Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. நேற்று பாகிஸ்தான் எண்ணைக் கப்பல் ஒன்று இந்த நீரிணையைக் கடந்துள்ளது. Automatic Identification System (AIS) மூலம் ஈரானால் இனம்காணப்பட்டு இக் கப்பல் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரானுடன் முன்கூட்டியே கப்பல் அனுமதிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கலாம்.
  3. ஹோர்முஸ் நீரிணையை மீள திறக்க ட்ரம்ப் முயற்சி; மசகு எண்ணெய் விலைகள் தொடர்ந்து அதிகரிப்பு Published By: Digital Desk 3 16 Mar, 2026 | 12:02 PM மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாக கடல் போக்குவரத்து முடக்கப்பட்டதால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று திங்கட்கிழமை பாரியளவில் அதிகரித்துள்ளது. சர்வதேச விலையை நிர்ணயிக்கும் பிரெண்ட் மசகு எண்ணெய் இன்றைய நிலவரப்படி 3 சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய் 106 டொலரைக் கடந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக மற்ற நாடுகளின் உதவியை கோரிய பின்னர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நீரிணை சர்வதேச மசகு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை கொண்டுள்ளது. இவ்வரையில், ட்ரம்பின் அழைப்புக்கு மந்தமான பதில்கள் மட்டுமே கிடைத்துள்ளன. சீனா, ஜப்பான், பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் இதுவரை தங்கள் கடற்படைகளை அனுப்ப உறுதி செய்யவில்லை. ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் திங்களன்று முக்கிய வழித்தடங்களுக்கு கப்பல்களை அனுப்ப திட்டமிடவில்லை என தெரிவித்துள்ளன. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலாக, நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை நிறுத்தியுள்ளது. சர்வதேச எரிசக்தி நிறுவனம் இதை வரலாற்றில் மிகப்பெரிய இடையூறு எனக் குறிப்பிட்டுள்ளது. போரின் தொடக்கத்திலிருந்து சர்வதேச எண்ணெய் விலைகள் 40% க்கும் மேலாக அதிகரித்துள்ளன, இது உலக பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் அச்சத்தை அதிகரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக முன்னர் நாளொன்றுக்கு சராசரி 138 வர்த்தகக் கப்பல்கள் பயணித்திருந்தன. ஆனால் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி போர் ஆரம்பமானது முதல், இதுவரை ஒரு நாளைக்கு 5 கப்பல்களுக்கு குறைவான போக்குவரத்தே நடைபெற்றுள்ளது. இந்த பகுதியில் குறைந்தது 16 வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன என பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/241083
  4. 'சிக்னல் அணைப்பு' - 2 இந்திய கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையை கடந்தது எப்படி? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணை அருகே பல கப்பல்கள் சிக்கியுள்ளன (கோப்புப் படம்) 26 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இரு திரவ பெட்ரோலிய எரிவாயு கப்பல்களான நந்தா தேவி மற்றும் சிவலிக் ஆகியவை கடந்த சனிக்கிழமை ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்துள்ளன. கப்பல்களின் பயணத்தை கண்காணிக்கும் இணையதளம் மரைன் டிராபிக் வழங்கிய தகவலின்படி, இந்த இரண்டு கப்பல்களும் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தன. கப்பல்களின் பயணத் தகவல்கள்படி, நந்தா தேவி மற்றும் சிவலிக் ஆகிய இரு கப்பல்களும் கத்தாரில் உள்ள துறைமுகத்தில் எரிவாயுவை ஏற்றிக் கொண்டுள்ளன. அதன் பிறகு அவை ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்கும்போது தானியங்கி அடையாள அமைப்பு (AIS - ஏஐஎஸ்) என்ற சிக்னலை அணைத்துவிட்டு பயணம் செய்துள்ளன. பட மூலாதாரம்,MarineTraffic ஏஐஎஸ் என்பது கப்பல்கள் தங்கள் இருப்பிடத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சிக்னல். இதன் மூலம் கப்பல்களின் பயணத்தை இணையத்தில் கண்காணிக்கலாம். வரைபடத்தில் காட்டப்படும் புள்ளி கோடு அந்த கப்பல்கள் எவ்வாறு சென்றிருக்கலாம் என்று கணிக்கப்பட்ட பாதையைக் காட்டுகிறது. மார்ச் 14 அன்று, அந்த எரிவாயு கப்பல்கள் ஏஐஎஸ் சிக்னலை அணைத்திருந்த நேரத்தில், அந்தப் பகுதியில் இரண்டு இந்தியப் போர்க் கப்பல்கள் இருப்பதையும் காண முடிகிறது. நந்தா தேவி கப்பல், இரானின் கேஷம் தீவில் பல நாட்கள் நின்றிருந்தது. அந்த கப்பல் நாளை இந்தியாவின் கண்ட்லா துறைமுகத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு கப்பலான சிவலிக் இன்று காலையே இந்தியாவின் முந்தரா துறைமுகத்தை வந்து சேர்ந்தது. ஜெய்சங்கர் கூறியது என்ன? இரானுடன் நேரடியாக நடத்திய பேச்சுவார்த்தைகள் இந்தியக் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து வர உதவியுள்ளதாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் முன்னதாக தெரிவித்தார். இந்திய கப்பல்கள் செல்வதற்கு 'சாதாரண' அல்லது 'நிரந்தர ஒப்பந்தம்' எதுவுமில்லை என்றும், இதற்கு 'இரான் எதையும் பிரதிபலனாகப் பெறவில்லை' என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பைனான்சியல் டைம்ஸ்' இதழிடம் தெரிவித்தார். அவர் அந்தப் பேட்டியில், "நான் தற்போது அவர்களுடன் பேசி வருகிறேன். எனது பேச்சுவார்த்தை சில முடிவுகளைத் தந்துள்ளது. இந்த செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பலன் அளிக்கும் பட்சத்தில், இயல்பாகவே நான் இதைத் தொடர்ந்து முன்னெடுப்பேன்." என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cddn1z019d2o
  5. பாஜக, அதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை ; தமிழக வெற்றி கழகம் விளக்கம் 16 Mar, 2026 | 04:40 PM பாஜக- அதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. இது தொடர்பாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் வதந்தி'' என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விளக்க அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக கட்சியின் இணை பொது செயலாளர் நிர்மல் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, சமீபகாலமாக சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாஜக /அதிமுக, திருமதி சசிகலா, மருத்துவர் ஐயா ராமதாஸ் ஆகியோர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடத்தப்படுவதாக கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும், எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். இதே போன்ற பொய் செய்தி உத்தியை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்பு படுத்தியும் கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் பொது மக்களிடையேயும் தொண்டர்கள் இடையேயும் தொடர்ந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன. செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளை பகிர வேண்டாம்.'' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதியன்று தமிழகத்தில் நடைபெறும் பொது தேர்தலில் திமுக - அதிமுக - நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய நான்கு முனை போட்டி நடைபெறுவது உறுதி என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/241127
  6. ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் அச்சுறுத்தல் ஏன்? பட மூலாதாரம்,Getty Images 59 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் மோதிக்கொண்டிருக்கும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை டொனால்ட் டிரம்புக்கு சிக்கலாக மாறியுள்ளது. போர்க்கப்பல்களை அனுப்புமாறு அவர் வேண்டுகோள் விடுத்த போதிலும், ஐரோப்பாவும் பிற நாடுகளும் இதுவரை அதிக அக்கறை காட்டவில்லை. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை, டிரம்ப் ஐரோப்பிய நாடுகளை எச்சரித்தார். ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அவர்கள் உதவாவிட்டால், அது நேட்டோ அமைப்பின் எதிர்காலத்திற்கு 'மிகவும் மோசமானதாக' அமையும் என்று அவர் கூறினார். பினான்சியல் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியிலும், புளோரிடாவிலிருந்து வாஷிங்டனுக்கு ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பும் போது செய்தியாளர்களிடம் பேசியபோதும் அவர் இதனை மீண்டும் வலியுறுத்தினார். இந்த மாதம் சீனாவில் சீன அதிபருடன் நடைபெறவுள்ள சந்திப்பிற்கு முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க சீனா உதவும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். சீனா தனது எண்ணெய் பயன்பாட்டில் "90 சதவீதத்தை இந்த நீரிணை வழியாகவே பெறுகிறது" என்று அவர் கூறினார். டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு மார்ச் இறுதியில் சீனாவில் நடைபெற உள்ளது. ஆனால் அதற்கு முன்பே சீனா சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டிரம்ப் கூறினார். ஏனெனில் இந்தச் சந்திப்பு இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் நடைபெறவுள்ளது, இது 'நீண்ட காலம்' என்று அவர் குறிப்பிட்டார். தனது சீனப் பயணம் ஒத்திவைக்கப்படலாம் என்றும் அவர் கூறினார், இருப்பினும் இது குறித்து மேலதிக தெளிவான தகவல்கள் எதையும் அவர் வழங்கவில்லை. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான "பொதுவான முயற்சியில்" இணையுமாறு சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்த மறுநாளே டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார். உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் நிலையில், இவ்வழியாக செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் என இரான் எச்சரித்துள்ளது. இந்தப் போரினால் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், உள்நாட்டிலும் டிரம்புக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே தாக்கப்பட்ட ஒரு கப்பல் ஐரோப்பாவைப் பற்றி டிரம்ப் கூறியது என்ன? வளைகுடா நாடுகளில் இருந்து வரும் எண்ணெயை ஐரோப்பாவும் சீனாவும் பெருமளவில் சார்ந்துள்ளதாக டிரம்ப் கூறுகிறார். தனது கோரிக்கைக்கு எந்தப் பதிலும் இல்லையென்றால், அது 'நேட்டோவின் எதிர்காலத்திற்கு மிகவும் மோசமானதாக' அமையக்கூடும் என்று டிரம்ப் எச்சரித்தார். 