stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
தமிழகத்தில் 3 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் இடம்: கோத்தகிரி சாலை படம்: எம்.சத்தியமூர்த்தி தமிழினி Updated on: 18 Mar 2026, 4:00 pm 1 min read சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்புக் குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழகம் முழுவதும் 2,160 பறக்கும் படைகள், 2,160 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தற்போது நடைபெற்று வரும் தேர்தல் செலவினக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் கணிசமான அளவு பொருட்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய (18 மார்ச்) நிலவரப்படி, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு ரூ. 42.65 கோடி ஆகும். தமிழகம் முழுவதும் ரூ. 2.37 கோடி ரொக்கமும், ரூ.0.18 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ. 2.88 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.16.42 கோடி மதிப்பிலான விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் ரூ.20.80 கோடி மதிப்பிலான இலவசங்கள் / பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள், சட்டவிரோதப் பணப் புழக்கம், வாக்காளர்களை கவர வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 3 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்
-
பண்புத் தமிழ்
பண்புத்தமிழ் பண்புத் தமிழ் என்பது தமிழர்களின் அறநெறி, கலாச்சாரம், ஒழுக்கம், நாகரிகத்தின் வெளிப்பாடாக அமையும் தமிழ் மொழியின் ஒரு சிறப்புக்கூறு ஆகும். 'பண்பு' என்ற சொல்லுக்குச் சீர்மை, நற்பண்பு, தகுதி என்று பல பொருள்கள் உண்டு. 1. சொற்களில் கண்ணியம் தமிழ் மொழியில் ஒருவரை அழைப்பதிலும், உரையாடுவதிலும் மிகுந்த மரியாதை கையாளப்படுகிறது. நீ என்பதற்குப் பதில் நீங்கள் என்று மரியாதையுடன் அழைப்பது. வா, போ என்பதற்குப் பதில் வாருங்கள், செல்லுங்கள் என விகுதி சேர்த்துப் பேசுவது. பண்பு மரபு எனக் கொள்ளலாம். அறிஞர்களையும் பெரியோர்களையும் 'ஐயா', 'அம்மா' என்று விளிப்பது. 2. இலக்கியங்களில் பண்பாடு சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை, 'பண்பு' என்பது ஒரு மனிதனின் இலக்கணமாகவே போற்றப்படுகிறது. "பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்" (கலித்தொகை) - அதாவது, உலக நடைமுறையை அறிந்து அதற்கேற்ப நடப்பதே பண்பு. "பண்புடையார் பட்டுண்டு உலகம்" - பண்பு உடையவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார் வள்ளுவர். 3. விருந்தோம்பல் தமிழ்ப் பண்பாட்டின் சிகரம் விருந்தோம்பல். வந்தவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பது தமிழர்களின் பண்புத் தமிழ் மரபு. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற வரிகள் உலக மக்கள் அனைவரையும் உறவினர்களாகக் கருதும் உயரிய பண்பைப் பறைசாற்றுகின்றன. 4. பணிவும் அன்பும் "பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற" - பணிவாக நடப்பதும், இனிய சொற்களைப் பேசுவதுமே ஒருவருக்குச் சிறந்த அணிகலன் என்பது தமிழரின் வாழ்வியல் நெறி. 1970ஆம் ஆண்டு வாக்கில், மேற்கத்திய இலக்கியவாதிகள் சொற்களில் கண்ணியம் காக்கப்பட வேண்டுமென்பதற்காக முன்னெப்போதும் இல்லாதபடிக்கு இயக்கமாகக் கட்டமைத்தனர். நம் ஊரில் கால்நடை வணிகம் செய்யும் போது நீங்கள் பார்த்திருக்கலாம். துண்டுக்குள் கைகளை விட்டுக் கொண்டு விரல்களைப் பிடித்தபடி பேரம் பேசிக் கொள்வர். அதாவது, குறிப்பிட்ட விலை என்பது பொது விலை. அந்தப் பொதுவிலைக்கும் மேலாக இவ்வளவு தருகிறேன், குறைவாக இவ்வளவு தருகிறேனெனத் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்வது. இதனால் பொதுவெளியில் இருப்பவர்களுக்கு அந்தப் பேரத்தின் தன்மை தெரிய வாய்ப்பில்லை. அது போலத்தான் இந்த மேற்கத்தியப் பழக்கமும். hand in cap, கையில் தொப்பி இருக்கும். பண்டமாற்று முறையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுத் தொகை, வித்தியாசத்துக்கான தொகையை முடிவு செய்யும் பொருட்டுத் தொப்பிக்குள் கைகளை விட்டு ஒருவர் பணத்தைப் போட ஏற்பிருப்பின் மற்றவர் எடுத்துக் கொள்ள, அத்தருவாயில் வணிகம் முற்றுப்பெறும். குறைவுக்கான தொகை handicapped ஆனது. அதுவே, குறைபாடு உடையவர் handicapped என்றானது. தொப்பியை நீட்டி இரவுபணம் வாங்குதலால் பிச்சைக்காரர் எனும் பொருள்படியும் ஆகிற்று. மாந்தநேயம் வளர வளர, உளவியல்ரீதியாகப் பிற்போக்கானதாக இத்தகைய சொற்கள் உணரப்பட்டன. அதன்நிமித்தம் மேம்பட்டதான, கண்ணியமிகு சொற்கள் புழக்கத்திற்கு வந்தன. அதுதான் மனிதத்தின் மேம்பாடு. ’வறியோர்க்கு உணவு’ எனும் தலைப்பில் மேம்பட்டதான ஒரு செயலைச் செய்வது நன்றன்று. நாம் ஏற்கனவே சுட்டியும் இருந்தோம். ’பசித்தோர்க்கு உணவு’ என்பது போன்ற சொற்களைப் பாவிக்கலாம். எண்ணிப்பாருங்கள். ஒருவர் அந்த நிகழ்ச்சிக்கு வந்து உணவு உண்ணுகின்றார். அந்த நிகழ்வில் உண்டமாத்திரத்திலேயே அவருக்கு “வறியவர்” எனும் முத்திரை விழும். பிறகு அம்முத்திரையின் அடிப்படையில், பகுப்புகள் தோன்றும். தேவைதானா?! சொற்களில் அரசியல் உள்ளது. சொற்களில் பண்பாடு உள்ளது. சொற்களில் எல்லாமும் உள்ளது. முறையான சொற்களைப் பாவிப்பதே ஆன்றோர்க்கழகாகும். சைவம், அசைவம் எனும்போது, மரக்கறி உண்ணுபவரே முதன்மையென்றாகின்றது. மாறாக, கறியர் - அகறியர், புலாலி - அபுலாலி எனச் சொல்லுங்கால் முறை மாறிவிடும். எல்லாம் கட்டமைத்தலே. இஃகிஃகி. 𝐖𝐨𝐫𝐝𝐬 𝐢𝐧𝐟𝐥𝐮𝐞𝐧𝐜𝐞 𝐦𝐢𝐧𝐝𝐬 𝐛𝐞𝐟𝐨𝐫𝐞 𝐚𝐜𝐭𝐢𝐨𝐧𝐬 𝐟𝐨𝐥𝐥𝐨𝐰. -பழமைபேசி. https://maniyinpakkam.blogspot.com/2025/12/blog-post_27.html
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
முன்வரிசையில் தோனி களமிறங்க வேண்டும்: டி வில்லியர்ஸ் யோசனை மும்பை: வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி முன்வரிசையில் களமிறங்குவது சிறப்பாக இருக்கும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக ஜியோ ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் டிவில்லியர்ஸ் கூறியதாவது: வரும் 28-ம் தேதி தொடங்கும் 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் சிறப்பான முறையில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஐபிஎல் போட்டி தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக தோனி விளையாடி வருகிறார். அந்த அணி 5 முறை கோப்பையை வென்றதற்கு தோனியின் பங்களிப்பு அதிகமாகும். கடந்த சில ஆண்டுகளாக அவர் ஆட்டத்தின் கடைசி சில ஓவர்களில் களமிறங்கி பினி ஷருக்கான பணியைச் செய்து வருகிறார். அவர் அப்படி செய்யக் கூடாது. அவர் முன்வரிசையில் வந்து விளையாடுவது அணிக்கு நல்லது. நான்கு, ஐந்து அல்லது ஆறாவது இடங்களில் இறங்கி விளையாடலாம். எப்போதும் முன்வரிசையில் அவர் இறங்கி விளையாட வேண்டும் என்று நான் கூறவில்லை. பேட்டிங் வரிசையில் முன்னதாக இறங்கும்போது அது தாக்கத்தை ஏற்படுத்தும். தோனி கேப்டனாக இல்லாததால் 7 அல்லது 8-வது இடத்தில் இறங்கி விளையாடுகிறார். இந்த வரிசையில் விளையாடும்போது அவருக்கு போதுமான பங்கு இல்லாமல் போய்விடுகிறது என்று நான் நினைக்கிறேன். அவரது பேட்டிங் எவ்வளவு பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும். 44 வயதிலும் தோனியின் பங்கு அணிக்கு கூடுதல் வலுவைப் பெற்றுத் தருகிறது. எனவே, அவர் முன்வரிசையில் களமிறங்கி விளையாடவேண்டும். மேலும், சிஎஸ்கே அணியில் தற்போது சஞ்சு சாம்சன் வந்திருக்கிறார். இந்த சீசனில் அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. பொறுப்பை ஏற்க மிகச் சரியான வீரராக சஞ்சு சாம்சன் இருக்கிறார். அணிக்கு சஞ்சு சாம்சனை அழைத்து வந்த பெருமை தோனியையே சாரும். சரியான நபருக்காக அவர் (தோனி) காத்திருக்கிறார். அழுத்தங்கள் இருக்கும் போட்டிகளில் சஞ்சு சாம்சன் தனக்கான பொறுப்பை உணர்ந்து அதற்கேற்ப விளையாட வேண்டும். அப்போதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும் போட்டிகளை அவரால் எளிதாக கையாள முடியும். அதற்கான சந்தர்ப்பத்தை சஞ்சு சாம்சனுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும் என்று நான் கோருகிறேன். இவ்வாறு டிவில்லியர்ஸ் தெரிவித்தார். ஜெர்ஸி எண் மாறுகிறதா? இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் வீரருமான எம்.எஸ்.தோனியின் ஜெர்ஸி எண் மாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி, இந்திய அணிக்காக விளையாடியபோது 7-ம் எண் ஜெர்ஸியை அணிந்திருந்தார். சிஎஸ்கே-வுக்காக விளையாடும்போது 7-ம் எண் ஜெர்ஸியை அவர் அணிந்துவந்தார். இந்நிலையில், தான் இனிமேல் நம்பர் 7 ஜெர்ஸியை பயன்படுத்தபோவதில்லை என்றும், நம்பர் 8-க்கு மாறப் போவதாகவும் தோனியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் நேற்று தகவல் வெளியாகியுள்ளது. தோனியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் உள்ள பதிவில், “சில எண்கள் உங்களுடன் நீடித்து இருக்கும், அப்படியான எண்களில் ஒன்றுதான் 7. ஆனால் இன்று.. 8-ம் எண்ணுக்கு மாறுகிறேன். இதற்கான காரணத்தை விரைவில் நீங்கள் அறிவீர்கள்” என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அதனுடன் நம்பர் 7-லிருந்து 8-க்கு மாற்றப்பட்ட ஜெர்ஸியின் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. https://www.hindutamil.in/news/sports/dhoni-should-be-in-the-front-row-ab-de-villiers
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
