Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. ஜெயமோகனுடன் இந்த விடயத்தில் எனக்கு உடன்பாடு. அதிக புத்தகங்களை வெளியிடுவது, அதிக திரைப் படப் பாடல்களை எழுதுவது என்பன வர்த்தக வெற்றிகள். "வர்த்தக மயப்படுத்திய தமிழ்" என்ற பிரிவில் ஒரு விருது இருந்தால் அதற்கு வைரமுத்து அவர்கள் உரித்தானவர். "நவீன தமிழ் இலக்கியம்" என்ற பிரிவில் உச்ச அடைவாக வைரமுத்துவின் கவிதைகளையும் பாடல் வரிகளையும் வகைப் படுத்த இயலாது. அதிலும் குற்றஞ் சாட்டப் பட்டிருப்பது போல அரசியல் வாதிகளின் செல்வாக்கினால் அதை அவரே முயன்று பெற்றிருக்கிறார் எனும் போது, இது மிக மரியாதை குறைந்த ஒரு விருதாகிறது.
  3. "மூன்று கவிதைகள் / 31" "எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே" எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே சிந்தையில் ஆடும் செழுந்தமிழ் ஓவியமே விண்ணுலக பண்ணிசைக்கும் கவின்மிகு யாழே கண்களில் சிறைபிடித்து சரணடைந்தேன் அணங்கே! இன்பத் தேனூறும் இனியவள் சொல்லே துன்பம் துடைக்கும் தூயவள் அன்பே அன்பின் வழிதந்து ஆளுகின்ற அரசியே உன்னுடன் வாழ்வதே உன்னதப் பேறே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................. 'மின்னலாய் ஒரு பின்னல்' [அரவணைப்பு,அகங்காரம்,பரிதாபம் & பங்களிப்பு] அன்பின் அரவணைப்பு அகிலத்தைப் போற்றும் அழிக்கும் அகங்காரம் தீயாகும்! தவிர்ப்போம் பரிதாபம் தனையே பண்பான பங்களிப்பு பாரினை உயர்த்தும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ......................................................... "வசந்தத்தில் ஓர்நாள்" வசந்தத்தில் ஓர்நாள் மலர்ந்த பூக்கள் பசுமை போர்த்தியது புல்வெளி எங்கும் இனிமை சேர்த்தது குயிலின் கீதம் இளமை தந்தது இதமான தென்றல் புதிய கனவுகளை இதயத்தில் ஏந்தி புன்னகை சிந்தியது இயற்கை அன்னை! கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம். துளி/DROP: 2095 ["மூன்று கவிதைகள் / 31" https://www.facebook.com/groups/978753388866632/posts/34325944333720775/?
  4. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 134 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 134 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" பின்னர் மணிபல்லவம் தீவில் தீவ திலகை என்ற பெண்ணை மணிமேகலை சந்திக்க நேர்ந்தது. இந்த தீவ திலகை, சம்மன குட்டத்தில் [Sammana Kutta / சமந்தகம் என்ற மலை உச்சியின் மேல்] புத்தரின் பாதங்களை வணங்கி, புத்தர் இருக்கையின் காவலில் இருந்தார். மேற்கண்ட விவரிப்பு மன்னிமேகலை காவியத்தின் 11வது காண்டத்தில் 20 முதல் 30 வரையிலான பாடல்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு, "சம்மன குட்டா" ["Sammana Kutta" ] என்ற வார்த்தையை பாளி மொழியில் இரண்டாக்கப் பிரிக்கலாம், அங்கு "சம்மன" என்பது ஒரு துறவி அல்லது துறவியைக் குறிக்கிறது, மேலும் "குட்டா" என்பது சிகரம் அல்லது மலை என்று பொருள்படும். எனவே, "சம்மன குட்டா" என்பதை "துறவியின் மலை" அல்லது "துறவியின் சிகரம்" என்று விளக்கலாம், இது மலைப்பாங்கான அல்லது காட்டுப் பகுதிகளில் தியானம் மற்றும் கற்பிப்பதற்காக வசிக்கும் துறவிகளின் பாரம்பரியத்துடன் ஒத்துப்போகிறது. "மன்பெரும் பீடிகை என்பிறப்பு உணர்ந்தேன் ஈங்குஎன் வரவுஇதுஈங்கு எய்திய பயன்இது பூங்கொடி அன்னாய் யார்நீ என்றலும், ஆயிழை தன்பிறப்பு அறிந்தமை அறிந்த தீவ திலகை செவ்வனம் உரைக்கும் ஈங்குஇதன் அயலகத்து இரத்தின தீவத்து ஓங்குஉயர் சமந்தத்து உச்சி மீமிசை அறவியங் கிழவோன் அடிஇணை ஆகிய பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் அறவி நாவாய் ஆங்குஉளது ஆதலின் தொழுதுவலம் கொண்டு வந்தேன் ஈங்குப் பழுதுஇல் காட்சிஇந் நன்மணிப் பீடிகை தேவர்கோன் ஏவலின் காவல் பூண்டேன் தீவ திலகை என்பெயர் இதுகேள்:" பெருமை பொருந்திய, புகழ் பெற்ற, இப் பெரும் பீடிகையால் என் முற்பிறப்பினை [என் பழைய பிறப்பைப்] பற்றித் தெரிந்து கொண்டேன். இது நான் அடைந்த பயன். பூங்கொடியே நீ யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?” என மணிமேலை கேட்டாள். மணிமேகலை தனது முற்பிற்பினை அறிந்ததை தீவதிலகை அறிந்தாள். நல்ல முறையில் சில செய்திகளைக் கூறலானாள். “இந்த மணிபல்லவத் தீவின் அருகில் இரத்தினத் தீவகம் உள்ளது. அதில் உள்ள சமந்தகம் என்ற மலை உச்சியின் மேல், தன்னைச் சேர்ந்தவர்களைப் பிறவிக் கடலில் இருந்து கரை சேர்க்கும் புத்தரின் பாத பீடிகை உள்ளது. (சமந்தகம் என்பது இலங்கையில் உள்ள சிவனொளி பாதமலை) அதனை வலம் செய்து இங்கு வந்தேன். குற்றிமின்றிக் காட்சி தரும் இந்தப் பாத பீடத்தை இந்திரனின் ஆணையால் காவல் செய்து வருகிறேன். என் பெயர் தீவதிலகை” என்று கூறினாள் என்கிறது. இந்தக் காவியத்தின்படி, கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தமிழ் மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றினர். சம்மன மலையின் உச்சியில் புத்தரின் பாதச் சுவடு இருப்பதை அவர்கள் அறிந்திருந்தனர். வட இந்தியாவில் பன்னிரண்டு ஆண்டு பஞ்சத்தின் போது சமண மதம் (Jainism) கி.மு மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிற்கு வந்தது. மௌரிய வம்சத்தின் நிறுவனர் சந்திர குப்த மௌரியரும் [The founder of the Maurya dynasty, Chandragupta Maurya / reigned 320 BCE – 298 BCE] தனது மகன் பிந்துசாரனுக்கு [Bindusara] ஆட்சியைக் கொடுத்துவிட்டு தெற்கே ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து புத்த மதம் உடனடியாகத் தமிழ் நாட்டிற்கு வந்தது. வி.ஏ. ஸ்மித் வலியுறுத்தியது போல், புத்த மதம் உண்மையில் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்திருக்க வேண்டும். 'The Early History of India - Vincent A. Smith, Third edition, 1914' and 'Asoka, the Buddhist Emperor of India. By Vincent A. Smith, Third edition, 1919'. என்ற நூல்களைப் பார்க்கவும். இன்று காணப்படும் மன்னார் வளைகுடா, தெற்கு தமிழ்நாடு மற்றும் இலங்கையின் தென் மேற்குப் பகுதியில் உள்ள கடல்பகுதி, பழங்காலத்தில் மலைகள், ஆறுகள் மற்றும் பரந்த நிலப்பகுதியாக இருந்திருக்கலாம். கன்னியாகுமரி முதல் இலங்கையின் தென்பகுதி வரை ஒரு தொடர்ந்த நிலப்பகுதியாக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஒரு நேரத்தில், இயற்கையின் மிகப் பெரிய மாறுபாடாக, நிலச்சரிவு அல்லது கடுமையான நிலக் கவிழ்ச்சி ஏற்பட்டது. இதன் விளைவாக மலைகள் மற்றும் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் கடலுக்குள் ஆழமாக கவிழ்ந்து மூழ்கியிருக்கும். இதனால் இன்றைய மன்னார் வளைகுடாவின் ஆழமான கடல்தொகுப்பு உருவானது. பண்டைய தமிழர்களும் சிங்களர்களும் பெரும் கடல் வெள்ளம் பற்றிய நினைவுகளை தலைமுறை தோறும் கொண்டுள்ளனர். இதனால் இந்த பெரும் பேரழிவு மிகப் பழமையானது அல்ல, சுமார் 5000 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இது 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட சுனாமி போன்ற ஒரு பெரும் இயற்கை பேரழிவாக இருந்திருக்கலாம். Part: 134 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" Then Mannimeghalai happened to meet a lady named Theeva-Thilagai in the island Mannipallavam. This Theeva-Thilagai, having worshiped the Buddha’s feet on the Sammana Kutta, was in guard of the Buddha Seat. The above narrative is given in the verses 20 