Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. முதல் சுற்றில், 41 போட்டியில் 19 போட்டிகள்தான் முடிவடைந்திருக்கின்றன. இன்னும் எவ்வளவோ பாக்க கிடக்கு.
  3. இங்கே டிரம்ப் எப்ஸ்டீன் கோப்புகளில் பல்லாயிரக்கணக்கான தடவைகள் பெயர் குறிப்பிடபடவில்லை என்பது போலவும்…. டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வாகவில்லை என்பது போலவும்… பலர் எழுதுவது நகைப்புக்கிடமானது. இங்கே முழுக்க முழுக்க தோல்வி அடைந்துள்ளது அல்லது தோல்வி அடைய வைக்கப்பட்டுள்ளது, அமெரிக்காவின் நலன் மட்டுமே. ஈயூ வெற்றி தோல்வி இல்லாத டிரா நிலையில் இருக்கிறது. அமெரிக்கா விலகியதும், ஈயூ+யூகே நடுநடுங்கி விடும் என்ற புட்டின் எதிர் பார்ப்பை, உக்ரேனிலும், கிரீன்லாந்திலும் ஈயு தவிடுபொடியாக்கி உள்ளது. உக்ரேனின் 1/3 பகுதி நீங்கலாக மீதம் ஈயூவில் இணையும் எனில் - குறிப்பாக கருவாகி கொண்டிருக்கும் ஈயூ ஆர்மியில் உக்ரேன் இணையும் எனில் - அது ஈயூவின் நீண்டகால வெற்றியாக அமையும். கூடவே சீனாவோடு ஈயூ நெருங்குவதும், ரஸ்யாவுக்கு ஆப்பாகவே முடியும். அமேரிக்கா இல்லாமல் கூட ரஸ்யாவை விரட்ட, ஈயு அரசியல், இராணுவ, பொருளாதார முறைகளில் தயாராகி விட்டது. இது நல்ல விடயமே. மேலும் ஜேர்மனி இராணுவ மயபடும் போது, பிரான்ஸ்சின், யூகே யின் அணு ஆயுத வல்லமையோடு சேர்த்தால் - ரஸ்யா வாலட்ட முடியாதபடி செய்ய கூடிய இடத்துக்கு (அமெரிக்கா இல்லாமலே) ஐரோப்பா வந்து விட்டது. ரஸ்யாவுக்கு உக்ரேன் இராணுவ ரீதியில் 4 வருட 1 மாத மூக்குடைவு. அதில் எந்த மாற்றமும் இல்லை. அரசியல், ராஜதந்திர ரீதியில் கூட மாற்றம் ஏதுமில்லை. ஆனால் உளவு ரீதியில் டிரம்பின் தேர்வு பாரிய வெற்றி. இதில் முழு வெற்றி எண்டால் அது உக்ரேனுக்கே. செலென்ஸ்கி மட்டும் இல்லை என்றால். இப்போ உக்ரேன் என்று ஒரு நாடு உலக வரைபடத்தில் இருந்து நீங்கி 4 வருடம் ஆகி இருக்கும். செலென்ஸ்கி ஒரு உக்ரேனிய கிராமத்தை தக்க வைத்திருந்தாலே அது வெற்றிதான். ரஸ்ய இராணுவத்தின் மூக்கை உடைத்ததில் இராணுவ வெற்றியும். அத்தனை வல்லரசுகளை டீல் பண்ணும் விதத்தில் இராஜதந்திர வெற்றியும். தன் மக்களை கட்டுகோப்பாக வைத்திருப்பதில் அரசியல் வெற்றியும் அடைந்துள்ளவர் செலன்ஸ்கி மட்டுமே.
  4. 'நான் படிக்க முடியுமா என கேட்பார்கள்' - நீதிபதியாகும் கேரளாவின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பட மூலாதாரம்,Thanya Nathan படக்குறிப்பு,24 வயது தான்யா பிறவியிலிருந்தே பார்வை சவால் உடையவர் ஆவார். கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 12 பிப்ரவரி 2026, 05:59 GMT வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் "சவால்களை கடப்பதை தவிர எனக்கு வேறு எந்த வாய்ப்புகளும் இல்லை. கடின உழைப்பும் நிலையான பயிற்சியும் இருந்தால் நினைத்ததை சாதிக்க முடியும்." 24 வயது தான்யா நாதனின் பேச்சில் உறுதியும் தெளிவும் வெளிப்படுகிறது. இவர், பிறவியிலிருந்தே பார்வை சவால் உடையவர் ஆவார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த தான்யா, கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுபூர்வ தீர்ப்பை தொடர்ந்து, அதே ஆண்டில் கேரள நீதித்துறை சேவை தேர்வெழுதி, அதில் மாற்றுத்திறனாளிகள் போட்டியாளர்களுக்கான தகுதிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம், கேரளாவில் சிவில் நீதிபதியாகும் (இளநிலை பிரிவு - Junior division) முதல் முழு பார்வை மாற்றுத்திறன் கொண்ட நபராக தான்யா உள்ளார். "நான் நீதிபதியாவது என்பது சாத்தியமில்லாத, கனவுகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் (பார்வையற்றவர்கள்) தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. 2025ம் ஆண்டில் தான் உச்ச நீதிமன்றம் பார்வையற்றவர்கள் நீதிபதி தேர்வெழுத அனுமதித்து தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பு தான் என் திருப்புமுனை." என்கிறார் தான்யா நாதன். உத்வேகம் அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் பார்வையற்ற நபர்களும் நீதிபதியாகலாம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மத்திய பிரதேச நீதித்துறை சேவைகள் தேர்வில் இருந்த விதிமுறைகளை ரத்து செய்து, நீதிபதிகள் ஜேபி பர்டிவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கியமான தீர்ப்பை வழங்கியது. மத்திய பிரதேச நீதித்துறை தேர்வு விதிமுறை 6(ஏ)-வின்படி, நீதித்துறை நியமன நடவடிக்கைகளில் பார்வையற்றோர் பங்குபெறுவது தடை செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியதாக லைவ் லா இணைய தளம் கூறுகிறது. இதன்மூலம், நீதித்துறையில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. "மாற்றுத்திறனாளிகள் நீதித்துறையில் எவ்வித பாகுபாட்டையும் எதிர்கொள்ளக்கூடாது. இதனை உறுதியான நடவடிக்கை மூலம் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்." என உச்ச நீதிமன்றம் கூறியிருந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வு அதன்பின் நேர்காணல் என மூன்று அடுக்கு தேர்வு முறைகளை கொண்ட கடினமான செயல்முறைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது சிவில் நீதிபதி தேர்வு முறை. இந்த தேர்வில் தான்யா அவ்வளவு எளிதில் வெற்றி பெறவில்லை. "படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் கிடைப்பது சவாலாக இருந்தது. சட்டம் போன்ற துறைகளில் புத்தகங்கள் அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் வடிவிலோ அல்லது பிரெய்லி புத்தகங்களாகவோ எங்களுக்கு கிடைப்பதில்லை. தேர்வுக்கு தயாராவதில் இதுதான் எனக்கு பிரச்னையாக இருந்தது." என கூறுகிறார் தான்யா நாதன். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,"மாற்றுத்திறனாளிகள் நீதித்துறையில் எவ்வித பாகுபாட்டையும் எதிர்கொள்ளக்கூடாது." என கூறியிருந்தது உச்ச நீதிமன்றம் பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குடிமைத் தற்காப்புச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய புதிய சட்டங்கள் 2024ம் ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்தன. எனவே, பழைய சட்டங்கள் குறித்த குறிப்புகள் டிஜிட்டல் வடிவில் கிடைப்பது தனக்கு சவாலாக இருந்ததாக தான்யா குறிப்பிடுகிறார். படிப்பதில் சிரமங்கள் "எனக்கு தேவையான குறிப்புகளை மற்றவர்களை போன்று நான் உடனேயே படித்துவிட முடியாது. முதலில் குறிப்புகளை டிஜிட்டல் வடிவிலோ அல்லது பிரெய்லி வடிவமாகவோ மாற்றிதான் படிக்க வேண்டும். என்னுடைய செல்போனில் எழுத்துகளை ஒலி வடிவில் மாற்றித்தரும் செயலியையே நான் அதிகம் சார்ந்திருக்கிறேன். இவையெல்லாம் அதிக நேரம் எடுக்கும் செயல்முறை. நீங்கள் தேர்வை எழுத வேண்டும் என நினைத்தால் இந்த வழிமுறைகளை செய்துதான் ஆக வேண்டும், ஏனெனில் அதுதான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி." அவரின் தாய் பபிதா - தந்தை ஜெகந்நாதன் இருவரும் வெளிநாட்டில் வசிக்கின்றனர். அவருடைய மூத்த சகோதரியும் வெளிநாட்டில் பணிபுரிகிறார். தான்யா சோர்ந்துபோகும் நாட்களில், "பரவாயில்லை, இதுவும் சரியாகிவிடும்," என்றே தன்னுடைய பெற்றோர் கூறுவார்கள் என்கிறார். தானும் அத்தகைய சமயங்களில் சிறிது காலம் அமைதியாக இருந்து அந்த சவாலை ஏற்றுக்கொண்டு கடக்க முயற்சிப்பேன் என்கிறார் தான்யா. பள்ளி, கல்லூரி நாட்களில் எவ்வித கேலியையோ அல்லது பெரிய புறக்கணிப்புகளையோ தான் சந்தித்ததில்லை என்கிறார் அவர். ஏழாம் வகுப்பு வரை கண்ணூரின் தர்மசாலாவில் உள்ள பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் படித்தார், பின்னர் 12ம் வகுப்பு வரை அனைவரையும் உள்ளடக்கிய பள்ளியில் படித்தார். பின்பு, கண்ணூர் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி படிப்பில் முதல்தரத்தில் தேர்ச்சி பெற்று, 2024ம் ஆண்டில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துகொண்டார். பட மூலாதாரம்,Thanya Nathan "நீதித்துறையை தேர்ந்தெடுத்ததற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. சட்ட ரீதியான அறிவு நிச்சயமாக ஒரு பலம். விவாதம் நடத்துவதோ அல்லது குரலை உயர்த்துவதோ இத்துறைக்கு முக்கியம் அல்ல. உங்களின் கருத்துகளை தெளிவாக சொல்வதுதான் முக்கியம் என்பதில் எனக்கு தெளிவு இருந்தது. விளிம்புநிலையில் உள்ள என்னைப் போன்றவர்களுக்கு சட்ட அறிவு நிச்சயம் வேண்டும். உங்களின் உரிமைகளை தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், நீங்கள் எந்தவித தாக்குதலுக்கு ஆளாகும்போதும் உங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்." சிறப்புப் பள்ளியில் படித்தது முக்கிய காலகட்டம் என்று கூறும் அவர், அங்குதான் பிரெய்லியில் படிப்பது உள்ளிட்ட மற்ற சமூக திறன்களை கற்றுக்கொண்டதாக கூறினார். "என்னுடைய சிறுவயது எல்லோரை போலவேதான் இருந்தது, ஒரு வித்தியாசம் எனக்கு பார்வை ரீதியான சவால் இருந்ததுதான். என்னைப் போன்றவர்கள் இந்த உலகத்துக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ள போராட வேண்டியிருக்கும். அதற்கு என் குடும்பம், நண்பர்கள், என்னுடைய சீனியர் சுனில் குமார் போன்றோர் எனக்கு உறுதுணையாக இருந்துவருகின்றனர். என் சீனியர் சுனில் குமார் எனக்கு தந்தை போன்றவர். ஒரு குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல சொல்லித் தருவார்." தான்யாவின் மூத்த வழக்கறிஞர் சுனில் குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஆரம்பத்தில் அவர் எப்படி பணியாற்றுவார் என்பதில் எங்களுக்கு பயம் இருந்தது. ஆனால், ஒரு வாரத்திற்குள்ளேயே தான்யா தன் திறமையை வெளிப்படுத்தினார். தான்யாவின் வாதங்களை நீதிபதிகள் அடிக்கடி பாராட்டுவார்கள். ஒரு வழக்கை தாக்கல் செய்வது, வாதிடுவது என எல்லா பணிகளையும் தனியாக பார்ப்பார்." என்றார். தான்யா நீதிமன்றத்தில் தனக்கென உதவியாளர் யாரையும் வைத்துக்கொள்ளவில்லை. எனினும், தனக்காக கிளார்க் ஒருவரை நியமித்துள்ளார், அவர் தான்யாவுக்காக தட்டச்சு செய்வது உள்ளிட்ட பணிகளில் உதவுகிறார். நீதித்துறையில் சவால்கள் பாகுபாட்டுடன் அணுகுபவர்களையோ அல்லது அவர்களின் கருத்துகளையோ தான்யா நாதன் பொருட்படுத்துவதில்லை. "நான் எல்எல்பி படிப்பை படிக்க முடியுமா என சிலர் கேட்பார்கள். என்னால் வழக்கறிஞராக வேலை பார்க்க முடியுமா என கேள்வி கேட்பார்கள். நான் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பிரெய்லி புத்தகம் (சித்தரிப்புப் படம்) நீதித்துறையில் பார்வை சவால் கொண்டவராக அவருக்கான வாய்ப்புகள் எப்படி இருந்தன? "நிச்சயமாக சமவாய்ப்பு என்பது இல்லை. ஆனால், சிலவற்றை செயல்படுத்துவதன் மூலம் இதனை மாற்ற முடியும். குறிப்பாக, கேரளாவில் நீதிமன்ற நடவடிக்கைகளை டிஜிட்டல்மயப்படுத்துவது நடைபெற்று வருகிறது. இதன்மூலம், சம வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும்." என்கிறார் தான்யா. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கண்ணூரில் உள்ள தலிபரம்பா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்துவந்தார் தான்யா. எனவே, அவர் இந்த தேர்வுக்காக தனியே பயிற்சி பெறவில்லை. வழக்கறிஞராக பயிற்சி பெறுவதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களே தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு போதுமானதாக இருந்திருக்கிறது. அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, இன்னும் ஓராண்டு காலம் அவர் வழக்கறிஞராக பயிற்சி பெற வேண்டும். "வழக்கறிஞராக பணியை தொடங்கியபோது என் மனதில் நிறைய நிச்சயமற்ற விஷயங்கள் இருந்தன. எனக்கு வேலை செய்வதற்கான சௌகரியமான சூழல் கிடைக்குமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், இந்த அழுத்தங்கள் எல்லாம் நீதிமன்றத்தில் கால்பதித்த உடனேயே மறைந்துவிட்டது. முதல் நாள் நீதிமன்றம் சென்றபோது நான் மிகுந்த ஆவலுடன் இருந்தேன். சிவில் வழக்கில்தான் வாதாடினேன். என்னுடைய வாதத்தை நீதிபதி பாராட்டினார். மற்ற வழக்கறிஞர்கள் எல்லோரும் எனக்கு ஊக்கமளித்தனர். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக்கொண்டனர். நான் எப்போதெல்லாம் வாதிடுகிறேனோ அப்போதெல்லாம் நீதிபதிகள் என்னை மனதார பாராட்டினர். அந்த ஊக்கம் தான் தொடர்ந்து என்னை முன்னேறச் செய்தது." என கூறுகிறார் தான்யா. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் என்ன மாற வேண்டும்? பார்வை சவால் உட்பட மாற்றுத்திறன் உடையவர்களுக்கு நீதிமன்றங்கள் அணுகக்கூடிய விதத்தில் இருக்கின்றதா என கேட்டதற்கு, "நீதிமன்றங்களில் உள்கட்டமைப்புகள் நன்றாக இருக்கின்றன. எங்களின் ஊன்றுகோல் உதவியுடன் நாங்கள் நீதிமன்றங்களின் எல்லா இடங்களுக்கும் செல்ல முடியும். ஆனால், உடலியல் ரீதியான சவால்களை கொண்டிருப்பவர்களுக்கு நீதிமன்றங்கள் முழுவதும் அணுகக் கூடியதாக இல்லை. மாடிப்படிகள் அவர்களுக்கு தடைகளாக இருக்கின்றன, மேலும் சில இடங்களில் சாய்வு நடைபாதை (ramp) இருப்பதில்லை. இவையெல்லாம் மாற வேண்டும்." என கூறினார். தான்யாவுக்கு வழக்குகள் தொடர்பாக மலையாள மொழியில் உள்ள பழைய ஆவணங்கள் பிரெய்லி அல்லது டிஜிட்டல் வடிவில் இல்லாததால், அவரால் அவற்றை அணுகுவதில் சிரமங்கள் இருப்பதாக கூறுகிறார் வழக்கறிஞர் சுனில் குமார். எனவே, அவற்றை டிஜிட்டல்மயப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். தொழில்நுட்பத்தின் மூலம் இந்த விஷயங்களை மேம்படுத்த வேண்டும் எனவும் அதன்மூலம் தான் சமவாய்ப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் தான்யா வலியுறுத்துகிறார். ஸ்க்ரைப் உதவி மூலம் தனி அறையில் தேர்வு எழுதியுள்ளார் தான்யா. மாற்றுத்திறன் உடையவர்கள் இத்தகைய தேர்வெழுதுவதற்கான தற்போதைய நடைமுறைகள் நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். "ஸ்க்ரைப் நியமித்தல், பதவி உயர்வு போன்றவை தொடர்பாக சமீப காலங்களில் உச்ச நீதிமன்றங்கள் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உறுதிசெய்துள்ளன." என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். "நம்முடைய இலக்கை அடைவதற்கு தொடர்ந்து கடினமாக உழைக்கும்போது அதற்கு பலன் கிடைக்கும். மாற்றுத்திறனாளிகள் தயங்கக்கூடாது. உச்ச நீதிமன்றம் நமக்கான வழியை திறந்துவிட்டுள்ளது, இனி, நாம்தான் நீதித்துறைக்குள் நுழைவதற்கான வேலைகளை செய்ய வேண்டும்." கடந்த 2009ம் ஆண்டு வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே திமிரி கிராமத்தை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் கொண்ட டி.டி. சக்கரவர்த்தி மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் 4 வயதில் உடல்நலக் குறைபாட்டால் பார்வையை இழந்ததாக ஊடக செய்திகள் கூறுகின்றன. அதேபோன்று, 2018ம் ஆண்டு ராஜஸ்தானை சேர்ந்த பிரம்மானந்த சர்மா என்பவர் சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் தன்னுடைய 22வது வயதில் கிளைகோமா நோயால் பார்வையை இழந்தவர் என ஊடக செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில், முழு பார்வை மாற்றுத்திறன் கொண்டவரான தான்யா, இளம் வயதில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று குறிப்பிடத்தக்க சாதனையை புரிந்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y4x3l6d38o
  5. சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையைப் பெற்று ஓமானை 105 ஓட்டங்களால் வென்றது இலங்கை 12 Feb, 2026 | 03:29 PM (பல்லேகலையிலிருந்து நெவில் அன்தனி) ஓமானுக்கு எதிராக கண்டி பல்லேகலையில் இன்று வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சொந்த மண்ணில் சர்வதேச ரி20 மற்றும் ரி20 உலகக் கிண்ண போட்டிக்கான அதிகூடிய மொத்த எண்ணிக்கையைக் குவித்த இலங்கை 105 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. இந்தியாவிலும் இலங்கையிலும் கூட்டாக நடத்தப்பட்டுவரும் பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் இன்றைய வெற்றியுடன் இரண்டு வெற்றிகளை ஈட்டியுள்ள இலங்கை பி குழுவில் 4 புள்ளிகளுடன் முதலாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இன்றைய போட்டியில் சொந்த மண்ணில் அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான சாதனையை இலங்கை படைத்த அதேவேளை, தசுன் ஷானக்க சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கான அதிவேக அரைச் சத சாதனையை நிலைநாட்டினார். மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ரி20 போட்டியில் 20 பந்துகளில் அரைச் சதம் குவித்த தசுன் ஷானக்க இன்றைய போட்டியில் 19 பந்துகளில் அரைச் சததத்தைப் பூரத்திசெய்து தனது முந்தைய சாதனையைப் புதுப்பித்தார். ஓமானுக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை தனது சொந்த மண்ணில் பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். அத்துடன் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இலங்கையின் இரண்டாவது அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். கென்யாவுக்கு எதிராக ஜொஹானெஸ்பேர்க் மைதானத்தில் 2007இல் 6 விக்கெட் இழப்புக்கு பெறப்பட்ட 260 ஓட்டங்களே சர்வதேச ரி20 கிரிக்கெட் மற்றும் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும். ஆரம்ப வீரர்கள் காமில் மிஷார (8), பெத்தும் நிஸ்ஸன்க (13) ஆகிய இருவரும் மீண்டும் பிரகாசிக்கத் தவறினர். (42 - 2 விக்.) என்றாலும் குசல் மெண்டிஸ் மூன்றாவது விக்கெட்டில் பவன் ரத்நாயக்கவுடன் பகிர்ந்த 94 ஓட்டங்களும் நான்காவது விக்கெட்டில் தசுன் ஷானக்கவுடன் பகிர்ந்த 63 ஓட்டங்களும் இலங்கையை பலமான நிலையில் இட்டது. பவன் ரத்நாயக்க 28 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 60 ஓட்டங்களைப் பெற்று ஆட்டநாயகனானார். தசுன் ஷானக்க பந்துகளில் 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 50 ஓட்டங்களைக் குவித்து களம் விட்டகன்றார். குசல் மெண்டிஸ் 45 பந்துகளில் 7 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று ரன் அவுட் ஆனார். சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இது அவரது 19ஆவது அரைச் சதமாகும். கமிந்து மெண்டிஸ் 19 ஓட்டங்களுடனும் துனித் வெல்லாலகே 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் ஜித்தேன் ராமானந்தி 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 226 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் 20 ஓவர்களையும் தாக்குப்பிடித்து 9 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ஓமான் துடுப்பாட்டத்தில் இருவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். 