stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
'கடந்த 8 ஆண்டுகளில் எனக்கு பாலிவுட் வாய்ப்பு நின்றுவிட்டது' - ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி குறித்து பாலிவுட் கலைஞர்கள் கருத்து படக்குறிப்பு,பிபிசி நேர்காணலில் ஏ.ஆர். ரஹ்மான் கூறிய கருத்து குறித்து பாலிவுட்டின் ஷான் மற்றும் ஜாவேத் அக்தர் போன்ற பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 18 ஜனவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிபிசி-யுடனான ஒரு சிறப்பு நேர்காணலில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், 'கடந்த எட்டு ஆண்டுகளில் பாலிவுட்டில் தமக்கு வாய்ப்பு கிடைப்பது நின்றுவிட்டது' என்று கூறியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் கூற்றுக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். "இதில் எந்தவொரு மதவாதப் பிரச்னையும் இருப்பதாக நான் கருதவில்லை" என பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கூறினார். பாடகர் ஷான் கூறுகையில், "கலையில் எந்தவொரு மதவாத அல்லது சிறுபான்மையினர் அம்சம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி ஒரு விஷயம் இருந்திருந்தால், கடந்த முப்பது ஆண்டுகளாக இருக்கும் நமது மூன்று சூப்பர் ஸ்டார்களும் சிறுபான்மையினரே, ஆனால் அவர்களின் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டேதான் போகிறார்கள்," என்றார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,பாலிவுட் மதவாதமற்ற ஓர் இடம் என்று ஷோபா டே கூறுகிறார். ஏ.ஆர். ரஹ்மானின் கூற்று குறித்து நாவலாசிரியர் ஷோபா டே கூறுகையில், "இது மிகவும் ஆபத்தான கருத்து.. நான் ஐம்பது ஆண்டுகளாகப் பாலிவுட்டைப் பார்த்து வருகிறேன். மதவாதமில்லாத ஏதேனும் ஓரிடத்தை நான் பார்த்திருக்கிறேன் என்றால், அது பாலிவுட் தான். உங்களிடம் திறமை இருந்தால் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்," என்றார். "உங்களிடம் திறமை இல்லை என்றால், உங்கள் மதம் காரணமாகத்தான் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை என்ற கேள்வியே இல்லை. அவர் மிகவும் வெற்றிகரமான மற்றும் முதிர்ச்சியான நபர். அவர் கூறியவற்றை அவர் பேசியிருக்கக் கூடாது. ஒருவேளை அவருக்கு இதற்கான காரணம் இருக்கலாம்.. இது குறித்து நீங்கள் அவரிடமே கேட்க வேண்டும்," என அவர் மேலும் கூறினார். இந்த விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த பாடகர் சங்கர் மகாதேவன் கூறுகையில், "பாடல் உருவாக்குபவரும், அந்தப் பாடலைக் கொண்டு செல்ல வேண்டுமா இல்லையா, அதைச் சந்தைப்படுத்த வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பவரும் வெவ்வேறு நபர்கள் என்று நான் சொல்வேன். அதைத் தீர்மானிப்பவர்கள் இசைத்துறையைச் சேர்ந்தவர்கள் அல்ல," என்றார். ஏ.ஆர். ரஹ்மான் பிபிசி-யிடம் என்ன கூறினார்? படக்குறிப்பு,கடந்த எட்டு ஆண்டுகளில் அதிகாரச் சமநிலை மாற்றம் நேர்மறையானதாக இல்லை என்று பிபிசி நேர்காணலில் ஏ.ஆர். ரஹ்மான் கூறினார். பல பாலிவுட் படங்களுக்கு மறக்கமுடியாத இசையளித்த ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பிபிசி உடனான ஒரு சிறப்பு நேர்காணலில் தனது இசைப் பயணம், மாறிவரும் சினிமா, எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சமூகத்தின் தற்போதைய சூழல் குறித்து வெளிப்படையாகப் பேசினார். இந்த உரையாடலில் திரைத்துறையைப் பற்றி ரஹ்மான் கூறுகையில், "கடந்த 8 ஆண்டுகளில் அநேகமாக அதிகாரச் சமநிலை மாறியிருக்கலாம் மற்றும் படைப்பாற்றல் இல்லாதவர்கள் முடிவுகளை எடுக்கிறார்கள். ஒருவேளை இதற்கு மதவாத கோணமும் இருக்கலாம், ஆனால் என் முன்னால் யாரும் அவ்வாறு கூறவில்லை," என்றார். இருப்பினும் தனக்கு இப்போது வேலை வருவதில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். அவர் மேலும் கூறுகையில், "ஆமாம், சில விஷயங்கள் என் காதுகளுக்கு வந்தன. உதாரணமாக, நீங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டீர்கள், ஆனால் மற்றொரு இசை நிறுவனம் படத்திற்கு நிதி வழங்கியதால் அவர்கள் தங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளரைக் கொண்டு வந்தனர். நான் சரி என்று சொல்கிறேன், நான் ஓய்வெடுப்பேன், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவேன். நான் வேலையைத் தேடிச் செல்லவில்லை. வேலை என்னைத் தேடி வர வேண்டும் என்று விரும்புகிறேன். எனது உழைப்பும் நேர்மையும் எனக்குப் பலன்களைத் தர வேண்டும் என்று விரும்புகிறேன்." என்றார். ரஹ்மான் கூறுகையில், "ஆனால் நான் இதைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை, ஏனென்றால் இதில் தனிப்பட்ட விஷயம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் சிந்தனை மற்றும் விருப்பம் உள்ளது. நமக்கு எவ்வளவு வேலை கிடைக்க வேண்டும் என்பது நம் கையில் இல்லை," என்றார். ஜாவேத் அக்தரின் பதில் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சிறிய தயாரிப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மானிடம் செல்லக்கூடப் பயப்படுகிறார்கள் என்று ஜாவேத் அக்தர் கூறினார் (கோப்புப் படம்). செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் உடனான உரையாடலில் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஏ.ஆர். ரஹ்மானின் கூற்றுக்குத் தனது எதிர்வினையை அளித்தார். அவர் கூறுகையில், "எனக்கு ஒருபோதும் அப்படித் தோன்றியதில்லை. நான் மும்பையில் உள்ள அனைவரையும் சந்திக்கிறேன். மக்கள் அவருக்கு (ஏ.ஆர். ரஹ்மானுக்கு) மிகுந்த மரியாதை அளிக்கிறார்கள். ஒருவேளை பலரும் அவர் (ரஹ்மான்) இப்போது மேற்கத்திய நாடுகளில் அதிக வேலையாக இருப்பதாக நினைக்கலாம். அவருடைய நிகழ்ச்சிகள் மிகப்பெரியதாக இருப்பதாலும், அதற்கு அதிக நேரம் தேவைப்படுவதாலும் அவர்கள் அவ்வாறு நினைக்கலாம்," என்றார். ஜாவேத் அக்தர் மேலும் கூறுகையில், "ரஹ்மான் எவ்வளவு பெரிய மனிதர் என்றால், சிறிய தயாரிப்பாளர்கள் அவரிடம் செல்லக்கூடப் பயப்படுகிறார்கள். ஆனால், இதில் எந்தவொரு மதவாத அம்சமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை." நிதேஷ் திவாரியின் வரவிருக்கும் 'ராமாயணா' படத்தின் பாடல்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும் இப்படத்திற்கு இசையமைப்பது தொடர்பான கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். கடந்த ஆண்டு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த 'சாவா' படம் வெளியானது. இந்தப் படம் உண்மைகளைத் திரித்துக் கூறுவதாகவும் பிரிவினைவாதமாகவும் இருப்பதாகப் பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். படம் வெளியான நேரத்தில் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் வன்முறை வெடித்தது. "மூன்று சூப்பர் ஸ்டார்களும் சிறுபான்மையினரே" பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தனக்கும் வேலை கிடைப்பதில்லை என்று ஷான் கூறினார். பாடகர் ஷான் திரைத்துறை மற்றும் இசைத் துறையில் எந்தவொரு 'மதவாத அல்லது சிறுபான்மையினர் கோணம் இருப்பதை மறுத்துள்ளார். ஐ.