Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. சிட்னி டெஸ்டில் வெற்றியீட்டி ஆஷஸ் தொடரை 4 - 1 என கைப்பற்றியது அவுஸ்திரேலியா; வெற்றியுடன் விடைபெற்றார் உஸ்மான் கவாஜா Published By: Vishnu 08 Jan, 2026 | 11:26 PM (நெவில் அன்தனி) சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது. 160 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 5 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது. போட்டியின் கடைசி நாளான வியாழக்கிழமை தனது 2ஆவது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றது. 142 ஓட்டங்களிலிருந்து தனது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஜேக்கப் பெத்தல் மேலும் 12 ஓட்டங்களைப் பெற்று 154 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். பின்வரிசையில் ப்றைடன் கார்ஸ் 16 ஓட்டங்களையும் மெத்யூ பொட்ஸ் ஆட்டம் இழக்காமல் 18 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக், போ வெப்ஸ்டர் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். இலகுவான 160 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 5 விக்கெட்களை இழந்த பின்னரே வெற்றி இலக்கை கடந்தது. ஜேக் வெதரோல்ட், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் 30க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். இதேவேளை இந்த டெஸ்ட் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் உஸ்மான் கவாஜா தனது 39ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வுபெற்றார். 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கவாஜா 16 சதங்கள், 28 அரைச் சதங்களுடன் 6229 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார். எண்ணிக்கை சுருக்கம் இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 384 (ஜோ ரூட் 160, ஹெரி ப்நூக் 84, ஜெமி ஸ்மித் 46, மைக்கல் நேசர் 60 - 4 விக்., ஸ்கொட் போலண்ட் 85 - 2 விக்., மிச்செல் ஸ்டாக் 93 - 2 விக்.) அவுஸ்திரேலியா 1ஆவத இன்: சகலரும் ஆட்டம் இழந்து 567 (ட்ரவிஸ் ஹெட் 163, ஸ்டீவன் ஸ்மித் 138, போ வெப்ஸ்டர் 71 ஆ.இ., மானுஸ் லபுஸ்ஷேன் 48, கெமரன் க்றீன் 37, ஜொஷ் டங் 95 - 2 விக்., ப்றைடன் கார்ஸ் 130 - 3 விக்., பென் ஸ்டோக்ஸ் 95 - 2 விக்.) இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 342 (ஜேக்கப் பெத்தெல் 154, பென் டெக்கட் 42, ஹெரி ப்றூக் 42, ஜெமி ஸ்மித் 26, போ வெப்ஸ்டர் 64 - 3 விக்., மிச்செல் ஸ்டாக் 72 - 3 விக்., ஸ்கொட் போலண்ட் 46 - 2 விக்.) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: - வெற்றி இலக்கு 160 ஓட்டங்கள் - 165 - 5 விக். (மானுஸ் லபுஸ்ஷேன் 37, ஜேக் வெதரோல்ட் 34, ட்ரவிஸ் ஹெட் 29, ஜொஷ் இங்லிஸ் 42 - 3 விக்.) ஆட்டநாயகன்: ட்ரவிஸ் ஹெட். தொடர்நாயகன்: மிக்செல் ஸ்டாக். https://www.virakesari.lk/article/235561
  3. Today
  4. இந்தியாவுக்கு அமெரிக்கா 500% வரி விதித்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் அலசல் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் 9 ஜனவரி 2026, 12:44 GMT புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய மசோதா குறித்த விவாதங்கள் தற்போது சர்வதேச அளவில் அதிகரித்துள்ளன 'ரஷ்ய தடைகள் மசோதா' என்று அழைக்கப்படும் இந்த மசோதா, அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டால், 'லிண்ட்சே கிரஹாம் மசோதா' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ரஷ்யாவிலிருந்து மலிவு விலையில் எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த சூழலில், இந்தியாவின் முன் இரண்டு விருப்பத் தெரிவுகள் மட்டுமே இருக்கக்கூடும். இந்தியா 500 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டும் அல்லது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும். டொனால்ட் டிரம்பின் இத்தகைய தொடர்ச்சியான முடிவுகளைப் பார்க்கும்போது, அமெரிக்க அதிபரின் அதிகாரத்திற்கு ஏதேனும் எல்லை உள்ளதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அமெரிக்க செனட்டர் கிரஹாம் புதன்கிழமை அன்று எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், செனட்டர் ப்ளூமெந்தல் மற்றும் பலருடன் இணைந்து தான் பல மாதங்களாகத் தயாரித்து வந்த 'ரஷ்ய தடைகள் மசோதாவிற்கு' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மலிவான விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகள் ரஷ்ய அதிபர் புதினின் 'போர் இயந்திரத்திற்கு' ஊக்கமளிப்பதாகவும், அந்த நாடுகளைத் தண்டிப்பதற்கான அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு இந்த மசோதா வழங்கும் என்றும் கிரஹாம் குறிப்பிட்டிருந்தார். ரஷ்யாவிடமிருந்து பெருமளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கியமானது. ஆனால், அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளுக்குப் பிறகு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவை கணிசமாகக் குறைந்திருப்பதைப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஒருவேளை ரஷ்ய தடைகள் மசோதா நிறைவேற்றப்பட்டு, இந்தியா மீது 500 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டால், அது