Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. 18 hours ago, கிருபன் said: வடக்கு தெற்கு பிரிவினையை எக்காலத்திலும் ஏற்படுத்த இடமளியோம். அனுர தொடக்கம் அமைச்சர்மார்வரை வடக்கில்தான் அசைலம் அடிக்க வேண்டிவரும் ...அப்படியான எதிரணிஅலை தெற்கில் வளர்கின்ற்து வடக்கு கிழக்குப் பிரிப்பு வழக்கு நடக்கும்போது நாங்கள் பேபி பாருங்கோ
  3. சற்று முன் Star sports Tamil commentaryயில் இப்படி வர்ணனை செய்ததாக என்னுடைய வாசகர் பிரசாந்த் கிருஷ்ணன் எனக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியிருந்தார். .......................... "வருண் பெளலிங் போட வந்தா அந்த காலத்து ராஜேஷ்குமார் மர்ம நாவல் மாதிரி, பந்து உள்ள வருதா வெளிய போகுதான்னே தெரியாது" .................... வர்ணனையாளர் சடகோபன் ரமேஷ் செய்தி அனுப்பிய வாசகர் பிரசாந்த் கிருஷ்ணன் இருவருக்கும் நன்றி. நம்ம தமிழ் பையன் பற்றி முகநூலில் படித்தது ...
  4. இன்றைய மச்சை ஜெய்சா நேரில் பார்த்தவரெல்லோ ....கொழும்பு பிச் நிச்சயமாக வேகப்பந்துக்கு சாதகமாகவே இருக்கும் நீங்கள் சொன்ன வீரர் Gerhard Erasmus, நபீபியாவின் அணித்தலைவர் . இவர்தானே கார்டிக் பாண்டியாவிற்கு போட்டவர் ..அவருடைய பந்து எறிவு எவ்வளவு தூரத்தில் இருந்து என்பதை கவனித்தீர்களா..
  5. Today
  6. டம்பர் எனக்கு கோல் பண்ணிட்டார் ..இன்று தன்னுடன் இருந்து மச் பார்க்காட்டாம்....முப்பது வருசம் அமெரிக்காவில் இருந்து என்னாத்தைக் கிழிச்சியள் ... சும்மாயாழில் தேவையில்லாத...அலட்டல்தானே ...
  7. நீங்கள் சொன்ன வீரர் Gerhard Erasmus, நபீபியாவின் அணித்தலைவர் . நபீபியா சர்வதேச t20 போட்டிகளில் விளையாடுவது குறைவு. இவர் துபாய் நாட்டில் நடக்கும் ILT20 போட்டிகளில் சென்ற டிசம்பர் மாதம் 4 போட்டிகளில் மட்டும் விளையாடினார். ஒரு போட்டியிலும் பந்து வீசவில்லை. துடுப்பாட்ட வீரராவே விளையாடினார். ஏன் இந்த T20 உலகத்தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இவர் அணித்தலைவரராக இருந்தும் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். இவர் பல போட்டிகளில் பந்து வீசியதில்லை. டெல்லி அணி முன்பு ஏலத்தில் நேபாள அணியை சேர்ந்த Sandeep Lamichhane தேர்வு செய்தது. ஆனால் அந்த அணியில் குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல் போன்றவர்கள் இருப்பதினால் இவருக்கு ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை . முன்பு நெதர்லாந்து வீரர் ஒருவர் KKR அணிக்கு சிலவருடங்கள் விளையாடி இருக்கிறார். வங்காளதேசத்தில் வீரர்கள் Mortaza,Litton Das ஐபிஎல்லில் பெரிதாக சாதிக்கவில்லை. Mohammad Ashraful சூதாட்டத்தில் ஈடுபட்டது காரணமாக சர்வதேச போட்டிகளில் தடை ஏற்பட்டது. Shakib Al Hasan KKR க்கு சிலகாலம் விளையாடி இருக்கிறார். ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடி போட்டி நாயகன் விருது பெற்றவர்களில் ஒருவர் Mustafizur Rahman இம்முறை KKR ஏலத்தில் எடுத்தும் இந்திய அரசு சொன்னதினால் அவர் நீக்கப்பட்டுவிட்டார். ஆப்கானிஸ்தான் வீரர்கள் போல வங்கதேச வீரர்கள் சாதனை படைக்காததும் ஐபிஎல்இல் வங்கதேச வீரர்கள் குறைவாகவே விளையாடி இருக்கிறார்கள்
  8. வடக்கு கிழ்க்கு பிரிவினைக்கு வழக்கு போடுவோம் ,சட்ட நடவடிக்கை எடுப்போம்...☹️
  9. முதலமைச்சர் @வீரப் பையன்26 க்கு வாழ்த்துக்கள்.
  10. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அலிகான் 2 ஓவர் சிறப்பாக பந்து வீசினார். காயப்பட்டதினால் தொடர்ந்து அவரால் வீசமுடியவில்லை. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராகவும் விளையாடமுடியவில்லை. இன்று பூரண குணமடைந்தால் விளையாட சந்தர்ப்பம் இருக்குது. பாகிஸ்தான் அணியில் உஸ்மான் டாரிக் என்ற சூழல் பந்து வீச்சாளர் இருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான போட்டி சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் இவர் இந்தியாவுக்கு சவாலாக இருப்பார் என நினைக்கிறேன்
  11. 1948 இலயே உங்கன்ட தீவின் அடித்தளம் ஆட்டம் காணதொடங்கி விட்டது ...அதில் உங்கள் குடும்பம் முக்கிய பங்கு வகித்துள்ளது ...இனி கட்டுரை எழுதி என்ன நடக்க போகின்றது
  12. வட பகுதியில் மீன் பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த .....வக்.....ஆனால் சர்வதேச பாதுகாப்பில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கினம் ....
  13. இலங்கை தீவுக்கு ஒரு சட்டம்,வட பகுதியில் உள்ள தீவுகளுக்கு ஒர் சட்டம் நியாயமானதாக தெரியவில்லை....40 வருடங்களுக்கு முன்பு யாழ் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக கடமையில் நின்ற வயோதிபரை கொலை செய்து விட்டு பயங்கரவாதி என பிரச்சாரம் செய்த அரச கட்டமைப்பு இன்னும் தொடர்கின்றது ... பயங்கரவாதிகளை உருவாக்கும் இலங்கை தீவின் அரச முயற்சி தொடர்கின்றது ....
