stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Yesterday
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
இதன் வகை பெயர் தெரியவில்லை 1900+ திருப்பலக்குடியில் உருவோடிய நீளம் குறைந்த ஒற்றைப்பாய் கொண்ட கடற்கலம். இதற்கு கடிசும் (balance board) சுக்கானும் உண்டு.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
இதன் வகை பெயர் தெரியவில்லை 1900+ ஆதிரம்பாக்கத்தில் ஓடிய பாய்மரம்கொண்ட கடற்கலம். இதற்கு Washtakes உண்டு. (தென் தமிழீழத்திலிருந்த வள்ளங்கள் போன்று தோற்றமளிக்கிறது)
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
இதன் வகை பெயர் தெரியவில்லை 1900+ கீழ்க்கரையில் உருவோட்டிய ஒரு வகையான கடற்கலம். இவற்றிற்கு தூம்புக்கட்டை (outrigger) இருந்தது. ஒற்றை நெடுங்கட்டை (boom) இரட்டை நெடுங்கட்டை
-
Different types of boats used by Tamils historically
This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:
-
Cuddalore Vaththal SV BARADHALASHMI CLR 97, Bombay, 1973.jpg
-
Cuddalore Vaththal SENBHAGAM CLR 42, Bombay, 1973.jpg
-
kanna boats. .. cuddalore.jpg
-
Kerala boats of backwater (3). | The big ones: These types of boats in cuddalore are called Kanna padaku
-
Kerala boats of backwater (2).webp
-
Kerala boats of backwater (4).jpg
-
Kattu Vallam - Kerala boats of backwater (3).jpg
-
Kevu Vallam - Kerala boats of backwater (1).webp
-
Kerala boats of backwater (2).jpg
-
Sangkadam - Kerala boats of backwater (1).jpg
-
beypore.jpg
-
battelah beypore.jpg
-
stearn pattamar.jpg
-
pattamar.jpg
-
Pattamar, Bombay, 1973.jpg
-
Rowboat of the thoni MARY ISABEL, Calicut, 1973.jpg
-
Interior of thoni hold, Tuticorin, India, 1973.jpg
-
Thoni MARIA ANTORAJ 43, Bombay, 1973.jpg
-
mahe boats, 1920-1950.jpg
-
Kotiya.jpg
-
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
அடுத்த தரப்பு Pension funds & Hedge Funds, இந்த முதலீட்டு நிறுவனங்கள் தமது முதலீட்டு அடிப்படைகளை கொண்டு அன்னிய செலாவணியினை பயன்படுத்துகின்றன. Market sentiment அடிப்படையில் சந்தையில் முதலீடு செய்கின்றனர். அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் உள்நாட்டு சந்தை தொடர்பான அச்சம் காணப்பட்டால் வெளிநாட்டு முதலீடுகளில் ஆர்வம் காட்டும் வெளிநாட்டு சந்தைகளில் முதலீடு செய்ய தம்து நாட்டு நாணயத்தினை விற்று வெளிநாட்டு நாணயத்தினை வாங்கி பங்கு சந்தை, பணமுறி, வெளிநாட்டு நாணயம் என முதலீடுகள் செய்கின்றன இதனை Risk off என அழைகிறார்கள். இதற்கு நேர்மறையான நிலையினை Risk on என அழைகிறார்கள். பெரு நிறுவனங்கள் எவ்வாறு Market sentiment கணிக்கிறார்கள் என சரியாக தெரியவில்லை ஆனால் பொதுவாக ViX index DXY index (USDX) Bond yield AUDJPY Equities Risk on விக் இன்டெக்ஸ் 20 இற்கு குறைவாக இருந்தால் DXY falling bond yield increase AUDJPY increase Equites increase இதற்கு எதிர்மாறான நிலை Risk off இற்கு பயன்படுத்தப்படுகின்றது. AUDJPY அவுஸ்ரேலிய நாணயத்திம் மதிப்பு Commodity விலைகளில் தங்கியிருக்கும் வேளையில் ஜப்பானிய நாணயம் பாதுகாப்பான நாணய்மாக (சந்தையில் ஏற்படுத்து தாக்கம்) கருதப்படுகிறது, அதே போல் பங்கு சந்தை உயர்வு தாழ்வு ஒரு சந்தையின் அனுகூல பிரதிகூலத்தினை பிரதிபலிக்கும்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
