Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. இதைத் தான் நானும் முன் கூட்டியே சொல்லியிருந்தேன் பொருளாளராகிய ஏராளன், குறிப்பிட்ட நிதி வங்கிக்கணக்கிற்கு வந்ததும் எத்தனை பேர் அனுப்பினார்கள்........ அல்லது யார் அனுப்பினார்கள்... எவ்வளவு தொகை அனுப்பினார்கள்...... என்ற விபரத்தை உடனே வெளியிடக் கூடாது கிடைத்த தொகையை மட்டும் எங்களுக்குத் தெரியப்படுத்தினால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து அந்த நிதியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று முடிவு செய்வோம் முதலில் அராலி அடுத்து பொன்னாலை இவற்றின் வெற்றிக்குப் பின்னர் எமது உண்மையான இலக்கை நோக்கி ஒவ்வொரு காலடியாக எடுத்து வைப்போம். அது முதலில் காரைநகரில் ஒரு காலடியாகவோ அல்லது சுழிபுரத்தில் ஒரு காலடியாகவோ இருக்கலாம் அந்த நேரத்தில் பயனாளர்களின் உண்மையான நிலைமைக்கு ஏற்ற மாதிரிச் செயற்படுவோம், அதற்கு முதல் வாத்தியாரின் நிதி உதவியினால் செய்யப்பட்டது கு சா அண்ணாவின் செயற்பாட்டால் செய்யப்பட்டது அல்லது கோஷான் அவர்களின் உதவியால் செய்யப்பட்டது என்ற எந்த ஒரு வார்த்தைப் பிரயோகமோ அல்லது கருத்துக்களோ இங்கே வரக்கூடாது முன்னோடி அமைப்பினரால் என்ற அந்த ஒன்றின் பின்னால் தான் நாங்கள் எல்லோரும் என்பது இங்கே எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும் அண்ணா இதுவே எனது கருத்து மற்றவர்களும் அதையே விரும்புகின்றார்கள் என்பது அவர்களின் கருத்துக்களில் இருந்து தெரிகின்றது இங்கே யாழ் களத்தின் உறவுகளால் ஒருங்கிணைக்கப்பட்ட முன்னோடி என்ற அமைப்பே முன்னோடும்
  3. தென்னமெரிக்காவில் எங்கோ ஆட்சியை கவிழ்த்துவிட்டே இலங்கை வந்தவராம். புதிதாக வருபவர் இவரைவிட பாயக் கூடியவராம். வழமையாக பாவனைக்கு உதவாத கப்பல்கள் விமானங்கள் என்று இப்படி ஏழை நாடுகளுக்கு அன்பளிப்பு செய்வது. இந்ததடவை அகப்பட்டது இலங்கை.
  4. இதைவிட இவர்களால் வேறென்ன செய்ய முடியும்? வந்த அழிவுகளை கண்டும் திருந்தாத நம் இனம், பின்னர் யாரும் இதுபற்றி எச்சரிக்கவில்லை என்றும் பதிவிடுவார்கள். இயற்கையை முற்று முழுதாக நம்மால் கணிக்கமுடியாது, ஒருவேளை எதிர்பார்த்ததைவிட குறைவாக இருக்கும், அல்லது கூடுதலாக இருக்கும், அது இயற்கையின் மாற்றத்தை பொறுத்தது. கவனமாக முன்னெச்செரிக்கையுடன் இருப்பதில் எந்த தப்பும் இல்லை.
  5. அதுசரி, இவர் பொதுவெளியில் பகிரங்கமாக, தனக்குப்பிடிக்காதவர்களை, தமது உரிமைகளுக்காக போராடுபவர்களை, ஒருமையில் விளித்து, தகாத, கேவலமான வார்த்தைகளை பேசும் இவர், பொதுமக்களை அதுவும் பெண்களை அச்சுறுத்தும் இவர் பாராளுமன்றம் செல்லவோ, மற்றவர்களுக்கு பாடம் நடத்தவோ தகுதியற்றவர். தனக்கென்றால் கொதிப்பு, மற்றவர்க்கென்றால் ரசிப்பு.
