stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
மலையக மக்களின் காணி உரிமை: மலையகத்திலா அல்லது வடக்கு – கிழக்கிலா? - வீரகத்தி தனபாலசிங்கம்
இரெண்டு இடத்திலும் இல்லை. இதை மலையகத்தில் உறுதி செய்ய போராடவேண்டும் என்பது மடைமாற்றும் அல்லது தட்டி கழிக்கும் போக்கு. அவர்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவதே அவர்கள் எதிர்கால சந்ததியாவது காணி உரிமையை அடைய சாத்தியமான ஒரே வழி.
-
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
கொழும்பு-யாழ்ப்பாணம் புகையிரத நாளாந்த நேர அட்டவணை எங்கு பெறலாம்.
- Today
-
மலையக மக்களின் காணி உரிமை: மலையகத்திலா அல்லது வடக்கு – கிழக்கிலா? - வீரகத்தி தனபாலசிங்கம்
மலையக மக்களின் காணி உரிமை: மலையகத்திலா அல்லது வடக்கு – கிழக்கிலா? Veeragathy Thanabalasingham December 23, 2025 Photo, Sakuna Miyasinadha Gamage இயற்கையின் சீற்றம் அண்மையில் மலையகத்தில் ஏற்படுத்திய பேரழிவையடுத்து மலையக தமிழ் மக்களை குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேற வருமாறு தமிழ் அரசியல்வாதிகள் சிலர் விடுத்த அழைப்பு ஒரு தீவிரமான விவாதத்தை மூளவைத்திருக்கிறது. மலையகத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் துனபங்களை கேட்டறிந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அந்த மக்களைப் பாதுகாப்பான முறையில் வேறு இடங்களில் குடியேற்றுவது குறித்து பேசினார். மண்சரிவு ஆபத்து இல்லாத மலையகப் பகுதிகளில் அந்த மக்களை குடியேற்றுவதற்கான சாத்தியங்கள் குறித்து அரசாங்கத்துடன் பேசப்போவதாக கூறிய மனோ கணேசன் மலையகத்தில் போதியளவில் காணிகளைப் பெறமுடியாமல்போகும் பட்சத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கு முன்வருவீர்களா என்று அவர்களை நோக்கி கேள்வியெழுப்பினார். அங்கு நின்றவர்களில் பெரும்பாலானவர்கள் அதற்குத் தயாராக இருப்பதாகப் பதிலளித்தனர். இயற்கை அனர்த்தத்தினால் படுமோசமாக பாதிக்கப்பட்டு வீடு வாசல்களை இழந்து நிராதரவாக நின்ற அந்த மக்கள் உடனடியாக அவ்வாறு கூறுவது இயல்பானதே. ஆனால், அந்த ஒரு மக்கள் கூட்டத்தினரின் பதிலை மாத்திரம் அடிப்படையாக வைத்து மலையக மக்கள் தங்களது பாரம்பரியமான வாழ்வாதாரங்களளையும் வாழ்க்கை முறையையும் துறந்தெறிந்துவிட்டு பெருமளவில் வடக்கு, கிழக்கில் குடியேறுவதற்கு விரும்புகிறார்கள் என்று கருதமுடியாது. பாதிக்கப்பட்ட மக்களுடனான மனோ கணேசனின் அந்தச் சந்திப்புக்கு ஊடகங்கள் பிரதானமாக, சமூக ஊடகங்கள் பெரும் முக்கியத்துவத்தை கொடுத்தன. அதையடுத்து இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மலையக தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கில் தாங்களாக வந்து குடியேற விரும்பினால் அதை வரவேற்பதாகவும் அதற்கான உதவிகளைச் செய்யத் தயாராயிருப்பதாகவும் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் மலையகத்தில் பாதுகாப்பற்ற பகுதிகளில் வாழும் தமிழ் மக்களை கிழக்கில் குடியேறவருமாறு அழைத்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) பொதுச்செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் மலையக மக்கள் தமிழ்ப்பகுதிகளில் குடியேறுவதற்கு ஆதரவையும் உதவியையும் வழங்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். மலையக தமிழ் மக்கள் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதற்தடவை அல்ல. இலங்கையின் சனத்தொகையில் வேறு எந்த பிரிவினரை விடவும் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்துவரும் தோட்டத்தொழிலாளர்கள் காலங்காலமாக மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்வை உறுதிசெய்வதற்கு ஒருபோதுமே அரசாங்கங்கள் பயனுறுதியுடைய திட்டங்களை முன்னெடுத்ததில்லை. அத்தகையதொரு சமூகம் பேரழிவை மீண்டும் சந்தித்து நிராதரவாக நிற்கும் இடர்மிகுந்த ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இந்த தமிழ் அரசியல்வாதிகள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியதையும் வடக்கு, கிழக்கில் வந்து குடியேறுமாறு அழைப்பு விடுத்ததையும் நிச்சயம் வரவேற்க வேண்டும். திடீரென்று ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தை அடுத்து உருவான வேதனை மிகுந்த சூழ்நிலையில் பாதுகாப்பாக வாழ்வதற்கு இடமில்லை என்று மலையக மக்கள் கூறும்போது அவர்களை வரவேற்க வேண்டியது தங்களது கடமை என்று கூறிய சுமந்திரன் காணிகளையும் வீடுகளையும் கொடுப்பது மாத்திரம் பிரயோசனமானதல்ல, அவர்களுக்கான வாழ்வாதாரங்களையும் உறுதிசெய்வது அவசியம் என்றும் குறிப்பிட்டார். அடுத்த கட்டமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மனோ கணேசனுடன் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் மக்களை குடியேற்றும் இத்தகைய செயற்பாடுகள் குறித்து அரசாங்கத்துடனும் பேசவேண்டியிருக்கிறது என்றும் சுட்டிக் காட்டினார். அத்துடன், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த பலர் வடக்கு, கிழக்கில் தங்களது காணிகளை மலையக தமிழர்களுக்கு வழங்குவதற்கு முன்வருவதாக அறிவித்திருக்கிறார்கள் என்ற தகவலையும் சுமந்திரன் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். எது எவ்வாறிருந்தாலும், மலையக தமிழ் மக்கள் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படாதிருப்பதை உறுதிசெய்வதற்கான திட்டங்கள் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் பிராந்தியங்களிலேயே பிரதானமாக முன்னெடுக்கப்பட வேண்டும். படிப்படியாக பாதுகாப்பான பகுதிகளில் குடியமர்த்தும் பரந்தளவிலான திட்டம் ஒன்றின் கீழ் அவர்களை சுயவிருப்பத்தின் பேரில் வடக்கு, கிழக்கிற்கு அனுப்புவதில் பிரச்சினை எதுவும் இல்லை. அத்தகையதொரு திட்டத்தை அரசாங்கத்தினால் மாத்திரமே முன்னெடுக்க முடியும். தேசிய மக்கள் சக்தி பெருந்தோட்டங்களில் வசிக்கும் தமிழ் மக்களின் காணி மற்றும் வீட்டுவசதி பிரச்சினைகள் குறித்து எத்தகைய நிலைப்பாட்டை கடந்த வருடத்தைய இரு தேசிய தேர்தல்களுக்கு முன்னதாக வெளிப்படுத்தியது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது அவசியமாகும். மலையக தமிழ்ச் சமூகம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு 200 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், அவர்களின் உரிமைகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி 2023 அக்டோபர் 15ஆம் திகதி ஹட்டன் பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. அதில் காணி, வீட்டுப் பிரச்சினைகள் குறித்து பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: ஹட்டன் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம் மலையகத் தமிழ் மக்களின் அடையாளத்தையும் உரிமைகளையும் அங்கீகரித்து அவர்களின் காணி, வீடமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று 2024 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேசிய மக்கள் சக்தி உறுதியளித்தது. ஆட்சியதிகாரத்துக்கு வந்தபிறகு கடந்துவிட்ட ஒரு வருடத்துக்கும் அதிகமான காலப் பகுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையக மக்களுக்கு வழங்கிய இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை நோக்கி எந்தளவுக்கு கவனம் செலுத்தியிருக்கிறது என்பது முக்கியமான ஒரு கேள்வி. அண்மைய இயற்கை அனர்த்தத்தைத் தொடர்ந்து மலையக மக்களின் காணிப் பிரச்சினை மீது மீண்டும் கவனம் பெருமளவுக்கு திரும்பியிருக்கும் நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை தமிழ்க் கட்சிகள் கோரவேண்டும். அது தொடர்பில் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கான இயக்கம் ஒன்றை முன்னெடுப்பதில் மலையக தமிழ்க் கட்சிகளுடன் வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளும் இணைந்து கொள்ள வேண்டும். மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கவனத்துக்கு தான் கொண்டுவந்தபோது அவர் ‘காணி எங்கே இருக்கிறது?’ என்று தன்னிடம் கேட்டதாக மனோ கணேசன் கூறியிருந்தார். காணி எங்கே இருக்கிறது என்று தெரியாமலா ஜனாதிபதி மலையக மக்களின் காணியுரிமைப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக வாக்குறுதியளித்தார் என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை. மலையக தமிழ் மக்கள் ஏற்கெனவே வடக்கில் குறிப்பாக, வன்னிப் பிராந்தியத்தில் குடியேறியிருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்செயல்களுக்குப் பிறகு பாதுகாப்புத்தேடி குறிப்பிட்ட எண்ணிக்கையான மலையக மக்கள் வடக்கிற்கு குடிபெயர்ந்தார்கள். அவர்களின் இன்றைய எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. தற்போது மலையக மக்களை வடக்கு, கிழக்கிற்கு வருமாறு அழைக்கும்போது ஏற்கெனவே அங்கு குடியேறியவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை பற்றிய ஒரு சரியான மதிப்பீடு அவசியம். வடக்கு, கிழக்கு மக்களுடன் சமத்துவமானவர்களாக வாழ்வாதாரங்களையும் ஏனைய வசதிகளையும் பாகுபாடின்றி அவர்களினால் பெறக்கூடியதாக இருக்கிறதா என்பதைப் பற்றி முதலில் சிந்திக்க வேண்டும். அதேவேளை, இன்றைய மலையக தமிழ் இளைய தலைமுறையினர் தங்களது சமூகத்தின் எதிர்காலம் குறித்து எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று இனிமேலும் அழைக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. மலையகத் தமிழர்கள் என்ற தனியான இனத்துவ அடையாளம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருக்கிறது. மலையக தமிழ்தேசியம் என்ற கோட்பாடு பற்றி பேசுபவர்களும் இருக்கிறார்கள். உண்மையிலேயே, மலையகத் தமிழ் மக்களுக்கு இலங்கையின் ஏனைய தமிழ்பேசும் சமூகங்களை விடவும் தனித்துவமான பிரச்சினைகள், தனித்துவமான வாழ்வாதாரங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கலாசாரம் ஆகியவை இருக்கின்றன. வடக்கு, கிழக்கு தமிழர்கள் இன்று வெளிநாடுகளுக்கு பெரும் எண்ணிக்கையில் செல்வதைப் போன்று மலையகத் தமிழர்களும் இலங்கையின் வேறு பாகங்களுக்கு குடிபெயரத் தொடங்கினால் தங்களுக்கான உரிமைகளைக் கோரமுடியாதவாறு தனியான ஒரு சமூகம் என்ற அடையாளத்தை அவர்கள் இழந்து விடக்கூடிய ஆபத்து இருக்கிறது. அவர்களை நாட்டின் எந்தப் பாகத்திலும் குடியேற்றக்கூடிய ஒரு நாடோடிக் கூட்டமாக நோக்கக்கூடாது. தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் பிரதானமான பிரிவினராவர். நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக அந்த மக்கள் பல தலைமுறைகளாக உழைத்துவருகிறார்கள். அவர்களை இயற்கை அனர்த்த ஆபத்துக்கள் நிறைந்த பகுதிகளில் இருந்து வேறு இடங்களில் குடியமர்த்துவதாக இருந்தாலும் கூட, அதற்கான திட்டங்களை பிரதானமாக அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த பிராந்தியங்களுக்குள் முன்னெடுப்பதே பொருத்தமானதாகும். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டையில் உதவி அரசாங்க அதிபராக பதவிவகித்த ஆங்கிலேயரான லெனார்ட் வூல்வ் இலங்கையில் சமஷ்டி ஆட்சிமுறையை ஏற்படுத்தவேண்டியதன் தேவை குறித்து 1936ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பிய மகஜர் ஒன்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள், மலைநாட்டுச் சிங்களவர்கள், கரையோரச் சிங்களவர்களுக்கு என்று அலகுகளை விதந்துரைத்த அதேவேளை, தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழ்கின்ற மலையகத்தின் பகுதிகளை ஒன்றிணைத்து தனியான அலகை ஏற்படுத்தலாம் என்று கூறினார். மலையகத் தமிழர்கள் மற்றைய சமூகங்களைப் போன்று தங்களுக்கென்று தனித்துவமான உரிமைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒரு வெள்ளையரான காலனித்துவ அதிகாரி 90 வருடங்களுக்கு முன்னரே கூறினார் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், சுதந்திரத்துக்குப் பின்னரான முதல் இலங்கை அரசாங்கம் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கியது. அரைநூற்றாண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு குடியுரிமையையும் வாக்குரிமையையும் வென்றெடுத்த அந்த மக்கள் காணியுரிமைக்காகவும் ஏனைய வசதிகளுக்காகவும் எவ்வளவு காலத்துக்கு போராட வேண்டியிருக்குமோ யாரறிவார்? வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12493
-
சமஷ்டி அரசியலமைப்புக்காக அழுத்தமளிக்க வேண்டும் : பா.ஜ.க. தமிழக மாநில தலைவரிடம் தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்து
ஒரு தேசத்திற்குள்ளே இரு தேசம் என்ற அவரது அடிப்படை கொள்கையை அப்படியே வாழைபழம் சாப்பிடுவது மாதிரி அவர் சாப்பிட்டுவிட்டார் என்கிறீர்கள் 🤣 இப்போ தமிழரசு கட்சியின் சமஷ்டி கொள்கையை தான் இவரும் கையில் எடுத்துள்ளார். இனி இரட்டை குழல் துப்பாக்கியாக இரு கட்சிகளும் செயல்பட போகின்றன 🤣
-
கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" [எட்டு பகுதிகள்]
சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 06 அத்தியாயம் 6 - கண்டி மற்றும் நுவரெலியா கண்டியை அடைந்தபோது காற்று குளிர்ந்தது; கோவில்மலர்கள் வாசம் வீசியது. தலதா மாளிகை அல்லது பல் அவையம் ஒளியில் மிதந்தது; ஏரியில் விளக்குகள் பிரதிபலித்தன. தலதா மாளிகையில் பூஜையை மல்வத்து மற்றும் அஸ்கிரி பிரிவுகளைச் சேர்ந்த துறவிகள் தினமும் மூன்று முறை செய்கிறார்கள்: விடியற்காலை, நண்பகல் மற்றும் அந்தி வேளையில் ஆகும். அப்பொழுது நினைவுச் சின்னத்தைப் பார்ப்பதற்காக உள் அறையைத் திறப்பது மற்றும் பக்தர்களால் பூக்கள் காணிக்கை செலுத்துதல் நடைபெறும். ஆரனும் அனலியும் அப்படியான ஒரு சூழலில், வெளிவீதியால், ஆலயத்தை நோக்கி நடக்கும் பொழுது, [hevisi drums] ஹெவிசி பறை கேட்டுக் கொண்டு இருந்தது. அங்கே நிறைய பூக்கடைகள் இருந்தன. கோயிலுக்குப் போகிறவர்கள் வாங்கிச் செல்வதை இருவரும் கவனித்தார்கள். அவர்களும் பூக்களை வாங்கினர். ஹெவிசி மேளம் வெறும் இசை நிகழ்ச்சி அல்ல. இது இலங்கையின் பௌத்த மரபுகள் மற்றும் கோயில் கலாச்சாரத்தில் ஆழமாகப் பதிந்துள்ள ஒரு புனிதமான கலை வடிவமாகும். தென்னிந்திய மதுரை நாயக்கர் மரபில் பிறந்த, ஸ்ரீ விஜய ராஜசிங்கன் [Madurai Nayakkar king in Kandy, Sri Vijaya Rajasimha] 1739 தொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அரசை ஆண்ட மன்னனாவான். இவன் இலங்கையில் 1700களில், கிட்டத்தட்ட அழிந்துபோன பௌத்தத்தை மீட்டெடுக்க விரும்பி, சியாமில் (Siam / தாய்லாந்து) இருந்து துறவிகளை அழைத்துவர முயற்சி செய்தான். சியாம் பிக்குகள் இறுதியாக 1753-இல் இலங்கைக்கு வந்தனர். அவர்கள் கண்டியில் மல்வத்த மற்றும் அச்கிரிய [Malwatta and Asgiriya chapters] என்னும் இரண்டு பிக்கு சங்கங்களை உருவாக்கினர். அந்த நேரத்தில், எசல [சிங்களத்திலே ஆடி மாதம் எசல எனப்படும்] பெரகரா விழாவில் [The Kandy Esala Perahera procession] பத்தினி அம்மன் [கண்ணகி] முதன்மையாக வணங்கப்பட்டு வந்தார். ஆனால் சியாமிலிருந்து வந்த பிக்குகள் இதை ஏற்கவில்லை. அவர்கள் மன்னரிடம், “தலதா (Dalada / Sacred Tooth Relic) விழாவின் முன்னிலையாக இருக்க வேண்டும்” எனக் கூறினர். அதன் பிறகு, அதாவது சுமார் இருநூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தான், பெரகரா விழாவில் பல் நினைவுச் சின்னம் முக்கியத்துவம் பெற்றது என்ற நீண்ட வரலாற்றை சுருக்கமாக அனலி எடுத்துரைத்தாள். தலதா மாளிகையில் உள்ள ஓவியங்கள் கண்டி காலத்து ஓவியங்கள் ஆகும். இவை மாளிகையின் பல இடங்களில், குறிப்பாக மேல் மாடி உட்கூரையில் உள்ள நிரல்களிலும், தலதா மண்டபம், எண்கோண மண்டபம் போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன. இந்த ஓவியங்களில் பல பெண்ணுருவங்கள் அடங்கிய நுட்பமான இரதங்களும், சதுர்நாரி பல்லக்குகளும் இடம்பெற்றுள்ளன. அவை எல்லாவற்றையும் ரசித்து இருவரும் பார்த்தார்கள். தர்மத்தின் தானமே எல்லா தானங்களையும் மிஞ்சும். தர்மத்தின் ருசி எல்லா ரசனைகளையும் மிஞ்சும். தர்மத்தில் உள்ள இன்பம் எல்லா இன்பங்களையும் மிஞ்சும். ஆசையை அழிப்பது எல்லா துன்பங்களையும் வெல்லும். ஆரனும் அனலியும், தலதா மாளிகைக்கு சென்றபின், அதன் முன் இருந்த, 1807 ஆம் ஆண்டு மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கரால் கட்டப்பட்ட கண்டி ஏரியை சுற்றி பொழுதுபோக்காக நடைப் பயணம் செய்து, கோயில் மற்றும் சுற்றியுள்ள மலைகளின் அழகிய காட்சிகளை கண்டு ரசித்தனர். “வரலாறு நம்மைப் பிரித்தது,” என்று ஆரன் கூறினான், “ஆனால் பக்தி இன்னும் நம்மைப் பிணைக்கிறது.” அனலி சிரித்தாள். அப்பொழுது அவர்கள் இரவில் காலடி எடுத்து வைத்தனர். அமைதியான ஏரியின் குறுக்கே கண்டியின் விளக்குகள் பிரதிபலித்தன. அங்கே பொதுவான கெண்டை மீன் மற்றும் திலாப்பியா மீன்கள் அங்கும் இங்கும் கூட்டமாக ஓடுவது தெரிந்தது, அவைக்கு மேலே நீர்க்காகம் அல்லது பெரிய நெட்டைக்காலி [Great Cormorants], மீன்கொத்தி, மற்றும் அவை போன்ற பறவைகள் வட்டமிட்டுக் கொண்டு இருந்தன. அக்காவின் மகள் அதை பார்ப்பதில், தனது நேரத்தை செலவழித்தாள். அது அவர்களுக்கு தங்களுக்குள் தனிப்பட பேசவும் பழகவும் இடமளித்தது. 