stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
யதார்த்ததிற்கும் எதிர்பார்ப்பிற்குமிடையே இடைவெளி இருக்கும் போது, யதார்த்தத்திற்கு புறம்பான மாய மந்திரத்தால் மாங்காய் விழுத்துவோம் என வாக்குகள் வாங்கி அரசியல்வாதிகளாகி அனுகூலம் பெறமக்களை ஏமாற்றி வருடக்கணக்கில் அரசியல்வாதிகளாக வலம் வரலாம், ஆனால் உண்மையினை கூறினால் அதற்கான எதிர்வினை? கடந்தகால போரும், வெற்றியும் பேசப்படும் அளவிற்கு கூட எதிர்காலம் பற்றிய சிந்தனை தேடல் இல்லாமல் இருக்கின்றோம். இந்த இரண்டுக்கும் இடையே உள்ள யதார்த்த இடைவெளியினை கடக்க முடியாமல் இருக்கின்றோம்.
-
யாழில். மாவைக்கு சிலை திறப்பு
நியாயங்கள் செத்துப் போய் நீண்ட காலமாச்சு.
-
ஐரோப்பிய ஆணைய ஆவணம் 2027 ஆம் ஆண்டுக்குள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஓர்பன் கூறுகிறார்.
1950 இல் அமெரிக்க கொள்கையாக இரஸ்சியாவினை வெளியேயும் ஜேர்மனியினை கீழேயும் வைத்திருக்கும் இரட்டை கட்டுப்பாட்டு கொள்கையினனி அமெரிக்கா கொண்டிருந்த்து. ஜேர்மனானால் என்ன அவுஸ்ரேலியாவானால் என்ன தேசிய வளம் நலன் என பேசும்போது பிரச்சினைகள் உருவாகும். கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின் தமது ஆட்சியினை தக்கவைக்கவே விரும்புவார்கள்.
-
கியூபா மீது தேசிய அவசரநிலையை டிரம்ப் அறிவித்தார்
செல்லும் செல்லாததெல்லாம் செட்டியாருக்கு சொந்தம், அமெரிக்க கண்டத்தில் ட்ரம்ப் ஒன்றெடுத்தால் ஒன்று இலவசம்.🤣
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
SCOT ENG NEP
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
தமிழரசு கட்சியின்…. மாகாணசபை முதலமைச்சராக, சுமந்திரனின் பெயரை போட்டால்…. அனுரா கட்சியில் இருந்து, வட மாகாணத்திற்கு ஒரு முதலமைச்சர் வருவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. இது நிச்சயம் நடக்கும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
7)SCOT 33)SCOT
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
தமிழ்மக்களிடம் வாக்கரசியல் செய்து கொண்டே பாராளுமன்றத்தில் புலிகளை அழித்ததற்காக மகிந் அரசுக்கு நன்றி சொன்னவர் சம்பந்தர்.
