stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இந்தியாவிற்கெதிரான அமெரிக்க நிலைப்பாடென்பதில் என்னளவில் நம்பிக்கையில்லை, இந்தியாவில் ஒரு ஆட்சி மாற்றத்தினை அமெரிக்கா விரும்புகிறது ஆனால் இந்தியாவிற்கெதிராக அமெரிக்க நகர்வு என்பது அதன் நீண்டகால பாதுகாப்பு திட்டத்திற்கு எதிரானது என கருதுகிறேன். Dரம்ப் ஆட்சிக்கு வந்ததின் பின்னர் மிக தீவிரமாக பாகிஸ்தானுடனான நட்புறவினை ஏற்படுத்த முயற்சிப்பது கூட இந்தியாவிற்கெதிரான முயற்சியல்ல என நினைக்கிறேன். சீன பாகிஸ்தான் பொருளாதார வலயத்தினூடாக சீனா கொண்டிருக்கும் 3000 கிலோமீட்டர் நீளமான தரை வழியினூடாக குவாடர் துறைமுகத்தினை இணைக்கும் வழங்கல் சங்கிலி சீனாவிற்கு ஆசிய, மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தினை ஏபடுத்திக்கொடுக்கும் இந்த திட்டம் பல கட்டமாக 2013 இலிருந்து நடைபெற்று வருகிறது, இது சீனாவிற்கு இன்னொரு மாற்று தரைவழித்தடத்தினை ஏற்படுத்தி கொடுத்துள்ளது, அதன் மீது தற்போது அமெரிக்கா செல்வாக்கு செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. இதே நிலையினை இலங்கையிலும் அமெரிக்கா கடைப்பிடிக்க முயல்கிறதாக நான் கருதுகிறேன், சீனாவின் வழித்தடத்தில் முக்கிய புள்ளியாகவுள்ள இலங்கையில் தனது ஆதிக்கத்தினை செலுத்துவது.
-
கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.
அட்லான்டிக் கடலில் பெரும் பதற்றம் எனும் தீரியில், அமெரிக்க இராணுவ விமானங்கள் பல பறப்புக்களை இங்கிலாந்திற்கு மேற்கொண்டுள்ளதாகவும் அது ஒரு பயிற்சி நடவடிக்கை இல்லை என கூறப்படுவதால் அதன் நோக்கம் இரஸ்சியா அல்லது ஈரானின் மீதான நடவடிக்கையின் பகுதியா என இங்கிலாந்தில் வசிக்கும் உங்களுக்கு ஏதாவது தெரியுமா என கேட்டிருந்தேன். கிறீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பா அமெரிக்காவிற்கெதிராக பெரிதாக இங்கு கூறப்படுவது போல செய்யாது என நம்புகிறேன், நான் நினைக்கிறேன் @குமாரசாமி கூறுவது போல இது ஒரு அமெரிக்காவின் நீண்ட நாள் திட்டமாக இருக்கலாம், இதில் இரஸ்சியாவினை இரையாக (Bait) ஐரோப்பாவினை மடைமாற்று முயற்சியாக உக்கிரேன் இரஸ்சிய போரின் மூலம் ஐரோப்பிய தரப்பு கிறீன்லாந்து விவகாரத்தில் தலையீட்டினை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் (divisionary tactics), அது இரஸ்சியாவிற்கும் தெரிந்திருக்கலாம், சிருஸ்னோவ்ஸ்கியின் காணொளியில் உங்கள் அபிப்பிராயம் கேட்டிருந்தேன்.
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
யாழ் மருத்துவபீடத்தினர் தங்கள் பக்கம் என்ன தவறு எப்படி ஏற்பட்டது என்பதையும் அறியத்தரலாமே. பல்கலைக்கழகத்தில் எப்படி மாணவியை பதிவு செய்தார்கள்? விடுதிக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள்? இங்கு பல தகவல்கள் தவறவிடப்பட்டுள்ளன அல்லது மறைக்கப்பட்டுள்ளன. மருத்துவராக வருவதற்கு மூன்று சாதாரண சித்திகள் போதாது என்றெல்லாம் இல்லை. சாதாரண சித்திகளுடன் வெளிநாடுகளுக்கு சென்று பயின்று பலர் மருத்துவர்களாக வந்துள்ளார்கள்.
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 94A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 94 A / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, அடுத்தடுத்து வந்த புத்த மத ஆதிக்க அரசாங்கங்கள் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் பிற திட்டங்கள் என்ற பெயரில் சிறுபான்மை தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளை ஆக்கிரமிக்க திட்டங்களைத் தொடங்ன. எடுத்துக்காட்டாக, தொல்பொருள் துறை இந்த பகுதிகளில் உள்ள பண்டைய பௌத்த குடியேற்றங்களுக்கான ஆதாரங்களைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் அகழ்வாராய்ச்சிக்கு நிலத்தை உரிமை கோரியது மட்டுமல்லாமல், பல இந்து கோயில்களின் இருப்பை அச்சுறுத்துவது நாளாந்த நிகழ்வாக மாறிவிட்டது. புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும் தொல்பொருள் ஆய்வாளருமான டாக்டர் எஸ். பத்மநாதன், 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வெளியேறியதிலிருந்து, இலங்கையில் தொல்பொருள் ஆராய்ச்சி தமிழர்களுக்கு எதிரான பாகுபாட்டால் மோசமாகி வருவதாக டெய்லி எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். பேராதனை பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்தபோது, டாக்டர் பத்மநாதன் இலங்கையில் பண்டைய தமிழர் இருப்பைக் காட்டக்கூடிய தொல்பொருள் திட்டங்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்று புகார் கூறினார். "தமிழர்கள் வாழ்ந்த இடமெல்லாம் தமிழ் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன," என்று அவர் குறிப்பிட்டார். தமிழர்கள் தங்கள் தாயகம் என்று கூறும் இடத்தில் ஆரம்பகால பௌத்த இருப்பைக் காட்டும் தொல்பொருள் தடயங்கள் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை, ஏனென்றால், இன்று இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் இல்லை என்றாலும், இலங்கையின் பெரும்பாலான ஆரம்பகால தமிழர்கள் (10 ஆம் நூற்றாண்டு சோழ படையெடுப்பிற்கு முன்பு) பௌத்தர்கள் ஆகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பண்டைய பௌத்த எச்சங்கள் சிங்களவர்களோ அல்லது வேறு யாரோ விட்டுச் சென்றவை அல்ல, தமிழ் பௌத்தர்களால் விடப்பட்ட எச்சங்கள் தான் அவை. அவை இலங்கைத் தமிழர்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். வடக்கு மற்றும் கிழக்கில் சமீப காலத்திலும் தற்போதும் கட்டப்பட்ட பௌத்த கோயில்கள், சிலைகள் மற்றும் கட்டமைப்புகள் மட்டுமே சிங்கள - பௌத்தமாகக் கருதப்பட முடியும் என்பது வரலாற்று வெளிப்படையான உண்மை மற்றும் சான்றும் ஆகும். இது இலங்கை அரசுக்கும் அறஞர்களுக்கும் நன்றாகத் தெரியும். என்றாலும் இனத்துவேசமும் மகாநாமாவின் மகாவம்சமும் கண்ணை மறைத்து, புத்தரின் உண்மையான போதனைகளையும் வழிகாட்டளையும் பின்னுக்கு தள்ளிவிட்டன, ஏன் புத்தரையும் சேர்த்துதான், ஆனால் வெறும் சிலைகள் மட்டும் தான் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன! அத்தியாயம் 34: வட்டகாமினியின் மரணத்திற்குப் பிறகு, மகசுழி மகாதீசன் [Mahakuli Mahatissa, also known as Maha Cula Maha Tissa] பக்தியுடனும், நீதி வழுவாமலும் பதினன்கு வருட காலம் ஆட்சி செய்தான். உழைத்து ஒரு காரியத்தைச் செய்து முடிப்பது பெருமைக்குரியது என்பதைக் கேட்டறிந்த அவன் ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே, யாருமறியாமல் மாறுவேட மணிந்து சென்று வயலில் வேலை செய்தான். அதற்குக் கூலியாகக் கொடுத்ததை தேரர் மகா சுமணவுக்குக் [Thera Mahasumma] கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஸ்வர்ண கிரியிலுள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் மூன்று வருட காலம் வேலை செய்து, அதற்குக் கூலியாக சர்க்கரை பெற்றான். சர்க்கரையை எடுத்துக் கொண்டு தலைநகருக்குத் திரும்பிய அரசன் பிக்குகளுக்கு நிறைய தானம் வழங்கினான். அதாவது மொத்தம் நான்கு ஆண்டுகளாக மன்னர் இல்லை என்பதை யாரும் கவனிக்கவில்லை என்பது விந்தையாக உள்ளது! மகசுழி மகாதீசன் கல்லாட நாகனின் [Khallatanaga] மகன், மற்றும் சோரநாகன் [Coranaga] வட்டகாமினியின் மகன். மகசுழி மகாதீசனின் ஆட்சிக் காலத்தில் சோரநாகன் ஒரு கிளர்ச்சியாளராக இருந்தான். மகசுழி மகாதீசனின் மரணத்திற்குப் பிறகு சோரநாகன் மன்னரானான், மேலும் தனது கிளர்ச்சி ஆண்டுகளில் அவனுக்கு அடைக்கலம் அளிக்கப்படாத பதினெட்டு விகாரைகளையும் அழித்தான். அவன் பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். மேலும் அவனது துணைவியார் அனுலா [Anula] கொடுத்த விஷ உணவை சாப்பிட்டு இறந்தான். சோரநாகனின் மரணத்திற்குப் பிறகு, மகசுழி மகாதீசனின் மகன் குட்ட திச்சன் அல்லது குட திச்சன் [Kuda Tissa] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவனும் தனது சொந்த தாயாரான அனுலாவால் விஷம் வைத்து கொல்லப்பட்டார். இந்த இரண்டு கொலைகளையும் அனுலா, சிவா [Siva I, [முதலாம் சிவன்] who was then a royal palace guard] என்ற அரண்மனைக் காவலாளியின் மீது கொண்ட காதல் ஏக்கத்தால் செய்தாள் என்கிறது மகாவம்சம். சிவா அனுலாவை ராணியாக ஏற்றுக்கொண்டு ஒரு வருடம் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தான். மீண்டும், வட்டுகா [வடுகன் / vatuka] என்ற தமிழன் மீது அவள் கொண்டிருந்த ஆசை காரணமாக, சிவாவும் அனுலாவால் விஷம் வைத்து கொல்லப்பட்டான். வடுகனும் அனுலாவை தனது ராணியாக ஏற்றுக்கொண்டான். என்றாலும் மீண்டும் தருபாதுக திச்சன் [Darubhatika Tissa, The wood carrier] என்ற விறகு சுமக்கும் மற்றொரு நபரைக் காதலித்ததால், ஒரு வருடம் இரண்டு மாதங்களில், முன்போலவே விஷம் வைத்து இவனைக் கொன்றாள். ஆட்சி ஏறிய தருபாதுக திச்சன் ஒரு வருடம் ஒரு மாதம் ஆட்சி செய்தான். இவனையும் அனுலா முன்போலவே, தனது அடுத்த காதலனும் அரண்மனை பூசாரியுமான தமிழ் பிராமணன் நிலியன் [Niliya, a Tamil Brahman] மேல் கொண்ட காதலால், விஷம் வைத்து கொன்றாள். அவன் ஆறு மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்தான். அரண்மனைக் காவலர்கள் முப்பத்திரண்டு பேர்களுடன் தன் இஷ்டம் போல் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த அனுலா அல்லது அனுலாதேவி பின்னர் நிலியனையும் விஷம் கொடுத்துக் கொன்று, தானே நான்கு மாதங்கள் ஆட்சி செய்தாள் என்று மகாவம்சம் கூறுகிறது. ஆனால் இன்னும் ஒன்றையும் இங்கு கவனியுங்கள். பல தமிழர்கள் அனுராதபுர அரண்மனையில் வேலை செய்வதையும், மற்றும் அரண்மனை பூசாரியாக தமிழ் பிராமணன் இருந்ததையும், இவர்களில் சிலர் அடுத்தடுத்து மன்னர்களாக மாறுவதையும், அதை அங்கு இருந்த அரண்மனை நிர்வாகிகளோ, படை வீரர்களோ, இல்லை குடிமக்களோ எந்த எதிர்ப்பும் இன்றி, ஏற்றுக்கொள்வதையும், இது கிருஸ்துக்கு முன்பு என்பதையும் அறியும் பொழுது, உங்கள் மனதில் ஏற்படும் இலங்கை வரலாறும், ஆதி குடிமக்கள் பற்றிய கருத்தும் என்னவாக இருக்கிறது? மகசுழி மகாதீசனின் இரண்டாவது மகன் குடகன்ன தீசன் [குடகன்ன திஸ்ஸன் / Kutakanna-Tissa] என்பவன் அனுலாவிடம் கொண்ட பயத்தால், ஓடிப்போய் தீட்சை பெற்று வசித்து வந்தவன் இப்போது தலைநகருக்குத் திரும்பி வந்து ஒரு படையைத் திரட்டினன். கொடியவளான அனுலாவைக் கொன்று விட்டு அவன் இருபத்திரண்டு வருட காலம் ஆட்சி செய்தான். அவனது மரணத்திற்குப் பிறகு, அவனது மகன் பட்டிகாபய அபயன் அல்லது பாதிகாபய அபயன் [Bhatikabhaya Abhaya] இருபத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவனது மரணத்திற்குப் பிறகு, அவனது தம்பி மகாதாதிக மகாநாகன் [Mahadathika Mahanaga] பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். தாதிக [Dathika] என்பது ஒரு தமிழ்ப் பெயர் என்று ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது; 33-78. எனவே, மகாதாதிக, அதாவது பெரிய தாதிக என்பதும் ஒரு தமிழ் பெயராகும். எனவே, மகாதாதிக மகாநாகா ஒரு தமிழ் மன்னர் பெயராகும். மேலும் நாகர்கள், இலங்கைத் தீவின் பூர்வீக குடியிருப்பாளர்களும் ஆகும். Part: 94 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 34: After the death of Vattagamani, Mahaculi Mahatissa ruled for fourteen years. It is claimed that this king laboured in the rice field for one year in disguise, and he gave his wages to the Thera Mahasumma. He also worked in a sugar mill for about three years and received lump of sugar as wages. He gave this as alms to the bikkhus. It is strange that no one noticed that the king was not around for four years! Mahaculi Mahatissa is the son of Khallatanaga, and Coranaga was the son of Vattagamani. Coranaga had been a rebel during the reign of Mahaculi Mahatissa. Coranaga became the king on the death of Mahaculi Mahatissa, and he destroyed eighteen Viharas where he was not given refuge during his rebel years. He ruled for twelve years, and died by eating poisoned food given by his consort Anula. After the death of Coranaga, Mahaculika’s son Tissa ruled for three years. Anula also poisoned him to death. Anula committed these two murders because of her cravings towards a palace guard by the name Siva. Siva took Anula as the queen and ruled for one year and two months. Anula also poisoned him to death because of her craving for another man by the name Vatuka who was a Damila. He too took Anula as his queen, and he was also poisoned to death by her in one year and two months as she fell in love with another person who was a wood carrier by the name Tissa. He ruled for one year and one month, and was poisoned by Anula as she was in love with Niliya, a Damila Brahman who was a palace priest. He ruled for six months. Anula again fell in love with thirty two of the palace guards, and poisoned Niliya to death, 34-27. Then she ruled for four months. Mahaculika had a second son by the Kutakanna-Tissa who fled for fear of Anula. He returned and put Anula to death and reigned for twenty-two years. After his death, his son Bhatikabhaya reigned twenty-eight years. After his death, his younger brother, Mahadathikamahanaga, ruled for twelve years. As it was already pointed out that Dathika was a Tamil name; 33-78. Then Mahadathika is also a Damila name. Naga was an original inhabitant of the island. Therefore, Mahadathika Mahanaga must be a Damila king. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 94 B தொடரும் / Will follow துளி/DROP: 2004 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 94A https://www.facebook.com/groups/978753388866632/posts/33365731243075427/?