'உண்மையான அன்புக்கு ஏங்குபவர்களைத்தான் காதல் மரணக் குழியில் தள்ளுகிறது' என்று யாரோ சொன்னது அவனுக்கு சிரிப்புக்கு வந்தது. ஏன் என்றால், அது அவளின் கன்னக்குழியில் தான் விழுத்தும் என்று இப்ப அவனின் அனுபவம். அவன் தோளில் சாய்ந்து இருந்தவள், கொஞ்சம் எட்டி, அவன் காதில், "நான் உங்களை காதலிக்கின்றேன். இறுதி வரைக்கும் என்னை இப்படியே காதலிக்க வேண்டும்" என்றாள் வெட்கத்துடன். அவள் கன்னத்தை கிள்ளியபடி, "வேற வேல என்ன இருக்கு அத விட முக்கியமா" என்றான் ஆரன். பின் அவன், அவள் முகத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டு, "அடி பாவி... இத ஏன் மொதலையே சொல்லல" என்றான். "ம்ம்ம் ... எனக்கு உங்கள பிடிக்கும். ஆனா உங்களுக்கு என்னைப் பிடிக்குமானுத் தெரியல... அதான் சொல்லல" என்றாள் செல்லச் சிரிப்புடன். பிறகு எனோ, " சும்மா தான்!!!" என்றுக் கூறி அவன் நெஞ்சத்தில் மீண்டும் சாய்ந்து கொண்டாள். அவள், தான் என்ன பேசுகிறேன் என்று ஒரு தொடர்பு இல்லாமல், எதோ ஒரு மயக்கத்தில் உளறுவது போல் இருந்தது. "சும்மாவா சொன்னார்கள் பெண்களை புரிந்து கொள்ள முடியாது என்று" என்று எண்ணிக் கொண்டு, ஆரன், " சரி!! நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா" என்றான். "ம்ம்ம்!!!" என்றாள். "நிமிடத்திற்கு நிமிடம் நீ அழகாகிக் கொண்டே போகின்றாயே ... அது எப்படி" என்றான். நாணத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். கூடுதலாய் ஒரு நிமிடம் கூட ஆகவில்லை ஆனால் அவள் அழகைக் கூட்டி இருந்தாள். "ஒ! தன் கேள்வி தவறோ... வினாடிக்கு ஒரு முறை அல்லவா இவள் அழகை கூட்டிக் கொண்டே போகிறாள்" என்று எண்ணிக் கொண்டு அவன் இருக்கும் போதே, "அது ரகசியம்... சொல்ல முடியாது... சரி நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்" என்றாள். "என்ன கேள்வி" என்றான். "உண்மையிலேயே வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து காதல் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?" என்றாள். அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் கண்கள் பேசின. அது சொல்லாமல் சொன்னது. உள்நாடு வெளிநாடு காதலுக்கு ஏது பாகுபாடு உறங்கும் போது கனவிலும் விடிந்தவுடன் நினைவிலும் வாழும் வரை உயிரிலும் காற்றை கண்ட உடன் நடனமாடும் மரங்களைப் போல ஒருவரை ஒருவர் கண்டவுடன் ஆசை அன்பு, பாசம், காமம் துளியாய் மனதில் எழும் உணர்வே காதல் காதல் ஏரிக்கரை கொஞ்சம் அமைதியாய் அப்பொழுது இருந்தது. சூரியன் மறையும் நேரம். குளிர் தென்றல் அவர்கள் இருவருக்கும் பல கதைகளைப் பேசிக் கொண்டு சென்றது. ஏனோ அவள் முகம் திடீரென வாடிப் போனது . "ஏய் என்னாச்சி?" என்றான் ஆரன். பதில் வரவில்லை. "எதாவது பிரச்சனையா...?" ஆரன் தொடர்ந்தான். "இல்லை..." என்றாள் அனலி. பெண்கள் இல்லை என்றால் ஏதோ இருக்கின்றது என்று அர்த்தம். எனவே, அவன் திருப்பி பின்னால் பார்த்தான். அக்காவின் மகள், பறவைகளை, மீன்களை எண்ணுவதை விட்டு விட்டு, சித்தியை எண்ணுவது போல அங்கு நின்றாள். ஆரன், அக்காவின் மகளை கூப்பிட்டு, எப்படி ஏரி, தலதாமாளிகை என்று கேட்டு நிலைமையைச் சமாளித்தான். பின் அடுத்த நாள், கண்டி நகரத்தை விட்டு, நுவரெலியாவிற்கு போகும் பொழுது, வழியில், தொடர் வண்டி நிலையம், கடைத் தெரு, பூந்தோட்டம், பேராதனை பல்கலைக் கழகம், என பலவற்றை இருவரும் ரசித்துப் பார்த்தார்கள். அதன் பின், கண்டி மற்றும் பேராதனையின் பரபரப்பான தெருக்களிலிருந்து, ஆரனும் அனலியும் மத்திய மலைப்பகுதிகளுக்கு மேலும் தெற்கே பயணிக்கத் தொடங்கினர். அங்கு மூடுபனி மூடிய மலைகளும் பச்சை பசேலென தேயிலைத் தோட்டங்களும் அவர்களுக்காகக் காத்திருந்தன. மேகங்கள் நனைந்த மலைகள் மற்றும் மரகதப் பள்ளத்தாக்குகள் வழியாக அவர்களின் வாகனம் மெதுவாக மேலே ஏறியது. அக்காவின் மகள், "ஆஹா.. அங்கு பாருங்கள் எவ்வளவு பச்சை பசேல் என்று புல்வெளிகள். வயல்கள். ஆஹா! அதோ சிறிய ஓடைகள், பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது சித்தி" என்றாள். "ஆமாம், கீழே பள்ளத்தாக்கு. மேலே மலை முகடுகள். அவற்றில் மழை மேகங்கள் மிதந்து கொண்டு உள்ளன" என்று அனலி, கை நீட்டிக் காட்டி தொடர்ந்தாள். திடீரென அக்காவின் மகள், ஆரனைப் பார்த்து "இலங்கைக்குப் பறந்து செல்லும்போது அனுமாருக்கு மிகவும் குளிர்ந்து இருக்குமா?" என்று கேட்டாள். ஆரன் சிரித்தான் "வரும் பொழுது குளிர்ந்து இருக்க வேண்டும், அது தான் போகும் போது வாலில் நெருப்புடன் பறந்தானோ ?" என்ற கேள்வியுடன் பதில் அளித்தான். அனலி ஜன்னலுக்கு எதிராக முகத்தை அழுத்திக் கொண்டு, சிவப்பு நிற புடவைகளில் தேயிலை பறிப்பவர்கள் எறும்புகள் போல துடிப்பான பச்சை சரிவுகளில் நகர்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். "நாம் வேறொரு உலகத்திற்குள் அடியெடுத்து வைத்தது போல் இருக்கிறது," என்று அவள் கிசுகிசுத்தாள். "பூமிக்கும் வானத்திற்கும் இடையில் தொங்கவிடப்பட்ட ஒரு உலகம் போல் இருக்கிறது" என்றாள். ஆரன் சிரித்தான். "இது நினைவுகளைச் சுமந்து செல்லும் உலகம் - காலனித்துவ தோட்டங்கள், இந்தியாவிலிருந்து 200 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட தமிழ் தொழிலாளர்கள், தலைமுறை தலைமுறையாக உழைப்பு மற்றும் ஏமாற்றம். அவர்களின் சோகக் கதைகள் நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீரிலும் மூழ்கியுள்ளன." என்றான். நுவரெலியாவிற்குச் செல்வது ஒரு நீண்ட பயணம். இடையில் ஓரிடத்தில், ஒரு பழங்கால கடையில் இறங்கி, பழங்கள் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு, அங்கிருந்து ரம்போதா அருவிகளைப் [The Most Majestic Ramboda Falls In Sri Lanka] பார்த்தார்கள். பச்சைப் பசேல் என்று மலைக் காடுகள் கண்களுக்குக் குளிர்ச்சியாய் இருந்தன. அப்பொழுது சட்டென்று மழை தூறியது. அந்த தூறலில், இருவரும் நன்றாக நனைந்து விடடார்கள். அந்த ஈரத்தில், அவளின் உடல், ஒரு கவிதை போல மிதந்தது அவனுக்கு, அவன் வாய் அவனை அறியாமலே; மலையின் உச்சி மனம் நொந்து விழுந்து சாவதற்கு அல்ல மனம் மகிழ்ந்து மேலும் பறந்து உயர்வதற்கு தாய்நாட்டின் தாலாட்டில் மலை உச்சியின் விளிம்பில் வாழ்வதை நினைப்போமே அனலி! என்று முணுமுணுத்தது. வழியில் தம்ரோ டீ [Damro Tea] தொழிற்சாலைக்கு ஒரு விசிட் [visit] அடித்தார்கள்! ஆனால் அவர்கள் சொல்லும் டெக்னாலஜி [technology] எல்லாம் கேட்கும் நிலையில் ஆரனும் அனலியும் இல்லை! அவர்களின் எண்ணம் எல்லாம் சிகிரியா சித்திரம் போல், முகிலில் மிதந்து கொண்டு இருந்தன. அதன் பின், இலங்கையின் "சிறிய இங்கிலாந்து" என்று அழைக்கப்படும் நுவரெலியாவை அடைந்த அவர்கள், பைன் மரம் மற்றும் ஈரமான மண்ணின் நறுமணத்தைச் சுமந்து செல்லும் மிருதுவான மலைக் காற்றில் கிரிகோரி ஏரியின் (Lake Gregory) வழியாக நடந்து சென்றனர். காலனித்துவ கால பங்களாக்கள் தெருக்களில் வரிசையாக இருந்தன, குதிரை வண்டிகள் கற்களின் மீது மெதுவாகச் சத்தமிட்டன. நுவரெலியாவில் அப்பொழுது 14°C. பனி மூட்டமாக இருந்தது. ஆனால் ஆரனுக்கு இவை ஒன்றும் பெரிய குளிரல்ல. ஆனால் அனலிக்கு பனி கடந்து செல்லும்பொது, எலும்பு வரை எட்டிப் பார்த்து குளிர்ந்தது. அவள் ஆரனை இறுக்கிப் பிடித்து அணைத்துக் கொண்டாள். அக்காவின் மகளையே மறந்து விட்டாள் அந்த குளிரில். அனலியின் இந்த புத்துணர்ச்சியான முகம், அவளின் தங்க மாலை மின்னிய சங்கு கழுத்து, ஒட்டிய உடையில் அவளின் அழகு, அவனை அப்படியே பிரமிக்க வைத்தது. என்றாலும் அவன், அவள் கைகளை உதறிவிட்டு கொஞ்சம் விலகி நின்றான். அதன் பின் அவர்கள் வடக்கு நோக்கித் திரும்பினார்கள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 07 தொடரும் துளி/DROP: 1953 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 06 https://www.facebook.com/groups/978753388866632/posts/32974794075502481/?
