24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
அடிப்படை சுகாதார வசதி திட்டம்
"முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026" இது வரை இந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவு தர உறுதியளித்திருக்கும் உறவுகள் குமாரசாமி அண்ணா கோஷான் கவி அருணாசலம் அண்ணா ஏராளன் வாத்தியார் உதவி செய்ய விரும்பும் உறவுகள் விரும்பினால் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள் . பெயர் தெரிவிக்க விரும்பாதவர்கள் ஏராளனுடனோ அல்லது கோஷானுடனோ?(கோஷான் விரும்பும் பட்சத்தில் ) தனி மடல் மூலம் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்
-
நாம் பெற்றோர்களாக தோல்வியுறுகிறோமா? டிஜிட்டல் காலத்தில் பெற்றோர் பங்கு — உளவியல் நிபுணர் டாக்டர் சரண்யா ஜெயக்குமார் விளக்கம்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- Today
- கதை - 194 / தை பிறந்தால் … [மூன்று பகுதிகள்]
கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 01 முல்லைத்தீவு கடற்கரையோரக் கடல் கவிதைக்கு மட்டும் சொந்தமானது அல்ல - அது குடும்பங்களுக்கு உணவளித்தது - உழைப்பாளிகளான மீனவரின் கைகளை கடினமாக வடிவமைத்தது - சொல்லப்படாத துயரத்தைச் சுமந்தது. கடல் எப்போதும் அலைகளால் மட்டும் பேசுவதில்லை. சில நேரங்களில் அது மௌனமாக நிற்கும் — அந்த மௌனம் தான் மீனவர்களை அதிகம் பயமுறுத்தும். கதிரவன் அந்தக் கடலுக்குப் பிறந்தான். ஒரு மீனவரின் மகனாக, அவன் கடினமாகப் படித்து, பட்டம் பெற்று, திரும்பி வந்தான் - அவன் தந்தையும், தாத்தாவும், அவர்களுக்கு முன் வாழ்ந்தவர்களும் எல்லோரும் கடலோடு வாழ்க்கையைப் பகிர்ந்தவர்கள். ஆனால் கதிரவன் மட்டும் பல்கலைக்கழகம் பார்த்தவன். “படிச்சா எல்லாம் மாறிடும்னு நினைச்சோம்,” என அவன் தாய் சொன்னபோது, அவன் கண்ணில் கடலின் உப்பு கரைந்தது. பட்டம் பெற்றும் இன்னும் வேலை இல்லாதவன் ஆனால் எந்த வகுப்பறையும் கற்றுக்கொடுக்காததற்கு முன்பே கடல் அவனுக்கு தாளத்தைக் கற்றுக் கொடுத்தது. அது அவனுக்கு இன்று ஒரு தனி இடத்தை கொடுத்து, அவனை ஆறுதல் படுத்திக்கொண்டு இருக்கிறது. அவனது தந்தை விடியற்காலையில் வலைகளை இழுத்தபோது, கதிரவன் அலைகள் போல எழுந்து விழும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடினான். இரவில், அவன் பறை மேளம் வாசித்தான், அதன் ஒலி கடலோரத் தமிழ் வாழ்க்கையின் துடிப்பை எதிரொலித்தது. வட–கிழக்கில் மீனவர்களுக்கு கடல் இருக்கிறது— ஆனால் முழு உரிமை இல்லை. வலை போட இடம் உண்டு— ஆனால் பாதுகாப்பு இல்லை. அதிகாரம் எல்லைகளை வரையறுக்கிறது. ஆனால் பசிக்கு எல்லை இல்லை. அவன் பாடல்களில் வடக்கு கிழக்கு தமிழரின் வேதனைகள் பிரதிபலிக்கும். அரசின் கெடுபிடிகள் வெளிவரும். அது தை மாதம். தை என்பது வெறும் ஒரு மாதம் அல்ல. அது தொழிலாளிகளின், குறிப்பாக உழவர்களின் பெருமையை பறைசாற்றும் மாதம். அது கதிரவனுக்கு நன்றாகத் தெரியும் அதேவேளை, உள்நாட்டுப் பகுதியில், வயல்கள் நிறைந்த பசுமை பூமியில் மதுமிதா வாழ்ந்தாள். அவள் ஒரு பல்கலைக்கழக கலைப்பீட மாணவி, வரலாற்றுப் புத்தகங்களால் நீண்ட காலமாக மறக்கப்பட்ட மூதாதையர்களால் கட்டப்பட்ட நெல் வயல்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்களுக்கு மத்தியில் வளர்ந்தாள். தமிழரின் இயல், இசை, நடனம் என்ற மூன்று கலைகளிலும் ஆர்வம் கொண்டவளாக, ஒரு பரதநாட்டிய மற்றும் ஒரு வீணை கலைஞருமான அவள், கலை என்பது விவசாயத்தின் மற்றொரு