இந்தியாவுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்? என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து பேசும் 'உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முயற்சி' நிறுவனத்தின் நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா, "இப்படியொரு சூழல் ஏற்பட்டால் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி முழுமையாக நின்றுவிடும். அதாவது, அமெரிக்காவிற்கு இந்தியா செய்யும் 87.4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி சிக்கலுக்கு உள்ளாகும்," என்கிறார். "இதுவரை டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக வரிகளை விதித்தார். ஆனால் தற்போதைய மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மசோதா நிறைவேறும் என்று நான் நினைக்கவில்லை. இருப்பினும், இந்தியா தனது கொள்கையை தெளிவுபடுத்த வேண்டும். இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க விரும்பினால், அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். வாங்க விரும்பவில்லை என்றால், அதையும் தெளிவாக கூற வேண்டும். ஒரே நேரத்தில் அமெரிக்க வரிகளால் ஏற்படும் இழப்புகளை அனுபவித்துக்கொண்டே, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியையும் குறைப்பது சாத்தியமில்லை." என்றார் அஜய் ஸ்ரீவாஸ்தவா. பட மூலாதாரம்,Reuters "டிசம்பர் மாதத்தில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்த எண்ணெயானது, ஜூன் மாதத்தில் இருந்த தினசரி 21 லட்சம் பேரல் என்ற உச்ச அளவை விட 40% குறைந்துள்ளது. விளாடிமிர் புதினின் போர் இயந்திரத்திற்கான பணம் கிடைப்பதைத் தடுப்பதற்கும், யுக்ரேன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகளுக்குக் கிடைத்த ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக இந்த மசோதா கருதப்படுகிறது. 2024-ஆம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவிற்கு 87.4 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்தது, இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சுமார் ஐந்தில் ஒரு பங்காகும்." என்று அமெரிக்க ஊடக நிறுவனம் ப்ளூம்பெர்க் கூறியுள்ளது வரி விதிப்பை அமெரிக்க அதிபர் எதேனும் ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொள்வாரா? 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை, டிரம்பிடம் கண்ட ஓர் நேர்காணலில், அவரது உலகளாவிய அதிகாரங்களுக்கு ஏதேனும் எல்லை உண்டா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த டிரம்ப், "ஆம், ஒன்று இருக்கிறது. அது என்னுடைய தார்மீக நெறி, எனது சொந்த அறிவு. அது ஒன்றுதான் என்னை தடுக்கக்கூடிய ஒன்று" என தெரிவித்தார். மேலும், "எனக்கு சர்வதேச சட்டங்கள் தேவையில்லை. நான் மக்களுக்கு தீங்கு செய்ய முயற்சிக்கவில்லை," என்றும் கூறினார். "டிரம்ப் நிர்வாகம் சர்வதேசச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டுமா?" என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "ஆம், நான் பின்பற்றுகிறேன். ஆனால் அதை நான்தான் தீர்மானிப்பேன். சர்வதேசச் சட்டம் குறித்த உங்கள் வரையறை என்ன என்பதைப் பொறுத்தே அது அமையும்." அமெரிக்கா மீண்டும் அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்று இந்தியா தலைமையிலான சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (ஐஎஸ்ஏ) உட்பட சுமார் ஒரு டஜன் சர்வதேச அமைப்புகளிடமிருந்தும் அமெரிக்கா விலகியுள்ளது. ஐஎஸ்ஏவிலிருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் முடிவு தொடர்பாக இதுவரை இந்திய அரசாங்கம் இன்னும் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்தியாவும் பிரான்சும் இணைந்து நிறுவிய இந்த அமைப்பில் 90க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகள் உள்ளன. சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. இந்தியாவிற்கான அமெரிக்க தூதராகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதராகவும் நியமிக்கப்பட்டிருக்கும் செர்ஜியோ கோர் இந்த வாரம் டெல்லிக்கு வரவிருக்கிறார். ஜனவரி 12 அன்று அவர் இந்தியத் தூதராக பதவியேற்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க முடிவுகள் குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள தி இந்துவின் சர்வதேச ஆசிரியர் ஸ்டான்லி ஜோனி, ''இந்த மிகவும் கடுமையான 500 சதவீத வரி சட்டம் அமல்படுத்தப்பட்டால், அமெரிக்காவுடன் இந்தியா கொண்டுள்ள 'முழுமையான உத்தி ரீதியிலான கூட்டாண்மை' என்ற அடிப்படை கருத்தையே இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.'' என தெரிவித்துள்ளார். இதை உணர்த்தும் விதமாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அரசு ஒப்பந்தங்களுக்கு சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஐந்து ஆண்டு கட்டுப்பாடுகளை நீக்க இந்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு வருகிறது என தெரிவித்துள்ளது. 