  14. தம்பரும் யூ எஸ் கிரிகெட் அணிக்கு வாழ்த்து சொல்லியுள்ளார். ஆனால் டீம் முழுக்க குடியேறியள் எண்டது ஆளுக்கு தெரியாது போல😂.
  15. Yesterday
  16. அமெரிக்கா நல்ல‌ அணி தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் சுத‌ப்பின‌ம் ம‌ற்ற‌ம் ப‌டி ப‌ந்து வீச்சு ஓக்கே நெத‌ர்லாந்தும் ந‌ல்லா விளையாடுது வெற்றி வாய்ப்பு அமெரிக்காவுக்கு அதிக‌ம் இண்றையான் நாள் நெத‌ர்லாந்துக்கு ந‌ல்ல‌ நாளாக‌ இருந்தால் நெத‌ர்லாந் வெல்லும்................இர‌ண்டு அணிக‌ளையும் என‌க்கு மிக‌வும் பிடிக்கும்...........................
  17. பொலிசாரின் செயல் அத்து மீறல் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சம்பவம் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டும் இதுவே இனிமேல் இப்படியான சம்பவங்கள் நிகழாமல் தடுக்க உதவும். ஒரு காலத்தில் கோழிக்கள்ளன், நகை களவெடுத்தான் என சிறு குற்றங்களுக்கெல்லாம் எந்த நம்பகமான விசாரணையும் இன்றி தான் தோன்றித தனமாக மின்கம்பங்களில் கட்டி படுகொலை செய்த காட்டுமிராண்டி தனம் போல் பொலிசார் செய்வது நியாயமாகாது.
  18. ஐக்கிய அமெரிக்காவிற்கு இவ்வளவு ஆதரவா.................. இந்தச் சேதி வெள்ளை மாளிகைக்கு தெரிந்தால், நாளைக்கே ஊரைக் கூட்டி சொல்லிவிடுவா.................🤣.
  19. நானும் இத்தாலி அணிய‌ க‌வ‌னிக்க‌ வில்லை அத‌னால் நானும் க‌ட‌சி இட‌ம் இத்தாலி வ‌ரும் என‌ க‌ணித்தேன்....................
  20. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 102 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 102 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் பி. குணசேகரனால் [B. Gunasekara] சிங்களத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட இராசாவலிய (மன்னர் வரிசை எனப் பொருள்படும்) முதன் முதலில் 1900 ஆம் ஆண்டு இலங்கை அரசு அச்சகத்தால் வெளியிடப்பட்டது. முன்னுரையில், இது மகாவம்சத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இராசாவலிய தீபவம்சத்தை விட ஏன் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை, தீபவம்சம் மற்ற நாளாகமம்கள் போல் புத்தசமயத்தை முன்னிலை படுத்தினாலும், தமிழருக்கு எதிராக இனத்துவசம் பெரிதாக இல்லை. அதே நேரம் இராசாவலிய, அதில் முன்னிலையில் நிற்கிறது! மேலும் முன்னுரையின்படி, மூல ஆசிரியர் யார் என்றோ? மற்றும் தொகுக்கப்பட்ட தேதி எதுவென்றோ தெரியவில்லை. எழுத்து பாணியின் அடிப்படையில், ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கலாம் என்றும், மொழிபெயர்ப்பாளரின்படி ஆசிரியர்(கள்) சிங்கள இலக்கணத்தில் சரளமாக இல்லை என்றும் ஊகிக்க முடியும். விஜயன் எனும் இலங்கை மன்னனின் வரலாற்றில் இருந்து இரண்டாம் விமலதர்ம சூரியன் [Wimaladharma Surya 2] எனும் கண்டி மன்னனின் வரலாறு வரை இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதாவது, இதில் 17 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் ஆசிரியர் அல்லது ஆசிரியர்கள் மிக சமீபத்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதன் ஓலை கையெழுத்துப் பிரதிகள் அதிகம் இருக்கவில்லை. அதிலும் கிடைத்த அனைத்து ஓலை கையெழுத்துப் பிரதிகளிலும், இரண்டு மட்டுமே நல்ல தரமானதாக இருந்தது. மேலும் அவை இரண்டும் தனியார் மூலங்களிலிருந்து [private sources], அதாவது தனியாரிடம் இருந்து கிடைத்தவை ஆகும். இந்த வரலாறு விஜயன் முதல் இரண்டாம் விமலதர்ம சூரியன் வரையிலான மன்னர்களின் ஆட்சிக் காலங்களை உள்ளடக்கியது என்றாலும், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் இரண்டிலும் உள்ள விஜயன் முதல் மகாசேனா வரையிலான ஆட்சிக் காலங்களுக்கு மட்டுமே நமது கவனத்தை இங்கு மட்டுப்படுத்தவுள்ளோம். நாம் மேலே கூறியவாறு கவனத்தில் எடுத்துக் கொண்ட குறிப்பிட்ட காலகட்டத்தில் சோரநாகனும் [Chora Naga, also known as Coranaga or Mahanaga] ஆட்சி செய்தான் என்றாலும், அவனைப்பற்றிய விவரங்ககள் பயன்படுத்தப்பட்ட இரண்டு ஓரளவு நல்ல கையெழுத்துப் பிரதிகளிலும் வேறுபடுகின்றன என கூறப்பட்டிருப்பது [Choranaga reigned in the above period, and the two manuscripts used in the editing differ in his detail as per the translator.], அவ்வாற்றின் உண்மைத் தன்மையை எடுத்துக் காட்டுவதுடன், மேலும் மொழிபெயர்ப்பாளரின் கூற்றுப்படி, இராசவலிய என்பது சிங்கள மன்னர்களின் வரலாற்று விவரம் இதுவென மொழிபெயர்ப்பின் முதல் பக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது [It says on front page of the translation that: The Rajavaliya or A Historical Narrative of Sinhalese kings]. விஜயனும் அவரது துணைவியும் இந்தியாவிலிருந்து வந்தனர். அவர்கள் தங்கள் தங்கள் மொழிகளைப் பேசியிருப்பார்கள். அதேபோல அடுத்த மன்னன் பண்டுவாசுதேவன் (கி.