24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
உலக மேசைப்பந்து தரவரிசையில் முதலிடம் பெற்று தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை
இரு செம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற தாவி சமரவீர நாடு திரும்பினார் Jan 26, 2026 - 10:00 AM 11 வயதுக்குட்பட்ட உலக தரவரிசை மேசைப்பந்து தொடர்கள் இரண்டில் வெற்றி பெற்ற தாவி சமரவீர, இன்று (26) அதிகாலை நாடு திரும்பினார். அவர் ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து சலாம் எயார் விமான சேவையின் OV-437 என்ற இலக்க விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். தாவி சமரவீர ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை பஹ்ரைனில் நடைபெற்ற தொடரில் வெற்றி பெற்று, அதில் தங்கப் பதக்கத்தை வென்றார். அதேபோல், கட்டார் நாட்டின் டொஹா நகரில் ஜனவரி 19 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெற்ற உலக கனிஷ்ட மேசைப்பந்து தொடரின் 11 வயதுக்குட்பட்ட பிரிவிலும் அவர் தங்கப் பதக்கத்தை வென்றார். இன்னும் 10 வயதேயான தாவி சமரவீர, கொழும்பு கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரியில் தரம் 06 இல் கல்வி கற்கும் ஒரு மாணவராவார். தாவி சமரவீரவின் பயிற்சியாளராக அவரது தந்தையான ஹசித சமரவீர செயற்படுகிறார். அவர் 11 வயதுக்குட்பட்ட மேசைப்பந்து வீரர்களுக்கான உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளமை விசேட அம்சமாகும். https://adaderanatamil.lk/news/cmkuo5r0u04eio29nynshv1mn
-
எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன் சிலைகள் திருட்டு
எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன் சிலைகள் திருட்டு செய்திகள் எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் எழுந்தருளியிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை வேளையில் ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி ஆகிய இரு எழுந்தருளிச் சிலைகளே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன. களவாடப்பட்ட இவ்விரு சிலைகளின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறைப்பாடு தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் எழுவைதீவிற்கு நேரில் சென்று தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. https://adaderanatamil.lk/news/cmkukg8bb04ebo29nr8bgtak0
-
அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் – 18 மாநிலங்களில் அவசரநிலை அறிவிப்பு
அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு Jan 26, 2026 - 07:35 AM அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதுடன், 10,000க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் பல வீதிகள் பனியால் மூடியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை பனி, பனிக்கட்டி மற்றும் உறைபனி மழை ஆகியவை "உயிருக்கு ஆபத்தான" நிலைமைகளை உருவாக்கி வருவதாகவும், இது பல நாட்கள் நீடிக்கக்கூடும் எனவும் அந்நாட்டின் தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது. லூசியானாவில் குறைந்தது இரண்டு பேர் தாழ்வெப்பநிலை (Hypothermia) காரணமாக உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் மரணங்கள் புயலுடன் தொடர்புடையவை என மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டெக்சாஸில் மற்றொரு மரணம் பதிவாகியுள்ளது. அத்துடன் நேற்று (25) பிற்பகல் நிலவரப்படி, 1 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதற்கிடையில், 10,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பரவலான கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழை ஆகியவற்றால் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களான சுமார் 180 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்படலாம் என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmkuiyy2s04eao29npp57r6uo
-
ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
