Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. ஈழ ஆதரவு அரசியல் என்றால் என்ன? March 11, 2026 — கருணாகரன் — தமிழ்நாட்டு அரசியலில் ஈழத்தமிழர் விவகாரம் அவ்வப்போது பேசப்படுவதுண்டு. (“நாங்கள் அப்படியல்ல. தொடர்ச்சியாகவே ஈழத் தமிழர்களுடைய விடுதலையைப் பற்றிப் பேசி வருகிறோம்” என்று பழ நெடுமாறன், வை.கோ, கொளத்தூர் மணி போன்ற சிலர் சொல்லக்கூடும். இதைக்குறித்துப் பின்னர் பார்க்கலாம்). தேர்தல் காலமென்றால், இன்னும் சற்று உரத்த தொனியில் இந்தப் பேச்சுக்குரல் கேட்கும். இப்போதும் அப்படித்தான், தமிழ்நாட்டு அரசியல் மேடைகளிலும் அரங்குகளிலும் ஈழத்தமிழர் அரசியலும் விடுதலைப் புலிகள் இயக்கமும் அதனுடைய தலைவர் பிரபாகரனின் பெயரும் பேசப்படுகின்றன. இதில் சீமான் சற்றுச் சத்தமாக முழங்குகிறார். இப்படிப் பேசப்படுவதால் ஈழத்தமிழர்களுக்கு என்ன பயன் கிடைத்தது; கிடைக்கிறது; எதிர்காலத்தில் எத்தகைய நன்மைகள் கிட்டும் என்பதைப் பற்றியெல்லாம் எவருக்கும் கவலை இல்லை. அதைப்பற்றிப் பரிசீலனை செய்வது கூட இல்லை. மூன்று வகை இதில் நாம் மூன்று வகையினரைப் பார்க்கலாம். ஒரு தரப்பு மெய்யாகவே ஈழ விடுதலை கிடைக்க வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமை பெற வேண்டும் என்று நியாயமாகவே விரும்புகிறது. ஆனால், இந்தத் தரப்புக்கு இலங்கை இனப்பிரச்சினையின் சிக்கலான தன்மையைப் பற்றிச் சரியான புரிதல் இல்லை. ஈழவிடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் நிலைமை இன்னும் சிக்கலடைந்துள்ளது என்பதையும் இந்தத் தரப்பு சரியாக அறிந்து கொள்ளவில்லை. அதைப் புரிந்து கொண்டால்தான் ஈழவிடுதலைக்கான அல்லது ஈழத்தமிழரின் உரிமைக்கான சாத்தியப்பாடுகளைப் பற்றிச் சிந்திக்க முடியும். குறிப்பாக இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்களின் தனித்துவம், அவர்களுக்குரிய இடம், இந்தப் பிரச்சினையில் அவர்களுடைய வகிபாகம் போன்றவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஈழவிடுதலையை அல்லது இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைப் பிரச்சினையைப் பற்றிப் புதிய வாசிப்புச் செய்ய வேண்டும். அதற்கான உழைப்பும் உணர்திறனும் அவசியமாகத் தேவைப்படுகிறது. ஆனாலும் இந்தத் தரப்பினரிடத்தில் நியாயமான உணர்வு உண்டு. அடுத்த தரப்பு, ஈழப்போராட்டத்தைத் தன்னுடைய அரசியற் தேவைக்காக எடுத்தாள்கிறது. இது வெற்றுப் பிரகடனங்களிலும் தீவிர உணர்ச்சி நிலையிலும் இந்த விசயத்தை எடுத்தாள்கிறது. நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான தமிழர்களைச் சிங்களர்கள் தாக்குகிறார்கள்; கொல்கிறார்கள். சிங்கள அரசு தமிழ் மக்களைப் படுகொலை செய்கிறது என்ற அடிப்படையில் நோக்கிக் கொதிப்படைகிறது. இந்தத் தரப்பில் ஊடகங்களும் இலக்கிய அமைப்புகள், வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள் போன்றனவும் அடங்கும். இதொரு அயல் நாட்டின் அரசியற் பிரச்சினை. ஆகவே அதற்குரிய வரன்முறைகளும் எல்லைகளும் இருக்கும். இதைப் புரிந்து கொள்ளாமல் கொதிப்பதாலும் பொங்குவதாலும் எந்தப் பயனுமில்லை. இந்தத் தரப்பு பிரச்சினையை மேலும் சிக்கலடைய வைக்கிறது. இவர்களுடைய குரல் உயர உயர, ஈழத்தில் நெருக்கடி அதிகரிக்கிறது. மூன்றாவது தரப்பு, ஈழப்போராட்டத்தை விடுதலைப்புலிகளோடு மட்டுப்படுத்திப் பார்ப்பது. மறுபக்கத்தில் இனவாதச் சிங்கள அரசைக் கடுமையாக எதிர்ப்பது. அதை அழித்தொழிக்க வேண்டும் என்று பிரகடனம் செய்வது. இப்பொழுது சீமான் இதில் முன்னணி வகிக்கிறார். இது சாத்தியமே இல்லாத கனவுலகப் பிரகடனங்களைச் செய்து காலத்தையும் சக்தியையும் வீணடிக்கிறது. மட்டுமல்ல, ஈழ அரசியலைப் புரிந்து கொள்ளாமல் அதைத் தலைகீழாக்க முயற்சிக்கிறது. இந்தத் தரப்பினால் ஒரு சல்லிப் பணத்துக்குப் பிரயோசனமில்லை. இதையெல்லாம் பார்த்தால், தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களும் அரசியற் கட்சிகளும் அரசியல் அறிவே இல்லாதவர்களா? என்று கேட்கத் தோன்றும். அப்படிச் சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறார்கள். சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள். உண்மையைத் துணிந்து சொல்வதென்றால், ஈழத்தமிழர்களுடைய அரசியலை உரத்த தொனியில் பேசுவதால் ஈழத்தமிழர்களின் அரசியல் மேலும் சிக்கலடைந்து கொண்டேயிருக்கிறது. ஈழத்தமிழர்களின் அரசியல் மட்டுமல்ல, இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களுடைய அரசியலும் நெருக்கடிக்குள்ளாகிறது. மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து 1800 களில் இலங்கைக்குப் பெயர்க்கப்பட்டு இலங்கையின் மலையகப் பகுதிகளில் உள்ள மக்களின் (இந்திய வம்சாவழியினரின்) அரசியலும் நெருக்கடிக்குள்ளாகிறது. அதாவது இலங்கையில் சிறுபான்மையினராக இருக்கும் மொத்தத் தமிழ்பேசும் மக்களின் அரசியல் பாதிக்கப்படுகிறது. காரணம், தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் விவகாரத்தை – விடுதலையை – உரிமைகளைப் பற்றிப் பேசுவதையும் தமிழ் நாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களையும் சிங்கள மக்கள் வேறுவிதமாகவே – எதிராகவே – பார்க்கிறார்கள். அவர்களுடைய பார்வையில் அல்லது புரிதலில் ‘இலங்கையின் சிறுபான்மையின மக்களுக்கு (தமிழ் பேசும் தரப்பினருக்கு) இந்தியா பேராதரவை வழங்குகிறது. சிங்களவர்களுக்கு இந்தியா எப்போதும் எதிராகவே உள்ளது’ என்றே பொருள் கொள்ளப்படுகிறது. இப்படிச் சிந்திப்பதால், மேலும் தமிழ்பேசும் மக்களை சிங்கள அரசாங்கம் ஒடுக்குகிறது. இது அச்சத்தினால் உருவாகும் உளவியலின் விளைவாகும். தமிழ்நாட்டை இந்தியா என்றே பெரும்பான்மையான சிங்களவர்களும் புரிந்து கொள்கிறார்கள். ஆகவே ‘தமிழ் பேசும் மக்களுக்குத் தமிழ்நாடு