'இந்த முயற்சியில் எந்த நாடு அமெரிக்காவுக்கு உதவுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்' என்றும் அவர் கூறினார். தனது சமீபத்திய கருத்தில் அவர் குறிப்பிட்ட எந்த நாட்டின் பெயரையும் தெரிவிக்கவில்லை என்றாலும், நேட்டோ கூட்டணி மற்றும் 'தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில்' இருப்பதாக அவர் கருதும் நாடுகளைப் பற்றிக் குறிப்பிட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு, டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில், "முற்றிலும் அழிந்துபோன ஒரு நாட்டினால் ஹோர்முஸ் நீரிணைக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் கப்பல்களை அனுப்பும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். மற்ற நாடுகளிடம் இருந்து எந்தப் பதிலும் வராவிட்டால், அது நேட்டோவின் எதிர்காலத்திற்கு மிகவும் மோசமானதாக இருக்கும் என்று எச்சரித்த டிரம்ப், "அமெரிக்கா தனது ஐரோப்பிய கூட்டாளிகளிடம் மிகவும் மென்மையாக நடந்து கொண்டுள்ளது" என்றும் கூறினார். "நாங்கள் யுக்ரேனுக்கு உதவி செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. யுக்ரேன் எங்களிடமிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ளது... ஆனால் நாங்கள் அவர்களுக்கு உதவினோம். இப்போது அவர்கள் எங்களுக்கு உதவுகிறார்களா என்று பார்ப்போம். ஏனெனில் நாங்கள் அவர்களுக்காகத் துணை நிற்போம், ஆனால் அவர்கள் எங்களுக்காகத் துணை நிற்க மாட்டார்கள் என்று நான் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்கள் துணை நிற்பார்களா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை" என்றார் டிரம்ப். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்புமாறு சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிடம் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார் (கோப்புப் படம்) நாடுகள் என்ன கூறின? டிரம்பின் கருத்துக்கு சில நாடுகள் எதிர்வினையாற்றியுள்ளன. பிரிட்டன்: இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர்,''சந்தைகளில் நிலைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும். அது எளிதான வேலை அல்ல. அந்தப் பகுதியில் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்லும் நிலையை மீண்டும் உருவாக்குவதற்கான ஒரு திட்டத்தைக் கொண்டு வர பிரிட்டன் அதன் கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறது'' என்றார். சீனா: வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் சிஎன்என்-இடம் கூறுகையில், மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு சீனா அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்தார். டிரம்பின் கோரிக்கையைச் சீனா ஏற்குமா என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், நிலையான மற்றும் தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வது அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார். மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சீனா தொடர்ந்து தொடர்புகளை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார். ஜப்பான்: பிரதமர் சனே தகாய்ச்சி புதன்கிழமை தொடங்கும் தனது அமெரிக்கப் பயணத்தின் போது இந்த விவகாரம் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க உதவி கோரி தனது நாட்டிற்கு எந்த அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வரவில்லை என்று திங்களன்று தகாய்ச்சி கூறியிருந்தாலும், "தகுந்த முறையில் எவ்வாறு பதிலளிப்பது" என்பது குறித்துப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,கோப்புப்படம் பிரான்ஸ்: பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு, பிரான்ஸ் ஹோர்முஸ் நீரிணைக்குப் போர்க்கப்பல்களை அனுப்புவதாக வெளிவந்த செய்திகளை மறுத்துள்ளது. பிரான்ஸ் அதிபர் மக்ரோங் திங்களன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பேசியதாகத் தெரிவித்தார். "இப்பகுதியில் உள்ள மற்ற நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு இரானுக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். பிரான்ஸ் தற்போது தனது நலன்கள், இப்பகுதியில் உள்ள தனது நட்பு நாடுகளின் நலன்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் தற்காப்பு நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கிறது என்பதையும், எங்கள் நாட்டிற்கு எதிரான தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதையும் நான் நினைவுபடுத்தினேன். ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்து உடனடியாக மீட்டெடுக்கப்பட வேண்டும்" என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். தென் கொரியா: மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதல்களைத் தாங்கள் "நெருக்கமாகக் கண்காணித்து" வருவதாகத் தென் கொரியா அரசாங்கம் திங்களன்று தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம், "கொரிய குடிமக்களைப் பாதுகாக்கவும், எரிசக்தி போக்குவரத்துப் பாதைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தென் கொரியா பல்வேறு வாய்ப்புகளைப் பரிசீலித்து வருகிறது," என்று தெரிவித்தது. ஆஸ்திரேலியா: ''ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க உதவுவதற்காக போர்க்கப்பல்களை அனுப்பமாட்டோம். ஹோர்முஸ் நீரிணையின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும்.உதவிக்காக எங்களை யாரும் கோரவில்லை.நாங்கள் எந்த உதவியும் வழங்கவில்லை," என அமைச்சர் கேத்ரின் கிங் அரசின் ஒளிபரப்பு சேவையான ஏபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crl4gdr92dro
  7. Today
  8. உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு! உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் நான்கு ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், களமுனைப் போருக்கு நிகராக உக்ரைன் தனது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பப் போராடி வருகின்றது. உக்ரைனின் வரவு செலவுத் திட்டத்தில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 90 பில்லியன் யூரோக்களை (சுமார் 105 பில்லியன் டாலர்) கடனாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச நாடுகளின் மொத்த நிதியுதவியான 136.5 பில்லியன் டொலரில் இதுவே மிகப்பெரிய பங்காகும். இந்த நிதியுதவியின் முதல் தவணை வரும் ஏப்ரல் மாதம் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. “வலுவான இராணுவம் என்பது வலுவான பொருளாதாரத்தையே சார்ந்துள்ளது” என உக்ரைனின் நிதி அமைச்சர் செர்ஜி மார்ச்செங்கோ தெரிவித்துள்ளார். உக்ரைனின் 2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 60 சதவீத நிதி (சுமார் 112 பில்லியன் டாலர்) இராணுவத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுகட்ட, உக்ரைன் வரலாற்றில் முதல்முறையாக தனிநபர் வருமானம் மற்றும் சிறு வணிகங்கள் மீதான வரிகளை அரசாங்கம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு 67.5 பில்லியன் டாலர் வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள 8.1 பில்லியன் டாலர் கடன் நிதியைப் பெறுவதற்கு, உக்ரைன் தனது டிஜிட்டல் தளங்கள் மீதான வரியை அதிகரிக்கவும், வரி ஏய்ப்புகளைத் தடுக்கவும் உறுதியளித்துள்ளது. இருப்பினும், போர்க்காலத்தில் தொடர்ந்து வரி அதிகரிப்பது நாட்டைப் பொருளாதார வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என ‘Ukrainian Institute of the Future’ போன்ற ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவி கிடைப்பதில் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். ரஷ்யாவிலிருந்து ஹங்கேரிக்கு எண்ணெய் கொண்டு வரும் குழாய்களை உக்ரைன் திட்டமிட்டுத் தடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டுகிறார். ஆனால், ரஷ்யத் தாக்குதல்களால் பழுதடைந்த குழாய்களைச் சீரமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்குக் காரணம் என உக்ரைன் பதிலளித்துள்ளது. இதனால், அடுத்த மாதம் ஹங்கேரியில் நடைபெறவுள்ள தேர்தலின் முடிவுகள் உக்ரைனுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ரஷ்யா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5.1 சதவீதத்தை மட்டுமே இராணுவத்திற்காகச் செலவிடும் நிலையில், உக்ரைன் தனது ஜிடிபியில் 27 சதவீதத்தை இராணுவத்திற்காகச் செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது உக்ரைனின் பொருளாதாரத்திற்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. https://athavannews.com/2026/1468726
  9. காலத்திற்கு ஏற்ற பொருத்தமான சமையல் குறிப்பு. 😂 இந்த ஈரான் மீன் சமையலை ஒருக்கா செய்து பார்க்க ஆசையாக உள்ளது. 🤣
  10. யாழ். மத்திய கல்லூரி என்பது ஒரு வகையில் ட்ரம்ப் கூட்டம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்த அமெரிக்கா போன்றது. காசுள்ளவன், இல்லாதவன், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சாதி காரணமாக ஒதுக்கப் பட்டவர்கள் என எல்லோரையும் உள் வாங்கி ஒரு மட்டத்திற்கு உயர்த்தி வெளியே விடும் கல்லூரி. இதனால் தான் குண்டு சுற்றிவர விழுந்து கொண்டிருந்த நிலையிலும், 90 களில் கல்லூரியை மூடிவிடாமல் மாணவர்களும் ஆசிரியர்களும் உயிரைப் பணயம் வைத்து கடமையைச் செய்து கொண்டிருந்தார்கள். சதீஸ்கரனைப் பற்றி: நான் அறிந்த வரை கறாரான பேர்வழி. அந்தக் காலத்தில் (~30 ஆண்டுகள் முன்பு) கொஞ்சம் முன் கோபக் காரர். ஒரு கல்லூரி மாணவர் அமைப்பில் என் கனிஷ்டராக இருந்தார். நான் உட்பட எந்த சிரேஷ்ட உறுப்பினருக்கும் சதீஸ்கரன் என்றால் ஒரு அச்சம், பணிவு😂!
