24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
களவு செய்யாமல் உழைச்சு, அதை டிக்ளேரும் பண்ணும் போது கிடைக்கும் பெருமிதம் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும். ஸ்டாலின் - தன்னிடம் காரே இல்லை என வழமையான பல்லவியை பாடி உள்ளார். உதய்னா ஒரு படி மேலே போய் தன்னிடம் அண்டர்வேரே இல்லை என அபிடெபிட் தாக்கல் செய்தாலும் ஆச்சரியம் இல்லை. சீமான் போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் 50, இலட்சம் பெறுமதியான காணி வாங்கி உள்ளார் மனைவி பெயரில். காணியின் அளவை பார்த்தால் - சொல்லப்பட்ட விலை பொய் என்பது அப்பட்டமாக தெரிகிறதாம். கணவனும் மனைவியும் வேலை செய்வதில்லை. போன தடவை இருவர் காட்டியதிலும் அதிக சொத்து வந்த வழி என்ன? கேள்வி கேட்டால் அவன் தெலுங்கன்😂
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
இரான் ஆயுதம் கொடுக்கமுடியாதா நிலை. un தடையை கண்காணிக்க அமெரிக்கா நிபுணத்துவதுடன் , சில அமெரிக்கா / மேட்ற்கு தலைமையிலும் un இல் பிரத்தியேக குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்கொத்தி பாம்பாக இரான் கண்காணிக்கப்பட காலம். உண்மையில், அமெரிக்காவே, இஸ்ரேல் வழியாக cluster குண்டுகளை கொடுத்தது. மற்றது , இரான் cluster குண்டுகளில் , மாற்றம் பொதுவாக குண்டு தொழில்நுட்ப்பதில் அக்கறை இல்லை, ஏனெனில் குண்டுகளை போட இரானுக்கு போர்விமான தொழில் நுட்பம் இல்லை. அனால், இப்போதுலா ஏவுகணை cluster குண்டு அல்ல. மேற்கு ஊடகங்கள் அவற்றுக்கு அனுதாபம் தேடுவகற்கு பொய்யாக அந்த ஏவுகணையை cluster குண்டு என்று பிரச்சாரம்.
- Today
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
Vijay: 'BMW உள்ளிட்ட 5 கார்கள், 1 TVS XL ' - வெளியான விஜய்யின் வாகனங்களின் லிஸ்ட்! பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்யின் அசையும் சொத்து 404 கோடி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. தவிர விஜய் 5 கார்கள், 1 இருசக்கர வாகனம் வைத்திருப்பதாகவும் விவரம் வெளியாகிறது.. அதன்படி விஜய் வைத்திருக்கும் கார்கள் BMW 530 (2020) — ரூ.80,54,119 Toyota Lexus 350 (2024) — ரூ.3,01,57,881 Toyota Vellfire (2024) — ரூ.1,63,45,118 BMW I7 (2024) — ரூ.2,00,64,296 Maruti Swift (2024) — ரூ.5,35,000 TVS XL Super (2025) — ரூ.67,400 விஜய் வைத்திருக்கும் 5 கார்கள் அசையாச் சொத்துகள் (மொத்தம்: ரூ.82,81,93,010): விள்பட்டி கிராமம், கொடைக்கானல் உட்பட பல இடங்களில் நிலங்கள் மற்றும் வணிகக் கட்டடங்கள். கல்வித் தகுதி: B.scB.Sc Degrees Online 2025 - Best Course After 12th | Compa...Find the best B.Sc course after 12th. Compare accredited online B.Sc degrees in Computer Science, Data Science, Nursing & more. Start your career journey. இடைநிற்றல் — லயோலா கல்லூரி, சென்னை, 1992 தொழில்: சுய தொழில் (நடிப்பு), விஜய் வித்யாசிரம் நிர்வாகம், ஜெயா நகர் பிராபர்டி பி லிட் மேலாண்மை இயக்குநர், விதியா சாரிடபுள் டிரஸ்ட் குற்றவியல் வழக்குகள்: இல்லை வெள்ளி பொருட்கள் ரூ.15,00,000 (883 கிராம்) தங்கம் 3,132 கிராம் — ரூ.4,07,16,000 வைரம் 134.91 கேரட் — ரூ.1,00,00,000 Tvk Vijay: ' BMW உள்ளிட்ட 5 கார்கள், 1 இருசக்கர வாகனம்'- வெளியான விஜய்யின் வேட்புமனு விவரம்| “BMW among 5 cars, 1 two-wheeler” – Vijay’s nomination affidavit details released. - Vikatan
-
களப்பிரர் காலத்து இலங்கை
கந்த புராணத்தில் சொல்லப்பட்டது - (என்று முருகன் வீரவாகு தேவர் குழாமை அனுப்பி சோழரின் விருத்தி மாறும் இராச்சியத்தின் விரிவாக்கத்துக்கு வாக்கு கொடுத்து, சோழர்கள் எபோதும் நிலைத்து இருப்பார்கள் என்பது இப்போதும் யதார்தமாகவே இருக்கிறது.
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
சாமியார்... இதே கருத்துத்தான் எனக்கும். ஆனாலும் எனக்கு இந்த "நாதன்யாஹு இஸ்ரரேலின்" கொட்டம் அடக்கப்பட்ட வேணும் என்கிற வெறியும் இருக்கிறது.
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
கார்க் தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளில் கைவைக்க அமெரிக்கா தயங்குகிறதா? - ஈரானுக்கு ஏன் கார்க் முக்கியம்? - ஒரு பார்வை Published By: Nanthini 30 Mar, 2026 | 06:44 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) ஈரானின் முக்கியமான பொருளாதார மையமாக விளங்கும் கார்க் தீவில் உள்ள அனைத்து இராணுவ இலக்குகளையும் அமெரிக்க படைகள் முற்றாக அழித்துவிட்டன. அத்தீவை அமெரிக்கா விரைவில் கைப்பற்றும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிவந்தாலும், கார்க் தீவின் உள்கட்டமைப்புகளை அழித்தாலோ தீவை முற்றாக கைப்பற்றினாலோ அதன் விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்பது குறித்து சிந்திக்கும் அவரது நிலைப்பாட்டில் ஒரு தளம்பல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (29) பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகைக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில், "ஒருவேளை நாம் கார்க் தீவைக் கைப்பற்றலாம் அல்லது கைப்பற்றாமலும் போகலாம். எங்களிடம் பல விருப்பங்கள் உள்ளன. கார்க் தீவை கைப்பற்றினால் அமெரிக்க படைகள் அங்கு நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டியிருக்கும்... அந்த தீவில் ஈரானிடம் பெரிய அளவில் பாதுகாப்பு வசதிகள் இல்லை. நாம் அதை மிக எளிதாகக் கைப்பற்ற முடியும்" எனக் கூறியுள்ளார். கடந்த 13ஆம் திகதி இத்தீவு தொடர்பாக பேசிய ட்ரம்ப், கார்க்கில் உள்ள அனைத்து இராணுவ இலக்குகளையும் அமெரிக்க படைகள் பரிபூரணமாக அழித்துவிட்டன. அதேசமயம், ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பைத் தாக்குவதை அமெரிக்க இராணுவம் இதுவரை தவிர்த்து வந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். இம்மாத தொடக்கத்தில் ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரானை வற்புறுத்துவதற்காக, அத்தீவை ஆக்கிரமிக்க அல்லது முற்றுகையிட அமெரிக்க நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை தடுப்பதோடு மட்டுமன்றி, அந்நாட்டின் நிலப்பரப்பு மீது தாக்குதல்களை நடத்தவும் ஒரு தளமாக பயன்படுத்த, கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச மட்டத்தில் பல்வேறு செய்தி ஊடகங்களும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றன. அமெரிக்காவால் இலக்குவைக்கப்படும் கார்க் தீவு ஏன் ஈரானுக்கு முக்கியம்? ஈரான் நாட்டின் பொருளாதார உயிர்நாடியான விளங்குவது