ஆதரவாக இருக்கிறது என்பதை இந்தியா ஆதரவாக இருக்கிறது என்றே பார்க்கிறார்கள். ஆக,தமக்குத்தான் எவருடைய ஆதரவும் இல்லை. இந்த உலகத்தில் தாம் (சிங்களவர்) ஒரு சிறிய இனம். இலங்கையில் பெரும்பான்மையினராக இருந்தாலும் உலகத்தில் தனித்து விடப்பட்ட, சின்னஞ்சிறிய இனம். இரண்டு பில்லியன் மக்கள் மட்டுமுள்ள இனம். அதுவும் இலங்கைத்தீவில் மட்டுமே உள்ள இனம். இந்த நிலையில் அயலில் உள்ள தமிழ்நாடும் இந்தியாவும் தமிழர்களோடு சேர்ந்து தம்மை நெருக்கடிக்குள்ளாக்கப் பார்க்கிறது’ என்றே சிங்களத் தரப்பினால் கருதப்படுகிறது. இதற்கு வலுவானதொரு வரலாற்றுக் காரணமும் சிங்களத் தரப்பிடமுண்டு. வரலாற்றுக் காலம் தொட்டு, இலங்கையின் மீது தென்னிந்தியப் படையெடுப்புகளும் ஆக்கிரமிப்பும் நிகழ்ந்திருக்கிறது. சோழர்காலம் இதில் மேலும் உச்சமடைந்திருந்தது. ‘பொன்னியின் செல்வன்’ உங்கள் நினைவுக்கு வரலாம். இலங்கையின் மிகப் புகழ் மிக்க ஆட்சி மையங்களாக இருந்த அநுராதபுர ராஜ்ஜியத்தையும் பொலநறுவை ராஜ்ஜியத்தையும் சோழப்படையெடுப்புகளே வீழ்ச்சியடையச் செய்தன. இப்படித் தென்னிந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளும் ஆக்கிரமிப்புகளும் சிங்களச் சமூகத்தின் ஆழுள்ளத்தில் நீங்காத வெறுப்பாகவும் வரலாற்றுக் காயமாகவும் வளர்ந்துள்ளது. தமது ஆட்சியையும் தாம் உருவாக்கிய நீர்ப்பாசனம் உள்ளிட்ட சிறப்பான கட்டமைப்புகளையும் தென்னிந்தியர்கள் (தமிழர்கள்) படையெடுத்து வந்து ஆக்கிரமித்தனர் என்ற வரலாற்றுக் கோபம் சிங்கள மக்களிடத்தில் உண்டு. இலங்கையின் நீர்ப்பாசன வரலாறு கிமு 5ஆம் நூற்றாண்டு முதல் (பாண்டுகாபய மன்னன் காலம்) தொடங்கும் மிக நீண்ட மற்றும் மேம்பட்ட பொறியியல் பாரம்பரியத்தைக் கொண்டது. உலர் வலய விவசாயத்திற்காக குளங்கள் (ஏரிகள் – Wewa) மற்றும் கால்வாய் அமைப்புகளை உருவாக்கி, ” குளங்களின் சங்கிலித் தொடர்” (Tank Cascade System) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மன்னர்கள் நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்தனர். பொலன்னறுவை காலத்தில் பராக்கிரம சமுத்திரம் போன்ற பிரம்மாண்டமான ஏரிகள் கட்டப்பட்டன. பிசோகொட்டுவ (Biso Kotuwa – Valve Pit) எனப்படும் கசிவுத் தடுப்பு மற்றும் நீர் கட்டுப்பாட்டு கோபுரம் கி.பி. 03 ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பமாகும். இதை உருவாக்கிய பிரதான மன்னர்கள், வசபன் (பெரிய குளங்கள்), தாதுசேனன் (கலாவேவ), முதலாம் பராக்கிரமபாகு (பராக்கிரம சமுத்திரம்) ஆகியோர் நீர்ப்பாசனத் துறையில் முக்கிய பங்காற்றினர். இலங்கையின் இந்த நீர்ப்பாசன கலாச்சாரம், சுமார் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக நிலையான விவசாயத்திற்கும், உணவுப் பாதுகாப்பிற்கும் அடிப்படையாக இருந்து வருகிறது. இப்படி உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனப் பொறிமுறையை அடிப்படையாகக் கொண்ட விவசாயப்பொருளாதாரத்தையும் கடலில் முத்துக் குளிப்பதையும் இரத்தினக்கல் மற்றும் ஏலம், கராம்பு, கறுவா, மிளகு போன்ற வாசனைப் பொருட்களையும் கொண்ட பெரு வணிகத்தையும் சோழர் தமதாக்கிக் கொண்டனர். இந்த ஆக்கிரமிப்புத் தன்மை இன்றைய இந்த யுகத்திலும் ஏதோ ஒரு விதத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் ஈழத் தமிழரின் அரசியலை – உரிமைப் பிரச்சினையைச் சாட்டாகவும் சாதகமாகவும் வைத்துக் கொண்டு இந்தியாவும் தமிழ்நாடும் விளையாடுகின்றன என்றே சிங்களர் கருதுகிறார்கள். இதை நாம் மேலும் புரிந்து கொள்ள சிங்களவர்களின் வரலாற்று(?) நூலாகக் கருதப்படும் மஹாவம்சத்தைப் படித்தறியலாம். மஹாவம்சத்தில் இந்திய எதிர்ப்புவாதமும் தமிழ்கள் மீதான வெறுப்பும் தாராளமாகவே பதியப்பட்டுள்ளன. இந்தப் பதிவுக்கு வயது 2000 க்கு மேல். மட்டுமல்ல, இன்றைய நாளும் கூட அதனோடு பதிவு செய்யப்படுகிறது. அதாவது, மஹாவம்சம் எழுதப்பட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக அதனுடைய வரலாறு பதியப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முக்கிய சம்பவமும் வரலாறாகப் பதிவு பெறுகிறது. ஆகவே இந்தப் பின்னணியில், இந்தியா தொடர்பாகவும் தமிழ் பேசும் மக்கள் பற்றியும் எதிர்மறை எண்ணத்தோடு ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள சிங்களத் தரப்பு, எப்படி எச்சரிக்கையாகவும் தீவிர நிலையிலும் பழிதீர்க்கும் முனைப்போடும் இயங்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், சிங்களத் தரப்பு கருதுவதைப்போல உண்மையான நிலவரம் இல்லை. முக்கியமாக, இந்திய மத்திய அரசு தமிழ் மக்களுக்குச் சாதகமாக இல்லை. அப்படி இருந்திருக்குமாக இருந்தால், இலங்கையில் இந்தளவு பெரிய இனப் படுகொலைகளும் ஒடுக்குமுறையும் நடந்திருக்க வாய்ப்பில்லை. எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எந்த விதமான அரசியல் தீர்வையும் வழங்காமல் இலங்கை இழுத்தடிக்கவும் முடியாது. இலங்கையும் இந்தியாவும் இணைந்து செய்து கொண்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ள மாகாணசபை ஆட்சியை உரிய முறையில் நடைமுறைப்படுத்தியிருக்கும். குறைந்த பட்சம் அதற்கு ஒழுங்காகத் தேர்தலையாவது நடத்தும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், அது எதனைக் குறிக்கிறது அதனுடைய அரசியல் சேதி என்ன? மறுபக்கத்தில் தமிழ்நாட்டு அரசும் மக்களும் முழுமையான ஆதரவை ஈழப்போராட்டத்துக்குத் தருவதாகச் சொன்னாலும் அதனால் எந்த பயனும் கிடைத்ததில்லை. கிடைக்கப்போவதுமில்லை. இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு உவப்பானதொரு தீர்மானத்தை எடுக்காத வரையில் தமிழ்நாட்டினால் எதையும் செய்யவே முடியாது. இலங்கையின் இனப்பிரச்சினையைப் பற்றி இந்திய