  11. ஜெயமோகனுடன் இந்த விடயத்தில் எனக்கு உடன்பாடு. அதிக புத்தகங்களை வெளியிடுவது, அதிக திரைப் படப் பாடல்களை எழுதுவது என்பன வர்த்தக வெற்றிகள். "வர்த்தக மயப்படுத்திய தமிழ்" என்ற பிரிவில் ஒரு விருது இருந்தால் அதற்கு வைரமுத்து அவர்கள் உரித்தானவர். "நவீன தமிழ் இலக்கியம்" என்ற பிரிவில் உச்ச அடைவாக வைரமுத்துவின் கவிதைகளையும் பாடல் வரிகளையும் வகைப் படுத்த இயலாது. அதிலும் குற்றஞ் சாட்டப் பட்டிருப்பது போல அரசியல் வாதிகளின் செல்வாக்கினால் அதை அவரே முயன்று பெற்றிருக்கிறார் எனும் போது, இது மிக மரியாதை குறைந்த ஒரு விருதாகிறது.
  12. "மூன்று கவிதைகள் / 31" "எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே" எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே சிந்தையில் ஆடும் செழுந்தமிழ் ஓவியமே விண்ணுலக பண்ணிசைக்கும் கவின்மிகு யாழே கண்களில் சிறைபிடித்து சரணடைந்தேன் அணங்கே! இன்பத் தேனூறும் இனியவள் சொல்லே துன்பம் துடைக்கும் தூயவள் அன்பே அன்பின் வழிதந்து ஆளுகின்ற அரசியே உன்னுடன் வாழ்வதே உன்னதப் பேறே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................. 'மின்னலாய் ஒரு பின்னல்' [அரவணைப்பு,அகங்காரம்,பரிதாபம் & பங்களிப்பு] அன்பின் அரவணைப்பு அகிலத்தைப் போற்றும் அழிக்கும் அகங்காரம் தீயாகும்! தவிர்ப்போம் பரிதாபம் தனையே பண்பான பங்களிப்பு பாரினை உயர்த்தும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ......................................................... "வசந்தத்தில் ஓர்நாள்" வசந்தத்தில் ஓர்நாள் மலர்ந்த பூக்கள் பசுமை போர்த்தியது புல்வெளி எங்கும் இனிமை சேர்த்தது குயிலின் கீதம் இளமை தந்தது இதமான தென்றல் புதிய கனவுகளை இதயத்தில் ஏந்தி புன்னகை சிந்தியது இயற்கை அன்னை! கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம். துளி/DROP: 2095 ["மூன்று கவிதைகள் / 31" https://www.facebook.com/groups/978753388866632/posts/34325944333720775/?
  13. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 134 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 134 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" பின்னர் மணிபல்லவம் தீவில் தீவ திலகை என்ற பெண்ணை மணிமேகலை சந்திக்க நேர்ந்தது. இந்த தீவ திலகை, சம்மன குட்டத்தில் [Sammana Kutta / சமந்தகம் என்ற மலை உச்சியின் மேல்] புத்தரின் பாதங்களை வணங்கி, புத்தர் இருக்கையின் காவலில் இருந்தார். மேற்கண்ட விவரிப்பு மன்னிமேகலை காவியத்தின் 11வது காண்டத்தில் 20 முதல் 30 வரையிலான பாடல்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு, "சம்மன குட்டா" ["Sammana Kutta" ] என்ற வார்த்தையை பாளி மொழியில் இரண்டாக்கப் பிரிக்கலாம், அங்கு "சம்மன" என்பது ஒரு துறவி அல்லது துறவியைக் குறிக்கிறது, மேலும் "குட்டா" என்பது சிகரம் அல்லது மலை என்று பொருள்படும். எனவே, "சம்மன குட்டா" என்பதை "துறவியின் மலை" அல்லது "துறவியின் சிகரம்" என்று விளக்கலாம், இது மலைப்பாங்கான அல்லது காட்டுப் பகுதிகளில் தியானம் மற்றும் கற்பிப்பதற்காக வசிக்கும் துறவிகளின் பாரம்பரியத்துடன் ஒத்துப்போகிறது. "மன்பெரும் பீடிகை என்பிறப்பு உணர்ந்தேன் ஈங்குஎன் வரவுஇதுஈங்கு எய்திய பயன்இது பூங்கொடி அன்னாய் யார்நீ என்றலும், ஆயிழை தன்பிறப்பு அறிந்தமை அறிந்த தீவ திலகை செவ்வனம் உரைக்கும் ஈங்குஇதன் அயலகத்து இரத்தின தீவத்து ஓங்குஉயர் சமந்தத்து உச்சி மீமிசை அறவியங் கிழவோன் அடிஇணை ஆகிய பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் அறவி நாவாய் ஆங்குஉளது ஆதலின் தொழுதுவலம் கொண்டு வந்தேன் ஈங்குப் பழுதுஇல் காட்சிஇந் நன்மணிப் பீடிகை தேவர்கோன் ஏவலின் காவல் பூண்டேன் தீவ திலகை என்பெயர் இதுகேள்:" பெருமை பொருந்திய, புகழ் பெற்ற, இப் பெரும் பீடிகையால் என் முற்பிறப்பினை [என் பழைய பிறப்பைப்] பற்றித் தெரிந்து கொண்டேன். இது நான் அடைந்த பயன். பூங்கொடியே நீ யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?” என மணிமேலை கேட்டாள். மணிமேகலை தனது முற்பிற்பினை அறிந்ததை தீவதிலகை அறிந்தாள். நல்ல முறையில் சில செய்திகளைக் கூறலானாள். “இந்த மணிபல்லவத் தீவின் அருகில் இரத்தினத் தீவகம் உள்ளது. அதில் உள்ள சமந்தகம் என்ற மலை உச்சியின் மேல், தன்னைச் சேர்ந்தவர்களைப் பிறவிக் கடலில் இருந்து கரை சேர்க்கும் புத்தரின் பாத பீடிகை உள்ளது. (சமந்தகம் என்பது இலங்கையில் உள்ள சிவனொளி பாதமலை) அதனை வலம் செய்து இங்கு வந்தேன். குற்றிமின்றிக் காட்சி தரும் இந்தப் பாத பீடத்தை இந்திரனின் ஆணையால் காவல் செய்து வருகிறேன். என் பெயர் தீவதிலகை” என்று கூறினாள் என்கிறது. இந்தக் காவியத்தின்படி, கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தமிழ் மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றினர். சம்மன மலையின் உச்சியில் புத்தரின் பாதச் சுவடு இருப்பதை அவர்கள் அறிந்திருந்தனர். வட இந்தியாவில் பன்னிரண்டு ஆண்டு பஞ்சத்தின் போது சமண மதம் (Jainism) கி.மு மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிற்கு வந்தது. மௌரிய வம்சத்தின் நிறுவனர் சந்திர குப்த மௌரியரும் [The founder of the Maurya dynasty, Chandragupta Maurya / reigned 320 BCE – 298 BCE] தனது மகன் பிந்துசாரனுக்கு [Bindusara] ஆட்சியைக் கொடுத்துவிட்டு தெற்கே ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து புத்த மதம் உடனடியாகத் தமிழ் நாட்டிற்கு வந்தது. வி.ஏ. ஸ்மித் வலியுறுத்தியது போல், புத்த மதம் உண்மையில் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்திருக்க வேண்டும். 'The Early History of India - Vincent A. Smith, Third edition, 1914' and 'Asoka, the Buddhist Emperor of India. By Vincent A. Smith, Third edition, 1919'. என்ற நூல்களைப் பார்க்கவும். இன்று காணப்படும் மன்னார் வளைகுடா, தெற்கு தமிழ்நாடு மற்றும் இலங்கையின் தென் மேற்குப் பகுதியில் உள்ள கடல்பகுதி, பழங்காலத்தில் மலைகள், ஆறுகள் மற்றும் பரந்த நிலப்பகுதியாக இருந்திருக்கலாம். கன்னியாகுமரி முதல் இலங்கையின் தென்பகுதி வரை ஒரு தொடர்ந்த நிலப்பகுதியாக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஒரு நேரத்தில், இயற்கையின் மிகப் பெரிய மாறுபாடாக, நிலச்சரிவு அல்லது கடுமையான நிலக் கவிழ்ச்சி ஏற்பட்டது. இதன் விளைவாக மலைகள் மற்றும் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் கடலுக்குள் ஆழமாக கவிழ்ந்து மூழ்கியிருக்கும். இதனால் இன்றைய மன்னார் வளைகுடாவின் ஆழமான கடல்தொகுப்பு உருவானது. பண்டைய தமிழர்களும் சிங்களர்களும் பெரும் கடல் வெள்ளம் பற்றிய நினைவுகளை தலைமுறை தோறும் கொண்டுள்ளனர். இதனால் இந்த பெரும் பேரழிவு மிகப் பழமையானது அல்ல, சுமார் 5000 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இது 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட சுனாமி போன்ற ஒரு பெரும் இயற்கை பேரழிவாக இருந்திருக்கலாம். Part: 134 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" Then Mannimeghalai happened to meet a lady named Theeva-Thilagai in the island Mannipallavam. This Theeva-Thilagai, having worshiped the Buddha’s feet on the Sammana Kutta, was in guard of the Buddha Seat. The above narrative is given in the verses 20 to 30 in the Canto 11 of