கார்க் தீவாகும். இந்த தீவு ஈரான் கடற்கரை பகுதியிலிருந்து 15 கடல் மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய பாறைத் தீவு ஆகும். அத்தீவு சிறியதென்றாலும் ஈரானின் எரிபொருள், எரிசக்தி உள்கட்டமைப்பின் அமைவிடமாக உள்ளதோடு, ஈரானுக்கு எரிபொருள் மூலமாக அதிகப்படியான வருமான செழிப்பை ஏற்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. ஈரானின் மசகு எண்ணெய் போக்குவரத்தில் 90 வீத செயற்பாடுகள் இந்த தீவில் உள்ள எரிபொருள் ஏற்றுமதி முனையத்திலேயே நடைபெறுகின்றன. ஈரான் நாட்டின் மசகு எண்ணெய், பிரதான நிலப்பரப்பிலிருந்து குழாய்கள் மூலம் கொண்டுசெல்லப்பட்டு, இந்த தீவில் உள்ள முனையத்தின் வழியாகவே வருகிறது. கார்க் தீவின் கடற்கரை ஆழமான நீர்ப் பகுதியை கொண்டிருப்பதால் 85 மில்லியன் கேலன் எண்ணெய் கொள்ளளவு கொண்ட மிகப் பெரிய எண்ணெய் தாங்கிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அத்தீவில் உள்ள இறங்குதளங்களுக்கு சென்று எண்ணெய் ஏற்றிக்கொண்டு புறப்படுகின்றன. கார்க் தீவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைக்கு ஒரு பிரதான வருமான ஆதாரமாக விளங்குகிறது. ட்ரம்பின் எச்சரிக்கை ட்ரம்ப் இத்தீவின் எண்ணெய் குழாய்களை தாக்குவது குறித்து பேசினாலும், இதனால் ஈரானின் பொருளாதாரத்துக்கு நீண்ட கால பாதிப்பு ஏற்படக்கூடும் என்பது குறித்தும் சிந்திக்காமல் இல்லை. ஒரே ஒரு உத்தரவு கொடுத்தால் போதும். அந்த எண்ணெய்க் குழாய்கள் அழிந்துவிடும். அப்படி அழித்தால், அதை மீண்டும் கட்டியெழுப்ப நீண்ட காலம் எடுக்கும் என்றும் குறிப்பிட்டார். ஈரானின் பதிலடி ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப் கூறுகையில், அமெரிக்க வீரர்கள் ஈரானில் தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அமெரிக்க படைவீரர்கள் ஈரான் மண்ணில் கால் வைப்பதையே தமது படையினர் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறுகிறார். ஈரான் எல்லைக்குள் நுழைய முயலும் அமெரிக்க வீரர்கள் மீது “நெருப்பு மழை பொழியும்” என்று எச்சரித்துள்ளார். அத்தோடு, அமெரிக்கா ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிவரும் நிலையில், ஈரான், எதற்காகவும் தாம் அடிபணியப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. தரைவழித் தாக்குதல் நடந்தால் செங்கடலில் கப்பல் போக்குவரத்து இலக்கு வைக்கப்படும் என்றும் ஈரானிய இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவிடமிருந்து கார்க் தீவை பாதுகாக்க, வான்பாதுகாப்பு அமைப்புகளின் செயற்பாடுகளை முடுக்கிவிடுவது, கண்ணிவெடிகளை வைப்பது என ஈரான் மும்முரமாக களத்தில் இறங்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா கார்க் தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளை தாக்கினால் என்ன நடக்கும்? கார்க் தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளை அழிப்பது ஈரானுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்கா கூறிவந்தாலும், அமெரிக்கா காரியத்தில் முழுதாக இறங்குவதைத் தவிர்த்துவருவதற்கான காரணங்களும் பல தரப்பால் ஆராய்ந்து முன்வைக்கப்படுகின்றன. போர் தீவிரம் - கார்க் தீவில் தாக்கி முற்றாக அழித்தால் வரலாறு கண்டிராத மாபெரும் போர் உலகளவில் வெடிக்கும். எண்ணெய் விலை உயர்வு - உலகெங்கும் எண்ணெய் விலைகள் கடுமையாக உயரும் ஈரான் பதில் தாக்குதல் - மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மற்ற எரிசக்தி நிலையங்களை ஈரான் தாக்க வழிவகுக்கும். ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் - போர் ஆரம்பமாகி ஒரு மாத காலத்துக்குப் பிறகும் ஈரான் தனது அண்டை நாடுகள் மற்றும் கப்பல்கள் மீது குறைந்த விலை மற்றும் அதிக வெடிபொருள் கொண்ட ட்ரோன்களை ஏவும் திறனைக் கொண்டுள்ளது. தீவு அழிவுக்குட்படுத்தப்பட்டால் ஈரானின் மொத்த ஆக்ரோஷமும் பழிவாங்கலாக மாறி, பேரழிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடிநீர் ஆதாரம் - ஈரான் தனது இலக்குகளை விரிவுபடுத்தி, மில்லியன்கணக்கான மக்களுக்கு குடிநீர் வழங்கும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களை தாக்கக்கூடும். இவ்வாறான பின்விளைவுகளை கருத்திற்கொண்டே அமெரிக்கா, கார்க் தீவின் மீது பரந்துபட்ட தாக்குதலை நடத்த இதுவரை பாரியதொரு இராணுவ நடவடிக்கையில் இறங்காதிருப்பதாக சர்வதே அளவில் பேசப்படுகிறது. https://www.virakesari.lk/article/242339
-
இலங்கையின் சுருக்கமான தொல்பொருள் வரலாறு - வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை [நாலு பகுதிகள் ]
இலங்கையின் சுருக்கமான தொல்பொருள் வரலாறு - வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை / பகுதி 01 [தொல்பொருள் சான்றுகள், கல்வெட்டியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகளின் அடிப்படையில் இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது நான்கு பகுதிகளைக் கொண்ட ஒரு 'நிர்வாகச் சுருக்கமாக' (Executive Summary) அமைகிறது; இதனைத் தொடர்ந்து, இலங்கையின் தொடக்ககால வரலாறு குறித்த முக்கிய தொல்பொருள் கண்டுபிடிப்புகள், வரலாற்று மேற்கோள்கள் மற்றும் முதன்மை ஆதாரங்களைக் கொண்ட விரிவான 30-பகுதி தொடர் வெளியிடப்படும்.] இலங்கையின் ஆரம்பகால வரலாறு தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் மற்றும் வாய்வழி மரபுகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிக்கலான மற்றும் சுவாரசியமான விடயமாகும். கடந்த நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், இலங்கையின் வரலாறு எழுதப்பட்ட காலத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டதை வெளிப்படுத்துகின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே வேட்டையாடி வாழ்ந்த மக்கள் இங்கு வாழ்ந்ததையும், பின்னர் தென்னிந்தியாவுடன் கலாசார மற்றும் பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்டிருந்ததையும், காலப்போக்கில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு முக்கியமான வர்த்தக மற்றும் நாகரிக மையமாக இலங்கை மாறியதையும் தொல்லியல் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. பல நூற்றாண்டுகளாக, தீவின் கடந்தகாலம் முக்கியமாக மகாவம்சம் மற்றும் தீபவம்சம் போன்ற பண்டைய நூல்களின் மூலமே விளக்கப்பட்டது. இந்த நூல்கள் பெறுமதிமிக்க கலாசாரத் தகவல்களை வழங்கினாலும், நவீன வரலாற்றாசிரியர்கள் இலங்கையின் ஆரம்பகால மனித வரலாற்றை மீளமைக்க தொல்பொருள் மற்றும் அறிவியல் சான்றுகளையே அதிகம் நம்பியுள்ளனர். இருப்பினும், பௌத்த