stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
உண்மை உரைகல் · பணக்காரர்களின் உண்மை குணம் 🌟 பில்கேட்ஸ் தனது 2017 ஆம் ஆண்டு “Gates Notes” வருடாந்திர கடிதத்தில் இந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார். பில் கேட்ஸும், வாரன் பஃப்பட்டும் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதன்மையானவர்கள் மட்டுமல்ல, மிக நெருங்கிய நண்பர்களும் கூட. ஒருமுறை இவர்கள் இருவரும் ஹாங்காங் சென்றிருந்தபோது, நடந்த சம்பவத்தை பில்கேட்ஸ் விவரிக்கிறார். ஹாங்காங்கில் மதிய உணவுக்கு செல்லலாம் என முடிவெடுத்தோம். மெக்டாலன்ட்ஸுக்கு போகலாம் என வாரன் பஃப்பட் சொன்னார். சரி என சொல்லி அங்கே சென்றோம் உலகின் ஆகச்சிறந்த கோடீஸ்வரர்கள் இருவர், சாதாரணமாக ஒரு மெக்டொனால்ட்ஸில் நுழைவதே அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. உணவு ஆர்டர் செய்து முடித்ததும், "பில்லை நான் கொடுக்கிறேன்" என்று வாரன் பஃப்பட் முன்வந்தார். அதன்பின் அவர் தனது பாக்கெட்டில் கைவிட்டு கிரடிட் கார்டை எடுப்பார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் வாரன் பஃப்பட் வெளியே எடுத்தது கிரிடிட் கார்டோ அல்லது கட்டுக் கட்டான பணமோ அல்ல; மாறாக, பத்திரிகைகளில் வரும் இலவச உணவுக்கான கூப்பன்களை கத்திரித்து எடுத்து வைத்திருந்தார். அதைத் தேடி எடுத்து கவுண்டரில் கொடுத்து இலவசமாக உணவை வாங்கிவிட்டார்.. "ஹாங்காங்கில் இவர் இப்படி கூப்பன்களை தேடி சேகரித்ததே எனக்கு வியப்பாக இருந்தது..." பல்லாயிரம் கோடிகளை கொண்ட ஒருவர், ஒரு சில டாலர்களைச் சேமிக்க கூப்பன்களைப் பயன்படுத்துவது எனக்கு விந்தையாக இருந்தது. வாரன் பஃப்படிடம் இதைப்பற்றி கேட்டேன் "ஒருவர் பணக்காரர் ஆவது அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதில் இல்லை, தேவையற்ற இடங்களில் எவ்வளவு குறைவாக பணத்தை செலவு செய்கிறார் என்பதில்தான் இருக்கிறது." என்றார் ஆடம்பரத்தை விட எளிமையையும், வீணாக்குவதை விடச் சேமிப்பையும் மதிக்கும் குணத்தை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.....!
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
துணைவேந்தர் ஒருவாறு எங்களை தன்னுடன் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சென்றார். புலிகள் என்று கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மாணவர்களை துணைவேந்தரே மீளவும் பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வந்தமையானது சிங்கள மாணவர்களைடையே அதிருப்தியினை ஏற்படுத்தி விட்டிருந்தது. அவர்கள் பலரிடம் இருந்த கேள்வி, "உங்களை எப்படி போக விட்டார்கள்?" என்பதுதான். எங்களை முன்னின்று பிடித்துவந்து, பொலீஸில் கொடுத்த மாணவர்களில் சிலர் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தார்கள். அதில் மாணவர் சங்க தலைவனும் ஒருவன். சந்திரிக்காவின் சுதந்திரக் கட்சியின் கம்பகா மாவட்ட இளைஞர் அணியைச் சேர்ந்த அவன் பொலீஸ் நிலையத்தில் மிகவும் சாதாரணமாக உலாவந்தான். நாம் அடைத்துவைக்கப்பட்டிருந்த அறைக்கு வந்து, "எப்படி இருக்கிறீர்கள்? உங்களை என்ன செய்வதாகச் சொல்கிறார்கள்?" என்று சர்வ சாதாரணமாகக் கேட்டான். "தெரியாது, எவராவது வந்து எம்மை மீட்டுச் செல்லும்வரை பார்த்திருக்கிறோம்" என்று நாம் கூறினோம். "நீங்கள் யோசிக்கத் தேவையில்லை, உங்களை விசாரித்துவிட்டு, பிரச்சினை ஏதும் இல்லையென்றால், உடனேயே விட்டுவிடுவார்கள்" என்று பாசாங்காக பதிலளித்தான் அவன். அவன் செய்வது என்னவென்று எமக்கு நன்கு தெரிந்திருந்தது. நாங்கள் அறுவரும் பல்கலைக்கழகத்தை அடைந்தபோது எம்மைச் சூழ்ந்துகொண்ட சிங்கள மாணவர்கள் எமக்கு பொலீஸ் நிலையத்தில் நடந்தது என்னவென்பதை அறிவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். ஆனால் எவருக்கும் எம்மீது அனுதாபம் இருக்கவில்லை. எம்மைக் காட்டிக்கொடுத்து, பொலீஸில் கையளித்தவர்களில் ஒருசிலர் வந்து எம்மிடம் பேசியபோது நான் வெளிப்படையாகவே "எங்களை பிடித்துக்கொண்டு வந்து பொலீஸில் கொடுத்ததே நீங்கள் தானே? இப்போது எதற்காக எங்களைப்பற்றி விசாரிக்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர்களிடம் பதில் இருக்கவில்லை. எமது கைதின் பின்னர், அதுவரை எம்முடன் சகஜமாகப் பேசும் சிங்கள மாணவர்களே எம்மிடமிருந்து விலகி இருக்கத் தொடங்கியது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால், நாம் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டதை அறிந்த இன்னொரு மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர் எம்முடன் தொடர்பு கொண்டார்கள். கொழும்பில் வெளிவந்த அத்த எனும் சிங்களப் பத்திரிக்கை தமிழ் மாணவர்களுக்கு நடந்த அநீதிபற்றி கட்டுரை ஒன்றினை வெளியிட இருப்பதாகவும், எம்மால் எமது அனுபவங்களை அப்பத்திரிக்கை நிருபருடன் பகிர்ந்துகொள்ளமுடியுமா என்றும் கேட்டார்கள். சிங்களத்திலேயே பேட்டி இருக்கும் என்பதனால் என்னையும், இரண்டாம் ஆண்டில் பயின் று வந்த வெள்ளை எனும் புனை பெயர் கொண்ட இன்னொரு மாணவனையும் சொய்ஸாபுர தொடர்மாடியில் அமைந்திருந்த ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே அந்தப் பத்திரிக்கை நிருபரும், மாணவர் அமைப்பின் சில உறுப்பினர்களும் இருந்தார்கள். சுமார் இரு மணித்தியாலங்களாவது எமது அனுபவங்களைக் கேட்டபடி இருந்தார்கள். பொறுமையாக , இடையூறுகள் இன்றி, நாம் பேசி முடிக்கும்வரை காத்திருந்து, அடுத்த கேள்வியினைக் கேட்டார்கள் அவர்களின் முகத்தில் காணப்பட்ட உண்மையான வருத்தமும், தவறிழைத்துவிட்டோம் என்கிற கழிவிரக்கமும் எமக்கு ஆறுதலாக இருந்தது. நாம் பேசுவதைக் கேட்டுவிட்டு இறுதியாக, "உங்களை இந்த நிலமைக்கு உள்ளாக்கியவர்கள் சிங்களவர்கள். ஆனாலும், மனிதநேயம் கொண்ட சிங்களவரும் இருக்கிறோம். உங்களைப் புலிகள் என்றே அனைத்து பிரதான பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் நாம் உங்களின் அனுபவங்களைச் சொல்லவிருக்கிறோம், எங்கள் இனத்தால் உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக வருந்துகிறோம்" என்று சொல்லி பேட்டியினை முடித்துக்கொண்டார்கள். அப்பத்திரிக்கையின் அடுத்தவார இதழில் எமது பேட்டி வெளியாகியிருந்தது. நாம் கூறியவற்றில் பெரும்பாலான விடயங்களை அப்படியே மாற்றம் செய்யாது வெளியிட்டது அத்த பத்திரிக்கை. அத்த பத்திரிக்கையில் வெளியான எமது பேட்டி பல சிங்கள மாணவர்களை ஆத்திரப்படுத்தியிருந்தது. இப்பேட்டியினை வழங்கியது யாரென்று அறிய அவர்கள் முயன்றார்கள். சிங்களம் பேசுக்கூடியவன் என்பதனால் என்னிடம் வந்து, "நீயா இப்பேட்டியைக் கொடுத்தது? எங்களை இரக்கமற்றவர்கள் போன்று பேசியிருக்கிறாயே?" என்று கேட்டார்கள். அந்தப் பேட்டிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று நாம் மறுத்துவிட்டபோதிலும், "நீங்கள் செய்ததைத்தானே பத்திரிக்கையும் பேட்டியாக வெளியிட்டிருக்கிறது?" என்று என்னிடம் பேச வந்த சிங்கள மாணவர்களிடம் கூறினேன், அவர்களிடம் பதில் இருக்கவில்லை. இனவாதம் தலைக்கேறிய பின்னர் கூடவே படிக்கும் தமிழ் மாணவர்களையும் பயங்கரவாதிகள் என்றும், கொலைகாரர்கள் என்று அடையாளம் காணும் சிங்கள மாணவச் சமூகத்திலேயே எமது பல்கலைக்கழக படிப்பும் நடந்தேறியது.
