Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. போட்டி என்றால் ஓடி வரும் @வீரப் பையன்26 @செம்பாட்டான் ஆகியோரை காணவில்லை? என்னை T20 போட்டியிலும் அழைக்கவில்லை
  3. மனித புதைகுழி என சந்தேகம்: அகழ்வில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை Published By: Vishnu 03 Apr, 2026 | 04:33 AM தற்செயலாக எலும்புகள் எதுவும் கண்டெடுக்கப்படாமலேயே ஒரு மனித புதைகுழி எனச் சந்தேகிக்கப்பட்டு விசாரணை நடத்துமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காணியொன்றில் அரசாங்கச் செலவில் ஆறு அடி ஆழம் வரை தோண்டிய அகழ்வுப்பணி குறிப்பிடத்தக்க எதனையும் கண்டெடுக்கப்படாமலேயே நிறைவு செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட 150-இற்கும் மேற்பட்ட முஸ்லிம் ஹஜ் யாத்திரிகர்களின் உடல்கள் இருப்பதாகக் கூறப்பட்ட அந்தக் காணியில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 2.8 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. மனித புதைகுழி ஒன்றைத் தேடும் நோக்கில் தற்செயலாக மனித எச்சங்கள் எதுவும் கண்டெடுக்கப்படாமல் நீதிமன்ற மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, குற்றமொன்று இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் ஏதுமின்றி மூடிவிட நேர்ந்த இலங்கையின் முதலாவது இடம் மட்டக்களப்பில் அமைந்துள்ள குருக்கள்மடமாகும். முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமயத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் உள்ள கடற்கரை காணியில், 2026 மார்ச் 30ஆம் திகதி திங்கட்கிழமையன்று களுவாஞ்சிக்குடி நீதவான் தர்மலிங்கம் பிரதீபனின் மேற்பார்வையின் கீழ், சட்டவைத்திய அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் பங்களிப்புடன் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அகழ்வுப் பணிகளுக்காக அடையாளம் காணப்பட்ட நிலப்பரப்பை சுமார் ஆறு அடி ஆழத்திற்குத் தோண்டும்போது கடல் நீர் ஊற்றெடுத்ததையடுத்து, நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாக அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதாக, அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று நாட்கள் பூர்த்தியான 2026 ஏப்ரல் முதலாம் திகதி மாலை வேளையில், பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முபாரக் முகஸம் தெரிவித்தார். “இன்றைய தினம் இரண்டு மீற்றர் ஆழத்துக்கு அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. அகழ்வுப் குழி நீரினால் நிரம்பியதால், அகழ்வுப்பணியைத் தொடர்வதில் பயனில்லை என்ற சட்ட வைத்திய அதிகாரிகளின் தீர்மானத்துக்கு இணங்க, அகழ்வுப் பணிகள் இன்று நிறைவு செய்யப்பட்டன.” அகழ்வுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலப்பரப்பில் 5 மீற்றர் நீளம், 5 மீற்றர் அகலம் மற்றும் 9 அடி ஆழத்துக்கு அகழ்வுப்பணியை மேற்கொள்வதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள மேலும் சில இடங்களில் அகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துல் ரவூப் நீதிமன்றத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, அந்த நிலப்பரப்பை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் இடம்பெறும் சட்டத்தரணி முபாரக் முகஸம் குறிப்பிட்டார். “இப்பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ள வேறொரு பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முறைப்பாட்டாளர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளார். ஸ்கேன் பரிசோதனையை முன்னெடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவு உள்ளது. ஏப்ரல் மாதம் புத்தாண்டின் பின்னர் சந்தேகத்துக்குரிய பகுதியில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மனித எச்சங்களோ அல்லது வேறு எச்சங்களோ கண்டெடுக்கப்படாத நிலையில் அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்பட்டன.” இலங்கையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் மனிதப் புதைகுழிகளில் தற்செயலாக எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படாமல் ஒரு பாரிய புதைகுழியைக் கண்டறிவதற்காக அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இடம் இதுவாகும். இதற்கு முன்னர் வடக்கிலும், கொழும்பிலும், சம்பூரிலும், மாத்தளையிலும் தற்செயலாக மனித எலும்புகள் தென்பட்ட பின்னரே இவ்வாறான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. பாரிய புதைகுழி இருப்பதாகக் கூறப்படும் குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 2025 ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவான் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். மூன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/242605
