Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 03 ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டு முற்றத்தில் அதிகாலை பொங்கி, படைத்து, சாப்பிட்ட பின், கிளிநொச்சியில் நடைபெறும் மாபெரும் பொங்கல் விழாவுக்கு, ஆயிரக்கணக்கானோர் கூடினர். அதிகாரக் கொடிகள் இல்லை. வெறுப்பு முழக்கங்கள் இல்லை. பாடல்கள், மேளங்கள், நடனம் மற்றும் பகிரப்பட்ட உணவு மட்டுமே. ஒரு கணம், வடக்கு மற்றும் கிழக்கு முழுமையடைந்ததாக உணர்ந்தன. அந்த தைப் பொங்கல் தினத்தில், முதல் முறையாக, கிளிநொச்சியின் மண் சத்தமாக சிரித்தது. பால் கொதித்தது. பறை இடித்தது. வீணை எதிரொலித்தது. அவர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவித்தனர். கால்நடைகளுக்கு மாலை அணிவித்தனர். பூமிக்கு வணங்கினர். இராணுவம் இருந்தது. கண்காணிப்பு இருந்தது. ஆனாலும் அன்று, பயம் பின்வாங்கியது. மிக பிரமாண்டமான, வியக்கத்தக்க, அவர்களின் மேடையில், பரிபாடலால் ஈர்க்கப்பட்ட வசனங்களுக்கு மதுமிதா பரதநாட்டியம் ஆடினார், அவரது கால்கள் ஒரு சபதம் [vow] போல பூமியைத் தாக்கின. அப்பொழுது கதிரவன் பரதநாட்டியத்தின் ஆழத்தை உணர்ந்தான். பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும், அதாவது , "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (காலத்தை அறுதியிடும் அளவு) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் எனப்படும் இசையை நேர பகுப்பின் படி பிரிக்கும் விதி சேர்ந்த நடனமே பரத நாட்டியம் என்று அவன் மனம் அவனுக்குச் சொன்னது "கைவழி நயனஞ் செல்லக், கண்வழி மனமும் செல்ல, மனம் வழி பாவமும், பாவ வழி ரசமும் சேர, பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள்" பாடலின் பொருளைக் கை முத்திரைகள் காட்ட, கை முத்திரைகள் வழி கண் செல்ல, கண்கள் செல்லும் வழி மனம் செல்ல, மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்ல, பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று வந்திருந்து நடனமாடியது போலவே அபிநய பாவங்கள் அழகுறக் கடைப்பிடித்து நாட்டிய நூல்கள் சொல்லி வைத்த முறையது தவறிடாது அனைவரும் கண்டு இன் புற்றிட நாட்டிய அரங்கினில் ஆடினள் மதுமிதா. அவளைத் தொடர்ந்து கதிரவன் ஒரு நாட்டுப்புறப் பாடலைப் பாடினான் - கதிரவன் பாடிய அந்த நாட்டுப்புறப் பாடல் அலங்காரமற்ற வாழ்க்கையின் நேரடி குரலாக இருந்தது. உப்பு, வியர்வு, கண்ணீர் கலந்து உருவான அந்தப் பாடலில் ஒப்பனை இல்லை; அதில் இருந்தது அனுபவம். “இங்கிருந்து போ” என்று சொல்லப்பட்ட ஒவ்வொரு தருணத்துக்கும் “நாங்கள் இங்கேதான்” என்று திரும்பத் திரும்ப கூறிய எதிர்ப்பின் துடிப்பு அதில் ஒலித்தது. அதே நேரம், அந்த எதிர்ப்புக்குள் மறைந்திருந்த மென்மையும் இருந்தது—மண்ணுக்கான பாசம், மனிதனுக்கான பொறுப்பு, துண்டிக்கப்படாத ஒரு காதல். அவர்கள் நிலத்தை விட்டுப் போகவில்லை; போக முடியாததால் அல்ல, போக மறுத்ததால். வீடாகவும் நினைவாகவும் இருந்த மண்ணை ஒரே நாளில் அல்ல, கொஞ்சம் கொஞ்சமாக வேலி, சட்டம், அதிகாரம் என்ற பெயரில் பறித்தபோதும், அவர்கள் முழுமையாகப் போகவில்லை. அதனால் கதிரவனின் பாடல் ஒரு பாடலாக மட்டும் இல்லை; அது ஒரு உறுதியாய் நின்றது—நிலம் பறிக்கப்படலாம், ஆனால் எங்களை அல்ல - நிலம் அவர்களிடமிருந்து துண்டு துண்டாகப் பறிக்கப்பட்டாலும் கூட, தங்கள் நிலத்தை விட்டு வெளியேறாத மக்களைப் பற்றியது அந்தப் பாடல் அதன் பின், அவன் அவளிடம் கிசுகிசுத்தான்: “நாம் காதலிக்கிறோமா, அல்லது இந்த நிலத்தைப் பாதுகாக்கிறோமா? [“Are we in love, or are we protecting this land?”]” அவள் பதில் சொல்லவில்லை. அவள் கண்கள் மட்டும் பதிலளித்தன— எந்த வித்தியாசமும் இல்லை. கூட்டம் கலைந்து சென்றபோது, வாழ்க்கை அதன் வழக்கமான போராட்டங்களுக்குத் திரும்பியது. மீன்பிடி அனுமதிகள் இன்னும் தாமதமாகின. பண்ணைகள் மற்றும் வயல்கள் இன்னும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டன. சீருடைகள் இன்னும் தூரத்திலிருந்து பார்த்தன [Uniforms still watched from a distance.]. ஆனால் ஏதோ ஒன்று மாறிவிட்டது. உலகம் ஒரே நாளில் நியாயமாகிவிடவில்லை. கடல் இனிமையாகவும் இல்லை. வயல் வளமாகவும் இல்லை. ஆனால் கதிரவன் மீண்டும் கடலுக்குத் திரும்பினான் — இந்த முறை தனியாக இல்லை. அவனுடன் ஒரு நம்பிக்கை இருந்தது; அவனைப் பார்க்கும் ஒரு கண், அவனைப் புரிந்துகொள்ளும் ஒரு மனம் இருந்தது. மதுமிதா மீண்டும் தன் கல்விக்குத் திரும்பினாள் — அதே புத்தகங்கள், அதே வகுப்பறைகள். ஆனால் இப்போது அவளின் படிப்பு வேலைக்காக மட்டும் அல்ல; அடையாளத்திற்காக, பொறுப்புக்காக. கதிரவனும் மதுமிதாவும் திருமணம் பற்றிப் பேசவில்லை. அவர்கள் வாழ்க்கையைப் பற்றிப் பேசினர். அவர்கள் சொன்ன ஒரே வாக்குறுதி — “நாம் யாரோ அதை மறக்கமாட்டோம்.” [They promised to remain who they were. அவர்கள் தாங்கள் இப்ப இருப்பது போலவே இருப்போம் என்று உறுதியளித்தனர்]. அது தை மாதம் போலவே. பெருவெள்ளத்துக்குப் பின் தெளிவாகும் ஆறு போல, புயலுக்குப் பின் அமைதியாகும் வானம் போல, சத்தமின்றி பாதைகளைத் திறக்கும் காலம். தமிழர்களிடத்தில் ஒரு