Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்! இலங்கை பொலிஸ் சேவையில் சுமார் 32,000 அதிகாரிகள் தற்போது தேவையான எண்ணிக்கையை விடக் குறைவான எண்ணிக்கையில் கடமைகளைச் செய்து வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குற்றங்களைத் தீர்ப்பதில் காவல்துறை குற்றப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள கைரேகை அதிகாரிகள், குற்றப் பகுப்பாய்வு அதிகாரிகள் மற்றும் தடயவியல் புகைப்படக் கலைஞர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் கொழும்பில் இன்று (30) காலை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் மேலும் உரையாற்றிய பொலிஸ்மா அதிபர், 2026 ஆம் ஆண்டில் 2,500 பொலிஸ் அதிகாரிகள் ஓய்வு பெற உள்ளதாகவும், அடுத்த ஆண்டு மேலும் 2,700 அதிகாரிகள் ஓய்வு பெறவும் உள்ளனர். எனவே, நிலைமையைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இலங்கை காவல்துறையில் 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். https://athavannews.com/2026/1462356
  3. 193 உறுப்பு நாடுகளுக்கு அவசர கடிதம் எழுதிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ். அவசர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உடனடியாக நிதிச்சரிவை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் கடமைகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும் நிறைவேற்ற வேண்டும். அல்லது உடனடி நிதிச் சரிவைத் தடுக்க, உறுப்பு நாடுகள் நமது நிதி விதிகளை மாற்றி அமைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கடிதத்தில் எந்தவொரு நாட்டையும் குறிப்பிடவில்லை. ஐ.நா.வுக்கு அதிக நிதி வழங்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா தற்போது ஐ.நா.வின் வழக்கமான வரவு செலவுத் திட்டத்திற்கு 2.16 பில்லியன் அமெரிக்க டொலர் வழங்க வேண்டும். மேலும் இந்த ஆண்டுக்கு 767 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க வேண்டியுள்ளது. வெனிசுலா 38 மில்லியன்டொலர் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது வெனிசுலா பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளது. அமெரிக்கா 2025 இறுதியில் 1.568 பில்லியன் டொலர் செலுத்த வேண்டியுள்ளது. இது 2024-ம் ஆண்டைவிட இரண்டு மடங்கு என அன்டோனியா குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1462420
  4. கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. கிழக்கு கொங்கோவில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியாகும் என்பதுடன், அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கோல்டன் (Coltan) கனிமத்தை வழங்கும் முக்கிய சுரங்கமாக கருதப்படும் ருபாயா (Rubaya) சுரங்கத்திலேயே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நிகழ்ந்துள்ளது. உலகிற்குத் தேவையான கோல்டன் கனிமத்தில் சுமார் 15% இந்த ருபாயா சுரங்கத்திலிருந்தே உற்பத்தி செய்யப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சுரங்கம் 2024 ஆம் ஆண்டிலிருந்து AFC/M23 எனப்படும் கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. https://athavannews.com/2026/1462423
  5. Today
  6. கொழும்புத் துறைமுக அபிவிருத்தியில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகம் ஆர்வம் Published By: Vishnu 31 Jan, 2026 | 02:43 AM இலங்கையும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவை துறைகளை மேம்படுத்துவது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரக தூதுவர் கலீத் நாசர் அல்அமேரிக்கும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் வியாழக்கிழமை (29) அமைச்சில் நடைபெற்றது. இதன்போது, சிவில் விமான சேவைத் துறையின் தலைவர்களுக்கான சர்வதேச நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் பெப்ரவரி 03 முதல் 06 வரை துபாயில் நடைபெறவுள்ளதுடன் அந்நிகழ்வில் பங்கேற்குமாறும், பெப்ரவரி 03 துபாயில் உலக அரச உச்சி மாநாடு மையத்தில் நடைபெறவுள்ள உலகளாவிய சேவை வழங்கல் தொடர்பான வட்டமேசை கலந்துரையாடலிலும் பங்கேற்குமாறு அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கு தூதுவர் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்தார். மேலும், கொழும்புத் துறைமுக அபிவிருத்திக்காக அபு தாபி துறைமுக நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளதாகவும், அந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யத் தயார் எனவும் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கையில் காணப்படும் திறமையான விமான பொறியியல் மனித வளமும், குறைந்த செயற்பாட்டு செலவுகளும் விமான சேவை துறையை மேம்படுத்துவதற்கு சாதகமாக அமையும் எனவும், இலங்கையில் பிராந்திய விமான பராமரிப்பு மையம் ஒன்றை நிறுவுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. விமான சேவை மற்றும் துறைமுக சேவை வழங்கல் துறைகளில் நடைமுறை மற்றும் நீண்ட கால கூட்டாண்மையை உருவாக்குவதற்கு தொடர்ந்து நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/237440
  7. 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இத்தாலி SCOT 🆚 ITA - SCOT 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, பங்களாதேஷ் எதிர் நேபாளம் SCOT 🆚 NEP - SCOT 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) Select WI 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group C - Second WI அண்ணை, தடித்த எழுத்தில் எனது பதில்.
  8. ஆமாம் நீங்கள் ஜேர்மனியர் என்பதால் உங்களது ஜனாதிபதியாக அவர் இருக்கமாட்டார்.