  4. நாம் மூன்றாம் உலகப்போரை நோக்கி நகர்கிறோமா? அல்லது இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் அஹ்மென் கவாஜா, குளோபல் ஜர்னலிசம் குழு, குளோபல் ஸ்டோரி போட்காஸ்ட் 2 ஏப்ரல் 2026 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இரான் உடனான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய மோதல் மிகப் பெரிய ஒன்றாக உருவெடுக்குமா என்பது குறித்த கவலைகள் எழுந்துள்ளன. இந்தப் போர் இரானை மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இராக், பஹ்ரைன், குவைத், செளதி அரேபியா, ஓமன், அஜர்பைஜான், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை, சைப்ரஸ், சிரியா, கத்தார் மற்றும் லெபனான் உள்ளிட்ட பல பகுதிகளை பாதித்துள்ளது. இந்த மோதல் பிராந்திய அளவில் இருந்து முழுமையான உலகப் போராக மாறக்கூடுமா என்று இப்போது பலர் யோசித்து வருகிறார்கள். ஒரு போர் எப்போது உலகப் போராக மாறுகிறது? "போர்கள் மிகவும் கவனமாகத் திட்டமிடப்படுகின்றன என்றும், போருக்குச் செல்பவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைத் துல்லியமாக அறிந்திருக்கிறார்கள் என்றும் மக்கள் நினைக்கிறார்கள்" என்று பிபிசியின் 'குளோபல் ஸ்டோரி' பாட்காஸ்ட்டில் பேசிய பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சர்வதேச வரலாற்றுப் பேராசிரியர் மார்கரெட் மேக்மில்லன் கூறுகிறார். "உண்மையில், கடந்த காலப் போர்களைப் பற்றி நீங்கள் பார்த்தால், முதல் உலகப் போர் வெடிப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவற்றில் தற்செயலான சம்பவங்கள், எதிரியை தவறாக மதிப்பிட்டது போன்றவை இருந்தன. சில நேரங்களில் இதை ஒரு பள்ளிக்கூட மைதானத்தில் நடக்கும் சண்டையைப் போல புரிந்துகொள்ளலாம்'' ''ஆஸ்திரிய - ஹங்கேரி பேரரசர் பிரான்ஸ் ஜோசப்பின் உறவினர் ஃபிரான்ஸ் ஃபெர்டினாண்ட் படுகொலை செய்யப்பட்டதே, 1914-ல் முதல் உலகப் போரைத் தூண்டிய தொடர் நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்தது'' என்கிறார் மேக்மில்லன். சில வாரங்களுக்குள், பல கூட்டணிகள் ஐரோப்பாவை மோதலுக்குள் இழுத்தது. ஆஸ்திரிய - ஹங்கேரி செர்பியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்தது, ஜெர்மனி ஆஸ்திரியாவை ஆதரித்தது, ரஷ்யா செர்பியாவிற்கு ஆதரவாகத் திரண்டது, பிரான்ஸ் ரஷ்யாவை ஆதரித்தது மற்றும் பிரிட்டன் ''மரியாதை மற்றும் உத்தி'' ஆகிய இரண்டின் பெயரால் போரில் இறங்கியது. அதன்பின் நடந்தது ஓர் உலகளாவிய பேரழிவாக மாறியது என்கிறார் மார்கரெட் மேக்மில்லன். பட மூலாதாரம்,Stringer/Getty Images படக்குறிப்பு,அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய இடங்களையும், இரானிய எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்களையும் குறிவைத்துள்ளன. லண்டன் கிங்ஸ் கல்லூரியின் சர்வதேச வரலாற்றுப் பேராசிரியர் ஜோ மயோலோ, உலகப் போரை அனைத்துப் பெரும் சக்திகளும் ஈடுபடும் ஒரு முழுமையான போர் என்று வரையறுக்கிறார். "முதலாம் உலகப் போரில் ஈடுபட்டவர்கள் ஐரோப்பிய பேரரசு சக்திகள். இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இருந்தன," என்று அவர் பிபிசியிடம் விவரித்தார். மத்திய கிழக்கின் இன்றைய பதற்றங்களை பலர் பெரும்பாலும் பிராந்திய அளவிலான ஒன்றாகவே விவரிக்கிறார்கள். ஆனால் ஒரு விரிவான மோதல் அதிகரிப்பதற்கான சூழல்கள் நிலவுகின்றனவா? பிப்ரவரி மாதம் பிபிசிக்கு அளித்த பேட்டியில், யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஏற்கனவே மூன்றாம் உலகப் போரைத் தொடங்கிவிட்டதாக நம்புவதாகவும், ரஷ்யாவை பின்வாங்கச் செய்வதற்கு தீவிர ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத்தைப் பிரயோகிப்பதே ஒரே தீர்வு என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்தார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,இரான் உடனான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து பிராந்தியத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், லெபனானில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆபத்து என்ன? அப்படியென்றால், மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதற்கான தற்போதைய ஆபத்து என்ன? "இந்த மோதலைத் தீவிரப்படுத்தக்கூடிய நாடு அநேகமாக இரான் அல்லது ஏமனில் உள்ள ஹூத்திகள் போன்ற இரானின் கூட்டாளிகளாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்" என மேக்மில்லன் கூறுகிறார். கப்பல் போக்குவரத்துப் பாதைகளைக் குறிவைப்பது அல்லது ஹோர்மூஸ் நீரிணையை மூடுவது போன்ற இரானின் சாத்தியமான நடவடிக்கைகள் உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும். இது எரிசக்தி விநியோகத்தைப் பாதிப்பதோடு வல்லரசு நாடுகளையும் உள்ளே இழுக்கக்கூடும் என்று மேக்மில்லன் குறிப்பிடுகிறார். மேலும், அமெரிக்காவின் தலையீடும் இதில் உள்ள ஆபத்தை அதிகரிக்கிறது. மற்ற நாடுகள் நேரடியாக இதில் ஈடுபடாவிட்டாலும், பொருளாதார ரீதியாகவோ அல்லது உத்தி ரீதியாகவோ பாதிக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் மற்றொரு ஆபத்தும் இருப்பதாக