Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. ‘ஆர்சிபி’ அணியை ரூ.16,706 கோடிக்கு வாங்கிய ஆதித்யா பிர்லா குழும கூட்டமைப்பு ஆர்சிபி அணி வீரர்கள் வேட்டையன் Updated on: 24 Mar 2026, 10:34 pm 1 min read பெங்களூரு: நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ரூ.16,706 கோடிக்கு ஆதித்யா பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 17 சீசன்களாக பட்டம் வெல்ல முடியாமல் இருந்த ஆர்சிபி அணி, கடந்த சீசனில் (18-வது ஐபிஎல் சீசன்) முதல் முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதை அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 10 ஐபிஎல் அணிகளில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணிகளில் ஒன்றாக ஆர்சிபி அறியப்படுகிறது. இந்நிலையில், அந்த அணியின் உரிமையை கைமாற்றும் திட்டத்தில் அதன் உரிமையாளர் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (யுஎஸ்எல்) நிறுவனம் இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் அந்த அணியை ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆப் இந்தியா, பி.எக்ஸ்.பி.இ, போல்ட் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கூட்டமைப்பு ரூ.16,706 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஆர்சிபி ஆடவர் அணி மற்றும் மகளிர் அணியின் உரிமையை இந்த கூட்டமைப்பு பெற்றுள்ளது. இரண்டு அணிகளும் ஐபிஎல் மற்றும் மகளிர் பிரீமியர் லீக்கில் நடப்பு சாம்பியனாக உள்ளது. ஆர்சிபி அணியை வாங்க பல்வேறு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டிய நிலையில் தற்போது அந்த அணியின் உரிமை கைமாற்றப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ்: இதேபோல மற்றொரு ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் கல் சொமானி தலைமையிலான கூட்டமைப்பு சுமார் 15,300 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. கடந்த 2021 முதல் அந்த அணியின் முதலீட்டாளர்களில் ஒருவராக அவர் உள்ளார். ‘ஆர்சிபி’ அணியை ரூ.16,706 கோடிக்கு வாங்கிய ஆதித்யா பிர்லா குழும கூட்டமைப்பு
  3. அடேங்கப்பா தமிழின உறவு முறைகளில் தொடங்கி கணிதத்துக்குள் நுழைந்து ஒளவையின் மூதுரையில் இணைந்து ..... சூப்பர் .........! 👍
  4. முதியோர் கொடுப்பனவுக்கான விசேட அறிவிப்பு Mar 24, 2026 - 10:22 PM அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, இக்கொடுப்பனவுகள் எதிர்வரும் 26ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்காக 3,112,310,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 71,339 முதியோர்களுக்காக 356,695,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகைகள் எதிர்வரும் 26ஆம் திகதி அந்தந்தப் பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்படும் என நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது. மார்ச் 26ஆம் திகதி முதல் பயனாளிகள் தமது அஸ்வெசும கணக்குகளின் ஊடாக இப்பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmn4uq8qj0017356palpuvpml
  5. ஜப்பான் உதவியுடன் ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் நவீன சிடி ஆஞ்சியோ மற்றும் பல் மருத்துவ பிரிவு திறப்பு 24 Mar, 2026 | 04:30 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவமனையின் பிற சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து, ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையில் உள்ள பல் மருத்துவப் பிரிவு மற்றும் 4டி ஆஞ்சியோ சிடி சிகிச்சை அறையை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். இந் நிகழ்வு, சுகாதாரத் துறையில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை எடுத்துக்காட்டியது. டிசம்பர் 2023-ல் கண் மருத்துவ உபகரணங்கள் முதற்கட்டமாக வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஒப்படைப்பு இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைக் குறிக்கிறது. தற்போதைய கட்டமானது, தெற்காசியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் அதிநவீன சிடி ஆஞ்சியோகிராபி அமைப்பு மற்றும் பல் மருத்துவப் பிரிவுகளைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குகிறது. இந்தப் பங்களிப்புகள், புற்றுநோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளிட்ட தொற்ற நோய்களை (NCDs) எதிர்கொள்வதற்கான இலங்கையின் திறனை மேம்படுத்துதல், அதன்மூலம் உயிர்களைக் காப்பாற்றவும், நீண்டகால சிக்கல்களைக் குறைக்கவும், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிடி ஆஞ்சியோகிராபி அமைப்பு, சிடி ஸ்கேனிங் மற்றும் ஆஞ்சியோகிராபி செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, மிகவும் துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் நோயறிதலையும் சிகிச்சையையும் சாத்தியமாக்குகிறது. இது இலங்கையிலும் பரந்த பிராந்தியத்திலும் ஒரு முக்கிய மருத்துவ மையமாக மருத்துவமனையின் பங்கை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 10 பல் மருத்துவப் பிரிவுகளை வழங்குவது, மருத்துவமனையில் பல் மருத்துவ சேவைகளை நிறுவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் துணைபுரியும். ஜப்பானில், வாய்வழி ஆரோக்கியம் ஒட்டுமொத்த உடல் நலத்துடன் நெருக்கமாக இணைந்ததாகக் கருதப்படுவதோடு, ஆரோக்கியமான ஆயுட்காலத்தை நீட்டிப்பதில் இது ஒரு முக்கியப் பங்கையும் வகிக்கிறது. எனவே, இந்த ஆதரவானது இலங்கையில் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனை, ஜப்பான் அரசாங்கத்தின் மானிய உதவியுடன் 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. முதலில் திட்டமிடப்பட்ட 1,000 படுக்கைகளுடன் மேலும் ஒன்றைச் சேர்க்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர். ஜயவர்தன தெரிவித்த கருத்திலிருந்து உருவான, நன்கு அறியப்பட்ட “1001-படுக்கை” கதை, இந்த ஒத்துழைப்பின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு மறக்கமுடியாத அத்தியாயமாக விளங்குகிறது. பல தசாப்தங்களாக, மருத்துவ வசதிகளை மேம்படுத்துதல், இரத்த விநியோக அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றின் போது தடுப்பூசி விநியோக உதவி வழங்குதல் உள்ளிட்டவற்றின் மூலம் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு ஜப்பான் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகிறது. மேலும், இலங்கையின் சமீபத்திய பொருளாதார நெருக்கடியின் போது, சுகாதார சேவைகளைப் பராமரிப்பதற்கு அத்தியாவசியமான எரிபொருளை ஜப்பான் வழங்கியதுடன், இயற்கை பேரிடர் காலங்களில் அவசர சிகிச்சை அளிப்பதற்காக அவசர மருத்துவக் குழுக்களையும் அனுப்பியது. இந்த முயற்சிகள், குறிப்பாகத் தேவைப்படும் காலங்களில், இலங்கைக்குத் துணை நிற்பதில் ஜப்பானின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றன. இந்த முயற்சிகள், அனைத்து தனிநபர்களும் ஆரோக்கியமாகவும் கண்ணியமாகவும் வாழக்கூடிய ஒரு சுகாதார அமைப்புக்கு ஆதரவளித்து, “மக்களில் முதலீடு” மற்றும் “மனிதப் பாதுகாப்பு” ஆகியவற்றில் ஜப்பானின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன. இந்த ஆதரவு என்பது வெறும் உபகரணங்களை வழங்குவது மட்டுமல்ல, அது உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்கான அடித்தளமாகும்," எனத் தூதுவர் இசொமதா குறிப்பிட்டார். ஜப்பானின் ஆதரவுடன் கட்டப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனை, நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் சின்னமாகத் திகழ்கிறது. வருங்கால சந்ததியினருக்குப் பயனளிக்கும் ஒரு நிலையான சுகாதார அமைப்பை உருவாக்குவதற்கும், நமது கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் பங்களிக்கும் என்று நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம். அமைச்சர் ஜயதிஸ்ஸ அவர்கள், “இது வெறும் இயந்திரங்களின் நன்கொடை மட்டுமல்ல; இது நமது நோயாளிகளின் வாழ்விலும் எதிர்காலத்திலும் செய்யப்படும் ஒரு முதலீடாகும். இந்த நவீன பல் மருத்துவப் பிரிவை நிறுவுவதன் மூலம், நமது மக்களிடையே வாய்வழி நோய்களைத் தடுப்பதிலும் சிகிச்சையளிப்பதிலும் உள்ள ஒரு முக்கியத் தேவையை நாம் பூர்த்தி செய்கிறோம். இந்த தாராளமான உதவிக்காக ஜப்பான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவை உண்மையான நட்பின் செயல்கள், மேலும் இலங்கை மக்கள் இவற்றை என்றென்றும் நன்றியுடன் நினைவுகூருவார்கள்” என்று சிறப்பித்து குறிப்பிட்டார். சுகாதாரத் துறையை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை ஆழப்படுத்தவும் ஜப்பான், இலங்கையுடன் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படும். https://www.virakesari.lk/article/241830
