24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
என் பெயர் பூனா (Buna)!
நான் பயணங்களின் போது ரெஸ்டொராண்டுகளில் கஃபே கூர் (கொஞ்சமாய் இருக்கும் , நல்ல கசப்பு ) மற்றும் ஒரு குரோசன் பனிஸ் மட்டும் எடுப்பது வழக்கம் .......இப்ப கோப்பி குடித்துக் கொண்டுதான் இதையும் எழுதுகின்றேன் ......காலையில் மட்டும்தான் கோப்பி மற்றும்படி தேநீர்தான் ......! 😂 நன்றி ஏராளன் .......!
-
வீதியோரம்.
பரவாயில்லை . ..... கொஞ்சமாவது கிறுக்கல்கள் கிறுக்கி விடுங்கோ ........ வாசிக்க ஆவலுடன் உங்கள் ரசிகர்கள் ......! 😂
-
மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு பிணை!
நோ . ......அதைக் காட்டில் விடலாம் . ....... அதுவாவது சுதந்திரமாய் திரியட்டும் . .......! 😂
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
இதென்ன அநியாயமாய் கிடக்கு . ....... உங்கட கார்ட் முடிந்ததற்கு அந்த அப்பாவி மனுஷனை ஏன் ஏசுவான்,கோபப்படுவான் ........ ! 😂
-
விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை
வழக்கறிஞர் எப்படி திட்டலாம்? அடுத்து என்ன செய்யலாம் என்றல்லவா யோசிக்க வேண்டும். வரும் நாள் செல்லும்.
-
ரோஜர் ஓட்டிய விமானம்
ஆஹா . ....அன்று ரேடியோ செய்யப் பட்ட பாடுகளையும் அதன் நுணுக்கங்களையும் விபரமாக விபரித்திருக்கிறீர்கள் ...... நன்றி ஜஸ்ரின் .......! 👍
-
மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு பிணை!
மலைப் பாம்பைத் தூக்கி உள்ளே போட வேண்டும். ஒராள் இல்லாவிட்டால் ஒராள் மீண்டும் மலைப் பாம்பை ஆட வைக்கலாம்.
- Today
-
ஓய்வு பெற்றார் யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா
ஓய்வு பெற்றார் யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா 25 Mar, 2026 | 11:19 AM யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து வகித்த துணைவேந்தர் பதவியில் இருந்து செவ்வாய்க்கிழமையுடன் (24) விடைபெற்றுச் சென்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் 2023 ஆகஸ்ட் 28 வரை தனது முதலாவது பதவிக் காலத்தையும், 2023 ஆகஸ்ட் முதல் இன்று 2026 மார்ச் 24 வரை இரண்டாவது பதவிக் காலத்திலும் துணைவேந்தராகப் பதவி வகித்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா புதன்கிழமை தனது 65 ஆவது அகவையை நிறைவு செய்து 66 ஆவது அகவைக்குள் காலடி பதிக்கிறார். எதிர்வரும் ஆகஸ்ட் 28 திகதி வரை ஜனாதிபதியினால் இவருக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்த போதிலும், பல்கலைக்கழக சட்டத்தின் படி 65 வயதை நிறைவுசெய்த பின்னர் நிர்வாகப் பதவிகளை வகிப்பதற்கு இடமளிக்காததன் காரணமாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் தானாகக் கேட்டு, அடுத்த துணைவேந்தருக்கான தெரிவை உரிய காலத்தினுள் நடாத்தி, புதிய துணைவேந்தரிடம் பதவியை கையளித்தார். எனினும், பல்கலைக்கழகச் சட்ட ஏற்பாடுகளின் படி, அவர் பணியாற்றும் விஞ்ஞான பீடத்தின் நடப்புக் கல்வியாண்டு நிறைவு பெறும் - எதிர்வரும் செப்ரெம்பர் 30 வரை அவர் தனது கல்விப் பணியில் தொடர்ந்தும் கணிதவியல் பேராசிரியராகச் சேவையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241878
-
யாழில் யானைகள் திட்டமிட்டே கொண்டுவந்து விடப்பட்டுள்ளன - பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவிப்பு