சொல் உண்டு: “தை பிறந்தால் வழி பிறக்கும்.” பிரச்சினைகள் மறைந்துவிடுவதால் அல்ல அது. அநீதிகள் உடைந்து விடுவதால் அல்ல. ஆனால் மனிதர்கள் தங்கள் வேரை, தங்கள் மண்ணை, தங்கள் உண்மையை மீண்டும் நினைவுகூர்வதால்.. உழவர் திருநாள் பொங்கி மலரட்டும் அழகுப் பெண்கள் கோலம் போடட்டும் ஆழமாக வரலாறு மனதில் பதியட்டும் ஈழ மண்ணில் ஒற்றுமை ஓங்கட்டும் உலகத்தை திருத்த புத்தன் பிறந்தான் உரிமை கேட்டவனை புத்தர்நாடு கொல்லுது உண்பது நாழி உடுப்பவை இரண்டே உண்மையைப் புரிந்து புத்ததருமம் செழிக்கட்டும் நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று துளி/DROP: 1986 [கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/33232140093101210/?
  3. முகநூலில் இருந்து.. பிழையான நம்பிக்கைகள் : 1. பாலியல் பற்றிய அறிவை பிள்ளைகளுக்கு கொடுப்பதால் பிள்ளைகளிடையே பாலியல் பிறழ்வுகள் அதிகரிக்காது. 2. பாலியல் அறிவை பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ள நாடுகள் எல்லாம் இலங்கையை விட ஆகக்குறைந்தது ஆயிரம் மடங்காவது அபிவிருத்தி அடைந்த நாடுகள். 3. அந்த நாடுகளுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்றால் அதற்கான ஒரு தகுதி தேவை, அதை நிரூபிக்க வேண்டும் அல்லது சட்டவிரோதமாக செல்ல வேண்டும். 4. அந்த அபிவிருத்தி என்பது பொருளாதார ரீதியான அபிவிருத்தி மட்டுமல்ல, அறிவியல் ரீதியான அபிவிருத்தி. 5. பாலியல் கல்வி என்பது ஒரு ஆணும் பெண்ணும் எப்படி மற்ற ஆட்களுக்கு தெரியாமல் கள்ளத்தனமாக செக்ஸ் வைப்பது என்று சொல்லிக் கொடுப்பதில்லை . 6. பாலியல் கல்வி என்பது ஒவ்வொரு வயதிலும் இயற்க்கையாக ஏற்படும் உடல் மாற்றம் , உணர்வு மாற்றம் போன்றவற்றை விளங்கப்படுத்தி அதை சரியாக எதிர்கொள்ள பற்றி அறிவூட்டுவது . பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன , யாராவது அதற்கு முயற்சி செய்தால் அல்லது உண்மையாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால் அதை எப்படி பெரியவர்களிடம் சொல்லி தீர்வு காண்பது என்று சொல்லிக் கொடுப்பதும்தான் பாலியல் அறிவு . மேலும் , ஒரு பெண்ணுக்கு பீரியட் தொடங்க முன்னமே , பேட் வாங்கி கொடுத்து அதை எப்படி பாவிப்பது என்று விளங்கப்படுத்தி, பீரியட் ஆரம்பித்ததும் அவளுக்கு வயிற்று வலி போன்றவை இல்லை என்றால் அடுத்த நாளைக்கே பாடசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது தான் பாலியல் கல்வி. அதை விட்டுப் போட்டு பிள்ளையை 10 நாள் ரூமில் அடைத்து வச்சுப்போட்டு, பிறகு ஊருக்கே அழைப்பிதழ் கொடுத்து, மேக்கப் போட்டு பிள்ளையை காட்சிப் பொருளாக நிப்பாட்டி பிள்ளைக்கு பீரியட் தொடங்கிட்டு என்று தண்டோரா போட்டு சொல்லுறது மட்டுமில்லாமல் , ஹெலியில் கொண்டுவந்து இறக்கிறது , 13 வயது பிள்ளையை மச்சானை பார்த்தீங்களா என்று ஆட வைக்கிறதெல்லாம் மொக்குத்தனமென்பதை தாண்டி படு பட்டிக்காட்டுத்தனம் என்று புரிய வைப்பதுதான் பாலியல் கல்வி என்று சொல்லப்படும் அறிவியல் கல்வி . இதை சொல்வதால் எனக்கு எதிரிகள் அதிகரிக்கும் , ஏனென்றால் உடற்தொழிற்பாட்டை ஆழமாக கற்ற வைத்தியர்களே பிள்ளைகளுக்கு சாமத்திய வீடு சிறப்பாக செய்து வீடியோ போட்டு படம் காட்டும் சமூகம் நம் சமூகம். அப்படிப்பட்ட எல்லோருக்கும் இந்த கருத்தை சொல்வதால் நான் சமூக விரோதியாகிப்போவேன். சாராம்சம் : பாலியல் கல்வி ஒழுங்காக கொடுக்கப்படாததால் , 1. உங்கள் வீட்டில் உள்ள அநேகமான பெண்கள் இந்த பாலியல் அத்துமீறல்களை ஏதோ ஒரு வழியில் எதிர்கொண்டு அதை வெளியே சொல்ல முடியாமல் உள்ளே குற்ற உணர்வுடன் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். 2. கொஞ்சமாவது ஒழுங்காக படித்த பெண்கள் வளர்ந்தும் சாமத்திய வீட்டு கெசட்டை எடுத்து ஒளித்து வைப்பார்கள் அல்லது உடைத்து எறிவார்கள். https://www.facebook.com/share/1GBhRW3hpn/?mibextid=wwXIfr
  4. பிணையில் விடுதலையான டக்ளஸ் தேவானந்தா கங்காராம விகாராதிபதியிடம் ஆசி பெற்றார்! கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி வண. கிருந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரரை மரியாதை நிமிர்த்தம் இன்று சந்தித்து கலந்துரையாடிய செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, விகாரதிபதியின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார். இதன்போது, “பல்வேறு சவால்களையும் கடந்து வந்த நீங்கள், எதிர்காலத்தினை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் எனவும் இந்த நாட்டிலே நியாயமான முறையில் சிந்திக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் உங்களின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக உயர்ந்த அபிப்பிராயம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது” என்றும் விகாராதிபதி தெரிவித்தார். மேலும், திட்டமிடப்பட்ட காரணங்களுக்காக அவதூறு பரப்புகின்றவர்கள் தொடர்பாக அலட்டிக் கொள்ளாமல் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்தும் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகவும் குறித்த சந்திப்பின்போது விகாராதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1459396