  6. Today
  7. முன்னோடி உதவி நிறுவனத்தின் அடிப்படை சுகாதாரத் திட்டத்துக்காக தனியான வங்கிக் கணக்கு திறக்கப்பட்டிருக்கிறது. தனியாக யாழ்கள உறவுகளால் மட்டும் இதை நடைமுறைப்படுத்த இயலாது. வெளியாரிடமும் இருந்து உதவிகள் பெற வேண்டிய தேவை அவசியம். ஆகவே முன்னோடி உதவி நிறுவனத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். மாதாந்தம் குறைந்தது பத்து டொலர்கள் அளவிலாவது, முழுமையாக தன்னார்வ அடிப்படையில், உதவி வழங்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளலாம். குமாரசாமி தன்னால் நூறு பேர்களை இணைக்க முடியும் என தெரிவித்திருக்கிறார். அதேபோல், மற்றவர்களும் தங்களுக்குத் தெரிந்தவர்களை முன்னோடி நிறுவனத்துடன் இணைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த மாதத்திலிருந்து எனது மாதாந்த உதவித் தொகையை ஏராளன் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்க உள்ளேன். மேலும், எனக்குத் தெரிந்தவர்களிடமும் இதுகுறித்து தெரிவிப்பேன். இந்தத் திட்டங்கள் அனைத்தும் வங்கிக் கணக்கில் சேரும் பொது நிதியின் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட வேண்டும். எனவே, தனிநபர் பொறுப்பாக அல்லாது, அனைவரும் இணைந்து பங்களிக்கும் கூட்டு முயற்சியாக இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும். குமாரசாமி, நான் பங்களிப்புடனேயே நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள், வாத்தியார் இருவரும் பேசித் தீர்மானிக்கலாம். ஒன்றும் அவசரமில்லை. நேரம் எடுத்து முடிவெடுங்கள். தற்சமயம் முன்னோடியின் முதல் திட்டத்தை ஆரம்பிப்போம். இணைந்து பயணிப்போம்.
  8. நான் மூன்றாம் வகுப்பு படித்த போது எனது பக்கத்து இருக்கையிலிருந்த இரு மாணவர்களுக்கிடையில் இவ்வாறான ஒரு பிரச்சினை இருந்தது. அந்த நாள் ஞாபகம், அறிவு வளராத பருவம்.
  9. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 84 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 84 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை மூத்தசிவனின் தந்தை பண்டுகாபயா பதினாறு முதல் இருபது வயதுக்குள் தனது மனைவி சுவண்ணபாலியைச் சந்தித்தார் என்றும் அவருக்கு முப்பது வயதில் மகன் மூத்தசிவன் பிறந்திருந்தார் என்றும் வைத்தால், மூத்தசிவன் தனது எழுபத்தேழு வயதில் அரியணை ஏறியிருப்பார். பின்னர் அவர் நூற்று முப்பத்தேழு வயது வரை, [அறுபது ஆண்டுகள்] ஆட்சி செய்திருக்க வேண்டும். மூத்தசிவனுக்கு பத்து மகன்கள் இருந்தனர், அசேலன் ஒன்பதாவது மகன். மூத்தசிவனுக்கு ஐம்பது வயதாக இருந்தபோது அசேல பிறந்திருந்தால், அசேல நூற்று எண்பத்தொன்பது வயது வரை, 137-50 + 40 + 10 + 10 + 10 + 22 + 10 = 189 வரை வாழ்ந்திருப்பார். இந்த விபரங்கள் விரிவாக முழுமையாக முன்பே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, மற்றும் பல நம்பமுடியாத நிகழ்வுகளாலும் விஜயன் முதல் அசேல வரையிலான மன்னர்கள் நிச்சயமாக உண்மையான மன்னர்கள் அல்ல என்பது மிகவும் தெளிவாகிறது. மேலும் அவர்களின் பல ஆட்சிகள் நம்பமுடியாத அளவிற்கு நீண்ட