அவர் கூறுகிறார். அதாவது ஒரு பிராந்தியத்தில் நடக்கும் மோதல்கள் மற்ற இடங்களில் வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என்பது அவரது கூற்று. உதாரணமாக, மேற்கத்திய நாடுகள் திசைதிருப்பப்பட்டிருப்பதை தைவான் மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு வாய்ப்பாக சீனா கருதலாம் அல்லது உலகின் கவனம் வேறு எங்கோ இருக்கும்போது ரஷ்யா யுக்ரேனில் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்கிறார் அவர். "ஒரு பிராந்தியத்திற்கு வெளியே மோதல் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் எப்போதும் உள்ளன. ஏனெனில் தங்களைத் தடுக்கக்கூடியவர்கள் இந்த மோதலில் ஈடுபடுவதைப் பார்த்து, பிராந்தியத்திற்கு வெளியே உள்ள மற்றவர்கள் இதில் தங்களுக்குரிய வாய்ப்புகளைக் காண்பார்கள்" என்கிறார் மேக்மில்லன். எந்தெந்த நாடுகள் இழுக்கப்படும் வாய்ப்பு உள்ளது? பேராசிரியர் மயோலோ இந்த மோதல் பிராந்திய அளவிலேயே இருக்கும் என்றும், செளதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளை இது உள்ளே இழுக்கும் என்றும் நம்புகிறார். ஆனால் சீனா மற்றும் ரஷ்யா இந்தப் போருக்குள் இழுக்கப்படும் என்று அவர் கருதவில்லை. "உலகில் ஏதோ ஒன்று நடக்கிறது என்பதற்காகச் சீனா உடனடியாகத் தைவானை தாக்கும் என்பது முற்றிலும் அர்த்தமற்றது. ஆனால் நாம் உலகப் போரைப் பற்றி, அதாவது மூன்றாம் உலகப் போரைப் பற்றிப் பேசுகிறோம் என்றால், சீனாவுக்கோ அல்லது ரஷ்யாவுக்கோ இதில் நேரடியாக ஈடுபட எந்த விருப்பமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஐரோப்பாவிற்கு அதற்கான நாட்டம் இன்னும் குறைவாகவே இருக்கும்" என்றும் பேராசிரியர் மயோலோ குறிப்பிட்டார். சீனாவிடம் வேறு திட்டங்கள் இருப்பதாக அவர் நம்புகிறார். "உங்கள் எதிரி ஒரு மிகப்பெரிய உத்தி தவறைச் செய்யும்போது, அவர்களைத் தடுக்காமல் அப்படியே அதைத் தொடர விடுவீர்கள்" என்கிறார் அவர். எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்பட்டாலும், சீனாவுக்கு அது சிறிய இழப்பு மட்டுமே என்று கூறிய மயோலோ, "அமெரிக்கா மத்திய கிழக்கில் மூழ்கிக் கிடப்பது சீனாவிற்கு மிகப்பெரிய நலன்களை வழங்கக்கூடும்'' என்கிறார் அவர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யா இரானுடனான தனது கூட்டாண்மை பற்றிப் பெருமையாகப் பேசினாலும், இரானுக்கு ராணுவ உதவி வழங்க வேண்டிய கட்டாயம் ரஷ்யாவிற்கு இல்லை. தலைவர்களின் பங்கு பெருமை, கௌரவ உணர்வு அல்லது எதிரிகள் மீதான பயம் ஆகியவற்றால் போர்கள் தூண்டப்படுவதை வரலாறு வெளிப்படுத்தியுள்ளது என்று மேக்மில்லன் கூறுகிறார். தலைவர்கள் நிகழ்வுகளின் போக்கை மாற்றியமைக்க முடியும் என்பதையும் வரலாறு காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். "முதலாம் உலகப் போரின் போது பிரான்ஸ் பிரதமர் (ஜார்ஜஸ்) க்ளெமென்சோ, போர் தொடுப்பதை விட அமைதியை ஏற்படுத்துவது கடினமானது" என்று கூறினார். மேக்மில்லனின் கூற்றுப்படி, மக்களால் பெரிய இழப்புகளோ அல்லது தியாகங்களோ செய்யப்படும்போது, தலைவர்கள் "போரை நிறுத்தாமல் தொடர்ந்து, வெற்றி பெற வேண்டும்" என்று முடிவு செய்கிறார்கள் என்ற வாதம் பெரும்பாலும் முன்வைக்கப்படுகிறது. தலைவர்களுக்குப் பெருமை என்பது ஒரு காரணியாக இருக்கலாம் என்று கூறும் அவர், புதினை ஒரு உதாரணமாகக் காட்டுகிறார். "யுக்ரேனை ஆக்கிரமிக்க முயன்றதன் மூலம் அவர் ஒரு பெரிய தவறைச் செய்துள்ளார் என்பது தெளிவாகிறது" என்று குறிப்பிட்டார். பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ரஷ்யா ஒட்டுமொத்தமாக 12.5 லட்சம் உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளது. இது குறைவான மதிப்பீடாகவே கருதப்படுகிறது. தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் அல்லது பின்வாங்க மறுக்கும் தலைவர்கள் மோதல்களை நீடிக்கச் செய்யவும் ஆழப்படுத்தவும் முயல்வார்கள் என்று மேக்மில்லன் கூறுகிறார். கடந்த காலத்தில், ஹிட்லர் போன்றவர்கள் தோல்வி தவிர்க்க முடியாதது என்று தெரிந்தும் கூட, சித்தாந்தம், பெருமை அல்லது மாயையினால் தூண்டப்பட்டுத் தொடர்ந்து போரிட்டனர் என்று அவர் குறிப்பிடுகிறார். இத்தகைய முடிவுகள் சிறிய அளவிலான மோதல்களைப் பேரழிவை ஏற்படுத்தும் போர்களாக விரிவுபடுத்தக்கூடும். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,இரான் உடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிகள் பதற்றத்தைக் குறைக்க ராஜீய நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்று மேக்மில்லன் கூறுகிறார். "நீங்கள் எதிர்த் தரப்பைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்... மேலும் அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார். "இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இரான் போர் மூலமாக தாங்கள் எட்டக்கூடிய இலக்குகளை அடைந்துவிட்டதை உணர வேண்டும்.'' என்கிறார் மயோலோ மேலும் போர் தொடர்வது என்பது, யாருக்கும் அவர்கள் "விரும்பிய பலனைத் தராது" என்று அவர் விளக்குகிறார். "தடைகளை நீக்குவது, பாதுகாப்பு ஒப்பந்தம், உலக அரசியலில் இரானின் இடம் குறித்த புரிதல்கள் போன்றவற்றில் சில உடன்பாடுகள் எட்டப்பட வேண்டும்'' மத்தியஸ்தம் மூலம் மட்டுமே சம்பந்தப்பட்ட சக்திகள் போரை நிறுத்தி பின்னர் அதை ஒரு நிரந்தர ஏற்பாடாக மாற்ற முடியும் என்று மயோலோ கூறுகிறார். இந்த செய்தி பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் பாட்காஸ்ட்டான 'தி குளோபல் ஸ்டோரி'-யின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது. தொகுப்பு: அலெக்ஸாண்ட்ரா ஃபுஷே - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy3r9j9z1jo