அமெரிக்க இராணுவம் கடற்படை, விமானப்படை மத்திய கிழக்கு நாடுகளுக்கு நகர்த்துகிறது அமெரிக்க இராணுவம் கடற்படை, விமானப்படை சொத்துக்களை மத்திய கிழக்கிற்கு நகர்த்துகிறது: தெரிந்து கொள்ள வேண்டியது என்ன அமெரிக்க 'ஆர்மடா' வளைகுடாவை நோக்கி நகர்கிறது என்று டிரம்ப் கூறுகிறார், இது பிராந்தியத்தில் இராணுவ விரிவாக்கம் குறித்த அச்சத்தை எழுப்புகிறது. ஈரானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் தாக்குதல் குழு வளைகுடாவை நோக்கிச் செல்கிறது. அமெரிக்க இராணுவம் கடைசியாக ஜூன் மாதம் மத்திய கிழக்கில் ஒரு பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டது இஸ்ரேல் தெஹ்ரானுடனான 12 நாள் போரின் போது மூன்று ஈரானிய அணுசக்தி தளங்களைத் தாக்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு. இந்த மாதம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை ஆதரித்தார். அரசாங்கம் ஒடுக்கப்பட்டபோது "உதவி வந்து கொண்டிருக்கிறது" என்று அவர் அவர்களிடம் கூறினார். ஆனால் கடந்த வாரம், அவர் இராணுவ சொல்லாட்சியை நிறுத்தினார். அதன் பின்னர் போராட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே அமெரிக்க இராணுவ சொத்துக்கள் வளைகுடாவிற்கு நகர்கின்றன என்ன? அமெரிக்கா மீண்டும் ஈரானை தாக்கத் தயாராகி வருகிறதா? வியாழக்கிழமை டிரம்ப், அமெரிக்காவின் "ஆர்மடா" வளைகுடா பிராந்தியத்தை நோக்கிச் செல்கிறது, ஈரானை மையமாகக் கொண்டுள்ளது என்று கூறினார். வரும் நாட்களில் ஒரு விமானம் தாங்கிக் கப்பல் தாக்குதல் குழு மற்றும் பிற சொத்துக்கள் மத்திய கிழக்கிற்கு வரும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். "நாங்கள் ஈரானை கவனித்துக் கொண்டிருக்கிறோம். ஈரானை நோக்கி எங்களிடம் ஒரு பெரிய படை செல்கிறது" என்று டிரம்ப் கூறினார். "ஒருவேளை நாம் அதைப் பயன்படுத்த வேண்டியிருக்காது. ... அந்த திசையில் நிறைய கப்பல்கள் பயணிக்கின்றன. ஒருவேளை, அந்த திசையில் ஒரு பெரிய கடற்படை எங்களிடம் இருந்தால், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்," என்று அவர் மேலும் கூறினார். ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கிக் கப்பல் தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி ஒரு வாரத்திற்கு முன்பு தனது பாதையை மாற்றியது. அதன் தாங்கிக் கப்பல் தாக்குதல் குழுவில் ஈரானுக்குள் ஆழமான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட டோமாஹாக் கப்பல் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ஆர்லீ பர்க்-வகுப்பு அழிப்பாளர்கள் உள்ளனர். மத்திய கிழக்கு நோக்கிச் செல்லும் அமெரிக்க இராணுவக் கப்பல்கள் ஏஜிஸ் போர் அமைப்பையும் கொண்டுள்ளன, இது பாலிஸ்டிக் மற்றும் கப்பல் ஏவுகணைகள் மற்றும் பிற வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பை வழங்குகிறது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/அமெரிக்க-இராணுவம்-கடற்படை-விமானப்படை-மத்திய-கிழக்கு-நாடுகளுக்கு-நகர்த்துகிறது/50-371568
-
யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்
தலைவருடைய மறைவின் பின் த.வி.பு என்ற அமைப்பு இல்லாதுவிடினும் கூட்டமைப்பு எனும் அரசியல் ஒற்றுமைக் கூட்டை கலைத்ததின் பெரும்பழி தமிழரசுக் கட்சியைச் சாரும். ஆனால் தமிழ்த்தேசிய உணர்வென்பது தமிழ் மக்களிடம் ஊறிப்போனது, அவ்வளவு இலகுவில் மறையாது. உள்ளூராட்சித் தேர்தல் எடுத்துக்காட்டு.
-
📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்.
இதுவரை காலமும் வேறேதோ சொல்லிக்கொண்டு திரிந்தாரே. இப்போ இப்படி புலம்புகிறார். அமைச்சுப்பதவி கிடைக்காத ஏமாற்றத்தினால் போலும். ஆமா அடுத்த தேர்தலோடு அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். தேர்தல் முடிந்துவிட்டது, இனிமேல் வர இருக்கும் தேர்தல் பற்றி பேசுகிறாரே. அப்படி எதை சாதித்திருக்கப் போகிறார்? கூடிய லஞ்சம் பெற்றிருக்கலாமென்கிறாரோ? ஹிஹி இவரது நேசம் யாருக்கு வேண்டும்? தனக்கு கொடுத்த துப்பாக்கியை கூட பாதாள போதைக்கும்பலுக்கு அடகு வைத்து போதை கடத்தல் நடத்தியவர். மக்களுக்கு எதை சாதித்தார்?
