Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக குடித்தால் மாரடைப்பு ஏற்படுமா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,குளிர் காலத்தில் நாம் வழக்கமாக குறைந்த அளவு தண்ணீரையே குடிக்கிறோம் (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் சுப் ராணா பிபிசி இந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோடை வெப்பத்தில் வியர்க்கும்போது, எப்போதும் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்திருப்போம். வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், திரும்பி வரும் வழியிலும், வீட்டிற்கு வந்த பிறகும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்போம். ஆனால் குளிர்காலம் வந்தவுடன் அனைத்தும் மாறிவிடுகிறது. தண்ணீர் பாட்டிலுக்கும் நமக்குமான தூரம் சற்றே அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் ஏன் தாகம் எடுப்பதில்லை என்பதை நீங்கள் கவனித்துள்ளீர்களா? குளிர்காலத்தில் உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும் என்று மருத்துவர்கள் அடிக்கடி கூறுகிறார்கள். ஆனால் குளிர்காலத்தில் தாகம் குறைவாகவே எடுக்கிறது ஏன்?? தண்ணீரை குறைந்த அளவில் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளா அல்லது முதியவர்களா? குளிர்காலத்தில் தாகம் எடுக்காதது ஏன்? டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் மருத்துவத் துறை இயக்குநர் மருத்துவர் புலின் குமார் குப்தா கூறுகையில், "குளிர் காலத்தில் நமது தாகம் கணிசமாகக் குறைகிறது. நமக்கு குறைவாகவே வியர்க்கும், அதனால் உடலுக்குக் குறைந்த அளவு தண்ணீரே தேவைப்படுவதைப் போல நாம் உணர்கிறோம்," என்று விளக்கினார். "பலர், குறிப்பாக முதியவர்கள் மற்றும் பணிக்குச் செல்பவர்கள், அதிக தண்ணீர் குடித்தால் அடிக்கடி கழிவறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று நினைத்து, வேண்டுமென்றே தண்ணீரை குறைவாகக் குடிக்கிறார்கள்" என்றார். மேலும், "கோடைக் காலத்தைப் போலவே குளிர் காலத்திலும் உடலுக்கு அதே அளவிலான தண்ணீர் தேவை என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள ஹீட்டர்கள், டிரையர்கள் மற்றும் உட்புற வெப்பமூட்டும் அமைப்புகள் காற்றை மிகவும் வறண்டதாக மாற்றுகின்றன. இது நீர் இழப்பை மேலும் அதிகரிக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார். நாம் குறைந்த அளவு தண்ணீரைக் குடிப்பதால், உடலில் தொடர்ந்து நீர் இழப்பு ஏற்பட்டு, அது நாள்பட்ட நீர்ச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் என்றார் அவர் பட மூலாதாரம்,Getty Images அமெரிக்க இதய சங்கத்தின் 2019ஆம் ஆண்டு ஆய்வின்படி, நீண்ட காலம் குறைந்த அளவில் தண்ணீர் குடிப்பவர்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. "குளிர் அதிகரிக்கும்போது, வெப்பத்தைப் பாதுகாக்க புற ரத்த நாளங்களை உடல் சுருக்குகிறது" என்று மெட்டாமார்போசிஸ் (ஒரு ஆரோக்கியம் சார்ந்த தளம்) அமைப்பின் தலைமை செயல் அதிகாரியும், ஆரோக்கியம் தொடர்பான ஆலோசகர் மற்றும் உணவு நிபுணருமான திவ்யா பிரகாஷ் கூறுகிறார். "இதனால் உடலின் மையப் பகுதிகளில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால் உடல் எல்லாம் சரியாக இருப்பதாகவும், தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்றும் உணர்கிறது. இதன் காரணமாக, தாகம் எடுக்கும் உணர்வு 40% வரை குறையலாம். ஆனால் உடலின் அடிப்படைத் தண்ணீர் தேவையில் வானிலை சூழல் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, அந்தத் தேவை எப்போதுமே சுமார் 2.5 முதல் 3.5 லிட்டர் வரை இருக்கும்." என்றார் அவர் பட மூலாதாரம்,Getty Images குறைவாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் நமது உடலில் சுமார் 60% நீர் உள்ளது. இதுகுறித்துப் பேசிய மருத்துவர் புலின் குமார் குப்தா, "இந்த நீர் ரத்தத்தில் உள்ளது. ரத்தத்தின் மூலமாகத்தான் ஆக்சிஜன், ஊட்டச்சத்துகள் மற்றும் பிற முக்கியமான பொருட்கள் முழு உடலின் செல்களுக்கும் சென்றடைகின்றன," என்கிறார். "நீரின் அளவு குறையும்போது, ரத்தம் அடர்த்தியாகிறது. இது மூளை செயலிழப்பு மற்றும் மாரடைப்பு அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இந்த அபாயம் குறிப்பாக குளிர் காலத்தில் அதிகமாக இருக்கும். அடர்த்தியான ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்துவதற்கு இதயம் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது, இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது." உடலில் நீரின் அளவு குறைவாக இருப்பது ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து, மூளை ரத்தக் கசிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக அவர் கூறுகிறார். இது சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து, சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்பைக் கணிசமாக அதிகரிக்கிறது என்றார் அவர். மருத்துவர்களின் கூற்றுப்படி, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது செரிமான மண்டலத்தைப் பாதித்து, மலச் சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்னைகளை உண்டாக்குகிறது. மேலும், நீண்ட காலம் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது சோர்வு, தலைவலி, தலைச்சுற்றல், தோல் வறட்சி போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் உணவு நிபுணரும், 'ஒன் டயட் டுடே' அமைப்பின் நிறுவனருமான மருத்துவர் அனு அகர்வால் இது தொடர்பாகப் பேசும்போது, "அதிகப்படியான மந்தநிலை, பலவீனம், சோர்வு, அதிகரித்த மன அழுத்தம், பதற்றம் (நீர்ச்சத்துக் குறைபாடு கார்டிசோல் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது), தலைச்சுற்றல், ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற உணர்வுகள் என நீர்ச்சத்துக் குறைபாட்டை உணர்த்தும் சில சமிக்ஞைகளை நம் உடல் வெளியிடுகிறது. இந்த சமிக்ஞைகள் அனைத்தும் உடல் செல்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதைக் குறிக்கின்றன," என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நெருப்பால் உடலை சூடுபடுத்துவது உடலிலுள்ள நீரின் அளவை குறைக்கிறது. யாருக்கு அதிக ஆபத்து உள்ளது? முதியவர்கள், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் அல்லது ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் அதிக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறுகிறார் மருத்துவர் அனு அகர்வால். குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதன் விளைவுகள் வெவ்வேறு வயதுப் பெண்களுக்கு வெவ்வேறு விதமாக இருக்கும் என்றும் மருத்துவர் அனு அகர்வால் விளக்குகிறார். ''இளம் பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடைய (40 வயது வரை) பெண்களுக்கு ஏற்கெனவே உடலில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். மாதவிடாயின்போது ஏற்படும் ரத்த இழப்பு உடலில் நீர்ச்சத்து குறைய வழிவகுக்கிறது. இதனால் மாதவிடாய் வலி அதிகரிக்கிறது, மேலும் வாயு மற்றும் வயிறு உப்பசம் போன்ற பிரச்னைகள் பொதுவாகக் காணப்படுகின்றன.'' தொடர்ந்து பேசிய அவர், "குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது ரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது, நச்சுகள் உடலில் தங்கி கட்டிகள் உருவாக வழிவகுக்கிறது" என்றார். பட மூலாதாரம்,Getty Images தண்ணீர் குடிக்க சரியான வழி என்ன? தண்ணீர் குடிக்க உகந்த வழி குறித்தும் மருத்துவர் அனு அகர்வால் விவரித்தார் குளிர்காலத்தில், காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்த 2-3 மணிநேரத்திற்குள் 2-4 கிளாஸ் தண்ணீரை மெதுவாகக் குடிக்கவும். உங்கள் தூக்கச் சுழற்சி பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, மாலை 5 மணிக்குள் உங்கள் தினசரி தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். மாலைக்கு பிறகு அதிக தண்ணீர் குடிப்பது அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கும் தூக்கம் கலைவதற்கும் வழிவகுக்கும். மேலும், "குளிர் காலத்தில் மக்கள் தண்ணீருக்குப் பதிலாகத் தேநீர், காபி, சூப் அல்லது மிக அதிக சூடான தண்ணீரைக் குடிக்கிறார்கள். ஆனால் மிக அதிக சூடான தண்ணீரைக் (50-60 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல்) குடிப்பது நல்லதல்ல. ஏனெனில் நமது உடலின் இயல்பான வெப்பநிலை சுமார் 37 டிகிரி செல்சியஸ். இத்தகைய சூழ்நிலையில், வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிப்பதே சரியான வழியாகும். இது உடலுக்குச் சிறந்தது மற்றும் எளிதில் உறிஞ்சப்படும் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy1xn7j2jyo
  3. பருத்தித்துறை நீதிமன்றில் களஞ்சியப்படுத்தப்பட்ட 600 கிலோ கேரளா கஞ்சா தீயிட்டு அழிப்பு Published By: Vishnu 04 Jan, 2026 | 07:18 PM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றில் சான்று பொருட்களாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 600 கிலோ கிராம் கேரளா கஞ்சா நீதவான் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயதிக்க எல்லைகளுக்குள் கடந்த காலங்களில பல்வேறு சந்தர்ப்பங்களில் கைப்பற்றபட்ட கஞ்சா போதைப் பொருட்கள் வழக்கின் சான்று பொருட்களாக நீதிமன்றில் பதிவாளரின் பொறுப்பில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன. அந்நிலையில் அவற்றில் வழக்குகள் முடிவுற்று, நீதவானினால் அழிக்க உத்தரவிட்டப்பட்ட சுமார் 600 கிலோ கேரளா கஞ்சா நீதாவனின் நேரடி கண்காணிப்பில் பொலிகண்டி குப்பைத்திடலில் அவை தீயிட்டு அழிக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/235214
