stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படம்.
-
உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் ஆரம்பிக்க தயாராகிறது ஜப்பான்
உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் ஆரம்பிக்க தயாராகிறது ஜப்பான் Published By: Digital Desk 3 22 Dec, 2025 | 12:02 PM உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் இயங்க ஜப்பானின் நீகாட்டா மாநிலம் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு ஜப்பானில் நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டதால் மூடப்பட்ட அணு மின் நிலையங்களில் டோக்கியோவிலிருந்து சுமார் 220 கிலோமீட்டர் வடமேற்கே அமைந்துள்ள கஷிவஸாகி-கரிவா (Kashiwazaki-Kariwa) அணு மின் நிலையமும் ஒன்றாகும். தற்போது செயல்படக்கூடிய 33 அணு மின் நிலையங்களில் 14 மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. புகுஷிமா மின் நிலையத்தை இயக்கிய டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம் (TEPCO) மீண்டும் காஷிவசாகி–கரிவா அணு மின் நிலையத்தை இயக்க உள்ளது. நீகாட்டா மக்களுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தை போலவே இம்முறை ஏற்படாது என்பதில் கவனம் செலுத்தப்படும் என டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் மசகத்சு தகதா தெரிவித்துள்ளார். அனுமதி கிடைத்தால், இந்த நிலையத்தில் உள்ள ஏழு அணு உலைகளில் முதலாவதைக் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அன்று மீண்டும் இயக்க டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம் பரிசீலணை செய்து வருவதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு சேவை தெரிவித்துள்ளது. ஆனால் செயல்படுத்தும் திகதி தொடர்பில் எந்த தகவலையும் தகதா தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/234079
-
அஸ்வெசும பயனாளிகளுக்கான விசேட அறிவிப்பு!
அஸ்வெசும பயனாளிகளுக்கான விசேட அறிவிப்பு! Dec 22, 2025 - 07:20 PM அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் திட்டத்தின் முதற் கட்டத்தின் கீழ் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகளுக்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. இதற்கமைய, தற்போது இத்திட்டத்தின் கீழ் நன்மைகளை பெறுபவர்கள் மற்றும் விண்ணப்பித்து இன்னும் நன்மைகளை பெறாதவர்கள் என அனைத்து தரப்பினரதும் தகவல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. தகவல்களை இதுவரை புதுப்பிக்காத அனைவரும் பின்வரும் முறைகளில் அதனைச் செய்துகொள்ள முடியும்: https://www.eservices.wbb.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று ஒன்லைன் (Online) மூலம் தகவல்களைப் புதுப்பிக்கலாம். அந்தந்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் கிராம உத்தியோகத்தர் அல்லது அஸ்வெசும திட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தரைச் சந்தித்து, தொழில்நுட்ப உதவியுடன் ஒன்லைனில் தகவல்களைப் புதுப்பிக்கலாம். உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தாம் வசிக்கும் பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் ஒப்படைப்பதன் மூலம் தகவல்களைப் புதுப்பிக்கலாம். அருகில் உள்ள தகவல் தொடர்பு மையங்களுக்கு சென்று, அங்குள்ள தொழில்நுட்ப உதவியுடன் ஒன்லைனில் தகவல்களைப் புதுப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjh7rdwo030do29nldmf1510
-
வரலாற்றில் அதிகூடிய வருமானத்தை பெற்ற இறைவரித் திணைக்களம்
வரலாற்றில் அதிகூடிய வருமானத்தை பெற்ற இறைவரித் திணைக்களம் Dec 22, 2025 - 06:44 PM 2025 ஆம் ஆண்டிற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 2,203 பில்லியன் ரூபாய் வருடாந்த வருமான இலக்கை அடைவதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெற்றியடைந்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் பதிவான அதிகூடிய வரி வருமானம் இதுவாகும். அத்துடன் எதிர்வரும் சில நாட்களில் இதனை மேலும் அதிகரித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்காக நேரடி மற்றும் மறைமுக வரி செலுத்துவோர் வழங்கிய பங்களிப்பிற்கு, அரசாங்கம் மற்றும் திணைக்களத்தின் சார்பில் குறித்த அறிவிப்பின் ஊடாக நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjh6h979030bo29ndqhq9c91
-
நாளை இலங்கை வருகிறார் எஸ்.ஜெய்சங்கர் - ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு
நாட்டை வந்தடைந்தார் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் Dec 22, 2025 - 06:19 PM இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாகவே ஜெய்சங்கர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தமது விஜயத்தின் போது ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை மேலும் உறுதிப்படுத்துவதே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயத்தின் பிரதான நோக்காகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmjh5kbcm030ao29ne1271jm9
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
கருத்தோவியம் ஓவியரின் சிந்தனை. அது வெவ்வேறு கோணங்களில் பார்க்கப்பட முடியும். காவியுடையுடன் நியாயம் கேட்ட நிராயுதபாணியான வேலவன் சுவாமி எங்களுக்கு கோமாளியாக தெரிகின்றார். முன்பு ஆயுதம் ஏந்தி நியாயம் கேட்ட பிரபாகரன் பயங்கரவாதியாக தெரிந்தார். விகாராதிபதிக்கு புரோமோசன் கிடைத்துள்ளது. எனவே இங்கு விகாராதிபதியே போராளி என இனம் காண்போம். அரசாங்கம் செய்வது சட்டவிரோதமான செயல். இலங்கை நீதிமன்றம் கட்டாயம் சரியான நீதியை கொடுத்துவிட்டுத்தான் அடுத்த வேலையை பார்க்கும் என எதிர்பார்ப்போம்.
