Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Today
  2. சொந்தக்கட்சிக்காரனுக்கே இப்படிச் செய்யும் திமுக மாற்றுக்கட்சிக்காரனுக்கு அதுவும் திமுகவை கடுமையாக எதிர்க்கும் சீமானுக்கு எதிராக என்ன செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆட்சியில் இருக்கும் போது வழக்குகளைப் போட்டு அடக்கப் பார்க்கும் ஊழல்வழக்குககைளப் போட முடியாதவர்கள் மேல் பாலியல் வழக்கைச் சோடித்து அவதூறைப் பரப்பி அடக்கப்பார்க்கும் . சவுக்கு சங்கரைக் கூப்பில்வைத்த தீமுக தேர்தல் தேpதி அறிவித்தவுடன் சவுக்கு மீண்டும் வருகிறார் என்பதிலிருந்து புரிகிறது.
  3. வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து! 14 Mar 2026, 6:43 PM கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஞானபீட அமைப்பு வைரமுத்துவுக்கு ஞான பீட விருதை இன்று அறிவித்துள்ளது. சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழிக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதற்கு முன்பு தமிழில் 1975-ல் அகிலனுக்கும், 2002-ல் ஜெயகாந்தனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து வைரமுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு ஞானபீட விருது கிடைத்திருக்கிறது. இது எனக்குக் கிடைத்த விருதைவிட, தமிழ் மொழிக்குக் கிடைத்த மகுடமாகவே கருதுகிறேன்” என்றார். கடந்த காலங்களில் ஞானபீட விருதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது குறித்துத் தான் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததை குறிப்பிட்டு பேசிய வைரமுத்து, “தகுதியுள்ள படைப்புகள் இருந்தும் காலதாமதம் ஆனது வருத்தமளித்தாலும், இப்போது வழங்கப்பட்டிருப்பது நீதி நிலைநாட்டப்பட்டதாக உணர்கிறேன். இந்த விருது என் பேனாவுக்கு இன்னும் கூடுதல் பொறுப்பைத் தந்திருக்கிறது. வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே என் எழுத்துக்கள் இயங்கும்” என்றார். இந்நிலையில் வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். ” தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது! காலையில்தான் கவிப்பேரரசைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது! தமிழில் இதுவரையில் அகிலனும் ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கவிப்பேரரசை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று கவிப்பேரரசு வைரமுத்துவை வாழ்த்துகிறேன்!” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே வைரமுத்து 7 முறை தேசிய விருதுகளையும், ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதையும், மற்றும் மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/jnanpith-award-for-vairamuthu/
  4. https://web.facebook.com/photo/?fbid=26386733690956285&set=pcb.26386735687622752 காலில் மண்படாமல் சமயகிரியை செய்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்.
  5. சண்டை தொடங்கிய நேரம் எங்கேயும் எப்போதும் பறப்போம் அடிப்போம் என்று அமெரிக்கா கூறியதே பொய்யா கோப்பாலு.
  6. கடந்த வருடம் சீனா சோளம் எதையும் வாங்கவில்லை என்றும் இதனால் பல பில்லியன் நஸ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார்கள்.
  7. கட்சிகள், வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் என்ன? வாக்காளர் அறிய வேண்டிய முக்கிய விஷயங்கள் பட மூலாதாரம்,Getty Images 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் (2021-ஆண்டு கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடனேயே தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதுபற்றி அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் எந்த அளவுக்கு அறிந்து கொள்வது முக்கியமோ, அதை விட முக்கியம், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக வாக்காளர்கள் அறிந்து கொள்வது அவசியம். ஒவ்வொரு முறையும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதாக நீங்கள் செய்திகளில் படித்திருப்பீர்கள். இந்த விதிகள் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு மட்டுமல்லாது தனிப்பட்ட வேட்பாளர்களுக்கும் பொருந்தும். இந்திய தேர்தல் ஆணையத்தால் அவ்வாறு வகுக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ன என்பதை இங்கே பட்டியலிடுகிறோம். தேர்தல் நடத்தை விதிகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்வது, உங்கள் தொகுதியில் அல்லது மாநிலத்தில் கட்சிகளோ, வேட்பாளர்களோ விதி மீறலில் ஈடுபட்டால் அவற்றைக் கண்டறிய உதவலாம். பொது நடத்தை விதிகள் 1. சாதி, மத, சமூக அல்லது மொழி ரீதியான பிரச்னைகளை உருவாக்கவோ, ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளை அதிகப்படுத்தவோ காரணமாகும் செயல்களில் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது. 2. பிற அரசியல் கட்சிகளை விமர்சிக்கும்போது அவர்களது கொள்கைகள், திட்டங்கள், கடந்த கால நடவடிக்கைகள் ஆகியவற்றையே விமர்சிக்க வேண்டும். வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்கக் கூடாது. 3. தங்களுக்கு எதிரான நிலைப்பாடு உடைய கட்சிகள் அல்லது அந்த கட்சியை சார்ந்தவர்கள் மீதான சரி பார்க்கப்படாத, உறுதிசெய்யப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது; புகார்களைத் திரித்து கூறுவதையும் தவிர்க்க வேண்டும். 