  4. "வகுப்புவாத அழுத்தம்" - டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேசம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு, 3 மணி நேரங்களுக்கு முன்னர் 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக, வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்யாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) முடிவு செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மதியம் நடந்த வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் 17 இயக்குநர்கள் அடங்கிய வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஐசிசிக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்ப உள்ளது. மேலும், வங்கதேச அணி பங்கேற்கும் போட்டிகள் இலங்கையில் நடைபெறும் வகையில், போட்டி நடைபெறும் இடத்தை மாற்றுமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் முறையிட உள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையில் விளையாட உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் பின்னர் விரிவான அறிக்கை வெளியிடும் என வங்கதேச கிரிக்கெட் வாரிய இயக்குநர் நஜ்முல் அபதீன் ஃபஹீம் கூறினார். 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்க உள்ளது. வங்கதேசத்தின் முதல் போட்டி கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images முஸ்தஃபிசுர் ரஹ்மான் விவகாரத்தில் தொடங்கிய சர்ச்சை முன்னதாக, ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியிலிருந்து முஸ்தஃபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதற்கு, வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கம் கடும் எதிர்வினையாற்றியுள்ளது. "வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கும் நாட்டிற்கும் ஏற்படும் அவமானத்தை எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் கூறியிருந்தார். 2026 ஐபிஎல் தொடரிலிருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர்ரஹ்மான் நீக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்த அவர், "வங்கதேச கிரிக்கெட், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வங்கதேசத்திற்கு ஏற்படும் எந்த அவமானத்தையும் எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அடிமைத்தனத்தின் நாட்கள் முடிந்துவிட்டன," என்றார். ஆசிஃப் நஸ்ருல் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "வகுப்புவாதக் குழுக்களின் அழுத்தத்தின் கீழ் பிசிசிஐ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டது," என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த முழு விவகாரத்தையும் ஐசிசி-க்கு விளக்கி கடிதம் எழுதுமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை அவர் கேட்டுக்கொண்டார். ஆசிஃப் நஸ்ருல் அவரது பதிவில், "ஒரு வங்கதேச கிரிக்கெட் வீரர் ஒப்பந்தம் இருந்தபோதிலும் இந்தியாவில் விளையாட முடியாதபோது, முழு வங்கதேச கிரிக்கெட் அணியும் உலகக் கோப்பையில் விளையாட இந்தியா செல்வது பாதுகாப்பானது என்று உணர முடியாது என்பதை வாரியம் தெளிவுபடுத்த வேண்டும்," என்று எழுதினார். இத்துடன், வங்கதேசத்தில் ஐபிஎல் ஒளிபரப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆலோசகரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பட மூலாதாரம்,Getty Images முஸ்தஃபிசுர் ரஹ்மானின் கருத்து என்ன? டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்ற ஏலத்தில் கேகேஆர் அணி வங்கதேச வேகப்பந்து வீச்சாளரான முஸ்தஃபிசுர் ரஹ்மானை ரூ.9.2 கோடிக்கு வாங்கியிருந்தது. இருப்பினும், பிசிசிஐ உத்தரவின் காரணமாக கேகேஆர் அணி முஸ்தஃபிசுர் ரஹ்மானை விடுவிக்க வேண்டியிருந்தது. இந்த விவகாரம் குறித்து முஸ்தஃபிசுர் ரஹ்மான், "அவர்கள் என்னை விடுவித்தால் நான் என்ன செய்ய முடியும்?" என்று கூறியிருந்தார். வங்கதேச கிரிக்கெட் வாரியத்தைத் தவிர, வங்கதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் தபிஷ் அவலும் ஐபிஎல்-லிருந்து முஸ்தஃபிசுர் நீக்கப்பட்டதற்கு ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தஃபிசுர் ரஹ்மானை அவரது கிரிக்கெட் திறமையின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுத்தது, ஆனால் "அரசியல் தலையீடு காரணமாக அவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று அவர் கூறினார். 'மக்களை ஒன்றிணைக்கவும், பிளவுகளைக் குறைக்கவும் விளையாட்டுக்கு ஒரு அசாதாரண சக்தி உள்ளது' என்று அவர் கூறினார். 'பிளவுகளை உருவாக்க அல்லாமல், பரஸ்பர புரிதலையும் மரியாதையையும் வளர்க்க விளையாட்டு பயன்படுத்தப்பட வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c23r8xle38ro
  5. வெனிசுலா ஜனாதிபதி மற்றும் மனைவியை விடுவிக்குமாறு அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது Published By: Vishnu 04 Jan, 2026 | 06:48 PM வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்து உடனடியாக அவர்களை விடுவிக்குமாறு சீனா அமெரிக்காவை வலியுறுத்துகிறது. குறித்த சம்பவத்தை சீனா கடுமையாக எதிர்க்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்து பிரேசில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இராணுவ இலக்குகள் உட்பட பல இடங்களில் அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் 3ஆம் திகதி சனிக்கிழமை அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டனர், மேலும் அவர்கள் இப்போது நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235212
  6. உலக கிண்ணத்திற்காக இந்தியா செல்ல பங்களாதேஷ் அணி மறுப்பு Jan 4, 2026 - 06:21 PM எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா செல்வதை பங்களாதேஷ் அணி மறுத்துள்ளது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் ரீதியான பதற்றமான சூழ்நிலையில், பங்களாதேஷ் வீரர்களின் "பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை" கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இத்தொடரில் பங்களாதேஷ் அணி இந்தியாவில் விளையாடவிருந்த போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாரு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரில், பங்களாதேஷ் அணி கொல்கத்தாவில் 3 போட்டிகளில் விளையாடவிருந்தது. எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடவிருந்த முஸ்தபிசுர் ரஹ்மான் திடீரென அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டமை, இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பதற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பங்களாதேஷில் வாழும் சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே முஸ்தபிசுர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmjzqczd403i3o29ngw2om12w
  7. பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மோசமான பல கூறுகள் புதிய வரைவிலும் உள்ளன ; வரைவை உடன் வாபஸ் பெறுமாறு அரசாங்கத்திடம் சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு வலியுறுத்தல் 04 Jan, 2026 | 02:21 PM (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டம் நிராகரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த பல்வேறு அடிப்படைக் கூறுகள், அதற்குப் பதிலீடாகப் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வரைவில் உள்வாங்கப்பட்டுள்ளன. ஜனநாயகக் கோட்பாடுகள் வலுவிழப்பதைப் புறந்தள்ளிவிட்டு, தேசிய பாதுகாப்பை மாத்திரம் தனித்து முன்னிலைப்படுத்த முடியாது. எனவே இப்புதியவரைவை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார். அதற்கமைய நாடளாவிய ரீதியில் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இணைந்து உருவாக்கிய சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு எனும் அமைப்பு இப்புதிய வரைவு தொடர்பான தமது கரிசனைகளை உள்ளடக்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது, தற்போது நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்துடன் ஒப்பிடுகையில் அடையப்பட்டிருக்கும் மனித உரிமைகள் சார்ந்த பெருவெற்றி போல் காண்பிக்கப்படுகின்றது. அந்த பிம்பத்தின் விளைவாக நிர்வாக ரீதியான தடுத்துவைப்பு, இராணுவ அதிகாரங்கள், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் சார்ந்த குற்றங்கள் என்பன உள்ளடங்கலாக அவ்வரைவில் உள்வாங்கப்பட்டுள்ள மிகமோசமான அடிப்படைகள் பற்றிய தெளிவற்ற தன்மை நிலவுகின்றது. பயங்கரவாதத்தடைச்சட்டம் நிராகரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த பல்வேறு அடிப்படைக் கூறுகள் இவ்வரைவில் உள்வாங்கப்பட்டுள்ளன. பயங்கரவாதக்குற்றங்கள் தொடர்பில் குற்றவியல் சட்டத்துடன் அவசியமேற்படும் பட்சத்தில் அவசரகால வழிகாட்டல்களை இணைந்துப் பிரயோகிப்பதை விடுத்து, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் பிரயோகிக்கப்படுமாயின், அது சம்பந்தப்பட்ட நபருக்கான பாதுகாப்பு தளர்த்தப்பட்ட குற்றவியல் அடிப்படையுடன், பரந்துபட்ட நிறைவேற்றதிகாரப் பிரயோகத்துக்கும் இடமளிக்கும். பரந்துபட்ட அதிகார வழங்கலுக்கு வாய்ப்பளிக்கும் இச்சட்ட வரைவின் அடிப்படை நோக்கம், அதன் பெயரில் உள்ளவாறு பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதே தவிர, வன்முறைகளிலிருந்து சாதாரண மக்களைப் பாதுகாப்பது அல்ல. ஜனநாயகக் கோட்பாடுகள் வலுவிழப்பதைப் புறந்தள்ளிவிட்டு, தேசிய பாதுகாப்பை மாத்திரம் தனித்து முன்னிலைப்படுத்த முடியாது. எனவே இவ்வரைவை உடன் வாபஸ் பெறுமாறும், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையவாறு புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து சகல தரப்பினருடனும் பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235179
  8. வெனிசுலாவில் அமெரிக்கா செய்வது பச்சை காடைத்தனம். இதை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் ஐரோப்பா, யூகே, கனடா, அவுஸ், நியூசிலாந்த் வெளியிட்டுள்ள அறிக்கைகள் சுத்த பயந்தாங்கொள்ளி தனம். இரெட்டை நிலைப்பாட்டின் உச்சம். அமேரிக்கா போதை பொருள் கடத்தல் என சொல்வது பொய் சாட்டு. அது உண்மை எனிலும் கூட… ஒரு நாட்டின் தலைவரை இன்னொரு நாட்டின் உள்நாட்டு சட்டத்துக்கு அமைய, மற்றைய நாட்டில் புகுந்து தூக்கி வந்து வழக்கு போடுவது…. ஐநா சாசனத்தை மீறும் செயல்… சர்வதேச சட்டத்துக்கு முரணானது…. நிச்சயமாக இது ரஸ்யா, சீனா வுக்கு மட்டும் அல்ல அகண்ட் பாரத் கனவில் இருக்கும் சங்கிகளுக்கு கூட எதிர்காலத்தில் இன்னொரு நாட்டில் அடாவடி செய்ய ஒரு ப்ளூ பிரிண்ட்தான்.