-
பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்
அனர்த்த நிவாரணம் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வௌியீடு Dec 22, 2025 - 05:18 PM அனர்த்த நிவாரணங்களுக்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பான சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது. 'டித்வா' புயலினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்மொழியப்பட்ட நிவாரணங்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய புதிய சுற்றுநிருபம் ஒன்றை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது. 2025-12-05 ஆம் திகதியிட்ட வரவு செலவுத்திட்ட சுற்றுநிருப இலக்கம் 08/2025 இனால் முன்மொழியப்பட்ட நிவாரணத் திட்டத்தை, மேலும் வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்துவதற்காக புதிய உட்சேர்ப்புகள், தெளிவுபடுத்தல்கள் மற்றும் திருத்தங்களை உள்ளடக்கி இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, வரவு செலவுத்திட்ட சுற்றுநிருப இலக்கம் 08/2025 இல் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையின் 3, 5, 6, 7, 9, 11, 12 மற்றும் 14 ஆகிய விடயங்கள் திருத்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட சுற்றுநிருபம் கீழே தரப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjh3dvrg0308o29n94wqktfg
-
உக்ரைன் மீது 1300 ட்ரோன் தாக்குதல்களை நடத்திய ரஷ்யா; போர், தொடங்கிய இடத்துக்கே திரும்பும்! - உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் மீது 1300 ட்ரோன் தாக்குதல்களை நடத்திய ரஷ்யா; போர், தொடங்கிய இடத்துக்கே திரும்பும்! - உக்ரைன் ஜனாதிபதி 22 Dec, 2025 | 11:39 AM கடந்த வாரம் உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 1300 ட்ரோன் தாக்குதல்கள், 1200 வான்வழிக் குண்டுத் தாக்குதல்கள், 9 ஏவுகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களில் உக்ரைனின் ஒடேசா பகுதியும் நாட்டின் தெற்குப் பிராந்தியங்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். தாக்குதல்களால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர பல்வேறு துறைகளில் சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “ரஷ்யாவின் பயங்கரவாதத் தாக்குதல்களை பல்வேறு மட்டங்களில் உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் நிதிப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பல நாடுகளும் நிதி உதவி அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. 2026 - 2027 ஆண்டு காலப்பகுதிக்கு ஐரோப்பிய கவுன்சில் (European Council) 90 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நோர்வே, ஜப்பான் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது. போர்ச்சுக்கல் நாட்டுடனான கடல்சார் ட்ரோன் ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போரை அமைதியான முறையில் முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக நாமும் தேவைக்கேற்ப செயற்பட்டு வருகிறோம். போர் எந்த லாபத்தையும் தந்துவிடாது. எங்கிருந்து போர் தொடங்கியதோ, அங்கேயே அது திரும்பப் போய் நிற்கும் என்பதை போரைத் தொடங்கியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/234076
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
2016 இல் அச்சில் வந்த ஒரு புத்தகம், அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்குக் குடி பெயர்ந்த எழுத்தாளர் பில் பிறைசனுடையது (Bill Bryson) வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவர் தரும் தகவலின் படி பிரிட்டனில் 1800 களில் இருந்தே ஒரு சட்டம் நகர அமைப்புத் தொடர்பாக இருக்கிறதாம். எந்த வகையான நகர அபிவிருத்தியின் போதும் ஒரு பசுமை வலயம் (Green Belt) நகரைச் சூழப் பேணப் பட வேண்டும் என்ற சட்டம் அது. இதனால் தான் லண்டனில் இருந்து 20 - 30 கிமீ தூரத்திலும் பசுமையான வனங்களையும், வெளிகளையும் காண முடிகிறது என்கிறார். ஐரோப்பாவின் ஏனைய சில நகரங்களும் அப்படியாகத் தான் இருக்கின்றன போலும். மத்திய பேர்லினில் பரபரப்பான வீதியில் இருந்து விலகி அடர் மரங்கள் கொண்ட பிரதேசங்களுக்குள் இறங்கி நடந்து மீண்டும் இன்னொரு பர பரப்பான நகர மத்தியை அடையலாம். போலந்தின் வட கிழக்கில் பாதுகாக்கப் பட்ட ஒரு பிரதேசத்தில் இருக்கும் வனப் பகுதியை நாசிகள் தங்கள் பரிசோதனைகளுக்காக ஆரம்பித்தார்கள். போலந்து அரசு இன்னும் அந்த அடர் காட்டை (Black forest) வாகனங்கள் நுழைய முடியாத பிரதேசமாகப் பேணி வருகிறது. பழைய பூங்கா காக்கப் பட வேண்டிய நகர வனமாக (Urban forest) உருவாக வேண்டும். சுமந்திரன் காக்க முனைந்தார் என்பதற்காக இனி அனுர காவடிகள் வந்து மற்றப் பக்கம் சார்ந்து "ஆடுவார்கள்" என நினைக்கிறேன்😎.- யாழ்தேவியின் பயணம் மீண்டும் ஆரம்பம்
யாழ்தேவியின் பயணம் மீண்டும் ஆரம்பம் Dec 22, 2025 - 04:42 PM வடக்கு ரயில் மார்க்கம், ரயில் போக்குவரத்திற்கு முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை மறுதினம் (24) முதல் வடக்கு ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி ரயிலை பின்வருமாறு சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்தேவி ரயிலில் முதலாம் வகுப்பு (குளிரூட்டப்பட்ட) மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசனங்களை முற்பதிவு செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmjh24gth0306o29n37enym1p- Today
- ‘டித்வா’ சூறாவளியால் இலங்கையில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் உடமைகள் சேதம் – உலக வங்கி அறிக்கை
