24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ
தம் மக்களை பாதுகாப்பதற்காகவே அவர்கள் ஆயுதம் தூக்கினர். தமிழருக்கெதிரான அடக்குமுறைகளை மறைப்பதற்காக அவர்களை பயங்கரவாதிகளாக்கினீர்கள். இங்கு அடக்குமுறை நடந்தது என்பதை பல அரசியல்வாதிகளும் நீங்களுமே ஏற்றுக்கொண்டே, புலிகளை அழித்த பின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படுமென்று சர்வதேசத்துக்கு வாக்குக்கொடுத்துள்ளீர்கள். அதிகாரங்களை பகிர்ந்து வாழ மறுத்தினாலேயே நாடு இந்த அழிவை சந்தித்தது என்றும், நிரந்தர பகிர்வு பொறிமுறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறிவிட்டது என்றும்.அரசியல்வாதிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகள் பலவீனமாகக் காரணம் அந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்றோர் அரசுக்கு அவர்களைப்பற்றிய தகவல் வழங்கியதே என்று ஒரு சிங்கள அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். சிவநேசதுரை சந்திரகாந்தனும் விநாயக மூர்த்தி முரளிதரனும் விடுதலைப்புலிகளை காட்டிக்கொடுத்தே பிழைத்தனர். கோவணத்துடன் இருந்த அவர்களை வெள்ளை ஆடை அணிவித்து அழகு படுத்தியது திரிபோலி எனும் இராணுவப்பிரிவிலுள்ள ஒரு தனிக்குழு திரிபோலி என்பது 2009 கு பின் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அமைக்கப்பட்டது என ஒரு இராணுவப்புலனாய்வு அதிகாரியே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இவரும் இவரை சார்ந்தவர்களும் நமது சில நேர்மைவாதிகள் எனும் பெயரில் புலிகளை சாடுவோரும் இன்னும் புலிகளை சாடுகின்றனர். புலிகள் அழிக்கப்பட்ட பின் தமிழர் நாதியற்றவர்கள் ஆனார்கள். ஒரு நல்ல தலைவனே இல்லை அவர்களை தொடர்ந்து வழிநடத்த, அவர்களை வைத்து குறை கூறி தாம் பிழைப்பு நடத்துகின்றனர். சுதந்திரத்தை வென்றவர்கள் இராணுவத்தினரா? பாவம் நாமலும் சில இனவாதிகளும். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் இனவாதம் மதவாதம் இதைத்தவிர அரசியல் செய்வதற்கு தெரியவுமில்லை, விடயங்களுமில்லை. அவர்கள் என்னதான் செய்வார்கள்? அவர்களிடம் அந்த அறிவு இருந்தாற்தானே வெளிப்படுத்துவதற்கு. அவர்களிடம் என்ன இருக்கிறதோ அதைத்தானே கொடுக்க முடியும். இராணுவத்திற்கு சுதந்திர தினத்தில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமென்றால்; அவர்கள் செய்த மனித உரிமை மீறல்களையும் வெளிப்படுத்த வேண்டும் அதற்கு நாமல் தயாரா? இந்த இராணுவத்தளபதிகளை சில நாடுகள் தடை செய்திருக்கின்றனவே அதை நீக்க இவர் என்னஉறுதியான நடவடிக்கை எடுத்தார் சுதந்திர தினத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமென்று அடம்பிடிப்பவர். இவர் இராணுவத்தினருக்காகவா அழுகிறார்? தங்களை ஓரங்கட்டி விட்டார்களேயென புலம்புகிறார், நல்லிணக்கம் மலர்ந்து விடுமோவென அஞ்சுகிறார். மதத்தலைவர்கள் மதத்தைப்பற்றி அதன் கொள்கைகளைப்பற்றி போதிக்காமல் அரசியல், வன்முறைகளைப்பற்றி கதைப்பது கேலிக்கூத்தே, அவர்களை யாரும் அவமதிக்கவே செய்வர். மதத்தலைவர் என்று சொல்லிக்கொள்பவர்கள் மதக்கோட்பாட்டின்படி நடக்க வேண்டும், இல்லையேல் காவியை கழற்றிவிட்டு போராடவேண்டும். விகாரைக்குள் பதுக்கியிருந்துகொண்டு வசதி வாய்ப்புகளை அனுபவித்துக்கொண்டு வன்முறை இரத்தம் பற்றி பேசக்கூடாது, யாரையும் அச்சுறுத்தக்கூடாது, நாட்டை