stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
இந்தியா - நியூசிலாந்து ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்
வீணான கே.எல். ராகுல் சதம் – நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,Getty Images 14 ஜனவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. 285 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 47.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குறிப்பாக நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 131 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இப்போது இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம், இந்த ஒருநாள் தொடரில் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. டாஸ் வென்ற நியூசிலாந்து பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுப்மன் கில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர். இவர்கள் இருவரும் மிகவும் பொறுமையாகவே ஆட்டத்தை தொடங்கினர். முதல் 5 ஓவர்களில், இந்த ஜோடி 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்த 5 ஓவர்களில் 47 ரன்கள் எடுத்து சற்றே நம்பிக்கை அளித்தனர். 12வது ஓவரில் கிறிஸ்டின் கிளார்க் வீசிய பந்தில் வில் யங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரோஹித் சர்மா. அவர் 38 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அடுத்து விராட் கோலி களமிறங்கினார். மறுமுனையில் பொறுமையாக ஆடி, அரைசதம் கடந்த கேப்டன் சுப்மன் கில், 16வது ஓவரில் 56 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அடுத்ததாக, விராட் கோலி- ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்று கவனத்துடன் ஆடியது. இந்திய அணி 17 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. ஆனால், 21வது ஓவரில் கிறிஸ்டின் கிளார்க் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார் ஷ்ரேயாஸ். அவர் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கே.எல்.ராகுல் 22 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து, 117 ரன்களுடன் இந்திய அணி தடுமாறியபோது கே.எல்.ராகுல் களமிறங்கினார். விராட் கோலி 23 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 27 ரன்கள், நிதிஷ் ரெட்டி 20 ரன்கள், ஹர்ஷித் ராணா 2 ரன்கள் என இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த போதும், அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் 92 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் முன்னணி வீரர்கள் மிக விரைவாக ஆட்டமிழந்த நேரத்தில் அவரது இந்த சதம் அணிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இந்திய அணி 50 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 112 ரன்களுடனும், முகமது சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி வெற்றிபெற 285 ரன்கள் தேவை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நியூசிலாந்து அணியின் கிறிஸ்டின் கிளார்க் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். டேரில் மிட்செலின் அதிரடி சதம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. 285 ரன்கள் என்ற இலக்குடன், நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவன் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிவந்த கான்வே, 5வது ஓவரில் ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் வில் யங் களமிறங்கினார். நிதானமாக ஆடி, ரன்களை உயர்த்திய நிக்கோல்ஸ்- வில் யங் ஜோடி 12வது ஓவரில் பிரிந்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில், நிக்கோல்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த டேரில் மிட்செல்- வில் யங் ஜோடி, சிறப்பாக ஆடி நியூசிலாந்து அணி 200 ரன்களைக் கடக்க உதவியது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த கூட்டணியை உடைக்க பெரிதும் போராடினர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டேரில் மிட்செல் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த வில் யங், 37வது ஓவரில் நிதிஷ் ரெட்டி வீசிய பந்தில், குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 98 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்தார். மறுமுனையில் 88 ரன்களுடன் மிட்செல் களத்தில் இருந்தார். அதன் பின்னர், க்ளென் பிலிப்ஸ் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய டேரில் மிட்செல் 96 பந்துகளில் சதமடித்தார். இறுதியாக 47.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. டேரில் மிட்செல் 131 ரன்களுடனும் க்ளென் பிலிப்ஸ் 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணியின் ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gl865dkgko
-
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / [பத்து பகுதிகள்]
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 4 🏖️ பாகம் 04 – அல் மர்ஜான் தீவிலுள்ள உல்லாச விடுதி மற்றும் ஸ்பா [அரோக்கிய நீரூற்று] வை தன்னகத்தைக் கொண்ட 'டபுள் ட்ரீ ஹோட்டல்' [DoubleTree by Hilton Resort & Spa, Marjan Island] கடலுக்குள் 4.5 கி.மீ நீளமுள்ள அல் மர்ஜன் தீவு என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட தீவுக்கூட்டத்தில் உள்ள 4 பவள வடிவ தீவுகளின் குழுவாகும். அது மட்டும் அல்ல, இது ஒரு அருமையான சுற்றுலா தலங்கள் கொண்ட இடமாகும். இங்குதான் 'டபுள் ட்ரீ ஹோட்டல்' அமைந்துள்ளது. தாத்தாவும் மூன்று பேரன்களும் 'டபுள் ட்ரீ ஹோட்டல்' [DoubleTree by Hilton Resort & Spa, Marjan Island] என்ற அழகிய விடுதிக்குச் சென்ற தருணத்தில், குழந்தைகள் ஒரு கனவில் அடியெடுத்து வைத்தது போல் உணர்ந்தனர். தங்க மதிய வெயிலின் பொற்கதிரில், உல்லாச விடுதி மின்னியது, அதன் வெள்ளை கட்டிடங்கள் மின்னும் குளங்களால் சூழப்பட்டு இருந்தன. அங்கு சூழப்படிருந்த பசுமையான தோட்டங்கள் காற்றில் மெதுவாக ஆடின. இவைகளைக் கண்டு பரவசம் அடைந்த நிலனின் கண்கள் விரிந்தன. “தாத்தா ... தண்ணீர் எல்லாம் இருக்கு பாருங்க! கடற்கரையும் இருக்கு!” என்று கூறி, மணல் கரையில் மோதிய நீல நிற அலைகளை சுட்டிக் காட்டி அவன் கூச்சலிட்டான். திரேன், ஏற்கனவே தனது சிறிய துணிமணி பெட்டியை இழுத்துக் கொண்டு முன்னால் ஓடிக் கொண்டிருந்தான், அதே நேரத்தில் குழந்தை ஆரின் அலைகளின் சத்தத்தால் கவரப்பட்டு மகிழ்ச்சியில் கதறினான். "வரவேற்கிறோம் , குட்டி சாகசக்காரர்களே!" ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை அன்புடன் வரவேற்றனர். புதிதாக சுடப்பட்ட பிரபலமான டபுள் ட்ரீ சாக்லேட் சிப்ஸ் குக்கீகள் [DoubleTree chocolate chip cookies] ஒரு தட்டில் வைத்து பரிமாறினார்கள். குழந்தைகள் மூவரும் அவற்றை முதல் கடித்து உண்ணும் போது அவர்களின் கண்கள் மின்னின. "ம்ம்ம்... மாயாஜால மந்திரக் குக்கீகள்!" நிலன் சொன்னான். அப்பொழுது சிறு துண்டுகள் உடைந்து அவன் மேல் சட்டையில் விழுந்தன. தாத்தா அதைக் கண்டு சிரித்தார். கடற்கரை மற்றும் நீச்சல் தடாகம் போன்றவற்றை நோக்கிய பால்கனியுடன் [balcony] கூடிய விசாலமான அறையில் தங்கிய பிறகு, தாத்தா மற்றும் குழந்தைகள் ஜன்னல்களுக்கு விரைந்தனர். நிலன் தனது கைகளை கண்ணாடியின் மீது அழுத்தி, சிறிய நண்டுகள் மணலில் வேகமாக ஓடுவதைப் பார்த்தான், அதே நேரத்தில் திரேன் தண்ணீரை நோக்கி டைவிங் [குதித்து நீந்துவது / diving] செய்யும் இரண்டு கடற்பறவைகளைக் [seagulls] கண்டான். மென்மையான காற்று அவன் தலைமுடியை அசைக்கும் போது, குழந்தை ஆரின் கூட மகிழ்ச்சியுடன் கைதட்டினான். அடுத்த சாகசம் வெளியே கடற்கரையில்தான்: மணல் கோட்டை கட்டுதல். தாத்தா ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறிய வாளி மற்றும் மண்வெட்டியைக் கொடுத்தார். "இன்று, அல் மர்ஜன் தீவில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய கோட்டையை நாங்கள் கட்டுகிறோம்," என்று தாத்தா உற்சாகமாகச் சொல்லி, குனிந்து மணலை அள்ளினார். குழந்தைகளின் கற்பனைகள் கட்டுக்கடங்காமல் ஓடியது. நிலன் உயரமான கோபுரங்களைச் செதுக்கி, அவற்றைச் சுற்றி அகழிகளைச் செதுக்கினான். கடல் சிப்பிகளை அலங்காரமாக வைத்தான். அதே நேரத்தில் திரேன் பாலங்கள் மற்றும் ரகசிய சுரங்கப்பாதைகளை செதுக்கினான். அதன் பின் தாத்தாவும் சேர்ந்து, சுவர்களை வடிவமைத்து, சிறிய ஜன்னல்களை செதுக்கினார், அதே நேரத்தில் ஆரினின் சிறிய கைகள் மணலை நசுக்கி, மகிழ்ச்சியான "ஸ்ப்ளோஷ்" "ஸ்ப்ளோஷ்" [“splosh”] ஒலிகளை எழுப்பினான். விரைவில், இலைகள் மற்றும் கடல் ஓடுகளால் [seashells] ஆன கொடிகளுடன் கூடிய ஒரு கம்பீரமான மணல் கோட்டை கடற்கரையின் ஓரத்தில் பெருமையுடன் நின்றது. மணல் கோட்டைகளுக்குப் பிறகு, நீச்சல் குளத்திற்குள் சென்று தண்ணீரில் விளையாடுவது, நீந்துவது அல்லது தண்ணீரைச் சிதறடித்து விளையாடுவது என்று தாத்தா முடிவெடுத்து, மூன்று பேரன்களுடனும் அங்கு சென்றார். நிலனும் திரேனும் ஆழமற்ற பகுதியைக் கடந்து கொஞ்சம் ஆழமான பகுதிக்கு பாய்ந்து நீந்த