  6. உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும் Published By: Digital Desk 3 24 Mar, 2026 | 05:05 PM 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளிடமிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (24) முதல் இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். பரீட்சார்த்திகள் அனைவரும் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும். அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை மாணவர்கள் தமது அதிபர்கள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். தனிப்பட்ட ரீதியில் பரீட்சைக்குத் தோற்றுவோர் தமது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைப் பயன்படுத்தி இணையத்தளத்தில் உள்நுழைந்து சுயமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் இன்றையதினம் முதல் ஏப்ரல் 24, 2026 வரை ஏற்றுக்கொள்ளப்படும். எக்காரணம் கொண்டும் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட மாட்டாது என ஆணையாளர் நாயகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்னர், அதன் அச்சிடப்பட்ட பிரதி ஒன்றை எதிர்காலத் தேவைகளுக்காகப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், பின்வரும் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்: அவசர தொலைபேசி இலக்கம் : 1911 தொலைபேசி: 0112785922, 0112784537, 0112786616, 0112784208 மின்னஞ்சல்: gcealexam@gmail.com https://www.virakesari.lk/article/241834
  7. என்ன தான் இருந்தாலும் முதலில் உங்களைச் சேர்த்த பெண்களுக்கு பெரிய நாமம் போட்டது சங்கடமாக இருக்கிறது.
  8. இயலாமையுடைய நபர்களை மருத்துவக் கண்ணோட்டத்தில் மாத்திரமல்லாது சமூக மற்றும் மனித உரிமைக் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும் – ஹன்சக விஜேமுனி 24 Mar, 2026 | 05:06 PM (இணையத்தள செய்தி பிரிவு) இயலாமையுடைய நபர்களை மருத்துவக் கண்ணோட்டத்தில் மாத்திரமல்லாது சமூக மற்றும் மனித உரிமைக் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும் என பிரதி சுகாதார அமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். 2026 மார்ச் 20 ஆம் திகதி இலங்கை தேசிய வைத்தியசாலையின் தேசிய வலிப்பு நோய் மைய அரங்கில் நடைபெற்ற, இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை வழங்குவது தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பிராந்தியத்தில் உள்ள ஏனைய மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை இவ்விடயத்தில் சில முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், சுகாதார சேவைகளைப் பெறுவதில் இயலாமையுடைய நபர்கள் இன்னமும் பல பௌதீக, தகவல் தொடர்பு மற்றும் மனப்பான்மை சார்ந்த தடைகளை எதிர்கொள்வதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார். சமூகத் தடைகளைக் கண்டறிவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மனப்பான்மை மாற்றத்தை உருவாக்குவதற்கும் தேவையான கொள்கை மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது எனக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், இயலாமையுடைய நபர்களுக்கு சுகாதாரத் தகவல்களைப் பல வடிவங்களில் வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இயலாமையுடைய நபர்கள் மீது பாரம்பரியாகக் காணப்படும் மருத்துவக் கண்ணோட்டத்தைக் கடந்து, சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் ஒரு சேவையை வழங்குவதற்காக, சுகாதாரப் பணியாளர்களை முறையாக உணர்வூட்டுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த அனைத்து விடயங்களிலும் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் ஆற்றிவரும் பங்களிப்புப் பாராட்டத்தக்கது. இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக அமைச்சுக்களில் நடத்தப்பட்டுவரும் செயலமர்வின் இரண்டாவது செயலமர்வு சுகாதார அமைச்சில் நடைபெற்ற போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அனுசரணையுடன், சுகாதார அமைச்சின் பணியாளர்களை இலக்காகக் கொண்டு, இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினால் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சுகத் வசந்த.த சில்வா, 'இயலாமையற்ற சமூக வாழ்க்கையை' அடைவதை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக விழிப்புணர்வு செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர், தற்போதுள்ள இலவச சுகாதார சேவையைப் பாராட்டியதுடன், இந்த நாட்டில் வசிக்கும் 16 இலட்சத்திற்கும் மேற்பட்ட இயலாமையுடைய நபர்களுக்கு சுகாதார சேவைகளைப் பெறுவதில் உடல் ரீதியான மற்றும் மனப்பான்மை ரீதியான தடைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். சுகாதார சேவைகளைப் பெறுவதற்கான உரிமை என்பது வாழ்வதற்கான ஒரு அடிப்படை உரிமை. மேலும், எதிர்கால சுகாதார வல்லுநர்கள் தங்கள் பயிற்சிக் காலத்திலிருந்தே இந்த உரிமை குறித்து விழிப்புணர்வு பெறுவதை உறுதி செய்வதற்காக, மருத்துவ மற்றும் தாதியர் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இயலாமையுடைய நபர்கள் குறித்த ஒரு புதிய கண்ணோட்டமும், ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவும் சேர்க்கப்பட வேண்டும். இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான (வைத்தியர்) பத்மநாதன் சத்யலிங்கம், இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் அசோக வீரவர்தன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத் திணைக்களத்தின் பேராசிரியர் சமாரி வீரரத்ன, சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் (பொது சுகாதார சேவைகள்) பிரதி பணிப்பாளர் நாயகம் (வைத்தியர்) விந்தியா குமாரபேலி, சுகாதார அமைச்சின் இளைஞர், முதியோர் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கான பிரிவின் பணிப்பாளர் நாயகம் (வைத்தியர்) நிஷானி உபேசேகர மற்றும் இயலாமையுடைய சமூகத்தின் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர். வைத்தியசாலையின் பிரிவுகளில் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமை, சில வைத்தியசாலை கவுண்டர்கள் உயரமாகக் காணப்படுகின்றமை, அறுவை சிகிச்சை படுக்கைகள் காரணமாக இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், மலசலகூடங்களில் இயலாமையுடைய நபர்களுக்கு உரிய வசதிகள் இல்லாமை போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றமை இங்கு எடுத்துக் கூறப்பட்டது. வரிசைகளில் காத்திருப்பதில் காணப்படும் சிரமங்கள் மற்றும் அறிவுசார்ந்த இயலாமையுடைய நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அடையாள அட்டைகளின் தேவையும் வலியுறுத்தப்பட்டது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வைத்தியசாலைகளில் சாய்வுப் பாதைகள், இயலாமையுடைய நபர்களுக்கான கழிப்பறைகள் மற்றும் சிறப்பு மருந்து மையங்கள் போன்ற அணுகல் வசதிகளை அமைப்பதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அடிப்படை மருத்துவமனைகளில், அடிப்படை சைகை மொழியில் பயிற்சி பெற்ற பணியாளர்களைக் கொண்ட சோதனை 'ஆதரவு மையங்கள்' அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் அதிகாரிகள், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) திட்ட அதிகாரி அனோஜிதா சிவாஸ்கரன், அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் இயலாமையுடைய நபர்களின் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/241829
  9. பாஞ்ச் ஐயா, இது கற்பனை புனைவோ அல்லது உண்மையோ? சித்தப்பாவிடம் அடிவாங்கி பின்னர் யாழ் இணையத்தில் இணைந்து கருத்துக்கள் பகிரும் அந்த உறவு யார்? இளம் வயது உடையவரோ?
