24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில், திரவ இயற்கை எரிவாயுவுக்கான 'சாதகமான' அணுகலை இழக்க நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் சுயகுணம் இப்போதாவது உலகத்திற்கும் ஐரோப்பாவிற்கும் தெரியட்டும். அது டொனால்ட் ரம்ப் ஜனாதிபதியாக இருந்தால் என்ன......அல்லது புதிதாக வரும் ஜனாதிபதியாக இருந்தால் என்ன.அவர்களது வெளிநாட்டு கொள்கையில் மாற்றமே இருக்காது.தமக்கு இடைஞ்சலாக இருப்பவர்களை அழிப்பதும் அடக்குவதும் தானே அமெரிக்க கொள்கையாளர்களின் வேலை. இதை வரலாறு சொல்கின்றது. என்ன ஒன்று......அமெரிக்க அடிமனதில் இருக்கும் குணம் இப்போது ரம்ப் மூலம் வெளிவந்துள்ளது. அவ்வளவுதான்.😎 தூரத்தில் இருப்பவனை விட அயலானை அண்டி அனுசரித்து போவதே மேல். ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் அனுசரித்து போயிருந்தால் இவ்வளவு அவலங்கள் வந்திருக்காது. போகப்போக இன்னும் பல மயானகாண்டங்கள் வரும். வரலாம்.🤣
-
உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை!
இந்த தமிழ்வின் செய்தி அப்படியே பிபிசி யின் தளத்தில் இருந்து கொப்பி பேஸ்ற்! இந்த "ரொய்லெற்" தமிழ் ஊடகங்களுக்கு வெட்கமேயில்லையா, ஒரு acknowledgment கூட போடாமல் சுட்டுப் போட😂?
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
'................ பூனையை பிடித்து சிரைத்தது போல.................' என்று ஊர்ப் பக்கம் சொல்லுவார்கள்..............🤣. அது போல, உருப்படியாக எதுவும் செய்யாமல், இப்படி ஆகிவிட்டேன் என்று நினைக்கின்றேன். சிறுவயதில் நான் இருந்த ஒழுங்கையின் ஆரம்பத்தில் ஒரு வெற்றுக் காணி இருந்தது. நான்கு பக்கங்களிலும் சுவர்கள் இருந்தன. நான் வளர்ந்த ஊரில் வெற்றுக் காணி இருப்பதே அதிசயம். இந்தக் காணி எப்படி அப்படி இருந்தது என்பதற்கும் ஒரு கதை இருக்கின்றது. அது பின்னர் ஒரு நாளில். அந்தக் காணியில் பிரதான வீதியின் பக்கம் இருக்கும் சுவரில் தியேட்டர்காரர்கள் சினிமா போஸ்டர்களை ஒட்டுவார்கள். யாழ், பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை என்று சகல ஊர்களில் இருக்கும் தியேட்டர்காரர்களும் அங்கு ஒட்டுவார்கள். அந்த சுவருக்கு பக்கத்திலேயே ஒரு மாடு எப்போதும் படுத்திருக்கும். சினிமா போஸ்டர்கள் ஒட்டிய உடனேயே, ஓட்டியவர்கள் அங்கிருந்து நகர்ந்தவுடன், அந்தப் போஸ்டர்களை ஓட்டிய கோதுமைப் பசையுடன் முழுவதுமாக சாப்பிட்டுவிடும்...........😜. எனக்குத் தெரியாமலேயே, பிரக்ஞை இல்லாமலேயே ( இது இலக்கியச் சொல்..........🤣) அந்த மாடு என்னுடைய ரோல் மாடல் ஆகியிருக்கின்றது...................🤣.
- Today
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் உங்களை மீண்டும் யாழ்களத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.
-
AI எழுதிய கவிதை -நானும் கிளோடும்
கவிதை கிளோட் தந்தது அதுக்கு விதை நீங்கள் போட்டது ........ நானோ வேறு நாலு பேரோ அதனிடம் இப்படிக் கேட்டால் அதுக்கும் இந்த வரிகள்தான் வருமா ........ வந்தால் அது தகுமா ......! 🙂
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
இதனை படிக்கும் போது அடக்க முடியா சிரிப்பு ஏற்பட்டது, யார் இதனை எழுதினார்கள் என கீழே பார்த்தால் படைப்பாளியின் பெயரில்லை, பகிரிற்கு நன்றி ஏராளன்.
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யாயினி. சாதாரணமாக வரிசையில் நிற்கவேண்டிய அவசியம் இல்லை. பொதி இன்று வந்து சேர்ந்துவிட்டாதண்ணா. ஆனால் ஒரு பொதி பழுதடைந்துவிட்டது. மற்றப்படி அதில் இருந்த பொருட்கள் எல்லாம் அப்படியே இருந்தன.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
உங்களது தமிழ் இலக்கிய ஆர்வம் அற்புதமானது, ஆனால் நீங்கள் கூறும் குற்றசாட்டு பற்றிய புரிதல் எனக்கில்லை, இவர்களின் எந்த இலக்கியமும் எனக்கு பரிச்சயமில்லாததால்.
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
அது உண்மைதான் ஆனால் அழுத்தமும் தமிழ்நாட்டு அரசிடமிருந்து மத்திய அரசுக்கு கொடுப்பதில்லையே. தங்கள் குடும்பத்தினருக்கு பதவிகளைப் பெறுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.இந்திய மத்திய அரசு இந்த விடயத்தில் அக்கறை அற்று இருந்தாலும் தமிழக அரசு அதற்கான அழுத்தம் கொடுத்திருக்கலாம். அல்லவா. இலங்கை அரசு இந்தியமக்களுக்கு குடியுரிமை கொடுத்தது போல இந்திய அரசு குடியுரிமை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கல்வி வேலை வாய்ப்பிலாவது அவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவவில்லையே என்பதே எனது ஆதங்கம்
-
உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை!
இரான் இந்தப் படையணியை வரவேற்கத் தயாராக உள்ளது. பல புதிய அற்புதங்களையும் ஆசீர்வாதங்களையும் இந்த வரவேற்புசாரத்தின் போது பெற்றுக்கொள்ளும்!