to 30 in the Canto 11 of the Epic Mannimeghalai. மன்பெரும்பீடிகைஎன்பிறப்புஉணர்ந்தேன் ஈங்குஎன்வரவுஇதுஈங்குஎய்தியபயன்இது பூங்கொடிஅன்னாய்யார்நீஎன்றலும், ஆயிழைதன்பிறப்புஅறிந்தமைஅறிந்த தீவதிலகைசெவ்வனம்உரைக்கும் ஈங்குஇதன்அயலகத்துஇரத்தினதீவத்து ஓங்குஉயர்சமந்தத்துஉச்சிமீமிசை அறவியங்கிழவோன்அடிஇணைஆகிய பிறவிஎன்னும்பெருங்கடல்விடூஉம் அறவிநாவாய்ஆங்குஉளதுஆதலின் தொழுதுவலம்கொண்டுவந்தேன்ஈங்குப் பழுதுஇல்காட்சிஇந்நன்மணிப்பீடிகை தேவர்கோன்ஏவலின்காவல்பூண்டேன் தீவதிலகைஎன்பெயர்இதுகேள்: The translation in brief: Quote ‘There on the high peak of the hill Samantakuta there are the footprints of the Buddha. Having offered worship at the footprints I came to this island long ago. Since then I have remained here keeping guard over this " Dharma-seat" under the orders of Indra. My name is Tiva-Tilakai (Dvipa Tilaka). People following the Dharma of the Buddha strictly, offering worship to this "Buddha’s seat" will gain knowledge of their previous birth, knowing their past as a result of this worship’. Unquote Tamil people were following of the Buddhist faith as per this epic around the second century A. D. They were aware of the Buddha’s foot print on the top of the Sammana hill’. The Samanna religion, (Jainism), came to Tamil country about third century B. C. during a twelve year famine in north India. The founder of the Maurya dynasty, Chandragupta Maurya, too retired to South, after giving the reign to his son Bindusara. The Buddhism followed suit immediately after to the Tamil country. The Buddhism must have really come to Lanka from Tamil country, as asserted by V. A. Smith. See References 15 and 21. The present day Gulf of Mannar between the southern Tamil Nadu and south-west coast of Sri Lanka must been a land with hills, and rivers around it. The dotted line connecting Cape Commorin (Kannnya-Kumari) to the southern tip of Sri Lanka must have been the extent of land. A slope stability failure must have taken place in which the hills and adjoining lands plunged deep into the ocean as shown by the two arrows. The picture below is a rendering showing the bathymetric contours of the Gulf Mannar in a continuous seascape. The memories of the Tamils and the Sinhalese about an ancient sea deluge have not faded. Therefore the deluge, the slope stability failure, must have happened not very long ago. The Biblical flood, Noachic flood, as per the introductory page XXXVIII of the Reference 42 is about 3044 B. C. This slope stability failure too must have occurred within the last 5000 years, or could even be recent. The effect must have been colossal and very destructive, similar to the Tsunami which occurred during the Christmas time of the year 2004 REFERENCES 15. The Early History of India by Vincent A. Smith, 3Rd edition, 1914 21. Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919 42. The Mahavansi, The Raja-Ratnacari, The Raja-Vali Translation by Edward Upham, M. R. A. S. and F. S. A. Volume 1, 1833 நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 135 தொடரும் / Will follow துளி/DROP: 2096 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 134 https://www.facebook.com/groups/978753388866632/posts/34326065530375322/?
  5. டுபாய் விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் ; விமான பயணங்கள் இடைநிறுத்தம் Published By: Digital Desk 3 16 Mar, 2026 | 09:05 AM டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே திங்கள்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ட்ரோன் தாக்குதலின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு காரணங்களால் விமானப் பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக டுபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட ட்ரோன் தாக்குதலில் எரிபொருள் கொள்கலன் ஒன்று சேதமடைந்துள்ளதாக டுபாய் ஊடக நிறுவனம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், டுபாய்க்கு வருகை தரும் மற்றும் டுபாயிலிருந்து புறப்படும் விமானப் பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் போர் ஆரம்பத்தித்த பின்னர், வளைகுடா அரபு நாடுகள் 2,000-க்கும் மேற்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்கள் அமெரிக்க இராஜதந்திர அலுவலகங்கள் மற்றும் இராணுவத் தளங்களை மட்டுமன்றி, வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய எண்ணெய் உட்கட்டமைப்புகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், குடியிருப்பு மற்றும் அலுவலகக் கட்டிடங்களையும் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 2020 ஆம் ஆண்டில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கிய ஐக்கிய அரபு அமீரகம், தாக்குதல்களின் பெரும் தாக்குதலை எதிர்கொண்டது. ஆனால் அனைத்து வளைகுடா அரபு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் அனைவரும் ஈரானை கண்டித்துள்ளனர். https://www.virakesari.lk/article/241069
  6. சீன மக்கள் குடியரசின் குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கிடையில் சந்திப்பு! Published By: Digital Desk 1 16 Mar, 2026 | 10:00 AM சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் Zhang Yong தலைமையிலான பிரதிநிதிகள் குழு, 14ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை சந்தித்துள்ளனர். இதன்போது, திட்டமிடப்பட்ட குற்றங்கள், ஆட்கடத்தல், சைபர் குற்றங்கள் போன்ற இரு நாடுகளினதும் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் புதிய தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது. சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் Zhang Yong தலைமையிலான பிரதிநிதிகள் குழு, 14ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை சந்தித்துள்ளனர். இதன்போது, திட்டமிடப்பட்ட குற்றங்கள், ஆட்கடத்தல், சைபர் குற்றங்கள் போன்ற இரு நாடுகளினதும் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் புதிய தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன், அன்றையதினம் Zhang Yong தலைமையிலான தூதுக்குழுவினருக்கும், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கும் இடையில் பொதுப் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பொலிஸ் மா அதிபர் கலந்துகொண்டார். அங்கு இரு நாடுகளினதும் குடிவரவு நிர்வாகம், திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் மற்றும் பொதுப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வடகல, அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜ உள்ளிட்ட உயர் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241075
  7. மத்திய கிழக்கு பிரச்சனைகளுடன் நம்ம உடையார் தனது கால்களை ஈரானுக்குள் ரொம்ப ஆழமாய் விட்டுட்டார் போல உள்ளது.