  5. Today
  6. தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி! தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி , 15ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். பின்னர் அங்கிருந்து மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் மாலை 4 மணியளவில் கலந்து கொள்ளவுள்ளார். மறுநாள் 16ஆம் திகதி காலை 09 மணிக்கு மீசாலை ஆரம்ப பாடசாலையில் வீட்டு திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வார். பின்னர் மதியம் 2 மணியளவில் கொக்குவில் தொழிநுட்ப கல்லூரி மைதானத்தில் “முழு நாடும் ஒன்றாக .. ” போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். https://athavannews.com/2026/1459391
  7. ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் அறிமுகம்! பறக்கும் ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல கருத்து வெளியிட்டுள்ளார். இதன்போது வணிக ரீதியான பெறுமதி கொண்ட அனைத்து ட்ரோன் விமானங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இதேவேளை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை இந்த ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் இதில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் என இரண்டு பிரிவுகள் உள்ளன. இவை முறையாக வானில் பறக்கவிடப்படுவதற்கான ஒழுங்குவிதிகளை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டிலிருந்து அவற்றை அமுல்படுத்தத் தீர்மானித்துளளதாகவும் 250 கிராமிற்கும் குறைவான எடையுடைய ‘விளையாட்டுப் பொருள்’ (Toy) வகையைச் சேர்ந்த ட்ரோன்களை நாம் ஒழுங்குபடுத்தப் போவதில்லை எனவும் ஆனால், 250 கிராமிற்கு மேற்பட்ட அல்லது வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்களை நாம் கட்டாயம் ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அவற்றை இறக்குமதி செய்வதற்கும் தனியான ஒழுங்குவிதிகள் காணப்படுகின்ற நிலையில் அதற்கமையச் ட்ரான் பயன்பாட்டாளர்கள் செயற்பட முடியும் எனவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1459342
  8. சீனாவுக்கு போட்டியாக புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியில் இந்தியா! பங்களாதேஷ் துறைமுகங்களில் சீனா முதலீடு செய்து இராணுவ பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், உள்கட்டமைப்பை உருவாக்கி வரும் நிலையில், இந்திய கடற்படை கொல்கத்தா அருகே புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியை துவங்கி உள்ளது. இந்தியாவை சுற்றி சீனா இராணுவ மற்றும் பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கிறது. இதற்காக பாகிஸ்தானின் குவாதர், இலங்கையின் அம்பாந்தோட்டை , மியான்மரின் கியாக்பியூ, பங்களாதேஷின் சிட்டகாங் என, பல நாடுகளில் துறைமுகங்கள் மற்றும் இராணுவ தளங்களை உருவாக்கி வருகிறது. இந்தியாவை சுற்றி, இது ஒரு மாலை போல் அமைந்துள்ளதால், இதை, ‘ஸ்ட்ரிங் ஆப் பேர்ல்ஸ்’ (String of Pearls) எனப்படும், முத்துமாலை உத்தி என அழைக்கின்றனர். இதற்கு பதிலடியாக இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளுடன் இணைந்து, ‘குவாட்’ (‘Quad) அமைப்பை இந்தியா துவக்கி உள்ளது. சீனாவை எதிர்கொள்ளும் மற்றொரு முயற்சியாக, மேற்கு பங்களாதேஷ் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஹால்டியா துறைமுகம் அருகே, வங்க கடலில் புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியை இந்திய கடற்படை துவங்கியுள்ளது. https://athavannews.com/2026/1459360
  9. ISIS பயங்கரவாதி குழு இலக்குகளை குறிவைத்து சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்! சிரியாவில் உள்ள ISIS பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது நேற்று (10) பாரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் இணைந்து நடத்தியுள்ளன. ‘ஆபரேஷன் ஹாக்கி ஸ்ட்ரைக்’ (Operation Hawkeye Strike) எனும் பெயரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், சிரியா முழுவதும் உள்ள 35-க்கும் மேற்பட்ட ISIS மறைவிடங்கள் குறிவைக்கப்பட்டன. குறித்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குகள், கட்டளை மையங்கள் மற்றும் பயிற்சித் தளங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாக்குதலில் 90-க்கும் மேற்பட்ட துல்லியமான ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இதேவேளை, கடந்த மாதம் 13 ஆம் திகதி சிரியாவின் பால்மைரா பகுதியில் ISIS பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் சிரியாவில் நீண்டகாலமாக ஆட்சி செய்த பஷார் அல்-அசாத் பதவியிலிருந்து அகற்றப்பட்ட நிலையில் தற்போது அஹ்மத் அல்-ஷரா தலைமையிலான புதிய சிரிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. இந்தப் புதிய அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1459368
  10. ட்ரம்பு தான்.... நோபல் பரிசு தனக்கு வேணும் என்று, அடம் பிடிக்கிறான் சார்.
