Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. கட்சியில் ஏற்கெனவே உள்ளவர்களை பின்னுக்கு தள்ளி முக்கிய பதவிகளை இவர்கள் பெறும் போதே பயிற்சியின் பெறுமதி தெரிகிறது அல்லவா.
  3. Today
  4. வீதியோரம். மலர் .......... 6. மாலைப்பொழுதில் இருள் கூடிவரும் நேரம், வீதியின் எதிர்பக்கத்தில் சொகுசுக் கார் ஒன்று வந்து நிக்கின்றது. அதில் இருந்து தம்பதிகள் இருவர் வீதியைக் கடந்து கடைக்கு வருகின்றனர். அப்போது அந்தக் காரின் முன்னால் பேரூந்து ஒன்றும் வந்து நிக்க அதில் இருந்து பிரயாணிகளும் தட தடவென்று இறங்கி வருகின்றனர். முன்னாள் வந்த பெண் கடைக்குள் வந்து மலசல கூடத்தை விசாரித்துக் கொண்டு அங்கு செல்கிறாள். அவளைத் தொடர்ந்து அவனும் போகிறான். சிறிது நேரத்தில் தமது கடமைகளை முடித்துக் கொண்டு இருவரும் கடைக்குள் வருகிறார்கள்.கடை ஆட்களால் நிறைந்து இருக்க இரவு வியாபாரம் களைகட்டுகிறது. அவர்கள் இருவரும் தேவையானதை வாங்கி சாவகாசமாய் சாப்பிடுகிறார்கள். பஸ்ஸில் வந்தவர்களும் உணவருந்திவிட்டுப் போக அதுவும் புறப்பட்டுப் போகின்றது. அந்த இடத்தில் வேறொரு மினிவான் வந்து நிக்கின்றது. அந்தப் பெண்ணும் கணவனிடம் நீங்கள் இங்கு இருங்கள், நான் காருக்கு சென்று பிள்ளையை தூக்கிக் கொண்டு வருகிறேன். அவன் இன்னும் எழும்பி இருக்க மாட்டான் என்று சொல்லிவிட்டுப் போகிறாள். சற்று நேரத்தில் எதிர்ப் பக்கத்தில் ஒரே பரபரப்பு.அந்தப் பெண் குழறிக் கொண்டு கடைக்கு ஓடி வருகிறாள். “கடவுளே நான் இனி என்ன செய்வேன் காருக்குள் இருந்த என்ர பிள்ளையைக் காணவில்லையே. தன் மனைவியின் குரல் கேட்டு எழுந்தவன் வெளியே வந்து பார்க்க அவள் காலில் பாட்டா தடுக்க தோளில் துப்பட்டா பறக்க தடுமாறி ஓடி வருகிறாள். — என்னடி என்ன ஆச்சு . — என்னங்க, நம்ம குழந்தையை காரில் காணவில்லை. கதவெல்லாம் திறந்திருக்கு. நீங்கள் காரை சரியாகப் பூட்டினீர்களா என்று கேட்க, அவனும் தான் அவசரத்தில் பூட்டவில்லையோ என யோசித்துக் கொண்டு காருக்கு ஓடுகின்றான். காரின் பின் கதவு திறந்திருக்க பிள்ளை படுத்திருந்த கூடை கீழே கிடக்கு. அதனுடன் இருந்த பையும் அதில் இருந்த மா, பிஸ்கட் எல்லாம் நிலத்தில் சிதறிக் கிடக்கு. சில பொருட்கள் காட்டினுள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பரந்துபோய் கிடக்கு. இருட்டாகி விட்டதால் சிலர் டோர்ச் லைட் அடித்துப் பார்க்க சிலர் வண்டியின் லைட்டை காட்டுப்பக்கமாய் திருப்புகிறார்கள்.ஆங்காங்க்கே விலங்குகளின் காலடித் தடங்கள் தென்படுகின்றன. அவர்கள் எல்லோரும் நரியோ ஓநாயோதான் பிள்ளையை இழுத்துக் கொண்டு ஓடியிருக்கும் என்று கதைத்து கொள்கிறார்கள்.அதற்குள் யாரோ போலீசுக்கு அறிவித்து அவர்களும் வந்திருந்தார்கள். அவனும் அருகில் இருந்த இராணுவத்துக்கு தன்னை அறிமுகப்படுத்தி கடிதம் ஒன்று ஒரு வண்டியில் குடுத்து விட சற்று நேரத்தில் அவர்களும் தகுந்த ஆயத்தங்களுடனும், மோப்ப நாய்களுடனும் இரு ட்ரக்குகளில் வந்து இறங்குகிறார்கள்.எல்லோருமாய் டார்ச் லைட்டுகளுடன் காட்டுக்குள் பல பக்கங்களுக்கும் தடம் பார்த்து பிரிந்து தேடித் போகிறார்கள். அவள் அந்த வீதியோரத்தில் தன் தலையில் அடித்துப் புலம்பிக் கொண்டிருக்கிறாள். கடவுளே ஏழு வருடங்களின் பின் தவமிருந்து பெற்ற பிள்ளை. இன்னும் இருமாதங்களில் அவனுக்கு இரண்டாவது பிறந்தநாள் வருகிறது.நான் இனி என்ன செய்வேன். “கடவுள் இன்பத்தை தரும்போது ஒன்றுக்குப் பத்தாகத் தருவார் . துன்பத்தைத் தரும்போது பத்துக்கு பதினொன்றாய் தருவதுதான் வாடிக்கை போலும்” கதறி அழுகிறாள். சில மணி நேரங்களின் பின் காட்டுக்குள் சென்றவர்கள் எல்லாம் வெறுங்கையுடன் திரும்பி வருகின்றார்கள்.