அழிக்கக்கூடாது, அது மதத்துக்கே இழுக்கு. அட இது வேற பெருமை பேச வேண்டுமா? ஆமாம் அவர்கள் நிலத்தில் அவர்களுக்கு சுதந்திரமில்லை இராணுவம் இருக்கிறது. அவர்கள் ஆலயத்தில் சுதந்திரமாக வழிபாடு நடத்தமுடியவில்லை ஆலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டு விகாரைகள் எழுந்து நிற்கின்றன, அவர்கள் தொழில் வளம் அவர்களிடமில்லை, உறவுகள் இல்லை அதற்கு காரணம் இந்த சுதந்திரம். அந்நியர் நாட்டில் காலடி எடுத்து வைக்காமல் இருந்திருந்தால் நமக்கு இந்த நிலை வந்திருக்குமா? சுதந்திர நாள் நம் மக்களை அடிமையாக்கிய நாள், அதை நாங்கள் அவ்வாறுதான் அனுஷ்டிப்போம். அதை எதிர்க்கும் நீங்கள், நாங்கள் ஏன் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் அதனால் நமக்கு எங்கே சுதந்திரமுண்டு என்பதை நிரூபியுங்கள். முதலில் சுதந்திரம் என்றால் என்ன வென்று தெரிந்து கொள்ளுங்கள் அதைப்பற்றி கருத்து சொல்வதற்குமுன். சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாத ஒரு சட்டத்தரணி.
- Yesterday
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
இப்போது அன்பிற்கும் மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் அமைதியும் அபி விருத்தியும் கொண்ட தமிழர்கள் பிரதேசங்களை உருவாக்கி கொண்டிருக்கின்றார்.
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
முப்படைகளின் தளபதி, பாதுகாப்பு அமைச்சர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பச்சை இனவாதியாக உள்ள ஒரு நாட்டில்தான் இப்படி எல்லாம் நடக்கும் 😂.
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
இராணுவம் இந்த மக்களை அழித்து, பொருளாதாரத்தில் நசுக்கி, உறவுகளை கொன்று, அவர்களின் தொழில் வளங்களை அபகரித்து வாழ விடாமல் செய்து ஏதிலிகளாக்கியது, அதையே சுட்டிக்காட்டுகிறோம். செலவு செய்தது தமிழன், அதை யாரும் நொட்டை சொல்லவில்லை. இராணுவத்தின் அடாவடிகளை, அவர்களால் காணாமல் செய்யப்பட்ட உறவுகளை தேடி அவர்களின் குடும்பத்தினர் தெருவில் அலைகின்றனர் நிஞாயம் தேடி. இன்னொருபுறம் அவர்களுக்கு மாலை, மரியாதை, ஆரத்தி, தமிழரின் நிலங்களில் இராணுவம். நேற்று ஒரு செய்தி படித்தேன், இராணுவம் வெளியேறுவதை வடக்கு கிழக்கு மக்கள் விரும்பவில்லையாம். அதற்கு ஆதாரமாக இந்தச்செய்தி இன்று. ஏழை மக்களின் நிலங்கள் விடுவிக்க சந்தர்ப்பமே இல்லைப்போலுள்ளது.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
ஜாலியன் வாலா பக் படுகொலையில் ஜெனரல் டயர் தான் உத்தரவிட்டவன் மிகுதி எல்லாம் படுகொலையை அரங்கேற்றியவர்கள் இந்திய பிரிட்டிஷ் கை கூலிகளே சொந்த மக்களை கொன்றாலும் அடிமையாக இருப்பதே சுகம் என்று வாழ்பவர்கள் . அதே பிரிட்டிஷ் இராணுவம் கிழக்கு ஆசியா பக்கமும் ஆட்சி பரம்பலை செய்தது அங்கு எல்லாம் இந்தியா போலவோ ஸ்ரீ லங்கா போலவோ அடிமை படைகள் அவர்கள் நாட்டுக்கு எதிராக பெரிதாக சேரவில்லை .இது வரலாறு . இங்கு என்னவென்றால் எப்போதோ மவுனித்த அமைப்பு மேல் சிங்களவனை விட கேவலமாய் காறி உமிழும் தொடற்சியான வண்மம் என்ன ? புலிகள் இல்லையென்றால் பாலும் தேனும் ஓட வைப்பம் என்று சொன்னவர்களிடம் கேள்வி கேட்க வக்கற்று குறுகிய மனப்பான்மையில் புலிகளை வசைபாடுவது ஒன்றே முழு நேர தொழில் போல் யாழை உபயோகிப்பது சரியா என்று தெரியவில்லை .