-
மனதுக்கு இதமான இசை
திரைப்படம்: அவதாரம் இசை: இளையராஜா வருடம்: 1995 தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பில வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையமம்மாஉள்ளத நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக் கண்ணே… தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பில எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாப் பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது ஓடை நீரோட இந்த ஒலகம் அது போல ஓடும் அது ஓடும் இந்த காலம் அது போல நிலையா நில்லாது நினைவில் வரு ம் நிறங்களே தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் மனம் போல அழகெல்லாம் கோலம் போடுது குயிலே குயிலனமே அந்த இசையால் கூவுதம்மா கிளியே கிளியினமே அதைக் கதையாய் பேசுதம்மா கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பில வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன பொன்னம்மா சின்னக் கண்ணம்மா தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பில
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
19 வயதின் கீழ் ஆண்கள் உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட இங்கிலாந்து தகுதிபெற்றது Published By: Vishnu 30 Jan, 2026 | 11:29 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக புலாவாயோ குவீன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கிண்ண குழு 2க்கான சுப்பர் சிக்ஸஸ் போட்டியில் 85 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. இதற்கு அமைய 3 அணிகள் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டுள்ளன. குழு 1 இலிருந்து அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் குழு 2 இலிருந்து இங்கிலாந்து அணியும் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டுள்ளன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சனிக்கிழமை (31) நடைபெறவுள்ள போட்டி முடிவு அரை இறுதிக்குச் செல்லும் நான்காவது அணியைத் தீர்மானிக்கும். இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் மெனி லம்ஸ்டென் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல் நியூஸிலாந்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. எண்ணிக்கை சுருக்கம் இங்கிலாந்து 50 ஓவர்களில் 234 - 7 விக். (பென் மேயஸ் 53, காலெக் பெல்க்னர் 47, பென் டோவ்கின்ஸ் 42, ஸ்னேஹித் ரெட்டி 28 - 2 விக்., மேசன் க்ளார்க் 38 - 2 விக்.) நியூஸிலாந்து 38.5 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 169 (ஸ்னேஹித் ரெட்டி 47, ஜஸ்கரன் சாந்து 28, மெனி லம்ஸ்டென் 17 - 5 விக்., செபெஸ்டியன் மோர்கன் 38 - 2 விக்.) ஆட்டநாயகன்: மெனி லம்ஸ்டென் https://www.virakesari.lk/article/237437
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இப்படி நடந்தே இருந்தாலும் அதை தமிழ் மக்களிடம் வாக்கரசியல் செய்து கொண்டே, இப்படி பட்டவர்தனமாக பொதுவெளியில் சொல்லும் அளவுக்கு சம்பந்தருக்கு மேல் வீடு பழுதாகி இருந்தது என நான் நினைக்கவில்லை. நான் அறிந்தவரை மேலே சொன்னது போலத்தான் சம்பந்தர் சொன்னார்… ஆனால் அதற்கு கை, கால் எல்லாம் வைத்து, அமெரிக்கா, மகிந்தவோடு சேர்ந்து சம்பந்தரும் புலிகளை, மக்களை அழித்தார் என்ற ரீதியில் புலம்பெயர் டிக்டொக் புஸ்வாணங்கள் கதை கட்டி விட்டனர்.
-
பிரித்தானிய பிரதமர் - சீன ஜனாதிபதி சந்திப்பு!
சீனாவுடன் வர்த்தகம் ஆபத்தானது – டிரம்ப் எச்சரிக்கை : “மணலில் தலையை புதைக்க முடியாது” – இங்கிலாந்து பிரதமர் பதிலடி 31 Jan, 2026 | 03:35 PM இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, வர்த்தகம், பொருளாதாரம், முதலீடுகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டதுடன், பல்வேறு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளனர். இந்நிலையில், சீனாவுடன் இங்கிலாந்து வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். டிரம்பின் மனைவி மெலனியா டிரம்பின் வாழ்க்கை குறித்த ஆவணப்படத்தின் சிறப்புக் காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த டிரம்ப், “சீனாவுடன் வர்த்தகம் செய்வது இங்கிலாந்துக்கு மிகவும் ஆபத்தானது” என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்து பேசிய இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சீனாவை புறக்கணிப்பது நடைமுறைக்கு ஒத்துப்போகாதது என வலியுறுத்தினார். “இங்கிலாந்து மணலில் தலையை புதைத்துக்கொள்வது புத்திசாலித்தனமான செயல் அல்ல. சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம். கொங்கொங்குடன் இணைத்து பார்க்கும்போது, சீனா இங்கிலாந்தின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்குதாரராக உள்ளது” என்று அவர் தெரிவித்தார். மேலும், “இந்த பயணத்தின் மூலம், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், செல்வத்தை பெருக்கவும் பல புதிய வாய்ப்புகளை நாங்கள் திறந்துவிட்டுள்ளோம்” என ஸ்டார்மர் கூறினார். சீனாவுடன் இங்கிலாந்து உறவுகளை வலுப்படுத்தும் இந்த விஜயம், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சமநிலைகளில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அமெரிக்காவின் கவலைகள் மேற்கத்திய நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் அரசியல் முரண்பாடுகளை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/237479
-
சுமார் 60 சதவீதமான சாரதிகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை.