  10. சீமெந்து விலை அதிகரிப்பு Published By: Digital Desk 3 24 Mar, 2026 | 01:00 PM உற்பத்தி நிறுவனங்களால் சீமெந்து விலை சுமார் 150 ரூபாவிலிருந்து 175 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகரித்த உற்பத்திச் செலவுகளே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மணல், சரளைக்கல் மற்றும் இரும்பு உட்பட முக்கிய கட்டுமானப் பொருட்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் டாரின்டன் போல் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/241813
  11. பா.ஜ .க. வின் தாமரை சின்னத்தில்.... வாசன் மூப்பனாரின் த.மா.கா. போட்டி. த.மா.கா. வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு. Sun News Tamil
  12. ஈரான் அதிஉயர் தேசிய சபைக்கு புதிய செயலாளர் Mar 24, 2026 - 05:52 PM ஈரானின் அதி உயர் தேசிய பாதுகாப்புச் சபையின் புதிய செயலாளராக மொஹமட் பாகர் சொல்காதர் (Mohammad Bagher Zolghadr) நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தை மேற்கோள் காட்டி ஐ.ஆர்.என்.ஏ (IRNA) செய்தி வௌியிட்டுள்ளது. இஸ்ரேல் - அமெரிக்க கூட்டு தாக்குதலில் ஈரானின் அதி உயர் தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளராக செயற்பட்ட அலி லரிஜானி கடந்த வாரம் கொல்லப்பட்டார். அவருக்கு பதிலாகவே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmn4l0xdf000x356p4kkyj2sb
  13. ஏர்பஸ் ஊழல் விவகாரம் ; பிடியாணை பிறப்பிப்பது தொடர்பில் ஏப்ரல் 02 இல் நீதிமன்றம் தீர்மானம் Published By: Digital Desk 3 24 Mar, 2026 | 01:07 PM ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி மற்றும் முன்னாள் குழும உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் மகன் ஷமீந்திர ராஜபக்ஷ ஆகியோர் குற்றச்சாட்டில் சந்தேகநபராக பெயரிடப்பட்டவர்கள் மீது பிடியாணை உத்தவை பிறப்பிப்பதா என்பதைப் பற்றிய தீர்மானத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி அறிவிக்க உள்ளதாகத் கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/241812
  14. புவியின் வரலாறு காணாத அளவில் வெப்பநிலை அதிகரிப்பு ; உலக வானிலை அமைப்பு கடும் எச்சரிக்கை! Published By: Digital Desk 3 24 Mar, 2026 | 10:35 AM புவியின் காலநிலை இதுவரை கண்டிராத ஒரு அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தால் உலகம் "மீள முடியாத" அழிவை நோக்கிச் செல்வதாகவும் உலக வானிலை அமைப்பு தனது வருடாந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது. திங்கட்கிழமை (23) வெளியிடப்பட்ட 'உலகளாவிய காலநிலையின் நிலை' என்ற அந்த அறிக்கையில், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியே உலகின் வரலாற்றில் பதிவான மிக வெப்பமான 11 ஆண்டுகளாகும். கடந்த 2025 ஆம் ஆண்டானது 1850 களுக்குப் பின்னர் பதிவான 2 ஆவது அல்லது 3 ஆவது மிக வெப்பமான ஆண்டாகக் கருதப்படுகிறது. புவி வெப்பமடைதலுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 1.43°C அதிகமாகப் பதிவாகியுள்ளது. புவி சூரியனிடமிருந்து பெறும் வெப்பத்தை விடவும் குறைவான வெப்பத்தையே விண்வெளிக்குத் திருப்பி அனுப்புகிறது. வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஒக்சைட்டு, மீத்தேன் போன்ற வாயுக்கள் கடந்த 8 இலட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதால், பூமி அதிகப்படியான வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. இந்த அதிகப்படியான வெப்பத்தில் 91 சதவீதத்தை சமுத்திரங்களே உறிஞ்சுகின்றன. இதனால் கடல் நீர் வெப்பமடைதல் இருமடங்காக அதிகரித்துள்ளதுடன், கடல்வாழ் உயிரினங்களும் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால் கடல் மட்டம் அபாயகரமாக அதிகரித்து வருகின்றது. 1993 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 இல் கடல் மட்டம் சுமார் 11 சென்றிமீற்றர் அதிகரித்துள்ளது. இது கடலோர நகரங்கள் மற்றும் சிறிய தீவு நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், "புவி தனது எல்லைகளைக் கடந்து தள்ளப்படுகிறது. காலநிலை குறிகாட்டிகள் அனைத்தும் சிவப்பு நிறத்தில் ஒளிர்கின்றன. இது தற்செயலானது அல்ல, இது செயல்படுவதற்கான ஒரு அழைப்பு எனத் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் 'லா நினா' காலநிலை மாறி, 2026 ஆம் ஆண்டின் இறுதியில் 'எல் நினோ' தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்டால், 2027 ஆம் ஆண்டு உலக வெப்பநிலை புதிய உச்சங்களைத் தொடும் என விஞ்ஞானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். காலநிலை மாற்றம் என்பது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, அது உலகளாவிய பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கும் விடுக்கப்பட்டுள்ள சவால் என ஐநா எச்சரித்துள்ளது. படிம எரிபொருட்களிலிருந்து விலகி புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை மீண்டுமொருமுறை உலக நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/241801
  15. Today
  16. அமெரிக்கா - இரான் இடையே மத்தியஸ்தராக பாகிஸ்தான் உருவெடுக்கிறதா? புதிய தகவல் பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,திங்கட்கிழமை அன்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன" என்று கூறினார். 