stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!
ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்! 07 Mar, 2026 | 11:09 AM இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையின் வசம் உள்ள ஈரானிய மாலுமிகளை மீண்டும் ஈரான் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கையைக் கோரியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு அப்பால் உள்ள சர்வதேசக் கடற்பரப்பில் ஈரானுக்குச் சொந்தமான 'ஐரிஸ் டெனா' என்ற போர்க்கப்பல் மூழ்கியது. அதிலிருந்து மீட்கப்பட்ட மாலுமிகள் மற்றும் தற்போது இலங்கையின் பொறுப்பில் உள்ள 'ஐரிஸ் புஷெர்' என்ற மற்றொரு ஈரானியக் கப்பலின் பணியாளர்கள் ஆகியோரை மீண்டும் ஈரானுக்கு அனுப்பக் கூடாது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இலங்கை அதிகாரிகளுக்கு விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த மாலுமிகளை ஈரான் தனது பிரசார நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், அவர்களைத் திருப்பி அனுப்பும் விடயத்தில் இலங்கை மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் மார்ச் 06 ஆம் திகதியிடப்பட்ட அமெரிக்காவின் உள்நாட்டுத் தகவல் பரிமாற்றக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் நிலவி வரும் கடும் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மாலுமிகள் விவகாரம் தற்போது சர்வதேச அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் அல்லது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!
-
இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை
தகவலுக்கு நன்றி ஈழப்பிரியன். 👍🏽
-
இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை
ஜலசந்தியில் என்று எண்ணுகிறேன். மூன்று கப்பல் விவகாரத்தின் பின்பே எரிய விட்டிருக்கிறார்கள். பலர் இறந்ததாகவும் சொல்கிறார்கள். ஒரு மாதத்திற்கு ரசியாவிடம் எண்ணெய் எடுத்துக்கோ என்று ரம் இந்தியாவுக்கு கட்டளை இடுகிறார்.
- Today
-
இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை
இந்தியக் கப்பல் எங்கே பற்றி எரிகிறது. நான்…அந்தச் செய்தியை வாசிக்கவில்லை ஈழப்பிரியன்.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
அண்ணா, கால ஓட்டத்தில் மேலும் மேலும் நாகரிகமானவர்களாக மாற வேண்டும் என்பது தான் இங்கு ஆறு அறிவுகள் உள்ள ஒரேயொரு உயிரினமாக இருக்கும் மனிதர்களின் சரியான பாதை. மனிதர்கள் தொடர்ந்தும் பாமரர்களாக இருக்க, அவர்கள் வேறு சிலரால் அந்த சில மனிதர்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதும் தவறு; சக மனிதர்களை கொன்றழிப்பதும் தப்பு. இவை இரண்டுமே மனிதர்களின் தெரிவாக இருக்கக்கூடாது. பெண்ணடிமை வாதமும் மிகப் பெரிய கொடுமை அல்லவா.................. நூறு வருடங்களின் முன் எங்கள் சமூகம் இருந்த நிலையில் இருந்து நாங்கள் எங்கேயோ வந்துவிட்டோம். எங்கள் சமூகங்களில் ஐம்பது வருடங்களின் முன் இருந்த நிலை கூட பாகுபாடுகளும், போலி நம்பிக்கைகளும் நிறைந்தவையே. உலகில் எல்லா சமூகங்களும் முன்னோக்கியே போக வேண்டும், ஏனென்றால் காலம் ஒரு போதும் பின்னோக்கிப் போவதில்லை. பாமரத்தனமும், போலி நம்பிக்கைகளும் வலிந்து உருவாக்கப்பட்டவையும், திணிக்கப்பட்டவையும், சிலரின் சுயநலன்களுக்காக. உலகிலேயே மிகப் பெரிய உரிமை தனிமனித சுதந்திரம். அங்கிருந்தே எல்லாம் உருவாகின்றது. தனிமனித சுதந்திரத்தில் இருந்தே சமூகம், நாடு, தேசம், உலகம் என்று சுதந்திரம் விரிகின்றது. இந்த