வரலாற்று நூல்கள் பெரும்பாலும் சிங்கள அரசர்களையும் பௌத்த மதத்துடனான அவர்களின் தொடர்பையும் மையப்படுத்திய ஒரு பார்வையை முன்வைத்தன. இது தமிழர்களின் இருப்பைக் குறைத்து மதிப்பிட்டது அல்லது புறக்கணித்தது. இத்தகைய பதிவுகள், தமிழர்கள் பிற்காலத்தில் வந்தவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியதுடன், தீவின் கலாசாரம், வர்த்தகம் மற்றும் குடியேற்றங்களில் அவர்களின் பங்களிப்பையும் மறைத்தன. இதன் விளைவாக, தமிழர்கள் வரலாற்று ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டதுடன், இது காலப்போக்கில் இனரீதியான பதற்றங்களுக்கும் மோதல்களுக்கும் வழிவகுத்தது. ஆனால், நவீன தொல்பொருள் ஆய்வுகளும் கல்வெட்டுகளும், தமிழ் பேசும் மக்கள் பண்டைய காலத்திலிருந்தே இலங்கையின் வரலாற்றில் வர்த்தகம், அரசியல் மற்றும் கலாசாரத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. இக்கட்டுரை தொல்லியல், கல்வெட்டியல் மற்றும் வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையின் ஆரம்பகால வரலாற்றைப் பற்றிய ஒரு சமநிலையான பார்வையை முன்வைக்கிறது. பல்வேறு துறைகளின் ஆதாரங்களை விமர்சன ரீதியாக ஆராய்வதன் மூலம், இலங்கையின் கடந்தகாலத்தைப் பற்றிய முழுமையான மற்றும் துல்லியமான சித்திரத்தை இது வழங்குகிறது. 1. வரலாற்றுக்கு முந்தைய இலங்கை: ஆரம்பகால மனிதக் குடியேற்றங்கள் (கி.மு. 125,000 – கி.மு. 1000) இலங்கையில் மனித நடமாட்டத்திற்கான ஆரம்பகால சான்றுகள் 125,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. வட இலங்கையின் இரணைமடுப் படிவு (Iranamadu Formation) மற்றும் தென்கிழக்கின் புந்தல (Bundala) பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், இடைக்கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளை வெளிப்படுத்தியுள்ளன. குவார்ட்ஸ் (Quartz) மற்றும் செர்ட் (Chert) கற்களால் செய்யப்பட்ட இக்கருவிகள் தாவரங்களை வெட்டவும், இறைச்சியைப் பதப்படுத்தவும், விலங்குத் தோல்களைத் தயார் செய்யவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கடல் மட்டம் குறைந்திருந்த காலங்களில், இலங்கையும் தென்னிந்தியாவும் நிலப்பாலத்தால் இணைக்கப்பட்டிருந்தபோது, இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து இடம்பெயர்ந்த ஹோமோ எரெக்டஸ் (Homo erectus) அல்லது ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ் (Homo heidelbergensis) போன்ற ஆதி மனித இனங்கள் இக்கருவிகளை உருவாக்கியிருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முக்கியமான வரலாற்றுக்கு முந்தைய இடங்கள்: பாஹியங்கல (Fa Hien Cave) மற்றும் பட்டதொம்பலென (Batadombalena) குகைகள் பின்னர், சுமார் கி.மு. 38,000 அளவில், பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis / Balangoda Man) என்று அழைக்கப்படும் நவீன மனித இனம் இத்தீவில் வாழ்ந்தது. பாஹியங்கல மற்றும் படதொம்பலேன போன்ற குகைகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள், இவர்கள் வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழ்ந்த திறமையான வேட்டைக்காரர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இலங்கையின் தொல்பொருள் ஆய்வாளர் சிரான் உபேந்திர தெரணியகல [archaeologist Siran Upendra Deraniyagala] மேற்கொண்ட ஆய்வுகள், இந்த வரலாற்றுக்கு முந்தைய கலாசாரங்களின் காலவரிசையை நிலைநிறுத்த உதவின. பாஹியங்கல குகை அகழ்வாராய்ச்சியில் மிகச்சிறிய கற்கருவிகள் (Microlithic tools), எலும்பு கருவிகள் மற்றும் மழைக்காடு சூழலில் வில் மற்றும் அம்புகளின் ஆரம்பகால பயன்பாட்டிற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இக்கண்டுபிடிப்புகள் அக்காலத்துக்கே உரிய மிகவும் மேம்பட்ட பிழைப்புத் தொழில்நுட்பங்களை அவர்கள் கொண்டிருந்ததைக் காட்டுகின்றன. இந்த ஆரம்பகால வேட்டைக்காரர்களின் சந்ததியினர் இலங்கையின் பழங்குடிச் சமூகமான வேடர் (Vedda) மக்களுடன் தொடர்புடையவர்கள் என பல அறிஞர்கள் நம்புகின்றனர். மரபணு மற்றும் மானுடவியல் ஆய்வுகளின்படி, வேடர் மக்கள் தமிழ்நாட்டின் இருளர் (Irula) மற்றும் கேரளாவின் பணியர் (Paniya) போன்ற தென்னிந்திய பழங்குடியினருடன் நெருங்கிய மூதாதையர் தொடர்பைப் பகிர்ந்து கொள்கின்றனர். இத்தொடர்புகள் இலங்கையினதும் தென்னிந்தியாவினதும் ஆரம்பகால மக்கள் ஒரு பரந்த வரலாற்றுக்கு முந்தைய கலாசார வலையமைப்பின் அங்கமாக இருந்ததை நிரூபிக்கின்றன. நன்றி ✍️ கந்தையா தில்லைவிநாயகலிங்கம் BSc Engineering (Honours) அத்தியடி, யாழ்ப்பாணம் பகுதி 02 தொடரும் துளி/DROP: 2124 [இலங்கையின் சுருக்கமான தொல்பொருள் வரலாறு - வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை / பகுதி 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/34603917772590095/?
-
சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை [ஒன்பது பகுதிகள்]
சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 6 [இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது. ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும். என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த கதையின் இதயம்.] அந்தக் கிளர்ச்சி ஒரு மாபெரும் காவியமாக உருவெடுக்கும் முன்பே பலவீனமடையத் தொடங்கியது. பாடல்களில் பாடப்படும் பிரம்மாண்டமான இறுதிப் போரோ அல்லது தீர்ப்பு வழங்கும் ஒரு குறிப்பிட்ட தருணமோ அங்கே நிகழவில்லை. மாறாக, அங்கிருந்தது நீண்ட காலச் சோர்வு, தீராத பசி மற்றும் அதிகாரம் மெதுவாகத் தன் பிடியை இறுக்கிய ஒரு இருண்ட உணர்வு மட்டுமே. நிலவில்லாத ஒரு இரவில், மலைக்காடுகளில் எரிந்த புரட்சியின் நெருப்பு ஒவ்வொன்றாக அணைந்தது. ஒற்றர்கள் வரவில்லை; செய்திகள் துண்டிக்கப்பட்டன. "இது முடிவின் ஆரம்பம்" என்பதைச் சிவா உணர்ந்தான். சிவா அவனது உடல் வலிமைக்காகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை; அவன் அந்த நிலத்தின் ஆதி நினைவுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். மன்னர்கள் தோன்றுவதற்கு முன்பே அங்கிருந்த ஒற்றையடிப் பாதைகள், வணிகர்களின் வழித்தடங்கள், யாத்திரிகர்களின் பாதைகள் மற்றும் வேடர்கள் (Veddhas) மட்டுமே அறிந்த அடர்ந்த காட்டு வழிகள் சிவாவிற்கு அத்தப்படியாகத் தெரிந்திருந்தது. அவன் சிறிய குழுக்களைக் கொண்டு அரசின் தானியக் களஞ்சியங்களைத் தாக்கினான்; கைதிகளை விடுவித்தான். இருளுக்குள் தோன்றி விடியலுக்குள் மறைந்தான். சில காலம் இந்த யுக்தி வெற்றியளித்தது. ஆனால், ஒரு கிளர்ச்சி