குடிபோதையில் வாகனம் ஓட்டிய 382 சாரதிகள் சிக்கினர் Jan 31, 2026 - 08:48 PM பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் நேற்று (30) பல நபர்கள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் 28,470 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதில் சந்தேகத்தின் பேரில் 523 நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றங்கள் தொடர்பில் நேரடியாக 09 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல இந்த நடவடிக்கைகளின் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 226 நபர்களும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 161 நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 382 குடிபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளும், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமைக்கு அமைவாக 73 நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 4,211 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cml2gii2w04omo29nye35qlzx
-
இலங்கைக்கான கனடாவின் புதிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினுக்கு மகத்தான வரவேற்பு!
இலங்கைக்கான கனடாவின் புதிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினுக்கு மகத்தான வரவேற்பு! 31 Jan, 2026 | 03:32 PM இலங்கை கனடா வணிக கவுன்சில் மற்றும் இலங்கை கனடா வணிக சபை இலங்கை வர்த்தக சபை ஏற்பாட்டில் இலங்கைக்கான கனடாவின் புதிய உயர்ஸ்தானிகரை வரவேற்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை ( 29 ) கொழும்பில் மேரியட் ஹோட்டல் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின், உயர்ஸ்தானிகரகத்தின் அதிகாரிகள், இலங்கை வர்த்தக சபையின் இலங்கை-கனடா வணிக மன்றத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர். (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/237482
-
இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதல் பெய்லி பாலம் திறப்பு
இந்தியாவிடமிருந்து மற்றுமொரு உதவி: 10 பெய்லி பாலங்கள் இலங்கைக்கு! Jan 31, 2026 - 06:39 PM “டித்வா” புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது சேதமடைந்த பாலங்களைப் புனரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10 பெய்லி பாலங்களை இன்று (31) இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது X பக்கத்தில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பாலங்கள் இந்தியா இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ள 450 மில்லியன் டொலர் பொருளாதாரப் பொதியின் ஒரு அங்கமாகும் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பாலங்கள் இலங்கைக்கு வந்தடைந்ததும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து வசதிகளை உடனடியாகச் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cml2bw9ag04oio29nqbawxxmu
-
சீனாவுடனான ஒப்பந்தத்திற்கு எதிராக கனடா மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்துகிறார்.
சீனா வர்த்தகமும் விமானத் துறையும்: அமெரிக்கா – கனடா உறவுகளில் புதிய நெருக்கடி 31 Jan, 2026 | 01:48 PM அமெரிக்கா – கனடா இடையிலான வர்த்தக போர் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், கனடா விமானங்களுக்கு எதிராக கடும் வரி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவுடன் கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால், அந்த நாட்டின் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என ஏற்கனவே எச்சரித்திருந்த டிரம்ப், தற்போது அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் கனடா தயாரிப்பு விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த Gulfstream Aerospace நிறுவனத்தின் ஜெட் விமானங்களுக்கு சான்றளிக்க கனடா மறுத்ததற்குப் பதிலடியாகவே இந்த வரி நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து கனடா விமானங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள சான்றிதழ்களை அமெரிக்கா முழுமையாக ரத்து செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கிடையே, மேற்கு கனடாவில் எண்ணெய் வளம் மிக்க ஆல்பர்ட்டா மாகாணத்தில் செயல்படும் பிரிவினைவாத குழுவிற்கும், அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையே ரகசிய சந்திப்பு இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் கனடா அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் கனடா பிரதமர் மார்க் கார்னி கருத்து தெரிவிக்கையில், “கனடாவின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா – கனடா இடையிலான வர்த்தக உறவுகள், விமானத் தொழில், எண்ணெய் வளங்கள் மற்றும் சீனாவுடனான கனடாவின் வர்த்தக தொடர்புகள் காரணமாக மேலும் சிக்கலான நிலைக்கு சென்றுள்ளன. இந்த வரி நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் பாதிக்கக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/237476
-
வரலாற்றில் முதல்முறையாக 5,000 டொலரை தாண்டியது தங்கத்தின் விலை!
