Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. ஓ…வேலையை முடிச்சு கொண்டு வாங்கோ.
  3. எனக்கென்னமோ இது அமெரிக்காவை தோற்க வைக்க எண்டு தம்பர் தேர்ந்து எடுத்து போன சண்டை போல தெரிகிறது.
  4. உங்களுக்கு இந்திய அரசியலில் நல்ல எதிர்காலம் உண்டு😂
  5. 'ஓர் அடி விலகியிருந்தால் மரணம்': ஊசிமலையில் ஆழமான பாறையில் விழுந்த நபர் - ராணுவம் வந்து மீட்டது எப்படி? கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 20 மார்ச் 2026, 12:23 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஊசிமலை காட்சி முனையில், இரும்பு வேலி தடுப்புகளைத் தாண்டி பாறை பகுதிக்குச் சென்ற இளைஞர் 150 அடி ஆழத்திலுள்ள பாறையில் தவறி விழுந்தார். உயிருடன் இருந்த அவரை தீயணைப்பு துறையினர் முயன்றும் மீட்க இயலாத நிலையில், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் ராணுவ வீரர்கள் விடிய விடிய முயற்சி செய்து அதிகாலை 3:30 மணியளவில் உயிருடன் மீட்டனர். தவறி விழுந்த இளைஞரே அங்கிருந்து போனில் பேசி, லொகேஷன் அனுப்பிய பின்பே அவர் அங்கே விழுந்து கிடந்த தகவல் வெளியில் தெரியவந்ததாக கூடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார் தெரிவித்தார். இந்த மீட்புப் பணி இரவு முழுவதும் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது. மீட்புப் பணியின்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, கூடலூர் மாவட்ட வன அலுவலர் தேவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்துள்ளனர். மீட்கப்பட்ட இளைஞரின் உயிருக்கு ஆபத்தில்லையெனினும், முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்புகள் உடைந்து இருப்பதால் அவர் நடப்பதற்கு பல மாதங்களாகும் என்றும், அவருக்கு தற்போது உளவியல் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் உதகை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தனியாக வந்து தவறி விழுந்த இளைஞர்! நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து கூடலூர் வழியாக கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஊசிமலை காட்சி முனை உள்ளது. இப்பகுதி, கூடலூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட காப்புக்காடு பகுதியாகவும் இருக்கிறது. சூழல் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஊசிமலை காட்சி முனை சூழல் சுற்றுலா மையத்தை வனத்துறை நிர்வகித்து வருகிறது. இந்த பகுதியில் சாலையின் இரு புறமும் யூகலிப்டஸ் மரங்கள் அமைந்துள்ளது. அதனால் அந்த இடத்தில் நின்று சுற்றுலாப் பயணிகள் படமெடுப்பது வழக்கம். அங்கே நிறைய படப்பிடிப்புகளும் நடந்துள்ளன. இதில் ஒரு புறத்தில் மரங்கள் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலுள்ள மலையுச்சியிலிருந்து கீழே பார்க்கும்போது, அதற்கும் கீழே உள்ள தவளை மலை, முதுமலை மற்றும் கூடலூர் வனப்பகுதிகளை நன்கு ரசிக்கலாம். இதற்காக ஒரு காட்சி முனையும், படிக்கட்டுகள், இரும்புத் தடுப்புகள், கழிப்பறை வசதிகள் என சில கட்டமைப்பு வசதிகளையும் தமிழக வனத்துறை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அங்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் வருவதாக வனத்துறையினர் கூறுகின்றனர். ஊசிமலை காட்சி முனைக்கு கடந்த 19-ஆம் தேதியன்று, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர். சிவகுருநாதன் (வயது 28) என்ற இளைஞரும் அன்று மாலை ஊசி மலை காட்சி முனைக்கு வந்துள்ளார். தனியாக வந்திருந்த அவர், காட்சி முனைக்கு அருகிலிருந்த இரும்பு வேலி தடுப்பையும் தாண்டி கீழே பாறையில் நடந்துசென்றுள்ளார். அப்போது பாறையிலிருந்து வழுக்கி, 150 அடி ஆழமுள்ள பாறையில் விழுந்துள்ளார். நல்வாய்ப்பாக தலையில் எதுவும் அடிபடாமல் உயிர் தப்பியுள்ளார். ஆனால் எழமுடியாமல் பலத்த காயமடைந்திருந்த அவர், தனது போனில் தகவல் தெரிவித்த பின்புதான் அவர் விழுந்தது வெளியே தெரியவந்ததாக கூடலூர் காவல்துறையினர் தெரிவித்தனர். பிபிசி தமிழிடம் காவல்துறையினர் பகிர்ந்த தகவலின்படி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரைச் சேர்ந்த சிவகுருநாதன், தற்போது கோவையில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். திருமணமாகாத அவர், காந்திபுரம் பகுதியில் ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். 3 நாட்களுக்கு முன்பு, உதகைக்கு தனியாக வந்து ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்த அவர், மார்ச் 19 அன்று கால் டாக்சி புக் செய்து, ஊசிமலைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து பெங்களூரு சென்று, அதன்பின் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் கூறினர். பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய கூடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார், ''பாறையைத் தாண்டி அவர் செல்ஃபி எடுக்கப் போனதாகத் தெரிகிறது. அப்போது வழுக்கி 150 அடி ஆழமுள்ள பாறையின் மீது விழுந்திருக்கிறார். அப்போது மாலை 3:30 மணி இருக்கலாம். தலையில் அடிபடாததால் உயிர் தப்பிய அவர் நினைவிழக்காமலும் இருந்துள்ளார். ஆனால் பலத்த காயமடைந்துள்ளார். நல்வாய்ப்பாக அவர் விழுந்த இடத்தில் அவருக்கு போன் சிக்னல் இருந்துள்ளது. அவர், தான் வந்த வாகன ஓட்டுநர் மற்றும் தங்கியிருந்த இடத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அவர் விழுந்து கிடந்த லொகேஷனையும் அனுப்பியுள்ளார்.'' என்றார். ''ரிசார்ட்டில் இருந்த ஒருவர், தனக்குத் தெரிந்த ஒரு வனக்காவலருக்குத் தெரிவித்து, அவர் மூலமாக முதலில் வனத்துறையினருக்கு தகவல் தெரிந்துள்ளது. எங்களுக்கு 5:30 மணிக்குத் தகவல் வந்தது. நாங்களும் தீயணைப்புத் துறையினரும் சென்றோம். அப்போது வெயில் இருந்தது. நாங்கள் தேடிப்பார்த்தபோது அவர் விழுந்த பாறை தெரியவில்லை. அதன்பின்பே யானையைக் கண்காணிக்கப் பயன்படுத்தும் டிரோன் மூலமாக வனத்துறையினர் அவர் விழுந்து கிடந்த இடத்தைக் கண்டுபிடித்தனர்.'' என்றார். படக்குறிப்பு,மீட்புக் குழுவினர் வெலிங்டன் ராணுவ மையத்தின் உதவியை நாடிய நீலகிரி ஆட்சியர் டிரோன் மூலமாக அவர் இருந்த இடம் தெரிந்தபோது, 6:45 மணியாகிவிட்டது என்றார் கூடலூர் தீயணைப்பு அலுவலர் சங்கர். தீயணைப்புத்துறைக்கு மாலை 5:15 மணிக்குத் தகவல் தெரிந்து, 5:35 மணிக்குச் சென்று விட்டாலும் அவர் இருந்த இடத்தைக் கண்டறியவே முடியவில்லை என்பதை அவரும் விளக்கினார். டிரோன் மூலமாக அவர் இருந்த இடம் தெரிந்த அடுத்த கால் மணி நேரத்தில் அதாவது இரவு 7 மணிக்கு அவர் இருக்குமிடத்தில் தீயணைப்புத் துறையினர் இறங்கிவிட்டதாகவும் தீயணைப்பு அலுவலர் சங்கர் விளக்கினார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''நாங்கள் அங்கே போனபோது, அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. ஆனால் அவரால் அசையக்கூட முடியவில்லை. உடலில் பல எலும்புகள் உடைந்திருந்ததால் கடுமையான வலியில் இருந்தார். ஆனால் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரை அங்கிருந்து எப்படி மேலே கொண்டு வருவது என்று ஆலோசிப்பதற்குள் நன்கு இருட்டிவிட்டது. அங்கிருந்து மேலே வருவதற்கு பாதை எதுவுமே இல்லை. அந்த இளைஞரின் எலும்புகள் உடைந்து, அவரால் எழவும் முடியாத நிலையில், 80 கிலோவுக்கும் மேலாகவுள்ள அவரை கயிறு கட்டி தூக்குவது பெரும் ரிஸ்க் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.'' என்றார். தீயணைப்புத்துறையில் இருக்கும் உபகரணங்களைக் கொண்டு, அவரை மேலே கொண்டு வருவதில் பல சிக்கல்கள் இருப்பது பற்றி நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யாவுக்கு காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விளக்கியுள்ளனர். அதன்பின் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் ( எம்ஆர்சி ) அதிகாரிகளிடம் இதுபற்றி பேசி உதவி கோரியிருக்கிறார். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவும் இதற்காக எம்ஆர்சி அதிகாரிகளிடம் பேசியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தகவல் தெரிந்து, முறையான அனுமதி பெற்று, எம்ஆர்சி ராணுவ வீரர்கள் 20 பேர் மற்றும் சிறப்பு மருத்துவக் குழுவும் வந்தபோது நள்ளிரவு 12 மணியாகியிருக்கிறது. அதே நேரத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, கூடலூர் மாவட்ட வன அலுவலர் தேவராஜ் மற்றும் அதிகாரிகள் வந்து விட்டதாகத் தெரிவித்தார் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார். இரவில் 8 மணி நேரம் நீடித்த மீட்புப்பணி முழுக்கவும் ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்ததாகக் கூறிய அவர், அதிகாலை 3:30 மணியளவில் அவரை ராணுவத்தினர் மீட்டு மேலே கொண்டுவந்ததாகத் தெரிவித்தார். படக்குறிப்பு,மீட்புப்பணியின்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ''ராணுவ வீரர்களுடன் எம்ஆர்சி சிறப்பு மருத்துவக்குழுவினரும் மருத்துவர் கவிதா தலைமையில் வந்தனர். இளைஞர் விழுந்திருந்த இடத்திற்கே சென்று அதே இடத்தில் வைத்து அவருக்கு குளுக்கோஸ் ஏற்றி, வலி நிவாரணி ஊசி உள்ளிட்ட அத்தியாவசிய சிகிச்சைகளை அளித்தனர். ரத்தக்கசிவையும் நிறுத்தினர். அந்த இடத்தின் ஆழம், சுற்றுப்புறச்சூழல் எல்லாவற்றையும் ஆராய்ந்த ராணுவத்தினர், அவரை எப்படிக் கொண்டு வருவது என்று ஆலோசித்து, கனமான இரும்புக் கம்பிகளால் மேலேயிருந்து அந்த இடம் வரை கன்வேயர் பெல்ட் போன்று வலுவான பாலம் அமைத்தனர். பின்பு ஸ்ரெச்சரில் அவரை இறுக்கமாகக் கட்டி மேலே கொண்டுவந்தனர்.'' என்று அந்த இளைஞரை மீட்ட விதத்தை விளக்கினார் தீயணைப்பு அலுவலர் சங்கர். விழுந்ததிலிருந்து 13 மணி நேரத்துக்குள் அந்த இளைஞர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அதன்பின் உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருக்கு உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை என்றும், தலையில் அடிபடாததால் அந்த இளைஞர் உயிர் தப்பியிருப்பதாக உதகை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர் தெரிவித்தார். சிவகுருநாதனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய மருத்துவர் ரவிசங்கர், ''உயிருக்கு ஆபத்தான கட்டத்தை அவர் தாண்டிவிட்டார். 