ஆட்சிகளைக் கொண்டவை. விஜயனின் வருகையை புத்தரின் மரணத்துடன் ஒத்திசைக்க வரலாற்றாசிரியர்கள் ஆர்வமாக இருந்ததால், அந்த நடவடிக்கையின் காரணமாக, இது ஏற்பட்டிருக்க வேண்டும்? அதேவேளை புத்தரின் மரணத்தையும், அதாவது மரண திகதியையும் தவறாகப் புரிந்து கொண்டு இருக்க வேண்டும். இவை எல்லாம் முழுவிபரமாக, விரிவாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, இலங்கை நாளாகமங்களின்படி, அசோகரின் முடிசூட்டுக்கு சுமார் இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, புத்தர் இறந்தார். அதேவேளை, இந்திய மரபுகளின்படி, அசோகரின் முடிசூட்டுக்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு புத்தரின் மரணம் நடந்திருக்க வேண்டும். இந்த நிகழ்வு இந்தியாவில் நடந்தது, மேலும் இந்திய தரவுகளை விட இலங்கை நாளேடுகளை நம்பகமானதாகக் கருதுவதற்கு எந்த சரியான காரணமும் இல்லை. இந்த அத்தியாயத்தின் சுமார் அறுபது சதவீதம், மன்னன் எல்லாளனின் சிறப்புகளைப் பற்றிப் பேசுகிறது 21 - 13 முதல் 34 வரை பார்க்கவும். எங்கள் கீழ்நிலைப் பள்ளிகளில் இதே போன்ற நிகழ்வுகளைப் பற்றி நாங்கள் படித்துள்ளோம். மன்னனுடைய மகன் கவனக் குறைவாக ஒரு கன்றின் கழுத்தில் தேரை ஓட்டியதும், தாய்ப் பசு, அதன் காரணமாக, நீதி கேட்டு, கயிற்றை இழுத்தது மணி அடித்தது என்றும், இதனால், மன்னன் தன் சொந்த மகன் மீதே தேர் சக்கரத்தை செலுத்தி தண்டனை வழங்கினான் என்று நாங்கள் எங்கள் ஐந்தாம் அல்லது ஆறாம் வகுப்புகளில் படித்தோம். இருப்பினும் இங்கு மன்னன் எல்லாளன் அல்ல. அது மனுநீதி கண்ட சோழன் [Manuneethy Kannda Cholan]. அது போல, எல்லாளனின் கதையில் வரும் நெல்லை உலர்த்தும் ஒரு வயதான பெண்மணியின் கதையையும் இதே மன்னரின் கதையில் காண்கிறோம். மேலும், எல்லாளன் கதையில் வரும், பாம்பு மற்றும் இளம் பறவைக்கு ஒத்த ஒரு சம்பவம், வேறு வழியில் மற்றொரு மன்னன் சிபி சக்கரவர்த்தி [King Shibi] கதையில் காண்கிறோம். இதுவும் நாங்கள் அதே வகுப்புகளில் படித்தோம். தமிழ் நாட்டு நாளாகமம்களுக்கும் மற்றும் இலங்கை நாளாகமம்களுக்கும் இடையில் பல பொதுவான இழைகள் [நிகழ்வுகள்] பின்னிப் பிணைவதைக் இங்கு காண்கிறோம். சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவகற்காக இங்கு வந்த, உயர் குடியில் பிறந்த, தமிழன் எல்லாளன், அசேலனத் தோற்கடித்து நாட்டைப் பிடித்து நாற்பத்து நான்கு வருடம் ஆண்டான். (அவன்) எதிரிகள், நண்பர்கள் என்ற பேதம் இன்றி, நீதியின் முன் எல்லோரையும் சமமாக நடத்தி வந்தான். அவன் படுக்கும் [சயன] அறையில், தலைக்கு மேலாக ஒரு மணி நீண்ட கயிற்றுடன் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது. அவனிடம் நீதி கோரி வருபவர்கள் அந்த மணியை அடிக்கலாம். அரசனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் மட்டுமே இருந்தனர். ஒரு சமயம் ராஜகுமாரன் ரதத்தில் திஸ்ஸா வாவிக்குச் [Tissa-tank] சென்று கொண்டிருந்தான. அப்போது தாய்ப் பசுவுடன் வீதியில் படுத்திருந்த கன்றின் கழுத்தில் தேர்ச் சக்கரத்தை ஏற்றி, அறியாமல் அதனைக் கொன்று விட்டான். துக்கம் தாளாது பசு அரண்மனைக்கு வந்து மணியை