24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
வீதியோரம்.
வீதியோரம் . மலர் ....... 9. அப்போது விநோதன் தனக்குள் பேசுவதுபோல் சொல்கிறான் அவன் போதையில் இருந்த இடத்தில் இருந்து முதலைகள் அவ்வளவு தூரம் இழுத்து வந்திருக்காது, யாரோ அவனை இழுத்து வந்து குளக்கரைக்கு அருகில் விட்டிருக்க வேண்டும். சட்டென மணிமேகலை நிக்கிறாள்.அவள் கையிலிருந்த முயல் பொத்தென்று கீழே விழுகிறது….. நீ ….நீ என்ன சொல்கிறாய் விநோ …. — நீ ஏன் பதறுகிறாய் மேகலை ….நான் எனது ஊகத்தைத்தான் சொன்னேன் வேறொன்றுமில்லை…. இதுவே இன்றோ நாளையோ போலீஸ் வந்து இந்த இடத்தை ஆராய்ந்தால் அவர்களும் இப்படி ஊகிக்கலாம் இல்லையா ….. — எட்டிவந்து அவன் கையைப் பிடித்தவள், விநோ நான் உனக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா ….. — ம் …..சொல்லு …. — ம் ….. வந்து நான்தான் அவனை அங்கு இழுத்து வந்து போட்டது. அவனைக் கொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. அவன் வாழ்நாள் முழுதும் வேதனையால் துடிக்க வேண்டும். கொல்ல நினைத்திருந்தால் குளத்துக்குள்ளேயே தள்ளி விட்டிருப்பேன்……. ஆனால் நீ எப்படிக் கண்டு பிடித்தனி…… — அதுவா ….முதலைகள் இழுத்து வந்திருந்தால் காலோடு சேர்ந்து முழுஉடலும் தரையில் தேய்ந்து வந்த அடையாளம் இருந்திருக்கும்…..கூடவே அதை இழுத்துவந்த முதலைகளின் காலடையாளமும் இருந்திருக்கும்….. ஆனால் அவையொன்றும் அங்கில்லை. யாரோ அவன் காலைத் தூக்கிப் பிடித்து இழுத்ததால் ஜட்டியோடு அவனது பிருஷ்டங்களும் முதுகும் தேய்ந்த அடையாளங்கள்தான் அங்கிருக்கு. அத்துடன் சிறிய அளவுடைய பெண்ணின் கால்தடம்தான் அங்கிருந்தது. — அது இன்னும் அங்கிருக்கா, பொறு நான் சென்று அதை அழித்து விட்டு வருகிறேன் என்று அவள் திரும்ப ……. — அவசியமில்லை மேகலை அவற்றை நான் அகற்றி விட்டேன் நீ பயப்பிடத் தேவையில்லை….. — அது நான் என்று எப்படி நினைத்தாய் ……. — இங்கு தொழில் செய்யும் இரு பெண்களும் மற்றும் நீயும் சுஜிதாவும்தான் இருக்கிறீர்கள்….. அதில் அவர்களுக்கு அவனைக் கொள்ள வேண்டிய தேவை இல்லை….. சுஜிதாவும் யுகேந்திரனும் கடையிலே சப்ளை பண்ணிக் கொண்டிருந்தவர்கள்.நான் யோசித்துப் பார்த்த பொழுது நீதான் அவர்கள் மோட்டார் சயிக்கிளில் வந்து இறங்கியதும் அதைப் பார்த்த நீ பதட்டப் பட்டதைக் கவனித்தேன்…. உடனே நீ கடையில் இருந்து வீட்டுக்கு போனதையும் பார்த்தேன். அவர்கள் நேராக கடைக்கு வராமல் அவர்களுடன் போய் விட்டார்கள். அப்புறம்தான் நீ கடைக்கு வந்தாய். உனக்கு தொடர்ந்து வேர்த்துக் கொட்டிக் கொண்டிருக்கு, அடிக்கடி சேலைத்தலைப்பால் முகத்தை துடைத்துக் கொண்டிருந்தாய். இரவு எல்லோரும் குளத்தடிக்கு ஓடுகையில் சுஜிதா உட்பட நீ மட்டும் சும்மாவேனும் எட்டியும் பார்க்கவில்லை. அதனால் நீயாக இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். எனினும் இது பற்றி உன்னிடம் நான் எதுவும் கேட்கப்போவதில்லை….. —- ஏன் ….. — ஏன் என்றால் எங்கள் நால்வருக்கும் தத்தமக்கு வலி தந்தவர்களை தங்களால் முடிந்தளவு தண்டிக்கும் உரிமை அவரவர் புத்திக்கு ஏற்றவாறு உண்டு என்று நான் நினைக்கிறேன்…… —- நீ சொல்வதும் ஒருவகையில் பார்த்தால் சரியாகத்தான் இருக்கு…..ஆனாலும் என் மனப்பாரம் குறையவாவது நான் உனக்கு சொல்கிறேன் கேள். உன்னைவிட வேறு யாரிடம் நான் சொல்ல முடியும்…… அன்று நாங்கள் சேர்ந்திருந்தபொழுது என்னுடலில் நூற்றுக்கணக்கான தழும்புகள், காயங்கள் நீ பார்த்திருப்பாய். அப்பொழுது உன்னாலையே அவற்றைப் பார்த்து ஜீரணிக்க முடியவில்லை……ஆனால் நாள்தோறும் அந்த நரகங்களை அனுபவித்த எனக்கு எப்படி இருந்திருக்கும். அவற்றில் ஏராளமான துன்புறுத்தல்கள் இந்தப் படுபாவியால் ஏற்பட்டதுதான். உண்மையில் இவன் ஒரு ஆண்மையற்றவன். அதை மறைக்க தன்னிடம் கிடைப்பவர்களுக்கு மிகக் கேவலமான அருவருப்பான தண்டனைகள் குடுப்பான். அவனுக்கு குழந்தைகள், பெரியவர், ஆண்கள், பெண்கள் என்ற பேதமெல்லாம் கிடையாது.சதா எந்நேரமும் போதையில்தான் இருப்பான். கூட்டாளிகளுக்கு உணவு தேடிவருவதும் சமைத்து வைப்பதுவும்தான் இவனது வேலை. எந்நேரமும் பெண்ணோ பையனோ அவன்கூட இருக்க வேணும். குளிக்கப்போனாலும் சரி, தூங்கப்போனாலும் சரி….போதையில் கையில் கிடைக்கிறதால் எடுத்து அடிப்பான். உடலில் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் சுருட்டால் சூடு வைப்பான்….. கொஞ்சம் கண்களை மூடி தன்னை நிதானித்துக் கொண்டு சொல்கிறாள்…… கடவுள் இருக்கிறான் விநோ, நேற்று எதிர்பாராது இந்த மிருகத்தைக் கண்டதும் எனக்குள் இருந்த மிருகம் விழித்துக் கொண்டது. அவன் மட்டும் கடைக்குள் வந்திருந்தால் என்னை மட்டுமல்ல இந்த சின்னஞ் சிறுசுகளையும் விட்டிருக்க மாட்டான்….உன்னாலையும் அவனை ஒன்றும் செய்ய முடியாது……அவனுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கு…..அதுதான் அவனுக்கு முடிவு கட்ட சந்தர்ப்பம் பார்த்திருந்தேன்.அவன் சாகக்கூடாது சாகும்வரை நடைப்பிணமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போதுதான் அவன் அங்கு காட்டில் நிறைவெறியில் மரக்குற்றியில் சாய்ந்து கிடப்பதைப் பார்த்தேன்.அருகில் யாருமில்லை. அந்தப் பெண்களும் இவனது கூட்டாளியுடன் லொறிக்குள் இருந்தார்கள். எனக்கு எப்படி அவ்வளவு பலம் வந்ததென்று தெரியாது. உடனேயே நான் அவன் கால்களைப் பிடித்து தரதரவென்று இழுத்து வந்து குளக்கரையில் கிடத்தி விட்டு அங்கே கிடந்த கறிகளை எடுத்து வந்து கரையிலும் குளத்துக்குள்ளும் போட்டு விட்டு சற்று தள்ளிப்போய் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது முதலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. முதல் வந்த முதலை அவன் கையைக் கடித்து இழுக்க மற்றது இவன் தொடையை கடித்து சதையைப் பிய்த்தெடுக்கும் வரை பார்த்து விட்டு கடைக்குள் வந்து நிம்மதியாய் வேலை செய்து கொண்டிருந்தேன். என்று கூறினாள்......! மலர் . ........ 🐇 9.