150 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் அவருடைய முதுகெலும்பு, இடுப்பு எலும்பு மற்றும் நெஞ்சுக்கூட்டு எலும்புகள் உடைந்துள்ளன. கால் எலும்புகள், கை எலும்புகள் சேரும் இடமும் உடைந்திருப்பதால் அதற்கு முதலில் சிகிச்சை கொடுத்து வருகிறோம். எல்லாவற்றையும் ஆராய்ந்த பின்பே அவருக்கு எங்கெங்கே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்பதை திட்டமிடமுடியும்.'' என்றார். ''இப்போது அவர் நன்றாகவுள்ளார். நன்கு பேசுகிறார். ஆனால் தான் யார் என்பதே தெரியவில்லை என்கிறார். அவருக்கு முதலில் உளவியல் ரீதியான சிகிச்சைதான் அவசியமாகவுள்ளதால் தற்போது உளவியல் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இடுப்பு, முதுகெலும்பு உட்பட பல எலும்புகள் உடைந்திருப்பதால் அவர் நடப்பதற்கு இன்னும் பல மாதங்களாகும்.'' என்றார் மருத்துவர் ரவிசங்கர். இளைஞர் சிவகுருநாதனின் தாய், தந்தை ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்த துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார், இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றார். இந்த ஊசிமலை காட்சி முனையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதியன்றும், இரும்பு வேலி தடுப்பைத் தாண்டிச் சென்ற கேரள இளைஞர்கள் 3 பேர்களில் ஒருவர் தேனீக்கள் கொட்டி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தேனீக்கள் கொட்டி உயிரிழந்த கேரள இளைஞர் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆசிப், ஜாபீர், சினான் ஆகிய 3 நண்பர்கள், கடந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதியன்று ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட தமிழகத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர். ஊசிமலை காட்சி முனையில் இரும்புத் தடுப்பைத் தாண்டிச் சென்றுள்ளனர். தூரமாக பாறையில் இருந்த தேன் கூட்டின் மீது கல் எறிந்துள்ளனர். தேனீக்கள் கொட்டியதில் ஜாபீர் (வயது 23) அதே இடத்தில் உயிரிழந்தார். அந்த சம்பவம் பற்றி விளக்கிய தீயணைப்பு அலுவலர் சங்கர், ''தேனீக்கள் அவர்களைச் சூழ்ந்து தாக்குவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்து நாங்கள் விரைந்து சென்றோம், கவச உடையணிந்து அங்கே நாங்கள் சென்றபோது அந்த இளைஞர் மரணமடைந்திருந்தார். ஒருவரைக் காப்பாற்றி சிகிச்சைக்கு அனுப்பினோம். இறந்த இளைஞரின் உடலில் ஒட்டியிருந்த ஆயிரக்கணக்கான தேனீக்களை அகற்றுவதே சிரமமாயிருந்தது. பாதை இருந்ததால் அவரை மேலே கொண்டுவந்துவிட்டோம். இந்த இளைஞர் சிவகுருநாதன் விழுந்த இடத்திலிருந்து பாதையே இல்லை. அவர் விழுந்த பாறையிலிருந்து ஓரடி விலகி விழுந்திருந்தாலும் அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை.'' என்றார். சூழல் சுற்றுலா என்ற பெயரில் ஊசிமலை காட்சி முனைக்குச் செல்ல தமிழக வனத்துறையினர் கட்டணம் வசூலித்து வரும் நிலையில், அங்கே சுற்றுலாப் பயணிகள் அத்துமீறிச் செல்லாமல் தடுக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தாமலும் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த இளைஞர் விழுந்து மீட்கப்பட்டது குறித்து, 'ஊட்டியில் மீண்டும் ஒரு மஞ்சுமல் பாய்ஸ்' என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். வனத்துறையையும் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுபற்றி கருத்து கேட்பதற்காக கூடலூர் மாவட்ட வனஅலுவலர் தேவராஜை பலமுறை தொடர்பு கொண்ட போதும், தொடர்ந்து மீட்டிங்கில் இருப்பதாக பதிலளித்தார். கேள்விகளை அனுப்புமாறு கூறிய அவர், அதற்குரிய பதில்களை அனுப்பவில்லை. ஆனால் அந்த இளைஞர் இருந்த இடத்தைக் கண்டறிய டிரோன் அனுப்பியதாகவும், இரவில் புலி, சிறுத்தை உள்ளிட்ட காட்டுயிர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு, அவரைச் சுற்றிலும் தீ மூட்டி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தாங்கள் செய்ததாகவும் கீழ்நிலையிலுள்ள வனத்துறையினர் தகவல் பகிர்ந்தனர். நீலகிரி மண்டல வனப்பாதுகாவலரும், முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநருமான கிருபா சங்கரிடம் இதுபற்றி கேட்டபோது, ''அங்கு வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நிறைய எச்சரிக்கை, விழிப்புணர்வு பலகைகள் வைத்துள்ளோம். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் வனத்துறையினர் கண்களுக்கும் படாமல் சிலர் இப்படி இரும்பு வேலிகளைத் தாண்டிச் செல்கின்றனர். அதனால் காட்சி முனையைத் தாண்டி யாரும் கீழே செல்லாத வகையில் மேலும் இரும்புத் தடுப்புகளை பலமாக அமைப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். விரைவில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm2r38y3w9xo
  6. இந்தக் குழுவையே வாங்கிவிட்டால் பிரச்சனை முடிந்தது.
  7. நசுங்க போகுது…அமெரிகாவின் உலக வல்லரசு பிம்பம். ஆப்பு கழன்றிடுச்சோ? இதாலதான் ஐரோப்பாவும் நேட்டோவும் கையை விட்டுட்டார்களோ?
  8. மூன்று projects வேலையில் production இற்கு போகிறது இந்த மாதம்..வாசிப்பதற்கும் நடப்பதற்கும் கூட நேரம் கிடைக்கின்றது இல்லை.
  9. நசுங்க போகுது..… என்று, வேறை எதையோ... சொல்லப் போகிறீர்கள் என நினைத்து விட்டேன். 😂
  10. கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு - மற்றுமொரு பெண் சடலமாக.. Mar 20, 2026 - 05:31 PM மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்று கடத்தப்பட்ட பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பொதுக்கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு ஊசலாடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அதே கிணற்றிலிருந்து மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை நெல்லிக்காடு பால்பண்ணை பகுதிக்குச் சென்ற பொதுமக்கள், அங்கிருந்த பொதுக்கிணறு ஒன்றிலிருந்து அலறல் சத்தம் கேட்பதை உணர்ந்துள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை அவதானித்து, உடனடியாக கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். விரைந்து வந்த பொலிஸார் அந்தப் பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். விசாரணைகளின்படி, மீட்கப்பட்டவர் கொத்தியாபுலையைச் சேர்ந்த 26 வயதுடைய முருகமூர்த்தி ரனுஜா எனத் தெரியவந்துள்ளது. நேற்று அவர் தனது மகளுடன் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இதன்போது அவரது மகளைத் தூக்கி வீசிவிட்டு, ரனுஜாவைத் தாக்கி இந்தக் கிணற்றுக்குள் தள்ளியமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில், அதே கிணற்றினுள் மற்றுமொரு சடலம் இருப்பது கண்டறியப்பட்டது. இச்சடலம் கடந்த மாதம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் நாற்பதுவட்டை பகுதியில் காணாமல் போன பெண்ணுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் காணப்பட்ட காலணியை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ள போதிலும், முறையான மரண விசாரணை மற்றும் டி.என்.ஏ (DNA) பரிசோதனைகளின் பின்னரே அடையாளம் உறுதிப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றப் பதில் நீதபதி தியாகேஸ்வரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு அவர் பணிப்புரை விடுத்தார். அத்துடன், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி த.தவக்குமார் ஆகியோரும் விசாரணைகளை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து முழுமையான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெவ்வேறு பொலிஸ் பிரிவுகளில் கடத்தப்படும் பெண்கள், கொக்கட்டிச்சோலை பகுதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட கிணற்றுக்குள் வீசப்படுவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் கடத்தப்பட்டு, அவர்களின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட பின்னர் அவர்கள் இக்கிணற்றுக்குள் தள்ளப்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர். எனினும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னரே இதன் பின்னணி குறித்து வெளியிடமுடியும் என கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://adaderanatamil.lk/news/cmmyulqag0005356pepmf6lew
  11. 3 கிழமைக்கு முன்பே கருத்தை எதிர்பார்த்தேன்😂
  12. ஈரானுடனான போருக்கு மேலதிகமாக 200 பில்லியன் டொலர் நிதி தேவை - அமெரிக்கா 20 Mar, 2026 | 04:05 PM ஈரானுடனான போருக்கு இன்னும் மேலதிகமாக 200 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக அமெரிக்க இராணுவ தலைமையகம் கோரியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் கூறுகையில், “இந்தத் தொகையில் மாற்றம் ஏற்படலாம். இராணுவத்துக்கு தேவையான நிதியை உறுதி செய்ய நாடாளுமன்றத்தை அணுகவுள்ளோம். மோசமானவர்களை கொல்ல மேலும் பணம் தேவைப்படுகிறது. இது மிகப் பெரிய தொகை. இத்தகைய செலவினங்களுக்கு அரசியல் ஆதரவு இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார். அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (19) இது தொடர்பாக தெரிவிக்கையில், எங்களிடம் ஏராளமான வெடிமருந்துகள் உள்ளன. ஆனால், ரஸ்யாவுக்கு எதிரான போர் காரணமாக உக்ரைனுக்கு அதிகமாகக் கொடுத்துவிட்டதால் எம்மிடம் உள்ள வெடிமருந்துகள் குறைந்துவிட்டது” எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/241480
  13. இப்படி தவிப்பதிலும் வாய்ப்பு கிடைக்கும் போது தாகம் தீர அருந்துவதிலும் தான் இருக்கின்றது தாம்பத்தியத்தின் சுவை.