4. சாதி அல்லது மத அடிப்படையில் வாக்குகளை கோரக்கூடாது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களை தேர்தல் பரப்புரைக்காகப் பயன்படுத்தக்கூடாது. 5. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, வாக்காளர்களை உணர்வுப்பூர்வமாக தூண்டிவிடுவது, ஆள்மாறாட்டம் செய்வது, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் வாக்கு சேகரிப்பது, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வது போன்ற 'ஊழல் நடவடிக்கைகளை' கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும். 6. தேர்தல் காலங்களில் ஒவ்வொரு தனி மனிதரின், அமைதியான மற்றும் தொந்தரவுக்கு உட்படுத்தப்படாத வீட்டு வாழ்க்கை மதிக்கப்பட வேண்டும். அரசியலில் ஈடுபட்டுள்ள ஒரு தனிநபரின் வீடு முன்பாக போராட்டம் நடத்துவது, முற்றுகை இடுவது ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது. 7. ஓர் இடத்திலோ கட்டடத்திலோ சுற்றுச்சுவரிலோ அறிக்கை ஓட்டுவது, பதாகைகளைத் தொங்க விடுவது, அரசியல் கட்சி வாசகங்களை எழுதுவது, கட்சிக் கொடியைப் பறக்க விடுவது ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டால், அந்த சொத்தின் உரிமையாளரிடம் அதற்கான முறையான அனுமதியைப் பெற்று இருக்க வேண்டும். 8. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் வேறு கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களில் பேச்சு, எழுத்து மூலமாக கேள்வி எழுப்பியோ, தங்கள் கட்சியின் துண்டறிக்கை விநியோகம் செய்தோ, தொந்தரவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. 9. ஒரு கட்சி பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தை ஒட்டியுள்ள இடங்களில் இன்னொரு கட்சி பேரணி செல்வதை தவிர்க்க வேண்டும். 10. ஒரு கட்சியினர் ஒட்டிய பரப்புரை அறிக்கைகளை மற்றும் விளம்பரங்களை இன்னொரு கட்சியினர் அகற்ற அல்லது கிழிக்கக் கூடாது. பட மூலாதாரம்,Getty Images பொதுக்கூட்டங்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் 1. கட்சி அல்லது வேட்பாளர் சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடம், நேரம் ஆகியவற்றை காவல்துறையிடம் முன்னரே தெரிவிக்க வேண்டும். இது முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் காவல்துறைக்கு உதவும். 2. பொதுக்கூட்டம் நடத்த தாங்கள் தேர்வு செய்துள்ள இடத்தில் அதற்கான தடை ஏதும் உள்ளதா என்பதை கட்சி அல்லது வேட்பாளர்கள் முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும். 3. அந்தத் தடையில் இருந்து விதிவிலக்கு வேண்டும் என்றால், போதுமான நேரம் இருக்கும் போதே அதிகாரிகளிடம் அதற்கான விண்ணப்பத்தை வழங்கி, அவர்கள் அனுமதித்தால் பொதுக் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம். 4. பொதுக் கூட்டம் நடத்தும் இடத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கும், பிறவற்றுக்கும் ஏதேனும் அனுமதி அல்லது உரிமம் தேவைப்படுமானால் தொடர்புடைய அதிகாரிகளிடம் முன்கூட்டியே அதற்கான அனுமதி அல்லது உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். 5. பொதுக்கூட்டம் ஒழுங்காக நடை பெறுவதற்கு தடையாக அந்த கூட்டத்தில் இருக்கும் யாரேனும் செயல்பட்டால் அந்த கூட்டத்தை நடத்துபவர்கள் அந்த தனிநபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது; அவர்கள் காவல்துறையைத்தான் நாட வேண்டும். பேரணிகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள் 1. பேரணி தொடங்கும் மற்றும் முடியும் இடங்கள், கடந்து செல்லும் பாதை, நேரம் ஆகியவை முன்கூட்டியே முடிவு செய்யப்பட வேண்டும். பேரணி நடக்கும் நேரத்தில் மேற்கண்டவற்றில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது. 2. போதிய ஏற்பாடுகள் செய்யப்படுவதற்காக பேரணியை நடத்துபவர்கள் முன்கூட்டியே உள்ளூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 3. பேரணி கடந்து செல்லும் பாதையில் தடை ஏதும் அமலில் உள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும். 4. பேரணி செல்லும் பாதையில் போக்குவரத்து இடையூறு அல்லது தடை ஏதும் ஏற்படாமல் இருப்பதை பேரணியை நடத்துபவர்கள் முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும். 5. மிக நீளமான பாதையில் பேரணி செல்லுமானால் பேரணி செல்லும் பாதை, பகுக்கப்பட்டு போக்குவரத்து இடையூறு ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். 6. காவல்துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவதுடன் மட்டுமல்லாமல் இயன்றளவு பேரணி சாலையின் வலது பக்கமாகவே இருக்க வேண்டும். 7. ஒரே பாதையில் அல்லது ஒரே சாலையின் பகுதியில், ஒரே நேரத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர் பேரணி நடத்த திட்டமிட்டால், பேரணி செல்பவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்கொள்வதை தவிர்க்கும் நோக்கில் அதை ஏற்பாடு செய்பவர்கள் முன்கூட்டியே ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டும். 8. ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பேரணி செல்லும் இருவேறு தரப்பினர் இடையே சுமூகமான முடிவு எடுப்பதற்காக உள்ளூர் காவல்துறையின் உதவியையும் பேரணி ஏற்பாட்டாளர்கள் இயன்ற அளவில் விரைவாக நாடலாம். 9. விரும்பத்தகாத சக்திகள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ள பொருட்களை பேரணியில் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். பேரணியிபோது கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். 10. பேரணியின்போது பிற அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் தலைவர்களை உருவகிக்கும் உருவ பொம்மைகளைக் கொண்டுசெல்வது அவற்றை எரிப்பது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr45y1qz3xzo