ஒரு போலீஸ்காரர் அவர்கள் இருவரிடமும் நடந்த சம்பவங்களையும், அவர்கள் பெயர் விலாசங்களையும் விசாரித்து பதிவு செய்து கொண்டிருக்கிறார். அவன் மனைவி குழந்தையுடன் நாட்டுக்குள் சுற்றுலா போய்விட்டு வரும் வழியில் சிரமபரிகாரம் செய்ய இங்கு வண்டியை நிறுத்தியிருக்கிறான். காரில் வேறு ஏதாவது பொருட்கள் காணாமல் போயிருக்கின்றதா என்று சோதித்துப் பார்க்கின்றார்கள். கார் டாஸ்போர்ட்டில் இருக்கும் பணம் முதலான பொருட்கள் எல்லாம் இருக்கின்றன, அவளது கைப்பையில் இருக்கும் பணம், சிறு நகைகள்,அவசியமான மேக்கப் பொருட்கள் மற்றும் காண்டம் எல்லாம் அப்படியே இருக்கின்றன. — என்னடி இது, இது எப்படி இங்கே என்று காண்டத்தைக் காட்டி அவன் கேட்க ….. — போதும் நீ முடிட்டு போய் பிள்ளையைத் தேடு…. பிறகு இருக்கு உனக்கு என்று அவள் சொல்ல ….. — என்ன சொல்கிறாய் நீ ….. — உன் வண்டவாளமெல்லாம் எனக்குத் தெரியும்…… பாக்கிறவளோடெல்லாம் படுக்கிற உனக்குதான் இதுகள் தேவை ……எனக்கு இல்லை……என்று சொல்ல இவள் என்ன சொல்ல வருகிறாள்…… யோசிச்சவன் அட …… ஒருவேளை நான் கழுவப் போட்ட களுசான் பொக்கட்டுக்குள் இருந்து எடுத்திருப்பாளோ என்று நினைக்கும் போது ……. நாய்களின் இரைச்சல்களுடன் மற்றவர்களும் அங்கு வந்துவிடுகிறார்கள் ….. அதனால் அவர்கள் அங்கிருந்த தடயங்களை வைத்து பிள்ளையை ஏதோ விலங்குகள்தான் இழுத்துக் கொண்டு போயிருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வருகின்றார்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு மேலாகி விட்டது.இரவின் நிசப்பத்தில் காட்டு விலங்குகள் ஊளையிடுவதும் ஆந்தைகள், வௌவால்கள்,சில்வண்டுகள் போன்ற இரவாடிகளின் அலறல்களும் பயங்கரமாய் இருக்கின்றது.இதுவரை இது போன்ற ஒரு இரவு இங்கு இருந்ததில்லை. கடையிலும் கூட்டங்கள் எல்லாம் குறைந்து போய் ஓரிருவர் மட்டும் ஆங்காங்கே இருக்கின்றனர். இவ்வளவு களேபரத்திலும் அந்த விலைமாதுக்களின் தொழில் மட்டும் காட்டுக்குள் ஜோராய் போய் வந்து கொண்டிருக்கு. பின்பு பிள்ளையைத் தொலைத்த தம்பதிகளும் கூட போலீசுக்குப் பின்னால் போய் விட்டார்கள். விநோதனுக்கும் மணிமேகலைக்கும் கூட அந்தசம்பவம் மனசைப் பாதித்த படியால் இருந்தவர்களுக்கு தேவையான உணவுகளைப் பரிமாறிவிட்டு விளக்குகளை அணைத்து கடையை சாத்தி விட்டு வீட்டுக்கு போகிறார்கள். …………………………. 6. மலர் .......... 🌼 6.
  5. தமிழக கட்சிப் பிரமுகர்களில் எனக்கு விளங்காத விடயம்: கொள்கையை அடிக்கடி மாற்றிக் கொள்பவர்களுக்கு தவறாமல் இணை/துணை கொ.ப.செ பதவி கொடுத்து விடுகிறார்கள்! உடுப்பை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் ஒருவர் "மொடலாக" வருவது போல இதுவும் ஒரு மெக்கானிசம் போல😂!
  6. நீதிபதி சதீஸ்கரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! யாழ் மத்திய கல்லூரிப் பழைய மாணவர், என்னை விட இரு ஆண்டுகள் இளையவர் என நினைக்கிறேன். பெயரைத் தவறாக எழுதியிருக்கிறார்கள்.
  7. நாதகவில் இருந்து காளியம்மாளுக்கு நாலு வருடம் முன்பே அதிமுகவில் சேர்ந்தாலும் கல்யாண சுந்தரத்தை இன்று சேர்ந்த காளியம்மாள் ஓவர் டேக் செய்து விட்டார். அவருக்கென ஒரு கூட்டத்தை சேர்க்க தவறிய நாவலர் நெடுஞ்செழியன் போல் ஆகி, நமது அம்மா இதழின் எடிட்டர் என்ற அளவில் இருக்கிறார் க.சு. பிகு ரஜீவ், க.சு, தூசண துரைமுருகன் மூவரும் இணைந்து அண்மையில் ஒரு மேடையில் அரசியல் பேசினர். இப்போ தூசண துரை விஜையை போட்டு வெளுப்பதால் நாதக தம்பிகளை விட உபிக்கள் தான் அவருக்கு பரம ரசிகர்கள் ஆகி விட்டனர். விஜையை வெளுக்க எண்டே தூசண துரைக்கு திமுக தனியாக சில பெட்டிகளை தட்டி விட்டது என்கிறார்கள். போதிய அளவு விலை படிந்தால் தூ. துரையும் பயிற்சியை முடித்து வெளியேறலாம்😂.