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே நடந்த தீவிரமான மோதலுக்குப் பிறகு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பட மூலாதாரம்,Reuters இந்தியாவால் 500% வரியை எதிர்கொள்ள முடியுமா? வெளியுறவுக் கொள்கை குறித்த ஆய்வு மையமான அனந்தா மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திராணி பாக்சி, அமெரிக்காவின் இந்த உத்தி மற்றும் புதிய மசோதா குறித்து எக்ஸ் வலைதளத்தில் விரிவாக பதிவிட்டுள்ளார். "லிண்ட்சே கிரஹாமின் இந்த மசோதா கடந்த ஒன்பது மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. யுக்ரேனின் எதிர்காலம் குறித்து அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஏற்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் பகுதியாக இது தற்போது மீண்டும் பரிசீலிக்கப்படுகிறது. தங்களுடைய இறுதித் திட்டத்தை ரஷ்யாவிடம் முன்வைக்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தயாராகி வருகின்றன." "இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கும் பாதிப்பு உண்டு என்றாலும் அமெரிக்காவின் உண்மையான இலக்கு சீனாதான். இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளின் மீது அமெரிக்கா தடைகளை விதித்தால், அதற்குப் பதிலாக யுக்ரேன் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஓர் உடன்பாட்டிற்கு வரக்கூடும். அந்த ஒப்பந்தத்தின்படி, யுக்ரேன் தனது சில பகுதிகளை ரஷ்யாவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கலாம்." "இந்தியாவின் கொள்கை எப்போதுமே யதார்த்தம் மற்றும் நடைமுறைச் சிந்தனையின் அடிப்படையிலேயே இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால், இந்தியா விரைவில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டு வரும் என்று நம்புகிறேன். இந்தியா ஏற்கனவே 50 சதவீத வரி விதிப்பால் திணறி வரும் நிலையில், 500 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்வது சாத்தியமற்றது." என தெரிவித்துள்ளார் அத்துடன், ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார். ரஷ்ய எண்ணெய் இல்லாமலும் இந்தியாவால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றும், தனது வாடிக்கையாளரான இந்தியாவை இழந்தாலும் ரஷ்யாவால் தன்னைச் சமாளித்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறுகிறார். கடந்த ஓராண்டில் இந்திய-அமெரிக்க உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் இந்த உறவு 'தீவிர சிகிச்சைப் பிரிவில்' (ICU) நீடிக்கவே வாய்ப்புள்ளதாகவும் இந்திராணி பாக்சி எச்சரிக்கிறார். அமெரிக்காவின் 500 சதவீத வரி மசோதா குறித்து பேசும் இந்திராணி பாக்சி, '' இதிலிருந்து சில நாடுகளுக்கு விலக்கு அளிக்கும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கும். தகவல்களின்படி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சில சிறப்பு விலக்குகள் அளிக்கப்படும். அதாவது, ஐரோப்பா எந்தத் தடையுமின்றி ரஷ்ய எரிசக்தியைத் தொடர்ந்து கொள்முதல் செய்யும். அமெரிக்கா இப்போதும் ரஷ்யாவிடமிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாங்குகிறது. 2028 வரை அமெரிக்கா தனக்குத்தானே இந்த விலக்கைத் தொடருமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை." "தற்போதைய சூழலில் இந்த உண்மைகள் புறக்கணிக்கப்பட்டு, இந்தியா மற்றும் சீனாவை வில்லன்களாகக் காட்டும் முயற்சிகளே அதிகம் நடக்கும். அண்மையில் லத்தீன் அமெரிக்காவில் வெனிசுவேலா விவகாரத்தில் சீனாவிற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய் மீதான வரி விதிப்பால் சீனாவும் பெரும் நட்டத்தை சந்திக்க நேரிடும். இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் இலக்காக இரான் மாறக்கூடும்." என்கிறார் இந்திராணி பாக்சி. இதற்கிடையில், இந்த அமெரிக்காவின் புதிய மசோதா குறிப்பாக இந்தியாவைக் குறிவைக்கக்கூடும் என்றும், அதே சமயம் சீனா ஓரளவிற்குப் பாதுகாப்பாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் 'தி எகனாமிக் டைம்ஸ்' நாளிதழ் வெளியிட்ட செய்தி கூறுகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யாவின் எண்ணெயை அதிகமாக வாங்கும் நாடு சீனா சீனாவுக்கு பாதிப்பு இருக்குமா? ரஷ்ய எண்ணெயை அதிகளவில் வாங்கும் நாடுகளில் சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகளுமே முக்கியமானவை. அமெரிக்கா, புதிய மசோதாவின் மூலம் இந்த மூன்று நாடுகளையுமே குறிவைப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இதுவரை இந்தியா மீது மட்டுமே 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், சீனாவிற்கு எதிராக எவ்வித தண்டனை நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையிடம் பேசிய வர்த்தக நிபுணர் அஜய் ஸ்ரீவாஸ்தவா, "இந்த மசோதா செனட்டில் நிறைவேற்றப்பட்டாலும், நடைமுறையில் இது சாத்தியமில்லை. இது இந்தியாவை மட்டுமே குறிவைக்கும். சீனா அதற்கு அப்பாற்பட்டதாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார். 'ஆர்டி இந்தியா செய்தியிடம் பேசிய முன்னாள் இந்திய வர்த்தகச் செயலாளர் அஜய் துவா , "500% வரி என்பது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியைத் தடுப்பதற்கான வழிமுறையே தவிர வேறில்லை. இது வர்த்தகத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்குச் சமம்," என்றார். "நாம் தற்போது 25 சதவீத வரியைச் செலுத்தி வருகிறோம். ஒருவேளை 500 சதவீத வரி விதிக்கப்பட்டால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை அமெரிக்காவில் யாரும் வாங்க முடியாது. எனவே, கூடிய விரைவில் இந்தியா மாற்றுச் சந்தைகளைக் கண்டறிய வேண்டும்," என்றும் அவர் எச்சரிக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyw2ze65xeo