அலி லாரிஜானி படுகொலை எதிரொலி: இஸ்ரேல் தலைநகரில் ஈரான் ‘க்ளஸ்டர் குண்டு’ வீச்சு! டெல் அவிவ்: இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்பெரிய தலைவரான அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் மூத்த தளபதி கோலம்ரெசா சுலைமானி உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது ஈரான். செவ்வாய்க்கிழமை இரவில் நடத்தப்பட்ட இந்த கொத்து குண்டு வீச்சில் 2 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போரில் ஈரான், கொத்து குண்டுகளை அடிக்கடி பிரயோகப் படுத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. “ஈரான் ராணுவம் க்ளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகளை வீசுகிறது அவை நடுவானில் பல்வேறு சிறு சிறு குண்டுகளாகப் பிரிந்து பரந்துபட்ட பகுதியை குறிவைத்து விழுவதால் அவற்றை இடைமறித்து அழிப்பது கடினமாக இருக்கிறது” என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது. இந்தச் சூழலில், மக்கள் தொகை அதிகம் உள்ள டெல் அவிவ் நகரில் இந்த குண்டுகளை நேற்றிரவு ஈரான் ராணுவம் பயன்படுத்திய நிலையில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், இதுவரையிலும் இந்த மோதலில் இஸ்ரேல் தரப்பில் 14 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று மாலை ஈரானின் புஷெர் அணுசக்தி நிலையம் அருகே ஏவுகணை ஒன்று விழுந்தது. ஆனால் இதனால் அணுசக்தி நிலையத்துக்கோ மக்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை ஐஏஇஏ தலைவர் ரஃபேல் க்ராஸி தெரிவித்துள்ளார். மேலும், அணுசக்தி நிலையத்தின் மீது தவறுதலாகக் கூட தாக்குதல் நடந்துவிடக் கூடாது அளவுக்கு மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகள் கவனமாக இருக்கும்படி அவர் வலியுறுத்தியுள்ளார். பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது கூட்டாக தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்க - இஸ்ரேல் நாடுகள், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தை முறியடிக்கவே இத்தாக்குதல் என்று விளக்கியிருந்தது நினைவுகூரத்தக்கது. இதற்கிடையில், ஈரான் வெளியுறவு அமைச்சகம் சார்பில் போர் பதற்றத்தைக் குறைப்பது, மோதலை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பாக வழங்கப்பட்ட அனைத்து ஆலோசனைகளையும் ஈரானின் உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி நிராகரித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உச்ச தலைவராக பதவியேற்ற பின்னர் காமேனி முதன்முறையாக வெளியுறவுக் கொள்கை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர், “அமெரிக்காவும், இஸ்ரேலும் அடிபணியும் வரை அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது என்பது சரியானது அல்ல. அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும்.” என்று கூறியதாகத் தகவல். இருப்பினும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டதற்கான புகைப்பட, வீடியோ ஆதாரம் ஏதும் வெளியிடப்படவில்லை. அவர் நேரில் பங்கேற்றாரா அல்லது வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் பங்கேற்றாரா என்பதுகூட தெரியவில்லை. ஈரான் கடற்கரையை குறிவைக்கும் அமெரிக்கா: போர்ப் பதற்றச் சூழல் சற்றும் குறையாத சூழலில், ஈரானின் கடற்கரை பகுதிகளை அமெரிக்க ராணுவம் குறிவைத்துள்ளது. கடற்கரை பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஈரான் ஏவுகணைக் கப்பல்களை அழித்து ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எண்ணெய் வளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை 3% உயர்ந்தது. பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியதிலிருந்தே எண்ணெய் விலை 45% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் போர் ஜூன் மாதம் வரை நீடிக்கும் பட்சத்தில் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கடும் உணவுப் பஞ்சத்துக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் ஈரான் கடற்கரை பகுதியில் அமெரிக்க ராணுவம் தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. https://www.hindutamil.in/news/world/iran-strikes-tel-aviv-with-cluster-warheads-after-israel-kills-larijani
-
பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது!
இந்திய எல்லைப் பகுதிகளில் இன மோதல்களை தூண்ட கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளித்த 7 வெளிநாட்டினர் கைது புதுடெல்லி: இந்திய எல்லைப் பகுதிகளில் இன மோதல்களை தூண்டும் வகையில் மியான்மர் கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளித்த வெளிநாட்டினர் 7 பேரை தேசிய புலவனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை மார்ச் 27ம் தேதி வரை என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: பிடிபட்டவர்களில் 6 பேர் உக்ரைனை சேர்ந்தவர்கள், ஒருவர் அமெரிக்கர். இவர்கள் மியான்மரில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளித்து எல்லையில் இன மோதல்களை தூண்ட திட்டமிட்டிருந்தனர். டெல்லி, லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து இந்த 7 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் முறையான விசா மூலம் இந்தியா வந்தடைந்தாலும், பாதுகாக்கப்பட்ட பகுதியான மிசோரமுக்கு செல்லத் தேவையான முறையான அனுமதியைப் பெறாமல் அங்கு சென்றுள்ளனர். அங்கிருந்து எல்லை தாண்டி மியான்மருக்குள் நுழைந்து, அங்குள்ள இனவாத ஆயுதக் குழுக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் ஐரோப்பாவில் இருந்து பெருமளவிலான அதிநவீன ட்ரோன்களை இந்தியா வழியாக கடத்திச் சென்றுள்ளனர். இந்தியாவிலுள்ள பிரிவினைவாதக் குழுக்களுடன் தொடர்புடைய மியான்மர் கிளர்ச்சியாளர்களுக்கு இவர்கள் போர்ப் பயிற்சி அளித்ததும் விசாரணையில் அம்பலமானது. கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 18-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்குப் பின்னால் இருக்கும் வெளிநாட்டுச் சக்திகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு என்ஐஏ அதிகாரிகள் கூறினர். https://www.hindutamil.in/news/india/7-foreigners-arrested-who-trained-rebels-for-ethnic-conflict
-
'தி ஹண்ட்ரட்' ஏலத்தில் பாகிஸ்தான் வீரரை வாங்கிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன்!
நீங்கள் எவ்வளவு ரன்கள் அடித்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை - கவாஸ்கருக்கு அஜீம் ரஃபீக் கண்டனம் தி ஹண்ட்ரட் 2026 தொடருக்கான ஏலத்தில் சன் ரைசர்ஸ் லீட்ஸ் பாகிஸ்தான் வீரரை ஏலம் எடுத்தது தொடர்பாக கவாஸ்கர் கடும் விமர்சனங்களைத் தொடுக்க அவர் மீது பாகிஸ்தான் வம்சாவளி இங்கிலாந்து வீரர் அஜீம் ரஃபீக் கடும் எதிர் விமர்சனங்களைத் தொடுத்துள்ளார். மிட் டே ஊடகத்தில் கவாஸ்கர் தான் எழுதிய பத்தியில் பாகிஸ்தான் புதிர் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை 1,90,000 பவுண்டுகளுக்கு சன் ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஏலம் எடுத்ததைக் கடுமையாகச் சாடியிருந்தார். சன்ரைசர்ஸ் அணி, சென்னையைச் சேர்ந்த சன் டிவி நெட்வொர்க்கிற்குச் சொந்தமானது. இந்த நிறுவனம் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவர்களுடையதுதான். கவாஸ்கர் அந்தப் பத்தியில் கூறியதாவது: “'தி ஹன்ட்ரட்' தொடரில் ஒரு இந்திய ஃபிரான்சைஸிகள் பாகிஸ்தான் வீரர் ஒருவரை வாங்கியதால் ஏற்பட்ட சர்ச்சை ஆச்சரியப்படுவதற்கில்லை. 2008 நவம்பரில் நடந்த மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு, இந்திய ஃபிரான்சைஸ்கள் ஐபிஎல் போட்டிகளுக்காக பாகிஸ்தான் வீரர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து வருகின்றனர். ஒரு பாகிஸ்தானிய வீரருக்கு அவர்கள் வழங்கும் சம்பளம், அதன் மூலம் பாகிஸ்தானிய அரசாங்கத்திற்கு வருமான வரியாகச் செலுத்தப்படுகிறது. இதுதான் அவர்கள் ஆயுதங்களை வாங்குவதற்கும் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் இறப்புகளுக்கும் மறைமுகமாகப் பங்களிக்கிறது என்ற புரிதல், பாகிஸ்தானிய கலைஞர்களையும் விளையாட்டு வீரர்களையும் பணியமர்த்துவது குறித்து பரிசீலிப்பதிலிருந்தே இந்திய நிறுவனங்களைத் பின்வாங்கச் செய்துள்ளது. பணம் செலுத்துவது ஒரு இந்திய நிறுவனமாக இருந்தாலும் சரி, அல்லது அந்த நிறுவனத்தின் வெளிநாட்டுத் துணை நிறுவனமாக இருந்தாலும் சரி, அதன் உரிமையாளர் இந்தியராக இருந்தால், அவர் இந்திய உயிரிழப்புகளுக்கு மறைமுகமாகப் பங்களிக்கிறார்.” என்று கடுமையாகச் சாடியிருந்தார். கவாஸ்கரின் இந்தச் சாடலுக்கு இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆடியவரும் பாகிஸ்தான் வம்சாவளி வீரரும் கராச்சியில் பிறந்தவருமான அஜீம் ரஃபீக் கவாஸ்கருக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்: “கவாஸ்கரின் கருத்துக்கள் முற்றிலும் அபத்தமானவை. இத்தகையக் கருத்துக்களை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய கருத்துக்கள் இவை. நீங்கள் எத்தனை ரன்கள் எடுத்திருந்தாலும் அதைப்பற்றி கவலையில்லை கவாஸ்கர். கவாஸ்கரின் மிக மிக மோசமானச் செய்கை இது. இத்தகைய போட்டிகளில் நான் வர்ணனை செய்ய மாட்டேன் என்று கவாஸ்கர் புறக்கணிக்க வேண்டியதுதானே? செய்தாரா?” இவ்வாறு சாடினார் அஜீம் ரஃபீக். நீங்கள் எவ்வளவு ரன்கள் அடித்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை - கவாஸ்கருக்கு அஜீம் ரஃபீக் கண்டனம்
-
பிரபஞ்சத்தின் முடிவு பற்றி 'விசித்திரமான' இருண்ட ஆற்றலின் ஆய்வு என்ன சொல்கிறது?