-
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்! 24 December 2025 நாட்டின் வடக்கு தொடருந்து மார்க்கம் இன்று (24) முதல் பயணிகள் தொடருந்து போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான யாழ்தேவி கடுகதி தொடருந்து சேவை இன்று முதல் அதன் வழக்கமான கால அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து காலை 6:40 க்குப் புறப்படும் தொடருந்து, பிற்பகல் 2:32 க்குக் காங்கேசன்துறை நிலையத்தைச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காங்கேசன்துறையிலிருந்து முற்பகல் 10:30 க்குப் புறப்படும் தொடருந்து, மாலை 6:54 க்குக் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இந்த தொடருந்தின் முதலாம் வகுப்பு (குளிர்சாதன வசதி) மற்றும் இரண்டாம் வகுப்புப் பெட்டிகளுக்கான ஆசன முன்பதிவு வசதிகளையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மட்டக்களப்பு வரையான கிழக்கு தொடருந்து மார்க்கத்தின் சேவைகளும் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணிக்கும் பயணிகள், காலை 6 மணிக்கு திருகோணமலை நோக்கிப் புறப்படும் தொடருந்தில் பயணித்து, கல் ஓயா சந்தி தொடருந்து நிலையத்தை அடைய வேண்டும். பின்னர் அங்கிருந்து மதியம் 12:40 க்குப் புறப்படும் இலக்கம் 6011 ஐ கொண்ட தொடருந்து ஊடாக மட்டக்களப்பைச் சென்றடைய முடியும். அதேநேரம், மட்டக்களப்பிலிருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் தொடருந்தில் கல் ஓயா சந்தி நிலையத்தை வந்தடைந்து, அங்கிருந்து கொழும்பு நோக்கிய தொடருந்தில் பயணிகள் தமது பயணத்தைத் தொடரலாம் என தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு நோக்கிய தொடருந்து சேவை மட்டக்களப்புக்கான தொடருந்து சேவை https://hirunews.lk/tm/437350/from-today-you-can-travel-by-train-to-kankesanthurai-and-batticaloa
-
தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை
தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை 24 December 2025 இனப்படுகொலைக்கான நீதிவிசாரணையை நடத்தி தமிழீழத்துக்கு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ எனப்படும் வை.கோபால்சாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி பேராசிரியர் ஜவாஹிருல்லா, திராவிட தமிழர் பேரவையின் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கோவை இராமகிருஷ்ணன், மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தியாகு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மணியரசன், விடுதலை தமிழ்ப் புலிகளின் குடந்தை அரசன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு பொன்னையன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், தமிழ்ப் புலிகள் கட்சி நாகை திருவள்ளுவன், இந்திய சமூக ஜனநாயகக் கட்சி கட்சித் தலைவர் நெல்லை முபாரக், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகியோர் இந்த கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையை ஐக்கிய நாடுகள் சபை நடத்த வேண்டும் என்று வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரான சி.வி விக்னேஷ்வரன் தீர்மானம் நிறைவேற்றினார். அத்துடன், தமிழக சட்டமன்றத்தில், சுதந்திரத் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது. ஈழத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையை இந்திய அரசும், உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என்று முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் தீக்குளித்து மாண்டார்கள். இந்தப் பின்னணியை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், உலக நாடுகளும் உணர்ந்து ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கான நீதி விசாரணையை நடத்த முன்வர வேண்டும் என்றும், சுதந்திரத் தமிழீழத்துக்கு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தமிழர் காணிகளில் குடியேற்றப்பட்டுள்ள அத்துமீறிய குடியேற்றங்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும், ஈழத்தமிழர் தாயகத்திலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அதற்கான ஆயத்த வேலைகளைச் செய்ய தமிழகத்தில் உள்ள தமிழர்களும், புலம்பெயர் வாழ் தமிழர்களும் கடமையாற்ற வேண்டும் என்று இந்தக் கூட்டறிக்கையின் வாயிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/437352/referendum-for-tamil-eelam-joint-statement-by-tamil-nadu-political-parties
-
விமான விபத்தில் லிபிய இராணுவ தளபதி உயிரிழப்பு
துருக்கியில் விமான விபத்து; லிபியாவின் இராணுவத் தலைவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியா ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். உள்நாட்டுப் போர் நடந்து வரும் லிபியாவில், ஐநா சபை மற்றும் அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, தலைநகர் டிரிப்போலியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதை எதிர்க்கும் போட்டி அரசு, நாட்டின் கிழக்குப் பகுதியை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த அரசுக்கு ஆதரவாக ரஷ்யா, எகிப்து மற்றும் சில இஸ்லாமிய நாடுகள் உள்ளன. இந்த சூழலில், துருக்கியின் தலைநகரான அங்காராவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, லிபியாவின் ராணுவ தலைவர், நான்கு அதிகாரிகள் மற்றும் மூன்று பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லிபிய ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கு காரணம் என லிபியா அதிகாரிகள் தெரிவித்தார். விமானம் புறப்பட்ட 40 நிமிடங்களில் தொடர்பை இழந்தது. பின்னர் அவசரமாக விமானத்தை தரையிறக்க முயற்சித்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது என துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்தார். https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/துருக்கியில்-விமான-விபத்து-லிபியாவின்-இராணுவத்-தலைவர்-உட்பட-7-பேர்-உயிரிழப்பு/50-370056
-
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!
அர்ச்சுனா எம்.பி. கைது யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று புதன்கிழமை (24) கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமநாதன் அர்ச்சுனா, நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றினால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் செவ்வாய்க்கிழமை (23) அன்று பிடியாணை பிறப்பித்தார். பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை, பொலிஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தமை மற்றும் சட்டவிரோதமாக வாகனத்தை நிறுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் செப்டெம்ப மாதம் 29ஆம் திகதி கைது செய்யப்பட்ட இராமநாதன் அர்ச்சுனா எம்.பி. பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/அர்ச்சுனா-எம்-பி-கைது/175-370065
-
அலெக்ஸ் கேரி - பயமற்ற, சிறப்பான விக்கெட் கீப்பிங்
தோனிக்கு பின் விக்கெட் கீப்பிங் இலக்கணங்களை மாற்றி எழுதும் 'கேரி' - இருவரின் ஒற்றுமையும் வேறுபாடும் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "அலெக்ஸ் கேரி அபூர்வமானவர். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஸ்டம்புகளுக்கு நெருக்கமாக நின்று சிறப்பாக செயல்பட்டார். பந்து அவர் கையில் எப்படியோ ஒட்டிக்கொள்கிறது. கொஞ்சம் கூட பயமேயில்லை" பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் பரிசளிப்பின் போது அந்தப் போட்டியின் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இப்படிக் கூறியிருந்தார். காரணம், நடந்துவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில், தன்னுடைய பயமற்ற, சிறப்பான விக்கெட் கீப்பிங்கால் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார் அலெக்ஸ் கேரி. அதனால், ஸ்மித் போல் பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். அதனால் கடந்த சில நாள்களாகவே, ஸ்டம்புக்கு அருகே நின்று வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துகளை அவர் பிடிக்கும் வீடியோக்கள் பெருமளவு பகிரப்பட்டுவருகின்றன. அவரது இந்த கீப்பிங் அணுகுமுறை பற்றி கிரிக்கெட் வட்டாரத்தில் தொடர்ந்து பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பேட்டிங்கிலும் அசத்தி, மூன்றாவது ஆஷஸ் போட்டியில் ஆட்ட நாயகன் விருதே வாங்கியிருந்தாலும், அவருடைய கீப்பிங் பற்றிய பேச்சே அதிகமாக இருக்கிறது. பொதுவாக சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது தான் கீப்பர்கள் ஸ்டம்புக்குப் பின்னாலேயே நிற்பார்கள். வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது பின்னே சற்று தள்ளியே நிற்பார்கள். அவ்வப்போது மட்டுமே மிதவேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசுகையில் ஸ்பின்னர்களுக்கு நிற்பதுபோல் வந்து நிற்பார்கள். அது அரிதாகவே நடக்கும் ஒரு விஷயம். ஆனால், அந்த பிரிஸ்பேன் ஆட்டத்தில் அதை அடிக்கடி செய்தார் கேரி. அதுவும் மைக்கேல் நெஸர், ஸ்காட் போலாண்ட் போன்றவர்கள் பந்துவீசும்போது, மணிக்கு சுமார் 135 கிலோமீட்டர் வேகத்துக்கும் மேலாக வந்த பந்துகளுக்கு அப்படி நின்றார். அந்த வேகத்தில் வரும் பந்துகளை மிகவும் பக்கத்தில் நின்றுகொண்டு பிடிப்பது மிகவும் கடினம். ஆனால், கேரி அதை எளிதாகச் செய்வதுபோல் தெரிந்தது. லெக் சைட் செல்லும் பந்துகளைக் கூட சிறப்பாகப் பிடித்துக் கொண்டிருந்தார் அவர். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் கேட்சையும் அவர் சிறப்பாகப் பிடித்தார். நெஸர் பந்துவீச்சில் ஸ்டோக்ஸுக்கு எட்ஜாக, எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் அதை எளிதாகப் பிடித்தார் கேரி. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெருமளவு பாராட்டப்பட்டது. பிரிஸ்பேனோடு நிற்காமல், தெற்கு ஆஸ்திரேலியாவில் (அடிலெய்ட் ஓவல் மைதானம்) நடந்த மூன்றாவது ஆஷஸ் போட்டியிலும் அந்த அணுகுமுறையைத் தொடர்ந்தார் அவர். போலாண்ட் பந்துவீசியபோது ஸ்டம்புக்கு அருகிலேயே நின்றிருந்த அவர், வில் ஜேக்ஸ் உடைய கேட்ச்சை டைவ் அடித்துப் பிடித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் மைக்கேல் நெஸர் பந்துவீச்சில், ஸ்டோக்ஸை கேட்ச் பிடித்தார் கேரி "தைரியமான செயல்பாடு" இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு வீரரும் விக்கெட் கீப்பருமான பாபா இந்திரஜித், "ஸ்டம்புகளுக்குப் பின்னால் ஸ்தம்பிக்க வைக்கும் ஒரு செயல்பாட்டை கேரி கொடுத்தார்" என்று கூறினார். "இந்தியா போன்ற ஆடுகளங்களில் இதுபோல் வேகப்பந்துவீச்சுக்கு ஸ்டம்புக்கு அருகே நின்று கீப்பிங் செய்வது சற்றே எளிதாக இருக்கும். ஆனால், வேகமும், பௌன்ஸும் நிறைந்த ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அப்படிச் செய்வது சாதாரண விஷயம் இல்லை. அங்கு கூடுதல் பௌன்ஸ் இருக்கும். அவர் அதை அசாதாரணமாகச் செய்திருக்கிறார். அதைப் பார்க்கும்போது, அவர் முதல் முறையாக அப்படிச் செய்வதுபோல் தெரியவில்லை" என்று கூறினார். டிரிபிள் எம் ரேடியோவில் அதுபற்றிப் பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், "இதைவிட சிறந்த, இதைவிட தைரியமான விக்கெட் கீப்பிங் செயல்பாட்டைப் பார்க்க முடியாது" என்று கூறினார். இயான் ஹீலி, அலீஸா ஹீலி என ஆஸ்திரேலியாவின் முன்னாள், இந்நாள் கீப்பர்கள் பலரும் கேரியின் செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டினார்கள். அனைத்து கீப்பர்களும் இப்படி அதைப் புகழ்வதற்குக் காரணம், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் ஸ்டம்புகளுக்கு அருகே நின்றார் என்பது மட்டுமல்ல. பிரிஸ்பேன் போன்ற ஒரு ஆடுகளத்தில், பகலிரவு போட்டி ஒன்றில் அவர் அப்படியொரு செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார் என்பதுதான் அவருக்கு அதிக பாராட்டுகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. இந்திரஜித் சொல்வதுபோல் கூடுதல் பௌன்ஸ் கொண்ட ஒரு ஆடுகளத்தில் கேரி அப்படி செயல்பட்டிருக்கிறார். பகலிரவு போட்டியில், செயற்கை விளக்குகளுக்கு நடுவே அப்படி செயல்படுவது கூடுதல் சவால். அதிக ஆபத்தும் கூட. இருந்தாலும், அவர் அந்த இடத்தில் நின்று சிறப்பாக செயல்பட்டதால்தான் அதை 'தைரியமான செயல்பாடு' என்றிருக்கிறார் ஹாடின். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அடிலெய்டில் வில் ஜேக்ஸின் கேட்ச்சை டைவ் அடித்துப் பிடிக்கும் அலெக்ஸ் கேரி ஸ்டம்புக்கு அருகே நிற்பதன் காரணம் என்ன? அது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கீப்பர்கள் பின்னால் நிற்பார்கள் என்பதால், அது நன்றாக நகர்வதற்கான சுதந்திரத்தை பேட்டர்களுக்கு தரும். ஸ்விங்கை சமாளிக்க, பெரிய ஷாட் அடிக்க, சில சமயம் பௌலர்களைக் குழப்பவும் கிரீசுக்கு வெளியே பேட்டர்கள் நகர்வார்கள். பேட்டர்களின் இந்த நகர்வுகளைத் தடுக்கவே சில சமயம் மிதவேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசுகையில் கீப்பர்கள் முன்னால் வருவார்கள். இங்கிலாந்து பேட்டர்கள் அவர்களின் 'பாஸ்பால்' (Bazball) அணுகுமுறையின் காரணமாக அதீதமாக நகர்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு பந்திலுமே ரன் அடிக்கப் பார்ப்பதால், தொடர்ந்து அவர்கள் நகர்வதைக் காணமுடியும். அவர்களின் அந்த 'அட்டாக்கிங்' அணுகுமுறையை கட்டுப்படுத்த, கேரி கீப்பிங்கில் 'அட்டாக்' செய்தார். அவர் ஸ்டம்புக்கு அருகே நின்றது, இங்கிலாந்து பேட்டர்களின் நகர்வுக்குப் பெருமளவு முட்டுக்கட்டை போட்டது. "வேகப்பந்துவீச்சுக்கு கீப்பர்கள் 'upto the stumps' (ஸ்டம்புகளுக்கு அருகே) வந்து நிற்பது பொதுவாகவே பேட்டர்களிடையே உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். பாஸ்பால் உத்தி காரணமாக இங்கிலாந்து பேட்டர்கள் ஸ்கூப், பேடில் போன்ற ஷாட்கள் ஆட தொடர்ச்சியாக நகர்வார்கள். ஆனால், கேரி இப்படி முன்னாள் வந்து நிற்பது அவர்களின் நகர்வுகளுக்கு முட்டுக்கட்டை போடும்" என்று கூறினார் இந்திரஜித். மேலும் பேசிய அவர், "இது ஷாட்கள் ஆடுவதில் மட்டுமல்ல, பந்துகளை விடுவதற்குமே யோசிக்கவைக்கும். நீங்கள் பந்தை 'well left' (ஆடாமல் விடுவது) செய்யும்போது உங்கள் கால்கள் சற்று மேலே எழும்ப வாய்ப்புள்ளது. அப்போது கீப்பர் ஸ்டம்ப் அருகே நின்றால், அங்கு ஸ்டம்பிங் ஆகும் வாய்ப்பும் உள்ளது. இதுவும் பேட்டர்களின் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்" என்றும் கூறினார். அதுமட்டுமல்லாமல், கேரி ஒரே ஓவரில் தன் இடத்தை அடிக்கடி மாற்றுகிறார். ஒரு பந்து ஸ்டம்புக்கு அருகே இருப்பவர், அடுத்த பந்தே பின்னால் சென்று நிற்கிறார். இப்படிச் செய்வது, பந்தில் லென்த் குறித்து பேட்டர்கள் மனதில் கேள்விகள் எழுப்பலாம் என்கிறார் இந்திரஜித். அதேசமயம், இது வேகப் பந்துவீச்சாளர்களுக்குமே ஒருசில சவால்களைக் கொடுக்கும். கீப்பர்கள் முன்னே நிற்கும்போது 'ஷார்ட் லென்த்' பந்துகள் வீசமுடியாது. பந்து கொஞ்சம் லெக் திசையில் வெளியே சென்றால் பவுண்டரி ஆவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கும். அதனால், அவர்களுக்கு இயல்பாகவே சில கட்டுப்பாடுகள் ஏற்பட்டுவிடும். இதன் காரணமாக கீப்பர்கள் முன்னால் வந்து நிற்க சில சமயங்களில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லும் இந்திரஜித், ஆஸ்திரேலிய பௌலர்கள் ஒருமித்த கருத்தோடு இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வேகப் பந்துவீச்சாளர்கள் வீசும்போது கீப்பர்கள் ஸ்டம்புக்கு அருகே வந்து நிற்பது, பேட்டர்களின் நகர்வை பாதிக்கும் என்கிறார் பாபா இந்திரஜித் இதை கேரி எப்படி சாத்தியப்படுத்துகிறார்? பெரும் பேசுபொருளாக மாறியிருக்கும் இந்த கீப்பிங் அணுகுமுறைக்குத் தான் சிறப்பான பயிற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்கிறார் அலெக்ஸ் கேரி. "வேகப் பந்துவீச்சுக்கு எதிராக நான் ஸ்டம்புகளுக்கு அருகே நின்று பயிற்சி செய்வதில்லை. சில சமயங்களில் அது கொஞ்சம் ஆபத்தானதாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். விளையாட்டின் அடிப்படைகள் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் கவனம் செலுத்தவேண்டும் அவ்வளவே - அது நாதன் லயானின் பந்துவீச்சுக்கு ஸ்டம்புக்கு அருகே நின்று நிறைய கீப்பிங் செய்திருப்பது" என்று சொல்லும் கேரி, "நான் இருக்கும் பொசிஷன்களை நம்புகிறேன். பின்னர் என் உள்ளுணர்வு, பந்தைப் பிடிப்பதற்கு ஏற்ற சரியான இடத்துக்கு என்னைக் கொண்டுசெல்லும் என்று நம்புகிறேன்" என்றும் கூறினார். சிறப்பான பயிற்சிகள் எதுவும் செய்வதில்லை என்று சொல்லும் அவர், வலது கை பேட்டர்களுக்கு எதிராக ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கையாள்கிறார். வேகப்பந்துவீச்சாளர்கள் வலது கை பேட்டர்களுக்கு வீசும்போது, அவர் நேராக நிற்பதில்லை. ஸ்டம்பில் இருந்து இரண்டு அடி பின்னால் நின்று, தன் இடது காலை ஆஃப் ஸ்டம்புக்கு நேராக வைத்திருக்கும் அவர், வலது காலை சற்று பின்னே வைத்துக்கொள்கிறார். பந்தைப் பிடிப்பதற்கு ஏதுவாக வலது பக்கம் இடுப்பை நகர்த்த அது உதவுவதாகக் கூறுகிறார் அவர். அவரது இந்த அணுகுமுறை பற்றி பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சியாளரான ஆர்த்தி சங்கரன் பிபிசி தமிழிடம் பேசினார். அப்போது, "கீப்பர்கள் பந்தைப் பிடிக்கும்போது கைகள் இலகுவாக (soft hands) இருக்கவேண்டும். 'Hard hands' ஆக இருக்கக்கூடாது. அப்போதுதான் பந்து கிளவுஸில் தங்கும். கைக்கும் அடிபடாது. அதற்காகத்தான் பொதுவாக பந்தைப் பிடித்து கையை சற்றுப் பின்னே கொண்டுசெல்வார்கள். வேகப்பந்துவீச்சுக்கு எதிராக அப்படி கைகளை இலகுவாக வைத்துப் பிடிக்க உடலை நன்கு நகர்த்தவேண்டும். அது கடினமான விஷயம். அதனால், தன் வலதுபக்க இடுப்பை நன்கு நகர்த்துவதற்காக கேரி அப்படி நிற்கிறார்" என்று அவர் கூறினார். வேகப்பந்துவீச்சுக்கு ஸ்டம்புக்கு அருகே நிற்பதற்கு பயிற்சி எடுப்பதில்லை என்று சொல்லும் கேரி, எதேச்சையாக இந்த முறையைக் கண்டறிந்திருக்கக் கூடும் என்று சொல்லும் ஆர்த்தி சங்கரன், அவர் இடது கை பேட்டர்களுக்கு அப்படி நிற்பதில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். "ஒருவேளை அவரது இடதுபக்க இடுப்பு எளிதாக நகர்வதாகவும், வலதுபுறம் நகராமலும் இருக்கலாம். அதனால், அவர் வலது காலைப் பின்னால் வைத்து, அந்தப் பக்கம் நகர்வதை எளிமையாக்க நினைத்திருக்கலாம்" என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வேகப் பந்துவீச்சாளர்களுக்கு இப்படி ஸ்டம்புக்கு அருகே வந்து கீப்பிங் செய்வதற்காக தான் தனியாக பயிற்சி எடுப்பதில்லை என்கிறார் கேரி தோனி - கேரி இருவரின் ஒற்றுமையும் வேறுபாடும் கேரியின் இந்த அணுகுமுறை ஒருவகையில் தோனிக்கு நேர்மாறாக இருக்கிறது என்றும், இன்னொரு வகையில் தோனியின் மனநிலையோடு ஒத்துப்போகிறது என்றும் ஆர்த்தி சங்கரன் கூறுகிறார். தோனியின் சிறப்பம்சங்களில் ஒன்று அவரது மின்னல்வேக ஸ்டம்பிங். அவர் அதை வேகமாகச் செய்வதற்கான காரணம் - பெரும்பாலான கீப்பர்கள் போல், பந்தைப் பிடித்தவுடன் அதன் தாக்கத்தைக் குறைக்க தோனி தன் கையை பின்னால் எடுத்துச் செல்லமாட்டார். கைகளை உறுதியாக