-
யாழில் இந்திய குடியரசு தினம்!
யாழில் இந்திய குடியரசு தினம்! adminJanuary 26, 2026 இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. https://globaltamilnews.net/2026/227479/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் விளையாடாவிட்டால் இந்தமுறை போட்டி சுவாரசியமாக இருக்காது.
-
மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
ஐயா மன்னிக்கவும், நான் எழுதவில்லை. கீதா எனும் சகோதரியின் https://geethajustin.blogspot.com/2014/08/blog-post_20.html வலைப்பக்கத்தில் வாசித்ததை இங்கே எமது உறவுகளுடன் பகிர்ந்து கொண்டேன்.
-
யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்
தமிழரின் ஏகோபித்த குரல் நாங்கள், பேரம் பேசும் சக்தி நாங்கள் என்று சொல்லி வாக்கு வேண்டி பாராளுமன்றம் போய் சிங்களத்துக்கு காவடி தூக்கியவர்களை விடவா? தமிழரசு, தமிழ்த்தேசியம் என்று சொன்னால் சிங்களவனுக்கு கோபம் வருகுதாம், வந்தால் நமக்கென்ன? அப்படி பயமென்றால் வேறொரு சிங்களக்கட்சியில் சிங்களவரிடம் வாக்கு கேட்டு பாராளுமன்றம் போகவேண்டியது. யார் தடுத்தார்? இவர்களுக்குள் ஒற்றுமையில்லை, ஒருவருக்கொருவர் குழிபறிப்பு. அவர்களே அனுரா வடக்கிற்கு வர சந்தர்ப்பம் அளித்தவர்கள். அனுரா வந்தவுடன் குத்துது குடையுது என்று புலம்பல், ஏளனம். இதுவரை ஆட்சி செய்த சிங்கள ஜனாதிபதிகள் யாருக்கும் இல்லாத எதிர்ப்பலை இவருக்கு மட்டுமேன் என்பதே எனது கேள்வி. அவர் தவறுகளையும் சுட்டிக்காட்டவே செய்கிறோம், அதைப்பற்றி பேசாதது ஏன்?
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
இதற்குத்தான் இவ்வளவு உருட்டல், மிரட்டல், சவால், கடைசியில் வெளியே வந்துவிட்டது, வாயாலேயே கேட்டு அமைச்சுப் பதவிகளை வாங்குவார்கள் போலுள்ளதே. இவர் ஒருபுறம் மோதுகிறார், வைத்தியர் மறுபுறம். இப்படி செய்தால், விமர்சித்தால் அனுரா இவர்களை தட்டு வைத்து அழைப்பார் என்கிற நினைப்போ? அனுரா எவ்வளவோ தூரம் சென்றுவிட்டார், அவர்களுக்கு வழி காட்டி, அழைத்துவந்து இடம் விட்டதே இந்த பதவியாசை பிடித்த சோம்பேறிக்கூட்டம்தான்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கொஞ்சம் பொறுங்கோ! அடுத்தது பாகிஸ்தானுக்கு பதிலா யார் வரப்போகிறார்களோ தெரியவில்லையே!!