நீடிக்கத் துணிச்சல் மட்டும் போதாது; அதற்குச் சாதகமான காலமும் தொடர்ச்சியான மக்கள் ஆதரவும் தேவை. அரசவையிடம் ஆள் பலமும், தானியமும் இருந்தது. மடாலயங்களிடம் தங்களின் செயல்களை நியாயப்படுத்த ‘தர்மம்’ என்ற முகமூடி இருந்தது. மீண்டும் பஞ்சம் வந்தபோது, மக்கள் தங்களின் உரிமையை விட உயிரைத் தக்கவைக்க உணவைத் தேர்ந்தெடுத்தனர். சிலர் சரணடைந்தனர்; சிலர் உயிர் பிழைக்கக் காட்டிக் கொடுத்தனர். ஒரு காலத்தில் சிவா யாரைப் பசியிலிருந்து காப்பாற்றினானோ, அதே சிறுவனால் ஒரு வறண்ட ஏரிக்கரையில் (Wewa) வைத்துச் சிவா காட்டிக்கொடுக்கப்பட்டான். சிவா பிடிபட்டபோது அவனுக்குச் சித்திரவதைகள் வழங்கப்படவில்லை. ஒரு உயர் அதிகாரியும் (Adigar) ஒரு மூத்த துறவியும் அவனிடம் பேசினர். அந்தத் துறவி நிதானமாகச் சொன்னார்: “நீ ஒரு பழைய கதையை (Identity) நம்பிப் போராடினாய். இப்போது நாங்கள் ஒரு புதிய, மேன்மையான கதையை (The New History) உலகிற்குச் சொல்வோம்.” அப்போதுதான் அவர்களின் உண்மையான திட்டம் சிவாவிற்குப் புரிந்தது. அவர்கள் அவனைக் கொல்ல விரும்பவில்லை; மாறாக, அவனை வரலாற்றிலிருந்தே துடைத்தெறிய விரும்பினர். அவனுக்கு இரண்டு தேர்வுகள் தரப்பட்டன: கடல் கடந்து (தமிழகம் அல்லது தென்கிழக்கு ஆசியாவுக்கு) நாடு கடத்தப்படுதல். முழுமையான மௌனம் — எவருமறியாத இடத்தில் அடையாளமின்றி மறைந்து வாழ்வது. அவன் பெயர் எந்தக் கல்வெட்டிலும் வராது; அவன் ஒரு வீரனாகப் போற்றப்பட மாட்டான். அவன் இந்த மண்ணில் பிறந்ததற்கான தடையமே இல்லாமல் ஆக்கப்படுவான். வரலாற்றுத் தரவுகள் (Historical Context): யுக்தி (Guerrilla Warfare): கி.மு. காலத்திலேயே இலங்கையின் மலைப்பாங்கான பகுதிகளில் (மலையரட்டை - Hill Country) மறைந்திருந்து தாக்கும் முறை புழக்கத்தில் இருந்தது. இதற்குப் பூர்வகுடி வேடர்களின் உதவி முக்கியமாக இருந்தது. பஞ்சத்தின் அரசியல்: அக்காலத்தில் குளங்களை (Wewa) மையமாகக் கொண்ட விவசாயம் பாதிக்கப்பட்டபோது, அரசுகள் உணவைக் கட்டுப்பாட்டில் வைத்துப் போராட்டங்களை ஒடுக்கின. கல்வெட்டுகள் (Epigraphy): அக்காலக் கல்வெட்டுகள் (Brahmi Inscriptions) பெரும்பாலும் மடாலயங்களுக்கு வழங்கப்பட்ட தானங்களையும், அரச வெற்றிகளையும் மட்டுமே பதிவு செய்தன. கிளர்ச்சியாளர்களின் பெயர்கள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டன. நாடுகடத்தல்: இலங்கையின் வரலாற்றில் தண்டனையாக அல்லது அரசியல் காரணங்களுக்காகத் தலைவர்கள் தமிழகத்திற்கு (பாண்டிய/சோழ நாடு) நாடுகடத்தப்படுவது ஒரு வழக்கமான நடைமுறையாக இருந்தது. சிவா நாடு கடத்தப்படுவதைத் தேர்ந்தெடுத்தான். அது மரணத்தின் மீதான பயத்தால் அல்ல; யாராவது ஒருவராவது இந்த நிலத்தின் உண்மையான நினைவுகளுடன் உயிரோடு எஞ்சியிருக்க வேண்டும் என்பதற்காக. அதே சமயம், மடாலயத்தின் சுவர்களுக்குள் கலினி முற்றிலும் வேறொரு போரில் இருந்தாள். பகல் நேரங்களில் அவள் ஓலைகளைப் பதப்படுத்தினாள், மை தயாரித்தாள், எழுத்துப் பிழைகளைச் சீர் செய்தாள். எந்த மாதிரியான வார்த்தைகள் ஆட்சியாளர்களுக்கும் துறவிகளுக்கும் பிடிக்கும் என்பதை அவள் நுணுக்கமாகக் கற்றுக்கொண்டாள். எங்கே உண்மை முடிகிறது, எங்கே புனைவு தொடங்குகிறது என்ற சூட்சுமம் அவளுக்குத் தெரிந்திருந்தது. இரவு நேரங்களில், அவள் ரகசியமாகச் சில மாற்றங்களைச் செய்தாள். யாரும் கவனிக்காத வண்ணம் ஒரு பழைய ஊர்பெயரை மாற்றாமல் அப்படியே விட்டாள். ஒரு குறிப்பிட்ட குடிவழியை (Clan) “பழமையான ஆதிக்குடிகள்” என்று எழுதினாள். ஒரு வழிபாட்டுத் தலத்தை “அனைவருக்குமான பொதுவான இடம்” என்று குறித்தாள். இவை மிகச் சிறிய மாற்றங்கள் தான். ஆனால், வரலாறு என்பது ஒருமுறை படிக்கப்படுவதில்லை; அது பல நூற்றாண்டுகளாக நகலெடுக்கப்படும் (Manuscript copies). இன்று விடப்படும் ஒரு சிறு குறிப்பு, எதிர்காலத் தலைமுறைக்கு மாபெரும் உண்மையாக மாறலாம் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஒரு நாள், ஒரு வரியை எழுதும்போது கலினி தயங்கி நின்றாள். அவளது கணவன் அதைக் கவனித்து, “வரலாறு சுத்தமாக (Clean) இருக்க வேண்டும்” என்றான். கலினி மெதுவாகக் கேட்டாள்: “சுத்தமாக இருக்க வேண்டுமா? அல்லது முழுமையாக (Complete) இருக்க வேண்டுமா?” அவளது கணவனின் பார்வையில் சந்தேகம் தெறித்தது. அன்று இரவு, ஒரு முக்கியமான ஓலைச்சுவடியை கலினி எரியூட்டினாள். யாரும் பார்க்கவில்லை; ஆனால் ஒரு திரிபுவாதம் அன்று சாம்பலானது. அதேசமயம், ஒரு உண்மையும் மீண்டும் எழுதப்பட வாய்ப்பில்லாமல் அழிந்தது. ஆண்டுகள் உருண்டோடின. மடாலயங்களில் வளர்ந்த அடுத்த தலைமுறை குழந்தைகள் புதிய கதைகளையே உண்மையான வரலாறு என நம்பிக் கற்றனர். மன்னர்கள் “நாட்டை உருவாக்கியவர்களாக” (Founders) போற்றப்பட்டனர்; ஆனால் அவர்கள் நிலத்தைக் கைப்பற்றியவர்கள் என்பது மறைக்கப்பட்டது. அந்த நிலத்தில் முன்பே வாழ்ந்த ஆதிக்குடிகள் ஒளி வருவதற்கு முன் இருந்த “இருள்” போலவும், வெறும் “நிழல்கள்” போலவும் சித்திரிக்கப்பட்டனர். ஒரு இனத்தின் புராணம் (Mythology) திடீரென்று உருவாவதில்லை. அது கல்லின் மேல் சுண்ணாம்பு பூசுவது போல மெல்ல மெல்லக் கட்டப்பட்டது. ஒரு அடுக்குக்கு மேல் அடுத்த அடுக்கு எனப் பொய்கள் பூசப்பட, இறுதியில் அடியில் இருந்த உண்மையான வரலாறு கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போனது. வரலாற்றுத் தரவுகள் (Historical Context): சிங்கள மொழி உருவாக்கம் (Genesis of Sinhala): கி.மு. காலப்பகுதியில் புழங்கிய 'எளு' (Elu), தமிழ் மற்றும் பிராகிருத மொழிகள், பௌத்த வருகைக்குப் பின் பாளி (Pali) மற்றும் சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தால் மாற்றமடைந்து இன்றைய சிங்கள மொழியின் ஆரம்ப வடிவமாக மாறியது. வரலாறு திரிபு (Historiography): 'மகா வம்சம்' போன்ற நூல்கள் எழுதப்பட்டபோது, விஜயன் வருகைக்கு முந்தைய காலம் 'மனிதர்கள் வாழாத அல்லது அரக்கர்கள் வாழ்ந்த இடமாக' (Yakkhas/ Nagas) உருவகப்படுத்தப்பட்டது. இது நிலத்தைக் கைப்பற்றுவதை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு உத்தி. ஓலைச்சுவடிகள் (Palm-leaf Manuscripts): பழங்காலத்தில் ஓலைச்சுவடிகளை நகலெடுக்கும்போது (Copying process), நகலெடுப்பவர்கள் தங்களுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்வது வழக்கமாக இருந்தது. கலினி போன்றவர்கள் மூலமே சில ஆதித் தமிழ் அடையாளங்கள் இன்றும் எஞ்சியுள்ளன. வழிபாட்டுத் தலங்கள்: இலங்கையில் பல இடங்கள் ஆரம்பத்தில் இந்து மற்றும் நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டுத் தலங்களாக இருந்து, பின்னர் பௌத்த விகாரைகளாக மாற்றப்பட்டன என்பதைத் தொல்லியல் ஆய்வுகள் (எ.