ஏ.என்.எஸ்-உடனான உரையாடலில் ஷான் கூறுகையில், "வேலை கிடைக்காததைப் பொறுத்தவரை, நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். நான் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவோ பாடியிருக்கிறேன், ஆனாலும் எனக்கும் வேலை கிடைப்பதில்லை. இசையில் எந்தவொரு மதவாத அல்லது சிறுபான்மையினர் கோணம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி ஒரு விஷயம் இருந்திருந்தால், கடந்த முப்பது ஆண்டுகளாக இருக்கும் நமது மூன்று சூப்பர் ஸ்டார்களும் சிறுபான்மையினரே, ஆனால் அவர்களின் ரசிகர்கள் யாருக்கும் குறைவா என்ன? அவர்கள் அதிகரித்துக்கொண்டேதான் போகிறார்கள்," என்றார். அனைவரும் நல்ல வேலைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் இந்த விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்றும் ஷான் கூறினார். அவர் ஏ.ஆர். ரஹ்மானின் பணியைப் பாராட்டவும் செய்தார். ஏ.ஆர். ரஹ்மான் அற்புதமான இசையமைப்பாளர் என்றும், அவருடைய பாணி தனித்துவமானது என்றும் அவர் கூறினார். அரசியல் வட்டாரங்களின் எதிர்வினை பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ஏ.ஆர். ரஹ்மானின் அறிக்கையைத் துரதிர்ஷ்டவசமானது என்று சிவசேனா தலைவர் ஷைனா என்.சி. கூறினார். ஏ.ஆர். ரஹ்மானின் கருத்துக்குப் பிறகு அரசியல் வட்டாரங்களிலிருந்தும் எதிர்வினைகள் வரத் தொடங்கியுள்ளன. சிவசேனா (ஷிண்டே) தலைவர் ஷைனா என்.சி. கூறுகையில், "ஏ.ஆர். ரஹ்மான் திரைத்துறை மதவாதமாக இருப்பதாகப் பேசுவது துரதிர்ஷ்டவசமானது என்று நான் நினைக்கிறேன். அவருக்கு எல்லாவிதமான வாய்ப்புகளும் கிடைத்துள்ளன, இந்தியாவின் அழகே வேற்றுமையில் ஒற்றுமைதான்," என்றார். "ஏதேனும் ஒரு வழி மூடப்பட்டிருந்தால், தகுதியால் எல்லாத் தடைகளையும் நீக்க முடியும் என்பதையும், உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது உங்கள் திறமையைக் காட்ட வேண்டும் என்பதையும் நாம் நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் சமமான முன்னுரிமை அளிக்கப்படுவதுதான் நமது நாட்டின் பெருமை." அதே சமயம் பஜன் பாடகர் அனூப் ஜலோட்டா கூறுகையில், "அப்படி எதுவுமில்லை. உண்மை என்னவென்றால் அவர் ஐந்து ஆண்டுகளில் இருபத்தைந்து ஆண்டுகால வேலையைச் செய்து முடித்துவிட்டார். இப்போது என்ன செய்வது. அவர் நிறைய வேலை செய்துள்ளார், அதுவும் மிகச் சிறந்த வேலைகளைச் செய்துள்ளார். மக்கள் மனதில் அவருக்கு மிகுந்த மரியாதை உள்ளது," என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly3lywrd49o
-
ஜனாதிபதி நிதியத்தில் கடும் நிதி முறைகேடுகள் : அனுமதியில்லா முதலீடுகள், அரசியல்வாதிகளுக்கு கோடி கணக்கில் நிதி வழங்கல் – கணக்காய்வாளர் திணைக்களம் அறிக்கை
ஜனாதிபதி நிதியத்தில் கடும் நிதி முறைகேடுகள் : அனுமதியில்லா முதலீடுகள், அரசியல்வாதிகளுக்கு கோடி கணக்கில் நிதி வழங்கல் – கணக்காய்வாளர் திணைக்களம் அறிக்கை 19 Jan, 2026 | 11:59 AM (இராஜதுரை ஹஷான்) 2005 முதல் 2024 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் எவ்விதமான பரிசீலனைகளுமில்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளடங்களாக 56 பேருக்கு மருத்துவ உதவி என்ற அடிப்படையில் 131,371,110 ரூபா வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 2024 ஆம் ஆண்டு இறுதி காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபையின் அனுமதியில்லாமல் நிலையான மற்றும் குறுகிய கால முதலீடு என்ற அடிப்படையில் 944.7 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் நிதி முறைகேடுகள் தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்கள அறிக்கையில் பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஏதேனும் நிதியை ஜனாதிபதியால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைவாகவே முதலீடு செய்ய முடியும். எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 31 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நிர்வாக சபையின் அனுமதியில்லாமல் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய நிலையான மற்றும் குறுகிய கால முதலீடு என்ற அடிப்படையில் 944.7 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. முகாமைத்துவ கணக்காய்வில் 2024 ஆம் ஆண்டு நிர்வாக சபை ஒரு தடவை மாத்திரமே கூடியுள்ளது. அதாவது 2024.08.15 ஆம் திகதி நிர்வாக சபை கூடியுள்ளது.எவ்வாறாயினும் இந்த வைப்புகளுக்குரிய அனுமதி 2025.01.28 ஆம் திகதியன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் 2005 முதல் 2024 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் எவ்விதமான பரிசீலனைகளுமில்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பான விடயங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளடங்களாக 56 பேருக்கு மருத்துவ உதவி என்ற அடிப்படையில் 131,371,110 ரூபா வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ உதவிக்கான கொடுப்பனவை வழங்கும் முறை பரிசீலிக்கப்படும் முறையான விண்ணப்பம், மாத வருமானம், பிரதேச செயலாளரின் அறிக்கை, சொத்துக்கள், உயர்ந்தபட்ச மருத்துவ உதவித் தொகை வரையறை உள்ளிட்ட விடயங்கள் பரிசீலிக்கப்படாமல் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிதியத்தின் சட்டத்தின் பிரகாரம் நிதியை கடனாக வழங்கும் சட்ட ஏற்பாடுகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.இவ்வாறான பின்னணியில் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிதியத்தின் ஊடாக முன்னாள் பிரதமருக்கு 29,809,143 ரூபா வழங்கப்பட்டுள்ளது. கணக்காய்வுக்குட்படுத்தப்பட்ட விடயங்களுக்கமைய அந்த தொகையில் 13,748,217 ரூபா மீள அறவிடப்படும் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் 2025 ஜுலை மாதம் வரை அந்த தொகை மீள அறவிடப்படவில்லை என்று கணக்காய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி நிதியத்தின் பணிக்குழாமினருக்கான சம்பளம் மற்றும் ஏனைய செலவுகள் நிதியத்தின் ஊடாகவே நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று சட்டத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்குரிய 51,128,078 ரூபா செலவை ஜனாதிபதி செயலகவே ஏற்றுக்கொண்டுள்ளது. அதற்கமைய மீளாய்வு ஆண்டின் இறுதி பகுதிக்குரிய விதிமுறைகள் ஜனாதிபதி நிதிய சபையினால் தயாரிக்கப்படவில்லை.அதன் காரணமாக அதிகாரங்கள் பகிர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் இல்லாமல் செயற்படுத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/236409
-
இரானின் இந்த பலம்தான் அமெரிக்கா தாக்காமல் பின்வாங்க காரணமா?