சுதந்திரம் கிடைக்காத மனிதன் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட ஒரு பூனைக் குட்டி போலவே. பூனைக் குட்டி கூட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கின்றது என்று நினைப்பதை விட, அதன் வாழ்வையே அது இழந்து விட்டது என்று நினைப்பதே இங்கு சரியான பார்வையாக இருக்கும். நாகரீக மனிதர்களில்/நாடுகளில் எத்தனை நாடுகள் இன்று போரில் ஈடுபடுகின்றார்கள் என்று பார்த்தால், மிகச் சில நாடுகளே அதைச் செய்கின்றன. அமெரிக்காவும், இஸ்ரேலும் முதலாவது. அதன் பின்னர் ரஷ்யா. இன்னும் சில நாடுகள். முடிந்த வரை எல்லோரும் போர்களையும், முரண்பாடுகளையும் தவிர்க்கவே விரும்புகின்றார்கள். சீனா நல்ல ஒரு உதாரணம். இன்றைய அமெரிக்க அரசை ஒரு உதாரணமான அரசாக நாங்கள் எடுக்க முடியாது. மிகவும் தவறான அடிப்படையில் அமைந்த அரசு அது. இந்த அரசை தேர்ந்தெடுத்த ஆதரவாளர்களும் ஒரு வகையில் பாமரத்தனமும், போலி நம்பிக்கைகளும் கொண்டவர்களே. அவர்கள் அதில் இருந்து வெளியே வந்து இத்தகைய தலைவர்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு நிராகரிக்கவேண்டும்.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
வரவேற்று விட்டு முதுகில் குத்தியதா இலங்கை? டெனா கப்பலை இந்தியாவில் நடந்த கண்காட்சியின் போது இலங்கையில் தரித்து செல்லுமாறு அழைப்பினை வழங்கியதாம் இலங்கை நேவி. இதன்படி விசாகபட்டனத்தில் இருந்து கப்பல் இலங்கை நோக்கி நகர ஆரம்பித்து இலங்கையை நெருங்கும் போது, இலங்கை அழைப்பை விலத்தி, தமது எல்லைக்குள் வரவேண்டாம் என சொன்னதாம். என்ன செய்வது என தெரியாமல் 11 மணி நேரமாக காத்திருந்த டெனா, தாக்குதலில் சிக்கியதாம். https://www.jaffnamonitor.com/featured/invited-then-turned-away-the-11-hour-wait-that-preceded-iris-denas-sinking/ பிகு எம்மை அழிக்க ஆதரவு நல்கிய முல்லாக்களை இலங்கையே நம்ப வச்சு கழுதறுத்துள்ளது. இதே போல் மாலுமிகளை ஈரானுக்கு அனுப்பவே கூடாது என இலங்கையை அமரிக்கா நெருக்கி உள்ளதாம். சர்வதேச சட்டத்தின் படியும், நடுநிலைமையை இலங்கை பேண விரும்பின் அனுப்ப கூடாது. மீறி அனுப்பினால் அது ஈரானுக்கு போருதவி என கருதப்படலாம்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அரசியலில் எவரும், எப்போதும் எதிரியின் பலவீனத்தை தாக்குவதே வழமை. அது சீமான், விஜை, திராவிட கட்சி தலைவர்கள் எல்லாரிடமும் முயற்சிக்கப்படும், பட்டிருக்கும்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
குமாரசாமி, கோசான் சொன்னது சரிதான். சம்பிராதய முறைப்படியான திருமணம் சிறீலங்காவில் செல்லுபடியாகும். உதாரணத்துக்கு, எனது தந்தை இறந்தது 1962இல். அப்பொழுது பென்ஷனுக்கு விண்ணப்பித்த பொழுது, திருமணம் சம்பிராதய முறைப்படி நடந்தது என்றே குறிப்பிட்டார்கள். ஐயரின் ஒப்புதலும் சேர்த்துக் கொடுக்கப்பட்டது. அப்பொழுது (50-60 ஆண்டுகளுக்கு முன்னார்) பிறப்புப் பதிவில் பெற்றோர்கள் திருமணமானவர்களா? பதிவுத் திருமணமா? சம்பிராதயத் திருமணமா? என்ற கேள்வி இருந்தது. இப்பொழுதும் விண்ணப்பப்படிவத்தில் அப்படியான கேள்வி இருக்கிறதா தெரியவில்லை. சம்பிராதயத் திருமணமானாலும் பதிவுத் திருமணத்தில் எப்பொழுதும் சிக்கலில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இறுதிப் போட்டிக்கான, ஆடுதளமும் ஓட்டம் அடிக்கக் கூடிய தளமாம். சிவப்பும் கறுப்பும் கலந்து செய்த தளம். 200க்கு மேல அடிக்க வேணும் போல. அங்கால பிஃன் அலனும் இங்கால சஞ்சு சாம்சனும். யார் சாதிக்கப் போகினம்.