கா: கதிர்காமம்) உணர்த்துகின்றன. கடலுக்கு அப்பால், தமிழகத்தின் கரைகளில் வாழ்ந்த சிவா, தன் தேசத்தின் புதிய கதைகளைக் கேட்டான். அவனது வாழ்நாள் போராட்டமும், அந்த மக்களின் தியாகமும் ஒரு சிறிய அடிக்குறிப்பாகக் கூடப் பதியப்படவில்லை. "அவர்கள் இருந்தார்கள், பிறகு மறைந்தார்கள்" — அவ்வளவே. ஒரு மாபெரும் கிளர்ச்சி, வரலாற்றின் முன்னுரையில் ஒரு வரியில் கரைந்து போனது. மடாலயத்தில் ஓலைகளைத் தொகுத்துக் கொண்டிருந்த கலினி ஒரு கசப்பான உண்மையை உணர்ந்தாள்: ஒரு வரலாற்று நூல் முழுவதுமே பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதில் பத்து விஷயங்களில் ஏழு உண்மைகள் இருக்கலாம்; ஆனால் மிக முக்கியமான மூன்று உண்மைகள் மறைக்கப்பட்டால், அந்த நூல் ஒரு முழுப் பொய்யை விடவும் ஆபத்தானது. இது நேரடிப் பொய் அல்ல, ஆனால் முழுமையற்ற உண்மை. நேரடியான பொய்யை ஆதாரங்களுடன் எதிர்த்துவிடலாம். ஆனால், எழுதப்படாத உண்மையை எப்படி எதிர்ப்பது? ஒரு விஷயம் எழுதப்படவே இல்லை என்றால், அப்படி ஒன்று நிகழவே இல்லை என்று வருங்காலத் தலைமுறை நம்பத் தொடங்கும். காலப்போக்கில் அது நினைவுகளில் இருந்தும் முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும். இதுவே ஒரு இனத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி. அந்த வரலாற்று நூலை (மகா வம்சத்தின் முன்னோடிப் பதிவுகள் போன்ற தொகுப்புகள்) உருவாக்க உதவியவள் என்ற முறையில், அதில் மறைக்கப்பட்ட ஓட்டைகளை கலினி நன்கு அறிவாள். அவள் கடவுளிடம் மன்னிப்பு கேட்கவில்லை; மாறாக, அந்த நூலில் இடம் பெறாத மக்களிடம், பெயர்கள் குறிக்கப்படாத வீரர்களிடம், குரல்கள் நசுக்கப்பட்ட அந்தப் பூர்வகுடிகளிடம் மனதார மன்னிப்பு கேட்டாள். அவளால் முழு வரலாற்றையும் மாற்ற முடியாமல் போயிருக்கலாம்; அதிகாரத்திற்கு எதிராக முழு உண்மையை நிலைநாட்ட முடியாமல் போயிருக்கலாம். ஆனால், உண்மையை முழுமையாகத் திரிப்பதற்கும் அவள் சம்மதிக்கவில்லை. வரலாறு என்பது வாளால் மட்டும் எழுதப்படுவதில்லை; அது வார்த்தைகளால் வடிவமைக்கப்படுகிறது. சிலரை நாயகர்களாகச் சித்திரிக்கவும், சிலரைச் சிறுமைப்படுத்தவும், சிலரை வரலாற்றிலிருந்தே நீக்கவும் சொற்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. கலினி அந்த ஓலைச்சுவடிகளைத் தொட்டு, தன் கண்ணீரால் அந்த மௌனத்திற்கு அஞ்சலி செலுத்தினாள். வரலாற்றுத் தரவுகள் (Historical Context): முழுமையற்ற வரலாறு (Selective History): இலங்கையின் ஆதி வரலாறான 'தீபவம்சம்' மற்றும் 'மகாவம்சம்' போன்றவை பௌத்த மதத்தின் மேன்மையையும், ஒரு குறிப்பிட்ட வம்சத்தின் வெற்றியையும் நிலைநாட்ட எழுதப்பட்டவை. இதில் பூர்வகுடிகளான இயக்கர் மற்றும் நாகர்களின் (ஆதித் தமிழர்களின் முன்னோடிகள்) வாழ்வியல் முறைகள் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டன . வாய்மொழி மரபு vs எழுத்து மரபு: எழுதப்பட்ட வரலாறுகள் அதிகார மையங்களைச் சார்ந்து இருந்தபோது, உண்மையான வரலாறு நாட்டுப்புறப் பாடல்கள் (Ballads) மற்றும் வாய்மொழி மரபுகள் வழியாகவே மக்களிடையே தங்கியிருந்தது . மொழிக் கலப்பு: கி.மு. 3-ஆம் நூற்றாண்டு வாக்கில், பாளி மொழியில் இருந்த மத நூல்கள் ஹெல (Elu) மொழியில் மொழிபெயர்க்கப்பட்டபோது, பல தமிழ் மற்றும் ஆதி இடப்பெயர்கள் சமஸ்கிருதமயமாக்கப்பட்டன . மன்னிப்பு மற்றும் மனசாட்சி: வரலாற்றை எழுதிய பல அறிஞர்கள் (Scribes), தாங்கள் அரசவைக்குக் கட்டுப்பட்டு உண்மையை மறைக்க வேண்டியிருந்ததை மறைமுகமான குறியீடுகள் மூலம் தங்கள் பதிவுகளில் உணர்த்தியுள்ளனர். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] அத்தியாயம் 7 தொடரும் துளி/DROP: 2123 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 6 https://www.facebook.com/groups/978753388866632/posts/34603845805930625/?
-
சிகாடா வைரஸ்; மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா; அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
23 நாடுகளில் பரவியுள்ளது புதிய கொவிட் திரிபு ‘சிக்காடா’ வைரஸ் Published By: Digital Desk 3 30 Mar, 2026 | 03:28 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) கொரோனா வைரஸின் உருமாறிய புதிய துணைத் திரிபான BA.3.2, தற்போது அமெரிக்கா உட்பட உலகின் 23 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்குப் பொதுவாக ‘சிக்காடா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரிபு அதன் அசாதாரணமான மரபணு மாற்றங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டிப் பரவும் திறன் காரணமாக உலக சுகாதார ஸ்தாபனம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலத்திற்கு ஒருமுறை நிலத்திலிருந்து வெளியே வரும் 'சிக்காடா' பூச்சிகளைப் போலவே, இந்த வைரஸும் நீண்ட காலம் கண்டறியப்படாமல் மறைந்திருந்து, திடீரென மீண்டும் வெளிப்பட்டதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது முதன்முதலில் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் இதனுடன் தொடர்புடைய முதல் பாதிப்பு 2025 ஜூன் மாதம் பதிவாகியுள்ளது. ஆராய்ச்சியாளர்களைப் பொறுத்தவரை, இந்தத் திரிபு 70 முதல் 75 வரையிலான மரபணு மாற்றங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, மனித உடலுக்குள் வைரஸ் ஊடுருவ உதவும் 'ஸ்பைக் புரோட்டீன்' பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தி வந்த 'JN.1' திரிபிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதாகக் கருதப்படுகிறது. இதுவரை கிடைத்துள்ள தரவுகளின்படி, 'சிக்காடா' திரிபு தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. ஓமிக்ரான் வகையைப் போன்றே இதுவும் மென்மையான அறிகுறிகளையே கொண்டுள்ளது. இருமல் மற்றும் தொண்டை வலி, சோர்வு மற்றும் உடல் வலி, மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல், மிதமான காய்ச்சல், அரிதாக வாசனை மற்றும் சுவை இழப்பு, இரவு நேரங்களில் வியர்த்தல் போன்ற அறிகுறிகளையே கொண்டுள்ளது. இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியைச் சற்றே ஏமாற்றும் திறன் கொண்டிருந்தாலும், தற்போதுள்ள தடுப்பூசிகள் தீவிரமான பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளிலிருந்து பாதுகாப்பை வழங்கும் என்று நிபுணர்கள் உறுதியளிக்கின்றனர். https://www.virakesari.lk/article/242317
-
"இரத்தக்கறை படிந்த கைகளுடன் செய்யும் பிரார்த்தனையை கடவுள் கேட்கமாட்டார்": போர் தொடுக்கும் தலைவர்களுக்கு பாப்பரசர் லியோ கடும் எச்சரிக்கை!
