Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. 'வளைகுடா வாழ முடியாத இடமாக மாறும் அபாயம்' - குவைத் தாக்குதல் எச்சரிக்கும் ஆபத்து பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,குவைத் சிட்டி விமான நிலையம் அருகே நடந்த தாக்குதல் கட்டுரை தகவல் கேட்டி வாட்சன் & கோன்சே ஹபீபியாசாத் பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானின் முக்கிய கட்டமைப்புகள் மீதான தாக்குதலை அதிகரித்ததை தொடர்ந்து, இரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. குவைத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் மின் உற்பத்தி நிலையம் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில், ஓர் இந்திய தொழிலாளர் உயிரிழந்ததாகவும், பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வுகள் அங்குள்ள மக்களில் பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த போர் தொடங்கியதிலிருந்து, வளைகுடா நாடுகள் இரானின் பதிலடி தாக்குதல்களை சந்தித்து வருகின்றன. மத்திய கிழக்கின் இந்த பகுதி மிகவும் வறண்டது. இங்கு வாழ்வதற்காக மின் நிலையங்களும், கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களும் மிக அவசியமானவை. குடிநீரின் சுமார் 90% சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரிலிருந்தே கிடைக்கிறது. கடல் நீரை குடிநீராக்கும் செயல்முறை பாதிக்கப்பட்டால், வளைகுடா பகுதி விரைவில் வாழ முடியாத இடமாக மாறும் அபாயம் உள்ளது. இதுவே அந்தப் பிராந்தியத் தலைவர்களுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது. நீண்ட காலமாக, இதுபோன்ற சிறிய நாடுகள் மத்திய கிழக்கில் நடைபெறும் மோதல்களில் நேரடியாக ஈடுபடாமல் வளர்ச்சி அடைந்தன. ஆனால் இப்போது அந்த நிலைமை மாறி வருகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,குவைத்தில் ஏப்ரல் 1 அன்று நடந்த தாக்குதல் மறுத்த இரான் குவைத்தில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கு முன்பு, இந்த தாக்குதல்களுக்கு இரானே காரணம் என்று குவைத் தெரிவித்திருந்தது. இந்த தாக்குதல் குறித்து தங்களுக்கு தெரியாது என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ஓர் அறிக்கையில் இத்தாக்குதலை இஸ்லாமிய புரட்சிகர காவல் படை கண்டித்ததுடன், "அமைதியின்மை உருவாக்க, நிலை குலைக்க மற்றும் பிராந்தியத்தை அழிக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முயற்சி செய்கின்றன" என்றும் மத்திய கிழக்கு நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதே அறிக்கையில், குவைத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதான தாக்குதல் குறித்து இஸ்லாமிய புரட்சிகர காவல் படை குறிப்பிடவில்லை. இந்த வாரத்தின் தொடக்கத்திலும், குவைத்தில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை இஸ்ரேல் குறிவைத்ததாக இரான் குற்றம் சாட்டியது. பட மூலாதாரம்,Getty Images அபுதாபியில் என்ன நிலை? வானில் தடுக்கப்பட்ட ஏவுகணை சிதிலங்கள் விழுந்ததால் அபுதாபி எரிவாயு நிலையத்தில் தீ ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளை வெற்றிகரமாக தடுத்ததையடுத்து, அவற்றின் சிதிலங்கள் ஹப்ஷான் எரிவாயு நிலையம் மீது விழுந்ததாக அபுதாபி மீடியா அலுவலகம் தெரிவித்துள்ளது. தீ அணைக்கப்படும் வரை செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்றும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cew709nrw2jo
  3. வீழ்ந்த விமானத்தின் விமானியை... அமெரிக்க விமானங்கள் தேடிக் கொண்டுள்ளது.
  4. கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம் Apr 3, 2026 - 08:03 PM பொலன்னறுவை, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோடியுள்ளனர். இன்று (03) நண்பகல் வேளையிலேயே குறித்த கைதிகள் புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தப்பியோடிய கைதிகளைக் கைது செய்வதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த கைதிகள் புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பியோடியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. https://adaderanatamil.lk/news/cmnj06ps40007356pcm0wm1ac
  5. https://tamilwin.com/article/fallout-cost-us-army-chief-randy-george-his-job-1775217191?itm_source=article திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி.. போருக்கு மத்தியில் ட்ரம்ப் நிர்வாகத்தில் குழப்பநிலை!