  14. அமெரிக்காவின் சக்தி வாய்ந்த எஃப்-35 போர் விமானத்தை தாக்கியதாக ஈரான் அறிவிப்பு தெஹ்ரான்: அமெரிக்காவின் சக்தி வாய்ந்த எஃப்-35 ரக போர் விமானத்தைத் தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் மிகவும் ஆற்றல் வாய்ந்த இத்தகைய போர் விமானத்தை தாக்கிய முதல் நாடு தாங்கள்தான் என்றும் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. மத்திய ஈரானின் வான்வெளியில் அமெரிக்க விமானப் படையின் எஃப்-35 ஸ்டெல்த் ரக போர் விமானத்தைத் தாக்கியதாக ஈரான் ராணுவம் (IRGC) தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பானதாகக் கூறப்படும் காணொலியும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:50 மணிக்கு ஈரான் ராணுவத்தின் மேம்பட்ட, நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்த விமானம் தாக்கப்பட்டுள்ளது. அந்தப் போர் விமானத்தின் நிலைமை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், எஃப்-35 அவசரமாகத் தரையிறங்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு, எஃப்-35 விமானம் அவசரமாகத் தரையிறங்கியதை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டது. மேலும், விமானி பாதுகாப்பாக உள்ளார் என்றும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (CENTCOM) செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ், “விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது, விமானி உடல்நிலை சீரான நிலையில் உள்ளது" என்று கூறினார். ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளால் 125-க்கும் மேற்பட்ட அமெரிக்க - இஸ்ரேலிய ட்ரோன்கள் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் நடந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. எஃப்-35 விமானம் தங்களின் முக்கியமான ஆற்றல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தப் போரில் அமெரிக்காவும், இஸ்ரேலும் F-35 ரக போர் விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. ஈரான் குறிப்பிட்டபடி, எஃப்-35 ரக போர் விமானம் மீதான தாக்குதல் உறுதியானால், ஈரான் முதன்முறையாக சக்தி வாய்ந்த அமெரிக்க போர் விமானத்தைத் தாக்கி அழித்த நிகழ்வாக இது அமையும். அமெரிக்காவின் சக்தி வாய்ந்த எஃப்-35 போர் விமானத்தை தாக்கியதாக ஈரான் அறிவிப்பு ராடரில் தெரியாது, அதிவேக விமானம் என நம்பி வாங்கின நாடுகளுக்கு காதில பூவா?!
  15. 😂😂😂 வாய் வழியாக, மூக்கு வழியாக வந்ததெல்லாம் ஆதாரம் இல்லை. சும்மா நானும் அடிச்சு விட்டு விட்டு - அதிகாரிகள் சொன்னார்கள், ஆட்டுகுட்டிகள் சொன்னார்கள் என எழுதலாம். சிறிமா இப்படி சொன்னார் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். இல்லை நீங்கள் வழமைபோல் உங்கள் கற்பனை+ அரைகுறை மொழி புரிதலால் ஒரு பிழையான தகவலை அடித்து விட்டுள்ளீர்கள் என்றே கருத முடியும். அப்ப இலங்கை அமைசாரவை கூட்டத்தில் உங்கள் உறவினர் அதிகாரி இதை கேட்டார்…😂 அவர் உங்களுக்கு வந்து சொன்னார்😂 இதுதான் உங்கள் ஆதாரம்😂😂😂 நீங்கள் இதுவரை உருட்டியதில் திறமான உருட்டு இதுதான்😂 பிகு உங்கள் உறவினர் யாரும் ஈரானின் முல்லாக்கள் 88 பேர் குழுவில் இல்லையா? இருந்தால் என்ன நடக்கிறது என கேட்டு சொல்லவும் 😂
  16. இனி... 23´ம் புலிகேசி தம்பரை நம்பி, எவனும் வர மாட்டான். 😂 ஏற்கெனவே... ஆளை விடு சாமீ என்று பலர் நழுவி விட்டார்கள். 🤣
  17. பற்றி எரியும் குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: தாக்குதலுக்கு பின் ஈரான் கடும் எச்சரிக்கை! குவைத்: குவைத்தின் மினா அல்-அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் இன்று (மார்ச் 20) நடத்திய ட்ரோன் தாக்குதல்களால் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக குவைத் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலைத் தொடர்ந்து, “எங்கள் உள்கட்டமைப்புகள் மீண்டும் தாக்கப்பட்டால், எங்களிடம் எந்தவிதமான கட்டுப்பாடும் இருக்காது.” என்று ஈரான் எச்சரித்துள்ளது இன்று அதிகாலை மினா அல் அஹ்மதி சுத்திகரிப்பு நிலையம் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளானதாகவும், அதன் விளைவாக சுத்திகரிப்பு நிலையத்தின் பல அலகுகளில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (KPC) தெரிவித்தது. குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில், “இன்று அதிகாலை மினா அல் அஹ்மதி சுத்திகரிப்பு நிலையம் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளானதால், பல பிரிவுகளில் தீ விபத்து ஏற்பட்டதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் சில பகுதிகள் மூடப்பட்டன. இந்த தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், நிலைமையைக் கட்டுப்படுத்த அவசரகாலக் குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், புதன்கிழமை இரவு இஸ்ரேல், ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு நிலையம் மீது தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, கத்தாரின் ராஸ் லஃபான் தொழில்துறை நகரம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில், பெரும் சேதம் ஏற்பட்டது. பின்னர் வியாழக்கிழமை, வடக்கு இஸ்ரேலில் உள்ள மிகப்பெரிய ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையில், வியாழக்கிழமை, ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, “எங்கள் உள்கட்டமைப்பு மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு நாங்கள் அளித்த பதிலடி, எங்கள் சக்தியின் ஒரு சிறு பகுதி மட்டுமே. பதற்றத்தைத் தணிக்குமாறு கோரப்பட்ட கோரிக்கைக்கு மதிப்பளிப்பதே கட்டுப்பாட்டிற்கான ஒரே காரணம். எங்கள் உள்கட்டமைப்புகள் மீண்டும் தாக்கப்பட்டால், எங்களிடம் எந்தவிதமான கட்டுப்பாடும் இருக்காது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், எங்கள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் சரிசெய்யப்பட வேண்டும்.” என்று கூறினார். பற்றி எரியும் குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
  18. ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல் Mar 20, 2026 - 02:55 PM முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களை ஏப்ரல் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார். லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு அமைவாக, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மூத்த புதல்வர் ஜொஹான் பெர்னாண்டோ, இளைய புதல்வர் ஜெரம் பெர்னாண்டோ மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmyoz2or000g356p2kduyp9w
  19. Today
  20. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை 20 Mar, 2026 | 05:07 PM குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் குறித்தும், அதன் காரணமாக உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்தும் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. எமது பாராளுமன்றத்திலும் இந்த கலந்துரையாடலிற்கு இடமளிக்குமாறு முன்மொழிந்தவர்களுக்கு நான் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். குறிப்பாக, இந்தப் பிரச்சினையில் எமது தொடர்ச்சியான நிலைப்பாடு நடுநிலைத்தன்மை என்பதாகும். எமது தாய்நாட்டின் கௌரவம், நீதி தொடர்பான பிரச்சினை மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகியவற்றை எமது நடுநிலைத்தன்மையைப் பாதுகாப்பதன் மூலமே நாம் வென்றெடுக்க முடியும். எனவே, எத்தகைய அழுத்தங்கள் வந்தபோதிலும், இந்த நடுநிலைத்தன்மை கை நழுவிப் போக நாம் இடமளிக்க மாட்டோம். ஆனால் சில பாராளுமன்ற உறுப்பினர்களும், சில தரப்பினரும் நாம் குறிப்பிட்ட ஒரு தரப்பிற்கு ஆதரவாகச் செயற்படுவதாகவும், சில தீர்மானங்களைச் சரியான நேரத்தில் எடுக்கவில்லை என்றும் பல்வேறு கருத்துகளை முன்வைப்பதை நான் அறிவேன். அவை முற்றிலும் உண்மையற்றவை. ஈரானியக் கப்பல்கள் தொடர்பான விடயத்தில், குறிப்பாக 2026-02-26 ஆம் திகதி ஒத்துழைப்பை மேம்படுத்தும் விஜயமாக 03 கடற்படைக் கப்பல்கள் மார்ச் 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வருகை தருவதற்கு அனுமதி கோரப்பட்டது. அதற்கான அனுமதியை வழங்குவது குறித்து நாம் ஆராய்ந்து கொண்டிருந்தோம். அதே வேளை, அன்றைய தினம் மாலையில் அமெரிக்கா தனது இரண்டு போர் விமானங்களை இலங்கையின் மத்தளை விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியது. எமது நாட்டின் நடுநிலைத்தன்மை குறித்து நாம் மிகத் தெளிவான முடிவை எடுத்தோம். அந்த நேரத்தில் போர் மோதல்களுக்கான அறிகுறிகள் தென்பட்டிருந்தன. எனவே, நாம் இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. ஈரானியக் கப்பல்களுக்கு ஏன் அனுமதி வழங்கவில்லை எனச் சிலர் கேள்வி எழுப்பினர். அப்படி அனுமதி வழங்கியிருந்தால், எமது ஒட்டுமொத்த