  5. செங்கலடியில் பாரிய கொள்ளை Jan 9, 2026 - 07:22 PM மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள பிரபல சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றில், இன்று (09) வெள்ளிக்கிழமை அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிகவும் திட்டமிட்ட முறையில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பெறுமதியான சொத்துக்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். வர்த்தக நிலைய உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில், சுமார் 45 இலட்சம் ரூபா பணம், 5 பவுன் தங்க நகைகள், கடையில் இருந்த பெறுமதியான விற்பனைப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொள்ளையர்கள் தாங்கள் அடையாளம் காணப்படுவதைத் தவிர்ப்பதற்காக மிகவும் சாதுர்யமாகச் செயற்பட்டுள்ளனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராக்களைச் சேதப்படுத்தியதுடன், காட்சிகளைப் பதிவு செய்யும் கருவிகளையும் (DVR) கையோடு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நேரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடையிலிருந்த கண்காணிப்புப் பதிவுக்கருவி திருடப்பட்ட போதிலும், அந்தச் சந்தியில் அமைந்துள்ள ஏனைய வர்த்தக நிலையங்கள் மற்றும் வீதிகளில் உள்ள பொதுவான CCTV கெமரா காட்சிகளைப் பயன்படுத்தி கொள்ளையர்களை அடையாளம் காண பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://adaderanatamil.lk/news/cmk6xr19803qao29noxw128gf
  6. 09 Jan, 2026 | 05:26 PM இலங்கை கிறிஸ்தவ வாலிபர் ஒன்றியத்தின் தலைவர் பாஸ்டர் சிவனேஷ் தலைமையில், நாட்டின் அனைத்து கிறிஸ்தவ சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை (09) சமர்ப்பித்தனர். இலங்கையில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் ஓரினச்சேர்க்கை மற்றும் பாலின அடையாளங்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்து, கிறிஸ்தவ சமூகத்தின் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பரிசுத்த வேதாகமத்தின் போதனைகளின் அடிப்படையில் இந்த விடயங்களை தாங்கள் எவ்வாறு நோக்குகிறோம் என்பதை ஜனாதிபதிக்கு இக்கடிதம் மூலம் விளக்கியுள்ளதாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக மாணவர்கள் மத்தியில் இத்தகைய விடயங்களை ஊக்குவிக்கும் அல்லது பரப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இது சமூகத்திற்கும், குடும்பக் கட்டமைப்பிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளனர். விவிலிய விழுமியங்கள் மற்றும் நாட்டின் சட்ட ரீதியான காரணிகளின் அடிப்படையில் இவ்வாறான போக்குகள் மனிதர்களுக்கு எவ்விதமான இடையூறுகளை விளைவிக்கும் என்பதை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது கருத்துக்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி செயலக அதிகாரிகள், இது குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்குத் தேவையான நேரத்தை ஒதுக்கித் தருவதாக உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதிநிதிகள், வரும் நாட்களில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து இது குறித்து மேலதிக விளக்கங்களை முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தனர். இலங்கையில் பாலின அடையாள விவகாரம்: ஜனாதிபதிக்கு கிறிஸ்தவ சபைகள் அவசர கடிதம் | Virakesari.lk
  7. 09 Jan, 2026 | 05:22 PM (செ.சுபதர்ஷனி) கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 229 என்ற விமானம், வியாழக்கிழமை (8) இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்து சுமார் 2 மணித்தியாலம் 21 நிமிடங்களின் பின்னர் இவ்வாறு அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 8 ஆம் திகதி குவைத் இராஜியத்தின் குவைத் விமான நிலையம் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 229 என்ற விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. குறித்த விமானம் தனது பயணத்தை ஆரம்பித்ததன் பின்னர் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோதே, விமானி இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருந்தமையை அறிந்துள்ளார். இந்நிலையில் சுமார் 2 மணித்தியாலம் 21 நிமிடங்கள் வான்பரப்பில் பறந்ததன் பின்னர் மேற்படி விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. யு.எல் 229 என்ற இந்த விமானம், வியாழக்கிழமை மாலை 6.44 மணியளவில் குவைத் சர்வதேச விமான நிலையம் நோக்கிப் பயணித்தது. விமானம் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது, அதன் ஹைட்ரோலிக் தொகுதியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி அவதானித்துள்ளார். உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்பு கொண்ட விமானிக்கு, பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் திருப்புமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதற்கமையச் செயற்பட்ட விமானி இரவு 9.05 மணியளவில் விமானத்தைப் பாதுகாப்பாகக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதன்போது குறித்த விமானத்தில் 179 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் எவ்வித பாதிப்புமின்றித் தரையிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா, தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான விமானத்தின் பயணிகள் அனைவரும் மாற்று விமானங்கள் மூலமாக குவைத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிப் பயணித்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது! | Virakesari.lk