  8. “22 மனைவிகளுக்கும் அப்படியே செய்தேன்” சுமார் 22 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த கல்யாண மன்னன் பொலிஸாடம் வசமாக சிக்கியிருக்கிறார். கணவனை இழந்த பெண்களை குறிவைத்து கல்யாண மோசடியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த நபர் மீது பொலிஸ் எடுத்த நடவடிக்கை என்ன? அவர் ஊருக்கு ஒரு மனைவி, மாவட்டத்திற்கு ஒரு மனைவி, வருடத்திற்கு ஒரு கல்யாணம் என ஹனிமூனிலேயே காலம் கடத்தியிருக்கிறார் இந்த 56 வயதான கேரளத்து கல்யாண ராமன். பொண்டாட்டிகளுக்கு போண்டா டீ வாங்கிக் கொடுக்கவே வருமானம் பத்தாது என்ற சூழலிலும், திருட்டு நகைகளைப் போட்டு அழகு பார்க்க நினைத்தவர் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் வசமாக சிக்கியது எப்படி? திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடமிருந்து 7 பவுன் தங்க சங்கிலியை பாகுலேயன் பறித்துச் சென்றுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் ஆற்றிங்கல் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். விசாரணையில், திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு பகுதியை சேர்ந்த 56 வயதான பாகுலேயன்தான் திருடியது என்பதை கண்டுபிடித்தனர். அவரை மடக்கிப்பிடித்த பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது மனைவிக்காக நகைப் பறிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். அப்படியானால் உனது மனைவியையும் விசாரிக்க வேண்டும் என பொலிஸார் கூறியுள்ளனர். அதற்கு எந்த மனைவியை விசாரிக்கப் போகிறீர்கள் என கேட்டுள்ளார். அப்படியானால், உனக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்களா? என பொலிஸார் கேட்டுள்ளனர். அதற்கு அவர் அளித்த பதிலைக் கேட்டு பொலிஸாருக்கு பொறி ஏறியிருக்கிறது. மாவட்டத்திற்கு ஒரு மனைவி என 22 மனைவிகள் தனக்கு இருப்பதாக அவர் கூற அங்கிருந்த அனைவரும் திகைத்துப் போயுள்ளனர். அதாவது பாகுலேயன் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்த பெண்கள் என கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் ஆதரவு கொடுத்திருக்கிறார். ஒரு ஊரில் சுந்தரம் என்றால், மற்றொரு ஊரில் விஜயன், வேறொரு ஊரில் பாபு என ஊருக்கு ஒரு பெயரை வைத்துக்கொண்டு தனது உருட்டு வேலையை அரங்கேற்றியிருக்கிறார். திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை மொத்தம் 22 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார். “22 மனைவிகளுக்கும் அப்படியே செய்தேன்”
  9. QR சிக்கலா? 1919க்கு அழைக்கவும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் (National Fuel Pass) ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR குறியீடு நடைமுறை, தற்போது முழுமையாக மீளமைக்கப்பட்டு தடையின்றி இயங்கி வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்கால எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக, வாகன உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. அதற்கமைய, வாகன உரிமையாளர்கள் தமக்குரிய பிரிவைத் தெரிவு செய்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பின்பற்ற வேண்டிய 3 முக்கிய படிநிலைகள்: மாற்றங்கள் இல்லாதவர்கள்: ஏற்கனவே QR குறியீடு வைத்திருப்பவர்கள் மற்றும் வாகன உரிமையிலோ அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்திலோ எவ்வித மாற்றமும் இல்லாதவர்கள், தங்களின் பழைய QR குறியீட்டையே தொடர்ந்து பயன்படுத்தி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும். QR குறியீட்டைத் தொலைத்தவர்கள்: முன்னர் பதிவு செய்து, தற்போது அந்த QR குறியீட்டைத் தொலைத்தவர்கள் அல்லது தொலைபேசியிலிருந்து நீக்கியவர்கள் (தகவல்கள் மாறாத பட்சத்தில்) மீண்டும் புதிதாகப் பதிவு செய்யத் தேவையில்லை. இணையத்தளத்தில் உள்நுழைந்து (Login), தொலைபேசிக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) மூலம் பழைய QR குறியீட்டை மீண்டும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். புதிய பதிவுகள் மற்றும் மாற்றங்கள்: இதுவரை பதிவு செய்யாதவர்கள், புதிதாக வாகனம் வாங்கியவர்கள் (உரிமை மாற்றம் செய்தவர்கள்) அல்லது முன்னர் பதிவு செய்த தொலைபேசி இலக்கத்தைத் தற்போது பயன்படுத்தாதவர்கள், இணையத்தளத்தில் புதிதாகப் பதிவு செய்தல் அவசியமாகும். எரிபொருள் நிலையங்களில் நெரிசலைக் குறைக்கவும், வினைத்திறனான சேவையை உறுதிப்படுத்தவும் இந்த அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுமாறு வாகன உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான மேலதிக விபரங்கள் அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு, அரச தகவல் மையத்தின் 1919 என்ற விசேட இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும். QR சிக்கலா? 1919க்கு அழைக்கவும்