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
சந்தில சிந்து பாடும் முயற்சியை நீங்கள் தொடர வேண்டும்😂. ஆனால், தரவுகளை நினைவூட்ட வேண்டியது எம் கடமை: "தாய்த்தமிழகம்" இறைமையுடைய தனி தேசம் அல்ல குடிவரவுக் கொள்கையைத் தீர்மானிக்கவும் அமல் படுத்தவும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் நாடு இந்தியாவின் அகதிக் கொள்கையை மாற்ற இயலாது என்பது கசப்பான உண்மை. ஏற்றுக் கொள்கிறீர்களா?
-
ஈரான் ஆட்சி “இன்னும் நிலைத்துள்ளது” ஆனால் இராணுவ திறன்கள் பெரிதும் சிதைந்துள்ளன – அமெரிக்க தேசிய உளவுத்துறை
இரான் ஆட்சி இன்னும் வீழாமல் இருப்பது எப்படி? பட மூலாதாரம்,Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் அமெரிக்கா "தனக்குத் தானே பேச்சுவார்த்தை நடத்திக் கொள்கிறது" என்று இரான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார் மேலும் அவர், "எங்களைப் போன்றவர்கள் உங்களைப் போன்றவர்களுடன் ஒருபோதும் சமரசத்திற்கு வரமாட்டார்கள்" என்றும் கூறினார். இரான் ஓர் ஒப்பந்தத்திற்காக "மிகவும் மோசமாக" ஏங்குகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய பிறகு இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. பட மூலாதாரம்,Getty Images 15 அம்ச திட்டங்கள் என்ன? இந்தநிலையில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான அமெரிக்காவின் 15 அம்சங்கள் கொண்ட திட்டத்தை இரான் பெற்றுள்ளதாக இரண்டு பாகிஸ்தான் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது. இரான் மீதான தடைகள் நீக்கம், இரான் தனது அணுசக்தி நிலையங்களை அகற்ற வேண்டும், அமைதியான பயன்பாட்டுக்கான அணுசக்தி திட்டங்களில் ஒத்துழைப்பு, ஏவுகணை கட்டுப்பாடு, ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்துக்கு அனுமதி, சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் உள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த, பாகிஸ்தான் தயாராக உள்ளது என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இதே திட்டம் பற்றி இஸ்ரேலின் சேனல் 12 கூட செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தகவலின்படி, அமெரிக்க ராணுவம் சில படைகளை இரானுக்கு அனுப்பத் தயாராகி வருகிறது. ஆனால் அவை எங்கு அல்லது எப்போது என்பது துல்லியமாகத் தெரிவிக்கப்படவில்லை. மேலும் வெள்ளை மாளிகை இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. பட மூலாதாரம்,Reuters இரான் நிர்வாகம் ஏன் இன்னும் வீழ்ச்சியடையவில்லை? ஜிஹான்சேஹ் ஹபீபியசத், பிபிசி பாரசீக சேவை போர் தொடங்கி கிட்டதட்ட ஒரு மாதம் ஆகப்போகிறது, மேலும் இரான் நாட்டின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். இரான் நாட்டிற்குள் இருக்கும் சில மக்கள், போர் அதே நாளில் முடிவடையும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இரான் நாட்டின் ஆட்சி இப்போதும் நீடிக்கிறது. நாட்டை நிர்வகிப்பதில் இரான் மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டுள்ளது. அதி உயர் தலைவர் மிக உயர்ந்த அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும், அங்கு ஓர் இணை அரசு உள்ளது. அதுதான் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி). இது முறையான ராணுவ அதிகாரத்தையும் தாண்டி அதிகாரம் கொண்ட ஒரு நிறுவனமாகும். இந்தப் போரிலும், கடந்த ஆண்டு நடந்த மோதலிலும் பல உயர்நிலை ஐஆர்ஜிசி தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், கொல்லப்படும் ஒவ்வொருவருக்கும் பதிலாக, அந்த இடத்தைப் பிடிக்க மற்றொருவர் தயாராக இருப்பதாக அவர்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர். ஐஆர்ஜிசி அமைப்பு 'பாசிஜ்' என்ற அமைப்பையும் கட்டுப்படுத்துகிறது. இது சுமார் ஒரு மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தன்னார்வப் படை ஆகும். இவர்கள் பெரும்பாலும் எதிர்ப்புகளை ஒடுக்க வன்முறையைப் பயன்படுத்த வீதிகளில் நிறுத்தப்படுகிறார்கள். சில 'பாசிஜ்' சோதனைச் சாவடிகளை தான் இலக்கு வைத்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால் இந்த வாரம் தெஹ்ரானில் இந்தப் படைகள் இப்போதும் நகரில் அதிகளவில் உள்ளன. கார்களை நிறுத்திச் சோதனைகளை நடத்தி வருகின்றன. பட மூலாதாரம்,Getty Images போராட்டங்களைப் பொறுத்தவரை, மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டாம் என்று இரானிய அதிகாரிகள் அறிக்கைகள் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்திகள் மூலமாகவோ அச்சுறுத்தி வருகின்றனர். இணையதளமும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது போராட்டக்காரர்களிடையே ஒருங்கிணைப்பை மிகவும் கடினமாக்குகிறது. இதுவரை, போர் தொடங்கியதிலிருந்து நாட்டில் பெரிய அளவிலான நிர்வாக எதிர்ப்புப் போராட்டங்கள் வெடிப்பதை காண முடிவதில்லை. இருப்பினும், பல்வேறு நகரங்களில் நிர்வாகத்தின் ஆதரவாளர்கள் நடத்தும் இரவு நேரப் பேரணிகளை அரசு ஊடகங்கள் காட்டுகின்றன. ஆனால், மார்ச் தொடக்கத்தில் பதவியேற்றது முதல் மக்கள் பொது வெளியில் இன்னும் பார்க்காத நபர் இரான் நாட்டின் அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி ஆவார். இதுவரை, இரானிய ஊடகங்களில் அவரிடமிருந்து வந்த சில கடிதச் செய்திகளை மட்டுமே நாம் பார்த்துள்ளோம். அவரை இலக்கு வைப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. பட மூலாதாரம்,Majid Asgaripour/WANA (West Asia News Agency) via REUTERS படக்குறிப்பு,புதன்கிழமையன்று தெஹ்ரானில் எடுக்கப்பட்ட படம் 'இரானின் அதிகாரம் சிதறியுள்ளது' அமெரிக்க இரானிய கவுன்சிலின் தலைவர் ஹூஷாங் அமிரஹ்மதி, அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்டது, நாடு முழுவதும் உள்ள அதிகாரிகளிடையே அதிகாரக் கட்டமைப்பைச் சிதறடித்துள்ளது என்று பிபிசியிடம் தெரிவித்தார். 'முன்பு அதிகாரம் காமனெயி எனும் ஒரே மனிதரிடம் இருந்தது. அதனால் அவர் இறந்ததும் அந்த அமைப்பு உடைந்து விட்டது. இப்போது அதிகாரம் பல கீழ்நிலை அதிகாரிகளுக்கு பரவி இருக்கிறது. குறிப்பாக இந்த அதிகாரம் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் அதிகமாக உள்ளது.'' என பிபிசி ரேடியோ 4-ன் டுடே நிகழ்ச்சியில் அவர் கூறினார். யார் மீது ஏவுகணைகளை வீச வேண்டும் என்பதை ஒருங்கிணைக்க ஒரு "மைய நபர் இல்லை" என்று அவர் மேலும் கூறினார். அரசு நிர்வாகத்திற்குத் களத்தில் அதிகாரம் இல்லை என்றும், அதனால் இப்போது புதிய அளவிலான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள ராணுவ அதிகாரிகளைக் கண்டு அது பயப்படுவதாகவும் அமிரஹ்மதி கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/ce9m0dkxjxro
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
வாழ்த்துக்கள் ஆதித்யா!தமிழர்தாயகத்தில்ஏற்பட்ட யுத்தம் காரணமாக அகதிகளாகச் சென்றவர்கள் மேற்கு நாடுகளில் அரசியலில் பங்கெடுக்க முடிகிறது. அதே வேளையில் தாய்த்தமிழகத்திற்கு அகதியாகச் சென்றவர்களுக்கு குடியுரிமையும் இல்லை. தாயகத்திற்கு திரும்பவும் கடவுச்சீட்டு இல்லை.முகாம்களில் அடைக்கப்பட்டு உயர்கல்வி வாய்ப்புகள் .வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு துன்பத்தில்வாடுகிறார்கள்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
கவிஞர் வைரமுத்து ஞானபீட விருது - சுயமோகனின் வயிற்றெரிச்சல் 2025ம் ஆண்டின் அறுபதாவது ஞான பீட விருது கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அகிலன் மற்றும் ஜெயகாந்தனுக்குப் பிறகு வைரமுத்து மூன்றாவது நபராக இந்த விருதினைப் பெற்றிருக்கிறார். இது தமிழுக்கு கிடைத்த பெருமை அல்ல. தமிழால் விருது வழங்கிய அமைப்பும், கவிஞர் வைரமுத்துவும் பெருமையடைந்த தருணம். பதினோரு இலட்சம் பணமும், ஒரு சரஸ்வதி வெங்கலச் சிலையும் இந்த விருதுடன் வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் தமிழால் பிழைக்க வந்த ஜெயமோகன் வயிற்றெரிச்சலை கொட்டி இருக்கிறார். அவரைச் சார்ந்த ஒரு கூட்டமும், 'அய்யய்யோ என்னைக் கையைப்பிடித்து இழுத்து விட்டான்' எனக் கதறும் ஒரு சில நபர்களும் ஓசியில் கிடைக்கும் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வாந்தி எடுத்து வைத்திருக்கிறார்கள். தன் இருப்பை வெளிக்காட்டிக் கொண்டார்கள். அவர்களுக்கு இதுவும் ஒரு பிழைப்புதானே? ஜெயமோகனின் இணையதளத்தினைப் படிப்பவர்களுக்கு மெண்டல் டிஸ் ஆர்டர் நோய் ஏற்படலாம். அந்தளவுக்கு அவரின் படைப்புகள் மோசமாக இருக்கும். ஜெயமோகனின் எழுத்து அரசியலை தமிழ்நாட்டின் மிகச் சிறந்த எழுத்தாளரான ஆர்.பி.ராஜநாயஹம் அவர்கள் 16 வருடங்களுக்கு முன்பே வெளிப்படுத்தினார். அந்தளவுக்கு மிக மோசமான சுயமோகத்தனம் அவரிடம் இருக்கிறது. தமிழின் ஒரே எழுத்தாளர் தான் மட்டுமே, எல்லா விருதுகளுக்கும் அவரே தகுதியானவர் என்பது போன்ற இன்னும் பல மோகங்கள் அவரிடமுண்டு. இவரைப் பற்றி பதினேழு வருடங்களுக்கு முன்பே அறிந்திருக்கிறேன். கீழே இருக்கும் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். ஊட்டியில் தளையசிங்கம் சம்பவத்தில் வெளியிடப்பட்ட ஊட்டியில் தளையசிங்கம் புத்தகத்தை வரிக்கு வரி டைப் செய்து ஒருவரின் இணையதளத்தில் அப்டேட் செய்திருக்கிறேன். ஊட்டியில் நடந்த சுயமோகனின் அற்பத்தனத்தை பதினைந்து வருடங்களுக்கு ராஜ நாயஹம் விவரமாக எழுதி சுயமோகனின் தன்மையை உலகிற்கு காட்டி விட்டார். கீழே இருக்கும் இணைப்பில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். மு.