  8. 09 Jan, 2026 | 05:18 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) நாட்டில் அண்மைகாலமாக பிறப்பு வீதம் குறைவடைந்துள்ள நிலையில், குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார். குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்கவிப்புத் தொகையை வழங்குதல் என்ற தலைப்பில் அஜித் பி. பெரேராவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2018 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையின் வருடாந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக விழ்ச்சியடைந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாலும் இதனால் எதிர்காலத்தில் இலங்கையில் இளைஞர் சனத்தொகை நிச்சயமாக வீழ்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உள்ளதாலும் இளைஞர் சனத்தொகை இவ்வாறு வீழ்ச்சியடையும்போது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயன்முறையில் பாதகமான தாக்கங்கள் ஏற்படக் கூடும். இதனால் இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்ப அலகுகளை கவரக்கூடிய ஊக்குவிப்புத் தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்க வேண்டும் ; அஜித் பி பெரேரா தனிநபர் பிரேரணை முன்வைப்பு | Virakesari.lk
  9. கட்டாயம் வங்கிக் கணக்கு கிடைத்த உடனேயே உதவித் தொகையை அனுப்பிய உறவிற்கு கோடி நன்றிகள் 🙏
  10. "மூன்று கவிதைகள் / 20" 'பட்டாம்பூச்சியின் காதல் ... ' பட்டாம்பூச்சியின் காதல் நிரந்தரம் அல்ல பருவம் கொடுத்த அழகின் ஈர்ப்பு! தொட்டால் குலுங்கும் ஒரு உணர்வு பட்டால் தெரியும் அதன் மாயை! திடீரென பிறக்கும் இதயத்தின் துடிப்பு திட்டம் இல்லா மனிதனின் ஆசை! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................. 'புத்தருக்கும் ஆசை வருமா' புத்தருக்கும் ஆசை வருமா? இலங்கைத் தமிழரைக் கேட்டுப் பார்— சிலை வடிவில் ஊடுருவும் பேராசையை! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................................. 'வெள்ளை மழை இங்கு பொழிகிறது' வெள்ளை மழை இங்கு பொழிகிறது பிள்ளை நிலா வானில் ஒளிர்கிறது வள்ளி உன்னை மனம் தேடுகிறது! துள்ளி இருவரும் பனியில் சறுக்கி அள்ளி அணைத்து குளிர் காய்ந்து பள்ளி அறையில் இன்பம் காண்போம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................ துளி/DROP: 1982 ["மூன்று கவிதைகள் / 20" https://www.facebook.com/groups/978753388866632/posts/33204560462525840/?
  11. ஈரான் ஒருபோதும் பின்வாங்காது : டிரம்ப் தனது நாட்டை நடத்துவதில் கவனம் செலுத்தட்டும் - ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லாஹ் அலி கொமெய்னி கடும் பதில் 09 Jan, 2026 | 03:47 PM ஈரான் எந்தவித அழுத்தங்களுக்கும் ஒருபோதும் பின்வாங்காது என ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லாஹ் அலி கொமெய்னி உறுதியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானை நோக்கி வெளியிட்ட கடும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். “ஈரான் ஒரு சுயாதீன நாடு. எங்களின் இறையாண்மையும், தேசிய மரியாதையும் கேள்விக்குள்ளாக்கப்படும் எந்த முயற்சிக்கும் நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். ஈரான் பின்வாங்கும் நாடல்ல,” என அயத்துல்லாஹ் கொமெய்னி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உள்நாட்டு பிரச்சினைகளை முதலில் கவனிக்க வேண்டிய நிலையில் டொனால்ட் டிரம்ப் பிற நாடுகளுக்கு அறிவுரை வழங்குவதாகவும், “டிரம்ப் தனது சொந்த நாட்டை எவ்வாறு நடத்துவது என்பதிலேயே கவனம் செலுத்துவது நல்லது” என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். அண்மைக்காலமாக அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிராக டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்துகள் மத்திய கிழக்கு அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்குப் பதிலளித்துள்ள ஈரான், தனது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய நலன்களை பாதுகாப்பதில் எந்த சமரசத்திற்கும் இடமளிக்காது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், வெளிநாட்டு அழுத்தங்கள், பொருளாதார தடைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஈரானின் நிலைப்பாட்டை பலவீனப்படுத்த முடியாது என்றும், மக்கள் ஆதரவுடன் ஈரான் தனது பாதையில் முன்னேறும் என்றும் அயத்துல்லாஹ் கொமெய்னி வலியுறுத்தினார். இந்தக் கருத்துக்கள், மத்திய கிழக்கில் நிலவி வரும் அரசியல் பதற்றத்தின் பின்னணியில் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235596
  12. அத தெரண கருத்துப்படங்கள்.