‘டித்வா’ சூறாவளியால் இலங்கையில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் உடமைகள் சேதம் – உலக வங்கி அறிக்கை Published By: Vishnu 22 Dec, 2025 | 08:13 PM கடந்த நவம்பர் மாத இறுதியில் இலங்கையை தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் கட்டிடங்கள், சொத்துக்கள், விவசாயம், உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட சேதத்தின் மதிப்பு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் (USD) என உலக வங்கி குழுமத்தின் Global Rapid Post-Disaster Damage Estimation (GRADE) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேதம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) சுமார் 4 சதவீதத்திற்கு சமமானதாகும். இலங்கையின் சமீப வரலாற்றில் மிகவும் தீவிரமான மற்றும் அழிவுகரமான சூறாவளிகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘டித்வா’ சூறாவளியால், நாட்டின் 25 மாவட்டங்களிலும் 5 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வாழ்வாதாரங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் தேசிய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் பொருட்கள் இந்த GRADE அறிக்கை, அவசர நிவாரண நடவடிக்கைகள், மீட்பு திட்டமிடல் மற்றும் நீண்டகால பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் முக்கிய தகவல்களை வழங்குகிறது. இது உலக வங்கியின் விரைவான, தொலைநிலை மற்றும் மாதிரி அடிப்படையிலான மதிப்பீட்டு முறையை பயன்படுத்தி, கட்டடங்கள், விவசாயம் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட நேரடி பொருளாதார சேதங்களை கணக்கிட்டுள்ளது. எனினும், வருமான இழப்புகள், உற்பத்தி இழப்புகள் அல்லது முழுமையான மீள் கட்டுமான செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை. மத்திய மாகாணம் கடுமையாக பாதிப்பு மத்திய மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கண்டி மாவட்டத்தில் மட்டும் சுமார் 689 மில்லியன் அமெரிக்க டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வெள்ளப்பெருக்குகளும், ஓரளவு மண்சரிவுகளுமாகும். உட்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் பாதைகள், பாலங்கள், ரயில் பாதைகள் மற்றும் நீர்வழங்கல் வலையமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுக்கே அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 1.735 பில்லியன் அமெரிக்க டொலர், இது மொத்த சேதத்தின் 42 சதவீதம் ஆகும். இதனால் போக்குவரத்து, சந்தை அணுகல் மற்றும் அடிப்படை சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், விவசாயம், கல்வி – கடுமையான தாக்கம் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புக்கள் : சுமார் 985 மில்லியன் அமெரிக்க டொலர் சேதம் விவசாயம்: நெல், காய்கறி பயிர்கள், கால்நடை, உள்நாட்டு மீன்பிடி உள்ளிட்ட துறைகளில் சுமார் 814 மில்லியன் டொலர் சேதம் பாடசாலைகள், வைத்தியசாலைகள், தொழிற்சாலைகள் போன்ற குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு சுமார் 562 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது. இவை கல்வி, சுகாதாரம் மற்றும் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளை பெரிதும் பாதித்துள்ளன. பாதுகாப்பற்ற சமூகங்களுக்கு அதிக அபாயம் வறுமை, அடிப்படை சேவைகளின் குறைவு மற்றும் காலநிலை அபாயங்களுக்கு உட்பட்ட நிலை போன்ற முன்கூட்டிய சமூக-பொருளாதார பலவீனங்கள், இந்த சூறாவளியினால் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கான நிர்வாகி கேவோர்க் சர்க்ஸ்யான் இதுகுறித்து கூறுகையில், “பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீண்டகால சமூகப் பலவீனங்கள் மக்கள் அதிக ஆபத்தில் தள்ளப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பல குடும்பங்கள் பெண்கள் அல்லது முதியவர்கள் தலைமையிலானவையாக உள்ளன. இதனால் சமூக மையமான மீட்பு நடவடிக்கைகள் அவசியமாகின்றன” என தெரிவித்துள்ளார். உலக வங்கியின் அவசர உதவி சூறாவளிக்குப் பின்னர் உடனடியாக உலக வங்கி குழுமம், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் கீழ் 120 மில்லியன் அமெரிக்க டொலர் வரை நிதியை திரட்டி, சுகாதாரம், குடிநீர், கல்வி, விவசாயம் மற்றும் போக்குவரத்து சேவைகளை மீட்டெடுக்க உதவி வழங்கியுள்ளது. மீட்பு செலவுகள் மேலும் அதிகமாகும் இந்த 4.1 பில்லியன் டொலர் மதிப்பீட்டை விட, முழுமையான மீட்பு மற்றும் மீள் கட்டுமான தேவைகள் இன்னும் அதிகமாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. மனிதாபிமான தேவைகள், வாழ்வாதார மீட்பு, காலநிலைத் தாங்கும் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முழுமையான மீட்பு திட்டங்கள் அவசியம் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது. இந்த மதிப்பீட்டினை மேற்கொள்ள உலக வங்கி, இலங்கை அரசின் வெளிநாட்டு வளத் துறை, நிதியமைச்சகம், தேசிய திட்டமிடல் துறை மற்றும் பேரிடர் முகாமைத்துவ மையம் ஆகியவற்றுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234142- கடலுக்கு அடியில் தங்கப் புதையல் - ஆசியாவையே அதிர வைத்த சீனா
இது காட்டுவது சீனாவின் ஆழ்கடல் , சமுத்திரம் போன்றவற்றில் தேடி துப்பறியும், கண்டறியும் தொழிநுட்பம் மேற்கு ஈடாக வளர்ந்து உள்ளதை. சில குறித்த நிலைக்குத்து பிரிவான உபதுறைகளில் (vertical sectors) மேற்கை விஞ்சுகாகத்வம் இருக்க கூடும். இதன் தாக்கம், ஆழ்கடலில் (இராணுவ பல) ஆயுதங்கள், தளபாடங்களை கண்டறிவயதில், இதுவரை மென்டர்கிடம் இருந்த வெருட்டும் ஆயுதம் மிக கபட நீர்மூழ்கிகள் . அண்மையில் ஓர் செய்தி வந்து இருந்தது, சீன புதிய உணரும் தொழில்நுட்பத்தை ஆர்டிக் சமுத்திரத்தில் சோதனை செய்து, அந்த தொழில்நுட்பம் 95% அமெரிக்கா நீர்மூழ்கிகளை கண்டறிந்ததாக. அமெரிக்கா / மேற்கு இப்பொது உணர தொடங்கி இருக்கிறது சீனாவின் விஞ்ஞான / தொழில் ழில்நுட்ப விருத்தியை தடுக்க முடியாது, குறிப்பாக மேற்றுகின் தங்கி இருத்தலில் இருந்து பிரித்து க்கொண்டு இருக்கிறது என்று உ.ம். ஆக, இதை முன்பே செவி , பார்வை வழியாக அரோந்து இருந்தேன், chip தயாரிக்கும் euv தொழில்நுட்ப இயந்திரம் / தளம் ஒன்றை சீன ஆகி வருவதாக. இப்போது பகிரங்க செய்திகள் வருகிறது, சீன அதை சோதனை செய்ய தொடக்கி இருப்பதாக. பொதுவாக வரலாற்ற்று போக்கில் ,புறக்கணிக்கப்பட்ட, எள்ளிநகையாடப்பட்ட குழுமமே, பின்பு எள்ளிநகையாடிய குழுமத்தை மேலாண்மை செய்ததாக இருக்கிறது பொறுத்து இருந்து பார்ப்போம்- தேசிய மக்கள் சக்தி வசம் சென்ற கரைத்துறைப்பற்று பிரதேச சபை! தமிழரசை சாடும் பலர்..