அன்னிய செலவாணி நிறுவனங்கள் தமது வர்த்தகத்தில் ஏற்படும் அன்னிய செலாவணி வர்த்தகதில் ஏற்படும் நாணய பரிமாற்று விகிதத்தினால் ஏற்படும் நட்டத்தினை ஈடுகட்ட பயன்படுத்துகிறார்கள், உதாரணமாக ஒரு நிறுவனம் தனது உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது அன்னிய செலாவணியில் ஏற்படும் மாற்றம் அதன் உற்பத்தி பொருளின் விலையில் தாக்கம் செலுத்துகிறது. உதாரணமாக 100000 பெறுமதியான அவுஸ்ரேலிய இறக்குமதி அமெரிக்க நாணய பெறுமதியில் நாணய பரிமாற்று விகித அடிப்படையில் 67000 இருக்கின்ற நிலையில் அவுஸ்ரேலிய நாணயத்தின் பெறுமதி எதிர்காலத்தில் வீழ்ச்சி அடையும் போது அவுஸ்ரேலிய நாணய இறக்குமதி பெறுமதி அதிகரிக்க அது உற்பத்தி பொருளின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தும். இதனை களைவதற்காக சந்தை ஆபத்தினை தவிர்க்க Hedge செய்கிறார்கள், நாணய சந்தையில் AUDUSD இனை வாங்குவார்கள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
சாதாரண அன்னிய செலாவணி தரகு நிறுவனங்கள் வெறும் மிதக்கவிடப்பட்ட நாணயங்கள் கொண்ட வர்த்தக அமைபினையே வழங்குகின்றன, 2022 பின்னர் இரஸ்சிய நாண்ய வர்த்தகம் இடைநிறுத்தபட்டுள்ளது, அதிக திரவத்தன்மை கொண்ட G10 நாணயங்களுக்கான நழுவல் விகிதம் குறைவாக காணப்படும், குறிபாக அமெரிக்க யுரோ மிக குறைவான நழுவல் விகிதம் காணப்படுகிறது. ஜப்பான் நாட்டு நாணயம் பெரும்பாலும் மற்ற நாணயங்களுடன் விற்க பயன்படுத்தப்படுகிறது(carry trade).
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 71 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 71 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை 701 வங்காளி வாலிபருக்கு 701 தமிழ் குமாரி பெண்களுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பணியாட்களுடனும் வணிகர்களுடனும் திருமணம் செய்ய இலங்கை வருவதால், எல்லா வகையிலும், தமிழர்களுக்கு இலங்கை மீது அதிக உரிமை இருப்பதே தெரிகிறது. அன்றைய காலக்கட்டத்தில், ஒரு உதாரணத்துக்கு. விஜயன் மற்றும் அவனின் கூட்டாளிகளாக தோணியில் நாடு கடத்தப் பட்டு, இலங்கையில் கரை ஒதுங்கிய மொத்தம் 701 பேரின் வங்காள ஆரிய ரத்தமும் மற்றும் அவர்கள் அனைவரினதும் தமிழ் மனைவிமாரினதும் , அவர்களுடன் அவர்களுக்கு பணி புரிய வந்த தமிழ் கூட்டாளிகள், வேலையாட்களினதும் மொத்தம் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் இரத்தமும் ஆரம்ப காலத்தில் முதலில் கலக்கிறது. இப்ப சொல்லுங்கள் யாரின் இரத்தம் கூடுதலாக இருக்கும்? யாருக்கு இலங்கை மீது அதிக உரிமை இருக்கும்? மற்றும் அவர்கள் வரும் பொழுது ஏற்கனவே அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த ஆதி நாகர், இயக்கர் குடிகளின் இரத்தமும் கட்டாயம் நாளடைவில் சேர்ந்து இருக்கும். எனவே சிங்கள வம்சத்தின் கலப்பு எப்படி இருக்கும் என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை? ஆனால் அதை அவர்கள் புரியும் பக்குவத்தை மகாவம்ச, ராஜவலிய கதைகள் தடுத்துக்கொண்டே இருப்பது தான் உண்மை. இயல்பிலேயே தனது சொந்த நாட்டில் ஒரு குற்றவாளியான விஜயனும் அவனது தோழர்களும் தங்கள் தங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் வெவ்வேறு கப்பலில் தவிக்க விட்டுவிட்டு, விஜயன் தனது முதல் அல்லது இரண்டாவது மனைவியை [இலங்கையின் பூர்வீக குடியான குவண்ணாவை] வேறொரு வெளிநாட்டுப் பெண்ணைத் [மதுரை தமிழ் இராசகுமாரியை] திருமணம் செய்து கொள்ள, தனது பிள்ளைகளுடன் துரத்தினார் என்கிறது மகாவம்சம். இந்த நிலையில், விஜயனை இலங்கையின் முதல் நாகரிக குடிமகன் என்று சொல்லமுடியுமா ? அல்லது இலங்கையின் உரிமைகோரலின் அடிப்படை எதையும் அவன் உருவாக்க முடியுமா? அது மட்டும் அல்ல பௌத்தம் கூட அப்போது இலங்கையில் நிறுவப்படவில்லை. சிங்கள மொழி என்று ஒன்று உலகிலேயே இல்லை? அது, சிங்கள மொழி ஆரம்பிக்க தொடங்கியதே, விஜயன் வந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பே! இலங்கையில் இருந்தது சிவா, நாக வழிபாடு