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
இராணுவத்தை ஈடுபடுத்தாமல் நீங்கள் மானிப்பாயில் இப்படி ஒரு காரியத்தை செய்யும் போது அதை இதை விட இரு மடங்கு பாராட்டுவோம் அண்ணா😂. #நொட்டைக்கு குறையில்லை 😂
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
நன்றி டாக்டர் 🙏 ராஜையா குடும்பத்தினர்.
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
எதிலும் இராணுவத்தை பொதுச்சேவைகளில் வலிந்து புகுத்தி அவர்கள் மக்களுக்கு சேவை செய்கின்றனர் என மக்களாலும் சர்வதேசத்தாலும் புகழப்படவேண்டும், அவர்கள் செய்த கொலைகள், குற்றங்கள் மறக்கப்பட, மறைக்கப்பட வைக்கவேண்டும், அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை, விசாரணை நடத்தப்படக்கூடாது. பாருங்கள்! சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, நாமல், பிக்குகள் இனி மேல் பிரச்சாரம் எப்படியிருக்குமென்று. நமது மக்களுக்கெல்லாம் இப்படியான கட்டிடங்கள் கட்டத்தெரியாது. இதற்கு முன் தமிழர் பிரதேசங்களில் எத்தனையோ பாடசாலைகள், கோயில்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டனவே, அப்போதெல்லாம் இல்லாத ஆரவாரங்களும் பாராட்டுகளும் இப்போது ஏன்? ஒன்றை மறைக்க இன்னொன்று. பாடசாலைகளையும் கோவில்களையும் வீடுகளையும் வைத்தியசாலைகளையும் இடித்து தரை மட்டமாக்கியவர்கள், மக்களை அழித்து ஏதிலியாக்கியவர்கள், காணாமல் ஆக்கியவர்கள் இப்போ முன்னிலையில். நாளைக்கு இதற்கு பக்கத்தில் ஒரு விகாரையும் கட்டுவார்கள். முன்பே இங்கு விகாரை கட்ட திட்டமிட்டு சலசலப்பு ஏற்பட்டது, இப்போ தானாகவே சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கிறார்கள் தட்டு வைத்தழைத்து.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நெதர்லாந்து கறுப்பி சுவி முன் கூட்டிய முட்டை😛................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்ரேலியா அணியில் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்கள் இல்லை Nathan Ellis பரவாயில்லை மற்றவர்கள் சுதப்பல் பந்து வீச்சாளர்கள்...............அடம் சம்பாவை தவிற நல்ல சுழல் பந்து வீச்சாளர்கள் இல்லை அவுஸ் அணியில் ரிம் டேவிட் விளையாடுவது அணிக்கு கூடுதல் பலம்..........அவர் முற்றிலும் காயத்தில் இருந்து மீண்டு வந்து விட்டாரோ தெரியாது......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்ரேலியா பாடு ஐயகோ தானோ. இறுதிப் போட்டிக்கு போவினம் என்றெல்லோ நினைத்தேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உலகக்கிண்ணப் போட்டிகள் GMT நேரப்படி 07 பெப் 05:30 க்கு ஆரம்பிக்கவுள்ளன. நாளை சனி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED எதிர் PAK 21 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் இருவர் மாத்திரம் நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நெதர்லாந்து கறுப்பி சுவி முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCOT எதிர் WI மூன்று பேர் ஸ்கொட்லாந்து அணி வெல்வதாகவும் 20 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஸ்கொட்லாந்து சுவி கோஷான் சே நந்தன் இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND எதிர் USA அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா!