  5. கொல்கத்தா நைட் ரைடர்ஸை நையப்புடைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; பந்தவீச்சிலும் களத்தடுப்பிலும் ஏஷான் மாலிங்க அபாரம் Published By: Vishnu 03 Apr, 2026 | 02:56 AM (நெவில் அன்தனி) கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை நையப்புடைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 65 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. ஹென்றிச் க்ளாசன், ட்ரவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள், ஜெய்தேவ் உனத்காட், ஏஷான் மாலிங்க ஆகியோரின் துல்லியமான பந்தவீச்சுகள், நிட்டிஷ் குமார் ரெட்டியின் சகலதுறை ஆட்டம் என்பன சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இலகுவாக வெற்றிபெறச் செய்தன. அத்துடன் மிகவும் முக்கிய வேளைகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கெமரன் க்றீன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஆகிய இருவரும் ரன் அவுட் ஆனதும் சன்ரைஸ் ஹைதராபாத்துக்கு சாதகமான முடிவு கிடைக்க உதவியது. இந்த இரண்டு ரன் அவுட்களிலும் இலங்கை வீரர் ஏஷான் மாலிங்க முக்கிய பங்காற்றினார்.இலங்கை செய்திகள் கெமரன் க்றீனை நேரடியாக ரன் அவுட் செய்த மாலிங்க, ரகுவன்ஷியின் ரன் அவுட்டிலும் பங்களிப்பு செய்தார். அத்துடன அஜின்கியா ரஹானேயின் சற்று சிரமமான பிடியையும் மாலிங்க எடுத்தார். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 226 ஓட்டங்களைக் குவித்தது. இந்த வருட ஐபிஎல் அத்தியாயத்தில் ஓர் அணி பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். நான்கு வீரர்கள் 35க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது. ட்ரவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி வெறும் 34 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ட்ரவிஸ் ஹெட் 21 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 46 ஓட்டங்களையும் அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 48 ஓட்டங்களையும் விளாசினர். அணித் தலைவர் இஷான் கிஷான் சிறப்பாக ஆரம்பித்தபோதிலும் 14 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். அனிக்கெட் வர்மா ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். (118 - 4 விக்.) இந் நிலையில் ஹென்றிக் க்ளாசன், நிட்டிஷ் குமார் ரெட்டி ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். ஹென்றிச் க்ளாசன் 35 பந்துகளில் 52 ஓட்டங்களையும் நிட்டிஷ் குமார் ரெட்டி 24 பந்துகளில் 39 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ப்ளெசிங் முஸாரபானி 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வைபவ் அரோரா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கடினமான 227 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பின் அலன் 7 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 28 ஓட்டங்களைப் பெற்று முதலாவதாக ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. கெமரன் க்றீன் (2), அணித் தலைவர் அஜின்கியா ரஹானே (8) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ரன் அவுட் ஆனதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் கண்டது. ஆங்ரிஷ் ரகுவன்ஷி, ரின்கு சிங் ஆகிய இருவரும் சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்த முயற்சித்த போதிலும் அவர்கள் இருவரும் 46 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ரகுவன்ஷி ஆட்டம் இழந்தார். ரகுவன்ஷி 29 பந்துகளில் 6 பவுண்டறிகள். 2 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களையும் ரின்கு சிங் 25 பந்துகளில் 35 ஓட்டங்களையும் பெற்றனர். மத்திய வரிசையில் சுனில் நரேன் 4 பந்துகளில் 2 சிக்ஸ்களுடன் 12 ஓட்டங்களைப் பெற்றார். அவரது விக்கெட்டை ஏஷான் மாலிங்க வீழ்த்தினார். பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்காட் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏஷான் மாலிங்க 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நிட்டிஷ் குமார் ரெட்டி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன்: நிட்டிஷ் குமார் ரெட்டி https://www.virakesari.lk/article/242604