ஓடினர். ஒவ்வொரு முறையும் தண்ணீர் முகத்தில் தெறிக்கும்போது சிரித்தனர். மிதக்கும் வளையத்தில் [floating ring] பாதுகாப்பாக அமர்ந்திருந்த ஆரின், ஒவ்வொரு சிறிய அலையையும் பார்த்து சிரித்தான். தாத்தாவும் அவர்களுடன் சேர்ந்து, சிறிய நுரை பந்துகளை [foam balls] வீசி, விளையாட்டுத்தனமான நீர் சண்டைகளை உருவாக்கினார், இது குழந்தைகளை மகிழ்ச்சியுடன் சத்தம் போட்டு சிரிக்க வைத்தது. கதிரவன் கீழே இறங்க, உல்லாச விடுதி மீது தங்க நிற பிரதிபலிப்புகள் வீச, தாத்தாவும் மூன்று பேரன்களும் கடற்கரையில் நடந்து சென்றனர். தாத்தா சிறிய நட்சத்திர மீன்களையும், இதய வடிவிலான ஓடுகளையும், பக்கவாட்டில் சிதறிக் கிடந்த ஒரு நண்டையும் சுட்டிக்காட்டினார். இது நிலனுக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. "இது ஒரு புதையல் வேட்டை போன்றது!" என்று அவன் ஒரு பளபளப்பான கடல் ஓடு [seashell] ஒன்றை எடுத்துக் கொண்டு கூச்சலிட்டான். அன்று மாலை, உல்லாச விடுதி [resort] அவர்களுக்கு ஒரு சிறப்பு ஆச்சரியத்தை அளித்தது - அது ஒரு குக்கீ அலங்கார ஏற்பாடு [a cookie-decorating session]. குழந்தைகளுக்கு இன்னும் மென்மையாகவும் சூடாகவும் உள்ள, அடுப்பிலிருந்து உடன் வெளியே வந்த குக்கீகள் அவை. குக்கீகளை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் பிரகாசமான வண்ணங்களில் (சிவப்பு, நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு போன்ற) அடர்த்தியான, இனிமையான ஐசிங் [colorful icing] மற்றும் சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள், ஊதா போன்ற, கற்பனை செய்யக்கூடிய சாத்தியமான அனைத்து வண்ணங்களிலும் சிறிய மிட்டாய் மேல்புறங்கள் அல்லது மேல் வண்ணமிடல் [tiny candy toppings] வழங்கப்பட்டன. நிலன் அவர்களின் முன்னைய மணல் கோட்டை மாதிரி ஒரு குக்கீ கோட்டையை உருவாக்கினான். அதை பாதுகாக்க திரேன் ஒரு குக்கீ டிராகனை [cookie dragon] உருவாக்கினான். மேலும் ஆரினின் சிறிய குக்கீ எளிய புள்ளிகளால் அலங்கரிக்கப்பட்டு, அங்கே ஒரு சிரிப்பின் தடயத்தை விட்டுச் சென்றது. இறுதியாக, இரவு வந்தபோது, தாத்தாவும் பேரன்களும் தங்கள் பால்கனிக்குத் திரும்பி, தண்ணீருக்கு மேல் நட்சத்திரங்கள் மின்னுவதைப் பார்த்தார்கள். அலைகளின் மென்மையான சத்தம் ஒரு தாலாட்டுப் பாடலைப் போல இருந்தது, குழந்தைகள் தாத்தாவை நெருங்கி அணைத்துக் கொண்டனர், அவர்களின் சிறிய இதயங்கள் மகிழ்ச்சியாலும் சாகசத்தாலும் நிறைந்திருந்தன. “தாத்தா... நாம் இங்கே என்றென்றும் தங்கலாமா?” நிலன் கொட்டாவி விட்டபடி கிசுகிசுத்தான். என்றாலும் அவன் இன்னும் உற்சாகமாக இருந்தான். தாத்தா அவனை நெருங்கி அணைத்துக் கொண்டு சிரித்தார். "நாளைக்கு, இன்னும் பல சாகசங்கள் காத்திருக்கின்றன. ஆனால் இன்றிரவு, அரண்மனைகள், குக்கீகள் மற்றும் அல் மர்ஜன் தீவின் மாயாஜாலத்தைக் கனவு காண்போம்." என்றார். அதனால், மின்னும் நட்சத்திரங்களின் கீழ், மூன்று சிறிய சாகச வீரர்கள், மர்ஜான் தீவின் மென்மையான அலைகளின் ஒலியிலும் நட்சத்திரங்களின் ஒளியிலும் - வானத்தை எட்டிய மணல் கோட்டைகள், ஒருபோதும் முடிவடையாத சாக்லேட் குக்கீகள் மற்றும் முடிவற்ற சாகசங்களின் ரகசியங்களை கிசுகிசுக்கும் அலைகள் பற்றிய கனவுகளில் - முடிவில்லா மகிழ்ச்சியுடனும் இனிய நினைவுகளுடனும் திளைத்தனர். ✨ நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 05 தொடரும் துளி/DROP: 1995 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 4 https://www.facebook.com/groups/978753388866632/posts/33293662250282327/?
- Today
-
15 / 01 / 2026 : "84வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு அண்ணா" / "Happy 84th Birthday, dear elder brother"
15 / 01 / 2026 : "84வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு அண்ணா" / "Happy 84th Birthday, dear elder brother" 84வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு அண்ணா! கலாநிதி கந்தையா சுந்தரலிங்கமே! ஒளிரும் விண்மீனே! எங்கள் நேசத்துக்குரிய அத்தியடியின் வாரிசே புகழ் சூழ பெருமையுடன் வாழ்ந்தவரே! யாழ் மத்திய கல்லூரியில் வேர்கள் நாட்டப்பட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் வளர்ந்து மலர்ந்து டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஞானப் பழமாகி அறிஞன் வாழ்க்கை ஒளிர்ந்து வீசியதே! இயற்பியல் விரிவுரையாளராக கனிந்த பழமாகி சரியான இடத்திற்கு மாணவர்களை வழிநடத்தி மெல்போர்னில் பெருமையுடன் ஓய்வு பெற்றவரே! ஞானம் நிறைந்த வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதே! உங்கள் இரக்கமும் நகைச்சுவையும் ஆறுதல் தர எங்கள் இதயங்களில் பிரகாசமாக இருப்பவரே! எண்பத்தி நான்கு ஆண்டு அன்பும் மகிழ்ச்சியும் நேர்மையான ஆன்மாவின் நலமான வாழ்வே! உவகை மலர மகிழ்வு பெறுக கொண்டாடுகிறோம் ஒரு சகோதரர், ஒரு வழிகாட்டி, ஒரு கலங்கரை விளக்கை! ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் என்றென்றும் இருக்கட்டும் அன்புள்ள அண்ணா அகவை திருநாள் வாழ்த்துக்கள்! அன்புடன் தம்பி 'கந்தையா தில்லைவிநாயகலிங்கம் & குடும்பம்' Happy 84th Birthday, dear brother of mine, Dr. Kandiah Sundarlingam, a star that shines. Born in Athiady, our cherished hometown, Your journey through life brings you renown. From Jaffna Central, your roots were laid, At Colombo’s halls, your brilliance displayed. Durham’s towers saw your wisdom grow, A scholar’s path, a radiant glow. A Physics lecturer of honor and grace, Guiding students to a brighter place. In Melbourne now, your well-earned rest, A life of wisdom, truly blessed. Your kindness and humor, a comforting light, In our family’s hearts, forever bright. Eighty-four years of love and cheer, A life well-lived, a soul sincere. So today we celebrate, with joy and delight, A brother, a mentor, a guiding light. May health and happiness forever stay, Happy Birthday, dear Anna, on this special day! With love and admiration, Thampi 'Kandiah Thillaivinayagalingam & family ' 15 / 01 / 2026 : "84வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு அண்ணா" / "Happy 83rd Birthday, dear elder brother" https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam/posts/pfbid028uckL9HBVU3ULzV2wmRfr1iDJxzvftb7ZUcBWFwK3vswXhfDa3NpVNK86dQ2jGhdl?
-
சிரிக்கலாம் வாங்க
- "தமிழர் திருநாள் தைப் பொங்கல் வாழ்த்துக்கள்! Our warm Thai Pongal wishes to you and your family !!"
"தமிழர் திருநாள் தைப் பொங்கல் வாழ்த்துக்கள்! Our warm Thai Pongal wishes to you and your family !!" கி மு 500 ஆம் ஆண்டு புறநானுறு / 500 BC old, Purananuru 172 Says: "ஏற்றுக உலையே! ஆக்குக சோறே!''கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக " "Set the pot on the stove!Cook the rice!Do not stint on toddy!Let the viralis[female artists] with gleaming jewels who are skilled in singing,wear garlands!" இருநூறாம் நூற்றாண்டு சிலப்பதிகாரம் / 200 AD old, Silappathikaram 5;68-69 Says: “புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து'' On the day on which the moon approached the cittirai star in the month of cittirai (i.e. on the full-moon day) the sacrifice of boiled grains, sweetened sesame balls, meat mixed with rice, flowers, incense, and toddy was offered தொள்ளாயிரம் ஆண்டு சீவகசிந்தாமணி / And 900 AD old, Seevaga Chinthamani-1821 Says: “மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்'' The sweet milky rice is boiling in the new mud pot over the red fireplace "முருகிற்கு அழகு சேர்த்த தையே பெருவிழா காண என்னை அழைத்தாயோ? தை பிறந்தால் வழிபிறக்கும் என்று தைரியம் காட்டி என்னைக் கூப்பிட்டாயோ? தைத்து புத்தாடை எல்லோரும் அணிய தையல் பொங்கும் பொங்கலோ பொங்கல்!” As the harvest moon shines bright, Thai Pongal arrives, filling hearts with pure delight. Fields adorned with sugarcane, turmeric, and rice, A festival of gratitude, a moment so nice. Sun's golden rays paint the morning sky, A symbol of prosperity, as the birds joyfully fly. Pongal pot overflows with abundance and cheer, May this auspicious day bring happiness near. (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் குடும்பம் அத்தியடி, யாழ்ப்பாணம்) (Kandiah Thillaivinayagalingam & family , Athiady, Jaffna) "தமிழர் திருநாள் தைப் பொங்கல் வாழ்த்துக்கள்! Our warm Thai Pongal wishes to you and your family !!" https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam/posts/pfbid02mHLanWtXaHFk59SuikHzt9wFRCqNZi4iifwTU7ubHfKeSG19eUnUM2gpNHhGXednl?- பொங்கல் சிரிப்புகள்.
- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மோகன் அண்ணா குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்- அச்சமும், தப்பியோடும் விருப்பும் மரியாதைக்குரியது : சயந்தன்
அச்சமும், தப்பியோடும் விருப்பும் மரியாதைக்குரியது : சயந்தன் அனோஜன் பாலகிருஷ்ணன் கேள்வி: ஆறாவடு வெளியாகி சில வருடங்கள் கழித்து, ஆதிரை வெளியாகியது. அதன் பின்னர் கணிசமான காலம் கழித்து அசேரா, மீண்டும் நீண்ட காலம் கடந்து ‘திசை ஒன்பது’ வெளியாகிறது. நாவல்கள் எழுதப்படுவதற்கு இடையிலான பருவங்கள் அதிகமாகவே உங்களுக்கு இருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலங்கள் உங்களுக்கு எவ்வாறு கழியும், என்ன வகையான தொந்தரவுகளை எதிர்கொள்வீர்கள் ஒரு எழுத்தாளராக? பதில்: நாவல்கள் மட்டுமல்ல, பொதுவாக நான் எழுதுவதே அதிக கால இடைவெளியைக் கொண்டிருக்கிறது. கடைசியாக பூரணம் சிறுகதையை 2019இல் எழுதிய பிறகு இன்னொரு சிறுகதையை இன்னமும் எழுதவில்லை. நாவல்களுக்கிடையிலும் கிட்டத்தட்ட 5 ஆண்டுகால இடைவெளி உண்டு. இடைப்பட்ட காலங்களில் தொந்தரவெல்லாம் இல்லை. எழுத்தை தலையிலே சுமந்தபடி இறக்கிவைக்க முடியாத அவஸ்தையிலும் தத்தளிப்பிலும் சிக்கினேன், அதை உருவாக்கும் வேதனையில் உழன்றேன் என்றெல்லாம் சொல்லும்படியாக எழுத்தை நான் ‘அந்தளவுக்கு’ ரொமான்டிசைஸ் செய்யவில்லை. அப்ப நான் ஏன் எழுதுகிறேன்… என்றால் எழுதுவது எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால் எழுதுகிறேன். அதை எனக்குப் பிடித்த மாதிரி எழுதுகிறேன். வாசிப்பவர்களுக்கும் பிடித்தால் மகிழ்கிறேன். அவ்வளவுதான். எழுத்தென்றல்ல, எல்லா இலக்கியச் செயற்பாடுகளும் எனக்கு விருப்பமானவையே… எழுதாத நேரங்களில் அப்படியொன்றில் ஈடுபடுவேன். வாசிப்பேன். மொழிபெயர்ப்புகளில், குறிப்பாக ஆபிரிக்க எழுத்துகளில் ஆர்வம் உண்டு. இப்ப கொஞ்சக்காலமாக தமிழிலிருந்து சிங்களத்துக்குக் கொண்டுசெல்கிற வேலைகளை விரும்பிச் செய்கிறேன். சிங்களப் புத்தகங்களைப் பதிப்பிக்கிறேன். எதுவுமில்லையென்றால் ஆகக் குறைந்தது அகழ் இணையத்தின் லேஅவுட் டிசைனை மாற்றுகிறேன் பேர்வழி என்று எதையாவது நோண்டுவேன். அதுவும் ஒருவகையில் இலக்கியச் செயற்பாடுதானே…நாவல்களுக்கிடையில் ஐந்து ஆண்டுகள் என்று சொன்னேன்…அதில் எழுதும் காலமும் அடக்கம். ஆதிரைக்கு மூன்று ஆண்டுகள். திசை ஒன்பதுக்கு இரண்டு ஆண்டுகள். அப்படிப் பார்த்தால் நான் கொஞ்சம் ஸ்லோதான். அதுவொன்றும் பெரிய பிரச்சனை இல்லைத்தானே.. கேள்வி: ஒவ்வொரு நாவலுக்கும் நீங்கள் பயன்படுத்தும் மொழி வித்தியாசமானது. ஆறாவடு வில் இருந்த துள்ளலான நடை, ஆதிரையில் இருக்காது. அஷேராவில் வேறு மாதிரி. திசை ஒன்பது நாவலில், மீண்டும் ஆறாவடுவில் பார்த்த நடையை உணர இயல்கிறது. நாவலின் கரு, மொழியைத் தேர்வு செய்கிறதா? அல்லது மொழிக்காக நாவலின் கருக்களைப் பெறுகிறீர்களா?, சுருக்கமாகக் கேட்டால், வடிவத்தை நோக்கி நீங்கள் செல்கிறீர்களா அல்லது வடிவம் உங்களை நோக்கி வருகிறதா? பதில்: பார்ப்பதற்கு அப்பாவி போல இருக்கும் இவர்… என்றுதான் தொடங்க வேண்டும். உங்களுக்கே தெரியும், கேலியும் கிண்டலும், நக்கலும் நையாண்டியும் counter பகிடிகளும்தான் என்னுடைய இயல்பு. ஆறாவடுவில் அது அழகாக வெளிப்பட்டது. ஆறாவடுவை புறவயமான சம்பவங்களுக்கூடாக, பாத்திரங்களின் அகத்தைத் தொடாமல், அதை விசாரணை செய்யாமல் எழுதி இருந்ததால் அந்த மொழி பொருத்தமாக வசப்பட்டிக்கக் கூடும். முகத்துக்கு நேரே நீட்டப்பட்டிருக்கும் துவக்கிலிருந்து சீறி வெளியேறும் சன்னம் நெற்றியைத் தொடுமுன்னர் மனதில் அலைஅலையென எழும் எண்ணங்களை பத்துப் பக்கங்களுக்குக் குறையாமல் எழுதலாம் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அதற்குப் பிறகு ஆதிரை. அது மாபெரும் துயரக்கதை. ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்களின் கதைகளைச் சொல்லும்போது சிரித்துவிளையாட முடியாது. அது அறமும் இல்லை. அதேபோல அஷேராவும் பிறழ்வடைந்த மனங்களின் கதை. ஆங்காங்கே கறுப்புப் பகிடிகள் இடப்பெற்றாலும் அந்த மொழியும் தீவிரமானது. திசை ஒன்பது கதையாகத் திரண்டபோதே, அது கோர்த்துச் செல்கிற சம்பவங்கள் கற்பனையில் விரிந்தபோதே, இதற்குத் தீவிரமற்ற கொஞ்சம் பகிடியான மொழி போதும் என்றும் தோன்றிவிட்டது. ஆழத்தில் எங்கோ ஒரு நெஞ்சடைப்பை உணரமுடிந்தாலும் திசை ஒன்பது பெரும் துயரோ கடும் வலியோ கொண்ட ஒன்றல்ல. அதே நேரம், துப்பாக்கிச் சன்னம் நெற்றியைத் தொடுவதற்கிடையில் பத்துப் பக்கங்களுக்கு மனம் அலைபாயவும் செய்கிற கதை. இப்போதெல்லாம் புறச் சம்பவங்களை விட்டுவிட்டு மனித மனங்களை நெருங்கி ஆராய்ந்து எழுதுவது கிளர்ச்சியாக இருக்கிறது. கதை மாந்தர்களுடைய மூளையை நான் எழுத்தால் துப்பறிவதுபோன்ற ஓர் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு விதத்தில் ஆதிரைக்கும் அஷேராவுக்கும் பிறகு குண்டு வெடிக்காத கதையொன்றை எழுதவும் விரும்பியிருந்தேன். அதனாலும் திசை ஒன்பதை எழுதினேன். உங்களுடைய கேள்விக்கான பதில் – எழுதும் கருவே மொழியைத் தெரிவு செய்கிறது. அப்புறம் மொழியிலும் வடிவத்திலும் உத்திகளிலும் ஒவ்வொரு நாவல்களிலும் வேறுபட்டிருப்பது, ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மையைக் கொடுக்குமல்லவா… சயந்தன் கேள்வி: திசை ஒன்பது நாவலின் கரு எப்படி உருவாகியது? அதன் வீச்சை விரிவாக்க என்ன வகையான தயாரிப்புகளைச் செய்தீர்கள்? பதில்: ஒரு தமிழ் இளைஞரை தற்செயலாகச் சந்தித்ததுதான் நாவலுக்கான தொடக்கம். அதற்கு முன்னிருந்தே, ஒரு கதையை இலங்கைக்கு வெளியே எழுதினால்தான் என்ன என்று மனது அசைபோட்டுக்கொண்டே இருந்தது. அஷேராவில் அதை முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் என் திட்டத்தையும் மீறி அது ஈழத்துக்குப் போய்விட்டது. ஆகவே, மேற்சொன்ன தற்செயல் சந்திப்பு ஒரு முழுமையான கதைப்படத்தை இலங்கைக்கு வெளியே எனக்குள் வரைந்தது. எழுதத் தொடங்கிவிட்டேன். அதற்குப் பிறகு எழுத்துக் கோரிய தயாரிப்புக்களைச் செய்தேன். அது பெருமளவுக்கு நிலவரைபியல் தொடர்புபட்டதுதான். பிறகு கதையின் மையத்துடன் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத உலகளாவிய புவியியலும் வரலாற்றுத் துன்பங்களும் இயல்பாக இணைந்தன. முக்கியமான ஒரு விஷயம். கேள்வி: ஆதிரை நாவலில், நிலப்பரப்பு சார்ந்த சித்தரிப்பில், மிக நுண்மையான அவதானங்கள் திரண்டு வந்தன – மரம், செடி, பறவைகள் என்பன துல்லியமக உள்வந்தன. திசை ஒன்பது, முழுக்க ஐரோப்பாவைச் சுற்றி வருகின்றது. இங்கே அதே வகையான துல்லியத்தைக் கொண்டுவருவதற்குக் கடும் சவால்கள் இருந்தனவா? பதில்: ஆதிரை பற்றிய உங்களுடைய அவதானங்களைச் சொன்னது, சந்தோசம். தெரிந்த நிலத்தை எழுதுவதற்கும் தெரியாத நிலத்தை எழுதுவதற்கும் சவால்கள் உண்டுதானே.. இடைவெளிகள் இருக்கும்தானே. அவற்றை புனைவால் இட்டு நிரப்புவதால்தானே புனைவெழுத்தாளர் எனப்படுகிறோம். உக்ரேனையும் ரஷ்யாவையும் அப்படித்தான் எழுதியிருக்கிறேன். நாவலில் இரண்டு பாத்திரங்களாகக் கூடவே வருகிற குளிரையும் இருளையும் எழுதுவதற்கு எனக்குச் சிரமமாகவே இருக்கவில்லை. அந்த இரண்டும் இங்கே ஐரோப்பாவிலே என்னைக் கொல்லும் சனியன்கள். அப்புறம், பரீட்சயம் இல்லாத நிலத்தை எழுதுவதில் ஒரு நல்வாய்ப்பும் இருக்கிறது. அந்த நிலத்தை, சூழலை முதலில் நமக்குள் இழைத்து இழைத்து கற்பனையில் உருவாக்க வேண்டியிருக்கும். அது எதையும் தவறவிடமால் எழுதுவதற்கு உதவும். ஆறாவடு எழுதியிருந்த சமயத்தில் ஒரு விமர்சகர், “அளவெட்டியில் நீங்கள் சொன்ன இடத்தில் மதிலே இல்லை. வேலிதான் இருக்கிறது” என்று சொன்னார். அளவெட்டியைத் தெரியாதவர்களுக்கு அங்கே ஒரு மதில் இருந்தது என்று நம்பப்பண்ணுவதுதானே புனைவின் வெற்றி. கேள்வி: கதையின் மையப்பாத்திரம், இத்தனைத் தடைகளைக் கடந்து புலம்பெயர்வதற்கு பின்னுள்ள காரணத்தை, அவனது தேசிய அடையாளத்தின் ஒரு அங்கமாக மட்டும் நாம் குறுக்கிக்கொள்ள இயலுமா? பதில்: நாங்கள் புலம்பெயர்வதற்கு நிறையக் காரணங்களைச் சொல்கிறோம். போர், உயிர் அச்சம் இந்த மாதிரி.. யோசித்துப்பார்த்தால் இது எதுவுமே இல்லாமல் கூட.. “நான் எனக்குப் பிடித்த ஒரு வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். அவ்வளவுதான்” என்பதற்காகக் கூட எவரொருவரும் புலம்பெயரலாம் என்றே தோன்றுகிறது. ஒரு பொறியியலாளர் புலம்பெயர்வதைப்போல.. ஒரு டொக்ரர் புலம்பெயர்வதைப்போல.. எவரொருவரும் நானும் புலம்பெயரப் போகிறேன் என்று ஆசைப்படுவதில் தப்பிருக்குமா என்ன? இருக்காது. அப்படிப்பட்ட ஆசையில் ஒருவருடைய தேசிய அடையாளம் என்ன செல்வாக்குச் செலுத்துகிறது என்பதுதான் கதை. கேள்வி: சமகாலத்தில் வெளியாகும் ஈழ நாவல்கள், பெரும்பாலும் நினைவு கூர்தலை அடிப்படையாகக் கொண்டவை என்று கூடச் சொல்லலாம். சமகாலத்தில் இருந்து விலகி பத்து வருடங்கள் தொலைவிற்குச் சென்றே கதைகள் ஆரம்பிக்கின்றன அல்லது நிகழ்கின்றன. திசை ஒன்பது சமகாலத்தில் உள்ளது. உலகம் முழுவதும் எழுந்து வரும் வலது சாரிய எழுச்சி, குடியேற்றம் மற்றும் அகதிகளுக்கு எதிரான மனநிலை, என்று பல்வேறு தரப்புகளை அணுகுகிறது. அதில் அதிகம் சுவாரசியம் தருவது, பொதுவாக அகதிகள் என்று நாம் சுருக்கினாலும், எந்த நாட்டில் இருந்து, எந்த நிறத்தில் இருந்து வரும் அகதி என்பதற்கு ஏற்ப வரவேற்பு மாறுபடுகின்றது என்ற நுட்பமான இடத்தை நாவல் பிரதானமாக தொடுகிறது. இந்த நாவலின் அடிப்படை conflict இதுதான் என்று தோன்றுகிறது. ஏற்கிறீர்களா? பதில்: ஏற்கலாம். ஆயினும் அடிப்படை என்று பார்த்தால் மனிதர்களுடைய அச்சமும், தப்பியோடும் விருப்பும் மரியாதைக்குரியது, மதிக்கப்பட வேண்டியது என்பதுதான். குழந்தை வீரர்களின் கதைகள் மட்டுமல்ல வளர்ந்த கோழைகளின் கதைகளும் பாடப்படவேண்டியவை. அவர்களுடைய ஓட்டத்தில் குறுக்கிடும் (அகதிகள் விவகாரத்தில்) ஐரோப்பிய மனநிலை என்றவாறாக ஒரு கோட்டை நாம் வரையலாம். கேள்வி: ஈழநாவல்கள் பெரும்பாலும் ஒரு பெரிய நாவலின் தனித் தனி அத்தியாயங்களாக மதிப்பிடப்படுகிறன. மதிப்பிடத்தக்க மாதிரியே அமைந்தும் விடுகின்றன. இந்தச் சவாலை மீறி கதை சொல்வது எப்படி? பதில்: நான் தனிப்பட இதற்கு வெளியே வரவேண்டுமென்று விரும்புகிறேன்தான், ஆதிரையை எழுதிவிட்டு அப்படி நினைப்பதும் தகும். அது வேறு விடயம், ஆனால் ‘இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஈழத்துப் போரையே எழுதிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்’ என்ற கேள்வியை ஈழ எழுத்தாளர்கள் சட்டை செய்யவே தேவை இல்லை. அழுது தீராத துயரங்கள், நீதி கிடைக்காத குற்றங்கள் இருக்கும்வரை சொல்லித் தீராத கதைகளும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும். அந்த வாழ்வை நீங்களும் வாழ்ந்து பாருங்கள் என்பது எழுத்தாளரின் கோபமாக வெளிப்படலாம். கெஞ்சலாக வெளிப்படலாம். ஆனால் வெளிப்படும். கேள்வி: உங்களுடைய முதல் நாவலுக்கு பதினைந்து வயதாகிறது. இன்றைக்கு இலக்கியத்தை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்? பதில்: நாவலுக்கு நிறையக் காலத்துக்கு முன்னரே எழுதிக்கொண்டுதான் இருந்தேன். போர் நடந்துகொண்டிருந்த காலத்தில் இலக்கியம் எப்படி அறிமுகமாயிற்று என்றால், புலிகள் ஒரு போரைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அந்தப் போரின் நியாயத்தை மக்களுக்கு எடுத்துரைக்கவே கதைகளும் கவிதைகளும் நாடகங்களும் ஓவியங்களும் எழுதப்படுகின்றன என்ற ஒரு சித்திரமாகத்தான் அறிமுகமாயிற்று. தொன்னூறுகளில் பத்து வயதில் இருந்த எல்லோருக்கும் இது பொருந்தும். ஈழநாதமும் வெளிச்சமும் எங்களுக்கு அதைத்தான் சொல்லித்தந்தன. இதிலிருந்து வெளியேறி இலக்கியத்தை வேறு விதமாகப் புரிந்துகொள்வதற்கு எனக்கு நிறையக் காலங்கள் ஆனது. அதற்குப் பிறகுதான் நிறையத் தயக்கங்களைக் களைந்தேன். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைச் சிறு உதாரணத்துடன் சொல்வதென்றால், அஷேரா நாவலில் புலிகளால் நடாத்தப்பட்ட ‘கந்தன் கருணைப் படுகொலை’ வரிக்கு வரி விபரிக்கப்படும். ஒரு நண்பர், நீயா இப்படி எழுதினாய் என்று கேட்டார். ஓம். எழுத்துக் கோரினால், எழுதுவேன் என்றேன். இதுதான் இப்போது வந்திருக்கிற இடம். 000 திசை ஒன்பது : தமிழினி வெளியீடு https://akazhonline.com/?p=11255- நூல் அறிமுகம் : உட்துறைமுகம்!