வைத்திருப்பார் (Firm Hands). அதனால், கையை பின்னால் எடுத்துச்சென்று மீண்டும் ஸ்டம்ப் நோக்கி கொண்டுவருவதற்கான நேரம் அவருக்கு மிச்சமாகும். இதுதான் அவருடைய அதிவேக ஸ்டம்பிங்குகளின் ரகசியம். இது வழக்கமான கீப்பிங் இலக்கணத்துக்கு எதிரானது என்றாலும், அதுதான் அவரது பலமாக இருக்கிறது. இந்த இடத்தில்தான் தோனியிடமிருந்து கேரி வித்தியாசப்படுகிறார் என்கிறார் ஆர்த்தி சங்கரன். "கேரி பந்தைப் soft hands-ஓட பிடிக்கப் பார்க்கிறார். அதற்காக நகரத் தயாராக இருக்கிறார். அதனால், அவர் ஸ்டம்பிங் விஷயத்தில் இதே அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியாது" என்று கூறினார் அவர். இருவரும் வெவ்வேறு விதமான பௌலர்களுக்கு அப்படி நிற்கிறார்கள் என்றாலும், அவர்கள் பிரதானப்படுத்தும் விஷயம் மாறுபடுகிறது என்கிறார் அவர். அதேசமயம், "தன்னுடைய உடல் எப்படி வேலை செய்கிறது என்பதை உணர்ந்து, அதை தன்னுடைய ஆட்டம் மேம்படுவதற்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு கேரி ஒரு நல்ல உதாரணம். இந்த எண்ணம் தான் அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது" என்று சொல்கிறார் ஆர்த்தி. தோனி தன்னுடைய 'firm hands'-ஐ பயன்படுத்துவதுபோல், கேரி தன் வலதுபக்க இடுப்பைப் பயன்படுத்துகிறார் என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பந்தைப் பிடிக்கும் விஷயத்தில் தோனிக்கும், அலெக்ஸ் கேரிக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. ஆனால், இருவருமே கீப்பிங் இலக்கணத்திலிருந்து சற்று மாறுபடவே செய்கிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே! பிரிஸ்பேன் ஆஷஸ் (2025) டெஸ்ட் போட்டியிலிருந்து கேரியின் இந்த கீப்பிங் பரவலாகப் பேசப்படுவருகிறது. ஆனால், இதேபோன்ற செயல்பாட்டை அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார். 2022 டிசம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இதேபோல் இரண்டு கேட்சுகளைப் பிடித்தார் அவர். மைக்கேல் நெஸர் பந்துவீச்சில் ஸ்டம்புக்கு அருகில் நின்று கீப்பிங் செய்த அவர், ராஸ்டன் சேஸ் மற்றும் ஜாஷுவா டா சில்வா ஆகியோரின் கேட்சுகளைப் பிடித்தார். அந்த இரண்டு பந்துகளுமே மணிக்கு சுமார் 130 கிமீ வேகத்தில் வீசப்பட்டிருந்தன. அந்தப் போட்டி முடிந்த பிறகு பேசிய கேரி, "முதல் இன்னிங்ஸில் பந்தின் நகர்வைத் தடுக்க ராஸ்டன் சேஸ் தொடர்ந்து கிரீஸிலிருந்து வெளியே சென்று ஆடினார். அதனால், முன்னாள் வந்து நிற்கும் திட்டத்தை அப்போதே சொன்னேன். ஆனால், முதல் இன்னிங்ஸில் அதை செயல்படுத்த முடியவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் அதற்குப் பலன் கிடைத்தது" என்று கூறினார். பட மூலாதாரம்,Getty Images இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் 177 கேட்ச், 19 ஸ்டம்பிங் என 196 எதிரணி பேட்டர்களை அவர் ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார். இது ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த கீப்பர்களாகக் கருதப்படும் ராட் மார்ஷ், இயான் ஹீலி, ஆடம் கில்கிறிஸ்ட், பிராட் ஹாடின் ஆகியோரை விடவும் அதிகம். அதனால் தான் இன்று சிறந்த கீப்பர்கள் பற்றிய விவாதத்தில் கேரியின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்குப் பின் எஸ்இஎன் ரேடியோவுக்குப் பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் ஹீலி, "அவர் தான் தற்போதைக்கு உலகின் சிறந்த கீப்பர் என்று நினைக்கிறேன். அதுவும், இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாகவே..." என்று கூறியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx237lyzp0jo
-
மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்குமாறு ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தல்!
மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்குமாறு ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தல்! http://www.samakalam.com/wp-content/uploads/2025/12/Capture-2-300x201.jpg இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் ‘தித்வா’ சூறாவளியினால் வட, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் மற்றும் நிவாரண வழங்கல் செயற்பாடுகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டறிந்தார். அதற்குப் பதிலளித்த தமிழ்ப்பிரதிநிதிகள் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் 3000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் அழிவடைந்திருப்பதாகவும், திருகோணமலையிலும் இதனையொத்த நிலை பதிவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். அதேபோன்று மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த அரசாங்கம், இன்னமும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஜெய்சங்கரிடம் சுட்டிக்காட்டிய தமிழ்ப்பிரதிநிதிகள், மாகாணசபைத்தேர்தலைப் பழைய முறைமையில் நடாத்துவதற்கு ஏதுவாக இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை குறித்தும் எடுத்துரைத்தனர். அதுமாத்திரமன்றி மாகாணசபை முறைமையை நீக்கிவிட்டு, நிறைவேற்றதிகாரமுள்ள ஆளுநர் முறைமை உள்ளிட்ட வேறு முறைமைகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். எனவே இப்பேரனர்த்த சூழ்நிலையைக் காரணமாகக் குறிப்பிட்டு, அரசாங்கம் மாகாணசபைத்தேர்தல்களைப் பிற்போடுவதற்கு இடமளிக்கக்கூடாது என வேண்டுகோள்விடுத்த அவர்கள், ‘மாகாணசபைகள் என்பது இந்தியா பெற்ற பிள்ளை. நாங்கள் அதனை வளர்ப்பவர்கள் மாத்திரமே. எனவே அதனைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு இருக்கின்றது. ஆகவே மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ என்று வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது https://www.samakalam.com/மாகாணசபைத்-தேர்தலை-நடத்த/
-
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ரொக்கெட்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ரொக்கெட் Published By: Digital Desk 2 24 Dec, 2025 | 11:54 AM இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) இன்று புதன்கிழமை (24) அமெரிக்காவின் ASD தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான புளூபேர்ட்-6 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கம், விண்வெளியிலிருந்து நேரடியாக ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்குவதாகும். இதன் மூலம் தொலைபேசி சிக்னல் கோபுரங்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள் போன்ற இடங்களிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளைப் பெற முடியும். புளூபேர்ட்-6 செயற்கைக்கோள் 6,100 கிலோகிராம் எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள் பாகுபலி ராக்கெட் LVM3-M6 மூலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவுதல் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளம் மூலம் காலை 8.55 மணிக்கு நடைபெற்றது. ISRO இதன்மூலம், 6,100 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர், இதே அளவிலான எடையுள்ள செயற்கைக்கோள்களை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பிரெஞ்சு கயானா எனும் இடத்திலிருந்து ஏவியுள்ளன. இவ்வளவு எடையுள்ள செயற்கைக்கோளை இஸ்ரோ முதன் முறையாக வெற்றிகரமாக ஏவியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234288
-
தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ்
தையிட்டியில் பொலிஸ் சித்திரவதை: நிரோஷ் வைத்தியசாலையில் அனுமதி Dec 24, 2025 - 08:44 AM தையிட்டியில் அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அகிம்சை வழிப் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் மல்லாகம் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டபோது, பொலிஸாரால் கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டே கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல்களுக்கு உள்ளான வேலன் சுவாமிகள் ஏற்கனவே யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஆண்கள் விடுதி இலக்கம் 09 இல் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தற்போது 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmjjfwlyt0328o29nk79qoqs1
-
'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்