  13. 25,000 புதிய வீடுகளை மேலதிகமாக அமைக்க வேண்டும் - ஜனாதிபதி Jan 9, 2026 - 01:32 PM 'டித்வா' புயலினால் அனர்த்தத்திற்குள்ளான வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் போது, சுமார் 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (09) முற்பகல் கல்நேவ, ஹந்துன்கம, அலுபெத்த பகுதியில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை அமைப்பதற்கும், வீடு ஒன்றைக் கட்டுவதற்கு 50 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் ஜனாதிபதி கருத்து வௌியிடுகையில், தற்போதைய அறிக்கைகளின்படி சுமார் 6,000 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் 17,000 - 18,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தும் அல்லது வசிக்க முடியாத அபாய நிலையிலும் உள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக 20,000 முதல் 25,000 வீடுகள் வரை கட்ட வேண்டியுள்ளது. 2026 வரவுசெலவுத் திட்டத்தில் மேலும் 31,000 வீடுகளைக் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 'எமக்கு ஒரு வீடு' திட்டத்தின் கீழ் கிராமங்களில் உள்ள வறிய மக்களுக்காக 10,000 வீடுகளும், தேசிய வீடமைப்பு அதிகார சபையூடாக மேலும் 10,000 வீடுகளும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. யுத்தம் 2009 ஆம் ஆண்டில் நிறைவுக்கு வந்த போதிலும், இன்னும் பலர் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்காக 2,500 வீடுகளுக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதமும், தோட்டப்புற மக்களுக்காக இந்திய உதவியுடன் வீடுகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறான சூழலிலேயே மேலதிகமாக இந்த 25,000 வீடுகளைக் கட்டும் பொறுப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். முழுமையாகப் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முன்பிருந்ததை விடச் சிறந்த வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க 50 இலட்சம் ரூபாய் வழங்க தீர்மானித்துள்ளோம். அதற்கு 20 + 15 + 15 இலட்சம் வீதம் கட்டம் கட்டமாக வழங்கப்படும். நிதியில் ஒருபோதும் தாமதம் ஏற்படாது, 2-3 மாதங்களுக்குள் விரைவாக வீடுகளைக் கட்டி முடிக்க வேண்டும். அதேநேரம் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும். எமது தற்போதைய வாழ்க்கை தரத்திலேயே இறக்கக் கூடாது. தற்போதைய நிலையில் இருந்து மேம்பட்ட வாழ்க்கை முறைக்கு செல்ல முற்பட வேண்டும். இன்று 26 பேருக்கு 50 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. ஒரு மனிதனுக்குத் தேவையான பல அடிப்படை உரிமைகள் உள்ளன. சிறந்த வருமான வழி, பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி, ஆரோக்கியமான வாழ்வு, நல்லதொரு இல்லம் மற்றும் மன அமைதி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmk6l91pm03pto29n1m1hqmrb
  14. ஜப்பானுக்கான தொழில்நுட்பப் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை - சீனா 08 Jan, 2026 | 03:31 PM சீனாவிலிருந்து ஜப்பானுக்கு தொழில்நுட்பப் பொருட்களை ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் இராணுவ தொழில்நுட்பங்களான அணுசக்தி உபகரணங்கள், மின்னனு பொருட்கள், கணினிகள், விமான பொருட்கள் உட்பட தொழில்நுட்ப பொருட்களின் ஏற்றுமதிக்கு சீனா தடை விதித்துள்ளது. ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துடன் டோக்கியோவுக்கு நேரில் சென்று அவரை சந்தித்தார். இருபெரும் தலைவர்களும் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக இணைவோம் என்று அறிக்கையை வெளியிட்டனர். பின்னர், தமது நாட்டுக்கு எதிராக செயற்பட்டால் போர் நடவடிக்கை எடுக்கப்படும் என சனே தகைச்சி சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனால் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு படிப்படியாக நீங்கி, வர்த்தகத் தொடர்புகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாகவே, ஜப்பான் நாட்டுக்கான தொழில்நுட்பப் பொருட்கள் ஏற்றுமதியை சீனா இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/235521
  15. கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள்! Jan 9, 2026 - 10:37 AM தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழலில் பல இழுவைப் படகுகளில் இலங்கையின் வடக்கு கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ள இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றமையை அவதானிக்க முடிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. கடல் கொந்தளிப்பு காரணமாக ஏற்கனவே வாழ்வாதாரத்தை வட பகுதி மீனவர்கள் இழந்துள்ள நிலையில், இந்திய மீனவர்கள் இந்த நடவடிக்கை மேலும் மோசமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cmk6ezwoc03pmo29n070u1n1n
  16. மேற்கு வாய் கிழிய கத்தும் இரானில் சுதந்திரம் இல்லை என்பது பொய்த்து பொய் உள்ளது. அதுவும் மேற்கு, இஸ்ரேல் உள்நாட்டில் குழப்பத்தை ஏற்றப்படுத்தலாம் என்ற சாத்திய கூறுகள் இருந்தும் இரானின் அதி உச்ச ஆட்சி பீடத்தில் இருந்து அடிவரை சொல்வது, மக்களுக்கு ல மனப்புழுக்கம், மற்றும் குறைகளை வன்முறை இல்லாது சொல்லலாம், வன்முறை வந்த்தால், வெளியார் தூண்டியாது என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேட்ற்கும் அப்படியாந மொழியிலேயே அந்தந்த நாடுகளில் நாடாகும் போராட்டத்துக்கு சொல்வது.