நூல் அறிமுகம் : உட்துறைமுகம்! ஆசிரியர்: வி. கௌரிபாலன் நூல் வகை: தமிழ் நாவல்; 332 பக்கங்கள் பதிப்பகம்: விடியல் பதிப்பகம் வெளியீட்டு ஆண்டு: 2022 “உட்துறைமுகம்” ஒரு தமிழ் நாவல். ஆயுதப் போருக்குப் பிந்திய தற்கால ஈழச் சமூகத்தில் இலங்கையின் திருகோணமலையை மையமாக கொண்ட தனியொருவனுக்கு நேரும் அவலத்தையும் எதிர்கொள்ளலையும் சித்தரிக்கும் ஒரு படைப்பு. வி. கௌரிபாலன் எழுதிய இந்நாவலை விடியல் பதிப்பகம் 2022-ம் ஆண்டு வெளியிட்டது, மேலும், இது அகமும் புறமும் இழந்து நிற்கும் தற்கால ஈழச் சமூகத்தில் மறைக்கப்படும் ஒரு போராட்டத்தை உள்ளோட்டமாக விவரிக்கிறது. ‘உட்துறைமுகம்’ என்பது திருகோணமலை நகரின் ஒரு நிலக் குறியீடு, அடையாளம். இது மட்டுமல்ல வாழ்வியலின் குறியீடு; குறுக்கு வெட்டி: துறைமுக உள்ளக விசாலத்தை கொண்டுணர உதவும் ஒரு நிலப்பாதை. ‘Inner Harbor Road ‘ என்றாலே பலருக்கு திருகோணமையின் முகவெட்டை, குறிப்பாக துறைமுக வனப்பை அள்ளித்தரும் ஒரு பாதைவலையம். வெறும் 2.54 km அளவுள்ள ஒரு பாதை. ஆனால், அது தான் திருகோணமலை நகரின் உயிர்ப்பாதை; கடலும் நிலமும் இணையும் ஒரு புள்ளிக்கோடு. ‘உட்துறைமுகம்’, இந்நாவலின் பெயராக அமைவது நாவலின் உள்ளக வீச்சை, 1970 -கள் முதல் 2022 வரையான ஒரு காலகட்ட நிகழ்வுகளின் படலங்களாகத் தரும் நாவல் ஆகத் திகழ்கிறது. இதனால் இந்நாவல் கொண்டிருக்கும் வரலாற்றுச் சம்பவங்களால் இது வரலாற்று விபரண ஆவணமாக கவனம் கொள்ள வைக்கிறது. ‘உட்துறைமுகம்’ நாவல் முன்வைக்கும் ‘கரு’ என்பது திருகோணமலையின் ஒரு வரலாற்று முகம். சுதந்திரத்துக்கு பின்னரான திருகோணமலையின் சமூகப் பொருளாதாரம் மற்றும் இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவ இடம் சார் புவியியல், அரசியல் செல்நெறிப்போக்கு மிகவும் சிக்கலானது; பல களங்களை கண்டது; பல்முனைத் கடலசார் பயணத் தளங்களில் வலம் வருபவை. பல வல்லரசுகளின் கண்கொண்ட நிலம், மற்றும் தமிழர்களின் கனவுத் தலைநகரம்; இதயபூமி. இந்த ஈழத் தமிழர்களின் இதயத்தில் செருகிய பல கூர்முனை வாட்களின் வலிகள்; பீறிட்டு வடிந்த இரத்தக் கறைகள் தரும் அழிக்கமுடியாத விம்பங்கள் நாவலின் படிமங்களாகின்றன. இவை ஓர் ஆழ்ந்த வாசகனுக்கு பல்பரிமாணத் தரிசனங்களாகின்றன. நீண்ட காலமாக மனித் தடம் படாத ஓர் அடர்ந்த காட்டின் மௌனமாக, தேடல்களில் காணக் கிடைக்கும் மணற்குன்றுகளில் படிந்துள்ள கனிமப் படிமங்களாகப் புலப்படுகின்றன. ஈழத்தமிழர்களின் கடந்த காலங்களையும் சமகாலப் போக்குகளையும் உள்ளெடுத்து சிலாகித்து வெளிப்படுத்தும் நாவல் இலக்கியப் படைப்புக்கள் தனித்த ஈர்ப்பைப் பெறுகின்றன. ஏனெனில், மற்றைய படைப்புக்களை விட ஓர் உயிர்ப்பான பல நினைவுகொள் காலங்களை, பலரது வாழ்வின் நினைவழியாத் துண்டங்களை, அதில் வாழ்ந்த மனிதர்களது பல்நிலை மௌனங்களை, கரைந்து போக முடியாக் காலத்துயர்களை வாசகர் கண்முன் காட்ட முடியும். இதன் ஒரு சான்றாக ‘உட்துறைமுகம்’ நாவல் அமைந்திருக்கிறது. ஒரு நாவல், தனக்குள் கொண்டிருக்கும் பரந்த காலத்தை அதன் களத்தை முன்வைத்து எம்முடன் உறவு கொண்டாடினாலும் அதன் கனதி, மொழி, முன்வைப்பு, அசைவு மற்றும் முக்கியமாக அதன் கரு போன்றவனவால் ஒரு சிறந்த நாவல் இலக்கிய படைப்பாகின்றது. கௌரிபாலனின் நாவல் நடை, மொழி ஒரு சினிமா விம்பங்களுக்குரிய அனுபவ உணர்வுநிலை மொழிவழி காட்சியாக வாசகர்களுக்கு விரிகின்றது. ஒரு படைப்பு குறிப்பாக ஒரு நாவல் சிறந்தது என உணரவைப்பது, ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் புதையுண்ட பல்வேறு அனுபவங்களிலிருந்து வெளித்தள்ளும் ஒத்திசைவான உணர்நிலை உந்துகைதான். ‘உட்துறைமுகம்’ கொண்டிருக்கும் ஒவ்வொரு சொல்லும் அதைத் தேர்தெடுத்த மொழி தரும் அனுபவம் மற்றும் குறியீடுகள் கடந்த கால வாழ்வின் கனதியை, ஆழத்தை மதிப்பீடுகளாகின்றன. உட்துறைமுக ஆக்கத்தின் மூலம் கிடைக்கும் அனுபவம் என்பது கடந்த கால நிகழ்வுகள் தரும் உணர்வு நிலையாக வாசகரை நிலைக்க வைக்கிறது. திருகோணமலையில் வாழ்ந்த, வாழும் ஒவ்வொருவருக்கும் மெய்நிலை தளங்களில் தம்மைக் காணும் ஒரு அனுபவ நிலையை இந்நாவலின் வழி வாசகர்க்குக் கடத்துகிறார் படைப்பாளி. திருக்கோணமலையின் முகங்கள் எங்கும் பல தழும்புகள்- வதைகள், வேதனைகள் பல. நிலச்சுவாந்தர்களின் அடாவடித்தனங்கள், அடிமைத்தனங்கள், துறைமுகக் கலாச்சாரம் கொண்டுவந்த பெண்கள் மீதான வன்முறைகள், குடியேற்றங்கள் கொடுத்த வன்முறைகள், அதற்கு எதிரான உள்ளுர் மக்களின் தொடர் போராட்டங்கள், ஆயுத எதிர் வன்முறைகள். ஆயுத குழுக்களின் வருகை, ஆயுத இயக்கங்கள் மற்றும் அதன் மீதான அரச வன்முறையின் முழுப்பலத்தையும் எம்முள் தன தாங்கும் வலி, உட்கொள்ளும் வேதனை தான் ‘உட்துறைமுகம்’ வாசிப்பு அனுபவ நிலை. திருகோணமலை மாவட்டம் மூன்று நில மண்டலங்களை கொண்டது. வட திருகோணமலை வடமாகாணத்தின் ஒரு தொடர் பகுதி எனலாம். தெற்கு திருகோணமலை, மூதூர் மண்டலம், மட்டக்கிளப்பு மாவட்டத்தின் தொடக்க தளம். திருகோணமலை நகர், இந்த இரண்டு மண்டலங்களின் செல்வாக்கு கொள்ளும் மற்றும் செல்வாக்கு கொடுக்கும் ஒரு துறைமுக நகர். இந்த மூன்று மண்டலங்களும் மூன்று சமூகப் பொருளாதார தளங்களில் இயங்கினாலும் கடந்தகால வன்முறைகளின் ஒட்டுமொத்த செல்வாக்கும் இந்த மூன்று மண்டலங்களிலும் பரந்த, படிந்த ஓன்று. கடந்தகால திருகோணமலை மாவட்ட வன்முறைகளின் வரலாறு முழுமையாக வருவதாயின் ‘உட்துறைமுகத்தின்’ பங்கு அதற்கு வலுவாக இருக்கும். புதிய திசைகளைத் திறந்துவிட்ட எழுத்து கொலம்பிய எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸுடையது. அவரின் மொழியும் கதை சொல்லும் முறையிலும் ஒரு வீச்சத்தை தந்தவர். தனி மனிதர்களின், அவர்களின் அகம் புறம் மற்றும் சுற்றும் சூழலின் மனஉணர்வுகளை, அழுத்தங்களை, பார்க்கப்படாத யதார்த்த அசைவுகளை தனது மாய எதார்த்தத்தால் வளம் படுத்தியவர். கௌரின் ‘உட்துறைமுகம்’ தரும் ‘தரிசனமும்’ அதுதான். பெத்தவன், அல்லது அரியமாக வலம் ஒரு தனி மனிதனை சுற்றி சுழலும் வாழ்வின் அழுத்தங்களை நாவல் மையம் கொண்டு நகருகின்றது. வாழ்வின் மீதான நெருக்கடிகள்-அவனின் குடுப்பம், ஊரும் உறவுகளும் கொள்ளும் வன்முறை நெருக்கடிகளை திருகோணமலையின் குறிப்பாக திருகோணமலை நகரின் அரச வன்முறைகளின் நிலப்படவரவியலை அழகாக படம்பிடிக்கின்றது; துளிர் விடும் இன வாதம் எவ்வாறு ஒரு சகவாழ்வு நிலமாக திகழ்ந்த திருகோணமலையின் சிதைவுக்கு வழிவிட்டது என்பதை நாவல் தரும் சம்பவங்களும், கதை மாந்தர்களும், அவர்களின் உரையாடல்களும் தரும் உணர்வு நிலை வாசகர்கர்களை உள்ளிழுத்துச் செல்லும் வகையில் சிறப்பாக அமைந்திருக்கின்றது. உட்துறைமுகத்தின் வலுவான உயிர் என்பது கதை மாந்தர்களின் ‘கதைதான்’. திருகோணமலையின் கடந்த அறுபது ஆண்டுகளின் காலத்துயரை, தனிமையை, சிதைவை, தன் உயிரான மக்களின் வாழ்வை அவர்களின் சந்தோசத்தை, இழப்பை, கைவிடாத பழக்க-வழக்க நம்பிக்களை, மக்களின் பன்முகத்தன்மையை அக மன உணர்வு நிலையில் கொடுக்கும் படைப்புதான் ‘உட்துறைமுகம்’. பெண்களின் மீதான இந்திய இராணுவப் பாலியல் வன்முறைகளை ஆவணப்படுத்திய டாக்டர் ஞானி அவர்களின் அலுவலக எரிப்பும் அவரின் கொலையும், ‘தனு’வை நினைவுகொள்வது போல் மூதூர் வில்லுக்குளத்தை சேர்ந்த நித்திலா சுமந்து வரும் கைக்குண்டும் நேர்த்தியான பதிவுகளாகி (பக்க எண்: 274 -275), மொழிவழி தரும் பகிர்வு ஒரு