Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. ஐக்கிய நாடுகள் சபை… எப்போதும், அமெரிக்கா போன்ற குறிப்பிட்ட நாடுகளின் பக்கமே நிற்கும். இந்தச் சபை இதுவரை… பாதிக்கப்பட்ட ஆசிய, ஆபிரிக்க மக்களுக்கு நீதி வழங்கியதே இல்லை. இதனை இழுத்து மூடி விடுவது நல்லது. 😂
  3. போரை முடிக்க தயார் - ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்! Mar 12, 2026 - 07:09 AM போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். டெஹ்ரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்தல், போருக்கான நட்டஈடு வழங்குதல் மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக உறுதியான சர்வதேச உத்தரவாதங்களை அளித்தல் ஆகியவையே அந்த நிபந்தனைகளாகும். இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அமைதி சாத்தியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmmmsuulr0002356pxb19qa4s
  4. இந்தக் குடிசைகளை அப்புறப் படுத்தி, வணிக வளாகம் கட்ட… அரசியல் திமிங்கிலங்களின் சதி வேலையாகவும் இருக்கலாம். இப்படி முன்பு… இந்தியாவில் பலமுறை நடந்துள்ளது.
  5. இலங்கையில் மிரட்டும் எலி காய்ச்சல்: 1,800 பேர் பாதிப்பு! Mar 12, 2026 - 10:20 AM இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1,800 எலி காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா இதனை தெரிவித்தார். “இலங்கையில் இரண்டாவதாக அதிகளவில் பதிவாகும் தொற்றுநோய் எலி காய்ச்சல் ஆகும். ஆண்டுதோறும் சுமார் 13,000 நோயாளர்கள் தொற்றுநோயியல் பிரிவுக்கு அறிக்கையிடப்படுகின்றனர். இது இதைவிட அதிகமாகவும் இருக்கக்கூடும். கடந்த சில ஆண்டுகளாக 100 முதல் 200 மரணங்கள் வரை பதிவாகின. 2024 ஆம் ஆண்டில் 300 மரணங்கள் பதிவாகின. 2025 ஆம் ஆண்டில் அந்த மரணங்கள் 200 க்கும் குறைவாகக் குறைந்தன. 2026 ஆம் ஆண்டில் 1,800 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் இந்நோய் அதிகளவில் பதிவாகியுள்ளது. அதேநேரம் குருநாகல், கம்பஹா மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளில் நெற்பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் அல்லது அவதான நிலைமைகள் காணப்படுமாயின் அங்கிருந்தும் நோயாளர்கள் பதிவாகின்றனர்.” அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விசேட வைத்திய நிபுணர் கோலித ஜயசுந்தர, எலி காய்ச்சல் அறிகுறிகள் குறித்து பின்வருமாறு விளக்கமளித்தார்: "காய்ச்சல் சாதாரணமாக மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு இடையில் இருக்கும். இங்கு நோயாளியின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் 'வரலாறு' ஆகும். இவர் எங்கே சென்றார் என்பது போன்ற விடயங்கள் அவை. நோயைக் கண்டறிவதற்கு நோயாளியின் வரலாறு பற்றித் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. வயிறு வலிக்கும், வாந்தி வரும். கடுமையான தலைவலி இருக்கும். மூட்டு வலி வரும். தசை வலிக்கும். அதற்கு மேலதிகமாக, முதல் மூன்று நாட்களுக்குப் பின்னரும் காய்ச்சல் இருக்குமானால், ஒரு வைத்தியரை அணுகி அது குறித்து ஒரு முடிவுக்கு வருவது முக்கியமானது. நோய் தாமதமானால், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை பிரதானமாகப் பாதிப்படையும். அதற்கு மேலதிகமாக மூளைக்குக் கூட பாதிப்பு ஏற்பட்டு மரணம் சம்பவிப்பதற்கும் இடமுண்டு." https://adaderanatamil.lk/news/cmmmznzvq0009356pzpnri1t0
  6. இந்தப் பேரூந்து செல்வதற்கு உரிய… கேடு பள்ளம் இல்லாத வீதி அமைப்பு, மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியில் செல்வதற்கு உரிய சரியான பாதைகள் அமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஶ்ரீலங்கா வீதிகள்… சாதாரண மக்கள் நடந்து செல்லவே, உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. பல வகையான.. டிப்பர், மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றை அதிகமாக இறக்குமதி செய்து நெருக்கமாக ஓடும் நிலையில்… தமிழ்ப் பகுதி வீதிகள் 50 வருடத்திற்கு முன்பு இருந்த நிலையிலேயே இன்றும் உள்ளது.