  6. அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது Published By: Vishnu 03 Apr, 2026 | 07:21 PM அமெரிக்காவுக்கு சொந்தமான இரண்டாவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானின் வான்பரப்பிற்குள் நுழைந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் புரட்சிகர இராணுவம் அறிவித்துள்ளது. ஈரான் புரட்சிகர இராணுவத்துடன் தொடர்புடைய ‘பார்ஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மத்திய ஈரான் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.செய்தி அறிவிப்புகள் இந்த சம்பவத்தில், குறித்த போர் விமானம் முழுமையாக சேதமடைந்து நொறுங்கி வீழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், விமானத்தில் இருந்த விமானி குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. விமானம் வீழ்ந்த விதத்தையும் வெடித்த தன்மையையும் கருத்தில் கொண்டால், விமானி பாதுகாப்பாக வெளியேறியிருக்க வாய்ப்பு குறைவு என ஈரானிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. https://www.virakesari.lk/article/242677
  7. தமிழ் ஏதிலி நாடு கடத்தல் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் – கெரி ஆனந்த சங்கரி. சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக கனடாவிற்கு வந்த தமிழ் ஏதிலி ஒருவரை இலங்கைக்கு நாடு கடத்தும் விவகாரத்தில், தாம் தலையிடப் போவதில்லை என கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். 2010-ஆம் ஆண்டில் ‘எம்.வி. சன் சீ’ (M.V. Sun Sea) கப்பல் மூலம் கனடாவின் மேற்கு கடற்கரைக்கு வந்த 492 பேரில் ஒருவரான குமார் துரைசிங்கம் என்பவரின் எதிர்காலம் குறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆனந்தசங்கரி, “இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் முன் உள்ளது. நீதிமன்றமே இது குறித்து முடிவெடுக்கட்டும். கடந்த காலங்களில், ‘சன் சீ’ கப்பலில் வந்தவர்கள் இலங்கைக்குத் திரும்பக் கூடாது என நான் வாதிட்டுள்ளேன். ஏனெனில், அங்கு திரும்பிய ஒருவர் அரசாங்கத்தால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தை விசாரிக்க கனடிய நீதிமன்றங்களே சரியான இடம் என்று நான் நம்புகிறேன்,” என்றார். குமார் துரைசிங்கத்தின் வழக்கறிஞர் கேஸ் போஸ்கேட் (Kes Posgate) கூறுகையில், குமார் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். முன்னதாக, இதே கப்பலில் வந்த சத்தியபவன் ஆசிர்வாதம் என்பவர் இலங்கைக்குத் திரும்பியபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி சத்தியக்கடதாசி தாக்கல் செய்திருந்ததை வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். 2010-ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு, தாய்லாந்திலிருந்து புறப்பட்ட ‘எம்.வி. சன் சீ’ சரக்குக் கப்பல் மூலம் 492 தமிழர்கள் கனடாவிற்கு வந்தனர். இவர்களில் 63 சதவீதத்தினரின் ஏதிலி தஞ்சக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால், குமார் துரைசிங்கத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், அவர் கடந்த 16 ஆண்டுகளாக ஸ்கார்பாரோ பகுதியில் தச்சராகப் பணியாற்றி கனடாவில் வசித்து வந்தார். அண்மையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். “நான் 16 ஆண்டுகளாக இங்குள்ளேன், என்னைக் கனடியனாகவே உணர்கிறேன். இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் எனக்கு என்ன நடக்கும் என்று நினைத்தால் மிகுந்த அச்சமாக உள்ளது,” என குமார் துரைசிங்கம் கவலையுடன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1470898
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி யாயினி.