இரானின் இந்த பலம்தான் அமெரிக்கா தாக்காமல் பின்வாங்க காரணமா? படக்குறிப்பு,இரான் போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு டொனால்ட் டிரம்பைக் குற்றம் சாட்டினார் ஆயதுல்லா அலி காமனெயி கட்டுரை தகவல் ரௌனக் பைரா பிபிசி செய்தியாளர் 19 ஜனவரி 2026, 07:58 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவது போலத் தெரிந்தது. அமெரிக்கா இரான் தொடர்பாக ஒரு எச்சரிக்கையை வெளியிட்டபோது இந்த அச்சம் மேலும் அதிகரித்தது. மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க விமானப்படைத் தளமான அல்-உதெய்த் தளத்திலிருந்து தனது சில படைகளைத் திரும்பப் பெற கத்தார் உத்தரவிட்டது. இரான் போராட்டக்காரர்களைத் தூக்கிலிட்டால், அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும் என்று டிரம்ப் கூறியிருந்தார், இருப்பினும் வியாழக்கிழமை மாலைக்குள் மரணதண்டனைகள் ஒத்திவைக்கப்பட்டதாக இரானிலிருந்து செய்திகள் வந்தன. அதன் பிறகு டிரம்ப், "இரானில் கொலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனையை நிறைவேற்றும் திட்டங்கள் எதுவும் இல்லை," என்று கூறினார். வியாழக்கிழமை மாலைக்குள், மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்து வருவது தெளிவாகத் தெரிந்தது. புதன்கிழமை எச்சரிக்கையுடன் இருந்த கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளத்தின் பாதுகாப்பு எச்சரிக்கை அளவை அமெரிக்கா குறைத்தது. புதன்கிழமை இந்தத் தளத்திலிருந்து அகற்றப்பட்ட அமெரிக்க ராணுவ விமானங்கள் இப்போது மெதுவாகத் திரும்பி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஒரு நம்பகமாக செய்தி ஆதாரத்தை மேற்கோள் காட்டித் தெரிவித்தது. ஆனால் 'தி டெலிகிராப்' ஆங்கில நாளிதழில் வெளியான ஒரு செய்தி அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் அமெரிக்க ராணுவம் தாக்குதலுக்குத் தயாராக இல்லை என்று கூறப்பட்டிருந்தது. "குறைந்த அளவிலான வாய்ப்புகள் மற்றும் திறன்கள் காரணமாக இரான் மீது தாக்குதல் நடத்த அந்நாட்டு ராணுவம் தயாராக இல்லை என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு ரகசியமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது"என்று பிரிட்டிஷ் நாளிதழான தி டெலிகிராப்பை மேற்கோள் காட்டி பிபிசி பாரசீக சேவை தெரிவித்துள்ளது. அந்த செய்தியின் படி, "ஆட்சிக்கு எதிராக ஒரு தீர்க்கமான தாக்குதலுக்கு உத்தரவாதம் அளிக்க முடிந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்குமாறு டிரம்ப் தனது தேசிய பாதுகாப்பு குழுவுக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது." ஆனால் அத்தகைய உத்தரவாதங்களை வழங்க முடியாது என்று அதிகாரிகள் என்.பி.சி நியூஸிடம் தெரிவித்தனர். ராணுவ நடவடிக்கை எடுத்தால் அது பல வாரங்கள் நீடிக்கக்கூடிய ஒரு பெரிய மோதலைத் தூண்டும் என்றும், இரானிடமிருந்து கடுமையான பதிலடிக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். தாக்குதல் நடத்தப்படுமா இல்லையா என்ற குழப்பத்திற்கு மத்தியில், ஜனவரி 11-ஆம் தேதி வெளியான 'டைம் மேகசின்' செய்தியிலும் இது போன்ற அறிகுறிகள் வழங்கப்பட்டன. அலங்கார வார்த்தைகளைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால், டிரம்ப் கொடுத்த வாக்குறுதிகளை எந்த ஒரு ராணுவ நடவடிக்கையாலும் நிறைவேற்ற முடியாது என்பதே யதார்த்தமான உண்மை என்று அந்த செய்தி கூறுகிறது. அமெரிக்கா ஒரு அடையாளப்பூர்வமான தாக்குதலைத் தொடுத்தாலும், அது மிகவும் பலவீனமானதாக இருக்கும் என்பதால் அதற்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது. தற்போதைக்கு இந்த நெருக்கடி தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றாலும், இரானின் நிலவியல் அமைப்பும் அதன் மீதான எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் ஒரு 'தடுப்பாக' அமைகிறது என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். இது தவிர, இரான் கடந்த சில மாதங்களில் தனது பாதுகாப்பு அமைப்பிலும் தீவிர மாற்றங்களைச் செய்துள்ளது. இரான் எவ்வளவு வலிமையானது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜூன் மாதத் தாக்குதலுக்குப் பிறகு தனது ராணுவ பலத்தை கணிசமாக வலுப்படுத்தியுள்ளதாக இரான் கூறுகிறது (கோப்புப் படம்) இரானிய ராணுவத்தின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமி, கடந்த கால மோதல்களுக்குப் பிறகு இரான் எந்த அளவுக்குத் தன்னை பலப்படுத்திக் கொண்டுள்ளது என்பதை பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். "2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற 12 நாள் போரின் போது இருந்ததை விட, இன்று இரானிய ஆயுதப் படைகள் மிகவும் தயாராக உள்ளன. அந்தப் போர் இரானிய ராணுவத்திற்கு ஒரு தனித்துவமான அனுபவமாக அமைந்தது. அது எங்களின் வலிமையை அதிகரித்ததுடன், வீரர்களின் பயிற்சி அளவை மேம்படுத்தியது மற்றும் பல்வேறு பிரிவுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தியது"என்று அமீர் ஹடாமி கூறியதாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டிஏஏஎஸ் (TASS) தெரிவித்துள்ளது. "சாத்தியமான எந்தவொரு தாக்குதலையும் தடுத்து நிறுத்தவும், இரானின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்கவும் இரான் தனது ஆயுதப் படைகளின் திறன்களை வலுப்படுத்தியுள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான நிபுணரும், ஐசிடபுள்யூஏவின் மூத்த ஆய்வாளருமான முனைவர் ஃபஸ்ஸூர் ரஹ்மான் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "இரானின் நிலவியல் அமைப்பு எப்போதும் அதற்கு சாதகமாகவே இருந்து வருகிறது என்பது உண்மைதான். கடந்த காலங்களிலும், இந்த அமைப்பினால் இரான் உத்தி ரீதியாகப் பயனடைந்துள்ளது"என்றார். தொடர்ந்து பேசிய அவர், "இருப்பினும், நவீன கால போர்களில் தரைவழித் தாக்குதலுக்கான வாய்ப்பு குறைவு. அமெரிக்காவிடம் பி-2 ரக குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் வான்வழியே தாக்குதல்களை நடத்தக்கூடிய பல ஆபத்தான ஏவுகணைகள் உள்ளன. ஆனால், ஒரு தரைவழித் தாக்குதலைத் திட்டமிடும் போது இரானின் நிலவியல் அமைப்பை நிச்சயமாகப் புறக்கணிக்க முடியாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது"என்றும் குறிப்பிட்டார். இரானை தாக்குவது ஏன் கடினம்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த ஆண்டு டிரம்ப் கத்தாரின் அல்-உதெய்த் விமானப்படைத் தளத்திற்குப் பயணம் செய்தார் (கோப்பு புகைப்படம்) "வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை 'சிறைபிடித்த' பிறகு, இரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து டிரம்ப் உற்சாகமாகப் பேசினார்" என்று ஆங்கில செய்தித்தாளான தி கார்டியன் தெரிவித்துள்ளது. "ஆனால் அமெரிக்கா உண்மையில் ராணுவ ரீதியாக எந்தத் தயாரிப்புகளையும் செய்யவில்லை. சொல்லப்போனால், இரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த அமெரிக்கப் படைகள் கடந்த சில மாதங்களில் குறைக்கப்பட்டன, இது அவர்களின் வாய்ப்புகளைக் குறைக்கிறது. 