-
இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு
புதிய QR முறை - சிக்கல்களுக்கு இன்று பிற்பகல் தீர்வு! Mar 15, 2026 - 10:10 AM தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றிருந்த மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் நபர்கள், எவ்வித சிக்கலுமின்றி தமது புதிய QR குறியீட்டைப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமது வாகனங்கள் அல்லது தொலைபேசி இலக்கங்களை மாற்றியுள்ளவர்கள் மற்றும் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை மிக விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட விசேட விடயங்கள் தொடர்பில் இன்று (15) பிற்பகல் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. இன்றைய தினத்திற்குள்ளேயே அவற்றுக்கான உரிய தீர்வுகளை வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஊடாக எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்தி, பதுக்கல் மற்றும் முறைகேடுகளைத் தவிர்ப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmr9g01y0013356pit1k9bjw
-
புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையத்தை விரைவில் ஸ்தாபிக்க அமைச்சர் கே.டி. லால்காந்த உறுதி
புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையத்தை விரைவில் ஸ்தாபிக்க அமைச்சர் கே.டி. லால்காந்த உறுதி 15 Mar, 2026 | 09:51 AM வவுனியாவில் புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையமொன்றினை ஸ்தாபிப்பதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் விடுத்த கோரிக்கையினை விரைவில் நடைமுறைப்படுத்துவதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த உறுதியளித்துள்ளார். விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் விசேட வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த வியாழக்கிழமை 12 அன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடயம் தொடர்பில் பின்வருமாறு தெரிவித்தார், வவுனியா மாவட்டத்தில் ஓமந்தை கமநல சேவைகள் நிலையம், கோவில்குளம் கமநல சேவைகள் நிலையம், பம்பைமடு கமநல சேவைகள் நிலையம் ஆகியவை அதிக சுமையுடன் இயங்கிவருகின்றன. இந்த மூன்று கமநல சேவைகள் நிலையங்களிலிருந்தும் குறிப்பிட்ட பகுதிகளை ஒன்றினைத்து புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையம் உருவாக்கப்பட வேண்டும் எனும் முன்மொழிவை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். இதன்மூலம் வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு கமநல சேவைகள் நிலையங்களினூடாக சிறந்த, விரைவான சேவையினை வழங்க முடியும் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் , இது ஒரு சிறந்த முன்மொழிவு. இந்த விடயத்தை கையாள்வதற்காக ஏற்கனவே ஒரு குழுவொன்று அமைச்சு மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த முன்மொழிவை வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சமர்ப்பித்து அனுமதியினை பெற்று அதனை குறித்த குழுவிற்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையத்தை விரைவாக உருவாக்கித்தர முடியும் என தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/240987
-
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து எல்பிஜி எரிவாயுவுடன் வரும் கப்பல்கள் - மத்திய அரசு அளித்த புதிய தகவல்
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து எல்பிஜி எரிவாயுவுடன் வரும் கப்பல்கள் - மத்திய அரசு அளித்த புதிய தகவல் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தியக் கொடியை ஏந்திய இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முடிந்தது (சித்தரிப்புப் படம்) 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை தொடர்ந்து, மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றங்களுக்கு மத்தியில் இரண்டு இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்தன. இந்திய வெளியுறவு அமைசகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெர்ஸ்வால் சனிக்கிழமை இத்தகவலை அளித்தார். ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இந்தியாவுக்கு வரக்கூடிய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளன. ஷிவாலிக், நந்தா தேவி எனும் இரண்டு இந்திய கப்பல்கள், ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளன, அவை தற்போது இந்திய துறைமுகங்களை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன." என்றார். இரு கப்பல்களிலும் தலா 46,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான எல்பிஜி எரிவாயு என, மொத்தமாக சுமார் 93,000 மெட்ரிக் டன்கள் எரிவாயு உள்ளது என அவர் தெரிவித்தார். மேற்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய சூழல் தொடர்பாக வெளியுறவு துறை, பெட்ரோலிய துறை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் ரந்தீர் ஜெய்ஸ்வால் இந்த தகவலை தெரிவித்தார். வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (வளைகுடா), அசீம் மஹாஜன் கூறுகையில், மேற்கு ஆசியாவில் நீடிக்கும் மோதலால் இந்தியர்கள் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காயமடைந்துள்ளார் என்றார். தற்போதைய சூழலில், அப்பகுதியில் இருக்கும் இந்திய அதிகாரிகள் முழு நேரமும் அதுகுறித்து பணியாற்றி வருகின்றனர், சூழல் குறித்து கண்கானித்து வருகின்றனர். அவர் கூறுகையில், "முந்தைய சம்பவங்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காணாமல் போயுள்ளார். ஓமன், இராக், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் சென்றடைவதற்கும் காணாமல் போனவரை தேடுவதையும் உறுதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்." என்றார். வளைகுடா பிராந்தியத்தில் எத்தனை இந்திய கப்பல்கள் சிக்கியுள்ளன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ரந்தீர் ஜெய்ஸ்வால் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், பல இந்திய கப்பல்கள் வளைகுடா பிராந்தியத்தில் சிக்கிக்கொண்டிருப்பதாகவும், இந்தியா அதன் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். அவரை பொறுத்தவரை, இந்த கப்பல்கள் பாதுகாப்பாகவும் தங்குதடையுமின்றி கடக்க சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் ஒருங்கிணைத்துவருவதாகவும் தெரிவித்தார். அவர் கூறுகையில், "இந்த மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள பெரும் விமான இடையூறுகள் காரணமாக, இந்தியாவில் இரானிய குடிமக்கள் பலர் சிக்கியுள்ளனர். இந்த குடிமக்களை தங்கள் நாட்டுக்கு அழைத்துவர இரானிய அதிகாரிகள் விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுலாவாக வந்தவர்கள் அல்லது ராஜ்ஜீய அதிகாரிகளாக வந்தவர்களும் இதில் அடங்கும்." என்றார். "இந்த விமானம் கொச்சியை வந்தடைந்துள்ளது. ஐஆர்ஐஎஸ் லாவன் விமானத்தின் விமான குழுவினர் உட்பட பயணிகள் கப்பலில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த விமானம் கொச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது." என்று அவர் மேலும் கூறினார். மத்திய கிழக்கு நெருக்கடிக்கு மத்தியில், பாரசீக வளைகுடாவில் இந்திய கொடிகளை ஏந்திய 22 கப்பல்கள் உள்ளன. இதுதொடர்பாக, கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா கூறுகையில், இதில் 6 எல்பிஜி டேங்கர்கள், ஒரு எல்என்ஜி டேங்கர், நான்கு கச்சா எண்ணெய் டேங்கர்கள், ரசாயன பொருட்கள் ஏந்திய ஒரு டேங்கர், மூன்று கொள்கலன் கப்பல்கள், இரண்டு பெரிய தாங்கு கப்பல்கள், நீருக்கு அடியில் தோண்டுவதற்கு பயன்படும் டிரெட்ஜர் கப்பல் ஆகியன அடங்கும். "மேலும், ஒரு கப்பல் 'எம்ப்டி பாலஸ்ட்' நிலையில் உள்ளது; மூன்று கப்பல்கள் 'டிரை டாக்' நிலையில் உள்ளன. 