  8. அண்ணன் அடிக்கடி சொல்லுவார்… வென்றால் மகிழ்ச்சி…. தோற்றால் பயிற்சி… (அவருக்கு வென்றாலும் தோற்றாலும் பெட்டி என்பது வேறு விடயம்) அண்ணனோடு இருந்தால் பெட்டியை தான் எடுத்து கொண்டு பயிற்சியை மட்டுமே தமக்கு தருவார் என உணர்ந்து வெளியே போனோர் பலர். அதில் முக்கியமானவர்கள், கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி, காளியம்மாள். இவ்வாறு அண்ணனிடம் பயிற்சிசை முடித்து, வெளியே வெற்றியை தேடி போனோரில் ஒருவரான ராஜீவ் காந்திக்கு நேற்று திமுகவில் இணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி கிட்டியுள்ளது. கோவை தெற்கில் போட்டியிட வாய்ப்பும் கிட்டகூடுமாம். காளியம்மாளுக்கும் அதிமுகவில் இதே இணை கொ ப சே பதவி மற்றும் மயிலாடுதுறையில் போட்டியிட வாய்ப்பு என பேசி கொள்கிறார்கள்.
  9. இந்துக்களின் சமரில் அடுத்தடுத்த அத்தியாயங்களில் சுபர்ணன் 6 விக்கெட் குவியல்; முதல் நாளன்று 22 விக்கெட்கள் சரிந்தன Published By: Vishnu 13 Mar, 2026 | 09:06 PM (நெவில் அன்தனி) கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் யாழ். இந்து கல்லூரி அணிக்கும் இந்து கல்லூரி கொழும்பு அணிக்கும் இடையில் நடைபெற்றுவரும் 15ஆவது இந்துக்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாளன்று பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாக 22 விக்கெட்களை வீழ்த்தினர். யாழ். இந்து கல்லூரி அணித் தலைவரும் கடந்த வருடம் இந்துக்களின் சமரில் ஆட்டநாயகனுமான சுதர்சன் சுபர்ணன் 6 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார். இதன் மூலம் இந்துக்களின் சமர் வரலாற்றில் அடுத்தடுத்த மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஓர் இன்னிங்ஸில் 6 விக்கெட் குவியல்களை பதிவுசெய்த வீரர் என்ற மைல்கல் சாதனையை சுபர்னன் நிலைநாட்டி பலத்த பாராட்டைப் பெற்றார். இந்து கல்லூரி கொழும்பு சார்பாக விஷ்வநாதன் யுவராஜ் 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார். இந்தப் போட்டியில் இரண்டு அணிகளினதும் பந்துவீச்சும் களத்தடுப்பும் மிகச் சிறப்பாக இருந்தது. களத்தடுப்பில் வீரர்கள் எடுத்த பல பிடிகள் மிகவும் அற்புதமாக இருந்தது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்து கல்லூரி புற்தரை ஆடுகளத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. யாழ். இந்துவின் கடைசி 5 விக்கெட்கள் வெறும் 14 ஓட்டங்களுக்கு சரிந்தன. துடுப்பாட்டத்தில் நான்கு வீரர்கள் மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். ரவிந்திரன் ஆதித்தியன் (31), நேசரூபன் நிரூஜன் (14) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 47 ஓட்டங்களே போட்டியில் இதுவரை சிறந்த இணைப்பாட்டமாக பதிவாகி உள்ளது. அவர்களை விட தினேஸ்ராமன் சகோதரர்களான பிரேமிகன் 26 ஓட்டங்களையும் பிரீதிகன் 17 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விஷ்வநாதன் யுவராஜ் 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அணித் தலைவர் இராமநாதன் தேஷ்கர் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் திவாகரன் யாதவ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்து கல்லூரி கொழும்பு அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பின்வரிசை வீரர்கள் பிரகாசிக்கத் தவறியதுடன் ஐவர் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். இரண்டு அணிகளினதும் துடுப்பாட்ட வீரர்களில் பெரும்பாலானவர்கள் புற்தரை ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள முடியாமல் ஆட்டம் இழந்தனர். இந்து கொழும்பு அணி துடுப்பாட்டத்தில் சுரேஷ் சர்விஷ் 32 ஓட்டங்களையும் வெல்லாந்துரை அபினேஷ் 24 ஓட்டங்களையும் முத்துகுமார் அபிஷேக் 22 ஓட்டங்களையும் ஹர்ஷ மிதுமின 12 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுதர்சன் சுபர்னன் 43 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் நேசரூபன் நிரூஜன் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். யாழ். இந்து கல்லூரி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 5 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக மத்தியஸ்தர்களினால் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இரண்டாம் நாள ஆட்டம நாளை தொடரும். https://www.virakesari.lk/article/240906
  10. சென். பட்றிக்ஸ் அணிக்கு கடைநிலை வீரர் டினுலக்சன் அரைச் சதம் குவித்து கைகொடுத்தார் Published By: Vishnu 13 Mar, 2026 | 09:00 PM (நெவில் அன்தனி) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் யாழ். சென். பட்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பொன் அணிகளின் சமரில் சென். பட்றிக்ஸ் கடைநிலை வீரர் ஜெயராஜரூபன் டினுலக்சன் அரைச் சதம் குவித்து அணியை சிறப்பான நிலையில் இட்டார். கடைசி நாளான மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும் போது எதுவும் நிகழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் யாழ்ப்பாணம் கல்லூரி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதம் இருக்க யாழ்ப்பாணம் கல்லூரி 50 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. சசிகரன் அஷ்மின் 49 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததுடன் கேதீஸ்வரன் ஹெரிஷன் 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். கடைசி நாள் ஆட்டத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தேநீர் இடைவேளைக்கு முன்னர் யாழ்ப்பாணம் கல்லூரி 200 ஓட்டங்கள் முன்னிலை அடைந்து டிக்ளயா செய்தால் போட்டியில் விறுவிறுப்பு ஏற்பட வாய்ப்புண்டு. போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்து சென். பட்றிக்ஸ் சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. சிவநானதன் ஷெஹான் (45), நிஷாந்தன் ஹரின் ஏட்றியன் (42) ஆகிய இருவரும் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் 6 விக்கெட்கள் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன. (129 - 6 விக்.) இந் நிலையில் களம் புகுந்த 9ஆம் இலக்க வீரர் ஜெயராஜரூபன் டினுலக்சன் மிகவும் பொறுமையுடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி 7 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு கைகொடுத்தார். அத்துடன் அடுத்த 3 விக்கெட்களில் அவர் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டார். டைட்டஸ் ஜோசப் 34 ஓட்டங்களையும் செல்வகுமார் ஸெனாரி 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வாசுதேவன் விஷ்னுகோபன் 82 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஹாமிஷ் ஹாமிஷன் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெடகளையும் கைப்பற்றினர். யாழ்ப்பாணம் கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. https://www.virakesari.lk/article/240907