-
ஆர்க்டிக்கில் ரஷ்யா மற்றும் சீனாவினால் கனடா பாதிக்கப்படக்கூடியது குறித்து டிரம்ப் உதவியாளர்களிடம் புகார் கூறுகிறார் – NBC செய்திகள்
ஆர்க்டிக்கில் ரஷ்யா மற்றும் சீனாவினால் கனடா பாதிக்கப்படக்கூடியது குறித்து டிரம்ப் உதவியாளர்களிடம் புகார் கூறுகிறார் – NBC செய்திகள் இவானா கோஸ்டினா, கேடெரினா டிஷ்செங்கோ — 18 ஜனவரி, 18:12 டிரம்ப். பங்கு புகைப்படம்: கெட்டி இமேஜஸ் வழியாக AFP 147900 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆர்க்டிக்கில் அமெரிக்க எதிரிகளுக்கு கனடாவின் பாதிப்பு குறித்து தனது உதவியாளர்களுடனான தனிப்பட்ட உரையாடல்களில் கனடாவை மேலும் மேலும் விமர்சித்து வருவதாக NBC செய்தி தெரிவித்துள்ளது. மூலம்: இரண்டு அமெரிக்க அதிகாரிகள், ஒரு மூத்த நிர்வாக அதிகாரி மற்றும் விவாதங்களை நன்கு அறிந்த மூன்று முன்னாள் மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி NBC செய்திகள் , ஐரோப்பிய பிராவ்தா செய்தி வெளியிட்டுள்ளது. விவரங்கள்: கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது நோக்கத்தை நோக்கி டிரம்பின் ஆலோசகர்கள் செயல்படுகையில், கனடா தனது பார்வையில், ரஷ்ய அல்லது சீன ஆக்கிரமிப்பிற்கு எதிராக தனது எல்லைகளை போதுமான அளவு பாதுகாக்க முடியாது என்று ஜனாதிபதி பெருகிய முறையில் கவலை கொண்டுள்ளார். ஒட்டாவா பாதுகாப்புக்காக அதிக செலவு செய்ய வேண்டும் என்று வாதிடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜனாதிபதியின் இந்த அழுத்தம், பரந்த ஆர்க்டிக் மூலோபாயம் மற்றும் அதன் வடக்கு எல்லையை வலுப்படுத்த இந்த ஆண்டு கனடாவுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய உள் விவாதங்களை துரிதப்படுத்தியுள்ளது என்று அவர்கள் மேலும் கூறினர். "மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்கா தொடர்ந்து நகர்ந்து வருவதைப் பற்றி டிரம்ப் மிகவும் கவலைப்படுகிறார், மேலும் இதில் கவனம் செலுத்துகிறார்" என்று அதிகாரிகளில் ஒருவர் கூறினார். கனடாவின் வடக்கு எல்லையில் அமெரிக்க துருப்புக்களை நிறுத்துவது இதில் அடங்கும் என்று தற்போதைய அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கிரீன்லாந்தைப் போலல்லாமல், டிரம்ப் கனடாவைக் கையகப்படுத்த முயற்சிக்கவில்லை, மேலும் அமெரிக்க ஆயுதப் படைகளைப் பயன்படுத்தி அதைக் கைப்பற்ற முடியும் என்று கூறவில்லை என்று மூத்த நிர்வாக அதிகாரியும் தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க அதிகாரிகளும் தெரிவித்தனர். அமெரிக்காவுடனான உறவுகள் மிகவும் பதட்டமாக உள்ள கனடா மீது டிரம்ப் தனிப்பட்ட கவனம் செலுத்துவது, மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்காவின் அண்டை நாடுகள் மீதான தனது நீண்டகால விமர்சனங்களில் சிலவற்றை, பிராந்தியத்தில் அமெரிக்க செல்வாக்கை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளாக மாற்றும் போது வருகிறது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் கனடா மீதான ஜனாதிபதியின் புதுப்பிக்கப்பட்ட கவனம் குறித்து கேட்டதற்கு, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி, கடந்த ஆண்டு ஏப்ரலில் டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவு, "ஆர்க்டிக் நீர்வழிகளில் சுதந்திரமான வழிசெலுத்தல் மற்றும் அமெரிக்க ஆதிக்கம் இரண்டையும் உறுதி செய்வதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று கூறினார். பின்னணி: கனடா மீதான டிரம்பின் விமர்சனம் அவரது முதல் பதவிக் காலத்திலேயே தொடங்கியது. கடந்த ஆண்டு அவர் "பொருளாதார சக்தியை" பயன்படுத்தி நாட்டைக் கைப்பற்றி அமெரிக்காவின் வடக்கு அண்டை நாடான அமெரிக்காவிலிருந்து 51வது மாநிலமாக மாற்ற முடியும் என்று கூறியபோது அது உச்சத்தை எட்டியது. டிரம்ப் கனடாவுடன் வர்த்தகப் போரைத் தூண்டிவிட்டு அதன் அரசாங்கத்துடன் வெளிப்படையாக வாதிட்டார். சமீபத்தில், இந்தப் பொதுப் பதட்டங்கள் தணிந்துள்ளன. https://www.pravda.com.ua/eng/news/2026/01/18/8016766/
-
கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.
அமெரிக்கா வலிமையைக் காட்டுகிறது: கிரீன்லாந்தை கையகப்படுத்தும் விருப்பத்தை டிரம்பின் நிர்வாகம் விளக்குகிறது இவான் டியாகோனோவ் - 19 ஜனவரி, 05:35 ஸ்காட் பெசென்ட். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 19064 கிரீன்லாந்தின் மீது அமெரிக்க கட்டுப்பாட்டை நிறுவுவதற்கான உந்துதல் ஐரோப்பாவின் "பலவீனம்" மற்றும் அமெரிக்க மூலோபாய நலன்களால் இயக்கப்படுகிறது என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார். மூலம்: NBCயின் மீட் தி பிரஸ் நிகழ்ச்சியில் பெசென்ட் அளித்த பேட்டியில் மேற்கோள்: "நாங்கள் உலகின் வலிமையான நாடு. ஐரோப்பியர்கள் பலவீனத்தை முன்வைக்கிறார்கள்; அமெரிக்கா பலத்தை முன்வைக்கிறது. " " நாம் பல ஆண்டுகளாக , ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, அமெரிக்க ஜனாதிபதிகள் கிரீன்லாந்தை கையகப்படுத்த விரும்பினர், மேலும் நாம் காணக்கூடியது என்னவென்றால், கிரீன்லாந்து அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. நாங்கள் ஏவுகணை அமைப்பான கோல்டன் டோமை உருவாக்கி வருகிறோம்." பாருங்கள், ஜனாதிபதி டிரம்ப் மூலோபாய ரீதியாக நடந்து கொள்கிறார்; அவர் இந்த ஆண்டைத் தாண்டி, அடுத்த ஆண்டைத் தாண்டி ஆர்க்டிக்கில் ஒரு போரில் என்ன நடக்கக்கூடும் என்பதைப் பார்க்கிறார். நாங்கள் எங்கள் தேசிய பாதுகாப்பை அவுட்சோர்ஸ் செய்யப் போவதில்லை. எங்கள் அரைக்கோளப் பாதுகாப்பை மற்ற நாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்யப் போவதில்லை. விவரங்கள்: "வலிமையின் மூலம் அமைதி" என்ற கொள்கையைப் பின்பற்றி அமெரிக்கா முன்கூட்டியே செயல்பட வேண்டும் என்று பெசென்ட் வலியுறுத்தினார் . ஆர்க்டிக் மீதான போராட்டம் ஒரு உண்மையான எதிர்கால அச்சுறுத்தல் என்றும், கிரீன்லாந்தை இப்போது அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது எதிர்கால மோதலைத் தடுக்க உதவும் என்றும் அவர் நம்புகிறார். ரஷ்யாவை கையாள்வதில் ஐரோப்பிய கூட்டாளிகள் குறுகிய பார்வையுடன் இருப்பதாகவும், உக்ரைனின் சூழ்நிலையுடன் இணையாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார். மேற்கோள்: "டிரம்ப் 1.0 இல், ஜனாதிபதி டிரம்ப் ஐரோப்பியர்களிடம், 'நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஐ உருவாக்க வேண்டாம். ரஷ்ய எண்ணெயை நம்ப வேண்டாம் ' என்று கூறினார். கிறிஸ்டன், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் முயற்சிகளுக்கு என்ன நிதியளிக்கிறது என்று யூகிக்கவும்? ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்குகின்றன. எனவே அமெரிக்கா இங்கே [கிரீன்லாந்தின் மீது] கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்." விவரங்கள்: கிரிமியாவுடன் ரஷ்யா செய்தது போல், வாஷிங்டன் தீவை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றுவது குறித்து பரிசீலிக்கலாமா என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, பெசென்ட் நேரடி மறுப்பைத் தவிர்த்தார். இந்த விவகாரம் குறித்து டிரம்புடன் விவாதிக்கவில்லை என்றும், கிரீன்லாந்தை அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது அவர்களுக்கு சிறந்த வழி என்பதை " ஐரோப்பியர்கள் புரிந்துகொள்வார்கள்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதுபோன்ற நடவடிக்கைகள் நேட்டோவை பலவீனப்படுத்தும் என்ற கவலைகளையும் பெசென்ட் நிராகரித்தார். அமெரிக்கா கூட்டணியில் இருக்கும் என்று அவர் கூறினார், ஆனால் நட்பு நாடுகள் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்பதால் அமெரிக்கா "வேறொருவரின் போரில் இழுக்கப்படுவதை" டிரம்ப் விரும்பவில்லை என்று வலியுறுத்தினார். 1980 முதல் ஐரோப்பிய நாடுகளை விட அமெரிக்கா 22 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை பாதுகாப்புக்காக அதிகமாக செலவிட்டுள்ளது என்பதை பெசென்ட் எடுத்துரைத்தார். பின்னணி: வளங்கள் நிறைந்த கிரீன்லாந்து தீவை வாங்குவதற்கான தனது விருப்பத்தை டிரம்ப் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார், இது அமெரிக்காவின் மூலோபாயத் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசாங்கங்கள் இந்த திட்டங்களை உறுதியாக நிராகரித்து, தீவு விற்பனைக்கு இல்லை என்பதை வலியுறுத்தின. ஜனவரி 17 அன்று, டென்மார்க்கின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆதரவைத் தெரிவித்து , கிரீன்லாந்திற்கு துருப்புக்களை அனுப்பிய நாடுகளுக்கு எதிராக டிரம்ப் வர்த்தகப் போரை அறிவித்தார் . டிரம்பின் அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி, பிப்ரவரி 1 முதல் டென்மார்க், சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பின்லாந்து, நோர்வே மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வரும் உணவு, பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் . இந்த நாடுகள் அவரது கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்றால் , ஜூன் 1 முதல் அமெரிக்க நிர்வாகம் விகிதத்தை 25% க்கும் அதிகமாக உயர்த்தும். இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான எதிர் நடவடிக்கைகளின் தொகுப்பைத் தயாரித்து வருகிறது . பிரஸ்ஸல்ஸ் மொத்தம் €93 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்கள் மீது வரிகளை விதிப்பது அல்லது அமெரிக்க நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையில் நுழைவதைக் கட்டுப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது https://www.pravda.com.ua/eng/news/2026/01/19/8016797/ டிரம்பின் கிரீன்லாந்து அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் €93 பில்லியன் கட்டணங்களைத் தயாரிக்கிறது - FT இவான் டியாகோனோவ் - 19 ஜனவரி, 01:28 டொனால்ட் டிரம்ப். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 66028 க்கு விண்ணப்பிக்கவும் கிரீன்லாந்தின் மீது கட்டுப்பாட்டை நிலைநாட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான நடவடிக்கைகளின் தொகுப்பைத் தயாரித்து வருகிறது. மொத்தம் €93 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு வரிகளை விதிப்பது அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையில் அமெரிக்க நிறுவனங்கள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரஸ்ஸல்ஸ் பரிசீலித்து வருகிறது. மூலம்: ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளை மேற்கோள் காட்டி பைனான்சியல் டைம்ஸ் விவரங்கள்: பல தசாப்தங்களில் அட்லாண்டிக் கடல்கடந்த உறவுகளில் நிலைமை மிகவும் கடுமையான நெருக்கடியாக அதிகரித்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த வாரம் டாவோஸில் தொடங்கும் உலகப் பொருளாதார மன்றத்தில் டிரம்புடனான முக்கிய சந்திப்புகளுக்கு முன்னதாக, ஐரோப்பியத் தலைவர்களை அந்நியச் செலாவணியுடன் சித்தப்படுத்துவதற்காக, டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு சாத்தியமான பதில்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் தூதர்கள் விவாதித்தனர். தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறுகையில், EU இரண்டு முக்கிய கூறுகளைக் கொண்ட "பழிவாங்கும் கருவிகளை" உருவாக்கி வருகிறது . முதலாவது, கடந்த ஆண்டு வரையப்பட்ட €93 பில்லியன் கட்டணப் பட்டியலை மீண்டும் செயல்படுத்துவதாகும், ஆனால் முழு அளவிலான வர்த்தகப் போரைத் தவிர்ப்பதற்காக பிப்ரவரி 6 வரை இடைநிறுத்தப்பட்டது. இரண்டாவது, மிகவும் தொலைநோக்கு பார்வை கொண்ட விருப்பம், வற்புறுத்தல் எதிர்ப்பு கருவி (ACI) என்று அழைக்கப்படுவதைப் பயன்படுத்துவதாகும். 2023 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த வழிமுறை இதற்கு முன்பு ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. இது ஐரோப்பிய ஒன்றியம் முதலீட்டைக் கட்டுப்படுத்தவும் சேவைகளின் ஏற்றுமதியைத் தடுக்கவும் அனுமதிக்கிறது, இந்த நடவடிக்கைகள் ஐரோப்பிய சந்தையில் செயல்படும் முக்கிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை கணிசமாக பாதிக்கலாம். ACI-ஐப் பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் மிகவும் வலுவாக ஆதரவளித்து வருகிறது. பாரிஸும் பெர்லினும் ஏற்கனவே ஒரு கூட்டு பதிலை ஒருங்கிணைத்து வருகின்றன, மேலும் இரு நாடுகளின் நிதி அமைச்சர்களும் ஒரு பரந்த EU விவாதத்திற்கு முன்னதாக ஒரு சந்திப்பைத் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், பெரும்பாலான EU உறுப்பு நாடுகள், அதிகாரிகள் விவரிக்கும் ஒரு கேரட் மற்றும் குச்சி அணுகுமுறையைப் பயன்படுத்தி, வெளிப்படையான மோதலை நோக்கிச் செல்வதற்கு முன்பு டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதை ஆதரிக்கின்றன. "இது தொடர்ந்தால் தெளிவான பழிவாங்கும் கருவிகள் கையில் உள்ளன... [டிரம்ப்] தூய மாஃபியா முறைகளைப் பயன்படுத்துகிறார். அதே நேரத்தில், நாங்கள் பகிரங்கமாக அமைதியைக் கோர விரும்புகிறோம், மேலும் அவர் ஏணியில் இறங்க ஒரு வாய்ப்பை வழங்க விரும்புகிறோம்," என்று பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த ஒரு ஐரோப்பிய தூதர் கூறினார். மற்றொரு ஐரோப்பிய அதிகாரி, டிரம்பின் அச்சுறுத்தல்கள் "நிச்சயமாக ACI-க்கு உத்தரவாதம் அளிக்கின்றன, ஏனெனில் அது பாடப்புத்தக வற்புறுத்தலாக இருக்கும்" என்றார் . ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாக, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உள்ள மிகப்பெரிய அரசியல் குழுக்கள், முந்தைய ஒப்பந்தங்களின் கீழ் திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகளைக் குறைப்பது குறித்த வாக்கெடுப்பை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளன. ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், "கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் இராச்சியத்தின் இறையாண்மையை நிலைநிறுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் ஐரோப்பா உறுதியாக நிற்கும். நாங்கள் எப்போதும் எங்கள் மூலோபாய பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்போம்" என்று கூறினார். டாவோஸில், மேற்கத்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் அவசரமாக திருத்தப்பட்டது. உக்ரைன் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, விவாதங்களின் குறிப்பிடத்தக்க பகுதி இப்போது கிரீன்லாந்தைச் சுற்றியுள்ள நெருக்கடிக்கு அர்ப்பணிக்கப்படும். அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் சமரசத்திற்கான சாத்தியத்தை நிராகரித்தார், ஐரோப்பா தீவின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய மிகவும் பலவீனமாக உள்ளது என்று கூறினார். "கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக இல்லாமல் மேம்பட்ட பாதுகாப்பு சாத்தியமில்லை என்று ஜனாதிபதி நம்புகிறார்," என்று பெசென்ட் கூறினார். பின்னணி: ஜனவரி 14 அன்று, டிரம்ப் அமெரிக்கா கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் என்று கோரினார், அதை ஒரு மூலோபாயத் தேவை என்று அழைத்தார், மேலும் தீவைப் பாதுகாக்க ஐரோப்பிய நாடுகள் இராணுவப் படைகளை நிறுத்துவதை விமர்சித்தார். ஜனவரி 18 அன்று, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தூதர்கள், பல ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான புதிய வரிகளை டிரம்ப் அறிவித்தது குறித்து விவாதிக்க அவசரக் கூட்டத்தை நடத்தினர். டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, சுவீடன் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் அட்லாண்டிக் கடல் கடந்த உறவுகளை சீர்குலைப்பதாகக் கூறின . கிரீன்லாந்து மீதான டிரம்பின் கூற்றுக்களை செயல்படுத்துவது ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினை "உலகின் மகிழ்ச்சியான மனிதராக" மாற்றும் என்றும் , அவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு வெற்றிகளைப் பெற்றுத் தரும் என்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் எச்சரித்தார். https://www.pravda.com.ua/eng/news/2026/01/19/8016791/
- Today
-
அறிமுகம்
வணக்கம் கல்யாணசுந்தரம். வருக உங்களை வரவேற்பதில், மட்டற்ற மகிழ்ச்சி
-
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / [பத்து பகுதிகள்]
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 6 🐪 பாகம் 06 – துபாய் வர்த்தக வளாகத்தில் மாபெரும் ஒட்டகம் துரத்தல் கதிரவன் துபாயின் அடிவானத்தில் மெதுவாக மூழ்கிக் கொண்டிருந்த போது, ஒளிரும் உயர்மாடிக் கட்டிடங்கள் பொன்னாக மின்னும் போது, தாத்தா கந்தையா தில்லையும் அவரது மூன்று பேரக்குழந்தைகளும் -திரேன், நிலன் மற்றும் குட்டி ஆரின் - உலகப் புகழ்பெற்ற, உலகத்திலேயே பெரிய, துபாய் வர்த்தக வளாகத்தில் ஒரு மாலை சாகசத்திற்காகப் புறப்பட்டனர். துபாய் மால் [Dubai Mall], புர்ஜ் கலீஃபாவிற்கு [Burj Khalifa] அடுத்ததாக அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் [வர்த்தக வளாகம்] ஆகும், மேலும் இது உலகிலேயே அதிகம் பார்வையிடப்படும் கட்டிடங்களில் ஒன்றும் ஆகும். இது 1,200 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகள், 120 க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் துபாய் மீன் [நீர்வாழ்] காட்சியகம் [Aquarium] & நீருக்கடியில் மிருகக்காட்சிசாலை, ஒலிம்பிக் அளவிலான பனி வளையம் [Olympic-sized ice rink] மற்றும் ஒரு பல்திரைக் கூடம் /அரங்கம் [மல்டிபிளக்ஸ் சினிமா / multiplex cinema] உள்ளிட்ட ஏராளமான பொழுதுபோக்குகளைக் கொண்டுள்ளது. துபாய் வீதிகளின் அகலமான வழியாக கார் பயணித்த போது, சிறுவர்கள் ஆச்சரியத்தால் கண்களை விரித்துக் கொண்டு ஜன்னலை நோக்கி முகத்தை அழுத்தினர். கடலுக்கு அருகிலுள்ள தங்க மணற் குன்றுகளின் விளிம்பிற்கு வெளியே, அவர்கள் திடீரென்று ஒட்டக சவாரிகளைக் கண்டனர் - உயரமான விலங்குகள் சுற்றுலாப் பயணிகளை மணலில் சுமந்து செல்லும் போது மெதுவாக அசைந்தன, மாலை வெளிச்சத்தில் அவற்றின் நிழல்கள் நீண்டிருந்தன. “தாத்தா! பாருங்க! உண்மையான ஒட்டகங்கள்!” என்று உற்சாகமாகக் கூவினான் நிலன். அவன் குரல் மகிழ்ச்சியால் நிறைந்து இருந்தது. “அட, நாம் காரை நிறுத்தலாமா!” என்றான் திரேன் தாத்தா சிரித்தார். “சரி, ஒரு சில நிமிடங்கள் மட்டும். ஆனால் துபாய் வர்த்தக வளாகம் மூடுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னவது, தாமதமாகாமல் போகவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ” என்று வேண்டுகோள் விடுத்தார். கார் துபாயின் மணல் மேடுகளுக்கு [sand dunes] அருகில் மெதுவாகச் சென்று நின்றது. சிறுவர்கள் வெறுங் காலுடன் மணலில் இறங்கிய போது, சூடான பாலைவனக் காற்று அவர்களின் முகங்களை தொட்டுச் சென்றது. தங்க மணல் மேடுகளின் குறுக்கே சிறிய கால் தடங்களை பதித்து பதித்துக் கொண்டு, அவர்கள் ஒருவரை