  8. வீதியோரம் . மலர் . .......... 13. இந்த சில மாதங்களில் “வீதியோரக்கடை”யடியில் பல மாற்றங்கள் உண்டாகி விட்டன. மின்சார சபையால் விகாரையில் இருந்து கடையையும் தாண்டி ஒரு மைல் நீளத்துக்கு வீதியை அகலமாக்கி வீதி விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தன. அதனால் கடைக்கும் அவர்களது வீட்டுக்கும் குளத்தின் கரைகளிலும் விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதனால் அவர்கள் வீட்டின் அருகில் ஒரு பெரிய வட்டமான கிணறு ஒன்றும் வெட்டி மோட்டார் போட்டு பக்கத்தில் உயரத்தில் தண்ணீர் தொட்டி அமைத்து விட்டிருந்தார்கள். அதில் இருந்து குழாய்கள் பொருத்தி சமைக்க, குடிக்க, குளிக்க அதற்கொரு அறை என்று எல்லாம் அமைத்திருந்தனர். மேலும் ஆட்களை வைத்து பின்னால் ஐந்து ஏக்கர் வரை காடுவெட்டி நிலமெல்லாம் எரித்து டிராக்ட்டரால் சமன் படுத்தி விட்டிருந்தார்கள்.இனி அதில் விவசாயத்துடன், வாழை மற்றும் பல பயிர்கள் பயன்தரு பழ மரங்கள் எல்லாம் நட்டு வைத்திருந்தார்கள். இப்போதெல்லாம் அங்கு தப்பான காரியங்கள் ஒன்றும் இருப்பதில்லை.முன்பு மது வித்த பையனும் அங்கு வந்து கடையில் எடுபிடி வேலைகள் செய்து வருவதால் அவனுக்கும் ஒரு சம்பளம் போட்டுக் குடுக்கிறார்கள். வழக்கமாய் போய்வரும் வழியில் அண்ணாச்சியும் வந்து இளைப்பாறிப் போகிறார்…… அன்று காலையில் சுஜிதா மேகலையிடம் அம்மா இன்று பாடசாலையால் பக்கத்துக் கிராமத்தில் ஒரு மருத்துவ முகாம் அமைக்கப் போகிறோம். சில நேரம் நான் வரத் தாமதமாகலாம் என்று சொல்லி விட்டு ஸ்கூட்டியில் வெள்ளை யூனிபார்முடன் போகிறாள். யுகேந்திரனும் அந்த இளஞனுடன் பணம் போடுவதற்கு வங்கிக்கு போயிருக்கிறான். விநோதன் வீட்டுக்குள் ஏதோ வேலைகள் செய்து கொண்டிருக்கிறான். மணிமேகலை மட்டும் கடைக்குள் உணவு சமைப்பதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கிறாள். அப்போது மிக வேகமாய் சுஜிதா ஸ்கூட்டியில் ஓடிவந்து கடைக்குமுன் அதை விழுத்திவிட்டு உள்ளே ஓடிவந்து அம்மா என்னைக் காப்பாத்துங்கோ, அவங்கள் என்னைத் திரத்திக் கொண்டு வாறாங்கள். என்று கத்திக் கொண்டு அவள் பின்னால் கோழிக்குஞ்சுபோல் ஒட்டிக்கொண்டு நிக்கிறாள் பயத்துடன். மேகலையும் நீ பயப்பிடாதை, யாரடி அது துரத்தி வாறது என்று சொல்லி விநோ இஞ்சை ஒருக்கால் வாங்கோ என்று பின்னால் பார்த்து குரல் கொடுக்கிறாள். அப்போது ஒரு வெள்ளை வான் வந்து அரை வட்டமடித்து நிக்கிறது. அதிலிருந்து மூன்றுபேர் இறங்கி கடைக்குள் ஓடி வருகிறார்கள். நீ மாறன் மகள் சுஜிதாதானே என்று கத்த அது நானில்லை என்று சொல்லிக்கொண்டு அவள் பின்னால் ஓடுகிறாள். அவர்களில் ஒருவன் டேய் இவள் சுஜிதாதான், நல்ல வடிவா வளர்ந்து விட்டாள் விடாதையுங்கோடா பிடியாடா அவளை இனி எங்களுக்கு கொண்டாடட்டம்தான் என்று கத்திக் கொண்டு துரத்துகிறான். மற்றவன் அவள் மட்டுமென்ன இவளும் செமையாதான் இருக்கிறாள்…… பொறுடா இவளைப் பிறகு பார்க்கலாம் முதல்ல அவளைப் பிடிப்பம் வாடா என்று முன்னால் ஓடியவனைத் தொடர்ந்து இருவரும் ஓடுகிறார்கள். அவர்களுக்கு முன்னால் ஓடிய சுஜிதா வீட்டை அடைந்து கதவைத் திறக்க முயல அது திறபடவில்லை, உள்ளிருந்து விநோதன் சுஜிதா நீ பயப்பிடாதே நேராக காட்டுக்குள் ஓடு, பின்னால் திரும்பிப் பார்க்காதே நான் இருக்கிறேன் என்று சொல்ல சரி அப்பா என்று சொல்லிவிட்டு காட்டை நோக்கி ஓடுகிறாள். வீட்டுக்கும் காட்டுக்கும் இடையில் கொஞ்ச தூரம் இருந்தது. முன்னால் வந்தவன் நில்லடி என்று சொல்லி அவளை நெருங்குகிறான், தொடர்ந்து பின்னால் இருவரும் ஓடிவர அவர்களுக்குப் பின்னால் மணிமேகலையும் ஓடிவருகிறாள். அவன் எட்டி அவள் முடியை பிடிக்கும் சமயம் சரியாக அவன் பிடரியில் “டப்” என்றொரு சத்தம்.அவன் வேகமாய் கால்கள் தேய திரும்பி விழுகிறான். அவன் விழுவத்தைக் கண்டு இவங்கள் இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்க்க மிகக் குறைவான வினாடியில் அந்த இருவர் நெற்றியிலும் “டப் டப்” பொட்டு விழுந்திருக்கு. திடுக்கிட்ட மேகலை திரும்பிப் பார்க்க பின்னால் வீட்டருகில் விநோதன் சாவகாசமாய் பிஸ்டலை அதன் உறைக்குள் போட்டுக்கொண்டிருந்தான். பின்பு விறகு அள்ளும் வண்டிலை எடுத்து வந்து அவர்களை அதில் போட்டுகொண்டு சுஜிதாவிடம் இனி நீ பயப்பிடாமல் வீட்டுக்குப் போய் இரு ………இப்பொழுது இங்கு ஒன்றுமே நடக்கவில்லை சரியா என்று சொல்லி அனுப்பி வைக்கிறான். பின் மேகலையும் அவனுமாய் அவர்களை காட்டுக்குள் வெகுதூரம் குளகரையோடு தள்ளிக்கொண்டு போய் அவர்களது ஆடைகள் முழுவதையும் களைந்து விட்டு வெற்றுடலுடன் குளத்துக்குள் தள்ளி விடுகிறார்கள். அப்போது மேகலை, விநோதனும் அசந்திருந்த நேரத்தில் அந்த பிஸ்டல் , தோட்டா, பெல்ட் எல்லாவற்றையும் தூக்கி அந்தக் குளத்தில் தூரமாக எறிந்து விட்டு இனிமேல் இந்தக் கோதாரி ஒண்டும் வீட்டுக்குள் இருக்க வேண்டாம் என்று சொல்கிறாள் . நானும் அதைத்தான் நினைத்தேன் நீ செய்து விட்டாய் என்று விநோவும் சொல்கிறான். சற்று நேரத்தில் பல முதலைகள் கூட்டமாய் வந்து அந்த உடல்களை உள்ளே இழுத்துக் கொண்டு போகின்றன. ஆடைகளை குப்பை மேட்டில் போட்டு விறகுகளால் மூடி எரித்து விடுகிறார்கள். பின் கடையடிப்பக்கமாய் வந்து குளித்துவிட்டு வீட்டுக்குள் வருகின்றனர்.......! மலர் ............. 🦈 13.
  9. ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஈரானின் புதிய எச்சரிக்கை Mar 16, 2026 - 04:49 PM ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஹோர்முஸ் நீரிணையை எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதால், தற்போது இந்த கடல் வழியாக கப்பல் போக்குவரத்து விசேட நிபந்தனைகளின் கீழ் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு ஈரானிய ஆயுதப் படைகளின் வசம் இருப்பதாகவும், தனது தேசியப் பாதுகாப்பிற்காகத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு ஒரு கடற்கரை நாடு என்ற ரீதியில் ஈரானுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். வரலாற்று ரீதியாக இந்த கடல் பாதையின் பாதுகாவலனாக ஈரான் இருந்து வந்த போதிலும், தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே பொறுப்பேற்க வேண்டும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். உலகின் எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இந்த கடல் பாதையை, தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நாடுகள் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஈரான் கடுமையாகத் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmmt3a9xk000n356p0qi98vj0
  10. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மின்னிய நட்சத்திரங்கள் - ஒரு புகைப்படத் தொகுப்பு பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் பால் தாமஸ் ஆண்டர்சன் "ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்" படத்திற்காக சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றார். இது அவருக்கு முதல் அகாடமி விருது. 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,அமெரிக்க திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ரியான் கூக்லர் தனது 'சின்னர்ஸ்' படத்திற்காக சிறந்த அசல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெறுகிறார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,ஃபிராங்கன்ஸ்டைன் படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற ஒப்பனை மற்றும் சிகை அலங்கார கலைஞர்களான ஜோர்டான் சாமுவேல் மற்றும் மைக் ஹில் ஆகியோரை மெக்சிகன் இயக்குநர் கில்லர்மோ டெல் டோரோ வாழ்த்தினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஃபிராங்கன்ஸ்டைன் படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றவுடன், கேட் ஹாலி படத்தின் இயக்குநரை நோக்கி, "கில்லர்மோ (டெல் டோரோ), நன்றி என்று கூறினார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை 'கே-பாப் வாரியர்ஸ்' படத்திற்காக அமெரிக்க இயக்குநர் கிறிஸ் அப்பெல்ஹான்ஸ், தென் கொரிய-கனடா திரைக்கதை எழுத்தாளர் மேகி காங் மற்றும் தயாரிப்பாளர் மிச்செல் வோங் ஆகியோர் வென்றனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'இஃப் ஐ ஹேட் லெக்ஸ் ஐ வுட் கிக் யூ' படத்தின் நட்சத்திரமான ரோஸ் பைர்ன், டால்பி தியேட்டர் சிவப்பு கம்பளத்தில் பிரமிக்க வைக்கும் 'டியோர்' உடையில் தோன்றினார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,'சின்னர்ஸ்' படத்தில் இரட்டையர்களாக நடித்த மைக்கேல் பி. ஜோர்டான் பட மூலாதாரம்,Penske Media via Getty Images படக்குறிப்பு,'சென்டிமென்ட் வேல்யூஸ்' பாடலின் நட்சத்திரமான நார்வேயின் ரெனேட் ரென்ஸ்வே, 2026 ஆஸ்கர் விருதுக்கு சிவப்பு நிற ஆடையில் வந்திருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'தி சீக்ரெட் ஏஜென்ட்' படத்தின் நட்சத்திரமான பிரேசிலிய வாக்னர் மௌரா, ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் காணப்பட்டார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டருக்கு