  9. மாலை மரியாதை கோர்ட்டு சூட்டு என என்ன ஜாலியா வாழ்ந்த மனிசன்யா அவர்😌 பாவம் குளிக்கும்போதுகூட காதுல இருந்து Earbuds 🎧 ஐ கழட்ட மாட்டாரு🥲 அவரைப்போய்... 😂 🤣 Rajakulasingam Chandrakumar
  10. எந்த நீரினையும் அதன் மருங்கே உள்ள நிலப்படுத்தியில் இருந்த்து தாக்குபவர்களுக்கு வசகியானது நீரினை திறப்பு தாக்குதல் (தோல்வியில்) uk (மேட்ற்கு) முயன்று தோற (இராணுவ) பலப்பாடம் இருகிறதது Gallipoli நீரிணை திறப்பு (1915 ஓட்டோமான் அரசு, இன்றைய துருக்கி ) மிகவும் தோல்வியில் முடிந்தது (இதில் பிரான்சும் பங்குபற்றியது என்றே நினைவு) அத்துடன் சமீப வரலாற்றில் uk க்கு பாக்லண்ட்ஸ் தீவு தரையிறக்க அனுபவம் - ஆர்ஜெந்தினா இடம் ஏவுகணைகள் இல்லது இருந்த்தும் அழிவு நடந்தே uk தரையிறக்கம் நடந்தது. (அனால் ஆர்ஜெந்தினா பாக்லாண்ட்ஸ் தீவு கடல் இடைவெளி கிட்தட்ட 300 - 500 மைல்கள்) uk இராணுவம் பின் ஆய்வில், ஆர்ஜெந்தினா இடம் ஏவுகணை இருந்த்து இருந்தால் அநேகமாக தோல்வியில் முடிந்த்து இருக்கும் என்ற முடிவுக்கு வந்தது. (ஆர்ஜெந்தினா பிரான்சிடம் ஏவுகணை வாங்குவதை UK தடுத்ததை இங்கு வேறு திரியில் சொல்லி இருக்கிறேன்) இரானில் - நிலம் நீளம், நீரினை ஒடுங்குவது, ஆழம் குறைவது, ஈரான் பக்கம் மலை பகுதி, அத்துடன் இரான் இடம் உள்ள ஏவுகணை, சிறிய நீர்மூழ்கி, அசையும் / தானியங்கி நீரடி கண்ணிவெடிகள் .. வேறு சில பல வசதி களும். (Gallipoli இல் முக்கியமாக இராணுவ போக்குவரத்துக்கு திறப்பு முயற்சி) ஆனால் , இதில் உள்ள மிகப் பெரும் பிரச்னை, இரான் ஒரு சிறிய தாக்குதலே செய்த்து 1-2 கப்பல்களை சேதம் / தீக்கிரை ஆக்கினாலே போதும் இந்த (மேட்ற்கு / us) திறப்பை முறியடிக்க.
  11. Today
  12. Live. 30,168 viewing30168 viewing Live pageUpdated 8 minutes ago American fighter jet shot down over Iran, US and Iranian media report தம்பருக்கு கால்வைச்ச இடங்களில எல்லாம் கண்ணி வெடியாய் இருக்கிறதே.அமெரிக்கா விமானியை அமெரிக்கபடையினர் தேடி வருகின்றனராம். அந்த விஞ்ஞானி ஈரான்கையில் கிடைத்தால் அவ்வளவுதான். சீனாக்காரரின் ஆயுதப் பரிசோதனைநன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது போலும்.;
  13. ஓம், உங்கள் "கூர்மையான" 😎 வாதத்தினால் என் மூக்குடைந்து இரத்தம் கட்டுப் பாடில்லாமல் ஓடுகின்றது ஐயா! உங்கள் அடிப்படைகளும், ஆதாரங்களும் இல்லாத, எதையும் literal meaning இல் எடுத்து, நம்பி, இங்கே சீரியசாக நீங்கள் பகிரும் போது வாசிப்பவர் உடலில் சில பாகங்கள் உடைந்து நொறுங்குவது உண்மை தான்! ஆனால் அது "அதீத சிரிப்பினால்" நிகழ்வது😂! வடகொரியாவில் "யாப்பு"?? அப்ப அத்தைக்கு "மீசை, தாடி, விதைப்பை எல்லாம் இனி உருவாகி விடுமென நினைக்கிறேன்!