  9. செயற்கை நுண்ணறிவை பாவித்து ஒரு சேனல் இனித்தான் செய்யலாமா என்று யோசிக்கிறேன். திறந்ததும் அறிவிக்கிறேன். சப்ஸ்கிரைப் பொத்தான் பெல் பொத்தானை சொடுக்கி எல்லாரும் இணைப்பு எடுத்திடுங்கோ.
  10. ஆனால் இதே அமெரிக்கா ரஸ்ய ஆக்கிரமிப்பு எதிராக பெருமளவு ஆயுதங்களையும் பொருளாதார உதவிகளையும் செய்தது ரஸ்யா உக்கிரேனை ஆக்கிரமிப்பது தவறானது என்று அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுத கபாருளாதார உதவிகளை வழங்கியதோடு ஐநாவை உடனடியாக கூட்டி பெரும்குற்றஞ்சாட்டுகளை ரஜயாவுக்கு எதிராக முன்வைத்தன. ஆனால் இப்போது எல்லோரும்நழுவல் போக்கில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஐநாவும் ஒப்புக்கு அறிக்கையை விட்டுவிட்டு நித்திரைக்குப் போய்விட்டது. அமெரிக்கா வெனிசுலாலவை ஆதரித்ததற்கு கூறும் காரணம் முன்னுக்குப்பின் முரணானதும் ஏற்றுக்கொள்ள முடியாதததும் ஆகும். அமெரிக்கா தனது நாட்டுக்குள் போதை வஸ: கடத்தப்படுவதை அதன் எல்லைகளில் ஒழுங்கான பாதுகாப்பை வழங்காததே அதற்குக்காரணம். ஆகவே எந்த நாட்டில் இருந்து போதைப்பொருள் அமெரிக்காவுக்குள் வந்தாலும் அதற்கு அமெரிக்காவின் பாதுகாப்புக் குறைபாடே காரணம். வெனிசுலாலவை அமெரிக்கா அதன்அதிபரைக் கைது செய்தபின் அல்லது முற்றாக வெனிசுலாவை ஆக்கிரமித்தபின்னும் போதைப்பொருள் அமெpரிக்காவுக்குள் கடத்தப்படவில்லை என்று அமெரிக்காவால் உறுதியளிக்க முடியுமா? வேலியை சரியாகப் போடாமல் விட்டு விட்டு அடுத்தவன் தோட்டத்து மாடு எனது பயிரை மேய்ந்து விட்டது என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும.?அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எந்த ஒரு நாடும் எந்த ஒரு நாடடையும் ஒரு பலவீனமான குற்றச்சாட்டை வைத்து ஆக்கிரமிப்பதற்கு போதுமானதாகும்.ரஸ்யாவுக்கும் சீனாவுக்கும் ரூட்கிளியர்.
  11. இதைத்தான் உக்ரேன் போர் ஆரம்பித்த நாளில் இருந்து எழுதுகிறேன். வல்(லூறு) அரசுகள் எப்போதும் வல்லூறுகளே. இதில் நாம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களை ஆதரிப்பது மட்டுமே எடுக்க கூடிய ஒரே ஒரு நியாயமான நிலைப்பாடு. இதை சொன்னால், புட்டின் மீதுள்ள அதீத காதலில், அல்லது மேற்கு வெறுப்பில் ஒரு பகுதியை மேற்கின் ஆதரவாளர் என பெயிண்ட் அடித்து, ரணகளம் பண்ணி விட்டார்கள்😂.
  12. பாவம் கிந்தியாவுக்குத்தான் பேக்கரி டீல் போடவும், வீரம் விண்ணானம் காட்டவும், வச்சுக்கொள்ளவும் ஒன்றும் இல்லை போல.
  13. Today
  14. உக்ரைனை நீ வச்சுக்கோ!தாய்வானை அவன்வச்சிருக்கட்டும்!!வெனிசுலாவை நான்வச்சிருக்கிறன். பட் இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பேக்கரி டீல் ஓவர்.
  15. சரி பிழைக்கு அப்பால் - விசேட இராணுவ நடவைடிக்கையை அமெரிக்கா 2 மணி 30 நிமிடத்தில் முடித்துள்ளது. ரஸ்யா உக்ரேனில் ஐந்து வருடமாக வைச்சு தாளிப்பதை போல அல்லாமல்😂. அமெரிக்கா போல் அல்ல, புட்டினை நம்பினோர் கைவிடப்படுவதில்லை 😂
  16. அண்ணை துளி துளியாய் பகுதியில் ஆரம்பித்துள்ளேன்.
  17. இதை எனக்குத்தான் எழுதி உள்ளீர்களா? யாழில் இதெற்கென ஒரு திரியே திறந்து, காணி, பொலிஸ் அதிகாரத்தை எப்படியாவது, சம்ஸ்டியோ, குமஸ்டியோ என்ன பெயரிலாவது பெற வேண்டும் என நான் எழுதிய திரியில் நீங்களும் கருத்து எழுதினீர்களே? இது மட்டும்மல்ல இன்னும் பல திரிகளிலும் குடியேற்றம் பற்றியும் காணி அதிகாரம் பற்றியும் எழுதி உள்ளேன். கொசு பனம் பழ சீசனில் வரும். அதிக பாதிப்பை தராது. ஆனால் இந்த கெட்ட நுளம்புகள் அப்படி அல்ல, கொடிய நோய்களை (ஆனுர ஆதரவு) மக்களிடையே பரப்பும். இந்த நுளம்புகளை கண்ட இடத்தில் அடித்து விட வேண்டும்.
  18. உந்தப் பெரிய அமெரிக்க போர்விமானங்கள் பலாலியில் இறக்கி சேக்கஸ் காட்டினது ...இப்பவே விளங்கினால் சரி ...மதுரோவும் சீனாப் புகழ்பாடி...சேட்டை விட்டவர் ...அனுரவும் அப்படியே ...இனி நடக்கப்போவதில் ...அவதானம் தேவை குமாரு...ரூட்டெல்லாம் அவைக்கு அத்துப்படியாகிட்டுது..
  19. இந்த உலகில் ''இறையாண்மை'' என்று ஒன்று உள்ளதா? அப்படியிருப்பதாக இருந்தால் ஆக்கிரமிப்பும் குடியேற்றவாதமும் நிறைவடைந்த 50க்குப் பிற்பட்ட உலக சூழலில் இனங்களின்(தனித்துவம்) சுயநிர்ணயம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். தமிழீழம் முதல் காசா வரையான அழிவுகளும், ஈராக், உக்ரேன் முதல் வெனிசுவேலா வரையான ஆக்கிரமிப்புகள் நடைபெற்றிருக்குமா? பாபர் மசூதி இடிப்பு, காஸ்மீரின் தனித்துவ உரிமைகள் மறுப்பு மற்றும் சட்டநீக்கம் எனப் பல்தேசிய இனங்களின் உரிமை மறுப்பு, காலிஸ்தான் உரிமைப்போராட்ட அழிப்புப் போன்றனவும் தொடர்கின்றன. யூகோஸ்லாவியாக்காவைக் கையாண்டது ஒரு விதம். இலங்கையை மற்றும் இஸ்ரேலைக் கையாள்தல் ஒருவிதம் எனத் தத்தமது தேவைகளும், கொள்ளையிடத் தேவையான வளங்களுமே சுயநிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் தீர்மானிக்கின்றன. மேற்கோ கிழக்கோ வளச்சுரண்டலுக்கான போட்டியில் ஒருவரை ஒருவர் மிஞ்சியோரல்ல. ஆனால், அழிவது என்னவோ அப்பாவி மக்களே. சனநாயகமென்ற போர்வையுள் நின்று ஆக்கிரமிப்பையும், அப்பாவி மக்கள் மீதான படுகொலைகளையும் புரிவோர் இறுதிவரை அரச சுகபோகங்களை அனுபவித்து அரவசவாழ்க்கையை வாழ்ந்து அரசமரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டுவிடுகின்றனர். அதற்கும் மக்களின் வரிப்பணமே செலவாகிறது. சீ** இந்த வெட்கம் கெட்ட வாழ்வுக்கு எத்தனை பந்தா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வேறு. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  20. கண்ணன் காட்டிய வழி ஆர் வி சுப்பிரமணியன் துச்சாதனன் கீழ்ஸ்தாயியில் உறுமினான். “நீ சொல்வது பொய்யாக – வேண்டாம் தவறாக இருந்தால் உன் தலை இருக்காது”. அனுகூலன் நிமிர்ந்து துச்சாதனனை நோக்கினான். அவனது கண்கள் கலங்கி இருந்தன. “தங்களிடம் நாற்பது ஆண்டுகளாக அணுக்க ஒற்றனாக பணி புரிகிறேன். இது வரை நான் தங்கள் வரை கொண்டு வந்த எந்த செய்தியும் தவறாக இருந்ததுண்டா?” என்று தழுதழுத்த குரலில் வினவினான். “ஆம் அதனால்தான் உன்னிடம் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறேன். உன் தலை இன்னும் உடலில் இருக்கிறது. நீ அலர் உரைப்பது யாரைப் பற்றி? கர்ணன் என் தமையனுக்கு அடுத்த நிலையில் உள்ளவன், என் தமையனுக்கு மட்டுமல்ல எனக்கும் உயிர் நண்பன்!” என்று மீண்டும் கடுமையான குரலில் சொன்னான். ஆனால் தன் குரல் அனுகூலனைத் தவிர வேறு யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வும் அவன் குரலில் இருந்தது. “செய்தியைச் சொல்வதில் எனக்கும் வருத்தமே. எனக்கு அங்கர் தெய்வம். என் மகள் திருமணத்திற்கு நீங்களும் அரசரும் வரக் கூட இல்லை, அவர் முன்னின்று நடத்தினார். அவர் என் மகளுக்கு அளித்த பரிசுப் பொருட்களை இன்னும் அவள் கணவன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது என் கடமை. நான் இதை அறிந்திருந்தும் தங்களிடமிருந்து மறைத்தால் அவரே என்னை மன்னிக்கமாட்டார். இந்தச் செய்தியை தங்களுக்கு உரைத்தது அல்ல, இத்தனை தாமதமாக உய்த்துணர்ந்தேன் என்பதுதான் எனக்கு இழுக்கு” என்று அனுகூலன் கம்மிய குரலில் சொன்னான். துச்சாதனன் சரிந்து தரையில் உட்கார்ந்தான். அவன் தோள்கள் குலுங்கின. தன் முகத்தை தன் கைகளில் புதைத்துக் கொண்டான். அனுகூலன் “அரசரிடம் நீங்கள்தான்…” என்று ஆரம்பித்தான். துச்சாதனன் கையை ஆட்டி அவனைப் போகும்படி சைகை செய்தான். அனுகூலன் கூடாரத்திலிருந்து