யொருவர் துரத்தும் போது, புன்னகைகள் வெப்பக் காற்றை குளிராக நிரப்பியது. ஒட்டகங்கள் சில சோம்பேறித்தனமாக அவர்களின் அருகில் மெல்ல மெல்ல நடந்தன. அப்பொழுது அவற்றின் கழுத்தில் கட்டிய மணிகள் காற்றில் மெதுவாக ஒலித்தன. அவர்கள் சில புகைப்படங்களை எடுத்தனர் - நிலன் ஒரு கற்பனை ஒட்டகத்தை சவாரி செய்வது போல் பாசாங்கு செய்தான். திரேன் தனது கைகளை கடிவாளங்களைப் போல நீட்டினான். மற்றும் குட்டி ஆரின், மணலில் விழுந்து உருண்டான். காற்று தனது கால் விரல்களுக்கு இடையில் மணலைச் சுமந்து செல்லும் போது மகிழ்ச்சியுடன் எழும்பி துள்ளிக் கத்தினான். ஒரு சில நேர மகிழ்வான பொழுது போக்கும் மற்றும் வேடிக்கைக்கும் பிறகு, தாத்தா கைகளைத் தட்டினார். "சரி பசங்களா, கிளம்ப வேண்டிய நேரம் இது. ஒட்டகங்களும் தூங்க வேண்டும்!" என்றார். குழந்தைகள் மணலைத் தம் கால்களில் இருந்து தட்டி விட்டு மீண்டும் காரில் மகிழ்வாக ஏறினர். துபாய் மால் நோக்கிப் பயணம் தொடர்ந்த போது, வானம் மஞ்சளிலிருந்து ஊதா நிறமாக மாறியது; தூரத்தில் துபாய் நகர விளக்குகள் ஒளிரத் தொடங்கின. ஆனால் தாத்தா, அந்த கால இடைவெளியை, ஒட்டக சவாரி வரலாற்றை [Camel Riding History], பேரன்களுக்கு விளக்குதலில் ஈடுபட்டார். கார் துபாய் மால் நோக்கிச் செல்லும் போது, நிலன் இன்னும் ஒட்டக சவாரி பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். “தாத்தா, பாலைவனத்தில் ஏன் கார்களில் பயணம் செய்யாமல், ஒட்டகத்தில் சவாரி செய்கிறார்கள்?” என்று அவன் கேட்டான். கண்ணாடியில் மறைந்து போகும் தங்க மணல் மேடுகளை உற்றுப் பார்த்துக் கொண்டு “ஆ, என் அன்பான பையன்களே,” என்று அவர் தொடங்கினார். “ஒட்டகம் சவாரி செய்வதற்கு மட்டும் ஒரு விலங்கு அல்ல - அது பாலைவன வரலாற்றின் ஒரு பகுதி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, கார்கள் அல்லது சாலைகள் இருப்பதற்கு முன்பு, பாலைவனப் பகுதிகளில் கால்நடைகள் மேய்க்கும் நாடோடிப் பழங்குடியான பெடோயின் [Bedouins] என்று அழைக்கப்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்து பயணம் செய்தனர். வெப்பமான, முடிவற்ற மணல் வழியாக தங்களை வழிநடத்த அப்பொழுதே ஒட்டகத்தை அவர்கள் நம்பினர்.” என்று தாத்தா மெதுவாகச் சிரித்தபடி சொன்னார். அவர் தொடர்ந்தார், “ஒட்டகம் மிகவும் சிறப்பு வாய்ந்த உயிரினம். அது தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் நடக்க முடியும், அதிக சுமைகளைச் சுமந்து செல்ல முடியும், அத்துடன் மிகவும் மெதுவாக நகரவும் முடியும். அதனால்தான் மக்கள் அதை பாலைவனக் கப்பல் என்று அழைத்தனர். 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் ஒட்டகங்களை அடக்கக் கற்றுக் கொண்டபோது, எல்லாம் மாறியது. ஒரு காலத்தில் மக்களைப் பிரித்து வைத்திருந்த பெரிய பாலைவனங்கள், பயணம் மற்றும் வர்த்தகத்திற்கான பாதைகளாக மாறின. ஒட்டகங்கள் உலகை இணைக்க உதவியது என்று நீங்கள் கூறலாம்.” என்றார். திரேன் கண்களை விரித்து கேட்டான். “அப்போ இன்னைக்கு நாம ஒட்டகத்துல சவாரி பண்ணப்போ, அது ஒரு வரலாற்றுச் சவாரி மாதிரி இருந்துச்சு என்று சொல்லலாமா?” தாத்தா, திரேனுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அகநானூற்றில் மருதன் இளநாகனார் பாடிய பாடலைப் பாடினார். “குறும்பொறை உணங்கும் ததர் வெள் என்பு கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும் கல்நெடுங் கவலைய கானம் நீந்தி, அம்மா அரிவை ஒழிய" [அகம்.245] திரேன் இதன் கருத்து என்னவென்று கேட்டான். பாறையில் உதிர்ந்து கிடக்கும் இலவ மலர்கள் காய்ந்து எலும்புகள் போலக் காட்சி தரும். அவைகளை ஒட்டகங்கள் சாப்பிட்டுப் பசியைத் தீர்த்துக் கொள்ளும் என்று இது பொருள்படுகிறது என்று கூறிய அவர், ஒட்டகம் ஒரு சைவ பிராணி என்று எடுத்துக் கூறினார். பின் தாத்தா பேரப்பிள்ளைகளை பார்த்து பெருமையாச் சிரித்தார். “சரியாகச் சொன்னாய், 'அது ஒரு வரலாற்றுச் சவாரி மாதிரி இருந்துச்சு!' என்று. “நீங்கள் உணர்ந்த ஒவ்வொரு மெதுவான அசைவும் கூட — காலத்தின் வழியே எடுத்த ஒரு அடியாயிருக்கும். ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் நேசித்த, வாழ்ந்த அனுபவத்தை நீங்கள் இன்று உணர்ந்திருக்கிறீர்கள்.” என்றார். தாத்தாவின் வாய், தனக்குள் முணுமுணுத்தது. 'ஒவ் வொரு ஒட்டக அசைவும் ஒரு ஆயிரமாண்டின் மூச்சாய் ஒலிக்கிறது! இன்றைய உன் அனுபவமும் சிரிப்பும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கனவுகள்!' காருக்குள், சிறுவர்கள் ஒட்டகங்களைப் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்கள் - அவற்றின் நீண்ட கண் இமைகள், பெரிய கால்கள் மற்றும் வேடிக்கையான நடைகள் [Walking] பற்றி. “அதனால்த் தான் அது பாலைவனத்தின் கப்பல்,” என்றார் தாத்தா புன்னகையுடன். “அது அமைதியாகவும், பொறுமையுடனும், வலிமையுடனும் இருக்கும் — நாமும் அப்படித்தான் இருக்கணும்." என்று புத்திமதியும் கூறினார். விரைவில் அவர்கள் துபாய் மாலின் பிரமாண்டமான நுழைவாயிலை அடைந்தனர், கண்ணாடி ஒளியில் மின்னும் அந்த மால் [Mall] ஒரு கனவு உலகம் போல இருந்தது. அவர்கள் உள்ளே நுழைந்தவுடன், அவர்கள் வண்ணங்கள், ஒலிகள் மற்றும் வாசனைகளின் சுழலால் சூழப்பட்டனர். காற்று குளிர்ச்சியாகவும் இனிமையாகவும் இருந்தது. அத்துடன் வனிலா, கேரமல் பாப்கார்ன் மற்றும் புதிய காபியின் [vanilla, caramel popcorn, and fresh coffee] நறுமணத்தால் அது நிரம்பியிருந்தது. அங்கே பிரம்மாண்டமான திரைகள் மின்னி மின்னி ஆட்டம் போடும் விளக்குகளால் [dancing lights] ஒளிர்ந்தன; நீரூற்றுகள் இசைத்தன. காற்றில் தண்ணீரை மேலே தெளித்தன; மென்மையான அரபு இசை தென்றல் போல மிதந்தது. ஆனால் அவர்கள் மாலை அங்கு உலாவி தேடுதல் செய்யும் போதும், அவர்களின் எண்ணங்கள் இன்னும் அவர்கள் பார்த்த ஒட்டகங்களைப் பற்றியே இருந்தன. அவர்கள் வளாகத்தின் முற்றத்திற்குள் [atrium] - நேர்த்தியான, தங்க நிற மற்றும் யதார்த்தமான உயிருள்ள அளவிலான ஒட்டக சிலைகளைக் கண்டபோது, அவர்களின் கற்பனை மீண்டும் ஒரு முறை தீப்பிடித்தது. “பாருங்க, தாத்தா! மறுபடியும் ஒட்டகங்கள்!” என்று தாத்தாவின் சட்டையை இழுத்துக் கொண்டு கத்தினான் குட்டி ஆரின். “ஒருவேளை அவங்க பாலைவனத்துல இருந்து ஷாப்பிங் [shopping] பண்ண இங்கு ஓடி வந்திருக்கலாம்!” திரேன் கேலி செய்தான். “அல்லது அவங்க சோளப்பொரியைத் [popcorn] தேடிட்டு இங்கு வந்திருக்கலாம்!” என்று சிரித்தான் நிலன். தாத்தா பதில் சொல்வதற்குள், சிறுவர்கள் கூட்டத்தின் ஊடே உற்சாகமாக ஓடினர். அவர்களுக்கு, அங்கிருந்த ஒட்டக சிலைகள் உயிர் பெற்றன! அவர்கள் ஒட்டக பந்தயம் ஓடுவது போல் பாசாங்கு செய்து சுற்றி சுற்றி ஓடி, அவைகளுக்கு உணவளிப்பது போல் நடித்தனர். திரேன், நிலன், ஆரினின் சிரிப்பு மால் [mall] முழுவதும் எதிரொலித்தது. "ஏய், குழந்தைகளே, கொஞ்சம் எனக்காக காத்திருங்கள், ஒட்டகங்களை விட வேகமா ஓடாதீங்க, ஒட்டகம் மெதுவாகத்தான் ஓடும்!" என்று தாத்தா பாதி மூச்சுத் திணறி, பாதி சிரித்தார். தாத்தா துரத்தி துரத்தி பேரன்களுக்கு பின்னால் ஓடுவதை கடைக்காரர்கள் திரும்பிப் பார்த்தார்கள் - என்றாலும் நீரூற்றுகள் மற்றும் கண்ணாடிச் சுவர்களுக்கு [fountains and glass walls] மத்தியில் தனது துடிப்பான பேரக்குழந்தைகளைத் துரத்தும் அன்பான முதியவரைப் பார்த்து மகிழ்ந்தனர். கண்ணுக்குத் தெரியாத ஒட்டகத்திலிருந்து விழுவது போல் நடித்து நிலன் தடுமாறி விழுந்தபோது, திரேன் ஒரு பாலைவன வீரனைப் போல அவனை "மீட்க" விரைந்த போது "ஒட்டகத் துரத்தல்" இன்னும் வியத்தகு முறையில் வளர்ந்தது. சிறியவனான ஆரின் கைதட்டி, "ஓடு, ஓடு, ஒட்டகங்கள் வருகின்றன!" என்று கத்தினான். மால் பாதுகாப்புக் காவலர் கூட சிரித்துக் கொண்டே, “பிரச்சனை இல்லை சார் — சிறார்கள்தான்!” என்றார். நீண்ட, மகிழ்ச்சியான ஓட்டத்திற்குப் பிறகு, தாத்தா இறுதியாக மூன்று சிறுவர்களையும் நீரூற்றுக்கு அருகில் கூட்டிச் சென்றார். அவர்கள் அங்கு பளிங்கு விளிம்பில் அமர்ந்து, மூச்சுவாங்கி மூச்சுவாங்கி, சிரித்தனர். அவர்களுக்கு முன் தண்ணீர் நடனமாடி, வெள்ளி நூல்கள் போல விளக்குகளின் கீழ் மின்னியது. தாத்தா சிரித்தார், அவரது கண்கள் அன்பால் சூழ்ந்து இருந்தது. “பார்த்தீர்களா, என் பிள்ளைகளே, சில நேரங்களில் சிறந்த சாகசங்கள் நம் கற்பனையால் நாம் உருவாக்கும் சாகசங்கள்தான். இன்று நாம் ஒட்டகங்களை சவாரி செய்யவில்லை - ஆனால் நாம் இன்னும் ஒரு சிறந்த ஒட்டகத் துரத்தலைக் கொண்டிருந்தோம் என்று நினைக்கிறேன், இல்லையா?” என்று கேட்டார் “ஆமாம், தாத்தா!” என்று அவர்கள் ஒன்றாகக் குரல் கொடுத்தனர் [chorused]. “எப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்தது!” என்று. அவர்கள் ஐஸ்கிரீமைப் [ice cream] பகிர்ந்து கொண்டு இசை நீரூற்று நிகழ்ச்சி [musical fountain show] தொடங்குவதைப் பார்த்த போது, ஒருவேளை பாலைவனக் காற்றைப் போல குழந்தைப் பருவக் கனவுகள் ஒருபோதும் ஓடுவதை நிறுத்தாது என்று தாத்தா தனக்குள் நினைத்துக் கொண்டார். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 07 தொடரும் துளி/DROP: 2003 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 6 https://www.facebook.com/groups/978753388866632/posts/33359504587031426/?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
ஒரு வேளை.... இப்படி தான் பைத்தியமும், வைத்தியர் ஆனாரோ. 😂- ஐ.நா. சபைக்கு மாற்றாக புதிய அமைப்பை தொடங்கிய ட்ரம்ப்: ரூ.9,000 கோடி செலுத்தி நிரந்தர உறுப்பினராக அழைப்பு.