  9. ஆதிமந்தி ஆட்டனத்தி - சுப.சோமசுந்தரம் உலகில் பரவலாக அறியப்படும் காதல் இணையரான ரோமியோ - ஜூலியட், ஆன்டனி - கிளியோபாட்ரா, லைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி போன்று சங்க காலத்தில் நம் தமிழ் நிலத்தில் ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலானது காவியம் போல் பேசப்பட்டுள்ளது என்பது சங்க இலக்கியங்களான குறுந்தொகை, அகநானூறு, மற்றும் சங்க மருவிய காலத்து சிலப்பதிகாரம் மூலமாகத் தெளிவு. ஆனால் இன்றைய பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகம் இக்காதலை அறியாமல் போனது விந்தையிலும் விந்தை. ஈழத் தமிழறிஞரான திரு.கந்தையா விநாயகலிங்கம் அவர்கள் யாழ் இணையதளத்தில் எழுதிய கட்டுரையானது அடியேனையும் எழுதத் தூண்டியது எனலாம். அன்னார் எழுதியதிலிருந்து பெரிதும் வேறுபட்ட எதனையும் எழுத எண்ணாமையால், பின் ஏன் இந்த எழுத்து எனும் கேள்வி எழல் இயல்பு. திருக்குறளுக்குக் காலந்தோறும் வெவ்வேறு சான்றோர் உரை எழுதுவது ஒவ்வொரு எழுத்தும் பார்வையும் தனித்தன்மை கொண்டமையாலும், உயரிய பொருள் மீண்டும் மீண்டும் உரைக்கப் பெற்று மென்மேலும் வளம் பெறுவதினாலுமேயாம். கண்ணதாசன் எழுதிய கவிதை நாடகமான ஆதிமந்தி ஆட்டனத்தி, அதன் திரை வடிவமான மன்னாதி மன்னன், பாரதிதாசன் படைத்த சேரதாண்டவம் எனும் நாடக நூல் ஆகியவை ஈண்டு கவனத்தில் கொள்ளத்தக்கவை. இவை நாம் முன்னம் குறித்த சங்கப்பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரம் வழியமைந்த ஆதிமந்தி - ஆட்டனத்தி கதையினை ஒட்டி அமைந்த புனைவு இலக்கியங்களாகும். நாம் இக்கட்டுரையில் கையிலெடுப்பது சங்கப்பாடல்கள் வழி நின்ற கதையை மட்டுமே. சோழன் கரிகால் பெருவளத்தான் காலத்தில் ஆடற் கலையில் சிறந்த ஆட்டனத்தி (ஆடல் + அத்தி) என்ற வீர இளைஞனும் ஆதிமந்தி எனும் ஆடல் மகளும் காதல் வயப்பட்டனர். சோழ நாட்டவர் தமக்குச் சோறிடும் காவிரி அன்னைக்குப் (காவிரியாற்றுக்கு) பெருவிழா எடுக்கும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நாளன்று சோணாட்டின் கழார் என்னும் துறையில் மன்னன் கரிகாலன் முன் ஆட்டனத்தி காவிரியில் தன் ஆட்டத்தின் திறம் காட்டிச் சாகசம் புரிந்தான்; நீர் விளையாட்டும் ஆட்டத்தில் ஒரு வகையாக இருந்திருக்க வேண்டும். அவன் ஆடற்திறம் கண்டு மன்னனும் மக்களும் குதூகலித்தனர் - ஆதிமந்தியும்தான். அப்போது காவிரியில் திடீரெனப் பெருக்கெடுத்த வெள்ளம் அவனை வாரிச்சுருட்டிச் சென்று விட்டது. காவிரி கடலில் கலக்குமிடம் கரை ஒதுங்கிக் கிடந்தவனை மருதி எனும் மீனவப்பெண் கண்டெடுத்துப் பேணி வந்தாள். கட்டழகன் அத்தியிடம் கட்டுக்கடங்காத காதல் கொண்டாள். (அவனும் அந்த மீனவப் பெண்ணின் காதல் வலையில் கட்டுண்டு பேரின்ப உலகில் திளைத்திருக்க வேண்டும். ஆடவன் பல காதல் கொள்ளும் முறை சங்க காலத்தில் இருந்தமைக்கான சான்றுகள் உண்டு (polygamist society). எனவே தற்கால ஒழுக்க அளவுகோல் அங்கு அவசியமில்லை). காதலனை இழந்த காரிகையான ஆதிமந்தி அருந்துயருற்றுக் கையறு நிலையில் அவனைத் தேடி காவிரிக் கரையிலுள்ள ஊரெல்லாம் அலைந்து திரிந்தாள். இறுதியாக மருதியிடம் வந்து சேர்ந்தாள். ஆதிமந்தி அத்தியிடம் கொண்ட காதல் திறம் கண்ட மருதி அவனை அவளிடமே ஈந்து தான் கடலுள் மாய்ந்து அக்காலத்தில் அழியா புகழ் பெற்றாள். இந்த ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலும், பிறிதின் நோய் தந்நோயாய்ப் போற்றிய மருதியின் தகைமையும் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சிந்தாமல் சிதறாமல் அள்ளிப் பருகுவோமா ? முதலில் நம் கண் முன் காட்சி தருவது குறுந்தொகையில் ஆதிமந்தியார் எனும் பெயர் கொண்ட பெண்பாற்புலவரின் பாடல். புறநானூற்றில், பாட்டுத்திறம் படைத்த சேரமான் கணைக்கால் இரும்பொறை தன் நிகழ்வினைத் தானே பாடியது போல் சங்க காலத் தலைவி ஆதிமந்தியே ஆடற்கலையுடன் பாடல் திறனும் கொண்டு, தன் நிலையைக் கூறி இப்பாடலைப் பாடி இருக்கலாம். அல்லது