தளர்ந்த நடையோடு வெளியேறினான். துச்சாதனன் மீண்டும் புற உலகுக்கு வர இரண்டு நாழிகைகள் ஆயிற்று. வெள்ளி எழுவது ஆடிக் கொண்டிருந்த கூடாரக் கதவின் வழியே தெரிந்தது. பெருமூச்சுடன் எழுந்து மெதுவாக துரியோதனனின் கூடாரத்துக்கு நடந்தான். கூடார வாசலில் இருந்த துரியோதனின் அணுக்க சேவகன் சிவதாணு தலை தாழ்த்தினான். “அரசர் இப்போதுதான் உறங்கச் சென்றார், இத்தனை நேரம் ஆசாரியர், அங்கர், அஸ்வத்தாமர், கிருபர், சல்யர், மாமாவுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்” என்று கிசுகிசுத்தான். “சந்தித்தாக வேண்டும் சிவதாணு, முக்கியச் செய்தி” என்று தளர்ந்த குரலில் சொல்லிக் கொண்டே துச்சாதனன் கூடாரத்தின் உள்ளறையில் நுழைந்தான். துரியோதனன் அவனை எதிர்பார்த்து திண்டின் மேல் சாய்ந்து காத்திருந்தான். “உன் காலடியோசை கேட்டது, உன்னை ஆலோசனைக் கூட்டத்தில் காணோமே என்று கர்ணன் மீண்டும் மீண்டும் விசாரித்தான். அயர்ச்சியில் உறங்கி இருப்பான், அழைக்க வேண்டாம் என்று அவனே விளக்கமும் சொல்லிக் கொண்டான்” என்று புன்னகைத்தான். துச்சாதனன் எதுவும் பேசவில்லை. கூடாரத்தில் தூண் ஒன்றில் சாய்ந்து நின்றான். அவன் கால்கள் தள்ளாடின. துரியோதனன் எழுந்து அவனை அணைத்துக் கொண்டான். அவனை திண்டில் சாய வைத்தான். “மதுவாசம் இல்லை, பின் ஏன் இந்தத் தள்ளாட்டம்? உளம் தளர்ந்திருக்கிறாயா? கர்ணனின் வில்லான விஜயம் விஜயனை வெல்லும், நமக்கு ஜெயத்தைப் பெற்றுத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று அவனைத் தேற்றினான். துச்சாதனன் வெடித்து அழுதான். “விஜயத்துக்கும் அதை ஏந்தும் வீரனுக்கும் சக்தி உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவனுக்கு நமக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் மனம் இல்லை அண்ணா!” என்று துரியோதனின் தோளில் சாய்ந்து விம்மினான். “இவனை நம்பித்தான் போரில் இறங்கினோம், பிதாமகரையும் துரோணரையும் அல்ல. இன்று பீமனிடம் விற்போரில் தோற்றிருக்கிறான். அவனைக் காக்க இருபத்திரண்டு தம்பியர் இறந்தனர். உன்னையே எதிர்த்து குரல் எழுப்பியவன் விகர்ணன், இந்தப் போர் அநீதியானது என்று உறுதியாகக் கருதியவன். ஆனால் முழுமூச்சுடன் போரிட்டு தன் உயிரைத் தந்துவிட்டான். இவன்? உண்மையில் இவன் உன்னை விடவும் பலம் வாய்ந்தவன். கதையெடுத்து சுழற்றினால் பலராமருக்கும் இவனை எதிர்கொள்வது கஷ்டம். இவனால் பீமனை மற்போரில் கூட வெல்ல முடியும், வெறும் தசை மலையான அவனிடம் விற்போரில் தோற்று நிற்கிறான். ஏன் தெரியுமா?” என்று ஆவேசமாகக் கேட்டான். துரியோதனன் எதுவும் சொல்லாமல் எங்கோ வெறித்தான். துச்சாதனன் அவன் முகவாயைப் பிடித்து நிமிர்த்தினான். “அவனை உயிர் நண்பனாகக் கருதினேன். உனக்கு அடுத்த நிலையில் அவனைத்தான் வைத்திருந்தேன். துருமசேனனும் லட்சுமணனும் விகர்ணனும் தம்பியரும் ஜயத்ரதனும் இறந்தது கூட எனக்கு இத்தனை வலியைத் தரவில்லை. அவன் ஏன் நம் சார்பாக முழு மூச்சுடன் போரிடவில்லை என்று அறிவாயா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டான். “ஏனென்றால் அவன் கௌந்தேயன்” என்று துரியோதனன் முனகினான். அதிர்ச்சியில் துச்சாதனனின் கை தன்னிச்சையாக கீழிறங்கியது. துரியோதனன் மெதுவாக துச்சாதனனின் தலை முடியைக் கோதினான். “ஆம், அவன் சிற்றன்னைக்கு வாக்களித்திருக்கிறான். அர்ஜுனனைத் தவிர வேறு எந்த இளையோனையும் கொல்லமாட்டேன் என்று சொல் அளித்திருக்கிறான். இதைக் கூட நான் அறியவில்லை என்றால் நான் அரசனாக இருக்கவே தகுதி அற்றவன் துச்சா! அப்புறம் எனக்கு மணிமகுடம் எதற்கு, எதற்கு நமக்கு ஒரு ஒற்றர் படை?” என்று புன்னகைத்தான். “அதனால்தான் அவன் வில் இன்று பீமனின் எதிரில் தள்ளாடிவிட்டது. இன்றைய தோல்வி அவனுக்கு ஒரு பாடம். நாளையிலிருந்து அவன் அர்ஜுனனை எதிர்த்து முழுமூச்சுடன் போரிடுவான். இனி கண்ணனைத் தவிர யாரும் அவனை வெல்ல முடியாது. அந்த மாயவனின் சதிகளிலிருந்து நாம் அவனைக் காத்தால் போதும், நம் வெற்றி நிச்சயம். கவலை கொள்ள வேண்டாம்” என்று மிருதுவான குரலில் சொன்னான். துச்சாதனன் ஈரம் ததும்பும் விழிகளால் தமையனை நோக்கினான். “உன் உயிர் நண்பன், மதனி அவனை சொந்தச் சகோதரனாகத்தான் கருதுகிறாள். நம் மகள் கிருஷ்ணை என்னை விட, ஏன் உன்னை விடவும் கூட அவனைத்தான் தந்தை ஸ்தானத்தில் வைத்திருக்கிறாள். அவன் எப்படி நமக்கு துரோகம் செய்யத் துணிந்தான்? அவன் என்ன அவமானம் ஏற்பட்டாலும் சரி என்று பீஷ்மரின் கீழ் போரிட்டிருக்க வேண்டும். முதல் நாள் போரில் அவன் பாண்டவர்களில் ஒருவரைக் கொன்றிருந்தால் போர் அத்தோடு முடிந்திருக்கும். நாம் இன்றும் நூற்றுவராக இருந்திருப்போம்” எண்று அழுதான். “அவனுக்கு நாம் செய்யாத துரோகமா?” என்று துரியோதனன் விரக்தியோடு நகைத்தான். “என்ன துரோகம் செய்துவிட்டோம்? குதிரை மேய்க்க வேண்டியவனை அரசனாக்கினோம், சூதனை ஷத்ரியனாக்கினோம். நம் அனைவருக்கும் மூத்தவன் என்று முழுமனதாக ஏற்றோம். நம் அந்தப்புரங்களிலும் அனுமதி உண்டு. உனக்கு சமமான நிலையில் வைத்தோம், நம் மனைவியர் அவனிடம் மட்டும்தான் கணவனைப் பற்றி அலுத்துக் கொள்கிறார்கள், குடிமூத்தவனான உன்னிடமும் என்னிடமும் அல்ல. நம் பிள்ளைகள் மனதில் அவனுக்குத்தான் முதலிடம், பக்கத்தில் நாம் இருந்தால் அவன் பெரிய தந்தை, அம்மாக்க்கள் இருந்தால் அவன் மாமன். இதுதான் துரோகமா?” “அவன் நம் படைகளுக்கு தளபதியாக இருக்க வேண்டியவன். மூத்தவர் என்ற மரியாதைக்காக மட்டுமே பிதாமகரைத் தளபதி ஆக்கினோம், அதுவும் அவன் பரிந்துரைத்ததினால்தான். அவனைப் போய் சூதன், அதிரதன் மட்டுமே என்று பீஷ்மர் ஒதுக்கினார். நான் அரசன், நீ இளவரசன். என்ன கிழித்துவிட்டோம்? அவரை எதிர்த்து நா ஒரு வார்த்தை பேசவில்லை. அதைக் கூட விட்டுவிடலாம். ஆனால் பீஷ்மர் விருஷகேதுவுக்குக் கூட போரில் ஈடுபட அனுமதி தரவில்லை, அவன் குதிரைகளைப் பரிபாலித்தான். நான் ஏன் பீஷ்மருக்கு ஆணையிடவில்லை? அதை எதிர்த்து நீயும் தம்பியரும் ஏன் சங்கை அறுத்துக் கொள்ளவில்லை? காலமெல்லாம் அவனை குதிரைச்சூதன் என்று இழிவுபடுத்தினார்கள், அவன் தளரவில்லை. அவன் மகனையும், அங்கநாட்டு இளவரசனையும், குதிரைச் சூதனாக பணி புரிய வைத்தபோது நாம் என்ன கிழித்துவிட்டோம்? எந்த ஷத்ரியனுக்கு குதிரை பராமரிக்கும் பொறுப்பு தரப்பட்டிருக்கிறது? விருஷகேது ஷத்ரியன் என்று நானோ நீயோ மாமாவோ தம்பியரோ மெல்லிய முனகலைக் கூட வெளிப்படுத்தவில்லையே?” துரியோதனனுக்கு மூச்சிரைத்தது. அருகில் இருந்த மதுக் குவளையை எடுத்து இரண்டு மிடறு பருகி ஆசுவாசப்படுத்திக் கொண்டான். “அவன் ஷத்ரியன் என்ற அங்கீகாரத்துக்காக காலமெல்லாம் ஏங்குகிறான். திரௌபதி சூதனை மணக்க மாட்டேன் என்று சுயம்வரத்தில் இழிவுபடுத்திய பிறகு அவன் சுயம்வரம் பக்கம் தலை வைத்துப் படுக்கவே அஞ்சினான். அவனுக்கு ஒரு ஷத்ரியப் பெண்ணை நாமாவது பேசி மணமுடித்து வைத்தோமா? அண்ணன் அண்ணன் என்று கொண்டாடும் நம் வீட்டுப் பெண்களுக்கே அவரவர் குடும்பத்தில் சூதனுக்கு எப்படி பெண் கேட்பது என்று ஆயிரத்தெட்டு யோசனை. சுப்ரியை பானுவின் தங்கை மாதிரி என்று சொல்லி ஒரு சேடியைத்தான் மணமுடித்து வைத்தோம். அது என்ன தங்கை மாதிரி? பானு, அசலை, மற்ற தம்பிகளின் மனைவியருக்கு சகோதரிகளே இல்லையா, சகோதரிகள் மாதிரி சேடிகள்தான் இருந்தார்களா? வெறும் சோற்றுக் கடனுக்காக குருதி உறவுகளைத் துறந்து தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான். துரோணரும் பிதாமகரும் அல்ல, அவன் ஒருவனால் மட்டுமே