  11. 2026இல் நடைபெறவுள்ள தேசிய பரீட்சைகள் - உத்தியோகபூர்வ அறிவிப்பு! Published By: Digital Desk 1 11 Jan, 2026 | 10:03 AM இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேசிய பரீட்சைகளுக்கான அட்டவணையை அறிவித்துள்ளார். அதன்படி, இந்த வருடம் ஏழு முக்கிய பரீட்சைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின்படி, இந்த ஆண்டின் முதல் பரீட்சையானது 2025ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையாகும். இது 2026 ஜனவரி 11ஆம் திகதி நடைபெறுமென திட்டமிடப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தர பரீட்சையின் (General Certificate Of Education Advanced Level)மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி 12ஆம் திகதி முதல் ஜனவரி 20ஆம் திகதி வரை நடைபெறும். 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை, பெப்ரவரி 17ஆம் திகதி முதல் பெப்ரவரி 26ஆம் திகதி வரை நடைபெறும். 2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையானது ஒகஸ்ட் 9ஆம் திகதியும், அதனைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறும். 2027ஆம் ஆண்டு, முதல் முறையாக கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் பங்கேற்கும் மாணவர்களுக்கான மற்றொரு பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை(GIT) 2026 ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறும். இந்த வருடத்தின் இறுதி தேசிய பரீட்சையான 2026 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி முதல் டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட 2025ஆம் ஆண்டு உயர்தரப் பாடங்களை ஜனவரியில் முடிப்பதும், 2026ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சையை வருட இறுதிக்குள் நடத்துவதும் தேசிய பரீட்சைகள் நாட்காட்டியை அதன் வழக்கமான அட்டவணைக்கு மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/235715
  12. நோபல் பரிசை யாருக்கும் மாற்ற முடியாது! ; மச்சாடோ கருத்துக்கு நோபல் நிறுவனம் அதிரடி பதில் Published By: Digital Desk 3 11 Jan, 2026 | 10:37 AM வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்ட 2025-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மாற்றவோ அல்லது பகிரவோ முடியாது என நோர்வே நோபல் நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவர்து மனைவியையும் அமெரிக்கப் படைகள் அண்மையில் கைது செய்தன. இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனக்குக் கிடைத்த நோபல் பரிசை ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு வழங்க விரும்புவதாக மரியா கொரினா மச்சாடோ ஒரு நேர்காணலில் சூட்சுமமாக தெரிவித்தார். இது உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக நோர்வே நோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒருமுறை அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ, பகிர்ந்துகொள்ளவோ அல்லது இரத்து செய்யவோ சட்டப்படி இடமில்லை. நோபல் அறக்கட்டளையின் விதிகளின்படி, விருது குறித்த தீர்மானம் இறுதியானது மற்றும் நிலையானது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது. விருது பெற்றவர்கள் அதன் பின்னர் செய்யும் செயல்கள் அல்லது அவர்கள் வெளியிடும் கருத்துகள் குறித்து நோபல் குழு எந்தவித விமர்சனமும் செய்யாது. மச்சாடோவிடமிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தப் பரிசைப் பெறுவது தனக்குப் பெருமை அளிக்கும் எனத் தெரிவித்திருந்தார். அடுத்த வாரம் வொஷிங்டனில் இவர்கள் இருவரும் சந்திக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், நோபல் நிறுவனத்தின் இந்தத் தெளிவுபடுத்தல் முக்கியத்துவம் பெறுகிறது. வெனிசுவேலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடியதற்காக மச்சாடோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நோபல் குழுவின் விதிகளின்படி அந்த கௌரவம் அவருக்கு மட்டுமே உரியது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235724
  13. இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! Jan 10, 2026 - 11:30 PM இந்தோனேசியாவின் தலவுட் தீவுகளுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று (10) பிற்பகல் 02.58 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் சுமார் 77 கிலோமீற்றர் (47.85 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmk8m1qit03rio29nf6wwpyil
  14. தாழமுக்கம் வலுவிழக்கிறது; மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்! Jan 11, 2026 - 06:30 AM மன்னார் வளைகுடாப் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழமுக்கப் பகுதி தொடர்ந்தும் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தொகுதியின் ஊடாக நாட்டின் வானிலையில் ஏற்படும் தாக்கம் மேலும் குறைவடைந்து வருவதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இத்தொகுதியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.. வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். கொழும்பிலிருந்து புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களில் மீனவர் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடல் பரப்பகளில் காற்றானது கிழக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காணப்படும். எனினும், புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmk911iym03rjo29nfe7yw7xe
