24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிக்க கடற்படை இணக்கம் – ஜனாதிபதி அறிவிப்பு
முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிக்க கடற்படை இணக்கம் – ஜனாதிபதி அறிவிப்பு 09 Jan, 2026 | 12:33 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) முள்ளிக்குளத்தில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் 15ஆம் திகதி மன்னாருக்கு வருகை தரும்போது குறித்த முள்ளிக்குளம் காணிவிடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் - சிலாவத்துறை பிரதேசசெயலாளர்பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தினை விடுவிப்புச்செய்வதுடன், தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்வதற்கு காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராமமக்களை மீள்குடியமர்த்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்திய நிலையில் இ முள்ளிக்குளத்தில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு எதிர்வரும் 15ஆம் திகதி தாம் மன்னாருக்கு வருகைதரும்போது குறித்த முள்ளிக்குளம் காணிவிடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதியினாலும் பதில் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றக்கட்டடத் தொகுதியில் புதன்கிழமை (8) ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மன்னார் - சிலாவத்துறை பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமம் மீள்குடியமர்த்தப்படவேண்டுமென ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு முள்ளிக்குளம் மக்களின் நிலமைகள் தொடர்பிலும் முள்ளிக்குளம் கிராமத்தில் வாழ்ந்த 400வரையான குடும்பங்கள் கடந்ந 1990ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தனர். அதன்பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு 300வரையான குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறியதுடன், அதில் 150வரையான குடும்பங்களுக்கு வீடுகளும் அமைத்துக்கொடுக்கப்பட்டிருந்தன என்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். இதேவேளை அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் கடந்த 2007ஆம் ஆண்டு முள்ளிக்குளம்கிராம மக்கள் மீளவும் தமது பூர்வீக வாழ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்தபோதிலும் இதுவரை அந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை என்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு எம்.பி துரைசாரா கொண்டுவந்துள்ளார். இத்தகைய சூழலில் முள்ளிக்குளம் கிராமமக்கள் அயற் கிராமங்களான காயாக்குழி மற்றும் மலைக்காடு ஆகிய கிராமங்களில் பலத்த சிரமங்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதையும், கடந்த 2002ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின்போது முள்ளிக்குளத்தில் அந்த மக்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடுகளில் தற்போது கடற்படையினரது குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் குறித்த கூட்டத்தில் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் முள்ளிக்குளத்தில் இயங்கிவரும் பாடசாலைக்கும் அங்குள்ள பரலோக மாதா தேவாலயத்திற்கும் மலைக்காடு,காயாக்குழி கிராமங்களில் தங்கியுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட மக்களும், மாணவர்களும் சென்று வருகின்றார்கள் என்பதையும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரது ஆக்கிரமிப்பிலுள்ள குடியிருப்புக்காணிகள், தோட்டக்காணிகள்,வயற்காணிகள்,குளங்கள், கடற்றொழிலுக்காக மீனவர்களால் பயன்படுத்தப்படும் இறங்குதுறைகள் என எவையும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்பதையும் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். எனவே தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேறுவதற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராம மக்களை உடனடியாக மீளக் குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கடற்படை அதிகாரி, முள்ளிக்குளத்தில் ஒருபகுதிக் காணி மக்களுடைய காணிகள் என தம்மால் அறியமுடிவதாகத் தெரிவித்ததுடன், அந்த மக்களுடைய காணிகளை விடுவிக்கக்கூடிய நிலையிருப்பதாகவும் தெரிவித்தார். கூடிய விரைவில் முள்ளிக்குளத்தில் கடற்படையினரின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதுதொடர்பான முடிவுகள் தம்மால் அறிவிக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி தாம் மன்னாருக்கு வருகைதரவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அவ்வாறு மன்னாருக்கு வருகை தரும்போது முள்ளிக்குளம் காணிவிடுவிப்புத் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/235562
-
தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்ற தவறு குறித்து மல்வத்து, அஸ்கிரிய பீடங்களுக்கு விளக்கமளித்த பிரதமர்!
தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்ற தவறு குறித்து மல்வத்து, அஸ்கிரிய பீடங்களுக்கு விளக்கமளித்த பிரதமர்! 09 Jan, 2026 | 08:43 AM (எம்.மனோசித்ரா) கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பொறுத்தமற்ற இணையதள முகவரியொன்று உள்ளடக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.இந்நிலையில் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய இது குறித்து நேற்று வியாழக்கிழமை (8) அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். 'எதிர்காலத்தில், பாடசாலைப் பாடப்புத்தகங்களை அச்சிடும் பொறுப்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும். குறைபாடுகள் அடையாளம் காணப்பட்ட அந்த மாதிரிப் பாடப்புத்தகங்கள் எந்தவொரு மாணவருக்கும் விநியோகிக்கப்படவில்லை என்பதுடன், உள்வாரி விசாரணைகள் நிறைவடையும் வரை அச்சிடப்பட்ட அனைத்து பிரதிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.' என்று கல்வி அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். அஸ்கிரிய பீடத்தின் தரப்பின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோருக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தரம் 6 ஆங்கில மாதிரிப் பாடப்புத்தகத்தின் முதலாம் அச்சுப்பதிப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235570
-
உலகளாவிய ரீதியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் வருடாந்தம் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு
உலகளாவிய ரீதியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் வருடாந்தம் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு 09 Jan, 2026 | 09:00 AM (செ.சுபதர்ஷனி) உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 6 இலட்சம் புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சச்சிமாலி விக்ரமசிங்க தெரிவித்தார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தொடர்பாகப் புதன்கிழமை (7) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்: கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறும் பட்சத்தில் நோய் நிலைமையை முழுமையாகக் குணப்படுத்த முடியும். அதற்கான சிகிச்சை முறைகளும் பாரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளன. எனினும் அது பற்றிய போதியளவான புரிந்துணர்வு இன்மையால் நாட்டில் வருடாந்தம் பல உயிரிழப்புகள் ஏற்படுவது கவலைக்குரிய விடயமாக உள்ளது. நோய் தொடர்பாகப் பொதுமக்களுக்குத் தெளிவூட்டுவதற்காக ஜனவரி மாதம் 'கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு' மாதமாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 6 இலட்சம் புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. பெண்களிடையே அதிகமாக ஏற்படக்கூடிய புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலாவதாகவும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மூன்றாவதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதேநேரம் இலங்கையில் 2022 ஆம் ஆண்டு தரவுகளுக்கமைய 226 நோயாளர்கள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதுடன், 2021 ஆம் ஆண்டு 179 உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளன. இலங்கையில் பாதிக்கும் புற்றுநோய் பட்டியலில் இது ஐந்தாவது இடத்தில் உள்ளது. ' ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்று காரணமாகக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. பாதுகாப்பற்ற பால் உறவுகள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் 10 தொடக்கம் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகளுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி வழங்கப்படுகிறது. மேலும் 35 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் கட்டாயம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். மாதவிடாய் சுழற்சி காலப்பகுதிகளுக்கு இடையில் ஏற்படும் அசாதாரணமான இரத்தப்போக்கு அல்லது துர்நாற்றத்துடன் திரவம் வெளியேறுமாயின், உடனடியாகத் தகுதிவாய்ந்த வைத்தியரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்" என்றார். https://www.virakesari.lk/article/235573
-
இந்தியவுக்கான தரைவழிப் பாதை - அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
இந்தியவுக்கான தரைவழிப் பாதை - அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? 09 January 2026 இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையிலான தரைவழி பாதைத் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக தாம் காத்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தரைவழி போக்குவரத்து தொடர்பிலான யோசனையை, இலங்கை அரசாங்கமே முன்வைத்தது. அதனை முன்னெடுத்துச் செல்ல, இந்தியா தயாராக இருக்கிறது. எனினும், இலங்கை அரசாங்கம் அது தொடர்பில் எவ்வித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, இலங்கை - இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையான எட்கா தொடர்பிலும் இலங்கையின் பதிலை இந்தியா எதிர்பார்த்திருப்பாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எரிபொருள் விநியோக கட்டமைப்புத் தொடர்பில் நிதியளிப்பு தொடர்பான ஆலோசனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். அதேபோன்று, இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் 3300 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், எஞ்சிய 6700 வீடுகளை டிட்வா பாதிக்கப்பட்ட அல்லது, எதிர்காலத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்படவுள்ள மக்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. https://hirunews.lk/tm/439766/land-route-to-india-what-is-the-governments-position