தேர்தல் வந்தால் தமிழரசு மண் கவ்வும் பின்னால் கதவால் வந்த கபட வேட தாரி சுமத்திரன் பின் கதவால் போயிடுவார் .- பௌத்த தேரரை இப்படி இழுத்துச் செல்வீர்களா..? வேலன் சுவாமிக்காக களமிறங்கும் தமிழ் அரசியல்வாதிகள்
சட்டவிரோத விகாரைக்கு எதிராக தையிட்டியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வேலன் சுவாமி கைது செய்யப்பட்டமையினை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியிலுள்ள கட்சி தலைமையகத்தில் இன்று(22/12/2025) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். தையிட்டியில் ஏற்பட்ட பதற்ற நிலை மேலும், நேற்றைய தினம் தையிட்டியில் நடைபெற்ற சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் வேலன் சுவாமி கைது செய்யப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெளத்த பிக்கு ஒருவர் இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக இழுத்துச் செல்லப்படுவாரா என கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன், இந்த பதற்ற நிலை காரணமாக, தற்போது வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தற்போது தமிழ்க்குடிமகன் அனைவரும் ஒன்றிணைய தயார் என்ற செய்திகளைப் பார்க்கிறோம். ஆனால் குறித்த விடயம் தொடர்பாக எமக்கு எவ்வித அழைப்பும் விடுவிக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக ஒரு தடவைக்கு நூறு தடவை சிந்திக்கப்பட வேண்டும் என்றும் மணிவண்ணன் வலியுறுத்தியுள்ளார். மேலும், கஜேந்திரகுமார் மற்றும் ஏனைய தமிழ்க் கட்சிகள் தொடர்பாகவும் கடுமையாக விமர்சித்தும் மணிவண்ணன் பேசியுள்ளார். https://tamilwin.com/- தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
நிதானமான, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பதில்👍. உங்கள் கடமையைச் செய்திருக்கிறீர்கள், ஆனால் பலனை எதிர்பார்த்து ஏமாறாதீகள் என்று எச்சரிக்க வேண்டியது என் கடமை😂! பொய்ச் செய்திகளிலும், சில சமயங்களில் "எந்த செய்தியும்" இல்லாமலே ஏனைய தமிழ் அரசியல் வாதிகளை - அவர்களை தாயக மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருந்த வேளையில்- கேவலமாகத் திட்டியபடி இருந்த இருவர் தான் உங்களுக்கு நாகரீகம் கற்பிக்க முயல்கிறார்கள் என்பதைக் கவனித்தால் பலனை எதிர்பார்க்க மாட்டீர்கள்.- தேசிய மக்கள் சக்தி வசம் சென்ற கரைத்துறைப்பற்று பிரதேச சபை! தமிழரசை சாடும் பலர்..
முல்லைத்தீவு- கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளர் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் இன்று(22/12/2025) இடம்பெற்றுள்ளது. இரகசிய வாக்கெடுப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசுக் கட்சியின் சின்னராசா லோகேஸ்வரன் கடந்த ஜீன் மாதம் வாக்கெடுப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் மாதம் தவிசாளர் பதவியில் இருந்து விலகியிருந்தார். இதனைத் தொடர்ந்து, வெற்றிடமாக காணப்பட்ட தவிசாளரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று(22) நடைபெற்றுள்ளது. அதில், 21 உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். தவிசாளர் தெரிவில், 13 உறுப்பினர்கள் இரகசியமான முறையில் வாக்கெடுப்பினை நடத்த ஆதரவு தெரிவித்த நிலையில், தவிசாளர் தெரிவிற்கான முன்மொழிவு இடம்பெற்றுள்ளது. தவிசாளர் தெரிவு இதன்படி, தமிழரசுக் கட்சி சார்பில் மிக்கேஸ் பிள்ளை ஜோன்சன் மோகனராஜா, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் தொம்பைப்பிள்ளை பவுல்ராஜ், தேசிய மக்கள் சக்தி சார்பில் இமக்குலேற்றா புஸ்பானந்தன் ஆகியோர் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில், இமக்குலேற்றா புஸ்பானந்தன் 10 வாக்குகளையும்,ஜோன்சன் மோகனராஜா 5 வாக்குகளையும் தொம்பைப்பிள்ளை பவுல்ராஜ் 6 வாக்குகளையும் பெற்ற நிலையில் பெரும்பான்மை வாக்குகள் பெறாத நிலையில் குறைந்த வாக்கினை பெற்ற தமிழரசுக் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டவர் நீக்கப்பட்டார். இதனையடுத்து, இரண்டாம் தடவையாக இமக்குலேற்றா புஸ்பானந்தன், தொம்பைப்பிள்ளை பவுல்ராஜ் ஆகியோருக்கு இடையிலான போட்டி இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்டுள்ளது. அதில், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இமக்குலேற்றா புஸ்பானந்தன் 14 வாக்குகளையும் தொம்பைப்பிள்ளை பவுல்ராஜ் 7 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இந்த வாக்கெடுப்பு அடிப்படையில், உள்ளூராட்சி ஆணையாளராக புதிய தவிசாளர் தேசிய மக்கள் கட்சியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கரைத்துறைப்பற்று பிரதேச சபை அனைத்து மக்களின் முன்மொழிவுகளையும் ஏற்று சபையினை நடத்துவோம், மத்திய அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்புக்களையும் ஏற்று கரைத்துறைப்பற்று பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதில் பாராபட்சம் இன்றி செயற்படுவோம், ஜனாதிபதியின் கொள்கையின்படி பாமர மக்களை முன்னேற்றுவோம் என புதிய தவிசாளர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் உறுதி எடுத்துக் கொண்டுள்ளார். இதேவேளை, முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபை தமிழரசுக் கட்சியினாலேயே பறிபோனது என சமூக செயற்பாட்டாளர் மற்றும் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சமூக செயற்பாட்டாளரின் ஆதங்கம் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் ஒருவர், முல்லைத்தீவு மாவட்டத்தை தமிழரசுக் கட்சியானது புறக்கணித்து செல்கின்றது. இன்று அரச கட்சியினருக்கு வாக்களித்து தமிழரசுக் கட்சியினரின் பெரும்பான்மை ஆதரவோடு தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்திருப்பது மிக வேதனையான விடயம். இரத்த வடுக்கள் தெரியாதவர்களும், வெடியோசை கேட்காதவர்களும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இங்கே இருக்கின்ற சில நன்னடத்தை கெட்டவர்களின் வாக்குறுதிகளை நம்பி எமது கரைத்துறைப்பற்று பிரதேச சபையை தேசிய மக்கள் சக்திக்கு தாரைவார்த்து கொடுத்திருக்கின்றார்கள். இது தாயக மண்ணிற்கு கிடைத்த பெரும் தோல்வியாகவே நான் கருதுகின்றேன். தாயக விடுதலை போராட்டத்திற்கு தங்கள் உயிரை தியாகம் செய்த மாவீரர்களின் கனவுகள் சற்றேனும் மதிக்காத தமிழரசுக்கட்சி ஈழத்தின் இதய பூமியில் வேறுகட்சிக்கு ஆட்சியமைத்து கொடுத்ததற்கு தமிழரசுக் கட்சியின் தலைமைக்கும், கட்சியினை சேர்ந்தவர்களுக்கும் கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். பொறுப்பில்லாத தலைமைகள் அதேப்போன்று கரைத்துறைப்பற்று பிரதேசபை உறுப்பினர் வல்லிபுரம் வசந்தராசா கூறுகையில், அதிக வாக்குகளை பெற்று ஆளும் கட்சி தவிசாளர் பதவியினை கைப்பற்றியது தமிழரசுக் கட்சியின் சுயநலத்தை காட்டுகிறது. இன்று இந்த தமிழ் மண்ணை இழந்ததற்கு காரணம் தமிழரசுக் கட்சி தான். இவர்கள் வீட்டுக்குள் இருந்து அரசியல் நடத்திக்கொண்டு, உல்லாச படகுகளை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேசபை உறுப்பினர் தவராசா அமலன் கருத்து தெரிவிக்கையில், கரைத்துறைப்பற்று தவிசாளர் தெரிவில் தமிழரசுக் கட்சி இந்த சபையை இழந்திருக்கின்றது. ஏனெனின் தமிழரசுக் கட்சியின் தலைமைகள் முல்லைத்தீவில் இருக்கும் ஒரு நபரின் கதையினை கேட்டு செயற்பட்டுள்ளனர். இதனால் தான் இன்று இந்த சபை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் சென்றிருக்கிறது. தேசியம் கதைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியில் குளிர்காய்ந்து கொண்டு இருக்கும் ஒரு சிலர் தான் தலைமைகள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். https://tamilwin.com/a- தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது! இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்ம குமார சுபசிங்கவுடனான (Shantha Pathma Kumara Subasingha) தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குற்றவியல் மிரட்டல் உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் எம்பிலிப்பிட்டிய பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார சுபசிங்க உள்ளிட்ட குழுவினரால் தாக்கப்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளின் இரத்த மாதிரியை அரசு பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். டிசம்பர் 20 ஆம் திகதி கலுகல விகாரைக்கு அருகே நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடன் வந்த ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதாகவும், தனது மோட்டார் சைக்கிள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கான்ஸ்டபிள் முன்னதாக முறைப்பாடு அளித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எம்பிலிப்பிட்டி குற்றத் தடுப்புப் பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1456994- புதிய கல்வி திட்டம் சமூகத்தை சீரழிக்கும் - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட்டு
பாலியல் குற்றச்செயல்களிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக பாலியல் கல்வி மிகவும் அவசியமானது- தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
தரமான சரியான தருணத்தில் வெளிப்பட்ட கருத்து 😎- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
2009 போர் முற்றுபெற்ற பின் நல்லிணக்கம், சமாதானம் என்று சொன்னாங்கள். அடாத்தாக பிடித்து எடுத்த சனங்களின் காணிகளில் புத்தர் விகாரை கட்டியெழுப்பி கும்பாவிசேகம் செய்ததுதான் உந்த நல்லிணக்கம் என்று இப்பத்தான் விளங்குது.- தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி காணி குறித்து வெளியிட்டுள்ள கருத்து!