the Epic Mannimeghalai. மன்பெரும்பீடிகைஎன்பிறப்புஉணர்ந்தேன் ஈங்குஎன்வரவுஇதுஈங்குஎய்தியபயன்இது பூங்கொடிஅன்னாய்யார்நீஎன்றலும், ஆயிழைதன்பிறப்புஅறிந்தமைஅறிந்த தீவதிலகைசெவ்வனம்உரைக்கும் ஈங்குஇதன்அயலகத்துஇரத்தினதீவத்து ஓங்குஉயர்சமந்தத்துஉச்சிமீமிசை அறவியங்கிழவோன்அடிஇணைஆகிய பிறவிஎன்னும்பெருங்கடல்விடூஉம் அறவிநாவாய்ஆங்குஉளதுஆதலின் தொழுதுவலம்கொண்டுவந்தேன்ஈங்குப் பழுதுஇல்காட்சிஇந்நன்மணிப்பீடிகை தேவர்கோன்ஏவலின்காவல்பூண்டேன் தீவதிலகைஎன்பெயர்இதுகேள்: The translation in brief: Quote ‘There on the high peak of the hill Samantakuta there are the footprints of the Buddha. Having offered worship at the footprints I came to this island long ago. Since then I have remained here keeping guard over this " Dharma-seat" under the orders of Indra. My name is Tiva-Tilakai (Dvipa Tilaka). People following the Dharma of the Buddha strictly, offering worship to this "Buddha’s seat" will gain knowledge of their previous birth, knowing their past as a result of this worship’. Unquote Tamil people were following of the Buddhist faith as per this epic around the second century A. D. They were aware of the Buddha’s foot print on the top of the Sammana hill’. The Samanna religion, (Jainism), came to Tamil country about third century B. C. during a twelve year famine in north India. The founder of the Maurya dynasty, Chandragupta Maurya, too retired to South, after giving the reign to his son Bindusara. The Buddhism followed suit immediately after to the Tamil country. The Buddhism must have really come to Lanka from Tamil country, as asserted by V. A. Smith. See References 15 and 21. The present day Gulf of Mannar between the southern Tamil Nadu and south-west coast of Sri Lanka must been a land with hills, and rivers around it. The dotted line connecting Cape Commorin (Kannnya-Kumari) to the southern tip of Sri Lanka must have been the extent of land. A slope stability failure must have taken place in which the hills and adjoining lands plunged deep into the ocean as shown by the two arrows. The picture below is a rendering showing the bathymetric contours of the Gulf Mannar in a continuous seascape. The memories of the Tamils and the Sinhalese about an ancient sea deluge have not faded. Therefore the deluge, the slope stability failure, must have happened not very long ago. The Biblical flood, Noachic flood, as per the introductory page XXXVIII of the Reference 42 is about 3044 B. C. This slope stability failure too must have occurred within the last 5000 years, or could even be recent. The effect must have been colossal and very destructive, similar to the Tsunami which occurred during the Christmas time of the year 2004 REFERENCES 15. The Early History of India by Vincent A. Smith, 3Rd edition, 1914 21. Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919 42. The Mahavansi, The Raja-Ratnacari, The Raja-Vali Translation by Edward Upham, M. R. A. S. and F. S. A. Volume 1, 1833 நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 135 தொடரும் / Will follow துளி/DROP: 2096 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 134 https://www.facebook.com/groups/978753388866632/posts/34326065530375322/?
  14. டுபாய் விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் ; விமான பயணங்கள் இடைநிறுத்தம் Published By: Digital Desk 3 16 Mar, 2026 | 09:05 AM டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே திங்கள்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ட்ரோன் தாக்குதலின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு காரணங்களால் விமானப் பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக டுபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட ட்ரோன் தாக்குதலில் எரிபொருள் கொள்கலன் ஒன்று சேதமடைந்துள்ளதாக டுபாய் ஊடக நிறுவனம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், டுபாய்க்கு வருகை தரும் மற்றும் டுபாயிலிருந்து புறப்படும் விமானப் பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் போர் ஆரம்பத்தித்த பின்னர், வளைகுடா அரபு நாடுகள் 2,000-க்கும் மேற்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்கள் அமெரிக்க இராஜதந்திர அலுவலகங்கள் மற்றும் இராணுவத் தளங்களை மட்டுமன்றி, வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய எண்ணெய் உட்கட்டமைப்புகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், குடியிருப்பு மற்றும் அலுவலகக் கட்டிடங்களையும் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 2020 ஆம் ஆண்டில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கிய ஐக்கிய அரபு அமீரகம், தாக்குதல்களின் பெரும் தாக்குதலை எதிர்கொண்டது. ஆனால் அனைத்து வளைகுடா அரபு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் அனைவரும் ஈரானை கண்டித்துள்ளனர். https://www.virakesari.lk/article/241069
  15. சீன மக்கள் குடியரசின் குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கிடையில் சந்திப்பு! Published By: Digital Desk 1 16 Mar, 2026 | 10:00 AM சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் Zhang Yong தலைமையிலான பிரதிநிதிகள் குழு, 14ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை சந்தித்துள்ளனர். இதன்போது, திட்டமிடப்பட்ட குற்றங்கள், ஆட்கடத்தல், சைபர் குற்றங்கள் போன்ற இரு நாடுகளினதும் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் புதிய தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது. சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் Zhang Yong தலைமையிலான பிரதிநிதிகள் குழு, 14ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை சந்தித்துள்ளனர். இதன்போது, திட்டமிடப்பட்ட குற்றங்கள், ஆட்கடத்தல், சைபர் குற்றங்கள் போன்ற இரு நாடுகளினதும் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் புதிய தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன், அன்றையதினம் Zhang Yong தலைமையிலான தூதுக்குழுவினருக்கும், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கும் இடையில் பொதுப் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பொலிஸ் மா அதிபர் கலந்துகொண்டார். அங்கு இரு நாடுகளினதும் குடிவரவு நிர்வாகம், திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் மற்றும் பொதுப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வடகல, அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜ உள்ளிட்ட உயர் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241075
  16. மத்திய கிழக்கு பிரச்சனைகளுடன் நம்ம உடையார் தனது கால்களை ஈரானுக்குள் ரொம்ப ஆழமாய் விட்டுட்டார் போல உள்ளது.