'எம்ப்டி பாலஸ்ட்' என்பது அந்த கப்பல் எந்த சரக்கையும் எடுத்துச் செல்லாமல் இருப்பதை குறிக்கும். 'டிரை டாக்' என்பது அந்த கப்பல்கள் வழக்கமான பழுது பார்க்கும் பணிகளில் இருப்பதை குறிக்கும்." என அவர் தெரிவித்தார். புதிய உத்தரவுகளை வெளியிட்ட அரசு உள்நாட்டு எரிவாயு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கிறது. சனிக்கிழமை, அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955 இன் விதிகளைப் பயன்படுத்தி அரசாங்கம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், குழாய் மற்றும் எல்பிஜி இணைப்புகள் இரண்டையும் வைத்திருக்கும் நுகர்வோர் எல்பிஜி இணைப்பை தொடர்ந்து வைத்திருக்க முடியாது. அத்தகைய நபர்கள் எந்த அரசு நிறுவன விநியோகஸ்தர் மூலமாகவும் தங்கள் வீட்டு எல்பிஜி சிலிண்டர்களை மீண்டும் நிரப்ப முடியாது. அத்தகையவர்கள் உடனடியாக தங்கள் எல்பிஜி இணைப்பை ஒப்படைக்க வேண்டும் என்று அரசாங்கம் தனது உத்தரவில் கூறியுள்ளது. குழாய் எரிவாயு இணைப்பு உள்ள நுகர்வோருக்கு எல்பிஜி இணைப்பு வழங்கப்படாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் தொடர்பான அறிவிப்பு சனிக்கிழமையே வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. வெளிப்படையாக, இந்த உத்தரவு குழாய் எரிவாயு கிடைக்கும் பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே பொருந்தும். எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பின் நிலை என்ன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சுஜாதா சர்மா மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே நடந்து வரும் போர், உலகம் முழுவதும் எண்ணெய் விநியோகத்தைப் பாதித்துள்ளது மற்றும் அதன் விலைகள் அதிகரித்துள்ளன. இந்தியாவில், உள்நாட்டு எரிவாயு விநியோகத்தில் இதன் தாக்கம் குறிப்பாகத் தெரிகிறது. பல நகரங்களில் எல்பிஜி எரிவாயுக்கான நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன, மேலும் வணிக நுகர்வோர் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை நடைபெற்ற ஒரு மாநாட்டில், பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, "எங்களிடம் (இந்தியா) போதுமான அளவு கச்சா எண்ணெய் விநியோகம் உள்ளது, மேலும் எங்கள் சுத்திகரிப்பு நிலையங்களும் முழு திறனுடன் செயல்படுகின்றன. சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பு இல்லை என எந்த தகவலும் இல்லை" என்றார். "இந்தியாவிடம் போதுமான அளவு டீசல் மற்றும் பெட்ரோல் கிடைக்கிறது. தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான டீசல் மற்றும் பெட்ரோலை நாங்கள் உற்பத்தி செய்கிறோம், எனவே, இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை." எனவும் அவர் உறுதி கூறினார். மேலும் பேசிய சுஜாதா ஷர்மா கீழ்க்காணும் கருத்துக்களை தெரிவித்தார். "இயற்கை எரிவாயுவைப் பொறுத்தவரை, எல்பிஜி விநியோகம் தடைபடும் இடங்களில் வணிக நுகர்வோரை பிஎன்ஜி இணைப்புகளுக்கு மாற்ற அரசாங்கம் விரும்புகிறது. இதற்காக, இந்திய எரிவாயு ஆணையம் லிமிடெட் பல ஆபரேட்டர்களுடன் சந்திப்புகளை நடத்தி, அவர்கள் வழங்கக்கூடிய வணிக நுகர்வோருக்கு உடனடியாக பிஎன்ஜி இணைப்புகளை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது. "எல்பிஜி விநியோகத்தைப் பொறுத்தவரை, புவிசார் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கு இன்னும் கவலையளிக்கும் விஷயம் என்று நான் கூறுவேன். மக்கள் பீதியில் எரிவாயுவை முன்பதிவு செய்கிறார்கள். நேற்று முன்தினம் 75 லட்சம் முன்பதிவுகள் இருந்தன, அவை இன்று 88 லட்சமாக அதிகரித்துள்ளன. இது மக்கள் பீதி காரணமாக முன்பதிவு செய்கிறார்களே தவிர வேறில்லை." "நாட்டு மக்கள் பீதி அடைவதைத் தவிர்த்து, தேவைப்படும்போது மட்டுமே முன்பதிவு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இது அனைவருக்கும் நல்லது." உரங்களும் பாதிக்கப்படுமா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான போர் இந்தியாவில் எரிவாயு நுகர்வோர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மத்திய கிழக்கு மோதல் காரணமாக இந்தியாவில் எழுப்பப்படும் மற்றொரு கவலை உர விநியோகம். இந்தியாவின் தற்போதைய கையிருப்பு தேவையை விட அதிகமாக இருப்பதாக அரசாங்கம் கூறினாலும் இந்த கவலை உள்ளது. "இந்தியாவின் யூரியா கையிருப்பு கடந்த ஆண்டில் இதே சமயத்தில் இருந்ததை மிக அதிகமாக உள்ளது. DAP (டை அமோனியம் பாஸ்பேட்) கையிருப்பு கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம். அதேபோல், எங்கள் NPK (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்) கையிருப்பும் கடந்த ஆண்டை விட மிக அதிகமாக உள்ளது" என்று அவர் கூறினார். "இந்தியாவின் உள்நாட்டு யூரியா உற்பத்தியைப் பொறுத்தவரை, தற்போதைய உற்பத்தி வழக்கமான நுகர்வை விட அதிகமாக இருக்கும், குறிப்பாக ராபி பருவம் முடிவடையவிருப்பதால். மேலும், சில ஆலைகளின் திட்டமிடப்பட்ட வருடாந்திர பராமரிப்பை நாங்கள் ஏற்கெனவே முடித்துவிட்டோம், அதாவது கிடைக்கக்கூடிய எரிவாயுவைப் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முடியும்." "தற்போதைய சூழ்நிலையை எதிர்பார்த்து, உரத் துறை ஏற்கெனவே உலகளாவிய டெண்டர்களை முன்கூட்டியே வெளியிட்டிருந்தது. போட்டி அடிப்படையில் 'உடனடி எரிவாயுவை' (spot gas) வாங்க உரத் துறை முடிவு செய்துள்ளது, மேலும் கொள்முதல் முதல் கட்டம் செவ்வாய்க்கிழமைக்குள் நிறைவடையும்." "இந்தியாவின் அனைத்து சர்வதேச கூட்டாளிகளும் எந்த இடையூறும் இல்லாமல் விநியோகம் செய்து வருகின்றனர், மேலும் காரீஃப் பருவத்தில் உரங்களுக்கான தேவை உச்சத்தை எட்டும் மே 15 ஆம் தேதிக்குள் போதுமான மற்றும் பாதுகாப்பான உரங்கள் இருப்பில் இருக்கும் என்று நம்புகிறோம்." இந்த விஷயத்தில் கருத்து தெரிவிப்பவர்கள் உண்மைகளின் அடிப்படையில் பேச வேண்டும் என்றும், முழுமையான தகவல்கள் இல்லாமல் ஊகங்கள் மூலம் மக்களிடையே பீதியை பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx24873441mo
-
மாகாணசபை தேர்தலை வருட இறுதிக்குள் நடத்த தீர்மானம்!