  15. "பல் துலக்கும்போது வெடித்த கழுத்து ரத்தக்குழாய்" - அரிதான நிகழ்வுக்கு என்ன காரணம்? பட மூலாதாரம், Lakshmi Jangde படக்குறிப்பு, ராகுல் குமார் ஜங்டே, டிசம்பர் 1-ஆம் தேதி தனக்கு ஏற்பட்ட அந்த தாங்க முடியாத வலியை நினைவு கூர்கிறார். கட்டுரை தகவல் விஷ்ணுகாந்த் திவாரி பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் "அன்று காலை நான் பல் துலக்கிக் கொண்டிருந்தபோது எனக்கு விக்கல் எடுத்தது. அதன் பிறகு, எனது தொண்டையின் வலது பக்கத்திற்குள் ஒரு பலூன் வேகமாக வீங்குவது போன்ற உணர்வு ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே எனது தொண்டை முழுவதுமாக வீங்கிவிட்டது, கண்கள் இருட்டும் அளவுக்குக் கடுமையான வலி ஏற்பட்டது." சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரைச் சேர்ந்த ராகுல் குமார் ஜங்டே, டிசம்பர் 1-ஆம் தேதி தனக்கு ஏற்பட்ட அந்த தாங்க முடியாத வலியை நினைவு கூர்கிறார். அப்போது அவர் தனது மனைவியிடம், "ஏதோ சரியில்லை, நாம் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்" என்று மட்டும் கூறியுள்ளார். அதன் பிறகு அவருக்கு நினைவு திரும்பியபோது, ராய்ப்பூரில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். அவருக்கு ஏற்பட்ட அந்த பாதிப்பு எந்த காயத்தினாலோ அல்லது நோயினாலோ ஏற்படவில்லை, மாறாக அது ஒரு அரிய நிகழ்வு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் கழுத்தில் உள்ள ஒரு தமனி தானாகவே வெடித்துவிட்டது. இது மருத்துவ மொழியில் 'ஸ்பாண்டேனியஸ் கரோடிட் ஆர்டரி ரப்சர்' என்று அழைக்கப்படுகிறது. மாநிலத்தில் பதிவான இது போன்ற முதல் நிகழ்வு இதுவாகும். பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையின் இதயம், மார்பு மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் சுமார் 6 மணி நேர சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு ராகுலின் உயிரைக் காப்பாற்றினர். இந்த நிலை ஏன் ஆபத்தானது? பட மூலாதாரம்,Dr. Krishnakant Sahu படக்குறிப்பு,இந்த ஸ்கேன் ராகுலின் நிலையை தெளிவுபடுத்துகிறது, அவரது வலது கரோடிட் தமனி, அதன் சிதைவு ஆகியவற்றைக் காட்டுகிறது. அதே துறையின் தலைவரான மருத்துவர் கிருஷ்ணகாந்த் சாஹு பிபிசி இந்தியிடம் கூறுகையில், "கழுத்தில் உள்ள ரத்த நாளம் வெடிப்பது உயிருக்கு ஆபத்தான ஒரு நிகழ்வு. இதற்குச் சிகிச்சை அளிக்காவிட்டால், சில நிமிடங்களிலேயே மரணம் ஏற்படலாம். ஆனால், இது பெரும்பாலும் கடுமையான விபத்துக்கள் அல்லது தொண்டை புற்றுநோய் போன்ற நோய்களின் போதுதான் நடக்கும். ஒரு சாதாரண மனிதருக்குக் கழுத்து ரத்தக்குழாய் தானாகவே வெடிப்பது என்பது மிகவும் அரிதான நிகழ்வு," என்றார். தொடர்ந்து பேசிய அவர், "மருத்துவ இதழ்களின் படி, இதுவரை உலகம் முழுவதும் இது போன்று 10 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. அந்த அளவுக்கு இது அரிதானது," என்றார். 40 வயதான ராகுல், ராய்ப்பூர் அருகிலுள்ள பன்புரி பகுதியில் வசிக்கிறார். அவர் பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்கள் விற்கும் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது குடும்பத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உள்ளனர். தமக்கு இதற்கு முன்பு இது போன்ற எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்று ராகுல் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், அந்த டிசம்பர் காலை நடந்தது ராகுலுக்கு மட்டுமல்ல, மருத்துவர்களுக்கும் ஒரு சவாலான விஷயமாக அமைந்தது. மருத்துவப் பரிசோதனையில் ராகுலின் வலது பக்க கழுத்து நாளம் வெடித்திருப்பது தெரியவந்தது. பொதுவாக, கழுத்தில் உள்ள வலது மற்றும் இடது நாளங்கள் இதயத்திலிருந்து மூளைக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தைக் கொண்டு செல்கின்றன. இதயத்திலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் தமனிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நாளங்களின் வலைப்பின்னல் மனித உடல் முழுவதும் மிகவும் பாதுகாப்பாகப் பரவியுள்ளது. மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் ஒரு இடத்தில் காயமோ அல்லது கிழிவு ஏற்பட்டால், அது இதயத்திலிருந்து ரத்தத்தை வழங்கும் நாளங்களைப் பாதித்து ரத்தப்போக்கை ஏற்படுத்தினால் மட்டுமே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதயத்திலிருந்து உடலின் பிற பகுதிகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இந்த நாளங்கள் மிக அதிக அழுத்தத்தில் பாய்வதால், அதிக அளவு இரத்தம் மிக விரைவாக இழக்கப்படும். இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர் கிருஷ்ணகாந்த் சாஹு தலைமையிலான குழு மேற்கொண்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், "எந்தவித காயம், தொற்று, புற்றுநோய் அல்லது முன்கூட்டிய நோய் ஏதுமின்றி