நடுநிலைத்தன்மையும் சீர்குலைந்திருக்கும். அத்துடன், எமது பிராந்தியத்திற்கு அப்பால் இருந்த ஒரு போர் மோதல், மத்தளை மற்றும் கொழும்பு துறைமுகத்தை எட்டியிருக்கும். எத்தகைய அழுத்தங்களுக்கு மத்தியிலும் நாம் நாட்டைப் பாதுகாத்தோம். அதன் பின்னர் 27 ஆம் திகதி, 'ஐரிஸ் புஷெஹர்' என்ற கப்பலில் கடற்படை வீரர் ஒருவர் விழுந்து காயமடைந்திருப்பதாகவும், அந்த வீரரையும் அவருடன் ஒரு அதிகாரியையும் இலங்கைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இத்தகைய சந்தர்ப்பங்களில் உதவி வழங்குவது எமது நடுநிலைத்தன்மை மற்றும் சர்வதேச உறவுகளின் அடிப்படையுமாகும். அதற்கமைய, குறித்த கப்பல் நிறுவனத்திற்குத் தேவையான விநியோகங்களை மேற்கொள்ளும் நிறுவனத்தின் ஊடாக அந்த அதிகாரியும் கடற்படை வீரரும் கொழும்பு டர்டன்ஸ் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டனர். தொடர்ந்து 04 ஆம் திகதி, எமது பொருளாதார வலய எல்லைக்குள் ஈரானுக்குச் சொந்தமான கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இது எமது கடற்பரப்பிற்குள் இடம்பெறவில்லை என்பதால் நாம் இதனைப் புறக்கணித்திருக்க முடியும். இருப்பினும், சர்வதேசக் கடப்பாடுகள் மற்றும் மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டு எமது கடற்படையும் விமானப்படையும் பாரிய தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தன. இவ்வாறான வெடிப்புச் சம்பவங்கள் நிகழும்போது எத்தனை நாட்கள் கண்காணிக்க வேண்டும், அலைகளின் திசைக்கு ஏற்ப எவ்வளவு தூரம் தேட வேண்டும் என்பதற்குச் சர்வதேச தரநிலைகள் உள்ளன. நாம் அவற்றைச் சரியாகப் பின்பற்றினோம். அதன்படி காயமடைந்த 32 பேரையும் 84 சடலங்களையும் எமது நிலப்பரப்பிற்கு மீட்டு வந்தோம். இதுவே எமது மனிதாபிமானமும் நடுநிலைத்தன்மையுமாகும். அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அவர்களின் மற்றுமொரு கப்பலின் எஞ்சின் பழுதடைந்துள்ளதால் கொழும்பு துறைமுகத்திற்கு வர அனுமதி கோரப்பட்டது. 11 மணித்தியாலங்களுக்கு முன்பே அனுமதி வழங்கியிருக்கலாம் எனச் சிலர் கூறுவதைக் கண்டேன். அங்கு 11 மணித்தியாலங்கள் என்று எதுவும் இருக்கவில்லை. பெப்ரவரி 26 ஆம் திகதி கடிதம் கிடைத்தது மார்ச் 09 ஆம் திகதி வருகை தருவதற்காகவே. இவர்கள் நாட்கள் மற்றும் நேரங்களை குழப்பிக்கொண்டுள்ளனர் என்று நினைக்கிறேன். முதல் கப்பல் தாக்குதலுக்கு உள்ளான பின்னரே, இரண்டாவது கப்பலில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் கொழும்பு துறைமுகத்திற்கு வர அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர்கள் போர் மோதலின் ஒரு தரப்பினர். அவர்கள் எமது கடற்பரப்பிற்குள் நுழையும்போது, சர்வதேசச் சட்டங்களின்படி 24 மணித்தியாலங்கள் மட்டுமே தங்கியிருக்க முடியும். 24 மணித்தியாலங்களுக்குள் அவர்கள் வெளியேற வேண்டும் அல்லது எமது பொறுப்பின் கீழ் வர வேண்டும். அப்போதுதான் எமது நடுநிலைத்தன்மை பாதுகாக்கப்படும். அவர்கள் எமது பொறுப்பின் கீழ் வந்த பிறகு, முழு குழுவினரும் தங்கியிருக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதற்கமைய, 206 கடற்படை வீரர்களை எமது கடற்படை முகாமிற்கு அழைத்து வந்தோம். நாம் இந்த 206 பேரையும் ஒன்றாகக் வைத்திருக்கவில்லை. அவர்கள் படையினர், மன அழுத்தத்தில் இருப்பார்கள், என்ன மாதிரியான நிலைமை உருவாகும் என்பதை நாம் அறிவோம். எனவே, மிகுந்த அவதானத்துடன் அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் சிகிச்சைகளை வழங்கினோம். நாம் அவர்களை மிகுந்த மனிதாபிமானத்துடன் கவனித்து வருகிறோம். இதன் மூலமே இலங்கை சர்வதேச ரீதியில் அங்கீகாரத்தையும் கீர்த்தியையும் பெறுகின்றது. அதன் பின்னர், உயிரிழந்தவர்களின் உடல்களைத் தமது நாட்டிற்கு கொண்டு செல்ல அனுமதிக்குமாறு அவர்கள் எம்மிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு நாங்கள் அனுமதி வழங்கினோம். தாக்குதலுக்கு உள்ளான அந்தப் போர்க்கப்பலில் இருந்த மேலும் 32 பேர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் 32 பேரும் தற்போது குணமடைந்துள்ளனர். இப்போது அவர்கள் கொக்கல விமானப்படை முகாமில் தங்கியுள்ளனர். எனவே, இந்தப் போர் மோதலில் எமது கொள்கையாக நாம் எப்போதும் நடுநிலைமையைப் பாதுகாத்து வருகிறோம். அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தத் தாக்குதல்கள் குறித்த தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது. பல நாடுகள் அந்தத் தீர்மானத்திற்கு உடன்பட்டன. தமது ஒத்துழைப்பை வழங்கின. ஆனால், நாம் அதற்கு ஆதரவு வழங்கவில்லை. ஏனெனில் அந்தத் தீர்மானம் குறைபாடுகள் கொண்டிருந்தன. சர்வதேச அரங்கில் நாம் எப்போதும் 'நீதி மற்றும் நியாயம்' என்ற சுலோகத்தையே முன்வைக்கிறோம். அதன் அடிப்படையிலேயே நாம் செயற்பட்டுள்ளோம். அதனால்தான் எமது செயற்பாடுகள், கொள்கைகள், தீர்மானங்கள் மற்றும் இணக்கப்பாடுகள் என அனைத்திலும் நாம் எமது நடுநிலைமையைப் பேணி வருகிறோம் என்று நான் எப்போதும் கூறுகிறேன். இவ்வாறானதொரு யுத்த காலத்தில், தாய்நாட்டின் தனித்துவம், கௌரவம் மற்றும் சர்வதேச அங்கீகாரத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறை இதுவேயாகும். சர்வதேச ரீதியில் மிக முக்கியமானதும் தீர்மானமிக்கதுமான ஒரு சந்தர்ப்பத்தில், நாம் எப்போதும் உண்மையையே பேச வேண்டும். எனவே, பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. இலங்கை அரசாங்கம் பொறுப்பைத் கைவிட்டதால்தான் முதலாவது கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது என்றொரு கருத்தை உருவாக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். அது மிகவும் மோசமானது. மனிதாபமற்றது. சர்வதேச ரீதியில் நோக்கினால் அது ஒரு தீவிரப் பிற்போக்குத்தனமான செயலாகும். எனவே, இந்தப் பிரச்சினையில் அனைவரும் பொறுப்புடன் செயற்படுவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் இம்மாதம் 04 மற்றும் 08 ஆம் திகதிகளில் மத்தளை விமான நிலையத்தில் தரித்து நிற்பதற்கு அனுமதி கோரியிருந்தன. அந்த விமானங்களின் இறக்கைகளில் 8 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ளதால், இந்தப் போரில் ஒரு தரப்பாக மாறுவதைத் தவிர்க்க முடியாது எனச் சிலர் குறிப்பிடுகின்றனர். அது முற்றிலும் பொய்யானது. அந்த ஒப்பந்தத்தில், இவ்வாறானதொரு யுத்தத்தின் போது எமக்கிடையிலான உடன்பாடு குறித்து எவ்வித குறிப்பும் இல்லை. அதில் வான்வழிப் போக்குவரத்து சார்ந்த நடவடிக்கைகள், பராமரிப்பு சேவைகள் தொடர்பான பயிற்சித் திட்டங்கள், கடல்சார் எல்லைகள் குறித்த விழிப்புணர்வு, சைபர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான தகவல் பரிமாற்றம், மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த அவசரகால பதில் நடவடிக்கைகள் போன்ற விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளன. எனவே, நாம் சர்வதேசக் கொள்கைகளைத் தெளிவாகப் பின்பற்றி வருகிறோம். இந்தப் போரின் தன்மையைப் பற்றிக் கூறினால், ஒரு தரப்பினர் ஒரு நாட்டின் ஆட்சி முறையை முழுமையாக மாற்றும் நோக்கில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம், உலகளாவிய பொருளாதாரத்திற்கு அழுத்தம் கொடுப்பதே மற்றுமொரு தரப்பினரின் போர் வியூகமாக மாறியுள்ளது. அதன் காரணமாகவே ஆரம்பத்தில் விமான நிலையங்கள், பின்னர் துறைமுகங்கள், எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டன. உலகப் பொருளாதாரத்தைப் பாதிப்பதன் மூலமே தமது பாதுகாப்பு தங்கியுள்ளது என்பதை அவர்கள் இதன் மூலம் காட்டுகின்றனர். குறிப்பாக மத்திய கிழக்கை மையமாகக் கொண்ட எமது பிரதான பொருளாதார வாழ்வாதாரங்கள் இரண்டு உள்ளன. முதலாவது, எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகப் பாதைகள் - இது எமது பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. இரண்டாவது, வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள் - சுமார் 10 இலட்சம் பேர் அந்தப் பிராந்தியங்களில் பணியாற்றுகின்றனர். எமது பொருளாதாரத்தில் அவர்கள் பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர். எனவே இது ஒரு உள்நாட்டு நெருக்கடி அல்ல. வெளியில் இருந்து உருவாகியுள்ள இந்தத் தாக்கம் எம்மை எவ்வாறு பாதிக்கும் என்பதில் நாம் அவதானம் செலுத்த வேண்டும். இதன்படி, இந்த வெளிதரப்பு அதிர்ச்சியின் தன்மையை நாம் இரண்டு முக்கிய இடங்களிலிருந்து இனங்கண்டுள்ளோம். ஒன்று வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம், இரண்டு வலுசக்தி விநியோக பாதைகள். இதற்கு முகங்கொடுக்கும் வகையில் எமது பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மிகவும் முறைப்படியாகச் செயற்பட்டு வருகின்றது. முன்னைய காலத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சார்ந்து நிலவிய உடனடி கொள்வனவு முறையானது அங்கு உருவான ஊழலுக்குக் காரணமாக அமைந்தது. எனவே, எப்போதும் நீண்டகால