அடித்தது. தன் மகனுடைய கழுத்தின் மீது தேரை ஓட்டி, அரசன், தலையைத் துண்டிக்கச் செய்தான். பனைமரத்தில் அமர்ந்திருந்த பறவைக் குஞ்சு ஒன்றைப் பாம்பு ஒன்று விழுங்கி விட்டது. தாய்ப் பறவை ஓடி வந்து மணியை அடித்தது. அரசன் அந்தப் பாம்பைத் தன் முன்பு கொண்டு வரச்செய்தான். அதன் வயிற்றைக் கீறிக் குஞ்சை வெளியே எடுத்த பின்பு, அதை மரத் தின் மீது தொங்கவிட்டான். ஒரு கிழவி வெயிலில் அரிசியைக் காயப்போட்டிருந்தாள். பருவமில்லாத காலத்தில் வானம் மழையைப் பெய்து அரிசியை நனைத்து விட்டது. அவள் அரிசியை எடுத்துக் கொண்டு போய் மணியை அடித்தாள். பருவமில்லாத காலத்தில் மழை பெய்ததை அறிந்த மன்னன் கிழவியை அனுப்பிவிட்டான். "அரசன் நீதியுடன் நடந்தால் உரிய பருவத்தில் தானே மழைபெய்ய வேண்டும்?' என்று எண்ணியவனாக, இதுபற்றி முடிவு செய்வதற்கு உண்ணுவிரதத்தை மேற்கொண்டான். அரசனுடைய விரதத்தினால் வெப்பம் தாங்காத அவனுடைய குலதெய்வம் இதுபற்றி நான்கு பெருந் தேவர்களிடம் தெரிவித்தது. * நான்கு பெரும் திசைகளை காக்கும் இவர்களை லோகபாலர்கள் என்பர். பிரம்ம லோகத்தில் இந்திரனுக்கு அருகில் எப்போதும் இருப்பவர்கள். தத்த ரதா, விருல்ஹகா, விபோக்கூடிா, வேஸ்வணு என்பது இவர்கள் பெயர். முறையே கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு திசைகளில் ஆட்சி செலுத்துபவர்கள்.அவர்கள் எல்லோருமாக சக்கனிடம் சென்றார்கள். சக்கன் [Sakka] பஜ்ஜூனனை [pajjunna, A devarāja, the god of rain] அழைத்து இனி உரிய காலத்தில் மட்டுமே மழை பெய்ய வேண்டுமெனக் கட்டளை இட்டான். அரசனுடைய குலதெய்வம் இதுபற்றி அவனிடம் தெரிவித்தது. அப்போது முதல் அவன் ஆட்சிக் காலம் முழுவதும் பகலில் மழை பெய்வது இல்லை. இரவில் மட்டுமே வாரம் ஒரு முறை வானம் மழை பெய்யும். இவ்வாறு நடுநிலையாக நீதியாக ஆட்சி செய்த எல்லாளனுக்கு களங்கம் ஏற்படுத்துவது போல, இருபத்தி மூன்றாவது அத்தியாயம் [படைவீரர்கள் திரட்டல்] என்ற பகுதியில் வசனம் 8 இல் இருந்து 10 வரை அமைந்துள்ளது? ........ அதிலிருந்து அவனை 'நந்தி மித்ரன்' [Nandhimitta] என்று அழைக்கலாயினர். பத்து யானைகளுடைய பலம் அவனுக்கு இருந்தது. அவன் வளர்ந்து பெரியவனுனதும் நகரத்துக்குச் சென்று மாமனிடம் பணியாற்றினான். தமிழர்கள் அப்போது தூபிகளையும் இதர புனித சின்னங்களையும் நாசப்படுத்தி வந்தனர். இந்தப் பலசாலி எதிரிகளைக் காலைப் பிடித்துக் கிழித்து எறிவது வழக்கம். அவன் எறிந்த சவங்களைத் தேவர்கள் மறைந்து போகும்படி செய்து வந்தனர் என்று இந்த பந்தி கூறுகிறது. இங்கே எல்லாளனின் ஆட்சிக் காலத்தில் தூபிகள் மற்றும் பிற புனித நினைவுச்சின்னங்கள் தமிழர்களால் சேதப்படுத்தப்பட்டன என்று குற்றச்சாட்டுகள் கூறப்படுவது முரண்பாடாக உள்ளது. தாய் பசு எப்படி வலியை அனுபவித்ததோ, அவ்வாறே தானும் அனுபவிக்க வேண்டும் என்று, தனது சொந்த தேரின் சக்கரத்தின் கீழ் தனது சொந்த மகனைக் கொன்ற ஒரு நீதியுள்ள மன்னன் இவன்! அது மட்டும் அல்ல, மன்னன் எல்லாளன், ஒரு முறை தற்செயலாக ஒரு தூபியை சேதப்படுத்தி விட்டான். இந்த தவறுக்காக அவன் உடனே இறக்க விரும்பினான். அத்தகைய மன்னன், தமிழனோ அல்லது