ஐ.நா. சபைக்கு மாற்றாக புதிய அமைப்பை தொடங்கிய ட்ரம்ப்: ரூ.9,000 கோடி செலுத்தி நிரந்தர உறுப்பினராக அழைப்பு. புதுடெல்லி: ஐ.நா. சபைக்கு மாற்றாக ‘‘போர்டு ஆப் பீஸ்’’ என்ற புதிய சர்வதேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி உள்ளார். இந்த புதிய அமைப்பில் ரூ.9,000 கோடி கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேரலாம் என்று அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முயற்சியால் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. போரால் பாதிக்கப்பட்ட காசா நகரை மறுசீரமைப்பு செய்யும் பணிகளுக்காக கடந்த ஆண்டு நவம்பரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஐ.நா. சபை பயனற்றது என்று அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இந்த சூழலில் ஐ.நா. சபைக்கு மாற்றாக ‘‘போர்டு ஆப் பீஸ்’’ என்ற புதிய சர்வதேச அமைப்பை அவர் தொடங்கி உள்ளார். புதிய அமைப்பின் தலைவராக அதிபர் ட்ரம்ப் பொறுப்பேற்று உள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், அதிபர் ட்ரம்பின் மருமகன் ஜெராட் குஷ்னர், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அப்போலோ குளோபல் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ரோவன், இந்திய வம்சாவளியை சேர்ந்த உலக வங்கி தலைவர் அஜய் பங்கா, அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ராபர்ட் கேப்ரியேல் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். புதிய சர்வதேச அமைப்பில் உலக நாடுகள் நிரந்தர உறுப்பினராக சேரலாம். இதற்கு தலா ரூ.9,000 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இந்த புதிய அமைப்பு காசாவின் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபடும். இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகள் ‘‘போர்டு ஆப் பீஸ்’’ அமைப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து ஐ.நா. சபையின் மூத்த அதிகாரி டேனியல் போர்டி கூறும்போது, “உலக விவகாரங்களில் தலையிட அமெரிக்கா விரும்புகிறது. இதற்காக புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இது குறுக்கு வழி’’ என்று குற்றம் சாட்டினார். https://www.hindutamil.in/news/world/president-trump-launched-new-organization-as-alternative-to-uno- சக்கர நாற்காலியூடாக இலங்கை முழுவதும் பயணத்தை ஆரம்பிக்கும் இளைஞன்
சக்கர நாற்காலியூடாக இலங்கை முழுவதும் பயணத்தை ஆரம்பிக்கும் இளைஞன். இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தை யொட்டியும், சில கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மாற்றாற்றல் கொண்ட இளைஞரான மக்கின் முகமது அலி மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியூடான இலங்கை முழுவதுமான சுற்றுப்பயணம் ஒன்றை மன்னாரில் இருந்து நாளை ஆரம்பிக்க உள்ளார். வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் தலைவரான மக்கின் முகமது அலி இன்றைய தினம் காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து,மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனை சந்தித்து தனது பயணம் குறித்து தெளிவு படுத்தினார். இதன் போது இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சக்கர நாற்காலி யூடாக இலங்கை பூராகவும் தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும்,குறிப்பாக,இலங்கை நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நாடுகள் மனிதாபினான உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும் வகையிலும் புலம் பெயர் உறவுகளும் உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும் வகையிலும் குறித்த பயணம் முன்னெடுக்கப்பட உள்ளது. மேலும் இலங்கை மக்கள் அனைவரும் அனர்த்தத்தின் போது எவ்வித வேறுபாடுகள் இன்றி ஒருவருக்கு ஒருவர் உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.இந்த நிலையில் இலங்கை நாட்டு மக்களிடையே உள்ள ஒற்றுமையையும், சமூக நல்லெண்ணத்தையும் நோக்காக கொண்டு குறித்த பயணம் ஆரம்பிக்கப்பட உள்ளது. மேலும் படித்த மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்புகள் இன்றி முடங்கியுள்ளனர்.அவர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும். என்ற கோரிக்கைகளை முன் வைத்து குறித்த பயணம் மன்னாரில் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது.இலங்கை முழுவதும் சுமார் 1500 கிலோ மீற்றருக்கும் அதிகமான கடற்கரையோரமாக குறித்த பயணம் முன்னெடுக்கப்பட உள்ளது. எனவே மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து,மாவட்ட அரசாங்க அதிபரிடம் தனது பயணத்தின் நோக்கத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1460578- செம்மணி அகழ்வுப் பணியை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு
செம்மணி அகழ்வுப் பணியை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு Jan 19, 2026 - 08:30 PM யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையில், அகழ்வுப் பணிகளைத் தொடர்வது குறித்து இன்று (19) முக்கியத் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 3.00 மணியளவில் நீதிபதி எஸ். லெனின்குமார் தலைமையில், பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள், காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணிகள், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் மயான நிர்வாகக் குழுவினர் ஆகியோர் அகழ்வுப் பணி நடைபெறும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். ஏற்கனவே அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற குழிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், உடனடியாக அகழ்வுப் பணிகளைத் தொடர முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி, நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ், சட்ட வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் நல்லூர் பிரதேச சபையின் உதவியுடன் தேங்கியுள்ள நீரை வெளியேற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீர் அகற்றப்பட்ட பின்னரே அகழ்வுப் பணிகளுக்கான திகதி நிர்ணயிக்கப்படும். மயானத்தின் உட்புறத்தில் உள்ள பாதையை நல்லூர் பிரதேச சபையினர் சீரமைத்துள்ளமை தொடர்பில் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இதனைப் பரிசீலித்த நீதிமன்றம், அகழ்வுப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை குறித்த வளாகத்தில் எவ்வித அபிவிருத்திப் பணிகளையோ அல்லது நிலத்தின் தோற்றத்தில் மாற்றங்களையோ ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியின்றி எவ்வித பணிகளையும் அங்கு மேற்கொள்ள முடியாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான ரனிதா ஞானராஜா மற்றும் நிரஞ்சன் ஆகியோர் ஊடகங்களுக்கு இந்தத் தகவல்களைத் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை மீண்டும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmklakm8f0459o29n81uv65ns- கிரீன்லாந்து விவகாரம் – அமெரிக்காவிற்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை !
கிரீன்லாந்து விவகாரம் – அமெரிக்காவிற்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை ! ஐரோப்பிய பங்காளிகள் மீது வரிகளை விதிப்பதில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைத் தடுக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், வரிகள் தொடரப்பட்டால் பதிலடி நடவடிக்கைகளைத் தயாரிக்கவும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பரந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெப்ரவரி 1 முதல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான டென்மார்க், சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து, பிரித்தானியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு வரிகளை அதிகரிப்பதாக எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்க அனுமதிக்கும் வரை இந்த வரிகள் அதிகரிக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். இதேவேளை, எதிர்வரும் வியாழக்கிழமை (22) பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் அவசர உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இது தொடர்பான தீர்மானங்களைப் பற்றி விவாதிக்க உள்ளனர். https://athavannews.com/2026/1460542- சீனாவில் 4 ஆவது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் வீழ்ச்சி
சீனா... தனது நாட்டில், அதிக முஸ்லீம்களை குடியேற்றினால்... குழந்தை பிறப்பு வீதம், சடாரென... ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும்.- அறிமுகம்
வணக்கம் கல்யாணசுந்தரம். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பெயரைக் கொண்டிருக்கின்றீர்கள். தொடருங்கள்...........................❤️.- கொழும்பில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் !
கொழும்பில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் ! 19 Jan, 2026 | 05:55 PM படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டட ஊடகவியலாளர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இதுவரை முழுமையான நீதியினை பெற்றுத் தர முடியாத நிலை தொடரும் பின்னணியில், சுதந்திர ஊடக இயக்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (19) இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் (SLPI) கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ‘இருளை போக்கக்கூடிய வழி’ (අඳුර දුරු කළ හැකි මඟ) என்ற கருப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதில் ஊடக அமைப்புகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில், படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுகூரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் பேராசிரியர் சாவித்ரி குணசேகர, மூத்த ஊடகவியலாளர் விஜயானந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும ஆகியோர் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்தனர். கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. மேலும், சுனில் ஜயசேகர, ஹனா இப்ராஹீம் மற்றும் ஆர். ராம்குமார் ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றியதுடன், ஊடக சுதந்திரத்தின் அவசியத்தையும், ஊடகவியலாளர்களுக்கு நீதியினை உறுதிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர். https://www.virakesari.lk/article/236456- இரானின் இந்த பலம்தான் அமெரிக்கா தாக்காமல் பின்வாங்க காரணமா?
அமெரிக்கா, மேற்கு, இஸ்ரேல் ஈரானை அழிக்க துதீபத்தின் நோக்கம், இவ்வள பொருளாஹார தடைகளைக்கு மத்தியில், இரானின் பொதுவான விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி நிலை மேட்ற்கு ஐரோப்பாவின் நிலையுடன் ஒப்புடைமை கொன்டு இருக்கிறது. இதை மேட்ற்கு சிந்தனை, ஆய்வு மையங்கள் சொல்கின்றன. ஏனெனில், பாரிய நெருக்கடியிலும், ஈரான் அதன் இணையான, தொழிநுட்ப வளர்ச்சியில், கொடுக்கப்படும் பணத்தை இயலுமானவரை கொடுக்கிறது. அணுத்துறையில் கூட. இரான் அதிக வளர்த்த கொண்டு இருக்கும் அணு செரிவாக்கள், அணுகுண்டு தொழிலநுட்பத்தை ஐடா கடுமெய்யானது. அமெரிக்கா, ,மேட்ற்கு, இஸ்ரேல் கூட்டங்கள் (அவர்களின் விஞ்ஞானிகளும்) சேர்ந்து போட்ட திட்டம் அவ்வப்போது அந்த தொழில்நுட்பத்தில் இருக்கும் உடற்பதி நிலையங்கள், வசதிகளையோ தகர்ப்பது, அதுக்கும் மேலே சென்று , ஈரானின் இஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்க\லாய் கொள்வதன் மூலம் ஈரானை முடக்கி விடலாம் என்று நப்பாசையில் ஈரான் மண் அள்ளி போடு உள்ளது. அத்துடன், எல்லா மேட்ற்கு இஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் இப்பொது ஈராநின் கொலை / இராணுவ இலக்காக மாறி உள்ளனர். அத்துடன் , மேட்ற்கு இஸ்ரேல் எந்த நேரத்திலும் அங்குள்ள எந்த நாட்டிலும் தாக்குதல் இஸ்ரேல் விரும்பியவாறு தாக்குதல் நடத்த கூடிய நிலையில் இருக்க வேண்டும், அந்த நாடுகள் திருப்பி தாக்குதல் நடத்த முடியாத நிலையில் இருக்க வேணும் என்பதும் அமெரிக்கா, மேட்ற்கு இஸ்ரேல் இன் கேந்திர கொள்கை. இதுவே நிலைமை.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நான் எழுதும் கருத்து சிலருக்கு சங்கடமாக இருக்கலாம்..வேணாம் எழுதாமல் போவதே மேல்.நன்றி.- விஜயின் அறிவிப்பு தமிழக அரசியலில் மாற்றத்திற்கான தொடக்கம்