யாழில் யானைகள் திட்டமிட்டே கொண்டுவந்து விடப்பட்டுள்ளன - பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவிப்பு 25 Mar, 2026 | 12:35 PM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, கேவில்பகுதியில் யானைகள் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டு விடப்பட்டதாக அப்பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் கவலை தெரிவித்துள்ளார். உரிய முறையில் அறிவித்தும் யானைகள் ஏற்படுத்திய சேதத்தை அதிகாரிகள் இன்னும் பார்வையிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், ஒரு சில தினங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு - கேவில் கடற்கரைக்கு வருகை தந்த ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் அங்கு காணப்பட்ட 36 இற்கும் அதிகமான தென்னைகளை நாசம் செய்தன. சம்பவம் தொடர்பாக உரியவர்களுக்கு தெரிவித்தோம். இதுவரை உரியவர்கள் வந்து பார்வையிடவோ, நஷ்ட ஈடு வழங்கவோ இல்லை.. யானைகள் சேதம் ஏற்படுத்திய இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இராணுவ முகாம் இருக்கிறது. அவர்களுக்கு யானைகள் வந்தது தெரியவில்லை என்றும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். வடமராட்சி கிழக்கின் பெரும் பகுதி அதாவது கட்டைக்காட்டில் இருந்து சுண்டிக்குளம் வரையான பெரும் நிலப்பரப்பு தேசிய பூங்கா என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக வனஜீவராசிகள் திணைக்களகத்தினர் வேண்டுமென்றே இந்த யானைகளை வடமராட்சி கிழக்கு காட்டு பகுதிக்கு கொண்டு வந்து விட்டதாக சந்தேகமாக உள்ளது. யானைகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு முன்னாயத்தம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட குடும்பஸ்தர் யானைகளால் அழிக்கப்பட்ட 36 தென்னைகளுக்கும் இழப்பீடு கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/241887
-
ரோஜா முள்.
மாட்டுக்கு மாடு சொன்னா கேட்காது மணி கட்டிய மாடு சொன்னா தான் கேட்பியோ? என்று காதில பிடித்து தொரதொரவென்று இழுத்து வந்திருப்பா.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
புதுச்சேரி த.வெ.க வேட்பாளர்கள் அறிவிப்பு! தமிழகம், புதுச்சேரியில் த.வெ.க. தனித்து போட்டியிடுகிறது என அந்த கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறார். இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் த.வெ.க. சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- வருகின்ற 09.04.2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துக் களம் காண்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளித்தவர்களில் இருந்து இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்காணும் தோழர்கள், குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள். 1. லாஸ்பேட்டை – V.சாமிநாதன் 2. காரைக்கால் தெற்கு – K.A.U.அசனா 3. நெட்டப்பாக்கம் (தனி) – L.பெரியசாமி 4. திருபுவனை (தனி) – AK. சாய் J. சரவணன் குமார் 5. முத்தியால்பேட்டை – J.பிரகாஷ் குமார் 6. பாகூர் – N.தனவேலு 7. ராஜ் பவன் – V.J.சந்திரன் 8. உப்பளம் – S.சிவா 9. உழவர்கரை – S.சசிபாலன் 10. அரியாங்குப்பம் – S.குமரவேலு 11. மணவெளி – B.ராமு 12. வில்லியனூர் – R.ரமேஷ் 13. முதலியார்பேட்டை – N.மணிபாலன் 14. மண்ணாடிப்பட்டு – K.பாரதிதாசன் 15. உருளையன்பேட்டை – S.மரிய பிரான்சிஸ் 16. மங்கலம் – M.K.சத்யா 17. காமராஜ் நகர் – Dr.R.சுமன் 18. நெல்லித்தோப்பு – S.விக்னேஷ்வரன் 19. காலாப்பட்டு – D.சசிக்குமார் 20. இந்திரா நகர் – S.முருகன் 21. கதிர்காமம் – R.ஜெயந்தி 22. ஊசுடு (தனி) – S.சரகணபவா 23. தட்டாஞ்சாவடி – M.பன்னீர்செல்வம் 24. ஏம்பலம் (தனி) – V.தமிழ்ச்செல்வன் 25. நெடுங்காடு (தனி) – U.காமராஜ் 26. திருநள்ளாறு – A.ராஜா முஹம்மது 27. காரைக்கால் வடக்கு – A.வெங்கடேஷ் 28. நிரவி -T.R. பட்டினம் – G.கணேஷ் 29. மாகே – M.பிரிஜேஷ் 30. ஏனாம் – A.தோட்டா ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கழக வேட்பாளர்கள், நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் சிறப்பாகத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு, கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1469701
-
கருத்து படங்கள்
- மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு பிணை!
மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு பிணை! மலைப்பாம்புடன் நடனமாடும் காணொளி ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பெண், பின்னர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் 500,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார். மார்ச் 20 அன்று கொழும்பில் நடைபெற்ற புத்தாண்டு தின அழகிப் போட்டியின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அதில் போட்டியாளர் ஒருவர் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இனமான மலைப்பாம்பை பயன்படுத்தியதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். விசாரணையில் சந்தேக நபர் புத்தளத்தில் ஒருவரிடம் இருந்து 25,000 ரூபாவுக்கு குறித்த மலைப்பாம்பை வாடகைக்கு எடுத்து, சம்பவம் நடந்த உடனேயே அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது. இத்தகைய முறையில் மலைப்பாம்பைப் பயன்படுத்துவது, கட்டளைச் சட்டத்தின் பிரிவு 30 (1)(a)-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என அதிகாரிகள் வலியுறுத்தினர். சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் நீதிமன்ற எண் 05-இல் முன்னிலைப்படுத்தப்பாட்டார். அங்கு மேலதிக நீதிவான் அவருக்குப் பிணை வழங்கினார். அதேநேரம் இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் மே 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. https://athavannews.com/2026/1469926- ஈரான் வழங்கிய மர்ம பரிசு! வியந்து போன ட்ரம்ப்!
யார் யாரை ஏமாற்றுகிறார்கள் என்று மூன்று நாளில் தெரியும்?- 06 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தம்பதியர் சடலங்களாக மீட்பு!
06 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தம்பதியர் சடலங்களாக மீட்பு! ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கொவிட் காலத்தில் காணாமல் போன தம்பதியரின் உடல்கள், கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள வெல்லம்பிட்டிய, கம்பிகொட்டுவ பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் இருந்து நேற்று (24) மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 62 வயதான சுனில் குமாரசிங்க மற்றும் கமந்த சில்வா ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் ஆவர். 2020-ஆம் ஆண்டில் அவர்களது உறவினர்களால் குறித்த தம்பதியர் காணாமல் போனதாகப் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. முதற்கட்ட விசாரணைகளில் எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதி செயலகத்திடம் முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து, செயலகம் இவ்வழக்கை கொழும்பு குற்றப் பிரிவிடம் ஒப்படைத்தது. சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் இந்திகா லோகுஹெட்டியின் மேற்பார்வையில், பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்கு அருகில் வசித்து வந்த ஒரு தம்பதியினரிடம் புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தினர். அதையடுத்து, பொலிஸார் சந்தேகத்திற்குரிய தம்பதியினரையும், அவர்களுடன் தொடர்பிலிருந்து மற்றொரு நபரையும் கைது செய்தனர். அவர்களில் இருவர் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகியிருந்தனர் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகவும், பெண்ணின் தங்க நகைகள் திருடப்பட்டதாகவும், உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மறைக்கப்பட்டதாகவும் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டபோது, பிரதான சந்தேக நபர் அவற்றை மீண்டும் புதைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். https://athavannews.com/2026/1469930- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
தமிழகத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! எதிர்வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான 23 வேட்பாளர்கள் அடங்கிய தனது முதல் பட்டியலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) இன்று (25) வெளியிட்டது. முதற்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களில் ஒருவரான, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இந்தப் பட்டியலை அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி, எடப்பாடி கே. பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியிலிருந்து மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வழிநடத்தும் கட்சியானது, தனது ஆரம்பகட்ட பட்டியலில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சி.சீனிவாசன் மற்றும் நத்தம் ஆர்.