வேலைகள் எல்லாம் செய்ய ஆரம்பித்தார்கள். இதற்காகவே நம்பிக்கையான ஏராளனையும் அவரது புலர் நிறுவனத்தையும் தேர்வு செய்தேன். இப்போதும் சொல்கிறேன் தனி நபர்கள் வங்கி இலக்கத்திற்கு நான் நேரடியாக பணம் அனுப்புவதாயின்.....அதற்கு என் உடன்பாடு இல்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல் சுற்றில் நான்கு போட்டிகள் இந்தியாவில் விளையாடவேண்டும்.