  17. வீதியோரம் . மலர் . .......... 13. இந்த சில மாதங்களில் “வீதியோரக்கடை”யடியில் பல மாற்றங்கள் உண்டாகி விட்டன. மின்சார சபையால் விகாரையில் இருந்து கடையையும் தாண்டி ஒரு மைல் நீளத்துக்கு வீதியை அகலமாக்கி வீதி விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தன. அதனால் கடைக்கும் அவர்களது வீட்டுக்கும் குளத்தின் கரைகளிலும் விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதனால் அவர்கள் வீட்டின் அருகில் ஒரு பெரிய வட்டமான கிணறு ஒன்றும் வெட்டி மோட்டார் போட்டு பக்கத்தில் உயரத்தில் தண்ணீர் தொட்டி அமைத்து விட்டிருந்தார்கள். அதில் இருந்து குழாய்கள் பொருத்தி சமைக்க, குடிக்க, குளிக்க அதற்கொரு அறை என்று எல்லாம் அமைத்திருந்தனர். மேலும் ஆட்களை வைத்து பின்னால் ஐந்து ஏக்கர் வரை காடுவெட்டி நிலமெல்லாம் எரித்து டிராக்ட்டரால் சமன் படுத்தி விட்டிருந்தார்கள்.இனி அதில் விவசாயத்துடன், வாழை மற்றும் பல பயிர்கள் பயன்தரு பழ மரங்கள் எல்லாம் நட்டு வைத்திருந்தார்கள். இப்போதெல்லாம் அங்கு தப்பான காரியங்கள் ஒன்றும் இருப்பதில்லை.முன்பு மது வித்த பையனும் அங்கு வந்து கடையில் எடுபிடி வேலைகள் செய்து வருவதால் அவனுக்கும் ஒரு சம்பளம் போட்டுக் குடுக்கிறார்கள். வழக்கமாய் போய்வரும் வழியில் அண்ணாச்சியும் வந்து இளைப்பாறிப் போகிறார்…… அன்று காலையில் சுஜிதா மேகலையிடம் அம்மா இன்று பாடசாலையால் பக்கத்துக் கிராமத்தில் ஒரு மருத்துவ முகாம் அமைக்கப் போகிறோம். சில நேரம் நான் வரத் தாமதமாகலாம் என்று சொல்லி விட்டு ஸ்கூட்டியில் வெள்ளை யூனிபார்முடன் போகிறாள். யுகேந்திரனும் அந்த இளஞனுடன் பணம் போடுவதற்கு வங்கிக்கு போயிருக்கிறான். விநோதன் வீட்டுக்குள் ஏதோ வேலைகள் செய்து கொண்டிருக்கிறான். மணிமேகலை மட்டும் கடைக்குள் உணவு சமைப்பதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கிறாள். அப்போது மிக வேகமாய் சுஜிதா ஸ்கூட்டியில் ஓடிவந்து கடைக்குமுன் அதை விழுத்திவிட்டு உள்ளே ஓடிவந்து அம்மா என்னைக் காப்பாத்துங்கோ, அவங்கள் என்னைத் திரத்திக் கொண்டு வாறாங்கள். என்று கத்திக் கொண்டு அவள் பின்னால் கோழிக்குஞ்சுபோல் ஒட்டிக்கொண்டு நிக்கிறாள் பயத்துடன். மேகலையும் நீ பயப்பிடாதை, யாரடி அது துரத்தி வாறது என்று சொல்லி விநோ இஞ்சை ஒருக்கால் வாங்கோ என்று பின்னால் பார்த்து குரல் கொடுக்கிறாள். அப்போது ஒரு வெள்ளை வான் வந்து அரை வட்டமடித்து நிக்கிறது. அதிலிருந்து மூன்றுபேர் இறங்கி கடைக்குள் ஓடி வருகிறார்கள். நீ மாறன் மகள் சுஜிதாதானே என்று கத்த அது நானில்லை என்று சொல்லிக்கொண்டு அவள் பின்னால் ஓடுகிறாள். அவர்களில் ஒருவன் டேய் இவள் சுஜிதாதான், நல்ல வடிவா வளர்ந்து விட்டாள் விடாதையுங்கோடா பிடியாடா அவளை இனி எங்களுக்கு கொண்டாடட்டம்தான் என்று கத்திக் கொண்டு துரத்துகிறான். மற்றவன் அவள் மட்டுமென்ன இவளும் செமையாதான் இருக்கிறாள்…… பொறுடா இவளைப் பிறகு பார்க்கலாம் முதல்ல அவளைப் பிடிப்பம் வாடா என்று முன்னால் ஓடியவனைத் தொடர்ந்து இருவரும் ஓடுகிறார்கள். அவர்களுக்கு முன்னால் ஓடிய சுஜிதா வீட்டை அடைந்து கதவைத் திறக்க முயல அது திறபடவில்லை, உள்ளிருந்து விநோதன் சுஜிதா நீ பயப்பிடாதே நேராக காட்டுக்குள் ஓடு, பின்னால் திரும்பிப் பார்க்காதே நான் இருக்கிறேன் என்று சொல்ல சரி அப்பா என்று சொல்லிவிட்டு காட்டை நோக்கி ஓடுகிறாள். வீட்டுக்கும் காட்டுக்கும் இடையில் கொஞ்ச தூரம் இருந்தது. முன்னால் வந்தவன் நில்லடி என்று சொல்லி அவளை நெருங்குகிறான், தொடர்ந்து பின்னால் இருவரும் ஓடிவர அவர்களுக்குப் பின்னால் மணிமேகலையும் ஓடிவருகிறாள். அவன் எட்டி அவள் முடியை பிடிக்கும் சமயம் சரியாக அவன் பிடரியில் “டப்” என்றொரு சத்தம்.அவன் வேகமாய் கால்கள் தேய திரும்பி விழுகிறான். அவன் விழுவத்தைக் கண்டு இவங்கள் இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்க்க மிகக் குறைவான வினாடியில் அந்த இருவர் நெற்றியிலும் “டப் டப்” பொட்டு விழுந்திருக்கு. திடுக்கிட்ட மேகலை திரும்பிப் பார்க்க பின்னால் வீட்டருகில் விநோதன் சாவகாசமாய் பிஸ்டலை அதன் உறைக்குள் போட்டுக்கொண்டிருந்தான். பின்பு விறகு அள்ளும் வண்டிலை எடுத்து வந்து அவர்களை அதில் போட்டுகொண்டு சுஜிதாவிடம் இனி நீ பயப்பிடாமல் வீட்டுக்குப் போய் இரு ………இப்பொழுது இங்கு ஒன்றுமே நடக்கவில்லை சரியா என்று சொல்லி அனுப்பி வைக்கிறான். பின் மேகலையும் அவனுமாய் அவர்களை காட்டுக்குள் வெகுதூரம் குளகரையோடு தள்ளிக்கொண்டு போய் அவர்களது ஆடைகள் முழுவதையும் களைந்து விட்டு வெற்றுடலுடன் குளத்துக்குள் தள்ளி விடுகிறார்கள். அப்போது மேகலை, விநோதனும் அசந்திருந்த நேரத்தில் அந்த பிஸ்டல் , தோட்டா, பெல்ட் எல்லாவற்றையும் தூக்கி அந்தக் குளத்தில் தூரமாக எறிந்து விட்டு இனிமேல் இந்தக் கோதாரி ஒண்டும் வீட்டுக்குள் இருக்க வேண்டாம் என்று சொல்கிறாள் . நானும் அதைத்தான் நினைத்தேன் நீ செய்து விட்டாய் என்று விநோவும் சொல்கிறான். சற்று நேரத்தில் பல முதலைகள் கூட்டமாய் வந்து அந்த உடல்களை உள்ளே இழுத்துக் கொண்டு போகின்றன. ஆடைகளை குப்பை மேட்டில் போட்டு விறகுகளால் மூடி எரித்து விடுகிறார்கள். பின் கடையடிப்பக்கமாய் வந்து குளித்துவிட்டு வீட்டுக்குள் வருகின்றனர்.......! மலர் ............. 🦈 13.