ஔவையைப் போல் ஆதிமந்தியும் அப்போது பொதுவான பெயராய் இருந்து (common name), ஆதிமந்தியார் எனும் புலவர் தம் பெயரையுடைய நாயகியைப் பாடியிருக்கலாம். மூன்றாவது வாய்ப்பாக, பாடலின் புலவர் பெயர் தெரியாததால் பாடலில் உள்ள தலைவியின் பெயரே அவருக்குச் சூட்டப்பட்டிருக்கலாம் (பாடலில் உள்ள சொல்லால் பெயர் பெற்ற செம்புலப் பெயல்நீரார், அணிலாடு முன்றிலார் போல). பாடியவர் குறித்த வரலாறு தெளிவற்று இருப்பினும், பாடற் பொருள் தெளிவானது; பாடல் சுட்டும் வரலாறும் தெளிவு. பாடலில் தலைவி ஆதிமந்தி தோழியிடம் தனது பிரிவாற்றாமையை வெளிப்படுத்துகிறாள். இவ்வெளிப்பாடு காவிரியாற்றுக் கோர நிகழ்வுக்குப் பின் ஆற்றங்கரை ஊர்களில் அவனைப் பல இடங்களில் அவள் தேடித் திரிந்ததைச் சொல்கிறது. "வீரர்கள் கூடும் விழாக்கள், (அவன் ஆடற்தலைவன் என்பதால்) துணங்கை கூத்து நடைபெறும் இடங்கள் எனப் பலவாறு தேடியும் மாட்சிமை பொருந்திய அவனைக் காணேன். யானும் ஓர் ஆடுகள மகளே ! சங்கினை அறுத்து அமைக்கப்பெற்ற என் கை வளையல்கள் (நான் உடல் மெலிந்ததால்) நெகிழ்ந்திடக் காரணமான பெருமைமிக்க தலைவனான அவனும் ஓர் ஆடுகள மகனே !"என்கிறாள். "மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமோ ராடுகள மகளே யென்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே" (குறுந்தொகை பாடல் 31; பாடியவர் ஆதிமந்தியார்) அருஞ்சொற்பொருள் : மள்ளர் - வீரர்; குழீய - குழுமிய, கூடிய; விழாவினானும் - விழாக்களிலும்; மகளிர் தழீஇய - மகளிரைத் தழுவிய; துணங்கையானும் - துணங்கைக் கூத்து நிகழிடங்களிலும்; யாண்டுங் காணேன் - எவ்விடத்தும் யான் காணவில்லை; மாண் தக்கோனை - மாட்சிமை பொருந்தியவனை; கோடு - சங்கு; ஈர் - அறுத்து; இலங்கு வளை - அமைத்து விளங்கும் வளையல்களை; நெகிழ்த்த - நெகிழ வைத்த; பீடு கெழு - பெருமை பொருந்திய; குரிசில் - தலைவன் (குருசிலுமோர் - குருசிலும் ஓர்). அடுத்து அகநானூறு பாடல் 45 ஐக் காண்போம். பாடுபொருள் வேறாய் இருப்பினும் ஆதிமந்தி பற்றிய குறிப்பு அதன் கண் வரல் சிறப்பு. பிரிவாற்றாமையால் வருந்தும் தலைவியொருத்தி தோழி எத்துணைத் தேற்றினாலும் தேறாது, "காதலனால் ஏற்பட்ட சிறுமையுடன் (ஊரார் புறம் பேசும் சிறுமை), பிரிவுத் துயர் எனும் நோய் மேலிட ஆதிமந்திபோல் மனம் பேதலித்து ஆதரவற்று (அலந்து) உழன்று திரிவேனோ (உழல்வென் கொல்லோ)?" என்று புலம்புகிறாள். "காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்துஆதிமந்தி போல பேது உற்றுஅலந்தனென் உழல்வென் கொல்லோ" (அகநானூறு பாடல் 45 ன் பகுதி; பாடியவர் - வெள்ளி வீதியார்) சங்கப் புலவர் பரணரின் பாடல்களில் இருந்து வரலாற்றுக் குறிப்புகளும் கிடைப்பதால் அவர் வரலாற்றுப் பதிவாளராயும் அறியப்பெறுகிறார். எடுத்துக்காட்டாக, பரணர் பாடிய அகநானூறு பாடல் எண் 135 ன் முற்பகுதியில் ஆதிமந்தி பற்றிய குறிப்பும் பிற்பகுதியில் வேளிர் குடி அரசர் பதினான்கு பேர் சேர்ந்து தாக்கிய தலைநகர் காமூரையும் கழுவுள் அரசனையும் பற்றிய குறிப்புகளும் வருகின்றன. நாம் தற்போது கையிலெடுத்துள்ள தலைப்பைக் கருத்தில் கொண்டு பாடலின் முற்பகுதியை மட்டும் பேசி, பிற்பகுதியை இக்கட்டுரையை வாசிப்போர்க்கே விட்டு விடுகிறோம். மீண்டும், பிரிவாற்றாமையில் வாடும் தலைவியொருத்தி தோழியிடம் கூறுவது : " திதலை மாமை தளிர் வனப்பு அழுங்கபுதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பபசலை பாய்ந்த நுதலேன் ஆகிஎழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்துஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி பேது உற்றிசினே காதலம் தோழி" (அகநானூறு பாடல் 135 ன் முற்பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : எனது தேமல் (திதலை), மாநிறம் ஆகியவற்றின் தளிர் வனப்பு கெட (அழுங்க), புதர்களில் படர்ந்த (புதல் இவர்) பீர்க்கின் புதுமலர் (எதிர் மலர்) போன்ற (கடுப்ப) பசலை படர்ந்த நெற்றிடையுடையவள் ஆனேன் (நுதலேன் ஆகி). ஓவியம் போன்ற