  6. அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு Published By: Digital Desk 3 03 Apr, 2026 | 11:15 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் ராண்டி ஜோர்ஜை வியாழக்கிழமை பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இராணுவத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகளை ஒரே நேரத்தில் பதவி நீக்கியுள்ளார். இராணுவத்தின் 41 ஆவது படைத் தளபதியான ராண்டி ஜோர்ஜ், இன்னும் ஓராண்டு பதவிக்காலம் இருக்கும் நிலையிலேயே உடனடியாகப் பணி ஓய்வு பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார். இராணுவத்தின் பயிற்சி மற்றும் உருமாற்றக் கட்டளையகத்தின் தலைவர் ஜெனரல் டேவிட் ஹோட்னே மற்றும் இராணுவ மதகுருமார் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் வில்லியம் கிரீன் ஆகியோரையும் ஹெக்ஸெத் பதவி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானுடன் போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழலில், இராணுவத்தின் மிக உயர்ந்த தளபதியைப் பதவியிலிருந்து நீக்குவது அமெரிக்க வரலாற்றில் ஒரு அரிய மற்றும் வழக்கத்திற்கு மாறான செயலாகும். இந்த பதவி நீக்கங்களுக்கான உத்தியோகபூர்வக் காரணத்தை பென்டகன் வெளியிடவில்லை. ராண்டி ஜோர்ஜிற்குப் பதிலாக, ஜெனரல் கிறிஸ்டோபர் லானீவ் தற்காலிகமாக அந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீட் ஹெக்செத் பதவியேற்றது முதல் இராணுவத்தில் பல அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார்: இந்த மாற்றங்கள் அமெரிக்கா ஈரானுக்கு எதிராகத் தனது இராணுவ பலத்தை அதிகரித்து வரும் வேளையில் நிகழ்கின்றன. https://www.virakesari.lk/article/242629
  7. Today
  8. யாழ் விரைவுரையாளர் கொலை வழக்கு - நீதிமன்றின் உத்தரவு Apr 3, 2026 - 09:56 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவ துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டார். இந் நிலையில் அவரது சடலம் தனங்கிளப்பு பகுதியில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். சந்தேகநபர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இருதரப்பு சட்டத்தரணிகளின் நீண்ட வாதப்பிரதிவாதங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன் இரண்டாம் சந்தேகநபரான விரிவுரையாளரின் மகள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிப்பதற்கான மனநிலையில் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சட்ட வைத்திய அதிகாரிக்கு பணிப்புரை விடுத்தார். இந்த விடயத்தில் ஊடகங்களின் செய்தி அறிக்கையிடல் பொறுப்பு வாய்ந்ததாக அமைய வேண்டும் எனவும் நீதவான் அறிவுறுத்தியுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmnieh1hv0009356pjbggkdzx
  9. அமெரிக்காவின் சட்டமா அதிபர் பதவி நீக்கப்பட்டார் Published By: Digital Desk 3 03 Apr, 2026 | 09:39 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்காவின் சட்டமா அதிபர் பாம் பொண்டி குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்ப்பின் நீண்டகால விசுவாசியாகக் கருதப்பட்ட பொண்டியின் இந்த வெளியேற்றம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாம் பொண்டியின் பதவிக்காலம் முழுவதும் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களைக் கையாண்ட விதம் பெரும் விமர்சனத்திற்குள்ளானது. எப்ஸ்டீனுடன் தொடர்புடைய நபர்களின் பட்டியலை வெளியிடுவதாக உறுதியளித்த போதிலும், பின்னர் அத்தகைய பட்டியல் எதுவும் இல்லை என நீதித்துறை அறிவித்தது. எப்ஸ்டீன் தொடர்பான மில்லியன் கணக்கான கோப்புகளை வெளியிடுமாறு ட்ரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தம், இறுதியில் பொண்டிக்கு எதிரான அதிருப்தியாக மாறியது. கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றக் குழுவின் விசாரணையின் போது, ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவரை "தோற்றுப்போனவர்" என பொண்டி விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாம் பொண்டிக்கு பதிலாக அவரது முன்னாள் துணை அதிகாரியான டாட் பிளான்ச் புதிய தலைமை சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். தான் ஒரு தனியார் நிறுவனத்தில் இணையவுள்ளதாகவும், அங்கிருந்தபடியே ஜனாதிபதி ட்ரம்ப்பிற்காக தொடர்ந்து போராடப்போவதாகவும் பொண்டி தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் உள்நாட்டு பாதுகாப்புத் துறைத் தலைவர் கிறிஸ்டி நோம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில வாரங்களிலேயே நீக்கப்படும் இரண்டாவது உயர் அதிகாரி பாம் பொண்டி ஆவார். வியாழக்கிழமை காலை வரை பொண்டியைப் புகழ்ந்து பேசிய ட்ரம்ப், திடீரென இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242618
  10. மார்ச் 30 இல் தனது பிறந்தநாளை கொண்டாடிய @யாயினி அக்காவிற்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வளத்துடன் வாழ்க.