  11. கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமானது 15ஆவது இந்துக்களின் சமர் கிரிக்கெட் பெருவிழா 13 Mar, 2026 | 03:07 PM இந்து கல்லூரி கொழும்பு, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆகிய வரலாற்றுப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான 15ஆவது இந்துக்களின் சமர் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (13) காலை வெகு விமரிசையாக ஆரம்பமானது. இந்து கல்லூரி கொழும்புவின் 75ஆவது ஆண்டு வைர விழாவை சிறப்பிக்கும் வகையில் இம்முறை போட்டி மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்து கல்லூரி கொழும்புவின் அதிபர் இளையதம்பி இளங்கேஸ்வரன், யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் அதிபர் ரத்தினம் செந்தில்மாறன் ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த ஆரம்ப நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் பிரதம விருந்தினராகவும் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வா, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கௌரவ பொருளாளர் சுஜீவ கொடலியத்த ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர். காலை 08:30 மணி அளவில் ஆரம்பமான இந் நிகழ்வில், பாடசாலை வாத்திய இசைக் குழுக்களின் அணிவகுப்புடன் விருந்தினர்கள் மற்றும் இரு அணி வீரர்களும் மைதானத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இந் நிகழ்வின்போது தேசியக் கொடி, இரண்டு பாடசாலைகளின் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு, தேசியக் கீதம் மற்றும் பாடசாலைக் கீதங்கள் இசைக்கப்பட்டு போட்டிகள் சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டது. ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் பிரதான அனுசரணையுடன் இந்துக்களின் சமர் இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. பொட்டி தொடங்குவதற்கு முன்னர் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா, இரண்டு அணிகளினது வீரர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்தப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது. ரவிந்திரன் ஆதித்தியன் 31 ஓட்டங்களையும் தினேஸ்ரேமன் பிரீத்திகன் 26 ஓட்ங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விஸ்வநாதன் யுவராஜ் 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அணித் தலைவர் ராமநாதன் தேஷ்கர் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் திவாகரன் யாதவ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இப் போட்டியைக் கண்டுகளிக்க இரண்டு பாடசாலைகளினதும் பழைய மாணவர்கள், தற்போதைய மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பெருமளவில் திரண்டு தமது அணிகளை உற்சாகப்படுத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/240879
  12. மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம் Published By: Vishnu 13 Mar, 2026 | 07:16 PM புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார். நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். https://www.virakesari.lk/article/240904
  13. தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேருக்கு புதிய நியமனங்கள் 13 Mar, 2026 | 05:26 PM (செ.சுபதர்ஷனி) இலங்கையின் சுகாதாரத் துறையில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், 2,918 புதிய மாணவ தாதியர்களைப் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு (14) சனிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான தாதியர் பயிற்சிக்காக, 2022ஆம் ஆண்டு அணியிலிருந்து, தகுதிகளின் அடிப்படையில் சுமார் 2,918 விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி நியமனக் கடிதங்களே இதன்போது வழங்கி வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/240903
  14. அருமையான இந்த சந்தர்ப்பத்தை மாணவர்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே எமது அவா .......! 👍
  15. பாகிஸ்தான் வீரரை வாங்கிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் ஏன் விவாதிக்கப்படுகிறார்? பட மூலாதாரம்,John Phillips - ECB/ECB via Getty Images படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் 'தி ஹண்ட்ரட்' தொடருக்கான ஏலத்தில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியுள்ளது, ஆனால் அதன்பிறகு சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. ரசிகர்கள் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறனை டிரோல் செய்து வருகின்றனர். இந்தப் போட்டி பிரிட்டனில் நடைபெறுகிறது, இதில் இந்தியர்களுக்குச் சொந்தமான நான்கு அணிகளும் அடங்கும். பிப்ரவரி மாதத்தில், 'தி ஹண்ட்ரட்' லீக் ஏலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை வாங்குவதை இந்தியர்களுக்குச் சொந்தமான நான்கு அணிகளும் பரிசீலிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகின. இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றம் இதற்கு காரணமாக இருந்தது. இதையடுத்து, வீரர்களை வாங்கும் போது எந்தவிதமான பாகுபாடும் காட்ட வேண்டாம் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) எட்டு அணிகளுக்கும் கோரிக்கை விடுத்திருந்தது. சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அப்ரார் அகமதுவை வாங்கியதற்கு ஈசிபி-யின் இந்தக் கோரிக்கையே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. சன் குழுமம் ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வைத்துள்ளது. 