மத்திய அரசு பேசத் தொடங்கி 50 ஆண்டுகள் கடந்து விட்டன. இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கென்ற பேரில் ஆயுதப்போராட்டத்துக்கு மறைமுகமான முறையில் மத்திய– மாநில அரசுகள் தாராளமான – ஏராளமான உதவிகளைச் செய்தன என்பது உண்மையே. மட்டுமல்ல, இந்திய அரசின் மத்தியஸ்தத்துடன் பல சுற்றுப் பேச்சுகள் ஈழத்தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளுக்குமிடையில் நடந்ததும் உண்மை. உச்சக்கட்டமாக 1987 இல் இலங்கை – இந்திய உடன்படிக்கையே செய்யப்பட்டது. ஆனாலும் விளைவுகள் எதுவும் நல்லனவாக அமையவில்லை. முக்கியமாக ஈழப்போரின்போதும் சரி, ஈழப்போரின் இறுதிக்காலத்திலும் சரி தமிழ்நாட்டின் கொந்தளிப்பு அரசியல் நல்விளைவுகள் எதையும் உருவாக்கவில்லை. காரணம், அதனுடைய அதிகார எல்லை மட்டுப்படுத்தப்பட்டது. இது எதைக் காட்டுகிறது? இந்திய மத்திய அரசை மீறித் தமிழ்நாடு எதையும் செய்ய முடியாது என்பதைத்தானே! அந்த நாட்களில் நெருக்கடிக்குள்ளாகிய ஈழத் தமிழர்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினராலும் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் கூட இலங்கையில் தமிழ் மக்களுடைய பகுதிக்கு அனுப்ப முடியவில்லை. அதற்கான ஏற்பாட்டையும் அனுமதியையும் இந்திய மத்திய அரசே செய்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. ஆக, தார்மீக உணர்வு அடிப்படையில் மட்டும்தான் ஆதரவுக் குரலைக் கொடுக்க முடியும். கியூபாவுக்கு ஆதரவாக, குர்திஸ்க்கு ஆதரவாக, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பதைப்போல. அல்லது இந்திய மத்திய அரசின் ஆதரவுடன் நிவாரணப் பொருட்களை மட்டு அனுப்பி வைக்க முடியும். அவ்வளவுதான். அதற்கு அப்பால் செல்ல வேண்டுமானால் அது இந்திய மத்திய அரசுடன் தொடர்புபட்டதாக இருக்க வேண்டும். இந்திய மத்திய அரசின் முடிவுகள் – தீர்மானங்கள்- இந்திய வெளியுறவுக் கொள்கை, பிராந்திய நிலவரம், இந்தியப் பாதுகாப்பு, இந்திய நலன் போன்றவற்றை உள்ளடக்கியது. இந்த அடிப்படையை மனதிற்கொண்டே மத்திய அரசின் தீர்மானங்கள் அமையும். இதுதான் நடந்து கொண்டுமிருக்கிறது. இதை மீறி மத்திய அரசு தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை. பா.ஜ.க மட்டுமல்ல எந்தத் தரப்பு ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும். இதுதான் நிலவரம். இதெல்லாம் தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கும் அறிவுபூர்வமாக அரசியல் பகுப்பாய்வைச் செய்வோருக்கும் அரசியல் விமர்சகர்களுக்கும் தெரியாது என்றில்லை. பலரும் இதைத் தெரிந்து கொண்டே விளையாடுகிறார்கள். சிலர் மட்டுமே உண்மையைச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்கின்ற உண்மைக்கு மதிப்பில்லை. பொய்யை, கற்பனையை நம்புகின்ற மக்களே அதிகமாக உள்ளனர். தமிழ் நாட்டிலும் இதுதான் நிலவரம். ஈழத்திலும் அப்படித்தான் உள்ளது. ஆனால், இந்த விளையாட்டுகளுக்கு ஈழத்தமிழர்களே விலையைக் கொடுக்கிறார்கள். அவர்கள் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறுகிறார்கள். ஆகவே இது ஒரு அபாய விளையாட்டு. அரசியல் தவறு. அநீதியான செயல். கண்டனத்துக்குரிய விடயம். ஆனால், ஒரு காலம் ஈழப்போராட்டத்துக்கும் ஈழப்போராளிகளுக்கும் தமிழ்நாடு முழு மனதோடு உதவியது; ஆதரவு நல்கியது. 1970 களின் பிற்பகுதியிலிருந்து1980 கள் வரையில். அந்தக் காலத்தில் மாநில அரசு, அதனுடைய காவல்துறை தொடக்கம், தமிழகத்தின் அரசியற் கட்சிகள், அரசியல் தலைவர்கள், மாணவர்கள், மக்கள், வணிகர்கள், வண்டி ஓட்டுநர்கள், தெருவோர உணவுக் கடைக்காரர்கள், கிராமங்களில் விவசாயிகள், பண்ணைகள் வைத்திருப்போர், மீனவர்கள், எழுத்தாளர்கள், சினிமாத்துறையினர் எனச் சகலரும் ஈழப்போராட்டத்தையும் ஈழப்போராளிகளையும் ஆதரித்தனர். இந்த ஆதரவைச் சரியான முறையில் பேணி, போராட்டத்துக்கு ஏற்றவாறு வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக அதைப் பழாக்கிச் சிதைத்ததில் பெருந்தவறை ஈழப்போராளிகளும் போராட்ட இயக்கங்களும் நிறைவேற்றியது துயரம். பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு, சூளைமேடு கொலை என்று தொடங்கிய ஆயுத நடவடிக்கை, முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் படுகொலை வரையில் நீண்டது. இந்தத் தவறுக்கு தமிழ்நாடு பெரிய விலையைத் தானும் கொடுக்க வேண்டியிருந்தது. இன்று இந்தக் கசப்பான வரலாற்று உண்மைகளை ஏற்றுக் கொண்டு புதிய தடத்தில் காலடி வைக்க வேண்டும். அது யதார்த்தம் என்ன என்பதைப் புரிந்து கொள்வதில் இருந்து ஆரம்பிக்கப்படுவது அவசியமாகும். சில ஈழ அரசியல் பார்வையாளர்கள் கருதுவதைப்போல, தமிழகத்தின் மூலமாக இந்திய மத்திய அரசைப் பயன்படுத்தி, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்பது மிகக் கடினமானது. ஆனால், அவர்கள் ‘சென்னை ஒரு திறவு கோலாக இந்தப் பிரச்சினையில் இருக்கும்’ என்று ஆழமாக நம்புகிறார்கள். அவர்களுடைய பார்வை எப்படியென்றால், ஈழத்தமிழர்களுக்குச் சாதமாக – ஆதரவாக சென்னையில் (தமிழ அரசு) எடுக்கின்ற தீர்மானங்களும் கொடுக்கின்ற அழுத்தங்களும் இந்திய மத்திய அரசை இலங்கையை நோக்கித் திரும்ப வைக்கும். இலங்கையின் மீது அழுத்தத்தைக் கொடுக்க வைக்கும் என்பதாக. இதைப் படிக்கும்போது சிரிப்பு வருகிறது அல்லவா! சென்னையில் இருக்கும் ஆளுநர் ரவியோடு தினமும் தமிழ்நாடு மோதவேண்டியுள்ளது. தமிழ்நாட்டின் அதிகாரத்தையே பிடுங்க அல்லது அதில் தலையீடு செய்வதற்கு மத்தி முயற்சிக்கிறது. இதற்கு எதிராக தமிழ்நாடு போராட வேண்டியுள்ளது. இந்த நிலையில் எப்படி அது மத்தியை ஈழத்தமிழருக்கு ஆதரவாகச் சாய்க்க முடியும்? குறைந்த பட்சம் இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினை என்ற வகையில் ஈழத்தமிழ் மீனவர்களும் தமிழக மீனவர்களும் தினமும் மோதிக்கொள்கிறார்கள். தமிழக மீனவர்களின் படகுகளைக் கடலில் வைத்துப் பறிமுதல் செய்கிறது இலங்கைக் கடற்படை. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். இதைக் கூட இந்திய – இலங்கை அரசுகள் பேசி ஒரு தீர்வுக்கு வரவில்லை. தமிழக அரசு இதில் ஒரு சரியான தீர்வை எட்டமுடியாமலிருக்கிறது. இந்தப் பிரச்சினையை ஈழத் தமிழ் அரசியல்வாதிகளும் கட்சிகளும் தமிழகத்தோடும் இந்தியாவோடும் பேசி ஒழுங்குக் கொண்டு வர முடியாமலிருக்கின்றன. இந்த நிலையில் 75 ஆண்டுக்கு மேலான இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு சென்னையைத் திறவு கோலாக்குவதென்றால்! இங்கே நாம் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். ஈழத்தில் உள்ள அரசியல்வாதிகளும் அரசியற் கட்சிகளும் தமிழகத்தையும் இந்தியாவையும் அளவுக்கு அதிகமாக நம்புகின்றன; எதிர்பார்க்கின்றன. அல்லது அப்படி நடிக்கின்றன. இலங்கையின் மீது இந்தியா அரசியல் அழுத்த்ததை(இலங்கை இந்திய உடன்படிக்கையின் அடிப்படையிலேனும்) கொடுக்க வேண்டும் எதிர்பார்ப்பது தவறில்லை. ஆனால், அதற்கப்பால் சில அரசியல்வாதிகளும் சில அரசியற் கட்சிகளும் தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்கள் சிலரோடு நெருக்கம் கொள்வதாக காட்டிக் கொள்வதும் தமிழகத்தின் ஆதரவு தமக்கு உண்டென்று கூறுவதும் தேர்தல் அரசியல் ஆதாயங்களுக்கானது மட்டுமே. தமிழக மக்களினதும் தமிழ்நாட்டு அரசினதும் ஆதரவைப் பெறுவது நல்லது. ஆனால் அது தார்மீக அடிப்படையிலானது மட்டுமே. தமிழகம் தொழில்துறைகளில் முதலீட்டை ஈழத்தில் – தமிழ்ப்பகுதிகளில் – செய்வதாக இருந்தாலும் இலங்கை அரசு, இந்திய மத்திய அரசு ஆகியவற்றின் ஆதரவும் உடன்பாடும் வேண்டும். இந்த நிலையில் எப்படி ஈழ விடுதலை அரசியலில் தமிழ்நாடு முழுமுனைப்போடு செயற்பட முடியும்? தமிழ்நாடு சட்டமன்றில் ஒரு தீர்மானம் ஈழத்தமிழருக்கு ஆதரவாக எடுக்கப்பட்டால், அதனைக் கண்டு சீற்றமடைகின்றது சிங்களத் தரப்பு. சிங்களத் தரப்பின் அந்தச் சீற்றம் ஒடுக்குமுறையாக ஈழத்தமிழர்களின் மீது பிரயோகிக்கப்படுகிறது. அந்த ஒடுக்குமுறையைக் கட்டுப்படுத்தும் வலுவோ, சட்ட ஆற்றலோ தமிழ் நாட்டுக்கு இல்லை. உதாரணமாக ஈழ யுத்தத்திற்குப் பிறகு (2009) தமிழ்ப்பகுதிகளில் (வடக்குக் கிழக்கு மாகாணங்களில்) பௌத்தமயமாக்கல் தீவிரமடைந்துள்ளது?தமிழ்நாட்டினால் அல்லது இந்திய மத்திய அரசினால் என்ன செய்ய முடிந்திருக்கிறது? அல்லது என்ன செய்ய முடியும்? விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த 16 ஆண்டுகாலத்தில் ஏன் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண முடியவில்லை? அதற்கான அழுத்தத்தை ஏன் கொடுக்க முடியாதிருக்கிறது? எந்த அரசியல் நாடகத்துக்கும் ஒரு எல்லை உண்டு. பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்படையச் செய்வது அரசியல் அல்ல. அதற்கு விடுதலை அரசியல் என்று பெயரைச் சூட்டுவது கேவலத்திலும் கேவலம். https://arangamnews.com/?p=12725
  3. இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை.. திங்கள், 16 மார்ச் 2026 02:43 PM வடமாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் பிரட்லியின் செயற்பாடுகளை வடமாகாண ஆளுநர் வேடிக்கை பார்ப்பாராயின் பாடசாலைகளில் இந்து மாணவர்களுக்கு வழங்கும் பைபிள்களை வாங்கி கொளுத்துவோம் என இலங்கை சிவசேனை அமைப்பின் சிவத்தொண்டர்கள் சிறீந்திரன் மற்றும் மாதவன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், வட மாகாண மேலதிக கல்வி பணிப்பாளரின் செயற்பாடு மதங்களுக்கு இடையில் முறுகல்களை ஏற்படுத்துவதாக அமைகிறது. பைபிள் என்கின்ற கிறிஸ்தவ நூலினை வட மாகாண பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு அனுமதித்தமை இந்து மாணவர்களையும் பைபிள் நூலை பெறுவதற்கு திணிப்பதாக அமைகிறது. குறித்த நூலினை வழங்குவதற்காக அனுமதி கோரிய கிறிஸ்தவ அமைப்பு தொடர்பில் விசாரித்தபோது அவ்வாறான அமைப்பு ஒன்று இலங்கையில் பதிவு செய்ததாக அறியப்படவில்லை. அவ்வாறான அமைப்பு வடமாகாணத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் பைபிள்களை வழங்கப்போவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. வடமாகாண ஆளுநரின் அனுமதி இல்லாமல் மேலதிகமாக மாகாண கல்வி பணிப்பாளர் வழங்குவதற்கு சிபாரிசு செய்தமை ஏதோ ஒரு பின்புலத்தை அடிப்படையாக கொண்டதாக பார்க்கிறோம். குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநருக்கும் எழுத்தம் மூலம் தெரியப்படுத்தியுள்ள நிலையில் பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம். ஆகவே குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் இந்து மாணவர்களுக்கு பைபிளை வழங்க வழங்க முற்பட்டால் அதனை வாங்கி பாடசாலைகளுக்கு முன்பாக கொளுத்துவோம் என மேலும் தெரிவித்தனர் https://jaffnazone.com/news/55614
  4. லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ நெருங்குகிறது Published By: Vishnu 17 Mar, 2026 | 06:06 AM லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 886 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2,141 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இஸ்ரேலிய வான் மற்றும் தரைவழி தாக்குதல்களால் இறப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தொடர்ந்து வரும் வன்முறை நாட்டின் சுகாதாரத் துறையையும் கடுமையாக பாதித்துள்ளது, மேலும் தாக்குதல்களில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கச் சென்ற மருத்துவ ஊழியர்கள் கூட இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகவோ அல்லது காயமடைந்ததாகவோ வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 2 முதல் குறைந்தது 38 சுகாதார ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 69 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தொடர் தாக்குதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு தேடி வருகின்றனர். https://www.virakesari.lk/article/241153