-
குட்டிக் கதைகள்.
- Today
- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
😂 இதே திரியில் கூட கண்டிருப்பீர்கள்… ஒரு காலத்தில் தமிழ் தேசிய சிங்க வேடம் போட்டு இதே யாழில் உலா வந்த அண்ணமார் …. இப்போ அனுரவுக்கு… ஹொந்தடோம…”பொங்கல்” தெனவா😂 ஆனாலும் இப்படி ஒரு போக்கிரிகளின் லிஸ்டை போட்டு விட்டு… அவர்களை தமிழ் தேசிய உணர்வாளர் என எழுதுவது எல்லாம் அடுத்த லெவல் ஜோக்😂- ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
மன்னிக்க வேண்டும். வேலைப்பழுவினால் தொடர்ந்து எழுதமுடியாது போய்விட்டது. மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட நாளன்று இரவு, கல்கிஸ்ஸை பொலீஸின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அதிகாரியான ஜெயரட்ணமும், நிலாப்டீனும் மொறட்டுவை பொலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார்கள். கைதுசெய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட தமிழ் மாணவர்கள் அனைவரையும் விசாரிப்பதே அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலை. நான் உட்பட இன்னும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறு இறுதியாண்டு மாணவர்களை அவர்கள் தனியான அறைக்குச் சென்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் அறுவரும் கோண்டாவில், மாணிப்பாய், பருத்தித்துறை, சித்தங்கேணி, தெல்லிப்பழை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சிலர் 1995 ஆம் ஆண்டிற்குப் பின்னரே யாழ்ப்பாணத்திலிருந்து பல்கலைக்கழக அனுமதி கிடைத்தவுடன் கொழும்பிற்கு வந்தவர்கள். நான் 1990 ஆம் ஆண்டில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கு உயர்தரத்தில் கற்பதற்காக வந்திருந்தேன். எங்களை ஒவ்வொருவராக அழைத்து விச்சரிக்க ஆரம்பித்தனர் ஜெயரட்ணமும் நிலாப்டீனும். சிறிய மரத்தினால் ஆன மேசை. மேசையின் ஒரு பக்கத்தில் ஜெயரட்ணம் அமர்ந்துகொள்ள, இன்னொரு பக்கத்தில் நிலாப்டீன் அமர்ந்துகொண்டான். எங்களை ஒவ்வொருவராக அழைத்து ஜெயரட்ணத்தின் முன்னால் இருக்கச் சொல்லிப் பணித்தார்கள். அவனது கைய்யில் புகைப்பட அல்பம் ஒன்று இருந்தது. அதிலிருந்தவர்களைக் காண்பித்தவாறே அவனது விசாரணை ஆரம்பித்தது. முதலில் நான். ஜெயரட்ணமே முதலில் விசாரணையினை ஆரம்பித்தான். "எந்த ஊரடா நீ?" கோண்டாவில் என்று நான் கூறவும், உடனேயே அல்பத்தை திறந்து சில புகைப்படங்களைத் தேடினான். பின்னர் குறித்த ஒரு புகைப்படத்தைக் காட்டி, "இவனை உனக்குத் தெரியுமா?" என்று அதட்டியபடி கேட்டான். அப்புகைப்படம் புலிகளின் வீரர் ஒருவருடையது. கோண்டாவில் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் முகாம் அல்லது அலுவலகத்தில் பணியாற்றிய போராளி ஒருவருடையது. ஆனால் எனக்கோ அவரைத் தெரியவில்லை. ஆகவே, "இவரை எனக்குத் தெரியாது" என்று கூறவும், நிலாப்டீன் அறைந்தான். "கோண்டாவில் எண்டு சொல்கிறாய் ஆனால் இவனை உனக்குத் தெரியவில்லையா ?" என்று அவன் கத்தினான். "எனக்குத் தெரியாது " என்று மீண்டும் கூறினேன். அதன் பிறகு இன்னும் சில புகைப்படங்களைக் காண்பித்து அவர்களைத் தெரியுமா என்று ஜெயரட்னம் கேட்கவும், அவர்களில் ஒருவரையும் தெரியாது என்று மீண்டும் கூறினேன். தொடர்ந்தும் நான் எவரையும் தெரியாது என்று கூறவும், "எப்பயடா கொழும்பிற்கு வந்தனீ?" என்று ஜெயரட்ணம் கேட்டான். "1990 ஆம் ஆண்டு" என்று நான் கூறவும், "சரி, போ" என்று என்னை விட்டுவிட்டான். அதன் பின்னர் மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபாவின் முறை. அவனது தம்பி புலிகள் இயக்கத்தில் இணைந்து சிலாவத்துறைச் சண்டையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டிருந்தவன். மாவீரர் குடும்பமாதலால் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தபோது பிரபாவினால் இலகுவாக கொழும்பிற்கு வர முடிந்திருந்தது. மாவீரர் குடும்பத்தைச் சாராதவர்கள் சரியான காரணங்கள் இன்றி கொழும்பிற்கு வருவதென்பது அக்காலத்தில் புலிகளால் தடுக்கப்பட்டிருந்தது. ஆகவே பிரபா 1995 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கொழும்பிற்கு வந்தமையானது அவன் மீது கடுமையான சந்தேகத்தை ஜெயரட்ணத்திற்கும், நிலாப்டீனுக்கும் ஏற்படுத்தி விட்டிருந்தது. முதலில் புலிகளின் புலநாய்வுப்பிரிவினரால் அனுப்பப்பட்டவன் என்று கூறி அவனை இருவரும் கடுமையாகத் தாக்கினார்கள். அவன் "இல்லை, நான் பல்கலைக்கழக அனுமதி கிடைத்ததினால்த்தான் கொழும்பிற்கு வந்தேன்" என்று கூறவும், "அப்படியானால் நீ மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவன் தான், உண்மையை ஒத்துக்கொள்" என்று கூறி மீளவும் தாக்கினார்கள். அடி தாங்காமல் அவன் அழத் தொடங்கினான். பின்னர் அவனைத் தனியாக ஒரு மூலையில், தரையில் இருத்திவிட்டு, "விடியும் முன்னர் நீ எப்படி கொழும்பிற்கு வந்தனீ எண்டதைச் சொல்லிப்போடு, இல்லையெண்டால் காலையில உன்னை நாலாம் மாடிக்கு கொண்டுபோவோம், அங்க போன பிறகு நீ உயிரோடு திரும்ப இயலாது" என்று மிரட்டினார்கள். அடுத்தவன் லீலாகிருஷ்ணன். பருத்தித்துறையைச் சேர்ந்தவன். பல்கலைக்கழக மல்யுத்த அணியில் இருந்தவன், அதனால் உடலை எப்போதுமே கட்டுக்கோப்பாக வைத்திருப்பவன். 