  18. ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஈரானின் புதிய எச்சரிக்கை Mar 16, 2026 - 04:49 PM ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஹோர்முஸ் நீரிணையை எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதால், தற்போது இந்த கடல் வழியாக கப்பல் போக்குவரத்து விசேட நிபந்தனைகளின் கீழ் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு ஈரானிய ஆயுதப் படைகளின் வசம் இருப்பதாகவும், தனது தேசியப் பாதுகாப்பிற்காகத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு ஒரு கடற்கரை நாடு என்ற ரீதியில் ஈரானுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். வரலாற்று ரீதியாக இந்த கடல் பாதையின் பாதுகாவலனாக ஈரான் இருந்து வந்த போதிலும், தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே பொறுப்பேற்க வேண்டும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். உலகின் எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இந்த கடல் பாதையை, தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நாடுகள் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஈரான் கடுமையாகத் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmmt3a9xk000n356p0qi98vj0
  19. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மின்னிய நட்சத்திரங்கள் - ஒரு புகைப்படத் தொகுப்பு பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் பால் தாமஸ் ஆண்டர்சன் "ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்" படத்திற்காக சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றார். இது அவருக்கு முதல் அகாடமி விருது. 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,அமெரிக்க திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ரியான் கூக்லர் தனது 'சின்னர்ஸ்' படத்திற்காக சிறந்த அசல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெறுகிறார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,ஃபிராங்கன்ஸ்டைன் படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற ஒப்பனை மற்றும் சிகை அலங்கார கலைஞர்களான ஜோர்டான் சாமுவேல் மற்றும் மைக் ஹில் ஆகியோரை மெக்சிகன் இயக்குநர் கில்லர்மோ டெல் டோரோ வாழ்த்தினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஃபிராங்கன்ஸ்டைன் படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றவுடன், கேட் ஹாலி படத்தின் இயக்குநரை நோக்கி, "கில்லர்மோ (டெல் டோரோ), நன்றி என்று கூறினார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை 'கே-பாப் வாரியர்ஸ்' படத்திற்காக அமெரிக்க இயக்குநர் கிறிஸ் அப்பெல்ஹான்ஸ், தென் கொரிய-கனடா திரைக்கதை எழுத்தாளர் மேகி காங் மற்றும் தயாரிப்பாளர் மிச்செல் வோங் ஆகியோர் வென்றனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'இஃப் ஐ ஹேட் லெக்ஸ் ஐ வுட் கிக் யூ' படத்தின் நட்சத்திரமான ரோஸ் பைர்ன், டால்பி தியேட்டர் சிவப்பு கம்பளத்தில் பிரமிக்க வைக்கும் 'டியோர்' உடையில் தோன்றினார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,'சின்னர்ஸ்' படத்தில் இரட்டையர்களாக நடித்த மைக்கேல் பி. ஜோர்டான் பட மூலாதாரம்,Penske Media via Getty Images படக்குறிப்பு,'சென்டிமென்ட் வேல்யூஸ்' பாடலின் நட்சத்திரமான நார்வேயின் ரெனேட் ரென்ஸ்வே, 2026 ஆஸ்கர் விருதுக்கு சிவப்பு நிற ஆடையில் வந்திருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'தி சீக்ரெட் ஏஜென்ட்' படத்தின் நட்சத்திரமான பிரேசிலிய வாக்னர் மௌரா, ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் காணப்பட்டார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டருக்கு லியோனார்டோ டிகாப்ரியோ வந்திருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'ஹேம்நெட்' படத்தில் ஷேக்ஸ்பியரின் மனைவியாக நடித்த ஜெஸ்ஸி பக்லி, ஆஸ்கர் விருது விழாவுக்கு வந்திருந்தார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,'சுப்ரீம் மார்டி' படத்தில் நடித்ததற்காக பரிந்துரைக்கப்பட்ட டிமோதி சலமெட் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'புகோனியா' நட்சத்திரம் எம்மா ஸ்டோன் வெள்ளி நிற உடையில் விழாவுக்கு வந்திருந்தார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,ஜேக்கப் எலோர்டி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' படத்தில் செர்ஜியோ 'சென்செய்' செயிண்ட் கார்லோஸாக நடித்த பெனிசியோ டெல் டோரோ, கருப்பு நிற ஆடை மற்றும் சன்கிளாஸ்களில் சிவப்பு கம்பளத்தில் காணப்பட்டார். பட மூலாதாரம்,WWD via Getty Images படக்குறிப்பு,'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' படத்தில் வில்லா பெர்குசனாக நடித்த சேஸ் இன்பினிட்டி, ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டருக்கு வந்திருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் 'சிராட்' படத்தின் இயக்குநர் கலீசியாவைச் சேர்ந்த ஆலிவர் லாக்ஸ் . பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' படத்தில் பெர்ஃபிடியா பெவர்லி ஹில்ஸாக நடித்த டெயானா டெய்லர், 98வது அகாடமி விருதுகளில் கருப்பு மற்றும் வெள்ளை நிற உடையில் தோன்றினார், அதில் முத்து எம்பிராய்டரி இடம்பெற்றிருந்தது. பட மூலாதாரம்,FilmMagic படக்குறிப்பு,'டிரெய்ன் ட்ரீம்ஸ்' படத்தில் தோன்றிய பிரிட்டிஷ் நட்சத்திரம் ஃபெலிசிட்டி ஜோன்ஸ், 2026 ஆஸ்கர் விருது விழாவிற்கு பிராடா உடையில் வந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxz1nn40wpo
  20. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் திகதிகள் அறிவிப்பு 16 Mar, 2026 | 04:40 PM தமிழ்நாடு -மேற்கு வங்காளம்- கேரளம்- அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புது தில்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு தெரிவித்ததாவது... இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம், தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளம், தமிழ்நாட்டை ஒட்டி உள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதியன்று சட்டைப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் திகதியன்று சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மேற்கு வங்காள மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 என திகதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.‌ தேர்தல்கள் நிறைவடைந்த பிறகு எதிர்வரும் மே மாதம் நான்காம் திகதி அன்று ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நடைபெறும்'' என தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் ஆறாம் திகதி ஆகும். வேட்பு மணி வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் ஏழாம் திகதி என்றும், வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் ஒன்பதாம் திகதி தி நிறைவு திகதி என்றும் அறிவித்திருக்கும் தேர்தல் ஆணையம்.. ஏப்ரல் 23ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241126