2025 அக்டோபருக்குப் பிறகு மத்திய கிழக்கில் அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல்கள் எதுவும் நிறுத்தப்படவில்லை." இதன் பொருள், இரானிய அரசாங்க இலக்குகளையோ அல்லது இரானின் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மீதோ அமெரிக்காவால் தனித்துத் தாக்குதல் நடத்த முடியாது என்பதாகும். இதைச் செய்ய அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளின் விமானப்படைத் தளங்களைப் பயன்படுத்த வேண்டும், ஆனால் அவ்வாறு செய்வதற்கு எதிராக இரான் ஏற்கனவே அந்த நாடுகளை எச்சரித்துள்ளது. அமெரிக்காவிடம் பி-2 ரக குண்டுவீச்சு விமானம் என்ற மற்றொரு வழி உள்ளது, இதனை அமெரிக்கா 2025 ஜூன் மாதம் பயன்படுத்தியது. அதுவும் இரானின் அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று இரான் கூறுகிறது. முனைவர் ஃபஸ்ஸூர் ரஹ்மான் இதுகுறித்து கூறுகையில், "அமெரிக்கா அக்டோபர் மாதத்தில் தனது விமானம் தாங்கி கப்பல்களைத் திரும்பப் பெற்றது, இரானுக்கு சற்று நிம்மதி அளித்தது. ஆனால் இப்போது அமெரிக்கா மீண்டும் தனது விமானம் தாங்கி கப்பல்களை மத்திய கிழக்கு நோக்கி அனுப்புகிறது. இவை தாக்குதலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று சொல்ல முடியாது. இரானின் அண்டை நாடுகளில் தனக்குள்ள ராணுவ தளங்களையும் அமெரிக்கா பயன்படுத்த வாய்ப்புள்ளது"என்றார். இரானின் நிலவியல் இருப்பிடம் அமெரிக்காவுக்கு முன்வைக்கும் சவால் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1980களில், நீண்ட போர் நடந்த போதிலும் இராக்கிய ராணுவத்தால் இரானை தோற்கடிக்க முடியவில்லை (கோப்பு புகைப்படம்) இரானின் நிலவியல் அமைப்பு அதன் மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது. 'அட்லஸ் ஆஃப் வார்' இதழின் படி, இரான் நாட்டைச் சுற்றி இயற்கையாகவே அமைந்துள்ள வலுவான அரண்கள் எதிரிகளுக்குப் பெரும் தடையாக இருக்கின்றன. இரான் இயற்கையிலேயே ஒரு பாதுகாப்பான அமைப்புகளால் சூழப்பட்டுள்ளது. வடக்கே காஸ்பியன் கடல், தெற்கே பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா ஆகியவையும், கிழக்கு மற்றும் மேற்கே பாலைவனங்களும் மலைகளும் சூழ்ந்துள்ளன. மேற்குப் பகுதியில் சாக்ரோஸ் மலைத்தொடரும், வடக்குப் பகுதியில் எல்பர்ஸ் மலைத்தொடரும் அமைந்துள்ளன. இவை எந்தவொரு எதிரி ராணுவத்திற்கும் பெரும் சவாலாக அமைகின்றன. வரலாற்று ரீதியாக, இந்த மலைத்தொடர்கள் படையெடுக்கும் ராணுவங்களை பலமுறை தடுத்து நிறுத்தியுள்ளன. 1980-களில் இரான் மற்றும் இராக் போர் நடைபெற்றது. 1980-இல் சதாம் உசேனின் படைகள் இரான் மீது படையெடுத்தன. இருப்பினும், சாக்ரோஸ் மலைத்தொடரின் கடினமான நிலப்பரப்பு காரணமாக, இராக் ராணுவத்தால் இரானுக்குள் அதிக தூரம் செல்ல முடியவில்லை. முதலில் அஹ்வாஸ் (ஒரு முக்கியமான எண்ணெய் பகுதி) பகுதியைக் கைப்பற்றி, பின்னர் மலைகளைக் கடந்து இரானின் உட்பகுதிக்குள் நுழைய வேண்டும் என்பதே சதாம் உசேனின் திட்டமாக இருந்தது. ஆனால் அந்தத் திட்டம் முற்றிலும் தோல்வியடைந்தது. இயற்கை ஒரு வலிமையான அரணாக இருந்தது. அந்தப் போர் எட்டு ஆண்டுகள் வரை நீடித்தது. இறுதியில், யாருக்கும் வெற்றி கிடைக்காமல் போர் முடிவுக்கு வந்தது. அதேபோல், யாராவது கிழக்கிலிருந்து இரானைத் தாக்க விரும்பினால், அவர்கள் 'தஷ்ட்-இ-லுட்' மற்றும் 'தஷ்ட்-இ-கவீர்' போன்ற பரந்த பாலைவனங்களைக் கடக்க வேண்டும். இவை ஒரு பெரிய ராணுவ நடவடிக்கைக்குப் பெரும் சிக்கல்களை உருவாக்கும். பாரசீக வளைகுடாவில் உள்ள 'ஹோர்முஸ் நீரிணை' மிகவும் குறுகியதாக இருந்தாலும், இரான் அதன் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. இது உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடமாகும். உலகின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% இந்த குறுகிய நீரிணை வழியாகவே செல்கிறது. எனவே, எந்தவொரு பெரிய மோதலிலும் இது இரானுக்கு ஒரு முக்கியமான ஆயுதமாகத் திகழ்கிறது. ஹோர்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், இரானால் உலகின் எண்ணெய் விநியோகத்தை முடக்க முடியும். இந்த அச்சத்தின் காரணமாகவே இரானைத் தாக்கும் முன் அதன் எதிரிகள் பலமுறை தயங்குகிறார்கள். அமெரிக்கா - இரான் ராணுவ பலம் ஓர் ஒப்பீடு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மத்திய கிழக்கில் மிகப்பெரிய ஏவுகணை ஆயுதக் கிடங்கை இரான் கொண்டுள்ளது (கோப்புப் படம்) 'குளோபல் ஃபயர்பவர்' அமைப்பின் தரவுகளின்படி, உலகின் முதல் 20 ராணுவ வலிமை கொண்ட நாடுகளில் இரானும் ஒன்று. 145 நாடுகளில் இரான் 16-வது இடத்தில் உள்ளது. இரானிடம் 6,10,000 வீரர்களும், 3,50,000 ரிசர்வ் படை வீரர்களும் உள்ளனர். மொத்தமாக சுமார் 9,60,000 வீரர்கள் உள்ளனர். இரானின் புரட்சிகர காவல்படை (IRGC) என்பது வழக்கத்திற்கு மாறான போர்க்கலைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தனிப் பிரிவாகும். இரானிடம் 551 போர் விமானங்களும் உள்ளன. டிரோன் தொழில்நுட்பத்தில் இரான் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. கடற்படை பலத்தைப் பொறுத்தவரை, இரான் நீர்மூழ்கிக் கப்பல்களும் போர்க் கப்பல்களும் உள்ளன. 'இரான் வாட்ச்' அறிக்கையின்படி, மத்திய கிழக்கிலேயே இரானின் ஏவுகணை கையிருப்பு தான் மிகப்பெரியது. 