43 வயதான மொஹமத் நதீம் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவரை விட வசீம் அலி 27 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/238491
  6. Today
  7. கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள் சாத்தியவள அறிக்கை கிடைத்தால் அடுத்தாண்டு நிதி ஒதுகீடு - அமைச்சர் விமல் ரத்நாயக்க 12 Feb, 2026 | 02:56 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ஆகியபகுதிகளை இணைக்கும் இணைப்புப்பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். கொக்கிளாய் பாலத்தை அமைப்பதற்கான சாத்தியவள அறிக்கையினை எதிர்வரும் மேமாதத்திற்குள் துறைசார்ந்தவர்கள் கையளித்தால் எதிர்வரும் 2027ஆம் ஆண்டிக்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைப்பதற்கு தம்மால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகரஅபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்க பதிலளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்நேற்று புதன்கிழமை 11 இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், எமது கோரிக்கையை ஏற்று வட்டுவாகல் பாலத்தினை அமைப்பதற்கு முன்வந்தமைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துகொள்கின்றேன். அதேபோல் கொக்கிளாய் - புல்மோட்டை்இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றேன். ஏற்கனவே கடந்த 13.08.2025 அன்று இடம்பெற்ற ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப்பாலத்தை அமைக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தேன். அதற்கமைய 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த பாலத்தை அமைப்பதற்கு சாத்திய வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே சாத்தியவள ஆய்வுகளைத் தொடர்ந்து இந்த பாலத்தினை அமைப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென துறைசார்ந்த அமைச்சர் என்ற வகையில் தங்களிடம் கோரிக்கையை முன்வைக்கின்றேன். என அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை முன்வைத்திருந்தார். இந்நிலையில் எதிர்வரும் மேமாதத்திற்குள் குறித்த பாலத்தினை அமைப்பதற்கான சாத்தியவள அறிக்கையினை துறைசார்ந்தவர்கள் சமர்ப்பித்தால் 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த பாலத்தை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க இதன்போது பதிலளித்தார். அந்தவகையில் எதிர்வரும் மேமாதத்திற்குள் தம்மால் கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப்பாலம் அமைப்பதற்குரியாசாத்தியவள அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென இதன்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளால் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238481
  8. பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக கடற்கரையில் தரையிறங்கியது - சோமாலியாவில் சம்பவம் 12 Feb, 2026 | 11:51 AM சோமாலியாவின் தலைநகரான மொகடிஷுவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விமானமொன்று வானில் பறந்த 15 நிமிடங்களிலேயே திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு ஓடுபாதையை விட்டு விலகி, கடற்கரையோரத்தில் ஆழமற்ற நீர்ப்பரப்பில் தரையிறங்கிய சம்பவம் சோமாலியாவில் இடம்பெற்றுள்ளது. சோமாலியாவின் தலைநகரான மொகடிஷுவில் உள்ள விமான நிலையத்திலிருந்து 55 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை (10) இயந்திரக் கோளாறு ஏற்பட்டு கடற்கரையோர நீர்ப்பரப்பில் தரையிறங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதன்போது எவருக்கு காயங்கள் ஏற்படவில்லை என்றும் விமானத்தில் இருந்த 50 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விமானம் மட்டுமே சேதமடைந்திருப்பதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் முகமது ஃபரா நூஹ் (Mohamed Farah Nuh) குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/238460
  9. கடைசி பெஞ்ச் இத்தாலிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்திருந்தும் இத்தாலி வென்றிருக்கின்றது என்றால், அப்புறம் கடைசி பெஞ்சிற்கு என்ன மரியாதை............🤣.