  5. மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப்புதைகுழி: நீதிபதி உள்ளிட்ட குழுவினர் விசேட கள விஜயம்! Vhg மார்ச் 17, 2026 குருக்கள்மடம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி இடத்தினை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் இன்று (17.03.2026) ஆம் திகதி நேரடி கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர். கடந்த 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு, கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கிப் பயணித்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு, குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீண்டகாலமாக வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கின் ஒரு கட்டமாக, இன்று களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன், பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் விசேட குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். தற்போது இந்த இடம் பலத்த பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், குருக்கள்மடம் மனிதப்புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். நீதிமன்றின் உத்தரவிற்கமைய இந்த அகழ்வாய்வு பணிகள் நடைபெறவுள்ள நிலையில், இன்றைய இந்த விசேட கள விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. https://www.battinatham.com/2026/03/blog-post_499.html
  6. அவுஸ்திரேலியாவுக்கும் எரிபொருள் நெருக்கடி? Published By: Vishnu 17 Mar, 2026 | 10:07 AM சீனா தனது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து எரிபொருள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதால், அவுஸ்திரேலியாவின் திரவ எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுக்கான ஆபத்து தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த சூழ்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ள குறைந்தது இரண்டு சரக்குகளாவது சந்தேகத்தில் இருப்பதாக அவுஸ்திரேலியன் ஃபைனான்சியல் ரிவியூ செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. உலகின் மிக முக்கியமான கப்பல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் இரண்டு டேங்கர் கப்பல்கள் வெடித்துள்ளன, மேலும் மோதல் தொடரும் வரை கப்பல்கள் இந்த வழியைப் பயன்படுத்தாமல் இருக்க அதிக வாய்ப்புள்ளது. அதாவது சீனா போன்ற ஆசிய சுத்திகரிப்பு மையங்களால் பெறப்படும் எண்ணெயின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த விநியோக பற்றாக்குறை காரணமாக, அந்த சுத்திகரிப்பு நாடுகள் தங்கள் சொந்த பெட்ரோல், டீசல் மற்றும் ஜெட் எரிபொருளுக்கான மூலோபாய தேவைகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் கூறுகின்றன. ஒட்டுமொத்தமாக, ஆசிய நாடுகள் தங்கள் எண்ணெய் தேவைகளில் 90% வரை மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து பெறுகின்றன. திரவ எரிபொருட்களின் நிகர இறக்குமதியாளராக, ஆஸ்திரேலியா ஆசிய சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ளது. இது ஜெட் எரிபொருளுக்கு குறிப்பாக உண்மை, மேலும் ஜெட் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளால் ஆஸ்திரேலியாவின் பாதிப்பு குறித்து விமான நிபுணர்கள் நீண்ட காலமாக எச்சரித்துள்ளனர். உதாரணமாக, சிட்னி விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் சார்ல்டன், சிட்னி ஜெட் எரிபொருள் இறக்குமதியை முழுமையாகச் சார்ந்துள்ளது என்றும் சுத்திகரிப்பு திறன் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/241151
  7. கியூபாவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யமுடியும் - ட்ரம்ப் 17 Mar, 2026 | 11:34 AM கியூபா தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அத்தீவை கைப்பற்றும் பெருமையை நான் பெறுவேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். “கியூபாவை விடுவித்தாலும் சரி, அல்லது கைப்பற்றினாலும் சரி, என்னால் அந்தத் தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். கியூபா ஒரு அழகான தீவு. சிறந்த வானிலை கொண்டது. அதை வசப்படுத்திய பெருமை எனக்கு கிடைக்கும். கியூபாவை நட்பார்ந்த முறையில் கைப்பற்றுவது பற்றி அந்நாட்டு அதிகாரிகளுடன் நிர்வாகம் பேசி வருகிறது” என ட்ரம்ப் தெரிவித்தார். கரீபியன் தீவு நாடான கியூபாவுக்கும் அமெரிக்காவும் இடையே நீண்ட கால பகை காணப்படுகிறது. கியூபாவுக்கு சென்றுகொண்டிருந்த வெனிசுவெலா நாட்டு எண்ணெய் விநியோகத்தை அமெரிக்கா நிறுத்திவிட்டது. இதனால் கியூபாவில் டீசல் மூலம் இயங்கும் அனல் மின் நிலையங்கள் எரிபொருள் இல்லாமல் முடங்கின. அதையடுத்து, மின் தடை ஏற்பட்டு அந்நாடு முழுவதும் இருளில் மூழ்கியது. அமெரிக்க எண்ணெய் தடை விதித்தமையால், கியூபா பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நீண்ட நேர மின்வெட்டு, உணவுப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், அங்கு அரசுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த சந்தர்ப்பத்திலேயே கியூபாவைக் கைப்பற்றும் தனது விருப்பினை ட்ரம்ப் வெளிப்படுத்தியிருக்கிறார் https://www.virakesari.lk/article/241174
