Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala, which formed an integral part of ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document: shirini
  3. ஆண்கள்.... நான்கு போத்தல்களும், பெண்கள்... இரண்டு போத்தல்களும் தவறாமல் வாங்குவார்கள். 😂 அதனால்... நமது வியாபாரம் நட்டம் இல்லாமல், ஓஹோ... என்று ஓடுது. 🤣
  4. Today
  5. அல்பிரேட் நோபல் தனது சொந்த விருப்படி எழுதிவைத்த மரண சாசனத்தில் சொல்லப்பட்ட பரிசுகள் 5 (Physics, Chemistry, Physiology or Medicine, Literature, Peace) ஆனால் பின்நாளில் வந்தது அல்பிரேட் நோபல் நினைவுப்பரிசு எனப்படும் பொருளாதார(Economic Sciences) பரிசு. இதையும் நோபல் கமிட்டியே பொறுப்பேற்று வழங்குகிறது ஆனால் அதற்கான செலவை சுவீடன் நாட்டின் மத்திய வங்கி ஏற்றுக் கொள்கிறது. ஏனைய 5 பரிசுகளுக்கான செலவுகளுக்கு மறைந்த நோபலின் சொத்துக்களால் கிடைக்கும் வருமானம் பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரத்துக்கான பரிசை நோபலின் நினைவுப்பரிசாக அவரின் உண்மையான 5 மரண சாசன பரிசுகளுடன் இணைத்துக்கொண்டதற்கு நோபலின் சந்ததியினர் கடும் விசனம் தெரிவித்து அதை மத்திய வங்கியின் ஒரு விளம்பர உத்தி என தமது அதிருப்தியை வெளியிட்டிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
  6. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு- 19 காளைகளை அடக்கியவருக்கு முதல் பரிசு பட மூலாதாரம்,@mkstalin 17 ஜனவரி 2026, 02:29 GMT புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 17) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக 600 வீரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருந்த நிலையில் 555 பேர் பங்கேற்க வந்திருந்தனர். இதில் உடல் தகுதியின்மை, மது அருந்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக 60 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 495 பேர் போட்டியில் பங்கேற்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மாடுபிடி வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கி வைத்தனர். அலங்காநல்லூரில் உள்ள முக்கிய கோவில்களின் காளைகள் வாடிவாசல் வழியே முதலில் அவிழ்த்து விடப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், காவலர்கள், தீயணைப்பு வீரர், பார்வையாளர்கள் உட்பட 63 பேர் காயமடைந்தனர். இதில் 21 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீரர்களுக்கு மற்றும் காளைகளுக்கு பரிசு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக அளிக்கப்பட்டது. இந்த பரிசு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பாக வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் 2ஆம் இடம் பிடித்தார். அவருக்கு மோட்டார் பைக் பரிசாக பரிசாக அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் பாசிங்காபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் 11 காளைகளை அடக்கி 3ஆம் இடம் பிடித்தார். அவருக்கு எலக்ட்ரிக் பைக் பரிசாக வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.வி. பாலா என்பவரின் காளை முதலிடம் பெற்றது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக டிராக்டர் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மாடு இரண்டாம் இடம் பெற்றது. இவருக்கு மோட்டார் பைக் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கென்னடி என்பவரின் காளை மூன்றாவது பரிசினை வென்றது. அவருக்கு எலக்ட்ரிக் பைக் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. 63 பேர் காயம் அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடி வீரர்கள் 17 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 20 பேர், காவலர்கள் 4 பேர், தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 5 பேர் மற்றும் பார்வையாளர்கள் 21 பேர் என மொத்தம் 63 பேர் காயமடைந்தனர் இதில் பலத்த காயமடைந்த 22 வயது இளைஞர் உட்பட 21 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பட மூலாதாரம்,@mkstalin 'அதிக காளைகளை அடக்கினால் அரசு வேலை' அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்வையிட்ட தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக செயல்பட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம், தங்க மோதிரம் போன்ற பரிசுகளை வழங்கினார். அதன்பிறகு பேசிய முதல்வர், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை உள்பட இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். "ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலேயே, கால்நடை பராமரிப்பு துறையில் உரிய அரசுப் பணியிடங்களுக்கு பணியமர்த்தி வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அலங்காநல்லூரில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய் செலவில் செய்து தரப்படும்" என்று அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஜல்லிக்கட்டைப் பார்த்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதற்கிடையில் வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டை பார்வையிட வந்தனர். பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பல்வேறு நாட்டில் இருந்து மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர். "மதுரை ஜல்லிக்கட்டு போல எங்க ஊரில் ஏதும் நடக்காது. மதுரை மாடு பிடி வீரர்கள் ரொம்பவே சூப்பர்" என மகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவித்தனர். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx20xjkl1y7o
  7. 8 பைக்கற் சீமந்து, 2 லான்ட் மாஸ்ரர் மணல், 20 கம்பி, 2 லான்ட் மாஸ்ரர் சல்லி பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 1 கிலோ கட்டு கம்பி.