  7. டெல்லியில் பயங்கர தீ விபத்து : 400 குடிசைகள் எரிந்து சாம்பல் ; வீதிக்கு வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள்! Published By: Digital Desk 1 12 Mar, 2026 | 11:06 AM இந்தியாவின் தலைநகர் டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 300 முதல் 400 வரையிலான குடிசை வீடுகள் தீக்கிரையாகி முற்றாக அழிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். நேற்று புதன்கிழமை (11) இரவு 11:50 மணியளவில் மட்டியாலா கிராமத்தில் உள்ள மீன் சந்தையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் தமது அன்றாட பணிகளை முடித்துக்கொண்டிருந்த வேளையில் திடீரென பரவிய தீ, அருகில் இருந்த குடிசைப் பகுதிகளுக்கு அதிவேகமாகப் பரவியது. டெல்லி தீயணைப்புத் திணைக்களத்தின் 23 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, நீண்ட நேரப் போராட்டத்தின் பின்னர் இன்று வியாழக்கிழமை (12) அதிகாலை தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படாதபோதிலும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளனர். தீ ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/240772
  8. ட்றம்பு தான்… அரிப்பு எடுத்து போர் தொடுத்த மன நோயாளி. அமெரிக்காவில் ஒரு மூலையில் இருந்து போரை ஆரம்பித்து… ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு எல்லாம்… பதட்டத்தில் உள்ளது. பெற்றோல் ஒரு லீற்றர் என்றும் இல்லாத அளவிற்கு 2 ஐரோ 20 சதத்தை தாண்டியது. பெற்றோல் விலை உயர்ந்தால்…. குண்டூசி உட்பட பல பொருட்களும் விலை உயரும். அதற்கு இந்த முட்டாள்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
  9. இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஆரம்பமாகும் விசேட பஸ் சேவை Mar 12, 2026 - 12:02 PM மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட முன்னுரிமை பேருந்து சேவையொன்றை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் இதுவரை முறையாகக் கவனிக்கப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இது முன்னெடுக்கப்படுகிறது. ‘அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் மனித கௌரவத்தை பாதுகாக்கும் நாடு’ எனும் அரசாங்கத்தின் தூரநோக்கை யதார்த்தமாக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக 430.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சமூகத்தில் நடமாடுவதற்கான தடைகளை நீக்குவதே இதன் நோக்கமாகும். முதற்கட்டமாக, சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் இலகுவாக ஏறுவதற்கு வசதியான 'தாழ்ந்த தளம்' கொண்ட 10 நவீன குளிரூட்டப்பட்ட பேருந்துகள் கடந்த 10 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இவை சனிக்கிழமை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. 33 ஆசனங்களைக் கொண்ட இந்தப் பேருந்து ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் 80 பயணிகள் பயணிக்க முடியும். சக்கர நாற்காலிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட தொழில்நுட்ப வசதிகளும் இதில் உள்ளன. முன்னோடித் திட்டமாக மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்திலிருந்து புறக்கோட்டை மற்றும் கடவத்தை வரையில் காலை, மாலை வேளைகளில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் ஒருமுறை இந்த பேருந்துகள் இயக்கப்படும். மஹரகம அபெக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றை நேரடியாக இணைக்கும் வகையில் இந்த சேவைகள் அமையும். தெரிவு செய்யப்பட்ட 28 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு சைகை மொழி, தொழில்சார் ஒழுக்கநெறிகள் மற்றும் பஸ் தொழில்நுட்பம் குறித்து விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் மேலும் 100 பேருந்துகளை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் 'Clean Sri Lanka' திட்டத்தின் கீழ் பேருந்து நிலையங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு நவீனமயப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது https://adaderanatamil.lk/news/cmmn35rqc000b356pqr2s4lgf
  10. சம்பவம் நடைபெற்ற காலமான 2016’ம் ஆண்டு… அவர் மாவட்ட செயலர், இப்போ ஆளுநர்.