மு. 504-474) அல்லது பண்டுவாசுதேவ மற்றும் அவரது துணைவியும் கூட இந்தியாவிலிருந்து தான் வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கால கட்டத்தில் சிங்களம் என்ற மொழி சொற்பவளவாவது ஆரம்பிக்கவே இல்லை. ஆனால் தமிழ் பூரணமாக வளர்ந்த சங்க இலக்கியங்களுடன் இருக்கிறது, அப்படியே பாளி, சமஸ்கிருத மொழிகளும் ஆகும். சிங்கள மொழி திடீரென வளர்ந்திருக்க முடியுமா? [Could the Sinhalese language have developed on the fly?] இந்தக் கேள்வி சிங்கள மொழியை இழிவுபடுத்துவதற்காக அல்ல, ஆனால், ஒரு மொழியின் வளர்ச்சி என்பது பல ஆண்டுகள் எடுக்கும் தொடர்ச்சியான செயல் முறையாகும். இந்தக் கேள்வி மொழி அல்லது மக்களைப் பற்றியது அல்ல, ஆனால் தீர்க்கதரிசனங்கள், அற்புத நிகழ்வுகள், அசாதாரண தற்செயல்கள், அசல் மக்களை உயிரினங்களைப் போன்ற பேய்களாக இழிவுபடுத்துதல், முறைகேடான திருமணங்கள் மற்றும் பொருத்தமற்ற பிறப்புக் கதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கதையை எழுதியவர்கள் பற்றியது மட்டுமே!. என்றாலும் வளர்ச்சி அடையாத, ஆரம்பகால சிங்களம் என கருதப்படும், கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிராமி கல்வெட்டுக்குள் கண்டு பிடிக்கப்பட்டதாக இலங்கை அரசு கூறினாலும், அதில் காணப்படும் 'பருமக' "Parumaka" (පරුමක) என்ற எழுத்தை, எஸ். பரணவிதான போன்ற அறிஞர்கள் "பருமக" என்பது ஆரம்பகால இலங்கை சமூகத்தில் ஆளும் உயரடுக்கினருடன் [ruling elites] தொடர்புடைய ஒரு இந்தோ-ஆரியப் பட்டமாக அடையாளம் கண்டு, அதாவது தலைவரைக் ["chief" or "leader"] குறிக்கும் Sanskrit "Pramukha" (प्रमुख) and Pali "Pamukha" தொடர்புபடுத்தி, எனவே அதை, ஆரம்பகால பிராமியில் எழுதப்பட்ட, பழைய சிங்களம் என முடிவு எடுத்தனர். ஆனால் கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால், இதன் முடிவு வேறாக அமையலாம்? உதாரணமாக, இது தென் இந்தியாவில் காணப்பட்ட, தமிழ் சொல் பருமகன் அல்லது பெருமகன் [perumakan] உடன் ஒன்றிப் போவதாக ராசநாயகம், சி பத்மநாதன், ப புஸ்பரத்தினம் போன்ற அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள். இதற்கு ராசநாயகம், தலைவன், கோமான், மன்னன் [chief, lord, and king] மற்றும் பரணவிதான [Paranavitana] இதற்கு அதே பொருள் பட, ஆனால் பொதுப் படையாக இல்லாமல், இந்தோ ஆரியன் தலைவர்கள் [Indo-Aryan chieftains] என விளக்கி உள்ளார்கள். ஆனால் கிருஸ்துக்கு பின் இந்த பெயர் மாற்றப் பட்டு அது மாபருமக [maparumaka / பெரும் பெருமகன்] என பிரதியீடு செய்யப் பட்டுள்ளது. அப்படியான கல்வெட்டு ஒன்று மட்டக்களப்பு, வெல்லாவெளி - தளவாய் என்ற இடத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த பிராமிச் சாசனம் 'பருமக நாவிக ஷமதய லெணே' என்பதாகும். இதை 'பருமக' [பெருமகன்] என்ற படத்திற்குரிய கப்பல் தலைவன் ஷமதய என்பவன் கொடுத்த குகை என பொருள் படுத்தப் படுகிறது. இன்னும் ஒன்றையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும், பண்டைய காலத்தில், ஆரம்பகால இந்தோ-ஆரியர்கள் (கிமு 1500 வாக்கில் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள்) முதன்மையாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் சார்ந்தவர்களாக இருந்தனர், நிலம் சார்ந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, பண்டைய சங்க இலக்கியம் (கிமு 500 - கிபி 300) கடல்சார் வணிகத்தில் ஈடுபட்ட தமிழ் அரசுகளை விவரிப்பதுடன், தமிழ் மாலுமிகள் ரோம், எகிப்து, கிரீஸ், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடன் [Tamil seafarers traded with Rome, Egypt, Greece, China, and Southeast Asia.] வர்த்தகம் செய்தது பண்டைய வரலாற்று சான்றுகள் ஆகும். மேலும் தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவில் காணப்படும் தமிழ் கல்வெட்டுகள், அவர்களின் நீண்ட தூர கடல் பயணங்களை உறுதிப்படுத்துகின்றன. எனவே, 'பருமக' [பெருமகன்] என்ற படத்திற்குரிய கப்பல் தலைவன்", யார் என்று வரலாற்று சான்றுகளுடன் பார்த்தால், கட்டாயம் அவன் ஒரு தமிழனே! ஆனால், பரணவிதான இந்த மொழியை ஒரு பிராகிருத பேச்சுவழக்காக வகைப்படுத்தி, இது பின்னர் உள்ளூர் மாற்றங்கள் மற்றும் திராவிட தாக்கங்கள் மூலம் சிங்கள மொழியாக பரிணமித்தது என முடிவுக்கு வந்து, எனவே இது ஆரம்பகால , வளர்ச்சியடையாத சிங்கள மொழியின் ஒரு கூறாக முடிவெடுத்தார் என்பதே உண்மை. அவ்வளவு தான்! [Paranavitana classified the language of early Sri Lankan inscriptions as a Prakrit dialect, which later evolved into Sinhala through local changes and Dravidian influences. However, there are some key points that need clarification to avoid misinterpretation.] சிங்களத்தின் முன்னோடி என்று அவர் கூறியது, அவை