1995 ஆம் ஆண்டிற்குப் பின்னரே அவனும் கொழும்பிற்கு வந்திருந்தமையினால் அவனையும் தாக்கியபடியே விசாரித்தார்கள். அவனது குடும்பம் மாவீரர் குடும்பமா என்று எனக்குத் தெரியாது. இவ்வாறே தெல்லிப்பழையைச் சேர்ந்த ஆனால் கொழும்பில் வெகுகாலம் வாழ்ந்துவந்த புஸ்ப்பாகரன், சித்தங்கேணியைச் சேர்ந்த ரமேஸ் என்று மீதியாய் இருந்தவர்களையும் விசாரித்தார்கள் இடையிடையே தாக்கினார்கள். எல்லோரையும் நாலாம் மாடிக்கு அழைத்துச் செல்லப்போகிறார்கள் என்றே நாம் நம்பியிருந்தோம். ஆனால் மறுநாள் காலை 8 மணிக்கு மொறட்டுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்திற்கு வந்தார். பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்களை புலிகள் என்று தவறாகப் பிடித்து வைத்திருக்கிறீர்கள் என்று அதிகாரி பீரீஸுடன் அவர் வாதிட்டார். "உன்னைப்போன்ற சிங்கள துரோகிகளால்த்தான் புலிகள் கொழும்பில் குண்டுவைக்கிறார்கள். இவங்களை என்னிடம் விட்டுவிட்டு உனது வேலையைப் பார்த்துக்கொண்டு போ" என்று அவருடன் கர்ஜித்தான் பீரிஸ். ஆனால் அவர் விடுவதாய் இல்லை, "இவர்களில் இறுதியாண்டில் படிக்கும் ஆறு மாணவர்களையும் என்னுடன் அனுப்பி வைய்யுங்கள், இவர்களுக்கான பரீட்சை நடந்துகொண்டிருக்கிறது. உங்களுக்குத் தேவைப்பட்டால் நானே இவர்களை பரீட்சை முடிந்தவுடன் உங்களிடம் அழைத்து வருகிறேன்" என்று மன்றாட்டமாக அவர் பீரிஸிடம் கெஞ்சினார். சிங்களவராக இருந்தும் தமிழ் மாணவர்கள் பரீட்சையினைத் தவறவிடக் கூடாது என்ற அக்கறை அவருக்கு இருந்தது. அவருடன் சில நிமிடங்கள் தர்க்கித்துவிட்டு, "சரி, அழைத்துச் செல், ஆனால் இவர்களால் ஏதாவது தீங்கு ஏற்படுமாக இருந்தால் நான் உன்னை வந்து கொல்வேன்" என்று கத்தியவாறே எங்களை அவருடன் அனுப்பி வைத்தான். ஆனால் எங்களைத் தவிரவும் மூன்றாம், இரண்டாம் வருடங்களில் படித்துக்கொண்டிருந்த இன்னும் நாற்பது மாணவர்களை பீரிஸ் தொடர்ந்தும் தடுத்து வைத்திருந்தான்.- உண்ணாவிரதம் இருந்த, மட்டக்களப்பை சேர்ந்த குகதாசன் வைத்தியசாலையில் அனுமதி.
இது கொஞ்சம் ஓவர் அண்ணை …- தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் உளவாளிகள் ஊடுருவல்.
எம் ஐ 6….. சி ஐ ஏ… ரோ… மொசாட் எல்லாம் இறங்கி இருக்கான் …. யாழ்பாணத்தில ஒத்தை சீட் எடுத்த கட்சியை உடைக்க 😂- பண்டத்தரிப்பில் இருந்து வெளியேறிய இராணுவம்; பிரதேச சபை எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
பண்டத்தரிப்பில் இருந்து வெளியேறிய இராணுவம்; பிரதேச சபை எடுத்துள்ள முக்கிய தீர்மானம் Published By: Vishnu 29 Jan, 2026 | 09:31 PM மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான பண்டத்தரிப்பில் உள்ள காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அக்காணியில் இருந்து புதன்கிழமை (28) முற்றாக வெளியேறியுள்ளனர். காணியில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர் காணியை சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் கையளித்த நிலையில் , பிரதேச செயலர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி , காணியை மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் கந்தையா ஜெசிதனிடம் உத்தியோக பூர்வமாக கையளித்துள்ளார். மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான 31 பரப்புடைய காணியை யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டளவில் இராணுவத்தினர் கையகப்படுத்தி இராணுவ முகாம் அமைத்திருந்தனர். குறித்த காணிக்குள் மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான "கொல்களம்" இருந்த நிலையில் , அதுவும் இராணுவத்தினரின் பிடிக்குள் இருந்ததால் , தெல்லிப்பழை பகுதியில் வாடகை இடமொன்றில் கொல்களம் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, காணி பிரதேச சபைக்கு மீள கிடைத்த நிலையில் , அது தொடர்பில் தவிசாளர் தெரிவிக்கையில், குறித்த காணியில் சபைக்கு வருமானத்தை ஈட்ட கூடிய வகையில் மிக சிறந்த பொருளாதார திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும். காணிக்குள் முன்னர் கொல்களம் இயங்கி வந்தது. அதனை மீள அவ்விடத்தில் இயக்குவது தொடர்பில் அப்பிரதேச மக்கள் மற்றும் அப்பகுதி வட்டார உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு , அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதேவேளை கடந்த வாரம் சுழிபுரம் பகுதியில் இருந்த மினி இராணுவ முகாம் ஒன்றும் அகற்றப்பட்டு, அக்காணிகள் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237366- மாங்குளம் ஆதார வைத்திய சாலையில் புனரமைக்கப்பட்ட தாதியர் விடுதி
தாதியர் விடுதி Jan 27, 2026 - 06:13 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான மாங்குளம் ஆதாரவைத்திய சாலையில் புனரமைக்கப்பட்ட தாதியர் விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டி தரிப்பிடம் மற்றும் சாரதி ஓய்வு அறை என்பன வடமாகாண ஆளுநரால் இன்று (27) காலை திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் புனரமைக்கப்பட்ட விடுதிகளைப் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு இன்று வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மாங்குளம் ஆதார வைத்தியசாலை வைத்தியர் விடுதி, தாதியர் விடுதி, துணை வைத்திய ஆளணியினர் விடுதி, சாரதி விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முதற்கட்டமாக முழுமையாகப் புனரமைக்கப்பட்ட தாதியர் விடுதி, நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் மற்றும் சாரதி விடுதி என்பன இன்று திறந்து வைக்கப்பட்டன. இதில் தாதியர் விடுதியானது 8 அறைகள், சமையலறை மற்றும் உணவு அருந்தும் அறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது. இலங்கை இராணுவத்தினரின் ஆதரவுடன் திருத்தப் பணிகள் இடம்பெற்ற இந்த தாதியர் விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டி தரிப்பிடம் மற்றும் சாரதி ஓய்வு அறை திறப்பு விழாவானது இன்று காலை 7.30 மணிக்கு மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வன்னிப் பிராந்தியக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் குலதுங்க, வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ப.ஜெயராணி, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி சமன் பத்திரன, முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உமாசங்கர், வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் காயன், வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/top-picture/cmkwl84ql04hzo29nc7h66128- சிவில் பாதுகாப்பு படையின் 15,000 பேர் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம்