மாகாணசபை தேர்தலை வருட இறுதிக்குள் நடத்த தீர்மானம்! Published By: Digital Desk 1 15 Mar, 2026 | 07:40 AM • ஜூனில் தேர்தல் முறைமை அறிவிக்கப்படும் • புலம்பெயர்ந்தோருக்கு வாக்களிக்க வாய்ப்பு (லியோ நிரோஷ தர்ஷன்) மாகாணசபை தேர்தலை வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் எந்த முறைமையில் தேர்தலை நடத்துவது மற்றும் தேர்தலுக்கான திகதி என்பவற்றை அறிவிக்கவும் தீர்மானித்துள்ளது. உத்தேச மாகாணசபை தேர்தலில் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. மேலும் எந்த முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பது குறித்து தீர்மானிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள குழு இவ்வாரம் கூட உள்ளது. இதன் போது தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது. இது குறித்து மேலும் தெளிவுப்படுத்துகையில், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாக உள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது மாகாணசபை தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்புகளை அரச தரப்பு வெளியிட உள்ளது. மறுபுறம் மாகாணசபை தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் குறித்த குழுவுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்த பரிந்துரைகளில் தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்துதல் போன்ற விடயங்களுக்கு தீர்வுகள் முன்வைக்கப்பட உள்ளது. அத்துடன் புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியிருந்த நிலையில், கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு இராஜதந்திர மையங்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்துரையாடி இருந்தார். இந்த கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட விடயங்கள் மற்றும் புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை குறித்து பரிந்துரைகள் வெளிவிவகார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனடிப்படையில் உத்தேச மாகாணசபை தேர்தலில் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது. பொருளாதார இலக்குகளை நோக்கி செல்லும் போது அநாவசியமான அழுத்தங்களை தவிர்க்கும் வகையிலேயே மாகாணசபை தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வருடத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நிறைவுப்பெறுகின்றது. அந்த வரிச்சலுகையினை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஜனவரியில் மீண்டும் விண்ணப்பிக்கப்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள, மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், நல்லாட்சி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என நான்கு துறைகளில் 27 நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும். இலங்கையை பொறுத்த வரையில் மாகாணசபை தேர்தலை நடத்துவது மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்தல் என்பன முக்கிய விடயங்களாக உள்ளன. மறுபுறம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நடைப்பெறவுள்ளது. மாகாண சபை தேர்தல் விடயத்தில் அநாவசியமான அழுத்தங்கள் வரக்கூடும் என்பதால் அதற்கு முன்னரே தேர்தலுக்கான திகதியை அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/240979
-
அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு: சுவிட்சர்லாந்து அரசு அதிரடி
அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு: சுவிட்சர்லாந்து அரசு அதிரடி Mar 15, 2026 - 08:52 AM அமெரிக்க இராணுவத்தின் இரு உத்தியோகபூர்வ விமானங்கள் தமது வான்பரப்பிற்கு மேலாகப் பறப்பதற்கு விடுத்த கோரிக்கையை சுவிட்சர்லாந்து நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டின் நடுநிலைமை தொடர்பான சட்டங்களை மேற்கோள் காட்டி இந்த அனுமதி மறுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு விமானங்களுக்கு சுவிட்சர்லாந்து தனது வான்பரப்பைத் திறக்காத அதேவேளை, மேலும் மூன்று விமானங்களுக்கு வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. இது குறித்து சுவிட்சர்லாந்து அரசு விடுத்துள்ள அறிக்கையில், பராமரிப்பு விமானங்கள் மற்றும் போக்குவரத்து விமானங்களுக்கு மாத்திரம் தமது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmr6ln9e0010356pmdk7xekm
-
இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு
QR குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்கப்படாது : இன்று முதல் அமுல் - எவ்வாறு QR குறியீட்டை பெறுவது ! 15 Mar, 2026 | 06:35 AM நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு முறைமை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய புவியியல் - அரசியல் சூழ்நிலையால் பெற்றோலியப் பொருட்களின் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் நாட்டில் எரிபொருள் தேவையும் அசாதாரணமாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நாட்டில் உள்ள தற்போதைய எரிபொருள் கையிருப்பு வேகமாக குறைந்து வருவதால், கிடைக்கும் எரிபொருளை சீராக நிர்வகிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சில தரப்பினர் சட்டவிரோதமாக அதிகளவு எரிபொருளை வாங்கி குவித்து வருகின்றனர் என்பது அண்மையில் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்துவதற்காகவே QR குறியீட்டு முறைமை மீண்டும் அமுல்படுத்தப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 மார்ச் 15 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் செல்லுபடியாகும் QR குறியீடு இல்லாமல் எந்த எரிபொருள் நிரப்பு நிலையமும் எரிபொருள் வழங்காது என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. QR குறியீட்டை பெறும் முறை ஏற்கனவே QR குறியீட்டிற்கு பதிவு செய்துள்ள வாகன உரிமையாளர்கள், தங்களது வாகன உரிமையும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணும் மாற்றமில்லையெனில், 2026 மார்ச் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் fuelpass.gov.lk இணையதளத்தின் “Vehicle Login” பகுதியின் மூலம் தங்களது QR குறியீட்டை பதிவிறக்கம் செய்யலாம். வாகன உரிமை அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மாற்றமடைந்திருந்தால், அவர்கள் 2026 மார்ச் 15 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் மீண்டும் இணையதளத்தின் “Vehicle Registration” பகுதியின் மூலம் புதிதாக பதிவு செய்ய வேண்டும். அதேபோல், இதுவரை QR குறியீட்டிற்கு பதிவு செய்யாதவர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் 2026 மார்ச் 15 காலை 6.00 மணி முதல் fuelpass.gov.lk இணையதளத்தின் மூலம் பதிவு செய்து QR குறியீட்டை பெற முடியும். வாகனங்களுக்கு வாராந்தம் ஒதுக்கப்பட்ட எரிபொருள் அளவு வாகன வகைகளுக்கான எரிபொருள் அளவுகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: * பேருந்துகள் – 60 லீற்றர் * மோட்டார் சைக்கிள் – 5 லீற்றர் * வேன் – 40 லீற்றர் * மோட்டார் கார் – 15 லீற்றர் * லொறி – 200 லீற்றர் * வாகனங்கள் (Land Vehicles) – 25 லீற்றர் * முச்சக்கர வண்டி – 15 லீற்றர் * விசேட பயன்பாட்டு வாகனம் – 40 லீற்றர் * குவாட்ரிசைக்கிள் (Land Vehicles) – 5 லீற்றர் தேசிய உற்பத்தி மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான வாகனங்களுக்கு தனிப்பட்ட எரிபொருள் விநியோக முறைமையும் அமுல்படுத்தப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/240978
- Today
-
அதிகரிக்கும் வெப்பம்: மே 25 வரை நீடிக்கும் என எச்சரிக்கை
அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் மழை வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் முக்கிய அறிவிப்பு 15 Mar, 2026 | 08:42 AM மத்திய,சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் வவுனியா, மன்னார், அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். https://www.virakesari.lk/article/240977