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
நானா ஏன் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுகிறார்? எப்பத்தான் திரிசம்பந்தமாக கருத்தெழுதியிருக்கிறார்? என்ன செய்வது வச்சுக்கொண்டா வஞ்சகம் செய்கிறார்!!🤣
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
புதிதாக பதிய விரும்பினால் ஏற்றுக்கொள்ளப்படும்😊
-
யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்
தமிழ்த்தேசியம் என்றாலே புலிகளின் மீளுருவாக்கம், புலிகளுக்கான ஆதரவு என்று தட்டிக் கழித்துவிடுகின்ற மனநிலை ஒன்றினை மிகவும் திட்டமிட்டே உருவாக்கி வருகிறார்கள். தமிழர்களிடையே தேசியம் பேசுவோர் சமூக விரோதிகளாக, பழமைவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் தமிழ்த்தேசியம் என்பது புலிகளைத் தாண்டியதென்பதும், அது தமிழரின் அடையாளம், தாயகம், கலாசாரம் உட்பட்ட ஒட்டுமொத்த இருப்பிற்கான தேவையென்பதை தெரிந்தும் இச்சூட்சுமத்தில் ஈடுபடுகிறார்கள். இதனை முன்னின்று செய்வதுகூட தமிழர்களில் ஒரு பகுதியினர்தான். இத்தளத்திலேயே தமிழ்த் தேசியத்திற்குப் புலி முலாம் பூசுவதன் மூலம் அதனை நீர்த்துப்போகச் செய்ய எத்தனிப்போர் இருக்கின்றனர். சிலர் மிகவும் வெளிப்படையாகவும் இன்னும் சில மறைமுகமாகவும் இதனைச் செய்கின்றனர். புலிகளை எதிர்ப்பதாக, விமர்சிப்பதாக இவர்களது கருத்துக்கள் வெளியில் தோற்றம்பெரினும், அவர்கள் உண்மையாகவே எதிர்ப்பது தமிழ்த் தேசியம் எனும் அடையாளத்தைத்தான் என்பது வெளிப்படை.
-
🛑 இலங்கைத் தமிழரசுக்கட்சியில் அதிரடி: சிறீதரனை பதவியிலிருந்து நீக்கத் தீர்மானம்! ⚖️
- யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்
நண்பர் ஒருவருடன் அண்மையில் பேசும்போது, மாகாணசபைத் தேர்தலை நடத்தி, அதனையும் தனது செல்வாக்கின் கீழ் கொண்டுவருவதன் மூலம் அதில் குறிக்கப்பட்டுள்ள சரத்துக்களை மாற்றும் எண்ணம் அநுரவிற்கு இருப்பதாகக் கூறினார். ஆனால், அரசியலமைப்பில் மாற்றம் செய்யாது இதனை அவரால் செய்ய முடியுமா? அப்படிச் செய்வதென்றாலும் அதனை இப்போதுகூட அவரால் செய்ய முடியும்தானே? ஏன் மாகாணசபைத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்று கேட்டேன். பதில் இல்லை. ஆக, 2007 இல் பிரித்துப்போட்ட வடக்குக் கிழக்கு மாகாணசபையினை மேலும் பலவீனமாக்கி, காணி பொலீஸ் அதிகாரங்களை உத்தியோகபூர்வமாகவே `13 ஆம் திருத்தச் சட்டத்திலிருந்து அகற்றி, வெறும் உப்புச் சப்பற்ற மாகாணசபைகளையே அவர் தரவிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் அவரை விமர்சித்தவுடன், அவரது தமிழ்க் காவடிகள் ஓடோடி வந்து, "அப்ப நாமலை வரச் சொல்லலாமா? ரணிலை வரச் சொல்லலாமா? கோத்தாவை வரச் சொல்லலாமா?" என்று புத்திசாதுரியத்துடன் கேட்கிறார்கள்.- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
நீங்கள் இதனை வேடிக்கையாகச் சொல்லியிருந்தாலும், ஒருவருக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு, முண்டு கொடுப்பவர்களுக்கு, காவடி தூக்குபவர்களுக்கு என்று சிங்களவர்கள் ஒரு சொற்றொடரை வைத்திருக்கிறார்கள். "புக்க தெனவா" என்பதே அது. இதனை நான் தமிழாக்கம் செய்ய விரும்பவில்லை.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏற்கனவே பதிந்தவர்களும் புதிதாக பதியலாமா சார்?- யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்