  8. கொழும்பு துறைமுக நகரத்தில் The Food Harbour உணவக மையம் திறப்பு ! Published By: Digital Desk 1 17 Jan, 2026 | 09:34 PM கொழும்பு துறைமுக நகரத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திறந்தவெளி உணவக மையமான ‘த ஃபுட் ஹார்பர்’ (The Food Harbour), நேற்று மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களின் வருகையுடன் நிகழ்வு ஆரம்பமாகியதை தொடர்ந்து உணவுத் துறைமுகம் பற்றிய கண்ணோட்டம் இடம்பெற்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் மற்றும் ஏனைய விருந்தினர்கள் உட்பட பல பிரமுகர்களுடன் இணைந்து, உத்தியோகபூர்வமாக இதனை ஆரம்பித்து வைத்தனர். கொழும்பு துறைமுக நகர பிரதிநிதிகள் மற்றும் அழைக்கப்பட்ட தலைமை விருந்தினர்களால் முக்கிய உரைகள் நிகழ்த்தப்பட்டன. கொழும்பு துறைமுக நகரத்தின் பரந்த வளர்ச்சிப் பார்வைக்கு பங்களிப்பதில் உணவு மையம் போன்ற முயற்சிகளின் முக்கியத்துவத்தை அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். ஃபுட் ஹார்பர் என்பது இலங்கையின் முதல் சர்வதேச தரத்திலான திறந்தவெளி உணவு மற்றும் பான இடமாகும், இது கொள்கலன் பூங்கா பாணி சமையல் மையமாக உருவாக்கப்பட்டது. நேற்று (16) பொதுமக்களுக்குத் திறக்கப்படும் இது, சுற்றுலாப் பயணிகள், நிறுவனங்கள், குடும்பங்கள் மற்றும் உணவு ஆர்வலர்களுக்கு உணவளிக்கும் உலகளாவிய மற்றும் உள்ளூர் உணவு வகைகளை வழங்கும் பல்வேறு வகையான உணவு மற்றும் பான பிராண்டுகளை ஒன்றிணைக்கிறது. உணவருந்தலுக்கு அப்பால், தி ஃபுட் ஹார்பர், போர்ட் சிட்டி கொழும்பின் வாழ்க்கை முறை மற்றும் ஓய்வு இடமாக அதன் நிலைப்பாட்டை வலுப்படுத்துகிறது, அதேநேரம், இலங்கை மற்றும் பிராந்திய பிராண்டுகளுக்கு உயர்-தெரிவுநிலை தளத்தை வழங்குகிறது மற்றும் விருந்தோம்பல் மற்றும் உணவு சேவைத் துறைகளில் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது. தி ஃபுட் ஹார்பரின் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களிடையே நெட்வொர்க்கிங் ஆகியவற்றுடன் நிகழ்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236278
  9. யாயினி, மெசினின்... டிசைன், ரெக்னிக் எல்லாம் என்னுடையது. 😂 தயாரிப்பு, நிர்வாகம் எல்லாம் வேறு ஒருவருடையது. 🤣 வாடிக்கையாளர்.... வேறை யார்? நீங்கள் தான். 😜
  10. கைகுலுக்க மறுத்த இந்தியா, வங்கதேச கேப்டன்கள்: அண்டர்-19 உலகக் கோப்பையில் நடப்பது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டாஸின் போது ஆயுஷ் மாத்ரே மற்றும் வங்கதேசத்தின் துணை கேப்டன் ஜவாத் அப்ரார் கைகுலுக்கவில்லை 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்கள், தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகளிலும் எதிரொலித்துள்ளது. புலவாயோ நகரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டிகளின்போது, டாஸ் போடும் போது இரு கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகள் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் ஜனவரி 15 முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா விளையாடிய முதல் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் (டக்வொர்த் லீவிஸ் விதிப்படி) அமெரிக்காவை தோற்கடித்தது. சனிக்கிழமையன்று இந்தியா தனது இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது. கைகுலுக்காத கேப்டன்கள் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் இருந்து இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான உறவுகள் பதற்றமாகவே இருந்து வருகின்றன. வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்களுக்குப் பிறகு இந்தியாவிலும் போராட்டங்கள் வெடித்தன. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே அரசியல் ரீதியாகவும் ராஜாங்க ரீதியாகவும் பதற்றமான நிலை நிலவிவருவதால், 2026 ஐபிஎல் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டது. இந்த ஒட்டுமொத்த சர்ச்சையின் தாக்கம் இப்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியிலும் காணப்பட்டது. சனிக்கிழமையன்று இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே மற்றும் வங்கதேச துணை கேப்டன் ஜவாத் அப்ரார் ஆகியோர் டாஸ் போட வந்தபோது, இருவரும் வழக்கமான முறையில் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. வங்கதேச அணியின் கேப்டன் அஜீசுல் ஹக்கீம் டாஸ் போடுவதற்கு