  14. ஈழ மண்ணின் போர்ச் சூழலையும், அதனால் சாமானியர்கள் படும்பாட்டையும் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநரான சோமிதரன். 1988-ல் இலங்கை வடக்குப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் போர்ச் சூழலுக்கிடையில் வசித்து வருகிறார் வாசுகி (கபிலா வேணு). அடுத்த நாள் அவரின் மகளின் (சிது குமரேசன்) திருமணம் நடக்கவுள்ளதால், முதல் நாள் சொந்தங்களால் நிறைந்து மொத்த வீடே மகிழ்ச்சியில் இருக்கிறது. இந்நிலையில், அன்று இரவு இந்திய அமைதிப் படையின் கேப்டன் நவீன் சந்திரா தலைமையிலான ஒரு ராணுவக் குழு, ஆயுதப் போராளிக் குழு ஒன்றுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த வாசுகியுடைய வீட்டின் அருகில் பதுங்குகிறது. அதைத்தொடர்ந்து, ஒரு சில காரணங்களால் அவ்வீட்டிற்குள்ளும் நுழைகிறது. இந்நிலையில், மறுநாள் திருமணம், வீடு முழுவதும் சொந்தபந்தம், வீட்டிற்குள் நுழைந்த இந்திய அமைதிப் படை, வெளியே போராளிக் குழு, எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கலாம் என்ற பதற்றச் சூழல் உருவாகிறது. பல இன்னல்களுக்கிடையில் நீளும் அந்த ஓர் இரவின் வழியாகப் போரின் வலியைப் பேசுகிறது அறிமுக இயக்குநர் சோமிதரன் இயக்கியுள்ள 'நீளிரா' திரைப்படம். மகள் திருமணம் குறித்து மகிழ்ச்சி, துப்பாக்கிகளுக்கு அஞ்சாத தீரம், தன்னை நம்பியிருக்கும் பெண்களை நினைத்து வரும் பதற்றம், தன் வீட்டைக் காக்க எடுக்கும் அழுத்தமான முடிவுகள், எங்கும் சரியாத சமநிலையோடு நிற்கும் உறுதி எனப் போர்ச் சூழலுக்கிடையில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களின் பிரதிநிதியாக தன் தேர்ந்த நடிப்பால் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார் கபிலா வேணு. இந்திய ராணுவ அதிகாரியாகக் கதை நகர்விற்கும், பரபரப்பைக் கடத்தவும் உதவியிருக்கிறது நவீன் சந்திராவின் பொறுப்பான நடிப்பு. ஒரே காட்சியில் தன் கதாபாத்திரத்தைத் தூக்கி நிறுத்திக் கைதட்டல் வாங்குகிறார் ரூபா கொடுவாயூர். ஆக்ரோஷம், காதல் என்ற இருவழிப்பாதையைப் போராடிக் கடந்திருக்கிறார் சனந்த். வீட்டுப் பெரியவராக நமச்சிவாயம், ஆணவமான ராணுவ வீரராக ரோஹித் கொகாடே ஆகியோர் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். இவர்கள் தவிர, சிது குமரேசன், 'கயல்' வின்செண்ட், விது ஆகியோர் நடிப்பில் குறைகளில்லை. நீளிரா விமர்சனம் | Neelira Review ஓர் இரவு, ஒரு வீடு, அவ்வீட்டைச் சுற்றி சிறிய தோட்டம் என மிகச்சிறிய கதைக்களத்திற்குள் ரிப்பீட் அடிக்காத ப்ரேம்களால் பதற்றத்தையும், எமோஷன்களையும் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீபன். முக்கியமாக, ஒளியைக் கச்சிதமாகப் பயன்படுத்திய விதத்தாலும், ஆங்காங்கே வரும் கவித்துவமான ப்ரேம்களாலும் கதாபாத்திரங்களின் கையறுநிலையையும் இறுக்கத்தையும் பார்வையாளர்களின் மனதில் பதிய வைத்திருக்கிறார். அழுத்தமான எமோஷனையும், நிதானமான த்ரில் அனுபவத்தையும் அதன் அழுத்தம் குறையாமல் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர். சிவா பத்மயன் இசையில், வாகீசன் ராசய்யா குரலில் 'கலியான பைலா' பாடல் 'துள்ளல்' ரகம்! எமோஷனை அடர்த்தியாக்கி, காட்சிகளை வீரியமாக்கியிருக்கிறது ஒரு கதாபாத்திரமாகவே படம் முழுதும் வரும் கே-வின் பின்னணி இசை. 