விஸ்வநாதன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களைத் தக்கவைத்துக் கொண்டது. மேலும், தொண்டமுத்தூர் மற்றும் குமாரபாளையம் தொகுதிகளில் முறையே எஸ்.பி.வேலுமணி மற்றும் பி.தங்கமணி போன்ற முக்கிய மேற்குப் பகுதித் தலைவர்களையும் அது களமிறக்கியது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் அறிவிப்பு இதுவாகும். மேலும் அதிமுகாவின் பல வேட்பாளர்கள் பெயர்கள் அடுத்தடுத்த பட்டியல்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2026/1469933- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கடந்த 24 மணித்தியாலங்களில் 948 ட்ரோன்களால் உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் Published By: Digital Desk 3 25 Mar, 2026 | 09:43 AM உக்ரேன் மீதான போர் ஆரம்பமாகி நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 948 ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு உக்ரேனின் இவானோ-பிராங்க்விஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளது. நகரின் முக்கிய மகப்பேற்று வைத்தியசாலை மற்றும் மகப்பேற்று நிலையம் பலத்த சேதமடைந்துள்ளன. தாக்குதலின் போது இரு பெண்கள் நிலத்தடி அறையில் குழந்தையைப் பெற்றெடுத்த போதிலும், அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி தப்பியுள்ளனர். இப்பகுதியில் தந்தை ஒருவர் மற்றும் அவரது மகள் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், 06 வயது சிறுவன் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். லிவிவ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெர்னார்டைன் மடாலயம் இந்தத் தாக்குதலில் சேதமடைந்துள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமான இந்தப் பகுதியின் அருகே அமைந்துள்ள குடியிருப்பு கட்டடமொன்று ட்ரோன் மோதியதில் தீப்பற்றியுள்ளது. இதில் லிவிவ் நகரில் மாத்திரம் 32 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 948 ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன. இதில் 556 ட்ரோன்கள் நேற்று பகல் வேளையில் மாத்திரம் ஏவப்பட்டுள்ளன. உக்ரேனியப் படைகள் சுமார் 906 ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ள போதிலும், 15 இடங்களில் நேரடித் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. வின்னிட்சியா நகரில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். செர்னிஹிவ், சுமியின் வடக்குப் பகுதியூடாக ட்ரோன்கள் "வரிசை வரிசையாக" உக்ரைன் வான்பரப்பிற்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, "ரஷ்யாவிற்கு இந்தப் போரை நிறுத்தும் எண்ணம் சிறிதும் இல்லை என்பதை இந்தத் தாக்குதலின் அளவு தெளிவாகக் காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/241865- $100 டொலர்களுக்கும் கீழ் சரிந்த எண்ணெய் விலை!
இன்னும் மூன்று நாட்களுக்கு தான்?- போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கான அமெரிக்காவின் 15 அம்ச தீர்வுத் திட்டம்!
போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கான அமெரிக்காவின் 15 அம்ச தீர்வுத் திட்டம்! ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டு வருவதாகவும், தெஹ்ரானிடமிருந்து ஒரு முக்கிய சலுகையைப் பெற்றதும் இதில் அடங்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார். ஈரானில் பகைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக, அமெரிக்கா அங்குள்ள சரியான நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஈரானியர்கள் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு மிகவும் விரும்புவதாகவும் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் செவ்வாயன்று (24) கூறினார். அணுசக்தி அல்லாத எரிசக்தி மற்றும் ஹார்முஸ் நீரிணை தொடர்பாக ஈரான் ஒரு மதிப்புமிக்க சலுகையை வழங்கியுள்ளது என்றும் ட்ரம்ப் கூறினார், எனினும், அவர் அது குறித்து விரிவாகக் கூறவில்லை. அதேவேளையில், வொஷிங்டன் தெஹ்ரானுக்கு 15 அம்ச தீர்வுத் திட்டத்தை அனுப்பியுள்ளதாக ஓர் வட்டாரமும் உறுதிப்படுத்தியது. அதன்படி, மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக வொஷிங்டன் ஈரானுக்கு 15 அம்சத் திட்டத்தை அனுப்பியதாக நியூயேர்க் டைம்ஸ் செவ்வாயன்று செய்தி வெளியிட்டது. மூன்று வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அந்த 15 அம்சத் திட்டம் குறித்து விவாதிக்க ஒரு மாத கால போர்நிறுத்தத்தை அமெரிக்கா நாடுவதாக இஸ்ரேலின் Channel 12 செய்திச் சேவை குறிப்பிட்டது. இந்த விவகாரம் குறித்து அறிந்த ஓர் வட்டாரம், அமெரிக்கா ஈரானுக்கு ஒரு திட்டத்தை அனுப்பியதை உறுதிப்படுத்தியது, ஆனால் மேலதிக விவரங்களை வழங்கவில்லை. ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கலைத்தல், சார்பு குழுக்களுக்கான ஆதரவை நிறுத்துதல் மற்றும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறத்தல் ஆகியவை அந்தத் திட்டத்தில் அடங்கும் என்று இஸ்ரேலிய ஊடகம் கூறியது. இருப்பினும், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் இது தொடர்பான கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை. அதேநேரம், அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதை தெஹ்ரான் மறுத்துள்ளது. ஈரானின் சக்திவாய்ந்த நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப், திங்களன்று அத்தகைய செய்திகளை “போலிச் செய்திகள்” என்று நிராகரித்தார். நான்கு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, உலகின் 20% எண்ணெய் பொதுவாகக் கடந்து செல்லும் நீர்வழியை ஈரான் திறம்பட மூடியுள்ளது. இது வரலாற்றிலேயே மிக மோசமான எரிசக்தி விநியோக அதிர்ச்சியை ஏற்படுத்தி, எரிபொருள் விலைகளை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளது. மேலதிக படைகளை அனுப்ப வொஷிங்டன் நடவடிக்கை இந்த தகவல்களுக்கு மத்தியில் அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் ஈரானியத் தாக்குதல்கள் செவ்வாயன்றும் தொடர்ந்தன. மேலும் மத்திய கிழக்கிற்கு கூடுதல் படைகளை அனுப்ப வொஷிங்டன் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் குறித்து அறிந்த இருவர் செவ்வாயன்று சர்வதேச ஊடகங்களிடம், அமெரிக்க இராணுவத்தின் உயரடுக்கு 82வது வான்வழிப் பிரிவிலிருந்து ஆயிரக்கணக்கான வீரர்களை மத்திய கிழக்குக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தனர். இந்தப் படைகள், அப்பகுதியில் ஏற்கனவே உள்ள 50,000 அமெரிக்கத் வீரர்களுடன் இணைந்து, அங்கு வொஷிங்டனின் பிரம்மாண்டமான இராணுவக் குவிப்பைத் துரிதப்படுத்தும். இது ஒரு நீண்டகால மோதல் குறித்த அச்சங்களை தற்சமயம் எழுப்பியுள்ளது. போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் தயார் நிலையில் ஈரானிய மின் நிலையங்கள் மீது குண்டு வீசப்படும் என்ற தனது அச்சுறுத்தலை, தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறி ட்ரம்ப் ஒத்திவைத்த ஒரு நாள் கழித்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் செவ்வாயன்று தெரிவித்தார். இது குறித்த எக்ஸ் பதிவில் பாகிஸ்தான் பிரதமர், ஷெபாஸ் ஷெரீஃப், பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கான தற்போதைய முயற்சிகளை பாகிஸ்தான் முழுமையாக ஆதரிப்பதாகவும், ஒரு விரிவான தீர்வுக்கான அர்த்தமுள்ள மற்றும் உறுதியான பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கூறினார். பாகிஸ்தான், அண்டை நாடான ஈரானின் இஸ்லாமியக் குடியரசுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளதுடன், ட்ரம்புடன் ஒரு உறவையும் வளர்த்து வருகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கூறிய பின்னர், அமெரிக்காவும் இஸ்ரேலும் பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின. எனினும், குறிப்பிடத்தக்க அந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மத்தியஸ்தரான ஓமன் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1469911- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
பொதிகளை சுமந்தவைக்கு ஏதாவது??????? ஒன்றுமே போடலையே அதுதான்? எனக்கு சந்தோசமாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது. உங்கள் முகம் எப்படி போயிருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்.- $100 டொலர்களுக்கும் கீழ் சரிந்த எண்ணெய் விலை!
$100 டொலர்களுக்கும் கீழ் சரிந்த எண்ணெய் விலை! போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து, ஆசியாவில் செவ்வாய்க்கிழமை (25) காலை நேர வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்துள்ளன. அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 6.6% சரிந்து $97.56 (£72.65) ஆகக் குறைந்தது. அதேநேரத்தில், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் 5.5% க்கும் அதிகமாகச் சரிந்து $87.20 ஆகக் குறைந்தது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், வொஷிங்டன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தரப்பினர் தெஹ்ரானுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்றும் ட்ரம்ப் செவ்வாயன்று கூறினார். எனினும், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் கூறப்படும் கூற்றுக்கள் “போலிச் செய்திகள்” என தெஹ்ரானில் உள்ள அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் ஈடுபட்டிருந்ததாக ட்ரம்ப் கூறினார். தெஹ்ரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்கள் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, ஈரானியத் தலைவர்கள் தங்களிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது என்று ஒப்புக்கொண்டுள்ளனர் என்ற தனது கூற்றை மீண்டும் வலியுறுத்தினார். எனினும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதை ஈரான் மறுத்துள்ளது. இது குறித்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப் எக்ஸ் தளத்தில், அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், நிதி மற்றும் எண்ணெய் சந்தைகளைக் கையாள போலிச் செய்திகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார். ஆனால், அமெரிக்காவுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, சந்தைகளைக் கையாளும் முயற்சி என்று கூறி தெஹ்ரான் முன்னர் நிராகரித்துள்ளது. எவ்வாறெனினும், இந்த மோதலானது ஒரு உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தூண்டியுள்ளது. இதன் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் தங்கள் பொருளாதாரங்களில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில் அண்மைய வாரங்களில் நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. ஏனெனில், உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20% தினமும் கடந்துசெல்லும் ஒரு குறுகிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறம்படத் தடுத்துள்ளது. இந்த மோதல் உலகளாவிய நிதிச் சந்தைகளிலும் பெரும் ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுத்துள்ளது. உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் சிலவற்றின் தலைவர்கள், போரின் சாத்தியமான விளைவுகள் குறித்து அண்மைய நாட்களில் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்கத்கது. https://athavannews.com/2026/1469904- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கீடு 24 Mar, 2026 | 05:08 PM திமுக தலைமையிலான கூட்டணியில் பங்கு பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான மு க ஸ்டாலினும்.. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல் .திருமாவளவனும் செய்து கொண்டனர். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி அன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொது தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று இறுதிக்கட்டத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து அக்கட்சிக்கு தமிழகத்தில் எட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆறு தனித் தொகுதிகளும், இரண்டு பொதுத் தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என திமுக சார்பில் அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. எந்தெந்த இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்பது குறித்தும் யார் வேட்பாளர் என்பது குறித்தும்... விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடைபெற்ற பேச்சு வார்த்தையில் திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 28, ம திமுகவிற்கு நான்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 5 , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 ,மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 ,கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு இரண்டு, என மொத்தம் 56 தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், திராவிட முன்னேற்றக் கழக குழுவினருக்கும் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் சுமுக முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து இழுபறி நீடித்துக் கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தீர்மானத்தை நிறைவேற்றியது. பின்னர் திமுக- விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இடையே நடைபெறும் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சு வார்த்தைக்காக தொல் . திருமாவளவனும், முதல்வர் மு க ஸ்டாலினும் நேரடியாக சந்தித்துக் கொண்டனர். இதன் பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இது தொடர்பான ஒப்பந்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கைசாத்திட்டது. இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஆறு தொகுதிகள் தான் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற நிலையில்.. தற்போது கூடுதலாக இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால்... திமுக கூட்டணியில் இருக்கும் ஏனைய அரசியல் கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241837- 'அடுப்பில் கரி அறவே படியாது': சமையல் எரிவாயுவுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பு