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரானின் இஸ்பஹான் நகர் மீது தாக்குதல்: தொழிற்சாலை ஊழியர்கள் 15 பேர் பலி Mar 15, 2026 - 08:26 AM ஈரானின் இஸ்பஹான் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொழிற்சாலை ஊழியர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வெப்பமூட்டிகளைத் தயாரிக்கும் சிவில் தொழிற்சாலை ஒன்றின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இஸ்பஹான் நகரம் இவ்வாறான தாக்குதல் நடவடிக்கைகளின் முக்கிய மையமாக மாறியுள்ளது. நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மிக முக்கியமான நகரமான இஸ்பஹானில், இராணுவ மற்றும் சிவில் ஆகிய இரு துறைகளுக்கும் சொந்தமான தொழிற்சாலைகளும், ஈரானின் மிக முக்கியமான பல அணுசக்தி நிலையங்களும் அமைந்துள்ளன. இஸ்பஹான் தவிர, தெஹ்ரான், தப்ரீஸ், பண்டார் அப்பாஸ் மற்றும் கர்மான் மாகாணத்தின் சிர்ஜான் ஆகிய நகரங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmmr5vigc000z356p0wq7ltik
-
போதைப்பொருள் கடத்தல் மூலம் வாங்கிய சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்
போதைப்பொருள் கடத்தல்காரரின் சொத்துக்கள் முடக்கம் Mar 15, 2026 - 07:44 AM போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி, போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்தித் தனது மனைவியின் பெயரில் வாங்கிய 155 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்று, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டது. பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அந்த உத்தரவு நீடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான அந்தப் பெண் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய பகுதியில் அந்தப் பெண்ணின் பெயரில் வாங்கப்பட்ட சுமார் 400 இலட்சம் (4 கோடி) ரூபாய் பெறுமதியான மூன்று மாடி வீட்டையும் காணியையும் இம்மாதம் 13 ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmmr4d7i1000w356pou7cte5z
-
ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை: ட்ரம்ப் அறிவிப்பு
ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை: ட்ரம்ப் அறிவிப்பு Mar 15, 2026 - 06:50 AM ஈரானுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வதற்குத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ஈரானுக்கு உடன்படிக்கை செய்துகொள்ளும் தேவை உள்ள போதிலும், அதற்கான நிபந்தனைகள் இன்னும் போதுமானதாக இல்லாததால் தாம் தற்போது அதனைச் செய்ய விரும்பவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார். அந்நிபந்தனைகள் எவை என்பதைக் கூற மறுத்துவிட்ட அமெரிக்க ஜனாதிபதி, ஈரானின் அணுசக்தி அபிலாஷைகளை முற்றாகக் கைவிடும் அர்ப்பணிப்பு அந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று மட்டும் குறிப்பிட்டார். அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்கு உதவுவதற்கு சில நாடுகள் முன்வந்துள்ள போதிலும், அந்த நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய மையமான 'கார்க்' (Kharg) தீவை அமெரிக்கா முழுமையாக அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், வேடிக்கைக்காக அமெரிக்கா இன்னும் சில தடவைகள் அந்த இடத்தைத் தாக்கக்கூடும் என்றும் இதன்போது கூறியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmr2goy5000u356p2jffdg8t
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
ஹோமுஸ் நீரிணையைப் பாதுகாக்க பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் போர்க்கப்பல்கள் அனுப்ப வேண்டும் – டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்து Published By: Digital Desk 3 15 Mar, 2026 | 10:46 AM மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி விநியோக வழித்தடமான ஹோமுஸ் நீரிணையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கப்பல் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவரவும் போர்க்கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இந்தப் பணியில் அமெரிக்காவுடன் இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஈரான் மீதான போர் ஆரம்பித்து இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஹோமுஸ் நீரிணையில் தொடர்ச்சியாகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பில் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "ஈரானின் இராணுவ பலம் 100 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்ட போதிலும், அவர்கள் இன்னும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடும். பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் உடனடியாகப் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும். அமெரிக்கா தொடர்ந்து ஈரானியக் கடற்பரப்பில் தாக்குதல்களை முன்னெடுத்து, நீரிணையை பாதுகாப்பானதாக மாற்றும்." உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹோமுஸ் நீரிணையைத் தொடர்ந்து முடக்கி வைக்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் மையமான கார்க் தீவு மீது அமெரிக்கா மிகக்கடுமையான குண்டுவீச்சை நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் நிறுவனங்களின் எண்ணெய் உட்கட்டமைப்புகளை அழிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளதுடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்கள் "நியாயமான இலக்குகள்" என்றும் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் கோரிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு, பிராந்தியத்தில் கப்பல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நேச நாடுகளுடன் பல்வேறு விருப்பத்தேர்வுகள் தொடர்பில் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. யுத்தம் ஆரம்பித்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இதுவரை 16 கப்பல்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக UKMTO தரவுகள் தெரிவிக்கின்றன. தற்போது எந்தவொரு நாட்டு கடற்படையும் கப்பல்களுக்குப் பாதுகாப்பாகச் செல்லாத நிலையில், சர்வதேச கூட்டுப் படையை உருவாக்குவதே ட்ரம்ப்பின் திட்டமாக உள்ளது. https://www.virakesari.lk/article/241001
-
இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு
இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு Mar 15, 2026 - 01:48 AM மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, இன்று (15) காலை 6.00 மணி முதல் QR குறியீட்டு முறை கட்டாயமாக்கப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை காரணமாக எரிபொருள் விநியோக மார்க்கங்கள் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகக் கையிருப்பில் உள்ள எரிபொருளை மிகவும் அவதானமாகக் கையாள வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பதுக்கி வைக்கும் மோசடிகளில் ஈடுபடுவதே இந்த அசாதாரண கேள்வி அதிகரிப்புக்குப் பிரதான காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வாறான மோசடிகளைத் தடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்கமைய, இன்று (15) காலை 6.00 மணி முதல் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது. வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறவில்லை எனில், 2026.03.14 நள்ளிரவு முதல் https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்தினூடாக தமக்குரிய QR குறியீட்டைப் பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம் என அந்த அமைச்சு அறிவித்துள்ளது. வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறியிருப்பின், 2026.03.15 காலை 6.00 மணி முதல் அதே இணையத்தளத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். முன்னர் QR பதிவு செய்யாதவர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் (RMV) புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், இன்று காலை 6.00 மணி முதல் https://fuelpass.gov.lk/ இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு (லீட்டரில்): பேருந்துகள் : 60 மோட்டார் சைக்கிள்கள் : 5 வேன்கள் : 40 மோட்டார் வாகனங்கள் : 15 மோட்டார் லொறிகள்: 200 காணி வாகனங்கள் : 25 முச்சக்கர வண்டிகள்: 15 விசேட தேவைக்கான வாகனங்கள் : 40 குவாட்ரிசைக்கிள்கள் (Quadricycle): 5 நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான வாகனங்களுக்கு, உரிய நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும். தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்து சபை ஊடாக விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmqre9bq000t356pv7bj2q3a
-
15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின் கடந்த வருட வெற்றிக்கு பதிலடி கொடுக்குமா இந்து கொழும்பு?