வரவில்லை, அவருக்கு பதிலாக துணை கேப்டன் அப்ரார் வந்தார். இருப்பினும், அஜீசுல் ஹக்கீம் இந்தியாவிற்கு எதிரான ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்தார். டாஸ் வென்ற அப்ரார் முதலில் பந்துவீச முடிவு செய்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஆயுஷ் மாத்ரே 6 ரன்களில் ஆட்டமிழந்தார் சமூக வலைதளங்களில் பரபரப்பாகும் விவாதம் U-19 (19 வயதுக்குட்பட்டோருக்கான) அணி கேப்டன்கள் கைகுலுக்காதது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள விளையாட்டுப் பத்திரிகையாளர் அமோல் கர்ஹட்கர், "மைதானத்திற்கு வெளியே விசா ராஜதந்திரம். மைதானத்தில் கைகுலுக்காத கொள்கை. கிரிக்கெட் என்பது ஒரு காலத்தில் கண்ணியவான்களின் விளையாட்டாகக் கருதப்பட்டது," என்று ஆதங்கத்துடன் எழுதியுள்ளார். அதேபோல், வங்கதேச கிரிக்கெட் ரசிகர் ஒருவரின் எக்ஸ் வலைதளப் பதிவில், "கை குலுக்காமல் நடத்தும் நாடகம் தொடர்கிறது. இம்முறை இதில் வங்கதேசமும் சேர்ந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் 'கைகுலுக்காத' சர்ச்சையும், அது தொடர்பான வாத-விவாதங்களும் விளையாட்டு உலகில் பிரபலமானது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தியா மற்றும் பாகிஸ்தான் 'கைகுலுக்காத' சர்ச்சை இந்தியா - பாகிஸ்தான்: 'கைகுலுக்காத' நிகழ்வு இதற்கு முன்னதாக, ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 'கைகுலுக்காத' விவகாரம் அரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு, செப்டம்பர் மாதம் நடந்த ஆசியக் கோப்பையில் இரு நாட்டு அணிகளும் முதன்முறையாக கிரிக்கெட் போட்டியில் ஒன்றையொன்று நேருக்கு நேர் எதிர்கொண்டன. அப்போது டாஸ் போடும் போது, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா ஆகியோருக்கு இடையே வழக்கமான 'கைகுலுக்கல்' நடைபெறவில்லை. டாஸின் போது கைகுலுக்க வேண்டாம் என்று போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் இரு அணி கேப்டன்களிடமும் கூறியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிஸ் ஐசிசி-இடம் பாகிஸ்தான் புகாரும் அளித்தது. போட்டி நடுவரை மாற்றாவிட்டால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்றும் பாகிஸ்தான் கூறிவிட்டது. இதன் காரணமாகவே ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையிலான நாக்-அவுட் போட்டி தொடங்க தாமதமானது. இதன் பிறகு, இந்த விவகாரத்தில் போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இருப்பினும், 'கைகுலுக்காத கொள்கையை' இரு அணிகளும் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை கடைப்பிடித்தன. இறுதிப் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்துவிட்டது. அப்போதும் இரு அணிகளுக்கும் இடையே பதற்றம் காணப்பட்டது. மொஹ்சின் நக்வி அந்தக் கோப்பையைத் தன்னுடன் எடுத்துச் சென்றார், இதனால் இந்தியா தான் வென்ற ஆசியக் கோப்பையை இதுவரை பெறவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpqy5v4n3qqo
  11. இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் Jan 17, 2026 - 06:55 PM இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்படவுள்ள எரிக் மேயர் அவர்களின் நியமனப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க செனட் சபை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, செனட் சபையின் பரிந்துரைகள் அமெரிக்க ஜனாதிபதிக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. செனட் சபையின் வெளிவிவகாரக் குழு முன்னிலையில் எரிக் மேயர் வழங்கிய விளக்கங்களைத் தொடர்ந்தே இந்தப் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரேஷ்ட இராஜதந்திரி ஒருவராகக் கருதப்படும் எரிக் மேயர், இலங்கையின் புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். அவர் அமெரிக்க வெளிவிவகார சேவையின் சிரேஷ்ட உறுப்பினராவதுடன், தற்போது தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். அத்துடன் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்கக் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். இலங்கையின் அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய ஜூலி சங் நேற்று (16) தனது பதவியிலிருந்து விடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmkicbb3u0423o29nqge933ri