இவர் சொல்வதின் படி இயேசுவின் 2ம் வருகைக்கு இடம் இல்லை. நஞ்சுகிருமிகளின் அமெரிக்கா. இஸ்ரேல், மேற்கின் ஒரு நோக்கம் யேசுவின் 2ம் வருகைக்குக்கு பூமியை தயார் செய்வது. அதன்னால், இவர் நஞ்சுகிருமிகளின் நோக்கத்துக்கு எதிரானவர் ஆகவே, இவரை போட்டு தள்ளுவது யார்? ஹாமெனியை போட்டு தள்ளியது சரி என்று இங்கே வாதிட்டவவர்களும், அவர்களின் அபிமான அமெரிக்கா. இஸ்ரேல், மேற்கு (சரி என்றே வாதிட்டது) இனி, மேட்ற்கு , us, இஸ்ரேல் எந்த தலைவரும் நிம்மதியாக இருக்க முடியாது, இதை ருசியா பாவிக்கும். வேறு நாடுகளும் பாவிக்கும்.
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
'பேட்டிங் வரிசை பிரமிப்பு தந்தாலும் கவலை தரும் ஒரு பலவீனம்' - சிஎஸ்கே ஒரு பார்வை பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் வித்யுத் சிவராமகிருஷ்ணன் சிஎஸ்கே முன்னாள் வீரர் 30 மார்ச் 2026, 07:45 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இந்த ஆண்டுக்கான டிரேட், ஏலம் எல்லாமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக அமைந்தது என்று நினைக்கிறேன். இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையைத் தனி ஆளாக வென்று கொடுத்த சஞ்சு சாம்சன் அணியில் இணைந்திருப்பது பெரும் பலம். சாம்சன், ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, டெவால் பிரெவிஸ் என சூப்பர் கிங்ஸின் பேட்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது. பந்துவீச்சும் ஓரளவு நன்றாகவே இருக்கிறது. 2025 சீசனுக்கான ஏலத்தில் எமோஷனலாக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒரே மாதிரியான பல வீரர்களை அவர்கள் வாங்கியிருந்தார்கள். தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர் என அவர்கள் அனைவருமே ஒரேபோல் ஆடுபவர்கள். அங்கு வெரைட்டியே இல்லாமல் இருந்தது. அதன்பிறகு வந்த மாத்ரே, உர்வில் பட்டேல், பிரெவிஸ் போன்ற மாற்றுவீரர்களாக சிறப்பாக அணியில் இணைத்தனர். அதுபோக இம்முறை இரு இளம் நட்சத்திரங்கள் கார்த்திக் ஷர்மா, பிரஷாந்த் வீர் ஆகியோரை வாங்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது கடந்த சீசன் இருந்த அணியை விட இந்த சீசன் அணி பலமானதாக இருக்கிறது. ரவீந்திர ஜடேஜா இல்லாதது நிச்சயம் பெரிய பின்னடைவு தான். ஆனால், அகீல் ஹொசைன் அந்த இடத்துக்கு சிறந்த மாற்றாக இருப்பார். அவரால் பவர்பிளேவில் சிறப்பாகப் பந்துவீச முடியும். கடினமான ஓவர்களை அவரால் சிறப்பாக வீசமுடியும். திறமையான வீரர் அவர். அதனால் அவரை குறைத்து மதிப்பிட்டுவிடவே கூடாது. ஒட்டுமொத்தமாக கடந்த சீசனை விட இந்த முறை நல்லதொரு அணியை சிஎஸ்கே கட்டமைத்திருக்கிறது. பலமான பேட்டிங் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டிரேட் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருக்கிறார் (கோப்புப் படம்) சூப்பர் கிங்ஸின் மிகப் பெரிய பலம் அவர்களின் பேட்டிங் தான். சஞ்சு சாம்சன், ஷிவம் துபே என இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றிய இரு பேட்டர்கள் இருக்கிறார்கள். ஐபிஎல் தொடங்கும்போது இருவருமே சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள். சாம்சன் வந்திருப்பது சீரான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைய வழிவகுக்கும். துபேவின் சமீபத்திய ஃபார்ம் சிறப்பாக இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் அவர் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த டி20 உலகக் கோப்பையில் ஃபினிஷராகவும் அவர் நன்கு விளையாடினார். வேகப்பந்துவீச்சுக்கு எதிராகவும் தன்னால் அடித்து ஆட முடியும் என்று காட்டினார். அதனால் அவர் சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கில் ஒரு முக்கியமான அங்கமாக விளங்குவார். அடுத்ததாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சீரான செயல்பாட்டைக் கொடுப்பார். தற்போது ஓப்பனராக விளையாட போவதாக அவர் அறிவித்திருக்கிறார். சூப்பர் கிங்ஸ் தங்களுடைய அனுபவ ஓப்பனர்கள் அணுகுமுறையை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. நிலையான ஒரு வீரர் ஆடுவது மறுபக்கம் சாம்சனுக்கும் நெருக்கடியைக் குறைக்கும். டெவால் பிரெவிஸ் மிடில் ஓவர்களில் பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவர். சுழல், வேகம் இரண்டுக்கு எதிராகவும் அதிரடி காட்டக்கூடியவர். சாம்சன், கெய்க்வாட், மாத்ரே, பிரெவிஸ், துபே என இந்த டாப் 5-ஐ பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது. சிலபல ஆண்டுகளாக சூப்பர் கிங்ஸ் அணி 180+ ஸ்கோர்களை சேஸ் செய்ய தடுமாறியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒரு போட்டியில் 180 ரன்களை சேஸ் செய்தது. முழுமையான அதிரடி அணுகுமுறைக்கு ஏற்ற அணியாக சூப்பர் கிங்ஸ் இருக்கவில்லை. ஆனால், இம்முறை இந்த பேட்டிங் படை அதையெல்லாம் மாற்றும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் கிடைக்காத பெரும் நம்பிக்கையை அது கொடுக்கிறது. முதல் போட்டியில் பிரெவிஸ் ஆடமாட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. அவர் விரைவில் வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதைப் பற்றி வருத்தப்படத் தேவையில்லை என்று நினைக்கிறேன். பலவீனமான பந்துவீச்சு பட மூலாதாரம்,Getty Images சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல ஏரியாக்கள் சரியாக சிறப்பாகவே இருக்கின்றன. பலவீனம் என்று குறிப்பிட வேண்டுமெனில் அவர்களின் டெத் ஓவர் பந்துவீச்சை குறிப்பிடலாம். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லும்படியான பௌலர் இந்த அணியில் இல்லை. கலீல் அஹமது எப்படியும் நிச்சயம் டெத் ஓவரில் பந்துவீசுவார். ஆனால், வேறு யார் அங்கு பந்துவீசுவார்கள் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. மேட் ஹென்றி, ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ் என யார் பந்துவீசப் போகிறார்கள் என்பதே கேள்விக்குறி. அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்றும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. இது ஒருவகையில் அந்த அணியைப் பாதிக்கலாம். இந்நிலையில் பெரிதும் நம்பப்பட்ட பௌலரான நாதன் எல்லிஸ் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறியிருக்கிறார். இது பந்துவீச்சை இன்னும் பலவீனமாக்கியிருக்கிறது. அவருடைய இடத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் ஸ்பென்சர் ஜான்சனும் முழு ஃபிட்னஸோடு இல்லை என்று தெரிகிறது. சொல்லப்போனால், சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சன்ரைசர்ஸ் பாணியைக் கடைபிடித்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. 'பந்துவீச்சு அதிக ரன் போய்விடலாம். பேட்டிங்கில் 20-30 ரன்கள் அதிகமாக எடுத்துவிடலாம்' என்று நினைத்துவிட்டார்களோ என்று நினைக்கிறேன். அதேசமயம் சிஎஸ்கே-வின் பேட்டிங் பலப்பட்டிருக்கும் விதம், அந்த பந்துவீச்சில் இருக்கும் குறை பெரிதாகத் தெரியாமல் பார்த்துக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். பிளெமிங் மற்றும் அவரது பயிற்சியாளர் குழு இதை சரியாகக் கையாண்டுவிடுவார்கள் என நம்பலாம். கேப்டன் ருதுராஜுக்கு முக்கியமான சீசன் பட மூலாதாரம்,Getty Images இந்த சீசன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு மிகவும் முக்கியமானது. தற்போது இரண்டாவது முழுமையான சீசன் என்பதால் நிச்சயம் எதிர்பார்ப்புகள் இருக்கும். அவரது முடிவுகள் அதிகம் கவனிக்கப்படும். அவர் தலைமைப் பண்பில் முன்னேற்றம் காண நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அவர் தன் தவறுகளில் இருந்து நிச்சயம் பாடம் கற்றுக்கொள்வார். தோனியே, "அவராகவே கற்றுக்கொள்ள விட்டுவிட வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார். அது நிச்சயம் இந்த சீசனில் நடக்கும். என்ன, கடந்த ஆண்டு அவருக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது. காயமடைந்து பாதியில் வெளியேறிவிட்டார். இந்த முறை அந்த அதிர்ஷ்டம் அவர் வசம் இருக்கும் என்று நம்புகிறேன். கடந்த ஆண்டு அவருக்கு ஒரு தரமான அணியும் கிடைக்கவில்லை. ஒரு அணி எவ்வளவு நன்றாக இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் கேப்டனின் செயல்பாடும் இருக்கும். அது அவருக்கு கடந்த சீசனில் அமையவில்லை. ஆனால், இப்போது நல்லதொரு அணி அவருக்குக் கிடைத்திருக்கிறது. அதனால், நிச்சயம் அவர் மீது எதிர்பார்ப்பு இருக்கும். அதை அவரால் பூர்த்தி செய்ய முடியும் என்றும் நான் நம்புகிறேன். தோனியின் பங்கு பட மூலாதாரம்,Getty Images மஹேந்திர சிங் தோனி