சாதனை அளவை எட்டிய தங்கம், வெள்ளி விலையில் திடீரென கடும் சரிவு ஏன்? பட மூலாதாரம்,Getty Images 7 மணி நேரங்களுக்கு முன்னர் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலையில் வெள்ளிக்கிழமை பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஜனவரி 30-ஆம் தேதி தங்கத்தின் விலை 12 சதவீதமும், வெள்ளியின் விலை 26 சதவீதமும் குறைந்தது. அதேபோல் பிளாட்டினம் விலை 18 சதவீதம் சரிந்தது. இன்று (31-01-2026) காலையும் தங்கம், வெள்ளி விலை மேலும் குறைந்தது. சென்னை நகைக் கடைக்காரர்கள் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தகவலின் படி, சென்னையில் 22 காரட் தங்கம் ஒரு கிராம் 1,300 ரூபாய் குறைந்து 14,900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 12,800 ரூபாய் என்கிற அளவில் இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி 65 ரூபாய் விலை குறைந்து 350 ரூபாயாக இருந்தது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.3,50,000ஆக இருந்தது. முன்னதாக, தங்கம், வெள்ளி ஆகிய இரு உலோகங்களின் விலை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உயர்ந்திருந்தது. "இது சந்தை உச்சத்தை எட்டியதற்கான வழக்கமான நிலை. குழப்பமும் உறுதியற்ற நிலையும் நிலவுகிறது. அனைவரும் தெளிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்," என்று பான்மியூர் லிபெரம் நிறுவனத்தின் கமாடிட்டிஸ் பிரிவு பகுப்பாய்வாளர் டாம் ப்ரைஸ், ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்தார். எம்கேஎஸ் பிஏஎம்பி நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் நிக்கி ஷீல்ஸ், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏற்பட்ட இந்த கடும் ஏற்றத்தாழ்வுகள், மதிப்புமிக்க உலோகங்களின் வரலாற்றிலேயே அதீத நிலைத்தன்மையற்ற மாதம் என்று சொல்லக்கூடிய காலகட்டத்தின் முடிவில் நிகழ்ந்ததாக கூறினார். வெனிசுவேலா, கிரீன்லாந்து, இரான் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் உலகளாவிய குழப்பங்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் நிலைப்பாடுகளில் அதிகரிக்கும் உறுதியின்மை காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக மதிப்புமிக்க உலோகங்களை நாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. "ஒவ்வொரு நாளும் கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன," என்று ஷீல்ஸ் கூறினார். "இந்த உயர்வு மிக அதிகமாகவும், மிக விரைவாகவும் ஏற்பட்டது." "முன்பு காணப்பட்ட அதீத விலை ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு, அதிக நிலையற்ற தன்மையை எதிர்பார்க்க வேண்டும்" என்று பிக்டெட் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் மூத்த மல்டி-அசெட் மூலோபாய நிபுணரான அருண் சாய், ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்தார். மத்திய வங்கிகளின் கையிருப்பு மேலாளர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை பரவலாக்குவதன் மூலம், தங்கம் தொடர்ந்து பயன் தரும் என்ற நம்பிக்கையை அந்த நிறுவனம் இன்னும் வைத்திருக்கிறது. அமெரிக்க ஊடக நிறுவனமான ப்ளூம்பெர்க் தகவலின்படி, இந்த வீழ்ச்சி 1980களின் தொடக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய ஒரே நாள் (இன்ட்ரா-டே) சரிவாகும். வெள்ளியும் அதேபோல் சாதனை அளவிலான ஒரே நாள் சரிவைக் கண்டது. இந்த விற்பனை அழுத்தம் முழு உலோக சந்தையையும் பாதித்தது. இந்த