சிங்களத்தின் வேர்களைக் காட்டுகின்றன என்ற கருத்தில் மட்டுமே, ஆனால் மொழியை அல்ல. [A predecessor of Sinhala, meaning they show the roots of Sinhala but not the language itself.] இவ்வாறு, அவர் அவற்றை சிங்கள மொழியியல் வரலாற்றின் ஒரு பகுதியாக அங்கீகரித்தார், ஆனால் இன்று நாம் புரிந்துகொள்கிறபடி சிங்களம் அல்ல என்பதே உண்மை என்று எண்ணுகிறேன். Part: 102 / APPENDIX – "Summary of Rajavaliya" The Ceylon Government Printer first published the translation of the Rajavaliya from Sinhalese to English by B. Gunasekara in 1900. It is claimed in the preface that it ranked next to Mahavamsa in importance. Why the Rajavaliya has greater importance than the Dipavamsa is not stated. Author and the date of compilation are not known as per the preface. It could be inferred that, based on the style of writing, there may more than one author, and the author(s) are not fluent in the Sinhalese grammar as per the translator. List of sovereigns from Vijaya to Wimaladharma Surya 2 is given in this, until the end of 17th century. The author or authors must then be historically of very recent origin. There were not many Ola manuscripts of this existed and only two are considered of good quality of all the Ola manuscripts that were available, and both came from private sources. Though this chronicle is covering the reigns of kings from Vijaya to Wimaladharma Surya 2, we will limit our focus to the reigns form Vijaya to Mahasena: the same period as in both the Dipavamsa and the Mahavamsa. Choranaga reigned in the above period, and the two manuscripts used in the editing differ in his detail as per the translator. It says on front page of the translation that, The Rajavaliya or A Historical Narrative of Sinhalese kings. Vijaya and his consort came from India and they would have spoken their languages, and therefore Vijaya could not be called a Sinhalese king. The next king Panduvasudev and his consort came from India. Could the Sinhalese language have developed on the fly? This query is not to denigrate the Sinhala language, and I am not qualified to comment on that. Development of a language is a continuous process taking years. The query is not about the language or the people, but about those who wrote the story involving prophesies, miraculous happenings, extraordinary coincidences, denigrating the original inhabitants as demons like creatures, many incestuous marriages, and inappropriate birth stories. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 103 தொடரும் / Will follow பகுதி Part: 102 https://www.facebook.com/groups/978753388866632/posts/33774745782173969/?
  21. சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 2 14.02.2025, காதலர் தின கொண்டாட்டத்தின் முடிவில், அவனுக்கு ஒரே நேரத்தில் இச்சையும் வந்தது. அச்சமும் வந்தது. அதனால்த்தான் கொண்டாட்டம் முடியும் தருவாயில் அவன் மெதுவாகச் சொன்னான்: “காதல் மெதுவாக வளரணும்.” அந்தச் சொல்லில் ஒரு எல்லை இருந்தது. ஒரு பொறுப்பு இருந்தது. இதழினி சிரித்தாள். மறுப்பு இல்லை. ஏமாற்றமும் இல்லை. “அதுதான் எனக்கும் பிடிக்கும்,” என்றாள். அந்த ஒரு வரியில், Valentine Day [வேலன்டைன் நாளின்]-யின் எல்லா அலங்காரங்களும் மெல்ல அணைந்தன. அந்த இரவு அவர்கள் காதலர்கள் ஆகவில்லை. ஆனால் காதல்— அவர்களைச் சோதிக்கத் தொடங்கியது. அந்த நாளிலிருந்து அவர்களின் நட்பு நாட்கள் சிவப்பு ரோசாவாக அல்ல — மெதுவாக மலரும் காட்டு மலர்களாக மலரத் தொடங்கின. நேரம் பத்தாத நாட்களாக நகர்ந்தது. பேசுவதற்கு சொற்கள் குறைந்தன; பார்வைகள் மட்டும் ஒருவரை ஒருவர் நிறைவாக ரசித்தன. இலண்டன் பல்கலைக்கழக நூலகம், சின்ன சின்ன காபி கடைகள், தேம்சு நதிக்கரை— அவை இனி இடங்கள் இல்லை. அவை அவர்களின் உலகங்கள். இலண்டன் நூலகத்தில், ஒரே மேசையின் எதிர் முனையில் அமர்ந்து புத்தகம் வாசிப்பதுபோல் நடித்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் பக்கவாட்டுப் பார்வையில் ரசித்துக் கொண்டார்கள். அவர்கள் மெல்ல மெல்ல மற்றவரின் கைகளைப் பிடிக்கத் தொடங்கினார்கள். ஆனால் அவசரப்படவில்லை. “நீ பயப்படுறியா?” என்று அவள் ஒருநாள் கேட்டபோது, “இல்ல… நான் காதலை காப்பாற்ற முயற்சிக்கிறேன்,” என்றான். அவள் பதில் சொல்லவில்லை. அந்த மௌனம் அவனுக்குள் ஒரு சங்கக் கவிதையை எழுப்பியது: யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. சிவந்த நிலத்தில் விழுந்த மழைநீர் போல, அன்பு கொண்ட இரு நெஞ்சங்களும் எவ்வித முயற்சியும் இன்றி ஒன்றாகக் கலந்துவிட்டன. இலண்டன் குளிர்காலம் நண்பன் - நண்பிகளை நெருக்கமாக்கி கலந்து போல. ஒரு மாலை, நூலகத்திலிருந்து வெளியே வந்தபோது, “குளிரா?” என்று அவன் கேட்டான். “சிறிது,” என்றாள். எந்த வார்த்தையும் இல்லாமல், உடனே அவன் தன் மேலங்கியின் [கோட்டின்] முனையை அவள் தோள்மேல் சற்றே இழுத்தான். அவள் தடுக்கவில்லை. அந்தச் சின்னச் செயலில் அவன் நெஞ்சில் ஒரு வரி ஒலித்தது: “மெல்ல மெல்லக் கலத்தல் காதல்.” மெல்லமெல்ல அருகில் வந்து மென்மையான கையைத் தொட்டு அள்ளிஅள்ளி இருவரும் அணைக்க மெல்லமெல்லக் கலத்தல் காதல் ஒரு நாள் தேம்சு ஆற்றங்கரையில் [Thames river] அமர்ந்திருந்தார்கள். நீர் ஓடியது. ஆனால் அவர்களுக்கு நேரம் நின்றுவிட்டது; ஓடவில்லை. அவள் திடீரென அவன் தோளில் தலையைச் சாய்த்தாள். “பேச வேண்டாமே?” என்றாள். “வேண்டாம்,” என்றான். அந்த மௌனம் எந்த முத்தத்தையும் விட அதிக நெருக்கமானது. ஒரு சங்கத் தலைவி அதைப் பார்த்திருந்தால், “மௌனமும் ஒரு மொழிதான்” என்றிருப்பாள். ஒரு இரவு அவள் மனம் உடைந்திருந்தது. “பயமா இருக்கு… எல்லாம் மாறிடுமோன்னு,” என்றாள். அவன் அவள் கையைப் பிடித்தான்— இறுக்கமாக இல்லை; விடாமல் மட்டும். “மாறும் .. ஆனா உண்மை மாறாது,” என்றான். அவள் கண்களில் நீர் திரண்டது. அவன் கையில் அவள் விரல்கள் இன்னும் இறுகின. அந்த நிமிடம் காதல் உடல் அல்ல என்று அவன் உணர்ந்தான். அது — பாதுகாப்பு. "அஞ்சுதல் நீங்கி அணைவதே அன்பு." காதலில் சில வாக்குறுதிகள் சொல்லப்படுவதில்லை. அவை எழுதப்படுவதும் இல்லை. ஆனால் அவை உடைக்கப்படும் போது தான் அதன் இருப்பு தெரியவருகிறது. யாழினியன் உறுதியாய் இருந்தான். ஆனால் இதழினி எதையும் உறுதியாகச் சொல்லவில்லை. அவள் அவனின் பெண் நண்பியாக [girl friend] ஆக இருந்தாள். நெருக்கமாக. அன்புடன். பயமின்றி. ஆனால்—“நாளை திருமணம்.” “என்றென்றும் நீ மட்டும்.” “நாம் பிரியவே மாட்டோம்.” இந்த மூன்றிலும், அவள் ஒரு சொல்லையும் வாய்விட்டுச் சொல்லவில்லை. யாழினியன் இவற்றை வெளிப்படையாகக் கேட்கவும் இல்லை. மெல்ல மெல்ல மலரட்டும் என்று காத்திருந்தான். ஆனால் ஒன்றை மட்டும் இருவரும் மௌனமாகச் செய்தார்கள்— ஒருவரின் பயத்தையோ தடுமாற்றத்தையோ மற்றொருவர் கேலி செய்யவில்லை. ஒரு மாலை, சின்ன காபி கடை ஒன்றில் இரண்டாவது காபி அருந்திக்கொண்டு இருந்தார்கள். அவன் திடீரெனக் கேட்டான்: “இதழினி… நாம் இப்படியே இருந்தா போதுமா?” அந்தக் கேள்வியில் ஆசை இருந்தது. குற்றச்சாட்டு இல்லை. அதில் இருந்தது — பயம். அவள் உடனே பதில் சொல்லவில்லை. ஜன்னல் வழியே வெளியே பெய்துகொண்டு இருந்த மழையைப் பார்த்தாள். “இப்படியே இருந்தது போதும்னு சொல்ல நான் துணியல,” என்று மெதுவாகச் சொன்னாள். “ஆனா பின்னாடி அப்படியே இருக்க மாட்டோம் என்று சொல்லவும் எனக்கு மனசில்லை.” அவன் சிரிக்கவில்லை. அவன் அழவும் இல்லை. “அப்போ நாம என்ன?” என்றான். “நாம்… உண்மை சொல்லிக் கொண்டிருக்கிறோம்,” என்றாள். அந்தப் பதில் அவனுக்குப் புரிந்தது. ஆனால் அது ஆறுதலாக இல்லை. சிலருக்கு காதல் ஒரு நாள். சிலருக்கு அது வாழ்நாள். சிலருக்கு அது கொண்டாட்டம். சிலருக்கு அது பொறுப்பு. யாழினியனுக்கு — காதல் ஒரு மலர் அல்ல; அது ஒரு விதை. மண்ணுக்குள் மெதுவாகப் பதிந்து வேர் பிடிக்க வேண்டிய ஒன்று. இதழினிக்கு — காதல் ஒரு உணர்வு. ஆனால் வாழ்க்கை ஒரு தீர்மானம். அவள் அவனை நேசித்தாள். ஆனால் “என்றென்றும்” என்று சொல்லத் தயங்கினாள். அவன் அவளை காத்திருந்தான். ஆனால் “இப்போதே” என்று வற்புறுத்தவில்லை. அவர்கள் காதலில் இருந்தார்கள். ஆனால் ஒரே வேகத்தில் இல்லை. சிலருக்கு காதல் பொழுதுபோக்கு. சிலருக்கு காதல் வாழ்வின் நாடி. யாழினியனுக்கு — அது உயிர். இதழினிக்கு — அது உண்மை, ஆனால் இன்னும் தீர்மானமாகாத உண்மை நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 3 தொடரும் சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 2 https://www.facebook.com/groups/978753388866632/posts/33774366895545191/?
  22. என்ன இந்த வசனம் நம்ம யாழ்களத்தில்,மற்றும் ஏனைய அரசியல் கருத்து ஜான்பவான்களின் கருத்து போல இருக்கு..சிவப்பு கட்சி பிரதமரும் இப்படி கருத்தை சில காலங்களுக்கு முன் சொல்லியிருந்தார் (விகாரை விடயத்தில்).இப்ப பொலிசாரும் அரசியல் கருத்துக்களை அன்பான ஆனால் மிறட்டல் பாணியில் சொல்லுகின்றனர்
  23. போட்டியில் குறைவான ஓட்ட எண்ணிக்கை எடுக்கும் அணி என்பதற்கு இத்தாலியை தெரிவு செய்தேன். இத்தாலி நல்லாய் விளையாடும் போல் உள்ளதே.
  24. இந்தியன் ரீமிலை வயித்துகுத்துக்கும் , காய்ச்சலுக்கும் வெளியிலை இருக்கிறஆட்கள் கூட... இதெ ரீம் பாக்கியுடன் விளையாடுமாக இருந்தால் கஸ்டம்....