நாவலின் ஊடாக எவ்வளவு வலிமையாகக் கடந்த காலத்தை சொல்லமுடியும் என்பதற்கு ‘உட்துறைமுகம்’ ஒரு நல்ல சான்று. பிரதான நகர்வு பாத்திரமான முன்னாள் போராளி அரியம் மலக்குழிக்குள் இறந்து போகும் முடிவு என்பது ஒரு குறியீடாக வந்து விழுகின்றது. தமிழ் மக்களின் போராட்டம் குறிப்பாக ஆயுத இயக்கங்களின் ஒட்டுமொத்த வகிபாகம் மீதான ஓர் இலக்கியப் படைப்பு வழி வெளிவரும் ஒரு காத்திரமான சமூக விமர்சனமாக, மலக்குழியினுள் விழும் காட்சிப் படிம நிலை சிந்திக்க வைக்கிறது. ஈழத்து இன்றைய சூழ்நிலையில், நாவல் வெளிவந்து பல ஆண்டுகள் கடந்தும் ‘கிணற்றில் போட்ட கல்லாக’ ‘உட்துறைமுகம்’ இருப்பதானது கடந்த கால காலத் துயரங்களை உட்புதையல்களாக்கி சமூகம் மௌனமாக கடந்து போகும் நிலையை உணர்த்துகிறது. ஆனால், வரலாறு ஒரு பின்தொடரும் நிழலாக காலங்கள் கடந்தும் நிழலாடும் என்பதற்கு ‘உட்துறைமுகம்’ நாவல் ஓர் உதாரணம். மனிதர்களால் கண்டடைந்த சொல்லும் எழுத்தும் அதை கொண்ட மொழி வனையும் ஆற்றல்மிகு வனைஞன் இருக்கும் வரை காலம் கடக்கும் பகிர்வுகள் படைப்புகளாகத் தொடர்ந்த வண்ணமே இருக்கும். கௌரிபாலனின் ‘உட்துறைமுகம்’ காலம் காவும் ஒரு படைப்பு. – வை. ஜெயமுருகன் பிற்குறிப்பு : எழுத்தாளர் கௌரிபாலன் அவர்களின் பூர்வீகம் உப்புவெளி, திருகோணமலை. இவரது மொழி வலிமை, பொலிவு, செறிவு என முப்பரிமாண தனித்துவ அழகியலானது இவர் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் வலி உமிழ்பவை; சொல்லடுக்குப் படலம் ஒரு காலத்துயர் வதைகளின் அதிர்வைச் சித்தரிப்பவை. ‘உட்துறைமுகம்’, திரு. கௌரிபாலன் அவர்களின் முதல் நாவல்(2022). இதுவென அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அதேவேளை சொல்லொணாத் துயர் சுமந்த ஈழச் சமூகத்தில் வெளிப்படும் ஒரு நம்பிக்கை தரும் வரலாற்றுப் புதின எழுத்தாளராக இவரை இனம் காண வைக்கிறது. இவரின் முதல் சிறுகதை “தாயம்மா’ வெளிவந்தது 1994-களில். ‘ஒப்பனை நிழல்’ என்னும் சிறுகதை நூலும் ‘வானுறையும் தெய்வத்தினுள்’ 2003-களில் வெளிவந்தன. 2010-களில் ‘நதிப்பாதையின் மேலே’ என்னும் கட்டுரை தொகுப்பு நூல் வெளியானது. பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் பாண்டிச்சேரி மற்றும் பென்குயின் இந்தியா வெளியிட்ட “Time will write a song for you ‘ (Contemporary Tamil writing from Sri Lanka) தொகுப்பில் இவரின் மூன்று சிறுகதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கௌரிபாலனின் முழுச் சிறுகதைகளின் தொகுப்பு ‘காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல்’ (2016) விடியல் பதிப்பக வெளியீடாக வந்தது. https://globaltamilnews.net/2026/226579/- பிரான்ஸில் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் ; இலங்கைத் தமிழர் செய்த செயலால் ஒரு வருட சிறை
பிரான்ஸில் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் ; இலங்கைத் தமிழர் செய்த செயலால் ஒரு வருட சிறை பிரான்ஸில் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, மனைவி, பிள்ளைகளை கொடூரமாக தாக்கிய இலங்கைத் தமிழருக்கு 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 5ஆம் திகதி நீதிமன்றத்தில் இலங்கை தமிழரான ஜோசப் கே என்ற நபர் தனது மனைவி மற்றும் மகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டார். கடந்த வருடம் அதிக போதையில் இருந்த அவர், தனது மனைவியின் மூக்கை உடைத்த நிலையில் பாதிக்கப்பட்ட மனைவிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் பிரான்ஸ் வந்த காலப்பகுதியில் இருந்து மனைவியை துன்புறுத்தி வந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணையில் ஜோசப் கே.வின் மகள் தாயாருக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். அதேவேளை, ஜோசப் கேவின் வதிவிட அனுமதி காலவதியான நிலையில், அவர் எந்த நேரத்திலும் நாடு கடத்தப்படலாம் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக குடும்பத்தினருடன் அவர் இணைந்து இருப்பது, அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்துத் தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், இலங்கை தமிழரான ஜோசப் கே.க்கு 12 மாத சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. https://akkinikkunchu.com/?p=356145- ஆதாரங்களின் தொகுப்பு: இருளில் இருந்து சான்றுகள்
என்னவென்று சொல்வது எங்கள் இனப்பெண்கள் பட்ட துன்பங்களை, இனமானம் உயிர் என கொண்ட இனத்தை, அவமானம் செய்து பாலியல் வன்முறை கொடுமைகள் செய்த ஶ்ரீலங்கா இராணுவ கஜவர்களின் நடத்தைகள் இவை: இது கதையல்ல உண்மை…!- ஏழு கோடித் தமிழர்களுடனும் உறவைப் பேணத் தவறியது ஏன்?; கஜேந்திரகுமார் எம். பி. கேள்வி
ஏழு கோடித் தமிழர்களுடனும் உறவைப் பேணத் தவறியது ஏன்?; கஜேந்திரகுமார் எம். பி. கேள்வி ஏழு கோடி மக்கள் தமிழ் நாட்டில் இருந்தும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் எமது மக்கள் அனாதைகளாக இருந்தார்கள்.ஏன் கடந்த காலத்தில் மக்கள் ஆணை பெற்ற தமிழ் தலைவர்கள் அதை செய்யவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பினார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு செவ்வாய்க் கிழமை நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றபோது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், அண்மையில் தமிழகத்திற்கு நாம் விஜயம் செய்து எமது நிலைப்பாட்டை தமிழகத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம்.எங்கள் முயற்சி தொடர்பான விளக்கக் குறைவு காரணமாக கணிசமானோர் விமர்சிக்கின்றனர். தமிழ் நாட்டுக்கு செல்வது தொடர்பாக எங்கள் அமைப்புக்குள் நீண்டகாலமாக பேசி வந்தோம். தமிழ் நாட்டை ஆண்ட தலைவர்களை சந்திக்க முடியாமல் ஏனைய கட்சிகளின் தலைவர்களை சந்திப்பது பொருத்தமற்றது என்பதால் அதனை தவிர்த்திருந்தோம். தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்ததால் தமிழகத்திற்கு சென்று காங்கிரஸை தவிர அனைத்து கட்சித் தலைவர்களுடன் நாம் சந்தித்தோம். காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்திற்கு வெளியில் இருந்ததால் அவர்களை சந்திக்க முடியவில்லை. இந்தச் சந்திப்புக்களின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு முக்கிய கடிதத்தை எழுதியிருந்தார். ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட அணி தமிழ் தேசிய நிலைப்பாட்டை தமிழகத்திற்கு சென்று வலியுறுத்திய போது தமிழ் நாட்டு அரசாங்கம் பிரதமர் மோடிக்கு பலமான கடிதம் எழுதுமாக இருந்தால்,தமிழ் தேசிய அணியின் பலமாக பத்துப் பேரும் ஒன்றாக இணைந்து செயற்பட்டால் எவ்வளவு விடயங்களை செய்ய முடியும். கடந்த காலங்களில் மக்கள் அங்கீகாரம் பெற்ற எமது தலைவர்கள் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை. தமிழகத்துடனான உறவைப் அவர்கள் பேணவில்லை. ஏழு கோடி மக்கள் தமிழ் நாட்டில் இருந்தும் எமது மக்கள் அனாதைகளாக இருந்தார்கள். ஏன் கடந்த காலத்தில் மக்கள் ஆணை பெற்ற தலைவர்கள் அதை செய்யவில்லை. தமிழ் தேசிய நீக்கம் அவர்களின் நோக்கம் என்றதால் அவர்களுக்கு தமிழ் நாடு தேவையில்லாமல் இருந்தது – என்றார். https://akkinikkunchu.com/?p=356208- கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்திடமிருந்து விடுவிக்க வலியுறுத்தல்!