தமிழனாக இல்லாவிட்டாலும், தனது குடிமக்கள் புனித நினைவுச் சின்னங்களை இழிவுபடுத்த அனுமதிப்பானா? கொஞ்சம் சிந்தியுங்கள்? இவை பிற்காலத்தில் துறவிகள் நகலெடுப்பதன் மூலம் செருகப்பட்ட செருகல்களாக இருக்க வேண்டும். [These must be later insertions by copying monks.] துறவிகள் ஒவ்வொரு நூறு முதல் இருநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓலை கையெழுத்துப் பிரதிகளை நகலெடுப்பார்கள். பல துறவிகள் நகலெடுக்க தனித்தனியான அத்தியாயங்கள் [discreet chapters] ஒதுக்கப்படுகின்றன. அந்தவேளையில், யாராவது ஒரு துறவி தனது நேர்மையற்ற செயலால் புத்த மதத்திற்கு பெரும் சேவை செய்வதாக நினைத்து இந்த முரண்பாடான கதையை புத்திசாலித்தனமாக செருகியிருக்கலாம்? இதேபோன்ற செயல்கள் பல அல்லது சில துறவிகளால் நூறு முதல் இருநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்திருக்க வேண்டும். இன்னும் ஒன்றையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நாளாகமம்கள் ஒன்றின் பின் ஒன்றாக எழுதும் பொழுது, அவ்வற்றின் போக்கு, எந்த திசையில் போகிறது என்பதை இலகுவாக, முக்கிய மூன்று நாளாகமம்களை அலசுவது மூலம் அறிந்து கொள்ளலாம். தீபவம்சம் தமிழர்களுக்கும் எதிரான எந்த பெரும் கருத்துக்களையும் கொண்டு இருக்கவில்லை. அதன் நோக்கம் புத்தமதத்துக்கு பெருமை சேர்ப்பது மட்டுமே. ஆனால் இரண்டாவதாக எழுதப்பட்ட மகாவம்சம், புத்த மதத்துக்கு பெருமை சேர்க்கிறோம் என்று தமிழர்களுக்கு எதிரான இனத்துவேசத்தையும் புகுத்தி இருப்பதை வெளிப்படையாக காண்கிறோம். அது மேலும் ராஜவலியாவில் அதிகரித்து இருப்பதை எவரும் மறுக்க முடியாது. அது மேலும் மேலும் இன்றைய வடக்கு கிழக்கு அல்லது தமிழ் மக்களின் நிலவரத்தில் எப்படி பாதிக்கிறது என்பதை எவரும் உணரலாம்! சொல்லித் தெரிய வேண்டியது இல்லை! Part: 84 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Asela is the ninth son of Mutasiva as per the Mahavamsa, 21 - 12. The Dipavamsa, however, indicates Asela as the eighth son of Mutasiva, 11 – 7 and 17 – 76 of the Dipavamsa. The Dipavamsa gives the order of Mutasiva’s sons twice in it. Mutasiva’s father, Pandukhabhaya met his consort Suvannapalli when he was between sixteen and twenty years of age. If he had his son, Mutasiva, when he was at about thirty years of age, then Mutasiva would have ascended the throne at the age of seventy-seven years. Then he must have ruledun til the age of One hundred and thirty seven. Mutasiva had ten sons, and Asela is the ninth son. If Asela were born when Mutasiva was fifty years of age, then Asela would have lived to the ripe age of one hundred and eighty nine, 137-50+40+10+10+10+22+10=189. It is very clear that the kings from Vijaya to Asela are definitely not real kings, and many of their reigns are with unreliably long reigns. This could be because that the chroniclers were anxious to