மட்டுமே!! இன்னும் ஒன்றைக் கவனியுங்கள், விஜயன் தனது தூதர்களை தமிழ் நாட்டுக்கு அனுப்புகிறான், செய்திகள் பரிமாறப்படுகின்றன, தமிழ் புரியாத இலங்கையாக இருந்து இருந்தால், தன் மகளையும், 700 தோழிகளையும் அங்கு எப்படி திருமணம் செய்து வாழ ஒரு வீரமிக்க, செல்வந்த அரசன் அனுப்பினான்? செய்திகளை எப்படி பொதுமக்களிடம் பரிமாறினர் ? கொஞ்சம் சிந்தியுங்கள்? மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ள குவண்ணாவின் முழு அத்தியாயமும் தீபவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கவேண்டும், பாண்டிய நாட்டு மன்னன் தன் மகளை சமீபத்தில் இலங்கையில் வந்து ஒரு துணை மானிடப் பெண்ணுடன் குடும்பம் நடத்தி, பிள்ளைகள் பெற்று வாழ்ந்து வரும் அறியப்படாத ஒரு பொல்லாத, நாடுகடத்தப்பட்ட ஒருவனிடம் அனுப்பியிருப்பானா? அப்படி அனுப்பினான் என்று மகாநாமா கூறினால், கட்டாயம் எதோ ஒன்றில், எதோ ஒரு நோக்கில் பைத்தியமாக இருக்க வேண்டும்? அதே நேரம், தென் இந்தியா வரலாற்று குறிப்புகளில், பாண்டிய அரசிலோ அல்லது தமிழ்நாட்டிலோ, ஒரு இளவரசி, தோழிகள் சகிதம், தனது உதவியாளர்களுடனும் வணிக மக்களுடனும் இலங்கையில் நிரந்தரமாகவோ அல்லது பகுதியாகவோ வாழ்வதற்காக வந்ததாக எந்த குறிப்புகள் எதுவும் இல்லை. அத்தியாயம் 07, தொடக்கத்தில் தெளிவாகக் கூறுகிறது: உலகின் வழிகாட்டியாகிய புத்தபெருமான் அகில உலகத்தின் மீட்டெழுவதற்கான செயல்களைச் செய்து முடித்ததும், தெய்விக அமைதியின் உச்ச நிலையை அடைந்தவராக, பேச்சாற்றல் மிக்கவர்களில் பெரியவரான அவர், பெரிய தேவர் கூட்டத்தின் நடுவில், தம்முடைய நிர்வாண [முத்தி] நிலையில் படுக்கையில் இருந்த பொழுது, தனது அருகில் நின்ற சக்கனிடம் (Sakka / தேவர்களின் அரசன் இந்திரன்) பேசினார்: "சீகபாகு / சிங்கபாகு" வின் மகன் விஜயன் லால நாட்டி லிருந்து எழுநூறு பேர்களுடன் இலங்கைக்கு வருகிறான். தேவர்கள் தலைவனே! இலங்கையில் என்னுடைய மதம் நிலை நிறுத்தப்படுவகற்காக அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் இலங்கையையும் கவனமாகப் பாதுகாத்து வருவாயாக." என்கிறார். ததாககர் [மனதில் நிறைநிலை அடைந்தவர் / புத்தபெருமான்] கூறிய இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவராஜன், அவரிடம் கொண்ட மரியாதை காரணமாக இலங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை நீல தாமரை மலர் போன்ற மேனி வண்ணம் படைத்த *தேவனிடம் [நீல வண்ணமுடைய - விஷ்ணு] ஒப்படைத்தான். புத்த சமய தெய்வ பக்தர்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்வுகளுக்காகத் [‘serene joy and emotion of the pious’] தான் மகாவம்ச கதையை தொகுத்ததாக ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் வெளிப்படையாக கூறி இருப்பதால், ஏன் மகாநாம தேரர் புத்தரின் அமானுஷ்ய சக்திகள் மற்றும் இந்து கடவுள்களுக்கு கட்டளையிடும் அவரது திறன் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் புனைவுகளை அறிமுகப்படுத்துகிறார் என்பது வெளிப்படையாக எமக்குப் புரிகிறது. புத்தர் கடவுளைப் பற்றி அதிகமாக எதுவும் சொல்லவில்லை. அத்துடன் இந்து கடவுள்களை வழிபடுவதையோ அல்லது பிராமண பூசாரிகளால் இந்து கோவில்களில் செய்யப்படும் விழாக்களையோ மற்றும் சடங்குகளையோ நம்பவில்லை என்ற உண்மை அவரின் போதனைகளிலும் வாழ்விலும் செயல்களிலும் எங்கும் பறந்து விரிந்து இருந்தபோதிலும், மகாநாமதேரர் இப்படியான தரவுகளை புகுத்தியிருப்பது வேடிக்கை மட்டும் அல்ல, புத்த மதத்தின் உண்மைக்கும் களங்கம் விளைவிக்கிறது, எதோ பக்திமான்கள் மகிழட்டும் என புத்தரையும் கூத்து போட வைப்பது சரியா? ஒன்று மட்டும் ஞாபகப் படுத்துங்கள், புத்தரைப் பின்பற்ற உலகத்திலிருந்து, அதாவது ஆசையில் இருந்து, முழுமையாக ஓய்வு பெறுவது அவசியம். இப்ப