stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!
இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஆரம்பமாகும் விசேட பஸ் சேவை Mar 12, 2026 - 12:02 PM மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட முன்னுரிமை பேருந்து சேவையொன்றை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் இதுவரை முறையாகக் கவனிக்கப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இது முன்னெடுக்கப்படுகிறது. ‘அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் மனித கௌரவத்தை பாதுகாக்கும் நாடு’ எனும் அரசாங்கத்தின் தூரநோக்கை யதார்த்தமாக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக 430.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சமூகத்தில் நடமாடுவதற்கான தடைகளை நீக்குவதே இதன் நோக்கமாகும். முதற்கட்டமாக, சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் இலகுவாக ஏறுவதற்கு வசதியான 'தாழ்ந்த தளம்' கொண்ட 10 நவீன குளிரூட்டப்பட்ட பேருந்துகள் கடந்த 10 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இவை சனிக்கிழமை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. 33 ஆசனங்களைக் கொண்ட இந்தப் பேருந்து ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் 80 பயணிகள் பயணிக்க முடியும். சக்கர நாற்காலிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட தொழில்நுட்ப வசதிகளும் இதில் உள்ளன. முன்னோடித் திட்டமாக மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்திலிருந்து புறக்கோட்டை மற்றும் கடவத்தை வரையில் காலை, மாலை வேளைகளில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் ஒருமுறை இந்த பேருந்துகள் இயக்கப்படும். மஹரகம அபெக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றை நேரடியாக இணைக்கும் வகையில் இந்த சேவைகள் அமையும். தெரிவு செய்யப்பட்ட 28 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு சைகை மொழி, தொழில்சார் ஒழுக்கநெறிகள் மற்றும் பஸ் தொழில்நுட்பம் குறித்து விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் மேலும் 100 பேருந்துகளை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் 'Clean Sri Lanka' திட்டத்தின் கீழ் பேருந்து நிலையங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு நவீனமயப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது https://adaderanatamil.lk/news/cmmn35rqc000b356pqr2s4lgf
-
நிதித் துஸ்பிரயோகம் – வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடு!
சம்பவம் நடைபெற்ற காலமான 2016’ம் ஆண்டு… அவர் மாவட்ட செயலர், இப்போ ஆளுநர்.
-
நிதித் துஸ்பிரயோகம் – வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடு!
அண்ணை தற்போதைய ஆளுநர் தான், இவர் முன்பு அரசாங்க அதிபராக இருக்கையில் நடந்த திட்டம்.
-
போர் நிறுத்தத்திற்கு நிபந்தனைகளை முன்வைத்தார்: ஈரான் ஜனாதிபதி!
போர் நிறுத்தத்திற்கு நிபந்தனைகளை முன்வைத்தார்: ஈரான் ஜனாதிபதி! Published By: Digital Desk 1 12 Mar, 2026 | 11:06 AM தற்போதைய போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். அமைதியை நிலைநாட்ட வேண்டுமானால் சர்வதேச சமூகமும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் இந்த விடயங்களில் அவசரமாக கவனம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள், அதாவது ஈரானிய ஆட்சியின் இறையாண்மை மற்றும் உரிமைகள் சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மோதல்களினால் ஏற்பட்ட அழிவுகளுக்காக நியாயமான இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான ஆக்கிரமிப்புகள் அல்லது தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாது என்பதற்கான நிரந்தர சர்வதேச பிணை மற்றும் உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும். இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/240763
-
வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு!
போதை பழக்கத்தால்…. மனநல பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். ஒரு குடும்ப தலைவர், அரச உத்தியோகத்தர்…. அவரின் வீட்டில் வாள் எல்லாம் ரெடியாக இருந்திருக்குது என்றால் சிந்திக்க வேண்டிய விடயம்.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
ஈரானுக்கெதிராக 135 நாடுகள் ஐநா பாதுகாப்புச்சபையில் பிராந்திய போர் தூண்டலுக்கெதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது, இதன் மூலம் ஐநாவின் 51 வது சாசனத்திற்கமைய ஈரான் தாக்குதலால் பாதிக்கப்படும் நாடுகள் பதில் நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது. இந்த போரினை முடிவிற்கு கொண்டுவருவதற்கு ஈரான் தரப்பிலிருந்து 3 கோரிக்கைகள் உள்ளது. ஈரானின் இறையாண்மை சட்ட ரீதியாக மதிக்கப்படல். எதிர்வரும் காலத்தில் தன் மீது தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கான பாதுகாப்பு உத்தரவாதம் (உக்கிரேனிற்கான பாதுகாப்பு உத்தரவாதம் பற்றிய தீவிர நிலைப்பாடு கொண்ட ஐரோப்பிய / மேற்கு சமூகத்தினை இராஜதந்திர ரீதியான அணுகல் ). போர் இழப்பீடு (இதுவும் உக்கிரேன் நிலை போன்ற). அதே சமயம் வலிந்து தாக்கும் அமெரிக்க இஸ்ரேல் தரப்பு ஒரு ஆட்சி மாற்றம் கோரி நிற்கின்றது (ஒரு தரை வழி போரில்லாமல் அது சாத்தியப்படுமா?) இதனடிப்படையில் பார்ர்கும் போது போர் நீண்டு செல்ல வாய்ப்புண்டு, பெற்றோல் விலை பல மடங்காக அதிகரிக்கலாம் என கருதுகிறேன்.