'அடுப்பில் கரி அறவே படியாது': இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,என்சிஎல் விஞ்ஞானிகளால் 'டைமெத்தில் ஈதர்' எனப்படும் செயற்கை எரிபொருள் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் பிராச்சி பாட்டீல் பிபிசி மராத்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரான் போரின் தாக்கம் காரணமாக எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு இந்தியாவையும் பாதித்துள்ளது. பல இடங்களில் உணவுக்கூடங்கள் மூடப்பட்டன, உணவகங்களின் மெனுக்கள் மாறின. டீ, காபி கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதற்கு முக்கியக் காரணம் நாம் எல்பிஜி எரிவாயுவைச் சார்ந்து இருப்பது தான். புனேவில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்துள்ளனர். என்சிஎல் விஞ்ஞானிகளால் 'டைமெத்தில் ஈதர்' எனப்படும் செயற்கை எரிபொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக இந்த எரிபொருளைக் கொண்டு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, எல்பிஜிக்கு மாற்றாக அமையக்கூடிய இந்த எரிபொருளைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான பணிகளில் என்சிஎல் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 'டைமெத்தில் ஈதர்' என்றால் என்ன? டைமெத்தில் ஈதர் அல்லது டிஎம்இ என்பது ஒரு செயற்கை எரிபொருளாகும். இந்த எரிபொருள் ஒரு வேதியியல் செயல்முறை மூலம் தயாரிக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக, என்சிஎல்லின் அறிவியல் இயக்குநர்களான முனைவர் ஆஷிஷ் லெலே மற்றும் முனைவர் திருமலைசாமி ராஜா ஆகியோர் இதுகுறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இது குறித்துப் பேசிய முனைவர் திருமலைசாமி ராஜா, "நாங்கள் நேரடி டிஎம்இ மற்றும் மறைமுக டிஎம்இ ஆகிய இரண்டையும் உருவாக்க முயன்றோம். இதற்கு வினையூக்கி (கேட்டலிஸ்ட்) மிக முக்கியமானதாக இருந்தது" என்றும், "இந்தியாவில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டே இந்த வினையூக்கி உருவாக்கப்பட்டது. நான்கு வெவ்வேறு வகையான வினையூக்கிகள் உருவாக்கப்பட்டன, இறுதியில் இந்த வினையூக்கி உருவாக்கப்பட்டது" என்றும் கூறினார். ஆஷிஷ் லெலே கூறுகையில், "100 சதவிகித டைமெத்தில் ஈதர் உற்பத்தியில் உதவும் ஒரு ஊக்கியை உருவாக்குவதே எங்கள் முயற்சியாக இருந்தது. இதற்குத் தேவையான அனைத்து கூறுகளும் இந்தியாவில் கிடைக்கின்றன. எதையும் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை." என்றார். செயல்முறை என்ன? இந்த வேதியியல் செயல்முறையைப் புரிந்துகொள்வது மிகவும் எளிதானது என்று முனைவர் லெலே கூறுகிறார். இந்தச் செயல்முறையில் இரண்டு மெத்தனால் மூலக்கூறுகளை ஒன்றிணைத்து, அதிலிருந்து நீர் மூலக்கூறை அகற்றினால், எஞ்சியிருப்பது டைமெத்தில் ஈதர் அல்லது டிஎம்இ ஆகும். ஆனால் இந்தச் செயல்முறை மிகவும் சிக்கலானது. முனைவர் லெலே கூறுகையில், "இதற்காக, முதலில் மெத்தனால் சேர்க்கப்பட்டு ஒரு வினையூக்கி சேர்க்கப்பட்டது, பின்னர் டிஎம்இ உற்பத்தி செய்யப்படும் ஒரு செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. தொடக்கத்தில் சிறிய அளவில் செய்யப்பட்ட இந்த செயல்முறை பெரிய அளவில் செய்யும்போது பலன் தருமா என்பது தான் கேள்வியாக இருந்தது. இதற்காக, வெவ்வேறு அளவுகளில் டிஎம்இ தயாரிக்கப்பட்டது. இது வெற்றி பெற்ற பிறகு, இதனை இன்னும் பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடியுமா என்ற கேள்வி எழத் தொடங்கியது," என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆனால் இந்தச் செயல்முறை மிகவும் சிக்கலானது. சுத்தமான எரிபொருள் தற்போதுள்ள நிலையில் டிஎம்இ மிகவும் தூய்மையானது. இதனை பயன்படுத்தும்போது உங்களால் சுடரைக் கூட பார்க்க முடியாது. இது புகை, நைட்ரஜன் ஆக்சைடு, கந்தக ஆக்சைடு மற்றும் நுண்துகள்களின் வெளியேற்றத்தை வெகுவாகக் குறைக்கிறது. இதன் வெப்பத் திறன் வழக்கமான எரிபொருட்களுக்கு இணையானது என்பதால், இது ஒரு சிறந்த மாற்றாகவும் அமைகிறது. இந்த எரிபொருளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது என்பதும் முக்கியமான விஷயம். முனைவர் லெலே கூறுகையில், "பொதுவாக நாம் வீட்டில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு அடுப்பின் பர்னர்களில் கார்பன் படியும். அந்த கார்பனைச் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், டைமெத்தில் ஈதரில் இதுபோன்ற எதுவும் நடக்காது. இது மிகவும் தூய்மையாக எரியும். எந்த அளவுக்கு என்றால், இதன் சுடர் கூட கண்ணுக்குத் தெரியாது," என்றார். என்சிஎல் உருவாக்கியுள்ள இந்தத் தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதற்கான வினையூக்கியும் (கேட்டலிஸ்ட்) விலை மலிவானது தான். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,என்சிஎல் உருவாக்கியுள்ள இந்தத் தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. முனைவர் திருமலைசாமி ராஜா இந்த வினையூக்கிக்கான சோதனைகளை நடத்தியது மட்டுமல்லாமல், இதற்கான ரியாக்டரையும் (உலை) உருவாக்கியுள்ளார். இந்தத் தொழில்நுட்பம் தனித்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. தற்போதைய ஆலை 12 முதல் 13 கிலோ டிஎம்இ-யை உற்பத்தி செய்கிறது. தற்போது, ஒரு நாளைக்கு 250 கிலோ எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. எல்பிஜி சிலிண்டர் பயன்பாடு தற்போது டிஎம்இ குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்பட்டாலும், எல்பிஜி மீதான சார்பைக் குறைப்பதில் இது ஒரு பெரிய அளவில் பங்களிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். தற்போது என்சிஎல்லில் உருவாக்கப்பட்டு வரும் முன்மாதிரி (ப்ரோடோடைப்), 100 சதவிகிதம் எல்பிஜி அல்லது டிஎம்இ ஆகிய இரண்டிலும் இயங்கக்கூடியது. இது பெங்களூருவில் உள்ள எல்பிஜி உபகரண ஆராய்ச்சி மையத்தில் (எல்ஈஆர்சி) சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தால் வெறும் 10 பார் (10 bar) அழுத்தத்தில் டிஎம்இ-யை உற்பத்தி செய்ய முடியும் மற்றும் இதனை நேரடியாக எல்பிஜி சிலிண்டர்களில் நிரப்ப முடியும். முனைவர் லெலே கூறுகையில், "எல்பிஜி திரவமாவது போலவே, டிஎம்இ-யும் திரவமாகிறது. 7 பார் அழுத்தத்தில் டிஎம்இ திரவமாகிறது. இதனை எல்பிஜியுடன் முழுமையாகக் கலக்க முடியும்" என்றார். "தற்போது எல்பிஜியுடன் 8 சதவிகித டிஎம்இ-யைக் கலந்து சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. எல்பிஜியுடன் 8 சதவிகித டிஎம்இ-யைக் கலந்தால், அதனை அடுப்புகள் மற்றும் சிலிண்டர்களில் பயன்படுத்த முடியும்." "மொத்த எல்பிஜி நுகர்வில் 8 சதவிகிதம் என்று நாம் சொன்னால், அது இறக்குமதி அளவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் 8 சதவிகிதத்தில் தொடங்கி பின்னர் அதனை 20 சதவிகிதமாக அதிகரிக்கலாம்." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தற்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வினையூக்கி மற்றும் டிஎம்இ உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதற்கான திட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா 2024-ஆம் ஆண்டில் 21 மில்லியன் டன் எல்பிஜியை இறக்குமதி செய்தது. இதில் வெறும் 8 சதவிகித டிஎம்இ-யைக் கலப்பதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 9500 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 10.5 கோடி எரிவாயு இணைப்புகளுக்கு 8 சதவிகித டிஎம்இ பயன்படுத்தப்பட்டால், ஒரு நாளைக்கு 1300 டன் டிஎம்இ உற்பத்தி தேவைப்படும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இது எல்பிஜியுடன் கலக்கப்படுவதால், இதற்கெனத் தனியாக அடுப்பு அல்லது சிலிண்டரைத் தயார் செய்ய வேண்டிய அவசியமில்லை. இத்தகைய டிஎம்இ பல நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், அந்தத் தொழில்நுட்பம் யாருக்கும் வழங்கப்படவில்லை. தற்போது, இந்தியாவிலேயே வினையூக்கி மற்றும் டிஎம்இ உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதற்கான திட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. என்சிஎல் நிறுவனம், தற்போது ஒரு பொறியியல் கூட்டாளருடன் இணைந்து 6-9 மாதங்களுக்குள் நாளொன்றுக்கு 2.5 டன் திறன் கொண்ட ஒரு தொழில் செயல்முறை ஆலையை அமைக்கத் தயாராகி வருகிறது. இந்தத் திட்டம் நாளொன்றுக்கு 500-1000 டன் திறன் கொண்ட ஒரு வணிக ரீதியான திட்டத்தை அமைப்பதற்கு வழிவகுக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yw35kw1l3o- யாழ்.பல்கலை துணைவேந்தராக வேல்நம்பி பதவியேற்பு
யாழ்.பல்கலை துணைவேந்தராக வேல்நம்பி பதவியேற்பு 25 Mar, 2026 | 11:27 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி புதன்கிழமை (25) பதவி ஏற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து, முற்பகல் 9:30 மணிக்குத் துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். பதவி ஏற்பு நிகழ்வில், முன்னாள் துணைவேந்தர் எஸ், சிறிசற்குணராசா , பதிவாளர் காண்டீபன் , பல்கலைக்கழக சமூகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/241880- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
புரியவில்லையே அண்ணா முதலில் நீங்கள் போய் கேட்க உங்களை சேர்த்துக் கொண்டவைக்கு இன்னொருத்தரோடும் கதைத்துள்ளேன் என்று கூட சொல்லவே இல்லை. வாசித்த எங்களுக்கே ஜீரணமாக கஸ்டமாக இருக்கிறது. உங்களைச் சேர்த்தவர்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் வந்திருக்கலாம். - மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு பிணை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.