  25. சிறிதரன்: தமிழரசில் இன்னொரு இராசதுரையா..? February 10, 2026 — அழகு குணசீலன் — தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும், அமைப்புக்களுக்கும், அவர்களின் அரசியலுக்கும் மங்குசனி தொடங்கிய காலம் அது. இதனால் புலிகளின் தலைவர் பிரபாகரனால் வீட்டு சின்னத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற லேபல் புதுப்பித்து ஒட்டப்பட்டது. ஒரு வகையில் இதை “ஒப்பரேசன் தமிழரசு” என்று சொல்லமுடியும். இது முரண்பாடுகளைக்கொண்ட பலரை கூட்டமைப்பு என்ற சாக்குக்குள் போட்டு கட்டி புலிகள் அரசியல் பாடம் எடுத்த தருணம். இந்த புதிய லேபல் ஏற்படுத்திய பாராளுமன்ற பிரதிநிதித்துவ அதிகரிப்பை தமிழ்தேசிய கூட்டமைப்பால், 2009 க்கு பின்னர் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு இரா.சம்பந்தர், மாவை சேனாதிராசா ஆகியோரின் ஆளுமையற்ற தலைமைத்துவமும், தமிழ்த்தேசிய வாடையே படாத எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோர் முறையே சம்பந்தனாலும், முன்னாள் மட்டக்களப்பு புலிகளின் சிபார்சிலும் கட்சிக்குள் நுழைந்ததும் முக்கிய சாபக்கேடு. சாணக்கியனின் உள் நுழைவுக்கு முன்னாள் புலிகள், கி.துரைராசசிங்கம் ஊடாக சம்பந்தருக்கு வழங்கிய நற்சான்றிதழும் காரணமாக அமைந்தது. பலவீனமான கூட்டமைப்பு – தமிழரசு தலைமைகள் காரணமாக சுமந்திரன் படிப்படியாக கட்சிக்குள் தனது நிலையை பலப்படுத்திக்கொண்டார். சுமந்திரனின் அரசியலை ஏற்காத முன்னாள் புலிகள் சாணக்கியனை தமிழரசுக்கு வழங்கியது சுமந்திரனின் பலத்தை அதிகரிக்கவே உதவியது. இது முன்னாள் புலிகள் தங்களுக்கு தாங்களே சூனியம் செய்தகதை. இப்போது நாயைக்கடித்து, பேயைக்கடித்து, சிறிதரனை கடித்திருக்கிறது தமிழரசுக்கட்சி சுமந்திரன் அணி. 2024, ஜனவரி 21இல் , திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை கூட்டத்தில் சி.சிறிதரன் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். கூட்ட மண்டபத்திற்கு வெளியே சிறிதரனின் கையை பிடித்து, ‘நண்பன் சிறிதரனுக்கு’ எனது முழு ஆதரவும் என்று சொன்ன சுமந்திரன் அடுத்த கணத்தில் இருந்தே அவருக்கு ஆப்பு வைக்கத் தொடங்கினார். தமிழரசுக்கட்சியின் அரசியல் வரலாறு மட்டும் அன்றி, அதன் நிர்வாக வரலாறும் ஜனநாயகத்தில் கறைபடிந்த கதைகளை கட்டுக்கட்டாக கொண்டது. இதற்கு சிறிதரனும் ஒரு காலத்தில் ஒத்து ஓடியவர் தான். இப்போது அந்த “ஜனநாயகம்” அவரையே கட்சியில் இருந்து துரத்தும் அளவுக்கு வந்து நிற்கிறது. எஸ்.ஜே.வி. செல்வநாயகத்திற்கு பின்னர் ஒரு அமிர்தலிங்கம் போன்று, இரா.சம்பந்தருக்கு பின்னர் ஒரு சுமந்திரன் கட்சியை கட்டுப்பாட்டில் வைத்து தன்னிஷ்ட அரசியல் செய்கிறார். இதனால்தான் இரு வேறுபட்ட சூழ்நிலைகளை கொண்ட அரசியல் செயற்பாடுகளாயினும் “சிறிதரன்” தமிழரசுக்கட்சியின் இன்னொரு இராசதுரையா? என்று கேட்க வேண்டியுள்ளது. அமிர்தலிங்கத்திற்கு மட்டக்களப்பில் ஒரு காசி ஆனந்தன். சுமந்திரனுக்கு மட்டக்களப்பில் ஒரு சாணக்கியன். அ.அமிர்தலிங்கம் தனக்கு ஆதரவான ஒரு குழுவை கட்சிக்குள் வைத்துக்கொண்டு செல்லையா இராசதுரைக்கு எதிரான தனது நடவடிக்கைகள் அனைத்தையும் நியாயப்படுத்தினார். இராசதுரைக்கு கிடைக்க வேண்டிய தமிழரசுக்கட்சி தலைமைத்துவத்தை சி.மு.இராசமாணிக்கத்திற்கு வழங்கி, நாங்கள் பிரதேசவாதம் அற்றவர்கள், ஜனநாயகவாதிகள் என கிழக்குமாகாண மக்களுக்கு காதில் பூச்சுத்தியது. இத்தனைக்கும் இராசமாணிக்கம் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தமிழரசுக்கட்சிக்கு தாவியவர். இதை இராசதுரைக்கு எதிராக நியாயப்படுத்த கிழக்கிலும் ஆட்கள் இருந்தார்கள். அதேபோன்று இன்றும் இரா. சாணக்கியனை பாராளுமன்ற குழுத்தலைவராக நியமித்து சுமந்திரன் கிழக்கு மீதான தனது காதலையும், ஜனநாயகத்தின் மீதான பற்றையும் மத்திய குழு உறுப்பினர்களான பதில் தலைவர் சி.வி.கே .சிவஞானம், பாராளுமன்ற குழுவின் ஊடகப்பேச்சாளர் ஞா.சிறிதரன் ஆகியோரின் முரண்பட்ட கருத்துக்களுக்கு மத்தியிலும் வெளிப்படுத்தியுள்ளார். இத்தனைக்கும் இராசமாணிக்கத்தின் பேரன் சாணக்கியன் பட்டிருப்பு தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக இருந்து பாட்டன் வழியில் தமிழரசுக்கு தாவியவர். சிறிதரனிடம் இருந்து பறித்து சாணக்கியனுக்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியை, இனிப்பு வழங்கியும், பட்டாசு கொழுத்தியும் கொண்டாட சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும் மட்டக்களப்பில் இன்னும் ஆட்கள் இருக்கிறார்கள். “தமிழரசுக்கட்சியின் தற்போதுள்ள எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களது ஏகமனதான தெரிவாக இந்த தெரிவு இடம்பெறவில்லை. கட்சி பதில் செயலாளருடைய தனி விருப்பமாக தற்போது ஏற்கனவே பதவிவகித்த சிறிதரனின் பதவி மாற்றப்பட்டுள்ளது. இந்த விடயம் சரியா, தவறா என்பதை நான் விவாதிக்க விரும்பவில்லை.” என்று தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரன் பதிவு ஒன்றை இட்டுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் பதில் செயலாளர் தனிவிருப்பமாக