ஆரம்பத்திலேயே கோசான், ரஞ்சித், விளங்கநினைப்பவன் போன்றோர் அனுர அரசினை கடுமையாக எதிர்த்தபோது அதன் தாற்பரியம் தெரியாமல் அனுரவிற்கு காவடி எடுத்தோம் தற்போது அவர் செய்யும் செயல்கல் வழமையான சிங்கள அரசியல்வாதிகள் செய்யும் செயலே அதனை நேட்டோவின் பாசையில் சொன்னால் தமிழர் மீதான Hybrid warfare.🤣 இதற்கு எமது இலஞ்ச அரசியல்வாதிகள்தான் காரணம் அத்துடன் ஒரு பெரிய பொதுவான தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்த தமிழரசு கட்சி முக்கிய அரசியல்வாதிகளும் காரணம். ஆட்சி அதிகாரம் உள்ள நிலையில் அரசிற்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி செய்யும் வேலைகள் மாகாணசபையினை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் மாகாணசபை கிடைத்தால் அதன் பின்னர் சிறுபான்மையினரை திட்டமிட்ட முறையில் மேலும் அடக்குமுறைக்குள்ளாக்குவர்.- அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
அண்மையில் இதே போன்ற பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே, இரஸ்சிய அதிபரினை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இரஸ்சியாவினால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. fake it until you make it என்பதான கொள்கையினை அமெரிக்கா இரஸ்சியாவுடனான விவகாரத்தில் கடைப்பிடிக்கின்றது என கருதுகிறேன், மேற்கின் அடிப்படை திட்டம் மாறவில்லை, இந்த போர் ஆரம்பத்தில் இருந்ததனை போல ஒரு ஆட்சி மாற்றத்தினை இன்னமும் மேற்கு கொண்டுள்ளது என்பதனை இரஸ்சிய தரப்பிற்கு புரிய வைத்திருக்கும். இந்த பொதுவான உத்தி கடந்த காலத்தில் பல போராட்டங்களில் ஏன் இரஸ்சியாவிற்கெதிராகவேயே மேற்கினால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உக்கிரேன் நிலவரத்தில் மேற்கிற்கு தேவையான காலத்தினை பெறுவதற்கு மேற்கின் முயற்சி ஒரு பேச்சுவார்த்தை வழியிலாக ஏற்படுத்த விரும்புகிறது.- Yesterday
- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
சுவிச்சலாந்து சோதிட மாமணி சுதாகர் பிரதமர் ஹரணியை சந்தித்தாராம் 😂 தமிழ் தேசியர்களுக்கு தமிழ் துரோகி என்று சொல்வதற்கு ஒருவர் தேவை அப்போதான் காவடி ஆட்டம் களை கட்டும்- அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
இஸ்ரேல் அரசால் பலஸ்தீன மண்ணில் தினசரி நடத்தப்படும் அழிவுகளை கண்டும் காணாமல் இருப்போர் உக்ரேன் அழிவுகளுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். உக்ரேன் பிரச்சனையும் பலஸ்தீனிய பிரச்சனையும் ஒரே கோட்டில் உள்ள பிரச்சனை அல்ல என்பதை மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.- 📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்.
தலைமையகம் இப்பவும் ஸ்ரீதர் தியேட்டரில் தானா? 😂 கட்சிக்கு என தனி அலுவலகம் வாங்கிற பிளான் இன்னும் இல்லை போல....😎- புலிகளின் முதல் உள்நாட்டு வானூர்தி தயாரிப்பு முயற்சி | கண்கண்ட சாட்சிகளின் நினைவுகள்
எண்ணிமசாராக செம்மையாக்கிய படிமம் | Digitally Improved Image: செம்மைப்படுத்தியவர்: செயற்கை நுண்ணறிவு கொண்டு நன்னிச் சோழன் நேற்றையில இருந்து தேடி ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டேன். அம்மாணை சொல்லுறன். எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது. திரும்பத் திரும்ப இந்த வரலாற்றை ஒரு 20 தடவை வாசித்துவிட்டேன். அவ்வளவு குதூகலம். 😍😍😍 வால் பகுதி கொஞ்சம் சரியாய் வரவில்லை. குறிப்பு: மரத்தாலை கட்டியிருக்கிறாங்கள். அந்த மாதிரி இருக்கு. வாயெல்லாம் முத்தாய் இருக்கு😀😁 முன்னையது போல செயற்கை நுண்ணறிவை பாவித்து நிறமூட்டிய படிமம்: முன்னுக்குத் தான் பொறியினை வைத்துள்ளார்கள் போலும். எனவே அங்கு தான் சுழலியும் இருந்திருக்க வேண்டும். மேலும் இதற்கு முன்பக்கத்தில் மட்டுமே சில்லுகள் உண்டு. பின்னால் சில் இல்லை, மாறாக தென்னுகட்டை/skid பாவித்துள்ளனர். ஏறத்தாழ முதலாம் உலகப்போர் வடிவ வானூர்திகள் போன்ற கட்டமைப்பைக் கொண்டுள்ளது. - யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.