கழுத்தில் உள்ள நாளம் தானாகவே வெடிப்பது ஒரு அரிய நிகழ்வு," என்றார். ராகுலின் கழுத்தில் வலது நாளம் வெடித்ததால், கழுத்துப் பகுதியில் ரத்தம் வேகமாக நிரம்பியது. தமனியைச் சுற்றி ரத்தம் தேங்கியதால் ஒரு பலூன் போன்ற அமைப்பு உருவானது. இதனை மருத்துவ மொழியில் 'சூடோஅன்யூரிசம்' என்று அழைக்கிறார்கள். மருத்துவர் சாஹு இதுகுறித்து கூறுகையில், "உலகெங்கிலும் உள்ள மருத்துவ இதழ்களில் இது போன்ற சம்பவங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். எனது பணிக்காலத்தில் இது போன்ற ஒரு சம்பவத்தை நான் பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை," என்றார். உயிரைக் காப்பாற்றுவது எவ்வளவு கடினம்? பட மூலாதாரம்,Dr. Krishnakant Sahu படக்குறிப்பு,மருத்துவமனையில் மருத்துவர்களும் ஊழியர்களும் தன்னை கையாண்ட விதம் தனக்கு தைரியத்தை அளித்ததாக ராகுல் கூறுகிறார். இதுகுறித்த மேலதிக விபரங்களைப் பகிர்ந்த மருத்துவர் சாஹு, "எளிமையாகச் சொன்னால், ரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு பக்கவாதத்தை உண்டாக்கும். ஆனால் ராகுலின் விஷயத்தில், பிரச்னை இன்னும் ஆபத்தானது. நாளமே வெடித்துவிட்டது. அங்கு உருவான ஒரு சிறிய ரத்தக் கட்டி கூட மூளையை அடைந்திருந்தால், முடக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருந்தன," என்றார். பெரிய ரத்தக் கட்டிகளோ அல்லது அதிக எண்ணிக்கையிலான கட்டிகளோ மூளையை அடைந்தால், முழு மூளையும் சேதமடையக்கூடும் அல்லது நோயாளி 'மூளைச்சாவு' அடையும் நிலை கூட ஏற்படலாம். அறுவை சிகிச்சைக்கு முன்பும், அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோதும், நாளம் மீண்டும் வெடிக்கும் அபாயம் இருந்ததாக அவர் விளக்கினார். அப்படி நடந்திருந்தால், கட்டுப்பாடற்ற ரத்தப்போக்கினால் சில நிமிடங்களிலேயே நோயாளி இறந்திருக்கக்கூடும். ராகுல் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது அவரது நிலைமை சீராக இல்லை. அவரது கழுத்திற்குள் அதிக ரத்தம் சேர்ந்திருந்ததால், அறுவை சிகிச்சையின் போது நாளத்தை துல்லியமாகக் கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது. "கழுத்தின் இந்தப் பகுதியில் பேச்சு, கை கால்களின் அசைவு மற்றும் இதயத் துடிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பல முக்கியமான நரம்புகள் உள்ளன. நாங்கள் ஒரு சிறிய தவறு செய்திருந்தாலும், அது நோயாளிக்கு வாழ்நாள் முழுவதும் குறைபாட்டையோ அல்லது மரணத்தையோ ஏற்படுத்தியிருக்கும்," என்று மருத்துவர் சாஹு குறிப்பிட்டார். நாளத்தைக் கண்டறிந்து அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கே மருத்துவர்களுக்கு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆனது. முழு அறுவை சிகிச்சையும் 5 முதல் 6 மணி நேரம் நீடித்தது. வெடித்த நாளத்தைச் சரிசெய்ய 'பொவைன் பெரிகார்டியம் பேட்ச்', அதாவது மாட்டின் இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வு பயன்படுத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ராகுலுக்கு 12 மணி நேரம் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்தது. "ராகுலுக்கு சுயநினைவு திரும்பிய பிறகு, முதலில் அவருடன் பேசி அவரது குரலைச் சரிபார்த்தோம். பின்னர் அவரது கைகால்களின் அசைவுகளையும், பின்னர் அவரது முக அசைவுகளையும் சரிபார்த்து, ரத்தக் கட்டிகள் ஏதும் மூளையை அடையவில்லை என்பதையும், அறுவை சிகிச்சையின் போது எந்த முக்கிய நரம்புகளும் காயமடையவில்லை என்பதையும் உறுதி செய்தோம்," என்று மருத்துவர் சாஹு கூறினார். ராகுலின் மனைவி லட்சுமி ஜங்டே பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், ஆரம்ப நாட்கள் மிகவும் பயமாக இருந்ததாகவும், நிலைமை மிகவும் தீவிரமாக இருந்தது என்று மருத்துவர்கள் தெளிவாகக் கூறியிருந்ததாகவும் தெரிவித்தார். "இப்போது அவர் குணமடைவதைப் பார்க்கும்போது, அவரது கழுத்து ரத்தக்குழாய் வெடித்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை," என்கிறார் அவர். சதீஷ்கரில் இது போன்று நிகழ்வது முதல் முறை என மருத்துவர்கள் கூறியபோது தான் மிகவும் பயந்ததாக ராகுல் கூறுகிறார். ஆனால் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அளித்த தைரியம் அவரை மீட்டெடுத்தது. தற்போது அவர் ஒரு மாதத்திற்கும் மேலாகப் பார்க்காத தனது குழந்தைகளை, குறிப்பாகத் தனது மகளைச் சந்திக்க வீட்டிற்குச் செல்லத் தயாராகி வருகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp82vde6506o
  16. வெளியில் இப்பொது வரும் கதை. ரசூசிய இதுவரை சொல்லி வந்ததை அமெரிக்கா சரி, யதார்த்தத்துக்கு இடம் இருக்கிறது என்பதை நிரூபித்து உள்ளது. டிரம்ப் இதில் வகிபாத்திரம் மாத்திரம்,
  17. ஓம் அது உண்மை தான் கிரீன்லாந்து டென்மார்க் இராச்சியத்தின் ஒரு பகுதியாகும் ஆனால் விரிவான சுதந்திரத்தை சுயாட்சியை அனுபவிக்கிறது. ஈழதமிழ் ரஷ்ய விசுவாசிகளை மேற்குலநாடுகள் வலிந்து கடத்தி வரவில்லை அவர்களாகவே வலிந்து விரும்பி வந்து சுதந்திர வாழ்வை அனுபவிப்பதுடன் ஒப்பிடலாம்