வடிவம் - நடப்பட்டு, வளர்க்கப்பட்டு, ஒழுக்கத்தின் மூலம் அறுவடை செய்யப்பட்ட ஒன்று என்று நம்பினாள். பரதநாட்டியத்தில் அவள் கால்கள் சங்க கால நினைவுகளை எழுப்பும். வீணையில் அவள் விரல்கள் அமைதியையே இசையாக்கும். “தைப் பொங்கல் — இது மதத்தின் சொத்து அல்ல,” என்று அவள் சொல்வாள். “இது மண்ணின் திருநாள்.” என அடித்துக் கூறுவாள். அவள் தந்தை விவசாயி. வயலில் வியர்வை சிந்தியவன். நீரின்றி பயிர் வளராததைப் போல, பண்பாடு மண்ணின்றி வாழாது என்று அவளுக்குக் கற்றுக் கொடுத்தவன் அவர்கள் இருவரும் ஒருபோதும் சந்தித்ததில்லை. ஆனால் இருவருக்கும் ஒரே கேள்வி இருந்தது: நிலம், கடல் மற்றும் கண்ணியம் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது ஒரு மக்கள் எப்படி உயிர்வாழ்வார்கள்? என்பதே அது! வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த இளம் தமிழர்கள் கிளிநொச்சியில் ஒரு பெரிய தைப் பொங்கல் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ய ஒன்றுகூடினர் - “இது விழா இல்லை,” ஆரம்ப ஏற்பாடு மட்டுமே. அதை வெறும் ஒரு விழாவாக மட்டுமல்லாமல், ஒற்றுமை, வரலாறு மற்றும் உயிர் பிழைத்தல் அல்லது நிலைத்து இருத்தலுக்கான [unity, history, and survival.] ஒரு தளமாகவும் பயன்படுத்த எண்ணினர். அது மதச்சார்பற்ற, கூட்டு ஒற்றுமைக்கான மற்றும் ஆழமான தமிழ் உணர்வாகவும் இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தனர். - தமிழ் இன்றைய அரசுகளை விட பழமையானது, குறைந்தது 2500 ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டது, சங்கக் கவிதைகள் வடித்தது. ஏன், "ஏற்றுக உலையே! ஆக்குக சோறே! கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக " - என்று பொங்கள் பற்றி, புறநானூறு 172 இல், கி மு 500 ஆண்டிலேயே இலக்கிய நடையுடன் கூறிய தமிழ் இது. கடற்படை கட்டுப்பாடுகளால் இடம்பெயர்ந்த மீனவ சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்த கதிரவன் அங்கு வந்திருந்தான். பண்டைய தமிழ் மரபுகளில் வேரூன்றிய ஒரு கலாச்சார நிலையை முன்மொழிய மதுமிதா சக பல்கலைக்கழக மாணவர்களுடன் அங்கு வந்தாள். ஒரு ஒத்திகைக்காக கதிரவன் பாடியபோது, அறை அமைதியாகி விட்டது. அவனது குரல் கடலின் உப்பை சுமந்து சென்றது, தங்கள் சொந்த கடல் நீரில் மீன்பிடிப்பதை அல்லது அணுகுவதை கட்டுப்படுத்தும் அல்லது மறுக்கும் அரச நிர்வாகத்தால் ஏற்பட்ட தலைமுறைகளின் வலி அங்கு தெரிந்தது. மேலும், “இது ஒரு பண்டிகை அல்ல,” “இது எங்கள் வரலாற்றின் பிரகடனம்.” என்று ஒத்திகையின் போது கதிரவன் சொன்னான். அதேபோல, மதுமிதா பதிலுக்கு வீணை வாசித்தபோது, இசைக்குரல்கள் தெளிவான தை நீரைப் போல - அமைதியாக மற்றும் பிரார்த்தனையுடன் ஒலித்தன. அன்று அவர்கள் அதிகம் பேசவில்லை. அவர்கள் பேச வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. ஆனால் அங்கு கண்ட அறிமுகம் அதற்கான வழியைக் காட்டி விட்டது தைவரல் காற்றோடு பொங்கலும் பொங்க தைத்த ஆடையோடு சிறுவரும் மகிழ தையல் கடிமனம் நன்று நிறைவேற தை பிறந்தால் வழி பிறக்குமே! தமிழர் திருநாள் உழவர் பெருநாள் தனித்துவம் கொண்ட எங்கள் அடையாளம் தங்கக் கதிரவனை விழுந்து கும்பிட்டு தலைவி தலைவன் கொண்டாடும் கொண்டாட்டம்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் துளி/DROP: 1976 [கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/33157598130555407/?- மன்னார் தீவின் நுழைவாயிலில் ராமர், ஹனுமான் படங்களுடன் வைக்கப்பட்ட பேனர், ஏன் சர்ச்சை ஆனது?