  12. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 92 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 92 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 33: துட்டகாமினியின் மகன் சாலி ராஜகுமாரன் [Salirajakumara] ஒரு சண்டாளப் (மிகவும் தாழ்ந்த சாதி / சண்டாளன் (Chandala) (சமக்கிருதம்: चण्डाल) என்ற சமசுகிருத சொல்லிற்கு சுடுகாட்டில் பிணஞ்சுடுபவரைக் குறிக்கும். இவர்கள் சுடுகாட்டிலே பிணஞ்சுடும் தொழிலைப் பரம்பரையாகச் செய்து வருகின்றனர். தமிழில் சுடுகாட்டில் பணிபுரிபவர்களை வெட்டியான் என்று அழைப்பர்.) பெண்ணை நேசித்ததால், அந்த சண்டாள பெண்ணுக்காக தனது அரச பதவியை அவன் துறந்தான். அதனால், துட்டகாமினியின் சகோதரரான சத்தாதீசன் [சத்தா திச்சன் / Saddha Tissa] அரசரானார். இவர் பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். சத்தாதீசன் நான்கு மகன்களைப் பெற்றார்; லஞ்ச திச்சன், துலத்தன், கல்லாட நாகன் மற்றும் வலகம்பாகு அல்லது வட்டகாமினி அபயன் [Lanjatissa, Thulathana, Khallatanaga, and Vattagamani]. இரண்டாவது மகனான துலத்தன், லஞ்ச திச்சனை விட இளையவராக இருந்தாலும், அவை உறுப்பினர்கள் [councillors] மற்றும் பிக்குகளின் ஆலோசனையின் பேரில் அல்லது விருப்பத்தின் பேரில் அரியணை ஏறினார். இதனால், நட்புமுறிவுற்று, மனவேறுபாடு கொண்ட மூத்த சகோதரர் லஞ்ச திச்சன் [Lanja Tissa, also known as Lamani Tissa] ஒரு மாதம் மற்றும் பத்து நாட்களில் துலத்தனை வென்று அரசரானார். லஞ்ச திச்சன் ஒன்பது ஆண்டுகள் மற்றும் ஒன்றரை மாதங்கள் ஆட்சி செய்தார். லஞ்ச திச்சன் இறந்த பிறகு, அவரது தம்பி கல்லாட நாகன் அரசரானார், ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். கல்லாட நாகனின் தளபதி ராஜாவை வென்றார், ஆனால் ராஜாவின் தம்பி வட்டகாமினி தளபதியைக் கொன்று ராஜாவானார். வட்டகாமினி கல்லாட நாகனின் மகன் மகசுழி மகாதிஸ்ஸனை [Mahaculika] தனது சொந்த மகனாகக் கவனித்துக் கொண்டார். தனது சகோதரர் கல்லாட நாகனின் மனைவியான அனுலா தேவியை [Anula devi] தனது சொந்த மனைவியாகவும் ஆக்கிக் கொண்டார். அவருக்கு ஏற்கனவே மற்றொரு மனைவி சோமாதேவி [Somadevi] இருந்தார். சுமார் ஆறு மாதங்களில், ஏழு தமிழர்கள் தங்கள் படைகளுடன் மகா திட்டு [Mahatittha] என்ற இடத்தில் தரையிறங்கினர். அதே நேரத்தில், ரோஹணாவில் [Rohana] வசித்து வந்த தீசன் [Tissa] என்ற பிராமணன் (எனவே, திஸ்ஸா அல்லது தீசன் என்பது பிரத்தியேகமாக ஒரு பௌத்த பெயர் அல்ல) ராஜாவுக்கு எதிராகக் கலகம் செய்து கொண்டிருந்தார். வட்டகாமினி தீசனிடம் சாதுரியமாக இந்த இராச்சியம் உங்களுடையது, ஆனால் மகா திட்டில் தரையிறங்கிய ஏழு தமிழர்களை வெல்லுங்கள் என்று கூறினார். என்றாலும் பிராமணர் ஏழு தமிழர்களுடன் போரிட்டு தோற்றார். ஏழு தமிழர்கள் அபகரிப்பாளர்கள் அல்ல, ஏனெனில் அவர்கள் ராஜா விதித்த நிபந்தனையின் பேரில் பிராமணரிடமிருந்து வெற்றி பெற்று தான் இராச்சியத்தை கைப்பற்றினர். பின்னர் அவர்கள் மன்னர் வட்டகாமினியுடன் சண்டையிட்டனர். ஆனால் மன்னர் ஒரு கட்டத்தில் அங்கிருந்து ஓடிவிட்டார். அவர் தப்பி ஓடும்போது கர்ப்பிணியாக இருந்த அனுலா தேவியைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணியவனாக அவன் அவளுடனும், அனுலா தேவியின் மகன் மகசுழி மகாதிஸ்ஸன் மற்றும் அவரது சொந்த மகன் மகாநாகனையும் [Mahanaga] அழைத்துச் சென்றார். என்றாலும் தேரின் சுமையைக் குறைக்கவென அவர் தனது அசல் மனைவி சோமா தேவியை அழைத்துச் செல்லவில்லை. ஆனால், சோமாதேவியிடம் தனது கிரீடத்தை கொடுத்துவிட்டு அவளை விட்டுவிட்டு ஓடிவிட்டார். அதுமட்டும் அல்ல, புத்தர் பயன்படுத்தியதாக கருத்தப்பட்ட தானம் செய்யும் பாத்திரத்தைக் கூட அவர் எடுத்துச் செல்லவில்லை. இந்த பிட்சா பாத்திரம் [பிச்சைப்பாத்திரம்; இரப்போர் கலம்], தேவநம்பிய தீசன் காலத்தில் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டதாக மகாவம்சம் கூறுகிறது. வட்டகாமினி பதினான்கு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தபோது தனசிவன் [Tanasiva] என்ற தமிழ்ப் பெயர் உடைய ஒருவரால் பராமரிக்கப்பட்டார். பின்னர் அனுலாதேவிக்கும் தனசிவனின் மனைவிக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது. அதை சமாதானமாக தீர்க்காமல், தன்னை பதினான்கு ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்த தனசிவனைக், வட்டகாமினி