சொல்லுங்கள், எந்த புத்தகுரு அல்லது புத்த பத்திமான் இப்படி இலங்கையில் வாழ்கிறார்? அப்படி வாழ்ந்தால், ஏன் வடக்கிலும் கிழக்கிலும், தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில், அவர்களின் காணியை பறித்து, புத்தர் சிலையாக எழும்புவாரா? இப்போது என் நினைவுக்கு வருவது என்னவென்றால், புத்தருக்கு, நாடு கடத்தப்பட்ட, கெட்ட நடத்தை கொண்ட விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது தனிப்பட்ட ஆர்வம் இருந்தால், மற்றும் புத்தர் ஏற்கனவே இலங்கை உயிர் வாழ் இனங்களுக்கு, தனது போதனையை போதித்து இருப்பதாலும், விஜயனும் அவனது கூட்டாளிகளும், ஏன் இலங்கையில் அரசை நிறுவியபோது அல்லது அதற்குப் பின்னாவது, தனது 38 ஆண்டு ஆட்சி காலத்தில், எப்போதாவது, பௌத்தர்களாக இருக்கவில்லை? மேலும், இலங்கையில் அவர்களின் முதல் வாழ்க்கை இயக்கர்களிடையே [சமஸ்கிருதம்: यक्ष yakṣa; பாலி: yakkha / உருவமற்ற, மனிதரல்லாதவர்கள்] தொடங்குகிறது , புத்தர் யாரை பயமுறுத்தி, இலங்கையில் வாழத் தகுதியற்றவர் என்று விரட்டி, வேறு ஒரு தீவுக்கு அகற்றினாரோ, அப்படிப்பட்ட இயக்கர்களைத் தான் முதலில் விஜயன் சந்திக்கிறான்?, அப்படி என்றால், புத்தர் தன் பழைய கதையை மறந்து விட்டாரா? ஏன் - தான் தேர்ந்தெடுத்த, பெருமைக்குரியதாக அவராலேயே கருத்தப்பட்ட, துர்நடத்தை கொண்ட விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகளைச் சந்திக்க, இயக்கர்களை அனுமதித்தார்? அது மட்டுமின்றி, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு புத்தருடன் மிகவும் நட்பாக, அவரது இரண்டாவது மற்றும் மூன்றாவது வருகையில் இருந்த நாகர்களை, விஜயனும் அவரது கூட்டாளிகளும் ஏன் சந்திக்கவே இல்லை? பல ஏற்பாடுகளை செய்த புத்தருக்கு ஏன் இவைகள் ஞாபகம் வரவில்லை? மற்றொன்று, மகாவம்சத்தின் பிந்தைய அத்தியாயத்தில், விஜயனுக்குப் பிறகு இலங்கைக்கு புத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்டது, அதுவும் இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அசோகரின் மகன் அல்லது தூதுவர் மூலம்? அது மட்டுமின்றி, புத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்பியது அசோகர் மட்டுமே! சிங்களம் என்ற இனம் ஆரம்பிப்பதற்கு விஜயன் என்ற உருவம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருந்ததே தவிர, அவர் ஒன்றும் சாதிக்கவில்லை ! இலங்கையில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கான எந்தவொரு முயற்சியையும் தொடர அவருக்கு ஒரு பெருமைமிக்க உரித்தான குழந்தைகள் கூட இல்லை. இந்துவாக பிறந்து இந்துவாகவே இறந்தான்! Part: 71 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 As of that time, by all counts, Tamils had a larger claim on Lanka as ladies came with attendants and trade people. Vijaya, a criminal by nature in his own country, chased away his first wife to marry another woman cannot form the basis of claim of Lanka for Buddhists. Even the Buddhism was not established in Lanka at that time. The entire episode of Kuvanna is not in the Dipavamsa. Would the king of Pandya country have sent his daughter to an unknown person who recently landed in Lanka and living with a sub-human woman? Mahanama must be crazy! There are no references to this in the Pandya kingdom from which the princess came with her attendants and trades people. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 72 தொடரும் / Will follow துளி/DROP: 1952 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 71 https://www.facebook.com/groups/978753388866632/posts/32969445186037370/?