யாழ். இந்துவை வீழ்த்தி கடந்த வருட தோல்விக்கு பதிலடி கொடுத்து இந்துக்களின் சமரை சமப்படுத்தியது இந்து கொழும்பு 15 Mar, 2026 | 01:15 AM (நெவில் அன்தனி) கொழும்பு பி. சரவணமுத்து சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று நிறைவடைந்த 15ஆவது இந்துக்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்து கல்லூரியை 5 விக்கெட்களால் வீழ்த்தி கடந்த வருட தோல்விக்கு பதிலடி கொடுத்தது இந்து கல்லூரி கொழும்பு. இந்த வெற்றியுடன் இந்துக்களின் சமரை 4 - 4 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் இந்து கல்லூரி கொழும்பு சமப்படுத்தியது. இந்த வெற்றியானது இந்த வருடம் வைர விழாவை கொண்டாடும் இந்து கல்லூரி கொழும்புவுக்கு பெரு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் குறைந்த மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட இப் போட்டியில் 82 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்து கல்லூரி கொழும்புவுக்கு வெற்றி இலகுவாக அமைந்துவிடவில்லை. ஐந்து விக்கெட்களை இழந்த பின்னரே இந்து கல்லூரி கொழும்பு வெற்றியை சுவைத்தது. ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிந்துகொண்டிருக்க, மறுபக்கத்தில் பொறுமையுடனும் சிறந்த நுட்பத்துடனும் துடுப்பெடுத்தாடிய திவாகரன் யாதவ் 120 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய வேலாந்துரை அபினேஷ் 22 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரஞ்சித் குமார் அகிலேஷ் 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் சுதர்சன் சுபர்ணன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கனகராஜா நித்தீஸ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்து கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களையும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்து கல்லூரி கொழும்பு அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 119 ஓட்டங்களையும் பெற்றன. இரண்டாவது இன்னிங்ஸில் யாழ். இந்து கல்லூரி சகல விக்கெட்களையும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. எண்ணிக்கை சுருக்கம் யாழ். இந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 102 (ரவீந்திரன் ஆதித்தியன் 31, தினேஷ்ராமன் பிரேமிகன் 26, நேசரூபன் நிருஜன் 14, விஷ்வநாதன் யுவராஜ் 33 - 5 விக்., ராமநாதன் தேஷ்கர் 20 - 3 விக்., திவாகரன் யாதவ் 19 - 2 விக்.) இந்து கொழும்பு 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 119 (சுரேஷ் சர்விஷ் 32, வேலாந்துரை அபினேஷ் 24, முத்துகுமார் அபிஷேக் 22, சுதர்சன் சுபர்ணன் 43 - 6 விக்., நேசரூபன் நிரூஜன் 22 - 2 விக்.) யாழ். இந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 98 (சுதர்சன் சுபர்ணன் 34, நேசரூபன் நிரூஜன் 21, ராமநாதன் தேஷ்கர் 20 - 4 விக்., விஸ்வநாதன் யுவராஜ் 44 - 4 விக்.) இந்து கொழும்பு - வெற்றி இலக்கு 82 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 82 - 5 விக். (திவாகரன் யாதவ் 34 ஆ.இ., வெலாந்துரை அபினேஷ் 22, ரஞ்சித் குமார் அகிலேஷ் 11 ஆ.இ., சுதர்சன் சுபர்ணன் 28 - 2 விக்., கனகராஜ் நித்தீஸ் 29 - 2 விக்.) விருதுகள் சிறந்த துடுப்பாட்ட வீரர்: சுதர்சன் சுபர்ணன் (யாழ். இந்து) சிறந்த பந்துவீச்சாளர்: விஸ்வநாதன் யுவராஜ் (இந்து கொழும்பு) சிறந்த களத்தடுப்பாளர்: கனகராஜ் நித்தீஸ் (யாழ். இந்து), ஆட்டநாயகன்: திவாகரன் யாதவ் (இந்து கொழும்பு) https://www.virakesari.lk/article/240973
-
போரை ஆதரித்த இரானியர்கள் இப்போது சந்தேகப்படும் விஷயம் என்ன?
ஈராக்கைப் போல ஒன்றுக்கும் உதவாத நாடாக மாற்றிவிடுவார்கள்.
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
ஈரான் மீதான போர் சொல்லும் செய்தி
ஈரான் மீதான போர் சொல்லும் செய்தி! --- --- --- *மத்திய கிழக்கு பொருளாதார முதலீடுகளை மேற்கு- ஐரோப்பிய நாடுகளுக்கு மாற்றுவதே, அமெரிக்கத் திட்டம். *இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு நெருக்கடி *இந்திய வெளியுறவுக் கொள்கைக்குள் ஒளிந்திருக்கும் இலங்கை... *ஜீசிசி நாடுகளின் கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகள் தாக்கப்பட்டால்??? --- --- -- ஜீசிசி எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (Gulf Cooperation Council - GCC) நாடுகள் பாரசீக வளைகுடாவின் எல்லையில் உள்ள ஆறு அரபு நாடுகளாகும். யுஏஇ (UAE) எனப்படும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை இப்பேரவை உள்ளடக்கியது. எண்ணெய் எரிவாயு மற்றும் அரசியல் - பொருளாதார இயங்குநிலையின் மீதான இந்த நாடுகளின் பரஸ்பர நம்பிக்கையின் ஊடாக செயற்பட்டு வரும் இந்த அமைப்பு, 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த ஆறு அரபுநாடுகளின் பொருளாதார – அரசியல் இலக்கின் அடிப்படையில் தான், மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதார கட்டமைப்பும், புவிசார் நலன்களும் தங்கியுள்ளன. மிகச் சமீபத்திய காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரம் என்பது எண்ணெய் சார்ந்திருப்பதில் இருந்து விலகி, 2032 ஆம் ஆண்டுக்குள் $24.7 பில்லியன் என எதிர்பார்க்கப்படும் டிஜிட்டல் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வளர்ச்சி (Diversification) நோக்கி வேகமாக நகர்கிறது. சவுதி அரேபியா மற்றும் யுஏஇ எனப்படும் டுபாய், அபுதாபி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பில் முதலீடு செய்து வருகின்றன. கச்சா எண்ணெய் வருவாயை மாத்திரம் நம்பியிருக்காமல், சுற்றுலா, நிதி, தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் மத்திய கிழக்கு நாடுகள் முதலீடு செய்து வருகின்றன. குறிப்பாக, யுஏஇ நாடுகளை மையப்படுத்திய சவுதி அரேபியாவின் திட்டங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றன. அதாவது, பொருளாதாரப் பன்முகப்படுத்தல் (Diversification) இந்த நாடுகளின் பிரதான நோக்கம். இந்த நோக்கத்தை அரசியல் - பொருளாதார செயல் முறைமைகளின் ஊடாக இந்த நாடுகள் செயற்படுத்தி வரும் நிலைதான் மேற்கு – ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்ட தவறியுள்ளது. குறிப்பாக மேற்கு - ஐரோப்பிய நாடுகளில் முதலீடுகள் குறைவடைந்து வந்தன. இஸ்ரேல் உட்பட மேற்கு – ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பெரும் முதலீட்டாளர்கள், டுபாய், கட்டார் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அமீரகத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். இப் புன்பிலத்தில், 2015 ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை கடந்த பத்து வருடங்களில் பொருளாதாரம், வர்த்தகம், ஆகியவற்றில் ஜீசிசி எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு பேரவை வளர்ச்சி அடைந்துள்ளது. 