சிறிதரனின் பதவியை பறித்து இருக்கிறார் என்றால் அது அப்பட்டமான தவறு. ஜனநாயகத்தை மறுதலிக்கின்ற முடிவு. ஆனால் அதைப்பற்றி பேச அரியநேந்திரன் தயாரில்லை. இந்தப்பாணி தான் தமிழரசுக்கட்சியின் அரசியல் பாணி. ஜனநாயக மறுப்பு ஒன்றின் ஊடாக பாராளுமன்ற அரசியலுக்குள் நுழைந்த அரியநேந்திரனிடம் இருந்து வேறு என்னத்தை எதிர்பார்க்கமுடியும்.? அவரது கண்ணுக்கு குத்தியிருப்பது இனிப்பும், பட்டாசும். இந்த நடவடிக்கை பிரதேசவாதத்தின் வெளிப்பாடு என்ற சாரப்பட அவர் கூறுகிறார். தமிழரசுகட்சிக்குள் நிலவுகின்ற உட்கட்சி ஜனநாயகமின்மை, பக்கச்சார்பான பழிவாங்கல், பிரதேச வாதம், பதவிப்போட்டி கழுத்தறுப்பு….. போன்றவை பற்றி அரங்கம் மின்னிதழ் பத்திகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்தது நூறு பதிவுகளாவது பல்வேறு பத்தியாளர்களால் எழுதப்பட்டுள்ளது. அப்போது எல்லாம் இவற்றை மறுத்தவர்களுள் இவரும் ஒருவர். ஏற்கனவே அரியநேந்திரன் வீட்டுக்கதவை தட்டிய சுமந்திரன் தற்போது சிறிதரன் வீட்டுக்கதவை தட்டியிருக்கிறார். அதைக்கூட அவரால் சரியா? தவறா? என்று சொல்லமுடியாத நிலை உள்ளது. சிறிதரன் நீக்கப்பட்டது ஒருவரின் தனி விருப்பம் என்றால் அது எப்படி சரியாக இருக்க முடியும்? தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழுத்தலைவராக ஒருவரை தெரிவு செய்வது உலக நடைமுறையில் அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சார்ந்தது. வேண்டுமானால் கட்சி ஆலோசனையை வழங்க முடியும். அந்த வகையில் சி.சிறிதரன் தெரிவு செய்யப்பட்டார். இது அவருக்கு அரசியல் அமைப்பு குழுவில் உறுப்பினராவதற்கும் உதவியது. சிறிதரனின் அரசியல் அமைப்பு குழுவில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினராக அல்ல. பிரதான எதிர்கட்சி தவிர்ந்த சிறிய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதியாகவே குழுவில் இடம் பெறுகிறார். தமிழரசுக்கட்சி எம்.பி.க்களின் ஏழு வாக்குகள் சிறிதரனுக்கு கிடைத்ததாகவும் , சாணக்கியன் தனக்கு வாக்களிக்கவில்லை என்ற சாரப்பட சிறிதரன் ஊடகபேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சிறிதரனுக்கு ஜீவன் தொண்டமானை விடவும் ஒரு வாக்கு மேலதிகமாக கிடைத்தது. தனக்கு வாக்களித்த மாற்று கட்சியினர் யார், வாக்கு அளிக்காத தன்கட்சிக்காரர் யார் என்பதும் சிறிதரனுக்கு தெரியும். இப்போது உள்ள பிரச்சினை என்னவெனில் சுமந்திரன் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவிக்கும், அரசியல் அமைப்பு சபை உறுப்பினர் பதவிக்கும் முடிச்சுப்போடுவதுதான். உண்மையில் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியில் இருந்து சிறிதரனை கட்சி நீக்க முடியும். ஆனால் அது பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்மதம் இன்றி இடம்பெற்றுள்ளது. ஆனால் ஞா. சிறிநேசன் எம்.பி.யைத்தவிர இது பற்றி பேச மற்றைய ஏழு பேரும் தயாரில்லை. ஏனெனில் சுமந்திரனின் ஜனநாயகம் அவர்களை கணுவில் வளையப் போட்டிருக்கிறது. அரசியல் அமைப்புச்சபை உறுப்பினர் பதவியை சிறிதரன் விரும்பி விலகினால் அன்றி அதை பறிக்க முடியாது என்பது சுமந்திரனுக்கு தெரியாததல்ல. அந்த பதவி முக்கியமானதும் அல்ல. ஆனால் அரசியல் அமைப்பு சபையில் சிறிதரனின் நிலைப்பாட்டை முன்னிறுத்தி பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியை பறித்து அதை சாணக்கியனுக்கு வழங்கி பாராளுமன்றக்குழுவை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே சுமந்திரன் அணியின் இலக்கு. அது அடையப்பட்டிருக்கிறது. சி.சிறிதரன் எம்.பி.மீதான குற்றச்சாட்டு அவர் எட்டு தடவைகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தார் என்பதும், முக்கியமாக இராணுவப்பிரிவு கணக்காய்வாளர் ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க ஆதரவளித்தார் என்பதாகும். இந்த குழுவில் அரசாங்கம் தான் சிபாரிசுகளை செய்கிறது. அதற்காக அனைத்து சிபாரிசுகளையும் சிறிதரன் நிராகரிக்கவேண்டும் என்று தமிழரசு எதிர்பார்க்க முடியாது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நியமனங்கள் தமிழ்த்தேசிய அரசியலுக்கு அப்பால் நோக்கப்படவேண்டியவை. அதை செய்வதற்கான உரிமை சிறிதரனுக்கு இருக்கிறது. எந்த சிபாரிசை ஆதரிப்பது எந்த சிபாரிசை எதிர்ப்பது என்று தமிழரசுக்கட்சி தீர்மானிக்க முடியாது. ஏனெனில் சிறிதரன் தமிழரசுக்கட்சியை மட்டும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. ஆனால் சர்ச்சைக்குரிய கணக்காய்வாளர் நாயக நியமனத்தில் அரசாங்கமும் அரசியல் செய்தது என்பது வெளிப்படையானது. கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தில் ஓய்வு பெற்று சென்றவருக்கு பின்னால் தகுதி, சேவைமூப்பு, அனுபவம் என்பன வற்றின் அடிப்படையில் ஒருவரல்ல ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருக்கின்ற பொழுது இராணுவ சேவையில் இருந்து ஒரு கணக்காய்வாளரை நியமிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இதற்காகவே எதிர்கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும் ஜனாதிபதியின் நிலைப்பாட்டை எதிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இந்த நிர்வாக ஒழுங்கீனத்தை முதன்மைப்படுத்தாது தமிழ்த்தேசிய கட்சிகள் “இராணுவம்” என்ற கண்ணாடியை மட்டும் போட்டுக்கொண்டு எதிர்க்கின்றனர். அதுவல்ல இங்கு பிரச்சினை ஜே.