synchronize the arrival of Vijay with the death of the Buddha and got the Buddha’s death wrong. The death of Buddha must have happened about one hundred years before the consecration of Asoka, as given in the Indian tradition, than two hundred and eighteen years as given the Lanka chronicles. The event took place in India and there is no valid reason to consider the Lanka chronicles as trustworthy in preference to the Indian data. About sixty percentage of this chapter speaks of the merits of king Elara, 21 – 13 to 34. We have studied about similar events in our lower schools. The incident of Elara’s son inadvertently running over the neck of a calf and the mother cow pulling the justice rope of Elara seeking justice, and the Elara’s act of running his chariot wheel over his own son is what we studied in our fifth or sixth grades. However, the king was Manuneethy Kannda Cholan, not Elara. An old woman drying her rice also attributed to this king. An incident similar to snake and the young bird is attributed to another king Ciby Chakaravatty. This also we studied in the same grades. There are many common strands running between Tamil Nadu and the Lanka chronicles, and it would be summarised elsewhere, even if the events were to be repeated for cohesive presentation. It is ironic that accusations are made in, 23 – 9, that thupas and other sacred memorials are damaged by Damilas during the time of Elara’s rule. Would a just king who killed his own only son under the wheel of his own chariot to suffer the same pain as the mother cow allow this? King Elara once inadvertently damaged a thupa, and wanted to die for this mistake. Would such a king allow his subjects, whether Damila or not, to desecrate sacred memorials? These must be later insertions by copying monks. Monks used to copy Ola manuscripts every one hundred to one hundred and fifty years. Many monks are assigned discreet chapters to copy. One such monk must have discreetly inserted this contradictory tale, thinking he was doing great service to the Buddhism by his dishonest act. Similar acts must have been in the process by many monks every one hundred to one hundred and fifty years. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 85 தொடரும் / Will follow துளி/DROP: 1981 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 84 https://www.facebook.com/groups/978753388866632/posts/33193965833585303/?
  10. நல்லதை சொல்லி எதிர்வு கூறும் பேராசியர்க்கே ...கிண்டலடிக்கும் யாழ்ப்பாணத்தான் ....அப்ப எப்படி இவர்களிடம் ...ஒற்றுமை மலரும் ....திருந்தாத இனம் நம் இனம் ....