  18. வெனிசுலா அதிபரை கைது செய்தது போல், புடினை கைது செய்ய உத்தரவிடும் சாத்தியம் குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். Tetyana Oliynyk - 9 ஜனவரி, 23:41 டொனால்ட் டிரம்ப். ஸ்கிரீன்ஷாட் 61952 - अनुकाला (ஆங்கிலம்) ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினை கடத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்புகிறார். மூலம்: எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன நிர்வாகிகளிடம் டிரம்ப் பேசுகிறார் . விவரங்கள்: வெனிசுலாவில் அமெரிக்க நடவடிக்கைக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் எதிர்வினையை ஒரு பத்திரிகையாளர் டிரம்பிற்கு நினைவூட்டினார், அப்போது ஜெலென்ஸ்கி கூறினார்: "சர்வாதிகாரிகளுடன் அது இப்படித்தான் செயல்படுகிறது என்றால், அடுத்து என்ன செய்வது என்று அமெரிக்காவிற்குத் தெரியும்." பின்னர் பத்திரிகையாளர் டிரம்பிடம் புடினை பிடிக்க உத்தரவிடுவாரா என்று கேட்டார். மேற்கோள்: "அது அவசியமில்லை என்று நினைக்கிறேன். நான் எப்போதும் அவருடன் ஒரு சிறந்த உறவைக் கொண்டிருந்தேன். நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். எட்டு போர்களை நான் தீர்த்துவிட்டேன்..." "பீட்டரை உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை, கடந்த மாதம் அவர்கள் 31,000 பேரை இழந்தனர், அவர்களில் பலர் ரஷ்ய வீரர்கள், மேலும் ரஷ்ய பொருளாதாரம் மோசமாக உள்ளது. நாங்கள் அதை சரிசெய்யப் போகிறோம் என்று நினைக்கிறேன். நாங்கள் அதை விரைவாகச் செய்திருக்க முடியும் என்று நான் விரும்புகிறேன்." பின்னணி: ஜனவரி 3 ஆம் தேதி, அமெரிக்க இராணுவத்தின் ஒரு உயரடுக்கு சிறப்புப் படைப் பிரிவான டெல்டா படை, வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றி நாட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றது. பின்னர் அவர்கள் நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வெனிசுலாவில் தெளிவான மற்றும் பாதுகாப்பான அதிகாரப் பரிமாற்றம் நடைபெறும் வரை அமெரிக்கா அங்கு ஆட்சி செய்யும் என்று டிரம்ப் கூறினார் . ஜனவரி 5 ஆம் தேதி, வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவிற்கு நாட்டின் வளங்களை முழுமையாக அணுக அனுமதிக்க வேண்டும் என்று டிரம்ப் கோரினார், மறுப்பது மிக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார். https://www.pravda.com.ua/eng/news/2026/01/09/8015438/
  19. மச்சாடோவை சந்திக்கும் டிரம்ப், அவரது நோபல் பரிசை ஏற்றுக்கொள்வது 'பெரிய மரியாதை' என்று கூறுகிறார். ஜூலியா மான்செஸ்டர் - 01/09/26 காலை 9:19 ET ஒலியை இயக்கு தலைப்புகள் முழுத்திரைஇடைநிறுத்துபகிர் அடுத்த வாரம் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவைச் சந்திப்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகக் கூறிய ஜனாதிபதி டிரம்ப் , அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவது ஒரு "பெரிய மரியாதை" என்று கூறினார். இந்த வார தொடக்கத்தில் ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் சீன் ஹானிட்டியின் நிகழ்ச்சியில், இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் வென்ற அமைதிக்கான நோபல் பரிசை டிரம்பிற்கு வழங்க விரும்புவதாக மச்சாடோ கூறினார். மச்சாடோவுக்கு பரிசு வழங்கப்படுவதற்கு முன்பு தானே பரிசை வெல்ல முயற்சி செய்து கொண்டிருந்த டிரம்ப், வியாழக்கிழமை ஹன்னிட்டியிடம் அதை அவரிடமிருந்து ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். "நான் எட்டு போர்களை நிறுத்திவிட்டேன்," என்று டிரம்ப் கூறினார். "இது நோர்வேக்கு ஒரு பெரிய அவமானமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். இப்போது, நோர்வேக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் [நோபல் பரிசு] குழு அங்குதான் அமைந்துள்ளது, நிறைய நார்வே மக்கள்." "சரி, அவள் அடுத்த வாரம் எப்போதாவது வருவாள் என்பது எனக்குப் புரிகிறது, அவளுக்கு வணக்கம் சொல்ல நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று டிரம்ப் ஹன்னிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறினார். இந்த வார தொடக்கத்தில் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், மச்சாடோ தனது சொந்த நாட்டை வழிநடத்த வெனிசுலாவில் போதுமான ஆதரவோ மரியாதையோ இல்லை. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் கைப்பற்றி போதைப்பொருள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அமெரிக்காவிற்கு அழைத்து வந்த ஒரு இராணுவ நடவடிக்கைக்கு டிரம்ப் உத்தரவிட்டதை அடுத்து, வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை அமெரிக்கா ஆதரித்தது. மச்சாடோவுக்கு பரிசு வழங்க முடிவு செய்ததில் நோர்வேக்கு ஏதோ தொடர்பு இருப்பதாக தான் நம்புவதாக டிரம்ப் கூறினார், ஆனால் நோர்வே இதை மறுக்கிறது என்று குறிப்பிட்டார். "கோட்பாட்டில், நீங்கள் எட்டு போர்களை நடத்தும்போது, ஒவ்வொரு போருக்கும் ஒன்றைப் பெற வேண்டும்," என்று அவர் கூறினார். https://thehill.com/homenews/administration/5681120-trump-machado-nobel-peace-prize/