2024 ஆண்டு ஜீசிசி நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product – GDP) சுமார் $2.3 ரில்லியன் ஆக உயர்ந்தது. 2022 ஆம் ஆண்டு எண்ணெய் உற்பத்தி அதிகரித்ததால் 7.3% வரையான வளர்ச்சியை. எட்டியது. 2023 - 2024 ஆம் வருட காலத்தில் உலக பொருளாதார சவால்களினால் அதன் வளர்ச்சி குறைந்தாலும், 2025 - 2026 காலத்தில் மீண்டும் 3–4.5 % வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதாக தபிஸ்னஸ்இயர் (thebusinessyear) என்ற ஆங்கில செய்தித் தளம் சுடடிக்காட்டியுள்ளது. குறிப்பாக கடந்த பத்து வருடங்களில் எண்ணெய் சாராத (Non-oil sectors) வர்த்தகம் சுற்றுலா, நிதி, தொழில்நுட்பம் ஆகிய பொருளாதார துறைகளிலும் பாரிய வேகமாக பாரிய முன்னேற்றத்தை அடைந்தது. அதேவேளை, டிஜிட்டல் மாற்றம் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளன. இரண்டு உதாரணங்கள் பின்வருமாறு: 1) சவுதி அரேபியாவின் நியுஓம் எனப்படும் 'புதிய எதிர்காலம் (New Future - NEOM) எனப்படும் பெரிய திட்டம் 9 மில்லியன் மக்களுக்கான பெரிய நகர அபிவிருத்தித் திட்டமாகும். 2019 ஆம் ஆண்டு இதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. செங்கடலின் வடக்கு முனையில், எகிப்துக்கு கிழக்கே அகாபா வளைகுடா மற்றும் ஜோர்டானின் தெற்கு பகுதிகளை மையமாக் கொண்ட இத் திட்டத்தின் மொத்த பகுதி 26,500 கிமீ (10,200 சதுர மைல்) ஆகும். நீரில் மிதக்கும் தொழில்துறை வளாகம், உலக வர்த்தக மையம், சுற்றுலா விடுதிகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களினால் இயக்கப்படும் நீளமான - குறுகிய நகர்ப்புற அபிவிருத்தி திட்டம் (linear City) உட்பட பல வளர்ச்சித் திட்டங்களை இது உள்ளடக்கியது. இது 2030 ஆண்டு நிறைவு பெற்று உலக மக்களின் பாவனைக்கு அனுமதிக்கப்பட இருந்தது. 2) டுபாயின் சகல துறைத் திறன் நகரத் திட்டங்கள் (Smart city) அதேநேரம் ஜீசிசி நாடுகள் உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையம், சீனாவுடன் வர்த்தகம் $298 பில்லியன் வரை உயர்ந்துள்ளது. இது ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய நாடுகளுடன், ஜீசிசி நாடுகளை இணைக்கும் முக்கிய பொருளாதார மையமாக மாற்றியுள்ளது. இப் பின்னணியில் தான், அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது போரை ஆரம்பித்தது. இஸ்ரேலின் நோக்கம் எதுவாக இருந்தாலும், ஈரான் போரில் அமெரிக்க இலக்கு என்பது, ஜீசிசி எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு பேரவையின் தொடர் வளர்ச்சியும், மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளம் சாராத பொருளாதார வளர்ச்சியையும் அழிப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டதை பகிரங்கமாக அறிய முடிகிறது. ஈரான் மீதான போரினால், ஜீசிசி பேரவையை மையமாகக் கொண்ட, மத்திய கிழக்கு நாடுகளில் குடிநீர் பயன்பாட்டுக்காக, கடல் நீரை சுத்திகரிக்கும் ஆலைகள் (Desalination Plants) பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. ஜீசிசி நாடுகள் உலகளவில் 60% கடல் நீரை குடிநீராக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. குவைத், ஓமன், சவுதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இந்த நாடுகளுக்கு இதுவே முக்கிய குடிநீராகும். ஆகவே, இந்த ஆலைகள் அமெரிக்காவினால் தாக்கப்பட்டால், அது மனிதாபிமான - பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என அல்ஜசீரா (aljazeera) என்ற ஆங்கில ஊடகம் அச்சம் வெளியிட்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்பை விட இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பல ஆண்டுகளாக வளைகுடா நாடுகள் நிர்வகித்து வந்த பொருளாதார ஸ்திரத்தன்மையின் எதிர்காலம் சிதைவடைந்துள்ளது என தகொன்வர்சேஷன் (theconversation) என்ற ஆங்கில ஊடகம் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது. புவிசார் அரசியல் பதற்றங்கள் (Geopolitical Tension) சந்தைகளில் நிலையற்ற தன்மையை (Volatility) அதிகரித்துள்ளன. இதன் காரண - காரியமாக மேற்கு – ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் தமது ஸ்திரத்தன்மையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. வெளிநாட்டு முதலீட்டை அதிகரித்து ஜீசிசிக்கு ஒரு ஸ்திரமான வணிக மையமாக மாற்றும் பல்வகைப்படுத்தல் (Diversification) திட்டங்களும் தற்போது ஆபத்தில் உள்ளதாக ரொய்டர்ஸ் (Reuters) அமெரிக்க ஊடகம் கூறுகிறது. ஜீசிசி நாடுகளின் எண்ணெய் சாராத துறைகளின் வளர்ச்சி (Growth Forecasts) குறைத்துள்ளது. ஏற்றுமதிக்கு முக்கியமாக விளங்கும் ஹார்மூஸ் நீரிணை (Strait of Hormuz) போர் ஆபத்தில் உள்ளதால், ஏற்றுமதி வருவாய்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் எரிபொருட் சந்தையில் நிலையற்ற தன்மை தொடரும் என்றும், குறுகிய காலத்தில் எரிபொருள் விலைகள் $80-$90 வரை செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போர் நீடிக்கும் கால அளவைப் பொறுத்து, இதன் தாக்கம் அமையும். ஸ்திரத்தன்மையை தக்கவைத்தல், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுதல், மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய வளங்களை உறுதி செய்தல் ஆகியவற்றில் பல சிக்கல்களையும் ஜீசிசி நாடுகள் எதிர்நோக்கும் அபாயம் உள்ளது. உலக வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்தப் ஹார்மூஸ் நீரிணை ஊடாகவே மேற்கொள்ளப்படுவதால், எரிசக்தி மட்டுமல்லாது உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து உலகளாவிய பணவீக்கம் ஏற்படும் அபாயமும் உருவாகி வருகிறது. உலக எரிசக்தி வளங்களில் 31 சதவீதம் ஈரான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளிடமே உள்ளன. உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் சுமார் 16 சதவீதத்தை சீனா பயன்படுத்துகிறது. எனவே, ஈரான் மற்றும் வெனிசுலாவில் இருந்து சீனாவுக்கு கிடைக்கும் எரிசக்தி விநியோகத்தைத் தடுத்து, அதன் பொருளாதாரத்தை முடக்குவதே அமெரிக்காவின் திட்டமாகும்.