இலங்கையில் ராமர், ஹனுமான் படங்களுடன் வைக்கப்பட்ட பேனர் ஏன் சர்ச்சை ஆனது? பட மூலாதாரம்,SMU படக்குறிப்பு,இலங்கையில் வைக்கப்பட்ட பேனரில் உள்ள புகைப்படம் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் மன்னார் தீவையும், இந்தியாவின் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள மணல் திட்டுக்களை ராமாயணத்துடன் தொடர்பு படுத்துவது குறித்து இலங்கையில் சர்ச்சை எழுந்துள்ளது. இலங்கையின் மன்னார் தீவுக்கும் இந்தியாவின் ராமேஸ்வரம் தீவுக்கும் இடையில் உள்ள கடல் பகுதியில் தொடர்ச்சியாக மணல் திட்டுகள் உள்ளன. இதனை இந்துக்கள் ராமர் பாலம் என அழைக்கின்றனர். வேறு சிலர் ஆதாமின் பாலம் எனவும் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில், இலங்கையின் சுற்றுலாத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் சுற்றுலா அதிகார சபையினால் மன்னார் தீவின் நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையொன்றில் இந்து கடவுள்களின் உருவப் படங்கள் காட்சிப் படுத்தப்பட்டதை அடுத்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இந்த அறிவிப்புப் பலகையில் ராமர், ஹனுமான் ஆகியோரின் உருவப் படங்கள் இடம்பெற்றுள்ளன. சுற்றுலா அதிகார சபையின் வட மாகாண அலுவலகத்தினால் இந்த அறிவிப்புப் பலகை சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. ராமர் பாலமாக இந்துக்களால் கருதப்படும் இந்தப் பகுதி வரலாற்று முக்கியத்துவமும் சூழல் முக்கியத்துவமும் கொண்ட இடமாகக் கருதப்படுகிறது. ராவணன் சீதையை இலங்கைக்குக் கடத்தி வந்ததன் பின்னர், இலங்கைக்கு வந்த சீதையை மீட்பதற்காக ராமர் தலைமையிலான படையினர் செல்வதற்காக அனுமன் ஒரு பாலத்தை அமைத்ததாக ராமாயணம் கூறுகிறது. இந்த மணல் திட்டுக்களே அந்தப் பாலம் என இந்துக்கள் கருதுகின்றனர். ஆனால், இதனை ஆதாமின் பாலம் என்றே சில தரப்பினர் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால், இந்த அறிவிப்புப் பலகை, இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும் இதனை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்றும் மன்னாரைச் சேர்ந்த கிறிஸ்தவ மத குருமார்கள் கோரியுள்ளனர். பட மூலாதாரம்,SMU இந்து சமயக் கடவுள்களின் படங்களைத் தாங்கியுள்ள இந்த பெயர்ப் பலகை மன்னாரின் மத நல்லிணக்கத்தைப் பாதிக்கிறது என மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தின் மன்னார் மறைக் கோட்ட முதல்வர் பி.கிறிஸ்துநாயகம் தெரிவித்துள்ளார். மன்னார் நகர சபைக்கு பி. கிறிஸ்துநாயகம் எழுதியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். இது மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையைச் சீர்குலைத்து குழப்பத்தையும் தோற்றுவிப்பதாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பெயர்ப் பலகை தொடர்பாக பொதுமக்கள் தமது அதிருப்தியையும் எதிர்ப்பையும் தினமும் தமக்குத் தெரிவித்து வருவதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மன்னாரிலுள்ள அனைத்து மத மக்களின் நன்மையையும் கருதி, இந்த பெயர் பலகையை இந்த இடத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பி. கிறிஸ்துநாயகம் கேட்டுக்கொண்டிருக்கிறார். பட மூலாதாரம்,MARAVANPULLAVU SACHCHITHANANTHAN படக்குறிப்பு,சச்சிதானந்தன் 'அகற்ற கூடாது' ஆனால், மன்னார் நகர நுழைவாயிலில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகையை அகற்றக்கூடாது என இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய அவர், "ராமருக்கும் மன்னாருக்கும் தொடர்பு இருக்கிறது. அவர்கள் வந்திறங்கியது மன்னார் தீவில்தான். திரும்பி போனதும் மன்னார் தீவிலிருந்துதான். இது தொடர்பான இலக்கிய பதிவுகள் இருக்கின்றன. இலக்கிய பதிவுகளின்படி, ராமர் மன்னார் தீவில் வந்திறங்கினார். பின்னர் சீதையையும் கூட்டிக்கொண்டு ராமேஸ்வரம் போனார். தமிழர்களை சமய அடிப்படையில் பிளவுபடுத்துகிற வேலையை இப்போது மன்னார் கத்தோலிக்கர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்கள்" என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மணல் திட்டுகளின் புகைப்படம் கடிதம் எழுதியவர் என்ன சொல்கிறார்? க.சச்சிதானந்தனின் கருத்து குறித்தும் கடிதம் எழுதப்பட்டமைக்கான காரணம் குறித்தும் பி.கிறிஸ்துநாயகத்திடம் பிபிசி கேட்டபோது, "மன்னார் நகரத்திற்குள் வருகின்ற நுழைவாயிலில் இருக்கின்ற படியினால், அது சில வேளைகளில் மற்ற மதத்தவர்களை புண்படுத்தலாம். அதனால், அந்த இடத்திலிருந்து எடுங்கள் என்று மாத்திரமே சொல்லப்பட்டிருக்கின்றது. அதை வேறு இடத்தில் வைக்கலாம். அதில் எந்தவொரு பிரச்னையும் இல்லை. தலைமன்னாரில் வைக்கலாம் அல்லது வேறு எங்கேயும் வைக்கலாம். நுழைவாயில் என்ற படியால் மாத்திரமே இந்த கடிதம் எழுதப்பட்டது. அதைவிடுத்து, ஏனைய மதங்களை புண்படுத்தும் வகையிலான நோக்கம் என்னிடம் இருக்கவில்லை." என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,RUWAN RANASINGHE படக்குறிப்பு,சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க அரசாங்கம் என்ன சொல்கின்றது? மன்னார் நகர் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள படம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்னை குறித்து பிபிசி தமிழ், சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவை தொடர்புக் கொண்டு வினவியது. மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் இந்த பிரச்னை தொடர்பில் தாம் தலையீடு செய்து பிரச்னையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். "சமூகத்தில் இவ்வாறு சர்ச்சைகளை எழுப்பும் சம்பவங்கள் நிகழும் பட்சத்தில், அந்த குழுக்களுடன் கலந்துரையாடல்களை நடத்த தயாராகவுள்ளோம். சமயத் தலைவர்கள், சமூகத்திலுள்ள முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல்களை நடத்தி சிறந்ததொரு தீர்வை எடுக்க வேண்டும். உரிய குழுக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அனைத்து மதங்களையும் பாதுகாக்கும் விதத்தில் இந்த பிரச்னையை தீர்த்து வைக்க நாங்கள் தலையீடு செய்வோம்" என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். இவ்வாறான பிரச்னைகள் தொடர்ச்சியாக வரும் சந்தர்ப்பத்தில் சுற்றலாத்துறைக்கு பாதிப்புக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதா என கேட்டபோது, ''அப்படியான பிரச்னைகளுக்கு வாய்ப்பில்லை'' என்றார் ருவன் ரணசிங்க. "நாங்கள் மிகுந்த தெளிவான சிந்தனையுடன் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி வருகின்றோம். இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இதனூடாக எந்தவித பிரச்னையும் ஏற்படாது. யாழ்ப்பாணம், மன்னார், நுவரெலியாவின் சீதை அம்மன் கோவில், ராவணனின் இடங்கள் ஆகிய இடங்களுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்கின்றார்கள். அதில் எந்தவித பிரச்னையும் இல்லை'' என ருவன் ரணசிங்க தெரிவிக்கின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgx3l0zg47o- வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகள்
வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகள் 06 Jan, 2026 | 02:30 PM வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. அந்தவகையில் செவ்வாய்க்கிழமை (06) ஆமையின் இறந்த உடல்கள் கரையொதுங்கிய உள்ளன. கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235346- நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்!