எழில் மிக்க, குளிர்ச்சி பொருந்திய கண்கள் அழும்படியாக (எழுது எழில் மழை கண் கலுழ) பிரிவுத் துயருற்று (நோய் கூர்ந்து) ஆதிமந்தி மதி மயங்கியது போல் (ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி) பேதலித்து நிற்கிறேன் (பேது உற்றிசினே), அன்பு கொண்ட அழகிய தோழியே ! (காதல் அம் தோழி ). பிரிவுத் துயரில் வாடி நின்ற ஒரு தலைவியைத் தோழி அழைக்கிறாள் : "முழவு முகம் புலரா கலி கொள் ஆங்கண்கழாஅர் பெரும் துறை விழவின் ஆடும் ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்ஆட்டன்அத்தி நலன் நயந்து உரைஇதாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்தஆதிமந்தி காதலன் காட்டி படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்சென்மோ வாழி தோழி" (அகநானூறு பாடல் 222 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : முழவின் (ஒரு வகை முரசு) முகம் உலறா வண்ணம் (முகம் புலரா) - அதன் இடைவிடாத முழக்கத்தினால் - ஆர்ப்பரிக்கும் (கலி கொள்) கழார் என்னும் (காவிரி) துறையில் மென்மேலும் பெருகும் அழகுடன் (ஈட்டு எழில்) பொலிந்து எடுப்பான தோள்களுடன் திகழும் (ஏந்து குவவு) வலிமையான (மொய்ம்பின்) ஆட்டனத்தியின் நலன்களை விரும்பி (நலன் நயந்து), தனது பரந்து (உரைஇ) தாழ்ந்த இருண்ட கூந்தலால் (தாழ் இரும் கதுப்பின்) காவிரி கவர்ந்து கொண்டதால் (வவ்வலின்), திசையெல்லாம் தேடி (மாதிரம் துழைஇ) மதிமயங்கி (மதி மருண்டு) ஆதரவற்றுத் திரிந்த (அலந்த) ஆதிமந்தியிடம் அவளது காதலனான ஆட்டனத்தியைக் காட்டி - ஈந்து - ஒலிக்கும் கடல் புகுந்த (படுகடல் புக்க), புலவர் பெருமக்களால் பாடப்பெற்ற சிறப்பினையுடைய மருதியைப் போல் புகழ் பெறச் செல்வோமாக ! வாழிய தோழி ! (அஃதாவது தலைவனைத் தேடியும் காணாவிடத்து உயிர் துறந்து புகழ் பெறலாம் எனச் சொல்கிறாளோ !). (பாடலைப் போன்றே முற்றுப்புள்ளியின்றி பொருளை எழுதியமைக்கு மன்னிக்கவும். அப்படிதான் எழுத வந்தது !). பிரிவாற்றாமையை வகை வகையாய் பதிவு செய்கிறது அகநானூறு. "......................................அல்கல் அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்பகொடும் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கைஅறியாமையின் அழிந்த நெஞ்சின்ஏற்று இயல் எழில் நடை பொலிந்த மொய்ம்பின்தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை ஆட்டன்அத்தியை காணீரோ எனநாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று எனகலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்தஆதிமந்தி போல ஏதம் சொல்லி பேது பெரிது உறலே" (அகநானூறு பாடல் 236 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : இரவில் (அல்கல்) மணம் வீசும் சந்தனம் பூசி (அணி கிளர் சாந்தின்) அழகிய பட்டாடையினால் பொலிவு பெற்று (அம் பட்டு இமைப்ப), வளைந்த குழையணிந்த மகளிரிடம் (கொடுங்குழை மகளிரின்) அவன் சேர்ந்த இடம் (ஒதுங்கிய இருக்கை) அறியாது வருந்திய மனதுடன் (அறியாமையில் அழிந்த நெஞ்சின்) உள்ளேன். காளையைப் போன்று தீரத்துடன் நடையும் (ஏற்று இயல் எழில் நடை) பொலிவு பெற்ற வலிமையான தோள்களும் (பொலிந்த மொய்ப்பின் தோட்டு) கரிய சுருள் முடியும் (இரும் சுரியல்) கொண்டவனை (ஆட்டனத்தியைக் குறிப்பது) மணந்து பித்துப் பிடித்தவளாய் (மணந்த பித்தை), "ஆட்டனத்தியைக் கண்டீரோ ?"என்று நாடு நகரெங்கும் கூவித் திரிந்து, "கடல் கொண்டதோ ? ஆற்று வெள்ளம் (புனல்) ஒளித்துக் கொண்டதோ ?" என்று அழுத கண்ணோடு காதலனால் வருந்திய (காதலன் கெடுத்த) ஆதிமந்தி போல துயரினைக் கூறிப் (ஏதம் சொல்லி) பெரிதும் வருந்துகிறேன் (பேது பெரிது உறலே). பரணர் பாடிய அகநானூறு 76 ஆம் பாடலில் பரத்தை ஒருத்தி, "(இடுப்பில்) கச்சினை அணிந்தவனும், (காலில்) கழலை அணிந்தவனும், தேனொழுகும் மாலையினை மார்பில் அணிந்தவனும் (தேம் தார் மார்பினன்), வகையாக அமைக்கப்பெற்று வனப்புடன் பொலிவுறும் மாலையை