லியோனார்டோ டிகாப்ரியோ வந்திருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'ஹேம்நெட்' படத்தில் ஷேக்ஸ்பியரின் மனைவியாக நடித்த ஜெஸ்ஸி பக்லி, ஆஸ்கர் விருது விழாவுக்கு வந்திருந்தார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,'சுப்ரீம் மார்டி' படத்தில் நடித்ததற்காக பரிந்துரைக்கப்பட்ட டிமோதி சலமெட் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'புகோனியா' நட்சத்திரம் எம்மா ஸ்டோன் வெள்ளி நிற உடையில் விழாவுக்கு வந்திருந்தார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,ஜேக்கப் எலோர்டி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' படத்தில் செர்ஜியோ 'சென்செய்' செயிண்ட் கார்லோஸாக நடித்த பெனிசியோ டெல் டோரோ, கருப்பு நிற ஆடை மற்றும் சன்கிளாஸ்களில் சிவப்பு கம்பளத்தில் காணப்பட்டார். பட மூலாதாரம்,WWD via Getty Images படக்குறிப்பு,'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' படத்தில் வில்லா பெர்குசனாக நடித்த சேஸ் இன்பினிட்டி, ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டருக்கு வந்திருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் 'சிராட்' படத்தின் இயக்குநர் கலீசியாவைச் சேர்ந்த ஆலிவர் லாக்ஸ் . பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' படத்தில் பெர்ஃபிடியா பெவர்லி ஹில்ஸாக நடித்த டெயானா டெய்லர், 98வது அகாடமி விருதுகளில் கருப்பு மற்றும் வெள்ளை நிற உடையில் தோன்றினார், அதில் முத்து எம்பிராய்டரி இடம்பெற்றிருந்தது. பட மூலாதாரம்,FilmMagic படக்குறிப்பு,'டிரெய்ன் ட்ரீம்ஸ்' படத்தில் தோன்றிய பிரிட்டிஷ் நட்சத்திரம் ஃபெலிசிட்டி ஜோன்ஸ், 2026 ஆஸ்கர் விருது விழாவிற்கு பிராடா உடையில் வந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxz1nn40wpo
  11. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் திகதிகள் அறிவிப்பு 16 Mar, 2026 | 04:40 PM தமிழ்நாடு -மேற்கு வங்காளம்- கேரளம்- அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புது தில்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு தெரிவித்ததாவது... இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம், தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளம், தமிழ்நாட்டை ஒட்டி உள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதியன்று சட்டைப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் திகதியன்று சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மேற்கு வங்காள மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 என திகதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.‌ தேர்தல்கள் நிறைவடைந்த பிறகு எதிர்வரும் மே மாதம் நான்காம் திகதி அன்று ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நடைபெறும்'' என தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் ஆறாம் திகதி ஆகும். வேட்பு மணி வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் ஏழாம் திகதி என்றும், வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் ஒன்பதாம் திகதி தி நிறைவு திகதி என்றும் அறிவித்திருக்கும் தேர்தல் ஆணையம்.. ஏப்ரல் 23ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241126
  12. இரானில் புரட்சியை தூண்டிய ஒரு விமானப் பயணம் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,15 ஆண்டு காலமாக நாடு கடத்தப்பட்டிருந்த ஆயதுல்லா ருஹொல்லா கொமேனி 1979 பிப்ரவரி ஒன்றாம் தேதி இரான் திரும்பினார் கட்டுரை தகவல் ஜான் சிம்ப்சன் பிபிசி சர்வதேச விவகாரங்களுக்கான ஆசிரியர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் தனியார் போயிங் 747 விமானத்தின் முதல் வகுப்புப் பிரிவில் அமர்ந்திருந்த கொமேனி, 15 ஆண்டுகளுக்கு முன்பு, தான் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நாட்டை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டு வந்தார். கேமராமேனுடன் அவருக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்த நான், நாடு கடத்தப்பட்ட அவர் மீண்டும் தாயகம் திரும்புவதை எப்படி உணர்கிறார் என்று கேட்டேன். என்னுடைய கேள்விக்கு அவர் பதிலளிக்கவிலை. இருந்தபோதிலும் அதே கேள்வியை அங்கிருந்த ஓர் அமெரிக்கச் செய்தியாளர் மீண்டும் கேட்டார். அதற்கு கொமேனி, "ஹிச்சி" அதாவது "ஒன்றுமில்லை" என்று பதிலளித்தார். கொமேனியின் ஒன்றுமில்லை என்ற உணர்ச்சியற்ற பதில், அதற்கு சில நாட்களுக்கு முன்பு நாடு கடத்தப்பட்ட ஷா முகமது ரெசா பஹ்லவியின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியளித்தது. ஆனால் கொமேனி சொல்ல வந்தது என்னவென்றால், அவரது நாடு திரும்புதல் என்பது மனித உணர்வுகள் சார்ந்த விஷயமல்ல; கடவுளின் விருப்பம் மட்டுமே முக்கியமானது என்பதே. இந்த நிகழ்வுக்கு ஒரு மாதம் முன்பு, பாரிஸிற்கு வெளியே அவர் தங்கியிருந்த நியூஃபில்-லே-சாட்டோ என்ற இடத்தில் நான் அவரை பேட்டி எடுத்த போது, கொமேனி பேசியது அவரது மன உறுதியைக் காட்டியது. "மன்னராட்சி ஒழிக்கப்படும்," என என்னிடம் உறுதியாக சொன்ன அவர், "இரானின் தற்போதைய ஊழல் நிறைந்த அரசாங்கத்தின் கீழ் உள்ள சில வாழ்க்கை முறைகள் மாற்றப்பட வேண்டும்... மது போன்ற போதைப்பொருட்கள் தடை செய்யப்படும்" என்று தெரிவித்தார். "இரான் மீது ஷா மன்னரைத் திணித்த வெளிநாட்டு அரசாங்கங்களின் மீது எங்களுக்கு வெறுப்பு இருக்கிறது." இன்றும் கூட நிலைமை அப்படியேதான் இருக்கிறது. படக்குறிப்பு,பாரிஸிலிருந்து டெஹ்ரானுக்கு கொமேனி சென்ற விமானத்தில் ஜான் சிம்ப்சன் இருந்தார் ஆரம்பத்தில், இந்த இஸ்லாமியக் குடியரசு நீடிக்கும் என்பது சாத்தியமற்றதாகவே தோன்றியது, ஆனால் இப்போது அது 40 ஆண்டுகளைக் கடந்துவிட்டது, (1979 முதல் தற்போது வரை (2026-ல் 47 ஆண்டுகள்) . ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கிலான மக்கள் திரளாக வந்து வாக்களிக்கின்றனர். இருப்பினும் அரசியலில் தாராளவாத மற்றும் பழமைவாத போக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களே வேட்பாளர்களாக இருக்கின்றனர். பொதுவாக தாராளவாத வேட்பாளர்களே பெரும்பான்மையாக வெற்றி பெறுகிறார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகே, தங்களால் எதையும் மாற்ற முடியாது என்பதை அவர்கள் உணர்கிறார்கள். இரான் அரசியலமைப்பின் கீழ், தேர்தலில் வாக்களித்து ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், மதகுருமார்கள் மற்றும் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட பழமைவாத சக்திகளிடமே அதிகாரக் கட்டுப்பாடு உள்ளது. பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,டெஹ்ரான் விமான நிலையத்தில் கொமேனியை வரவேற்ற ஆதரவாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை விட நாட்டின் அதிஉயர் தலைவர் அதிகாரம் கொண்டவராக உயர் இடத்தில் இருக்கிறார் என்றால், பழமைவாதிகள் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள எத்தகைய போராட்டத்தையும் நடத்தத் தயாராக உள்ளனர். 2009-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்குப் பிறகு, தாராளவாத வேட்பாளர் மிர் ஹொசைன் மௌசவி அநேகமாக பெரும்பான்மை பெற்றிருந்தாலும், பழமைவாதியான அஹ்மதிநிஜாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தொடங்கிய போராட்டங்கள் உச்சத்தை எட்டிய போது புதிய புரட்சி உருவாவதைப் போல் தோன்றியது. ஆனால் போராட்டக்காரர்களை வீதிகளில் இருந்து விரட்ட பழமைவாதிகள் மிகவும் கொடூரமாக செயல்பட்டனர். இஸ்லாமியப் புரட்சி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்பு, 2009-ல் நடந்த சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தல் இரானில் மாபெரும் போராட்டங்களைத் தூண்டியது இரானில் வசிக்கும் இஸ்லாமியர்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ஷியா பிரிவினர். 1979-ல் ஷியா இஸ்லாமியப் புரட்சியாளர்களால் ஷா மன்னர் பதவியிறக்கப்பட்டது, ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகையும் அதிர்ச்சிக்கும் வியப்பிற்கும் உள்ளாக்கியது. இதன் விளைவாக, லெபனான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் சில பகுதிகளில் வாழ்ந்த ஷியாக்கள், தாங்கள் சமூக மற்றும் அரசியல் ரீதியாகப் பின்தங்கிய நிலையில் இருப்பதை இனி ஏற்க முடியாது என முடிவெடுத்தனர். ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்கு அதிகப் பங்கு வேண்டுமெனக் கோரத் தொடங்கினர். அந்தப் பிராந்தியத்தில் இருந்த சுன்னி பிரிவினருக்கு இந்த மாற்றம் ஆழ்ந்த கவலையளித்தது. இருப்பினும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ஒரு தலைவர் வீழ்த்தப்பட்டதைக் கண்டு அவர்களும் வியப்படைந்தனர். அமெரிக்கர்கள் அவமானப்படுத்தப்பட்டனர், அதை மத்திய கிழக்கில் இருக்கும் யாரும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். 