  17. தென்கிழக்கு கடலில் நிலைகொண்டுள்ள சக்தி மிக்க தாழமுக்கம் : இன்று மாலை இலங்கையின் கரையை நோக்கி நகரும் சாத்தியம்! 09 Jan, 2026 | 07:06 AM இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் மட்டக்களப்புக்கு தென்கிழக்காக சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மேலும் தீவிரமடைவதுடன் இன்று மாலையளவில் பொத்துவிலுக்கும் திருகோணமலைக்கும் இடையாக இலங்கையின் கரையை நோக்கி வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் . வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். கண்டி, நுவரெலியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் 50 - 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியங்களின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு , வடமத்திய, மத்திய ,வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு மற்றும் ஹம்பகா மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றராக அதிகரித்தும் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சக்தி வாய்ந்த தாழ் அமுக்கம் இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் மட்டக்களப்பில் இருந்து சுமார் 200 km தொலைவில் நிலை கொண்டுள்ளது. அதன்படியினால் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சிலாபம் தொடக்கம் மன்னார், ‌காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 35 - 45 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். காற்றின் வேகமானது மணிக்கு 60 - 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் அடிக்கடி கொந்தளிப்பான நிலையில் இருந்து மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 - 3.5 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. https://www.virakesari.lk/article/235567
  18. சிங்கத்துக்கு பதிலாக கண்காணிப்பவர் மீது செலுத்தப்பட்ட மயக்க ஊசி – என்ன நடந்தது? பட மூலாதாரம்,Hanif Khokhar/Getty 9 ஜனவரி 2026, 10:20 GMT புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர் குஜராத்தில் பெண் சிங்கம் ஒன்றைப் பிடிக்க முயன்றபோது 'டிராக்கர்' ஒருவர் உயிரிழந்தார். இந்தத் டிராக்கர் உயிரிழந்த விதம் மிகவும் அரிதானது என்றும், குஜராத் வனத்துறையின் வரலாற்றில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விஷயங்கள் மற்றும் தரவுகள் மூலம் விலங்குகளின் நடமாட்டம் மற்றும் நடத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் டிராக்கர்கள் என அழைக்கப்படுகின்றனர். பெண் சிங்கத்தை மயக்கமடையச் செய்வதற்காகச் செலுத்தப்பட்ட ஊசி, சிங்கத்தின் மீது செலுத்தப்படுவதற்குப் பதிலாக, அதற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த டிராக்கரின் கையில் தவறுதலாகப் பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை அவர் உயிரிழந்தார். இது எப்படி நடந்தது மற்றும் ஒரு சிங்கத்தை மயக்கமடையச் செய்ய எவ்வளவு மருந்தளவு பயன்படுத்தப்படுகிறது? இது மனிதர்கள் மீது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது? இந்த முழுச் சம்பவமும் நடந்தது எப்படி? பிபிசி குஜராத்தியின் ஹனிப் கோகர் ஜூனாகத்திலிருந்து வழங்கிய தகவலின்படி, விஸாவதரின் நாணி மோன்பாரி என்ற சிறிய கிராமத்தில் ஒரு பெண் சிங்கத்தினால் மக்களிடையே அச்சம் பரவியது பண்ணைப் பகுதியில் வசித்து வந்த தொழிலாளியான சைலேஷ்பாய் பர்கியின் சிவம் என்கிற நான்கு வயது மகனை, ஒரு பெண் சிங்கம் தாக்கியது. அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். குழந்தையின் மரணத்திற்குப் பிறகு, அந்தப் பெண் சிங்கத்தை மீட்பதற்காக சாசனிலிருந்து ஒரு சிறப்புக் குழு வரவழைக்கப்பட்டது. மீட்புக் குழுவில் விஸாவதர் வனச்சரக அதிகாரிகள், ஆர்.எஃப்.