பிரபஞ்சத்தின் முடிவு எவ்வாறு இருக்கும்? மூன்று சாத்தியங்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் ஆண்ட்ரே பியர்நாத் பிபிசி நியூஸ் பிரேசில் 18 மார்ச் 2026, 03:09 GMT வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் பிரபஞ்சத்தின் முடிவு பல்வேறு வழிகளில் நிகழக்கூடும். அதுவொரு மெதுவான, குளிர்ந்த, அமைதியான முடிவாக இருக்கலாம். அல்லது அது திடீரெனவும் வன்முறையானதாகவும் நிகழலாம். சிலர், அதுவொரு புதிய தொடக்கத்திற்கு வழிவகுக்கும் முடிவாக இருக்கக்கூடும் எனவும் கருதுகின்றனர். எதிர்காலத்தில் ஒருவேளை பிரபஞ்சம் அதன் முடிவைச் சந்தித்தால், அது எவ்வாறு அதன் முடிவு இருக்கக் கூடும் என்பது குறித்து விஞ்ஞானிகள் கொண்டுள்ள 3 முக்கியக் கருதுகோள்களை இங்கு பார்ப்போம். பிரபஞ்சத்தின் எதிர்காலம் அறிவியலில் உள்ள மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக இன்றளவும் உள்ளது. நிபுணர்களே கூட தங்களிடம் இன்னும் தெளிவான பதில்கள் இல்லையென்று கூறுகின்றனர். பிரபஞ்சம் எவ்வாறு அழிவைச் சந்திக்கும் என்பதைப் புரிந்துகொள்ள, அதன் தொடக்கம் எவ்வாறானது என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். எல்லாவற்றுக்குமான தொடக்கம் பிரபஞ்சம் என்பது அனைத்தையும் குறிக்கிறது. நாசாவின் கூற்றுப்படி, அது அனைத்து வெளி, பருப்பொருள் (எடையுள்ள மற்றும் இடத்தை ஆக்கிரமிக்கும் எதுவும்), ஆற்றல் மற்றும் காலம் என எல்லாவற்றையும் உள்ளடக்கியது. பெருவெடிப்புக் கோட்பாடு எனப்படும் ஒன்றில் இருந்து பிரபஞ்சம் தொடங்கியதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இந்தக் கோட்பாட்டின்படி, சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பிரபஞ்சம் மிகவும் சூடாகவும் நெருக்கமாகவும் இருந்தது. பின்னர் அது விரிவடையத் தொடங்கியது. அன்று முதல் அது வளர்ந்துகொண்டே இருக்கிறது. பிரபஞ்சம் நீண்ட காலமாக விரிவடைந்தபோது, விண்மீன் திரள்கள், நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவை மெதுவாக உருவாயின. இன்றும்கூட, பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உண்மை என்னவெனில், அதைப் பற்றி நமக்கு இன்னும் மிகக் குறைவாகவே தெரியும். பிரேசிலில் உள்ள சாண்டா கத்தாரினா ஃபெடரல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இயற்பியலாளர் அலெக்சாண்டர் ஸாபோட், "நமது பணி என்பது ஒரு நதியின் வழியே செல்லும் அனைத்து நீர் மூலக்கூறுகளையும் முழுமையாக மதிப்பீடு செய்யாமல், அந்த நதியின் நடத்தையையும் ஓட்டத்தையும் மட்டுமே கவனிப்பதைப் போன்றது." என்று விளக்குகிறார். அதாவது, பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதன் பெரிய சித்திரத்தை விஞ்ஞானிகளால் காண முடிகிறது. ஆனால், அதனுள்ளே இருக்கும் அனைத்து சிறிய விவரங்களையும் அவர்களால் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. பட மூலாதாரம்,FlashMovie via GettyImages படக்குறிப்பு,பிரபஞ்சம் ஓர் ஒற்றைப் புள்ளியாகத் தொடங்கி, விரிவடைந்து நீண்டுள்ளது என்று பெருவெடிப்புக் கோட்பாடு கூறுகிறது. பெருங்குளிர் உறைவு பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்தால், ஆற்றல் மென்மேலும் பரவும். இதன் காரணமாக, விண்மீன் திரள்கள் மெதுவாக மேலும் விலகிச் செல்லும். காலப்போக்கில் புதிய நட்சத்திரங்கள் உருவாவது நின்றுவிடும். மேலும், ஏற்கெனவே இருக்கும் நட்சத்திரங்கள் மெதுவாக இறந்துவிடும் என்று ராயல் அப்சர்வேட்டரி கிரீன்விச் விளக்குகிறது. டிரில்லியன்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சம் இருண்டு, குளிராகி, கிட்டத்தட்ட வெறுமையாகிவிடும். இந்தக் கருத்து பெருங்குளிர் உறைவு (Big Freeze) என்று அழைக்கப்படுகிறது. இது வெப்ப மரணம் எனவும் அறியப்படுகிறது. இதன் பொருள், இறுதியில், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அனைத்து இடங்களிலும் ஒரே வெப்பநிலையை அடையும் என்பதாகும். அது நிகழும்போது, அதன் பிறகு பெரிதாக எதுவும் நடக்காது, எல்லாம் அசைவற்று ஸ்தம்பித்துவிடும் என்று ராயல் இன்ஸ்டிடியூஷன் விவரிக்கிறது. பிரேசிலில் உள்ள சாவ் பாலோ பல்கலைக் கழகத்தின் இயற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் ரவுல் அப்ராமோ, "பிரபஞ்சம் மென்மேலும் வெறுமையாகவும், குளிராகவும், பெரிதாகவும் மாறும் என்பதையே அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன" என்று விளக்குகிறார். அதாவது, "விண்மீன் திரள்கள் மேலும் மேலும் விலகிச் செல்லும், நட்சத்திரங்கள் வயதாகி இறந்துவிடும். இதுவோர் இறுதி நிலை. இதில் பிரபஞ்சம் அடிப்படையில் ஒரு மயானமாக மாறும்" என்கிறார் அவர். எளிதாகக் கூறுவதெனில், பிரபஞ்சம் மெதுவாக மறைந்து, கிட்டத்தட்ட எதுவுமே மிஞ்சாத ஒரு குளிர்ந்த, இருண்ட, அமைதியான இடமாக மாறிவிடும். பட மூலாதாரம்,Arctic Images via Getty Images படக்குறிப்பு,பெருங்குளிர் உறைவு (Big Freeze), பெரும்பிளவு (Big Rip), பெருஞ்சுருக்கம் (Big Crunch) என்பவை பிரபஞ்சம் எவ்வாறு அதன் அழிவைச் சந்திக்கக்கூடும் என்பது குறித்த கோட்பாடுகளாகும். பெரும்பிளவு பெருங்குளிர் உறைவு என்ற கருத்து நம்பும்படியாக இல்லையெனில், மற்றொரு கோட்பாடு உள்ளது. அது மிகவும் தீவிரமானது. இந்தக் கருதுகோள், பிரபஞ்சம் வெறுமனே விரிவடைவது மட்டுமின்றி, இருண்ட ஆற்றல் எனப்படும் ஒன்றின் காரணமாக மென்மேலும் வேகமாக விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது. இது தொடர்ந்து நடந்தால், இந்த விரிவாக்கம் மிகவும் வலுவாகி, ஈர்ப்பு விசையால்கூட இனி பொருட்களை ஒன்றாக வைத்திருக்க முடியாத நிலை உருவாகும் என்று ராயல் மியூசியம்ஸ் கிரீன்விச் கூறுகிறது. இந்தக் கோட்பாடு பெரும்பிளவு என்று அழைக்கப்படுகிறது. ஈர்ப்பு விசை என்பது பொருட்களை ஒன்றாக இழுக்கும் ஒரு விசையாகும். நாசாவின் கூற்றுப்படி, இது கோள்கள் சூரியனை சுற்றி வர வைக்கிறது. பூமியை ஒன்றாக வைத்திருக்கிறது. நாம் விண்வெளியில் அதன் போக்கில் மிதந்து செல்வதைத் தடுக்கிறது. இது நட்சத்திரங்கள், சூரிய மண்டலங்கள், விண்மீன் திரள்களை ஒன்றாக கட்டி வைத்திருக்கிறது. இருண்ட ஆற்றல் இதற்கு நேர் எதிராகச் செயல்படுகிறது. அது பொருட்களை வெளியே தள்ளிவிட்டுப் பிரிக்கிறது என்கிறார் அலெக்சாண்டர் ஸாபோட். "இருண்ட ஆற்றல் எதனால் ஆனது என்று நமக்கு இன்னும் தெரியவில்லை. ஆனால், அது ஈர்ப்பு விசைக்கு எதிரானதைப் போல, விலக்கு விசையை ஏற்படுத்துகிறது என்பது அறியப்பட்டுள்ளது" என்கிறார் அவர். நாசாவின் கூற்றுப்படி, இருண்ட ஆற்றல் பிரபஞ்சத்தை மென்மேலும் விரிவடையச் செய்கிறது. சுமார் 68.3% முதல் 70% வரையிலான பிரபஞ்சம் இருண்ட ஆற்றலால் ஆனது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். கோள்கள், விண்மீன் திரள்கள் போன்ற சிறிய மட்டங்களில் ஈர்ப்பு விசை வலிமையாக இருப்பதால், இது நீண்டகாலமாக கண்டுபிடிக்கப்படாமலே இருந்தது. பின்னர் 1990களின் பிற்பகுதியில்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது. இருண்ட ஆற்றல் மிகப்பெரிய விண்மீன் திரள்களுக்கு இடையிலான அளவுகளில் மட்டுமே கவனித்தக்கதாக இருக்கிறது. "பிரபஞ்சம் எவ்வளவு அதிகமாக வளர்ந்து அதன் கன அளவைப் பெறுகிறதோ, அந்த அளவுக்கு இருண்ட ஆற்றலுடன் தொடர்புடைய விலக்கு விசை அதிகரிக்கிறது," என்று விளக்குகிறார் ஸாபோட். "பிரபஞ்சத்தின் அளவு அதிகரிக்கும்போது, இருண்ட ஆற்றல் சிறிய அளவுகளில் அதிக முக்கியத்துவம் பெறக்கூடும்." இருண்ட ஆற்றல் நிலையற்றதாக மாறினால், அதுவொரு பெரும்பிளவுக்கு வழிவகுக்கும். இந்தச் சூழ்நிலையில், பிரபஞ்சம் மிகத் தீவிரமாக விரிவடையும். அதன் விளைவாக, நட்சத்திரங்கள், கோள்கள், அவ்வளவு ஏன் அணுக்கள்கூட, நாசா விவரிப்பது போல, முழுவதுமாகப் பிரிக்கப்பட்டுவிடும் அல்லது 'ஒட்டாமல் விலகிவிடும்.' "அதனால்தான் இந்தக் கோட்பாட்டிற்கான ஆங்கிலப் பெயர் இரட்டை அர்த்தம் கொண்டுள்ளது. இது 'பிக் ரிப்' என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் ஒரு பெரிய பிளவு அல்லது கிழிவு. ஆனால், ரிப் என்பது ரெஸ்ட் இன் பீஸ் (rest in peace) என்பதன் சுருக்கமும் ஆகும்" என்று அலெக்சாண்டர் ஸாபோட் விவரிக்கிறார். எளிமையாகக் கூறுவதெனில், ஒரு நாள் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் முற்றிலுமாகக் கிழித்து எறியப்படலாம் என்று இந்தக் கோட்பாடு கூறுகிறது. பட மூலாதாரம்,Fotograzia via Getty Images படக்குறிப்பு,பிரபஞ்சம் என்பது அனைத்தையும் உள்ளடக்கியதாகும்; இதில் நமது விண்மீன் மண்டலம், முழு விண்வெளி மற்றும் அந்த விண்வெளியில் அடங்கியுள்ள அனைத்துப் பருப்பொருள்களும் ஆற்றலும் அடங்கும். பெருஞ்சுருக்கம் பிரபஞ்சத்திற்கு இன்னும் வியத்தகு முடிவுகளைத் தரக்கூடிய பிற சாத்தியக்கூறுகளும் உள்ளன. இருண்ட ஆற்றல் வலுவிழந்து அதன் விளைவை மாற்றினால், ஈர்ப்பு விசை எல்லாவற்றையும் மீண்டும் ஒன்றாக இழுக்கத் தொடங்கும். இது பிரபஞ்சத்தை ஓர் ஒற்றைப் புள்ளியாகச் சுருங்கச் செய்யலாம். நாசாவின் கூற்றுப்படி, இந்தக் கருத்து 'பெருஞ்சுருக்கம்' என்று அழைக்கப்படுகிறது. மற்றொரு கருத்து 'பெரும் மீள்வு' என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோட்பாட்டில், பிரபஞ்சம் மீண்டும் ஓர் ஒற்றைப் புள்ளியாகச் சுருங்கி, பின்னர் மற்றொரு பெருவெடிப்புடன் மீண்டும் தொடங்குகிறது. இதன் பொருள், பிரபஞ்சம் ஒரு முடிவற்ற சுழற்சியில் மீண்டும் மீண்டும் விரிவடைந்து சுருங்கிக்கொண்டே இருக்கலாம் என்பதாகும். "ஆனால், இது முற்றிலும் விசித்திரமான ஒரு மாதிரி. இதற்கு நம்மிடம் எவ்வித தரவுகளோ ஆதாரங்களோ இல்லை" என்கிறார் ரவுல் அப்ராமோ. அப்படியானால், பிரபஞ்சம் எப்போது அழியக்கூடும் என்பதை விஞ்ஞானிகளால் கணிக்க முடியுமா? "இல்லை, எதிர்காலத்தில் ஒரு பெரிய பிளவோ அல்லது பெரும் சரிவோ ஏற்படும் என்பதற்கு நம்மிடம் எந்த அறிகுறியும் இல்லை," என்கிறார் அப்ராமோ. "இந்த முடிவைப் பற்றிய சில மதிப்பீடுகள் டிரில்லியன்கணக்கான ஆண்டுகளைக் குறிப்பிடுகின்றன. மற்றவை அதைவிட இன்னும் நீண்டகால அளவுகளைப் பற்றி ஊகிக்கின்றன" என்கிறார் அலெக்சாண்டர் ஸாபோட். அது எவ்வளவு காலம் என்பதைப் புரிந்துகொள்ள, பிரபஞ்சம் சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஒரு டிரில்லியன் ஆண்டுகளை எட்டுவதற்கு மட்டுமே இன்னும் சுமார் 986.2 பில்லியன் ஆண்டுகள் ஆகும். நாம் நினைத்ததைவிட பிரபஞ்சம் வேகமாக மங்கி வருவதாக ராட்பவுட் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. எஞ்சியிருக்கும் கடைசி நட்சத்திரங்கள் மறைவதற்கு சுமார் 10⁷⁸ ஆண்டுகள் (அதாவது 1-ஐ தொடர்ந்து 78 பூஜ்ஜியங்கள்) ஆகலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதைக் காண மனித இனம் உயிர்ப்புடன் இருக்காது. பூமிகூட அதற்கும் மிக முன்னதாகவே அழிந்துவிடும். சுமார் ஆறு பில்லியன் ஆண்டுகளில், சூரியன் ஒரு ரெட் ஜெயன்டாக வளர்ந்து அருகிலுள்ள கோள்களை அழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "உண்மை என்னவெனில், அண்டவியல் பற்றி நமக்கு இன்னும் மிகக் குறைவாகவே தெரியும்" என்கிறார் அப்ராமோ. பிரபஞ்சத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவோ அல்லது அளவிடவோ விஞ்ஞானிகளிடம் இன்னும் போதுமான கருவிகள் இல்லை என்று அவர் விளக்குகிறார். இதன் காரணமாக, பல கருத்துகள் இன்னும் ஆராயப்பட்டு வருகின்றன. ஒரேயொரு பிரபஞ்சம் மட்டுமே இல்லை, பல பிரபஞ்சங்கள் இருக்கக்கூடும் என்ற கருத்தான பல்பிரபஞ்சம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c24dej96ddeo