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம் 09 January 2026 ஈரானின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், நாட்டில் இணைய சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகளை முற்றிலுமாக நிறுத்தி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (09) காலை நிலவரப்படி, தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் இரவு நேர போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன, அவற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணியளவில் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து ஈரானில் இணைய சேவைகள் கடுமையாகக் குறைந்துள்ளதாக உலகளாவிய இணைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நெட்ப்ளொக்ஸ் (NetBlocks) உறுதிப்படுத்தியுள்ளது. நாடுகடத்தப்பட்ட ஈரானிய பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி(Reza Pahlavi) விடுத்த போராட்ட அழைப்பைத் தொடர்ந்து மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டுபாய், சிட்னி போன்ற வெளிநாட்டு நகரங்களில் உள்ள ஈரானியர்கள் தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், வாட்ஸ்அப்(WhatsApp) , ஃபேஸ்டைம்(FaceTime) போன்ற சேவைகளும் முடங்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://hirunews.lk/tm/439792/intensifying-protests-in-iran-internet-services-suspended
-
டித்வா - நிவாரணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
டித்வா - நிவாரணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா புயலினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு சற்றுமுன்னர் (09) ஆரம்பமாகியுள்ளது. அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த நிகழ்வு இன்று நடைபெறுகிறது. அதன்படி, அநுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, ஹந்துன்கம, ராஜாங்கனை சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தில் நிகவெரட்டிய, விதிகுலிய சந்தி மற்றும் ரிதிகம, தொடம்கஸ்லந்த ஆகிய பிரதேசங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வு நடைபெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmk6dos5z03pko29nn2gexzt5
-
முல்லைத்தீவு சிறுமி மரணம் - நிபுணர் குழுவின் அதிரடி அறிக்கை வெளியானது
முல்லைத்தீவு சிறுமியின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பதில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றின் இன்றைய (9) அமர்வில் கலந்து கொண்டு, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் வழங்கிய சுகாதார அமைச்சர், கடந்த மாதம் ஒவ்வாமை காரணமாக சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 21 ஆம் திகதி மரணித்தமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார். அதேநேரம் சிறுமியின் மரணம் தொடர்பில் தமக்கு கவலையளிப்பதாக தெரிவித்தார். தற்போது வைத்தியசாலை மற்றும் மாகாண மட்டத்தில் தனித்தனியாக முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் அறிக்கைகள் சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். அந்த அறிக்கைகளின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. வைத்தியசாலையின் பணிக்குழாமினரின் அசமந்த போக்கினாலேயா இந்த மரணம் இடம்பெற்றுள்ளது? என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். எனவே அந்த விசாரணைகளுக்கு பாதிப்பாக அமையாத விடயங்களை எதிர்வரும் நாட்களில் வௌிப்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmk6i602n03pqo29nyrs6tzmb
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
அரசியல் வேண்டாம், பேச்சுவார்ததைகள் வேண்டாம், நாம் அடித்து தான் பிடிப்போம் என்று முடிவெடுத்தால் எதிரியும் அதை அடித்து தடுக்கவே முயற்சி செய்வான் . இது உலக நியதி. மனித மனப்பாங்கு எக்காலத்திலும் அப்படியானது தான். தொடர்சசியான அரசியல் Negotiation ல் இரு பகுதியும் தோல்வியடைவதில்லை. சேர்ந்தே இருவரும் வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளன. அடித்து பிடிப்பதில் ஒருவர் மட்டுமே வைற்றி பெறுவார். தோல்வி கண்டுவிட்டு , அவன் துரோகி, இவன் துரோகி என்று காலாகாலத்துக்கு கத்தி ஒப்பாரி கொண்டு திரிவதிலோ அவனை மண்ணள்ளி திட்டுவதாலோ எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. அது அரசியலும் அல்ல. அப்படியான தவறான அரசியலை ஊக்குவிப்பவர்களே சமுதாயத்தின் முதல் எதிரிகள்.