  11. அண்ணை தற்போதைய ஆளுநர் தான், இவர் முன்பு அரசாங்க அதிபராக இருக்கையில் நடந்த திட்டம்.
  12. போர் நிறுத்தத்திற்கு நிபந்தனைகளை முன்வைத்தார்: ஈரான் ஜனாதிபதி! Published By: Digital Desk 1 12 Mar, 2026 | 11:06 AM தற்போதைய போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். அமைதியை நிலைநாட்ட வேண்டுமானால் சர்வதேச சமூகமும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் இந்த விடயங்களில் அவசரமாக கவனம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள், அதாவது ஈரானிய ஆட்சியின் இறையாண்மை மற்றும் உரிமைகள் சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மோதல்களினால் ஏற்பட்ட அழிவுகளுக்காக நியாயமான இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான ஆக்கிரமிப்புகள் அல்லது தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாது என்பதற்கான நிரந்தர சர்வதேச பிணை மற்றும் உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும். இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/240763
  13. போதை பழக்கத்தால்…. மனநல பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். ஒரு குடும்ப தலைவர், அரச உத்தியோகத்தர்…. அவரின் வீட்டில் வாள் எல்லாம் ரெடியாக இருந்திருக்குது என்றால் சிந்திக்க வேண்டிய விடயம்.
  14. ஈரானுக்கெதிராக 135 நாடுகள் ஐநா பாதுகாப்புச்சபையில் பிராந்திய போர் தூண்டலுக்கெதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது, இதன் மூலம் ஐநாவின் 51 வது சாசனத்திற்கமைய ஈரான் தாக்குதலால் பாதிக்கப்படும் நாடுகள் பதில் நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது. இந்த போரினை முடிவிற்கு கொண்டுவருவதற்கு ஈரான் தரப்பிலிருந்து 3 கோரிக்கைகள் உள்ளது. ஈரானின் இறையாண்மை சட்ட ரீதியாக மதிக்கப்படல். எதிர்வரும் காலத்தில் தன் மீது தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கான பாதுகாப்பு உத்தரவாதம் (உக்கிரேனிற்கான பாதுகாப்பு உத்தரவாதம் பற்றிய தீவிர நிலைப்பாடு கொண்ட ஐரோப்பிய / மேற்கு சமூகத்தினை இராஜதந்திர ரீதியான அணுகல் ). போர் இழப்பீடு (இதுவும் உக்கிரேன் நிலை போன்ற). அதே சமயம் வலிந்து தாக்கும் அமெரிக்க இஸ்ரேல் தரப்பு ஒரு ஆட்சி மாற்றம் கோரி நிற்கின்றது (ஒரு தரை வழி போரில்லாமல் அது சாத்தியப்படுமா?) இதனடிப்படையில் பார்ர்கும் போது போர் நீண்டு செல்ல வாய்ப்புண்டு, பெற்றோல் விலை பல மடங்காக அதிகரிக்கலாம் என கருதுகிறேன்.
  15. எப்போதையை ஆளுநர் என்பதை விளக்கமாக தெரிவிக்க முடியவில்லையோ? செய்தியில் ஏன் இத்தனை குழப்பம்?
  16. என்னக்கா நீங்களே இப்படிச் சொல்லலாமா? இது அவர்களின் குடும்ப சூழலை வெளிப்படுத்த எடுத்த படங்கள், நன்கொடை அளிப்பவர்களுக்கு வெளிப்படையாக தெரியப்படுத்தும் நோக்கம் மட்டுமே. இவர்களுக்கும் இன்னும் 24 பேருக்கும் 20 லட்சம் ரூபா (முகப்புத்தகத்தில் 30 லட்சம் என தவறாக குறிப்பிட்டுள்ளார்கள்) வீட்டுத்திட்டம் திரு சுவிஸ் நாதன் அண்ணாவினால் கட்டிக்கொடுக்கப்பட உள்ளது. மலசலகூடம் அந்த திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. @வாத்தியார் அண்ணா கிராமசேவகருடன் கதைத்தபோது உறுதிப்படுத்தினார். திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தரும் இதனை உறுதிப்படுத்தினார். ஆகவே அவர்களுக்கு மலசலகூடம் கட்டிக்கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும் என்பது எனதும் வாத்தியார் அண்ணாவினதும் அபிப்பிராயம்.