வி.பி. தனது கட்சியின் ஆதரவாளர் ஒருவரை, ஒப்பீட்டளவில் சேவை மூப்பு, தகுதி, அனுவம் குறைந்த ஒருவரை நியமித்து கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தை கட்சி அரசியலின் கீழ் கொண்டு வர முயற்சித்ததே பிரச்சினை. இந்த காரணங்களுக்காக சிறிதரன் அதை எதிர்த்து இருக்கவேண்டுமே ஒழிய இராணுவ அதிகாரி என்பதற்காக அல்ல. இது விடயமாக சிறிதரனும் பேசவில்லை, சுமந்திரனும் பேசவில்லை .கஜேந்திரகுமாரும் பேசவில்லை. ஏனெனில் இராணுவம் என்ற வார்த்தையே தமிழ்த்தேசிய அரசியலில் தாரகமந்திரம். எது எவ்வாறாயினும் சுமந்திரன், சாணக்கியன் வலையில் சிறிதரன் சிக்கியுள்ளார். சிறிதரனை கட்சியில் இருந்து கழட்டி விட்டால் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனுக்கு உள்ள மிகப்பெரும் தமிழ்த்தேசிய தடை அகற்றப்பட்டுவிடும் என்று சுமந்திரன் கூட்டம், இவ்வாறான உட்கட்சி ஜனநாயகம் அற்ற முடிவுகளை நியாயப்படுத்துவதும், மௌனம்சாதிப்பதும் ஒன்றுதான். இதையே கிழக்கின் ஐந்து தமிழரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இந்த நிலைப்பாடு சாணக்கியனை பலமாக்கவே உதவும். இப்பகுதியில் ஏற்கெனவே ஒரு தடவை குறிப்பிட்டது போன்று பாராளுமன்ற குழுத்தலலைவர் பதவி ஆரம்பத்திலேயே சாணக்கியனுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதை பதிவிட்டதற்காக பிரதேச வாதம் பேசுகிறோம் என்றவர்கள், இப்போது இனிப்பு வழங்குகிறார்கள். அவர்களை பிரதேச வாதம் பேசுகிறார்கள் என்று கூறுகிறார் அரியநேந்திரன். ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கில் தமிழரசுக்கட்சியில் இருக்கிறார்கள். மேலும் சேவை மூப்பைத்தவிர எல்லா வகையிலும் தகுதியானவராகவும், பாராளுமன்ற நடைமுறைகளை கையாளக்கூடிய ஆற்றல் உள்ளவராகவும் சாணக்கியன் இருக்கிறார். ஆனால் தமிழரசுக்கட்சியின் வெடிப்புக்கு ஒட்டுப்போடக்கூடிய ஒருவராக சாணக்கியன் இல்லை. சுமந்திரனின் அரசியல் குணாம்சங்களையே அவரும் கொண்டு இருப்பதால் வடக்கில் மட்டும் அல்ல கிழக்கிலும் தமிழரசு சிதறப் போகிறது என்பதே ஜதார்த்தம். “விலகினேனா விலக்கப்பட்டேனா….?” என்று கேட்டார் செ.இராசதுரை. ” விலகேன் முடிந்தால் விலக்குங்கள்… பார்க்கலாம்…” என்று சவால் விடுகிறார் சி.சிறிதரன். இந்த அரசியலுக்கு வயது எழுபத்தியேழு என்ற பெருமை வேறு. பிறப்பின் அடிப்படையிலான மூப்பு அல்ல அரசியல் சாணக்கியம். தமிழரசுக்கட்சி தன்னை புதுமைப்படுத்த வேண்டும். தூய்மைப்படுத்தவேண்டும். ஜனநாயகம் படுத்தவேண்டும். அரசியல் அணுகுமுறையில் மாற்றங்களை செய்யவேண்டும். இல்லையேல் வருகின்ற வெள்ளத்தில் அது அடித்துச்செல்லப்படும்…….! அவ்வளவுதான்….!! https://arangamnews.com/?p=12666
  26. கியூபாவை “உடனடியாக” விட்டுவிடுங்கள்: அமெரிக்காவிற்கு சீனா அதிரடி எச்சரிக்கை! அமெரிக்க டொலருக்கு எதிராக சீன யுவான் உயர்வு! adminFebruary 12, 2026 கியூபாவை “உடனடியாக” விட்டுவிடுங்கள்: அமெரிக்காவிற்கு சீனா அதிரடி எச்சரிக்கை! அமெரிக்க டொலருக்கு எதிராக சீன யுவான் உயர்வு! சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், கியூபா மீதான அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு சீனா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. கியூபா விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. எரிபொருள் மற்றும் அடிப்படைத் தேவைகளைத் தடுப்பதன் மூலம் கியூபா மக்களின் வாழ்வாதார உரிமையை அமெரிக்கா பறிப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது. கியூபாவின் இறையாண்மையை சீனா என்றும் ஆதரிக்கும். அமெரிக்காவின் இந்த “ஒருதலைப்பட்சமான தடைகள்” சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், பிராந்திய அமைதியைக் குலைக்கும் செயல் என்றும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது. ________________________________________ அமெரிக்கப் பொருளாதாரச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், சீன நாணயமான யுவான் (Yuan) கடந்த 2023-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக வலுவான நிலையை எட்டியுள்ளது. அமெரிக்காவின் நிதிச் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் புவிசார் அரசியல் காரணங்களால், டாலர் மீதான அதீத சார்பைக் குறைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, அமெரிக்க அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வதைக் குறைத்து, தனது சொந்த நாணயத்தின் மதிப்பை நிலைநிறுத்த சீனா முயற்சிக்கிறது. இந்த மாற்றம் உலகளாவிய வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://globaltamilnews.net/2026/228979/
  27. பார்த்தால் சிரிக்கிறே பார்க்காவிட்டால் மொறைக்கிறே ........! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.