24 மார்ச் 2026, 06:12 GMT வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பாகிஸ்தான் ஒரு சாத்தியமான மத்தியஸ்தராக உருவெடுக்கக்கூடும் என்று பிபிசியின் வெள்ளை மாளிகை செய்தியாளர் பெர்ன்ட் டிப்ஷ்மேன் ஜூனியர், ஃபைனான்சியல் டைம்ஸ் மற்றும் ஆக்ஸியோஸ் ஆகிய இதழ்களின் செய்திகளை மேற்கோள் காட்டி கூறுகிறார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா மற்றும் இரானின் மூத்த தலைவர்களின் சந்திப்பை இஸ்லாமாபாத்தில் நடத்தலாம் என்று பாகிஸ்தான் முன்மொழிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமெரிக்காவோ அல்லது இரானோ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராக உருவெடுத்திருப்பது ஆச்சர்யமளிக்கவில்லை என்று பல அமெரிக்க உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். பாகிஸ்தான் இரானுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது, ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்க நிர்வாகத்துடன் இணக்கமான உறவைக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் கடந்த ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் டிரம்பைச் சந்தித்தார். செப்டம்பர் மாதப் பயணத்தின் போது, ஜெனரல் முனீருடன் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பும் சென்றிருந்தார். இந்தியாவுடனான மோதல்களின் போது டிரம்ப் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சிகளுக்காக, பாகிஸ்தான் கடந்த ஆண்டு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஷெரீப்பின் இந்த நடவடிக்கை டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள பலருக்கும் பிடித்திருந்தது. பெசெஷ்கியனிடம் பேசிய ஷெரீஃப் பட மூலாதாரம்,Iranian Presidency / Handout/Anadolu via Getty Images படக்குறிப்பு,பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் டிசம்பர் 12, 2025 அன்று நடைபெற்ற சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை மன்றத்தில் கலந்துகொண்டனர். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் திங்களன்று தொலைபேசியில் பேசினார். ஷாபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் தளப் பதிவில், "எனது சகோதரர் அதிபர் முனைவர் மசூத் பெசெஷ்கியானுடன் பேசி அவருக்கு ஈத்-உல்-பித்ர் மற்றும் நவ்ரூஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். "ஓர் அண்டை நாடாகவும் சகோதர தேசமாகவும், துணிச்சலான இரானிய மக்களுக்கு பாகிஸ்தானின் ஒற்றுமையை வெளிப்படுத்தினேன். விலைமதிப்பற்ற உயிர்களை இழந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களுக்காக பிரார்த்தித்தேன்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார். "நாங்கள் வளைகுடா பிராந்தியத்தின் தீவிரமான சூழல் குறித்து விவாதித்தோம். பதற்றங்களைக் குறைக்கவும், பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் மற்றும் ஒரு விவேகமான தீர்வைக் காணவும் அவசரத் தேவை உள்ளது என்பதில் இருவரும் உடன்பட்டோம்." "இஸ்லாமிய சமூகத்தினரிடையே ஒற்றுமை மிகவும் முக்கியமானது என்றும், அமைதியை மேம்படுத்துவதில் உதவிகரமான பங்கை ஆற்ற பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது என்றும் நான் கூறினேன்" என ஷாபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் இரானுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது. அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் இரானின் உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி காலமான பிறகு, முதன்முதலில் இரங்கல் தெரிவித்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும். போரின் முடிவு குறித்த முரண்பட்ட தகவல்கள் பட மூலாதாரம்,Olmo Blanco/Getty Images படக்குறிப்பு,ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிட்டில் இரான் போருக்கு எதிரான போராட்டம் பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னரின் கூற்றுப்படி, இரான் போர் முடிவுக்கு வருவது குறித்து திங்கள் கிழமையும் முரண்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தது. அமெரிக்காவிலிருந்து வெளிவந்த ஒரு செய்தியின்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் டொனால்ட் டிரம்பின் நெருக்கமான தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் கலந்துகொண்டனர். எகிப்து, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தர்களாக செயல்பட்டதாக மற்ற நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன என்று கார்ட்னர் கூறுகிறார். கடந்த வாரம், சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் அரபு மற்றும் இஸ்லாம் பெரும்பான்மை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூடினர். அங்கு அவர்கள் போரில் இரானின் நடவடிக்கைகளைக் கண்டித்ததோடு, இஸ்ரேலின் தாக்குதல்களையும் விமர்சித்தனர். குறிப்பாக, 'சௌத் பார்ஸ்' எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு அவர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர். போரின் இந்த போக்கு தான் இப்பகுதியை அதிகம் சீர்குலைத்து வருகிறது. முன்னதாக ராணுவத் தளங்கள் தாக்கப்பட்ட நிலையில், இப்போது பொருளாதார தளங்கள் தாக்குதல் இலக்குகளாகி வருகின்றன. முன்னதாக, போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக திங்கள்கிழமை டிரம்ப் கூறியிருந்தார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுகுறித்து டிரம்புடன் பேசியதாகவும், அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மூலம் இரான் போர் குறித்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நோக்கங்கள் 'நிறைவேற்றப்படும்' என்றும் கூறினார். ஆனால் இரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் இதனை மறுத்துள்ளார். இது 'போலிச் செய்தி' என்றும், எண்ணெய் சந்தையில் 'தாக்கத்தை ஏற்படுத்த' இது பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். தொடரும் தாக்குதல்கள் பட மூலாதாரம்,Fatemeh Bahrami/Anadolu via Getty Images படக்குறிப்பு,தெஹ்ரானில் உள்ள 8 மாடிக் கட்டிடம் ஒன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் அழிக்கப்பட்டது (புகைப்படம்: மார்ச் 23, 2026) பேச்சுவார்த்தைகள் குறித்த டிரம்பின் அறிக்கை ஒருபுறம் இருக்க, லெபனான், இரான் மற்றும் வளைகுடா நாடுகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பிறகு லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் பல இடங்களிலிருந்து புகை மூட்டம் எழுவதைக் காண முடிந்தது. இதற்கிடையில், சௌதி அரேபியா தனது கிழக்கு மாகாணத்தில் நான்கு டிரோன்களை பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளது. அதேவேளையில், இரானுடனான பேச்சுவார்த்தை குறித்த டிரம்பின் அறிக்கையைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததாக பிபிசி செய்தியாளர் அந்தோணி ஜூர்ச்சர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பது இப்போதைக்கு மிக முன்கூட்டிய ஒன்றாகிவிடும் என்று பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c80mlny213go