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
செய்தி என்கிறீர்கள், இங்கே இணையுங்கள். என்ன சொல்கிறார்கள் என்று அறியலாம் எல்லாரும். நன்றி!
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
பிந்திய செய்தி ஒன்று வாசித்தேன். யாழில் கடமையாற்றும் ஒரு இராணுவ அதிகாரியே இந்த திஸ்ஸவிகாரை பிரச்சனையை ஊக்கப்படுத்துவதாகவும், அவர் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்றும், அரசாங்கம் இதில் கவனமெடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இலங்கையில் எந்தத்துறை ஊழியர்களும் அரசியல்வாதிகளும் அனுராவுக்கு ஆதரவு தெரிவிப்பது கஸ்ரம். காரணம்; ஊழல், அதிகார துஸ்பிரயோகம், வேலைசெய்யாமல் ஊதியம், கையூட்டு பெறுவது, யுத்தக்குற்றம் புரிந்த இராணுவத்தினர், ஊழல் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுவர் என அறிவித்துள்ளார். இந்த குற்றங்கள் நேற்று முழைத்தவை அல்ல, கடந்த அரசியல்வாதிகள் வளர்த்து குளிர் காய்ந்தவை. இதனால் பலரும் வேலையிழப்பு, தண்டனை, சிறை, அரசியல் அஸ்தமனம் என எதிர்நோக்கவேண்டியுள்ளது. கடந்த அரசாங்கங்களில் தண்டனை, சோதனை, கேள்வியில்லை. அவர்களின் வாழ்வு வசந்தமாக இருந்தது. இப்போ இந்த நெருக்கடியை எதிர்கொள்ள அவர்களுக்கு முடியவில்லை. வன்முறையை தூண்டி, நாட்டை கொழுத்தி, அரசியலை பிடித்து அதில் குளிர் காய்ந்தவர்கள் எப்போதும் போல் ஒரு இனக்கலவரத்தை உருவாக்கி அரசியலை தட்டிப்பறிக்க புத்தரை பாவிக்கிறார்கள். என்னதான் கூத்தாடினாலும், நாமல் ஜனாதிபதியாகப்போவதில்லை. அனுராவை விரட்டவும் முடியாது, நன்றோ தீதோ அவருக்கு கொடுக்கப்பட்ட காலம்வரை அவர் ஜனாதிபதியாக தொடர்வார். பின்னர் அவர் செயற்படும் முறையைப்பொறுத்து மீண்டும் தொடர மக்கள் அனுமதிப்பர் அல்லது வீட்டுக்கு அனுப்பப்படுவார். வீணாக தேவையற்ற வன்முறைகளை தூண்டி, சிக்கலில் மாட்டுவர் யாராக இருந்தாலும். அனுரா இனியும் காலந்தாழ்த்தாமல் இந்தக் குற்றவாளிகளை பிடித்து கூண்டில் அடைக்க வேண்டும். இல்லையேல் இதுகள் சும்மா இருகாதுகள், நாட்டுக்கு நல்லது செய்யவும் விடாதுகள், இதன் பின்னால் இருப்பவர்கள் வெகு விரைவில் தாங்கள் விரித்த வலையில் விழுவர். தங்கள் விதியோடு விளையாடுகிறார்கள்.
-
12 இந்திய மீனவர்கள் கைது
படத்தில் உள்ள மீன் பிடி வள்ளம் வேறை உலகில் தடை செய்யப்பட்ட இழுவை படகு வேறை செய்தி போடுபவங்களுக்கே விளக்கம் கிடையாது .
-
12 இந்திய மீனவர்கள் கைது
வீரகேசரி இந்திய பத்திரிகை என்பதை அடிக்கடி நிரூபிக்கின்றது . பிடி பட்ட ரோலரை மறைத்து வியட்நாம் காரங்களின் மீன்பிடி வள்ளத்தை படம் காட்டுமளவுக்கு இந்திய பற்று . https://pixabay.com/photos/vietnam-phu-quoc-port-sea-boats-1262820/
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
சங்கடம் கேரளா இந்த சங்கடம் வகைக் கலங்கள் எமது நாட்டிலும் இருந்தன.