காயம் காரணமாக முதல் இரு வாரங்கள் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது துரதிருஷ்டவசமான விஷயம். அதேசமயம் இது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. இந்த புதிய சீசன் மஹேந்திர சிங் தோனியின் பங்கு அவ்வளவுதானா என்ற விவாதங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், அவருடைய பங்களிப்பு நிச்சயமாக முடிந்துவிடவில்லை. என்னைப் பொறுத்தவரை, காயத்திலிருந்து திரும்பியதும் தோனி நிச்சயம் விளையாடுவார். ஆனால், எல்லா போட்டிகளிலும் ஆடுவாரா என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சாம்சனும் இருப்பதால் அவரும் கீப்பிங் செய்யக்கூடும். இங்குதான், தோனியை கீப்பராகப் பயன்படுத்தப் போகிறார்களா இல்லை அவரை இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்தப் போகிறார்களா என்று பார்க்க வேண்டும். ஆனால், ஒரு விஷயம் நிச்சயம் - அவர் கண்டிப்பாக விளையாடுவார். இங்கு 'சிஎஸ்கே ஹை பெர்ஃபாமன்ஸ் மையத்தில்' நடந்த பயிற்சி முகாமுக்கு முன்னதாக அவர் ராஞ்சியிலேயே பயிற்சியில் ஈடுபட்டார். அங்கு அவர் தீவிரமாகப் பயிற்சி செய்தார். விளையாடப் போவதில்லை என்றால், அவர் அப்படி பயிற்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லையே! அவர் இந்த சீசன் களமிறங்குவது நிச்சயம். அதேசமயம், களத்துக்குள் இருப்பதை விட தோனியின் தாக்கம் களத்துக்கு வெளியே தான் இம்முறை அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். பிரஷாந்த் வீர், கார்த்திக் ஷர்மா, ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் வீரர்கள் தோனியோடு விளையாடும்போது அது அவர்களுக்கு பெரிய வகையில் உதவும். அவர்களால் நிறைய கற்றுக்கொள்ள முடியும். தோனியின் தலைமையில் ஐபிஎல் ஆடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அவரைப் போல் இந்த ஆட்டத்தை புரிந்துகொள்ளக்கூடிய, கணிக்கக்கூடிய வீரர் கிடையாது. அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால், பேசினால் அதில் நிறைய அர்த்தம் இருக்கும். அதனால்தான், ஒரு 'வழிகாட்டியாக' இந்த அணியில் தோனி பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நான் நினைக்கிறேன். இந்த சீசனுக்கான கணிப்பு தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிளே ஆஃப் வாய்ப்பைத் தவறவிட்ட சூப்பர் கிங்ஸ், இம்முறை அதை உடைத்து நிச்சயமாக டாப் 4 இடத்தை உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன். இந்த ஆண்டு நிறைய இளம் வீரர்களில் அந்த அணி நிர்வாகம் முதலீடு செய்திருக்கிறது. கடந்த சீசனின் கடைசி கட்டத்தில் இப்படியான இளம் வீரர்கள் தான் நம்பிக்கை கொடுத்தார்கள். அப்படி தரமான வீரர்களை நிறைய அணிக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். அது நிச்சயம் அணிக்குப் புதிய ரத்தம் பாய்ச்சியிருக்கிறது. மாத்ரே, பிரெவிஸ், பிரஷாந்த் வீர், கார்த்திக் ஷர்மா, உர்வில் போன்ற இளம் வீரர்கள் அணியின் 'ஹிட்டிங்கை' பன்மடங்கு பலப்படுத்தியிருக்கிறார்கள். அதேசமயம் பல அனுபவ வீரர்களையும் அணிக்குள் புதிதாகக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதிகம் கவனம் ஈர்க்காத ராகுல் சஹார், முகேஷ் சௌத்ரி போன்றவர்கள் ஐபிஎல் அனுபவம் கொண்டவர்கள். அகீல் ஹொசைன் அப்படித்தான். அவர் உலகின் பல்வேறு டி20 லீக்குகளில் சோபித்திருக்கிறார். அதனால் அவர் நிச்சயம் இந்த சீசன் சென்னை அணியின் மிகமுக்கிய வீரர்களுள் ஒருவராக விளங்குவார். முன்பே சொன்னதுதான், இந்த சீசனின் மிகச் சிறந்த பேட்டிங் யூனிட்களுள் ஒன்றை சிஎஸ்கே கொண்டிருக்கிறது. ஆனால், பந்துவீச்சு தான் சற்று பிரச்னையாக இருக்கிறது. குறிப்பாக டெத் பௌலிங். அதை சரியாகக் கையாள முடிந்தால் சிஎஸ்கே இந்த சீசனில் வெகுதூரம் செல்லலாம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே நிச்சயம் முன்னேறும். அதற்கு மேல் அந்தந்த நாளில் அவர்களுடைய செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது அவர்கள் முடிவைத் தீர்மானிக்கும். (இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல்19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgldx2kk1dro
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
அமெரிக்கா: தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை பயங்கரவாத முத்திரை குத்தி இறுதிவரைக்கும் தமிழின அழிப்பிற்காக துணை நின்ற, இந்தியாவுக்கு நிகரான நாடு. ஈரான்: இறுதி யுத்த காலத்தில் கிளஸ்ரர் குண்டுகளை இலங்கைக்கு விற்ற நாடு. ரஷ்யாவும் ஈரானுமே இலங்கைக்கு இவ்வகையான குண்டுகளை கொடுத்தது. இருவரும் அடிபடும் போது எந்த தரப்பு தோற்றாலும், எந்தத் தரப்புக்கு இழப்புகள் அதிகம் ஏற்பட்டாலும் மகிழ்ச்சி தான். ஆனால் உந்த காஸ் (gas / petrol) விலைதான் விசரை ஏற்றுது
-
இஷாரா செவ்வந்திக்கு சிஐடி பிரிவுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!
செல்லாது செல்லாது! இவண் அகில உலக செவ்வந்தி ரசிக மன்றம் சார்பாக வெள்ளை மாளிகையில் இருந்து.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
நன்றி.
-
இஷாரா செவ்வந்திக்கு சிஐடி பிரிவுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!
ஹாப்பி பேர்த்டே செவ்வந்தி. 😂 🤣
-
இஷாரா செவ்வந்திக்கு சிஐடி பிரிவுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!
செவ்வந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இப்படிக்கு செயலாளர் க.செ.ர.ச
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அது 2 லட்சம் பேர் அண்ணை.
-
ஏப்ரல் முதல் மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி
மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி Mar 30, 2026 - 02:15 PM 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிப்பதற்குப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், நுகர்வோர் பயன்படுத்தும் மின்சார அலகுகளின் அடிப்படையில் இம்முறை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் சதவீதம் மாறுபட்டுள்ளது. இந்த மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கு அமைய, 13.56% மின்சாரக் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், தற்போதுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு அலகுகளின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களின் கீழ் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி 0 - 30 வரையான அலகுகளுக்கு 4.3 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது. இதற்கமைய 15 ரூபாய் மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்படுகின்றது. மாதாந்தம் 45 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 61 - 91 அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மாதாந்த 120 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 91 - 120 அலகுகளுக்கு மின்சாரக் கட்டணம் 7.1% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாதக் கட்டணம் 420 ரூபாவினால் உயரும். 180 அலகுகளுக்கு மேல் இந்த கட்டத்திற்கு அதிகப்படியான கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், மின்சாரக் கட்டணம் 25% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மதத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான சலுகை: மாதாந்த மின்சார நுகர்வு 180 அலகுகளுக்குக் குறைவாகக் காணப்படும் மதத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், அதே பிரிவில் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மாத்திரம் 9.6% கட்டண உயர்வை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmncxysd60007356pqpyrrftt இந்தக் கட்டண நிர்ணயமானது, உச்ச நேரங்களில் மின்சாரத் தேவையை நிர்வகிப்பதற்கு மின்சார விநியோக நிறுவனங்களையும் மின்சார நுகர்வோரையும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, எதிர்காலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாட்களிலும் தொழிற்சாலைகள், விடுதிகள் மற்றும் பொதுப் பயன்பாட்டுத் துறைகளுக்குக் குறைந்த மின்சாரக் கட்டண முறையை அறிமுகப்படுத்துவதிலும் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது. இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவு தொடர்பாக ஒரு பொது கலந்தாய்வை நடத்தியதுடன், சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் தகவலுக்கு, திரு ஜயசூரியன் (உதவி பணிப்பாளர்- பெரு நிறுவன தொடர்பாடல் பிரிவு) அவர்களை 0770 399 119 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.