என்னைய்யா விகாராதிபதி ஜோக் அடிக்கிறார். 🤔- கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question"
கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 01 / In English & Tamil யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மதிய வேளைகளில் வழமைபோல் சுறுசுறுப்பாக இருந்தது. மருத்துவப் பீட மாணவர்கள், குறிப்பாக மூத்த இளங்கலை மாணவர்கள், உடற்கூறியல் குறிப்புகளாலும் தூக்கமில்லாத இரவுகளாலும் சூழப்பட்டு, அந்த சுமைகளுடன் வேகமாக நடந்துகொண்டு இருந்தார்கள். அதேவேளை, குறிப்பாக இளைய கலைப்பீட இளங்கலை மாணவர்கள் புத்தகங்களை கைகளில் ஏந்தி, இலக்கியம், அரசியல் மற்றும் வாழ்க்கைக்கு இடையே அலைந்து திரிந்த எண்ணங்களுடன் மெதுவாக நடந்துகொண்டு இருந்தார்கள். உயரமான, அமைதியான, எதையும் கேள்விகேட்டு அதன் உண்மைத் தன்மையை அறிவதில் எப்பொழுதும் ஆர்வம் கொண்டவனாக, ஆனால் அதே நேரத்தில் சராசரி மாணவனாக, இறுதியாண்டு மருத்துவ மாணவன், சாமுவேல் [Samuel] இருந்தான். அவன் ஒரு தீவீர கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன் என்பதால், சிறுவயதில் ஒழுங்காக தன் பெற்றோருடன் தேவாலயத்திற்குச் சென்று, ஒவ்வொரு டிசம்பரிலும் கரோல்களையும் [carols] பாடியுள்ளான். ஆனாலும் - அவன் சாதாரண வகுப்பிற்குப் பிறகு, சமயம் மற்றும் புராண நம்பிக்கையை, அப்படியே நம்பாமல், எதையும் ஆராந்து, கேள்விகேட்டு அதில் இருந்து உண்மைகளை பிரித்து எடுக்கக் கற்றுக்கொண்டான். அவன் மனிதநேயம், நெறிமுறைகள் மற்றும் உண்மை ஆகியவற்றில் ஆழமாக நம்பிக்கை கொண்டிருந்தான், அதனால், தலைமுறைகளாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட, அல்லது புராணங்களாக எழுதப்பட்ட, அல்லது பழக்கங்களாக ஒட்டிக்கொண்ட அல்லது சமய நூல்களில் சொல்லப்பட்ட எதையும், அறிவுரீதியாக ஆராயாமல் ஏற்பதை தவிர்க்கத் தொடங்கினான். அதேவேளை, இரண்டாம் ஆண்டு கலை மாணவியான சாரா [Sarah] முற்றிலும் வித்தியாசமானவர். அவள், தனது நம்பிக்கைகளை ஒரு சால்வை போல சுமந்து சென்றாள் - மரபுரிமையாக தலைமுறையாக தொடர்வதால், எந்த கேள்வியும் கேட்காமல், ஒருவர் உயிர்வாழ சுவாசிப்பதைப் பின்பற்றுவது போல, இயற்கையாகவே, பகுப்பாய்வு இல்லாமல், அவள் மதத்தைப் பின்பற்றினாள். அவள் பெற்றோர் நம்பியதால் அவள் நம்பினாள். எல்லோரும் கொண்டாடியதால் அவள் கொண்டாடினாள். அவளுக்கு, நம்பிக்கை ஒரு விவாதம் அல்ல; அது சொந்தமானது. ரோமன், ஐரோப்பிய மற்றும் திருச்சபை பற்றிய ஒரு வரலாற்று மாணவியான சாரா, கலாச்சார ஆய்வுகள் பற்றிய புத்தகத்தைத், யாழ்ப்பாண பல்கலைக்கழக முதன்மை நூலகத்தில் அன்று தேடிக்கொண்டிருந்தாள். அந்தவேளை, சாமுவேல், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் பற்றிய உண்மைத் தன்மையை - தொல்பொருள் ஆய்வுகள், கல்வெட்டுகள், பண்டைய பயணிகளின் குறிப்புகள், பண்டைய இலக்கிய குறிப்புகள் மற்றும் விஞ்ஞான ரீதியான உண்மைகள் - மூலம், ஒரு பொழுதுபோக்காக அலச அங்கு வந்தான். அவன் கொஞ்சம் வேகமாக வந்ததாலும், அவன் உயரமாக, அகன்ற மார்பு, திடமான தோள்கள் (தடந்தோள்), நீண்ட கைகள் மற்றும் உறுதியான உடல் கொண்டவனாக கம்பீரமான நடையுடன் வந்ததால், சாராவை திரும்பி அவனைப் பார்க்க வைத்தது. சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை வீங்கு இறைப் பணைத்தோள் மடந்தை மான் பிணையன்ன மகிழ் மட நோக்கே? தேமல் படர்ந்த, அழகான, உயர்ந்த, நிமிர்ந்த இள முலைகளையும், பெருத்த சந்து பொருந்திய மூங்கில் போலும் தோளையுடைய இளம் பெண்ணின் பெண் மானைப் போன்ற மருண்ட மகிழ்ச்சியுடைய பார்வையினால்? .... சாமுவேல் கொஞ்சம் தடுமாறினாலும், அவன் தன்னைச் சமாளித்துக் கொண்டு, ஹாய், நான் சாமுவேல் இறுதியாண்டு மருத்துவபீட மாணவன் என்று, தன்னை அறிமுகப் படுத்தினான். அவளும் தான் இரண்டாம் ஆண்டு கலை மாணவி என்று, அவன் கண்ணை பார்த்தபடி கூறினாள். 'கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல' அதனாலோ என்னவோ, கொஞ்ச நேரம் அவர்கள் பேசாமல், பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்து இருந்தார்கள். என்றாலும் சில நிமிடங்களுக்கு பின், அவர்களின் உரையாடல்கள் பணிவுடன் தொடங்கி, பின்னர் மெதுவாக ஆழமடைந்தன. சாமுவேல் சாராவிடம் இதற்கு முன்பு அவள் அறியாத, அவளிடம் இதுவரை யாராலும் அல்லது அவளே தன்னிடம் கேட்கப்படாத கேள்விகளைக் கேட்டான். சாரா ஆதாரங்களுடன் அல்ல, ஆனால் உணர்ச்சியுடன் பதிலளித்தாள். ஆனாலும் இருவரும் அதை அச்சுறுத்தப்படுவதாக உணரவில்லை. அவர்களுக்கு இடையே மென்மையான எதோ ஒன்று வளர்ந்தது - வேறுபாட்டை மதிக்கும் ஒரு பாசம் - ஒரு அன்பு. என்றாலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, காதல் அவர்களின் தயக்கத்தை வென்றது. அவர்கள் பெரிதாக, ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக, தங்கள் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, திருமணம் செய்து கொண்டனர். Brief of 'When the Candle Met the Question' / Part: 01 Jaffna University had its own rhythm in the late afternoons. The medical faculty students walked fast, burdened with anatomy notes and sleepless nights. Across the road, the arts faculty moved slower—books under arms, thoughts drifting between literature, politics, and life itself. Samuel belonged to the first group. A final-year medical student, tall, quiet, known among his batch not for loud brilliance but for relentless questioning. He was born into a Christian family, attended church from childhood, sang carols every December, and yet—somewhere along the way—he had learned to separate faith from habit. He believed deeply in humanity, ethics, and truth, but he no longer accepted anything simply because