-
'இந்தியா ரஷ்யாவிடம் 30 நாள் கச்சா எண்ணெய் வாங்கலாம்' - அமெரிக்கா கூறியது என்ன?
ரம்பை நெத்தன்யாகு வழி நடத்துகிறார். மோடியை ரம் வழி நடத்துகிறார்.
-
இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை
இதன் பலாபலன் தானே இந்திய கப்பல் பற்றி எரிகிறது. முதுகில் குத்துவது எப்படி என்று இந்தியாவுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
பெரியாரிஸ்டுக்கும் ஏத்திவிட அடுத்தவர் முனைந்திருப்பர் இல்லையா? அப்படி தெரியவில்லை. இங்கே அந்தப் பெண்ணை திரும்ப திரும்ப ஏற்றிவிடுகிறார்கள் என்பதை சொல்ல வந்தேன்.
-
யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் !
இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் விளையாடும் குறிப்பிட்ட இந்த பாடசாலை வீரர்கள் இந்த போட்டியில் பங்குபற்றவில்லையோ?
-
ஈரானிய கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை
உங்கள் படையால் அதை தடுத்து நிறுத்த முடியாதோ? உலக நாடுகளுக்கு பயங்கரவாதத்தை எப்படி வெற்றிகொள்வது என்று பாடம் நடத்திய படையல்லவா உங்கள் படை. எல்லா நாடுகளிடமும் உதவி வேண்டி சொந்த மக்களின் சுதந்திர போராட்டத்தை நசுக்கினீர்கள், இப்போ நீங்கள் நசுங்குங்கோ! உங்கள் வாயே உங்களுக்கு எதிரி.
-
எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத் குற்றச்சாட்டு
எப்படி இவர் இவ்வளவு உறுதியாக சொல்கிறார்? தங்களது கடந்தகால அனுபவம் இப்போ இப்படி மாற்றி பேசுகிறது! அன்று அவர்களை கைது செய்து நிரூபித்திருக்கலாமே, அதிகாரம் உங்கள் கையிற் தானே இருந்தது. ஏன் செய்யவில்லை? "வேண்டாப்பெண்டாட்டி கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் இவர்களுக்கு."
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இதை எல்லாம் நீதி விசாரணையில் எல்ஸ்சிபிட் ஆக சேர்த்திருக்க வேண்டும். விஜி அண்ணியிடம் கேள்வி கேட்க. அதேபோல் 50,000 ரூபா கொடுத்து சீமானின் மனைவி போல் விஜி பேசி ஆடியோ அனுப்ப சொல்லி சீமான் கேட்டபோது, அவருக்கு கயல் அண்ணியுடன் திருமணம் ஆகி விட்டது. கயல் அண்ணியுடன் வாழ்ந்து கொண்டு விஜி அண்ணிக்கு ஏன் பணம் கொடுத்தார், இப்படி ஆடியோ கேட்டார் என்பதும் சீமானிடம் கேட்க படவேண்டிய கேள்வி. ஆனால் விஜி அண்ணிக்கு விலைமாது, விசரி என பட்டம் கட்டி, மெட்டிராஸ் ஹைகோர்ட் விசாரிக்க சொன்ன வழக்கை, சுப்ரீம் கோர்ட்டுக்கு போய், பிஜேபி வக்கீலை வைத்து சீமான் அடித்து நூத்து விட்டதால் சீமானின் மீதான விசாரணை அப்படியே புதைக்கப்பட்டு விட்டது.