சிவில் பாதுகாப்பு படையின் 15,000 பேர் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் Jan 29, 2026 - 08:31 PM சிவில் பாதுகாப்புப் படையின் சுமார் 5,000 பேரை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். பொலிஸ் துறைக்குச் சிவில் பாதுகாப்புப் படையிலிருந்து சுமார் 10,000 பேரை இணைத்துக்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மேலும் சிவில் பாதுகாப்புப் படையின் வினைத்திறனை அதிகரிப்பதற்கு தேவையான வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, பயிற்சித் திட்டங்கள் மற்றும் மனித வள முகாமைத்துவம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் வலியுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmkzl13tk04l2o29nrcvxhnro- ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
US-ஆல் மத்திய கிழக்கில் பதற்றம்; இரானை தாக்கினால் என்ன நடக்கும்? அமெரிக்கா இரானை தாக்க தயாராக இருப்பதுபோலத் தெரிகிறது. எந்தெந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பது கணிக்கப்படக் கூடியதாக இருந்தாலும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. ஒருவேளை அமெரிக்கா இரான் மீது தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும்? #Iran #America #Trump இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு- IMF குழு மீண்டும் இலங்கைக்கு!
IMF குழு மீண்டும் இலங்கைக்கு! Jan 29, 2026 - 01:16 PM இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மீளாய்வுக்காக, பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பிக்க, கூடிய விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று மீண்டும் நாட்டிற்கு வருகை தரத் திட்டமிட்டுள்ளதாக இலங்கையிலுள்ள IMF தூதுக்குழுவின் தலைவர் எவன் பாபஜோர்ஜியோ தெரிவித்தார். 'டித்வா' புயலுக்குப் பின்னரும் IMF வேலைத்திட்டம் வலுவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையில், நெருக்கடி உச்சத்தில் இருந்த சந்தர்ப்பத்திலிருந்து இதுவரையில் வளர்ச்சிக்காகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் குறிப்பிட்டார். "நிதியியல் துறையின் வருமானத்தை பலமாகச் சேகரித்தல், சமூகச் சீர்திருத்தங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு வலைகளைப் பலப்படுத்துதல் என்பன வேலைத்திட்டத்தின் முதல் தூணாகும். இரண்டாவது தூண் கடன் நிலைத்தன்மையை நிறுவுதல், நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுதல் மற்றும் கடன் மறுசீரமைப்பதாகும். விலை ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது அதன் மூன்றாவது தூணாகும்; இதில் வெளிநாட்டு கையிருப்பு உள்ளிட்ட வெளிப்புறத் தேவைகளைப் பலப்படுத்துவதும் உள்ளடங்கும். நான்காவது நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதாகும். இறுதியாக நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் ஊழலைக் குறைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவரை இந்த இலக்குகளுக்காக எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் உண்மையில் சிறப்பானது. இது குறித்துப் பல துறைகளில் நாம் திருப்தியடைய முடியும். நெருக்கடி உச்சத்தில் இருந்த சந்தர்ப்பத்திலிருந்து இதுவரையில் வளர்ச்சிக்காகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது. வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் மீட்சியடைந்துள்ளதால், கடந்த ஆண்டில் 5% வளர்ச்சியை எட்டியுள்ளது. மொத்தத் தேசிய உற்பத்தியின் (GDP) முன்னேற்றமாக வரி வருமானம், நெருக்கடி நிலவிய காலத்தில் 7.3% ஆக இருந்தபோதிலும், இன்று அது 14.8% வரை அதிகரித்துள்ளது. இதன் மூலம் இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்கள் மேற்கொண்ட முன்னேற்றம் பிரதிபலிக்கிறது. வருமானத்திற்குள் உள்நாட்டு உற்பத்தியையும் ஒரு பகுதியாக அதிகரிப்பது நிதி ஸ்திரத்தன்மைக்கான அடித்தளத்தை அமைக்கிறது. விலைகளைக் கருத்திற்கொள்ளும் போது, இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் முதலாவது ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போது பணவீக்கம் 70% என்ற உயர் மட்டத்தில் காணப்பட்டது. இன்று அது 2% மற்றும் 3% இற்கு இடையில் காணப்படுவதுடன், மத்திய வங்கியின் இலக்கான 5% மட்டத்தில் ஸ்திரமடையும்." இதேவேளை, 'டித்வா' புயலுக்குப் பின்னரும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்கள் மிக வலுவாகச் செயற்படுத்தப்பட்டு வருவதாக இலங்கையிலுள்ள IMF தூதுக்குழுவின் தலைவர் எவன் பாபஜோர்ஜியோ கூறினார். "இன்னும் ஒரு வாரத்தில் நாம் மீண்டும் இலங்கைக்கு வருகிறோம். வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டத்தில் 'டித்வா' புயலின் தாக்கம் அதில் எவ்வகையில் பிரதிபலிக்க வேண்டும் என்பது குறித்துக் கலந்துரையாட நாம் எதிர்பார்த்துள்ளோம் சீனிவாசன் கூறியது போன்று வேலைத்திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் அவ்வாறே உள்ளன. ஏனெனில் கடந்த வருடம் நவம்பர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் வீசிய புயலுக்குப் பின்னரும் வேலைத்திட்டம் வலுவாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது எனக் கூறமுடியும்." https://adaderanatamil.lk/news/cmkz5h9am04kmo29nc4h73hj8- மட்டக்களப்பில் 40 வருடங்களாக காடாக இருந்த மாங்காடு விதானையார் வீதி மீண்டும் திறப்பு
மட்டக்களப்பில் 40 வருடங்களாக காடாக இருந்த மாங்காடு விதானையார் வீதி மீண்டும் திறப்பு 29 Jan, 2026 | 03:40 PM மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மாங்காடு விதானையார் வீதி கடந்த 40 வருடங்களாக கவனிப்பாரற்ற நிலையில் பற்றைக்காடாக காணப்பட்டு வந்துள்ளது. இதனால் அப்பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் பல சவால்களை எதிர்கொண்டு வந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளரிடம் அப்பகுதி மக்கள் எடுத்துக் கூறியதையடுத்து இவ் வீதியியை ஜேசி.பி இயந்திரம் மூலம் துப்பரவு செய்து, பாவனைக்குரிய வீதியாக செப்பனிடும்பணி புதன்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அப்பகுதி பொதுமக்கள் பிரதேச சபையின் இந்த செயற்பாட்டிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர். அப்பகுதியிலுள்ள சுமார் 150 மேற்பட்ட விவசாயிகளின் மிக நீண்ட நாள் கோரிக்கையாக அமைந்த இந்த பாதை விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகின்றதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/237340- 'இது தெய்வ குற்றம்' - கள்ளழகர் கோவில் வழக்கில் நீதிமன்ற உத்தரவு பற்றி சேகர்பாபு கூறுவது என்ன?