it had been repeated for generations. Sarah was different. A second-year arts student, she carried her beliefs like a shawl—warm, unquestioned, inherited. She followed religion the way one follows breathing: naturally, without analysis. She believed because her parents believed. She celebrated because everyone celebrated. To her, faith was not a debate; it was belonging. They met at the university library. She was searching for a book on cultural studies. He was reading history—Roman, European, ecclesiastical. Their conversations began politely, then slowly deepened. Samuel asked questions Sarah had never been asked before. Sarah answered with emotion, not evidence. Yet neither felt threatened. Something gentle grew between them—an affection that respected difference. Two years later, love overcame hesitation. They married quietly, without drama. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 02 தொடரும் / Will follow துளி/DROP: 1949 [கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 01] / In English & Tamil https://www.facebook.com/groups/978753388866632/posts/32947476411567581/?- "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 69 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 69 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை 6வது அத்தியாயம் விஜயன் இலங்கைக்கு வருவதைப் பற்றியது. பரத கண்டத்தின் கிழக்கில் அமைந்த நாடுகளில் ஒன்றான வங்க நாட்டு மன்னன் [Vanga king] கலிங்க மன்னனின் [Kalinga king] மகளை மணந்தான். அவளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவள் சிங்கத்துடன் இணைந்து வாழ்ந்து சீகபாகு / சிங்கபாகு [Sihabahu / Sinhabahu] என்ற ஆண் மகனையும், சீகவலி [Sinhasivali or Sihasivali] என்ற மகளையும் பெற்றெடுத்தாள். [மகனின் கை, கால்கள் சிங்கத்தைப் போல உருவானதால் அவனுக்கு சீகபாகு என்று பெயரிட்டாள். ஆனால் மகளுக்கு சீகவலி என்று பெயரிட்டாள்.] ஒரு மனிதப் பெண் மற்றும் மிருக சிங்கத்தின் இணைப்பிலிருந்து சந்ததிகளைப் பெறுவது உயிரியல் ரீதியாக சாத்தியமற்றது. இது ஏற்கனவே விரிவாக விவரிக்கப் பட்டுள்ளது. பின் சீகபாகு தனது சொந்த சகோதரியை திருமணம் செய்து, பதினாறு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தான். அதில், விஜயனும் சுமித்தாவும் [Vijaya and Sumitta] முதல் இரட்டையர் ஆகும். விஜயன் வன்முறையாளர், பொல்லாதவர் மற்றும் தீய நடத்தை உடையவர். அவருக்கு அதே குணாதிசயங்களைக் கொண்ட எழுநூறு நண்பர்களும் இருந்தனர். விஜயனும் அவனது எழுநூறு தோழர்களும் கப்பலில் ஏற்றி, தங்கள் பூர்வீக நிலத்தில் அவர்கள் செய்த குற்றச் செயல்களின் காரணமாக, நாடு கடத்தப்பட்டனர். அவர்களது மனைவிகளும் மற்றும் குழந்தைகளும் வெவ்வேறு கப்பலில் ஏற்றி கடலில் நாடு கடத்தப்பட்டனர். குழந்தைகளையோ தாய்களையோ அவர்களின் தந்தை அல்லது கணவன் செய்த குற்றங்களுக்காக, அதுவும் குழந்தைகளையும் தாய்களையும் தனித்தனியாக வேறு வேறு கப்பலில் ஏற்றி நாடு கடத்துவார்களா? மேலும் குழந்தைகளின் வயது சுழியத்திலிருந்து [பூஜ்ஜியத்திலிருந்து] பத்து அல்லது பன்னிரெண்டு வரை வேறு படலாம் ? குறைந்த பட்சம் குழந்தைகளாவது தாயுடன் இருக்க வேண்டும் அல்லவா? இது ஒரு அதீத கற்பனை போல், நம்பும்படியாகவும் இல்லை. 700 + 01 பேரும் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்பு பாய்மரம் மற்றும் துடுப்புகளின் உதவியுடன் ஒரே கப்பலில் பயணம் செய்தனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது? இருப்பினும் கிமு 6 ஆம் நூற்றாண்டில் ஏறக்குறைய ஆயிரம் பேரை அல்லது குறைந்தது எழுநூறு பேரை ஏற்றிச் செல்லக்கூடிய ஒரு கப்பல் இந்தியப் பெருங்கடலில் எங்கும் இருந்ததாக ஒரு வரலாறும் இல்லை. நீண்ட காலமாக, இந்தியாவில், படகுகள் சிறியதாக இருந்தன, மேலும் பாய்மரக் கம்பம் மிக உயரமாக இருந்ததுடன் அரிதாகவே நிலத்தை விட்டு, வெகுதூரம் வெளியேறியது. இருப்பினும், கடலில் செல்லும் கப்பலுக்கு, துடுப்புகளும் இருந்தன. கடலில் காற்று குறையும் போது அது பயன்படுத்தப்பட்டன. மேலும் துடுப்புகள் துறைமுகங்களுக்குள் கப்பலை அங்கும் இங்கும் வசதியின் படி திருப்ப மற்றும் முன்னோக்கி, பின்னோக்கி செலுத்த பயன்படுத்தப்பட்டன. இல்லையெனில் கப்பல் காற்றின் உதவியுடன் மட்டுமே பொதுவாக பயணித்தது. பிந்தைய வேத காலத்தில் (கி.மு. 600 முதல் 200 வரை), கடல் பயணங்கள், படகுகள் மற்றும் பாதைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்தியாவில் கடல்சார் நடவடிக்கைகளின் ஆரம்ப குறிப்பு ரிக் வேதத்தில் உள்ளது; அக்கினியை வேண்டி, ரிக் வேதம் மண்டலம் ஒன்றில், சூக்தம் 97 இல் வசனம் 7 & 8 யிலும் கப்பலைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 7 - "எங்கும் முகமுள்ள நீ, எங்களுடைய பகைவர்களை - அக்கரைக்குச் செல்லும் கப்பல் போல் செலுத்தவும், அவனுடைய ஒளி எங்களுடைய பாபத்தை நீக்குக", 8 - நீ எங்களை, எங்களுடைய நலத்துக்காக [ஷேமத்துக்காக], கப்பலிலே கடலுக்கப்பால் செலுத்தவும். அவனுடைய ஒளி, எங்களுடைய பாபத்தை நீக்குக" என்கிறது. கிமு 200 வாக்கில், கப்பல்கள் பெரிய பெரிய அளவுகளில் கட்டப்பட்டன. ஒரு கப்பலை பெட்டிகளாகப் பிரிக்கும் ஒரு பகிர்வுகளின் [bulkhead] எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது; ஒரு கப்பலில் உள்ள ஒரு bulkhead [பல்க்ஹெட்] என்பது மேலோட்டத்திற்குள் [கப்பல் கூடுக்குள் / hull ] உள்ள ஒரு செங்குத்துச் சுவராகும், இது கப்பலை தனித்தனி பெட்டிகளாகப் பிரிக்கிறது, முதன்மையாக மேலோட்டத்தில் உடைப்பு ஏற்பட்டால் நீர் பரவுவதைத் தடுக்க