  20. டிரம்ப் புடினை அமைதிக்கு ஒரு தடையாகக் கூறுகிறார், அவரது விளையாட்டுகளால் அவர் சோர்வடைந்துவிட்டார் என்று கூறுகிறார் - தி டெலிகிராஃப் Krystyna Bondarieva , ரோமன் பெட்ரென்கோ — 10 ஜனவரி, 09:04 டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 88199 பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புதின் மீது பெருகிய முறையில் விரக்தியடைந்து வருகிறார் , இப்போது உக்ரைனில் அமைதிக்கு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்க்கை விட அவரை ஒரு பெரிய தடையாகக் காண்கிறார் . மூலம்: ஐரோப்பிய பிராவ்தா செய்தி வெளியிட்டுள்ளபடி, ஆதாரங்களை மேற்கோள் காட்டி தி டெலிகிராஃப் விவரங்கள்: ரஷ்ய கொடியுடன் கூடிய எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றி புதிய தடை மசோதாவை ஆதரிக்கும் டிரம்ப்பின் முடிவு, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவரது நேரம் முடிந்துவிட்டது என்ற செய்தியை புடினுக்கு அனுப்பும் நோக்கத்திற்காகவே என்று தி டெலிகிராஃபிடம் வட்டாரங்கள் தெரிவித்தன. "அவர் கேரட் மற்றும் குச்சி அணுகுமுறையைச் சுற்றி வேலை செய்கிறார். மேலும் அவர் கேரட்டை முழுவதுமாக விட்டுவிட்டார் என்று நான் நினைக்கிறேன்" என்று ஜனாதிபதியின் உள் வட்டத்திற்கு நெருக்கமான ஒருவர் கூறினார். பேச்சுவார்த்தைகளில் "இரண்டு படிகள் முன்னோக்கி, ஒரு படி பின்னோக்கி" என்ற ரஷ்ய உத்தியை டிரம்ப் பெருகிய முறையில் சோர்வடையச் செய்வதாக மற்றொரு வட்டாரம் மேலும் கூறியது . முன்னதாக, டிரம்ப் புடினுக்கு சாதகமாகப் பேசியிருந்தார், மேலும் போருக்கு உக்ரைன் தான் காரணம் என்று கூறியிருந்தார். இருப்பினும், தற்போதைய மற்றும் முன்னாள் வாஷிங்டன் அதிகாரிகள் பலரின் கூற்றுப்படி, டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாடு, புடின் முடிவில்லாத ஒரு விளையாட்டை விளையாடுகிறார் என்ற ஐரோப்பிய பார்வையுடன் இப்போது மிகவும் நெருக்கமாக ஒத்துப்போகிறது . கடந்த ஆண்டு இறுதியில் மார்-எ-லாகோவில் ஜெலென்ஸ்கி டிரம்பை சந்திப்பதற்கு முந்தைய நாள் ரஷ்யா கியேவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது. இது டிரம்பின் நிர்வாகத்தை முன்பை விட போர் குறித்த ஐரோப்பிய கண்ணோட்டத்திற்கு நெருக்கமான நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டியதாக ஒரு இங்கிலாந்து அதிகாரி கூறினார். புடினின் தொடர்ச்சியான மிருகத்தனம், ஏமாற்றும் நடத்தை மற்றும் விளையாட்டுத்தனம் ஆகியவை நிர்வாகத்தால் கவனிக்கப்படாமல் போகவில்லை என்று அந்த அதிகாரி கூறினார். பின்னணி: சமீபத்தில் மார்-எ-லாகோவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், டிரம்ப் புதின் மீதான தனது தனிப்பட்ட எரிச்சலை வெளிப்படுத்தினார்: "புதினைப் பார்த்து நான் மகிழ்ச்சியடையவில்லை; அவர் அதிகமான மக்களைக் கொல்கிறார்" என்று கூறினார். ஜனவரி 7 ஆம் தேதி, அமெரிக்க சிறப்புப் படைகள் தடைகளுக்கு உட்பட்டு ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட டேங்கரில் ஏறியபோது மாஸ்கோவுடன் மோதலை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டது . சில மணிநேரங்களுக்குப் பிறகு, செனட்டர் லிண்ட்சே கிரஹாமுடனான சந்திப்பின் போது டிரம்ப் தடைகள் மசோதாவிற்கு "பச்சைக்கொடி" காட்டியதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது . https://www.pravda.com.ua/eng/news/2026/01/10/8015459/
  21. Yesterday
  22. எல்லோருக்கும் வாழ்வில் நோய், மரணம் உறுதி, அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. எல்லோரின் வாழ்வில் ஏற்படும் நோயைப்பற்றி, மரணத்தைப்பற்றி யாரும் அலட்டிக்கொள்வதில்லை. இருந்தபோதிலும் சிலரின் வாழ்வில் இந்த நிலைகள் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒரு சிலர் தம்மை இழந்து வருத்தி, தம் இன்ப துன்பம், களைப்பு பாக்காமல் அடுத்தவரின் விடிவுக்காக, மகிழ்ச்சிக்காக இடைவிடாமல் உழைப்பார்கள், தங்களால் இயன்றதை செய்வார்கள். அவர்களுக்கு நோயோ, மரணமோ நேரிட்டால் அவரால் பாதுகாக்கப்பட்டவர்கள், பயனடைந்தவர்கள் சொல்வது. "இப்படிப்பட்ட நல்ல மனிதனுக்கான இப்படி நேர்ந்தது? அவர் ஒரு தியாகி, அவருக்கு இப்படி வந்திருக்கவே கூடாது,இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாமென வருந்துவார்கள். அப்படிப்பட்டவர்கள் இறந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள் தியாகியாக. அதேநேரம் தமது அதிகார திமிரினால், வரட்டுகவுரவத்தினால், பழிவாங்கலினால்,மற்றவர்களை வருத்தி, தாம் இன்பம் பெறுவதற்காக அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து வாழ்பவர்களுக்கு இப்படியான நிலை ஏற்படும்பொழுது, பாவி! எத்தனை பேரின் வாழ்வை கெடுத்தார்கள், இப்போ வந்த இந்த நோய், மரணம் பல ஆண்டுகளுக்கு முன் வந்திருக்கக்கூடாதா இவருக்கு? எத்தனை பேரின் வாழ்க்கை பாதுகாக்கப்பட்டிருக்கும் என நினைக்கத்தோன்றும். அவர்கள் வாழ்ந்தாலும் இறந்தவர்களாகவே கருதப்படுவார்கள். அவரவர் வாழ்வு எப்படியானதென்பதை அவர்கள் நோயின், மரணத்தின் போது கூடியிருப்போர் கூறும் கருத்துக்களில் இருந்து வெளிப்படும். நாகாசுரனை கொன்றது தெய்வம். அவன் கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக. அதற்காக தெய்வத்தை குறை கூறுவோமா? அல்லது நாகாசுரனால் வதைக்கப்பட்டவர்களை குறை கூறுவோமா?
  23. This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.