  10. 'நிறுத்தி' பந்து வீசும் பாகிஸ்தான் வீரர் பற்றி விவாதம் - இந்தியாவுக்கு எதிராக துருப்புச் சீட்டாக இருப்பாரா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,உஸ்மான் தாரிக் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் 'அவர் என்ன செய்தார் என்பதை இந்தியாவால் கூட புரிந்துகொள்ள முடியாது.' 'இது இந்தியாவுக்கு எதிரான துருப்புச் சீட்டாக இருக்கும்.' பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டியின் போது, இந்தியத் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் போட்டி குறித்த நிகழ்ச்சியில் இப்படி பேசப்பட்டது. இந்த விவாதம், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக்கை பற்றியது. இவருடைய தனித்துவமான பந்துவீச்சு முறை இதற்கு முன்பே விவாதத்திற்குள்ளாகியுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோற்கடித்தது. இந்தப் போட்டியில் உஸ்மான் தாரிக் நான்கு ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்தப் போட்டியின் காட்சிகள் இந்தியாவில் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின. அதனைத் தொடர்ந்து, உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை குறித்து சில சமூக ஊடகப் பயனர்கள் கேள்வி எழுப்பினர். உஸ்மான் ஓடிவந்து நிறுத்தி பின்பு பந்து வீசும் விதம், விதிகளின்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்றும் மற்றவர்கள் கேள்வி எழுப்பினர். இருப்பினும் இந்த முழு விவாதத்திற்கும் மத்தியில், இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், உஸ்மான் தாரிக்குக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அஸ்வின், உஸ்மான் தாரிக்கை ஆதரித்துள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என்ன சொல்கிறார்கள்? ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி என்ற சமூக வலைதள பயனர், உஸ்மானின் பந்துவீச்சில் அமெரிக்க பேட்ஸ்மேன் ஒருவர் ஆட்டமிழக்கும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், உஸ்மான் பந்தை வீசுவதற்கு முன்பு ஒரு கணம் நிற்பது காணப்படுகிறது. ''ஆக்ஷன் ஒகே. ஆனால் நிறுத்துவது? அதுவும் பந்தை வீச வேண்டிய தருணத்தில் அவ்வாறு செய்வதா? இதை தொடரக்கூடாது'' என்று அந்த வீடியோ குறித்து ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பதிவிட்டுள்ளார். ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியின் பதிவை மறுப்பதிவிட்டு எழுதிய அஸ்வின்,'' ''ஒரு பேட்ஸ்மேன் எந்த பக்கத்தில் வேண்டுமானாலும் நின்று அடிக்கலாம். இப்படி செய்வதற்கு முன்பு அம்பையரிடமோ, பந்துவீச்சாளரிடமோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஒரு பந்துவீச்சாளர் விஷயத்தில் மட்டும் விதி கடுமையாக இருக்கிறது. அம்பையரிடம் சொல்லாமல் நடுவில் கையை மாற்றி பந்து வீசக் கூடாது. இந்த விதிதான் முதலில் மாற்றப்பட வேண்டும்," என்று எழுதியுள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,உஸ்மான் தாரிக் இதற்கிடையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ஒரு வீடியோவில், பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சு வலிமையானது என்று விவரித்ததுடன், உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை சுவாரஸ்யமானது என்று கூறியுள்ளார். "உஸ்மானின் பந்துவீச்சு முறை சுவாரஸ்யமானது. நீங்கள் டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று யாரோ ஒருவர் நிறுத்துவது போல் இது உணர்வைத் தருகிறது. அவர் நிறுத்திவிட்டு பின்னர் பந்து வீசுகிறார். அதேபோல் மெதுவாகப் பந்து வீசுகிறார். இதில் எந்தப் பிரச்னையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது சரியானதுதான். நீங்கள் நிறுத்தி பந்து வீசலாம். அதைப் பற்றி எந்த விதியும் இல்லை. மேலும் அவர் வீசும் மெதுவான பந்துகளில் கூட, முழங்கை மடங்குவது இல்லை," என்றார். ஆனால், கையை வளைக்காமல் பந்தின் வேகத்தை 20 முதல் 25 கிலோமீட்டர் வரை அதிகரிக்க முடியுமா என்ற கேள்வியையும் ஆகாஷ் சோப்ரா எழுப்பினார். இந்த விவாதம் தீவிரமடைந்த நிலையில், அஸ்வின் எக்ஸ் தளத்தில் மற்றொரு நீண்ட கருத்தைப் பதிவிட்டார். அதில் அவர், "முதலில், பந்துவீச்சு முறை சரியா இல்லையா என்பதை ஐசிசி பந்துவீச்சு சோதனை மையத்தில் மட்டுமே சோதிக்க முடியும்," என்று கூறினார். "இரண்டாவதாக, 15-டிகிரி விதி உள்ளது. அதன்படி, பந்துவீச்சாளர் தனது முழங்கையை 15 டிகிரி வரை நேராக்கலாம். மேலும், பந்துவீச்சாளர் 15 டிகிரியில் பந்து வீசுகிறாரா இல்லையா என்பதை மைதானத்தில் இருக்கும் நடுவர் தீர்மானிப்பது சாத்தியமற்றது." மேலும், "இதற்கு ஒரே தீர்வு, போட்டி நடக்கும் நேரத்திலேயே சோதனை கருவியை அறிமுகப்படுத்துவதுதான். இது ஒரு தெளிவற்ற விஷயம், இந்தத் தெளிவற்ற விஷயத்தைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் ஆதாயம் அடைகிறார்கள் என்று குற்றம் சாட்டுவது தவறு. கிரீஸுக்குள் பந்து வீசும்போது நிறுத்துவது சட்டப்பூர்வமானதா இல்லையா என்ற கேள்வியைப் பொறுத்தவரை, அது அவருடைய வழக்கமான பந்துவீச்சு முறை என்பதால் அது முற்றிலும் சட்டப்பூர்வமானது என்றே நான் நம்புகிறேன்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இயன் பிஷப் உஸ்மான் தாரிக் தனது பந்துவீச்சு பற்றி கூறியது என்ன? சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, உஸ்மான் தாரிக் அளித்த பேட்டி ஒன்றில், தனது பந்துவீச்சு முறை சாதாரணமாகத் தெரிவதில்லை, ஏனெனில் தனக்கு 'இரண்டு முழங்கைகள்' உள்ளன என்று கூறியிருந்தார். தனது பந்துவீச்சு முறை குறித்து ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டபோது, தான் மருத்துவரிடம் சென்று தனது இரு கைகளையும் பரிசோதித்ததாக அவர் கூறினார். அவரது உடல் அமைப்பு ஒரு சாதாரண மனிதரிடமிருந்து வேறுபட்டது என்கிறார் உஸ்மான் தாரிக். மேலும், "இது பிறப்பிலிருந்தே இருக்கிறது, இரண்டு முழங்கைகள் இருப்பதால், என்னால் என் கைகளை நேராக்க முடியாது," என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், உஸ்மான் தாரிக் லாகூரில் உள்ள பயோமெக்கானிக்ஸ் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்றும், அங்கு அவரது பந்துவீச்சு முறை அங்கீகரிக்கப்பட்டது என்றும் தெரிவித்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தாரிக் பந்து வீச்சு தொடர்பான அடுத்தடுத்த சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார். பேட்ஸ்மேன்களுக்கு இந்த ஆட்டம் எவ்வளவு ஆபத்தானது? அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற பிறகு