  8. கர்வாரில் நீர்மூழ்கிக் கப்பல் RAM சோதனை மையம் திறப்பு – முன்னணி நாடுகளின் வரிசையில் இந்தியா Published By: Digital Desk 3 16 Mar, 2026 | 05:08 PM இந்திய கடற்படையின் பராமரிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், கர்நாடக மாநிலத்தின் கர்வார் பகுதியில் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான Pneumatic RAM Test Facility (RAM சோதனை மையம்) இந்தியா திறந்து வைத்துள்ளது. இந்த புதிய சோதனை மையத்தின் மூலம், இத்தகைய தொழில்நுட்ப வசதி கொண்ட முன்னணி சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த RAM சோதனை மையம் முக்கியமாக இந்திய கடற்படையின் கல்வரி வகை (Kalvari-class) நீர்மூழ்கிக் கப்பல்களின் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தப்படும் முக்கிய உபகரணங்களின் செயல்திறனை சோதித்து பராமரிப்பதற்கான வசதி நாட்டுக்குள்ளேயே கிடைக்கிறது. கர்வாரில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன சோதனை மையம், இந்தியாவின் கடற்படை தொழில்நுட்ப திறனையும் பாதுகாப்பு துறையின் சுயநிறைவு முயற்சிகளையும் மேலும் வலுப்படுத்தும் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த திட்டம் “ஆத்மநிர்பர் பாரத்” (Atmanirbhar Bharat) மற்றும் “மேக் இன் இந்தியா” (Make in India) போன்ற உள்நாட்டு உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் தேசிய முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது. இந்த வசதி செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களின் பராமரிப்பு திறன் அதிகரிப்பதுடன், நாட்டின் கடற்படை பாதுகாப்பு திறனும் மேலும் வலுவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/241131
  9. பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது பயங்கர தாக்குதல் Mar 17, 2026 - 07:23 AM பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதல்கள் ஆரம்பமானதில் இருந்து நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவென ஈராக் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் நடைபெறுவதற்கு சுமார் ஆறு மணித்தியாலங்களுக்கு முன்னர், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கான பாதுகாப்பு எச்சரிக்கையை தூதரகம் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmtyjfwq0005356prg6x7er7
  10. மத்திய கிழக்கு நெருக்கடி : இலங்கையின் மீன் ஏற்றுமதி முடக்கம் - உள்நாட்டில் வீழ்ச்சியடைந்த மீன் விலை 17 March 2026 மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்டுள்ள தடைகள், இலங்கையின் மீன் ஏற்றுமதியைப் பாரியளவில் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய மீன்கள் உள்நாட்டுச் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதால், மீன் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோலித கமல் ஜினதாச தெரிவித்துள்ளார். இந்த நிலைமை காரணமாக, நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு தலபத் மற்றும் கெலவல்ல போன்ற பிரபலமான மீன் வகைகளை மீண்டும் கொள்வனவு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கெலவல்ல தற்போது ஒரு கிலோகிராம் சுமார் 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக பல நாள் மீன்பிடி படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பல நாள் மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகளுக்குத் தேவையான எரிபொருளைத் தடையின்றி வழங்குவதற்குத் தற்போதைய நிலையில் அமைச்சு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நெருக்கடியால் விமானப் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளமை ஏற்றுமதித் துறையில் பாரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. ஏற்றுமதி தடைப்பட்டதால் அதிகளவான மீன்கள் உள்நாட்டுச் சந்தைக்கு வருவதே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இறால் தொழில்துறை குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜினதாச, இதுவரை எரிபொருள் தட்டுப்பாட்டால் அத்துறையில் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார். எனினும், மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால், இறால் உற்பத்தித் துறை சவால்களைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார். https://hirunews.lk/tm/453648/middle-east-crisis-sri-lankas-fish-exports-freeze-domestic-fish-prices-fall
  11. சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு! Published By: Vishnu 17 Mar, 2026 | 05:43 AM வவுனியா, ஒமந்தை பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த தாயின் சகோதரரான குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அ.அ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு வவுனியா, ஓமந்தை, பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த சிறுமியின் தாயின் சசோகதரான 47 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்து பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து 2013 பாலியல் வன்புணர்வு புரிந்ததாக சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைகடகளத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு அரச சட்டவாதி ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் சந்தேக நபரான வவுனியா ஓமந்தை பகுதியில் வசித்து வந்த 47வயது நபர் தொடர்பான இரு குற்றச்சாட்டுக்களை அவர் ஏற்றுக்கொண்டார். குறித்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக திகதிடப்பட்டிருந்த நிலையில் எதிரியின் குற்ற ஒப்புதலை அடிப்படையாகக் கொண்டு குறித்த தீர்ப்பினை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது. இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அ.அ.ஆனந்தராஜா திறந்த நீதிமன்றில் தீர்ப்பினை வாசித்துக் காட்டினார். குறித்த குற்றவாளிக்கு முதலாவது குற்றச்சாட்டுக்கு 15 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், தவறின் 6 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தவறின், 2 வருட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், இரண்டாவது குற்றத்திற்காக 15 வருட சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். குறித்த இரு சிறைத்தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/241150