'தி ஹண்ட்ரட்' லீக்கில் உள்ள சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியும் இந்த குழுமத்திற்குச் சொந்தமானது. பட மூலாதாரம்,ADEL SENNA/AFP via Getty Images படக்குறிப்பு,அப்ரார் அகமது சுமார் 2.3 கோடி ரூபாய்க்குச் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அப்ரார் மார்ச் 12 அன்று நடைபெற்ற ஏலத்தில் வாங்கப்பட்டார் வியாழக்கிழமை, மார்ச் 12 அன்று நடைபெற்ற 'தி ஹண்ட்ரட்' ஏலத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஆகியோர் அப்ரார் அகமதுவை ஏலத்தில் எடுத்தனர். சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அப்ரார் அகமதுவை 1,90,000 பவுண்டுகளுக்கு (சுமார் 2.30 கோடி ரூபாய்) வாங்கியது. இதற்குப் பிறகு, இந்திய சமூக வலைதளங்களில் காவ்யா மாறன் கடுமையாக டிரோல் செய்யப்பட்டு வருகிறார். சர்ச்சை முற்றியதை அடுத்து, சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. அப்ராரைத் தவிர, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப்பும் 'தி ஹண்ட்ரட்' ஏலத்திற்காகத் தனது பெயரைப் பதிவு செய்திருந்தார், ஆனால் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் காரணமாக 2009 முதல் இந்தியன் பிரீமியர் லீக்கில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடவில்லை. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,காவ்யா மாறனின் 'சன்ரைசர்ஸ் லீட்ஸ்' அணியின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் என்ன சொல்கிறார்கள்? "தி ஸ்கின் டாக்டர்" என்ற பெயரிலான எக்ஸ் பயனர் ஒருவர், இந்தியருக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் அதன் வெளிநாட்டு கிரிக்கெட் லீக்கிற்காக பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதுவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது, இது இந்தியாவை பகிரங்கமாக எள்ளி நகையாடியுள்ளது என்று எழுதியுள்ளார். ''இந்தியாவில் அனுமதி இல்லை என்பதால் மட்டுமே அவர்கள் பாகிஸ்தானியர்களை எடுப்பதில்லை. தடை நீக்கப்பட்ட கணமே, யோசிக்காமல் அவர்களை எடுப்பார்கள்'' என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்ரார் அகமது இந்திய ராணுவத்தை அவமதித்ததாகவும் அதையெல்லாம் மீறி காவ்யா மாறன் மற்றும் சன்ரைசர்ஸ் அணி அவரை 'தி ஹண்ட்ரட் லீக்கில்' வாங்கியுள்ளனர் எனவும் பயனர்கள் கூறி வருகின்றனர். ஆனந்த் கிருஷ்ணா என்ற பயனர், காவ்யா மாறன் அப்ரார் அகமதுவை வாங்கியதை விட அவமானகரமானது எதுவும் இருக்க முடியாது என்று எழுதியுள்ளார். சன்ரைசர்ஸ் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி சொன்னது என்ன? பட மூலாதாரம்,John Phillips - ECB/ECB via Getty Images படக்குறிப்பு,மார்ச் 12 அன்று லண்டனில் நடைபெற்ற 'தி ஹண்டிரட்' ஏலத்தின் போது சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி. சன்ரைசர்ஸ் லீட்ஸ் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பிபிசி ஸ்போர்ட்ஸிடம், "அப்ராரின் பந்துவீச்சில் நிறைய நுணுக்கங்கள் உள்ளன, மேலும் பல உள்ளூர் வீரர்கள் அவரை இதற்கு முன் பார்த்திருக்க வாய்ப்பில்லை," என தெரிவித்தார். பாகிஸ்தான் வீரர்கள் தொடர்பான ஊகங்கள் குறித்துத் தான் அறிந்திருப்பதாகக் கூறிய வெட்டோரி, ஆனால் ஏலத்தில் எந்த வீரரையும் கண்டு கொள்ளவேண்டாம் என தமக்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்றார். "கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வீரரையும் கருத்தில் கொண்டே நாங்கள் ஏலத்திற்கு வந்தோம். சர்வதேச அணிகளிலிருந்து பல சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் வாய்ப்பில் இருந்தனர், ஆனால் அப்ரார் தான் எங்களின் முன்னுரிமையாக இருந்தார்," என அவர் தெரிவித்தார். சர்ச்சை எப்போது தொடங்கியது? பிப்ரவரி 21 அன்று, இந்தியர்களுக்குச் சொந்தமான அணிகள் 'தி ஹண்ட்ரட்' லீக் ஏலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை வாங்குவதில்லை என்ற முடிவை பரிசீலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின்(ஈசிபி) தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட் கடந்த ஆண்டு கூறுகையில், 'தி ஹண்ட்ரட்' போட்டியில் "அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள்" தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், "பாகுபாடு எதிர்ப்பு கொள்கைகள்" நடைமுறையில் இருப்பதாகவும் கூறியிருந்தார். ஈசிபி செய்தித் தொடர்பாளர் ஒருவர்,''தி ஹண்ட்ரட் உலகம் முழுவதிலுமிருந்து வரும் வீரர், வீராங்கனைகளை வரவேற்கிறது, மேலும் எட்டு அணிகளும் இதைக் கருத்தில் கொள்ளும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்றார். இந்தியர்களுக்குச் சொந்தமான அணிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் வாங்காது என்ற செய்திகளுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் எதிர்வினையாற்றியிருந்தார். இந்த விவகாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இது போன்ற ஒரு விஷயம் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றார். மைக்கேல் வாகன் தனது சமூக வலைதள தளமான எக்ஸ்-இல், "நாட்டின் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு விளையாட்டில் இது போன்ற விஷயங்களை அனுமதிக்க முடியாது" என்று எழுதியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjen8kg9evxo
  16. சொக்குதே மனம் சுத்துதே ஜெகம் .......! 😍