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்திடமிருந்து விடுவிக்க வலியுறுத்தல்! January 15, 2026 கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்திற்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பிரதேச அபிவிருத்திக் குழுவில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இராணுவம் அங்கு முகாமிட்டிருப்பது உரிமை மீறலாகும். உறவுகள் அஞ்சலிப்பதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் வகையில் அக் காணியினை விடுவிக்க அபிவிருத்திக் குழுவில் தீர்மானம் உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வலியுறுத்தினார். இராணுவத்தினரால் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் விடயத்தில், 19.42 ஏக்கர் நிலம் உரிமையாளர் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு – சுவிகரிப்பு தொடர்பான தற்போதைய நிலை அரச காணி (03.09.2014) இராணுவத்தினருக்குக் கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற கோப்பாய் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்விடயத்தில் குறுக்கிட்டு பேசிய வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் , மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்தினருக்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை நாம் புதிதாக தற்போதே கேள்விப்படுகின்றோம். அது முன்னைய காலங்களில் இடம்பெற்றதாக தங்களால் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த இரகசிய தகவலை நாம் அறியும் நிலையில், நாம் அதனை கடுமையாக எதிர்க்கின்றோம். துயிலும் இல்லத்தில் எமது உறவுகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு மரணித்தவர்களை நினைவு கொள்ளும் உரிமை, அஞ்சலிக்கும் உரிமை எமது உறவுகளுக்கு கிட்டவேண்டும். இதற்கு பதிலளித்த அபிவிருத்திக் குழுவின் தலைவர் ரஜிவன் எம்.பி, இது 2014 ஆம் ஆண்டு இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். இதனையடுத்து குறுக்கிட்ட தவிசாளர் 2014 ஆம் ஆண்டு எந்த அடிப்படையில் கையளிக்கப்பட்டிருக்கின்றது? காணி கையளிப்பு சட்டங்கள் எவ்வாறு பின்பற்றப்பட்டன? எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அபிவிருத்திக்குழுவின் தலைவர் ரஜிவன் எம்.பி, மாவீரர் துயிலும் இல்ல நிலங்களை அரசாங்கம் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். அது நடக்கும் என்றார். இராணுவம் இருக்கின்ற பெருமளவான காணிகள் விடுவிக்கப்படும் என்றார். https://www.ilakku.org/demand-to-release-the-kopayi-maveerar-thuyum-illam-from-the-military/- மன்னாரில் ஜனாதிபதியால் காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.!
ஜனாதிபதியால் காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.! Vhg ஜனவரி 15, 2026 இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னாரில் 50 மெகாவாட் 'ஹேவிண்ட் வன் லிமிட்டெட் நிறுவனத்தின்' (HayWind One) காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (15.01.2026)வியாழக்கிழமை மன்னார் கொன்னயன் குடியிருப்பில் நடைபெற்றது. ஹேலிஸ் பென்டன்ஸ் (Hayleys Fentons) மற்றும் ஹேலிஸ் (The World of Hayleys) குழுமத்தின் அங்கமான ஹேவிண்ட் வன் லிமிட்டெட் நிறுவனம், இலங்கை மின்சார சபையுடன் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்நிகழ்வில் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வலுசக்தி பிரதி அமைச்சர் முஹமது இலியாஸ் முஹமது அஹ்ரம் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோரும், மன்னார் மாவட்டச் செயலாளர் கே.கனகேஸ்வரன், முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். மன்னார் பகுதியில் முன்னெடுக்கப்படும் இந்த 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டமானது, நாட்டின் தேசிய மின்வழங்கலுக்குத் தூய எரிசக்தியைச் சேர்ப்பதோடு, சூழலுக்கு உகந்த மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் ஒரு முன்னோடித் திட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் 18 மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. https://www.battinatham.com/2026/01/blog-post_542.html- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
கண்ணீர் அஞ்சலிகள் ....! ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை . ..!- புதிய வற் வரி விலைப்பட்டியல் முறை: நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடல்
புதிய வற் வரி விலைப்பட்டியல் முறை: நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடல் 15 Jan, 2026 | 12:52 PM புதிய VAT வரி விலைப்பட்டியல் (VAT Tax Invoice) வடிவம் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தேவைகள் குறித்து சர்வதேச வர்த்தக சபை இலங்கையின் (ICCSL) வரிக்குழு அண்மையில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. எமதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ள இந்த மாற்றங்களுக்குக் கொள்கை வகுப்பாளர்கள், வரி வல்லுநர்கள் மற்றும் வணிக சமூகம் எவ்வளவு தூரம் தயாராக உள்ளது என்பதை ஆராய்வதே இதன் பிரதான நோக்கமாகும். இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கங்களாக, புதிய VAT விலைப்பட்டியல் முறைக்கு வணிகங்களின் தயார்நிலையை மதிப்பீடு செய்தல், நடைமுறை இடைவெளிகள் மற்றும் தெளிவற்ற தன்மைகளைக் கண்டறிதல் என்பன அமைந்திருந்தன. இதன் மூலம், புதிய முறையை வணிகங்களுக்கு உகந்த வகையில் சுமூகமாக நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான முன்மொழிவுகளை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு (IRD) வழங்க ICCSL திட்டமிட்டுள்ளது. முக்கிய உரை மற்றும் கொள்கை விளக்கங்கள் நிகழ்வின் ஆரம்ப உரையை ஆற்றிய சர்வதேச வர்த்தக சபை இலங்கையின் தலைவர் திரு. ஜொனி பெர்னாண்டோ, இந்த சீர்திருத்தம் ஒரு சாதாரண நிர்வாக மாற்றம் மட்டுமல்ல, இது வணிகங்கள் பரிவர்த்தனைகளை ஆவணப்படுத்தும் மற்றும் வரி வரவுகளைக் கோரும் முறையில் ஏற்படும் ஒரு கட்டமைப்பு மாற்றமாகும் என வலியுறுத்தினார். வருவாய் இலக்குகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதுகாப்பதற்குத் தெளிவான நடைமுறைகளும், போதிய கால அவகாசமும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். KPMG நிறுவனத்தின் வரி மற்றும் ஒழுங்குமுறை சேவைகளின் முதல்வர் செல்வி. ரிஃப்கா ஸியாத் (Ms. Rifka Ziyard), புதிய விலைப்பட்டியல் வடிவத்தின் பின்னணியில் உள்ள கொள்கை ரீதியான காரணங்களை விளக்கினார். போலி விலைப்பட்டியல்களைத் தடுத்தல், டிஜிட்டல் முறைக்கு மாறுதல் மற்றும் உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit) முறைகேடுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டே இந்த மாற்றம் கொண்டுவரப்படுவதாக அவர் தெரிவித்தார். நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சவால்கள் ஏர்ன்ஸ்ட் அண்ட் யங் (Ernst & Young) நிறுவனத்தின் வரித்துறை முதல்வர் திரு. வேலாயுதபிள்ளை சக்திவேல், நடைமுறைச் சிக்கல்கள் குறித்துப் பேசுகையில் பின்வரும் முக்கிய சவால்களைப் பட்டியலிட்டார்: * மென்பொருள் மற்றும் முறைமைகளைத் தயார்படுத்துவதில் உள்ள சிக்கல்கள். * சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு (SMEs) ஏற்படும் மேலதிக சுமை. * சிறிய பிழைகளுக்காக விலைப்பட்டியல்கள் நிராகரிக்கப்படும் அபாயம் மற்றும் வரி வரவுகள் மறுக்கப்படுதல். * அதிகரித்த இணக்கப்பாட்டுச் செலவுகள் வணிக சமூகத்தின் கோரிக்கைகள் 2026 ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன்னர் நிலவும் தெளிவற்ற தன்மைகளைத் தீர்க்காவிட்டால், அது பொருளாதார ரீதியாகப் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனப் பங்கேற்பாளர்கள் எச்சரித்தனர். குறிப்பாக, அதிக பரிவர்த்தனைகள் நடைபெறும் மற்றும் சேவை சார்ந்த துறைகளில் இந்த சிக்கலான நடைமுறை தினசரி நடவடிக்கைகளைப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. இதனைச் சீர்செய்யப் பங்கேற்பாளர்கள் முன்வைத்த பரிந்துரைகள்: * முறைமைகளை மாற்றியமைக்க மற்றும் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கப் போதிய கால அவகாசத்தை IRD வழங்க வேண்டும். * தெளிவான வழிகாட்டிக் குறிப்புகள் மற்றும் உதாரணங்களை வழங்க வேண்டும். * ஆரம்பக் கட்டத்தில் கடுமையான தண்டனைகளைத் தவிர்த்து, கல்வி மற்றும் வழிகாட்டல்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சர்வதேச வர்த்தக சபை இலங்கையின் துணைத் தலைவர் திரு. ஹேமக்குமார குணசேகர மற்றும் முன்னாள் தலைவர் திரு. ஷனில் பெர்னாண்டோ உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர். இந்தக் கருத்தரங்கில் பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டு, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படும் என சர்வதேச வர்த்தக சபை இலங்கை உறுதி அளித்தது. வரிச் சீர்திருத்தங்கள் பொருளாதார வளர்ச்சியைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்த நிகழ்வு அமைந்தது. https://www.virakesari.lk/article/236088- ’கோல்டன் டோம்’ திட்டத்துக்கு கிரீன்லாந்து அவசியம்