  12. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய Mar 17, 2026 - 11:40 AM Update 12.00 இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார். https://adaderanatamil.lk/news/cmmu7qro9000h356psmwttfl1
  13. இரு நிறுவனங்களால் 300-க்கும் மேற்பட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் பாதிப்பு பூ.லின்ரன் இலங்கையில் இரு பிரதான நிறுவனங்களின் சுயநலப் போக்கினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கேபிள் தொலைக்காட்சி சேவை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமக்கான நீதியை அரசாங்கம் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அகில இலங்கை கேபிள் டிவி ஓப்பரேட்டர்கள் சங்கப் பிரதிநிதிகள் இவ்விடயத்தைத் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "சுமார் இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் பல பாகங்களிலும் நாம் கேபிள் தொலைக்காட்சி சேவையை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 110 பேரும், மலையகத்தில் 54 பேரும் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் 300-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இலங்கையில் இரு குறிப்பிட்ட நிறுவனங்களைத் தவிர ஏனையோருக்கு இதற்கான முறையான உரிமங்கள் (Licenses) வழங்கப்படுவதில்லை. இதனால் எமது தொழில் நடவடிக்கைகள் முற்றாகப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது," என்றனர். தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடம் (TRC) உரிமம் கோரி விண்ணப்பித்தும் இதுவரை தகுந்த தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர். "உரிமக் கட்டணமாக சுமார் 70 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்ட தொலைத்தொடர்பு ஆணைக்குழு, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. ஆனால், குறித்த இரு பெரு நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக அந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ள நாம், தற்போது தொழிலும் இன்றி முதலீட்டையும் இழந்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்," என அவர்கள் ஆதங்கம் வெளியிட்டனர். குறித்த இரு நிறுவனங்களின் பிடியில் சிக்குண்டுள்ள கேபிள் தொலைக்காட்சிச் சேவையை மீட்டு, சிறிய அளவிலான உரிமையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். https://www.tamilmirror.lk/செய்திகள்/இரு-நிறுவனங்களால்-300-க்கும்-மேற்பட்ட-கேபிள்-டிவி-உரிமையாளர்கள்-பாதிப்பு/175-374039
  14. எம் ஜீ ஆர் அம்மா தீபாவுக்கு என்ன நடந்தது ...? 2019 இற்கு பிறகு ஆளையே காணோம்
  15. குருந்தூர் மலையிலிருந்து சிவனொளிபாத மலைக்கு நடைப்பயண யாத்திரை செ.தி.பெருமாள் முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலைப் பகுதியிலிருந்து பௌத்த துறவிகள் மற்றும் சிவில் சமூகத்தினர் இணைந்து முன்னெடுத்துள்ள விசேட நடைப்பயண யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 14.03.2026 அன்று முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரையிலிருந்து இந்த யாத்திரை ஆரம்பமானது. ஹிறிகத்பவன் வெவ உப நிதாலங்கார பௌத்த மதகுருவின் தலைமையில், 6 பௌத்த துறவிகள் மற்றும் 10 பேர் அடங்கிய சிவில் சமூகத்தினர் இந்த ஆன்மீக நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ளனர். நீண்ட தூர நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள இக்குழுவினர், நேற்று (16) இரவு நுவரெலியா மாவட்டம், அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிரிவன்எளிய பௌத்த விகாரையில் தங்கியிருந்தனர். இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு, சிவனொளிபாத மலை அடிவாரத்தில் உள்ள 'கிரீன் வீவ்' விடுதியை வந்தடைந்தனர். இன்று தங்கியிருக்கும் இடத்திலிருந்து நாளை (18 ஆம் திகதி) அதிகாலை வேளையில் சிவனொளிபாத மலை உச்சிக்குச் சென்று மலையடிச் சுவட்டைத் தரிசனம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவிலிருந்து நுவரெலியா வரையான இந்த நீண்ட நெடிய ஆன்மீகப் பயணம் அப்பகுதி மக்களிடையே அவதானத்தைப் பெற்றுள்ளது https://www.tamilmirror.lk/மலையகம்/குருந்தூர்-மலையிலிருந்து-சிவனொளிபாத-மலைக்கு-நடைப்பயண-யாத்திரை/76-374042