உதவுகிறது, இதனால் நீர் புகாத பகுதிகளை உருவாக்குவதன் மூலமும் சேதம் ஏற்பட்டால் வெள்ளத்தைக் குறைப்பதன் மூலமும் கப்பலின் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. இதனால், அந்தக்காலத்தில், கப்பல்களின் பக்கங்களில் ஏற்படும் விபத்துக்களால் ஏற்படும் விளைவுகளை கட்டுப்படுத்த, சிலர் இவற்றில் [bulkheads] 13 வரை வைத்திருந்தனர். அத்துடன், அந்தக் காலத்தில் 100 பேரை ஏற்றிச் செல்லும் 200 டன் எடையுள்ள கப்பல்கள் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட மரம் முக்கியமாக மலபார் தேக்கு [Malabar teak] ஆகும். இது வெளிநாட்டு கப்பல்களில் பயன்படுத்தப்படும் கருவேலமரத்தை [oak] விட நீடித்து நிலைத்ததாக இருந்தது. விஜயனும் அவரது தோழர்களும் முதலில் சுப்பரா [சுப்பராகா / Suppara / Supparakka] என்ற இடத்தில் இறங்கினர். அவர்கள் அங்கும் முன்போலவே தவறாக நடந்து கொண்டனர். இதனால், கப்பல் மூலம் தப்பி ஓட வேண்டியிருந்தது. பின்னர் அவர்கள் புத்தர் பரிநிர்வாணத்தை அடைந்த நாளில் இலங்கையில் தரையிறங்கினார்கள். இது வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு என்பது வெள்ளிடைமலை. விரிவான விபரங்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மனைவிகள் மகிழடிபாகத்திலும் [Mahiladipaka], குழந்தைகள் நாகதீபத்திலும் [ Naggadipa] இறங்கினர். மனைவிகள் மற்றும் குழந்தைகளின் தலைவிதியைப், அதாவது, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் புறக்கணித்து வரலாற்றை [கதையை] மகாவம்சத்தில், மகாநாம தேரர் எழுதியுள்ளார். விஜயன் தனது சொந்த நாட்டில், தனது நடத்தையில் ஒரு குற்றவாளியாக இருந்தார். தங்கள் தங்கள் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது என்பதை அறிய விஜயன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அவர் முதலில் தரையிறங்கிய சுப்பராவிலும், அப்படியே குற்றமாக நடந்து கொண்டார். எனினும், இப்படியான மற்றும் சிங்கத்தின் வாரிசான, 'விஜயன் வருகை' யைத்தான் இலங்கை தங்களுடையது என்ற சிங்கள பௌத்தர்களின் கூற்றுக்கு அடிப்படையாக்குகிறார்கள். இருப்பினும், வில்ஹெல்ம் கெய்கர் தனது தீபவம்சம் மற்றும் மகாவம்சம் பற்றிய தனது ஒப்பீட்டு ஆய்வில் விஜயனின் வருகை ஒரு கட்டுக்கதை என்று கூறியுள்ளார், குறிப்பு "The Dipavamsa And Mahavamsa And Their Historical Development In Ceylon, In German by Wilhelm Geiger in 1905, and the English translation by Ethel M Kumaraswamy, ஆனால் அந்த அறிக்கை மரபியல் அல்லது உயிரியல் அடிப்படையை தவிர்த்து, வேறு காரணங்களைக் கூறுகிறது. எனினும் மரபியல் அல்லது உயிரியல் அடிப்படை ஒரு வெள்ளிடை மலையாகும். எது எப்படியாகினும், இந்த அத்தியாயம் இலங்கையின் கடற்கரையில் தரையிறங்கியதாகக் கூறப்படுவதைத் தவிர, இலங்கையில் நடந்த வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியது அல்ல. Part: 69 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 6 is about coming of Vijaya: A Vanga king married the daughter of a Kalinga king. She gave birth to a beautiful daughter. She cohabited with a lion and gave birth to one boy, Sihabahu, and a daughter, Sihasivali. Sihabahu killed the father lion when he was about sixteen years of age, and created a new kingdom, Sihapura. It is biologically impossibile to have offspring out of the union of a human lady and a lion. Sihabahu incestuously married his own sister, and gave birth to sixteen twins. Vijaya and Sumitta is the first twin. Vijaya was violent, wicked and of evil conduct and he had seven hundred friends of same characters. Vijaya and his seven hundred companions were put on a ship and exiled because of their criminal conducts in their native land. Their wives were also put on another ship and allowed to drift in sea. Their children were also put in yet another ship and allowed to drift in sea. Would any sensible person or king punish kids for the crimes committed by their fathers? Anything is fine when it helps Buddhism! Vijaya and his companions first landed at a place called Supparakka. They misbehaved there, and had to flee by ship. Then they landed in Lanka on the day Buddha attained Parinirvana, a deliberate concocted happy coincidence. Wives landed in Mahiladipaka and the children landed in Naggadipa. The Mahavamsa, rather Mahanama, just ignored the fates of the wives and the children. Vijaya was a criminal in his behaviour in his native country and also criminally behaved where he landed first, Supparaka. This is the basis of the claim of the Singhalese Buddhists that Lanka is theirs. It is a criminal concept and a frivolous claim. Even Wilhelm Geiger has stated that Vijaya’s arrival is a myth in his comparative study of Dipavamsa and Mahavamsa, Reference 11, but that statement was not based on genetics or biology. This Chapter is also not about historical events which happened in Lanka, except the alleged landing on the shores of Lanka.. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 70 தொடரும் / Will follow துளி/DROP: 1948 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 69 https://www.facebook.com/groups/978753388866632/posts/32947323861582836/? - பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
Important Information
By using this site, you agree to our Terms of Use.