'இது தெய்வ குற்றம்' - கள்ளழகர் கோவில் வழக்கில் நீதிமன்ற உத்தரவு பற்றி சேகர்பாபு கூறுவது என்ன? பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 29 ஜனவரி 2026, 03:21 GMT "கடந்த 2023ஆம் ஆண்டில் ரூ.107 கோடியாக இருந்த கோவிலின் உபரி நிதி, 2024ஆம் ஆண்டில் ரூ.62 கோடியாக சரிந்துள்ளது. சட்ட அதிகாரமின்றி (authority of law) இந்த நிதி செலவிடப்பட்டுள்ளது. இது தெய்வ குற்றம். வேலியே பயிரை மேய்வதற்கு இது தெளிவான உதாரணம்." மதுரை கள்ளழகர் கோவில் வளாகத்தில் புதிய கட்டுமானங்களை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் நீதிபதிகள் கூறிய வார்த்தைகள் இவை. கோவிலில் வணிக கட்டடங்கள் கட்டுவதற்கான அரசாணையை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தீர்ப்பின் விவரம் என்ன? பிபிசி தமிழிடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியது என்ன? மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இதே தாலுகாவில் உள்ள வெள்ளரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏ.வி.பி.பிரபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கோவில் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிகக் கட்டுமானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் இது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார். இதே கோரிக்கையை முன்வைத்து நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, "மலை சார்ந்து பாரம்பரியமான புனிதத் தலமாக அழகர் கோவில் அமைந்துள்ளது. திருப்பதியில் உள்ள பெருமாள் போல தென் மாவட்டத்திற்கான ஏழுமலையானாக கள்ளழகரைப் பார்க்கிறோம்" எனக் குறிப்பிட்டார், வழக்கு தொடர்ந்த ஏ.வி.பி.பிரபு. பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,"கடந்த ஆண்டு ஆடித் திருவிழாவின்போது தங்கள் வாகனங்களை உள்ளே அனுமதிக்கவில்லை" என்கிறார் ஏ.வி.பி.பிரபு (கோப்புப் படம்) கள்ளழகர் கோவில் ஆடித் தேரோட்டத்தின்போது மேலூரில் வடக்குத் தெரு, மேலத் தெரு, தெற்குத் தெரு, பாளையப்பட்டு என நான்கு தெருக்களைச் சேர்ந்தவர்கள் குழுவாக இணைந்து தேரை இழுக்கின்றனர். இவ்வாறு தேர் வடம்பிடித்து இழுக்கும் உரிமையைப் பெற்றுள்ளவர்களை 'நாட்டார்' என அழைக்கின்றனர். இந்த நாட்டாரில் ஒருவராக வழக்குத் தொடர்ந்த ஏ.வி.பி.பிரபு இருக்கிறார். "ஆடித் திருவிழாவின்போது வண்டி, மாடுகளைக் கட்டிக் கொண்டு கள்ளழகரை தரிசிப்பதற்கு மக்கள் வருவார்கள். ஆனால், கடந்த ஆண்டு எங்கள் வாகனங்களை உள்ளே அனுமதிக்கவில்லை" என்கிறார் அவர். 'தீர்த்தம் ஆட முடியாத நிலை ஏற்படும்' கட்டுமானப் பணிகள் நடப்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறும் ஏ.வி.பி.பிரபு, "கோவில் அமைந்துள்ள மலையின் பசுமை மாறாமல் இருக்க வேண்டும். ஆனால், அதைக் கெடுக்கும் விதத்தில் கோவில் நிதியைத் தேவையற்ற வழியில் பயன்படுத்துவதை அறிந்தோம்" என்றார். ஆடித் தேரோட்டத்தின்போது 2000க்கும் மேற்பட்ட வாகனங்களில் வரும் மக்கள் அங்குள்ள பரந்த காலியிடத்தில் நிறுத்துவதை வழக்கமாக வைத்துள்ளதாகக் கூறும் அவர், "அந்த இடத்தில்தான் கட்டுமானங்களை எழுப்பி வருகின்றனர்" என்றார். பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,"மலையின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்பதால் வழக்கு தொடர்ந்தேன்" என்கிறார் ஏ.வி.பி.பிரபு (கோப்புப் படம்) கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதியன்று கள்ளழகர் கோவிலின் துணை ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில், கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு யாத்ரி நிவாஸ், அர்ச்சகர்கள் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை, உணவகங்கள், கடைகள், கழிப்பறைகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவை கட்டப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பணிகளை ஈரோட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு வழங்க உள்ளதாகவும் உத்தரவில் கூறியுள்ளார். இதைக் குறிப்பிட்டுப் பேசிய ஏ.வி.பி.பிரபு, "கோவில் வளாகத்தில் தங்கும் விடுதி என்ற பெயரில் 8 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடத்தை அறநிலையத் துறை திறந்து வைத்துவிட்டது" என்றார். "பக்தர்கள் தீர்த்தமாடும் நீரை மறுசுழற்சி செய்கின்றனர். அது புனித தீர்த்தமாகப் பார்க்கப்படுகிறது. இவ்வாறு மறுசுழற்சி செய்வதை ஏற்க முடியாது" என்றும் அவர் தெரிவித்தார். "இதுபோன்று கட்டடங்களைக் கட்டிவிட்டால் தீர்த்தமாடக்கூட யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடும், மலையின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்பதால் வழக்கு தொடர்ந்தேன்." இதுதொடர்பாக கள்ளழகர் கோவிலின் துணை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அவர் கொடுத்துள்ளார். "என்னுடைய புகாரை ஒரு பொருட்டாகவே அதிகாரிகள் எடுத்துக் கொள்ளவில்லை" என்கிறார் ஏ.வி.பி.பிரபு. பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,கோப்புப் படம் 'திசை திருப்பப்பட்ட நிதி' கள்ளழகர் கோவில் தொடர்பான இரண்டு மனுக்களையும் இணைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்து வந்தது. வழக்கின் வாதத்தில் மனுதாரர் ஏ.வி.பி.பிரபு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ், கோவில் நிதியில் இருந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 135ஐ சுட்டிக்காட்டி வாதிட்டார். மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முதலில் 92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பிறகு 40 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டதாக வாதிட்ட எம்.ஆர்.வெங்டேஷ், "மேம்பாடு என்ற பெயரில் கணிசமான அளவு கோவில் நிதி தேவையற்ற நோக்கங்களுக்காக திசை திருப்பி விடப்பட்டுள்ளது" எனக் கூறினார். "அரசாணையின் அடிப்படை தவறானது" எனக் குற்றம் சாட்டிய அவர், "கோவிலின் பராமரிப்பு செலவினங்கள் அனைத்தும் நடப்பு வரவுகளில் இருந்து செயல்படுத்தப்பட வேண்டுமென அறநிலையத் துறை சட்டம் கூறுகிறது. உபரி நிதியில் இருந்து அல்ல" எனத் தெரிவித்தார். இதற்கு மாறாக, கள்ளழகர் கோவில் நிதியை சட்டத்திற்குப் புறம்பாகப் பயன்படுத்தியதால் அவை குறைந்துவிட்டதாக அவர் வாதிட்டார். "நிதிநிலை அறிக்கைகளைக் கவனித்தால் எந்த அளவுக்கு பொறுப்பற்ற முறையில் கோவில் நிதி செலவிடப்படுகின்றன என்பது தெரிகிறது" எனவும் அவர் வாதிட்டார். பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,கோப்புப் படம் 'இது தெய்வக் குற்றம்' வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு, கடந்த ஜனவரி 23ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. "கள்ளழகர் கோவிலில் அறங்காவலர் குழு இல்லாமல் உபரி நிதியைப் பயன்படுத்தி வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. கோவில் நிதியை தனிப்பட்ட சொத்தாகக் கருத