நுண்நிதி கடன் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலம் சமர்பிப்பு - லக்ஷ்மன் நிபுணராச்சி 06 Jan, 2026 | 12:37 PM நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்தார். நுண்நிதி கடன்கள் பெற்ற சுமார் 200 பெண்கள் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதற்கிடையில், கொழும்பு பங்குச் சந்தையின் பெயர் மற்றும் சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி வைப்பாளர்களிடம் மில்லியன் கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போலியான மொபைல் பயன்பாடு மூலம் இந்த மோசடி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் மூத்த துணைத் தலைவர் நிரோஷன் விஜேசுந்தர தெரிவித்தார். இது தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஏற்கனவே விசாரணைகளைத் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மேலும் இந்த மோசடி கடந்த ஆண்டு நவம்பர் முதல் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது வைப்பாளர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்வதாக நிரோஷன் விஜேசுந்தர தெரிவித்தார். https://www.virakesari.lk/article/235336- வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ்
வெனிசுவேலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ் Published By: Digital Desk 3 06 Jan, 2026 | 01:23 PM வெனிசுவேலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். அமெரிக்க இராணுவத்தால் நாடு கடத்தப்பட்ட வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுவேலாவை நிலையான, நம்பிக்கையான ஆட்சியின் கையில் ஒப்படைக்கும் வரையில் அமெரிக்கா நிர்வாகம் செய்யும் எனவும், வெனிசுவேலா மசகு எண்ணெய் வளங்களை பாதுகாக்க இராணுவம் களத்தில் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் அமெரிக்க இராணுவ படைகள் ஜனவரி 3ஆம் திகதியன்று நடத்திய அதிரடி தாக்குதலில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார். அவர் வெனிசுவேலா நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பூமியின் நரகம் என்று அழைக்கப்படும் ஆர்.புரோக்லின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிரான வழக்கை மார்ச் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ள நீதிமன்றம், அன்றைய தினம் மதுரோ ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே வெனிசுவேலாவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தநிலையில், அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை இடைகால அதிபராக நியமித்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், டெல்சி ரோட்ரிக்ஸ், வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக அந்நாட்டின் நாடாளுமன்றக் கட்டிடத்தில் பதவியேற்றார். ரோட்ரிக்ஸுக்கு அவரது சகோதரரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உறுதி மொழி ஏற்பதற்கு முன், எங்கள் தாயகத்திற்கு எதிரான சட்டவிரோத இராணுவ ஆக்கிரமிப்பால் வெனிசுவேலா மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட துன்பங்களுக்கு நான் வருத்தத்துடன் வருகிறேன் என்று அவர் தனது வலது கையை உயர்த்தி கூறினார். டெல்சி ரோட்ரிக்ஸ் 2018 ஜூன் முதல் வெனிசுலாவின் துணை ஜனாதிபதியாக பணியாற்றி உள்ளார். அவர் நிதி மற்றும் எண்ணெய் வள அமைச்சராகவும் உள்ளார். துணை ஜனாதிபதிபொறுப்புகளை தாண்டி 2 முக்கிய துறையின் அமைச்சராக இருக்கும் காரணத்தால் வெனிசுவேலா அரசில் மிக சக்திவாய்ந்த நபராக உள்ளார். 1969 மே 18 அன்று வெனிசுவேலா காரக்காஸில் பிறந்த டெல்சி ரோட்ரிக்ஸ், ஜோர்ஜ் அன்டோனியோ ரோட்ரிக்ஸ் என்ற இடதுசாரி கெரில்லா பிரிவு தலைவரின் மகள் ஆவார். 1970களில் லீகா சோசலிஸ்டா கட்சியை நிறுவியவர் அவரது தந்தை. https://www.virakesari.lk/article/235343- ஐ.எம்.எப். வரையறைகளுக்குள் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி
ஐ.எம்.எப். வரையறைகளுக்குள் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி Published By: Vishnu 06 Jan, 2026 | 05:05 AM சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் வரையறைகளின்படி, தேசிய உற்பத்தியில் 13 சதவீதம் மாத்திரமே செலவிட முடியும். அதில் குறைந்தபட்சம் 4% மூலதனச் செலவாக ஒதுக்கப்பட வேண்டும். அதன்படி, 'நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்' என்ற அடிப்படையில் அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிதி வரையறைகளுக்குள், தேசிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு,மக்களின் நலனுக்காக அதிகபட்ச செயல்திறனுடன் அந்த நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துவது, அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மூலதனச் செலவாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டாலும், உகந்த முறையில் அவற்றை செலவழித்து தேவையான நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை அடைய கடந்தகால அரச பொறிமுறை தவறியதால், இந்நாட்டு மக்கள் பல அபிவிருத்தி வாய்ப்புகளை இழந்துள்ளனர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சுகளின் செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் திங்கட்கிழமை (05) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் வரையறைகளின்படி, தேசிய உற்பத்தியில் 13மூ மாத்திரமே செலவிட முடியும்.அதில் குறைந்தபட்சம் 4மூ மூலதனச் செலவாக ஒதுக்கப்பட வேண்டும்.