  10. மற்றுமொன்றுக்கும் QR முறைமை வருகிறது உர விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக QR குறியீடு (QR Code) நடைமுறையை அறிமுகப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான முன்னோடித் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்தார். உரங்களை விநியோகிக்கும்போது இத்தகைய QR முறைமையைப் பின்பற்றுவது அவசியமானது என்று குறிப்பிட்ட அமைச்சர், இதற்கான முன்மொழிவுகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டில் தற்போது போதுமான அளவு உரக் கையிருப்பு உள்ளதால், உரத் தட்டுப்பாடு குறித்து அச்சமடையத் தேவையில்லை என அமைச்சர் உறுதியளித்தார். இருப்பினும், சில தனியார் நிறுவனங்களும் கறுப்புச் சந்தை வியாபாரிகளும் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட உரங்களின் விலையை அநியாயமாக உயர்த்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். தற்போது ஒரு மூட்டை உரம் 12,000 முதல் 13,000 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இது குறித்து மேலும் கூறியதாவது: "அநியாயமான முறையில் விலையை உயர்த்த வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். நுகர்வோர் விவகார அதிகார சபையும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். உரத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும்." இந்தச் சிறுபோகத்தில் உரப் பிரச்சினை பெரிய அளவில் ஏற்படாது என்றும், எதிர்வரும் மே மாதம் சீனாவிலிருந்து ஒரு தொகுதி உரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார் மற்றுமொன்றுக்கும் QR முறைமை வருகிறது
  11. தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டது - தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் நன்னடத்தை விதிகள் இன்று (15.03.2026) முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியத் தேர்தல் ஆணையம், 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்களுக்கான கீழ்க்காணும் கால அட்டவணையை அறிவித்துள்ளது: தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடும் நாள் (மற்றும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான ஆரம்ப நாள்) - 30 .03.2026 (திங்கட்கிழமை). வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் - 06.04.2026 (திங்கட்கிழமை) பெறப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நாள் - 07.04.2026 (செவ்வாய்க்கிழமை) வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் - 09.04.2026 (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நாள் - 23.04.2026 (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நாள் - 04.05.2026 (திங்கட்கிழமை) தேர்தல் நடைமுறைகள் முடிவுபெறும் நாள் - 06.05.2026 (புதன்கிழமை) மேற்கண்ட தேர்தலுக்கான தேர்தல் நன்னடத்தை விதி (Model Code of Conduct) 15.03.2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நன்னடத்தை விதி அனைத்து வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் மற்றும் மத்திய / மாநில அரசுகளுக்கும் பொருந்தும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டது - தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு
  12. மேலோட்டமாக வேகமாக பதிவுகளை நோட்டமிட்ட போது அகதி முகாமில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் ஒருவர் இணைந்தார் என விளங்க பார்த்தேன்.
  13. ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு ; பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - இந்தியா டுடே மாநாட்டில் நாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை! Published By: Digital Desk 1 15 Mar, 2026 | 02:50 PM இலங்கை கடற்பரப்புக்கு அருகில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து நாமல் ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற 'இந்தியா டுடே கான்க்ளேவ் 2026' (India Today Conclave 2026) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்ட விவகாரம் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், இலங்கையின் காலி மற்றும் கொழும்பு கடற்பரப்புக்கு அப்பால் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான IRIS Dena என்ற கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட ஈரானிய வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், உயிர் தப்பியவர்கள் காலி மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் எப்போதும் சர்வதேச வர்த்தகத்திற்கான பாதுகாப்பான வலயமாகவே கருதப்பட்டது. ஆனால், ஒரு வெளிநாட்டு போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பிராந்திய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகும். கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு' மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், இதில் இந்தியா ஒரு முக்கிய தலைமைத்துவப் பாத்திரத்தை வகிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமது கடற்பரப்புக்கு மிக அருகில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கம் முறையான விளக்கத்தைக் கோர வேண்டும் என்று அவர் கூறினார். நமது கடல் எல்லையில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளும் இறையாண்மை அதிகாரம் இலங்கைக்கு உள்ளது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். எரிபொருள் இறக்குமதி மற்றும் தொழிலாளர் பணம் அனுப்புதல் பாதிக்கப்படலாம். இலங்கைத் தேயிலையின் முக்கிய