ஒன்டன் செட்ரோம் தடுப்பு மருந்து விவகாரம் : விசேட வைத்திய நிபுணர் தலைமையில் பிரத்தியேக குழு நியமனம் எவரேனும் குற்றமழைத்திருந்தால் கடும் சட்ட நடவடிக்கை - அரசாங்கம் Published By: Vishnu 24 Dec, 2025 | 03:53 AM (எம்.மனோசித்ரா) ஒன்டன் செட்ரோம் தடுப்பு மருந்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக விசேட வைத்திய நிபுணர் தலைமையில் பிரத்தியேக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைக்கமைய இந்த விவகாரத்தில் எவரேனும் குற்றமிழைத்திருந்தால் அவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒன்டன் செட்ரோம் தடுப்பு மருந்து தொடர்பில் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் இரு மரணங்கள் பதிவாகியுள்ளன. உயிரிழந்த இரு பெண்களும் காய்ச்சலுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மரணம் ஏற்படக் கூடியளவுக்கு நோய் அறிகுறிகள் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் இவர்களுக்கு வழங்கப்பட்ட ஒன்டன் செட்ரோம் தடுப்பு மருந்து வழங்கியதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் அவர்கள் உயிரிழந்தனரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த மரணங்கள் தொடர்பில் எமது கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இவை இடம்பெற்றிருக்கக் கூடாத மரணங்கள் ஆகும். அந்த அடிப்படையில் இவை குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தினால் தான் குறித்த இரு பெண்களும் உயிரிழந்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வெ வ்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து ஆராய்வதற்காக விசேட வைத்திய நிபுணர் தேதுரு டயஸ் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவிடம் இரு வாரங்களுக்குள் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கமைய இந்த மருந்தில் பிரச்சினை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் குறித்த மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் தேசிய முகவர் நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது மாத்திரமின்றி இவ்வாறு மருந்துகளை பாவிப்பதால் ஒவ்வாமை ஏற்படும் போது அவற்றை பாவனையிலிருந்து நீக்குவதில் ஏதேனும் கால தாமதம் ஏற்படுகின்றதா என்பது குறித்தும் ஆராயப்படுகிறது. டிசம்பர் 12ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் கண்டி வைத்தியசாலையிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய இந்த மருந்தை பாவனையிலிருந்து நீக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதற்கமைய செயற்படாமை தொடர்பில் ஏதேனும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விடயத்தில் ஏதேனும் குற்றமிழைக்கப்பட்டிருந்தால், அதற்கான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் எந்த தளர்வுகளும் இல்லை. இதனைக் கொண்டு அரசியல் இலாபமீட்ட முயற்சிப்பவர்களுக்கு அதற்கு இடமளிப்பதற்கும் அரசாங்கம் தயாராக இல்லை என்றார். https://www.virakesari.lk/article/234262
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
கருத்து படங்கள்
- விமான விபத்தில் லிபிய இராணுவ தளபதி உயிரிழப்பு
விமான விபத்தில் லிபிய இராணுவ தளபதி உயிரிழப்பு Published By: Digital Desk 3 24 Dec, 2025 | 09:16 AM துருக்கியில் நடைபெற்ற உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டத்தில் பங்கேற்க சென்ற லிபியா இராணுவ தளபதி முகம்மது அல் ஹதாத் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். துருக்கி தலைநகர் அங்கராவில் இருந்து புறபட்ட தனியார் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியுள்ளது. துருக்கியில் நடைபெற்ற உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டத்தில் பங்கேற்க லிபியா இராணுவ தளபதி சென்ற நிலையில், பங்கேற்றுவிட்டு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. லிபியா பிரதமர் அப்துல் ஹமித் டெபிபா இந்த தகவலை உறுதி செய்துள்ளார். தனது பேஸ்புக்கில் லிபிய பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், அங்காராவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு விட்டு லிபியா திரும்பிய போது இராணுவ தளபதி உள்ளிட்டோர் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த சோகமான விபத்தில், இராணுவ தளபதி உட்பட 04 பேர் உயிரிழந்தனர். லிபியாவிற்கு இது மிகப்பெரும் பேரிழப்பு” என்று பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/234271- மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தல்!
மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தல்! இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் ‘தித்வா’ சூறாவளியினால் வட, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் மற்றும் நிவாரண வழங்கல் செயற்பாடுகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டறிந்தார். அதற்குப் பதிலளித்த தமிழ்ப்பிரதிநிதிகள் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் 3000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் அழிவடைந்திருப்பதாகவும், திருகோணமலையிலும் இதனையொத்த நிலை பதிவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். அதேபோன்று மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த அரசாங்கம், இன்னமும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஜெய்சங்கரிடம் சுட்டிக்காட்டிய தமிழ்ப்பிரதிநிதிகள், மாகாணசபைத்தேர்தலைப் பழைய முறைமையில் நடாத்துவதற்கு ஏதுவாக இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை குறித்தும் எடுத்துரைத்தனர். அதுமாத்திரமன்றி மாகாணசபை முறைமையை நீக்கிவிட்டு, நிறைவேற்றதிகாரமுள்ள ஆளுநர் முறைமை உள்ளிட்ட வேறு முறைமைகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். எனவே இப்பேரனர்த்த சூழ்நிலையைக் காரணமாகக் குறிப்பிட்டு, அரசாங்கம் மாகாணசபைத்தேர்தல்களைப் பிற்போடுவதற்கு இடமளிக்கக்கூடாது என வேண்டுகோள்விடுத்த அவர்கள், ‘மாகாணசபைகள் என்பது இந்தியா பெற்ற பிள்ளை. நாங்கள் அதனை வளர்ப்பவர்கள் மாத்திரமே. எனவே அதனைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு இருக்கின்றது. ஆகவே மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ என்று வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1457101- இந்தியா இலங்கை மகளிர் சர்வதேச ரி20 தொடர்
இலங்கையுடனான 2ஆவது மகளிர் ரி20 போட்டியிலும் இந்தியா வெற்றி Published By: Vishnu 24 Dec, 2025 | 03:34 AM (நெவில் அன்தனி) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் விசாகப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை (23) இரவு நடைபெற்ற இரண்டாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா இலகுவாக 7 விக்கெட்களால் வெற்றியீட்டிது. ஸ்ரீ சரணியின் துல்லியமான பந்துவீச்சம் ஷபாலி வர்மாவின் ஆட்டம் இழக்காத அரைச் சதமும் இந்தியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தன. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. இதுவரை இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 28 மகளிர் சர்வதேச ரி20 போட்டிகளில் இந்தியா 22 - 5 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதுடன் அதன் ஆதிக்கம் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் இலங்கை 130 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டதுடன் மூவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். முதலாவது போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரட்ன இன்றைய ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே ஓரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்தப் போட்டியில் அணித் தலைவி சமரி அத்தபத்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் அளவுக்கு அதிகமாக பந்தை சுழற்றி அடிக்க முயன்று 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (38 - 2 விக்.) இதனைத் தொடர்ந்து ஹசினி பெரேரா, ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் இணைப்பாட்டத்தைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர். ஆனால், அவர்கள் இருவரும் 44 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் ஹசினி பெரேரா 22 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். மொத்த எண்ணிக்கை 104 ஓட்டங்களாக இருந்தபோது ஹர்ஷித்தா சமரவிக்ரம 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவர்களைவிட கவிஷா டில்ஹாரி 14 ஓட்டங்களையும் கௌஷினி நுதியங்கனா 11 ஓட்டங்களையும் பெற்றனர். பந்தவீச்சில் ஸ்ரீ சரணி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வைஷ்ணவி ஷர்மா 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 11.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஸ்ம்ரித்தி மந்தனா, ஷபாலி வர்மா ஆகிய இருவரும் 19 பந்துகளில் 29 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். மந்தனா இந்தப் போட்டியிலும் பிரகாசிக்கத் தவறி 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஷபாலி வர்மாவும் ஜெமிமா ரொட்றிகஸும் 2ஆவது விக்கெட்டில் 27 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். ஜெமிமா ரொட்றிகஸ் 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஷபாலி வர்மாவும் ஹாமன்ப்ரீத் கோரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் மொத்த எண்ணிக்கையை சமப்படுத்திய நிலையில் ஹாமன்ப்ரீத் கோர் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார். (128 -3 விக்.) அதன் பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட ஒரு ஓட்டத்தை ரிச்சா கோஷ் பெற்றுக்கொடுத்தார். ஷபாலி வர்மா 34 பந்துகளில் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 69 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 15 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மல்கி மதாரா 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் காவியா காவிந்தி 32 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஷபாலி வர்மா. இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/234255- ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!
பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் அர்ச்சுனா எம்.பி! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்றையதினம்(24.12.2025) சரணடைந்துள்ளார். பொலிஸில் சரண் குறித்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1457164- பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்!
பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்! கடுமையான வெப்பம் மற்றும் பரந்த பாலைவன நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற நாடான சவுதி அரேபியா அசாதாரண குளிர்கால அத்தியாயத்தை அனுபவித்து வருகின்றது. பனிப்பொழிவு, கனமழை மற்றும் கடுமையாக வீழ்ச்சியடைந்த வெப்பநிலை நாட்டின் பெரும்பகுதிகளை தற்சமயம் ஆக்கிரமித்து உள்ளது. இது குடியிருப்பாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது வேளையில் பாதுகாப்பு ஆலோசனைகளைத் தூண்டுவதற்கும் வழிவகுத்தது. இந்த அசாதாரண நிகழ்வு, காலநிலை மாற்றத்தைக் கையாளத் தயாராக இல்லாத பகுதிகளில் அசாதாரண வானிலையை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பனிப்பொழிவானது சவுதி அரேபியாவின் தபூக் மாகாணத்தில் உள்ள மலைத்தொடர்களின் தோற்றத்தை வியத்தகு முறையில் மாற்றியுள்ளது. குறிப்பாக ஜெபல் அல்-லாஸில் உள்ள ட்ரோஜெனா உட்பட, சுமார் 2,600 மீட்டர் உயரம் கொண்ட மலைப்பகுதிகள் பனியால் மூடப்பட்டிருந்தன. ஹெயில் நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட ஹெயில் பிராந்தியத்தின் சில பகுதிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டது – இது மத்திய கிழக்கு நாட்டில் அரிதான நிகழ்வு. அதிகாலை நேரங்களில் சில இடங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறைந்தது, இதனால் உயர்ந்த நிலங்களில் பனி குவிவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டன. குளிர் காற்றுடன் பல பகுதிகளில் பரவலான மழைப் பொழிவு பதிவானது. பிர் பின் ஹெர்மாஸ், அல்-அய்னா, அம்மார், அல்உலா கவர்னரேட், ஷக்ரா மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் ரியாத், காசிம் மற்றும் கிழக்குப் பகுதியின் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. தேசிய வானிலை ஆய்வு நிலையத்தின் தகவலின்படி, ரியாத்தின் வடக்கே உள்ள அல்-மஜ்மா மற்றும் அல்-காட் ஆகிய இடங்களிலும் பனிப்பொழிவு காணப்பட்டது – அங்கு திறந்தவெளி பகுதிகளிலும் உயரமான நிலப்பரப்பிலும் பனி படிந்துள்ளது. இதேவேளை குடியிருப்பாளர்கள் அவதானமாக வாகனம் செலுத்துமாறும் வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிளில் வசிப்பதை மற்றும் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சவுதி அரேபியாவின் காலநிலை வரலாற்றில் ஒரு அரிய மற்றும் மறக்க முடியாத தருணத்தைக் குறிக்கிறது. இதேவேளை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) எதிர்பாராத குளிர்கால மழை, தெற்காசியாவில் வரலாறு காணாத வெப்ப அலைகள், பொதுவாக வறண்ட மத்திய கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்காவின் சில பகுதிகளில் ஏற்பட்ட அசாதாரண பனிப்பொழிவு நிகழ்வுகள், காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் வானிலை எவ்வாறு அடையாளம் காண முடியாததாக மாறி வருகிறது என்பதைக் காட்டுகின்றன. https://athavannews.com/2025/1457130- வாட்ஸ்அப் பயன்படுத்தி புதுவித மோசடி - எப்படி நடக்கிறது? தவிர்ப்பதற்கான 3 வழிகள்
வாட்ஸ்அப் பயன்படுத்தி புதுவித மோசடி - எப்படி நடக்கிறது? தவிர்ப்பதற்கான 3 வழிகள் பட மூலாதாரம்,Getty Images/EPA கட்டுரை தகவல் அமரேந்திர யார்லகடா பிபிசி செய்தியாளர் 24 டிசம்பர் 2025, 02:55 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் கண்டிப்பாக இதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், சைபர் குற்றவாளிகள் வாட்ஸ்அப் மூலம் ஒரு புதிய வகை மோசடியைச் செய்து வருவதாகத் தெலங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தப் புதிய மோசடி 'வாட்ஸ்அப் கோஸ்ட் பேரிங்' (WhatsApp Ghost Pairing) என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் (MeitY) இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் நடக்கும் இந்த மோசடியில் சிக்கி விடாமமல் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ஹைதராபாத் மாநகர காவல் ஆணையர் மற்றும் தெலங்கானா சைபர் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர். X பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது X பதிவின் முடிவு 'வாட்ஸ்அப் கோஸ்ட் பேரிங்' மோசடி எப்படி நடக்கிறது? சைபர் குற்றங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், குற்றவாளிகளும் மோசடி செய்ய புதிய வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். கடந்த காலங்களில், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பி மால்வேர்களை புகுத்தியோ மோசடிகள் செய்யப்பட்டன. தற்போது வாட்ஸ்அப் 'பேரிங்' மூலம் மோசடி செய்யப்படுவதை காவல்துறை கண்டறிந்துள்ளது. "ஹேய்...என் புகைப்படத்தைப் பார்த்தாயா?" என்று ஒரு லிங்க் அனுப்புவதன் மூலம் இந்த மோசடி தொடங்குகிறது என்று ஹைதராபாத் மாநகர காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் தெரிவித்தார். "இந்த லிங்க் உங்களுக்குத் தெரியாத நபரிடமிருந்து மட்டுமல்ல, உங்களுக்குத் தெரிந்தவர்களிடமிருந்து வந்தாலும், தவறுதலாகக் கூட அதைக் கிளிக் செய்ய வேண்டாம்" என்று அவர் அறிவுறுத்தினார். இதுபோன்ற லிங்க்கை கிளிக் செய்தால், போலியான வாட்ஸ்அப் வெப் பக்கம் திறக்கப்படும் என்றும், எந்தவிதமான ஒடிபி அல்லது ஸ்கேனிங்கும் இல்லாமலே உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கரின் சாதனத்துடன் (கணினி, லேப்டாப் அல்லது மொபைல்) இணைக்கப்பட்டுவிடும் என்றும் சஜ்ஜனார் குறிப்பிட்டார். அந்த சமயத்தில், பயனர்கள் தங்கள் சொந்தக் கணக்கைப் பயன்படுத்த முடியாதவாறு லாக் செய்யப்படுவார்கள் என்றும் அவர் விளக்கினார். ஒருமுறை அந்த லிங்கில் இணைந்தவுடன் என்ன நடக்கும்? இதுகுறித்து தெலங்கானா சைபர் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் ஷிகா கோயல் கூறுகையில், சைபர் குற்றவாளிகள் பயனர்களின் தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்கை தங்கள் சாதனங்களுடன் இணைத்த பிறகு, தகவல்களைத் திருடுகின்றனர் என்று தெரிவித்தார். "வங்கி கணக்கு விபரங்கள், தனிப்பட்ட உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற விபரங்கள் அனைத்தும் சைபர் குற்றவாளிகளின் கைகளில் சிக்கிக்கொள்கின்றன. அவர்கள் அந்தப் பயனரின் பெயரைப் பயன்படுத்தி மற்றவர்களுக்குச் செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றனர்" என்று அவர் விளக்கினார். பட மூலாதாரம்,UGC 'இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்' என்ன கூறியது? ஆகாசவாணி நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, 'கோஸ்ட் பேரிங்' தொடர்பாக பொதுமக்களுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEIT) எச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. "வாட்ஸ்அப்பில் உள்ள டிவைஸ் லிங்கிங் வசதியை பயன்படுத்தி குற்றவாளிகள் வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்து வருகின்றனர். பேரிங் கோட் உதவியுடன், எந்த கூடுதல் அங்கீகாரமும் இல்லாமல் வாட்ஸ்அப் கணக்குகள் ஹேக் செய்யப்படுகின்றன" என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,UGC மோசடியில் சிக்காமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEIT) சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை (links) எப்போதும் கிளிக் செய்யக் கூடாது என்று எச்சரித்துள்ளது. இதையே ஷிகா கோயல் பிபிசியிடமும் தெரிவித்துள்ளார். அவர் வழங்கியுள்ள முக்கிய 3 அறிவுரைகள் பின்வருமாறு: வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள "இணைக்கப்பட்ட சாதனங்கள்" (Linked Devices) என்ற ஆப்ஷனை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். அறிமுகமில்லாத அல்லது தெரியாத சாதனங்கள் இணைக்கப்பட்டிருப்பதாக இருந்தால், உடனடியாக லாக் அவுட் (Log out) செய்ய வேண்டும். வாட்ஸ்அப் செட்டிங்ஸ் அக்கவுண்டுக்குச் சென்று "இரண்டு அடுக்கு சரிபார்ப்பு" (Two Step Verification) வசதியை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும். பட மூலாதாரம்,UGC உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தாலும், ஹேக்கிங் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது என்று போலீசார் எச்சரிக்கின்றனர். வாட்ஸ்அப் அல்லது இணைய பிரௌசர் (browser) ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் ஏற்பட்டால், அதை உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஷிகா கோயல் கூறுகிறார். ஹேக்கிங் நடந்த போது தோன்றக் கூடிய செய்திகள், லிங்குகள், பாப்-அப் அறிவிப்புகள் ஆகிய அனைத்தையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பாதுகாத்து வைக்க வேண்டும். பரிவர்த்தனை ஐடிகள் (Transaction ID), யுடிஆர் எண்கள்(UTR), அழைப்பு பதிவுகள் (call logs) போன்ற விபரங்களை சேமித்து வைத்திருக்க வேண்டும். மின்னஞ்சல், வங்கி, சமூக வலைதள கணக்குகளின் கடவுச்சொற்களை உடனடியாக மாற்ற வேண்டும். வங்கிக் கணக்கு அல்லது கட்டண செயலியில் பணம் காணாமல் போயிருந்தால், உடனே சம்பந்தப்பட்ட வங்கி அல்லது செயலி நிறுவனத்தை தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும். கூகுள் குரோம் மற்றும் பிற செயலிகளை அதிகாரப்பூர்வமான புதிய பதிப்புகளுக்கு (latest versions) உடனடியாக புதுப்பிக்க வேண்டும். எப்படி புகார் செய்வது? எந்தச் சூழ்நிலையிலும் ஓடிபி (OTP), பிஐஎன் (PIN), சிவிவி (CVV), வாட்ஸ்அப் குறியீடுகள் (codes) போன்ற தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிரக்கூடாது என்று தெலங்கானா காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது சைபர் குற்றங்கள் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தாலோ, உடனடியாக 1930 என்ற உதவி எண்ணில் அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று ஷிகா கோயல் அறிவுறுத்தியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c93n53r0nglo- கொக்கிளாயில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணி வழங்க இடமளிக்க முடியாது! ; ரவிகரன் கடும் எதிர்ப்பு
புலம்பெயர்ந்தோர் சிலர், மலையக மக்களுக்கு காணி, வீடு வழங்க இருப்பதாக சிலர் கூறிக்கொள்கின்றனர். அவர்களை காணி வங்கி என்கிற அமைப்பின் கீழ் பதியுமாறும் அவ்வாறான காணிகளை காணி தேவையானவர்களுக்கு அளிக்கப்படுமாம் அதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமாம் என்று கூறிக்கொள்கின்றனர். அப்படியானால் சிங்களவரும் விண்ணப்பிக்கலாம் அல்லவா? அப்படி விண்ணப்பித்து அவர்களுக்கு மறுக்கப்பட்டால் அதன் விளைவு என்னவாக அமையும்? உண்மையிலேயே வடக்கிலேயே பலர் காணியின்றி, வீடின்றி, குடிசைகளிலும், ஓட்டை வீடு, ஒழுகும் கூரை, பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்கள் வாழ்கின்றன, காணி இருந்தும் வீடு கட்ட இயலாத நிலைமையிலும் வாழ்கிறார்கள். அவர்களை கவனிக்க யாரும் நினைப்பதில்லை.- தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
மிக பிந்திய செய்தி ஒன்று அனுர தொய் பபா… அவருக்கு மூக்கை பிடித்தால் வாயை திறக்கத்யெரியாது…. பிகு காவடியில்தான் எத்தனை எத்தனை வகைகளடா சாமி😂- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
- விமான விபத்தில் லிபிய இராணுவ தளபதி உயிரிழப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.