80களின் இறுதியிலுள்ள ஈழத்தின் கல்யாண முறை, அக்கால வீடுகள், சினிமா டெக்குகள் எனக் கலை இயக்குநர் மார்டினின் எதார்த்தப் படையலுக்கு, சுபைர்-தரங்கேனி கூட்டணியின் ஆடை வடிவமைப்பும் கைகொடுத்திருக்கிறது. சிறுவர்களின் விளையாட்டு, கல்யாண வீட்டுக் குதூகலம், உறவுகளுக்கிடையிலான செல்லச் சண்டைகள் என ஆர்ப்பாட்டமில்லாமல் வீட்டிற்குள்ளே இருந்து தொடங்கும் திரைக்கதை, வெளியுலகிற்குள் செல்ல செல்ல, போர்ச் சூழலையும், ராணுவ அடக்குமுறைகளையும் கதையோட்டத்துடனேயே சொல்லத்தொடங்குகிறது. கல்யாண சடங்குகள், விஜயகாந்த் படங்கள், அச்சூழலிலிருக்கும் வாழ்வாதாரங்கள் என எக்கச்ச விவரணைகளுடன் நுணுக்கமாக விரிகிறது திரைக்கதை. இரவிற்குப் பின் த்ரில்லர் மோடுக்கு நகரும் படம், இடைவேளைக் காட்சி வரை பரபர பிடியை விடாமல் பற்றிக்கொள்கிறது.முன்னாள் ராணுவ வீரரான வீட்டுப் பெரியவர், குடும்பத்தைக் காக்கும் வாசுகி, கல்யாணக் கனவிலிருக்கும் மணப்பெண், இளம் காதல் ஜோடி, குச்சியை வைத்து விளையாடும் சிறுவர்கள் என எல்லாத் தலைமுறை கதாபாத்திரங்களும் இடம்பெற்றிருப்பதும், அவற்றை தனித்தனியாகக் கிளைக்கதைகளாக விவரிக்காமல், மையக்கதையுடனேயே விவரித்திருப்பதும் திரைக்கதையை ஆழமாக்குகின்றன. ராணுவத்தால் அக்கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் ஏற்படும் வெவ்வேறு தாக்கங்களும் அழுத்தமாகப் பதிகின்றன.முக்கியமாக, தன்னைப் பற்றி வீட்டுப் பெரியவர் சொல்லும் கதை, ராணுவம் மீது கட்டமைக்கப்படும் புனிதங்களை உடைத்தெறிகிறது. நீளிரா விமர்சனம் | Neelira Review டெக் சினிமாவிற்கு இடையில் ஓடும் இயக்கப் பிரசாரப் பாடல், ராணுவம் வீட்டிற்குள் நுழைந்தவுடன் கூடுதல் ஆடைகளை உடுத்தும் பெண்கள், மரக்குச்சிகளை துப்பாக்கிகளாகப் பாவித்து விளையாடும் சிறுவர்கள் எனக் குறியீடுகள் நிறைய வந்தாலும், அவை மேதாவித்தனமாகக் காட்சிப்படுத்தப்படாமல் எதார்த்தமாகவும் உயிர்ப்போடும் வருவது அவ்வீட்டிற்குள்ளே நம்மையும் ஓர் உறுப்பினராக்கிவிடுகிறது. இடைவேளைக்குப் பிறகு ஒரே இடத்திலேயே காட்சிகள் சுழல்வது போன்ற அயர்ச்சி சில இடங்களில் மேலோங்கினாலும், நுணுக்கமான விவரணைகள் அவற்றைக் களைத்து, சுவாரஸ்யத்தைக் கூட்டி நம்மைப் பரபர பாதைக்கு மடைமாற்றிவிடுகின்றன.உணர்ச்சிகளைப் பிழிய எக்கச்சக்க தருணங்கள் இருந்தாலும், அவற்றை விடுத்து, மையக்கதையிலிருந்து எங்கும் பிறழாமல், எதார்த்தமான உணர்ச்சிகளையும் வசனங்களையும் வைத்தே, போரின் வலியை ஆழமாகப் பேசியிருக்கிறது திரை எழுத்து. 'எல்லா ராணுவமும் ஒன்றுதான்', 'போரில் எப்படி அமைதியைத் தேடுவீர்கள்?', 'இந்த வீட்டிலாவது அமைதியை நிலைநாட்டுங்கள்' என எல்லா வசனங்களும் உரையாடல்களோடே எதார்த்தமாக வருகின்றன. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் vs இந்திய ராணுவத் தரப்பு என விரியும் உரையாடல்களையும் நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். நீளிரா விமர்சனம் | Neelira Review வசனங்களோ, நிறைய ஷாட்களோ இல்லாமல் மிகச் சில நொடிகள் மட்டுமே வரும் இறுதிக்காட்சி, கதையின் ஆன்மாவைப் பேசுகிறது. திரைமொழி, அரசியல், புனைவாக்கம் என எல்லாவற்றிலும் கவனிக்க வைத்து, தமிழ் சினிமாவில் முக்கிய முன்னெடுப்பாக மாறியிருக்கிறது இந்த 'நீளிரா'.