டெண்டர்கள் மூலம் இந்த வலுசக்தி விநியோகத்தைப் பெற்றுக்கொள்ளவே முயற்சி செய்தோம். அதேபோல், நாம் பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த நாடுகளுடன் அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வர முடியுமா என்று ஆராய்ந்தோம். எமக்குச் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் சிங்கப்பூர் மற்றும் இந்திய நிறுவனங்கள் மூலமே கிடைக்கின்றன. அதனால், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கான நீண்டகால டெண்டர்களில் எமக்கு இதுவரை நெருக்கடி ஏற்படவில்லை. இருப்பினும், மசகு எண்ணெய் ஒரு பிரதான பிரச்சினையாக உள்ளது. புஜைரா துறைமுகத்தில் இருந்து மசகு எண்ணெய் வரவிருந்தது. இந்த மார்ச் மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் 90,000 மெட்ரிக் தொன் கொள்ளளவுடன் கூடிய கப்பல் ஒன்று வரவிருந்தது. தற்போதைய சூழ்நிலை காரணமாக, நீண்டகால டெண்டர் அடிப்படையிலான அந்த கப்பலின் வருகையை அவர்கள் ஒரு சில நாள் பின்போட்டுள்ளனர். அதேபோல், மேலும் ஒரு 90,000 மெட்ரிக் தொன் டெண்டர் இருந்தது, அதுவும் எமக்குக் கிடைக்காது. எனவே, பிரச்சினை எங்கிருந்து உருவாகிறது என்று நாம் பார்த்தோம். இந்த இரண்டு மசகு எண்ணெய் கப்பல்கள் கிடைக்காமையே பிரச்சினை உருவாகக்கூடிய இடங்களாகும். அதன்படி, நாம் மார்ச் 05 ஆம் திகதி ஒரு டெண்டரைக் கோரினோம். எரிபொருள் விநியோகத்தில் பிரச்சினைகள் ஏற்படும் என்றே அவற்றை முன்னெடுத்தோம். அந்த டெண்டரை நாம் இந்த 17 ஆம் திகதி ஆராய்ந்தோம். எமக்குக் மசகு எண்ணெயால் நெருக்கடி ஏற்படுமாயின் - பொதுவாக எமது சுத்திகரிப்பு நிலையம் மூலம் நாட்டின் எரிபொருள் தேவையில் 35% உற்பத்தி செய்யப்படுகிறது. புஜைரா துறைமுகத்தில் இருந்து மசகு எண்ணெய் பெறுவது கடினமான காரணத்தால் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை எவ்வாறு இறக்குமதி செய்வது என்பது குறித்து நாம் ஆராய்ந்தோம். அதன் காரணமாக, நாம் 05 ஆம் திகதி டீசல், பெட்ரோல், உலை எண்ணெய் (Furnace oil), விமான எரிபொருள் மற்றும் இரண்டு மசகு எண்ணெய் கப்பல்களுக்காக டெண்டர் கோரினோம். அந்த டெண்டர் 17 ஆம் திகதி திறக்கப்பட்டது. அதன்படி, டீசல் கப்பலுக்கான டெண்டர் வழங்கப்பட்டது. அது ஏப்ரல் 06, 07 திகதிகளில் வரும். பெட்ரோல் டெண்டர் வழங்கப்பட்டது. அது ஏப்ரல் 16, 17 திகதிகளில் வரும். உலை எண்ணெய் (Furnace oil) டெண்டர் வழங்கப்பட்டது. அது ஏப்ரல் 12, 13 திகதிகளில் வரும். விமான எரிபொருள் டெண்டர் வழங்கப்பட்டது. அது ஏப்ரல் 10, 11 திகதிகளில் வரும். மசகு எண்ணெயைப் பொறுத்தவரை. ஒரு டெண்டர் ஏப்ரலிலும் இரண்டாவது ஜூன் மாதத்திற்கும் வழங்கப்பட்டிருந்தது. ஏப்ரல் மாதத்தில் மசகு எண்ணெய் வழங்க முடியும் என எந்த நிறுவனமும் முன்வரவில்லை. எனினும், ஒரு நிறுவனம் ஜூன் மாதத்தில் ஒரு மசகு எண்ணெய் கப்பலை வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளது. அந்த டெண்டரை நாம் வழங்கியுள்ளோம். அதேபோல், இந்த டெண்டரின் நீடிப்பாக 18 ஆம் திகதியும் நாம் மீண்டும் ஒரு டீசல் டெண்டரை வழங்கினோம். தற்போது அது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதனை ஏப்ரல் 7-8 அளவில் எமக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர். அதேபோல, டெண்டர்களின் தொடர்ச்சியாக 18 ஆம் திகதி மீண்டும் ஒரு டீசல் டெண்டரை வழங்கினோம். அது தற்போது பேச்சுவார்த்தை மட்டத்தில் உள்ளது. ஏப்ரல் மாதம் 7 அல்லது 8-ஆம் திகதியளவில் அதனை எமக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர். இங்கே நாம் கவனிப்பது என்னவென்றால், மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் எமது தேவைகளை நிறைவு செய்ய முடியாவிட்டால், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை இறக்குமதி செய்வதற்கே நாம் முன்னுரிமை அளிக்கிறோம். அந்த முன்னுரிமையின் அடிப்படையில் நாம் செயற்பட்டு வருகிறோம். மேலும், இந்த நெருக்கடி மற்றும் மோதல்கள் காரணமாக நாம் திட்டமிட்டிருந்த வலுசக்தி விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டன. தலா 90,000 மெட்ரிக் தொன் கொண்ட இரண்டு மசகு எண்ணெய் கப்பல்கள் வரவிருந்தன. அதற்கு மேலதிகமாக ஒரு பெட்ரோல் மற்றும் டீசல் கப்பல் வரவிருந்தது, அது தாமதமானது. அடுத்து ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் கொண்டுவரப்படவிருந்த 35,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய கப்பலும் சற்று தாமதமானது. இருப்பினும், இந்த தட்டுப்பாட்டைப் போக்க தேவையான இடங்களை எவ்வாறு நிரப்புவது என்று நாம் ஆராய்ந்தோம். ஒரே நேரத்தில் எம்மால் பெருமளவிலான அளவைக் கொண்டுவர முடியுமா? பாரிய அளவில் கொண்டு வந்து சேமித்து வைக்க முடியாது. ஒரு கப்பல் துறைமுகத்தில் எண்ணெயை இறக்கிவிட்டுச் செல்லும் போதே, அடுத்த கப்பல் வருவதற்கு நாம் எவ்வாறு ஏற்பாடு செய்வது? பொதுவாக ஒரு எண்ணெய் கப்பலை இறக்குவதற்கு சுமார் 8 நாட்கள் ஆகும். அந்த 8 நாட்கள் வரை அந்த இடம் முடக்கப்பட்டிருக்கும். வேறு எவரும் அங்கு வர முடியாது. எனவே, கப்பல்களை மிகச் சரியாக வரிசைப்படுத்தி, எங்கே இடம் காலியாகிறது என்பதைப் பார்த்து நாம் செயற்பட்டு வருகிறோம். புதிய டெண்டர்கள் மூலம் இந்தத் தடைகளைத் தவிர்க்க நாம் முயற்சி செய்தோம். மார்ச் 5 ஆம் திகதியே நாம் டெண்டர்களைக் கோரினோம். மிகவும் முன்கூட்டியே தயார் நிலையில் இருந்தோம். எங்கு நெருக்கடி ஏற்படும் என்பதை நாம் உணர்ந்தோம். புஜைராவிலிருந்து வரும் இரண்டு மசகு எண்ணெய் கப்பல்களில் சிக்கல் எழக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டோம். இந்தக் மசகு எண்ணெயிலிருந்தே நமக்குத் தேவையான உலை எண்ணெய் (Furnace oil), ஜெட் ஏ-1 (Jet A-1), டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஐந்திற்கும் தேவையான டெண்டர்களை நாம் மார்ச் 5 ஆம் திகதி கோரினோம். அப்படியென்றால், நாம் இந்த நெருக்கடியை முன்கூட்டியே கணிக்கவில்லையா? முன்கூட்டியே கணித்துத்தான் அந்த நடவடிக்கைகளை எடுத்தோம். உலகில் இவ்வாறான சூழல் நிலவும் போது ஒரு கறுப்புச் சந்தை உருவாகும் என்பது நமக்குத் தெரியும். அதுவே இயல்பு. எமது முதல் தேவை வலுசக்தியைத் தொடர்ச்சியாக வழங்குவதாகும். தடங்கலற்ற வலுசக்தி விநியோகமே எமது நோக்கம். அதற்கான இரண்டாவது நடவடிக்கையாக, கடந்த வாரம் அமைச்சரவையில் ஒரு விசேட குழுவை நியமிக்கத் தீர்மானித்தோம். பல்வேறு நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். இந்தக் குழுவில் அரசியல் தலையீடுகள் இல்லை. சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி, அந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மை, நிதி நிலைமை மற்றும் நாம் கோரும் திகதிக்கு அவர்களால் வர முடியுமா என்பது குறித்துக் கவனம் செலுத்தப்படும். துறைமுகத்தில் குறிப்பிட்ட சில தினங்களில் மட்டுமே இடவசதி இருக்கும் என்பதால் அதற்குப் பொருத்தமான கப்பல்களுக்கு அனுமதி வழங்க நாம் தயாராக உள்ளோம். அதன்படி சில யோசனைகள் முன்வைத்துள்ளன. நியமிக்கப்பட்ட குழு அவற்றை ஆராய்ந்து வருகிறது. அதனடிப்படையில் ஒரு மசகு எண்ணெய் கப்பலுக்கு அனுமதி வழங்க வாய்ப்புள்ளது. அநேகமாக 12 ஆம் திகதிக்கு முன்னதாக ஒரு மசகு எண்ணெய் கப்பலை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். இந்த அனைத்து மாற்று வழிகளும் ஒரே நேரத்தில் வெற்றியடைந்தால், மேலதிக நிலை கூட ஏற்படலாம். ஆனால் நாம் அந்த அபாயத்தை எதிர்கொள்கிறோம். இதில் ஒன்று தோல்வியடைந்தாலும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். மேலதிக நிலையை விட தட்டுப்பாடு ஏற்படுவதே நமக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். சில கப்பல்கள் துறைமுகத்தில் சிலகாலம் தாமதிக்க நேரிடும், அதற்காக நாம் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் நாம் அதற்குத் தயாராகவே இருக்கிறோம். “கப்பலைக் கொண்டு வந்து பல நாட்கள் வைத்திருந்து பணத்தைச் செலுத்தினார்கள்" என்று பின்னர் கூற வேண்டாம் என்பதற்காகவே இவற்றை இப்போதே கூறுகிறேன். யுத்தத்தின் தன்மையை எவராலும் கணிப்பிட முடியாத ஒரு சூழல் எழுந்துள்ளது. எனவே, எடுக்கக்கூடிய அனைத்து மாற்று நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம். இதற்கு இணையாக நாம் ஏற்றுமதியாளர்களைச் சந்தித்துப் கலந்துரையாடினோம். 5 தனியார் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடுகின்றன. ஏற்றுமதித் தொழில்துறையினருக்குத் தேவையான எரிபொருளை வழங்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு உடனடியாக அனுமதிகளை வழங்கினோம். பொதுச் சந்தைக்கு எரிபொருளை வெளியிட அவர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் நேற்று முன்தினம் முதல் ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்க அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒரு தனியார் நிறுவனம் கொள்வனவு செய்வது எங்களை விட எளிதானது. அவர்கள் தங்களுக்கு மட்டுமே பொறுப்புக்கூற வேண்டியவர்கள். ஆனால் நாங்கள் உங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும். எனவே, தனியார் நிறுவனங்கள் அவற்றை விரைவாகக் கொண்டு வந்துள்ளன. அதன்படி அவர்கள் ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்கி வருகின்றனர். அடுத்ததாக, நாடுகளுக்கு இடையிலான உறவுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நாங்கள் சிந்தித்தோம். ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. அவை இந்த மாதம் 11-ஆம் திகதிதான் நீக்கப்பட்டன. 'ஏன் எம்மால் ரஷ்யாவுடன் முன்னோக்கிச் செல்ல முடியவில்லை?' எனச் சிலர் கேட்பதை நான் கண்டேன். ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், எமது ஏற்றுமதியில் 25% அமெரிக்காவிற்குச் செல்கிறது. அண்டை நாடுகளுடனான வரிக் கொள்கை தொடர்பான பிரச்சினை எழுந்தபோது, ரஷ்யாவுடனான எமது கொடுக்கல் வாங்கல்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுப்படுத்த வேண்டியிருந்ததை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள். எனவே நாம் இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வரிக் கொள்கை விவகாரத்தில் இங்கு எவ்வளவு கூச்சல் எழுப்பப்பட்டது? அப்போது, 'ஏன் அமெரிக்காவுடன் இணக்கமாகச் சென்று இப்பிரச்சினையைத் தீர்க்கவில்லை?' எனக் கேட்டார்கள். இப்போது, 'ஏன் ரஷ்யாவுடன் இணக்கமாகச் சென்று இதனைத் தீர்க்கவில்லை?' எனக் கேட்கிறார்கள். இந்த பாராளுமன்றத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு வேடிக்கையான விடயம். எனவே, வரிப் பிரச்சினையைத் தீர்ப்பது போலவே, ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதும் எமக்கு அவசியமானது. அதற்கான திறந்த வாய்ப்பு எமக்கு 11-ஆம் திகதிதான் கிடைத்தது. அன்று முதல் நாம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். அந்தப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அது குறித்த அறிக்கையை மிக விரைவில் உங்கள் முன் சமர்ப்பிக்க முடியும். அதற்கமைய, வலுசக்தி துறையில் ஏற்படக்கூடிய சிக்கல்களைக் கட்டுப்படுத்த ஒரு அரசாங்கமாக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் சரியான நேரத்தில் எடுத்துள்ளோம் என்பதை நான் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன். அடுத்த முக்கியமான பிரச்சினை விலை தொடர்பானது. விலை மாற்றத்திற்குச் சில காரணங்கள் அமைகின்றன. டொலரின் பெறுமதி அதிகரிப்பது ஒரு முக்கிய காரணியாகும். டொலர் பெறுமதி உயர்ந்தால், எமது எரிபொருள் விலையும் உயரும். இரண்டாவது விடயம், உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தால், எமது விலையும் உயரும். இவை தவிர வரிகளும் உள்ளன. 2022 மற்றும் 2023 காலப்பகுதியில் வலுசக்தி துறையில் ஏற்பட்ட நெருக்கடிக்கு, உலகளவில் எரிபொருள் விலை அதிகரித்தது காரணமல்ல. டொலரின் பெறுமதி அதிகரித்ததே பிரதான பிரச்சினையாக இருந்தது. உதாரணமாகச் சொல்வதானால், 185 ரூபாவாக இருந்த டொலர் 372 ரூபாய் வரை அதிகரித்தது. கறுப்புச் சந்தையில் அது 400 ரூபாய் வரை சென்றது. அன்று 137 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் பெட்ரோல் 420 ரூபாய் வரை அதிகரித்தது. எனவே, அன்று உலக சந்தை விலை மாற்றத்தை விட, டொலர் பெறுமதி 185 இலிருந்து 372 ஆக உயர்ந்ததே பாதிப்பை ஏற்படுத்தியது. 95 வகை பெட்ரோல் 160 ரூபாவிலிருந்து 450 ரூபாய் வரை (279%) அதிகரித்தது. சாதாரண டீசல் 104 ரூபாவிலிருந்து 400 ரூபாய் வரை அதிகரித்தது. இதன்படி, டொலருக்கு நிகரான ரூபாவின் வீழ்ச்சியே எரிபொருள் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்பது தெளிவாகிறது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ளது. மார்ச் 02 முதல் மார்ச் 18 வரை 92 வகை பெட்ரோல் 55% அதிகரித்துள்ளது. 95 வகை பெட்ரோல் 65% அதிகரித்துள்ளது. மார்ச் 02 அன்று 114 ரூபாவாக இருந்த டீசல், மார்ச் 18 அன்று 195 ரூபாவாக (74%) அதிகரித்துள்ளது. மசகு எண்ணெய் (Crude oil) விலை 81 டொலரிலிருந்து 114 டொலர் வரை (40%) உயர்ந்துள்ளது. எரிபொருள் விலையைக் கணக்கிடுவதற்கான ஒரு எளிய சூத்திரத்தை நான் கூறுகிறேன்: ஒரு டொலரால் எண்ணெய் விலை அதிகரித்தால், எமது நாட்டில் எரிபொருள் விலை இரண்டு ரூபாவால் அதிகரிக்கும். இதுதான் அந்தச் சூத்திரம். தற்போது விலை 90 இலிருந்து 139 ஆக, அதாவது 49 டொலர்களால் அதிகரித்துள்ளது. அப்படியென்றால் விலை எத்தனை ரூபாவால் உயரும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். டீசல் விலை 84 டொலர்களால் அதிகரித்துள்ளது. அதனை இரண்டால் பெருக்கினால் டீசல் விலை உயர்வை எம்மால் விளங்கிக்கொள்ள முடியும். நீங்கள் ஏற்றுமதியாளர்களிடம் கேட்டுப் பாருங்கள், அந்த சேமித்து வைக்கும் நிறுவனங்கள் ஏற்றுமதியாளர்களுக்கு எந்த விலைக்கு எரிபொருள் வழங்குகின்றன என்று. அதன் மூலம் சந்தை விலை என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும். அவர்கள் கொண்டு வந்து வழங்குகிறார்களே, அந்த விலையைப் பாருங்கள். எனவே, டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததை விட, எரிபொருள் விலை அதிகரித்தமையே எமக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மேலும் ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது நாம் நீண்டகால டெண்டர்களை 2.5 டொலர் பிரீமியம் (Premium) தொகைக்கே வழங்கியுள்ளோம். பொதுவாக அது 3 டொலருக்கும் குறைவு. ஆனால் இப்போது அந்த பிரீமியம் தொகை 40 டொலராக உயர்ந்துள்ளது. ஏன் அப்படி? அவர்களுக்குத் தங்களைப் பற்றிய பாதுகாப்பு தேவைப்படுகிறது. பல்வேறு நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு போட்டி நிலவுகிறது. சில இடங்களில் பிரீமியம் தொகை 31, 35, 45 டொலர் வரை சென்றுள்ளது. அப்படியானால், உலக சந்தையில் விலை அதிகரிப்பதும், பிரீமியம் தொகை உயர்வதும் எமது எரிபொருள் சந்தையில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிந்தித்துப் பாருங்கள். இதன் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள நாடுகள் எரிபொருள் விலையை அதிகரிப்பது குறித்து தீர்மானம் எடுத்துள்ளன. அதன்படி, சுமார் 6% முதல் 50% வரை எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. சில நாடுகளில் 6%, அதிகபட்சமாக தற்போது 50% வரை விலை உயர்ந்துள்ள நாடுகளும் உள்ளன. குறிப்பாக எமது நாட்டில் எரிபொருள் விலை சராசரியாக 8% அளவிலேயே அதிகரித்துள்ளது. ஆனால் உலகில் 49% வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளைத் தவிர, ஏனைய அனைத்து நாடுகளும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளன. தற்போது நாம் இந்த விலை தொடர்பான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளோம். எமது எரிபொருள் விநியோகத்தில் 57 சதவீதத்தை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வழங்குகிறது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாத்திரம் எம்மிடம் இருந்திருந்தால், ஒரு காலத்தில் நட்டமடைந்து மறு காலத்தில் இலாபம் ஈட்டி இதனை முகாமைத்துவம் செய்திருக்க முடியும். ஆனால் எமது சந்தையில் 43 சதவீதம் தனியார் துறையிடம் உள்ளது. தனியார் துறை என்ன கூறுகிறது? 'இந்தத் தருணத்தில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு சந்தையில் சரியான விலை கிடைக்காவிட்டால், நாம் எரிபொருளை இறக்குமதி செய்ய மாட்டோம்' என்கிறார்கள். அது நியாயமானது. அவர்களின் கணக்கீட்டின்படி, ஒரு கப்பல் மூலம் அவர்களுக்கு ஏற்படும் நட்டம் 55 மில்லியன் டொலர்கள். இவ்வளவு நட்டத்தை ஏற்றுக்கொண்டு யாரும் எரிபொருளைக் கொண்டு வரமாட்டார்கள். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் மட்டும் சந்தை இருந்திருந்தால், உலக சந்தையில் விலை கூடும்போது சற்று குறைவாக விற்று, விலை குறையும்போது சற்று அதிகமாக விற்று சமநிலைப்படுத்தியிருக்கலாம். அவ்வாறு செய்து ஆண்டிறுதியில் இலாப நட்டத்தைக் கணக்கிடலாம். ஆகவே, எமது எரிபொருள் விநியோகத்திற்கு அந்தத் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் அவசியம். அவர்கள் எவ்வாறு பங்களிக்க முடியும்? தமது செலவுக்கு ஏற்ப விற்பனை செய்ய வாய்ப்புக் கிடைத்தால் மட்டுமே அது சாத்தியம். எனவே, எரிபொருள் விலை குறித்து நாம் மிக விரைவில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தற்போது எமது சட்டத்தின்படி ஒரு பிரச்சினை உள்ளது. அதாவது, ஒப்பந்தங்கள் மூலம் விலையை அதிகரிக்க நிறுவனங்களுக்கு நாம் அனுமதி வழங்கியுள்ளோம். ஆனால், பெட்ரோலியக் கூட்டுத்தாபனச் சட்டத்தின்படி, அதிகபட்ச விலையைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. நாம் இந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தாலும், சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்யவில்லை. அதிகபட்ச விலையை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமே தீர்மானிக்க வேண்டும். ஆனால் ஒப்பந்தத்தில் அவர்கள் விலையைத் தீர்மானிக்கலாம் என்று உள்ளது. இது குறித்து நாம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறோம். ஒருவேளை, கூட்டுத்தாபனத்திற்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையிலான விலை வித்தியாசம் 100 அல்லது 150 ரூபாயாக இருந்தால் என்னவாகும்? அப்போது பொதுமக்கள் தனியார் நிறுவனங்களை நாடிச் செல்ல மாட்டார்கள். சந்தை விலை அதிகரிப்புக்கு ஏற்ப 100 - 150 ரூபாய் வரை வித்தியாசம் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் யாரும் தனியார் நிறுவனங்களுக்குச் செல்ல மாட்டார்கள். 