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
உங்களுக்கு சரியாக விளங்கவில்லையென நினைக்கிறேன். கவி அருணாசலம் சொன்ன நீண்ட பதிலில் "சிறிதரன் பா.உ தள்ளி விழுத்தப் பட்டார்" என்பது பொய்த்தகவல் என்றிருக்கிறார். அதற்குத் தான் "தரவுகளுடனான பதில்" என்றிருக்கிறேன், நீங்கள் தெரிந்தெடுத்து மேற்கோள் காட்டிய பகுதி தரவு அல்ல - அபிப்பிராயம். உங்களுக்கு இரண்டிற்கும் வேறுபாடு கிடையாது என்பது இங்கே எல்லோருக்கும் புரியும்! உங்களிடம் சொறியவில்லை, இடையிடையே வந்து சும்மா "காற்றில் இருந்து நீங்கள் பிடுங்கிப் போடும்-plucked from thin air" பொன்மொழிகளுக்கு ஆதாரங்கள் மட்டுமே கேட்கிறேன். நீங்கள் ஏதோ பதில் எழுதுகிறீர்கள், மட்டுக்கள் யாரோ அகற்றுகிறார்கள் என்று உங்கள் பதிலில் இருந்து புரிந்து கொள்கிறேன். ஆனால், நான் விசில் ஊதி அவர்கள் வந்து உங்கள் பதில்களை அகற்றுவதில்லை என்பதைச் சொல்ல வேண்டியது என் கடமை. இப்பவெல்லாம் வாசகர்கள் பதிவோரின் விறுத்தங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே எனக்கு😂!
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
- தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
சிலருக்கு ஊர் நினைப்பு அங்கு செய்த தொழில் போன்றவை மறந்து போகாது இங்கு வந்தும் பழைய தொழில் சம்பந்தபட்ட விடயங்களையே கதைக்க எழுத வருவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை .- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
இப்படி பல தரவுகள் இலங்கை வாழ் மக்கள் எல்லோரிடமும் உண்டு என்னை சொறிவது இருக்கட்டும் முதலில் அறிவு இருந்தா திரி பற்றி எழுதவும் இப்படி திரிக்கு திரி பலடி அடிக்க தேவை இல்லை இனி போய் நிழலியை கூட்டிவாருங்கள் அப்படித்தான் வாழ முடியும் எங்களுக்கு அந்த வில்லங்கம் இல்லை- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
அப்ப பலர் சொன்னது போல, சுமந்திரன் பின் கதவால் வர ரணில் காரணம் இல்லையா? மகிந்த ரீம் தான் காரணமா? என்ன 15 வருடங்கள் முன்னர் நடந்தவற்றையே திரிக்கு ஒன்றாக மாற்றிச் சொல்கிறீர்கள்? இந்த இலட்ணத்தில் உங்களுக்கு சுமந்திரனின் தாத்தாவைப் பற்றிய அறிமுகம் எப்படித் தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்😇??- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
"ஒழுங்கா" மகிழ்ச்சியோ இன்பமோ ஒழுங்கா என்பதில் ஒருபோதும் இல்லை. அதை எப்போது மீறுகிறோமோ அங்கேதான் இன்பம் துளிர்க்கும். அப்படி இல்லையெனில் எப்படி ரோலர்கோஸ்ட்டர் பாரக்குகள் பணம் பார்க்க முடியும்? ஒரு திரில் எப்படி வரும். கள்ள காதலாகவே இருந்தாலும் ஓடு கழட்டி அதை கோவில் கர்ப்பகிரகத்திற்கும் அரேங்கேற்றும்போதுதான் சிவன் - பார்வதியின் ஆசிர்வாதத்துடன் முழுமை அடையும். சிவனுக்கும் பார்வதிக்கும் அவர்கள் படைத்த ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் சம்மத்துடன் இன்பம் ஈர்க்கிறார்கள் அதில் அவர்கள் படைப்பின் உன்னதம் மட்டுமே தெரியும். மனிதர்களுக்கு அவர்களே எழுதாத அவர்களுக்கே புரியாத ஒரு ஆயிரம் வருடம் முன்பு யாரோ யாருக்கோ எதுக்காகவோ எழுதிய வரைமுறைகளை வழக்குகளும் வரையறைகளும் குறுக்கே நிற்கும். புத்தானே பல ஆயிரம் வருடங்கள் முன்பு சொல்லி இருக்கிறான் ....... "நீ பயத்தை எப்போது விடுகிறாயோ அந்த நொடியில் இருந்து வாழ தொடங்குகிறாய்" என்று அவர்கள் வாழ்ந்து இறந்து இருக்கிறார்கள் ........ நாங்கள் சாப்பிட்டுவிட்டு சுவாசித்துக்கொண்டு இருக்கிறோம்- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