பார்த்தனைக் கொல்ல முடியும். கண்ணன் ஒருவனால் மட்டுமே இவனிடமிருந்து பார்த்தனைக் காக்க முடியும். அந்தக் கண்ணனின் சதிகளிலிருந்து இவனைக் காப்பாற்றினால் நம் வெற்றி நிச்சயம். நமக்கிருக்கும் ஒரே வழி அதுதான்” என்று இரைந்தான். துச்சாதனன் ஈரக் கண்களோடு துரியோதனனை நிமிர்ந்து நோக்கினான். “நீ என்ன சொன்னாலும் எனக்கு சமாதானம் ஆகவில்லை. முழுமூச்சாகப் போரிட்டாலே அர்ஜுனனை வெல்வது இவனுக்கும் எளிதல்ல. விராட நாட்டில் பார்த்தன் ஒருவனே இவனையும் பிதாமகரையும் ஆசாரியரையும் வெல்லவில்லையா? அர்ஜுனன் போராடுவான் என்று எதிர்பார்க்கவில்லை என்று சாக்குபோக்கு சொன்னான். இப்போதோ அர்ஜுனன் ஒருவன் அல்ல, தேரோட்டும் மாயவனும் துணை நிற்பதால் அவன் பலம் இன்று இரண்டு மடங்காக இருக்கிறது, இல்லாவிட்டால் ஜயத்ரதனை அவன் கொன்றிருக்க முடியாது. இன்று பாண்டவர்களை வெல்ல ஒரே வழி மிச்ச நால்வரில் ஒருவரைக் கொல்வதுதான், இல்லை தருமனை சிறைப்பிடிப்பதுதான். ஆனால் இவன் தன் தம்பியரைக் காக்க நம் தம்பியரை பலி கொடுக்கிறான். உன்னையும் என்னையும் கூட இவன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. இன்று அவன் பீமனை கொன்றிருந்தால் உன் தலை மேலும் என் தலை மேலும் ஆடிக் கொண்டிருக்கும் கத்தி உடைந்திருக்கும். பாண்டவர்களில் ஒருவன் இறந்தாலும் அவர்கள் ஐவரும் இறந்த மாதிரிதான், நமது வெற்றி இன்றே உறுதி ஆகி இருக்கும்” என்று அழுதான். துரியோதனன் கடகடவென்று சிரித்தான். “பலே பலே! நீயும் யோசிக்க ஆரம்பித்துவிட்டாய்! மூடா, இதை நீ உணர்ந்திருப்பது உண்மையானால் நீயே இந்தப் போரை முதல் நாளே முடித்து வைத்திருக்கலாமே!” என்று நகைத்துக் கொண்டே கேட்டான். துச்சாதனன் குழம்பிய விழிகளுடன் அண்ணனைப் பார்த்தான். “என்னாலும் – என்னை விடு – உன்னால் யுதிஷ்டிரனையோ இரட்டையரையோ வெல்ல முடியாதா? ஏன் நீ முதல் நாளே நகுலனைத் தேடிச் சென்று கதையைப் பயன்படுத்தி இருக்க வேண்டியதுதானே? உனக்கெதிராக அவனால் இரண்டு நாழிகை நிற்க முடியுமா? நீயே சொன்ன மாதிரி அவர்களில் ஒருவன் இறந்தாலும் அவர்கள் ஐவரும் இறந்த மாதிரிதானே! நாம் அன்றே வெற்றிவாகை சூடி இருக்கலாமே!” என்று துரியோதனன் கேட்டான். துச்சாதனன் மௌனமாக நின்றான். “உண்மையில் நம் தரப்பில் எல்லாருக்கும் அடிமனதில் பாசம் இருக்கத்தான் செய்கிறது துச்சா! எத்தனை வஞ்சம் இருந்தாலும் என்னால் பீமனைத் தவிர்த்து வேறு எந்த பாண்டவனையும் கொல்ல முடியாது. முதல் நாள் போரில்தான் நானும் இதை உணர்ந்தேன். உன்னை அறைகூவினால் ஒழிய நீயும் பீமன் தவிர்த்த பிற பாண்டவர்களைத் தவிர்க்கத்தானே செய்கிறாய்? பீமனை விடு, பாண்டவர்களின் மகன்களைக் கொல்வது கூட நமக்கு சுலபமல்ல. லட்சுமணன் இறந்திருக்காவிட்டால் அபிமன்யுவை துரத்தி இருப்போம், அவ்வளவுதான். நமக்கும் பிதாமகருக்கும் ஆசாரியருக்கும் பெரிய வித்தியாசமில்லை, ஒன்று விட்ட சகோதரர்களுக்கு எதிராகவே நம்மால் முழுமூச்சுடன் போரிட முடியவில்லை. கர்ணனுக்கும் நம் நிலைதான். அவனுக்கு அர்ஜுனன் எதிரி, எனக்கும் உனக்கும் பீமன். மற்றவர்கள் எல்லாரும் சகோதரர்கள்தான். ஆனால் திரௌபதியில் முடியப்படாத கூந்தல் பீமன் மனதில் பாசத்தை முற்றிலும் துடைத்தெறிந்திருக்கிறது, அவனுக்கு நாம் இருவர் மட்டும் எதிரிகள் அல்ல, அவனால் நம் தம்பியரை இரக்கமில்லாமல் கொல்ல முடிகிறது. அர்ஜுனன் மனதில் மிச்சம் மீதி ஏதாவது துளிர்த்தால் அதை கண்ணனின் உபதேசம் அழிக்கிறது.” என்று பெருமூச்செறிந்தான். துச்சாதனன் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவன் எங்கோ வெறித்தான். துரியோதனன் துச்சாதனனின் தலைமுடியைக் கோதினான். அவன் முதுகில் தட்டிக் கொடுத்தான். “இது அத்தனையும் கண்ணனின் திட்டம். இத்தனை நாள் வாயைத் திறக்காத சிற்றன்னை போர் என்று வந்ததும் புதல்வனைத் தேடி வருகிறாள். கர்ணன் தங்கள் பக்கம் வருவான் என்று கண்ணனுக்கு எதிர்பார்ப்பு இருந்திருக்காது, ஆனால் இந்த ரகசியம் அவனை பலவீனப்படுத்தும் என்று அறிந்துதான் செய்திருக்கிறான். பலவீனப்பட்டிருந்தாலும் கர்ணனால் பார்த்தனை வெல்ல முடியும், ஆனால் கிருஷ்ணார்ஜுன ஜோடி அவனை விட பலமானது. அவனுக்கு நல்ல தேரோட்டி வேண்டும்…” என்று துரியோதனன் மிருதுவான குரலில் சொன்னான். “கர்ணன் நம்மில் ஒருவன். எனக்கும் உனக்கும் அண்ணன். நமக்கு இருக்கும் அதே தளைகள்தான் அவனுக்கும், இன்னும் சொல்லப் போனால் அவன் நம்மை விட இறுக்கமாகத் தளைப்பட்டிருக்கிறான். அப்படி தளைப்பட்டிருந்தும் இந்தப் போரை நமக்கு சாதகமாக திருப்பக் கூடியவன் அவன் ஒருவனே. இன்று பீமனிடம் தோற்றது அவன் மனதை உறுதிப்படுத்தி இருக்கும், அவனுக்கு இனி எந்தத் தயக்கங்களும் இருக்காது. கண்ணன் காட்டிய வழி நமக்கும் பொருந்தும், தயக்கங்கள் இல்லாமல் நம் அண்ணன் காட்டும் வழியில் நடப்போம், கடமையைச் செய்வோம், பலனை எதிர்பார்க்க வேண்டாம்!” துச்சாதனன் பதில் பேசவில்லை. துரியோதனன் தம்பியை அணைத்துக் கொண்டான். “வா, இன்று இந்தக் கூடாரத்திலேயே படு, இரண்டு நாழிகையாவது தூங்கு. அப்புறம் மறக்காமல் அனுகூலனுக்கு பெரிய பரிசாக வழங்கு” என்று சொல்லிக் கொண்டே அவனை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான். https://solvanam.com/2025/10/12/கண்ணன்-காட்டிய-வழி/
  21. வெனிசூலாவை ஆக்கிரமித்த அமெரிக்கா.. - எஸ்.வி.ராஜதுரை 4 Jan 2026, 11:48 AM 1823இல், அப்போது அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ஜேம்ஸ் மன்றோவின் அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த க்வென்ஸி என்பவரால் எழுதப்பட்டதும் அன்று முதல் இன்று வரை அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் முக்கியக் கூறாக உள்ளதும்தான் ‘மன்றோ கொள்கை’ (Monroe Doctrine) எனக் கூறப்பட்டு வருகிறது. அக்காலத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் காலனிகளாக இருந்த தென்னமெரிக்க நாடுகளில் நடந்த புரட்சிகரக் கொந்தளிப்புகளின் காரணமாக அவை தேசிய விடுதலை பெறும் நிலையில் இருந்தன. இருந்தபோதிலும் அமெரிக்காவின் மன்றோ கொள்கை இனி ‘புதிய உலகம்’ எனச் சொல்லப்படும் அமெரிக்கக் கண்டங்களில், குறிப்பாக இலத்தின் அமெரிக்கா எனச் சொல்லப்படும் தென்னமெரிக்காவிற்குள் – ஐரோப்பிய நாடுகள் இனி புதிய ஆக்கிரமிப்புகளைச் செய்யக்கூடாது என்றும், அதேவேளை ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் உள்விவகாரங்களிலோ அல்லது அவற்றிடம் எஞ்சியிருந்த இலத்தின் அமெரிக்கக் காலனி நாடுகளிலோ அமெரிக்கா தலையிடாது என்றும் மன்றோ கொள்கை கூறியது. ஆனால், இலத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, உலகிலுள்ள வேறு எந்த நாட்டிலும் அமெரிக்கா தலையிடாது என்ற வரம்பு மன்றோ கொள்கையில் சேர்க்கப்படவில்லை. எனவே அமெரிக்கா இலத்தின் நாடுகளில் மட்டுமின்றி உலகின் ஆறு கண்டங்களிலும் தலையிட்டுள்ளது. புவிக் கோளத்தில் குறைந்தபட்சம் பாதியளவு தனது உடைமையில் இருக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் குறிக்கோள். இலத்தின் அமெரிக்க நாடுகளைத் தன் புழக்கடையாகக் கருதும் அமெரிக்கா தன் நலனுக்குப் புறம்பாக நடந்து கொள்ளும் நாடுகளை ஆக்கிரமித்தோ அல்லது அந்த நாடுகளில், தனது உளவுத் துறை மூலமாகவோ ‘எதிர்க் கட்சிகளை’ உருவாக்கி ஆட்சிக் கலைப்பு செய்தோ தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது. உலக நாடுகளில் பிரதிநிதி என்று சொல்லப்படும் ஐ.நா.