100 - 150 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. அதனால் ஆறு, ஏழு மணித்தியாலங்கள் காத்திருந்தாவது பெட்ரோலியக் கூட்டுத்தாபன வரிசைக்கே வருவார்கள். எனவே, இந்த இரண்டுக்கும் இடையிலான விலை வித்தியாசத்தைக் குறைக்க நாம் முயற்சிக்க வேண்டும். அதேபோல் நாம் இன்னுமொரு விடயத்தையும் சிந்தித்தோம். எமது எரிபொருள் மூலம் கிடைக்கும் வரி வருமானம் மாதத்திற்கு 20 பில்லியன் ரூபாயாகும். கடந்த ஆண்டு டீசல் வரி மூலம் 240 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இந்த வரியைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள் – 2023 ஆம் ஆண்டில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் 884 பில்லியன் ரூபாய் கடன் திறைசேரியால் பொறுப்பேற்கப்பட்டது. பொதுவாக 884 பில்லியன் ரூபாய்க்கு வட்டி மட்டும் செலுத்த ஆண்டுக்கு 100 பில்லியன் ரூபாய் தேவைப்படும். இதனால்தான் வரிகள் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகை திறைசேரிக்கு வருகிறது. இந்த வரிகள் மூலம் மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்க முடியுமா என்று நாம் பார்க்கிறோம். ஆனால் சிலர் இதற்கு உடன்படுவதில்லை. பலர் என்ன சொல்கிறார்கள்? வரியில் நிவாரணம் வழங்கினால் என்ன நடக்கும்? அதிக எரிபொருள் பயன்படுத்துபவருக்கே அதிக இலாபம் கிடைக்கும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் எமது கொள்கையின்படி, இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கே மானியங்கள் வழங்கப்பட வேண்டும். எரிபொருள் விலை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுகிறது. நிவாரணங்கள் தேவைப்படும் மக்களுக்கு சலுகைகளை வழங்க முடியுமா? அதுதான் சிறந்தது. ஆனால் அவர்களுக்கு அதனை வழங்குவது சிக்கலானது. ஏனெனில், முறையாகத் துறைமுகங்களில் இருந்து வெளியேறும் படகுகளுக்கு எரிபொருளை வழங்க முடியும். ஆனால் மீன்பிடித் துறைமுகங்களுக்கு வெளியே ஏராளமான படகுகள் உள்ளன. அவர்களுக்கு எப்படி சலுகை வழங்குவது? வீதிகளில் வாகனங்களில் பேக்கரி தயாரிப்புகளை விற்பனை செல்பவர்களுக்கும் சலுகை வழங்குவதா? ஆனால் அவர்கள் எங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்? முறையற்ற பொருளாதாரத்தின் (Informal Economy) அளவு மிகப்பெரியது, அதேபோல் சிக்கலானது. அதற்கான தரவுகள் இல்லை. எனவே முறையான பொருளாதாரத்தில் உள்ளவர்களுக்கு சலுகை வழங்க முடிந்தால் அது நல்லது. முறையாக மீன்பிடித் துறைமுகங்களில் பதிவு செய்த மீனவர்களுக்கு சலுகை வழங்க முடியும். ஆனால் முறையற்ற பொருளாதாரத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கும் சலுகை தேவை. அது ஒரு சிக்கலான விடயம். எனவே நாம் இவை இரண்டையும் பற்றிச் சிந்தித்து வருகிறோம். அத்துடன் நாம் அடுத்த எரிபொருள் விலை குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. அந்த முடிவை மிக விரைவில் எடுக்க வேண்டும். ஏனெனில் தனியார் நிறுவனங்கள் இப்போது நட்டத்தை ஏற்கத் தயாராக இல்லாததால், அவர்கள் தங்கள் எரிபொருளை வழங்குவதில்லை. பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தை ஏற்கலாம். நாம் 800 பில்லியன் ரூபாய்க்கும் மேல் நட்டமடைந்த அனுபவம் நமக்கு உண்டு. எனவே விலை குறித்து நாம் ஒரு முடிவை எடுக்க வேண்டும். அங்குதான் QR குறியீடு முக்கியத்துவம் பெறுகிறது. அது ஏப்ரல் 1-ஆம் திகதிக்குள் நடைமுறைக்கு வராமல் இருந்திருந்தால், மார்ச் 27, 28 திகதிகளில் எரிபொருள் நிலையங்களில் மக்கள் மோதிக்கொண்டிருப்பார்கள். அதனால்தான் நாம் QR முறையைத் தொடங்கினோம். இது எரிபொருள் நிலையங்களை மூடியோ அல்லது விநியோகத்தை நிறுத்தியோ செய்யப்படவில்லை. எனவே இது முழுமையாகச் செயல்பட சிறிது காலம் எடுத்தது. இப்போது அது 100 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக டிஜிட்டல் அமைச்சு கூறுகிறது. இந்தச் சூழலில் யாராவது எரிபொருள் நிலையங்களில் சட்டவிரோதமாக மேலதிக எரிபொருள் வழங்கினால், அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். யாராவது எரிபொருளைச் சேமித்து வைத்திருந்தால், அதனை முற்றுகையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. “கறுப்பு பொருளாதாரத்திற்கு” நாம் இடமளிக்க மாட்டோம். தடையற்ற வலுசக்தி விநியோகமே எமது நோக்கம். எரிபொருள் விலையை உலகச் சந்தை விலைக்கு நிகராக மாற்றினால், நமது பொருளாதாரத்தின் மறுபக்கம் சுருங்கும். அப்போது அங்கிருந்து வரும் வரி வருமானம் வீழ்ச்சியடையும். எரிபொருள் சந்தையிலிருந்து நமக்கு மாதத்திற்கு 20 பில்லியன் கிடைக்கிறது. மறுபக்கத்தில் வரும் வருமானத்தைப் பாதுகாக்க நாம் இதனை ஈடுசெய்ய வேண்டுமா? அல்லது இதைக் குறிப்பிட்ட அளவு குறைத்து இரு பக்கமும் இயங்குவதற்கான வாய்ப்பை உருவாக்குவதா? என்பது குறித்து ஆலோசித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். நாம் இது குறித்து மீளாய்வு செய்து வருகிறோம். விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும். எமது சந்தையில் அதிகப்படியான எரிவாயுவை லிட்ரோ நிறுவனமே வழங்குகிறது. அதற்கு ஒரு நிறுவனம் மட்டுமே எரிவாயுவை விநியோகிக்கிறது. அதேபோல் தனியார் சந்தையில் எரிவாயு வழங்குபவர்களும் உள்ளனர். எமது இந்த விநியோகச் சங்கிலியில் கட்டுப்பாட்டு ஏகபோக குழுக்கள் உருவாகியிருந்தன. எரிபொருள் விநியோகம், எரிவாயு விநியோகம், கடவுச்சீட்டு தயாரிப்பு, ஓட்டுநர் உரிமம் வழங்குதல் இவை அனைத்திலும் ஏகபோக உரிமைகள் இருந்தன. ஒரே விநியோகஸ்தர் 20, 30 ஆண்டுகளாக விநியோகம் செய்து வந்துள்ளார். இவை அரசியல் அதிகாரத்தின் ஆசீர்வாதத்துடன் அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியவை. நாம் இவை அனைத்தையும் நிறுத்துவோம். இதன் காரணமாக என்ன நடக்கிறது? இந்த முறையை மாற்றியதும், இந்த முறையிலிருந்து சிறிது விலகியதும் அவர்கள் கூச்சலிடுகிறார்கள். பணம் கொடுத்து கூச்சலிட வைக்கிறார்கள். இதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தவறான தகவல்களை வழங்கி பிழையான கருத்துக்களை உருவாக்குகிறார்கள். எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளைத் தூண்டுகிறார்கள். கடவுச்சீட்டு நெருக்கடியை உருவாக்குகிறார்கள். இந்த கார்டெல்கள் அரசியல் இயக்கங்களைக் கையிலெடுத்துள்ளன. ஊடக நிறுவனங்களுக்குப் பணம் வழங்குகின்றன. சட்டவிரோத வர்த்தகர்களை வைத்துள்ளன. அரச அதிகாரிகளுக்குச் சலுகைகளை வழங்குகின்றன. இதுதான் உண்மை. ஆனால் நாம் இதனை நிறுத்துவோம். இது கடினமானதுதான், அந்த 'வசதி' இப்போது இல்லை. ஆனால் ஏகபோகங்களை நிறுத்தாவிட்டால் இன்று எரிவாயு இருந்திருக்காது. அத்துடன் விநியோகச் சங்கிலியை ஒரு பிராந்தியத்திற்குள் மட்டும் மட்டுப்படுத்தாமல், பல்வேறு பிராந்தியங்களில் இருந்து பெற்றுக்கொள்வதன் மூலம் விநியோகத்தைப் பன்முகப்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம். அப்போது எந்தப் பிராந்தியத்தில் நெருக்கடி வந்தாலும் நம்மால் தடையின்றிச் செயல்பட முடியும். எரிவாயு குறித்து தற்போது பிரச்சினை எதுவுமில்லை. மார்ச் மாதத்திற்குத் தேவையான எரிவாயு வழங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி மாலைதீவுக்கு அருகில் மிதக்கும் களஞ்சியங்களில் உள்ளன. இன்னொரு பகுதி இன்று கப்பலில் இருந்து இறக்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு வரவிருக்கிறது. எனவே, இந்த நெருக்கடியின் அளவிடக்கூடிய தூரம் வரை எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. காரணம், ஒரு தனியார் நிறுவனம் வழங்கிய 20 சதவீத எரிவாயு விநியோகத்தை மேலதிகமாக நாமே வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்தத் தனியார் நிறுவனத்திற்கு அதிக இலாபம் கிடைத்தது தொழிற்சாலைகளுக்கான எரிவாயு விநியோகத்தில்தான். எனவே, இப்போது அவர்களுக்கு எரிவாயு வழங்கும் பொறுப்பும் எமக்கு வந்துள்ளது. அந்த நிறுவனம் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஊடாக இறக்குமதி செய்யும் உரிமையைக் கொண்டிருந்தது. அந்த இறக்குமதி அளவில் சந்தைக்கு விநியோகிக்கக் கூடியது 20 சதவீதமே. ஆனால், கடந்த காலம் முழுவதும் அவர்கள் இறக்குமதி