தளையசிங்கமும் தொழுகையும் - https://rprajanayahem.blogspot.com/2019/03/blog-post.html ஜெயமோகனின் இணையதளத்தில் அவ்வளவும் தற்பெருமை. வாசகர்களின் கடிதங்கள். கடிதங்களுக்குப் பதில்கள் என சொறி சிரங்குகள். அதுமட்டுமல்ல மிகச் சிறந்த பிசினஸ் கான்சப்ட் டிசைன் செய்து வைத்திருக்கிறார். தன் வாழ்க்கையின் செழிப்பான தன்மைக்கு அறியா வாசகர்களை வெகு நுட்பமாகப் பயன்படுத்தும் அதிபுத்திசாலித்தனம் அவரிடமிருக்கிறது. ஒவ்வொரு நிகழ்விலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் அதிமேதாவித்தனம். வாசகன் என்பவன் ஒரு அப்பாவி என அவருக்குத் தெரியும். அவனிடமிருந்து எப்படி என்னென்ன பெறலாம் என்பதும் அவருக்குத் தெரியும். புதிது புதிதாய் வரும் வாசகர்கள் இவரின் பலியாடுகள். ஒரு காலத்தில் மாலைமதி, ராணிமுத்து, சுபா, பட்டுக்கோட்டைப் பிரபாகர், ராஜேஷ்குமார், சாண்டில்யன், எண்டமூரி வீரேந்திர நாத், அகிலன், நா.பார்த்தசாரதி, ஞானி, புதுமைப்பித்தன் எனத் தொடர்ந்து ஓஷோ, ஜென், சூஃபியிசம், ஜே.கிருஷ்ணமூர்த்தி என படிப்பதில் ரசனை மாற்றங்கள் எனக்குள் ஏற்பட்டது. இப்படியான நிலையில் நான் படித்ததில் யார் சிறந்த எழுத்தாளர், எது சிறந்த படைப்பு என எப்படி முடிவு செய்ய இயலும்? ஒவ்வொரு வயதுக்கும் ஒவ்வொரு படைப்புகள் சிறந்ததாக இருக்கும். இதே போன்ற நிலை எல்லா வாசகர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். எடுத்த எடுப்பில் புறநானுறெல்லாம் படிக்க முடியாது அல்லவா? ஒரு காலத்தில் மு.மேத்தா கவிதைப் புத்தகங்கள் கல்லூரி மாணவர்களின் திருக்குறள். எம்.எஸ்.உதயமூர்த்தியின் புத்தகங்களைப் படித்தவர்கள் பல லட்சம் மாணவர்கள். இப்படியான ஒரு சூழலில் ஜெயமோகன் தன்னை யார் என வெளிப்படுத்திய தருணம் தான் தமிழுக்கு அவமானம் (https://www.jeyamohan.in/230180/) என்ற அவரின் பதிவு. இவர் தமிழரல்ல என்கிறார்கள். தமிழால் பிழைக்க வந்தவர் என்கிறார்கள். ஒரு சிலர் இவரைப் பாதி தமிழர் என்கிறார்கள். அது என்ன கன்றாவியோ பாதி, கால், அரை என்ற விளக்கம். தமிழ் அவருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறது பல நபர்களுக்கு கொடுத்ததைப் போல. இவரொன்றும் தமிழின் பிரதிநிதியல்ல. ஆகவே தமிழுக்கு அவமானமென்று எழுதி அத்தாரிட்டியை எடுத்துக் கொள்ள முயலும் கள்ளத்தனத்தின் முயற்சியே வைரமுத்து அவர்களை இவர் விமர்சித்தது. இவர் தனது ஆகச் சிறந்த படைப்பு எனக் கருதும் வெண்முரசு ஒரு குப்பை என்பேன். தத்துவங்களும், மனிதக்கடவுள்களும் மனிதனின் வாழ்வியலைச் செம்மைப்படுத்த வேண்டும். அது சக மனிதனின் இருப்புக்கும், வாழ்க்கைக்கும் கேடு விளைவிக்குமானால், அந்தப் படைப்பு குப்பையாகத்தான் இருக்க முடியும். அவர் எழுதிய ஏழாம் உலகம் படித்துவிட்டு, அவருக்கும் ஒரு மெயில் அனுப்பினேன். அதை அவர் இணையதளத்தில் வெளியிட்டார் என நினைவு. ஏன் இவரை விமர்சிக்க வேண்டும் என நினைப்பீர்கள். அவருக்கு கவிஞர் வைரமுத்துவை விமர்சிக்க காரணம் இருப்பது போல எனக்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலில், அவரவரின் திறமைக்கு ஏற்ப எழுதுவார்கள். புழுக்களும், பூச்சிகளும், வண்டுகளும், பறவைகளும், விலங்குகளும், மனிதர்களும் இயற்கையின் படைப்புதான். இதில் மனிதன் சிறந்தவன் என எப்படிச் சொல்ல முடியும்? இத்தனை உயிர்களும் இருந்தால் தான் மனிதன் வாழ முடியும் அல்லவா? மனிதனை விட மிகவும் ஆபத்தான மிருகம் வேறு எதுவும் இருக்க முடியாது. சரி, ஜெயமோகனை விமர்சிக்க என்னிடம் இருக்கும் காரணம் என்ன? துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு தமிழர்களின் அடையாளம், தமிழின் ஆகச் சிறந்த நூலான திருக்குறளில் மழை பற்றிய குறள்களைப் படித்தீர்களா? இக்குறள்களின் விளக்கம் படித்தவுடன் புரிந்திருக்காது. ஒரு சிலருக்குப் புரிந்து இருக்கும். கொள்ள கொஞ்சம் தமிழ் இலக்கண அறிவு தேவை. படிப்பறிவும் தேவை. கரை புரண்டு ஓடுதம்மா - அந்தக் காவிரியில் தண்ணி யெங்கும் நெளி நெளியா ஓடுதம்மா - அந்த நீல வண்ணத் தண்ணி யெல்லாம் சுழி சுழியா ஓடுதம்மா - அந்த சுத்தமான ஆத்துத் தண்ணி வெயிலடிக்கும் நேரமெல்லாம் - தண்ணி வெள்ளி போல மின்னுதடி குடிதண்ணியும் குளி தண்ணியும் - கண்மணியே குடம் குடமா எடுப்பாங்களாம் தண்ணிக்கொரு தீட்டுமில்லை - கண்ணே யதைத் தடுக்க ஒரு நாதியில்லை பாப்பானுக்கு பச்சைத்தண்ணி - கண்மணியே பறையனுக்கும் பச்சைத்தண்ணி பட்டிக்காட்டில் பல சாதியாம் - கண்மணியே பறையன் முதல் பாப்பான் வரை தோட்டி முதல் தொண்டமான் வரை - கண்மணியே தொழுந்தண்ணி பச்சைத்தண்ணி சண்டையிழுப்பதும் - கண்மணியே சாதிக்குள்ளே பச்சைத்தண்ணி தெய்வம் போல இருக்குதண்ணி - கண்மணியே திசையோடும் பச்சைத்தண்ணி இந்தப் பாடலைப் படித்து விட்டீர்களா? நா.