-
'உணவு, மருந்துகள், ஸ்மார்ட் ஃபோன்கள்' - ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதால் எதெல்லாம் விலை உயரும்?
எல்லாமே விலை உயரும். ஏனெனில், எல்லாமே இப்போது வழங்கல் சங்கிலி வழியாகவே கிடைப்பது. அதன் உயிர் நாடி போக்குவரத்து, அதன் உயிர்நாடி மசகு / சுவடு எண்ணெய் / எரிபொருள். இது என்ன பூனை ஒரே நேரத்தில் இறந்தும் / உயிரோடும் இருக்கிறது என்ற (Schrodinger இன் ) என்ற ((பௌதிக) விஞ்ஞானமா? இதில் விலை உயர்வதற்கான தாக்கத்திரி பற்றாவைக்கப்பட்டு வவிட்டது ஏனெனில், மத்திய கிழக்கில் இருந்த்து சராசரியான சரக்கு கப்பல் பிரயாண காலம் 3-4 கிழமைகள். இது முறிந்து விட்டது, மீண்டும் ஓரளவு சுமுக நிலைக்கு திரும்ப (இப்போதைய நிலையில் ) ஆக குறைந்தது 8-12 கிழமைகள் தேவை. ஏனெனில், (எரிபொருள், இரசாயன) உற்பத்தி / தொழிற்சசாலைகளை மீண்டும் முன்பு இருந்த உடற்த்தி கொள்ளளவுக்கு கொண்டுவர ஆக குறைந்தது , 4-8 கிழமைகள் தேவை.
-
சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் – 10 அமெரிக்கப் படையினர் காயம்
- மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் Mar 30, 2026 - 09:01 AM தற்போதைய சூழ்நிலையில் வலுசக்தியை வினைத்திறனாகவும் உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டும் என இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார தெரிவித்துள்ளார். மாலை 5 மணி முதல் அதிகாலை வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பங்களிப்பு இந்த நேரத்தில் அவசியமானது என்றும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எரிபொருட்களை எரிப்பதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அதிக செலவு ஏற்படும் என்றும், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் மின்சார முகாமைத்துவத்தை மேற்கொள்வதானது மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதுடன், எரிபொருள் எரிப்பதையும் குறைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். பொதுமக்கள் எரிசக்தி வினைத்திறன் கொண்ட உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு முன்வர வேண்டும் எனத் தெரிவித்த அவர், நிலையான எரிசக்தி அதிகார சபையினால் தற்போது ஒரு முத்திரை முறைமை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் LED மின்குமிழ்கள், குளிரூட்டிகள் மற்றும் ஏசி இயந்திரங்களைக் கொள்வனவு செய்யும் போது எரிசக்தி வினைத்திறன் மிக்க உபகரணங்களைத் தேர்வு செய்ய முடியும் என்றும் கூறினார். அதேபோல், எரிசக்தி வினைத்திறன் குறைந்த உபகரணங்கள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான சட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், குறுகிய காலத்தில் எரிசக்தியை வினைத்திறனாக்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய நிலையில் நாட்டுக்கு மசகு எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனால் மின்சார உற்பத்திக்காக டீசல் பயன்படுத்தப்படுவதால் மின் உற்பத்திக்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பகல் வேளையில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், பொதுமக்கள் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கான நேரத்தை மாற்றியமைத்து அவற்றை பகல் பொழுதில் செய்துகொண்டால், மின் உற்பத்திச் செலவைக் குறைப்பதுடன் மக்களின் மின்சாரக் கட்டணத்தையும் குறைத்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmncmrpwd0007356p0fkc258o- அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பில் ஈரானின் வௌிப்படுத்தல்
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
சீமான் தனது பரப்புரையில் வழமைபோல் அனைவருக்கும் அரசவேலை என அடித்து விட… கூட்டத்தில் இருந்தே ஒருவர் எழும்பி, இந்த ஊரிலேயே 2000 வேலை தேடி வெளி ஊர் போறாங்க அனைவருக்கும் அரச வேலை எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்புகிறார். சீமான் பதில் 1: நீ இப்படி போய் திமுக கூட்டத்தில் கேட்பியா பதில்2: குடுப்பேன், குடுப்பேன் (எப்படி என்பதுதான் கேள்வி) கேள்வி கேட்டவரை சீமான் கண் முன்பே நாதக குண்டர்கள் அடக்கி வெளியேற்றுகிறார்கள். பொலிஸ் வந்து அழைத்து போகிறது. #அன்பான சர்வாதிகாரி- அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பில் ஈரானின் வௌிப்படுத்தல்
போரில் அடைய முடியாத இலக்குகளை 15 அம்ச பட்டியலின் ஊடாக அடைய முயற்சிக்கிறது அமெரிக்கா ; “சமரசத்துக்கோ சரணடைதலுக்கோ வாய்ப்பில்லை" - ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் 30 Mar, 2026 | 12:34 PM “அமெரிக்கா, அது விரும்பியவற்றை, போரின் ஊடாக அடைய முடியாத நிலையில், அதன் இலக்குகளை 15 அம்ச நிபந்தனைப் பட்டியலில் முன்வைத்து, அவற்றை தன் ராஜதந்திரத்தின் மூலம் அடைய முயற்சிக்கிறது என ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார். “அமெரிக்கா ஒருபுறம் பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுத்துக்கொண்டு, மறுபுறம் இரகசியமாக தரைவழித் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளது. அமெரிக்க வீரர்கள் ஈரான் மண்ணில் தரை இறங்கவிருப்பதை எங்களது படையினர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களை அழிக்கத் தயாராக உள்ளோம்” என்றும் அவர் சூளுரைக்கிறார். மேலும், ஈரானுடனான மோதல் ஒரு நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளது என்றும் இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளுக்கு அமைய சரணடையவோ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவோ ஈரான் முன்வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தத் தொடங்கிய நாள் முதல் ஈரானில் அரசாங்கத்துக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய பொது முழக்கங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஈரானின் இராணுவ நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இனி சமரசம் இல்லை, சரணடைதலும் இல்லை, அமெரிக்காவுக்கு எதிராக போராடு” என்ற பேரணியினரின் முழக்கத்தின் வாயிலாக, அவர்கள் நாட்டின் ஏவுகணைகளுக்கு வலிமை சேர்த்திருக்கிறார்கள்” என்றும் சபாநாயகர் கூறியுள்ளார். பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தத் தொடங்கியதிலிருந்து ஈரானும் பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், அமெரிக்கா ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 15 அம்ச நிபந்தனைகளை பட்டியலிட்டு அமெரிக்கா அமைதி ஒப்பந்தத்தை முன்வைத்தது. அதற்காக 10 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் என அறிவித்தது. அதேவேளை இரு தரப்புக்கும் இடையே தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன. பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்து வரும் அதே சந்தர்ப்பத்தில் மேற்காசியாவில் அமெரிக்க படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் அமெரிக்கா ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது என்ற தகவல் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்தத் திட்டத்தையும் இராணுவ நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் எதற்கும் அடிபணியப் போவதில்லை என்றும் ஈரான் பதிலளித்துள்ளது. https://www.virakesari.lk/article/242294- யாழ்களத்தை வாழ்த்தும் ஒரு உறவு
இயற்கையாக தேனீக்கள் கூடுகட்டி சேகரிக்கும் தேன் கெடாது. அந்தத் தேனில் சேமிக்கப்படும் எந்தப் பொருட்களும் கெடாது. - மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.