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
ஆமா ..... புலிகள் தடுத்து வைத்திருந்தபடியினாற்தான் சிங்கள இராணுவம் மக்களை அழித்தது. அதுவரை இராணுவம் சிங்கள அரசு தமிழ் மக்களை பாதுகாத்தே வைத்திருந்தனர். அவர்கள் அதிகாரத்தில் கட்டுபாட்டிலிருந்த சிறைச்சாலையில் தமிழ்க்கைதிகளுக்கு என்ன நடந்தது? புலிகளை வெற்றி கொண்ட பின் இராணுவத்தையும் அரசையும் நம்பி கையளிக்கப்பட்ட பொதுமக்களுக்கு என்ன நடந்தது? இனக்கலவரங்கள் யாரால் அவ்வப்போது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது, ஏன் அவ்வாறு நடந்தது? ஆலயங்கள், வைத்தியசாலைகள்மேல் ஏன் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது? யாழ் நூலகம் ஏன் எரிக்கப்பட்டது? கொழும்பு சென்ற தமிழர்கள் இடையில் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள், ரயர் போட்டு எரிக்கப்பட்டனர். அதற்கும் புலிகள்தான் காரணம் என்று சொல்லவேண்டியது. தன் தாய் இனம் செய்த குற்றங்களை மறைக்க புலிகளை இழுத்து மூட வேண்டியுள்ளது.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இவர் கட்டுரை ஒன்ற சமீபத்தில் யாழ்களத்தில் கண்டேன் ஏன் இவர் இப்போது எழுதுவது இல்லை என்று நினைத்தேன் இப்போது விளங்கியது 😂
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
இராணுவத்தினருக்கும் நன்றி சொல்ல வேணுமல்லோ ... அச்சா இராணுவம் ,சொக்கான இராணுவம் ,அகிம்சை போதனை செய் இராணுவம்..அமைதியான இராணூவம்
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
இப்பிடியும் ஒண்டு போகுதா? யார் இந்த மொக்கராசு, திரு திருக்குமரன்? என்ன ஆராய்ச்சிக்கு ஹூல்கள் உதவினார்கள் என்றே தெளிவாகச் சொல்கிறார்? இவரும் பங்கு பற்றியிருப்பாரோ😂??