வானமாமலை பற்றி உங்களுக்குத் தெரியும் தானே? அவர் தொகுத்த தமிழர் நாட்டுப்பாடல்கள் தொகுப்பு 1 என்ற மின்நூலில், 60வது பக்கத்தில் உள்ளது. இந்த நூல் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்ட இணையப்பக்கத்தில் இருக்கிறது. இந்தப் பாடல்களைப் படிக்க தொல்காப்பிய இலக்கண அறிவு தேவையில்லை. படிப்பறிவு இல்லாதவர்களிடம் படித்துக் காட்டினால், அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். திருக்குறளையும், நாட்டுப்புற பாடலையும் படித்ததில் உங்கள் மனதில் ஒட்டிக் கொண்டது எந்தப் பாடல்? பதில் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. ஜெயமோகன் அவர்களே! கவிஞர் வைரமுத்துவுக்கு ஞான பீட விருது ஏன் வழங்கப்பட்டது என உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனாலும் அதை மறைத்து வன்மத்தைக் கொட்டி, அப்பாவி வாசகர்களை ஏமாற்றாதீர்கள். நீங்கள் விடுத்த வார்த்தைகளே உங்களை அழிக்க வரும் ஆயுதமாகி விடும் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். மொழி ஆராய்ச்சியாளர்கள் ஓசைகளுக்கு தான் எழுத்துகள் உருவாக்கப்பட்டிருக்கும் என்றும், அதைத் தொடர்ந்தே இலக்கணம் உருவாக்கப்பட்டிருக்கும் என்கிறார்கள். பேச்சு மொழியின் ஓசை வடிவத்தின் உருவான படைப்பு தான் ஆதிமூலம் அல்லவா? ஆகவே பேச்சு மொழிப் படைப்புகள் தான் மிகச் சிறந்ததாக இருக்க இயலும். அதிலும் இவ்வகைப் பாடல்கள் பல ஜென்மங்களாய் தொடர்ந்து வரும் மனிதர்களுக்கு ஓசை வடிவில் கடத்தப்படுபவை அல்லவா? எழுத்துகள் உருவாகி, இலக்கணம் உருவாகி அவைகள் இப்போது எழுத்து வடிவில் படிக்கக் கிடைக்கிறது. கவிஞர் வைரமுத்து இந்த வகை எழுத்துக்களை பாமரனுக்கும், படித்தவனுக்கும் புரிந்த பேச்சு மொழியில் எழுதி இருக்கிறார். கவிஞர் வைரமுத்துவை விமர்சிக்க ஜெயமோகனுக்கு எந்த அருகதையும் இல்லை. எது சிறந்த படைப்பு என நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். அதைப் பற்றிய கவலை உங்களுக்கு தேவையில்லை. தமிழில் எழுதி பிழைத்துக் கொள்ளுங்கள். தமிழ் தான் பலருக்கும் வாழ்க்கை கொடுக்கும். தமிழுக்கு எவரும் எதுவும் செய்யமுடியாது. அது இயற்கையானது. அது கடவுளானது. அது தமிழர்களின் உயிருக்குள் இருக்கும் ஆத்மா. உங்களைப் போன்றோர்கள் தமிழுக்கு அத்தாரிட்டி கேட்க முடியாது. அது உங்களால் முடியாது. தமிழ் தமிழரின் சொத்து. இனி ரசிக்க ஒரு பாடல் ஆண் : கல்லருகாம், புல்லருகாம் கடலருகாம் பூந்தோட்டம் புல்லறுக்கப் போற பிள்ளை - நீ பூமுடிஞ்சாலாகாதோ? பெண் : நத்தத்து மேட்டு வழி நான் போறேன் ஒத்த வழி பிச்சிச்சரம் போல - நீ பின்னே வந்தாலாகாதோ? ஆண் : கண்டாங்கிச் சீலை கட்டி கரை வழியே போற புள்ள - உன் கண்டாங்கிச் சீலையிலே - நான் வண்டாய்ச் சுழலுதனே குளத்திலொரு அல்லியுண்டு கூந்தலொரு பாகமுண்டு இடைச் சிறுத்த அல்லிக்கு இடையில் ஒரு மச்ச முண்டு வானமாமலையின் தமிழர் நாட்டுப்பாடல்கள் 1 - புத்தகத்தில் பக்கம் 163-164. பாட்டைப் படித்ததும் சும்மா ஜிவ்வு ஜிவ்வுன்னு தெறிக்குதல்லவா? கவிஞர் வைரமுத்துவின் பாணி இது. உளறல்களை இலக்கியமென்று கருதும் தற்குறிகளுக்கு வயிற்றெரிச்சல் வரத்தானே செய்யும்? வாழ்த்துகள் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு. ஜெயமோகன் அவர்களே நீங்களும் எழுதுங்கள், விருது பெறுங்கள். வாழ்த்துகிறோம். வளமுடன் வாழ்க. https://thangavelmanickadevar.blogspot.com/2026/03/blog-post.html
-
வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில், திரவ இயற்கை எரிவாயுவுக்கான 'சாதகமான' அணுகலை இழக்க நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது ஒரு முக்கிய செய்தியாக இருக்கும் எனும் பட்சத்தில், இதனை கூகிள் மொழிமாற்றி மூலம் பைனான்சியல் ரைம்ஸில் மூலத்திலிருந்து இணைக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் வாரம் சில முக்கிய சம்பவங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிகழலாம். சில அடிப்படையான ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகளில் ஏற்பட போகும் மாற்றங்களை வருகின்ற வாரம் கொண்டுள்ளதால் ஒரு முக்கிய டொமினோ நிகழ்வு போல கொள்கை மாற்றத்திற்கு இந்த நிகழ்வு வழி வகுக்கலாம் என கருதுகிறேன்.
-
உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை!
உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை! மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தரைப்படை வீரர்களை அங்கு நிலைநிறுத்துவதை அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து ஊடகத்திற்கு அமெரிக்க செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில், அமெரிக்காவின் புகழ்பெற்ற 82-வது வான்வழிப் பிரிவின் (82nd Airborne Division) தலைமையகக் குழுக்கள் மற்றும் 1-வது பிரிகேட் காம்பாட் டீம் (1st BCT) ஆகியவை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக, எத்தனை வீரர்கள் அல்லது எந்த இடத்திற்கு அவர்கள் செல்கிறார்கள் என்ற விவரங்களை வெளியிட பென்டகன் மறுத்துள்ளது. அதிதீவிர படை வட கரோலினாவைத் தளமாகக் கொண்ட இந்த 82ஆவது வான்வழிப் பிரிவு, உலகின் மிகச்சிறந்த போர் அலகுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு, உலகின் எந்தப் பகுதிக்கும் வெறும் 18 மணிநேரத்திற்குள் சென்று தாக்குதல் நடத்தும் தயார் நிலையில் இருப்பார்கள். இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளுக்குள் பாராசூட் அல்லது ஹெலிகாப்டர் மூலம் ஊடுருவி, அந்த இடத்தைக் கைப்பற்றுவதில் இவர்கள் வல்லவர்கள். குறிப்பாக, ஈரானுடனான மோதல் வலுக்கும் பட்சத்தில், ஈரானின் முக்கியப் பகுதியான கார்க் தீவு (Kharg Island) போன்ற இடங்களைக் கைப்பற்ற இந்த வீரர்களை அமெரிக்கா பயன்படுத்தக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. கார்க் தீவு (Kharg Island) நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட 10ஆவது மலைப் பிரிவின் (10th Mountain Division) கீழ் வரும் 1st BCT படையினர், நீண்ட காலப் போரை எதிர்கொள்ளும் வகையில் முழுமையான ஆயுத தளவாடங்களுடன் அனுப்பப்படுகின்றனர். வழக்கமான வான்வழிப் படைகள் குறுகிய காலத் தாக்குதலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், இந்த 1st BCT பிரிவினர் "Full Spectrum" எனப்படும் அனைத்து வகையான தீவிர போர்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://tamilwin.com/article/us-confirms-paratroops-on-way-to-middle-east-1774452003
-
வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில், திரவ இயற்கை எரிவாயுவுக்கான 'சாதகமான' அணுகலை இழக்க நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
https://www.ft.com/content/6bf153e4-11af-44d5-9d1c-48b5c7ad26ef?syn-25a6b1a6=1 ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவுடனான தனது வர்த்தக ஒப்பந்தத்தை எந்தத் திருத்தங்களும் இன்றி செயல்படுத்த வேண்டும், இல்லையெனில் அமெரிக்க ஏற்றுமதியாளர்களிடமிருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கான 'சாதகமான' அணுகலை இழக்க நேரிடும் என்று அந்த அமைப்புக்கான டொனால்ட் டிரம்பின் தூதர் எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபருக்கும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கும் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிப்பது, கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதாக டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் தாமதமாகியுள்ளது. திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG), எண்ணெய் மற்றும் சிவில் அணுசக்தி தொழில்நுட்பங்கள் உட்பட, 2028-ஆம் ஆண்டுக்குள் 750 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க எரிசக்தியை ஐரோப்பிய ஒன்றியம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை உள்ளடக்கிய இந்த உடன்படிக்கை மீது, ஐரோப்பிய நாடாளுமன்றம் வியாழக்கிழமை வாக்களிக்க உள்ளது . ஸ்காட்லாந்தில் உள்ள டிரம்பின் டர்ன்பெர்ரி கோல்ஃப் ரிசார்ட்டில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் மற்ற விதிமுறைகளில் ஏதேனும் ஒன்றை அந்த அமைப்பு மாற்ற முயன்றால், அதன் எரிசக்தி அம்சம் ஆபத்தில் சிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அமெரிக்கத் தூதர் ஆண்ட்ரூ புஸ்டர் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்தார். "அவர்கள் இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லவில்லை என்றால், எரிசக்தி விஷயத்தில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை," என்று புஸ்டர் கூறினார். "டர்ன்பெர்ரி ஒப்பந்தம் செயல்படுத்தப்படாவிட்டால், நாம் மீண்டும் முதல் நிலைக்கே வந்துவிடுவோம். நாம் எங்கே செல்வோம் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அமெரிக்கா தொடர்ந்து ஐரோப்பாவுடன் வர்த்தகம் செய்ய விரும்பும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் நிபந்தனைகள் மட்டும் அவ்வளவு சாதகமாக இல்லாமல் போகலாம். சூழல் நிச்சயமாக அவ்வளவு சாதகமாக இருக்காது. மேலும்... வேறு வாங்குபவர்களும் இருக்கிறார்கள்." வளைகுடாப் பகுதிக்கு வெளியே உள்ள விநியோகஸ்தர்களிடமிருந்து வரும் திரவ இயற்கை எரிவாயு (LNG) சரக்குகளுக்கான உலகளாவிய போட்டி தீவிரமடைந்து வரும் வேளையில், அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிசக்தி ஒப்பந்தத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்படும். உலகின் ஐந்தில் ஒரு பங்கு திரவ இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் கத்தார் , ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி நீர்வழியை முற்றுகையிட்ட பிறகு தனது ஏற்றுமதியை நிறுத்த வேண்டியிருந்தது. கடந்த வாரம் கத்தாரின் பரந்த ராஸ் லஃபான் திரவ இயற்கை எரிவாயு வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், உலகளாவிய விநியோகம் இன்னும் சில காலத்திற்குப் பற்றாக்குறையாகவே இருக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. போருக்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாய்ந்த திரவ இயற்கை எரிவாயுவில் சுமார் 10 சதவீதம் மட்டுமே ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டாலும், எரிவாயு இறக்குமதியைச் சார்ந்திருப்பதால், விநியோகத்திற்கான உலகளாவிய போட்டிக்கு அந்த கண்டம் ஆளாகக்கூடிய நிலையில் உள்ளது. இத்தாலி போன்ற சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், தங்களுக்குத் தேவையான திரவ இயற்கை எரிவாயுவில் மூன்றில் ஒரு பங்கை கத்தாரிலிருந்து பெற்றன. "தனிப்பட்ட முறையில்... ஐரோப்பியர்கள் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள எரிசக்திக்கு உறுதியளித்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஏனென்றால், அது அவர்கள் இந்த எரிசக்தியை வாங்குவார்கள் என்ற வெறும் வாக்குறுதி மட்டுமல்ல, நாங்கள் அவர்களுக்கு அந்த எரிசக்தியை விற்போம் என்ற உறுதிமொழியும் ஆகும்," என்று புஸ்டர் மேலும் கூறினார். "ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் பொருளாதார ரீதியாக நிலைத்திருக்க வேண்டுமானால், அவற்றுக்கு ஆற்றல் தேவை, அதை நம்மால் வழங்க முடியும்," என்று அவர் கூறினார். "அவ்வாறு செய்ய நாங்கள் ஊக்குவிக்கப்படும் வகையிலான ஒரு உறவை நாங்கள் விரும்புகிறோம்." ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்பவர்கள் 2027 ஜனவரி 1-ஆம் தேதிக்குள் மீத்தேன் வெளியேற்றத்தை அறிவிக்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றிய விதி திருத்தப்பட வேண்டும், ஏனெனில் பெரும்பாலான அமெரிக்க உற்பத்தியாளர்களால் அதற்குக் கட்டுப்படுவது சாத்தியமற்றது என்று புஸ்டர் மேலும் கூறினார். மீத்தேன் ஒழுங்குமுறை இறக்குமதிகளைப் பாதிக்காது என்பதை உறுதி செய்வதாக ஆணையம் உறுதியளித்துள்ளது. இந்த விதி மாற்றப்படும் எனத் தாம் “நம்பிக்கையுடன்” இருப்பதாக புஸ்டர் கூறினார், ஏனெனில் “இது எரிபொருள் செலவுகளை உயர்த்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதால், இந்த வர்த்தகத் தடைகளில் சிலவற்றைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பா உணரும்”. கடந்த ஆண்டு டர்ன்பெர்ரியில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகளுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டது. அதே நேரத்தில், அமெரிக்கத் தொழில்துறைப் பொருட்கள் மற்றும் சில விவசாயப் பொருட்கள் மீதான தனது சொந்த வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்க அந்த அமைப்பு ஒப்புக்கொண்டது. ஆனால், அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்பின் வரிகளை ரத்து செய்த பிறகு, அவர் அவசரமாக வேறு ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி உலகளாவிய சுங்க வரியை அறிமுகப்படுத்தினார் . இது ஜூலை 24 வரை நீடிக்கக்கூடும், இதன் விளைவாக சராசரியாக 15.8 சதவீத ஒட்டுமொத்தக் கட்டணம் விதிக்கப்படுகிறது. இந்த வாரம் வாக்கெடுப்புக்கு வரவிருக்கும் சட்டத்தில், டிரம்ப் ஏதேனும் புதிய வரி அச்சுறுத்தல்களைச் செயல்படுத்தி, ஸ்காட்லாந்தில் முதலில் ஒப்புக்கொள்ளப்பட்ட வைரங்கள் மற்றும் கார்க் உள்ளிட்ட விலக்குகளை மீட்டெடுக்கத் தவறினால், டர்ன்பெர்ரி ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்யும் பாதுகாப்பு அம்சங்களை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்த்துள்ளனர். இருப்பினும், இறுதி ஒப்பந்தம் உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும், அவை இந்த விதிகளை எதிர்க்க வாய்ப்புள்ளது. இறுதி ஒப்பந்தத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், “அது எங்களுக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து நாங்கள் ஒரு முடிவெடுக்க வேண்டியிருக்கும்” என்று புஸ்டர் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் மரோஸ் ஷெஃப்கோவிச், ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த ஒரு தனிப் பேட்டியில், "ஒப்பந்தம் என்பது ஒப்பந்தம்தான், நாம் டர்ன்பெர்ரி கூட்டறிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரித்தார். அந்த நேர்வில் 15 சதவீத ஒட்டுமொத்த சுங்க வரியை மதித்து நடப்போம் என அமெரிக்க நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
-
ஈரான் அணுமின் நிலையத்தின் மீது மீண்டும் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் அணுமின் நிலையத்தின் மீது மீண்டும் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் 25 Mar, 2026 | 03:38 PM ஈரானின் புஷேர் அணுமின் நிலைய வளாகத்தில் அமெரிக்கவும் இஸ்ரேலும் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் நேற்று செவ்வாய்க்கிழமை (24) மாலை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 17ஆம் திகதி இதே அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் அந்த அணுமின் நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறுகிற அதேவேளை, இந்தத் தாக்குதலில் தொழில்நுட்ப சேதமோ மனித உயிர்ச்சேதமோ நிதி சேதமோ ஏற்படவில்லை என்றும் நிலையத்தின் எந்தப் பகுதியும் சேதமடையாமல் அப்படியே உள்ளது எனவும் ஈரான் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த அமைப்பு, இவ்விதமாக அமைதியான முறையில் அணுசக்தி நிலையங்களின் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச விதிமுறைகள் மற்றும் உரிமைகளை மீறுவது மட்டுமன்றி, பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகிறது எனக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தொடர்ச்சியாக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதன் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. https://www.virakesari.lk/article/241904
-
அமெரிக்காவும் இரானும் ஒருவேளை பேச்சு நடத்தினால் நெதன்யாகுவுக்கு என்ன சிக்கல்?
கார்க் தீவு, அல்லது கோர்மூசினை கைப்பற்றுவது சாத்தியமான உத்தியாக இருக்காது என கூறுகிறார்கள், அதில் வழங்கல் பிரச்சினை காணப்படும், அது தற்கொலை தாக்குதலுக்கு ஒப்பானதாக கூறுகிறார்கள் (ஆனால் ஊடக அளாவில் இவற்றினையே முதன்மை படுத்தப்படுகிறது). இந்த தரையிறக்கத்திற்கு பயன்படுத்தப்படும் 11 ஆவது MEU, படையணி கடந்த ஆண்டு நவம்பரில் மேற்கொண்ட பயிற்சி நடவடிக்கை தென் கிழக்கு ஈரான் தரையமைப்பினை ஒத்த சூழ்நிலையில் பயிற்சி மேற்கொண்டுள்ளதாக கூறுகிறார்கள். அதன் பிரகாரம் கொனராக் மற்றும் சபகார் பகுதியினை கட்டுப்படுத்துவதுடன் அந்த பகுதியில் உள்ள ஈரானின் கடற்படைத்தளங்கள் அமெரிக்க இஸ்ரேலிய கூட்டுத்தாக்குதலில் அழிக்கப்பட்ட இரு துறைமுகங்களை கைப்பற்றுவதாக இருக்கும் என கருதுகிறார்கள். கொனராக்கில் விமானத்தளமும் உள்ளது, சபகார் குடா பகுதி ஒரு பாதுகாப்பான மலைகளையும் அதற்கு வெளியே 600 கிமீ நீளமான வெளிகளை கொண்ட பகுதி எதிர்த்தாக்குதலை செய்ய முடியாத நிலையினை ஈரான் தரப்பிற்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறாயின் இந்த போர் ஒரு நீண்ட கால திட்டத்துடன் பிளான் பி போன்ற திட்டத்துடன் தயாராகியுள்ளார்கள் போலவுள்ளது. போர் விரைவாக முடியாது போலவே கருதுகிறேன்.