அணிந்தவனும் (வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல்), சுருள் முடியுடன் (சுரியல்) திகழும் அழகிய (அம்) கூத்தனைக் (பொருநனை) கண்டீரோ என ஆதிமந்தி பித்துப் பிடித்து (பேதுற்று) அரற்றித் (இனைய) திரிய, கரையினில் மோதி (சிறை பறைந்து) உராய்ந்து (உரைஇ) செந்நிறம் கொண்ட கிழக்குத் திசையில் (செம் குணக்கு) பாயும் (ஒழுகும்) அழகிய குளிர்ச்சி பொருந்திய காவிரி (அம் தண் காவிரி) போல - காவிரியாறு ஆட்டனத்தியை இழுத்துச் சென்றது போல - (என்னிடம் வந்த தலைவனை) நானும் (யானே) கரம் பிடித்துக் கொண்டு செல்ல எண்ணுகிறேன் (கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின்)" என்கிறாள். "கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன்வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல்சுரியல் அம் பொருநனை காண்டிரோ எனஆதிமந்தி பேது உற்று இனைய சிறை பறைந்து உரைஇ செம் குணக்கு ஒழுகும்அம் தண் காவிரி போலகொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே" (அகநானூறு பாடல் 76 ன் பகுதி; பாடியவர் பரணர்) அகநானூறு பாடல் 376 ல் காதல் பரத்தை தலைவனுடன் பேசுவதாக வருவது : "செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்கல்லா யானை கடி புனல் கற்று எனமலி புனல் பொருத மருது ஓங்கு படப்பைஒலி கதிர் கழனி கழாஅர் முன்துறைகலி கொள் சுற்றமொடு கரிகால் காண தண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசைஒண் பொறி புனை கழல் சே அடி புரளகரும் கச்சு யாத்த காண்பின் அம் வயிற்றுஇரும் பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்பபுனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு மன்னோநும் வயின் புலத்தல் செல்லேம்" (அகநானூறு பாடல் 376 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : செல்லாதே, மருதநிலத் தலைவனே ! (செல்லல் மகிழ்ந). உனக்கு நான் செய்யும் கடமை உள்ளது. (பாகனிடம்) கல்லாத யானை செறிந்த நீரோட்டத்தில் (கடி புனல்) விளையாடக் கற்று நீரில் மோத அதனால் பேரலையாய் எழுந்த நீர் (மலி புனல்) மோதும் மருத மரங்கள் உயர்ந்து நிற்கும் நிலங்களையும் (மருது ஓங்கு படப்பை), செழித்து வளர்ந்த கதிர்களைக் கொண்ட வயல்களையும் உடைய கழார் என்னும் ஊரின் (காவிரி) முன் துறையில் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும் சுற்றத்தாரோடு (கலி கொள் சுற்றமொடு) (சோழ மன்னன்) கரிகாலன் கண்டு மகிழ, புனல் விழாக்கோலம் பூண்டு (தண் பதம் கொண்டு) இன்னிசை தரவல்ல ஒளிரும் சதங்கை அணிந்த கழல் (இன்னிசை ஒண் பொறி புனை கழல்) சிவந்த காலடியில் புரள (சேவடி புரள), கருமையான கச்சு அணிந்து காண்பதற்கு அழகிய தன் வயிற்றில் (கருங் கச்சு யாத்த காண்பின் ஆம் வயிற்றில்) பெரும் பொன்னாலான (இரும் பொலம்) பாண்டில் எனும் இசை கருவி மணியுடன் ஒலிக்க (பாண்டில் மணியொடு தெளிர்ப்ப), புனலைப் பெரிதும் விரும்பி (புனல் நயந்து) ஆடிய அத்தியின் (ஆட்டனத்தியின்) அழகினை விரும்பி (ஆடும் அத்தி அணி நயந்து) காவிரி அவனைக் கவர்ந்து ஒளித்துக்கொண்டதைப் போல உன்னைக் கவர்ந்து வைத்துள்ளேன் (காவிரி கொண்டு ஒளித்தாங்கு அன்றோ). (உன் தலைவி உன்னைக் கவர்ந்து செல்லுமாறு) உன்னுடன் புலந்து நிற்க மாட்டேன் (நும் வயின் புலத்தல் செல்லேம்). அகநானூறு 396 லும் காதல் பரத்தை ஒருத்தி தலைவனிடம் சொல்கிறாள் : "இனி யான் விடுக்குவென் அல்லென் மந்திபனி வார் கண்ணள் பல புலந்து உறையஅடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇநெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின்மனையோள் வவ்வலும் அஞ்சுவல்" (அகநானூறு 396 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : இனி உன்னை விடமாட்டேன் (இனி யான் விடுக்குவென் அல்லென்). ஆதிமந்தி நீர் வார்த்த கண்ணுடன் பலவற்றைச் சொல்லித் துயருறுமாறு (மந்தி பனிவார் கண்ணள் பல புலந்து உறைய), போர்த் திறம் கொண்ட ஆட்டனத்தி (அடுதிறல் அத்தி) ஆடும் அழகினை விரும்பி (ஆடு அணி நசைஇ) பெருவெள்ளம் கொண்ட காவிரி அவனைக் கவர்ந்து