ஈஎஸ்பிஎன் (ESPN) தளத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இயன் பிஷப், உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை குறித்து பேசினார். "அவர் வெவ்வேறு கோணங்களில் பந்து வீசுகிறார். அவர் ரவுண்ட் ஆர்ம் முறையிலும், பின்னர் ஓவர் தி டாப் முறையிலும் வீசுகிறார். இது உங்களுக்கு வெவ்வேறு அளவிலான பவுன்ஸ்களை வழங்குகிறது. ஆனால் அதைவிட முக்கியமாக, அவர் பந்து வீசுவதற்கு முன்பு நிறுத்தி, பேட்ஸ்மேன் எங்கே நகரக்கூடும் அல்லது அவர் என்ன ஷாட் ஆடக்கூடும் என்பதைப் பார்க்க அவருடைய கால்களைக் கவனிக்கிறார். பின்னர் அவர் பந்தை வீசும்போது, அது பேட்ஸ்மேனின் செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது," என்றார். அந்தச் சிறிய நிறுத்தம் தான் பந்துவீச்சாளருக்கு பேட்ஸ்மேனை விட முன்னிலை கொடுக்கிறது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் அதே விவாதத்தில் கூறினார். "ஏனெனில், இது அவருக்கு வெவ்வேறு மாற்றங்களை முயற்சிப்பதற்கான சுதந்திரத்தை அளிக்கிறது. கடந்த சில போட்டிகளில் நாம் பார்த்தது என்னவென்றால், அவர் (உஸ்மான்) சிறந்த மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களைக் கூட ஆட்டமிழக்கச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளார். இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு அவரது தனித்துவமான பந்துவீச்சு முறை மிகவும் முக்கியமானதாக அமையலாம்," என்றார். விதிகள் என்ன? இதுகுறித்த அம்சங்களைப் புரிந்துகொள்வதற்காக, லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தின் பயோமெக்கானிக்ஸ் நிபுணர் பேராசிரியர் முகமது ஓவைஸுடன் பிபிசி உருது பேசியது. கடந்த காலங்களில், பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முறையைச் சோதிப்பதற்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பேராசிரியர் ஓவைஸைப் பணியமர்த்தியுள்ளது. "பந்து வீசும்போது நிறுத்துவதைப் பொறுத்தவரை, அதில் எந்தப் பிரச்னையும் இல்லை, பந்து வீசும்போது முழங்கை கோணத்தின் மாற்றம் 15 டிகிரிக்கு மேல் இருக்கக்கூடாது. முழங்கையில் ஏற்படும் மாற்றம் 15 டிகிரி அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், அந்தப் பந்து செல்லுபடியாகும் எனக் கருதப்படும்," என்றார். "ஒரு பந்துவீச்சாளர் நிறுத்தி பந்து வீசினால், அப்போதும் அதே விதிகள் பொருந்தும் என்பது உறுதி. ஐ.சி.சி விதிகளில் நிறுத்தி பந்து வீசுவது குறித்து எந்த விதிமுறையும் இல்லை, 15 டிகிரி சாய்வு பற்றி மட்டுமே பேசுகிறது," என்றார். "சில நேரங்களில் ஒரு பந்துவீச்சாளரின் கை அமைப்பு இயற்கையாகவே அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்கும். எனவே, வெறும் கண்ணால் பார்க்கும்போது, பந்துவீச்சாளர் பந்தை எறிகிறார் , அதாவது தவறான முறையில் பந்து வீசுகிறார் என்று தோன்றலாம். இருப்பினும், ஐ.சி.சி கேமராக்கள் மூலம் அளவிடப்பட்டு ஆய்வு செய்யப்படும்போது, அது 'சக்கிங்' வகையின் கீழ் வராது. அந்தச் சோதனையில் பந்துவீச்சாளர் தவறாக வீசுவது நிரூபிக்கப்படாமல் போக முற்றிலும் வாய்ப்புள்ளது," என்றார். உஸ்மான் தாரிக்கின் பின்னணி ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தகவலின்படி, உஸ்மான் தாரிக் நவம்பர் 2023-இல் பாகிஸ்தான் தேசிய டி20 கோப்பை போட்டியில் அறிமுகமானார். அவர் 2024-இல் பிஎஸ்எல் தொடரிலும் பங்கேற்றார், ஆனால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், 2024-25 காலப்பகுதியில், அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான முறையில் மீண்டும் விளையாடத் தொடங்கி, 15 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும், இந்தக் காலக்கட்டத்தில் அவரது பந்துவீச்சு முறை குறித்து இரண்டு புகார்கள் வந்தன. முதல் முறை 2024 பிஎஸ்எல் தொடரின் போது புகார் எழுந்தது. ஆனால், லாகூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, அவர் தேர்ச்சி பெற்றார் மற்றும் அவரது பந்துவீச்சு தொடர்ந்தது. அடுத்த பிஎஸ்எல் தொடரிலும் அவர் மீது மீண்டும் ஒரு புகார் அளிக்கப்பட்டது, ஆனால் அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையிலும் அவர் தேர்ச்சி பெற்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c626jnllrn5o
  11. ந‌பீயா அணிய‌ சேர்ந்த‌ ஒரு சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ப‌ந்தை சூப்ப‌ரா போட்டார் இப்ப‌டி ப‌ட்ட‌ வீர‌ர்க‌ள் ஜ‌பிஎல் ஏல கோமாளிக‌ளு தெரிவ‌தில்லை சும்மா விர‌ல் விட்டு என்ன‌ கூடிய‌ நாட்டு வீர‌ர்க‌ளை ந‌ட‌த்தும் தொட‌ர் குப்பை தொட‌ர் வ‌ங்கிளாதேஸ் வீர‌ர்க‌ளிட‌ம் திற‌மை இருந்தும் அவ‌ர்க‌ளை ஏல‌த்தில் வேண்டுவ‌தில்லை சின்ன‌ சின்ன‌ அணிக‌ளில் ஒருசில‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்...............இன்று இத்தாலி அணிய‌ சேர்ந்த‌ வீர‌ர் குறைந்த‌ ர‌ன்ஸ் விட்டு கொடுத்து மூன்று விக்கேட் எடுத்தார்.................................................
  12. அல்லைப்பிட்டியில் பொலிஸாரினால் சிறுவன் ஒருவன் சு*ட்டு கொ*ல்லப்பட்டமையை... நியாயப்படுத்த இராணுவ புலனாய்வார்கள் முதல் சமூக மயப்படாத ஜேவிபி உறுப்பினர்கள் வரை பலரும் முயற்சிக்கின்றார்கள். இராணுவ புலனாய்வாளன்... அருண் சித்தார்த், பொலிஸ் அதிகாரிகளை நியாயப்படுத்த கொ*ல்லப்பட்ட சிறுவன் போ*தைப்பொருள் பாவனையாளன் என வெளியிட்ட அறிக்கையை Capital TV வெளியிட்டு இருக்கின்றது. இதில் இருக்கும் உண்மை பொய்களுக்கு அப்பால் 2017-ம் ஆண்டு, காக்கைத்தீவு பகுதியில், க*ஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட (யாழ்ப்பாண MC நீதிமன்றம் வழக்கு இலக்கம் 292/17) புலனாய்வாளன் அருண் சித்தார்த்துக்கு இருக்கும் வாழும் உரிமை ஒரு 17 வயது சிறுவனுக்கு இருக்க கூடாதா ? திரு ரணில் விக்கிரமசிங்கே அதிகாரத்திலிருந்து போது 1,000 kg 'குஷ்' ரக போ*தை பொருள் கடத்திய Capital TV