யாழ்நகரமே தப்பாகத்தான் இருக்கிறது ...... அதுக்காக இப்போ யாழ்நகரை அழிக்க வேண்டுமா? யாழ் நகரில் இருந்து வெறும் 4-5 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளேயே காணிகள் புல்லும் புதருமாக இருக்கிறது ஏன் மீண்டும் மீண்டும் அங்கேயே எல்லாவற்றையும் கொண்டு சென்று செருகுகிறார்கள் என்று புரியவில்லை. யாழ் வைத்தியசாலை சுற்று சூழல் ஒரு சாதாரண ஆஸ்பத்திரிக்கு உகந்த இடமாக கூட இல்லாமல் ஆக்கிக்கொண்டு இருகிறார்கள். ஆரிய குளத்தில் இருந்து வெறும் 2௦௦ மீட்டர் தூரத்தில் வைத்தியசாலை பின்புற வாசலுடன் ஓர் நீர்த்தேக்கம் தேங்கி நிற்கிறது அதன் துர்நாற்றம் அதை கடக்கும்போது தாங்க முடியவில்லை. ஆனா அருகிலேயே ஆஸ்பத்திரி ஊழியர்கள் பணி நடக்கிறது. இவாறானா செயல்கள் இவற்றையெல்லாம் துப்பரவு செய்யவேண்டிய கட்டாயம் இருந்தும் செய்யாமல் ஏன் இவாறான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. இது யாழில் மட்டுமல்ல கொழும்பிலும் இதே நிலை இருக்கிறது கொம்பனித்தெரு அருகில் இப்படி இருக்கிறது. ஒரு தூர நோக்கு திடடம் இடல் என்பது அங்கே அறவே இல்லை. மிக நெரிசலான போக்குவரத்தை உருவாக்கியபின் அதுக்கு தீர்வு பல கோடி ரூபா அழிவாகத்தான் இருக்கும் ........ அதை கருத்தில் எடுத்தால் இப்போ எந்த செலவும் இல்லாமல் அதை சீர் செய்து கொள்ளலாம். பழைய பூங்கா மரங்கள் பற்றி அதை பற்றிய அறிவு உள்ளவர்கள்தான் சரியான முடிவை எடுக்க வேண்டும் அவை என்ன மரங்கள்? எவ்வளவு வருடங்கள் வாழ்கின்றன? இன்னமும் எவ்வளவு வருடம் வாழும்? போன்ற எந்த அறிவும் இல்லாமல் ஏகாந்தம்தாம் தான் எழுத முடியும். வெறும் உணர்ச்சியால் பிரியோசனமானதை எழுத முடியாது. எனக்கு தனிப்பட ஒவ்வரு மரத்துடனும் ஒரு கதை இருக்கிறது நான் அந்த மரங்களுக்கு கீழே வாழ்ந்திருக்கிறேன் தூங்கி இருக்கிறேன் அது என்னுடைய தனிப்படட உணர்வு மட்டுமே. மேலே ஒரு ஐயா சுமந்திரன் தமிழ் ஈழம் தந்தாலும் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள் என்று ஒரு கருத்தோவியம் வரைந்து உள்ளார் அது உண்மைதான். ஆறுஅறிவும் சரியாக வேலை செய்யும் ஒவ்வரு தமிழனும் அதை அப்படிதான் சொல்வான். ஏனென்னில் சுமந்திரன் தமிழ் ஈழம் கொண்டுவந்தால் அதுக்கு கீழே எல்லா தமிழனுக்கும் அழிவு இருக்கும் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். இங்கு பலருக்கு சம்மந்தன் ஐயா தனது பதவியையும் கொழும்பில் உள்ள சொத்துக்களையும் கொத்தவிடம் இருந்து காப்பாற்ற பின்கதவால் கொண்டுவந்த பின்புதான் சுமந்திரனை தெரியும். எங்களுக்கு சுமந்திரனின் தாத்தாவையே தெரியும். எனவே நீங்கள் வர்ண வர்ண படங்கள் கீறியோ ........ அடுக்குமொழி வார்த்தைஜாலம் எழுதியோ நாங்கள் சுமந்திரனை பற்றி அறிந்துகொள்ள எதுவுமே இல்லை.- சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இந்தோனேசிய வீரர் ஜீட் ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை
சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இந்தோனேசிய வீரர் ஜீட் ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை Published By: Vishnu 23 Dec, 2025 | 07:38 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் வரலாற்றில் ஓரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது வீரர் என்ற அரிய சாதனையை இந்தோனேசிய வீரர் ஜீட் ப்ரியந்தனா நிலைநாட்டியுள்ளார். கம்போடியாவுக்கு எதிராக பாலி உதயனா கிரிக்கெட் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை நடைபெற்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியிலேயே இந்த வரலாற்றுச் சாதனையை ஜீட் ப்ரியந்தனா படைத்தார். கம்போடியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையில் 16ஆவது ஓவரை வீச அழைக்கப்பட்ட ஜீட் ப்ரியந்தனா முதல் 3 பந்துகளில் ஹெட்-ட்ரிக்கைப் பதிவு செய்ததுடன் அதே ஓவரில் கடைசி 2 பந்துகளிலும் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது வீரர் என்ற