2022-ஆம் ஆண்டில் அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் ஜெனரல் கென்னத் மெக்கென்சி கூறுகையில், "இரானிடம் 3,000-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன. இதில் குரூயிஸ் ஏவுகணைகளின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை" என்றார். ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவன தரவுகளின்படி, 2024-இல் இரானின் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் 7.9 பில்லியன் டாலர் ஆகும். இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.0% ஆகும். 2023 ஆம் ஆண்டில் இரானின் இராணுவச் செலவு தோராயமாக 10.3 பில்லியன் டாலராக இருந்தது. ராணுவச் செலவினங்களில் இரான் உலகில் 34வது இடத்தில் உள்ளது. இரான் 2025 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை என்றாலும் அதன் பாதுகாப்பு பட்ஜெட்டை 200% அதிகரித்து, அதை 16.7 பில்லியன் டாலராக உயர்த்த திட்டமிட்டிருந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்கா உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாகும், மேலும் அதன் பாதுகாப்புச் செலவும் மிகவும் அதிகம். (குறியீட்டு படம்) அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே ராணுவ வலிமையில் குறிப்பிடத்தக்க இடைவெளி இருக்கிறது. அமெரிக்கா உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக திகழ்கிறது. குளோபல் ஃபயர்பவர் குறியீட்டில் அது முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிடம் 13.28 லட்சம் வீரர்களும், 799,000 ரிசர்வ் வீரர்களும் உள்ளனர். மொத்த வீரர்களின் எண்ணிக்கை தோராயமாக 21 லட்சமாகக் கருதப்படுகின்றது. 2005 முதல், உலகளாவிய ஃபயர்பவர் குறியீட்டில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதேபோல் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவரிசையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட் 997 பில்லியன் டாலர் என்றும் அது மதிப்பிடுகிறது. இது அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4% ஆகும். உலகளாவிய ராணுவ செலவினங்களில் அமெரிக்காவின் பங்கு 37% ஆகும். இரான் மற்றும் அமெரிக்காவின் ராணுவ பலத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தாலும், இரானைத் தாக்குவது அவ்வளவு எளிதானது அல்ல என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். "இரானைத் தாக்காததற்கு ஒரு காரணம், இரானின் எதிரிகள் இரானை கண்டு பயப்படுகிறார்கள் என்பதல்ல. இரானுக்கு எதிரான எந்தவொரு போரும் மிகவும் கடுமையான போராக இருக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதுதான்" என்று கடற்படை முதுகலை பள்ளியின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான இணைப் பேராசிரியர் அஃப்ஷோன் ஓஸ்டோவர் 2024 இல் கூறினார். "அமெரிக்காவை எதிர்த்துப் போராட இரானிடம் உள்ள சிறந்த ஆயுதங்கள் ஏவுகணைகளும் டிரோன்களும் தான். இரானின் போர் விமானங்கள் நீண்ட காலமாகவே செயல்படவில்லை. அதன் கடற்படை சக்தியும் சராசரியாகவே உள்ளது" என்று பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி குறிப்பிடுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு இரான் பதிலடி கொடுத்தால், அது ஏவுகணைகளைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. மறுபுறம், அமெரிக்கா கணிசமான ராணுவ சக்தியைக் கொண்டுள்ளது மற்றும் இஸ்ரேலின் ஆதரவையும் கொண்டுள்ளது. இஸ்ரேல் மத்திய கிழக்குப் பகுதியைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறது. அமெரிக்காவிற்கு எல்லா வகையிலும் இஸ்ரேலால் உதவ முடியும்" என்றும் விவரித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd0y47dmgxzo
-
மஹவ - ஓமந்தை புகையிரத பாதை இன்று (19) முதல் தற்காலிகமாக மூடப்படும் - புகையிரத திணைக்களம்
மஹவ - ஓமந்தை புகையிரத பாதை இன்று (19) முதல் தற்காலிகமாக மூடப்படும் - புகையிரத திணைக்களம் Published By: Digital Desk 1 19 Jan, 2026 | 12:09 PM (இராஜதுரை ஹஷான்) புனரமைப்புப் பணிகளுக்காக வடக்கு புகையிரத மார்க்கத்தின் பல இடங்களை தற்காலிகமாக இன்று திங்கட்கிழமை (19) முதல் மூடப்படவுள்ளது. மஹவ - அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை தற்காலிகமாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மஹவ - ஓமந்தை வரையிலான புகையிரத பாதை முற்றாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதவாச்சி - தலைமன்னார் புகையிரத பாதையின் அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படும். மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து புகையிரத பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை புனரமைக்கும் பணிகளை இவற்றுக்கு இணையாக முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் புகையிரத பாதை புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்து, வடக்கு - தெற்கு போக்குவரத்தை வழமை போன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாளை முதல் 'புலதிசி கடுகதி புகையிரதம்' மற்றும் 'உதயதேவி' புகையிரத சேவையில் ஈடுபடவுள்ளதுடன், திருகோணமலை வரையான 'இரவு தபால் புகையிரத' சேவையை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று முதல் அநுராதபுரம் - காங்கேசன்துறை வரையும், எதிர்வரும், 27 ஆம் திகதி முதல் ஓமந்தை - காங்கேசன்துறை வரையும் 'யாழ் ராணி' புகையிரத சேவையில் ஈடுபடவுள்ளது. https://www.virakesari.lk/article/236399
-
தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதை நிறைவேற்றாதது ஏன்? - அருட்தந்தை மா.சத்திவேல்
இன்னொன்று கவனித்தீர்களா இவர் கொழும்பிலோ சிங்கல இடங்களிலோ வாங்கிங் போனதாக ஒரு காணொளி வந்தது இல்லை யாரும் அனுப்பியதும் இல்லை அல்லது சிங்கள மக்கள் அவர் வாங்கிங் போனாலும் அதை கணக்கில் எடுப்பதில்லை. நீங்களும் நிறைய வாங்கிங் போவதாக சொன்னீர்கள் 😂
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