  15. இவ்வளவு நாளும் பெரும்பாலும் இராணுவ இலக்குகளை இலக்கு வைத்து இரதரப்பும் இராணுவத்தாக்குதல்களை நடத்தினார்கள். இப்பொழுது பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டமைப்பான ஈரானின் பாலத்தை அமெரிக்கா தாக்கி பெரும்தவநைச் செய்கிறது. ஈரான் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளின் பொதுக் கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த இது வாய்ப்பாகி விட்டது. ஈரான் அடிக்கிற அடியில் அண்டை நாடுகள் பிச்i வேண்டாம் நாயைப்பிடி என்று அமெரிக்காவை குற்றஞ்சாட்டி அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பவும் வாய்ப்பிருக்கிறது.
  16. எங்கள் "பன்னாடை" யின் அமைச்சரவையில் அவர்களது துறையில் கீழ்மட்டத் தகுதி கூட இல்லாத பலர் இருக்கின்றனர். அவர்களுள் முக்கியமானவர் பீற் ஹெக்செத் என்ற "யுத்த😎 அமைச்சர்". புகழ் பெற்ற பிரின்ஸ்ரன் பல்கலையில் அரசியலில் கலைமாணிப் பட்டம் பெற்ற ஹெக்செத், அதிக பட்சமாக ஒரு 50 பேரை நிர்வாகம் செய்த கப்ரன் தர அதிகாரி மட்டுமே. சீரூடை அணியும் விருப்பத்தால் தொண்டர் படை (National Guard) யில் சேர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக முக்கி முக்கி, தலைமை அனுபவம் வெளிப்படக் கூடிய மேஜர் பதவி கிடைத்தவுடன், இராணுவத்தில் இருந்து வெளியேறி செய்தி ஊடக நிறுவனத்தில் சேர்ந்து நன்கு சம்பாதிக்க ஆரம்பித்தார். 3 / 4 நட்சத்திர ஜெனரல்களும், West Point luminaries உம் மட்டுமே பெரும்பாலும் வகிக்கும் பதவியை இந்த "பிளாட்டூன் லீடரிடம்" கொடுத்து விட்டு பன்னாடை படும் பாடு ரசிக்கக் கூடியதாகவே இருக்கிறது😂!
  17. அந்தபுரத்தில் ஒழிந்து அரசி சொல்வதை கேட்டு, மீண்டும் பிறப்பு எடுத்து வந்து, இங்கே சொல்லும் சட்டப் பரிட்சய மொ... என்பதை எந்த அடிப்படையில் தான் சொன்னது என்பதும் சிந்திக்க தெரியாது மேலும் மொ.. வாதத்தில் இறங்கி, மொழி - சிந்திப்பது இரண்டும் (ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் ) அரைகுறையிலும் இல்லை என்பதும் காட்டி... இவ்வளவு மொகீனத்தை பந்தி / சபை போட்டு காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
  18. "தாக்குதலில் சேதமடைந்த பாலங்களை எம்மால் மீண்டும் கட்டியெழுப்ப முடியும்; ஆனால் அமெரிக்காவைத் தண்டிப்பதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பு மீண்டும் கிடைக்காது" என அவர் குறிப்பிட்டுள்ளார். -ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி- Ceylon Focus News 😂 🤣
  19. போதனா சிவாநந்தன் இங்கிலாந்து பெண் செஸ் போட்டியாளர் பட்டியலில் முதலிடம். முதல் 20க்குள் இன்னும் பல தமிழ் பிள்ளைகள்❤️💪

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.