ஒளித்துக்கொண்டதைப் போல் உன்னை ஒளித்து வைத்துள்ளேன் (நெடுநீர் காவிரி கொண்டு ஒளித்தாங்கு). (அவனை மீண்டும் அவன் தலைவி ஆதிமந்தி கவர்ந்து கொண்டதைப் போல்) உன் மனையாள் உன்னைக் கவர்ந்து கொள்வாள் என அஞ்சுகிறேன் (நின் மனையாள் வவ்வலும் அஞ்சுவல்). இறுதியாக சங்கமருவிய காலத்துக் காப்பியமான சிலப்பதிகாரம் ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலைக் குறிக்கக் காணலாம். "மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று கன்னவில் தோளாயோ என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள் ..............." (சிலப்பதிகாரம்; மதுரைக் காண்டம்; வஞ்சின மாலை; வரிகள் 11-15) பொருள் : வஞ்சி நகரத் தலைவனைப் (ஆட்டனத்தியை) பேராற்று வெள்ளம் கொண்டு செல்ல, மன்னன் கரிகாலன் பெருவளத்தான் மகள் (ஆதிமந்தி) தானும் அப்புனலின் வழி சென்று, "மலையொத்த தோளினை உடையவனே (கன்னவில் தோளாயோ)" என்று கூவிக் கதற, கடலானது அவனை அவள் முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழுவிப் பொற்கொடியைப் போல் திரும்பி வந்தாள். சிலம்பில் ஆதிமந்தி மன்னன் கரிகாலனின் மகளாகவும் ஆட்டனத்தி வஞ்சித் தலைவனாகவும் காட்டப்படுகின்றனர். ஆனால் அவர்களைப் பேசும் சங்கப்பாடல் எதிலும் அத்தகைய வரலாற்றுக் குறிப்பு இல்லை. குறிப்பாக, வரலாற்றுப் பதிவாளராகக் கொள்ளப்படுகிற பரணர் அவர்களைக் குறித்த ஆறு பாடல்களில் ஒன்றில் கூட அவ்வாறு குறிப்பிடவில்லை. எனவே சங்க இலக்கியங்களிலிருந்து, அவர்கள் இருவரும் ஆடுகள மக்களாகவே புலப்படுகின்றனர். சங்கமருவிய காலத்திலேயே காப்பியங்கள் தோன்றின. காப்பியங்கள் தன்னேரில்லாத் தலைவனையே முதன்மைப்படுத்தின. சிலம்பு குடிமக்கள் காப்பியம் எனப் பெயர் பெற்றாலும் கோவலனும் கண்ணகியும் சாதாரணக் குடிமக்கள் அல்லர். மன்னர் குலத்தவராக இல்லாவிடினும் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் செல்வச் செழிப்புள்ள வணிகர் குலத் தோன்றல்களாகவே காட்டப் பெறுகின்றனர். எனவே சிலம்பில் புகழ்பெற்ற தலைவன் - தலைவியாக சுட்டப்பெறும் ஆட்டனத்தி - ஆதிமந்தியும் ஏற்கனவே அக்கால மக்கள் வழக்கில் திரிபுகளைப் பெற்று மன்னர் குலத்தவராகக் கருதப்பட்டது இயல்பான ஒன்றே. புனைவும் காப்பியத்தின் அங்கம்தானே ! எது எப்படி ஆயினும் உலகக் காதலர்களைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம் முதலில் ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலைத் தலையாயதாய்க் கொண்டாடுவதும், அதனை உலகோர் பார்வைக்குக் கொண்டு செல்வதும் தமிழர் பண்பாட்டை உலகிற்குக் கடத்தும் முயற்சியில் ஒன்றாய் அமையும்.
  10. கிருபன் அய்யா...நீங்கள் கேட்ட திருத்தங்களை சிவப்பு கலரில் எழுதியுள்ளேன்...நன்றி
  11. அரசியல் மாற்றங்கள் எழுதி வைத்து நடப்பதல்ல. நாளைய உலகில் ரஷ்ய அதிபர் புட்டினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்ப் அவர்களும் மறைந்து விட்டால் இன்னொரு புதிய அரசியல் முகங்கள் உருவாகலாம்.அவர்கள் வேறு கோணங்களிலும் வேறு பாதைகளிலும் பயணிக்கலாம். யார் கண்டார். உலக அரசியல் அரங்கில் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும். எதுவும் நிரந்தரமில்லை. ஐரோப்பிய-இந்திய ஒப்பந்ததிற்கு பெரிய ஆதரவில்லை என்பது நான் கண்ட அனுபவம்.
  12. அதே மாதிரி..... எங்கட பொடியள் மீண்டும் பனைமரத்தில ஏறாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை 😎
  13. ஜேர்மனியில் இனிவரும் மாகாண,மத்திய தேர்தல்களில் Afd கட்சி வெற்றி பெறும் என நினைக்கின்றேன். அதன் பின்னர் பல சரித்திரங்கள் கதைகள் மாறலாம் - மாறும்.
  14. ஆயுத ரீதியாக பல கண்டுபிடிப்புகளை செய்தவர்கள்/ செய்பவர்கள் அமெரிக்கர்கள். அவர்களின் ஆயுதங்களே உலகளாவிய ரீதியில் முதன்மை வகிக்கின்றது. எனவே எதுவும் சாத்தியம்.
  15. இடியப்ப சிக்கலில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு எட்டுத்திக்கிலும் வழியில்லை என்கிறீர்கள்?