கொன்றான். அதேவேளை, சோமாதேவியின் அழகில் மயங்கிய ஏழு தமிழ்களில் ஒருவர், தாம் வந்த நோக்கத்தை மறந்து, தாம் பெற்ற வெற்றியை மறந்து, அவளை அழைத்துக்கொண்டு, அது தனக்கு போதுமென அடுத்த கரைக்குச் சென்றான். என்றாலும் அவனது பெயர் மகாவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை; அது ஒரு கற்பனையான கதாபாத்திரமாக இருக்க வேண்டும். மற்றொருவர் பத்து அதிசய சக்திகள் படைத்த குருநாதருடைய [புத்தரின்] தானப் பாத்திரத்தை [பிட்சா பாத்திரத்தை] எடுத்துக்கொண்டு, அதேபோல, அவரும் மற்ற கரைக்குச் சென்றான். வெற்றியாளர் தானம் செய்யும் பாத்திரத்தில் திருப்தியடைகிறார் என்றால், மறு கரையில் புத்தர் மிகவும் பெருமையாக வணங்கப்பட்டிருக்க வேண்டும். இங்கேயும் முன்போலவே, அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை; மகாநாமவின் கற்பனை மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும். மேலும், தீபவம்சத்தில் ஏழு அல்ல, ஐந்து தமிழர்கள் தான் உள்ளனர். மேலும் பிராமணரின் கதையும் தீபவம்சத்தில் இல்லை. எனவே கட்டாயம் இந்த மூன்று பேரும் மகாநாமவின் கறபனையே என்பது உறுதிப்படுத்தப் படுகிறது. இந்த மன்னர்கள் ஐவரும் [Pulahatta, Bahiya, Panya Mara, Pilaya Mara, and Dathiya, அநுராதபுரத்தின் பஞ்ச பாண்டியர் எனவும் இவர்கள் அழைக்கப்பட்டனர்] தமிழ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் எதிர் கரையைச் சேர்ந்தவர்கள் என்றும் தீபவம்சமும் கூறுகிறது. ஐந்து தமிழர்களில் ஒருவரான புலாகதன்[புலஹதன் / Pulahatha] என்ற தமிழன், பாகியன் [பாஹியா / Bhaiya] என்ற தமிழனைத் தன்னுடைய படைத் தலைவவனாக வைத்துக்கொண்டு மூன்று வருட காலம் ஆட்சி செய்தான். என்றாலும், அவனது தளபதி பாகியன், புலாகதனைக் கொன்று இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். மீண்டும் அவனது தளபதி பாண்டிய மாறன் [பணயமாறன் / Panayamara] பாகியனைக் கொன்று ஏழு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இவன் தன் முந்தைய அரசனான பாகியன் இடம் அமைச்சனாக இருந்து அவனையே கொன்று ஆட்சியை கைப்பற்றியது போல் இவனின் அமைச்சனாக இருந்த பழைய மாறன் [Pilayamara] இவனைக் கொன்று இவனுக்கு பின் ஆட்சிக் கட்டில் ஏறினான். அதே போல, இவனின் அமைச்சனாக இருந்த தாட்டியன் [Dathika] இவனைக் கொன்று இவனுக்குப் பின் ஆட்சிக் கட்டில் ஏறினான். முறையே இருவரும் ஏழு மாதங்களும் மற்றும் இரண்டு ஆண்டுகளும் ஆட்சி செய்தார்கள். வட்டகாமினி திரும்பி வந்து தாட்டியனைக் கொன்று பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். 33 ஆம் அத்தியாயத்தின் 78 ஆம் வசனம்: 'புகழ்பெற்ற மன்னன் அனுராதபுரத்துக்கு வந்து தமிழன் தாதிகனைக் கொன்று ஆட்சியை வசப்படுத்திக் கொண்டான்' என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் வட்டகாமினி சோமதேவியை அழைத்து அவளுக்கு பொருத்தமான பதவி வழங்கினார். அவள் இந்தியாவுக்கு முன்பு ஒரு பெயர் தெரியாத தமிழனால், தன் மனைவியாக அழைத்துச் செல்லப்பட்டிருந்தால், பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவனின் மனைவியாக வாழ்ந்த பின்பு, இந்தியாவில், அந்த பரந்த பெரிய நாட்டில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அவளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதானதும் அல்ல. என்றாலும் வட்டகாமினி உடனடியாகவே அழைத்து வந்தான், நம்புபவர்கள் இருக்கும் மட்டும், இப்படியான நிகழ்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கும்! என்றாலும் எதிர் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட புத்தரின் பிச்சைப் பாத்திரத்தைப் பற்றி கவலைப்படவில்லை என்று தெரிகிறது; யார் கவலைப்படுகிறார்கள்! எங்கே பிக்குமார் அல்லது புத்த பத்திமான்கள் இலங்கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்துகிறார்கள் ?, அது புத்தர் பிறந்த நாட்டிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டான் போலும்! Part: 92 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 33: Salirajakumara was the son of Dutthagamani, and he loved a Candala (very lower caste) woman and forsook the kingship in preference to the Candala woman whom he loved. Saddhatissa, the brother of Duttha Gamani, became the king, and ruled for eighteen years. Saddhatissa