அத்துடன் ஜீசிசி நாடுகளுக்கு செல்லும் முதலீட்டாளர்களை மேற்கு - ஐரோப்பிய நாடுகளுக்கு நகர வைப்பதும் பிரதான இலக்காகும். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அறிக்கை 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. அந்த அறிக்கையின் உள்ளடக்கத்தில் வெனிசுலாவில் ஆரம்பித்து ஈரான் எனவும் இறுதியில் இந்தோ- பசுபிக் பிராந்தியம் என்றும் மறைமுக வார்த்தைகள் (Between Words) பொதிந்திருந்தன. இக் கட்டுரையாளர் சில விடயங்களை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம், இந்திய இராஜதந்திர நகர்வுகள் பற்றியும் இக்கட்டுரையாளர் எடுத்துக் காட்டியிருந்தார். இப் பின்புலத்தில், அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அறிக்கையின் பிரகாரம், இந்தோ - பசுபிக் பிராந்தியம் தனது கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பதை இந்தியாவுக்கு அறிவிக்கும் நோக்கிலேயே, அமெரிக்கா, ஈரான் கப்பலை தாக்கயிருக்கிறது என்பது பகிரங்கமாகிறது. அது சீனாவுக்கும் வலுவான ஒரு செய்தியைக் கொடுத்துள்ளது. ஆகவே, ரசியாவுடன் இந்தியாவுக்குள்ள இராதந்திர தொடர்பும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தயவுடன் இயங்க வேண்டிய கட்டாயமும் இந்தியாவுக்குள்ள உள்ள பிரதான சங்கடமாகும். இப் பின்னணியில், இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இதனால் இரட்டைத் தன்மையான வெளியுறவுக் கொள்கைய இந்தியா இனிமேலும் தொடர முடியாத சூழல் உண்டு. ரசிய - இந்தியக் கூட்டு அல்லது அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் என்ற கூட்டு. இந்த இரு கூட்டிலும் ஏதேனும் ஒரு கூட்டில் இந்தியா நிரந்தரமாக இணைய வேண்டிய கட்டாயத்தை ஈரான் போர் உருவாக்கியுள்ளது. இந்திரா காந்தி காலத்தில் இருந்து சர்வதேச அரங்கில் அணி சேராக் கொள்கை என்ற பெயரில், இந்தியா இரு வகையான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றி வந்தது. ஈரான் - பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கு எதிரான போரில் கூட, இந்தியா மதில் மேல் பூனை போன்று தான் உள்ளது. அதேநேரம், ஜீசிசி நாடுகளின் பொருளாதாரம் தற்போது சரிவடைந்து வருவதால், இந்தோ - பசுபிக் பிராந்திய செயற்பாட்டில் சீனாவுக்கும் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சீனா - ரசியா - இந்தியா ஆகிய நாடுகளை மையப்படுத்திய ”பிறிக்ஸ்” பொருளாதார கூட்டுக்கும் சிக்கல் எழும் அபாயம் உள்ளது. இப் பின்புலத்தில், இந்தியாவின் சங்கடமான இராஜதந்திர நகர்வுக்குள் ஒளிந்து கொண்டு சீவியம் நடத்த வேண்டிய அவலம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0dJybxkVfwCbv5AKRcM3U4y2E1ULXJoSrCpzjZzdwJX7E2kZxfrii1Rg9c7yUMG93l&id=1457391262&mibextid=wwXIfr இதிலே நிக்ஸன் எழுதியதையே பல ஆய்வாளர்களும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
-
கருத்து படங்கள்
- காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!
ஹிஸ்புல்லாவுக்கு ஹிஸ்புல்லாக்கள் அனுப்பியிருப்பாங்க.- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
- போரை ஆதரித்த இரானியர்கள் இப்போது சந்தேகப்படும் விஷயம் என்ன?
அமெரிக்காவுக்கு வடை சுட தெரியவில்லை🤣😂, யாராவது அமெரிக்காவில் இருப்பவர்கள் சுட கற்று கொடுங்கள்,- இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை வலுப்படுத்தும் நோக்கில் 108 ‘Phra Phuttha Metta’ புத்தர் சிலைகள் அன்பளிப்பு!
ஏற்கெனவே நாட்டில் இந்த புத்தரால் மத, இந நல்லிணக்கம் குலைந்து போயிருக்கு, இதற்கு எண்ணெய் ஊற்ற இந்த தாய்லாந்து பிக்குகள் வேற துடிக்குதுகள். சிலை வழங்கி இருக்கிற பிரச்சனையை இன்னும் பெருப்பித்து மக்களை அழிப்பதே இவர்களின் புண்ணிய கருத்திட்டம். வறுமை கூடிய நாடுகளிலேயே மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். சிலை அளிப்பதைவிட புத்தரின் அமைதிக்கான போதனையை பரப்புங்கள், அதுதான் புண்ணியம்! எல்லோரையும் சமமாக ஏற்று நடத்தச்சொல்லுங்கள். இங்கு கொதிக்கிற பிக்குகளுக்கு ஆதரவு கொடுக்க வில்லங்கத்திற்கு வருகுதுகள் வேலையில்லாத கூட்டம்.- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
மனிசன் தனது நாட்டு சபைகளிடமே மூச்சுவிடலை.- அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
அது உங்களை நோக்கி எழுதப்பட்ட கருத்து அல்ல. இருப்பினும்....அங்கு வந்து வாங்கிக்கட்டி நொந்து இருப்பதை விட.... யாழ்களம் உங்களுக்கு மிகவும் பாதுகாப்பானது.இங்கேயே இருங்கள். அங்கே வந்தால் அறுத்து விடுவார்கள். இன்ஸ்ரகிராமிலும் ஆதிக்கம் உண்டு. விரும்பினால் அங்கும் சாத்துப்படிகள். உண்டு.... யாழ்களம் எங்கும் எதிலும் பெரு மரியாதைக்குரிய களம். எவர் எங்கிருந்தாலும் அதற்கு களங்கம் விளைவிக்க மாட்டார்கள்.என்னைப்போன்றவர்கள் யாழ்களத்தை வேறு ஊடகங்களில் எள்ளளவும் விமர்சிக்க மாட்டார்கள். தர்க்கம் என்பது ஒருவர் ஒருவருக்கானது அல்ல. அது கொள்கை ரீதியானது. நீங்கள் பல இடங்களில் செய்த தர்க்கம் கொஞ்சம் விசித்திரமானது. அதி கேவலமான பிக்பாஸ் நிகழ்ச்சியையே யாழ்களத்தில் இணைத்து விவாதிக்க வேண்டும் என விரும்பியவராச்சே!?!?!?!?!?!? என்ன செய்வது... உங்களுக்கு பொழுது போக்கு பசி..... எங்களுக்கோ இன விடுதலை பசி.... அவ்வளவுதான் வித்தியாசம்.😎- Yesterday
- இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை வலுப்படுத்தும் நோக்கில் 108 ‘Phra Phuttha Metta’ புத்தர் சிலைகள் அன்பளிப்பு!
ஒரு 50 - 75 வடக்கு கிழக்குக்கு போகுமோ.... - காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.