"Rebuilding Sri Lanka" திட்டத்திற்கு நன்கொடை அளிக்க எளிய வழி! Jan 19, 2026 - 02:16 PM ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் "Rebuilding Sri Lanka" தேசிய வேலைத்திட்டத்திற்கான உத்தியோகபூர்வ இணையதளம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. நாடு எதிர்கொண்ட அனர்த்தத்திற்கு பின்னர், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக பொதுமக்கள், தனியார் துறை மற்றும் சர்வதேச சமூகம் ஆகியோரை ஒரே தளத்திற்கு கொண்டு வருவதும், ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நம்பிக்கையான செயன்முறையை உருவாக்குவதும் இந்த வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். கடந்த 13ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின்லோட்டஸ் மண்டபத்தில் நடைபெற்ற ஆரம்ப விழாவின் போது www.rebuildingsrilanka.gov.lk என்ற இணையதளம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் நிதி ரீதியாக மட்டுமன்றி பொருட்கள், நிலம் மற்றும் ஏனைய வளங்களையும் இந்த இணையதளத்தின் ஊடாக வழங்க முடியும். நன்கொடையாளர்கள் தாங்கள் வழங்கும் பங்களிப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை வெளிப்படையான முறையில் கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு கிடைக்கும் நிதி நன்கொடைகள் குறித்த தகவல்கள் அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும். அத்துடன் மாவட்ட ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகள், குறிப்பிட்ட நிதியுதவியின் மூலம் முன்னெடுக்கப்படும் மீளக் கட்டியெழுப்பும் திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை பொதுமக்கள் இந்த இணையதளத்தின் வாயிலாக உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தத் தளம், சமூக நீதி மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் உட்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, www.rebuildingsrilanka.gov.lk இணையதளமானது இந்தத் தேசிய வேலைத்திட்டத்தின் நம்பகமான தகவல் மையமாகச் செயற்படும். https://adaderanatamil.lk/news/cmkkx8ou4044jo29niof7y7uf
-
சீனாவில் 4 ஆவது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் வீழ்ச்சி
சீனாவில் 4 ஆவது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் வீழ்ச்சி Published By: Digital Desk 3 19 Jan, 2026 | 03:48 PM சீனாவில் 4-வது ஆண்டாக 2025-ம் ஆண்டிலும் இந்த பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, சீன தேசிய புள்ளியியல் அதிகாரசபை வெளியிட்ட தகவலை அடிப்படையாக கொண்டு இன்று வெளியான செய்தியில், 2025-ம் ஆண்டில் சீனாவில் 1,000 பேருக்கு 5.63 என்ற அளவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவடைந்து உள்ளது. 2023-ம் ஆண்டில் இது 1,000 பேருக்கு 6.39 குழந்தை பிறப்புகள் என்ற அளவில் இருந்தது என தெரிவிக்கின்றது. எனினும், 2024-ம் ஆண்டில் பிறப்பு விகிதம் சற்று அதிகரித்து இருந்தது. ஆனால், இது நிலைமையில் இருந்து மீண்டதற்கான பொருள் இல்லை. ஏனெனில், 2016-ம் ஆண்டில் இருந்தே தொடர்ச்சியாக அந்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவடைந்து வந்துள்ளது. சீன மக்கள் தொகை கடந்த ஆண்டிலும் குறைந்துள்ளது. 2025-ம் ஆண்டில் 79.2 இலட்சம் குழந்தைகள் பிறந்தன. 1.131 கோடி இறப்புகள் பதிவாகி இருந்தன. இதனால், 33.9 இலட்சம் பேர் மக்கள் தொகையில் குறைந்துள்ளனர். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என முதல் இடத்தில் இந்தியா உள்ளது. சீனா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த நிலைமையில் சீனா உள்ளது. எனினும், 2025-ம் ஆண்டில் சீன பொருளாதாரம் வருடாந்திர இலக்கான 5 சதவீத வளர்ச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்கள், உள்நாட்டில் குறைவான நுகர்வு என்ற சூழலிலும், ஏற்றுமதியால் சீனா இந்த ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பதற்காக பல்வேறு சலுகை அறிவிப்புகளையும் அரசு வெளியிட்டது. இதன்படி, 3 வயதுக்கு குறைவான ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு தலா ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என கடந்த ஆண்டு மத்தியில் தெரிவித்தது. கடந்த 2024-ம் ஆண்டில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கு காதல் கல்வி பற்றி கற்பிக்க அறிவுறுத்தப்பட்டது. திருமணம், காதல், குடும்பம் மற்றும் குழந்தை பிறப்பு பற்றி நேர்மறையான விசயங்களை கற்று தரும்படியும் அறிவுறுத்தி இருந்தது. இதுதவிர, திருமணம் செய்து கொள்ளுங்கள். கையில் பணம் பெற்று கொள்ளுங்கள் என ஊக்க தொகைகளையும் அறிவித்தது. எனினும், அரசின் பல்வேறு திட்டங்களும் பெரிய அளவில் பலன் பெற்று தரவில்லை. https://www.virakesari.lk/article/236433
- Today
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை பரராஜசிங்கம் ஐயாவின் மலசலகூடம் பூரணப்படுத்த அரைகுறையாக இருப்பது அவசரம் என்பதால் முன்னுரிமை அளித்தோம். அதேபோல பொன்னாலை ஏரம்பு ஐயாவின் 3 பிள்ளைகளுக்கான மலசலகூடப் புனரமைப்பும் அவசரம் என்றபடியால் செய்கிறோம். இவர்கள் இருவரதும் குடும்பநிலை கருதியே இவ்வுதவி செய்யப்படுகிறது. அடுத்ததாக புதிதாக மலசலகூடம் கட்டிக் கொடுக்கலாம் அண்ணை.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஓம் அண்ணா. பொன்னாலை ஏரம்பு ஐயாவின் பிள்ளைகளின் மலசலகூட பிளேற் வெடித்துள்ளதாலும் தண்ணீர் கொள்கலன் வைத்துள்ள பிளாற் வெடித்துள்ளபடியாலும் பாதுகாப்பிற்காக தண்ணீர் கொள்கலனை தனியாக வைத்து தரும்படி கேட்கிறார்கள். பாகிஸ்தான் பைப்பில் தாங்கி செய்ய கூட காசு கேட்கிறார்கள். + வடிவில் 10 / 12 அடிக்கு கொங்கிறீற் கல் அடுக்கி மேலே பிளாற் வைத்து தண்ணீர் கொள்கலனை வைப்பதற்கு தொழிநுட்ப உத்தியோகத்தர் கூறினார். செலவு விபரம் அறிந்து சொல்கிறேன். இன்று காலை கொமட், பூட்டுவதற்கான சில பொருட்கள், கொண்டுவரும் கூலி எல்லாம் சேர்த்து 44500 ரூபா வங்கியில் இருந்து செலுத்திவிட்டேன். இருப்பு 300395.67-44525=ரூ 255,870.67 சதம் இன்று 19/01/2026 44525 ரூபா வைப்புச் செய்த பின் வங்கி மீதி. 25 ரூபா சம்பத் வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள். தற்போதைய வங்கி மீதி.