  17. மின்சார உட்கட்டமைப்புகள் தாக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிப்பு Published By: Digital Desk 3 24 Mar, 2026 | 04:32 PM ஈரானின் மின்சார உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தும் தனது எச்சரிக்கையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக மீளப்பெற்ற சில மணிநேரங்களிலேயே, அந்நாட்டின் இரு முக்கிய எரிவாயு நிலையங்கள் மற்றும் குழாய்த்தொடர் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஈரானின் 'பார்ஸ்' (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் விபரங்கள் வருமாறு: மத்திய ஈரானின் இஸ்ஃபஹான் மாகாணத்திலுள்ள காவே வீதியில் அமைந்துள்ள எரிவாயு விநியோகத்தை நிர்வகிக்கும் பிரதான கட்டடம் மற்றும் எரிவாயு விநியோகச் சீர்மையை உறுதிப்படுத்தும் நிலையம் ஆகிய இரு முக்கிய இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களால் குறித்த நிலையங்கள் "பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக" ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, ஈரானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கொரம்ஷாஹர் மின் உற்பத்தி நிலையத்திற்கு எரிவாயுவை விநியோகிக்கும் பிரதான குழாய்த்தொடர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/241831
  18. புதுப்பொலிவு பெறும் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் – ஏப்ரல் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு 24 Mar, 2026 | 03:52 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) கொழும்பின் முக்கியமான போக்குவரத்து மையங்களில் ஒன்றான புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் விரிவான புதுப்பிப்பு பணிகளுக்குப் பின்னர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக பயணிகளின் நெரிசல், வசதிகளின் பற்றாக்குறை மற்றும் கட்டமைப்பு சீர்கேடு போன்ற பிரச்சினைகள் நிலவிய நிலையில், இந்த பஸ் நிலையம் முழுமையான மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய திட்டத்தின் கீழ், பயணிகள் காத்திருப்பு பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பேருந்துகளின் வருகை மற்றும் புறப்பாட்டு நேரங்களை தெளிவாகக் காட்டும் டிஜிட்டல் தகவல் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு மேலாக, மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் வசதிக்காக உணவகங்கள், ஓய்வு இடங்கள் மற்றும் வணிக நிலையங்களும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதுப்பிப்பு திட்டம், கொழும்பு நகரின் போக்குவரத்து முகாமையை மேம்படுத்துவதுடன், நகரின் அடிப்படை வசதிகளை நவீனமயமாக்கும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாகும். புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தியமைச்சின் தலைமையில் தேசிய திட்டத்தின் ஒரு முக்கிய திட்டமாக இலங்கை விமானப்படையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றது. இத் திட்டம் 424 மில்லியன் ரூபாய் நிதி செலவில் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ், முதலாவது தளம் பேருந்து தரிப்பிட நிலையமாகவும், இரண்டாவது தளம் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஓய்வு அறைகளுக்காகவும், மூன்றாவது தளம் நிர்வாக மற்றும் செயல்பாட்டு சேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படும். இதேவேளை மத்திய பஸ் தரிப்பிடத்தில் அனைத்து வகையான போக்குவரத்து சேவைகள் தொடர்பில் அறிந்துகொள்ளும் வகையில் தகவல் அறியும் மத்திய நிலையமொன்றும் அமைக்கப்படுகின்றது. ஏப்ரல் மாதம் முதல் இந்தப் பஸ் நிலையம் முழுமையாக செயல்படத் தொடங்கும் நிலையில், பொதுமக்கள் சுலபமான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை பெறுவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/241826
  19. இரான் கடற்கரைக்கு அருகில் சென்று ஹோர்மூஸ் நீரிணையை 2 இந்திய கப்பல்கள் கடந்தது எப்படி? பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,இந்த மாத தொடக்கத்தில் ஹோர்மூஸ் நீரிணையை கடந்து இந்தியா வந்த கப்பல் கட்டுரை தகவல் ஸ்ருதி மேனன் 24 மார்ச் 2026, 11:48 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் பிப்ரவரி 28 அன்று இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரைத் தொடங்கியதிலிருந்து, ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் டேங்கர் கப்பல்களின் எண்ணிக்கை மிகக் குறைந்துள்ளது. கப்பல் போக்குவரத்திற்கு எதிராக இரான் விடுத்துள்ள அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பயணத்தை மேற்கொள்ளும் பல கப்பல்கள், தங்களைக் கண்டறிவதைக் கடினமாக்குவதற்காக தங்களின் ஏஐஎஸ் (AIS) கண்காணிப்புக் கருவிகளை அணைத்து வைத்துள்ளன. ஆனால் ஒரு சில கப்பல்கள் தங்களின் டிரான்ஸ்மிட்டர்களை தொடர்ந்து இயக்கி வருகின்றன. இது தங்களைத் தாக்க மாட்டார்கள் என்ற அதிகப்படியான நம்பிக்கையை உணர்த்துகிறது. நேற்று, மரைன் டிராஃபிக் தரவுகளின்படி மூன்று கப்பல்கள் தங்களின் டிரான்ஸ்மிட்டர்கள் இயங்கிய நிலையில் அந்தப் பயணத்தை மேற்கொண்டன. அந்தக் கப்பல்கள் ஒன்றாக நெருங்கிப் பயணிப்பதையும், வழக்கத்தை விட இரானிய கடற்கரைக்கு மிக அருகில் உள்ள, குறைவாகப் பயன்படுத்தப்படும் பாதையைத் தேர்ந்தெடுப்பதையும் காண முடிந்தது. படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணையை 3 கப்பல்களும் கடந்த பாதை 3 கப்பல்கள் அந்த மூன்று கப்பல்கள், இந்தியாவிற்குச் சொந்தமான திரவப் பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) டேங்கர்களான பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த் மற்றும் சீனாவிற்குச் சொந்தமான ரசாயன டேங்கர் பிரைட் கோல்ட் ஆகும். கடந்த வாரம், பாகிஸ்தானுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் டேங்கர் ஒன்று இரான் கடற்கரைக்கு அருகில் அதே பாதையில் தனது கண்காணிப்புக் கருவி இயக்கப்பட்ட நிலையில் சென்றது. அமெரிக்கப் பாதுகாப்பு சிந்தனைக் குழுவான ரேண்ட் கார்ப்பரேஷனின் மூத்த ஆராய்ச்சியாளரும், முன்னாள் அமெரிக்கக் கடற்படை கேப்டனுமான பிராட்லி மார்ட்டின், ''ஹோர்மூஸ் நீரிணையில் எங்காவது கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருந்தால், இந்தப் பாதுகாப்பான பாதையை