  17. இலங்கையில் 4-ல் ஒரு பங்கு மக்கள் வறுமையின் பிடியில்: கிராமப்புறங்களே அதிகம் பாதிப்பு - அமைச்சர் உபாலி பன்னிலகே Published By: Digital Desk 1 13 Mar, 2026 | 03:37 PM இலங்கை மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 80 சதவீதமானோர் கிராமப்புறங்களில் வசிப்பதாக விடயப்பரப்புக்கு பொறுப்பான அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். எனவே, வறுமையை ஒழிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் கிராம மட்டத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நிலவும் வறுமைக்கான உண்மையான காரணங்களை கண்டறிந்து, சமூக அபிவிருத்தி சபையின் பிரதிநிதிகளுடன் இணைந்து முறையான அபிவிருத்தித் திட்டங்களை வகுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ள போதிலும், இலங்கைக்கு அதன் பாதிப்பு குறைவாகவே காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.Geographic Reference கடந்த 15 மாத காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட காத்திரமான நடவடிக்கைகளே இதற்கு காரணமாகும். அவ்வாறு பொருளாதாரத்தை சீர்செய்யாமல் இருந்திருந்தால், நாடு மீண்டும் ஒரு வரிசை யுகத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் என அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/240883
  18. ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற அவசர சந்திப்பு Mar 13, 2026 - 04:41 PM இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று (13) நண்பகல் அமைச்சில் நடைபெற்றது. மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீர்வாக, ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அதற்கமைய, இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு கட்டமாக, ரஷ்ய எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து வெளிவிவகார அமைச்சர், ரஷ்ய தூதுவருடன் கலந்துரையாடினார். இலங்கையின் இந்தக் கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்திற்கு அறிவிக்கத் தூதுவர் இதன்போது சம்மதம் தெரிவித்தார். அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார். இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்குத் தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரஷ்யாவின் ஆதரவு கிடைக்கும் என ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டினார். இச்சந்திப்பில் தொழிலாளர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். https://adaderanatamil.lk/news/cmmosqqu30005356peck1lcwx
  19. ஈரானில் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் 1,444 பேர் பலி Mar 13, 2026 - 04:27 PM கடந்த 28ஆம் திகதி முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில் 1,444 பேர் உயிரிழந்தனர். ஈரான் சுகாதார அமைச்சின் தகவல்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில், இத்தாக்குதல்களில் மேலும் 18,551 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmos7n0f0004356pqrdpm8p1
  20. உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் - பிரதமர் 13 Mar, 2026 | 01:32 PM நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது நாட்டின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் ஒரு மைல்கல்லாகும் எனவும் பிரதமர் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு, உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இளமானிப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வு வியாழக்கிழமை 12 அன்று இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது. இச்செயற்திட்டத்திற்காக 4,001 மில்லியன் ரூபாய் முதலீடு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. 2025 முதல் 2033 வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 200 மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, 2025/26 கல்வியாண்டிற்காக 32 மாணவர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 9 மாணவர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன், மொனாஷ் மற்றும் நியூசிலாந்தின் ஓக்லண்ட் போன்ற உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே இணைந்துள்ளனர். மாணவர்கள் உலகத் தரவரிசையில் (QS, THE அல்லது ARWU) முதல் 500 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்களிலேயே பயில வேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாகும். தெரிவு செய்யப்படும் ஒரு மாணவருக்காக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 20 மில்லியன் ரூபாய் வீதம், நான்கு வருட முழுமையான பட்டப்படிப்புக் காலத்திற்காக 80 மில்லியன் ரூபாய் (ரூ. 80,000,000) நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், கல்வி அமைச்சு என்ற ரீதியில் இன்று நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய நாள். எமது கொள்கைப் பிரகடனத்தில் வழங்கிய வாக்குறுதியின் முதற்கட்டமாகவே உயர்தரத்தில் அதியுயர் சித்தி பெற்ற 32 மாணவர்களுக்கு இந்த வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தை உருவாக்குவது இலகுவானதாக இருக்கவில்லை; மாணவர் தெரிவு, வெளிப்படைத்தன்மை மற்றும் பல்கலைக்கழகங்களின் தரம் போன்ற விடயங்கள் குறித்து நாம் மிக விரிவாக ஆராய்ந்தோம். இது ஒரு சாதாரண புலமைப்பரிசில் திட்டம் அல்ல, இது எமது நாட்டின் எதிர்கால நோக்கை வரையறுக்கும் ஒரு செயற்திட்டமாகும். இதன் மூலம் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். எனவே, இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்படுபவர்களிடம் கல்விசார் திறமைகளுக்கு மேலதிகமாகத் தலைமைத்துவப் பண்புகள், ஆளுமை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனோதிடம் போன்ற குணாதிசயங்களும் இருக்க வேண்டியது அவசியமாகும். நமது நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் நாட்டில் சிறந்த பிரஜைகள் உருவாக வேண்டும். சிங்கப்பூர், சீனா, மலேசியா போன்ற நாடுகள் மனிதவள அபிவிருத்தியில் முதலீடு செய்து முன்னோக்கிச் சென்றமையினாலேயே இன்று உலக அரங்கில் முன்னிலையில் திகழ்கின்றன. அதே பாதையை நாமும் பின்பற்ற வேண்டும். நீங்கள் வெறும் பட்டதாரிகளாக மாத்திரம் திரும்பி வராது, சமூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய, ஒட்டுமொத்த