  11. பெரிய வௌ்ளி தினம் இன்று! Apr 3, 2026 - 06:45 AM இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் அவர் சிலுவையில் அறையப்படதையும் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி இன்றாகும். கிறித்தவர்களின் வழிபாட்டில் முக்கிய நாளாக இந்த பெரிய வெள்ளி பார்க்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை அனுஸ்டிக்கப்படும் நிகழ்வாகும். மனிதர்களை பாவங்களிலிருந்து மீட்பதற்காக இறைவனின் திருக்குமரர் மனித குலத்தின் மீட்பராக பூலோகம் வருகை தந்து, சிலுவையில் அறைந்து மனித குல இரட்சண்யத்திற்காக செய்த தியாகத்தை கிறிஸ்தவ அடியார்கள் இன்றைய நாளில் நினைவுகூருவார்கள். கத்தோலிக்க தேவாலயங்களில் இது தொடர்பான மூன்று மணிநேர விசேட ஆராதனைகளும் நடைபெறவுள்ளன. https://adaderanatamil.lk/news/cmni7p2kv0002356pco1szip0
  12. புவியில் இருந்து வெற்றிகரமாக வௌியேறிய ஆர்ட்டிமிஸ் II Apr 3, 2026 - 05:22 AM புவியின் சுற்றுப்பாதையில் இருந்து வெற்றிகரமாக வௌியேறிய ஆர்ட்டெமிஸ் II தற்போது நிலவின் மேற்பரப்பை நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்வெளி வீரர்கள், நிலவைச் சுற்றி வருவதற்கான தங்களின் 10 நாள் பயணத்தின் இரண்டாம் நாளில் கால்பதித்துள்ளனர். இது மனிதகுலம் இதுவரை விண்வெளியில் சென்றிராத மிக நீண்ட தூரப் பயணமாக கருதப்படுகின்றது. நேற்று (2) ஏவப்பட்டதில் இருந்து 23 மணிநேரத்திற்கும் மேலாக, விண்கலம் பூமியைச் சுற்றி வந்துள்ளது. இன்றைய தினம் 'ட்ரான்ஸ்-லூனார் இன்ஜெக்ஷன்' (trans-lunar injection burn) எனப்படும் முக்கியமான கட்டத்திற்கான இறுதி முடிவை விண்வெளி வீரர்கள் எதிர்நோக்கியிருந்தனர். இது பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து விண்கலத்தை வெளியேற்றி, நிலவை நோக்கிய பாதையில் செலுத்த உதவும் செயன்முறையாகும். இந்த நிகழ்வு அதிகாலை 5.19 மணியளவில் இடம்பெற்ற நிலையில் நாசாவின் அனுமதியுடன் புவி சுற்றுப்பாதையில் இருந்து குறித்த விண்கலம் வெற்றிகரமாக வௌியேறியது. விண்வெளி வீரர்கள் எதிர்வரும் ஏப்ரல் 6 திங்கட்கிழமை அன்று நிலவின் மறுபக்கத்தை சென்றடைவார்கள். 50 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு மனிதர்கள் மீண்டும் நிலவை நோக்கிப் பயணிக்கின்றனர். அவர்கள் நிலவில் தரை இறங்கப் போவதில்லை என்றாலும், இதற்கு முன்பு மனிதர்கள் பார்த்திராத ஒரு காட்சியை அங்கிருந்து காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலவின் மேற்பரப்பை சுற்றிவருவதற்காக ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலம் நேற்று விண்ணுக்கு அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmni4pfsc0000356p7dn50pgz
  13. எழுச்சியான பாடல் ...அருமை தொடருங்கள்
  14. பாடலும் இசையும் மட்டும் அல்ல, ஒவ்வொரு நுணுக்கத்திலும் ஒரு அழகும், ஒவ்வொரு ஒலியிலும் ஒரு உயிரும் தெரிகிறது. முழுக்க முழுக்க மனதை கவரும் அளவுக்கு நன்றாக உள்ளது.
  15. இந்தியாவில்…. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி… போன்ற பலரும் இரட்டை தொகுதிகளில் போட்டியிடுபவர்களே. அதிலும் இந்த காந்திக்கள்…. வடக்கில் ஒரு தொகுதியும், தெற்கில் ஒரு தொகுதியும் என்று அகலக் கால் வைத்திருப்பார்கள். 😂
  16. Yesterday
  17. உண்மைதான்… இத்தாலி கலந்து கொள்ளும் போது, அந்த விளையாட்டுக்களில் விறுவிறுப்புக்கும், ரசிகர்களின் கொண்டாட்டமும், ஆரவாரமும் பார்ப்பவர்களை பரவசப்படுத்தும்.
  18. அருமை. நல்ல எழுத்துக்கள். இன்றைய காலம். அதனோடு சேர்ந்திருக்க அருமையான இணைப்பு.
  19. நல்ல விடயம். இதே போல் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவை புறம் தள்ள வேண்டும். அவர்களை புறம் தள்ளி வைத்தால் இந்த உலகு அமைதிப்படும்.பல அமைப்புகள் உயிரூட்டப்படும். இன்றைய உலகின் நம்பர் வன் குழப்பவாதி என்றால் அது அமெரிக்கா மட்டுமே.
  20. 2030ல் சீனா ஏதோ பெரிய திட்டம்/ நடவடிக்கை,ஆராய்ச்சி சந்திரனில் செய்யவிருப்பதாக வாசித்த ஞாபகம். அதற்கு முதல் நாசா காணி பிடிக்கப்போகின்றது போல் இருக்கின்றது.🤣
  21. மிகவும் கவலையான விடயம் மட்டுமல்ல பொருளாதார ரீதியிலும் கவலையான விடயம். உதைபந்தாட்டத்தில் இத்தாலி முதன்மை வகிக்கும் நாடு. இத்தாலி மக்கள் உதைபந்தாட்ட ரசிகர்கள் மட்டுமல்ல அதில் ஊறிப்போயுள்ள சமூகத்தினர். உலக கோப்பை என்றால் பிரேசில்.ஆர்ஜென்ரீனா,பிரான்ஸ்,இத்தாலி,ஜேர்மனி,இங்கிலாந்து,ஸ்பானியா,நெதர்லாந்து போன்ற நாடுகள் முக்கியம் இணைந்திருக்க வேண்டும்.