அதன்படி, 'நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்' என்ற அடிப்படையில் அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான முதலீட்டாளர் அரசாங்கம் என்ற வகையில், மூலதனச் செலவினங்களுக்காக இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 1400 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக, டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை சீர்செய்வதற்காக கூடுதலாக 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக நிர்வகிப்பதன் மூலம் எதிர்பார்க்கும் பௌதீக முன்னேற்றத்தை அடைவதே அமைச்சுகளின் செயலாளர்களுக்கு உள்ள முதன்மைப் பொறுப்பு.முன்மொழியப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தத் தவறினால் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் அதன் ஊடாக இழக்கப்படும் என்று குறிப்பிட்டார். 2026 ஆம் ஆண்டில் அமைச்சு மட்டத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளை பயன்படுத்தல் குறித்தும் இதன்போது தனித்தனியாக விடயங்கள் முன்வைக்கப்பட்டன.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க,மற்றும் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் உட்பட நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/235325- சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள்
நாவாந்துறை சென். மேரிஸ், கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகங்களுக்கு இலகுவான வெற்றிகள் Published By: Vishnu 05 Jan, 2026 | 11:51 PM (நெவில் அன்தனி) கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற இரண்டு சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் யாழ். நாவந்துறை சென். மேரிஸ் கழகமும் கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகமும் இலகுவான வெற்றிகளை ஈட்டிக்கொண்டன. மொரகஸ்முல்லை கழகத்திற்கு எதிரான பி குழு போட்டியில் 4 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய சென். மேரிஸ் கழகம் 7 புள்ளிகளுடன் நிகர கோல் வித்தியாச அடிப்படையில் அணிகள் நிலையில் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்றைய போட்டியில் ஏகப்பட்ட இலகுவான கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்ட சென். மேரிஸ் கழகம் கடினமான சற்று சூழ்நிலைகளில் கோல்களைப் போட்டது. முழுப் போட்டியிலும் திறமையாக விளையாடிய சென். மேரிஸ் கழகம் இந்த வெற்றியுடன் சுப்பர் 8 சுற்றுக்கான தனது வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும் மொரகஸ்முல்லை கழகத்தின் பின்கள வீரர் 41ஆவது நிமிடத்தில் போட்டுக் கொடுத்து சொந்த கோலே சென். மெரிஸ் கழகத்திற்கு திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை சென் மேரிஸ் கழகம் குறைந்தது 4 கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்தது. இடைவேளைக்குப் பின்னர் முழுத் திறமையுடன் விளையாடிய சென் மேரிஸ் கழகம், வெளிநாட்டு வீரர்களின் ஆற்றல்களின் உதவியுடன் மேலும் 3 கோல்களைப் போட்டது. இரண்டாவது ஆட்ட நேரத்தின் மத்திய பகுதியில் 11 நிமிட இடைவெளியில் ஆபரிக்கர்கள் 3 கோல்களைப் போட்டு சென் மேரிஸ் கழகத்துக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர் ஜோன் லொவனி 62ஆவது மற்றும் 65ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டதுடன் டஞ்சுமா கம்பாரி 75ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் போட்டார். ஜாவா லேன் வெற்றி தனது முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெறத் தவறிய ஜாவா லேன் கழகம் ஏ குழுவுக்கான இன்றைய போட்டியில் இ.போ.ச.வை 5 - 0 என்ற கோல்கள் கணக்கில் மிக இலகுவாக வெற்றிகொண்டது. போட்டி ஆரம்பித்து 5 நிமிடங்கள் ஆன நிலையில் ஜாவா லேன் அணித் தலைவர் ஹர்ஷன சுமுது முதலாவது கோலைப் போட்டு தனது அணியைத் முன்னிலையில் இட்டார். 15 நிமிடங்கள் கழித்து முன்னாள் சென். லூசியா மறறும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை வீரர் டெரிக் பெர்னான்டோ அருமையான கோல் ஒன்றைப் போட்டு ஜாவா லேனை 2 - 0 என முன்னிலையில் இட்டார். போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் கழகத்தின் 3ஆவது கோலை ஒலுவாசெயுன் ஒலாவேல் போட்டார். இடைவேளைக்குப் பின்னர் 57ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை ஒலுவாசெயுன் ஒலாவேல் போட்டதுடன் உபாதையீடு நேரத்தில் ஜாவா லேனின் 5ஆவது கோலை ஹர்ஷன சுமுது போட்டார். ஜாவா லேனுக்கு இலகு வெற்றி https://www.virakesari.lk/article/235312- மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்
- அடிப்படை சுகாதார வசதி திட்டம்
குமாரசாமி, உங்களது ஆதங்கம் நியாயமானதே. எனக்கும் இவ்வாறான அனுபவங்கள் இருக்கின்றன. எங்கள் இருவருக்கும் இருக்கும் இந்தப் பிரச்சினை பலருக்கும் இருக்கும். தனியாளாக உதவி செய்ய முன்வரும் போது இந்தச் சிக்கல் கண்டிப்பாக எவரும் எதிர்நோக்க வேண்டி வரும். இதில் யாரையும் குறை சொல்ல முடியாது. அங்கே அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் அதிகம். முன்னோடி, ஒரு உதவி நிறுவனமாக செயற்பட ஆரம்பிக்கும் போது, அதற்கான தனி வங்கிக் கணக்கு இருக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. முன்னோடியின் செயற்பாடுகள் பற்றி அதன் செயற்பாட்டாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள். காத்திருப்போம்.- வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம், பாதையை விடுவிக்குமாறு ஆளுனருக்கு கடிதம்!