சமூகத்தையும் மாற்றியமைக்கும் செயற்பாட்டில் ஓர் அங்கமாகத் திகழ வேண்டும் என்பதே எனது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஆகும். இது ஒரு நீண்டகால முதலீடாகும். உங்களின் ஆளுமை மூலம் மற்றுமொரு மாணவருக்கு உதவுதல், மற்றவர்களை வழிநடத்துதல் போன்ற தலைமைத்துவப் பண்புகளை நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறோம். காலநிலை மாற்றங்கள், கலாசார வேறுபாடுகள், உறவினர்களைப் பிரிந்திருத்தல் போன்ற சவால்களை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும், தனது பயணத்தைக் கைவிடப் போவதில்லை என்ற உறுதிப்பாட்டை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தகைய அனைத்துச் சவால்களையும் உங்களது தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்வதற்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடினமான அனுபவங்களையும் ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். புதிய கலாசாரங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய விடயங்களைக் கற்றுக்கொண்டு, அவற்றை நமது நாட்டை மீளக்கட்டியெழுப்பப் பயன்படுத்தும் புதிய சிந்தனையாளர்களாக உருவெடுங்கள். இயன்றவரை புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். தொடர்பாடல் திறன், மற்றவர்களின் உணர்வுகளை மதித்தல், குழுக்களை வழிநடத்துதல் மற்றும் பிறரைப் புரிந்துகொள்ளுதல் போன்ற ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளுங்கள். அதன் மூலமே நாம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அந்தப் பாரிய தாக்கத்தை இந்த நாட்டிற்குப் பெற்றுக்கொள்ள முடியும். உங்களை நாம் ஒருபோதும் தனிமைப்படுத்தி விடமாட்டோம். எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் உங்களுக்காகத் தலையிட நாம் தயாராக இருக்கிறோம். தூதரகங்கள் ஊடாக அவசியமான ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுக்கவும் நாம் உறுதுணையாக இருப்போம். நாட்டை ஒரு சமூக மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்ல வேண்டுமாயின், அது நம் அனைவரினதும் கூட்டுத் தலையீட்டின் மூலமாகவும், ஒருவரையொருவர் பாதுகாப்பதன் மூலமுமே சாத்தியமாகும். இலங்கையை மாத்திரமன்றி, முழு உலகையுமே மக்கள் நலன்சார்ந்த பாதையில் வழிநடத்தக்கூடிய தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும், எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ மற்றும் அமைச்சின் அதிகாரிகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/240871
  21. eptdoonsrS1s6m815lg17hraL:6961mg1 fhc7a5fgh0g 4h 71 71àm0e24 · " வதந்தி "....ஒரு முதியவர் பணி ஓய்வு பெற்றவர். வீட்டில் தனிமையில் இருந்தார். படித்தவர், மனைவி பிள்ளைகள் இல்லை. ஆனால், கொஞ்சம் 'துடுக்குத்தனம்' நிறைந்தவர். மற்றவர்களை எளிதாகக் குறைகூறுபவர். அவருடைய பக்கத்து வீட்டுக்கு புதிதாக ஒருவன் குடிவந்தான். அவனுக்கு `ஆக்டிங் டிரைவர்’ வேலை. யாராவது தங்கள் காரை ஓட்ட டிரைவர் வேண்டும் என்று அழைக்கும்போது போவான். மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பான். இவருக்கு அவன் மேல் சந்தேகம். 'திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போகிறான்.. காலை 8 மணிக்கு வீடு திரும்புகிறான்.. சில நாள்களில் மாலையில் போகிறான்.. இரவில் வீடு திரும்புகிறான்.. ஒரு வேளை அவன் திருடனாக இருப்பானோ' என நினைத்தார். இந்த எண்ணம் நாளாக நாளாக வலுப்பெற்றது. தன் நண்பர்களிடம் அவனைப் பற்றிச் சொன்னார்... காய்கறி, பழம் விற்க வருபவர்களிடம் தன் சந்தேகத்தைச் சொன்னார். `அந்த ஆள் திருடன்’ என்கிற வதந்தி மெள்ளப் பரவியது. ஒருகட்டத்தில், போலீஸாரே அவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். ஆனால், 'அவன் அப்பாவி' அவன் ஒரு டிரைவர்தான் என்பது நிருபணம் ஆனதும் அவனை விடுவித்து விட்டார்கள்".. ஆனால், அந்த டிரைவருக்கு மன உளைச்சல் அதிகமானது. 'நான் என்ன திருடனா' என்னைப் போய் கைது செய்து விட்டார்களே.. எல்லாம் 'இந்தப் பக்கத்துவீட்டு பெரியவரால் தானே நடந்தது என்கிற கோபமும் ஆற்றாமையும் எழுந்தது. அவன் முதியவரின் மேல் மானநஷ்ட வழக்குத் தொடுத்தான். வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதியிடம் முதியவர் சொன்னார்... "நான் யாரையும் காயப்படுத்தவில்லை.. வாய் வார்த்தையாக எதையோ சொன்னேன் அவ்வளவு தான் ". டிரைவரோ, போலீஸால் தான் அலைக் கழிக்கப்பட்டது, அந்த அவமானத்தால் மனது பாதித்தது பெரியவர் பரப்பிய வதந்தியால் தான் என்பதை எடுத்துச் சொன்னான். நீதிபதிக்கு டிரைவரின் நிலையும் பெரியவரின் வீம்பும் புரிந்தது. முதியவரை அழைத்து "நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் ஒரு காகிதத்தில் எழுதி அந்த பேப்பரை துண்டு, துண்டாக கிழித்து போகிற வழியெல்லாம் ஒவ்வொரு துண்டாகப் போட்டுக் கொண்டே செல்லுங்கள் நாளை காலையில் வாருங்கள்’’ என்றார். அடுத்த நாள் அந்த முதியவர், டிரைவர் இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். நீதிபதி முதியவரை அழைத்தார். "நான் சொன்னதுபோலச் செய்தீர்களா"? "ஆமாம் ஐயா"... "நேற்று நீங்கள் வீசியெறிந்த காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டு வாருங்கள்.. அதன் பிறகு தீர்ப்பு சொல்கிறேன் ’’. "அது எப்படி ஐயா முடியும்? அந்தக் காகிதத் துண்டுகள் காற்றில் பறந்து சிதறி இருக்கும் அதைப் போய் எப்படிக் கண்டுபிடிப்பது?" "முடியாதில்லையா? அப்படித் தான் நீங்கள் சொன்ன வார்த்தைகளும் திரும்பப் பெறவே முடியாதவை.. ஒருவரின் வாழ்க்கையையே பாதிக்கும் ஆற்றல் கொண்டவை" என்றார். @highlight யானை