- Today
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
கிறிஸ்துவ மாணவர்களிற்கு பைபிளை பாடசாலைக்கு தேடிச்சென்று கொடுக்க வேண்டிய தேவை இல்லை. அதை அவரவர் செல்கின்ற சேர்ச்சிலேயே கொடுக்கலாம். அப்படித்தான் காலம் காலமாக நடக்கின்றது. வெளிநாடுகளில் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டவர்களின் பிள்ளைகள் வார இறுதியில் சமய வகுப்பிற்கு சென்று வருகின்றார்கள். அங்கு தேவையானவற்றை வழங்குகின்றார்கள். இலங்கையிலும் கிறிஸ்துவ மாணவர்கள் யாராவது பைபிள் இல்லாமல் சிரமப்பட்டதாக நான் அறியவில்லை. பைபிளை கொளுத்தும் அளவிற்கு சிந்திப்பது மனப்பிறழ்வு நிலை என்பது ஒருபுறம் அமைய, பாடசாலையை மத பிரச்சார மேடையாக்குவதும் தவறானதே. அவரவர் அவரவர் மதத்தில் அவரவர் விடயங்களை கடைப்பிடிக்கும்போது சச்சரவுகள் வருவதில்லை.
-
இரண்டு அரச பேருந்துகள் மோதி கோர விபத்து: நால்வர் உயிரிழப்பு
கதிர்காம பிரதான வீதியில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து: நால்வர் பலி; 40 பேர் படுகாயம்! 18 Mar, 2026 | 01:08 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) அம்பாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில 'துருசெவன' சந்தியில் இன்று புதன்கிழமை (18) இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பஸ்ஸும், திஸ்ஸமஹாராமவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த பஸ்ஸும் இவ்வாறு மோதியுள்ளன. விபத்தில் பஸ் பலத்த சேதமடைந்துள்ளதுடன், சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதுடன், படுகாயமடைந்த சுமார் 40 பயணிகள் தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/241279
-
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது
முழு நாடுமே ஒன்றாக திட்டத்தில் 124,412 பேர் கைது Mar 18, 2026 - 06:26 PM போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி சாதகமானது என்றும், அவ்வாறு கைப்பற்றப்படும் போதைப்பொருள் கையிருப்புகளை அழிப்பது குறித்து பொதுமக்களுக்கும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவது முதன்மையான தேவை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதற்கான சட்டத் திருத்தங்களை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். இந்த நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, சட்டத் திருத்தத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் கலந்துரையாடி, சட்டவாக்கப் பணிகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபை இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். நாட்டில் அவ்வப்போது பல்வேறு சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் உருவான போதிலும், எந்தவொரு சவாலுக்கும் மத்தியில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் முடங்கக் கூடாது என்று ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார். போதைப்பொருள் விநியோகம் மற்றும் விநியோக வலையமைப்புகளை முறியடித்தல், புனர்வாழ்வு மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களை வேகமாகவும் கைவிடாமலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இது குறித்து சமூகத்துடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களைப் பேணி, இந்த தேசிய வேலைத்திட்டத்தை வெற்றிகரமான முடிவை நோக்கி கொண்டு செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் இதுவரையிலான முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள இந்த வேலைத்திட்டம் தற்போதைய அரசாங்கம் குறித்து மக்கள் நம்பிக்கை கொள்வதில் முக்கியமானதொரு காரணியாக அமைந்துள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படும் அளவு பெருமளவில் அதிகரித்துள்ளதாக சம்பந்தப்பட்ட பிரிவினர் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இங்கு சுட்டிக்காட்டினர். ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இன்று வரை 124,412 கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 4520 கிலோ கிராம் கஞ்சா, 1066 கிலோ 352 கிராம் ஹெரோயின், 558,300 சட்டவிரோத சிகரெட்டுகள், 1930 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 270 கிலோ கிராம் கொக்கைன் மற்றும் 983,143 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. கைப்பற்றப்பட்ட இந்த கொக்கைன் தொகையானது வரலாற்றில் அதிகூடிய மற்றும் அதிக விலையுடைய கொக்கைன் தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் 1818 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அதிகளவில் கிடைத்து வருவதாகவும், அது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்கள் உள்ளதாகவும், அவர்களில் 1772 சிறுவர்களும் 81 சிறுமிகளும் அடங்குவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான சந்தேக நபர்கள் 196 பேரும், தடுப்புக் காவலில் 2268 பேரும் உள்ளதோடு, தற்போது 1840 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புனர்வாழ்வு அளிப்பதில் நிலவும் சட்ட ரீதியான பலவீனங்களால் அந்தப் பணிகள் தாமதமான போதிலும், அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு இது குறித்து கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதேபோல், அமுலில் உள்ள புனர்வாழ்வு சட்டத்தில் உள்ள சில கட்டுப்பாடுகள் காரணமாக போதைக்கு அடிமையானவர்களை முறையாக சமூகமயப்படுத்துவதில் உள்ள தடைகள் மற்றும் அந்த மையங்களின் கொள்ளளவு போதுமானதாக இல்லாமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. புனர்வாழ்வு சட்டத்தை தற்காலத்திற்கு ஏற்றவாறு விரைவாக திருத்தம் செய்வதற்கும், அதற்கான முன்மொழிவுகளை மிக விரைவாகப் பெற்று நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். தற்போது கைப்பற்றப்படும் போதைப்பொருள் மாதிரிகளைப் பரிசோதித்து அறிக்கை பெறுவதற்கு நீண்ட காலம் எடுப்பதால் வழக்கு நடவடிக்கைகள் தாமதமாவது குறித்தும், அது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மேலும், அது தொடர்பான நீதித்துறை செயல்பாடுகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் குற்றங்களுக்காக தனி நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடைமுறையை நிறுவுதல், மாகாண மட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான தனி நீதிமன்றங்களை நிறுவுதல், போதைப்பொருள் குற்றங்களுக்காக பொலிஸ் சட்டப் பிரிவுகளை வலுப்படுத்துதல் போன்ற ஆலோசனைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை அளிப்பது தொடர்பாக சுகாதார அமைச்சு அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு பல வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் இங்கு சுட்டிக்காட்டினார். போதைக்கு அடிமையானவர்களுக்கு வெளிநோயாளர் பிரிவில் அடிப்படை சிகிச்சைகளைப் பெறுவதற்கான சூழலை உருவாக்குதல், மனநல மருத்துவ சிகிச்சைகளுக்காக வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தங்குமிட சிகிச்சை அளித்தல் மற்றும் சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு, மீளாய்வு போன்ற 06 பிரதான உத்திகளின் ஊடாக அந்த வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகச் செயலாளர் இதன்போது தெரிவித்தார். அதேபோல், போதைக்கு அடிமையான இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்காகத் தனித்தனியான வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முழுமையான செயல்பாட்டைக் கண்காணிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுவதாகவும், 'சமூக சக்தி' வேலைத்திட்டத்தின் பங்களிப்பையும் இதற்காகப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அதேபோல், பாடசாலை மாணவர்களைப் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுவதற்காகப் பாடசாலை மட்டத்தில் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் பாடசாலைகளை அண்டியதாக மேற்கொள்ளப்படும் சோதனைகள் மற்றும் அதன் புதிய போக்குகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், அரச நிறுவனங்களுக்குள் செயல்படுத்தப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது. மேலும், இந்தப் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்காகவே ஒதுக்கப்பட்ட மத ரீதியான நிகழ்ச்சிகளை வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார். https://adaderanatamil.lk/news/cmmw1llbh000p356pzeyifiby
-
இலங்கையை வந்தடைந்தது எரிபொருள் கப்பல்!