'விஜய் அறிவிப்பு தமிழக அரசியலில் மாற்றத்திற்கான தொடக்கம்' - பிபிசி தமிழுக்கு கிருஷ்ணசாமி பேட்டி பட மூலாதாரம்,Krishnasamy கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் "ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கம்பளிப்பூச்சி போலப் பார்க்கின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியிருப்பது, தமிழகத்தில் நடக்கவிருக்கின்ற அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பம் என்று நான் கருதுகிறேன்.'' என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டி: கடந்த சில தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம், இப்போதும் அந்த கூட்டணியில் நீடிக்கிறதா? இந்த தேர்தலில் கூட்டணி மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறதா? கடந்த 2019 தேர்தலில் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தோம். அதன்பின் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஏழு பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பெயரிட வேண்டும், இந்த சமுதாயத்தை பட்டியல் பிரிவிலிருந்து (SC) பிற்படுத்தப்பட்டோர் (OBC) பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்படாமல் பெயர் மாற்றம் மட்டும் ஏற்கப்பட்டதால் தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை எடுத்தோம். சென்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இடம்பெற்றது. அப்போது பாஜவுடன் கூட்டணியில் இருந்தால்தான் திமுக கூட்டணியை எதிர்கொள்ள முடியுமென்று கூறினோம். அதை அதிமுக ஏற்கவில்லை. அப்போதும் நாங்கள் அதிமுகவுடன் இருந்தோம். ஆனால், அதன்பின் சில மாதங்களிலேயே பாஜவுடன் மீண்டும் சேரும் முடிவை அதிமுக தலைமை எடுத்தது.'' கடந்த தேர்தலில் எங்களுடன் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, எஸ்டிபிஐ போன்ற கட்சிகளிடம் இதைப் பற்றிச் சொன்னார்களா என்று தெரியாது. ஆனால், எங்களிடம் எந்தத் தகவலும் சொல்லவில்லை. அதனால் நாங்கள் இப்போது இந்த கூட்டணியில் இருந்து விலகியதாகவும் இல்லை. துாரமாகப் போய்விட்டதாகவும் இல்லாமல் நாங்கள் நாங்களாக இருக்கிறோம்.'' தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி மீதான அதிருப்தியால் (Anti Incumbency) மட்டுமே இரு கட்சிகளிடையே ஆட்சி மாற்றம் நடக்கிறது. மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு, கனிம வளக்கொள்ளை நிறுத்தம், வேலைவாய்ப்பு சார்ந்து கொள்கைரீதியான ஆட்சி மாற்றம் வரவேண்டுமென்று நினைக்கிறோம். அது மட்டுமின்றி, இந்தத் தேர்தலில் ஜெயித்து சட்டமன்றத்துக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கேற்ப இந்த தேர்தலில் கூட்டணி முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்ற குரல், இந்த தேர்தலில் ஓங்கி ஒலிக்கிறது. கேரளாவைப் போல இங்கேயும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரவேண்டுமென்று நீங்களும் வலியுறுத்தியிருக்கிறீர்கள். தமிழகத்தில் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள ஒரே கட்சி தவெக என்பதால் அக்கட்சியுடன் புதிய தமிழகம் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா? தமிழகத்தில் கடந்த 1967 ஆம் ஆண்டுக்குப் பின்பு, அரசியல் மாற்றம் எதுவும் நிகழவில்லை. இரு கட்சிகள்தான் மாறிமாறி ஆளுகின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. கடந்த 2006–2011 இடையிலான காலத்தில் திமுகவுக்குத் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையிலும், ஆட்சிக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சி முயன்றும் அமைச்சரவையில் பங்கேற்க முடியவில்லை. இப்போதும் இந்த கோரிக்கையை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிப்படையாகப் பேச மறுப்பது வருத்தமாக உள்ளது. கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தந்ததால் அந்த ஆட்சிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. நன்றாகத்தான் ஆட்சியும் நடந்தன, நடக்கின்றன. இங்கு மட்டும் அந்த கட்சிகள் அதை பேச மறுப்பது ஏனென்று தெரியவில்லை. கூட்டணி ஆட்சி என்பதை திமுக, அதிமுக இரு கட்சிகளும் கம்பளிப்பூச்சியைப் போலப் பார்க்கின்றன. சமூகநீதி என்று வாயில் மட்டும் பேசக்கூடாது. சமூகநீதி என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான். இந்த தேர்தலில் எந்தக் கட்சியும் தனித்து பெரும்பான்மை பெற வாய்ப்பில்லை. அந்த வகையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியிருப்பது, தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பம் என்றே கருதுகிறேன். சமீபத்திய ஆண்டுகளில் மாநில உரிமைகள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளில் நீங்கள் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக தெரிவித்த பல கருத்துகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின... இதற்கு உங்கள் கட்சியில் எதிர்ப்பு எழவில்லையா... உண்மையிலேயே மாநில உரிமைகளில் பாஜக அரசு சரியாக நடந்துகொள்கிறதா? மாநில உரிமைகள் சார்ந்த பிரச்னைகளில் மத்திய பாஜக அரசு முழுமையாக நியாயமாக நடந்துகொள்கிறது என்றோ, அனைத்திலும் அநியாயமாக நடந்துகொள்கிறார்கள் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால், அனைத்து விஷயங்களிலும் திமுக அரசியல் மட்டுமே செய்கிறது என்பதுதான் என் குற்றச்சாட்டு. கடந்த 2021 கோவிட் காலத்துக்குப் பின்பு, நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்க்க முயன்றபோது மத்திய அரசை தமிழகத்தில் கண்டித்த ஒரே கட்சி நாங்கள்தான். நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை துவங்கும் முன்பே தமிழகத்தில் 8 தொகுதி போய்விடுமென்று திமுக பீதியைக் கிளப்பியது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் வந்தால் மொத்தமாக வாக்காளர் உரிமை போகுமென்று திமுக சொன்னதும் அரசியல்தான். ஆனால், நாங்கள் அதை ஆதரித்தோம். இப்போது திமுகதான் எஸ்ஐஆரில் அதிகமாக பங்களித்துக்கொண்டிருக்கிறது. இந்தியா பல மாநிலங்களைக் கொண்ட ஒரு நாடு. இங்கே மத்திய, மாநில அரசுகள் இருந்தாலும் ஒரே நாடு என்ற வகையில் சில முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். அதில் மாநில சுயாட்சி என்ற பெயரில் தமிழகத்தை தனி நாடு போன்ற உணர்வைக் காட்டி சுயமாக கொள்ளையடிப்பதும், அரசியல் செய்வதும்தான் திமுகவின் முயற்சியாக உள்ளது. அதனால்தான் நாங்கள் சில விஷயங்களில் திமுக நிலைப்பாட்டை ஆதரிப்பதில்லை. பட மூலாதாரம்,Krishnasamy கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அனுமதி, கோவை விமான நிலைய விரிவாக்கம் போன்ற வளர்ச்சித் திட்டங்கள், கல்வி உள்ளிட்ட நிதி ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் தமிழகத்தை மத்திய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாக திமுக குற்றம்சாட்டி வருகிறதே? நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியின் 40 எம்.பி.க்கள் என்ன செய்கிறார்கள்... நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என்றார்கள். அதைச் செய்ய முடிந்ததா? உங்கள் கடமையை சரியாகச் செய்யாமல் மத்திய அரசு மீது குற்றம்சாட்டுவதில் அர்த்தமே இல்லை. மத்திய அரசு ஒதுக்குகின்ற நிதி அனைத்தையும் இந்த அரசு சரியாகப் பயன்படுத்துவதும் இல்லை. பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர ஆந்திரா, தெலங்கானா அரசுகள் தனி பட்ஜெட் போடுகின்றன. இங்கே ஏன் அதைச் செய்வதில்லை... பட்டியலின மக்கள் வசிக்கும் கிராமங்களில் குடிநீர், சாலை, மயான வசதிகள் இல்லை. கிடைக்கின்ற நிதியைச் சரியாகப் பயன்படுத்தி எல்லா திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி, அடித்தட்டு மக்களுக்கும் உரியவை கிடைக்கச் செய்துவிட்டு, நிதி போதவில்லை என்று கேட்டால் அதை ஆதரித்து நாங்களும் குரல் கொடுக்கத் தயாராகவுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் எந்தவொரு நல்ல திட்டத்தையுமே திமுக அரசு செயல்படுத்தவில்லை என்கிறீர்களா? நல்ல திட்டம் என்பது வேறு. கவர்ச்சித் திட்டம், இலவசத்திட்டம் என்பது வேறு. திமுக அரசு கடந்த தேர்தலில் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவே இல்லை. நிலைத்த, நீடித்த வளர்ச்சிக்கான (Sustainable Development) எந்த திட்டத்தையும் இந்த அரசு செய்யவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. ஆனால் திமுக கூட்டணிதான் தற்போது பலமாக இருக்கிறது என்ற ஒரு தோற்றம் இருக்கிறதே... அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? நான் அப்படி நினைக்கவில்லை. தவறு செய்பவர் ஒருவரின் தலைமையில் 10, 15 நல்லவர்கள் சேர்ந்தாலும், தலைமையில் இருப்பவர் தவறானவராக இருந்தால் மற்றவர்களையும் மக்கள் அப்படித்தான் பார்ப்பார்கள். முதல் எண் பூஜ்யம் என்றால் அதன்பின் வரும் எல்லாமே பூஜ்யம்தான். ஆட்சியின் மீதான அதிருப்தி என்பதைத் தாண்டி திமுக அரசு செய்யத் தவறிய பல விஷயங்களால் மக்களுக்கு கோபம் இருக்கிறது. தமிழக அரசியலில் விஜய் வருகை, அவரது கட்சியின் கொள்கை, அவருக்கு கிடைக்கும் வரவேற்பு ஆகியவற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்... விஜய் கட்சியின் வளர்ச்சி, எந்தக் கட்சியின் வாக்குவங்கிக்கு ஆபத்தாக மாறுமென்று நினைக்கிறீர்கள்? தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் உண்மையான கொள்கை என்று எதுவும் கிடையாது. திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ் கட்சிகள் பேசும் கொள்கை வேறு, நடந்து கொள்ளும் விதம் வேறு. விஜய் தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வர வேண்டுமென்று நினைக்கிறார். அவருக்கு எவ்வளவு வாக்கு கிடைக்குமென்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. ஆனால், அவர் அபரிமிதமான மக்கள் செல்வாக்குடன் இருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. தமிழகத்தில் தனி நபராக, ஒரு புதிய கட்சியைத் துவக்கியிருக்கிறார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வீசப்பட்டாலும் அவை எல்லாமே அவருக்கு சாதகமாக மாறுவதைத்தான் நான் பார்க்கிறேன். அதனால் அவர் மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியைப் பிரிப்பார் என்று மட்டும் பார்க்க முடியாது. மாறாக அவரே ஒரு பெரும் அரசியல் சக்தியாக வளர்கிறார் என்பதாகத்தான் தெரிகிறது. பட மூலாதாரம்,TVK விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற சில கட்சிகள் எம்.பி., எம்எல்ஏக்கள் என்று வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சிக் கட்டமைப்பும் வாக்குவங்கியும் ஒரு கட்டத்தைத் தாண்டாமல் இருப்பது ஏன்? கட்சி துவங்கி 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் இல்லை என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைதான். ஆனால், ஒரு கட்சியின் செயல்பாட்டையும், மதிப்பையும், மக்களிடமுள்ள மரியாதையையும் அப்படிப் பார்க்கக் கூடாது. சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை மட்டும் வைத்து ஒரு கட்சியின் வளர்ச்சியை மதிப்பிடக்கூடாது. கடந்த 1995 ஆம் ஆண்டில் கொடியங்குளம் கொடுமையை உலகறியச் செய்ததில் துவங்கி எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்து, எத்தனையோ சாதனைகளை புதிய தமிழகம் செய்திருக்கிறது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள 5 லட்சம் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுக்கு வெறும் 65 ரூபாய் சம்பளத்திலிருந்து 450 ரூபாய் சம்பளத்தைக் கொண்டு வந்தது புதிய தமிழகம் கட்சியின் செயல்பாட்டால் ஏற்பட்ட விளைவுதான். தமிழகத்திலுள்ள ஒரு லட்சம் கிராமங்களில் 40 ஆயிரம் கிராமங்களில் டீக்கடைகளில் பட்டியலின மக்கள் சமமாக நடத்தப்படாமல் இருந்த இரட்டைக்குவளை முறையை ஒழித்ததும் புதிய தமிழகம்தான். கண்டதேவி உட்பட கிராமக்கோவில்களில் பட்டியலின மக்கள் நுழைய முடியாத நிலையை மாற்றியதும், கிராமங்களில் பட்டியலின மக்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை உருவாக்கியதும் நாங்கள்தான். அரசியலில் எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் தவறு என்றால் தவறு என்று சுட்டிக்காட்டுவதால்தான் நாங்கள் இந்த நிலையில் இருக்கிறோம். ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்து, ஐந்தாண்டுகளுக்கு புகழ்வதாக இருந்திருந்தால் நாங்களும் சில சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருப்போம். அது தேவையில்லை. ஆனால் வரும் தேர்தலில் வெற்றி பெற்று புதிய தமிழகம் சட்டமன்றத்தில் இடம்பெறும். பட மூலாதாரம்,Krishnasamy தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் ஆதரிக்காத அளவுக்கு, பாஜகவை நீங்கள் அதிதீவிரமாக ஆதரித்தும் உங்களுக்கான அங்கீகாரத்தை அவர்கள் தரவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா? சமீபத்தில் கூட மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியதும், உறுதி என்பதை அகற்றியதையும் நான் கண்டித்தேன். அதனால் மத்திய அரசை எங்கே எப்போது கண்டிக்க வேண்டுமோ அந்தளவுக்கு நான் கண்டித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பாஜவை கண்மூடித்தனமாக என்றைக்குமே நான் ஆதரித்ததில்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எனது நிலைப்பாட்டை நான் தெளிவாகக் கூறினேன். ஏனெனில், திருப்பரங்குன்றம், பாஜகவுக்கோ, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கோ எழுதி வைக்கப்பட்டதில்லை. அந்த விவகாரத்தில் திமுகதான் உண்மையை உணராமல் கண்மூடித்தனமாக எதிர்த்தது. இறுதியில் நாங்கள் சொன்னதையே நீதிமன்றமும் சொன்னது. தமிழ் கலாசாரம், பாரம்பரியத்தின் அடிப்படையில்தான் இந்த விஷயத்தை நாங்கள் அணுகினோம். அதற்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்திய விடுதலைப் போராட்டத்தை காங்கிரஸுடனும், தமிழ் மொழிக்கான போராட்டத்தை திமுகவுடனும் பொருத்திப் பார்ப்பது எவ்வளவு தவறோ, அதேபோல வழிபாட்டு உரிமைகளை குறிப்பிட்ட கட்சியுடன் பொருத்திப் பார்ப்பதும் தவறு. தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட பின்பு அதுதொடர்பான உங்களின் முயற்சி முடிவடைந்துவிட்டதா? மீண்டும் மீண்டும் மத்திய அரசை அணுகுவதில் பயனில்லை. அதனால் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் புதிய தமிழகம் பங்கேற்கும் நிலை வரும்போது, 'தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் பட்டியலினப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டு, ஓபிசி பட்டியலில் இணைக்கப்படுகிறது' என்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி அதைச் செயல்படுத்த வைப்போம். அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.'' மற்ற மாநிலங்களில் தலித் முதலமைச்சர் அல்லது தலித் துணை முதலமைச்சர் என்கிற கனவு சாத்தியப்படும்போது, தமிழகத்தில் மட்டும் அது கானல் நீராக இருப்பது ஏன்? தமிழக அரசியலில் பொய் முகங்கள்தான் அதிகம். திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிரான ஒரு கட்டமைப்பை உருவாக்கியது வெளிப்படை. வெளியே தெரியாத விஷயம், தமிழகம் முழுவதும் கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு எதிரான ஒரு மனநிலையைத்தான் அவை உருவாக்கி வைத்திருக்கின்றன. அந்தக் கட்சியில் இருக்கும் பட்டியலினத்தவரும் அப்படியே நடக்கின்றனர். உத்தரப்பிரதேசத்திலும், கர்நாடகத்திலும் இவர்கள் சொல்லும் சமத்துவம் பேசப்படுவதில்லை. ஆனால், அங்கே பட்டியலினத்தைச் சேர்ந்தவரால் முதலமைச்சர், துணை முதலமைச்சராக அல்லது முதலமைச்சர் வேட்பாளராக முடிகிறது. மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக முடிகிறது. உத்தர பிரதேசத்தில் மாயாவதி முதலமைச்சராக இருந்துள்ளார். இத்தனை ஆண்டுகளில் பட்டியலின முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் என்ற நிலை இங்கே உருவாகியிருக்க வேண்டும். ஆனால், திராவிடக் கட்சியினர் சமத்துவம் பேசுகின்றனரே தவிர, அதைச் செயல்படுத்த முன்வருவதில்லை. திமுக, அதிமுக இரு கட்சிகளிலுமே மத்திய, மாநில அமைச்சர்களாக முக்கியப் பொறுப்புகளில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களே... அதனால் பட்டியலின மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது... அவர்கள் அந்த கட்சிகளின் கொள்கை சார்ந்துதான் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பேசுகிறார்கள். மாஞ்சோலை விவகாரம், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்னை, வேங்கை வயல் என்று பட்டியலின மக்களின் பிரச்னைகளைப் பேசுவதில்லை. முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் நிலைக்கு இந்த சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் வரும்போதுதான், உண்மையாகவே இந்த சமுதாயத்தால் முன்னேற முடியும். அதற்கான வாய்ப்பு, வரும் தேர்தலில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். அது எப்படி யாரால் சாத்தியமாகும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg1kx931k2o- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
துணைவியாரின் மறைவினால் துயருற்றிருக்கும் மோகன், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏🙏- இந்தியா - நியூசிலாந்து ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்
முன்னணி வீரர்கள் இருந்தும் இந்தியா சொந்த மண்ணில் தொடரை இழந்ததற்குக் காரணம் இதுவா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,பிரதீப் கிருஷ்ணா பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்திய மண்ணில் முதன் முறையாக ஒருநாள் தொடரை வென்றிருக்கிறது நியூசிலாந்து. வெற்றியோடு தொடரைத் தொடங்கியிருந்தாலும், அடுத்தடுத்து தோல்விகளால் இந்திய அணி பின்னடைவை சந்தித்தது. ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தவிர்த்து இந்திய அணியின் அனைத்து முன்னணி வீரர்களுமே இந்தத் தொடரில் இடம்பிடித்திருந்தார்கள். நியூசிலாந்து அணியிலோ வில்லியம்சன், சான்ட்னர், ஹென்றி, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட பல்வேறு முன்னணி வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. அப்படியிருந்தும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரில் வீழ்த்தியிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் என்ன? மிடில் ஓவர்களில் இந்தியா vs நியூசிலாந்து மூன்று போட்டிகளில் ஒரு அரைசதம், 2 சதங்கள் என இந்தத் தொடரின் நாயகனாக விளங்கினார் டேரில் மிட்செல். 176 என்ற சராசரியில் 352 ரன்கள் எடுத்தார் அவர். அதையும் 110.34 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அவர் எடுத்தார். ராஜ்கோட், இந்தூர் ஆகிய இரு இடங்களிலும் சதமடித்து இந்தியாவுக்கும் வெற்றிக்கும் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தினார் மிட்செல். நான்காவது வீரராக ஆடிய மிட்செல், மிடில் ஓவர்களாக கருதப்படும் 11 முதல் 40வது ஓவர் வரை நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியதில் முக்கிய பங்கு வகித்தார். அவருடன் மற்ற வீரர்களும் ஒத்துழைப்பு தர மிடில் ஓவர்களில் இந்தியாவைக் காட்டிலும் நியூசிலாந்து அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது கரும்பு தின்றால் ரத்த சர்க்கரை உயருமா? - 4 சந்தேகங்களும் விளக்கமும் இரானின் இந்த பலம்தான் அமெரிக்கா தாக்காமல் பின்வாங்க காரணமா? சாபஹார்: அமெரிக்காவின் அழுத்தத்தால் இரானிடமிருந்து விலகுகிறதா இந்தியா? 'கடந்த 8 ஆண்டுகளில் எனக்கு பாலிவுட் வாய்ப்பு நின்றுவிட்டது' - ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி குறித்து பாலிவுட் கலைஞர்கள் கருத்து End of அதிகம் படிக்கப்பட்டது "மிடில் ஓவர் பேட்டிங் மற்றும் மிடில் ஓவர் பௌலிங் இரண்டிலும் சொதப்பியதுதான் இந்தியா இந்தத் தொடரை தோற்றதற்கான காரணம்" என்கிறார் கிரிக்கெட் வல்லுநரும், வர்ணனையாளருமான நானி. இரண்டாவது போட்டியின் மிடில் ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. இந்த 30 ஓவர்களில் அவர்களுடைய சராசரி ரன்ரேட் 6.43. ஆனால், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இந்த கட்டத்தில் எடுத்த ஸ்கோர் 142 மட்டுமே. 4.73 என்ற ரன்ரேட்டில் ஆடியிருந்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதுவே இந்தூரில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் மிடில் ஓவர்களில் 6.37 என்ற ரன்ரேட்டில் 191 ரன்களை எடுத்தது நியூசிலாந்து. இந்த முறை அவர்கள் இழந்தது ஒரு விக்கெட் மட்டுமே. மிட்செலோடு சேர்ந்து கிளென் ஃபிலிப்ஸும் சதம் அடித்தார். ஆனால், சேஸ் செய்த இந்திய அணி மிடில் ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களே எடுத்தது. ரன்ரேட் 5.47. இந்த வித்தியாசம் இந்தியா மிடில் ஓவர் பேட்டிங் மற்றும் மிடில் ஓவர் பௌலிங் இரண்டிலுமே பின்தங்கியதைக் காட்டுகிறது. படக்குறிப்பு,இந்தத் தொடரில் மிடில் ஓவர்களில் முன்னிலை பெற்ற அணிகளே அந்தப் போட்டியையும் வென்றிருக்கின்றன. வதோதராவில் இந்தியாவும், மற்ற இரு போட்டிகளில் நியூசிலாந்தும் மிடில் ஓவர்களில் முந்தி, போட்டிகளிலும் வெற்றி பெற்றன. மிடில் ஓவர்களில் இந்திய பந்துவீச்சு பின்தங்கியது ஏன்? கடைசி இரண்டு போட்டிகளின் மிடில் ஓவர்களில், மொத்தம் 60 ஓவர்களில் இந்தியா வீழ்த்தியது 3 விக்கெட்டுகள் தான். இது இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. இரண்டாவது ஒருநாள் போட்டி முடிந்ததும் பேசிய கேப்டன் சும்பன் கில், "எங்களால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை. சர்க்கிளுக்கு உள்ளே ஐந்து வீரர்கள் இருக்கும்போது விக்கெட் வீழ்த்த முடியவில்லையெனில் அதன்பிறகு அது மிகவும் கடினம். புதிய பந்தில் நன்றாகத்தான் வீசினோம். நாங்கள் இன்னும் கொஞ்சம் தைரியமாகப் பந்துவீசியிருக்கலாம்" என்று தெரிவித்தார். "விக்கெட் எடுக்கவேண்டிய முக்கியமான இந்தக் கட்டத்தில் இந்திய அணி அதைச் செய்யத் தவறிவிட்டது" என்று சொல்லும் நானி, கேப்டன் சுப்மன் கில் கூட இரு தவறுகளை செய்ததாக கூறுகிறார். "குல்தீப் யாதவ் பந்தை நன்கு தூக்கிப் போடுபவர், விக்கெட் எடுப்பவர். ஆனால், மிட்செல் அடித்துவிடுவாரோ என்ற பயத்தில் அவர் மிகவும் 'flat'-ஆகவே பந்துவீசிக் கொண்டிருந்தார். அப்படியிருக்கும்போது அவருடைய விக்கெட் எடுக்கும் தன்மையே போய்விடும். ஒரு பௌலர் அப்படி சற்று யோசிக்கும்போது, கேப்டனோ, வேறு யாராவதோ சென்று அவருக்கு நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும். அதை யாரும் செய்யவே இல்லை. அவர் ராஜ்கோட் போட்டியில் 82 ரன்கள் கொடுக்கக் காரணமே அதுதான்.'' என்கிறார் நானி. இந்தியாவின் முக்கிய 'விக்கெட் டேக்கிங் பௌலர்' என்று கருதப்படுபவர்களுள் ஒருவரான குல்தீப், இந்தத் தொடரில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். நியூசிலாந்து பேட்டர்கள் அவருக்கு எதிராக யோசிக்காமல் அதிரடியைக் கையில் எடுத்தார்கள். அதனால் அவர்களது ரன்ரேட் மிடில் ஓவர்களில் மிகவும் சீராகச் சென்றது. ஜடேஜா மீது விமர்சனம் அதேபோல், ஜடேஜாவைப் பயன்படுத்திய விதம் குறித்தும் நானி தன் விமர்சனத்தை முன்வைத்தார். "ஒரு ஸ்பின்னரை எப்போது பந்துவீச்சுக்குக் கொண்டு வருகிறார்கள் என்பது முக்கியம். மூன்றாவது போட்டியில் ஜடேஜாவை 30-வது ஓவரில்தான் கில் பயன்படுத்தவே தொடங்கினார். என்னதான், பௌலர் ஃபார்மில் இல்லாவிட்டாலும், ஒரு முன்னணி ஸ்பின்னர் இருக்கும்போது அவர் மீது நம்பிக்கை வைக்கவே வேண்டும்" என்று சுட்டிக்காட்டினார். அதேசமயம், ஜடேஜாவின் செயல்பாடு பின்னடைவை சந்தித்திருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார். ஒருநாள் போட்டிகளில் ஜடேஜாவின் செயல்பாடு சமீபமாக கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்தத் தொடரில் 23 ஓவர்கள் வீசிய அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. பந்துவீச்சில் அவரது எகானமியும் 6.13 என அதிகமாகவே இருக்கிறது. கடைசி 6 ஒருநாள் போட்டிகளில் அவர் ஒரேயொரு விக்கெட் தான் வீழ்த்தியிருக்கிறார். கிரிக்பஸ் வலைதளத்தில் உரையாடிய ஜாஹிர் கான் மற்றும் அஜிங்க்யா ரஹானே, ஜடேஜா - அக்ஷர் பட்டேல் இடையிலான போட்டி பற்றிப் பேசியிருந்தார்கள். அக்ஷர் பட்டேல் நிச்சயம் ஜடேஜாவுக்கு தொடர் நெருக்கடி கொடுப்பார் என்று கூறிய ஜாஹிர் கான், "இந்த ஃபார்மட் மாறிவருகிறது. மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தும் பௌலராக இருந்தால் மட்டும் போதாது, நீங்கள் விக்கெட் எடுக்கத் தொடங்கவேண்டும். அதை ஜடேஜா புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறினார். ரஹானேவோ, "ஒருநாள் போட்டிகளுக்கு நிறைய வேரியேஷன்கள் தேவை. ஜடேஜா சிறந்த வீரர் என்றாலும் அவர் ஒரே மாதிரியான வேகத்தில் பந்துவீசக் கூடியவர். அதை பேட்டர்கள் கணித்துவிடுவார்கள். அதேசமயம் அக்ஷர் படேலிடம் நிறைய வேரியேஷன்கள் இருக்கின்றன" என்று கூறினார். வழக்கமாக ரன்களைக் கட்டுப்படுத்தும் ஜடேஜா ஒருபக்கம் அதிக ரன்களைக் கொடுத்ததுமே, குல்தீப் மீதும் அது நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். இந்த