- Today
-
கருத்து படங்கள்
- சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு!
வென்னப்புவ சட்டவிரோத மதுபான விவகாரம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை! புத்தளம், வென்னப்புவ பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் ஆறு பேர் உயிரிழந்து, எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துயர சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் 2026 ஜனவரி 6 அன்று வென்னப்புவ பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் சட்டவிரோதமாக காய்ச்சிய மதுபானத்தை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக, சட்டவிரோத மதுபான வர்த்தகத்தில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஜனவரி 7 ஆம் திகதி மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, இரு சந்தேக நபர்களையும் ஜனவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், விசாரணையின் ஒரு முன்னேற்றமாக, சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான கிழக்கு பண்டிருப்புவ, கலவத்தையைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஜனவரி 7 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஜனவரி 8 ஆம் திகதி அவர் மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மேலும் விசாரணைக்காக இரண்டு நாள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டது. மேலும் சந்தேக நபர்களை அடையாளம் காணவும், இறப்புகளுக்கு வழிவகுத்த சட்டவிரோத மதுபானத்தின் சரியான கலவையைக் கண்டறியவும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2026/1459034- டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!
டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை! கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (09) கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே முன்னாள் அமைச்சரவை பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார். திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷுக்கு துப்பாக்கி வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டுக்காக கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி) டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர், கம்பஹா நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், 2026 ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். டிசம்பர் 30 அன்று, டக்ளஸ் தேவானந்தாவின் உடல்நிலையை மதிப்பிட்ட பின்னர் மருத்துவர்களின் பரிந்துரைகளைப் பின்பற்றி மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1459098- சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இங்கு முதலில் கருத்து பதிய பயமாக இருந்தது, எனது கருத்திற்கு பெரும் எதிர்ப்பு ஏற்படும் எனவும் தெரியும் ஆனால் மனதில் தோன்றுவதனை கூறும் போதுதான் மற்றவர்கள் எமது தவறுகளை சுட்டி காட்டமுடியும் (அது ஆக்கபூர்வமான முறையில் இருந்தால் மட்டுமே) அதனால் எமது தவறுகளை திருத்த