-
கருத்து படங்கள்
- யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது. அதன் போது கண்டியை சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர் , புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதிவுகளை மேற்கொண்டு , விடுதியில் தங்கியிருந்து , மருத்துவபீட விரிவுரை மண்டபத்திற்கு விரிவுரைகளுக்கு கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கற்கை செயற்பாட்டின் போது மாணவர்களை குழுக்களாக பிரித்துள்ளனர். அதன் போதே , 202 மாணவர்கள் காணப்பட வேண்டிய நிலையில் , 203 மாணவர்கள் காணப்பட்டமையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து , அது தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட போதே பல்கலைக்கழக அனுமதி பெறாத யுவதி ஒருவரும் மாணவிகளுடன் இணைந்து கடந்த 2 மாத காலமாக விரிவுரைகளில் கலந்து கொண்டமை தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் மருத்துவபீடத்தினர் தெரிவிக்கையில், மாணவிகள் மத்தியில் உயிரியல் பாடத்தில் 3 சாதாரண (S) சித்திகளை பெற்ற கண்டியை சேர்ந்த யுவதியும் மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து , விரிவுரைகளுக்கு வந்து சென்றுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது https://athavannews.com/2026/1460463- வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? அனுர மீட்டர் அப்டேட்!
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? அனுர மீட்டர் அப்டேட்! கொள்கை உறுதிமொழி கண்காணிப்பு முயற்சியான வெரிட்டே ரிசர்ச்சின் “அனுர மீட்டர்” இன் அண்மைய புதுப்பிப்பானது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் கலவையான முன்னேற்றத்தைக் காட்டுகிறது. புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டின்படி, 2025 நவம்பர் நிலவரப்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 30 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் 10 வாக்குறுதிகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. அதே நேரத்தில் ஒன்பது வாக்குறுதிகளில் எந்த முன்னேற்றமும் பதிவு செய்யப்படவில்லை. ஒரு வாக்குறுதி தோல்வியுற்றதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. “அனுர மீட்டர்”, ஜனாதிபதியின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் இருந்து பெறப்பட்ட 30 முக்கிய உறுதிமொழிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கிறது. இந்த மதிப்பீட்டில் 2026 தேசிய பட்ஜெட் வரையிலான முன்னேற்றங்கள் அடங்கும். டித்வா சூறாவளியின் தாக்கத்திற்கு முன்பே இந்தப் பகுப்பாய்வு முடிக்கப்பட்டது. கண்காணிக்கப்பட்ட வாக்குறுதிகள், அவற்றின் உயர் மட்ட பொது நலன் மற்றும் தேசிய முக்கியத்துவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அவை பொருளாதார சீர்திருத்தம், நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு முயற்சிகள், சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய கொள்கைப் பகுதிகளை உள்ளடக்கியது. தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சியை Manthri.lk பராமரிக்கிறது. முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை கண்காணித்த “மைத்ரி மீட்டர்” மற்றும் “கோட்டா மீட்டர்” போன்ற முந்தைய உறுதிமொழி கண்காணிப்பு திட்டங்களை அனுர மீட்டர் பின்பற்றுகிறது. தற்போது கண்காணிக்கப்படும் 30 வாக்குறுதிகளில், ஏழு வாக்குறுதிகள் பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. கண்காணிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நம்பும் மேலதிக வாக்குறுதிகளை பரிந்துரைக்குமாறு பொதுமக்களுக்கும் இந்த தளம் அழைப்பு விடுத்துள்ளது. Manthri.lk என்பது இலங்கையின் ஒரே நாடாளுமன்ற கண்காணிப்பு தளமாகும், மேலும் இது நாட்டின் மிகப்பெரிய சுயாதீன ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1460479- ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து. 21 பேர் உயிரிழப்பு.
ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து. 21 பேர் உயிரிழப்பு. தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாக அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் கோர்டோபா (Cordoba) நகருக்கு அருகிலுள்ள அடமுஸ் என்ற இடத்திற்கு அருகே நிகழ்ந்துள்ளது. அதிவேக ரயில் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகி, பக்கத்து தண்டவாளத்தில் மோதியதாக ஸ்பெயினின் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சமயத்தில் ஹுயெல்வா நோக்கி எதிர்த் திசையில் பயணித்த மற்றொரு ரயிலும் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது. குறித்த விபத்தில் சுமார் 73 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), நாடு பாரிய துக்கத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 300 க்கும் அதிகமான பயணிகள் அந்த ரயில்களில் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்தும் ஸ்பெயினின் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2026/1460418- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .- அறிமுகம்
வணக்கம் கல்யாணசுந்தரம். வருக. 🙏 உங்களை அன்புடன் வரவேற்பதில், மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். 🙂- அறிமுகம்
அனைவருக்கும் இனிய வணக்கம் , யாழ் அரிச்சுவடி பகுதியில் அறிமுகம் ஆகிறேன் . தமிழ்நாடு சென்னையிலிருந்து இனி பயனுள்ள கவிதைகளை படைப்பதில் மகிழ்கிறேன் .- அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
உண்மைதான். பைத்தியர், ஒத்தை ரோசா, பார்சிறி, 3xஅனுரகாவடிகள் என எம்மக்கள் தெரிவு அபாராம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாக்கு வங்கியை குறிவைத்துல்ளனர். பைத்தியர் - protest vote அனுரகாவடிகள் - அனுர சின்ன காவடிகள் +protest vote ஒத்தை ரோசா - இன்னும் தமிழீழ கனவில் இருக்கும் ஒத்தை ரோட்டு வாக்குவங்கி சிறி - இவர் கிட்டதட்ட தமிழ்நாட்டு பாணி. எந்த கொள்கையும் இவருக்கு வாக்கு போட காரணம் அல்ல. மாறாக கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் யாழ் எதிர்ப்புவாதம், ஊழல் கசிவு, அரசவேலை என தனக்கான இடத்தை தக்க வைக்கிறார். கட்சியில் ஏனையவை இவர் அளவுக்கு ஊழல் இல்லை எனிலும் - அவர்களின் சுத்து மாத்து வெளிச்ச அளவு இவருக்கு வெளிக்கவில்லை😂. ஆனால் ஒற்றுமைக்காக என்ன விலையும் கொடுக்க முடியுமா? சுமன், சிறி, கஜன், பைத்தியர்… இந்த தலைமுறையின் அத்தனை அழுக்குகளும் அரசியலில் இருந்து கழுவபடவேண்டியவர்கள். அப்போதுதான் ஒற்றுமை சாத்தியமாகும்.- மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா!