இலங்கைக்கு மற்றுமொரு எரிபொருள் கப்பல் வருகை 18 Mar, 2026 | 12:17 PM (இணையத்தள செய்திப் பிரிவு) மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும், இலங்கை அரசாங்கத்தினால் முன்பதிவு செய்யப்பட்டிருந்த மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான 'சீஃபிரண்டியர்' (Seafrontier) எனும் இந்த எரிபொருள் கப்பல், செவ்வாய்க்கிழமை (17) இலங்கையை வந்தடைந்தது. இந்தக் கப்பலில் கொண்டுவரப்பட்ட எரிபொருளை தரையிறக்கும் பணிகள் இன்று காலை முதல் கட்டமாக முத்துராஜவெல, கெரவலப்பிட்டி எரிபொருள் முனையத்தில் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கப்பலின் எஞ்சிய எரிபொருள் கையிருப்பினை இறக்குவதற்காக இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் 'டொல்பின்' (Dolphin Jetty) இறங்குதுறைக்கு கப்பல் கொண்டு வரப்பட்டதுடன், அங்கிருந்து கொலன்னாவ களஞ்சிய முனையத்திற்கு குழாய் வழியே எரிபொருளைச் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இக்கப்பல் மூலம் 17,000 மெட்ரிக் தொன் '92 ஒக்டேன்' பெட்ரோல், 18,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 2,800 மெட்ரிக் தொன் 'சூப்பர் டீசல்' ஆகியன நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தில் சவால்கள் நிலவுகின்ற போதிலும், தற்போதைய இந்த இறக்குமதி நாட்டின் எரிபொருள் தேவையைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/241274
-
இரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?
இரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,AL-ARAB, AL-AKHBAR படக்குறிப்பு,சில வளைகுடா நாடுகள் இரானின் சக்தியைக் கட்டுப்படுத்துமாறு அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருப்பதை பல அரபு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. கட்டுரை தகவல் பிபிசி மானிடரிங் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இரான் போரின் காரணமாக, வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலை குறித்து அரபு பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடகங்களில் தொடர்ச்சியான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் அமெரிக்கா தொடர்பான வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் பல்வேறு கருத்துகளும் வெளிப்பட்டு வருகின்றன. ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், இரானை நிரந்தரமாக செயலிழக்கச் செய்யுமாறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறும் ராய்ட்டர்ஸ் செய்திக்குச் சில ஊடகங்கள் கணிசமான முக்கியத்துவம் அளித்துள்ளன. இதற்கு மாறாக, வேறு சில ஊடகங்கள் இரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் முடிவை விமர்சித்தும், "வளைகுடா நாடுகள் இலக்கு வைக்கப்படும் சூழலை அமெரிக்கா புறக்கணிப்பதாக" குற்றம் சாட்டியும் செய்திகளை வெளியிட்டுள்ளன. வளைகுடா ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி வெளிவரும் சில தகவல்கள், அமெரிக்கா மீதான தங்களின் நீண்டகால பாதுகாப்புச் சார்புநிலையை வளைகுடா நாடுகள் மறுமதிப்பீடு செய்யும் என்று தெரிவிக்கின்றன. நேட்டோ பாணியிலான ஒரு கூட்டுப் பாதுகாப்பு அமைப்புக்கான கோரிக்கைகளும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன. பதற்றத்தைக் குறைப்பதற்கான வளைகுடா நாடுகளின் முயற்சிகள் குறித்து பல ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. இதில் ராணுவ மோதல்களைத் தவிர்ப்பதற்கும், சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் விடுக்கப்பட்ட அழைப்புகளும் அடங்கும். 'இரானின் திறன்களை அழிக்க' விடுக்கப்பட்டுள்ள அழைப்பு பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,மார்ச் 18 அன்று, இரான் இஸ்ரேல் மீது புதிய ஏவுகணைகளை ஏவியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோனிலிருந்து எடுக்கப்பட்ட காட்சி. மார்ச் 16 அன்று வெளியான இந்த ராய்ட்டர்ஸ் செய்தி, சில அரபு ஊடகங்களில் முக்கியச் செய்தியாக இடம்பிடித்துள்ளது. பெத்லஹேமைச் சேர்ந்த 'மா-ஆன்' செய்தி இணையதளம், "டிரம்பிற்கு வளைகுடா நாடுகளின் செய்தி: இரானின் திறன்கள் அழிக்கப்படும் வரை நிறுத்தாதீர்கள்" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. "இரான் மீதான தாக்குதல்களைத் தொடருமாறு அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வளைகுடா நாடுகள் : நாங்கள் மட்டும் தனியாகத் துன்பப்படுமாறு விடப்படுவதை விரும்பவில்லை" என்று லெபனானின் ஹெஸ்பொலா ஆதரவு நாளிதழான 'அல்-அக்பர்' எழுதியுள்ளது. "வளைகுடா நாடுகள் இரானுடன் போரைத் தொடங்குமாறு அமெரிக்காவைக் கேட்கவில்லை என்றாலும், இப்போது பல நாடுகள் அமெரிக்கா இந்த வழியில் இருந்து பின்வாங்கக் கூடாது என்றும், வளைகுடா எண்ணெய் விநியோகப் பாதைகள் மற்றும் அவற்றைச் சார்ந்திருக்கும் பொருளாதாரங்களை அச்சுறுத்தும் நிலையில் இரானை விட்டுவிடக் கூடாது என்றும் விரும்புகின்றன"என மூன்று வளைகுடா வட்டாரங்கள் கூறியதாக அந்த செய்தி மேற்கோள் காட்டியுள்ளது. "அமெரிக்கர்கள் தங்கள் பணி முடிவதற்குள் வெளியேறினால், நாங்கள் இரானை தனியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று சௌதி அரேபியாவைச் சேர்ந்த வளைகுடா ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அப்துல் அஜீஸ் சகிர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். அமெரிக்கா அச்சுறுத்தலைப் புறக்கணித்ததா? பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,வேறு சில அரபு ஊடகங்கள் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து, அமெரிக்கக் கொள்கையை விமர்சித்தன. வேறு சில அரபு ஊடகங்கள் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து அமெரிக்கக் கொள்கையை விமர்சித்தன. ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால் இரான் வளைகுடா நாடுகளை இலக்கு வைக்கக்கூடும் என்று அமெரிக்க உளவு அமைப்புகள் எச்சரித்திருந்ததாகவும், ஆனால் அமெரிக்கா இந்தச் சூழலை 'புறக்கணித்திருக்கலாம்' என்றும் லண்டனைச் சேர்ந்த நாளிதழான 'அல்-அரப்' செய்தி வெளியிட்டுள்ளது. இரானின் எதிர்வினை குறித்த தவறான கணிப்பின் விளைவாகவோ அல்லது அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கைகளை விட தனது அரசியல் கணக்குகளுக்கே முன்னுரிமை அளித்தது என்பதற்கான அறிகுறியாகவோ இது இருக்கலாம் என்று அந்த செய்தி கூறியது. ஓமன் பத்திரிகையாளரும் ஆராய்ச்சியாளருமான சலீம் அல்-ஜஹோரி எகிப்திய தனியார் சேனலான 'யோம்7'-னிடம் கூறுகையில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகள் அமெரிக்கா மீதான தங்கள் "பாதுகாப்புச் சார்புநிலையை" மறுபரிசீலனை செய்யும் என்றும், ஒரு பொதுவான தடுப்பு முறையை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கும் என்றும் தெரிவித்தார். வளைகுடா நாடுகள் "போருக்குள் இழுக்கப்பட்டுள்ளன" என்றும், அவற்றின் எல்லைகளில் உள்ள ராணுவத் தளங்களில் இருந்து ஏவுகணைகளை ஏவுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், அவர்கள் "எந்த வகையிலும் இந்தப் போரில் ஈடுபட மாட்டார்கள்" என்றும் அவர் கூறினார். அல் ஜசீராவிடம் அல்-மாதர் அரசியல் ஆய்வு மையத்தின் தலைவர் சலே அல்-முதைரி கூறுகையில், 'அமெரிக்காவை விட வளைகுடா நாடுகள் இந்தப் போருக்கு அதிக விலையை கொடுக்க வேண்டியிருக்கும், குறிப்பாக அதன் நீண்டகால பொருளாதார தாக்கம் காரணமாக இது நிகழும்' என்றார். அல் ஜசீராவிடம் ஓமன் எழுத்தாளரும் ஆராய்ச்சியாளருமான முகமது அல்-அரைமி கூறுகையில், அச்சுறுத்தல் என்பது இரானிடமிருந்து மட்டுமல்ல, இந்தப் பிராந்தியத்திற்கான "அபாயகரமான இஸ்ரேலியத் திட்டத்திலிருந்தும்" வருகிறது என்று தெரிவித்தார். ஹோர்முஸ் நீரிணையை திறக்க டிரம்ப் வேண்டுகோள் பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்ற டிரம்பின் அழைப்புகளுக்கு அரபு ஊடகங்களிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்ற டிரம்பின் அழைப்புகளுக்கு அரபு ஊடகங்களிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய அரபு தேசிய தொலைக்காட்சி சேனல்களும் அமெரிக்காவின் நட்பு நாடுகளின் எதிர்வினைவினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பின. குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக செயல்பாட்டில் வைப்பதற்கான சர்வதேசக் கூட்டணியை உருவாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை அவை முன்னிலைப்படுத்தின. பல நாடுகளின் எதிர்வினையானது "சந்தேகத்திலிருந்து நேரடி எதிர்ப்பு வரை" பலவாறாக இருப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த 'ஸ்கை நியூஸ் அரேபியா' தெரிவித்தது. பல அமெரிக்க நட்பு நாடுகள் "கவனமாகவோ அல்லது தயக்கமாகவோ" இருப்பதாகத் தெரிவதாகவும், சில நாடுகள் இப்பிரச்னையைத் தீர்க்க மாற்று வழிகளைக் கூட பரிந்துரைத்துள்ளதாகவும் கத்தாரின் 'அல் ஜசீரா' தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அல் ஜசீரா செய்தியின்படி, லக்சம்பர்க் பிரதமர் லூக் ஃப்ரைடன், அமெரிக்காவின் 'அழுத்தத்திற்கு' தனது நாடு பணியாது என்று கூறியுள்ளார். இரான் மீது இஸ்ரேல் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்ற டிரம்பின் கூற்றையும் சில சேனல்கள் முன்னிலைப்படுத்தின. இஸ்ரேலிடம் சுமார் 90 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமைதி ஆராய்ச்சி நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாக சௌதி அரேபியாவின் 'அல்-அரேபியா' மற்றும் 'ஸ்கை நியூஸ் அரேபியா' செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றும், ஆனால் நிபுணர்கள் மற்றும் ஊடக தகவல்கள் அந்நாட்டிடம் பல்வேறு அல்லது நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்கள் இருக்கலாம் எனத் தெரிவிப்பதாகவும் ரஷ்யாவின் 'ஆர்டி' ஊடகம் கூறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20l0wng7xqo