வின் விதிகளையும் சர்வதேசச் சட்டங்களையும் துச்சமெனக் கருதும் அமெரிக்கா, 2000த்தில் தொடங்கிய புத்தாயிரமாண்டில் மட்டும் லிபியா, சிரியா, இராக், பாலஸ்தீனம் முதலிய நாடுகளில் நேரடியாக இராணுவத் தலையீடு செய்துள்ளது. அண்மையில் வங்கதேசத்திலும் நேப்பாளத்திலும் நடந்த ”இளந்தலைமுறையினரின் புரட்சிகளி”லும் அமெரிக்காவின் கை உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கக் கண்ட விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற மன்றோ கொள்கையைக் காட்டி, 1950களில் குவாதமாலா நாட்டிற்கும் 1960களில் கியூபாவிற்கும் சோவியத் யூனியன் செய்த பொருளாதார உதவிகளையும்கூட அந்த நாடுகளின் உள்விவகாரங்களில் செய்யப்பட்ட தலையீடு என்று அமெரிக்கா கூறியது.1960 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா, கியூபாவுடன் எந்த நாடும் வணிகம் செய்யக்கூடாது என்ற தடை விதித்து, அந்த நாட்டின் பொருளாதாரத்தை முடக்கியுள்ளது. இலத்தின் அமெரிக்க நாடுகள் ஏதும் சோசலிசத்தை மட்டுமல்ல சுயேச்சையான, இறையாண்மையுள்ள பொருளாதாரத்தை உருவாக்குவதைக்கூட அமெரிக்காவால் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே நேரடியாகவும் மறைமுகமாகவும் எந்த நாட்டின் மீதும் இராணுவத் தலையீடு செய்யும் திமிர் அமெரிக்காவிற்கு இருந்து வருகிறது. அணு உலைகள் தொடர்பான சர்வதேச அமைப்பின் கண்காணிப்புக்கு ஈரான் உடன்படவில்லை என்று கூறியும் உலக எஜமானனாகத் தன்னைப் பாவித்தும் சிலமாதங்களுக்கு முன் அமெரிக்க இராணுவ விமானங்கள் ஈரானின் அணு உலைகள் இருந்த இடத்தின் மீது குண்டு மாரி பொழிந்துவிட்டுச் சென்றன. அந்த நடவடிக்கையில் அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்த இஸ்ரேலுக்கு தக்க பாடம் புகுத்தியது ஈரான். தற்போது ஈரானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக அந்த நாட்டின் அரசை எதிர்த்து வன்முறைக் கிளர்ச்சிகளை நடத்துபவர்கள் மீது ஈரானிய அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்தால் அமெரிக்கா அந்த நாட்டில் தலையிடும் என்று இரண்டு நாள்களுக்கு முன் ட்ரம்ப் விடுத்த அறிக்கைக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளது அந்த நாட்டு அரசாங்கம். 1998முதல் 2013 வரை வெனிசூலாவின் குடியரசுத் தலைவராக இருந்த ஹ்யூகோ சாவெஸ், அந்த நாட்டை சோசலிசப் பாதையில் கொண்டு சென்றார். அவரது ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்கா தன் உளவுப் படைகள் மூலமும் அங்குள்ள அரசியல் கைக்கூலிகள் மூலமும் சாவெஸ் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பல முயற்சிகளைச் செய்தது. சாவெஸ் இறந்த பிறகு அவரது அரசியல் வாரிசான நிக்கோலா மதுரோ ஆட்சிக்கு வந்த நாள் முதல் அமெரிக்கா கடும் பொருளாதாரத் தடைகளை விதித்து அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம் சீர்குலையும்படி செய்து வந்தது. உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடு வெனிசூலா. அந்த வளத்தைக் கொள்ளையடித்து வந்த பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன வெனிசூலாவின் சாவெஸ், மதுரோ அரசாங்கங்கள். ட்ரம்ப் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக பதவியேற்ற முதல், வெனிசூலா அரசாங்கம் போதைப் பொருள்களை அமெரிக்காவுக்குக் கடத்திச் செல்லும் கும்பல்களுக்கு ஆதரவளிப்பதாகத் தொடர்ந்து பிரசாரம் செய்துவந்தார். அது உண்மைதான் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும்கூட, உலகில் மிக சக்தி வாய்ந்த நாடாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் அமெரிக்கா போதைப் பொருள்கள் தன் நாட்டிற்குள் நுழைவதைத் தடுத்திருக்க வேண்டுமல்லவா? மேற்சொன்ன பிரசாரத்துடன், இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக மக்களில் ஒரு பகுதியினரைத் திரட்டிக் கொண்டு வந்துள்ளவருமான மரியா கொரினா மச்சோடோ போன்றவர்கள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நாட்டில் கலவரச் சூழ்நிலையை ஏற்படுத்தி வந்தது ட்ரம்ப் அரசாங்கம். மேலும், அங்கு கூலிப் படைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இலத்தின் அமெரிக்க நாடுகளில் தனக்குப் பிடிக்காத அரசாங்கங்களை எண்ணற்ற முறை கவிழ்க்கவும் தேவைப்பட்டால் அந்த நாடுகளின் ஆட்சியாளர்களைக் கொல்லவும் தீர்மானித்து வந்த அமெரிக்க அரசாங்கத்தின் இராணுவம், தன் கைக்கூலி நாடுகளுடன் இணைந்து 1983இல் கரீபியன்கடல் பகுதியிலுள்ள சின்னஞ் சிறு தீவு நாடான கிரெனாடாவின் மீது படையெடுத்து அந்த நாட்டின் பிரதமர் மாரிஸ் பிஷப்பைக் கைது செய்து வீட்டுக் காவலில் வத்து பின்னர் கொலை செய்தது. அமெரிக்க நேரப்படி 3.1.2026 அதிகாலையில் அமெரிக்க இராணுவ விமானங்கள் வெனிசூலாவின் தலைநகர காரகாஸ் மீதும் நாட்டின் பல பகுதிகள் மீது பரவலாகவும் குண்டுமாரி பொழிந்துள்ளன. வெனிசூலாவின் இராணுவத் தளங்கள், எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மீதே தாக்குதல் தொடுப்பதாக ட்ரம்ப் அரசாங்கம் கூறினாலும், மக்கள் வசிக்கும் இடங்களிலும் இராணுவத் தாக்குதலை நடத்தியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை இனிமேல்தான் தெரிய வரும். இது ஒருபுறமிருக்க வெனிசூலாவின் குடியரசுத் தலைவர் நிக்கோலா மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்து வேறு நாட்டுக்குக் கொண்டு சென்றுள்ளதாக ட்ரம்ப் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைவிட அக்கிரமமான செயல் உலக அரசியலில் இருக்க முடியுமா? மதுரோவும் அவரது மனைவியும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கான சான்றை அமெரிக்கா தர வேண்டும் என்று வெனிசூலாவின் துணைக் குடியரசுத் தலைவர் வற்புறுத்தியுள்ளார். அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சரோ, தனது நாடு எவருக்கும் பணிந்துவிடாது என்றும் அமெரிக்க இராணுவம் தங்கள் நாட்டிற்குள் நுழைந்தால் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார். எத்தனை பிணக்குவியல்களை அந்த நாடு காணப் போகிறதோ? அமெரிக்க மக்களில் 35 விழுக்காட்டினர் மட்டுமே ட்ரம்புக்கு ஆதரவு கொடுத்துள்ளனர் என்றாலும் அமெரிக்காவின் மிகப் பெரும் பணக்காரர்களும், இராணுவமும், காவல் துறையும் ட்ரம்பிற்குப் பக்க பலமாக இருக்கின்றன. வியட்நாம் போரின் போது அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக அந்த நாட்டுக் குடிமக்கள் கிளர்ந்தெழுந்தது போன்ற நிகழ்வுகள் இப்போதும் நடக்குமா? அல்லது ரஷியா, சீனா, ஈரான் போன்றவை வெனிசூலாவுக்கு ஆதரவாக அறிக்கையுடன் நிற்காது வேறுவகையில் உதவி செய்யுமா? காஸா விவகாரத்தில் நடந்து கொண்டது போல இந்திய அரசாங்கம் இப்போதும் மெளனம் காக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற தீய சக்தி ஒழிந்தால்தான் உலக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். கட்டுரையாளர் குறிப்பு: எஸ்.வி.ராஜதுரை – மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார். https://minnambalam.com/the-monroe-doctrine-and-american-occupations/