உலோகங்களில் ஏற்பட்ட திடீர் மற்றும் கடும் உயர்வுக்குப் பிறகு, விலை வீழ்ச்சி ஏற்படும் வாய்ப்பு இருந்ததாகவும், சில செய்திகள் அதற்கான காரணமாக அமைந்ததாகவும் பங்குச் சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர். பட மூலாதாரம்,AFP via Getty Images சாதனை வீழ்ச்சி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளும் சந்தையை தொடர்ந்து குலைக்கின்றன. கடந்த ஓராண்டில் தங்கத்தின் விலை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் மதிப்புமிக்க உலோகங்களுக்கு முதலீட்டாளர்களிடமிருந்து வலுவான தேவை ஏற்பட, தொடர்ந்து சாதனை அளவான விலையேற்றம் பதிவானது. இந்த திடீர் உயர்வு, அனுபவமிக்க வர்த்தகர்களைக் கூட ஆச்சரியப்படுத்தியதுடன், விலைகளில் கடும் ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்படுத்தியது. ஜனவரி மாதத்தில் இந்தப் போக்கு மேலும் தீவிரமடைந்தது. நாணய மதிப்பு பலவீனமடைவது, அமெரிக்க ஃபெடரல் வங்கியின் சுயாட்சி குறித்த கவலைகள், வர்த்தகப் போர்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக, முதலீட்டாளர்கள் பாரம்பரியமான பாதுகாப்பான முதலீடுகளைக் நாடினர். ஓவர்சீஸ்-சைனீஸ் வங்கிக் கழகத்தைச் சேர்ந்த மூலோபாய நிபுணர் கிறிஸ்டோபர் வாங் கூறியதாக ப்ளூம்பெர்க் பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க பெடரல் வங்கியின் இயக்குநர்கள் குழு தலைவராக கெவின் வார்ஷ் நியமனம் செய்யப்படுவதாக வந்த செய்தியே இந்த பெரிய வீழ்ச்சிக்கு தூண்டுதலாக இருந்தாலும், அதற்கு முன்பே சந்தையில் ஒரு திருத்தம் அவசியமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பெடரல் வங்கியின் இயக்குநர்கள் குழு தலைவராக கெவின் வார்ஷை நியமிப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை கனடா பிரதமர் மார்க் கார்னியும் வரவேற்று, "இந்த கடினமான காலகட்டத்தில் உலகின் மிக முக்கியமான ஃபெடரல் வங்கியை வழிநடத்த கெவின் ஒரு சிறந்த தேர்வு" என்று கூறினார். பட மூலாதாரம்,AFP via Getty Images "இவ்வளவு கடுமையான மற்றும் அபூர்வமான உயர்வுக்கு முடிவுகட்ட சந்தை காத்திருந்த காரணம் இதுதான்," என்று கிறிஸ்டோபர் வாங் கூறினார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு (profit booking) செய்ததாகவும் ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. ப்ளூம்பெர்க் தகவலின்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலை சாதனை அளவிலான சரிவை சந்தித்தன. அதே நேரத்தில், ஆஸ்திரேலிய டாலர், ஸ்வீடன் க்ரோனா போன்ற நாணயங்கள் விற்கப்பட்டதன் காரணமாக அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக கெவின் வார்ஷ் நியமிக்கப்பட்டதாக வந்த செய்தியையடுத்து, டாலர் வலுவடைந்தது. தற்போதைய ஃபெட் தலைவர் ஜெரோம் பவெலின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைகிறது. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர்கள் இடையிலான தற்காலிக ஒப்பந்தத்தால், அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் (government shutdown) அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது. இரானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று டிரம்ப் கூறியிருப்பதும், மத்திய கிழக்கில் பதற்றம் குறைவதற்குக் காரணமாகியுள்ளது. ப்ளூம்பெர்க் தகவலின்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவதற்கான இன்னொரு காரணம், இந்த இரு உலோகங்களும் 'அதிகமாக