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
இணைய மோசடிகளை ஒழிக்க இலங்கையுடன் கைகோர்க்கும் சீனா
இணைய மோசடிகளை ஒழிக்க இலங்கையுடன் கைகோர்க்கும் சீனா Mar 18, 2026 - 05:13 PM தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிகளை ஒடுக்குவதில் தமது வலுவான உறுதிப்பாட்டை மீள உறுதிப்படுத்தியுள்ள சீனா, இலங்கையுடனான சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளது. இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகளால் சீனப் பிரஜைகள் உட்பட இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட பல வெளிநாட்டுச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை குறித்த அண்மைக்கால அறிக்கைகளைத் தாம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக சீனா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான குற்றங்கள் பாரிய சமூகத் தீங்குகளை விளைவிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சீனா, சட்டத்திற்கு இணங்கச் சந்தேக நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை, அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதில் இலங்கை அதிகாரிகளுக்குத் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிகள் உலகம் முழுவதும் வேகமாக விரிவடைந்து, பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அந்த அறிக்கையில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு மியன்மார், கம்போடியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட பல நாடுகளுடன் சீனா அண்மைக்காலமாக விரிவான ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் பல குற்றக் கும்பல்கள் அழிக்கப்பட்டு தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்ட போதிலும், அதன் விளைவாகச் சில குற்றக் குழுக்கள் தென்கிழக்கு ஆசியாவின் ஏனைய நாடுகளுக்கு நகர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மேம்பட்ட தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு, மூலோபாய ரீதியிலான புவியியல் இருப்பிடம், ஒப்பீட்டளவில் தளர்வான விசா கொள்கைகள் மற்றும் மக்களின் விருந்தோம்பல் ஆகியவை நாடுகடந்த மோசடி குழுக்களுக்கு இலங்கையை ஒரு இலக்காக மாற்றியுள்ளன. இதன் விளைவாக, இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்த விடயம் குறித்து சீனா அதிக முக்கியத்துவம் அளிப்பதுடன், இலங்கை சட்ட அமுலாக்க முகவர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேணி வருகிறது. கூட்டு முயற்சிகளின் பலனாக, 2024 ஆம் ஆண்டில் மோசடியில் ஈடுபட்ட பல சீனப் பிரஜைகள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் 2025 ஆம் ஆண்டில் தொகுதிகளாக மீண்டும் சீனாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது தொடர்பான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பங்களிப்பை மீள உறுதிப்படுத்தியுள்ள சீனா, எல்லை தாண்டிய குற்றங்களைக் கையாள்வதில் கூட்டு விசாரணைகள் மற்றும் ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இவ்வாறான முயற்சிகள் இரு நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதோடு, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பன்முக ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்குச் சிறந்த சூழலை உருவாக்கும் என்றும் சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmvz2aqc000l356plghn8l33
-
மீண்டும் எழுதப்படுமா எம்.ஜி.ஆர் வரலாறு?
தமிழ்நாட்டு அரசியலின் ஒரு யதார்த்தமான பிரச்சினை ....... அவர் குடும்பமே அவருக்கு காத்திருந்து சறுகாக் கட்டை போடுது ...... அதற்கேற்றாற் போல் இவரும் நடந்து கொள்கிறார் . .......பார்க்கலாம் வாக்கு சீட்டு என்ன சொல்லுது என்று . .......!
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
100% உடன்படுகிறேன். பம்மாத்து கதை. நீரிணையினால் போன தாய்லாந்து கப்பலை ஏன் தாக்கினார்கள்? வாதாட்டமா? குத்தாட்டம் எல்லோ போட்டவர். தம்பர் வரக்கூடாது எண்டு எழுதியவை எல்லாம் போர் வெறியராம்…அதாம்…இதாம்😂 பைடன் உக்ரேனுக்கு மட்டுப்பட்ட அளவில் உதவினார்… ஆனால் ஒரு திட்டமும் இல்லாமல் ஈரானுடன் போருக்கு போகிறார், 150 சிறுமிகளை கொல்கிறார் தம்பர்… ஆனால் தம்பரை சமாதான புறா என பிரச்சாரம் செய்தவர்… தன் கருத்து தவறு என மன்னிப்பு கேட்க கூட தயார் இல்லை… ரேகன் திறமா, கென்னடி திறமா, வாசிங்டன் திறமா என சப்பை கட்டு கட்டுகிறார்.
-
குருந்தூர் மலையிலிருந்து சிவனொளிபாத மலைக்கு நடைப்பயண யாத்திரை
குருந்தூர் மலைப் பகுதியிலிருந்து நடைபயணத்தை ஆரம்பித்த யாத்திரீகர்கள் சிவனொளிபாத மலையடிவாரத்தை அடைந்தனர் 18 Mar, 2026 | 01:16 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலைப் பகுதியிலிருந்து சிவனொளிபாத மலை வரை பாத யாத்திரை சென்றவர்கள் புதன்கிழமை (18) மலையடிவாரத்தை அடைந்தனர். கடந்த சனிக்கிழமை (14) முல்லைத்தீவு குருந்தூர் மலையிலிருந்து இந்த யாத்திரை ஆரம்பமானது. நுவரெலியா, அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிரிவன்எலிய பௌத்த விகாரையில் யாத்திரீகர்கள் தங்கியிருந்து, தொடர்ந்து பயணித்து, சிவனொளிபாத மலை அடிவாரத்தை அடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/241268
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
ஹோமூஸ் நீரிணை திறந்துதான் உள்ளது!, எம்மீது தாக்கும் எதிரிகளுக்கு மட்டும் மூடப்பட்டுள்ளது - அப்பாஸ் அராக்சி
-
இன்று உலக தாய்மொழி தினம்
பெப்ரவரி 21 உலக தாய்மொழி நாள். https://maniyinpakkam.blogspot.com/2026/02/blog-post_20.html
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஈரானின் உளவுத்துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு Mar 18, 2026 - 02:54 PM ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலின் 'channel 12' செய்திச் சேவை முன்னதாக செய்தி வௌியிட்டிருந்தது. இந்தத் தகவல்களின்படி, முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் முடிவுகள் குறித்து அதிகாரிகள் தற்போது மதிப்பாய்வு செய்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து ஈரான் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmvu325c000g356p3ct40hzq
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இரானை தாக்க 2270 கிலோ 'பங்கர் பஸ்டர்' குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,USAF கட்டுரை தகவல் கிறிஸ் பார்ட்ரிட்ஜ் பிபிசி 41 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் ஹோர்மூஸ் நீரிணை அருகே உள்ள இரானிய ஏவுகணை தளங்களை தாக்கியதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை தளங்களை, பதுங்கு குழிகளை ஊடுருவி தாக்கக்கூடிய சக்திவாய்ந்த குண்டுகளைக் கொண்டு தாக்கியதாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது. அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நீரிணையின் இரானிய கரையோரம் அமைந்துள்ள கடினமான இரானிய ஏவுகணை தளங்கள் மீது 5000 பவுண்ட் (2270 கிலோ) எடை கொண்ட ஆழமாக ஊடுருவி தாக்கும் ஆயுதத்தை வெற்றிகரமாக உபயோகித்ததாக தெரிவித்துள்ளது. ''இந்த தளங்களில் இருந்த, கப்பல்கள் மீது தாக்கக்கூடிய இரானிய க்ரூஸ் ஏவுகணைகள் இந்த நீரிணையின் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு பெரிய ஆபத்தாக இருந்தன," என அமெரிக்க ராணுவம் தெரிவிக்கிறது. உலகின் 20% எண்ணெய் கப்பல்கள் செல்லும் இந்த நீரிணையை இரான் வெற்றிகரமாக மூடியது கடல் போக்குவரத்தை பாதித்ததோடு உலகளாவிய எண்ணெய் விலை அதிகரிப்பிலும் பங்கு வகித்துள்ளது. இந்த பெரிய குண்டுகள், கடந்த ஆண்டு இரானின் நிலத்தடி அணுசக்தி தளங்களைத் தாக்குவதற்கு அமெரிக்கா பயன்படுத்திய "பங்கர் பஸ்டர்" குண்டுகளைப் போன்றதே. மற்ற குண்டுகளைப் போல் அல்லாமல், பங்கர் பஸ்டர் குண்டுகள் நிலத்தடியில் ஆழமாக ஊடுருவி வெடிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுகள், கனமாக மற்றும் வலுவான இரும்பால் மூடப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,USAF படக்குறிப்பு,ஜிபியு-72 வகை குண்டுகள் மிகப்பெரியதாக இருந்தாலும் எஃப்-15இ ஸ்டைக் ஈகிள் போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியும் இரான் நிலத்தடியில் ஆயுதங்களை வைத்திருப்பதாக நினைக்கும் அமெரிக்கா இரான் அதன் பெரும்பாலான ஆயுதங்களை நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்திருக்கிறது என அமெரிக்கா நம்புவதற்கான மற்றுமொரு உதாரணம், இந்த 2270 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்துவதாக வரும் செய்தி. இரானிய ஏவுகணை தளங்கள் மீது எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது என்பதை அமெரிக்க மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்) குறிப்பிடவில்லை. ஆனால் இந்த அம்சங்களுடன் பொருந்திப் போகும் இரண்டு வகைகள் உள்ளன. அவை ஜிபியு - 28 லேசர் மூலம் வழிநடத்தப்படும் குண்டு மற்றும் புதிய ஜிபியு-72 மேம்படுத்தப்பட்ட 5கே ஊடுருவும் குண்டு. இந்த இரண்டாவது வகை குண்டை பயன்படுத்தியிருப்பதற்கான வாய்ப்பே அதிகம். 