  16. காபூல் வைத்தியசாலை மீது வான்வழித் தாக்குதல்: 400 பேர் பலி Mar 17, 2026 - 09:41 AM ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு வைத்தியசாலை மீது நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது. கடந்த மாத இறுதியில் தொடங்கிய மோதலின் தீவிரமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் எல்லை தாண்டிய மோதல்கள் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள் வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், இரு நாடுகளும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் ஆசிய பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்தத் தாக்குதலுக்கு தலீபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இதன்படி கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் எந்த பொதுமக்களின் தளங்களையும் தாக்கவில்லை என்று கூறி, பாகிஸ்தான் குற்றச்சாட்டை நிராகரித்தது. இதுதொடர்பாக ஆப்கானிஸ்தானின் துணை அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா பித்ரத் தனது எக்ஸ் வலைதளத்தில், “உள்ளூர் நேரப்படி இரவு 9.00 மணியளவில் காபூலில் உள்ள வைத்தியசாலை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. 2,000 படுக்கைகள் கொண்ட வசதியின் பெரும் பகுதிகள் அழிக்கப்பட்டது. இறப்பு எண்ணிக்கை இதுவரை 400 பேரை எட்டியுள்ளது, அதே நேரத்தில் சுமார் 250 பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. காபூலின் முக்கியப் பகுதிகளான ஷார்-இ-நாவ் மற்றும் வஜீர் அக்பர் கான் ஆகிய இடங்களில் இரவு நேரத்தில் மிகப்பெரிய வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திலிருந்து கரும்புகை வெளியேறியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தலீபான் அரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இது குறித்து கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் ஒருமுறை ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறி தாக்குதல் நடத்தி உள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சையில் இருந்த நோயாளிகள். இந்த செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய செயலை, ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்துக் கொள்கைகளுக்கும் எதிரானது. இது ஒரு மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயல் என்று கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், இக்குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள பாகிஸ்தான் தகவல் அமைச்சகம், தங்களது தாக்குதல்கள் காபூல் மற்றும் நங்கர்ஹார் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவ நிலைகளை மட்டுமே இலக்கு வைத்ததாக கூறியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாகக் கூறி, இந்தத் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் இந்த சம்பவத்தை நியாயப்படுத்தி உள்ளது. இதனிடையே மறுவாழ்வு வைத்தியசாலை கடுமையாக சேதம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmmu3h978000a356p12qaf41a
  17. யாழ்ப்பாணத்தில் துயர விபத்து – சகோதரர்கள் உயிரிழப்பு adminMarch 16, 2026 யாழ்ப்பாண பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து கொழும்புத்துறை பகுதியை அண்மித்த இடத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள் மணியந்தோட்டப் பகுதியைச் சேர்ந்த பிரட்லீ (24) மற்றும் அவரது சகோதரி டிலக்ஸி (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காவல்துறை தகவலின்படி, இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது பவுசர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://globaltamilnews.net/2026/230561/
  18. விருதின் பெயரை மாற்றி டைமென்ட் பேர்லுக்கு காம பீட விருதாக அறிவிக்கவேண்டும்
  19. யாழில் வீதி விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு Published By: Vishnu 17 Mar, 2026 | 05:46 AM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கொழும்புத்துறை பகுதியை அண்டிய பகுதியில் திங்கட்கிழமை (16) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24) அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். சகோதரர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/241149
  20. Today
  21. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  22. ஒரு நோபல் தானே சும்மா பேச்சுக்காவது கையில் திணிச்சுப்போட்டு போயிருக்கலாம் இப்ப பாருங்கோ பயல் ஒவ்வொருவரையும் திருவோடு எந்த வைக்காமல் ஓயமாட்டான். அமெரிக்கன் பாடம் படிக்கனும் என்றால் நாமளும் சேர்ந்து காய்வது காலத்தின் கட்டாயம்
  23. ஓம். முன்பும் இந்த அமைப்பு தமது இல்லை என கல்லூரி சொன்ன நியாபகம். அண்ணாமலை விடயம் மட்டும் அல்ல, அதற்கு முன்பும் பலது பிழைத்துள்ளது. எல்லாருமே கருத்து திணிப்புத்தான். தவிர மக்கள் நல்லா பொய் சொல்லுவார்கள் பூத்துக்குள் போய் தமது கைவரிசையை காட்டுவார்கள்😂 விஜை நடித்த படங்களில் பலதும் மொக்கைதான் அதிலும் அதி மொக்கையான படம் என்றால் பத்திரிதான். வசீகரா நல்ல நகைச்சுவை. ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி ஓம் சக்தி பரா சக்தி சஞ்சைக்கு திரிஷா சித்தி
  24. ஒரு தோட்டாவுக்கு இருக்கும் சக்தியைவிட ஒரு வாக்கிற்கு அதிக சக்தி இருப்பதாக சொல்கிறார்கள். இஸ்ரேல் அவுஸ் போன்ற நாடுகளில் வாக்களிக்காவிட்டால் தண்டப்பணம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன். அமெரிக்காவில் இளம் சந்ததியினர் வாக்கு செலுத்துவது மிகமிக குறைவு.
  25. அது உண்மையான லாயெலா கருத்துக்கணிப்பில்லையாமே ...? அந்த கருத்துக்கணிப்பை விட்ட ஆள் கடும் திருவன் ...இவர் நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வார் இல்லையென்றால் நான் என் நிறுவனத்தை மூடிவிட்டு போவேன் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்று அடிச்சுவிட்டு இன்றுவரை கடையை சாத்தாமல் போணி பண்ணுகிறார்
  26. வடக்கு கிழக்கில் முன்பு போர்க்காலத்தில் எரிபொருள் தடை இருந்தது. அக்காலத்தில் எங்கட சனம் துவிச்சக்கரவண்டியில்தான் பெரும்பாலும் வேலைக்கு சென்றார்கள். இப்ப?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.