வாங்குநராக ஈரான் இருப்பதால், வர்த்தக ரீதியான பாதிப்புகள் ஏற்படும். சுற்றுலாத்துறையிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஈரானிய வீரர்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படும் செய்திகளுக்குப் பதிலளித்த அவர், இலங்கை தனது மனிதாபிமானக் கொள்கைகளின் அடிப்படையிலேயே தீர்மானங்களை எடுக்கும் என்றும், நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையை இலங்கை பின்பற்றுவதாகவும் தெரிவித்தார். அத்துடன், கூடுதலாக, கச்சத்தீவு விவகாரத்தில் 1974 ஒப்பந்தத்தின்படி அது இலங்கைக்குச் சொந்தமானது என்றும், தமிழக மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தமிழக அரசுடன் சிறந்த பேச்சுவார்த்தைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இலங்கை தனது மண்ணில் வெளிநாட்டு இராணுவ முகாம்களை ஒருபோதும் அனுமதிக்காது என்றும், அனைத்து நாடுகளுடனும் சமநிலையான உறவையே பேணுவதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/241028
  14. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கேன் மற்றும் போத்தல்களுக்கு தடை Published By: Digital Desk 3 15 Mar, 2026 | 12:08 PM நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.Geographic Reference இன்றையதினம் காலை 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் அனைத்து நிலையங்களும் இந்தத் தொழில்நுட்ப முறைமையுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செல்லுபடியாகும் கியூ.ஆர் குறியீடு இருந்தாலும், போத்தல்கள், கேன்களில் எந்த காரணம் கொண்டும் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளார். முறையாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மாத்திரமே நேரடியாக எரிபொருள் விநியோகிக்கப்படும். கியூ.ஆர் குறியீட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனத்துடன் நுகர்வோர் வருகை தர வேண்டும். வேறொருவரின் குறியீட்டைப் பயன்படுத்தியோ அல்லது மாற்று வாகனத்தில் வந்தோ எரிபொருள் பெற முயற்சித்தால், எரிபொருள் வழங்கப்போவதில்லை என உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆரம்பத்தில் சில நிலையங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்ட போதிலும், தற்போது முறைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த குமார ராஜபக்ஷ , புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் இன்னும் கியூ.ஆர் குறியீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்கு அரசாங்கம் விரைவில் தீர்வை வழங்கும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். "இந்த முறையைச் சரியாக அமுல்படுத்துவதில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்குப் பாரிய பொறுப்பு உள்ளது. பொதுமக்கள் எவ்வித அசௌகரியங்களும் இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள எமது ஊழியர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/241017
  15. பாரிஸில் அமெரிக்கா - சீனா உயர்மட்டப் பேச்சுவார்த்தை Published By: Digital Desk 3 15 Mar, 2026 | 02:15 PM அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளைச் சீர்செய்வதற்கும், எதிர்வரும் மார்ச் மாதம் இறுதியில் பீஜிங்கில் நடைபெறவுள்ள ட்ரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்பிற்குப் பாதை அமைப்பதற்கும் ஏதுவாக, இரு நாடுகளின் உயர்மட்டப் பொருளாதார அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பாரிஸில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளனர். அமெரிக்க நிதியமைச்சர் ஸ்கொட் பெசென்ட் மற்றும் சீன உப பிரதமர் ஹி லிபெங் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்கள் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் குறித்து இங்கு கலந்துரையாடப்படவுள்ளது. அமெரிக்காவின் சோயாபீன்ஸ் உட்பட விவசாயப் பொருட்களைச் சீனா கொள்வனவு செய்வது தொடர்பான இணக்கப்பாடுகள் மீளாய்வு செய்யப்படும். ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் மற்றும் அதன் விளைவாக ஹோமுஸ் நீரிணை முடக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள மசகு எண்ணெய் விலை உயர்வு குறித்து இரு தரப்பும் அவதானம் செலுத்தவுள்ளன. சீனா தனது மசகு எண்ணெய் தேவையில் 45 சதவீதத்தை இந்த நீரிணை ஊடாகவே பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அக்டோபரில் தென் கொரியாவின் பூசான் நகரில் எட்டப்பட்ட தற்காலிக வர்த்தக உடன்படிக்கையின் முன்னேற்றங்கள் தொடர்பில் இரு நாடுகளும் ஆராயவுள்ளன. சீனா இதுவரை தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ள போதிலும், விண்வெளி மற்றும் குறைக்கடத்தி துறைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக உள்ளது. https://www.virakesari.lk/article/241029