2021-இல் முதல் முறையாக பரிசோதிக்கப்பட்ட இந்த குண்டு பெரிய கூட்டு நேரடி தாக்குதல் ஆயுதமாகும். இவை இலக்கை நோக்கி செயற்கைக்கோள் மற்றும் இனெர்ஷியல் (Inertial) நேவிகேஷன் அமைப்பால் வழிநடத்தப்படுகிறது. இந்த ஜிபியு-72 வகை குண்டு பரிசோதனை செய்யப்பட்டபோது, "கடினமாக ஆழத்தில் புதைக்கப்பட்ட இலக்குகள் சார்ந்த சவால்கள் மற்றும் ஃபைட்டர் மற்றும் பாம்பர் விமானங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது." என அமெரிக்க விமானப்படை தெரிவித்திருந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஸ்ரேலின் டெல் அவிவ்வை கோராம்சாஹர் 4 மற்றும் குவாதர் ஏவுகணைகளைக் கொண்டு இலக்கு வைத்ததாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்திருந்தது 'இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இரான் ஆயுதங்கள்' ஜிபியு-72 வகை குண்டுகள் மிகப்பெரியதாக இருந்தாலும் எஃப்-15இ ஸ்டைக் ஈகிள் போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியும். இது ராணுவ திட்டமிடுபவர்களுக்கு, பி1-பி வகை விமானங்களைச் சார்ந்திருக்காமல் பணியில் ஈடுபடுத்துவதில் பெரிய வசதியை வழங்குகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானின் ஏவுகணை மற்றும் டிரோன் உள்கட்டமைப்புகளைத் தாக்கியுள்ளன. ஆனால் இரானின் ஆயுதங்கள் தற்போதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. நேற்று, இஸ்ரேலின் டெல் அவிவ்வை கோராம்சாஹர் 4 மற்றும் குவாதர் ஏவுகணைகளைக் கொண்டு இலக்கு வைத்ததாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்திருந்தது. இவை பல வெடி மருந்துகளைக் கொண்ட பகுதிகளைச் சுமந்து செல்லக்கூடியது என அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் உள்ள காணொளிகள், இரானால் க்ளஸ்டர் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை வலுவாக சுட்டிக்காட்டுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp323e6y542o
-
வேலணையில் மாணவிகளை அவதூறு பரப்பிய மாணவனுக்கு நேர்ந்த கதி!
மாணவிகளை அவதூறு பரப்பிய மாணவனுக்கு நேர்ந்த கதி! Mar 18, 2026 - 04:10 PM சமூக ஊடகம் ஒன்றில், பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த யாழில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவரை 14 நாள்கள் சிறுவர் நன்னடத்தை மையத்தில் தடுத்துவைக்க ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் குறித்த அவதூறு பரப்பியதை நியாயம் கேட்கச் சென்ற பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர் ஒருவரை கூரிய ஆயுதமொன்றால் தாக்கி காயப்படுத்திய குற்றத்துக்காக குறித்த மாணவனின் தந்தையையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் வேலணைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கற்கும் மாணவன், மாணவி ஒருவரது புகைப்படத்தையும் மற்றுமொரு மாணவியின் தாயாரது தொலைபேசி இலக்கத்தையும் டிக்டொக் சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த அவதூறால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரது உறவினர்கள் அவதூறு பரப்பியவரின் வீட்டிற்குச் சென்று குறித்த மாணவனிடம் இது தொடர்பில் வினவியுள்ளனர். இதன்போது அவதூறு பரப்பிய மாணவனின் தந்தை நியாயம் கேட்கச் சென்ற ஒருவரை கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை சிறுகுற்றப் பிரிவு பொலிஸில் இரு மாணவிகளின் பெற்றோரும் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில். ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் மாணவனை சிறுவர் சீர்திருத்த மையத்தில் 14 நாட்களும், மாணவனின் தந்தையை 14 நாட்களும் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmmvwr4rd000i356p5yii0qf1
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இரான் போரில் டிரம்ப் முன்னுள்ள ஒவ்வொரு வாய்ப்புமே ஏன் ஆபத்தானது?
இரான் போரில் டிரம்ப் முன்னுள்ள ஒவ்வொரு வாய்ப்புமே ஏன் ஆபத்தானது? பட மூலாதாரம்,Reuters கட்டுரை தகவல் அந்தோனி ஜூர்ச்சர் வட அமெரிக்க செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தும் போரின் மூன்றாவது வாரத்தில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிபர் பதவியின் எஞ்சிய காலத்தை வடிவமைக்கக் கூடிய முக்கியமான முடிவுகளை எதிர்கொண்டுள்ளார். இந்தப் போர் மேலும் தீவிரமடையக் கூடியதாகவும், கட்டுப்படுத்துவதற்கு மிகவும் கடினமானதாகவும் மாறக்கூடும் என்ற போதிலும், டிரம்ப் இத்தகைய கவலைகளைப் பொதுவெளியில் வெளிப்படுத்துவதாகத் தெரியவில்லை. வெள்ளை மாளிகையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு உரையில், அவர் இந்தப் போர் குறித்துப் பேசினார். ஆனால், ஜான் எஃப் கென்னடி மையத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள், வெள்ளை மாளிகையில் புதியதொரு நடன அரங்கம் அமைக்கும் திட்டங்கள், இந்த ஆண்டின் ஃபிஃபா உலகக் கோப்பை, ஒரு குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் உடல்நிலை மற்றும் பிற விவகாரங்கள் எனப் போருடன் தொடர்பில்லாத பல தலைப்புகளைப் பற்றியும் அவர் பேசினார். இத்தகைய பரந்த மற்றும் முன்னரே திட்டமிடப்படாத பேச்சுமுறை டிரம்புக்கு இயல்பான ஒன்று. வார இறுதியில், அவர் தனது ஃப்ளோரிடா ஓய்வு விடுதியில் கோல்ஃப் விளையாட்டிலும் ஈடுபட்டார். தனது சமூக ஊடக தளமான 'ட்ரூத் சோஷியலில்' இரானுடனான போர் குறித்துப் பேசுவதற்கு அவர் செலவிட்ட நேரத்திற்குச் சமமான நேரத்தை, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை விமர்சிப்பதிலும் செலவிட்டார். டிரம்ப் பல தலைப்புகளில் கவனம் செலுத்தினாலும், ஒரு தலைவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், போர் என்பது பெரும்பாலும் ஓர் அதிபரின் பதவிக் காலத்தையே முழுமையாக ஆட்கொண்டு விடும் என்று வரலாறு காட்டுகிறது. இந்தப் போர் எதிர்பார்த்ததைவிட நீண்ட காலம் நீடிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. முன்னதாக, இந்தப் போர் "ஏற்கெனவே வெல்லப்பட்டுவிட்டது" என்றும் "முழுமையாக முடிந்துவிட்டது" என்றும் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், தற்போது அது இன்னும் பல வாரங்களுக்கு அல்லது அதற்கும் மேலாகத் தொடரக்கூடும் என்ற நிலை உருவாகியுள்ளது. திங்கட்கிழமை பிற்பகலில், ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் தான் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த சீன பயணம், இந்தப் போரின் காரணமாக ஒரு மாதம் தாமதமாகும் என்று டிரம்ப் அறிவித்தார். இதற்கான காரணத்தை வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லிவிட் பின்வருமாறு விளக்கினார்: "தற்போதைய சூழலில், முப்படைகளின் தலைமைத் தளபதியாகிய அதிபரின் தலையாய கடமை, 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' நடவடிக்கையின் தொடர் வெற்றியை உறுதி செய்வதே ஆகும்." இது இரானுக்கு எதிராக நடத்தப்படும் போருக்கு அதிகாரபூர்வமாகச் சூட்டப்பட்டுள்ள பெயரைக் குறிக்கிறது. பட மூலாதாரம்,PTI இந்த வார இறுதியில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களைப் பாதுகாக்க உதவும் வகையில், நாடுகளின் ஒரு கூட்டமைப்பை உருவாக்க விரும்புவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் தெரிவித்தார். இந்தப் பகுதி உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும், இரானின் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகிறது. அதுகுறித்துப் பதிவிட்ட டிரம்ப், "இந்தச் செயற்கையான தடையால் பாதிக்கப்படும் சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்பி