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம், பாதையை விடுவிக்குமாறு ஆளுனருக்கு கடிதம்! வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம் மற்றும் பாதையை விடுவித்து தருமாறு வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயனுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வரலாற்று தொண்மைமிக்க வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வழிபாட்டு செயற்பாடுகளுக்காக ஆலயம் அமைந்துள்ள பகுதியின் ஒரு ஏக்கர் காணியினை ஆலயத்திற்கு விடுவித்து தருமாறு ஆலய அறங்காவலர் சபையினர் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஆலயத்திற்கு செல்லும் பாதையினை வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு விடுவித்து தரும் பட்சத்தில் குறித்த பாதையினை தம்மால் புனரமைக்க முடியுமென வவுனியா வடக்கு பிரதேசசபையினரும் தெரிவித்துள்ளனர். எனவேஇவ்விடயத்தில் நேரடியாக தலையீடு செய்து, வரலாற்று தொண்மைமிக்க ஆலயத்திற்கான காணி மற்றும் பாதையினை மிகவிரைவாக விடுவித்துத் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://akkinikkunchu.com/?p=355085- 10 மில்லியன் ரூபா மோசடி - மட்டக்களப்பை சேர்ந்த இளைஞனும் யுவதியும் கைது
10 மில்லியன் ரூபா மோசடி - மட்டக்களப்பை சேர்ந்த இளைஞனும் யுவதியும் கைது By Batticaloa சமூக ஊடகங்களில் ‘டயலொக் மெகா வாசனா’ என்ற போலி அதிஸ்டலாப சீட்டு மூலம் பொதுமக்களை ஏமாற்றி 10 மில்லியன் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) வடக்குப் பிரிவின் அதிகாரிகளால் ஆணொருவரும் பெண்ணொருவரும் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 29 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்துன்னளர். சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் https://www.battinews.com/2026/01/10_6.html- மாகாணசபைத் தேர்தல் தொடர்பான நகர்வுகள் : நாடாளுமன்ற சபை அமர்வு இன்று ஆரம்பம்
மாகாணசபைத் தேர்தல் தொடர்பான நகர்வுகள் : நாடாளுமன்ற சபை அமர்வு இன்று ஆரம்பம் 06 January 2026 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று(06) நடைபெறவுள்ளது. அதன்படி, இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்ற சபை அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனையடுத்து, முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை கடற்றொழில் சார்ந்த விடயங்களும், கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப் பாதுகாப்பு குறித்த விடயங்களும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அத்துடன், மாகாண சபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கான குழுவை நியமிப்பதற்கான பிரேரணையும் சபையில் சமர்பிக்கப்படவுள்ளது. அந்தக் குழு மாகாண சபை தேர்தல் தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://hirunews.lk/tm/439271/progress-regarding-the-provincial-council-elections-parliamentary-session-begins-today- சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல் 06 January 2026 காங்கிரஸின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் இன்று (06) அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சோனியா காந்தி வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே கங்கா ராம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது தற்போதைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், "அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்சமயம் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்" எனவும் சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், "அவரது உடல்நிலையில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதுமில்லை. சிகிச்சைக்குப் பின் அவர் விரைவில் நலமுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவார்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://hirunews.lk/tm/439321/sonia-gandhi-admitted-to-hospital-reportedly-under-intensive-care- “500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை”
“500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை” இலங்கை பொலிஸ் துறையில் ஊழல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்காக எடுத்துவரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, நூற்றுக்கணக்கான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் ஜெனரல் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். அதன்படி, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தவறு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிகாரிகளில் பலர் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பஹலகம பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பொலிஸ்மா அதிபர் ஜெனரல் பிரியந்த வீரசூரியஇந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, நேர்மையை நிலைநிறுத்தவும், தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்க்கவும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார், பொலிஸ் துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் ஏனைய பொது ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை விட மிக அதிகம், அத்துடன், அவை பொது நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இந்த அதிகாரங்களை நீங்கள் தவறாகப் பயன்படுத்தினால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுவதுடன், படைக்குள் ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை பெறவேண்டும் மேலும், பொலிஸ் துறையில் தற்போது 31,000 அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை மூன்று ஆண்டுகளுக்குள் 40,000 ஆக உயரும் என்றும் கூறினார். இதை நிவர்த்தி செய்ய, இந்த ஆண்டு 10,000 புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். https://www.tamilmirror.lk/செய்திகள்/500-பொலிஸ்-அதிகாரிகள்-மீது-ஒழுக்காற்று-நடவடிக்கை/175-370632- கதிர்காம ஆலயத் தங்கத்தை விற்கத் தீர்மானித்தது ஏன்?