முடியாது" எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், கோவில் நிதியில் இருந்து வளர்ச்சிப் பணிகளுக்காக 40 கோடி ரூபாயை ஒதுக்கி ஒப்புதல் வழங்கிய அரசாணையை நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர். அதோடு, "2022ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி கள்ளழகர் கோவிலின் உபரி நிதி 96 கோடியே 60 லட்சம் ரூபாயாக இருந்துள்ளது. இது 2023ஆம் ஆண்டில் 107 கோடியே 60 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால், 2024 மார்ச் மாதத்தில் இந்தத் தொகை சுமார் 62 கோடியே 37 லட்ச ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர். "இது மிகவும் கவலைக்குரிய விஷயம்" எனத் தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதிகள், "சட்ட அதிகாரமின்றி இவ்வாறு செலவிடப்பட்டுள்ளது. இது தெய்வக் குற்றம். வேலியே பயிரை மேய்வதற்கு இது தெளிவான உதாரணம்" எனக் கூறியுள்ளனர். அது தவிர, கோவில் நிதி எவ்வாறு தணிக்கை செய்யப்படுகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், "தணிக்கை மேற்கொள்ளப்படும் விதம் குறித்து இரண்டு வாரங்களில் இந்து சமய அறநிலையத் துறை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்றும் உத்தரவிட்டனர். பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,கோப்புப் படம் 'அரசே தொகையைக் கொடுக்க வேண்டும்' கோவில் வளாகத்தில் அக்னி புஷ்கரணி பகுதிக்கு அருகில் பணியாளர் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதைத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், "இதுபோன்ற கட்டுமானத்தால் அக்னி புஷ்கரணி பாதிக்கப்படும் என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை" எனத் தெரிவித்தனர். "அக்னி புஷ்கரணிக்கு அருகில் குடியிருப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை அமைக்கக் கூடாது. இந்தத் திட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்காகச் செலவிடப்பட்ட தொகையை கோவிலுக்கு தமிழ்நாடு அரசு திருப்பி வழங்க வேண்டும்" என்று தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். "கோவில்களில் நடக்கும் கட்டுமானப் பணிகளுக்கு எந்தவித அனுமதிகளும் பெறவில்லை" எனக் கூறிய நீதிபதிகள், "உரிய ஒப்புதல் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ள மாட்டோம்" என கோவில் நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டனர். "கோவிலில் முன்மொழியப்பட்ட சில கட்டடங்கள், இந்திய தொல்லியல் கழகத்தால் பாதுகாக்கப்படும் கட்டடங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் இதை சட்டப்படி அனுமதிக்க முடியாது" என மனுதாரரின் வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ் வாதிட்டார். "கட்டுமானங்களுக்கு இந்திய தொல்லியல் கழகத்தின் அனுமதி பெறப்படும்" என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார். கோவில் வளாகத்தில் நாயக்கர் மஹால் போன்ற தொல்லியல் நினைவுச் சின்னங்களுக்கு அருகில் கட்டுமானம் நடைபெற்றுள்ளதை தலைமை வழக்கறிஞர் ஒப்புக் கொண்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். "இந்தக் கட்டுமானங்கள் உடனே அகற்றப்படும்" என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக தீர்ப்பில் பதிவு செய்துள்ள நீதிபதிகள், "உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,alagarkoilkallalagar படக்குறிப்பு,கோப்புப் படம் 'அறங்காவலர்களே முடிவு செய்ய வேண்டும்' நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகக் கூறுகிறார், மனுதாரரின் வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அறங்காவலர்கள் இல்லாமல் செயல் அலுவலர்கள் மூலமாகவே நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். இதை நீதிமன்றம் ஏற்கவில்லை" என்றார். இதே கருத்தை பிபிசி தமிழிடம் தெரிவித்த ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ், "கோவில் வளர்ச்சி என்ற பெயரில் அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு அறங்காவலர்கள் முடிவு செய்ய வேண்டும் எனத் தீர்ப்பு கூறுகிறது" எனக் குறிப்பிட்டார். அவரது கூற்றுப்படி, "கோவிலின் ஆண்டு நிதிநிலை விவரம், உபரிநிதியை எவ்வாறு செலவு செய்வது, பக்தர்களின் பாதுகாப்புக்கும் ஆரோக்கியத்துக்கும் செலவு செய்யக்கூடிய பணம் என ஒவ்வொன்றுக்கும் விதிகளின்படி செலவு செய்வது குறித்து அலசி ஆராய்ந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது." கள்ளழகர் கோவிலுக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் தனித்தனியாகச் சென்று பார்வையிட்டதாகக் கூறும் டி.ஆர்.ரமேஷ், "அங்குள்ள கட்டுமானங்களை அவர்கள் கவனித்துள்ளனர். இவற்றில் பல கட்டுமானங்கள் அவசியமற்றவை எனக் கூறியுள்ளனர்" என்கிறார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் வணிகக் கட்டடங்களை கட்டுவதற்கு எதிராக மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பட மூலாதாரம்,SekarBabu/FB படக்குறிப்பு,தீர்ப்பு இரண்டு விதமாக வந்துள்ளதாகக் கூறுகிறார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு 'மூன்றுக்கும் மேற்பட்ட தீர்ப்புகள்' திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வணிக வளாகம் கட்டுவதற்குக் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு நந்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் கட்டுமானத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. சென்னை ராசப்பா தெருவில் கந்தகோட்டம் ஸ்ரீமுத்துகுமாரசாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குச் சொந்தமாக நிலங்கள் உள்ளன. இவற்றில் வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகளைக் கட்டும் முயற்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஈடுபட்டது. இதைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, அருள் முருகன் அமர்வு, 'கோவில் நிதியைப் பயன்படுத்தி வணிக வளாகம் கட்டக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும் கட்டப்பட்டு வருகின்றன' எனக் கூறினர். அப்போது அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "80 சதவிகித பணிகள் முடிந்துவிட்டன. ஏழு கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்தக் கட்டடங்கள் மூலம் மாதம் 7 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்" என வாதிட்டார். இந்த வழக்கில், "கட்டடங்களை பக்தர்களின் வசதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிகரீதியில் பயன்படுத்தக் கூடாது" என உத்தரவிட்ட நீதிபதிகள், "கோவில் நிதியில் வணிக வளாகங்களைக் கட்டக்கூடாது மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு அறநிலையத் துறை ஆணையர் சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும்" என உத்தரவிட்டனர். இதுகுறித்துப் பேசியபோது, "நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவில் நிதியில் கட்டடம் கட்டும் பணிகளை அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக" கூறுகிறார், ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ். சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு கோவிலில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறிய டி.