முடியும் என்பதால் அது தொடர்பாக தொடர்ந்து எனது கருத்தினை பதிகிறேன். இந்தியாவினை எதிர்பபதால் எமக்கு எந்த இலாபமும் ஏற்படாது(not to resist) அதனாலேயே எமது நலனனுக்கு ஏற்ப நிலமையினை மாற்றுதல் (repositioning). இந்தியாவினை எதிர்ப்பதால் ஏற்படும் வெற்றிடம் இலங்கைக்கு சாதகமான சீனாவினை அந்த வெற்றிடத்தினை நிரப்ப சாதகமாகி விடும், தமிழர்களின் அதிக அதிகாரம் கொண்ட வட கிழக்கு இந்திய மற்றும் அமெரிக்க நலனுக்கு முக்கியமானது எனும் தோற்றம் ஏற்பட வேண்டும். இந்தியாவினை எதிர்ப்பதால் எந்த வகையான அரசியல் அனுகூலம் ஏற்படும் என விவாவிப்பது நல்ல விடயமாகும், எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லை, நீங்கள் கூறினால் ஒரு நல்ல ஆரோக்கியமான விவதாமாக இருக்கும்.- அட்லாண்டிக் கடலில் பெரும் பதற்றம்: ரஷ்யா – அமெரிக்கா கடும் போட்டி
இது போன்ற நிகழ்வுகள் இனியும் தொடரலாம், பிரித்தானியாவில் அமெரிக்க இராணுவ விமானங்களின் வருகை அதிகரித்துள்ளதாகவும் அது ஒரு பயிற்சி நடவடிக்கைக்கு இல்லை என கூறுகிறார்கள். இரஸ்சிய அல்லது ஈரான் இலக்காக இருக்கும் என கூறுகிறார்கள், பிரித்தானியாவில் இருக்கும் உங்களுக்கு இது பற்றி ஏதாவது தெரியுமா?- இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
தேடியதில் கொலம்பியாவில் வேலை பார்த்துள்ளார். ஆனால் அங்கே அமேரிக்க எதிர் அரசே உள்ளது. Key Overseas Assignments Deputy Chief of Mission, U.S. Embassy Phnom Penh, Cambodia (senior embassy leadership role). Consular Officer, U.S. Consulate Guangzhou, China (first overseas assignment). Additional Overseas Service In various diplomatic functions across multiple countries — either as political/economic officer or in other capacities: Tokyo, Japan Hanoi, Vietnam Bangkok/Thailand Bogotá, Colombia Baghdad, Iraq These postings include positions such as Deputy Political Counselor and Economic/Political roles அப்படியாகத்தெரியவில்லை. ஒரு வேளை தாய்லாந்தாக இருக்குமோ?- அட்லாண்டிக் கடலில் பெரும் பதற்றம்: ரஷ்யா – அமெரிக்கா கடும் போட்டி
ஓம்…. கூர்ந்து கவனித்தீர்களாயின், டிரம்பின் இரெண்டாம் வரவுக்கு பின் அமெரிக்கா இது போல சின்ன வெற்றிகளை (தந்திரோபாய) ரஸ்யாவுக்கு எதிராக பெற்றாலும் நீண்டகால நோக்கில் (மூலோபாய) ரஸ்யாவிடம் தோற்கிறது. இது by design என நான் நினைக்கிறேன். சின்ன வெற்றிகளால் ஏற்படும் noise நீண்டகால தோல்விகளை அமெரிக்க வாக்காளர், குறிப்பாக MAGA மொக்கர் காணாமல் தடுக்கும்.- அட்லாண்டிக் கடலில் பெரும் பதற்றம்: ரஷ்யா – அமெரிக்கா கடும் போட்டி
உண்மை, ஐநாவின் பலவீனமும் இதற்குக்காரணம். வாய்ப்புள்ளது அத்துடன் இது ஒரு தன்னை நிரூபிக்க முயலும் முயற்சியாகவும் இருக்கலாம்.- சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