1980 முதல் 1988 வரையிலான காலகட்டத்தில், இராக்குடன் இரானுக்கு ஏற்பட்ட கடுமையான போரின்போது தப்பிப் பிழைக்க வேண்டிய கட்டாயத்தில் இரான் இருந்தது. ஆனால் 2003-இல் இராக் மீது அமெரிக்கா படையெடுத்து அங்கிருந்த சிறுபான்மை சுன்னிகளின் அதிகாரத்தை அழித்த பிறகு, இரானின் வலுவான ஆதரவுடன் இராக் நாட்டின் பெரும்பான்மை ஷியாக்கள் நாட்டை ஆளத் தொடங்கினர். அந்த பிராந்தியத்தில் இரான் வலிமை வாய்ந்ததாக மாறியது; இதற்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் தான் ஒருவகையில் காரணமானார். இதைவிட ஒரு பெரிய முரண்பாடு இருக்கவே முடியாது. இன்று, இஸ்ரேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகமும் இரானை மிகப்பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கின்றன. ஆனால் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரானை வேறுவிதமாகப் பார்க்கின்றன. இரான் கடினமானது மற்றும் மோதல் போக்கு கொண்டது என்பதை அவை ஒப்புக்கொண்டாலும், இரானின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஐரோப்பிய ஆதரவுடன் எட்டிய உடன்படிக்கையைப் பின்பற்ற இரான் இன்னும் தயாராக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். இன்று, இரான் வெளியாட்கள் கற்பனை செய்வதை விட மிகவும் எளிதான நாடாகத் தோன்றுகிறது. பெண்களின் உடை குறித்த விதிகள் சில நேரங்களில் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஆனால் செளதி அரேபியாவில் வழக்கமாக காணப்படும் 'ஆண் பாதுகாவலர் முறை' போன்ற கட்டுப்பாடு ஒன்றை பெண்களின் நடமாட்ட சுதந்திரத்தின் மீது இஸ்லாமியக் குடியரசு ஒருபோதும் திணித்ததில்லை. எனது அனுபவத்தில், புள்ளிவிவரங்கள் இதற்கு மாறாக தெரிந்தாலும், இரானியப் பெண்கள் சுயமாக தொழில் செய்ய முடியும், சொந்தமாக சொத்து வைத்திருக்க முடியும், பெண்கள் கார் ஓட்ட முடியும். அரசியலில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என இரானிய பெண்கள் நம்புகின்றனர். பட மூலாதாரம்,Anadolu Agency படக்குறிப்பு,புரட்சிக்குப் பிறகு இரான் பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதித்திருந்தது புரட்சிக்கு பிறகு அமைந்த அரசாங்கங்களிலேயே, தற்போதைய அரசாங்கம் ஒருவேளை மற்றெல்லாவற்றையும் விட அதிக தாராளவாத போக்கு கொண்டதாக இருக்கலாம். ஆயதுல்லா கொமேனி இதை ஒருவேளை அங்கீகரித்திருக்க மாட்டார், ஆனால் இந்த அணுகுமுறை பல ஆண்டுகளாக இஸ்லாமியக் குடியரசைப் பாதுகாக்க உதவியுள்ளது. புரட்சிக்குப் பிறகு நான் முதன்முதலில் இரானுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்ட 1986-ஆம் ஆண்டிலேயே, புதிய இரானைப் பற்றி நான் உணர்ந்ததை இவ்வாறு விளக்கினேன்: அது 'நிலையானது, ஆனால் நிரந்தரமானது அல்ல' (Stable, but not permanent). இப்போதும் கூட நிலைமை அப்படித்தான் இருப்பதாகத் தோன்றுகிறது. ஊழல் குறித்து இரான் மக்களிடையே கோபம் மிகுந்திருந்தாலும், ஷா மன்னரின் ஆட்சியில் இருந்த அளவு இல்லை. தற்போதைய ஆட்சி முறைக்கு பெரிய அளவிலான அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லாததால், இரான் பெரும்பாலும் நிதானமாகவே தெரிகிறது. ஆனால், மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பலவீனமான தாராளவாத அரசாங்கத்திற்கும், அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள உறுதியான பழமைவாத மையத்திற்கும் இடையிலான இந்த விசித்திரமான சமநிலை என்றென்றும் நீடிக்கும் என்று நினைப்பது கடினம். பழிவாங்கும் உணர்ச்சியும், இரக்கமற்ற தன்மையும் கொண்ட கொமேனி தனது போயிங் 747 விமானத்தில் நாடு திரும்பியபோது கொண்டு வந்த அந்தத் தீவிரம் இப்போது பெருமளவில் தணிந்துவிட்டபோதிலும், அது இன்னும் அங்கே நீடித்திருக்கிறது. நாடு எப்படி ஆளப்பட வேண்டும் என்பதில் தாராளவாதிகளுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையே ஏதேனும் ஒரு அடிப்படை சமரசம் ஏற்படும் வரை, கொமேனியின் புரட்சி எப்போதும் ஒரு முற்றுப்பெறாத ஒன்றாகவே உணரப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c98gjdnk7dko
  13. குறைக்கப்படும் வேலை நாட்கள்? Mar 16, 2026 - 11:22 AM யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையிலான நேற்று (15) இரவு 8 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் எரிபொருள் தொடர்பில் சிக்கல் நிலைமைகள் எழுந்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள்களை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்கி, அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆராயும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறை (QR Code) தீவகப்பகுதி மக்கள் பயன்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகள், நீண்ட தூரங்களுக்கு பயணிக்கும் பாரஊர்திகளுக்கான எரிபொருள் விநியோக பொறிமுறைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும் சுகாதாரம், கல்வி, கைத்தொழில், விவசாயம், கடற்றொழில் போன்ற துறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தந்தத் துறைகளில் தற்போதைய எரிபொருள் தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதனைவிட டிஜிட்டல் குறியீட்டு முறை(QR Code) அறிமுகத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துவதுடன், எரிபொருளுக்காக நீண்ட வரிசை ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை அந்தந்த பிரதேச செயலாளர்கள் மட்டத்தில் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாறப்பண, பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் வட பிராந்திய முகாமையாளர் எஸ்.சிவகரன், பிரதேச செயலாளர்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கியமையால் , எரிபொருள் களஞ்சிய வசதிகள் கூட நாட்டில் இல்லை. அதனால் இருக்கிற எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவே QR மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உலகத்தில் தற்போது அசாதாரண நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. மத்திய கிழக்கின் போர் நிலைமை காரணமாக தற்போது ஈரான் வாழ்வா சாவா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஈரானில் உள்ள எண்ணெய் குதங்கள் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன, இதனால் உலகில் எண்ணெய் விலை கடுகதி வேகத்தில் உயர்ந்து செல்கிறது. 68 டொலராக இருந்த எண்ணெய் விலை தற்போது 100 டொலருக்கும் அதிகமாகி உள்ளது. இதனால், சுவிஸ், அமெரிக்கா, கனடா பிரான்ஸ் என எல்லா நாடுகளிலும் எரிபொருள் விலையேற்றம் காணப்படுகிறது. இலங்கையை பொறுத்த வரைக்கும், மே மாதம் வரைக்கும் தேவையான எரிபொருளே உள்ளது. எரிவாயும் அப்படித்தான். எமது நாட்டை பொறுத்த வரைக்கும் எரிபொருளை களஞ்சியபடுத்த போதிய அளவு களஞ்சிய வசதிகள். இல்லை. 38 நாட்களுக்கு மேல் களஞ்சியப்படுத்தி வைக்க முடியாத நிலைமையே காணப்படுகிறது, கடத்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கி உள்ளனர். அவர்களால் எரிபொருள் உள்ளிட்டவற்றை களஞ்சிய படுத்தி வைக்க கூடிய பெரியளவிலான களஞ்சிய சாலைகளை கூட அமைக்க முடியவில்லை. அவர்களின் தோல்வியே இன்று நாட்டு மக்களை வாட்டுகின்றது. தற்போது மே மாதம் வரைக்குமான எரிபொருள் கையிருப்பில் உள்ளமையால் அவற்றை சிக்கனமாக பயன்படுத்தவே QR பொறிமுறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம். கடற்தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு, அவர்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல பொருட்களை ஏற்றி இறக்கும் வாகனங்களுக்கும் தேவையான எரிபொருளை விநியோகிக்க விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என தெரிவித்தார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmmsrnbrg0003356pvrf83mgv
  14. போர் வேண்டாம் ; சுதந்திர பாலஸ்தீனம் வேண்டும் - ஒஸ்கார் விருது மேடையில் ஹொலிவூட் நடிகர் முழக்கம் Published By: Digital Desk 3 16 Mar, 2026 | 01:12 PM ஹொலிவூட் நடிகர் ஜேவியர் பார்டெம் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற ஒஸ்கார் விருது விழாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் போருக்கு எதிராகவும் குரல் கொடுத்த செய்தி சர்வதேச ரீதியில் வைரலாகி வருகின்றது. சிறந்த சர்வதேசத் திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதை வழங்குவதற்காக மேடைக்கு வந்த ஜேவியர் பார்டெம், தனது உரையை ஆரம்பிக்கும் போதே "போர் வேண்டாம் மற்றும் பாலஸ்தீனத்திற்கு விடுதலை வேண்டும்" என முழக்கமிட்டார். அவரது இந்தப் பேச்சு அங்கிருந்த பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கரகோஷத்தைப் பெற்றது. தனது டக்சிடோ உடையில் போருக்கு எதிரான சின்னம் மற்றும் பாலஸ்தீன ஆதரவுச் சின்னம் ஆகியவற்றையும் அவர் அணிந்திருந்தார். மத்திய கிழக்கில் தற்போது தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலில், ஹொலிவூட்டின் முன்னணி நடிகர் ஒருவர் நேரடி ஒளிபரப்பின் போது இத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பது சர்வதேச அரங்கில் ஒரு முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/241092