சாதனைக்கு அவர் சொந்தக்காரரானார். கம்போடியாவின் ஆரம்ப வீரர் ஷா அப்ரார் ஹுசெய்ன் 6 பந்துவிச்சாளர்களை சமாளித்து 37 ஓட்டங்களுடன் திறமையாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தார். ஆனால், 7ஆவது பந்துவீச்சாளராக பந்துவீச அழைக்கப்பட்ட ஜீட் ப்ரியந்தனா தனது முதல் பந்திலேயே ஷா அப்ரார் ஹுசெய்னை ஆட்டம் இழக்கச் செய்தார். அடுத்த இரண்டு பந்துகளில் நிர்மல்ஜித் சிங், சந்தோயுன் ரதனாக் ஆகியோரையும் கடைசி இரண்டு பந்துகளில் மொங்தாரா சொக், பெல் வன்னாக் ஆகியோரையும் ஜீட் ப்ரியந்தனா ஆட்டம் இழக்கச் செய்து அரிய சாதனையை நிகழ்த்தினார். அப் போட்டியில் இந்தோனேசியா 60 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தோனேசியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் தர்மா கேசுமா 68 பந்துகளில் 8 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 110 ஓட்டங்களைக் குவித்து பின்னர் ஆட்டநாயகனாகத் தெரிவானார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கம்போடியா 16 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது. ஜீட் ப்ரியந்தனா ஒரு ஓவரை வீசி ஒரு ஓட்டத்தை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதே தினத்தன்று நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் கம்போடியாவின் சவாலை முறிடியத்து 3 ஓட்டங்களால் இந்தோனேசியா வெற்றிபெற்றது. இந்தோனேசியா 20 ஓவர்களில் 141 - 5 விக்., கம்போடியா 20 ஓவர்களில் 138 - 7 விக். ஜீட் ப்ரியந்தனா ஒரு ஓவர் வீசி 14 ஓட்டங்களைக் கொடுத்தார். இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 5 விக்கெட்கள் வீழ்ந்தன. ஆனால் அவற்றில் இரண்டு ரன் அவுட்கள் அடங்கு இருந்தன. இங்கிலாந்தில் 2010இல் நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மொஹமத் ஆமிர் வீசிய கடைசி (20ஆவது) ஒவரில் ப்றட் ஹெடின், மிச்செல் ஜோன்சன் ஆகியோரை முதல் இரண்டு பந்துகளில் ஆட்டம் இழக்கச் செய்தார். அடுத்த இரண்டு பந்துகளில் மைக்கல் ஹசி, ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் ரன் அவுட் ஆனார்கள். மொஹமத் ஆமிரின் கடைசிப் பந்தில் ஷோன் டெய்ட் ஆட்டம் இழந்தார். இது இவ்வாறிருக்க, அயர்லாந்தில் இந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான ரி20 போட்டி ஒன்றில் தென் ஆபிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட அயர்லாந்து வீரர் கேர்ட்டிஸ் கெம்ஃபர் 5 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தினார். நோர்த் வெஸ்ட் வொரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முன்ஸ்டர் ரெட்ஸ் அணியின் தலைவராக விளையாடிய கேர்ட்டிஸ் கெம்ஃபர், 12ஆவது ஓவரின் கடைசி 2 பந்துகளிலும் 14ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளிலும் விக்கெட்களைக் கைப்பற்றி இந்த சாதனையை நிலைநாட்டி இருந்தார். https://www.virakesari.lk/article/234245- நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Damro 50 மில்லியன் ரூபா நன்கொடை Published By: Vishnu 23 Dec, 2025 | 08:19 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக சமூகம், அமைப்புகள் மற்றும் பரோபகாரிகளிடமிருந்து நாளாந்தம் நிதி நன்கொடைகள் கிடைத்து வருகிறது. அதன்படி, Damro நிறுவனத்தினால் திங்கட்கிழமை (22) 50 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை Damro நிறுவனத்தின் பணிப்பாளர் பிரசன்ன கொடிப்பிலி மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் நாலக குணதிலக்க ஆகியோர் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர். https://www.virakesari.lk/article/234251 - தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.