ஆர்.ரமேஷ், "செயல் அலுவலர்கள் மூலமாக இதைச் செயல்படுத்துகின்றனர். இனி இதுபோன்று மேற்கொள்ள முடியாது என்பதை கள்ளழகர் வழக்கின் தீர்ப்பு உணர்த்துகிறது" என்றார். 'சட்டரீதியாக விவாதிக்க வேண்டும்' - அமைச்சர் சேகர்பாபு கள்ளழகர் கோவில் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் பிபிசி தமிழ் பேசியது. "இரண்டு விதமாக தீர்ப்பு வெளிவந்துள்ளது. சில கட்டுமானங்களை மேற்கொள்ளுமாறு கூறுகின்றனர். அறங்காவலர் குழுவை அழைத்து விவாதிக்காமல் செயல்பட்டதாகவும் கூறுகின்றனர். தீர்ப்பில் உள்ள விவரங்களை சட்டரீதியாக விவாதிக்க வேண்டியுள்ளது" எனக் கூறினார். 'நிதியை செலவிட்டது தெய்வ குற்றம்' எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது குறித்துக் கேட்டபோது, " தீர்ப்பை முழுமையாகப் படித்த பிறகே அதுதொடர்பாக பதில் கூற முடியும்" என்று மட்டும் அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly1p307124o- கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
உழைப்பு இருக்கும் அளவுக்கு நம்மைப் போல வாய் அடக்கமும் இருந்திருந்தால்....???- அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் – 18 மாநிலங்களில் அவசரநிலை அறிவிப்பு
மீண்டும் ஒரு பனி புயலா? அமெரிக்க மக்களை வாட்டும் கடும் குளிர் அமெரிக்காவில் அதிகரித்து வரும் குளிர், கடும் பனிப்பொழிவு போன்ற காரணங்களால் இதுவரை குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக AFP செய்தி குறிப்பிட்டுள்ளது. இந்த சூழலில் 11,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக Flight Aware தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நிலவரம் எப்படி உள்ளது? #USSnow#America #SnowStorm இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு- பிரித்தானிய பிரதமர் - சீன ஜனாதிபதி சந்திப்பு!
சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்குடன் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் வரலாற்றுச் சந்திப்பு! Published By: Digital Desk 3 29 Jan, 2026 | 05:00 PM கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானியப் பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளால் உலகளாவிய பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பிரித்தானியாவின் இந்தப் பயணம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பீஜிங்கில் உள்ள 'கிரேட் ஹால் ஆஃப் த பீப்பிள்' மண்டபத்தில் 80 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையே "ஆரோக்கியமான மற்றும் நிலையான" உறவை வளர்க்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். பிரித்தானியாவின் புகழ்பெற்ற 'விஸ்கி' மதுபானம் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க சீனா இணங்கியுள்ளது. இது பிரித்தானிய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் வாய்ப்பாக அமையும். பிரித்தானியப் பிரஜைகளுக்கு சீனாவுக்குச் செல்ல 'விசா இல்லா பயணச் சலுகை' வழங்குவது குறித்து சீனா தீவிரமாகப் பரிசீலிப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங் உறுதியளித்துள்ளார். ஆள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக இணைந்து செயல்படவும், குறிப்பாக சிறிய படகுகளில் பயன்படுத்தப்படும் சீனத் தயாரிப்பு எஞ்சின்களைக் கட்டுப்படுத்தவும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. "சீனா உலக அரங்கில் ஒரு தவிர்க்க முடியாத சக்தி. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்காக நாம் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்" எனப் பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்தார். ஷேக்ஸ்பியர் மற்றும் கால்பந்து குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237347- பிரித்தானிய பிரதமர் - சீன ஜனாதிபதி சந்திப்பு!
*பிரித்தானிய பிரதமர் - சீன ஜனாதிபதி சந்திப்பு! --- --- --- *பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒன்றுசேர முடியுமா? --- --- --- சீனா எந்த வகையில் வளர்ந்தாலும், வளர்ச்சி அநை்தாலும் ஏனைய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், (Xi Jinping) இன்று வியாழக்கிழமை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை (Keir Starmer) சந்தித்த போது கூறினார். சீனத் தலைநகர் பீஜிங்கில் இச் சந்திப்பு இடம்பெற்றது. டொனால்ட் ட்ரம்ப்பின் சர்வதேசச் சட்டங்களை மீறிய நகர்வுகளின் பின்னர், முதற் தடவையாக இச் சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது. அமைதியான வளர்ச்சிக்கு உரிய உறுதிப்பாட்டை வலியுறுத்திய ஜி ஜின்பிங், சீனா ஒருபோதும் போரைத் திணிக்காது என்றும் எடுத்துரைத்தார். வெளிநாட்டுகளில் ஒரு அங்குல நிலத்தை, சீனா ஆக்கிரமிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். “ட்ரம்பின் செயற்பாடுகளினால், ஐரோப்பிய நாடுகளை நோக்கி. சீனா நேசக் கரம் நீட்டுகிறது” என்று, நான் சென்ற 18 ஆம் திகதி யாழ் உதயன் சஞ்சீவி ஞாயிறு வார இதழில் எழுதிய கட்டுரையை இச் சந்திப்பு நியாயப்படுத்துகிறது. ஆனால், பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒன்று சேர முடியுமா? இருந்தாலும், ட்ரம்பின் தன்னிச்சையான முடிவுகள், சிலவேளை, பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் விரும்பியோ விரும்பாமலோ குறிபிட்ட சில காலத்துக்கேனும், ஒன்று சேரும் வாய்ப்புகள் இல்லாமில்லை. இப் பின்னணியிலேதான், இந்தியா அவசர அவசரமாக இலங்கையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முழு முயற்சி எடுக்கிறது. இது பற்றியும் சென்ற ஞாயிற்றுக்கிழமை எனது கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது... இது பற்றிய மேலும் விளக்கங்கள், எனது அடுத்த புவிசார் அரசியல் கட்டுரைகளில் வெளிவரும். அதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சிகளிடையேயான மோதல், கட்சியின் உள்ளக மோதல், தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், ஆரோக்கியமானது அல்ல. சுமந்திரன், சிறீதரன் -- சுமந்திரன், கஜேந்திரகுமார் இது பற்றி உணரத் தலைப்பட வேண்டும்... கட்சி வேறுபாடுகள் இருந்தாலும், அரசியல் தீர்வு விடயத்தில், ஈழத்தமிழர்களாக ஒரு புள்ளியில் நிற்க வேண்டிய காலமிது... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid02PbTsURNBj7iXkcMRzMcuyFbE7Ltn9hFpmJUkefWUiP4KKk4578A1SE3pEMbMVAXXl/?- சீனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!
https://www.cnn.com/2026/01/29/china/china-scams-myanmar-ming-family-intl-hnk- உண்ணாவிரதம் இருந்த, மட்டக்களப்பை சேர்ந்த குகதாசன் வைத்தியசாலையில் அனுமதி.