  16. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எப்போது? வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரம் பட மூலாதாரம்,ANI 15 மார்ச் 2026, 05:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. இன்று (15-03-2026) மாலை 4 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதிகளை அறிவித்தார். இதையடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி வெளியாகிறது. அசாமில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கேரளாவிலும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நான்கு மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படுகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 வேட்புமனுத் தாக்கல் தொடக்கம் : 30-03-2026 வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் : 06-04-2026 வேட்புமனு பரிசீலனை : 07-04-2026 வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் : 09-04-2026 வாக்குப் பதிவு நாள் : 23-04-2026 வாக்கு எண்ணிக்கை : 04-05-2026 தமிழ்நாட்டில் 2021ல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதன் ஐந்தாண்டு கால ஆட்சிக் காலம் மே மாதம் முடிவுக்கு வருகிறது. அதேபோன்று, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக ஆட்சி கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சியின் 5 ஆண்டு பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது. செய்தியாளர் சந்திப்பில் கூறியது என்ன? தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: "இந்தியாவின் கலாசார செறிவையும் பன்முகத்தன்மையையும் தேர்தல்கள் பிரதிபலிக்கின்றன. இதை நோக்கமாகக் கொண்டே எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டன, தகுதியான நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். தகுதிவாய்ந்த ஒரு நபர் கூட விடுபடக் கூடாது என்ற நோக்கில் இந்த பணிகள் நடத்தப்பட்டன. பிஎல்ஓ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்." என்றார். மேலும், முதன்முறை வாக்காளர்கள் இது மிக முக்கியமான உரிமை. வாக்களிக்கும் உரிமை. அதில் ஆர்வமாக ஈடுபட வேண்டும். அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமாக 17.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 25 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். 8.5 லட்சம் பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவர். தேனி மாவட்டம் வருஷநாடு பகுதிக்கு பயணிக்க மூன்று மணிநேரமாகும். ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் வாக்கு சதவிகிதம் தெரிவிக்கபடும். அனைத்து பிஎல்ஓக்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். அனைத்துக் கட்சிகளுடனும் ஏற்கெனவே பலமுறை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 75032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். வாக்குச்சாவடிகளில் கழிவறை, குடிநீர், சாய்வுதளம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் நிலவரம்? 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக பிரதானமாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் ஏற்கெனவே உள்ள கட்சிகளுடன் புதிதாக சில கட்சிகளும் இணைந்துள்ளன. தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் சமீபத்தில் இணைந்தார். இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடமும் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் (மூன்றில் திமுக சின்னத்தில் போட்டியிடும்), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேசமயம், அதிமுக கூட்டணியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 2021 தேர்தலில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 2024 மக்களவை தேர்தலில் பாஜக-அதிமுக இரு கட்சிகளும் பிரிந்து இருவேறு கூட்டணிகளாக களம்கண்டன. ஆனால் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து எதிர்கொள்கின்றன. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் அதே கூட்டணியில் நீடிக்கிறது. கடந்த தேர்தலில் தேமுதிகவுடன் இணைந்து களம்கண்ட அமமுக இம்முறை அதிமுக கூட்டணியிலேயே இணைந்துள்ளது. இதுதவிர, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கம் போலவே தனித்து போட்டியிடுகிறது. புதிதாக உருவாகியுள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த தேர்தலில் களம் காண தயாராகி வருகிறது. 'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் தொண்டர் உருவாக்கிய கட்சியில் தான் இணைந்துள்ளதாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூறியுள்ளார். புதுச்சேரியில் நிலவரம் என்ன? புதுச்சேரியைப் பொறுத்தவரையிலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து போட்டியிட்டு ஆட்சியை அமைத்தன. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெற்றது. என்ஆர் காங்கிரசின் ரங்கசாமி முதலமைச்சரானார். இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகின்றன. 2026 தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் மீண்டும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலைப் போன்றே தற்போதும் பாஜக , என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் காண்பதாக அறிவித்துள்ளன. தொகுதிப்பங்கீடு குறித்த இறுதியான முடிவு வெளியாகவில்லை. மறுபுறம், காங்கிரஸ், திமுக இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj4z7qrgeppo