உரிமையாளர் திரு வின்சேந்திரராஜன் அவர்களின் மகனுக்கு இருக்கும் உரிமை ஒரு 17 வயது சிறுவனுக்கு இருக்க கூடாதா ? குடி போ*தையில் வாகனத்தை மோதி பெண் மற்றும் குழந்தையை காயப்படுத்திய ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அசோகா ரன்வாலா (முன்னாள் சபாநாயகர்) விற்கு இருக்கும் வாழும் உரிமை ஒரு 17 வயது சிறுவனுக்கு இருக்க கூடாதா ? இது போதாதாதென்று மறுபுறம் குறித்த சிறுவனை கள்ள மாடு கடத்துபவன் என Narrative set பண்ண ஜேவிபி தரப்பு முயற்சிக்கின்றது. மட்டக்களப்பில் மாதவனை மயிலத்தமடுவை ஆக்கிரமித்து நீதிமன்ற உத்தரவுகளை மீறி நுற்றுக்கணக்கான மாடுகளை சிங்கள குடியேற்றவாசிகள் சு*ட்டு கொ*ன்று இருக்கின்றார்கள். ஜேவிபி அதிகாரத்தில் ஒரு வருடம் கடந்து விட்ட பின்னரும் கூட இந்த தமிழ் பண்ணையாளர்களின் வாழ்வாதார நெருக்கடிக்கு தீர்வு இல்லை. இந்த அவலங்கள் பற்றியெல்லாம் பேசாத ஜேவிபி புத்திசாலிகள் நேற்றும் இன்றும் பசு மாடுகளுக்காக உருகின்றார்கள். நூற்றுக்கணக்கான மாடுகளை கொ*ன்று மட்டக்களப்பு 1000 ற்கு மேற்பட்ட பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்த சிங்கள குடியேற்றவாசிகள் மீது நீட்டப்படாத துப்பாக்கிகள் வெறும் 17 வயது சிறுவன் மீது கள்ள மாடு கடத்துபவன் என்கின்ற பெயரில் நீட்டப்பட்டதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இங்கே கொல்லப்பட்ட சிறுவன் உட்பட குடும்ப உறுப்பினர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கூடாது என யாரும் சொல்ல வில்லை. அவர்கள் போதை வியாபாரிகளாகவோ அல்லது , மாடு கடத்துபவர்களாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவதில் எந்த தவறும் இல்லை. குறிப்பாக நிறை மாத பசு மாடுகளை திருட்டு தனமாக கொன்று கடத்துபவர்களாக இருந்தால் மன்னித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் இங்கு பொலிஸ் தொழிலுக்குரிய நெறிமுறைகளிற்கு மாறாக எழுந்தமனாக ஒரு சிறுவனை சு*ட்டு கொ*ன்று இருப்பதே கேள்விக்கு உட்படுத்த படுகின்றது. குறிப்பாக பல இடங்களில் சமூக குற்றவாளிகளுக்கு துணை நின்று பாதுகாக்கின்ற பொலிஸ் 17 வயது சிறுவனை சுட்டு கொன்றது தான் சர்ச்சையாகி இருக்கின்றது. தங்களுடைய தேவைகளுக்காக ரவுடி தனங்களில் ஈடுபடும் அருண் சித்தார்த்தின் ஆவா குழு உட்பட பெரும்பாலான சமூக விரோத குழுக்களை வளர்த்து விடும் இராணுவ புலனாய்வு கட்டமைப்புக்களை பாதுகாத்து கொண்டு ஒரு சிறுவனை சு*ட்டு கொ*ன்று நியாயம் பேச முடியாது. அதாவது போதை பொருள் வியாபாரிகளுக்கு அரணாக இருக்கும் கடற்படை கட்டமைப்புகளை பாதுகாத்து கொண்டு, வாகனத்தை நிறுத்தவில்லை என்கின்ற ஒற்றை காரணத்திற்காக ஒரு சிறுவனை சு*ட்டு கொன்று விட்டு அவன் போ*தை பொருள் பாவித்த (?) ஆள் என சப்பை காரணங்களை சொல்ல முடியாது. இனமொன்றின் குரல்
  13. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம் Feb 12, 2026 - 06:15 PM உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அதன் விசாரணை நடவடிக்கைகள் கொழும்பு 07, பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இலக்கம் C 76 எனும் முன்னாள் அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதை விரைவுபடுத்துமாறு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (12) அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் நீதிமன்றங்களை நிறுவும் பணிகளை இன்று (12) நேரில் கண்காணித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதேபோல், முன்னாள் அமைச்சர்களினால் பயன்படுத்தப்பட்டு, தற்போது நீதிமன்றங்களை நிறுவுவதற்காகப் பொறுப்பேற்கப்பட்ட ஏனைய வாசஸ்தலங்களிலும் நீதிமன்றங்களை அமைப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக வழங்குமாறு அவர் குறிப்பிட்டார். ஊழல் எதிர்ப்புச் செயல் திட்டத்தின் (2025-2029) கீழ், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளைச் செயற்படுத்தி, வழக்குக் காரியங்களை விரைவுபடுத்துவதற்காக முன்னாள் அமைச்சர்களினால் பயன்படுத்தப்பட்ட நான்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் தற்காலிக அடிப்படையில் நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன. இலக்கம் B/88, கிரகரி வீதி, கொழும்பு 07, இலக்கம் C-76, பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07, இலக்கம் B-108, விஜேராம வீதி, கொழும்பு 07 மற்றும் இலக்கம் B-12, ஸ்டேன்மோர் கிரசன்ட் ஆகிய முகவரிகளில் உள்ள 4 வீடுகள் நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmljgb3bx0007356n6zh1ws40
  14. எல்லாருக்கும் சுடலை ஞானம் தான் பிறக்கிறது. ருசியா, உக்கிரனுகு தொங்க முதல் பல வருடங்கள் சொல்லி அந்தத்தை தூக்கி எறிந்து, ;,,, இப்போது ஒரு நிலைமை இருமாகி இருக்கிறது. அதன் படியே போகவேண்டியது தானே. இது கூட, அமெரிக்கா, இரோப்பா அதன் பாதுஜாப் பார்த்துகொள்ள வேண்டும்என்ப\என்பதில் ருவாகிய இரானுப்பலத்தை கட்டி எழுப்புவாதத்திற்கு வேண்டிய கால அவகாசத்துக்கு. மேட்ற்கு காலனித்துவ காகாலதிலிறுந்து போட ஒப்பந்தத்தை கிழிப்பதில் தான் வரலாறு. அதில் மட்டுப்பட்டது ருசிஷ்ய, சீன, இரான், வடகொரியாவிடம். இவர்கள் கொடுக்கும் கடுக்காயில் வாந்திபேதி பெயர்த்து, தஞ்சம் கெடும் நிலையில், பழகிப்பார்ப்போம் என்ரா சாலமன் பாப்பையா ரஜனியின் ஒரு படத்தில்சொல்வது போல.
  15. ந‌ம்பீயா அணி இந்தியா அணிய‌ பெரிய‌ ஸ்கோர் அடிக்க‌ விடாம‌ ம‌ட‌க்கிட்டின‌ம்🙏.......................
  16. யாழ். அல்லைப்பிட்டியில் சிறுவன் படுகொ*லை - மர்ம முடிச்சுகள் அவிழுமா? காணொளி: 👉 https://www.facebook.com/reel/2224159248112226 👈
  17. இந்தியா 209. இதுவரை, இலங்கையின் 225தான் அதிகூடிய ஓட்டம்.
  18. போர‌ போக்கை பார்த்தால் அடிப்பின‌ம் போல் தான் இருக்கு....................
  19. அவிசேக் சர்மா இன்று விளையாட‌ வில்லை..........