இரான் வழங்கியிருக்கலாம். இந்தக் கப்பல்கள் அந்தப் பாதையைப் பின்பற்றியிருக்கலாம்'' என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணை அருகே தாக்கப்பட்ட ஒரு கப்பல் முன்பு சிக்னல் அணைப்பு முன்னதாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இரு திரவ பெட்ரோலிய எரிவாயு கப்பல்களான நந்தா தேவி மற்றும் சிவலிக் ஆகியவை கடந்த 14-ஆம் தேதி ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்தன. கப்பல்களின் பயணத் தகவல்கள்படி, நந்தா தேவி மற்றும் சிவலிக் ஆகிய இரு கப்பல்களும் கத்தாரில் உள்ள துறைமுகத்தில் எரிவாயுவை ஏற்றியுள்ளன. அதன் பிறகு அவை ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்கும்போது தானியங்கி அடையாள அமைப்பு (AIS - ஏஐஎஸ்) என்ற சிக்னலை அணைத்துவிட்டு பயணம் செய்தன. போரின் மையமான ஹோர்மூஸ் நீரிணை உலகின் கடல்வழிப் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமாக உள்ள ஹோர்மூஸ் நீரிணையை போர் தொடங்கியதில் இருந்து இரான் கட்டுப்படுத்தி வருகிறது. இதனால் கப்பல் போக்குவரத்து தடைபட்டு கச்சா எண்ணெய் முதல் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. கடந்த சனிக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் இரானுக்கு கெடு ஒன்றை விதித்தார். 48 மணி நேரத்திற்குள் ஹோர்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால் இரானின் மின் நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்திருக்கிறார். டிரம்ப் தனது மிரட்டலை செயல்படுத்தினால், இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து எரிசக்தி கட்டமைப்புகளையும் குறிவைத்து தாக்குவோம் என இரானும் பகிரங்கமாக எச்சரித்தது. ஆனால், இரானோ தங்கள் எதிரிகளுக்கு மட்டுமே ஹோர்மூஸ் மூடப்பட்டிருப்பதாக கூறுகிறது. இரானிய ஊடக செய்திகளின்படி, அமெரிக்கா இரானின் எரிசக்தி கட்டமைப்புகளை இலக்கு வைத்தால் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம் என்றும், அழிக்கப்பட்ட மின் நிலையங்கள் மீண்டும் கட்டி முடிக்கப்படும் வரை ஹோர்மூஸ் திறக்கப்படாது என்றும் இரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை எச்சரித்திருக்கிறது. பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு,14-ஆம் தேதி ஹோர்மூஸ் நீரிணையை கடந்த இந்திய கப்பல் இருப்பினும் இரானுடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் நடந்திருப்பதால் இரானின் மின் நிலையங்கள் மீதான தாக்குதல்களை தாமதப்படுத்தியிருப்பதாக திங்களன்று டிரம்ப் அறிவித்தார். ஆனால் இரானின் நாடாளுமன்ற சபாநாயகர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதை மறுத்ததுடன் அதை ''போலிச் செய்தி'' என நிராகரித்தார். அதே நேரம் பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் மூத்த இரான் அதிகாரி ஒருவர் "மத்தியஸ்தர்கள் வழியாக அமெரிக்காவிலிருந்து சில முன்மொழிவுகள் எங்களிடம் வந்துள்ளன. அவை தற்போது பரிசீலனையில் உள்ளன" என தெரிவித்தார். ''இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் நடக்கக்கூடிய பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு தயாரிப்பாகும். ஆனால் பேச்சுவார்த்தைகள் நடக்கவில்லை, அவை உறுதிப்படுத்தப்படவும் இல்லை'' என சிபிஎஸ் கூறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78rdpp514go
  20. தற்போது வரை (24.03.2026) திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை! Vikatan EMagazine
  21. படிப்பதினால் மட்டும் அறிவு வளர்வதில்லை. என்னடா விளையாட்டு வீட்டைபோய் படியிங்கோடா. அவன் சித்தப்பாவின் அதட்டல் அவனையும் அவன் அண்ணனையும் மற்றும் நண்பர்களையும் நடுங்கி ஒடுங்கவைக்கும். அவர் கையில் அருகே இருக்கும் வேலியில் ஒடித்த நீண்ட கிளிசூரியோ பூவரசம் கம்பு ஒன்று மேலும் கீழும் ஆடி அண்ணன் தம்பி இருவரினதும் கால் கைகளைப் பதம்பார்க்கும். இது அவர்கள் பள்ளிக்கூடம் முடிந்த மாலை நேரங்களில், லீவு நாட்களில்கூட அவர்கள் விளையாடும் இடங்களில் நடக்கும் சம்பவம். சித்திரையில் அதுவும் வருடப்பிறப்பு அன்று தம்பி பிறந்த தோசம் காரணமாகவே சில மாதங்களில் அவர்கள் அப்பா இறந்துவிட்டதாக சொந்தங்களால் காரணம் கூறப்பட்டது. காரணம் எதுவக இருந்தாலும், பெரியப்பாக்களும் சித்தப்பாவுமே இவர்கள் குடும்பத்துக்கு உதவிகள் செய்து அவர்களைப் பாதுகாத்து வந்தார்கள். ஆனாலும் சித்தப்பா சற்று வித்தியாமானவர். தான் பெற்ற பிள்ளைகளை மிகுந்த செல்லம் கொடுத்து வளர்க்கும் அவர் தன் அண்ணனின் பிள்ளைகளை அதட்டி ஒடுக்கி வைத்திருப்பதில் கர்வம் கொள்பவர். அண்ணனின் பிள்ளைகள் என்றாலும் அவர்களைச் சீராக வளர்க்கிறேன் என்று தன்னை ஒரு சிறந்த காவலனாக காட்டிக்கொள்வதில் பெருமை கொள்பவராக இருந்தார். அண்ணனின் பிள்ளைகளை ஒரு டாக்டராகவோ, எஞ்சினியராகவோ வளர்த்தெடுப்பேன் என்று எல்லோரிடமும் சொல்லி இறுமாப்படைவார். ஆனால் “படிடா படிடா” என்று படுத்துபவருக்கு என்ன படிக்கவேண்டும் எப்படிப் படிக்கவேண்டும் என்று சொல்லவோ வழிகாட்டவோ தெரியாது. ஒரு டாக்டர், எஞ்சினியர் என்றால் தன் பிள்ளைகளைத் தன்வழி வருவதற்கான வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்து வளர்க்க முடியும். கடையொன்றில் சிப்பந்தியாக வேலைபார்க்கும் சித்தப்பாவால் உப்பு எப்படிக் கட்டுவது, சீனி, சக்கரை எப்படிச் சரை கட்டுவது என்பதைத்தவிர வேறென்ன சொல்லிக்கொடுக்க முடியும். “அடியாதமாடு படியாது” என்பது போன்ற முதுமொழிகளுகான விளக்கங்களை தனது பெரியப்பாவின் பிள்ளைகள்மூலமே பரிசோதனை செய்து விளங்கிக்கொள்வது வழக்கமான செயலாகியது. கல்கி, குமுதம், ஆனந்தவிகடனில் வரும் கதைகள், நாவல்கள், கட்டுரைகளைப் படித்து தம்பிக்கு தானும் ஏதாவது எழுதவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனாலும் அவன் கையெழுத்தை அவனாலேயே திரும்ப வாசிக்க முடியவில்லை. அத்தனை மோசமான எழுத்து வடிவங்கள். இருந்தும் சிறந்த எழுத்தாளர், திரைப்படங்களுக்கும் கதை வசனங்கள் எழுதி பாராட்டுகள் வாங்கும் கலைஞர் கருனாநிதியின் கையெழுத்து ரெம்பவும் மோசமானது என்பதையும், அவர் எழுதுவதை வாசிக்கக் கூடிய ஒருவரை உதவிக்கு வைத்துள்ளனர் என்ற செய்தியையும் அவன் அறியவந்ததும், வந்த தயக்கம் நீங்கியது. அவன் எழுத்தையும் வாசித்து அறியக்கூடியவர்கள் உலகில் இல்லாது