பிராந்திய உறுதித்தன்மை, கிளர்ச்சிகளற்ற, எல்லைதாண்டிய பிரச்சினைகளற்ற (மனிதாபிமான பிரச்சினையான தஞ்சம் கோருபவர்கள் மற்றும் பயங்கரவாதம்), சீன ஆதரவற்ற இந்தியவிற்கு நேசமான தரப்பாக தமிழர்கள் இருப்பதனையே அமெரிக்காவும் விரும்புகின்றது, தெற்காசிய அமெரிக்க பாதுகாப்பு கொள்கையும் அதுவே, இங்கு இந்தியாவினை தாண்டி வேறுதரப்பு தலையிட முடியாது. மிக விரைவாக அதிக அதிகாரம் கொண்ட (நீதி, காணி, காவல்) ஒரு அலகினை பெற சர்வதேச சக்திகளின் உதவி எங்களிற்கு தேவையாக இருக்கிறது, அது யாராக இருந்தால் எங்களுக்கென்ன? எமது தீர்வு, பல சமூக பிரச்சினைகளுக்கு தீர்வாகலாம்.- சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இந்தியாவில் ஒரு ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டு அமெரிக்கா செயற்படுகிறது என ஆளும் பா ஜ கா குற்றம் சாட்டுகிறது, அதற்காக கொங்கிரஸ் கட்சிக்கு நிதியுதவி வழங்கி அரசிற்கெதிராக செயற்படுவதாக குற்றம் சாட்டுகிறது. எமக்கான தீர்வினை அமெரிக்க தரப்பு வழங்கும் என எதிர்பார்ப்புடன் இயங்குகின்ற நிலையில் கொங்கிரஸிற்கெதிரான நிலைப்பாடு சாதகமான சூழலை ஏற்படுத்தாது. அமெரிக்கா இந்தியாவினை பிரதான பாதுகாப்பு பங்குதாரராகவே பார்க்கின்றது, இந்திய ஆளும் அரசு கூட பொருளாதார நலனை அடிப்படையிலும் சில பாதுப்பு அடிப்படையிலும் இரஸ்சியாவுடனான உறவினை பேணினாலும் இந்தியாவினை அமெரிக்கா என்றும் பலவீனமாக்காது அதற்கு காரணம் சீனாவிற்கான ஓரளவான பாதுகாப்பு பலச்சமனிலையினை இந்தியா பேணுகின்றது, எதிர்காலத்தில் சீனாவிற்கெதிரான நடவடிக்கைக்கு ஒரே நம்பிக்கையான தளமாக இந்தியாவினை பார்க்கின்றது. ஐநா மனித உரிமை அமைப்பின் முன்னால் நீதி கேட்பதால் எதுவும் நடக்காது( கடந்த காலத்தில் நடக்கவில்லை, நிகழ்காலத்திலும் நடக்கவில்லை, எதிர் காலத்திலும் நடக்குமா?). இன்றைய உலகு நியாய அடிப்படையில் செயற்படுவதில்லை, நாமும் அதற்கேற்ப எம்மை மாற்ற வேண்டும். இக்காலகட்டத்தில் தனி நாடு சாத்தியமில்லை அதிக அதிகாரம் கொண்ட ஒரு சுமூகமான தீர்வு சாத்தியம் அதற்கு எமக்கு இந்திய ஆதரவு தேவை. நேரடியாக இந்திய அபிமானி என்று சொல்வதோ அல்லது இரஸ்ஸிய அபிமானி, வேறு மதங்களின் அபிமானி என சொல்வதன் மூலம் எனது கருத்திற்கு எதிராக சில சார்பு மனநிலையானவர்களை (bias) எனது கருதிற்கெதிராக அணிதிரட்டுவதால் என்ன நன்மை ஏற்பட்டுவிட போகிறது. சோனியா மேல் வெறுப்பு எனக்கும் உண்டு, ஆனால் நோய்வாய்ப்பட்ட ஒரு மூதாட்டியினை துன்பப்பட்டு சாகவேண்டும் என கூறும் கருத்து உவப்பானதாக இல்லை, நாங்கள் எல்லோரும் நல்ல வளர்ப்பில் இருந்து வந்துள்ளோம்; எந்த நிலையிலும் மாறக்கூடாதல்லவா? நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்பது எனக்கு தெரியும், கோபங்களால் நட்டம்தான் ஏற்படும்.- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒழுக்கமற்ற வகையில் பேசினார் ; அவரின் பக்கம் அமரமுடியாது - சபாநாயகரிடம் முறையிட்ட அர்ச்சுனா