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமெரிக்காவில் நடந்த உலக கோப்பையில் நியுசிலாந் வீரர் விளையாடினார் இந்த உலக கோப்பையில் அவரை காண வில்லை.............நல்ல வீரர் அமெரிக்கா அணியில் கூட இந்தியர்கள் தான் இந்தியா அணியில் இடம் கிடைக்காம அமெரிக்கா அணியில் இடம் பிடித்தவர்கள் அதிகம்................2012ம் ஆண்டு 19வயது உலக கோப்பையை வென்று கொடுத்த இந்தியா அணி கப்டன்.................ஆரம்பத்தில் ஜபிஎல்ல விளையாடினார் பின்பு ஜபிஎல் வாய்ப்பும் மறுக்கப் பட அமெரிக்கா தேசிய அணியில் இடம் பிடித்தார்.............இப்போது அமெரிக்கா அணியில் இருந்து தானாகவே விலகி விட்டார் போல் தெரியுது..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அதேதான். அமெரிக்க வீரர்களுக்கு, இது ஒரு வீடு திரும்பிற ஏக்கம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியாவின் ஒரு துணை அணி போல................ போன தடவை அமெரிக்காவில் நடந்த போட்டிகளிலும் நன்றாகவே விளையாடினார்கள். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கான், நேபாளம் -- அந்தப் பகுதியில் சொந்த வீட்டுக்காரர்கள். இவர்கள் வருபவர்களின் கண்ணுக்குள் மிளகாய்தூளை கொட்டி விட்டு தாக்குதல் நடத்துவது போல சில அணிகளை துவம்சம் செய்யக்கூடும்.................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அதையே தான் நானும் நினைக்கிறேன். பாபர் தான் அவர்களின் நம்பிக்கை. அவர் ஒரு பக்கம் நின்றார் என்றால், மற்றப் பக்கம் நிற்பவருக்கு சுதந்திரமா, அடித்து ஆட சந்தர்ப்பம் கிடைக்கும்.
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
மகத்தான சேவை . ....... மக்களுக்கு அவசியமானதும் கூட ........! 🙏 நன்றி ஏராளன் .........!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
அவரை விட பெரிய அரசியல் ஞானியான நீங்கள் 2025 இல் “அனுரவை அனுசரித்து போவதை தவிர வேறு வழியில்லை” என்ற முடிவுக்கும்…. 2022 இல் “ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா தன் பிராந்திய பாதுகாப்பு கருதி நடந்து கொண்டது சரிதான்” என்ற முடிவுக்கு வரவில்லையா? நீங்கள் காலம் தாழ்த்தி வந்த இடத்துக்கு சம்பந்தர் 2009 மேயிலேயே வந்திருக்க கூடும்.
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
இன்னயாவிலும் புண்ணியம் கோடி… நன்றி டாக்டர் 🙏 ராஜையா குடும்பத்தினர்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் சொன்ன இலங்கையின் எதிர் கால அதிரடி ஆட்டக் கார வீரர் இவர் தான் இப்ப தான் 19வயதுக்கு உள் பட்ட உலக கோப்பையில் விளையாடினார்..............அதுக்கு இடையில் இலங்கை A அணியில் இடம் பிடித்து 20ஓவர் உலக கோப்பைக்கு தெரிவான ஓமான் அணிக்கு எதிராக விளையாடினார்😮............................
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
உங்கள் அசாத்திய தைரியத்துக்கு வாழ்த்து😂. யாழ்களத்திலேயே அர்ஜூன், ஜூட், துல்பென், ஜீவன் என இப்படி வாய்ப்பை உருவாக்க முனைந்து, பிச்சை வேண்டாம் நாயை பிடி என ஓட வைக்கப்பட்டோர் பலர் 😂. அரசியல் பக்கமே தலைவைத்தும் படுக்காத, நவீனன் சும்மா சங்ககாராவை அவதாரில் வைத்தமைக்காக கூட்டமாக கூடி கொத்தி கலைக்கப்பட்டார். இப்போ ஐலண்டுக்கு சுன்னத் டெஸ்ட் நடக்கிறது 😂. உண்மையில் இங்கே நாதம், நியாயம், கொழும்பான் தாம் முஸ்லிம்கள் என சொல்லி எழுதும் நிலை இருக்க வேண்டும்? ஆனால் தாதாக்களுக்கு பயந்து அவர்களும் தமிழர் என்பது போல் எழுதுகிறார்கள். நிலமை இப்படி இருக்கும் போது, ஒற்றுமையாவது, ஒரே திசையாவது, ஹைகோர்ட்டாவது என்பதுதான் என் மதிப்பீடு😂.