கதிர்காம ஆலயத் தங்கத்தை விற்கத் தீர்மானித்தது ஏன்? Jan 6, 2026 - 10:21 AM கதிர்காம ஆலயத்தின் பொறுப்பிலுள்ள தங்கக் கையிருப்பில் ஒரு பகுதியை விற்பனை செய்யத் தீர்மானித்தமைக்கான காரணம் குறித்து கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க தெளிவுபடுத்தினார். மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கண்காணிப்பு விஜயமொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். "சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கதிர்காம ஆலயத்திலுள்ள தங்கக் கையிருப்பில் ஒரு பகுதி நீரில் சிக்கியது. அவ்வாறு தங்கம் நீரில் சிக்கும் போது, ஏதேனும் ஒரு காரணத்தினால் அந்த தங்கம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு கூறுவது? அதனால்தான் நான் இந்த முடிவை எடுத்தேன். இவ்வேளையில் அரசாங்கமும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகக்கூடும் என்பதால், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஏனைய திட்டங்களுக்கு உதவவே நாம் எதிர்பார்த்தோம். மாறாக இது அரசாங்கத்துடனான ஒரு டீலோ அல்லது ஜனாதிபதியுடனான டீலோ அல்ல. அப்படி இல்லை. ஜனாதிபதி குறைந்தபட்சம் என்னிடம் இதிலிருந்து உதவி செய்யுமாறு கோரிக்கை கூட விடுக்கவில்லை. தங்கத்தை சரியான முறையில் விற்பனை செய்வேன், அதற்கான 100 வீத பொறுப்பை நான் ஏற்கிறேன். இந்தத் தங்கத்தை குறைந்த விலைக்கு விற்க இடமளிக்க மாட்டேன். 100 வீதம் சரியான விலைக்கே விற்கப்படும். அது குறித்து சமூக ஊடகங்கள் ஊடாக நான் அறிவிப்பேன். விற்பனை விலை, விற்பனை செய்வதாயின், பௌத்த விவகார ஆணையாளரின் அனுமதியுடன் விற்பனை செய்வதாயின், அதனை 100 வீதம் வெளிப்படைத்தன்மையுடன் செய்ய நான் எதிர்பார்க்கிறேன். எந்த வகையிலும் மோசடி செய்ய நான் எதிர்பார்க்கவில்லை. நான் ஆலயத்தின் சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாக யாராவது கூறினால், கடந்த நான்கு வருடங்களிலும் எனக்கு கிடைக்கும் பாதுகாவலர் கொடுப்பனவையோ, எந்தவொரு ஊதியத்தையோ நான் விஷ்ணு ஆலயத்திலிருந்து இதுவரை பெறவில்லை. நான் கதிர்காம ஆலயத்திலிருந்தும் பெறமாட்டேன்," என அவர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmk243gm703kno29n8ihcpciv- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
- 'நான் ஒரு போர்க்கைதி': அமெரிக்க நீதிமன்றத்தில் மதுரோ பேசியது என்ன?
'நான் ஒரு போர்க்கைதி': அமெரிக்க நீதிமன்றத்தில் மதுரோ பேசியது என்ன? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,நியூயார்க் நீதிமன்றத்தில் மதுரோவும் அவரது மனைவியும் ஆஜர்படுத்தப்பட்டதை சித்தரிக்கும் வரைபடம் கட்டுரை தகவல் மெடலின் ஹால்பெர்ட் நியூயார்க் நீதிமன்றத்தில் இருந்து 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ முதன்முறையாக நியூயார்க் நகர நீதிமன்ற அறைக்குள் நுழைவதற்குச் சில கணங்களுக்கு முன்பு, அவரது கால்களில் பூட்டப்பட்டிருந்த விலங்குகள் உரசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. பின்னர் அவர், நிரம்பி வழிந்த செய்தியாளர்களிடமும் பொதுமக்களிடமும் தான் இப்போதுதான் "கடத்தப்பட்டதாக" கூறினார். அவர் நுழைந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டைன், விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக மதுரோவிடம் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டார். "நான் நிக்கோலஸ் மதுரோ. நான் வெனிசுவேலா குடியரசின் அதிபர், நான் ஜனவரி 3ஆம் தேதி முதல் இங்கு கடத்தப்பட்டு இருக்கிறேன்," என்று அவர் நீதிமன்றத்தில் ஸ்பானிய மொழியில் அமைதியாக கூறினார். பின்னர் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் நீதிமன்றத்திற்காக அதை மொழிபெயர்த்தார். "நான் வெனிசுவேலாவின் கராகஸில் உள்ள எனது வீட்டில் வைத்து சிறைபிடிக்கப்பட்டேன்." என்றார் மதுரோ. மதுரோ பேசுகையில் விரைந்து குறுக்கிட்ட 92 வயதான நீதிபதி, "இவை அனைத்தையும் பற்றிப் பேசுவதற்கு ஒரு நேரமும் இடமும் வரும்" என்று கூறினார். திங்கட்கிழமை பிற்பகல் நடந்த அந்த பரபரப்பான 40 நிமிட குற்றவியல் விசாரணையின் போது, மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று வாதிட்டனர். "நான் நிரபராதி. நான் ஒரு கண்ணியமான மனிதன்," என்று மதுரோ கூறினார். ஃபுளோரஸ் தானும் "முற்றிலும் நிரபராதி" என்று கூறினார். பட மூலாதாரம்,XNY/Star Max/GC Images 63 வயதான மதுரோவும் அவரது மனைவியும் சனிக்கிழமை வெனிசுவேலாவில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்ட பின்னர், நியூயார்க் கொண்டு செல்லப்பட்டனர். இது ராணுவத் தளங்கள் மீதான தாக்குதல்களையும் கொண்ட ஒரு திடீர் இரவு நேர நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நீலம் மற்றும் ஆரஞ்சு நிற சட்டைகள் மற்றும் காக்கி நிற பேன்ட் அணிந்திருந்த அவர்கள், விசாரணை நேரத்தில் ஸ்பானிய மொழிபெயர்ப்பைக் கேட்பதற்காக ஹெட்ஃபோன் அணிந்திருந்தனர்; அவர்களுக்கு இடையில் ஒரு வழக்கறிஞர் அமர்ந்திருந்தார். மதுரோ ஒரு மஞ்சள் நிற சட்டப் புத்தகத்தில் நுணுக்கமாகக் குறிப்புகள் எடுத்துக்கொண்டார். விசாரணைக்குப் பிறகு அதைத் தன்னுடன் வைத்துக்கொள்ளலாமா என்று நீதிபதியிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். மதுரோ அறைக்குள் நுழைந்த போது, பார்வையாளர்களில் இருந்த பலரை நோக்கித் தலையசைத்து அவர்களை வாழ்த்தினார். விசாரணை நடவடிக்கைகள் முழுவதும் அவர் இந்த