-
ஈரான் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது!
ஈரான் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது! 25 Mar, 2026 | 04:26 PM ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பாகிஸ்தான் நோக்கிப் பயணித்த சரக்குக் கப்பல் ஒன்றை ஈரான் இராணுவம் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிப் பயணித்த 'செலன்' என்ற சரக்குக் கப்பலே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஈரானின் கடல் எல்லைக்குள் நுழைவதற்குரிய முறையான அனுமதிப்பத்திரம் இன்றி பயணிக்க முயன்றதால், இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஈரானின் கடல்சார் சட்டங்களுக்கு அமுல்படாமை மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியை கடப்பதற்கான அனுமதி இல்லாமை காரணமாக இந்தக் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது. இந்த நீர்வழியைப் பயன்படுத்தும் எந்தவொரு கப்பலும் ஈரானின் கடல்சார் அதிகாரசபையுடன் முழுமையான ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என IRGC கடற்படைத் தளபதி அலிரேசா டான்சிரி தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். எதிரி நாடுகளுடன் தொடர்பில்லாத கப்பல்கள் ஈரானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி (சில சந்தர்ப்பங்களில் கட்டணம் செலுத்தி) இந்த நீர்வழியைப் பயன்படுத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ஈரான் எதிரியாகக் கருதும் தரப்புகளுடன் தொடர்புடைய கப்பல்கள் தமது கடல் எல்லையைத் தாண்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/241908
-
என் பெயர் பூனா (Buna)!
அட .......பழக்கத்தில கை பதிந்திட்டுது ......... நல்லகாலம் கிருபன் பார்க்கமுதல் நீங்கள் பார்த்தது நல்லது . ........! 😀 நன்றி கிருபன் உங்களின் காஃபி கட்டுரைக்கு . .........! 😄
-
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு இஸ்ரேல் அவசர கடிதம்!
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு இஸ்ரேல் அவசர கடிதம்! 25 Mar, 2026 | 02:49 PM இஸ்ரேலிய பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்களை இலக்கு வைத்து ஈரான் நடத்தி வரும் கண்மூடித்தனமான ஏவுகணைத் தாக்குதல்களைப் பகிரங்கமாகக் கண்டிக்குமாறு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திடம் இஸ்ரேல் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சினால் கடந்த 23 ஆம் திகதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கான இஸ்ரேலிய பிரதிப் பணிப்பாளர் நாயகம் நினா பென்-அமி விடுத்துள்ள இக்கடிதத்தில், ஈரானின் பலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன: ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13, 15 மற்றும் 16 வயதுடைய மூன்று சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை 18 சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 5 வயது சிறுமி ஒருவர் கவலைக்கிடமான நிலையிலும், 10 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் பலத்த காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடியிருப்புப் பகுதிகள் மீது ஈரான் 'கொத்தணி குண்டுகளை' (Cluster munitions) ஏவித் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/241899
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மிகவும் நன்றாக இருந்தது ........உங்களின் பயணத்தில் நாங்களும் பங்கு கொண்டு பயணித்து வேர்த்து விறுவிறுத்து இறங்கியது போல் ஒரு மனநிலை .......... வீட்டுக்கு பொதி வந்ததும் பதியவும் .......! 😅
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
இவை விசேட நிலைமைகள். ஆயிரக் கணக்கானோர் ஒரே நாளில் சேவைகள் பெறும் வகையில் வர முனையும் போது மட்டும் தான் இப்படியாக ரோக்கன் கொடுத்து உள்ளே விடுவார்கள் (ரோக்கன் கொடுக்கும் முறை இல்லா விட்டால், பெண்கள், வயோதிபர்கள் போன்றோர் உள்ளேயே போக முடியாமல் தடியன்கள் மட்டும் தான் வரிசையில் முன்னே நிற்பர்😂). மற்ற படி சாதாரணமாக உள்ளே நுழைந்து (walk-in) சேவைகள் பெறும் வகையில் தான் விமான நிறுவன அலுவலகங்கள் இருக்கும்! இது என் அனுபவம், கொழும்பில்.
-
எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
எரிபொருள் விலை உயர்வால் ரயில் பயணிகள் அதிகரிப்பு Mar 25, 2026 - 08:01 PM எரிபொருள் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண அதிகரிப்பு காரணமாக, பொதுமக்கள் அதிகளவில் ரயில்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர இன்று (25) செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்து தெரிவிக்கையில், இந்த நிலைமையால் ரயில்வே திணைக்களம் கடந்த சில நாட்களாக இலாபம் ஈட்டி வருவதாகக் குறிப்பிட்டார். எரிபொருள் விலை உயர்வால் எதிர்காலத்தில் சரக்கு போக்குவரத்திற்கும் பொதுமக்கள் ரயில்களையே நாடுவார்கள் என்பதால், ரயில் பயண வாரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அவர் பொறுப்புவாய்ந்த தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு கோட்டைக்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பயணிகளின் கேள்வி அதிகரித்துள்ள போதிலும், ரயில் பயண வாரங்கள் குறைக்கப்பட்டுள்ளமையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன், நிலவும் பொருளாதார கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். பொதுமக்களுக்கு எஞ்சியுள்ள ஒரேயொரு மலிவான போக்குவரத்து சேவை ரயில்கள் மாத்திரமே என்பதையும் அவர் வலியுறுத்திக் கூறினார். https://adaderanatamil.lk/news/cmn64lxqr000t356pcvlvrgkz