  11. மதியிறுக்கம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட கவனம் - சுகாதார அமைச்சர் 08 Jan, 2026 | 04:09 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மதியிறுக்கம் (ஆட்டிஸம்) நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விசேட பாதுகாப்பு மத்திய நிலையங்களை நிர்மாணிப்பதற்கும், அவர்களுக்குரிய மருத்துவ வசதிகளை வழங்குவற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மாவட்ட மட்டத்தில் விசேட செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மதியிறுக்கம் (ஆட்டிஸம்) போன்ற நோய்களால் அவதியுறும் பிள்ளைகளை முன்கூட்டியே இனங்கண்டு அதற்கு சிகிச்சையளிக்கும் செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாணத்தில் 16 வைத்தியசாலைகள், தெற்கு மாகாணத்தில் 07 வைத்தியசாலைகள், சப்ரகமுவ மாகாணத்தில் 07 வைத்தியசாலைகள், வடமேல் மாகாணத்தில் 07 வைத்தியசாலைகள், வடமத்திய மாகாணத்தில் 02 வைத்தியசாலைகள், மத்திய மாகாணத்தில் 09 வைத்தியசாலைகள், ஊவா மாகாணத்தில் 02 வைத்தியசாலைகள், கிழக்கு மாகாணத்தில் 03 வைத்தியசாலைகள், வடக்கு மாகாணத்தில் 02 வைத்தியசாலைகள் என்ற அடிப்படையில் 55 வைத்தியசாலைகளில் குழந்தை மருத்துவ நிபுணர்கள் கடமையாற்றுகிறார்கள். இவ்வாறான வைத்தியசாலைகளில் ஆட்டிஸம் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்குதம் கிளினிக்குகள் இயங்கும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 20 ஆக காணப்படுகிறது. இந்த வைத்தியசாலைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும், ஏனைய வசதிகளையும் வழங்குவதற்கு 2025 ஆம் ஆண்டு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு மேலதிகமாக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நோயால் அவதியுறும் பிள்ளைகளை பாதுகாக்க விசேட பாதுகாப்பு மையங்கள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/235528
  12. அண்ணை, இந்தம்மா ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்துவதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர் கொழும்பு வர முதல் எங்கோ வாசித்தோ கேட்டோ இருக்கிறேன். அதே போல கோட்டா ஆட்சி மாறியது!
  13. கறுப்பு கை தானே தவிர உள்ளம் வெள்ளை என்பதை யாழ் அறியும் அண்ணை. வாங்கோ ஊர் கூடித் தேர் இழுப்போம்.
  14. ராஜதந்திரம் இவை கொஞ்சம் பழைய ஹெலிகள். அமெரிக்க கடற்படைக்கு புதியன வாங்கும் போது இதை கிளியரன்ஸ் உள்ளோருக்கு மட்டும் ஏலத்தில் குறைந்த விலைக்கே கொடுக்கலாம். டிட்வா புயலில் இலங்கையிடம் 3 ஹெலி மட்டும் இருந்தாதால் விரைந்து செயல்பட முடியவில்லை. இதை அறிந்துள்ள இலங்கை மக்கள்- இந்த 10 ஹெலியின் பின் அமெரிக்கா மீது கொஞ்சம் நல்லெண்ணம் அடைவர். திருத்தம், உதிரிபாகம் என அமெரிக்க நிறுவனம் தொடர்ந்து இலஙகையிடம் பணம் பார்க்கும். தொடர்ந்தும் இலங்கை விமானிகள் பயிற்ச்சிக்கென அமெரிக்கா போவார்கள், அவர்கள் வருவார்கள். இதன் மூலம் இலங்கை விமானப்படையின் அதிகார வர்க்கத்கை கையில் வைத்திருக்கலாம். தம்பரின் அதிரடி ராஜதந்திரத்துக்கு நேர் எதிரானது ஜூலியின் அணுகுமுறை. ஜூலி இனி எங்கே போகிறார் என்பது தெரியவில்லை - தம்பர் இருக்கும் மட்டும் இந்தவகை இராஜதந்திரிகள் முன்னிலை படுவது கடினமாகவே இருக்கும் என நினைக்கிறேன்.