வேண்டுகோள் வெற்றியடைய வாழ்த்துக்கள். திலீபனின் எண்ணங்களே வந்து போகின்றன.- தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் உளவாளிகள் ஊடுருவல்.
உளவாளிகள் என்பதைவிட ஆசை வார்த்தை சொல்லி தனது ஆதரவாளர்களை உள்வாங்கியுள்ளார். ஒரு திறமைசாலி ஏன் இப்படி எல்லாம் செய்கிறார் என்று புரியவில்லை? சிறிதரனை தலைவராகவே இருக்க விட்டிருந்தால் இரண்டு வருடபதவி இப்போது முடிந்திருக்கும். தனக்கு வேண்டியவரை ஏகமனதாகவே தலைவராக்கியுள்ளாராம்.- ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
ரம்பின் நகர்வைப் பார்த்தால் வெனிசூலா ஜனாதிபதியை தூக்கிய மாதிரி கொமெனியை தூக்குவதற்கு ஆயத்தம் நடக்குது போல.- கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
சமீபத்தில் கொழும்பின் ஒரு பிரபல பாடசாலையில் இடம்பெற்ற விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், வெறும் ஒரு செய்தியாக மட்டும் இதைப் பார்த்துவிட்டு கடந்து போய்விட முடியாது. ஒரு பாடசாலையின் 'தலைமை மாணவன்' மற்றும் 'ஆசிரியைகள்' சம்பந்தப்பட்ட இந்தச் சம்பவம், நம் நாட்டு கல்வித் துறையில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பாரிய ஒழுக்கச் சீரழிவின் 'Tip of the iceberg’ மட்டுமே. இப்படியான சம்பவங்கள் இன்று நேற்று நடப்பவை அல்ல. 90-களில் நாம் கல்வி கற்ற காலத்திலும் இவ்வாறான வக்கிரங்கள் அரங்கேறின. ஆனால், அவை பாடசாலை கௌரவம் என்ற பெயரில் மூடி மறைக்கப்பட்டன. ஆசிரியை - மாணவன் துஷ்பிரயோகம். ஆசிரியர் - மாணவி துஷ்பிரயோகம். ஆசிரியர் - மாணவன் துஷபிரயோகம். ஆசிரியை - மாணவி துஷபிரயோகம். பாடசாலை பணியாளர்களால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள். இவை அனைத்தும் இலங்கையின் ஏதோ ஒரு மூலையில் இப்போதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அரசாங்கமும் கல்வி அமைச்சும் இந்தச் சூழ்நிலையின் தீவிரத்தை இன்னும் முழுமையாக உணரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. பிரித்தானியா (UK) போன்ற நாடுகளில், ஒரு ஆசிரியர் மாணவருடன் பாலியல் ரீதியான தொடர்பை வைத்திருப்பது 'Abuse of Position of Trust' (வழங்கப்பட்ட அதிகாரத்தையும் நம்பிக்கையையும் தவறாகப் பயன்படுத்துதல்) என்ற சட்டத்தின் கீழ் பாரிய குற்றமாகக் கருதப்படுகிறது. அங்கு 'சம்மதத்தோடுதான் நடந்தது” என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்தப் பதவிக்கான பொறுப்பே முக்கியமானது. ஆனால் இலங்கையில், இவ்வாறான சம்பவங்களின் போது சட்டத்தின் ஓட்டைகள் குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுக்கின்றன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவது, அவர்கள் அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக வருவார்கள் என்ற நம்பிக்கையில்தான். ஆசிரியர்களைத் தங்களின் பிள்ளைகளுக்கு அடுத்த பெற்றோராகவே பார்க்கிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கையைச் சிதைத்து, பிள்ளைகளைத் தமது காமவலைக்குள் வீழ்த்தும் ஆசிரியர்கள், எதிர்காலச் சந்ததியையே அழிப்பவர்கள் ஆவர். இவர்கள் மீதான தண்டனை வெறுமனே பணியிட மாற்றமாகவோ அல்லது தற்காலிகப் பணிநீக்கமாகவோ இருக்கக் கூடாது. அவர்கள் மீண்டும் ஒருபோதும் ஆசிரியர் தொழிலைச் செய்ய முடியாதபடி கடுமையான சட்டங்கள் பாய வேண்டும். மக்களாகிய நாம் சில கோரிக்கைகளை முன் வைக்க விரும்புகிறோம். Position of Trust' என்பதைத் துஷ்பிரயோகம் செய்யும் ஆசிரியர்களுக்கு எதிராக விசேட கடுமையான சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். பாடசாலை நிர்வாகத்தின் தலையீடு இல்லாத, மாணவர்களும் பெற்றோரும் அச்சமின்றிப் புகார் அளிக்கக்கூடிய ஒரு மத்திய முறைப்பாட்டுப் பிரிவு (Reporting Unit) அவசரமாக உருவாக்கப்பட வேண்டும். ஆசிரியர்களின் கல்வித் தகுதியைத் தாண்டி, அவர்களின் மனநலம் மற்றும் ஒழுக்க நெறிகள் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் கற்கை நெறிகள் அவசியமாக அறிமுகப்படுத்த வேண்டும். நாலந்தா கல்லூரிச் சம்பவம் ஒரு எச்சரிக்கை மணி. கல்விக்கூடங்கள் காமக் கூடங்களாக மாறுவதை அனுமதிக்க முடியாது. அரசாங்கம் இனியாவது உறக்கத்திலிருந்து விழித்து, இந்த "நம்பிக்கை துரோகத்திற்கு" முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில், எதிர்காலச் சந்ததி எவரையும் நம்பத் துணியாத ஒரு சமூகமாக மாறிவிடும். Mukinthan Thurairajasingham- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
சொர்க்கலோகத்தில் இருந்து தந்தை செல்வா. Thava Arumugam- கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
சாதாரணமாக இப்படியான செய்திகளுக்கு... @விசுகு , @குமாரசாமி , @தனிக்காட்டு ராஜா போன்றவர்கள் பாய்ந்தடித்து வருகின்றவர்கள். இப்போ அவர்களுக்கு... வயது போய் விட்டது போலுள்ளது. கோயில், குளம் என்று... திரிகிறார்கள் என நினைக்கின்றேன். 😂 🤣
Important Information
By using this site, you agree to our Terms of Use.