செய்யவில்லை. இதனால் நாம் அவர்களுக்காக சந்தையைத் திறந்து விட்டோம். ஹம்பாந்தோட்டை சேமிப்பு நிலையத்திற்கு இருந்த தடைகளையும் நீக்கினோம். ஏனெனில், எமக்குத் தேவை எரிவாயுவைக் கொண்டு வருபவர் யார் என்பது அல்ல, நாட்டில் தட்டுப்பாடின்றி எரிவாயு விநியோகிக்கப்படுவதே ஆகும். வலுசக்தி விநியோகச் சங்கிலியைத் தடையின்றி முன்னெடுப்பதற்கு எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம். போர் மேலும் நீடித்தால் மேலதிக பிரச்சினைகள் உருவாகலாம். இருப்பினும், எமக்குக் கணிக்க முடிந்த எதிர்காலம் வரை நாம் திட்டமிட்டுள்ளோம். நமது நாட்டின் பொருளாதாரம் சிறந்த தரவுகளைப் பதிவு செய்த ஆண்டு 2025 ஆகும். வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை 5 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருக்க அனைத்து அரசாங்கங்களும் முயற்சித்தன. 2015-இல் 6 சதவீதத்தை இலக்காகக் கொண்டனர். ஆனால் அது 10.89 வரை உயர்ந்தது. எனினும், 2025 வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை 2.4 சதவீதத்திற்குக் குறைக்க எம்மால் முடிந்தது. நடைமுறைக் கணக்கில் மிகையை பேண அனைத்து அரசாங்கங்களும் முயன்றன. ஆனால் நான்கு சந்தர்ப்பங்களில் மட்டுமே அது முடிந்தது. அந்த நான்கு சந்தர்ப்பங்களிலும் அது 500 மில்லியன் டொலர்களுக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் நாம் 1.8 பில்லியன் டொலர் மிகையைப் பதிவு செய்துள்ளோம். இது பொருளாதாரத்தின் மிக முக்கியமான காரணியாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு, எமது பொருளாதாரம் மிகவும் மோசமான முடிவுகளால் வீழ்ச்சியடைந்தது. நெருக்கடிக்குத் தீர்வாகப் பணத்தை அச்சிட்டதால் பணவீக்கம் வேகமாக உயர்ந்தது. பணவீக்கம் 170 சதவீதம் வரை சென்றது. வரிச் சீர்திருத்தங்களின் போது எடுக்கப்பட்ட முடிவுகளால் மேலும் பல நெருக்கடிகள் உருவாயின. ஆனால் இன்று நாம் நமது வருமானத்தை மிகச் சிறப்பாகச் சேகரித்துள்ளோம். எமது வரி வருவாய் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 2025-இல் மொத்த வருவாய் 17.5 சதவீதமாக இருந்தது. 1996-இல் 21 சதவீத வருவாய் ஈட்டப்பட்டது, அதற்கடுத்ததாக அதிக வருமானம் ஈட்டப்பட்ட ஆண்டு 2025 ஆகும். எனவே, பல்வேறு துறைகளில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, வங்கி வட்டி விகிதங்களை ஒற்றை இலக்கத்தில் பேணி எமது பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டியுள்ளோம். எமது கடன் மறுசீரமைப்பின் போது, எயார் லங்கா நிறுவனத்தின் 175 மில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பு ஒரு சிக்கலாக இருந்தது. அதன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட கடந்த காலங்களில் அமைச்சரவை அங்கீகாரத்திற்கு அனுப்பினோம். இன்று அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது. எமது கடன் தரவரிசை வீழ்ச்சியடைய கடன் மறுசீரமைப்பைச் செய்ய முடியாமல் போனதும் ஒரு காரணமாக இருந்தது. நாம் பொருளாதாரத்தின் சிறந்த நிலையை எட்டியுள்ளோம். இந்த நிலை இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகள் நீடித்திருந்தால், உள்நாட்டு அல்லது வெளிநாட்டு எந்தவொரு அதிர்ச்சியையும் தாங்கக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்கியிருக்க முடியும். இருப்பினும், 'டித்வா' சூறாவளி வந்தது. அதனை நாம் கட்டுப்படுத்தினோம். இப்போது ஒரு வெளிநாட்டு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இங்கு எமது விநியோகச் சங்கிலி குறித்து நாம் சிந்திக்கிறோம். இதற்காக வர்த்தக அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் விநியோகச் சங்கிலி மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்த குழுவொன்றை நியமித்துள்ளோம். பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைச் சேமிப்பது குறித்துத் திட்டமிட்டுள்ளோம். பொருட்கள் விநியோகம் குறித்தும் திட்டமிடுகிறோம். புறக்கோட்டைக்கு வரும் பொருட்கள் கிராமங்களுக்குச் செல்வது எப்படி என்பது குறித்தும், தேயிலைத் தோட்டத் தளிர் இலைகள் தொழிற்சாலைக்கு வருவது குறித்தும் ஆலோசித்துள்ளோம். தேயிலை விலை இன்னும் குறையவில்லை, ஆனால் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படலாம். ஆடைத் துறையில் இதுவரை பாதிப்பு இல்லை. எரிபொருள் நெருக்கடி அனைத்து இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீன்பிடி மற்றும் விவசாயத் துறைகளில் எழக்கூடிய பிரச்சினைகள் குறித்துத் தகவல்களைச் சேகரித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாம் தேவையான முடிவுகளை எடுப்போம். அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது, சில நாட்கள் தேவைப்படும். அடுத்ததாக அரச சேவையைப் பேணுவது குறித்து ஆராயப் பிரதமரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அரச சேவைக்கு வலுசக்திக்காகப் பெருமளவு செலவாகிறது. எனவே, அமைச்சுகளுக்கு வலுசக்தி பயன்பாட்டில் குறைந்தது 25 சதவீதத்தையாவது சேமிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல், வெளிநாட்டு அமைச்சரும் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடி நிலைமையைச் சீர்செய்யத் தேவையான தலையீடுகளைச் செய்து வருகிறார். பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான பாதுகாப்புப் பிரிவினர் எமது கடல் எல்லையைப் பாதுகாக்கத் தலையீடுகளைச் செய்கின்றனர். அவர்களிடம் இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பதாகக் கூறியுள்ளனர். இக்காலப்பகுதியில் 270 கிலோ கொகேன் போதைப்பொருளை எம்மால் கைப்பற்ற முடிந்தது. பாதுகாப்பு வலைப்பின்னல் உடைவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். துறைமுகம் மற்றும் விமான நிலையத்திற்குத் தேவையான பாதுகாப்பு எரிபொருள் இருப்பைப் பேண அறிவுறுத்தியுள்ளோம். சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை, இரண்டு மாதங்களில் எண்ணெய் தீர்ந்தாலும் சுகாதார கட்டமைப்பைத் தொடர்ந்து நடத்த மேலதிகமாக ஆறு வாரங்களுக்கான பாதுகாப்பு கையிருப்புக்களைச் சேமித்து வைத்துள்ளோம். இறுதியாக, பொருளாதாரத்தின் இந்தச் சீரான பயணத்தில் சில தடைகளும் மோதல்களும் ஏற்படலாம். வலுசக்தி விலை அதிகரிப்பால் சில துறைகளில் பாதிப்பு ஏற்படும். அந்தப் பாதிப்பைச் சீர்செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அமைச்சர்களின் தலைமையில் அந்தந்தத் துறையினரை அழைத்து ஆலோசித்து வருகிறோம். மக்களுக்கு நாம் கூறுவது என்னவென்றால், இந்த உலகளாவிய நெருக்கடியால் எமக்குச் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த நாம் அதிகபட்ச முயற்சி எடுக்கிறோம். அமைச்சரவை, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் பல நாட்களாகத் தூக்கமின்றி நாட்டிற்காக உழைக்கின்றனர். அது அவர்களின் சம்பளத்திற்காக மட்டுமல்ல, நாட்டின் மீதான பொறுப்பிற்காகவுமாகும். எனவே, விநியோகத்தில் ஏதேனும் தடை அல்லது எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டால், அதனை நாம் அனைவரும் இணைந்து சீர் செய்வோம். அதற்காக அனைத்து மக்களின் ஒத்துழைப்பையும் தலையீட்டையும் எதிர்பார்த்து விடைபெறுகிறேன். https://www.virakesari.lk/article/241498
  21. ஆகக்குறைந்தது 2ம் படச்சமாக, அதில் இருந்த தமிழ், சிங்கள அதிகாரிகளின் வழியாக. அது வாய்வழிதான். அவர்கள் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனது உற்ற உறவு அ ந்த நேரத்தில் கொழும்பில் அரச நிர்வாகத்தில் அமைச்சரவைக்கு அண்மையான நிலை உள்ள பதவியில இருந்தது. காலம் கடந்து என்னுடன் இணைந்த உறவின் உற்ற உறவின் (அவர் அந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் உணர்திறன் உள்ள பொறுப்பில்) வழியாகவும் இப்படி நடந்ததாக அறிந்து கொண்டேன். ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் என்று சொன்ன பின், சொந்த நாட்டில் நா தெரியாமல் .. விளக்கம் கொடுப்பது.ஏன் சுற்றிவளைத்து. ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் என்று சொன்ன பின், சொந்த நாட்டில் நடந்தது தெரியாமல் .. விளக்கம் கொடுப்பது சுற்றிவளைத்து. இதில் இருந்து தெரிவது அமைச்சரவை கூட்டம் என்பதை பற்றியே எதுவும் தெரியாது என்பதும். நன்றி. நீங்கள் சொன்னது எல்லாவற்றையும் முரணாக்கி, (ஆங்கிலமும், தமிழும்) விளங்காமல் சொல்வதாக வெளியில் காட்டி கொண்டதுக்கு. இதில் இருந்து தெரிவது அமைச்சரவை கூட்டம் என்பதை பற்றியே எதுவும் தெரியாது என்பதும். இனி ஏன் ஆதாரம்?
  22. அப்ப கூட... கடைசி வரைக்கும், பணம் கொடுக்கிறவனை பிடிக்க மாட்டீங்க... @goshan_che 😂 தேர்தல் கமிஷனின் அதிரடி அறிவிப்பு. ரொம்ப பயங்கரமாக இருக்கப் போகிறது.🤣 இந்த முறைதான்... நேர்மையான ஜனநாயக தேர்தல் நடைபெறப் போகிறது. "ஆவ்"... அவ்வளவும் கனவா... 😂🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.