  22. சஷீந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான ஊழல் விசாரணை நிறைவு: ஜூலை மாதம் வரை வழக்கு ஒத்திவைப்பு! Published By: Digital Desk 1 13 Mar, 2026 | 01:36 PM ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, குறித்த ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிணையில் உள்ள சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகளுக்காக விசாரணை கோப்புகள் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர். விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிவிப்பதற்காக கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து, நீதவான் இந்த வழக்கை மீண்டும் ஜூலை மாதம் 10ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார். அரகலய போராட்டக் காலப்பகுதியில், மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான செவனகல பிரதேசத்தில் அமைந்திருந்த சட்டவிரோத கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்கள் சேதமடைந்தன. இதற்காக, இழப்பீட்டு அலுவலக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை இழப்பீடாகப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/240875
  23. தெற்கு ஆழ்கடலில் பாரிய சுற்றிவளைப்பு: போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் 10 பேர் கைது! 13 Mar, 2026 | 01:16 PM இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் இரண்டு பலநாள் மீன்பிடிப் படகுகள்கைப்பற்றப்பட்டுள்ளன. இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 10 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 'முழு நாடும் ஒன்றாக' எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையினர் மேற்கொண்ட இந்தத் துல்லியமான சுற்றிவளைப்பின் போது, சந்தேகத்திற்குரிய உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகொன்று முதலில் சோதனையிடப்பட்டது. அதன்போது கடத்தலில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தொடர் சோதனையில், கடத்தலுக்குத் துணைபோன மற்றுமொரு படகுடன் மேலும் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட படகுகள் நேற்று வியாழக்கிழமை (12) திக்கோவிட்டை மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரின் விரிவான ஆய்வின் போது,478 கிலோகிராமுக்கும் அதிக ‘ஐஸ்’ போதைப்பொருள், 176 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின், 03 இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் 08 தொடர்பாடல் சாதனங்கள் எனபன மீட்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், "தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முப்படைகள் மற்றும் பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முனையும் குற்றவியல் வலையமைப்புகளுக்கு இனி எவ்வித இடமும் அளிக்கப்படமாட்டாது. கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 75,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 14 படகுகள் முற்றுகையிடப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார். மேலும், போதைப்பொருள் ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளைப் பாராட்டிய அமைச்சர், கடத்தல் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் 1818 மற்றும் 1997 ஆகிய அவசரத் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/240869
  24. Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு! Mar 13, 2026 - 12:41 PM இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படை வீரர்களின் சடலங்கள் இன்றைய தினம் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சடலங்களை ஏற்றிய விசேட விமானம் ஒன்று இன்று (13) மத்தல சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஈரான் நோக்கிப் புறப்படத் தயாராக உள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த கடற்படை வீரர்களின் உடல்களை அனுப்பி வைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. https://adaderanatamil.lk/news/cmmok612u000e356pemk928t3
  25. நேபாளத் தேர்தலில் ரெப் பாடகர் பாலேந்திர ஷாவின் கட்சி வெற்றி Published By: Digital Desk 3 13 Mar, 2026 | 09:00 AM நேபாளத்தில் கடந்த ஆண்டு வெடித்த இளைஞர் போராட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தலில், பாரம்பரிய அரசியல் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி ராஷ்டிரிய சுதந்திர கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாராளுமன்னறத்தின் கீழவையில் 182 இடங்களை அக்கட்சி கைப்பற்றியுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு வெறும் 2 இடங்களே குறைவாக உள்ள போதிலும், கடந்த பல தசாப்தங்களில் நேபாளத்தில் ஒரு தனி கட்சி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். தேர்தலின் முக்கிய முடிவுகள் ராஷ்டிரிய சுதந்திர கட்சி : 182 இடங்கள் நேபாளி காங்கிரஸ்: 38 இடங்கள் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி : 25 இடங்கள் 1 கோடியே 90 இலட்சம் வாக்காளர்களில் சுமார் 60 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் நேபாளத்தின் அடுத்த பிரதமராக ரெப் பாடகரும் காத்மண்டு மாநகர மேயருமான பாலேந்திர ஷா பதவியேற்கவுள்ளார். 2022 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இளம் கட்சி, நேபாளத்தின் அரசியலமைப்பு ரீதியாக வடிவமைக்கப்பட்ட 'விகிதாசார பிரதிநிதித்துவ' முறையையும் மீறி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது உலக அரசியலையே வியக்க வைத்துள்ளது. கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது போராட்டகாரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது சொந்தக் கோட்டையான ஜாப்பா 5 தொகுதியில் பாலேந்திர ஷாவினால் படுதோல்வியைச் சந்தித்தார். அதேபோல், நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ககன் தாப்பாவும் தனது ஆசனத்தை வேட்பாளரிடம் இழந்துள்ளார். வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் வாரிசுரிமை ஆகியவற்றுக்கு எதிராக கடந்த ஆண்டு வீதிக்கு இறங்கிய இளைஞர்களின் போராட்டமே இந்த மாற்றத்திற்குக் காரணமாகும். 77 பேரின் உயிர்த்தியாகத்திற்குப் பின் கிடைத்துள்ள இந்த வெற்றி, நேபாளத்தின் புதிய சகாப்தத்தின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. அடுத்த ஒரு வார காலத்திற்குள் பாலேந்திர ஷா தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/240849

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.