-
நிதித் துஸ்பிரயோகம் – வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடு!
எப்போதையை ஆளுநர் என்பதை விளக்கமாக தெரிவிக்க முடியவில்லையோ? செய்தியில் ஏன் இத்தனை குழப்பம்?
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
என்னக்கா நீங்களே இப்படிச் சொல்லலாமா? இது அவர்களின் குடும்ப சூழலை வெளிப்படுத்த எடுத்த படங்கள், நன்கொடை அளிப்பவர்களுக்கு வெளிப்படையாக தெரியப்படுத்தும் நோக்கம் மட்டுமே. இவர்களுக்கும் இன்னும் 24 பேருக்கும் 20 லட்சம் ரூபா (முகப்புத்தகத்தில் 30 லட்சம் என தவறாக குறிப்பிட்டுள்ளார்கள்) வீட்டுத்திட்டம் திரு சுவிஸ் நாதன் அண்ணாவினால் கட்டிக்கொடுக்கப்பட உள்ளது. மலசலகூடம் அந்த திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. @வாத்தியார் அண்ணா கிராமசேவகருடன் கதைத்தபோது உறுதிப்படுத்தினார். திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தரும் இதனை உறுதிப்படுத்தினார். ஆகவே அவர்களுக்கு மலசலகூடம் கட்டிக்கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும் என்பது எனதும் வாத்தியார் அண்ணாவினதும் அபிப்பிராயம்.
-
வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு!
மனநல பிரச்சனையாக இருக்குமோ?
-
சித்திரமும் கைப்பழக்கம் - T. கோபிசங்கர்
டொக்ரர் இடமாற்றத்தோட கதைகள் எழுதமாட்டாரோ என நினைத்தேன். டைப் பண்றவைக்கு ஒரு காலத்தில வலு டிமான்ட்! பாஸ் எடுக்க 3 / 5 கொப்பி எடுக்கவேணும். பகிர்விற்கு நன்றி @நிழலி அண்ணை.
-
வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு!
அரச உத்தியோகத்தராம். குடும்பத்தவர் எல்லோரயும் கொலை செய்ய முயற்சித்து உள்ளான்.
- Today
-
நிதித் துஸ்பிரயோகம் – வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடு!
நிதித் துஸ்பிரயோகம் – வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடு! adminMarch 11, 2026 வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார். வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு மண்டைதீவில் 77 மில்லியன் ரூபாய் நிதியில் “எக்கோ ரூரிசம்” திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உரிய முறையிலான திட்டமிடல் இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அந்த திட்டம் தோல்வியடைந்தது. அத்துடன் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் பாவனை இன்றி அழிந்து போயுள்ளன என குறித்த திட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் குறித்த திட்டத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன எனவும் , அரச நிதி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் , அதற்கு அப்போதைய யாழ் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் (தற்போதைய வடமாகாண ஆளுநர்), அந்த திட்டம் நடைமுறைப்படுத்திய கால பகுதியில் வேலணை பிரதேச செயலர்களாக கடமையாற்றிய தெ.சுகுணரதி மற்றும் ஆ. சோதிநாதன் ஆகிய மூவருக்கும் எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/230329/
-
வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு!
வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு! adminMarch 12, 2026 யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன் , மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகஸ்தரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். வடமராட்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை (11.03.26) நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கரவெட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக நேற்றைய தினம் மாலை கரவெட்டியில் உள்ள தனது வீட்டில், தனது இரண்டு பிள்ளைகளையும் ஒரு அறையில் பூட்டி வைத்து , மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு, மனைவியை கத்தியால் குத்த முனைந்த வேளை , மனைவி, கணவனை கீழே தள்ளி விழுத்தி விட்டு , அறையில் இருந்த இரண்டு பிள்ளைகளையும் மீட்டுக்கொண்டு , வீட்டில் இருந்து தப்பியோடி அருகில் இருந்த கடையொன்றினுள் தஞ்சம் புகுந்துள்ளனர். அந்நிலையில், மனைவி, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மந்திகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கே சென்று இருப்பார் என்ற எண்ணத்தில் , மனைவியின் தாய் வீட்டிற்கு சென்றவர் , அங்கே தனிமையில் இருந்த மனைவியின் தாயாருடன் தர்க்கப்பட்டு, அவரை வாளினால் வெட்டி படுகொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்து அப்பகுதிகளில் தேடுதல்களை நடத்தியுள்ளார். அதன் போது, வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பழச்சாறு கடையொன்றில் மனைவியின் தந்தை நிற்பதனை அவதானித்து , அங்கு சென்று அவர் மீது மூர்க்கத்தனமாக வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளார். அதன் போது அங்கிருந்தவர்கள் அவரை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை அங்கிருந்து தப்பி சென்றார். அதனை அடுத்து , அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை காவற்துறையினர் வடமராட்சி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தரான படுகொலையானவரின் மருமகனை கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவத்தில் யோகராசா சரஸ்வதி (வயது 67) என்பவரே உயிரிழந்ததுடன், அவரது கணவனான காசிப்பிள்ளை யோகராசா படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். https://globaltamilnews.net/2026/230357/
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
ஏன் ஈரான் அப்படி சொல்கிறது! இஸ்ரேல் பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதைப்போல் அகன்ற இஸ்ரேலை உருவாக்குகிறேனென்று அருகில் உள்ள மற்றய நாடுகளையும் சுரண்டாமல் இருப்பதற்காகவே!
-
புற்றுநோயால் அரசியல் கைதியின் சகோதரி மரணம்!
ஆழ்ந்த இரங்கல்கள். ரணில்… சில அரசியல் கைதிகளை விடுவித்து இருந்தார். அனுரா, மகிந்த, கோத்தா, மைத்திரி போன்ற ஜனாதிபதிகள்… ஒரு அரசியல் கைதிகளையும் விடுவிக்கவில்லை என நினைக்கன்றேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் சீ பிசியாக உள்ளேன்.
-
புற்றுநோயால் அரசியல் கைதியின் சகோதரி மரணம்!
மிகவும் வருத்தமான செய்தி. கடேசி நிமிடத்தில் கூட அம்மா நிம்மதியாக கண் மூடவில்லை. ஆழ்ந்த இரங்கல்கள்.
-
புற்றுநோயால் அரசியல் கைதியின் சகோதரி மரணம்!
புற்றுநோயால் அரசியல் கைதியின் சகோதரி மரணம்! --- --- --- *சாகும் போதாவது, தலைமாட்டில் இருக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் மன்றாட்டமாக கேட்டிருந்தார் --- --- --- கிழக்கு மாகாணம் திருகோணமலை தோப்பூர்-மூதுரைச் சேர்ந்த, கதிர்காமத்தம்பி சிவகுமார் என்ற அரசியல் கைதியின் சகோதரியான சுப்பிரமணியம் கமலாதேவி, புற்றுநோயினால், இன்று வியாழக்கிழமை உயிரிழந்தார். சிவகுமார் என்ற அரசியல் 31 வருடங்கள் தொடர்சியாக கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த சிவகுமாரின் சகோதரியான, கமலாதேவி தான் இறப்பதற்கு முன்னர், தனது சகோதரனை பார்க்க வேண்டும் என கேட்டிருக்கிறார். தான் உயிரிழக்கும்போது தனது சகோதரன், தன் தலைமாட்டில் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் உருக்கமாக கோரியிருக்கிறார். இந்த நிலையில் 11.3.2026 இன்று வியாழக்கிழமை தனது 79வது வயதில் உயிரிழந்துள்ளார். புற்றுநோயுடன் போராடி நீண்ட நாட்களாக படுக்கை நோயாளியாக இருந்து மரணமடைந்த கமலாதேவியின் இறுதிச் சடங்கில், அரசியல் கைதி சிவகுமார் பங்குபற்ற அரசாங்கம் ஏற்பாடு செய்யுமா? சிவகுமார் விடுதலை செய்யப்படுவாரா? அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/reel/2431631630599524/?fs=e&mibextid=wwXIfr&fs=e
-
அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை
டிரம்ப் ஐயாவின் இளைய புதல்வன் தனது ஒரு சில பாடசாலை நண்பர்களுடன் சேர்ந்து பியர் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக முன்னர் ஒரு செய்தி பொக்ஸ் இல் பார்த்தேன். டிரம்ப் ஐயாவின் குடும்பம் மேலும் மேலும் உயர்ந்து செல்கின்றது என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. டிரம்ப் ஐயாவிற்கு எதிலும் ஒரு வியாபார புத்தி. போரின் பாதிப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு. இங்கே வெற்றி பெறுவோர் யார் என அடையாளப்படுத்தினால் அனைவரும் பெரும் தொழில் நிறுவனங்கள், மற்றும் முதலீட்டாளர்களே. அன்றாடம் உழைத்து சீவிக்கும் சாதாரண மக்கள் அனைவரும் தோற்கும் பகுதிக்குள் வருகின்றார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
செம பகிடி சுவியாரே. உபிசியாக உள்ளேன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பங்குனி 28 அன்று போட்டிகள் தொடங்கும் என்று அறிவித்து விட்டார்கள். முதல் 20 போட்டிகளே இப்போது அறிவிக்கப் பட்டுள்ளது. நீங்கள் கூறியது நல்ல யோசனை. முதல் 20 போட்டிகளில், அணிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் கனபேருக்கு வாய்ப்பிருக்கு. அடுத்த 64 போட்டிகளில் ஜமாய்க்கலாம்.