இருப்பார்களா? சூரியன் காலையில் பிரகாசமாக எழுந்தான், மாலையில் ஒளியிழந்து மறைந்தான், சந்திரன் மலர்ந்தான் என்று ஏதேதோ எழுதி வீரகேசரிக்கு அனுப்பும் எண்ணத்தோடு அண்ணா அக்காமாரிடம் காட்டினான், அவர்கள் அதனைச் சிரமத்தோடு வாசித்தாலும் பின்பு செய்த பரிகாசம் அவன் ஆர்வத்தை அடக்கிச் சோர்வடையச் செய்தது. அவ்வேளையில்தான் யாழ் இணையம் என்ற ஒரு களத்தை திரு மோகன் அவர்கள் ஆரம்பித்தார். களத்தில் இணையும் வழிமுறைகளும் இருக்கவே அவனும் இணைந்து உறுப்பினராகி எழுத ஆரம்பித்தான். சித்தப்பா பிள்ளைகளின் வேண்டுதலில், சித்தப்பா தன் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுத்த கணனியில், அவர் வேலைக்குச் செல்லும் நேரங்களில் சென்று பயிற்சி பெற்றுவந்தது இணையத்தில் எழுத உதவியது. இணையம் அவனையும் அரவணைத்தது. சித்தப்பாவின் பிள்ளைகள் அவர்கள் அப்பனைப்போல் அல்லாது நண்பர்கள்போல் பழகினார்கள். யாழ்கள உறவுகளும் அவன் எழுதும் தமிழை வரவேற்றுப் பாராட்டவே வானத்தில் பறந்தான். இன்றும் பறக்கிறான். பறக்கும்போது அவன் சிந்தனையில் எழுந்த, தமிழின் பெருமைகளை அறிந்த, அறிந்தும் மறந்த சில விடயங்களைத் திரும்பவும் நினைவூட்ட விரும்பினான். அதனால் அவன் விருப்பமும் கீழே பதிவாகியுள்ளது. தமிழினம் முதல் தலைமுறை: நாம் இரண்டாம் தலைமுறை: தாய் தந்தை மூன்றாம் தலைமுறை: பாட்டன் பாட்டி நான்காம் தலைமுறை: பூட்டன் பூட்டி ஐந்தாம் தலைமுறை: ஓட்டன் ஓட்டி ஆறாம் தலைமுறை: சேயோன் சேயோள் ஏழாம் தலைமுறை: பரன் பரை பரன்+பரை இதுவே பரம்பரை எனும் தமிழ்சொல்லாக மருவி வழக்கில் உள்ளது. ஒரு தலைமுறை என்பது தோராயமாக 60 வருடங்கள் என்றும், 7 தலைமுறை 480 வருடங்கள் என்றும் ஈரேழு தலைமுறை 960 வருடங்கள் என்றும்(கிட்டத்தட்ட 1000 வருடங்கள்) ஆக பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு பதின்நாங்கு தலைமுறையாக என்று பொருள் வருமாறு தமிழ் மொழி வகுத்துள்ளது. இப்படியான அமைப்பு வேறெந்த மொழிகளிலும் இருப்பதாகத் தெரியவில்லை. எண்கணிதம் 1= ஒன்று -one 10= பத்து -Ten 100= நூறு -Hundred 1000= ஆயிரம் -Thouand 10000= பத்தாயிரம் -Ten Thousand 100000= நூறாயிரம் -Hundred Thousand 1000000= பத்துநூறாயிரம் -One Million 10000000= கோடி -Ten Million 100000000= அற்புதம் - One Hundred Million 1000000000= நிகரபுதம் - One Billion 10000000000= கும்பம் - Ten Billion 100000000000= கணம் - Hundred Billion 1000000000000= கற்பம் - One Trillion 10000000000000= நிகற்பம் - Ten Trillion 100000000000000= பதுமம் - Hundred Trillion 1000000000000000= சங்கம் - One Zillion 10000000000000000= வெல்லம் - Ten Zillion 100000000000000000= அன்னியம் - Hundred Zillion 1000000000000000000= அர்த்தம் - ? மேலும் எழுத ஆங்கிலத்தில் சொற்கள் தெரியவில்லை. 10000000000000000000= பராத்தம் - ? 100000000000000000000= பூரியம் - ? 1000000000000000000000= முக்கோடி - ? 10000000000000000000000= மகாயுகம் - ? நாம் கெடுவதற்குக் காரணங்களை நமது ஒளவை மூதாட்டியாரும் அழகாகச் சொல்லியுள்ளார். 01 பார்க்காத பயிரும் கெடும் 02 பாசத்தினல் பிள்ளையும் கெடும் 03 கேளாத கடனும் கெடும் 04 கேட்டால் உறவும் கெடும் 05 தேடாத செல்வம் கெடும் 06 தெகிட்டினால் விருந்தும் கெடும் 07 ஓதாத கல்வியும் கெடும் 08 ஒழுக்கமில்லா வாழ்வும் கெடும் 09 சேராத உறவும் கெடும் 10 சிற்றின்பம் பெயரும் கெடும் 11 நடாத நட்பும் கெடும் 12 நயமில்லா சொல்லும் கெடும் 13 கண்டிக்காத பிள்ளை கெடும் 14 கடன்பட்டால் வாழ்வு கெடும் 15 பிரிவால் இன்பம் கெடும் 16 பணத்தால் அமைதி கெடும் 17 சினமிகுந்தால் அறமும் கெடும் 18 சிந்திக்காத செயலும் கெடும் 19 சோம்பலினால் வளர்ச்சி கெடும் 20 சுயமில்லா வேலை கெடும் 21 மோகித்தால் முறைமை கெடும் 22 முறையற்ற உறவும் கெடும் 23 அச்சத்தால் வீரம் கெடும் 24 அறியாமையால் முடிவு கெடும் 25 உழாத நிலமும் கெடும் 26 உழைக்காத உடலும் கெடும் 27 இறைக்காத கிணறும் கெடும் 28 இயற்கையை அழிக்கும் நாடும் கெடும் 29 இல்லாளில்லா வம்சம் கெடும் 30 இரக்கமில்லா மனிதம் கெடும் 31 தோகையினால் துறவு கெடும் 32 துணையில்லா வாழ்வு கெடும் 33 ஓய்வில்லா முதுமை கெடும் 34 ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும் 35 அளவில்லா ஆசை கெடும் 36 அச்சப்படும் கோழை கெடும் 37 இலக்கில்லா பயணம் கெடும் 38 இச்சையினால் உள்ளம் கெடும் 39 உண்மையில்லா காதல் கெடும் 40 உணர்வில்லாத இனமும் கெடும் 41 செல்வம் போனால் சிறப்பு கெடும் 42 சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும் 43 தூண்டாத திரியும் கெடும் 44 தூற்றிப்பேசும் உரையும் கெடும் 45 காய்க்காத மரமும் கெடும் 46 காடழிந்தால் மழையும் கெடும் 47 குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும் 48 குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும் 49 வசிக்காத வீடும் கெடும் 50 வறுமை வந்தால் எல்லாம் கெடும் 51 குளிக்காத மேனி கெடும் 52 குளிர்ந்து போனால் உணவு கெடும் 53 பொய்யான அழகும் கெடும் 54 பொய்யுரைத்தால் புகழும் கெடும் 55 துடிப்பில்லா இளமை கெடும் 56 துவண்டிட்டால் வெற்றி கெடும் 57 தூங்காத இரவு கெடும் 58 தூங்கினால் பகலும் கெடும் 59 கவனமில்லா செயலும் கெடும் 60 கருத்தில்லா எழுத்தும் கெடும் இந்த 60ஐயும் அறிந்துகொண்டால் நம் வாழ்க்கை கெடவே கெடாது.
  22. மனிதம் சாகவில்லை, அது ஒருபோதும் சாகாது ........! 🙂
  23. நான் சீமான் இவ்வளவு காலமாக உழைப்பில்லாமல் எப்படி வாழ்கிறார் என்பதை மேலே பட்டியல் இட்டுள்ளேன். அதன் அடிப்படையில் கள்ளன் என்கிறேன். நீங்கள் சீமானுக்கு கவர் எடுக்க வந்தால் அவர் ஏன் கள்ளன் இல்லை என உங்கள் கருத்தை தாராளமாக எழுதலாம். மாறாக நீங்கள் செய்தது, சொன்னது என்ன? நான் சீமானுக்கு திரள்நிதி கொடுக்கவில்லை எனவே நான் அவரின் களவை நான் கேள்வி கேட்க கூடாது. தேவையில்லாமல் தலைவரை, இயக்கத்தை இந்த சகதிக்கு முட்டு கொடுக்க இழுத்தீர்கள். தவிபு வை இயக்கம் என்பதா புலிகள் என்பதா என முட்டையில் உரோமம் புடுங்கினீர்கள். இவற்றுக்கான எதிர்வினையே என் பதிலகள். சீமானுக்கு முட்டுகொடுக்க யார் சருவசட்டியை தூக்கி வந்தாலும் அதே சருவசட்டியை வாங்கி மண்டையில் ஒண்டு போட்டே ஆக வேண்டும். #பெருமை அல்ல கடமை.