’கோல்டன் டோம்’ திட்டத்துக்கு கிரீன்லாந்து அவசியம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து மிகவும் இன்றியமையாதது என்றும், தான் உருவாக்கி வரும் 'கோல்டன் டோம்' பாதுகாப்புத் திட்டத்திற்கு இது மிகவும் முக்கியமானது என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், தாம் கட்டி எழுப்பி வரும் 'கோல்டன் டோம்' பாதுகாப்பு அமைப்பிற்கு கிரீன்லாந்து நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானது எனவும் குறிப்பிட்டள்ளார். மேலும், நாம் கிரீன்லாந்தை எடுக்காவிட்டால், ரஷ்யாவோ அல்லது சீனாவோ அதனைக் கைப்பற்றிவிடும். அது ஒருபோதும் நடக்காது என அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் பெரும் இராணுவ பலம் இன்றி நேட்டோ ஒரு பயனுள்ள சக்தியாக இருக்க முடியாது என்றும் கிரீன்லாந்து அமெரிக்காவின் கைகளில் இருக்கும்போது நேட்டோ இன்னும் வலிமையானதாக மாறும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இதனை விடக் குறைவான எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாதுஎனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், தனது முதல் பதவிக்காலத்தில் கட்டியெழுப்பிய இராணுவ பலத்தை இப்போது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/கோல்டன்-டோம்-திட்டத்துக்கு-கிரீன்லாந்து-அவசியம்/50-371046- இலங்கை உள்ளிட்ட 75 நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்த அறிவிப்பு
இலங்கை உள்ளிட்ட 75 நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்த அறிவிப்பு அமெரிக்காவில் பொது நலத்திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில், 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான குடியேற்ற விசா செயலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் ஈரான், பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், ரஷியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை தனது ‘எக்ஸ்‘ தள பக்க பதிவில் கூறியிருப்பதாவது:- “அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் சாரும் குடியேற்றவர்களை கொண்ட 75 நாடுகளிலிருந்து வரும் விசா விண்ணப்பங்கள் இடைநிறுத்தப்படுகின்றன. புதிய குடியேற்றவர்கள் அமெரிக்க மக்களின் செல்வத்தை சுரண்ட மாட்டார்கள் என்பதை உறுதி செய்யும் வரை இந்த இடைநிறுத்தம் தொடரும்” என்று தெரிவித்துள்ளது. அதேபோல், வெள்ளை மாளிகை வெளியிட்ட பதிவில், “புதிய குடியேற்றவர்கள் பொதுச் சுமையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்யும் வரை விசா செயலாக்கம் நிறுத்தப்படுகிறது. அமெரிக்க நாட்டுக்கே முன்னுரிமை என்று கூறப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இலங்கை-உள்ளிட்ட-75-நாடுகளுக்கு-அமெரிக்கா-விடுத்த-அறிவிப்பு/50-371077- போதைக்கு அடிமையானவர்களை மீட்க யாழில். புனர்வாழ்வு மையம்!
போதைக்கு அடிமையானவர்களை மீட்க யாழில். புனர்வாழ்வு மையம்! adminJanuary 15, 2026 போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், முழு நாடும் ஒன்றாக – தேசிய வேலைத்திட்டத்தின் செயற்பாட்டு குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், காவல்துறையினர் மாத்திரமின்றி, முப்படையினர் , மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர், அதன் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் இணைந்து செயற்படவுள்ளனர். இதனூடாக போதைப்பொருட்களை இல்லாது செய்வதுடன், அதனுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் இல்லாதொழிப்பதே நோக்கம் அந்த வகையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை, அதிலிருந்து மீட்டெடுக்க அமைக்கப்படும் புனர்வாழ்வு நிலையங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க 1818 என்ற தொடர்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் எந்தவித அச்சமும் இன்றி, நம்பிக்கையுடன் தகவல்களை வழங்க முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/226564/- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மிகவும் அதிர்ச்சியை தரும் செய்தியாக இருக்கின்றது. மோகனுக்கும் அவரது பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் ஆறாத்துயரில் நாங்களும் பங்கெடுக்கின்றோம்.- கருத்து படங்கள்
- ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!
ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி! வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும், நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது. செழிப்பு மற்றும் நன்றியுணர்வை அடையாளப்படுத்தும் தைப்பொங்கல் பண்டிகை, சிறந்த விளைச்சலுக்கு நன்றி பாராட்டும் ஒரு நிகழ்வு மாத்திரமன்றி, எதிர்காலத்தில் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான அழைப்பாகவும் அமைகிறது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அண்மையில் நாம் சந்தித்த மிகப் பாரிய இயற்கைப் அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி மற்றும் உறுதியுடனும், இதுவரை இல்லாத அளவிலான பாரிய புனரமைப்பு செயற்பாட்டில் நாம் ஒன்றாக கைகோர்த்துள்ளோம். அந்த வேலைத்திட்டத்துடன் மென்மேலும் வலுவாக கைகோர்க்க முன்வருமாறு சுபீட்சமான எதிர்பார்ப்புடன் இந்தத் தைப்பொங்கல் திருநாளில், நான் அனைவரிடமும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இயற்கையுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட அதிகமாக உணரப்படும் இந்த நேரத்தில், இயற்கையுடன் ஆழமாக இணைக்கப்பட்ட தைப் பொங்கல் பண்டிகை, நமது வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் உயர்வான அர்த்தத்தைச் சேர்க்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். எந்தவொரு இருளுக்கும் பிறகு ஒளி பிறக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். உறுதியுடனும் ஒற்றுமையுடனும் சவால்களை வென்று ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்புவதற்கான பயணத்திற்கு இவ்வருட தைப் பொங்கல் பண்டிகை சிறந்த ஆசிர்வாதமாக அமைய பிரார்த்திக்கிறேன். இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தைப்பொங்கல் தின வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டார். https://athavannews.com/2026/1459972- கிளிநொச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் தைப்பொங்கல் கொண்டாட்டம்.
கிளிநொச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் தைப்பொங்கல் கொண்டாட்டம். கிளிநொச்சி பரந்தன் நகரில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் தைப்பொங்கல் விசேட வழிபாடு இன்று இடம்பெற்றது இன்று காலை 6 மணியளவில் தேவாலயத்தின் பிரதான குரு தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் தொடர்ந்து 7.30 மணிக்கு விசேட வழிபாடும் இடம்பெற்றிருந்தது நிகழ்வில் ஆலயத்தை சேர்ந்த பொதுமக்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு தைப்பொங்கலை கொண்டாடி மகிழ்ந்திருந்தனர் https://athavannews.com/2026/1460010- ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தலையிடுவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, வொஷிங்டன் ஈரானை தாக்கினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று தெஹ்ரான் எச்சரித்துள்ளது. இந்த விடயத்தை ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை (14) உறுதிபடுத்தியுள்ளார். 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், நாடு தழுவிய போராட்டங்களை அடக்குவதற்கு மதகுருமார்கள் முயற்சித்து வரும் நிலையில், ஈரானின் அமைதியின்மையால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,600 ஆக உயர்ந்துள்ளதாக ஒரு உரிமைக் குழு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய மதிப்பீட்டின்படி, இநத் விடயத்தில் ட்ரம்ப் தலையிட முடிவு செய்துள்ளார், ஆனால் இந்த நடவடிக்கையின் நோக்கம் மற்றும் நேரம் தெளிவாக இல்லை என்று டெல் அவிவ் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த நிலையில் வொஷிங்டன் ஈரானை தாக்குவதைத் தடுக்க” பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளை தெஹ்ரான் கேட்டுக் கொண்டதாகக் பெயர் குறிப்பிட விரும்பாத ஈரானிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா ஈரானை குறிவைத்தால், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதல் துருக்கி வரையிலான பிராந்திய நாடுகளுக்கு, அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் தாக்கப்படும் என்றும் தெஹ்ரான் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சிக்கும் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பிற்கும் இடையிலான நேரடி தொடர்புகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது அதிகரித்து வரும் பதட்டங்களை பிரதிபலிக்கிறது என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார். https://athavannews.com/2026/1459954- திருகோணமலையில் வெருகல் முகத்துவாரம் பகுதியில் கரையொதுங்கிய மரத்தாலான படகு போன்ற பொருள்!
திருகோணமலையில் வெருகல் முகத்துவாரம் பகுதியில் கரையொதுங்கிய மரத்தாலான படகு போன்ற பொருள்! 14 Jan, 2026 | 07:02 PM திருகோணமலை மாவட்டம், ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெருகல் முகத்துவாரம் கடற்கரையில், மரத்தால் தயாரிக்கப்பட்ட மிதப்பு படகு போன்ற பொருளொன்று இன்று புதன்கிழமை (14) காலை 5 மணியளவில் கரையொதுங்கியுள்ளது. இந்த மிதப்பு படகு மியன்மார் அகதிகள் வந்திருக்கக்கூடிய படகாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த படகில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதுடன், பல்வேறு சித்திரங்களும் வரையப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, குறித்த இடத்திற்கு அதிகளவான பொதுமக்கள் வருகை தந்து இந்த மரத்தாலான அமைப்பினை பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236051 - "தமிழர் திருநாள் தைப் பொங்கல் வாழ்த்துக்கள்! Our warm Thai Pongal wishes to you and your family !!"
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.