  17. அமெரிக்காவுக்கு இராணுவ விமானப் பயண அனுமதியை நிராகரித்தது சுவிட்சர்லாந்து! Published By: Digital Desk 3 15 Mar, 2026 | 12:21 PM மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் ஈரான் - அமெரிக்கப் போர் நடவடிக்கைகளுக்காகத் தனது வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க இராணுவ விமானங்கள் விடுத்த கோரிக்கைகளைச் சுவிட்சர்லாந்து அரசாங்கம் நிராகரித்துள்ளது. தனது நாட்டின் பாரம்பரிய 'நடுநிலைமைச் சட்டத்தை' சுட்டிக்காட்டி சுவிஸ் அரசாங்கம் சனிக்கிழமை இந்த அதிரடி தீர்மானத்தை அறிவித்தது. அமெரிக்க இராணுவ மற்றும் உத்தியோகபூர்வ விமானங்கள் சுவிஸ் வான்பரப்பைக் கடக்க விடுத்த 05 கோரிக்கைகளை ஆராய்ந்த அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துள்ளது. போருடன் நேரடியாகத் தொடர்புடைய இராணுவ நோக்கங்களுக்காகச் செல்லவிருந்த இரண்டு விமானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான மற்றும் மருத்துவத் தேவைகளுக்காகவும், போருடன் தொடர்பில்லாத பராமரிப்புப் பணிகளுக்காகவும் செல்லவிருந்த மூன்று விமானங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/241019
  18. இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் இருண்டதாகத் தெரியவில்லை அழகன் கனகராஜ் இலங்கைத் தீவின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலிக்கும் ஒரே உணர்வு 'கிரிக்கெட்'. 1996-ஆம் ஆண்டு லாகூர் மைதானத்தில் அர்ஜுன ரணதுங்கவின் படை உலகக் கிண்ணத்தை ஏந்திய அந்தத் தருணம், ஒரு சிறிய தீவை உலக வரைபடத்தில் ஜொலிக்க வைத்தது. அன்று முதல் இன்று வரை, இலங்கை கிரிக்கெட் பல உச்சங்களையும் சரிவுகளையும் கண்டுள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் அத்திவாரம் மிக வலிமையானது. சனத் ஜயசூரியவின் அதிரடி, அரவிந்த டி சில்வாவின் நேர்த்தி, முத்தையா முரளிதரனின் மாயாஜால சுழல் என ஒவ்வொரு ஜாம்பவான்களும் உலக கிரிக்கெட்டைத் திரும்பிப் பார்க்க வைத்தனர். பின்னரான காலத்தில் குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோரின் அபாரமான துடுப்பாட்டமும், லசித் மாலிங்கவின் துல்லியமான 'யார்க்கர்' பந்துகளும் இலங்கையை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றின. 2014-ஆம் ஆண்டு நாம் வென்ற டி20 உலகக் கிண்ணம், அந்தப் பொற்காலத்தின் இறுதி மகுடமாக அமைந்தது. தற்போதைய சவால்கள்: தடுமாற்றம் எங்கே? கடந்த சில வருடங்களாக இலங்கை அணி ஒருவித இடைமாற்றக் காலத்தைக் (Transition Period) கடந்து வருகிறது. அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு, அந்த இடங்களை நிரப்பக் கூடிய நிலையான வீரர்கள் கிடைக்காதது ஒரு பெரும் பின்னடைவு. ஸ்திரமற்ற துடுப்பாட்டம்: பல போட்டிகளில் வெற்றியின் விளிம்பு வரை சென்று, கடைசி நேரத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுக்கும் நிலை தொடர்கிறது. நிர்வாகச் சிக்கல்கள்: கிரிக்கெட் சபையின் நிர்வாக மாற்றங்கள் மற்றும் பயிற்சிக் கட்டமைப்பில் நிலவும் சில குறைபாடுகள் வீரர்களின் மனநிலையைப் பாதிப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. ஒழுக்கக் கட்டுப்பாடுகள்: மைதானத்திற்கு வெளியேயான சில வீரர்களின் ஒழுக்கமின்மைச் சம்பவங்களும் அணியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தன. எதிர்காலம்: நம்பிக்கையளிக்கும் இளம் குருத்துக்கள் இருப்பினும், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் இருண்டதாகத் தெரியவில்லை. சமீபத்திய போட்டிகளில் இளம் வீரர்களின் எழுச்சி புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. பந்துவீச்சு பலம்: மதீஷ பத்திரண போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும், வனிந்து ஹஸரங்க போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் உலகத்தரம் வாய்ந்த லீக் போட்டிகளில் முத்திரை பதித்து வருகின்றனர். ஆசியக் கிண்ண வெற்றி: 2022-இல் இலங்கை அணி ஆசியக் கிண்ணத்தை வென்றது, எத்தகைய சவாலையும் முறியடித்து எம்மால் மீண்டெழ முடியும் என்பதற்கான சான்றாகும். வெற்றிக்கான பாதை என்ன? எதிர்காலத்தில் மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணத்தை ஏந்த வேண்டுமானால், நாம் சில அடிப்படை மாற்றங்களைச் செய்ய வேண்டும்: உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு: பாடசாலை மட்டத்திலிருந்தே திறமையான வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் சர்வதேசத் தரத்திலான பயிற்சிகளை வழங்க வேண்டும். மனவலிமை (Mental Toughness): இக்கட்டான சூழலில் பதற்றமின்றி விளையாடும் மனப்பக்குவத்தை இளம் வீரர்களுக்குப் பயிற்சியாளர்கள் வழங்க வேண்டும். நிலையான தலைமைத்துவம்: அடிக்கடி அணித்தலைவர்களை மாற்றாது, ஒரு நீண்டகாலத் திட்டத்துடன் அணியைக் கட்டியெழுப்ப வேண்டும். இலங்கை கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல; அது எமது மக்களின் அடையாளம். கடந்த காலத்தின் புகழையும், தற்போதைய திறமைகளையும் சரியாக ஒருங்கிணைத்தால், 'சிங்கச் சொப்பனமாக' இலங்கை அணி மீண்டும் உலக அரங்கில் கர்ஜிக்கும் என்பதில் ஐயமில்லை. இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் இருண்டதாகத் தெரியவில்லை
  19. கேஸ் இதை விட பாரம் போல இருக்கிறது. அரபு நாட்டில் கணவர் இருக்கும் பெண் ஒருவர் இவருடன் அண்ணா என பழக - இவர் அவருக்கு பிரெஞ் கிஸ் பற்றி எழுதிய மெசேஜ் என பல ஸ்க்ரீன்ஷாட்டுகள் பறக்கிறன. விகடன் பெயர் போட்டே ஒரு கட்டுரையை எழுதி உள்ளது. தலைமைக்கு யார் நெருக்கம் என்பதில் செந்தில் பாலாஜிக்கும் இவருக்கும் நடந்த போட்டியில் இப்படி ஆகி உள்ளதாம். பாலியல் விடயத்தில் கூட சீமானிடம் தகுந்த பயிற்சி பெற்றே வெளியேறி இருக்கிறார்😂.