அமைதியான மற்றும் உணர்ச்சியற்ற தன்மையை தொடர்ந்தார். பொதுமக்கள் பகுதியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் திடீரென்று மதுரோ தனது குற்றங்களுக்காக "விலை கொடுக்க நேரிடும்" என்று கத்திய போதும் அவர் அதே அமைதியைக் கடைப்பிடித்தார். "நான் அதிபர் மற்றும் போர்க்கைதி," என்று அவர் பார்வையாளர்களில் இருந்த அந்த நபரை நோக்கி ஸ்பானிய மொழியில் உரக்க கூறினார். பின்னர் அந்த நபர் அறையிலிருந்து வெளியேற்றப்பட்டார். நீதிமன்றத்தில் இருந்த மற்றவர்களுக்கும் இந்த நடவடிக்கைகள் உணர்ச்சிப்பூர்வமானவையாக இருந்தன. வெனிசுவேலாவைச் சேர்ந்த செய்தியாளர் மைபோர்ட் பெட்டிட், மதுரோ கைது செய்யப்பட்டபோது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்கள் கராகஸில் உள்ள ஃபியூர்டே டியுனாவுக்கு அருகிலுள்ள தனது குடும்பத்திற்கு சொந்தமான வீட்டை சேதப்படுத்தியதாகக் கூறினார். தனது முன்னாள் தலைவர் அமெரிக்க மார்ஷல்களால் சிறைச்சாலை உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதைப் பார்ப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,TRUTH SOCIAL/DONALD TRUMP மதுரோவின் மனைவி ஃபுளோரஸ், வார இறுதியில் கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட காயங்களுக்காக கண்கள் மற்றும் நெற்றியில் கட்டுகளுடன் மிகவும் அமைதியாக இருந்தார். அவர் மெதுவாகப் பேசினார், அதே நேரத்தில் அவரது வழக்கறிஞர்கள் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். வழக்கு விசாரணையின் போது மதுரோவும் அவரது மனைவியும் பிணை கோரவில்லை. ஆனால் பின்னர் அவ்வாறு செய்யலாம். போதைப்பொருள் பயங்கரவாத சதி, கோகெயின் இறக்குமதி சதி, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருக்க சதி செய்ததாக மதுரோ மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மதுரோவின் மனைவி, மகன் மற்றும் பலருடன் சேர்த்து அவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த நீதிமன்ற விசாரணை மார்ச் 17ஆம் தேதி நடக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz7yq5ddzjno- அடிப்படை சுகாதார வசதி திட்டம்
சரி அண்ணை.- கருத்து படங்கள்
- சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு!
சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு! வென்னப்புவ – மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானத்தை அருந்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத மதுபானம் அருந்தி இறந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களின் உடல்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும், ஆபத்தான நிலையில் இருந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக வென்னப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பின்னர் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மரணத்திற்கான சரியான காரணம் மற்றும் சந்தேகிக்கப்படும் சட்டவிரோத மதுபானத்தின் மூலத்தைக் கண்டறிய மாரவில பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். https://athavannews.com/2026/1458531- வெனிசுலாவின் நிலைமை குறித்து இலங்கை அதிகாரப்பூர்வ அறிக்கை!
வெனிசுலாவின் நிலைமை குறித்து இலங்கை அதிகாரப்பூர்வ அறிக்கை! வெனிசுலாவில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், பலாத்காரத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்தல், தலையிடாமை, சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வு காணுதல் மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்ற சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியது. வெனிசுலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும் பதற்றத்தைக் குறைத்தல் மற்றும் உரையாடல் மூலம் அமைதியான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்து தரப்பினரையும் அழைக்கிறது. இந்த முக்கியமான கட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபையும் அதன் உறுப்புகளான ஐ.நா. பாதுகாப்பு பேரவையிலும் இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொண்டு, வெனிசுலா மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் இறையாண்மை உரிமைகளைக் கருத்தில் கொண்டு அமைதியான தீர்வை நோக்கிச் செயல்படுவது முக்கியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1458491- நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்!
நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்! நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். நுண்நிதி கடன்களைப் பெற்ற சுமார் 200 பெண்கள் இப்போது தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் பெயர் மற்றும் லோகோவை (இலட்சினை) தவறாகப் பயன்படுத்தி மில்லியன் கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போலியான மொபைல் செயலி மூலம் இந்த மோசடி நடந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் சிரேஷ்ட துணைத் தலைவர் நிரோஷன் விஜேசுந்தர தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. மேலும் இந்த மோசடி கடந்த ஆண்டு நவம்பர் முதல் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது வைப்பாளர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1458518 - இன்றைய மாவீரர் நினைவுகள் ..
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.