ஓ, மருத்துவர்களின் குழு மற்றும் டிராக்கர்கள் இடம்பெற்றிருந்தனர். பட மூலாதாரம்,Hanif Khokhar படக்குறிப்பு,ராம்ரத்தன் நாலா ஜூனாகத் வனப் பாதுகாவலர் முனைவர் ராம்ரத்தன் நாலா, "மீட்புப் பணியின் போது, பெண் சிங்கத்தை மயக்கமடையச் செய்வதற்காக மயக்க மருந்து செலுத்தும் துப்பாக்கியிலிருந்து மயக்க மருந்து ஊசி செலுத்தப்பட்டது. அந்த நேரத்தில், டிராக்கர் அஷ்ரப் பாய் சௌஹான் பெண் சிங்கத்திற்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார், துரதிர்ஷ்டவசமாக அந்த ஊசி சிங்கத்தின் மீது படுவதற்குப் பதிலாக டிராக்கரின் இடது கையில் குத்தியது," என்றார். "அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அஷ்ரப் பாய் சௌஹான் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்," என்றார். சிங்கத்தை மீட்கும் முயற்சியின் போது டிராக்கர் ஒருவர் உயிரிழந்த இந்தச் சம்பவம், குஜராத் வரலாற்றிலேயே இதுவே முதல்முறை என்று வனத்துறை தெரிவித்துள்ளது. மனிதர்களுக்கு எவ்வளவு ஆபத்தானது? பட மூலாதாரம்,Getty Images முனைவர் ராம்ரத்தன் நாலா கூறுகையில், "பெண் சிங்கத்தின் எடையானது ஒரு மனிதனை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும். ஒரு மனிதனின் சராசரி எடை 70 கிலோ, ஆனால் ஒரு பெண் சிங்கத்தின் எடை 210 முதல் 250 கிலோ வரை இருக்கும். பெண் சிங்கத்தை மயக்கமடையச் செய்வதற்கான மருந்தின் அளவு அதன் எடையைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. எனவே, ஒரு மனிதருக்கு இந்த அளவு மருந்து செலுத்தப்பட்டால், அது அவரைத் தீவிரமாகப் பாதிக்கும்," என்றார். பெண் சிங்கத்திற்கு வழங்கப்பட்ட மருந்து மனிதர்கள் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார். "அந்த ஊழியர் வனத்துறையின் ஒப்பந்தத்தின் கீழ் இருந்தார், அவருக்கு காப்பீடு உள்ளது. அந்தப் பணம் அவரின் குடும்பத்துக்கு சென்றடையும் மற்றும் வனத்துறையினால் சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்," என்றார் முனைவர் ராம்ரத்தன் நாலா. இந்த நடவடிக்கையின்போது அந்தப் பெண் சிங்கம் வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgyxz274y0o
  19. 24 மணிநேரத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி அம்பாறையில் Jan 9, 2026 - 07:43 AM கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 38 மி.மீ. அளவில் மழை பதிவாகியுள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று (9) காலை தெரிவித்தார். அதேநேரம் நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் 10 மி.மீ. க்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். இருப்பினும், 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 28 நீர்த்தேக்கங்களும், அதேபோல் 22 நடுத்தர அளவிலான குளங்களும் இன்னும் வான் பாய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யான் ஓயா மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றம் கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்தவொரு ஆற்றுப் பள்ளத்தாக்கிலும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தும் வகையில் நீர் வெளியேற்றப்படவில்லை என்றும் பொறியியலாளர் சூரியபண்டார மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmk68s3r403pdo29n1e0bmg4g
  20. 1) முன்னோடிக்கான முதலாவது நன்கொடை ரூபா 100,080.02 சதம் 09/01/2026 கிடைக்கப்பெற்றது. நன்கொடையை அனுப்பி வைத்தமைக்கு மிக்க நன்றி உறவே. உங்கள் ஒவ்வொருவரின் கூட்டு முயற்சியால் முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 வெற்றி பெறும் என நம்புகிறேன். இந்த திட்டத்தில் இயலாமை உடையவர்களை உள்ளடக்கிய குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்கள் என முன்னுரிமை வழங்கிச் செயற்படலாம் என எண்ணுகிறேன். உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள் உறவுகளே.
  21. கிடைத்த தொகையை அறிவிக்கத் தான் வேண்டும். நான் மேலே பிழையாக எழுதிவிட்டேன்.🙏 அத்தியாவசியமான உதவித் திட்டம் என்ற அடிப்படையில் ஓரளவு நன்கொடை கிடைத்ததும் வேலைகளை ஆரம்பித்தல் நல்லது என்றே நினைக்கின்றேன் எல்லோரும் ஏற்றுக் கொண்ட மாதிரி அராலியில் எங்கள் திட்டத்தை ஆரம்பிப்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை மற்றவர்களின் கருத்துக்களையயும் கேட்போம்
  22. தாய்லாந்தில் ஆட்சி மாற்றம், மக்கள் வீதிக்கு இறங்கிய நேரம் அங்கே நிண்டாவோ தெரியாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.