  16. Yesterday
  17. இந்த ஜேவிபியால் வர கூடிய பேராபத்து அது . அந்த கட்சிக்கு இந்த ஆட்சி காலம் போதாது நீடித்து இருக்க வேண்டும் என்று நேற்றைய தமிழ் தேசியவாதிகள் இன்றைய அநுரகுமார திசாநாயக்க ஆதரவாளர்கள் பிரசாரத்தை இப்போதே முடுக்கி விட தொடங்கி உள்ளனர்.அர்ச்சுனாவை வெளிநாட்டு தமிழ் அம்மையார் ஒருவர் ஏசும் பேச்சை சிறிது நேரம் கேட்டேன் அநுரகுமார திசாநாயக்கவை அர்ச்சுனா குறை சொல்லிவிட்டார் என்பதற்காக ஏசுகின்றா அவர் றோட்டில் கம்பீரமாக நடந்து போகின்றார் பார்த்தாயடா அவரை குறை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு என்று
  18. @alvayan , பின்வரும் கேள்விகளுக்கு உங்கள் பதில்களை மாற்றவேண்டும். 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCOT எதிர் WI 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT எதிர் ITA 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT எதிர் NEP 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG WI ?? SCOT ?? NEP ?? ITA ?? 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ENG (2 புள்ளிகள்) குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) @ஈழப்பிரியன் ஐயா, @Newbalance , @வாத்தியார் , பின்வரும் இரண்டு கேள்விகளுக்கு உங்கள் பதில்களைத் தாருங்கள்.. 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT எதிர் ITA 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT எதிர் NEP @கறுப்பி பின்வரும் மூன்று கேள்விகளுக்கு உங்கள் பதில்களைத் தாருங்கள்.. 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT எதிர் ITA 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து SCOT எதிர் ENG 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT எதிர் NEP
  19. @ஏராளன் , மேலுள்ள கேள்விகளுக்கு பதில்களைத் தாருங்கள். @vasee , 7), 33), 47), 48) க்கான உங்கள் தெரிவுகளைக் குறிப்பிடுங்கள். @புலவர் ஐயா, 7), 33) க்கான உங்கள் பதில்களைக் குறிப்பிடுங்கள். 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT எதிர் ITA 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT எதிர் NEP @சுவைப்பிரியன் , பின்வரும் கேள்விகளுக்கு உங்கள் பதில்களைக் குறிப்பிடுங்கள். 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG WI ?? SCOT ?? NEP ?? ITA ?? 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ENG (2 புள்ளிகள்) குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்)
  20. இன்னும் 7 நாட்களே உள்ளதால் யாழ் களப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் பதில்களை விரைவில் பதியுங்கள். இறுதி நாளில் பதிந்தால் அவற்றினை தரவேற்ற எனக்கு நேரம் கிடைக்காது! கூகிள் ஷீற் மூலம் பதிந்தால் மெத்தப் பெரிய உபகாரமாக இருக்கும். போட்டி முடிவு திகதி வெள்ளி 06 பெப் 2026 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. கூகிள் ஷீற்: https://docs.google.com/spreadsheets/d/1H2HazXerKgB9Ts372VbC-dq8hvn6F9BWuRdki4K_pQc/edit?usp=sharing பங்களாதேஷுக்குப் பதிலாக ஸ்கொட்லாந்து விளையாடுவதால் முன்னர் பதில்களைத் தந்தவர்களுக்கு பங்களாதேஷ் எனத் தெரிவு செய்த கேள்விகளுக்கான பதில்களை மட்டுமே மாற்ற சந்தர்ப்பம் முடிவு தேதிவரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பங்களாதேஷ் எல்லாம் ஸ்கொட்லாந்து என மாற்றப்படும்.
  21. அமெரிக்க இராணுவத்தினால் அவ்வாறான மரபு வழி சமரினை செய்யமுடியாது, மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் செய்யும் நிலையிலேயே இருக்கின்றது எனக்கருதுகிறேன்.
  22. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் பெருமளவான ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செலுத்தும் நாடுகளில் ஜேர்மன் முன்னிலையில் உள்ளது ஆனால் புதிதுதாக ஐரோப்பிய ஒன்றியம் வடிவேலு நகைசுவை மாதிரி இவன் (ஜேர்மன்) ரொம்ப நல்லவன்டா எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறான் என உக்கிரேன் சுமையினையும் தலையில் வைத்துவிடுவார்களோ என பயப்பிடுகிறார் ஜேர்மன் அதிபர். அவர்களுக்கு செலன்ஸ்கியின் பதில்.🤣 தற்போது உலக நடப்பு, சிரிப்பு பகுதியாகிவிட்டது.