  22. புத்தாண்டுத் தீர்மானம் - நிலாந்தன் ஒரு புதிய ஆண்டு எப்படி அமையக்கூடும் என்பது கடந்த ஆண்டில் கிடைத்தவை, கிடைக்காதவை என்பவற்றின் விளைவுதான். இருப்பவற்றில் இருந்துதான் அரசியல் செய்யலாம். அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியக்கூறுகள் என்றால் இருப்பவைதான். இல்லாதவை அல்ல. எனவே கடந்த ஆண்டில் என்னென்ன இருந்தனவோ அவற்றின் விளைவுதான் புதிய ஆண்டு. இந்த இயற்கையை மீறி ஏதாவது நடப்பதாக இருந்தால் அதனை அதிசயம் அல்லது அற்புதம் என்று அழைக்கவேண்டும். யூதர்களின் புலப்பெயர்ச்சி வரலாற்றைக் கூறும் “தாயகம் நோக்கிய பயணம்” என்ற நூலில் ஓரிடத்தில் கூறப்படுவதுபோல “அதிசயங்கள் அற்புதங்களின் காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது”. இது ஈழத் தமிழர்களுக்கும் பொருந்துமா? அப்படி அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்வது என்றால் அதுகூட ஏற்கனவே இருப்பவற்றுள் ஏதாவது ஒன்று எதிர்பாராத புதிய மாற்றங்களை அடைய வேண்டும். தமிழ் அரசியலில் ஏற்கனவே பலமாகக் காணப்படும் அம்சங்களில் அல்லது நபர்களில் வழமைக்கு மாறான மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டும்தான் இயற்கை விதிக்கு மாறாக ஏதாவது அதிசயங்கள் அற்புதங்களை எதிர்பார்க்கலாம். எனவே,இப்பொழுது கடந்த ஆண்டின் முடிவில் எம்மிடம் இருப்பவற்றை முதலில் மதிப்பிடுவோம். கடந்த ஆண்டு என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை பெருமளவுக்கு ஒரு தோல்வி ஆண்டுதான். ஆண்டின் தொடக்கத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஓர் அரசாங்கம் ஏற்கனவே ஆட்சிக்கு வந்திருந்தது. ஆண்டின் முடிவில் அந்த அரசாங்கம் வடக்கில் முதலாவது பிரதேச சபையைக் கைப்பற்றி விட்டது. முள்ளிவாய்க்கால் பிரதேசம் அமைந்திருக்கும் கரைத் துறைப் பற்று பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிவிட்டது. ஆண்டின் தொடக்கமும் தோல்வி. முடிவும் தோல்வி. இடையில் செம்மணிப் புதை குழி புதிய வாய்ப்புகளைத் திறந்தது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வந்தார். எனினும் ஐநா தீர்மானம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது மட்டுமல்ல அது ஒரு தெளிவான செய்தியைக் கூறியது. தமிழ் மக்கள் அனைத்துலக அரங்கிலும் பலமாக இல்லை என்பதே அது. ஆண்டின் முடிவில்,தமிழ்க் கட்சிகளில் ஒரு பகுதி தமிழகத்தை நோக்கிச் சென்றது. இன்னொரு பகுதி கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரை நோக்கிச் சென்றது. இவ்வாறு தமிழ்த் தரப்பு இரண்டாக இந்தியாவை அணுகியபோது, இந்தியா கொழும்பை நோக்கி வந்தது. கொழும்பில்,இந்திய வெளியுறவு அமைச்சரைத் தமிழ்க் காட்சிகள் ஒன்றாகச் சந்தித்தன. ஆனால் இரண்டாகக் கோரிக்கைகளை முன் வைத்தன. தமிழரசுக் கட்சி ஒர் ஆவணத்தை என்வலப்பில் வைத்துக் கொடுத்தது. அதில் என்ன இருந்தது என்று மற்றவர்களுக்குத் தெரியுமா?மக்களுக்குத் தெரியுமா? கடந்த ஆண்டு முழுவதிலும் தமிழ் மக்கள் பெற்ற பின்னடைவுகளைத் தொகுத்துப் பார்த்தால் தெளிவாகக் கிடைக்கும் விடை என்ன தெரியுமா? ஒற்றுமையின்மையால் கிடைத்த தோல்வி. எனவே புதிய ஆண்டு ஒரு வெற்றி ஆண்டாக அமைவதாக இருந்தால் ஒற்றுமைப்படுவதைத்தவிர வேறு வழி இல்லை. தமிழ் மக்களைப் பொறுத்தவரை புத்தாண்டுத் தீர்மானம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு முழுவதிலும் அவ்வாறு ஒற்றுமைப்படுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளைத் தொகுத்துப் பார்க்கலாம். புதிய நாடாளுமன்றத்தில் காணப்படும் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து ஒரு கூட்டாகச் செயல்படுவதற்கு கஜன் முயற்சி செய்தார். அரசாங்கம் ஒரு புதிய யாப்பைக் கொண்டுவரக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதனால் அப்புதிய யாப்பை எதிர்ப்பதற்குத் தமிழ்க் கட்சிகள் ஒன்றாகத் திரளவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தமிழரசுக் கட்சி அதற்கு ஒத்துழைக்கவில்லை. மற்றொரு முயற்சி, அதுவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டது. அது தமிழரசுக் கட்சி அல்லாத ஏனைய கட்சிகளை இணைத்து ஒரு கூட்டை உருவாக்கும் ஒரு முயற்சி. முதலில் தமிழ்த் தேசியப் பேரவை என்று உருவாக்கப்பட்டது. அது அடுத்த கட்டமாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக் கொண்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உடன்படிக்கையானது எழுத்துமூல ஆவணம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. எனினும்,அந்தக் கூட்டுக்குள் காணப்பட்ட ஈபிஆர்எல்எஃப் கட்சியானது மாகாண சபைத் தேர்தல்களை வைக்க வேண்டும் என்று கேட்டு, தமிழ்ப் பகுதிகளில் கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தியதன் விளைவாக ஏற்பட்ட முரண்பாடுகளால் அந்தக் கூட்டு பெருமளவுக்கு செயற்படா நிலையை அடைந்து விட்டது. அந்தக் கூட்டு உருவாகும்போது கஜேந்திரகுமார் ஊடகங்களுக்குத் தெரிவித்த ஒரு கருத்து ஊன்றி கவனிக்கத்தக்கது. இந்த “ஐக்கியம் உடையுமாக இருந்தால் தமிழ் மக்கள் அதைத் தாங்க மாட்டார்கள்” என்று அவர் சொன்னார். அதன் பின் ஐநா தீர்மானத்தை முன்னோக்கி, தமிழ்க் கட்சிகளை மீண்டும் இணைப்பதற்கு ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. இந்த முயற்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டது. அங்கேயும் தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கவில்லை. ஐநாவுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதன்பின் அண்மையில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சந்தித்து உரையாடியிருக்கின்றன. மாகாண சபைத் தேர்தல் ஒன்றை நோக்கிய பேச்சுவார்த்தை அது என்று ஊகிக்கப்படுகிறது. இவை யாவும் கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் நிகழ்ந்த ஐக்கிய முயற்சிகள் ஆகும். இந்த முயற்சிகள் அனைத்திலும் இரண்டு பொதுப் பண்புகளைக் காணலாம். முதலாவது பொதுப்பண்பு,இந்த முயற்சிகளை முன்னெடுத்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. பின்னணியில் சில சிவில் சமூகங்கள் நின்றன. இரண்டாவது பொதுப் பண்பு, இந்த முயற்சிகள் பெரும்பாலானவற்றை தோற்கடித்தது தமிழரசுக் கட்சி. தமிழரசுக் கட்சியானது தானே பெரிய கட்சி, தானே முதன்மை கட்சி, தானே தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கும் கட்சி என்று கருதுகின்றது; கூறிக் கொள்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலில் தோல்வியடைந்த காரணத்தால் தன்னை சுதாகரித்துக் கொள்வதற்காகவும், தன்னை பலப்படுத்திக் கொள்வதற்காகவும் இவ்வாறான ஐக்கிய முயற்சிகளில் ஈடுபடுகிறது என்று தமிழரசுக் கட்சி நம்புகிறது. மேலும் இந்த முயற்சிகளின் பின்னணியில் இருக்கும் சிவில் சமூகங்கள் தமிழரசுக்கட்சிக்கு எதிரானவை அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவானவை என்றும் தமிழரசுக் கட்சி நம்புகின்றது. முன்னணியின் ஐக்கிய முயற்சிகள் பெரும்பாலானவை தமிழரசுக் கட்சியை தனிமைப்படுத்தும் நோக்கிலானவை என்று தமிழரசுக் கட்சி நம்புகின்றது. அதிலும் குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது இரண்டு அணிகள் உண்டு. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது,சிறீதரனை அரவணைத்து அதன்மூலம் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் தலைமைத்துவப் போட்டியை தனக்குச் சாதகமாகக் கையாளப் பார்க்கின்றது என்றும் ஒரு குற்றச்சாட்டு சுமந்திரன் அணியினர் மத்தியில் உண்டு. இவ்வாறான சந்தேகங்கள், ஈகோக்கள் என்பவற்றின் விளைவாக கடந்த ஆண்டு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ஐக்கிய முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி பெரும்பாலும் ஒத்துழைக்கவில்லை. எனவே கடந்த ஆண்டு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட ஐக்கிய முயற்சிகளில் பெரும்பாலும் குழப்பத்தை விளைவித்தது அல்லது ஒத்துழைக்க மறுத்தது அல்லது ஒரு பெரிய கட்சி, மூத்த கட்சி என்ற அடிப்படையில் பொறுப்போடு முடிவை எடுக்கத்தவறியது தமிழரசுக்கட்சிதான். இங்கே மிக அடிப்படையான பேருண்மை ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். தனக்குள் ஒற்றுமைப்படாத ஒரு கட்சி,ஏனைய ஐக்கிய முயற்சிகளுக்கு எப்படி ஒத்துழைக்கும்? இதுதான் கடந்த ஆண்டு. தொகுத்துப் பார்த்தால் அது ஒரு தோல்வி ஆண்டு. அந்தத் தோல்விக்குப் பெருமளவு காரணம் மூத்த,பிரதான கட்சியாகிய தமிழரசுக் கட்சிதான். ஒரு மூத்த அண்ணனாக,பொறுப்போடு, பொறுமையோடு, பரந்த மனப்பான்மையோடு ஏனைய கட்சிகளை அரவணைத்து உண்மையான ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி இருந்திருந்தால் ஆண்டின் முடிவிலாவது குறைந்தபட்சம் கரைத்ததுறைப்பற்று பிரதேச சபையைக் காப்பாற்றி இருந்திருக்கலாம். எனவே இப்பொழுது மிகத்தெளிவான ஒரு பார்வை நமக்கு கிடைக்கிறது. கடந்த ஆண்டுகளைப் போலன்றி புதிய ஆண்டின் பலன் நல்லதாக அமைய வேண்டுமாக இருந்தால் அதற்கு ஒரே ஒரு நிபந்தனைதான் உண்டு. அதுதான் ஐக்கியம். ஒற்றுமைப்பட்டால் மட்டும்தான் புதிய ஆண்டு ஒரு வெற்றி ஆண்டாக அமையும். சிலசமயம் இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தல் நடந்தாலும்,வெற்றிக்கு அதுதான் முன் நிபந்தனை. தையிட்டியில் நேற்று கட்சிகள் இணைந்தபடியால்தான் போராட்டம் தீவிரமடைந்தது. தமிழ்த்தேசிய அரசியலில் இப்பொழுது அதிசயம் அல்லது அற்புதம் என்று சொன்னால் அது ஐக்கியம் மட்டும்தான். https://www.nillanthan.com/8039/
  23. 2026 கல்வி ஆண்டு நாளை ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு Jan 4, 2026 - 08:50 AM 2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளன. இதற்கமைய, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணை நடவடிக்கைகள், கடந்த டிசம்பர் 09ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கான 2025ஆம் கல்வி ஆண்டு கடந்த டிசம்பர் 22ஆம் திகதியும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு டிசம்பர் 26ஆம் திகதியும் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmjz5z4m303hko29ny8bybbd3
  24. போகேக்க சும்மா பேச்சுத்துணைக்கு தம்பி அர்ச்சுனாவையும் அவர்ர தங்கத்தையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்.🤣
  25. 40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடும் அநுர அரசு ஞாயிறு, 04 ஜனவரி 2026 08:31 AM கல்வி மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பத்திலிருந்தே தவறாகவே முன்னெடுக்கப்படுகின்றன. 40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடிக் கொண்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பாடசாலைகள் நிறைவடையும் நேரம் மீண்டும் 1.30 என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக தீர்மானம் என சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தற்காலிக தீர்மானம் என்போது நிரந்தர தீர்மானமாகும்? அண்மைக் காலங்களில் கல்வி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபங்களை ஒன்று சேர்த்தால் புத்தகமொன்றை அச்சிட முடியும். நேர அட்டவணை தொடர்பில் மாத்திரம் 4 சுற்றுநிரூபங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது வெளியிடப்பட்டுள்ள தற்காலிக சுற்றுநிரூபத்தை மாற்றி பிரிதொன்று வெளியிடப்படும் போது இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். கல்வி மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பத்திலிருந்தே தவறாகவே முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டின் கல்வி முறைமைக்கு மறுசீரமைப்பு அவசியம் என்பது இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னரிலிருந்தே வலியுறுத்தப்படும் ஒரு விடயமாகும். 2023ஆம் ஆண்டு மாற்றப்பட்டிருக்க வேண்டிய பாடத்திட்டங்கள் மாற்றப்படவில்லை. ஆனால் அரசாங்கம் அது குறித்து கவனம் செலுத்தவுமில்லை. தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கல்வி திட்டம் அல்ல. 40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆங்கிலப் பாடத்தொகுதியை தயாரித்தவர்களது பெயர் விபரங்கள் மிகத் தெளிவாகவுள்ளன. கல்விஅமைச்சு அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அதனை விடுத்து காலத்தைக் கடத்துவதற்காகவே குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றுள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடாமல் இந்த பிரச்சினைக்கு உடனடித்தீர்வினை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார். https://jaffnazone.com/news/53930
  26. லண்டனில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பல லட்சம் பவுண்ட்ஸ் அபராதம் Nishanthan SubramaniyamJanuary 3, 2026 3:37 pm 0 பிரித்தானியாவில் தமிழ் இளைஞனை துன்புறுத்திய இலங்கைத் தமிழர் ஒருவருக்கு எதிராக 67,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் கே.எப்.சி கிளை ஒன்றில் பணியாற்றிய தமிழக இளைஞனுக்கு, அங்கு முகாமையாளராக செயற்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரால் இனவெறி பாகுபாடு காண்பித்தாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு எதிராக அபாரம் விதிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில் தனது முகாமையாளாரக இருந்த இலங்கைத் தமிழர் ஒருவர், தன்னை “அடிமை” என்று அழைத்ததாகவும், “இந்தியர்கள் மோசடி செய்பவர்கள்” எனக் கூறி இன ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்தியர் என்பதால் விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அவரது முகாமையாளர் இலங்கையை சேர்ந்த ஊழியர்களின் விடுமுறை கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளார். அத்துடன் பணியிடத்தில் “அடிமை” என்றும் இன்னும் சில தரக்குறைவான சொற்களாலும் அழைத்தது இனவெறி பாகுபாட்டின் கீழ் வரும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் , அளவுக்கு அதிகமான நேரங்கள் வேலை செய்யுமாறு முகாமையாளர் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தனது விலகல் கடிதத்தை பாதிக்கப்பட்டவர் வழங்கினார். அதன்பின்னர் முகாமையாளர் அவரைத் தொலைபேசியில் அழைத்து மிரட்டியதோடு, மிகவும் தரக்குறைவாகப் பேசியுள்ளார். அவர் முறையாக விலகல் கடிதம் கொடுத்தும், சட்டப்படி வழங்க வேண்டிய ஒரு வார கால முன்னறிவிப்பு காலத்தை வழங்காமல் அவர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இது சட்டப்படி தவறு என நீதிபதி தெரிவித்தார். நீதிமன்றம் இழப்பீட்டுத் தொகையாக 62,690 பவுண்ட்ஸ்களும், விடுமுறை ஊதியம் மற்றும் பிற நிலுவைத் தொகைகளுடன் சேர்த்து மொத்தம் சுமார் 66,800 பவுண்ட்ஸ்களை வழங்க உத்தரவிட்டது. மேலும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்த நிறுவனம் தனது முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பணியிடத்தில் பாகுபாடு காட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் குறைகளை முறையாகக் கையாளுவது குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://oruvan.com/sri-lankan-tamil-fined-several-hundred-thousand-pounds-in-london/#more

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.