  21. இரானில் புரட்சியை தூண்டிய ஒரு விமானப் பயணம் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,15 ஆண்டு காலமாக நாடு கடத்தப்பட்டிருந்த ஆயதுல்லா ருஹொல்லா கொமேனி 1979 பிப்ரவரி ஒன்றாம் தேதி இரான் திரும்பினார் கட்டுரை தகவல் ஜான் சிம்ப்சன் பிபிசி சர்வதேச விவகாரங்களுக்கான ஆசிரியர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் தனியார் போயிங் 747 விமானத்தின் முதல் வகுப்புப் பிரிவில் அமர்ந்திருந்த கொமேனி, 15 ஆண்டுகளுக்கு முன்பு, தான் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நாட்டை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டு வந்தார். கேமராமேனுடன் அவருக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்த நான், நாடு கடத்தப்பட்ட அவர் மீண்டும் தாயகம் திரும்புவதை எப்படி உணர்கிறார் என்று கேட்டேன். என்னுடைய கேள்விக்கு அவர் பதிலளிக்கவிலை. இருந்தபோதிலும் அதே கேள்வியை அங்கிருந்த ஓர் அமெரிக்கச் செய்தியாளர் மீண்டும் கேட்டார். அதற்கு கொமேனி, "ஹிச்சி" அதாவது "ஒன்றுமில்லை" என்று பதிலளித்தார். கொமேனியின் ஒன்றுமில்லை என்ற உணர்ச்சியற்ற பதில், அதற்கு சில நாட்களுக்கு முன்பு நாடு கடத்தப்பட்ட ஷா முகமது ரெசா பஹ்லவியின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியளித்தது. ஆனால் கொமேனி சொல்ல வந்தது என்னவென்றால், அவரது நாடு திரும்புதல் என்பது மனித உணர்வுகள் சார்ந்த விஷயமல்ல; கடவுளின் விருப்பம் மட்டுமே முக்கியமானது என்பதே. இந்த நிகழ்வுக்கு ஒரு மாதம் முன்பு, பாரிஸிற்கு வெளியே அவர் தங்கியிருந்த நியூஃபில்-லே-சாட்டோ என்ற இடத்தில் நான் அவரை பேட்டி எடுத்த போது, கொமேனி பேசியது அவரது மன உறுதியைக் காட்டியது. "மன்னராட்சி ஒழிக்கப்படும்," என என்னிடம் உறுதியாக சொன்ன அவர், "இரானின் தற்போதைய ஊழல் நிறைந்த அரசாங்கத்தின் கீழ் உள்ள சில வாழ்க்கை முறைகள் மாற்றப்பட வேண்டும்... மது போன்ற போதைப்பொருட்கள் தடை செய்யப்படும்" என்று தெரிவித்தார். "இரான் மீது ஷா மன்னரைத் திணித்த வெளிநாட்டு அரசாங்கங்களின் மீது எங்களுக்கு வெறுப்பு இருக்கிறது." இன்றும் கூட நிலைமை அப்படியேதான் இருக்கிறது. படக்குறிப்பு,பாரிஸிலிருந்து டெஹ்ரானுக்கு கொமேனி சென்ற விமானத்தில் ஜான் சிம்ப்சன் இருந்தார் ஆரம்பத்தில், இந்த இஸ்லாமியக் குடியரசு நீடிக்கும் என்பது சாத்தியமற்றதாகவே தோன்றியது, ஆனால் இப்போது அது 40 ஆண்டுகளைக் கடந்துவிட்டது, (1979 முதல் தற்போது வரை (2026-ல் 47 ஆண்டுகள்) . ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கிலான மக்கள் திரளாக வந்து வாக்களிக்கின்றனர். இருப்பினும் அரசியலில் தாராளவாத மற்றும் பழமைவாத போக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களே வேட்பாளர்களாக இருக்கின்றனர். பொதுவாக தாராளவாத வேட்பாளர்களே பெரும்பான்மையாக வெற்றி பெறுகிறார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகே, தங்களால் எதையும் மாற்ற முடியாது என்பதை அவர்கள் உணர்கிறார்கள். இரான் அரசியலமைப்பின் கீழ், தேர்தலில் வாக்களித்து ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், மதகுருமார்கள் மற்றும் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட பழமைவாத சக்திகளிடமே அதிகாரக் கட்டுப்பாடு உள்ளது. பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,டெஹ்ரான் விமான நிலையத்தில் கொமேனியை வரவேற்ற ஆதரவாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை விட நாட்டின் அதிஉயர் தலைவர் அதிகாரம் கொண்டவராக உயர் இடத்தில் இருக்கிறார் என்றால், பழமைவாதிகள் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள எத்தகைய போராட்டத்தையும் நடத்தத் தயாராக உள்ளனர். 2009-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்குப் பிறகு, தாராளவாத வேட்பாளர் மிர் ஹொசைன் மௌசவி அநேகமாக பெரும்பான்மை பெற்றிருந்தாலும், பழமைவாதியான அஹ்மதிநிஜாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தொடங்கிய போராட்டங்கள் உச்சத்தை எட்டிய போது புதிய புரட்சி உருவாவதைப் போல் தோன்றியது. ஆனால் போராட்டக்காரர்களை வீதிகளில் இருந்து விரட்ட பழமைவாதிகள் மிகவும் கொடூரமாக செயல்பட்டனர். இஸ்லாமியப் புரட்சி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்பு, 2009-ல் நடந்த சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தல் இரானில் மாபெரும் போராட்டங்களைத் தூண்டியது இரானில் வசிக்கும் இஸ்லாமியர்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ஷியா பிரிவினர். 1979-ல் ஷியா இஸ்லாமியப் புரட்சியாளர்களால் ஷா மன்னர் பதவியிறக்கப்பட்டது, ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகையும் அதிர்ச்சிக்கும் வியப்பிற்கும் உள்ளாக்கியது. இதன் விளைவாக, லெபனான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் சில பகுதிகளில் வாழ்ந்த ஷியாக்கள், தாங்கள் சமூக மற்றும் அரசியல் ரீதியாகப் பின்தங்கிய நிலையில் இருப்பதை இனி ஏற்க முடியாது என முடிவெடுத்தனர். ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்கு அதிகப் பங்கு வேண்டுமெனக் கோரத் தொடங்கினர். அந்தப் பிராந்தியத்தில் இருந்த சுன்னி பிரிவினருக்கு இந்த மாற்றம் ஆழ்ந்த கவலையளித்தது. இருப்பினும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ஒரு தலைவர் வீழ்த்தப்பட்டதைக் கண்டு அவர்களும் வியப்படைந்தனர். அமெரிக்கர்கள் அவமானப்படுத்தப்பட்டனர், அதை மத்திய கிழக்கில் இருக்கும் யாரும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். 1980 முதல் 1988 வரையிலான காலகட்டத்தில், இராக்குடன் இரானுக்கு ஏற்பட்ட கடுமையான போரின்போது தப்பிப் பிழைக்க வேண்டிய கட்டாயத்தில் இரான் இருந்தது. ஆனால் 2003-இல் இராக் மீது அமெரிக்கா படையெடுத்து அங்கிருந்த சிறுபான்மை சுன்னிகளின் அதிகாரத்தை அழித்த பிறகு, இரானின் வலுவான ஆதரவுடன் இராக் நாட்டின் பெரும்பான்மை ஷியாக்கள் நாட்டை ஆளத் தொடங்கினர். அந்த பிராந்தியத்தில் இரான் வலிமை வாய்ந்ததாக மாறியது; இதற்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் தான் ஒருவகையில் காரணமானார். இதைவிட ஒரு பெரிய முரண்பாடு இருக்கவே முடியாது. இன்று, இஸ்ரேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகமும் இரானை மிகப்பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கின்றன. ஆனால் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரானை வேறுவிதமாகப் பார்க்கின்றன. இரான் கடினமானது மற்றும் மோதல் போக்கு கொண்டது என்பதை அவை ஒப்புக்கொண்டாலும், இரானின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஐரோப்பிய ஆதரவுடன் எட்டிய உடன்படிக்கையைப் பின்பற்ற இரான் இன்னும் தயாராக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். இன்று, இரான் வெளியாட்கள் கற்பனை செய்வதை விட மிகவும் எளிதான நாடாகத் தோன்றுகிறது. பெண்களின் உடை குறித்த விதிகள் சில நேரங்களில் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஆனால் செளதி அரேபியாவில் வழக்கமாக காணப்படும் 'ஆண் பாதுகாவலர் முறை' போன்ற கட்டுப்பாடு ஒன்றை பெண்களின் நடமாட்ட சுதந்திரத்தின் மீது இஸ்லாமியக் குடியரசு ஒருபோதும் திணித்ததில்லை. எனது அனுபவத்தில், புள்ளிவிவரங்கள் இதற்கு மாறாக தெரிந்தாலும், இரானியப் பெண்கள் சுயமாக தொழில் செய்ய முடியும், சொந்தமாக சொத்து வைத்திருக்க முடியும், பெண்கள் கார் ஓட்ட முடியும். அரசியலில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என இரானிய பெண்கள் நம்புகின்றனர். பட மூலாதாரம்,Anadolu Agency படக்குறிப்பு,புரட்சிக்குப் பிறகு இரான் பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதித்திருந்தது புரட்சிக்கு பிறகு அமைந்த அரசாங்கங்களிலேயே, தற்போதைய அரசாங்கம் ஒருவேளை மற்றெல்லாவற்றையும் விட அதிக தாராளவாத போக்கு கொண்டதாக இருக்கலாம். ஆயதுல்லா கொமேனி இதை ஒருவேளை அங்கீகரித்திருக்க மாட்டார், ஆனால் இந்த அணுகுமுறை பல ஆண்டுகளாக இஸ்லாமியக் குடியரசைப் பாதுகாக்க உதவியுள்ளது. புரட்சிக்குப் பிறகு நான் முதன்முதலில் இரானுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்ட 1986-ஆம் ஆண்டிலேயே, புதிய இரானைப் பற்றி நான் உணர்ந்ததை இவ்வாறு விளக்கினேன்: அது 'நிலையானது, ஆனால் நிரந்தரமானது அல்ல' (Stable, but not permanent). இப்போதும் கூட நிலைமை அப்படித்தான் இருப்பதாகத் தோன்றுகிறது. ஊழல் குறித்து இரான் மக்களிடையே கோபம் மிகுந்திருந்தாலும், ஷா மன்னரின் ஆட்சியில் இருந்த அளவு இல்லை. தற்போதைய ஆட்சி முறைக்கு பெரிய அளவிலான அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லாததால், இரான் பெரும்பாலும் நிதானமாகவே தெரிகிறது. ஆனால், மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பலவீனமான தாராளவாத அரசாங்கத்திற்கும், அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள உறுதியான பழமைவாத மையத்திற்கும் இடையிலான இந்த விசித்திரமான சமநிலை என்றென்றும் நீடிக்கும் என்று நினைப்பது கடினம். பழிவாங்கும் உணர்ச்சியும், இரக்கமற்ற தன்மையும் கொண்ட கொமேனி தனது போயிங் 747 விமானத்தில் நாடு திரும்பியபோது கொண்டு வந்த அந்தத் தீவிரம் இப்போது பெருமளவில் தணிந்துவிட்டபோதிலும், அது இன்னும் அங்கே நீடித்திருக்கிறது. நாடு எப்படி ஆளப்பட வேண்டும் என்பதில் தாராளவாதிகளுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையே ஏதேனும் ஒரு அடிப்படை சமரசம் ஏற்படும் வரை, கொமேனியின் புரட்சி எப்போதும் ஒரு முற்றுப்பெறாத ஒன்றாகவே உணரப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c98gjdnk7dko