  23. அமெரிக்க பாதுகாப்புத் தலைவர் பீட் ஹெக்செத் முக்கிய நேட்டோ அமைச்சர்கள் கூட்டத்தைத் தவிர்க்கிறார் பென்டகனின் கொள்கைத் தலைவரும் தனிமைப்படுத்துபவருமான எல்பிரிட்ஜ் கோல்பி அதற்குப் பதிலாகக் கலந்துகொள்வார், அமெரிக்க உயர் அதிகாரிகள் நேட்டோ கூட்டத்திற்கு ஒரு துணை அதிகாரியை அனுப்புவது இது இரண்டாவது முறையாகும். கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே கூட்டத்தில் ஐரோப்பியர்கள் தங்கள் பாதுகாப்புக்காக போதுமான அளவு செலவிடவில்லை என்று கடுமையாக விமர்சித்து சீற்றத்தைத் தூண்டிய பீட் ஹெக்செத், பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இரு அதிகாரிகளும் தெரிவித்தனர், இருவரும் சுதந்திரமாகப் பேசுவதற்கு பெயர் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. | ஷான் தியூ/இபிஏ ஜனவரி 29, 2026 மாலை 6:22 CET விக்டர் ஜாக் மற்றும் பால் மெக்லியரி எழுதியது பிரஸ்ஸல்ஸ் - அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் அடுத்த மாதம் நடைபெறும் நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு தனது துணை அதிகாரியை அனுப்புவார் என்று அமெரிக்க அதிகாரி மற்றும் ஐரோப்பிய தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த முடிவு அட்லாண்டிக் கடல்கடந்த கூட்டணிக்கான வாஷிங்டனின் அர்ப்பணிப்பு குறித்து மேலும் கேள்விகளை எழுப்பக்கூடும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , டென்மார்க்கிலிருந்து கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முடியும் என்று மீண்டும் மீண்டும் கூறி கூட்டணியை வெடிப்பின் விளிம்பிற்கு கொண்டு வந்ததிலிருந்து , நேட்டோவின் 32 பாதுகாப்புத் தலைவர்கள் பிப்ரவரி 12 அன்று முதல் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்திற்காக கூடுவார்கள். ஆனால், கடந்த ஆண்டு இதே கூட்டத்தில் ஐரோப்பியர்கள் தங்கள் பாதுகாப்புக்காக போதுமான அளவு செலவு செய்யவில்லை என்று கடுமையாகத் தாக்கி சீற்றத்தைத் தூண்டிய ஹெக்ஸெத் , பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சுதந்திரமாகப் பேச பெயர் வெளியிட அனுமதிக்கப்பட்டுள்ள இரு அதிகாரிகளும் தெரிவித்தனர். அதற்கு பதிலாக, பாதுகாப்பு கொள்கைக்கான துணைச் செயலாளரான எல்பிரிட்ஜ் கோல்பி, அவருக்குப் பதிலாக கலந்து கொள்ள உள்ளார் என்று தூதரும் அதிகாரியும் கூறினார், இந்த முடிவு இன்னும் மாற்றத்திற்கு உட்பட்டது. கோல்பி பென்டகனில் மூன்றாவது மிக உயர்ந்த பதவியில் உள்ள சிவில் பாதுகாப்பு அதிகாரி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் நெருங்கிய கூட்டாளி ஆவார். POLITICOவின் கருத்துக்கான கோரிக்கைக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை உடனடியாக பதிலளிக்கவில்லை. "பிரிட்ஜ்" என்று செல்லப்பெயர் பெற்ற கோல்பி, பென்டகனுக்குள் ஐரோப்பாவின் மீது கடுமையான போக்கைக் கொண்டவராகக் கருதப்படுகிறார், மேலும் உலகளவில் குறைவான செயலில் உள்ள அமெரிக்க பங்கை - குறிப்பாக இராணுவ ரீதியாக - ஆதரிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தீவிர ஆதரவாளராக உள்ளார். மீண்டும் மீண்டும் தாமதங்களை எதிர்கொண்டுள்ள ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான திட்டங்களை வரைவதற்கும் அவர் பொறுப்பு. கடந்த வாரம் வெளியிடப்பட்ட புதிய அமெரிக்க பாதுகாப்பு மூலோபாயத்தை வடிவமைப்பதற்கு கோல்பி பொறுப்பேற்றார், இது ஐரோப்பாவை தரமிறக்கி , அதற்கு பதிலாக அமெரிக்க தாயகத்தையும் சீனாவையும் பாதுகாப்பதற்கு வாஷிங்டன் "முன்னுரிமை அளிக்கும்" என்று கூறியது. வெளியிடப்படுவதற்கு முன்பு, இந்த ஆவணம் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் அவர்களால் ஆழமான திருத்தங்களுக்கு உட்பட்டது , அவர் பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் வெளிச்சத்தில் சீனப் பிரிவில் மாற்றங்களை வலியுறுத்தினார். பெசென்ட்டின் உள்ளீடுகள் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு உத்தியில் சீன மொழியைக் குறைத்தன. அமெரிக்காவிற்கு "குறைவான கடுமையான" அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஐரோப்பாவில் "கூட்டாளிகள் முன்னிலை வகிப்பார்கள்" என்பதையும் பாதுகாப்பு உத்தி தெளிவுபடுத்துகிறது - இது ரஷ்யாவிற்கு ஒரு மறைமுகமான சொல். ஹெக்செத் நேட்டோ கூட்டத்தைத் தவிர்ப்பது இது முதல் முறை அல்ல . ஆனால் , கடந்த மாதம் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தனது துணை அதிகாரியை நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு அனுப்பிய பின்னர், அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் உயர்மட்டக் கூட்டத்தைத் தவறவிடுவது இது இரண்டாவது முறையாகும் . முன்னாள் நேட்டோ செய்தித் தொடர்பாளர் ஓனா லுங்கெஸ்கு, இந்த நடவடிக்கை "அமெரிக்கா தனது நட்பு நாடுகளின் கவலைகளை கவனமாகக் கேட்கவில்லை என்பதற்கான கூடுதல் சமிக்ஞையை அனுப்பும் அபாயத்தை ஏற்படுத்துகிறது, குறிப்பாக மார்கோ ரூபியோ கடைசி கூட்டத்தைத் தவிர்த்த பிறகு," என்றார். "இதைச் சொன்ன பிறகு, ஒரு நன்மையும் இருக்கிறது," என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் சிந்தனைக் குழுவில் மூத்த உறுப்பினராகப் பணிபுரியும் லுங்கெஸ்கு கூறினார், "எல்பிரிட்ஜ் கோல்பி ... [புதிய அமெரிக்க பாதுகாப்பு மூலோபாயத்தின்] நோக்கம் மற்றும் தாக்கங்களை விளக்கவும், நட்பு நாடுகளின் கருத்துக்களைக் கேட்கவும் சிறந்த இடத்தில் உள்ளார்." https://www.politico.eu/article/us-defense-chief-pete-hegseth-to-skip-key-nato-ministerial-meeting/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.