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா! பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்ட அமைச்சர், பிரதி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை! written by admin January 18, 2026 மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா – பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்ட அமைச்சர், பிரதி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா- 2026 இவ் வருடம் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் மூன்றலில் இன்றைய தினம் (18) ஞாயிற்றுக்கிழமை காலை நடை பெற்றது. வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழாவில் விருந்தினர்களாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் அழைக்கப் பட்டதோடு, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர்,கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இந்த நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9 மணியளவில் வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் சிறப்பாக ஆரம்பமானது. இதன் போது விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நா வேதநாயகன் கலந்து கொண்டு சிறப்பித்த தோடு அழைக்கப்பட்ட ஏனைய விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இதன் போது சம்பிரதாய பூர்வமாக புதிர் எடுக்கும் நிகழ்வுகள் திருக்கேதீஸ்வரம் மாளிகைத் திடலில் இடம்பெற்றது. தொடர்ந்து விருந்தினர்கள் சம்பிரதாய பூர்வமாக திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு ஆழைத்து வரப்படுவதுடன் அங்கு விசேட நிகழ்வு தொடர்ந்து இடம் பெற்றது. மேலும் பொங்கலைச் சிறப்பிக்கும் வகையில் மன்னார் மாவட்ட கலை மன்றங்களுக்கான ஆற்றுகை பொருட்களும், விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணப் பொருட்களும் வழங்கப்படமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/226770/- தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதை நிறைவேற்றாதது ஏன்? - அருட்தந்தை மா.சத்திவேல்
நண்பருடன்(இலங்கை) தொலைபேசியில் உரையாடினேன். நான்:- என்னப்பா அனுராவுடன் செல்பி எடுக்க போட்டியாமே? நண்பர்:-ஒம் ஓம் வயது வித்தியாசமில்லாமல் எல்லோரும் அடிபட்டு செல்பி எடுக்கினம். நான்:-சனம் செல்பி எடுக்க அனுரா காணிகளை எடுக்க போகிறாரே நண்பர்:- இப்ப சனம் அனரா வந்து தோளில் கையைப் போட்டவுடன் காணி போனாலும் பரவாயில்லை எப்படியும் செல்பி எடுக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.- 🍔 TGI Fridays இன் 16 கிளைகள் மூடப்படுகின்றன – 456 ஊழியர்கள் வேலை இழப்பு
🍔 TGI Fridays இன் 16 கிளைகள் மூடப்படுகின்றன – 456 ஊழியர்கள் வேலை இழப்பு written by admin January 18, 2026 ஐக்கிய இராச்சியத்தில் (UK) உள்ள பிரபல அமெரிக்க உணவகச் சங்கிலியான TGI Fridays, தனது 16 கிளைகளை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இது பிரித்தானியாவின் வர்த்தகத் துறைக்கு (High Street) மற்றுமொரு பேரிடியாக அமைந்துள்ளது. நிர்வாக சிக்கல்கள் காரணமாக எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவினால், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். எஞ்சியுள்ள 33 கிளைகள் ஒரு புதிய மீட்பு ஒப்பந்தத்தின் (Rescue deal) மூலம் தொடர்ந்து இயங்கும். இதன் மூலம் சுமார் 1,384 பணியாளர்களின் வேலைவாய்ப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. TGI Fridays-ன் பிரித்தானிய கிளைகளை நிர்வகித்து வந்த ‘லிபர்ட்டி பார் அண்ட் ரெஸ்டாரன்ட்’ (Liberty Bar and Restaurant) குழுமம் நிதி நெருக்கடியால் நிர்வாகிகளிடம் (Administrators) ஒப்படைக்கப்பட்டது. வாடிக்கையாளர் வருகை குறைவு, அதிகரித்த செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை இம்முடிவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மூடப்பட்டவற்றில் மின்னார், எடின்பர்க், ரீடிங், ஸ்டீவனேஜ் மற்றும் காவென்ட்ரி உள்ளிட்ட 16 நகரங்களில் உள்ள கிளைகள் இதில் அடங்கும். Tag Words: #TGIFridaysUK #RestaurantClosures #UKHighStreet #HospitalityNews #JobLosses #Administration #RetailCrisis #UKNews2026 https://globaltamilnews.net/2026/226780/- கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.
கிறீன்லாந்து ரம்லான்டாக மாறணும்.- தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதை நிறைவேற்றாதது ஏன்? - அருட்தந்தை மா.சத்திவேல்
யாழ்பாண தமிழ் வெகுசனங்களிடம் எங்கள் தெய்வம் அநுரகுமார திசாநாயக்க சாதரணமாக வீதியில் நடந்து போகின்றதே என்று வாக்கிங் போவதை சொல்லி பெருமைபடுகின்ற மாற்றம் தான் வந்திருக்கின்றது அய்யா- அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
என்ன வாத்தியார் திருப்பதிக்கே லட்டா? போன தேர்தலிலேயே அவரை தூக்கி எறிய ஆயத்தம். ஆனால் மனிசன் 25000-30000 வாக்குகளை இறுக அணைத்தபடி உள்ளாரே?- அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
சரி பிழைக்கு அப்பால்…. புலம்பெயர் புஸ்வாணங்கள் என்ன குத்தி முறிந்தாலும்…. தமிழரசு கட்சியின் அதிகாரம் மிக்க குழுக்கள் எல்லாமும் சுமனிடமே என்பதுதான் உண்மை. கட்சியில் ஆதரவு இல்லை எனில் எப்போதோ சுமனை தூக்கி கடாசி இருப்பார்கள். சும்மா புலம்பாமல் - முடிந்தால் சுமனை கட்சியால் வெளியேற்ற பாருங்கள். பார் விவகாரம் வெளிவரக்கூடாது என்பதால் பார் சிறி அனுரவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு கொடுத்த விவகாரத்தில் அவரே கட்சியை விட்டு தூக்கி அடிக்கப்படக்கூடும். இதுதான் கட்சி தலைவர் என சொல்லி கொள்ளும் “செயலற்ற தலைவர்” பார் சிறியின் தலைமைதுவ இலட்சணம்😂. ஊழல் செய்வதை தவிர வேறு எந்த திறமையும் இல்லாத ஈழத்து மிக்சர் மாமா தான் பார் சிறி.- கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.
எந்த ஆதாரமோ, முகாந்திரமோ இல்லாத கூற்று. தம்பரின் கருத்து அப்படியே ஒப்புவிக்கப்பட்டுள்ளது. கிரீன்லாந்து நேட்டோவின் அங்கம். அதை சீனா தொட்டால் அமேரிக்கா உட்பட முழு நேட்டோவையும் தொட்டதுக்கு சமன். அப்படியும் சீனா கிரீன்லாந்த்தை தொடுமாயின் - அது அமெரிக்காவிடம் இருந்தாலும் தொடும். தம்பர் முதல் டேர்மில் நேட்டோவை உடைக்க பார்த்தார். நேட்டோ தலைவர்கள் சரி நாமும் 3% ஜிடிபியை பாதுகாப்புக்கு செலவழிக்கிறோம் என்றதும் - அவரால் அதை சாட்டி நேட்டோவை உடைக்க முடியவில்லை. இப்போ கிரீன்லாந்தை ஆக்கிரமித்து அதன் மூலம் நேட்டோவை உடைக்க முயல்கிறார். பாதுகாப்பு கனிம வளம் டிரம்பின் குடும்பத்துக்கு பணம் இவை எவையும் அல்ல கிரீன்லாந்தை கேட்க காரணம். ஒரே காரணம் நேட்டோவில் இருந்தும் பயனில்லை எனும் நிலைக்கு ஐரோப்பிய நாடுகளை தள்ளி, அதன் மூலம் நேட்டோவை உடைப்பது மட்டுமே. கனடாவை மாநிலம் ஆக்குவோம் என்ற கதையும் இந்த நோக்கிலேயே. இதன் பின்னால் இருப்பது முழுக்க, முழுக்க புட்டின் தம்பருக்கு கொடுத்துள்ள ஏவல். இதுவரை ரஸ்யா எதிர்ப்பு, உக்ரேன் பாதுகாப்பு என இருந்த நேட்டோ, ஈயூ நாடுகளை - கிரீன்லாந்தின் பாதுகாப்பு, நேட்டோவின் எதிர்காலம் என யோசிக்க வைத்துள்ளார் புட்டின், தம்பர் வாயிலாக. கார்னி ஒரு படி மேலே போய் சீனாவை கட்டியணைத்தே விட்டார். - யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
Important Information
By using this site, you agree to our Terms of Use.