  15. Today
  16. குவைத் விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் Published By: Vishnu 16 Mar, 2026 | 04:43 AM குவைத் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் மூன்று ட்ரோன்கள் விமான நிலையத்தை குறிவைத்து ஏவப்பட்டதாகவும், அதனால் அங்குள்ள ரேடார் அமைப்பு சேதமடைந்ததாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மேலும் ஏவப்பட்ட ஐந்து ட்ரோன்களை குவைத் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக அழித்துள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/241060
  17. துரித கதியில் வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை! Mar 16, 2026 - 10:42 AM வட மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தையும் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைக்க எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். வளமான நாடு - அழகான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபாய் செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (15) நடைபெற்றது. இந்நிழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சுமார் 40 ஆண்டுகளின் பின்னர் இந்த அரசாங்கத்தால் இவ்வீதிக்கு விடிவு கிடைத்து, மக்களின் நீண்டகாலக் கனவு நனவாகியுள்ளது. காரைநகர் பிரதேசம் சுற்றுலாத்துறைக்குப் பிரபல்யமானதொரு இடமாகும். இதுவரை காலமும் மோசமான வீதியூடாகவே மக்கள் பயணித்து வந்தனர். இதனால் சுற்றுலாத்துறைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இவ்வீதி புனரமைக்கப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையின் வருகை பலமடங்கு அதிகரிக்கும் நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmmsq56mc000a356ph6axqreu
  18. யூகே ஒரு பெற்றோல் மிகை உற்பத்தி நாடு. ஆகவே விலை உலக சந்தைப்படி கூடினாலும் கையிருப்பு தீராது. டீசல் கார் வைதிருப்போருக்கு கொஞ்சம் சிக்கல் வரலாம். ஆனாலும் அதற்கும் வாய்ப்பில்லை. ஏன் என்றால் கத்தாரில் இருந்து வந்த எரிவாயுவை தவிர யூகேயின் எரிசக்தி தேவை நேரடியாக வளைகுடாவில் தங்கி இல்லை. ஆனால் கிழக்கு அரைக்கோள நாடுகளான ஆசியா, அவுஸ் மிக அதிக அளவில் தங்கி இருப்பது வளைகுடாவையே. எனவே எங்களுக்கு விலை பயங்கரமாக கூடும் ( சண்டை காரணமாக ஹொலிடேக்கள் கான்சல் எனவே அதற்குரிய காசை இதற்கு திருப்பி விட யோசித்துள்ளேன்) ஆனால் தட்டுப்பாடு வராது. குறிப்பாக பெற்றோலுக்கு. பிகு மின்சார சைக்கிள் சைத்துள்ளேன்.
  19. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 132 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 132 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" கடைசி பனி யுகம் சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்தது. 40,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவும் இன்றைய இலங்கையும் ஒரே நிலப்பரப்பாக இருந்தன. எனவே முதல் குழுவான கடற்கரையோரங்களில் ஒண்டித்திரிபவர் [Beach combers,], எந்த தீவையும் அப்பொழுது அங்கு காணவில்லை. ஆனால் ஒரு பெரும் நிலப்பரப்பைத் தான் கண்டனர். வடக்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள பனி மலைகளில் அதிக அளவு பூமியின் ஈரப்பதம் சிக்கியதால், கடந்த பனி யுகத்தின் போது கடல் மட்டம் சுமார் 120 மீட்டராகக் குறைந்தது. வட அமெரிக்காவில் உள்ள பெரிய ஏரிகள் அந்த பெரிய பனி மலைகளின் விளைவாகும். பனி மலைகளின் அதிக எடை பூமியை கீழே அழுத்தி வட அமெரிக்காவில் பெரிய ஏரிகளை உருவாக்கியது. ஆனால், ஆஸ்திரேலியா என்றென்றும் ஒரு தீவாகவே இருந்து வருகிறது. பனி யுகத்தின் போது கூட ஆஸ்திரேலியா அப்படியே ஒரு தீவாக இருந்துள்ளது. எனவே, கங்காரு போன்ற, அங்கு பரிணாமம் அடைந்த தனிப்பட்ட விலங்குகள், உலகின் வேறு எங்கும் காணப்படவில்லை. ஆனால், இலங்கைக்கு என ஒரு தனித்துவமான விலங்குகள் எதுவும் இல்லை. இலங்கையில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் இந்தியாவில் உள்ள விலங்குகளைப் போலவே உள்ளன. அதாவது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விலங்குகளின் நடமாட்டம் குறுக்கும் நெடுக்குமாக இருந்துள்ளது. இலங்கையில் யானைகள் இருப்பதை எப்படி விளக்க முடியும்? அது படகு மூலம் கட்டாயம் வந்திருக்காது! இன்று இலங்கையில் இருக்கும் யானைகள் மலை மற்றும் கடல் கடந்து வந்து இருப்பது என்பது சாத்தியமல்ல. இது ஒரு காலத்தில் நிலப்பரப்புத் தொடர்பு இருந்ததைக் காட்டுகிறது. தனபாக்கியம் குணபாலசிங்கம் என்பவரால் எழுதப்பட்ட "இலங்கையிற் தொல்லியலாய்வுகளும் திராவிடக் கலாசாரமும்" / Archeology & Dravidian culture for Srilanka by Thanapakkiyam Gunabalasingam in Tamil ' என்ற நூல், விட்டிபொட் மற்றும் கடைம்பொட் [Vittipot and Kadaimpot] ஆகிய இரண்டு சிங்களப் புத்தகங்கள் பற்றி குறிப்பிடுகிறது. இவை சமீப காலம் வரை வாய் வழியாகப் பரப்பப்பட்டு வந்தவை என்பது குறிப்பிடத் தக்கது. இந்நூல்களில், இராவணனின் தலைநகர், அவனது மரணத்துக்குப் பின் கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இராசாவலிய என்ற சிங்கள வரலாற்று நூலும், இராவணனின் கோட்டையும், 25 அரண்மனைகளும், 400,000 வீதிகளும் மன்னார் மற்றும் துத்துக்குடிக்கும் இடையே கடலில் மூழ்கியதாக, 27 ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. நாளாகமங்களை எழுதிய துறவி ஆசிரியர்கள், வங்கதேசத்திலிருந்து ஆண்கள் மட்டும் இலங்கை தீவுக்கு வந்ததாகவே குறிப்பிடுகின்றன. ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பற்றிச் சொல்லவில்லை. இலங்கை நாளாகமங்கள் வழக்கம் போல், நாடு கடத்தப்பட்ட பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் முற்றிலுமாக புறக்கணித்தன. அது ஏன் என்று புரியவில்லை? மணிமேகலை: மற்றொரு தமிழ் காப்பியமான மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கருப்பொருளின் தொடர்ச்சியாகும். இக்காப்பியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் வனத்திற்குப் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் மயக்கம் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விட்டாள். இன்று இலங்கையின் ஒரு பகுதியாக விளங்கும் ‘நயினா தீவு’ தான் மணிமேகலை குறிப்பிடும் மணிபல்லவத் தீவு என்று வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஏழு தீவுகளில் இந்த தீவும் ஒன்று. இதை நாகத்தீவு என்றும் அழைத்தனராம் . இந்த தீவுக்கு புத்தர் வந்து தங்கி இருந்தார் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. மேலும், மணிமேகலை சங்கமித்தாவுடன் ஒரு நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டு இருப்பதைக் காண்கிறோம். இருவரும் மிகவும் இளம் பௌத்த கன்னியாஸ்திரிகள் அல்லது பெண் புத்தத் துறவிகள் ஆகும். இருவரும் மிகவும் இளமையாக இலங்கைக்கு வந்தனர். Part: 132 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" The glacial period must have aided the peopling of Lanka. The propagation of Homo sapiens from Africa to the rest of the world commenced about seventy thousands, 70,000, years back. The earliest human group, somehow, crossed the Red sea, probably near the present day port city of Eden, walked along the sea coast. There are many subterranean artesian fresh water streams day-lighting along the coasts might have helped them quench their thirst and they might have got their food from land and sea. These Beach Combers reached western coast of India, and walked along the coast to reach the southern end of India, might be around 40,000 to 50,000 years ago. They kept on walking and eventually reached Australia. There are many references for this journey. However, the References 30, 31, 32, 33, 34 and 35 are recommended for further details. The References 33 and 34 are by Tamils currently domiciled in England. The Reference 33 is by Dr. Siva Thiyagarajah and is a detailed one, while the Reference 34 is a brief sketch of Peopling of Ceylon. Men and women walked together, and they must have had language to communicate, however crude it might have been. There might have been childbirths, deaths, sickness, dangers, adversities, jealousies and internal squabbling. Their language must have been adequate to keep going, meeting and resolving the issues along the way, from the Eastern Africa to Australia, some of course stopped half-ways and part-ways. I never studied biology during my school days, and spent years to understand the concept of evolution and DNA. It convinced me that no one