had four sons; Lanjatissa, Thulathana, Khallatanaga, and Vattagamani. Thulathana, the second son, ascended the throne on the advice or the preference of the councillors and Bikkhus, even though he was younger to Lanjatissa. The estranged elder brother Lanjatissa overpowered Thulathana in one month and ten days and became the king. Lanjatissa ruled for nine years and a half-month. On the death of Lanjatissa, his younger brother Khallatanaga became the king and ruled for six years. Khallatanaga’s commander overpowered the king, but the king’s younger brother Vattagamani killed the commander and became the king. Vattagamani took care of the son of Khallatanaga, Mahaculika, as his own son. He also made Anuladevi, the wife of his brother Khallatanaga, his own wife. He already had another wife Somadevi. In about six months, seven Damilas landed at Mahatittha with their troops. There was, at the same time, a Brahmin in Rohana with the name Tissa. (Tissa is not exclusively a Buddhist name). This Brahmin was rebelling against the king. Vattagamani shrewdly told Tissa that the kingdom belongs to you, but win over the seven Damilas landed at Mahatittha. The Brahmin fought the seven Damilas and lost. Seven Damilas were not usurpers as they won the kingdom by conquest from the Brahmin by conquest on the condition issued by the king. Then they fought the king Vattagamini and the king fled. When he was fleeing, he took Anuladevi, her son Mahaculika, and his own son Mahanaga with him. He did not take his original wife Somadevi to reduce the load on the car, the chariot. He gave his diadem jewel to Somadevei and fled without her. He did not take the alms-bowl used by the Buddha also with him. Vattagamni was taken care of by Tanasiva, a Tamil name, for fourteen years when he was in hiding. Later there was a quarrel between Anuladevi and the wife of Tanasiva and Vattagamni killed Tanasiva who gave him refuge for fourteen years. One of the seven Damilas, enamoured by the beauty of Somadevi, took her and went to the further coast. His name is not given in the Mahavamsa; must be a fictitious character. Another one took the alms-bowl of the Buddha and left for the other coast well contended. The Buddha must have been venerated on the other coast for a victor to be satisfied with the alms-bowl. His name is also not given in the Mahavamsa; the flight of fancy of Mahanama must have soared very high. Furthermore, it is not seven but five Damilas in the Dipavamsa. The story of the Brahmin is also not in the Dipavamsa. The Dipavamsa says that these kings belonged to Damila tribe, but does not say that they were from the opposite coast. Pulahatha, one of the five Damilas, ruled for three years. His commander Bhaiya slew Pulahatha and ruled for two years. His commander in chief Panayamara slew Bahiya and ruled for seven years. His commander in chief, Pilayamara, slew Panayamara and ruled for seven months. Dathika slew Pilayamara and ruled for two years. Vattagamini came back, killed Dathika, and ruled for twelve years. It is stated in the 33-78 that Dathika was a Damila. Vattagamini then sent for Somadevi and raised her to the appropriate rank. If she was taken to India, was it then so easy to find her in India after fourteen years as an unknown person took her? Vattagamini seems to have not bothered by the Buddha’s alms-bowl taken to the opposite coast. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 93 தொடரும் / Will follow துளி/DROP: 2000 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 92 https://www.facebook.com/groups/978753388866632/posts/33331702509811634/?