  22. ஈழத்தில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே அரசியல் மேடைகளில் ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் சீமான். அது திருமாளவனின் அரசியல் மேடை என நினைக்கின்றேன்.சீமான் அன்றிருந்த கொள்கையில் இன்றும் நிலை மாறவில்லை. அது அவர் பிரச்சனை. ஈழ அரசியலுக்காக நான் சீமானை ஆதரிப்பதில்லை.ஏனென்றால் அரசியல் என்பது காலத்திற்கு காலம் மாறும். அதில் யாருமே பந்தயம் கட்ட முடியாது. சீமான் தன் அரசியல் இலாபத்திற்காக ஈழத்தை கையில் எடுத்தார் என்றால்.... பழ. நெடுமாறன் என்ன மாதிரி? அவரின் இன்றைய நிலைகள் என்ன? எப்படி?
  23. ஏன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றார்? இவருக்கே தன் வெற்றியில் நம்பிக்கை இல்லை போல....😂
  24. Teen charged after Brampton’s Tamil Genocide Memorial defaced with derogatory messages: police By Joanna Lavoie Opens in new window Published: April 02, 2026 at 3:53PM EDT CKTB - News - Peel Police A 14-year-old boy has been charged after the Tamil Genocide Memorial at Brampton’s Chinguacousy Park was recently vandalized with derogatory spray-painted messages. Peel Regional Police said they were called to that area on March 20 after receiving reports that the memorial had been defaced. “Upon arrival, officers confirmed the vandalism and immediately assigned the investigation to the Hate Crime Unit,” police said in a news release. After a thorough investigation, a teenage boy from Brampton was arrested and charged on March 31 with two counts of mischief over $5,000. The accused, who cannot be identified under the provisions of the Youth Criminal Justice Act, is set to appear in court at a later date. “Peel Regional Police will not tolerate vandalism — especially hate-motivated crimes of spaces that are meaningful to our communities. People across the region have the right to feel safe in public spaces,“ Police Chief Nishan Duraiappah said in a release. “We thank our Hate Crime Unit for acting swiftly to locate and hold those responsible accountable.” The force recently launched a centralized Hate Crime Unit, which is aimed at enhancing its response to hate-motivated crimes and incidents as well as culturally sensitive incidents. Anyone with further information is asked to contact the Hate Crime Unit at 905-453-2121, ext. 6098, or Crime Stoppers anonymously. Joanna Lavoie Opens in new window Journalist, CP24.com
  25. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, யேர்மனியின் Saarland மாநிலத்தில் உள்ள Voelklingen நகரில், 34 வயதான பொலிஸ் அதிகாரி சைமன் போர், 19 வயதான அஹ்மத் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். எட்டு நாட்கள் நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, 01.04.2026 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தத் தீர்ப்பில், அஹ்மத் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்பபைத் தந்திருக்கின்றது. விசாரணையின் போது குற்றம் சுமத்தப்பட்ட அஹ்மத் தனது செயல்களை ஒப்புக்கொண்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சம்பவத்தின் விவரங்களின்படி, ஒரு பெற்றோல் நிலைய கொள்ளைக்குப் பிறகு, அவரைத் துரத்தி வந்த பொலிஸ் அதிகாரிகளை அஹ்மத் கத்தியால் தாக்கியிருக்கின்றார். பின்னர், ஒரு அதிகாரியின் துப்பாக்கியை பறித்து சைமன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருக்கின்றார். ஆரம்பத்தில் சைமனின் குண்டு துளைக்காத கவசம் தாக்குதலைத் தடுத்தது. ஆனால் அவர் கீழே விழுந்தபோது, அவரை நெருங்கி வந்து, கவசம் பாதுகாக்காத பகுதிகளை நோக்கி, முகம் உட்பட மூன்று தடவைகள் அஹ்மத் சுட்டிருக்கின்றார். இதனால் சைமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அஹ்மத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அஹ்மத் கடுமையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருந்தது. குறிப்பாக, மாய நம்பிக்கைகள் (delusions) மற்றும் உண்மை உணர்வை இழக்கும் நிலை போன்ற அறிகுறிகள் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில், தனது செயலின் தவறை முழுமையாக உணர முடியாத மனநிலையிலேயே அவர் இருந்தார் என்று மருத்துவ நிபுணர்கள் சாட்சியமளித்தனர். யேர்மனியச் சட்டப்படி, ஒருவர் குற்றம் செய்தாலும், அந்த நேரத்தில் மனநிலை காரணமாக தனது செயலின் தவறுகளைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தால், அவரை நேரடியாக குற்றவாளியாக அறிவிக்க முடியாது. இந்த அடிப்படையில், மருத்துவ நிபுணர்களின் அறிக்கைகளை கருத்தில் எடுத்து, அஹ்மத் சமூகத்திற்கு இன்னும் ஆபத்தானவர் என நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அவரை சிறைக்கு அனுப்பாமல், தடயவியல் மனநல மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்டிருக்கின்றது. இது தண்டனை இல்லை மாறாக, சிகிச்சை மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும் என தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. பொலிஸ் தரப்பு, இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. படம்-இன்ஸ்டாகிராம்
  26. இந்த வான் ஓடத்தில் டிரம்ப் ஐயாவையும், நெத்தென்யாகு ஐயாவையும் ஏற்றி இருக்கலாமே.