  17. Today
  18. டொக்ரர் இடமாற்றத்தோட கதைகள் எழுதமாட்டாரோ என நினைத்தேன். டைப் பண்றவைக்கு ஒரு காலத்தில வலு டிமான்ட்! பாஸ் எடுக்க 3 / 5 கொப்பி எடுக்கவேணும். பகிர்விற்கு நன்றி @நிழலி அண்ணை.
  19. நிதித் துஸ்பிரயோகம் – வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடு! adminMarch 11, 2026 வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார். வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு மண்டைதீவில் 77 மில்லியன் ரூபாய் நிதியில் “எக்கோ ரூரிசம்” திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உரிய முறையிலான திட்டமிடல் இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அந்த திட்டம் தோல்வியடைந்தது. அத்துடன் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் பாவனை இன்றி அழிந்து போயுள்ளன என குறித்த திட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் குறித்த திட்டத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன எனவும் , அரச நிதி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் , அதற்கு அப்போதைய யாழ் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் (தற்போதைய வடமாகாண ஆளுநர்), அந்த திட்டம் நடைமுறைப்படுத்திய கால பகுதியில் வேலணை பிரதேச செயலர்களாக கடமையாற்றிய தெ.சுகுணரதி மற்றும் ஆ. சோதிநாதன் ஆகிய மூவருக்கும் எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/230329/
  20. வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு! adminMarch 12, 2026 யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன் , மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகஸ்தரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். வடமராட்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை (11.03.26) நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கரவெட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக நேற்றைய தினம் மாலை கரவெட்டியில் உள்ள தனது வீட்டில், தனது இரண்டு பிள்ளைகளையும் ஒரு அறையில் பூட்டி வைத்து , மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு, மனைவியை கத்தியால் குத்த முனைந்த வேளை , மனைவி, கணவனை கீழே தள்ளி விழுத்தி விட்டு , அறையில் இருந்த இரண்டு பிள்ளைகளையும் மீட்டுக்கொண்டு , வீட்டில் இருந்து தப்பியோடி அருகில் இருந்த கடையொன்றினுள் தஞ்சம் புகுந்துள்ளனர். அந்நிலையில், மனைவி, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மந்திகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கே சென்று இருப்பார் என்ற எண்ணத்தில் , மனைவியின் தாய் வீட்டிற்கு சென்றவர் , அங்கே தனிமையில் இருந்த மனைவியின் தாயாருடன் தர்க்கப்பட்டு, அவரை வாளினால் வெட்டி படுகொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்து அப்பகுதிகளில் தேடுதல்களை நடத்தியுள்ளார். அதன் போது, வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பழச்சாறு கடையொன்றில் மனைவியின் தந்தை நிற்பதனை அவதானித்து , அங்கு சென்று அவர் மீது மூர்க்கத்தனமாக வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளார். அதன் போது அங்கிருந்தவர்கள் அவரை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை அங்கிருந்து தப்பி சென்றார். அதனை அடுத்து , அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை காவற்துறையினர் வடமராட்சி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தரான படுகொலையானவரின் மருமகனை கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவத்தில் யோகராசா சரஸ்வதி (வயது 67) என்பவரே உயிரிழந்ததுடன், அவரது கணவனான காசிப்பிள்ளை யோகராசா படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். https://globaltamilnews.net/2026/230357/
  21. ஏன் ஈரான் அப்படி சொல்கிறது! இஸ்ரேல் பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதைப்போல் அகன்ற இஸ்ரேலை உருவாக்குகிறேனென்று அருகில் உள்ள மற்றய நாடுகளையும் சுரண்டாமல் இருப்பதற்காகவே!
  22. ஆழ்ந்த இரங்கல்கள். ரணில்… சில அரசியல் கைதிகளை விடுவித்து இருந்தார். அனுரா, மகிந்த, கோத்தா, மைத்திரி போன்ற ஜனாதிபதிகள்… ஒரு அரசியல் கைதிகளையும் விடுவிக்கவில்லை என நினைக்கன்றேன்.
  23. மிகவும் வருத்தமான செய்தி. கடேசி நிமிடத்தில் கூட அம்மா நிம்மதியாக கண் மூடவில்லை. ஆழ்ந்த இரங்கல்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.