-
அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை
ஈராக் போர் தொடங்கும் போது கிளிங்டன் அமெரிக்க திறைசேரியில் பெருமளவு பணம் சேர்த்து வைத்ததாக சொல்கிறார்கள். அடுத்து வந்த புஸ் எல்லோரும் தடுக்க பொய்யான குற்றச்சாட்டை சதாம் மீது வைத்து போரைத் தொடங்கி அடுத்தடுத்து வீழ்ச்சியை சந்தித்து அமெரிக்காவை பல ரில்லியன் கடனில் விட்டுட்டுப் போனார். இப்போது ரம் தொடங்கியிருக்கும் போர் எப்படி போகுமோ தெரியவில்லை. பலரின் கருத்துப்படி ரம்பின் குடும்பம் பணக்காரர்களின் பட்டியலில் மிக உயரத்துக்கு போய்க் கொண்டிருக்கிறது. தனிப்புகழை விரும்பும் ரம் அமெரிக்க பணக்கார பட்டியலில் முன்னணியில் வருவதை விரும்புவார். தற்போது அமெரிக்க கடன் 39 ரில்லியனை தொடப் போகிறது.
-
இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம்
இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம் 🤣 ஈரான் மக்கள் நன்றி ரம் அவர்களே என்று எழுதி ஊர்வலம் செல்ல இந்த கொமடி மன்னர்கள் தமிழ் வீரகத்திகள் இலங்கை இந்திய முஸ்லிம்கள் திருமாவளவன் வைகோ கமலகாசன் 🤣 அமெரிக்கா இஸ்ரேல் மீது பேயடி அடித்த ஈரான் மனிதநேயம் காக்க களத்தில் மாஸ் காட்ட போகும் ரஷ்யா சீனா வட கொரியா
-
அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை
ஆப்கானில் மொக்கன் அமெரிக்கன், மோடையன் யூகே, மகா மோடையன் ஜேர்மனி போன்ற கூட்டுக்களோட போனதால விசயம் பிழச்சு போட்டு… இந்த முறை இஸ்ரேலோடு போயிருக்கான்….அவன் போனால் வழிச்சு துடைக்காம வாறேல்ல எண்டு சில சனம் பேக்கதை கதைக்குதண்ணை…. உங்கட 50+ வருட உலக அரசியல் அனுபவத்தின் படி இந்த கருத்தை பற்றி என்ன நினைக்கிறியள்?
-
இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம்
உலக நாடுகள் அணி திரண்டுள்ளன எப்படி? 130 சொச்சம் நாடுகளின் அனுசரணையோடு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் நிறைவேறி உள்ளது. சாராம்சம்: ஈரானின் அரபு நாடுகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம். நிறுத்த வேண்டும். ஹோர்முஸ் நீரிணையை உடனடியாக திறக்க வேண்டும். பாதுகாப்பு கவின்சிலிலில் ரஸ்யா, சீனா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை(வீட்டோ பாவிக்கவில்லை). இது இப்படி இருக்க, வீரகத்தியளும், கிறீஸ் கத்தியளும், கொடுவா கத்தியளும் படுகிற பாட்டை பார்த்தால் ஒரே சிரிப்புத்தான்😂.