  24. "மூன்று கவிதைகள் / 33" 'மின்னலாய் ஒரு பின்னல்' அன்பு பெருகும் இல்லம் நலமாக அழகு மிளிரும் வாழ்வும் அறிவு வளர்க்கும் கல்வியும் ஆதரவு தந்து துணை புரியட்டும்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம். ....................................................... 'காகித ஓடம் கடலலை மேலே' காகித ஓடம் கடலலை மேலே காற்று மோத கவிழ்ந்தது போல காலம் செய்த கொடுமை இதுவோ? ஆழம் அறியா பெண்ணின் மனதில் ஆசை வைத்து அழிந்தது அழகோ? ஆதரவு அற்று அலைவது மெய்யோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................... 'காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே' காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே பூத்திருந்த புன்னகை வாடியது ஏனோ? மௌன மொழியில் பேசிய கண்களே நாணம் கொண்ட அழகு முகமே பிரியும் எண்ணம் எதனால் வந்ததோ? தேனினும் இனிக்கும் தென்றலின் குரலே உள்ளம் சுடும் சொற்கள் எதற்கோ? வெள்ளம் எனக் காதல் பொழிந்தவளே கள்ளம் இன்றி அன்பைக் காட்டியவளே தள்ளிப் போக எண்ணுதல் அறமோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம். துளி/DROP: 2111 ["மூன்று கவிதைகள் / 33" https://www.facebook.com/groups/978753388866632/posts/34483738357941371/?
  25. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 142 மேலும், 'புத்தரும் அவருடைய போதனைகளும்' என்ற தலைப்பை தமிழிலும் ஆங்கிலத்திலும் நான் சேர்த்துள்ளேன். / Additionally, I am including the topic 'The Buddha and His Teachings' in both Tamil and English. பகுதி: 142 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது போதனைகளும்" [4] மகாத்மா காந்தி ஒரு முக்கிய இந்தியத் தலைவராக இருந்தார், அவர் வன்முறையற்ற உள்நாட்டு ஒத்துழையாமைக்காக வாதிட்டார் மற்றும் இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். கௌதம புத்தர் தனிநபர் விடுதலை மற்றும் ஆன்மீக அறிவொளியில் கவனம் செலுத்தியபோது, காந்தி அமைதியான வழிமுறைகள் மூலம் சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை வலியுறுத்தினார். இருப்பினும், இரு நபர்களும் இரக்கம், அகிம்சை மற்றும் உண்மையைத் தேடுவதை [compassion, nonviolence, and the pursuit of truth] ஊக்குவித்தனர். [5] மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத்தில் ஒரு செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார். இன சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக [racial equality and social justice] வாதிட்டார். கௌதம புத்தரைப் போலவே, கிங் அகிம்சையைப் போதித்து சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர முயன்றார். அவர்களின் சூழல்களும் செயல்பாட்டு முறைகளும் வேறுபட்டாலும், இரு நபர்களும் மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிப்பதன் மூலமும் அநீதிகளை சவால் செய்வதன் மூலமும் அந்தந்த சமூகங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினர். பண்டைய இந்தியாவின் மத மற்றும் தத்துவ நிலப்பரப்பில் கௌதம புத்தரும் இந்து மதமும் இரண்டு தனித்துவமான ஆனால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நிறுவனங்கள் ஆகும். அவற்றுக்கிடையே ஒற்றுமைகள் மற்றும் இரண்டுக்கும் இடையில் நிறைய பொதுவான கூற்றுக்கள் அல்லது தத்துவங்கள் இருந்தாலும் [similarities and overlaps between them], அவர்களின் போதனைகள், நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. எது என்னெவென்றாலும், இந்த ஒப்பீடுகள் சுருக்கமானவை மற்றும் பொதுமைப்படுத்தப்பட்டவை, ஏனெனில் ஒவ்வொன்றும் தனித்துவமான குணங்கள், போதனைகள் மற்றும் வரலாற்று [unique qualities, teachings, and historical significance] முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. கௌதம புத்தர் கிமு 6 மற்றும் 5 ஆம் நூற்றாண்டுகளில் இன்றைய நேபாளம் மற்றும் வடகிழக்கு இந்தியாவாகக் கருதப்படும் பகுதியில் வாழ்ந்தார். அந்தக் காலத்தில் இந்து மதத்தின் மத மற்றும் சமூக சூழலில் ஒரு சீர்திருத்த இயக்கமாக பௌத்தம் உருவானது என்பதே உண்மை. மறுபுறம், இந்து மதம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவான ஒரு பன்முகத்தன்மை கொண்ட மற்றும் உலகின் பழமையான ஒரு மதமாகும். இது பரந்த அளவிலான நம்பிக்கைகள், நடைமுறைகள் மற்றும் தத்துவ அமைப்புகளை உள்ளடக்கியது. இந்து மதத்திற்கு என தனிப்பட்ட குறிப்பிட்ட நிறுவனர் என்று ஒருவரும் இல்லை. மேலும் வரலாறு முழுவதும் பல்வேறு முனிவர்கள், ஞானிகள் மற்றும் ஆசிரியர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற முக்கிய சமயங்களைப் பொறுத்தவரையில், புத்தர், இயேசு கிறிஸ்து, முகம்மது நபி என்று சிலரைக் நாம் குறிப்பிட்டுக் கூறலாம். Part: 142 / APPENDIX – "The Buddha and His teachings" Mahatma Gandhi: Mahatma Gandhi was a prominent Indian leader who advocated for nonviolent civil disobedience and played a pivotal role in India's independence movement. While Gautama Buddha focused on individual liberation and spiritual enlightenment, Gandhi emphasized social and political change through peaceful means. Both figures, however, promoted compassion, nonviolence, and the pursuit of truth. Martin Luther King Jr.: Martin Luther King Jr. was an influential leader in the American civil rights movement, advocating for racial equality and social justice. Like Gautama Buddha, King preached nonviolence and sought to bring about positive change in society. While their contexts and methods of activism differ, both figures left a lasting impact on their respective societies by inspiring millions and challenging injustices. Gautama Buddha and Hinduism are two distinct but interconnected entities in the religious and philosophical landscape of ancient India. While there are similarities and overlaps between them, there are also significant differences in their teachings, beliefs, and practices. These comparisons are brief and generalized, as each has unique qualities, teachings, and historical significance. Gautama Buddha lived in the 6th and 5th centuries BCE in the region that is now present-day Nepal and northeastern India. Buddhism originated as a reform movement within the religious and social context of Hinduism during that time. Hinduism, on the other hand, is a diverse and ancient religion that has evolved over thousands of years. It encompasses a wide range of beliefs, practices, and philosophical systems. Hinduism has no specific founder and has been shaped by various sages, seers, and teachers throughout history. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 143 தொடரும் / Will follow துளி/DROP: 2112 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 142 https://www.facebook.com/groups/978753388866632/posts/34483787094603164/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.