  13. கல்விச் சீர்திருத்தங்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை Jan 17, 2026 - 06:45 PM கல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டின் மாற்றத்தக்க மாற்றங்களை முன்னெடுப்பதில் இருந்து ஒரு அடியைக் கூட பின்வைக்கப் போவதில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புத்தளம் வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுடன் இன்று (17) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் திட்டமிட்டபடியே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து பிரதமர் மேலும் தெரிவிக்கையில்: "இந்த கல்விச் சீர்திருத்தத் திட்டங்கள் நீண்டகாலச் செயல்பாட்டின் மூலம் அடையத் திட்டமிடப்பட்டுள்ளன. அதற்கான உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு, ஆசிரியர்-அதிபர் ஆட்சேர்ப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப உபகரணங்கள் விநியோகம் ஆகியவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான பாரிய செயல்பாட்டின் போது, ஒரு சில குழுக்கள் தமது குறுகிய நோக்கங்களை அடைவதற்காக முன்வைக்கும் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையைத் தொடர்ந்தும் பேண வேண்டும். இது பிள்ளைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மற்றும் முழு நாட்டினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு செயல்பாடு என்பதால், இது தொடர்பில் மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது அவசியமாகும். கல்வி மாற்றச் செயல்பாட்டின் விசேட திட்டங்களுக்கு நாம் நிதி ஒதுக்கியுள்ளோம். உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட டிஜிட்டல் கல்வி வசதிகளான ஊடாடும் தொடுதிரை (Interactive screens) மற்றும் இணைய இணைப்புகளை முதற்கட்டமாக முதல் இரண்டு மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmkiby3rc0421o29nvubm84cj
  14. ஜூலை முதல் வருகிறது புதிய 'புள்ளி' விதிமுறை! Jan 17, 2026 - 06:16 PM - 0 போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு 'குறைப்புப் புள்ளிகள்' வழங்கும் முறையை எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் இருந்து நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். கேகாலையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். GovPay ஊடாக அபராதப் பணத்தைச் செலுத்தும் முறைமை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படுவதோடு, இந்தப் புள்ளி வழங்கும் முறைமையும் ஆரம்பிக்கப்படும் என அவர் விளக்கமளித்தார். மேலும், போதைப்பொருள் பாவித்துக் கொண்டு வாகனம் செலுத்திய சாரதிகளுக்கு எதிராக இந்த 2026 ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 300 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார். போதைப்பொருள் பாவனையைக் கண்டறிவதற்காகப் பொலிஸ் மா அதிபரால் புதிய பரிசோதனை உபகரணமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், அது நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிப்பாகங்களை அகற்றாது வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர வலியுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmkiax0dg0420o29nfypvfych
  15. தென் கொரியாவில் பாரிய தீ விபத்து - பல குடிசைகள் எரிந்து நாசம் ! 17 Jan, 2026 | 11:05 AM தென் கொரியாவின் தலைநகர் சியோலின் புறநகர்ப் பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பல வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சியோலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குரியோங் (Guryong) என்ற குடியிருப்புப் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை (16) சுமார் 300 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுப்பட்டனர். இதுவரை உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்ட சுமார் ஆறு மணி நேரத்திற்குப் பிறகே தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததாக அந்நாட்டு தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைகளில் 1,200-க்கும் மேற்பட்டோர் தீயணைப்பு வீரர்கள் பொலிஸார் ஈடுப்பட்டதுடன் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைகளும் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலைச்சரிவில் அமைந்துள்ள இந்த குடியிருப்புப் பகுதி, அதிக எரிபொருள் தாங்கிகள் அமைக்கப்பட்டுள்ளதால், கடந்த காலங்களில் பலமுறை தீ விபத்துக்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/236256
  16. இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் விரான் சமுதித்த சாதனை Jan 17, 2026 - 04:50 PM இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 192 ஓட்டங்களை அதிவேகமாகப் பெற்று விரான் சமுதித்த சாதனை படைத்துள்ளார். இளையோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. விரான் சமுதித்த 143 பந்துகளில் 26 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டம் உள்ளடங்கலாக இந்த ஓட்டங்களைக் குவித்தார். அவருடன் இணைந்து திமந்த மஹவிதான முதல் விக்கெட்டுக்காக 328 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். https://adaderanatamil.lk/news/cmki7tyt8041to29nrtits5y7
  17. அத தெரண கருத்துப்படம்.
  18. அப்பாவோட ஏதோ கோவத்தில என்னை ஓடவிட்டு அவமானப்படுத்தியதாக தற்போது உணர்கிறேன். ஆனால் பத்து வயதில் அது புரியவில்லை அண்ணை. மறுக்க மறுக்க ஓடவிட்டது தான் எனக்கு வருத்தம். அப்போது நண்பர்களுடன் விளையாடுகையில் என்னால் அவர்களுக்கு ஈடுகொடுத்து ஓடமுடிவதில்லை.