  20. நிற்காமல் போனால் ஆளுக்கு சுடலாம்தானே? - என வாதிடுவோர் கவனத்துக்கு.. இலங்கையில் பொலிஸ் கட்டளையை மீறிச் சென்ற வாகனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்ட ரீதியான நீதி கிடைத்த அல்லது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட சில முக்கிய உதாரணங்களை முதலில் குறிப்பிடுகிறேன். 1. நாரம்மல துப்பாக்கிச் சூடு (2024) நாரம்மல பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றதாகக் கூறப்பட்ட லொறி மீது சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தச்சர் ஒருவர் (K.A. Roshantha Kumarasiri) உயிரிழந்தார். January 18, 2024 ⚖️ நீதிமன்ற நடவடிக்கை: இச்சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் (SI) மற்றும் பொலிஸ் கொஸ்தாபல் ஆகியோர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டனர். ⚖️ உடனடி நஷ்டஈடு: சம்பவத்தைத் தொடர்ந்து, அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் உயிரிழந்தவரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று முதற்கட்டமாக 1 மில்லியன் ரூபா (10 இலட்சம்) நஷ்டஈட்டுச் காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். ⚖️ உயர் நீதிமன்றத்தில் வழக்கு: உயிரிழந்தவரின் மனைவி காமனி ரூபிகா பிரியங்கனி, தனது கணவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் (FR) மனுவைத் தாக்கல் செய்தார். இதில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசினால் 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. ⚖️ வழக்கின் தற்போதைய நிலை: இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பில் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் விடுத்திருந்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்காக முன்னிலையாகப் போவதில்லை எனச் சட்டமா அதிபர் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த வழக்குத்தவணை April 4, 2026. --------------------------------------------------- 2. ரம்புக்கனை சம்பவம் (2022): எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் (Chaminda Lakshan) கொல்லப்பட்டார். இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணையில், பொலிஸார் தேவையற்ற மற்றும் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டது. ⚖️ துப்பாக்கிச் சூட்டில் இறந்த 41 வயதுடைய சமிந்த லக்ஷனின் மனைவி மற்றும் சம்பவத்தில் காயமடைந்த பலரால் தாக்கல் செய்யப்பட்ட ஏழு அடிப்படை உரிமை மனுக்களை தொடர உச்ச நீதிமன்றம் (SC) 28-07-2025 அனுமதி அளித்தது. அடுத்த வழக்குத்தவணை February 27, 2026. ⚖️ கேகாலை நீதிவான் நீதிமன்றில் இவ்வழக்கு குற்றவியல் வழக்காகவும் விசாரிக்கப்படுகிறது. சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து போலீசார்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு. பொலிஸ் அதிகாரிகள் சார்பில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு விசாரணைகள் தொடர்கின்றன. --------------------------------------------------------------- இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட இத்தகைய வழக்கு 1. ரதுபஸ்வல துப்பாக்கிச் சூடு (Rathupaswala Shooting) 2013 ஆம் ஆண்டு சுத்தமான குடிநீர் கோரிப் போராடிய மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர். பல வருட போராட்டத்திற்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு மே மாதம், இதற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி ஒருவருக்கும் மற்றுமொரு சிப்பாய்க்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இது இராணுவத்தினர் சிவில் கடமைகளின் போது அத்துமீறினால் தண்டிக்கப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்தியது. --------------------------------------------------------------- நீதிமன்றம் தனது தீர்ப்புகளில் மேற்கோள் காட்டும் சட்டப்பிரிவுகள்: ⚖️ இலங்கையின் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் (Code of Criminal Procedure Act) பிரிவு 23: Arrest how made. கைது செய்யப்படுவதை ஒருவர் பலமாக எதிர்க்கும் போது மட்டுமே பலத்தைப் பயன்படுத்தலாம். ஆனால், மரண தண்டனைக்குரிய குற்றத்திற்காக குற்றம் சாட்டப்படாத ஒரு நபரின் மரணத்தை ஏற்படுத்தும் உரிமையை இந்தப் பிரிவில் உள்ள எதுவும் வழங்காது. ⚖️ Constitution CHAPTER III, FUNDAMENTAL RIGHTS Article 11: எவரும் சித்திரவதைக்கு அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படக் கூடாது. Article 13 (1) : சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி தவிர வேறு எந்த நபரையும் கைது செய்யக்கூடாது. Article 13 (4) சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி, தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தவிர, எந்தவொரு நபருக்கும் மரண தண்டனை அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடாது. ------------------------------------------------------------------- ⚖️ சர்வதேச மனித உரிமைத் தரநிலைகள்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களின்படி, உயிர்ச்சேதம் விளைவிக்காத வகையில் எச்சரிக்கை விடுத்து, பிற வழிகள் இல்லாத பட்சத்தில் மட்டுமே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட வேண்டும். நிராயுதபாணியான ஒருவரைச் சுடுவது சட்டப்படி குற்றமாகும். சுருக்கமாகக் கூறினால், மார்ச் 28, 2010 தேதியிட்ட IGP சுற்றறிக்கை 843 இன் படி, காவல்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அது தடைசெய்யப்படவில்லை, நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தேவைப்பட்டால் துப்பாக்கிகளைப் பயன்படுத்த ஒரு காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. என்றபோதிலும்... சாதாரண சூழ்நிலையில் கட்டளையை மீறி ஓடும் ஒருவரைக் கொல்லும் அதிகாரம் இராணுவத்திற்கும் இல்லை.. பொலிசாருக்கும் இல்லை. அவ்வாறு செய்வது கொலைக்கு சமமான குற்றமாகக் கருதப்படவே வாய்ப்புள்ளது. இவை அனைத்தும், பொலிஸார் வாகனத்தின் டயர்களை நோக்கிச் சுடுவதன் மூலம் வாகனத்தை நிறுத்த முயற்சிக்கலாமே தவிர, ஓட்டுநரை அல்லது பயணிகளைக் குறிவைத்துச் சுடுவது சட்டவிரோதமானது என்பதை வலியுறுத்துகின்றன. ஆகவே, நிற்காமல் போனால் ஆளுக்கு சுடலாம்தானே? - என வாதம் செய்வதானது ஒரு சட்டமீறல் செயலை தடுக்க மற்றுமொரு சட்டமீறல் செயலை தெரிவு செய்வதையே ஊக்குவிக்கும். எடுத்தும் சுடவும்- நெற்றிப் பொட்டில் சுட வேண்டும் என்றெல்லாம் விருப்பம் கொள்வதற்கு நீங்களொன்றும் ஆயுதப்புரட்சி நாட்டில் வாழவில்லை. சட்ட உருவாக்கத்துக்கான தேர்தல்களில் வாக்களித்து சட்ட ஆட்சி நாட்டில் வாழ்கிறீர்கள் என்பதால் சட்ட மீறல்கள் குறித்து பேசுவதே சரியானது. நம்ம யாழ்ப்பாணம்
  21. தம்பி அது 2025 இல் சொன்னது. இப்போ 2026.
  22. இந்தியா இதை இன்று முறியடிக்கும். பேசாமல் மரியாதையாக தானே மட்டையடியை தெரிவு செய்திருக்கலாம்.
  23. எண்பது வீதமான எம்மவர்களும், ஊடகம் நடத்துபவர்களும்.... நேரில் பார்த்த மாதிரி... போதை வஸ்து கடத்துபவன். வாள் வெட்டுக்காரன், மாட்டு கள்ளன் என்றெல்லாம் எழுதி பொலிஸ்காரனுக்கு வக்காலத்து வாங்குவதைப் பார்க்க... அனுரா கட்சியின் அனுதாபிகள் போல் தெரிகின்றது. ஸ்ரீலங்கா பொலிஸ், இராணுவம் சொல்வதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு.. கொல்லப் பட்ட அந்தச் சிறுவன் மீது அபாண்டமாக பழி சுமத்திக் கொண்டிருப்பதை பார்க்க... தமிழர் மத்தியில் உண்மையான செய்திகளை எதிர்பார்ப்பது கடினம் போலுள்ளது.
  24. அப்ப‌டித் தான் நானும் நினைத்தேன் க‌ந்த‌ப்பு அண்ணா😄😁 ஆனால் விளையாட்டில் ந‌ல்ல‌ மாஜிக் ந‌ட‌ந்து விட்ட‌து இன்று யாரும் எதிர் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம் நேபால் இப்ப‌டி ப‌டு தோல்வி அடையும் என்று....................................... நேபால் என‌க்கு முத‌ல் முட்டைய‌ த‌ந்து விட்ட‌து இன்றையான் ப‌ரிட்சை தோல்வி ஹா ஹா......................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.