இடத்தில் தான் இந்திய அணி வருண் சக்கரவர்த்தி போன்ற ஒரு விக்கெட் எடுக்கக்கூடிய பௌலரைத் தவறவிட்டதாகச் சொல்கிறார் நானி. சாம்பியன்ஸ் டிராபியில் நன்கு செயல்பட்ட அவரை, இப்போது ஒதுக்கி வைத்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், வருண் இருந்தால் இந்த மிடில் ஆர்டர் விக்கெட் பிரச்னை நிச்சயம் தீர்ந்துவிடும் என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தத் தொடரில் இந்திய ஸ்பின்னர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டார் டேரில் மிட்செல் மிடில் ஓவர் & மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்னை நியூசிலாந்து அணி மிடில் ஓவர்களில் நன்றாக ரன் சேர்க்க வில் யங், கிளென் ஃபிலிப்ஸ் போன்றவர்கள் மிட்செலுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததும் ஒரு காரணம். இந்த ஒத்துழைப்பு விராட் கோலிக்கோ, இரண்டாவது போட்டியில் கேஎல் ராகுலுக்கோ கிடைக்கவில்லை. இந்தத் தொடரில், இந்திய மிடில் ஆர்டர் (நான்காவது முதல் ஏழாவது வரிசை வரை களமிறங்கும்) பேட்டர்களின் சராசரி 34.7. இதுவே நியூசிலாந்தின் சராசரி 80.86. அதில் பெரும்பகுதி ரன்களை எடுத்த மிட்செலின் பங்களிப்பை நீக்கினாலும் கூட அந்த சராசரி 42.8 ஆக இருக்கும். இந்த வித்தியாசத்துக்குக் காரணம் இந்தியா இங்கு நிறைய விக்கெட்டுகளை இழந்தது. "இந்திய பேட்டர்களுக்கு ஸ்பின் ஆட வருவதில்லை. அதுதான் இதற்கான மிகப் பெரிய பிரச்னை" என்று இதற்கான காரணத்தைக் கூறுகிறார் நானி. "இது கொஞ்சம் கடுமையாகக் கூடத் தெரியலாம். ஆனால், அதுவே உண்மை. இந்திய பேட்டர்கள் ஸ்பின்னுக்கு எதிராக முன் வந்து விளையாடவே அஞ்சுகிறார்கள். காலை நகர்த்தவே அவர்கள் மறந்துவிட்டார்கள். முதல் போட்டியின் ஒருகட்டத்தில் ஷ்ரேயாஸ், ஆதித்யா அஷோக் ஓவரில் சிறப்பாக ஆடினார். அதன்பிறகு இந்திய அணி ஸ்பின்னை சரியாகவே கையாளவில்லை" என்றும் அவர் கூறினார். கடைசி 2 போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயராலும் அப்படியான ஆட்டத்தைக் கொடுக்க முடியவில்லை. அவர் வேகப்பந்துவீச்சாளர்களிடம் விரைவாக வீழ்ந்துவிட்டார். அடுத்து வந்த நித்திஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரலும் சுழலை சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. இப்படி ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்ததால், கோலி, ராகுல் ஆகியோரும் ரன் சேர்ப்பதை விட விக்கெட் வீழ்ச்சியைத் தடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியதாக இருந்தது. அதனால், ரன் ரேட் வெகுவாகக் குறைந்தது. இந்திய பேட்டர்களின் பயத்தால், லெனக்ஸ் போன்ற ஒரு புதிய வீரர் கூட ஆதிக்கம் செலுத்துவதுபோல் தெரிந்ததாகக் கூறினார் நானி. "நாளை சான்ட்னர், சோதி போன்றவர்கள் வந்துவிட்டால் இந்த வீரர்கள் பிளேயிங் லெவனிலேயெ இருக்கமாட்டார்கள். ராஜ்கோட் போட்டியில் பந்துவீசியபோது பிரேஸ்வெல் தன் முதல் 8 ஓவர்களில் 18 ரன்கள் தான் கொடுத்திருந்தார். அவருக்கு எதிராக இந்திய பேட்டர்கள் கடைபிடித்தது சரியான அணுகுமுறையே அல்ல." என்றும் அவர் கூறினார். மறுபுறம் நியூசிலாந்து அணியோ இந்தியா போல் அல்லாமல், ஸ்பின்னர்களை தைரியமாகக் கையாண்டதுதான் அவர்கள் மிடில் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தக் காரணமாக அமைந்தது. குறிப்பாக குல்தீப் யாதவுக்கு எதிராக அதிரடியாக ஆடினார்கள். குல்தீப் இந்தத் தொடரில் வீசிய முதல் ஓவரிலேயே ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார் கான்வே. டேரில் மிட்செல் பல தருணங்களில் இறங்கி வந்து பவுண்டரிகள் அடித்தார். குல்தீப் ஒரு ஆபத்தான பௌலராகக் கருதப்பட்டாலும், நியூசிலாந்து பேட்டர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்கவில்லை. குல்தீப்புக்கு எதிராக அப்படி ஆடியது பற்றி இரண்டாவது போட்டிக்குப் பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் பிரேஸ்வெல், "எங்கள் பேட்டர்கள் சூழ்நிலையை உணர்ந்து நன்றாக ஆடினார்கள். அதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்றார். அதேசமயம், மிடில் ஆர்டர் பிரச்னை என்பது இன்றோ நேற்றோ தோன்றிய பிரச்னை அல்ல என்றும், இந்தியாவுக்குக் காலங்காலமாகத் தொடரும் ஒரு பிரச்னை என்று குறிப்பிட்டார் நானி. "இந்தியாவுக்கு இந்த மிடில் ஆர்டர் பிரச்னை எப்போதுமோ இருந்து வந்திருக்கிறது. என்ன பெரும்பாலும் யாராவது ஒருவர் காப்பாற்றிவிடுவார். அவ்வப்போது மொத்தமாக வெளிப்பட்டுவிடும். 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் போல." என்றார் நானி. தென்னாப்ரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை இந்தியா தோற்ற போதும் கூட சுழலுக்கு எதிரான இந்திய அணியின் பேட்டிங் பிரச்னை பெருமளவு விவாதிக்கப்பட்டது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் தவிர்த்து, மற்ற போட்டிகளில் இந்திய மிடில் ஆர்டர் நியூசிலாந்தின் ஸ்பின்னர்களை தைரியமாக எதிர்கொள்ளவில்லை என்கிறார் நானி ஆல்ரவுண்டர்கள் அதிகமாக இருப்பது தான் பிரச்னையா? இந்தியாவின் இந்தத் பேட்டிங் தடுமாற்றத்துக்கு அதிக ஆல்ரவுண்டர்களை அணியில் சேர்த்திருப்பது ஒரு காரணம் என்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. நித்திஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் போன்றவர்களை அதிகமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக 'ஸ்பெஷலிஸ்ட்' பேட்டர்களைப் பயன்படுத்தலாமே என்றும் பலர் கேள்வியெழுப்புகின்றனர். இந்தியாவின் தடுமாற்றத்துக்கு இது காரணமா என்று கேட்டால், இல்லை என்று மறுக்கிறார் நானி. "இந்தியாவின் 'டெயில்' அதாவது பின்வரிசை பேட்டிங் மிகவும் பெரியது. பும்ரா, சிராஜ், குல்தீப், வருண், அர்ஷ்தீப் ஆகியோரில் மூவர் நிச்சயம் அணியில் இடம்பிடிப்பார்கள் எனும்போது ஆல்ரவுண்டர்கள் தேவை. ஜடேஜாவின் இடத்தில் அக்ஷரும், நித்திஷ் இடத்தில் ஹர்திக்கும் வந்துவிட்டால் பிரச்னைகள் சரியாகிவிடும்" என்று சொல்கிறார் அவர். 2027 உலகக் கோப்பை நடக்கும் தென்னாப்ரிக்க ஆடுகளங்களில் நித்திஷ் ரெட்டியாலும் நல்ல தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று அவர் சொல்கிறார். இந்த பேட்டிங் பிரச்னைக்குக் காரணம் என்ன? ஒரு நிலைத்தன்மை இல்லாதது தான் இதற்கெல்லாம் காரணம் என்கிறார் நானி. இதுபற்றிப் பேசிய அவர், "வீரர்கள் யாருக்கும் தங்கள் இடம், ரோல் பற்றிய தெளிவு இல்லை. சில வீரர்களுக்கு அடுத்த போட்டியில் ஆட இடம் கிடைக்குமா என்ற பயம் ஏற்பட்டுவிடுகிறது. அதனால் ஒரு அரைசதம் அடித்து இடத்தை உறுதிப்படுத்திக் கொள்வோம் என்று நினைக்கிறார்கள். ஸ்பின்னர்களுக்கு எதிராக தைரியமாக ரிஸ்க் எடுத்து ஆடவேண்டிய சூழ்நிலையில் அவர்கள் அப்படிச் செய்யாததன் காரணம் இந்த நிலையற்ற தன்மைதான். தொடர்ச்சியாக செய்துகொண்டே இருக்கும் மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன" என்றார். அணியில் செய்யும் மாற்றங்கள், அணியின் வரிசையில் செய்யும் மாற்றங்கள் அனைத்துமே வீரர்களைப் பாதிக்கின்றன என்கிறார் அவர். இந்த விஷயத்திலும் கூட இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்தத் தொடரில் நியூசிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரில் ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. முதலிரு போட்டிகளில் ஏழாவது வீரராகக் களமிறங்கிய பிரேஸ்வெல், கடைசிப் போட்டியில் ஆறாவது வீரராக பேட்டிங் செய்தார். மற்றபடி டாப் 7 இடங்களில் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை. ஆனால், இந்திய அணியில் அப்படி இருக்கவில்லை. டாப் 4 ஒரே மாதிரி இருந்தாலும், 5 முதல் 7 வரை பல மாற்றங்கள் நடந்தன. இது இந்தத் தொடரில் இந்தியாவின் 5 முதல் 7 வரையிலான பேட்டிங் வரிசை: முதல் ஒருநாள் போட்டி: ஜடேஜா, ராகுல், ஹர்ஷித் ராணா 2வது ஒருநாள் போட்டி: ராகுல், ஜடேஜா, நித்திஷ் ரெட்டி 3வது ஒருநாள் போட்டி: ராகுல், நித்திஷ் ரெட்டி, ஜடேஜா ஒருநாள் மற்றும் டெஸ்ட் போன்ற போட்டிகளில் வீரர்களுக்கு ஒரு நிலையான இடமும், தெளிவான ரோலும் இருக்கவேண்டும் என்கிறார் நானி. இந்த இந்திய அணியில் ஒருசில வீரர்களுக்கு அது இல்லாதது பெரிய பிரச்னையாக இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார். இந்த மிடில் ஓவர் சுழல் பிரச்னைகள் இருந்தாலும், 2027 உலகக் கோப்பை தென்னாப்ரிக்காவில் நடப்பது ஒரு வகையில் நம்பிக்கையான விஷயம் என்று சொல்கிறார் நானி. இருந்தாலும், அதற்காக ஒரு 20 வீரர்களை மட்டும் தேர்வு செய்து, அவர்களுக்குப் போதுமான வாய்ப்புகள் கொடுத்து, அதிலிருந்து உலகக் கோப்பை அணியைத் தேர்வு செய்யவேண்டும் என்கிறார். அதேசமயம், அந்த வீரர்களுக்கும் நிலையான இடமும், தெளிவான ரோலும் கொடுக்கப்படவேண்டும் என்று கூறுகிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yvll0nn3wo- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பிந்தி பதில் போடுகிறேன் - மன்னிக்கவும். ஒம் அறவே இல்லாதோருக்கு என்பதே திட்டம். pilot ஆக இதை இரெண்டையும் செய்கிறோம், தேவை முன்னுரிமையும் இருப்பதால். இனி வரும் எல்லாமும் -அறவே இல்லாதோருக்கே.- "கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை
"கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை 19 Jan, 2026 | 05:31 PM யாழப்பாணத்தில் "கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பிரதேச சபையில் வைத்து பொலிஸாரால் இன்றைய தினம் திங்கட்கிழமை (19) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால், கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் "கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதேச சபையின் அனுமதியின்றி, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில், தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் "கந்தரோடை விகாரை" என நாட்டப்பட்டிருந்த திசை காட்டும் பெயர் பலகை கடந்த 08 ஆம் திகதி பிரதேச சபையினரால் அகற்றப்பட்டது. அதேவேளை, குறித்த பகுதியில் காணப்படும் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும். அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலையே பொலிஸார் தவிசாளரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். https://www.virakesari.lk/article/236454- இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்த மாவட்ட ரீதியில் கருத்துகளைப் பெறும் விசேட நிகழ்வு
களுத்துறையில் இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்த மாவட்ட ரீதியில் கருத்துகளைப் பெறும் விசேட நிகழ்வு 19 Jan, 2026 | 05:36 PM இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ரீதியில் இயலாமையுடைய நபர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் விசேட நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி களுத்துறையில் இடம்பெறவிருப்பதாக இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த.த சில்வா தெரிவித்தார். பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் "இயலாமையுடைய நபர்களுக்கான உணர்திறன் மிக்க பாராளுமன்றம்” என்ற இலட்சியத்திற்கு இணங்க, நாடு முழுவதும் உள்ள இயலாமையுடைய நபர்களிடமிருந்து நேரடி கருத்துக்களைப் பெறுவதற்கான தொடர் நிகழ்ச்சிகளின் இரண்டாம் கட்டமாக இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த பாராளுமன்ற ஒன்றியத்தனால் எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் குறித்த ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.சில்வா தலைமையில் கடந்த 9ஆம் திகதி கூடியபோதே இது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், இந்தத் தொடரின் முதல் கட்டம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்கள் முறையே பெப்ரவரி 27ஆம் திகதி மட்டக்களப்பிலும், மார்ச் 27ஆம் திகதி பொலன்னறுவையிலும் நடைபெறும். இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்பாட்டின் ஓர் அம்சமாக அமைச்சுக்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரில் மற்றொரு நிகழ்ச்சி சுகாதார அமைச்சிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் அஜித்.பி பெரேரா, (பேராசிரியர்) எல்.எம்.அபேவிக்ரம, சந்திம ஹெட்டிஆரச்சி, பத்மசிறி பண்டார, (வைத்தியர்) இளையதம்பி சிறிநாத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/236451 - யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
Important Information
By using this site, you agree to our Terms of Use.