வாங்கப்பட்ட நிலை' (overbought category) என்ற நிலைக்குச் சென்றுவிட்டதே ஆகும். அவற்றின் Relative Strength Index (RSI) மதிப்பு 90-ஐ எட்டியது. இது கடந்த பல தசாப்தங்களில் காணப்பட்ட மிக உயர்ந்த நிலையாகும். RSI மதிப்பு 70 அல்லது அதற்கு மேல் இருந்தால், அது அதிக அளவிலான வாங்குதல் நடந்துள்ளது என்பதையும், விலை அளவுக்கு அதிகமாக உயர்ந்துவிட்டது என்பதையும் குறிக்கிறது. அத்தகைய சூழலில் விலைகளில் ஒரு திருத்தம் அவசியமாகிறது. ஆனால், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சரிவுக்குப் பிறகும், இந்த மாதத்தில் தங்கம் 13 சதவீதம் நிகர உயர்வையும், வெள்ளி 19 சதவீதம் நிகர உயர்வையும் பதிவு செய்துள்ளன. உலோக சந்தையையும் பாதித்த சரிவு உலோக சந்தையில் ஏற்பட்ட இந்த சரிவு, முக்கிய சுரங்க நிறுவனங்களின் பங்குகளையும் பாதித்தது. இந்திய பங்குச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி ETF-கள் சுமார் 10 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. அதேபோல் தாமிர உலோகத்தின் பங்குகளும் கடுமையாக சரிந்தன. நியூயார்க் வர்த்தகத்தில், நியூமான்ட் கார்ப், பாரிக் மைனிங் கார்ப், அக்னிகோ ஈகிள் மைன்ஸ் போன்ற முன்னணி தங்க சுரங்க நிறுவனங்களின் பங்குகள் 10 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தன. நியூயார்க் சந்தையில் ஸ்பாட் தங்கத்தின் விலை 8.9 சதவீதம் குறைந்து, ஒரு அவுன்ஸ் 4,894.23 அமெரிக்க டாலராக முடிந்தது. வெள்ளியின் விலை 26 சதவீதம் சரிந்து, ஒரு அவுன்ஸ் 85.20 அமெரிக்க டாலராக நிறைவடைந்தது. பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் ஆகியவற்றின் விலையும் குறைந்தது. ப்ளூம்பெர்க் டாலர் ஸ்பாட் குறியீடு (Bloomberg Dollar Spot Index) 0.9 சதவீதம் உயர்ந்தது. லண்டன் மெட்டல் எக்சேஞ்சில் தாமிரம் ஒரு டன்னுக்கு 13,157.50 அமெரிக்க டாலராக நிறைவடைந்தது. வியாழக்கிழமை அது ஒரு டன்னுக்கு 14,000 அமெரிக்க டாலரைத் தாண்டி உயர்ந்திருந்தது. இது 2008-க்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய ஒரே நாள் (இன்ட்ரா-டே) உயர்வாக இருந்தது. அதன் பின்னர் விலை சரிந்தது. அமெரிக்க டாலர் வலுவடைவதால், டாலரில் விலை நிர்ணயிக்கப்படும் பொருட்கள் (கமாடிட்டிகள்) பிற நாணயங்களில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு அதிக விலை உடையவையாக மாறுகின்றன. ப்ளூம்பெர்க் தகவலின்படி, ஹெரேயுஸ் பிரெஷியஸ் மெட்டல்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத் தலைவர் டொமினிக் ஸ்பெர்செல், சந்தை மிகவும் நிலைத்தன்மையற்று இருப்பதாகவும், வெள்ளிக்கிழமை 5,000 அமெரிக்க டாலர் என்ற உளவியல் முக்கியத்துவம் கொண்ட விலை பலமுறை உடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். "வரும் காலங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் தொடரும் என்பதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார். தங்கம் விலை உயர்வில் சீன முதலீட்டாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அவர்களின் பெரும் கொள்முதலை கருத்தில் கொண்டு, மதிப்புமிக்க மற்றும் தொழில்துறை உலோகங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த, ஷாங்காய் ஃப்யூச்சர்ஸ் எக்சேஞ்ச் பல நடவடிக்கைகளை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdrevz3k5n8o
-
ஆதிமந்தி ஆட்டனத்தி - சுப.சோமசுந்தரம்
சுப.சோமசுந்தரம் ஐயா அவர்களே... நல்ல ஒரு பகிர்விற்கு நன்றி.