  20. இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை (காளியம்மாள் -சீமான் ஓப்பீடு). பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது இந்த சமூகத்தின் கண்ணாடி. அங்கே ஊத்தை வருகிறது எண்டால் இங்கேயும் வரும். அதை நாம் விவாதிக்க வேண்டும். அசூசை என ஒதுக்கி தள்ளுவதால் எந்த பலனும் இல்லை என்பது என் நிலைப்பாடு. ஆனால் நிர்வாக முடிவுக்கு கட்டுப்பட்டேன். உங்களை போல் விதிமீறல் செய்து - ரீச்சர் கண்காணிப்பில் இருக்கும் அரிவரி பிள்ளைகள் நிலைக்கு நான் என்றும் இறங்கியதில்லை. பெண் குழந்தைகளை அரைகுறை ஆடையில் ரிக்கார்ட்டு டான்ஸ் ஆடவிடும் இன்ஸ்டாவில் எனக்கு ஒரு வேலையும் இல்லை. அதே போல் முகபுத்தகம் ஒரு பூமர் கூடாரம். தவிர இவை யாழை போல டீசண்டான தளங்கள் அல்ல. யாழில் சபை நாகரீகம் தெரிந்து என்னவும் எழுதலாம். சபை நாகரீகம் தெரியாதவர்களை கூட நிர்வாக மேற்பார்வையில் எழுத விடுவார்கள். ஆனால் புலிகளின் பாடலை, படத்தை போட்டாலே கணக்கை மூடும் முகபுத்தகமும், இன்ஸ்ண்டாவும். இப்படியான தளங்களில் மேற்கின் அடிவருடிகள் கும்மி அடிக்கலாம், என்னால் முடியாது. சிறுவயதில் இருந்து மத நம்பிக்கை அதிகம் இல்லை என்றாலும் நண்பர்கள் கூப்பிட்டா கோவில், சேர்ச், மசூதி எங்கும் போவேன். ஆனால் யார் கூப்பிட்டாலும் கள்ளுதவறணைக்கு போவதில்லை. எனவே உங்கள் அழைப்பை ஏற்க முடியாமைக்கு வருந்துகிறேன். கீழே ஒரு சிச்சுவேஷன் காமெடி இணைத்துள்ளேன். பார்த்து மகிழவும்.
  21. நீங்கள் ரஸ்யாவுக்கு காவடி தூக்குவது போல் அமெரிக்காவுக்கு நான் தூக்குவதில்லை. அமெரிக்கா வடை சுட தெரியாமல் முழிப்பதில் எனக்கும் சந்தோசமே.
  22. ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள். உங்கள் மீதி கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்கிறேன். ஐ நா சபை அங்கீகரித்த எல்லைகளின் படி, 2026 இல் இஸ்ரேல் என்ற ஒரு தேசம் வரைபடத்திலும், நிஜத்திலும் இருக்க வேண்டுமா? இல்லையா? இல்லை எனில் ஏன்?
  23. எல்லைதாண்டி இஸ்ரேல் செய்யும் பயங்கரவாதத்தை நிறுத்தாதவரை, பலஸ்தீனர்களது நிலங்களை ஆக்கிரமமிப்பதை நிறுத்தாதவரை, பச்சைக்குழந்தைகளைக் கொல்வதை நிறுத்தாதவரை எதிர்தரப்பு செய்வதை தடுக்கமுடியுமா?. இன்று வளைகுடா நாடுகளைப் பாதுகாப்பது என்ற போர்வையில் இஸ்ரேலைப் பாதுகாக்கவே இவளவு அமெரிக்கப்படைகள் இருந்தனவா என்ற வினா எழுந்துள்ளமை உற்று நோக்க வேண்டிய வினா. எனவே எதிர்காலத்தில் தமது நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களால் தம்மையோ தமது நாட்டையோ பாதுகாக்க முடியாதநிலையில் அவை தேவையா என்ற கேள்வியும் சேர்ந்து எழுந்துள்ளமையானது சிறந்த மாற்றமே.
  24. மேற்குத் தனது ஆயுதங்களை ரஸ்யாவில் பரீட்சிக்கலாமென்றால் சீனா இஸ்ரேலில் பரீட்சகக்கூடாதென்று இல்லைத்தானே.(இஸ்ரேலிய நேசர்கள் கோவிக்கப்போகிறார்கள்) போர் முடிவில் எந்தத் தரப்பிற்கும் சாதகமாக இருக்கப்போவதில்லை என்பதை நிகழ்நிலை நேரநகர்வு உணர்த்துகிறது. ஒருவேளை இறங்கவுள்ள ஈரூடகப்படையணி எண்ணைப்போக்குவரத்துப் பாதையைக் கைப்பற்றினாலும் பாதுகாக்க முடியுமா(?) என்பது வினாவாகவே நிற்பதை ஆய்வாளர்கள் சுட்டுகிறார்கள். இரண்டுவாரத்தைக் கடந்தும் இரண்டு நாடுகள் கூட்டுச் சேர்ந்து ஒருநாட்டை அடிஅடியென்று அடித்தும் ஒருபயனையும் காணமுடியவில்லை. அமெரிக்கத்தலைமை ஆயுத உற்பத்தியாளர்களோடு உரையடியுள்ளதைப் பார்க்கும்போது போர் நீண்டு செல்லப்போகிறதா அல்லது ஆயுதப்பற்றாக்குறையேற்பட்டள்ளதா என்ற வினாவும் உள்ளது. முத்தரப்பும் மக்களை அழித்து உலக பொருண்மியத்தை சிதைக்கும் வேலையைச் சிறப்பாகச் செய்கிறார்கள். இதில் எந்தத் தலைமையும் வெளியே சென்று மக்களது அவலங்களைப் பார்போரல்லவே. ஐ.நாவும் 2008இலேயே தோல்வியுற்ற அமைப்பாகிவிட்டது. உலகம் இப்படியே மாறிமாறி அடிபட்டு அழிந்துபோகும்போலவே தோன்றகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.