is superior to any other. DNA sequence convinced me that. The last ice age ended about 7,000 years ago, and the first group, the Beach combers, found no island, but a landmass 40,000 to 50,000 years ago, India and the present day Ceylon forming one land mass. The sea levels dropped to about 120m during the last ice age as huge amount of earth moisture is trapped in the Ice Mountains in the Northern and Sothern Europe and Northern America. The huge lakes in the North America are the result of those huge mountains of ice. The heavy weight of the Ice Mountains compressed the earth below forming the Great Lakes in the North America. Australia has been an island forever, even during the ice age, and the evolution created animals typical to Australia, like Kangaroo, which are not found anywhere else. There are no such animals unique to Ceylon indicate no evolutionary uniqueness. The animals and the birds in Ceylon are same as those in India. There had been cross flow of animals between India to Ceylon, but the monkish authors of the chronicles assumed that men, not females, have to come from Vanga to people the Island of Lanka. The Lanka Chroniclers completely ignored, as usual, the exiled females and their children. How could one explain the presence of elephants in Ceylon? It would not have come by boat! The author of the Reference 29 mentions two Sinhala books, Vittipot and Kadaimpot, which have been orally carried on until very recently. It is stated in these books that the Capital city of Ravana was engulfed by sea after his death. These are the lingering frightful memories of the people of Tamil Nadu and Lanka about a sea deluge which happened not in very ancient and not very recent times. I believed initially it was an exaggerated deluge due to a Tsunami occurred in the olden days. The Rajavaliya specifically stated, see page 27 of the Rajavaliya, that Ravana’s fortress, 25 palaces, and 400,000 streets situated between Mannar and Tuttukudiya were submerged. This is one of the occasions in which the area of submergence of land is partly identified. The Tamil Epic Sillappathikaram also identified the location as Kumari land in the earlier quoted three lines, verses 18 to 20 of Canto 11 of Silappathikaram. I brushed this aside when I was commenting on the Rajavalia. I was working out the additional land area which became available to act as land bridge between Lanka and Indian landmass during the glacial period due to the dropping down of the sea levels. I used the Bathymetric contours to identify the land area which would have been exposed. The Bathymetric contours to the south of an imaginary line running East-West, somewhat below Mannar, are entirely different from the contours to the north of the same imaginary East-West line. These contour maps are given below. The first map shows the Bathymetric contours to the north of that imaginary East-West line. The depth to the sea bottom is about 10 to 20m in the Palk Strait. The hatched area in the second map shows the additional land became exposed when the sea level dropped by 30m.The entire Palk Straight is dry now and people and animal had free passage. The third map shows the exposed land area when sea level dropped by 100m. The Beachcombers might have walked through these hatched areas. Some, of course, might have stay put around these areas. They must be the forefathers of Mr. Virumandi Andithevar of Jothimanicam village in Madurai. See the picture of him on the page 98 of Reference 33. His clans might have populated Ceylon too. The fourth map gives the Bathymetric contours to the south of the earlier mentioned East-West line. The Bathymetric levels rapidly descend to 3000 to 4000m. See the thick dotted line connecting the Cape Comorin (Kannyakumari) to southern part of Ceylon. The edge of the disappeared land mentioned in the Tamil epic and in the Sinhala ancient works might have had been that dotted line. It could be that the mountain ranges of the central and southern part of Lanka is the continuation of the Western Ghats mountain ranges running along the western coast of India from Mumbai to the Cape Comorin, with intermittent gaps through which roads connecting East and West run. This mountain range is the main reason for the rain fall during the Monsoonal winds. There must have existed mountains between the western coast of Lanka from Mannar to Galle and between the coastal lines from Rameswaram to Kannyakumari (Cape Comorin) through Tutthukudi. There must have been rivers running around these mountains. Something must have caused a slope stability failure, perhaps due to the erosion of those rivers running around it or due to the Tectonic Plate sliding nearby or both. Tectonic Plate movements cause Tsunami. The slope stability failure caused the mountain and the land to end up deep down to the bottom of about 3000 to 4000m. This must have happened about 4000 to 5000 years before present and the memory persisted. This time frame is very insignificant in the evolutionary and geological time scales. This is the reason for flora and fauna are similar on both sides. If some neutral agencies conduct random DNA sampling and analysis in sufficient numbers of people on both sides then it would confirm that the people of Tamil Nadu and Ceylon are closely related to each other than with others. The Bathymetric contour maps are given after the commentary on the Epic Mannimeghalai. The additional areas which became available due to the dropping of sea level are hatched. Mannimeghalai: The other Tamil Epic Mannimeghalai is the continuation of the theme set out in the Epic Silappathikaram. The aforementioned daughter of Madhavi, Mannimeghalai, became a young Buddhist nun. She was also taken to an island called Mannipallavam in Lanka by the sea goddess Mannimeghalai. We, the natives of the island Nainativu in the Jaffna District, fondly believe that the Mannipallavam was the former name for Nainativu. The Ceylon Government too believed so and, built two Buddhist Viharas there during the years of the State Council. The Burmese Government too partly funded the construction. These Buddhist Viharas became the policy arms of the chauvinistic Buddhists with the active help of the government. Strangely, then came the Navy and the Army detachments to protect the peace loving Buddha’s abode. The population of Nainativu in the 1961 census was well over five thousands, and it should have been now about, with a natural increase of about 3% per annum, thirty thousands. However, thanks to the Buddha and his guardian detachments of Navy and Army, the population now is not more than one thousand, only about one fifth of what it was sixty years ago. The Buddha is a coloniser in my native village. This Navy detachment played a major role in the massacre of the passengers of the Kumudini boat, on the name of Buddha. About seventy passengers were brutally massacred by the Sri Lankan Navy detachment based there. Mannimeghalai had close resemblance with Samghamitta; both are very young Buddhist nuns. Both came to Ceylon very young. The References 29. Illankayir(t) Tolliyalaivukalum Diradidak Kalaccaramum (In Tamil) by Thanapakkiyam Kunapalasingam, 2001, Mannimeghala Publication. (Archaeological Researches in Ceylon and the Dravidian Cultures) 30. The Great Human Diaspora: The History of Diversity and Evolution By Luigi Luca