-
பிராஜா சக்தி திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது - அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம்
இன்னொரு தேர்தல் நடந்தால்…
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
நன்றி கோசான். இதைவிட யுத்தம் தொடங்க முதலே அமெரிக்கா சம்பந்தரிடம் புலிகளை அழிக்கப் போகிறோம் அமைதியாக இருங்கள்.அதன் பின்னர் உங்களுக்கு தீர்வு பெற்றுத் தருகிறோம் என்ற தொனியில் சொல்லியதாகவே ஞாபகம்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
- பிராஜா சக்தி திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது - அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம்
இன்னொரு தேர்தல் இப்போது நடந்தால் சிங்கள பகுதிகளில் இதேயளவு இடங்களைப் பிடிப்பது சந்தேகமே. எதிர்க் கட்சிகள் ஒன்றாகினால் என்பிபி பாடு கஸ்டமாகலாம்.- கியூபா மீது தேசிய அவசரநிலையை டிரம்ப் அறிவித்தார்
ஏற்கனவே கியூபா மிகவும் வறிய நாடாக உள்ளது. மக்களும் ரொம்ப கஸ்டப்படுகிறார்கள். இப்போ அங்கும் ஒரு புரட்சியை உண்டுபண்ண நினைக்கிறார்.- சங்கானை இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தாஜா எம்.பி கோரிக்கை!
2024´ம் ஆண்டு, 31´ம் திகதி ஒக்ரோபர் மாதம்... அச்சுவேலி – வசாவிளான் வீதியை, திறக்கப் போகின்றார்கள் என்று உள்ளூர் கிராமசேவகர் மூலம் அறிந்த சுமந்திரன், முதல் நாள் மாலை மூடியிருந்த பாதை முன் நின்று இராணுவத்தினருடன் படம் எடுத்து, தான் சொல்லித்தான் திறந்தது என்று அடுத்த நாள் பத்திரிகைகளுக்கு படத்துடன் "பீலா" விட்டு.. பொங்கல் பொங்கி தின்ற காட்சியை இன்னும் நாம் மறக்கவில்லை. 😂 இவர் 15 வருடமாக பாராளுமன்றத்தில்... மைத்திரி, ரணிலுடன் தேன்நிலவில் இருந்த போது.... கேட்காமல், பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாத நிலையில்... அனுராவிடம் வீதியை விடுவிக்கக் சொல்லி கேட்கிறாராம். விடுவித்தவுடன்.... தான் சொல்லித்தான் விடுவித்ததாக... சுத்துமாத்து ஈன அரசியல் செய்கிறார். பவானந்த ராஜாவுக்கு முதலே... சுத்துமாத்து சுமந்திரன், இந்த தில்லாலங்கடி வேலை எல்லாம் செய்து காட்டி விட்டார். 🤣- இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!
வழமையை விட ரம் இந்தியா மேல் ரொம்பவும் காண்டாக உள்ளார். ஆனாலும் வரி வீதத்தைக் குறைக்கலாம் என்றே சொல்கிறார்கள். - பிராஜா சக்தி திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது - அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.