  27. GMOA முடிவுக்கு எதிராக சுகாதார அமைச்சர் கடும் நடவடிக்கை Apr 2, 2026 - 10:06 PM அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு எவ்வித நியாயமான அடிப்படையுமில்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அது வெறும் அரசியல் நோக்கத்தில் அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்குவதற்காக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் இன்று (02) ஊடகங்களுக்கு கூறியுள்ளார். பயிற்சி முடித்த 453 புதிய வைத்தியர்கள் அரசாங்க சேவையில் இணைவதைத் தடுத்து, அவர்களை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் பிணைக் கைதிகளாகப் பயன்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த வைத்தியர்கள் நியமனங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் சனிக்கிழமை (4) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது. இந்த கால எல்லை எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படமாட்டாது என அவர் வலியுறுத்தினார். வைத்தியர்கள் விண்ணப்பிப்பதைத் தடுக்கும் வகையில் யாராவது அச்சுறுத்தல் விடுத்தால், அது குறித்து உடனடியாக சுகாதார அமைச்சுக்குத் தெரியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஊடாக விசாரணைகள் நடத்தப்படும். குறித்த நேரத்திற்குள் விண்ணப்பிக்காத வைத்தியர்களின் வைத்தியசாலை சேவை மற்றும் சம்பளம் அன்றோடு நிறுத்தப்படும். அவர்கள் மீண்டும் அரச சேவையில் இணைய வேண்டுமானால், அடுத்த 1,300 பேர் கொண்ட குழுவுடனேயே இணைய முடியும். அப்போது அவர்கள் சிரேஷ்டத்துவத்தை இழந்து பட்டியலின் இறுதிக்கே தள்ளப்படுவார்கள் என அமைச்சர் எச்சரித்தார். 453 புதிய வைத்தியர்களைப் பலிக்கடாக்களாக்கி, அவர்களைப் அச்சுறுத்தி, தவறான தகவல்களை வழங்கி அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் இந்தச் செயல் மனிதாபிமானமற்றது. எவருக்கும் அஞ்சாமல் சுயாதீனமாக முடிவெடுத்து அரச சேவையில் இணையுங்கள் என அமைச்சர் இளம் வைத்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmnhp0vcw000h356pizftwmr3
  28. அமெரிக்க பிரஜைகளுக்கு ஈரான் ஜனாதிபதியின் திறந்த கடிதம்! 02 Apr, 2026 | 03:25 PM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதல்களின் விளைவாக, வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் அறிகுறிகள் எதுவும் இதுவரை தெரியவில்லை. இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என்றும், ஈரான் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்காவிட்டால் அந்த நாட்டை “கற்கால நிலைக்கு கொண்டு செல்வோம்” என எச்சரித்துள்ளார். இந்த அறிக்கை, அமெரிக்கா–ஈரான் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) அமெரிக்க மக்களுக்காக ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்கிடையே மோதல்கள் இருந்தாலும், பொதுமக்கள் மீது ஈரானுக்கு எந்தவித எதிர்மறை அணுகுமுறையும் இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “ஈரானை அச்சுறுத்தலாக சித்தரிப்பது வரலாற்று உண்மைகளுடனோ தற்போதைய நிலவரங்களுடனோ பொருந்துவதில்லை. இது சக்திவாய்ந்த அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தவறான சித்தரிப்பு” என்று கூறியுள்ளார். மேலும், எதிரி இல்லாதபோது அதை உருவாக்கி அழுத்தம் செலுத்துவது, இராணுவ ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது மற்றும் ஆயுத தொழில்துறையை தக்க வைத்துக்கொள்வது போன்ற நோக்கங்களே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அண்டை நாடுகளின் மக்களுடன் ஈரான் மக்களுக்கு எந்த பகையும் இல்லை என்றும், ஈரான் எப்போதும் அமைதியையும் மரியாதையையும் விரும்பும் நாடாகவே இருந்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது நாட்டின் மீது அமெரிக்கா சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் இராணுவத்தை திரட்டியுள்ளது என்றும், அந்தத் தளங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் உண்மையான அச்சுறுத்தலாக உள்ளன என்றும் ஜனாதிபதி பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். “இத்தகைய சூழ்நிலையில் எந்த நாடும் தனது பாதுகாப்புத் திறனை மேம்படுத்தாமல் இருக்காது. ஈரான் மேற்கொள்வது அனைத்தும் தற்காப்பு நடவடிக்கைகளே” என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த போரில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கான பிரதிநிதியாக செயல்படுகிறது என்றும், இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலிருந்து உலக கவனத்தைத் திருப்புவதற்காக ஈரான் அச்சுறுத்தலை உருவாக்குகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கிடையில், அசோசியேட் பிரஸ், வெளியிட்ட தகவலின்படி, ஈரான் புதிய ஆட்சி தலைவர் சமாதான ஒப்பந்தம் கோரியதாக டிரம்ப் கூறியிருந்தாலும், அந்தக் குற்றச்சாட்டை ஈரான் வெளியுறவு அமைச்சகம் “அடிப்படையற்றது” என மறுத்துள்ளது. மேலும், இந்த போர் அமெரிக்க மக்களின் நலனுக்காக உண்மையில் நடைபெறுகிறதா என்ற கேள்வியையும் பெசெஷ்கியான் எழுப்பியுள்ளார். “தவறான தகவல் இயந்திரங்களை தாண்டி உண்மையைப் பாருங்கள்” என்று அமெரிக்க மக்களிடம் அவர் அழைப்பு விடுத்துள்ளார். போரின் தொடக்கத்திலிருந்து அமெரிக்காவில் பொதுமக்கள் பெரும்பாலும் இந்த மோதலை எதிர்த்து வருகின்றனர் என்பதையும் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. ஒரு மாத காலமாக நீடிக்கும் இந்த போர், உலக அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலையை மேலும் பதற்றமடையச் செய்து வருகிறது. https://www.virakesari.lk/article/242567

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.