வைக்கும் என்று நம்புகிறேன்," என்று தெரிவித்தார். "எப்படியிருப்பினும், ஹோர்முஸ் நீரிணையை விரைவில் திறந்த நிலையிலும், பாதுகாப்பான நிலையிலும், தடையற்ற சூழலுக்கும் நாம் கொண்டு வருவோம்," என்று அவர் எழுதியுள்ளார். இருந்தாலும், அவரது வேண்டுகோளுக்குப் பிறகு, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்படப் பல நாடுகள், இந்த முயற்சியில் இணைய விரும்பவில்லை என்று தெரிவித்தன. "நாங்கள் ஒரு விரிவான போருக்குள் இழுக்கப்பட மாட்டோம்," என்று பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் கூறியுள்ளார். அந்த நீரிணையில் நிலவும் சூழலைக் கையாள்வதற்கு ஏற்றதொரு "செயல்படக்கூடிய கூட்டுத் திட்டத்தை" வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பிற நாடுகள் இதில் இணையாத காரணத்தால், குறுகியதாக இருப்பினும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழிப் பாதையைப் பாதுகாக்க, அமெரிக்க கடற்படையின் கூடுதல் படைகளை அனுப்புவதா என்பது குறித்து டிரம்ப் தற்போது முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடக்கிறது. திங்கள் கிழமை, கடலில் கண்ணிவெடிகளைப் பதித்து, பிற கப்பல்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இரானிய கப்பல்களை அமெரிக்கா ஏற்கெனவே அழித்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார். அதேவேளையில், ஒரேயொரு கண்ணிவெடி கூடப் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்றும் எச்சரித்தார். மேலும் அவர், "இது சற்றும் நியாயமற்றது. நாம் போரில் வென்று வருகிறோம். இந்தச் சூழலில் தற்போது செய்துகொண்டிருக்கும் இத்தகைய செயல்களைச் செய்வதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை," என்று கூறினார். காணொளிக் குறிப்பு,கடல் நீரை குடிநீராக மாற்றும் நிலையங்களில் இரான் கை வைத்தால் வளைகுடா ஸ்தம்பிக்குமா? இரானுடனான மோதலில் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை செயல்பாட்டில் வைத்திருக்கிறது என்பதற்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை, சுமார் 5,000 வீரர்கள் மற்றும் மாலுமிகளை கொண்ட ஒரு கடற்படை பிரிவை ஜப்பானில் இருந்து மத்திய கிழக்கிற்கு நகர்த்துமாறு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. டிரம்ப் மேலும் ராணுவ நடவடிக்கைகளை எடுக்க முடிவெடுத்தால், அது அமெரிக்க படைகளை அதிக ஆபத்தில் தள்ளக்கூடும். ஏனெனில் அவர்கள் இரானுக்கு மிக அருகில் இருப்பார்கள். அவர் நடவடிக்கை எடுக்காமல், மாறாக இரானின் ராணுவத்தைப் பலவீனப்படுத்தும் தனது இலக்கை அமெரிக்கா ஏற்கெனவே அடைந்துவிட்டது என்று கூறினால், நிலைமை நிலையற்றதாகவே நீடிக்கக்கூடும். இரான் தொடர்ந்து கப்பல்களை அச்சுறுத்தலாம். எண்ணெய் விலைகள் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கலாம். அப்படியானால், மத்திய கிழக்கில் அதிகாரச் சமநிலையைத் தெளிவாக மாற்றாமலேயே, அமெரிக்கா பில்லியன்கணக்கான டாலர்களை செலவழித்திருக்கக்கூடும். இப்சோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கிளிஃபோர்ட் யங்கின் கூற்றுப்படி, ஏற்கெனவே மக்கள் ஆதரவு கலவையாக உள்ள நிலையில், டிரம்புக்கு எரிபொருள் விலை அதிகமாக நீண்ட காலம் நீடிப்பது ஒரு கடுமையான அரசியல் பிரச்னையாக மாறக்கூடும். தற்போதைக்கு, இரான் போர், குடியேற்றம், வர்த்தக வரிகள் போன்ற பிற பிரச்னைகள் குறித்து அவர்களில் சிலருக்கு சந்தேகங்கள் இருந்தாலும், டிரம்பின் முக்கிய ஆதரவாளர்கள் இன்னும் அவருக்கு ஆதரவளித்து வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஆதரவுக் குறைவில் முக்கியமாக மிதவாத குடியரசுக் கட்சியினர் மற்றும் எந்த கட்சியையும் சாராத வாக்காளர்கள் பங்கு வகிக்கின்றனர். டிரம்பின் ஏற்பு மதிப்பீடுகள் 40% என்கிற குறைந்த அளவில் உள்ளன. இது குடியரசுக் கட்சியினருக்கு கவலையளிக்கக்கூடும். இருப்பினும், இதுவரை இரான் போர் அவரது செல்வாக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கவில்லை. அமெரிக்கர்களுக்கு மிகவும் முக்கியமான, அன்றாட வாழ்க்கையை இந்தப் போர் பாதித்தால் இந்த நிலை மாறக்கூடும். டிரம்பின் அதிபர் பதவிக் காலத்தில் ஒட்டுமொத்த பணவீக்கம் குறைந்திருந்தாலும், வீட்டு வசதி, மளிகைப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலை இன்னும் அதிகமாகவே இருக்கிறது. இந்தப் போர் பொருளாதார பிரச்னைகளில் கவனம் செலுத்துவதில் இருந்து அரசாங்கத்தின் கவனத்தை திசை திருப்புகிறது. எரிபொருள் விலை அதிகமாகவே இருந்தால், அது டிரம்பின் அரசியல் நிலையைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும். சமீபத்தில், அமெரிக்காவில் ஒரு கேலன் பெட்ரோலின் விலை, ஒரு மாதத்திற்கு முன்பு 2.94 டாலராக இருந்த நிலையில், தற்போது 3.72 டாலராக உயர்ந்துள்ளது. அதன் தாக்கத்தை விளக்கிய யங், "இது எல்லாவற்றையும் தகர்த்துவிடுகிறது. குடியரசுக் கட்சியின் பார்வையில் மலிவு விலைத் திட்டம் தகர்க்கப்படுகிறது," என்றார். எளிதாகச் சொல்வதெனில், அதிகரிக்கும் வரும் விலைகள், மக்களின் வாழ்க்கையை இன்னும் இலகுவானதாக மாற்ற அரசு வகுத்துள்ள திட்டங்களைப் பாதிக்கக்கூடும் என்றும், அதன் அரசியல் ஆதரவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் விளக்கினார். பட மூலாதாரம்,EPA மறுபுறம், அதிபர் டிரம்ப் மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்க முடிவு செய்தால், ஒரு கடுமையான ஆபத்தும் உள்ளது. ஆயிரக்கணக்கான அமெரிக்க கடற்படை வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பது, இரானின் எண்ணெய் ஏற்றுமதிப் பகுதிகளைக் கட்டுப்படுத்துவது அல்லது இரானின் அணுசக்தித் திட்டத்தின் பகுதிகளை அழிப்பது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகத் தரைப்படைகளைப் பயன்படுத்த டிரம்ப் முடிவு செய்யக்கூடும். இருப்பினும், அமெரிக்க வீரர்களை இந்த மோதலுக்கு அனுப்புவது கடுமையான பொது விமர்சனத்திற்கு வழிவகுக்கும். பல அமெரிக்கர்கள் நீண்ட போர்களால் சோர்வடைந்துள்ளனர். மற்றொரு நீடித்த ராணுவ ஈடுபாட்டை அவர்கள் விரும்பவில்லை. வெளிநாட்டுப் போர்களைத் தவிர்ப்பதாக டிரம்ப் உறுதி அளித்ததால், அவரைப் பலரும் ஆதரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உணர்வை விளக்கிய கிளிஃபோர்ட் யங்க், "முடிவில்லா போர்ச் சோர்வு நிலை நிலவுவதாக" கூறினார். "நாம் தரைப்படைகளை அனுப்பினால் நிர்வாகத்திற்கு முற்றிலும் புதிய ஆபத்து ஏற்படும், அது எல்லாவற்றையும் மாற்றிவிடும்," என்றார் அவர். இதன் பொருள், மக்கள் நீண்டகாலப் போர்களால் சோர்வடைந்துள்ளனர் என்பதாகும். வீரர்களை அனுப்புவது அரசுக்குப் புதிய அரசியல் சிக்கல்களை உருவாக்கக்கூடும். அமெரிக்கா தனது நடவடிக்கைகளை வான்வழித் தாக்குதல்களுடன் மட்டுமே மட்டுப்படுத்தினால், டிரம்ப் தனது மக்கள் ஆதரவை மேம்படுத்திக் கொள்ள அதிக நேரம் கிடைக்கக்கூடும். அமெரிக்காவில் எரிபொருள் விலை உயரும்போது மக்கள் அடிக்கடி கோபமடைகிறார்கள். ஆனால், விலை மீண்டும் குறைந்தால் அந்தக் கோபமும் பொதுவாகக் குறைந்துவிடும். நவம்பரில் நடைபெறவிருக்கும் இடைக்காலத் தேர்தல்களுக்கு இன்னும் ஏழு மாதங்களுக்கு மேல் அவகாசம் இருப்பதால், நிலைமையைச் சமாளித்து, உள்நாட்டில் ஒரு பெரிய பொருளாதாரப் பிரச்னை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு டிரம்புக்கு இன்னும் நேரம் இருக்கிறது. "நமக்கு யாரும் தேவையில்லை. நாம் உலகின் வலிமையான தேசம்" என்று திங்கள் கிழமை டிரம்ப் கூறினார். இருப்பினும், அவரிடம் இருக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் அபாயங்களைக் கொண்டுள்ளது என்பதே டிரம்புக்கு இருக்கும் முக்கிய சவால். அவர் தனியாகச் செயல்பட்டாலும் சரி, மற்றவர்களுடன் சேர்ந்து செயல்பட்டாலும் சரி, எளிய தீர்வு என எதுவும் இல்லை. இந்த மோதலுக்கு விரைவான, எளிமையான ஒரு முடிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy57xzl9v1yo
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
ஆமா…இந்த எட்டு கோடி உலக தமிழினத்தில் இவர் ஒருவர் மட்டும்தான் இலக்கியம் படைக்கிறார்😂. இவருக்கு மட்டும்தான் எது இலக்கியம், எது குப்பை என பிரித்தறியும் ஆற்றல் உள்ளது😂. இவர்தான் தமிழ் இலக்கியத்தை காப்பாத்த வேணும் - இந்தியாவிற்கு எடுத்து சொல்ல வேண்டும். போய்யா அந்த பக்கம் எரிச்சல் பிடிச்ச மனுஷா. புளித்த மாவுக்கு தோசை சுடும் அடிதட்டு பெண்ணோடு மல்லுகட்டிய gutter dweller , தமிழனுக்கு பாடம் எடுக்க வந்துட்டார்😂. இந்த அற்பனுக்கு கூஜா தூக்கவும் நம்மில் ஆட்கள் இருப்பதுதான் வேதனை. உலக மொழிகளில் எல்லாம் தமிழர்கள் ஆளுமை செய்கிறார்கள், இலக்கியம் படைக்கிறார்கள், அங்கீகாரமும் பெறுகிறார்கள். ஆனால் எமது தாய் மொழியில் எது இலக்கியம் என்பதை தீர்மானிக்கு அதாரிட்டி தான் தான் என ஒரு நூலிபான் குறுக்க மறுக்க ஓடுகிறது😂. எல்லாமும் தமிழர்கள் கொடுத்த இடம்.