-
ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்
சொந்த நாட்டில், ஒரே மொழி பேசும், ஓர் இனமக்கள் வகைதொகையின்றி கொல்லப்படும்போது முட்டுக்கொடுத்தவர்கள், பால்சோறு உண்டு மகிழ்ந்தவர்கள், அதற்கு எதிராக குரல் கொடுக்க மறுத்தவர்கள், அதை நிஞாயப்படுத்தியவர்கள், எங்கோ இருக்கும் ஈரானுக்காக போராடுகிறார்கள் இது விந்தையே. சமாதானத்திற்காக போராடுபவர்கள், அநிஞாயத்திற்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் எங்கே அநிஞாயம் நடந்தாலும் பேதமின்றி இனம், இடம், மதம், மொழி, அந்தஸ்து, சந்தர்ப்பம், சொந்த ஆதாயம், விருப்பு வெறுப்பு எல்லாம் பார்த்து குரல் கொடுப்பதில்லை. அப்படியான குரல்களுக்கு வரவேற்புமில்லை. இது வெறும் கூக்குரல். சந்தர்ப்பவாத அரசியல் வியாதி. அன்று தமது பக்கத்தை நிஞாயப்படுத்த நட்பு நாடென்றார், இன்று அனுராவை பயமுறுத்தி பின்வாங்கச்செய்ய இப்படிச்சொல்கிறார். அன்று இவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்தவர்களை இன்று கைவிடச்சொல்கிறார். பக்கா சுயநலவாதி. இவரை தொடர்ந்து பல அரசியல் வியாதிககளின் சுயநல எச்சரிக்கைகள் கிளம்பும்!
- Yesterday
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
தரலாம். நீங்கள் பிழை என நிறுவி விட்டேன் என்றால் என்ன செய்வீர்கள்.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
வேலையிடத்து பெண் ஒருவர் தனது நாய் குட்டி போட்ட இரு குட்டிகளுக்கு பெயர் வைக்க சொல்லி ஒரே அலுப்பு. எனக்கு நாய் எண்டால் கண்ணில காட்டேலாது. பிரளயகிருமி, விபிலிய கிருமி எனும் பெயர்களை பரிந்துரைக்கவுள்ளேன். பிகு சொற்களை ஆக்கவில்லை. எகிப்தில் எழுதிய சிகை கொற்றன் காலத்து சொற்கள் இவை. கால இயந்திரத்தில் அங்கே இருந்து இங்கே வந்து எழுதுவதால் சில சமயம் அந்த சொற்கள் வந்து விழுகிறன.
-
ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்
ஈரானியர்களை கொன்று குவித்த கொடுங்கோல் தலைவன் கொல்லபட்டதை ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேல் தாக்குதல்களை உலகம் முழுவதும் வசிக்கின்ற ஈரானியர்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள் ஆனால்இலங்கையில் இப்படி நடைபெறுவது அவமானம்
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நான் இந்த படத்தை பார்த்துவிட்டு இது ஏதோ பழைய படம் என்று நினைத்து விட்டேன் இப்போ தான் நண்பர்கள் சொன்னார்கள்சில நாட்களுக்கு முன்பு இருவரும் ஒரே நிறத்தில் பொருத்தமான உடை அணிந்து ஜோடியாக கலந்து கொண்ட படம் தான் அது என்று சங்கீதாவுக்கு நீதி வேண்டும் 😟
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
குர்திஷ் இனம் எங்கும் எப்போதும் நடுத்தெருவில் விடப்பட்டதகாவே வரலாறு சொல்கின்றது. நேட்டோவில் இருக்கும் துருக்கி குர்திஷ் இனத்திற்கு விடுதலை கொடுக்க இடையூறு செய்து கொண்டே இருக்கும்.ஏனெனில் துருக்கி வன்மம் கொண்ட நாடு. வன்மம் பொல்லாதது.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஆதாரங்களை தரவும்...காத்திருக்கின்றேன்.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
தாம் நாகரீகமானவர்கள் என கூறும் மேற்கத்தையவர்கள் தான் நாடு விட்டு பிற நாடுகளுக்கு சென்று போர் செய்கின்றார்கள். கொரோனா பரவலுடன் எல்லா நாடுகளும் மக்களும் வலுவிழந்து விட்டார்கள். போதாக்குறைக்கு உக்ரேன் போரும் வர அனைத்து மனித வாழ்க்கையும் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. கொடுமைக்கு மேல் கொடுமையாக தற்போது ஈரான் மீதான போர். அதை விட கொடுமை என்னவென்றால் ஈரான் போர் நடக்க ஆரம்பிக்க ஜேர்மனியில் கையிருப்பில் இருக்கும் எரிபொருட்களின் விலையையே கூட்டி விட்டார்கள்.😋 இனிவரும் காலங்களில் என்னென்ன கொடுமைகளை சந்திக்கப்போகின்றமோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். போர்களும் அதற்க்குரிய காரணங்களும் மூட நம்பிக்கைகைகளை விட கொடியது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியணியில் மாற்றம் இருக்காது எனவே நினைக்கிறேன்.