  22. குறைக்கப்படும் வேலை நாட்கள்? Mar 16, 2026 - 11:22 AM யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையிலான நேற்று (15) இரவு 8 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் எரிபொருள் தொடர்பில் சிக்கல் நிலைமைகள் எழுந்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள்களை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்கி, அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆராயும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறை (QR Code) தீவகப்பகுதி மக்கள் பயன்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகள், நீண்ட தூரங்களுக்கு பயணிக்கும் பாரஊர்திகளுக்கான எரிபொருள் விநியோக பொறிமுறைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும் சுகாதாரம், கல்வி, கைத்தொழில், விவசாயம், கடற்றொழில் போன்ற துறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தந்தத் துறைகளில் தற்போதைய எரிபொருள் தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதனைவிட டிஜிட்டல் குறியீட்டு முறை(QR Code) அறிமுகத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துவதுடன், எரிபொருளுக்காக நீண்ட வரிசை ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை அந்தந்த பிரதேச செயலாளர்கள் மட்டத்தில் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாறப்பண, பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் வட பிராந்திய முகாமையாளர் எஸ்.சிவகரன், பிரதேச செயலாளர்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கியமையால் , எரிபொருள் களஞ்சிய வசதிகள் கூட நாட்டில் இல்லை. அதனால் இருக்கிற எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவே QR மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உலகத்தில் தற்போது அசாதாரண நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. மத்திய கிழக்கின் போர் நிலைமை காரணமாக தற்போது ஈரான் வாழ்வா சாவா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஈரானில் உள்ள எண்ணெய் குதங்கள் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன, இதனால் உலகில் எண்ணெய் விலை கடுகதி வேகத்தில் உயர்ந்து செல்கிறது. 68 டொலராக இருந்த எண்ணெய் விலை தற்போது 100 டொலருக்கும் அதிகமாகி உள்ளது. இதனால், சுவிஸ், அமெரிக்கா, கனடா பிரான்ஸ் என எல்லா நாடுகளிலும் எரிபொருள் விலையேற்றம் காணப்படுகிறது. இலங்கையை பொறுத்த வரைக்கும், மே மாதம் வரைக்கும் தேவையான எரிபொருளே உள்ளது. எரிவாயும் அப்படித்தான். எமது நாட்டை பொறுத்த வரைக்கும் எரிபொருளை களஞ்சியபடுத்த போதிய அளவு களஞ்சிய வசதிகள். இல்லை. 38 நாட்களுக்கு மேல் களஞ்சியப்படுத்தி வைக்க முடியாத நிலைமையே காணப்படுகிறது, கடத்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கி உள்ளனர். அவர்களால் எரிபொருள் உள்ளிட்டவற்றை களஞ்சிய படுத்தி வைக்க கூடிய பெரியளவிலான களஞ்சிய சாலைகளை கூட அமைக்க முடியவில்லை. அவர்களின் தோல்வியே இன்று நாட்டு மக்களை வாட்டுகின்றது. தற்போது மே மாதம் வரைக்குமான எரிபொருள் கையிருப்பில் உள்ளமையால் அவற்றை சிக்கனமாக பயன்படுத்தவே QR பொறிமுறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம். கடற்தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு, அவர்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல பொருட்களை ஏற்றி இறக்கும் வாகனங்களுக்கும் தேவையான எரிபொருளை விநியோகிக்க விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என தெரிவித்தார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmmsrnbrg0003356pvrf83mgv
  23. போர் வேண்டாம் ; சுதந்திர பாலஸ்தீனம் வேண்டும் - ஒஸ்கார் விருது மேடையில் ஹொலிவூட் நடிகர் முழக்கம் Published By: Digital Desk 3 16 Mar, 2026 | 01:12 PM ஹொலிவூட் நடிகர் ஜேவியர் பார்டெம் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற ஒஸ்கார் விருது விழாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் போருக்கு எதிராகவும் குரல் கொடுத்த செய்தி சர்வதேச ரீதியில் வைரலாகி வருகின்றது. சிறந்த சர்வதேசத் திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதை வழங்குவதற்காக மேடைக்கு வந்த ஜேவியர் பார்டெம், தனது உரையை ஆரம்பிக்கும் போதே "போர் வேண்டாம் மற்றும் பாலஸ்தீனத்திற்கு விடுதலை வேண்டும்" என முழக்கமிட்டார். அவரது இந்தப் பேச்சு அங்கிருந்த பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கரகோஷத்தைப் பெற்றது. தனது டக்சிடோ உடையில் போருக்கு எதிரான சின்னம் மற்றும் பாலஸ்தீன ஆதரவுச் சின்னம் ஆகியவற்றையும் அவர் அணிந்திருந்தார். மத்திய கிழக்கில் தற்போது தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலில், ஹொலிவூட்டின் முன்னணி நடிகர் ஒருவர் நேரடி ஒளிபரப்பின் போது இத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பது சர்வதேச அரங்கில் ஒரு முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/241092
  24. குவைத் விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் Published By: Vishnu 16 Mar, 2026 | 04:43 AM குவைத் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் மூன்று ட்ரோன்கள் விமான நிலையத்தை குறிவைத்து ஏவப்பட்டதாகவும், அதனால் அங்குள்ள ரேடார் அமைப்பு சேதமடைந்ததாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மேலும் ஏவப்பட்ட ஐந்து ட்ரோன்களை குவைத் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக அழித்துள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/241060
  25. துரித கதியில் வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை! Mar 16, 2026 - 10:42 AM வட மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தையும் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைக்க எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். வளமான நாடு - அழகான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபாய் செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (15) நடைபெற்றது. இந்நிழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சுமார் 40 ஆண்டுகளின் பின்னர் இந்த அரசாங்கத்தால் இவ்வீதிக்கு விடிவு கிடைத்து, மக்களின் நீண்டகாலக் கனவு நனவாகியுள்ளது. காரைநகர் பிரதேசம் சுற்றுலாத்துறைக்குப் பிரபல்யமானதொரு இடமாகும். இதுவரை காலமும் மோசமான வீதியூடாகவே மக்கள் பயணித்து வந்தனர். இதனால் சுற்றுலாத்துறைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இவ்வீதி புனரமைக்கப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையின் வருகை பலமடங்கு அதிகரிக்கும் நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmmsq56mc000a356ph6axqreu
  26. யூகே ஒரு பெற்றோல் மிகை உற்பத்தி நாடு. ஆகவே விலை உலக சந்தைப்படி கூடினாலும் கையிருப்பு தீராது. டீசல் கார் வைதிருப்போருக்கு கொஞ்சம் சிக்கல் வரலாம். ஆனாலும் அதற்கும் வாய்ப்பில்லை. ஏன் என்றால் கத்தாரில் இருந்து வந்த எரிவாயுவை தவிர யூகேயின் எரிசக்தி தேவை நேரடியாக வளைகுடாவில் தங்கி இல்லை. ஆனால் கிழக்கு அரைக்கோள நாடுகளான ஆசியா, அவுஸ் மிக அதிக அளவில் தங்கி இருப்பது வளைகுடாவையே. எனவே எங்களுக்கு விலை பயங்கரமாக கூடும் ( சண்டை காரணமாக ஹொலிடேக்கள் கான்சல் எனவே அதற்குரிய காசை இதற்கு திருப்பி விட யோசித்துள்ளேன்) ஆனால் தட்டுப்பாடு வராது. குறிப்பாக பெற்றோலுக்கு. பிகு மின்சார சைக்கிள் சைத்துள்ளேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.