  15. 28.86 கோடிக்கு ஏலம்போன புளூபின் டூனா (Bluefin Tuna)! இந்திய ரூபாய் என நினைக்கிறேன்.
  16. அதில ஒரு கை கடும் கறுப்பா இருக்கட்டும்
  17. SIVARANCHAN THEVAKUMARAN A/C:- 300131108781 National Savings Bank Chankanai Branch Swift Code:- NSBALKLX முழுப்பெயர் போட்டுள்ளேன். முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 - யாழ் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான அடிப்படைச் சுகாதார மேம்பாட்டிற்கான செயற்பாடுகள் என்ற பெயரில் பனர் ஒன்றும் அடித்தால் நல்லது, கீழுள்ளது போல இலச்சினை ஒன்றும் வடிவமைத்தால் சிறப்பாக இருக்கும். @goshan_che @valavan @நிழலி @இணையவன் @மோகன் அண்ணாக்கள் கவனத்திற்கு.
  18. அண்ணை, வெனிசுலா சம்பவத்தின் பின் கிரீன்லாண்ட் கைப்பற்றப்பட்டால் இலங்கையையும் அமெரிக்கா பிடிக்காதோ என தம்பி ஒருத்தன் கேக்கிறான்! போறபோக்கை பார்த்தால் நடந்தாலும் நடக்குமோ?!
  19. சேர் லூயிஸ் ஹமில்ரன் போர்முலா வன் கார்ப்பந்தய சாம்பியனின் இன்னுமொரு முகம்!
  20. இலங்கையில் இன்று நிலநடுக்கம் பதிவு Jan 8, 2026 - 06:54 PM கண்டி உடுதும்புர - தேவஹந்திய பகுதியில் இன்று (8) மாலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னிடுயிட்டாக உணரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் அறிவுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmk5hawq803p0o29nfh0w5ihk
  21. கு சா அண்ணை, ஒரு சின்ன தெளிவுபடுதலை வேண்டி நிற்கிறேன். நீங்கள் தனிமனிதனாக செய்யும் பங்களிப்புக்கு அப்பால் - முன்னோடிக்கான நிதி சேகரிப்பாளராகவும் நீங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்துகிறீர்கள் தானே? மற்றைய திரியில் எமது முதலாவது சம்பாசணையில் இதை சொன்னதன் பின் வேறு இடங்களில் இதை நாம் கதைக்கவில்லை என நினைக்கிறேன். இந்த முயற்சியில் மிக கடினமான பணிகளில் இது முதன்மையானது. அடுத்த கட்டத்துகு நகரும் போது, நாம் தனிநபர்களோ அல்லது யாழ் கள உறவுகளோ சேர்ந்து மட்டும் தேவைப்படும் தொகையை சேர்ப்பது கடினம். யாழுக்கு வெளியே இருந்தும் நிதி உதவிகள் வந்து சேரல் அவசியமாகும். திட்டம் தடையின்றி முன்செல்ல இந்த தெளிவு அவசியமாவதால் கேட்கிறேன். பிழை ஏதும் இருப்பின் மன்னித்தருள்க.
  22. மதில் உடையாமல் மெதுவாக காலடி எடுத்து வைத்து போகிறது.
  23. அண்ணோய் இனிமேல் சண்டை எம்மண்ணிலோ கடலிலோ வானிலோ வேண்டாம்.
  24. இது உங்கள் பாவனைக்கு இல்லை. சீனாவுக்கு எதிரான போரின் போது அமெரிக்கா பாவிப்பதற்கே.
  25. படக்காட்சியல்ல! சேவல் 3 லட்சமா? மதிற்சுவரை தாண்டும் யானை!
  26. ஓ அப்பிடி வேற நடக்குதா. போற போக்கில, வங்காள அணியினால், குழப்பங்கள் வரும் போல. ஐசீசீ என்ன செய்யப் போகிறதோ.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.