அங்கு மட்டுமல்ல அவர் செல்லுமிடமெங்கும் அதே கூத்துத்தான்! மக்களுக்குரிய பிரச்சனைகளை கதைக்கும்போது இடையூறு விளைவித்து தன்னை பெரியவராக காட்ட கத்தி கூச்சலிடுபவர். அடிக்கடி தேவையற்ற பிரச்சனைகளில் மாட்டுப்படுபவர், சட்டத்தை மீறுபவர். இவர் தனது பாராளுமன்ற பிரவேசத்தின்பின் எத்தனை தடவை நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்? மக்களின் பிரச்சனைகளுக்காகவா? அதேதான்! பாராளுமன்ற பிரவேசத்தின்போதே இவர் வேறொருவருக்குரிய ஆசனத்தில் இருந்துகொண்டு போட்ட அலப்பறை தெரியுமே. பாராளுமன்ற கோமாளி.- முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஒரு சின்ன விளக்கம் வேலையிடத்து நிர்வாக கெடுபிடிகள் உட்பட்ட சில காரணங்களால் என்னால் யூகேயில் இருந்து நிதி ஒருங்கிணைப்பை செய்ய முடியாது. அனைவரும் மன்னிக்க வேண்டும். நான் இதை ஆரம்பத்திலேயே சொல்லியுள்ளேன் என நம்புகிறேன். இப்போதைக்கு அனைவரும் எராளன் திறந்துள்ள கணக்குக்கு அனுப்புவது. அவர் மொத்த தொகையை அறிவிப்பது. அதன்படி வேலையை ஆரம்பிப்பது என செய்வோம். திட்ட மீளாய்வு நேரத்தில் இதை எப்படி வினைதிறனாக செய்யலாம் என சிந்திப்போம்.- சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என தமிழில் 3 வகையாக காலங்களை வகுக்கின்றனர், தற்போது இதனை விளக்குகின்ற எனது நிலை கஸ்ட காலம் என கருதுகிறேன்🤣.- Yesterday
- சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
பாட்டி காலத்தில் தான் வாழ்கின்றோம் என்றே தோன்றுகின்றது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒழுக்கமற்ற வகையில் பேசினார் ; அவரின் பக்கம் அமரமுடியாது - சபாநாயகரிடம் முறையிட்ட அர்ச்சுனா
அர்ச்சுனா பெண்களையும் மற்றவாகளையும் இழிவாக பேசியுள்ளார் 👎 அதே போன்று கஜேந்திரகுமாரும் அர்ச்சுனாவின் தாயாரை இழிவுபடுத்தி பேசியதையும் ஏற்று கொள்ள முடியாது.- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒழுக்கமற்ற வகையில் பேசினார் ; அவரின் பக்கம் அமரமுடியாது - சபாநாயகரிடம் முறையிட்ட அர்ச்சுனா
கஜேந்திரகுமார் பொதுவாக பண்பாகப் டபேசும் மனிதர்இ ஆனால் அர்ச்சுனா மற்றவர்கள் கோபப்படுத்தும் வகைpலேயும் பண்பற்றும் பொரதுவெளிகளில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வார்த்தைகளைக் கண்டபடி கொட்டும் அரைப்பைத்தியம். அபிவிருத்திச்சபைக் கூட்டத்தில் அபிவிருத்தி பற்றிப் பேசாமல் மற்றவர்களையும் பேசவிடாமல் காட்டுக்கத்தல்கத்துபவர். கஸேந்திரகுமாரைக் கோபமூட்டி கஜேந்திரகுமார் கோபத்தில் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையை பெசிவிட்டார். அதற்காக அவர் பேட்டியில் தான் அப்படிப் பேசியிருக்கக்கூடாது என்று வருத்தமும் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த அரைப்பைத்தியம் தான் பேசும் எந்த தவறான பேச்சுக்களுக்கும் வருத்தமோ மன்னிப்போ கேட்டது கிடையாது. தமிழ்மக்களின் பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். அது பற்றிக்கதைக்காமல் சிறு வயதில் பள்ளிக் கூடத்தில் ரீச்சர் இவன் என்னைக் கிள்ளிவிட்டான் என்று முறையிடுவதைப்போல பாராளுமன்றத்தைக் கேள்விக்கூத்தாக்குகிறார். இவருக்குப் பிடிக்காவிட்டால் இவர் வேறு இட்த்தில் பின்வரிசையில் உட்காரவேண்டியதுதானே; நாடு இருக்கும் நிலைமையில் இவருக்கு சீற் ஓதுக்குகிறதுதான் பாராளுமன்றத்தின் வேலையா?இவர் ஒரு தற்குறி இவரைத் தெரிவு செய்தவர்கள்??? - சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.