  19. டிரம்பும் அவரது வம்பும் – கைமாறியதா நோபல் பரிசு? ஓர் பார்வை! written by admin January 17, 2026 வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தனக்கு வழங்கப்பட்ட உயரிய ‘அமைதிக்கான நோபல் பரிசை’ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு வழங்கி தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்! இது உலகளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 🧐" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> உண்மையில் நோபல் பரிசை இப்படி கைமாற்ற முடியுமா? மரியாவுக்கு ஏன் நோபல் பரிசு❓" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> காசா போன்ற போர்ச் சூழல் இல்லாத ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதற்காக இந்த அங்கீகாரம்? பல்வேறு தரப்பினரும் இந்தக் கேள்வியை எழுப்பி வருகின்றனர். டிரம்ப் மீது தனக்கிருக்கும் விசுவாசத்தைக் காட்ட மரியா செய்த இந்தச் செயல் ஒரு “ட்விஸ்ட்” ஆக மாறியுள்ளது. 📜" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> ஆல்ஃபிரட் நோபல்: டைனமைட்டைக் கண்டுபிடித்த இவர், தன் கண்டுபிடிப்பு அழிவுக்குப் பயன்படுவதைக் கண்டு வருந்தி, மனிதகுல முன்னேற்றத்திற்காகப் பாடுபடுபவர்களுக்குத் தனது சொத்தின் பெரும்பகுதியை பரிசாக அறிவித்தார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம். இந்த துறைகளில் சாதனை பட்த்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் 18 காரட் தங்கப் பதக்கம், தனித்துவமான நோபல் பட்டயம் மற்றும் சுமார் 11 லட்சம் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. 🚫" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இது குறித்து நோபல் கமிட்டி கொடுத்த “அதிர்ச்சி” விளக்கம்! மரியா தனது பதக்கத்தை டிரம்பிடம் ஜனவரி 15-ல் ஒப்படைத்தார். ஆனால், இது குறித்து நோபல் கமிட்டி ஜனவரி 16-ல் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது: “நோபல் பரிசும், அதைப் பெற்றவரும் பிரிக்க முடியாதவர்கள். மரியா தனது தங்கப் பதக்கத்தை (பொருளை) யாருக்கு வேண்டுமானாலும் தானமாகக் கொடுக்கலாம். ஆனால், ‘நோபல் வெற்றியாளர்’ என்கிற பெருமை மரியாவுக்கு மட்டுமே சேரும்; அது டிரம்புக்குப் போகாது!” அதாவது, நோபல் பரிசை ரத்து செய்யவோ, பெயரை மாற்றவோ சட்டப்படி இடமில்லை என கமிட்டி கறாராகக் கூறிவிட்டது. டிரம்ப் நீண்ட காலமாக இந்த விருதிற்காகக் காத்திருக்கும் நிலையில், மரியாவின் இந்த முயற்சி டிரம்ப் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், கமிட்டியின் விளக்கம் ஒரு தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது. 😊" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இது போன்ற சுவாரஸ்யமான உலகச் செய்திகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்! #DonaldTrump #MariaCorinaMachado #NobelPeacePrize #InternationalNews #Venezuela #PoliticalTwist #NobelCommittee #TrendingNews #TamilNews #WorldPolitics இது பற்றிய உங்கள் கருத்து என்ன? டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமா? கீழே கமெண்ட் செய்யுங்கள்! 👇" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> டிரம்பும் அவரது வம்பும் - கைமாறியதா நோபல் பரிசு? ஓர் பார்வை! - Global Tamil News
  20. 20 நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய சாதனம் ஒன்றை கண்டுபிடித்த நபர், பொலிசாரால் கைது! இருபது நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய ஒரு சாதனத்தை தயாரித்த ஒருவர் மொனராகலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அரசு ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு விற்பனையும் செய்துவந்துள்ளார். இந்நிலையில் மொனராகலை தலைமையக காவல் நிலைய அதிகாரிகள் குழுவினர் மொனராகலை கால்வாய் அருகே ஒரு சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை சோதனை செய்து ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் இருபது நிமிடங்களில் சட்டவிரோத மதுபானத்தை தயாரிக்கக்கூடிய ஒரு சாதனத்தை உருவாக்கி, உடனடியாக அந்த சாதனத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத மதுபானத்தை தயாரித்து வாங்குபவர்களுக்கு வழங்கியுள்ளார். சந்தேக நபர் இந்த மோசடியில் அரசு ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பிறரை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை பகுதியைச் சேர்ந்த அறுபத்திரண்டு வயதுடையவர். இதேவேளை, சந்தேக நபர் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார், மேலும் சம்பவம் தொடர்பாக மொனராகலை தலைமையக காவல் நிலைய அதிகாரிகளால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. https://athavannews.com/2026/1460303
  21. பின்பக்கம் பார்த்தால் யாரும் ஏறமாட்டார்கள்.
  22. அது மட்டும் அல்ல யாழில் நடந்த அத்தனை போட்டியின் விருதும் உங்களுக்கே😂. பிகு நல்லது செய்வதாக நினைத்து விளக்கம் இல்லாமல் நாம் அனைவரும் விசர் வேலையள் செய்வதுண்டு. உங்கள் ஆசிரியையும் அப்படித்தான் செய்தாரோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.