Cavalli-Sforsa and Francesco Cavalli-Sforsa, 1995, translated from Italian to English 31. The Journey of Man – A Genetic Odessy by Spencer Wells, 2001 32. Deep Ancestry by Spencer Wells, ISBN:0-7922-625-8 33. Peoples and Cultures of Early Sri Lanka by Dr. Siva Thiyagarajah, 2011, ISBN:1 85201 025 8 34. Peopling of Sri Lanka by Subramanian Visakan, 2010, ISBN: 1 85201 022 3 35. Mapping of Human History by Steve Olson, 2002 நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 133 தொடரும் / Will follow துளி/DROP: 2092 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 132 https://www.facebook.com/groups/978753388866632/posts/34292369700411572/? "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 133 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 133 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" மணிமேகலை மணிபல்லவம் தீவுக்கு உற்சாகமாகச் சென்றார். அத்தீவில் மணிமேகலை ஒரு அற்புதமான புத்த பீடிகை [இருக்கை] ஒன்றைக் கண்டாள். “அறவோர் அமரும் ஆசனம்” என்பதை உணர்த்தும் வகையில், அந்த பீடிகையில் நறுமணம் மிக்க மலர்களைத் தவிர பிற மலர்கள் இல்லை. அந்த பேரொளி மின்னும் அந்தப் பீடிகை மூலம், மணிமேகலை தனது முற்பிறப்பைப் பற்றி, அதாவது தனது கடந்தகால வாழ்க்கையைக் கற்றுக் கொண்டாள். அந்த கமல பீடத்தை அடைந்த மணிமேகலை, அதன் அழகில் மனதைப் பறி கொடுத்தாள், மூன்று முறை அந்த பீடத்தைச் சுற்றி வந்து வணங்கினாள். அங்குதான் மணிமேகலையின் முற்பிறப்பின் முடிச்சு அவளுக்கு அவிழ்க்கப்படுகிறது. கீழ்த்திசை நாக நாட்டைச் சார்ந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மன்னர்கள் அந்த பீடிகையில் அமர உரிமை கேட்டு போர் தொடுக்க முற்பட்டபோது, புத்த பெருமான் அந்த பீடத்தில் தானே ஏறி அமர்ந்து, தனக்கென இருக்கையை கோரினார் என்ற வரலாறு அந்த இடத்திற்கு உண்டு. அந்த இடம் அழகும், அமைதியும் கொண்டு விளங்கியது. முழுவிளக்கத்துக்கும், மணிமேகலை காவியத்தின் 8வது காண்டத்தின் இறுதிப் பகுதியைப் பார்க்கவும். "பறவையும் முதிர்சிறை பாங்குசென்று அதிராது தேவர்கோன் இட்ட மாமணிப் பீடிகை பிறப்புவிளங்கு அவிர்ஒளி அறத்தகை ஆசனம் கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும் இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி எமதுஈது என்றே எடுக்கல் ஆற்றார் தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார் செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத் தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள் இருஞ்செரு ஒழிமின் எமதுஈது என்றே பெருந்தவ முனிவன் இருந்துஅறம் உரைக்கும் பொருஅறு சிறப்பில் புரையோர் ஏத்தும் தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்." காண்போரது பழம் பிறப்பு விளங்குதற்கு ஏதுவாகிய ஒளி பொருந்திய அறத்தினியல்புடைய, சிறப்பு பொருந்திய, இந்திரனாலிடப்பட்ட பெருமை பொருந்திய மணிகளாலான பீடிகை அல்லது ஆசனம் அதுவாகும். அதுமட்டும் அல்ல, பறவைகளும் அப்பீடிகையின் பக்கத்திற் சென்று சிறையொலி செய்யாது மதிப்பளிக்கும் என்று மேலும் கூறுகிறது. கீழ்த் திசைக்கண் உள்ள நாக நாட்டினை ஆளும் மன்னவர் இருவர் ஒருங்கு தோன்றி, இஃது எம் முடையது எம்முடையது என்று கூறி எடுக்கவும் இயலாதவர்களாய்த் தம்முடைய பெரிய விருப்பம நீங்குதலையும் செய்யாதவர்களாய், சிவந்த கண்கள் சினத்தாற் சிவந்து மனங்கொதித்து, தம்முடைய பெருஞ் சேனைகளுடம் கொடிய போர் புரியுநாளில், நீவிர் நுமது பெரிய போரை நீங்குமின் இஃது எம்முடையது என்று கூறி, பெரிய தவமுனிவனாகிய புத்தன் இருந்து அறம் உரைத்த, ஒப்பற்ற சிறப்பினையுடைய உயர்ந்தோர்கள் துதிக்கின்ற, தரும பீடிகை அவ்விடத்தில் தோன்றியது என்க என்கிறது. மேற்கண்ட கதை தீபவம்சத்தின் இரண்டாவது அத்தியாயத்திலும், மகாவம்சத்தின் முதல் அத்தியாயம் 44 முதல் 70 வரையிலான வசனங்களிலும், புத்தர் இலங்கைக்கு இரண்டாவது முறை வருகை தந்தபோது சித்தரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. என்றாலும் நாளாகமங்களில் ஒரு சிம்மாசனத்திற்காக சண்டை நடந்தது. புத்தர் ஏற்கனவே தனது சொந்த சிம்மாசனத்தையும் [அரியணையையும்], பிம்பிசார மன்னரால் அவருக்கு வழங்கப்பட்ட சிம்மாசனத்தையும் துறந்து விலகிச் சென்றவர் என்பதால், அவர் இங்கு இலங்கை நூல்களில் ஒரு சிம்மாசனத்தை கோருவது விசித்திரமாக இருக்கிறது. ஆனால், மணிமேகலை காப்பியத்தில், மேலே கொடுக்கப்பட்டுள்ளபடி, அந்த இருக்கை பெரிய முனிவர் [பெருந்தவ முனிவன்] அமர்ந்து தர்மத்தைப் போதிக்க [பிரசங்கிக்க] இருந்ததாக கூறப்படுகிறது. இது உண்மையில் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. Part: 133 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" Mannimeghalai was spirited away to the island of Mannipallavam where she learnt her past life from a miraculous Buddha Seat. Two Naga kings of same family were fighting for the Buddha Seat. The Buddha then came to the spot and claimed the seat for himself. Refer ending portion of the canto 8 of the Epic Mannimeghalai. பறவையும்முதிர்சிறைபாங்குசென்றுஅதிராது தேவர்கோன்இட்டமாமணிப்பீடிகை பிறப்புவிளங்குஅவிர்ஒளிஅறத்தகைஆசனம் கீழ்நிலமருங்கின்நாகநாடுஆளும் இருவர்மன்னவர்ஒருவழித்தோன்றி எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார் தம்பெரும்பற்று நீங்கலும் நீங்கார் செங்கண்சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத் தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம்புரிநாள் இருஞ் செருஒழிமின் எமதுஈது என்றே பெருந்தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும் பொரு அறு சிறப்பில் புரையோர் ஏத்தும் தருமபீடிகை தோன்றியது ஆங்குஎன். The brief translation of the above verses: Quote ‘She wandered about till she came to what seemed a seat of the Buddha. The seat had been placed there by Indra, and had the miraculous power to let those who worshipped it know their previous life, as the Buddha himself had delivered a sermon sitting on it. This happened on the occasion when two neighbouring Naga chiefs, related to each other, fought for possession of it. As the war proved destructive Buddha appeared before them and pacified the combatants by preaching the sermon’. Unquote The above story is depicted in the second chapter of the Dipavamsa, and in the first chapter of the Mahavamsa, from verses 44 to 70, during the second visit of the Buddha to Lanka. The fight was for a throne in the chronicles. It is strange for the Buddha to claim a throne as he already renounced and walked away from his own throne and the throne offered to him by the King Bimbisara. In the Epic Mannimeghalai, as given above in the translation, the Seat was for the Buddha to sit and preach Dhamma. This makes sense. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 134 தொடரும் / Will follow துளி/DROP: 2094 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 133 https://www.facebook.com/groups/978753388866632/posts/34309137428734799/?
  20. சிறு கதை - 203 / காயமுற்ற தோளும் குணமடையாத நிலமும் யாழின்பன் ஓய்வு பெற்ற நாளில், அவனது வீட்டில் எந்தக் கொண்டாட்டமும் நடைபெறவில்லை. வடக்கில் ஓய்வு என்பது ஓர் முடிவல்ல; அது எதோ ஒரு வழியில் தொடர்ந்து கொண்டு இருப்பதுடன், அது மெதுவாக அவரை அங்கு அமைதிக்குள் கரைத்துவிடும். காலை எழும் பழக்கம் அவனை விட்டு விலகவில்லை. கடிகாரம் இனி கட்டளையிடவில்லை; ஆனாலும் உடல் பழைய கட்டளைகளை மறக்கத் தயாராக இன்னும் இல்லை. அது அதைப் பழக்க சில பல மாதங்கள் எடுக்கலாம். யாழின்பன் எழுந்தபோது வலது தோள் முதலில் விழித்தது. பிறகு அவன். வலி ஒரு தாக்குதல் போல வரவில்லை; அது நீண்ட நாட்களாகப் பழகிய ஒருவனைப் போல அருகில் வந்து உட்கார்ந்தது. பக்கத்தில் படுத்து இருந்த அகல்விழி அவன் முகத்தைப் பார்த்தவுடனே புரிந்துகொண்டாள். அவள் கேட்கவில்லை; கேட்க வேண்டியதில்லை. சில உண்மைகள் வார்த்தைகள் இல்லாமல் வெளிப்படும் என்பதை அவள் நீண்ட காலத்திற்கு முன்பே கற்றுக்கொண்டாள். வேம்படி மகளிர் பள்ளியில் படித்த காலத்திலிருந்து அவள் கற்றிருந்தது — சத்தமில்லாமல் புரிந்து கொள்வது. அவன் வாழ்க்கையில் வலி புதிதல்ல; ஆனால் இப்போது அது நிரந்தரமாக உடனிருந்தது. சர்க்கரை நோய் அவனிடம் எந்த அனுமதியும் கேட்காமல், அறிவிப்பு இல்லாமல் வந்த சட்டம் போல, குடியேறியிருந்தது. காலை மாத்திரை, அளவான உணவு, நேரம் பார்த்து நடப்பது—அவை எல்லாம் அவன் நாளின் பகுதிகளாகிவிட்டன. வடக்கில் மக்கள் இப்படித்தான் வாழப் பழகியிருந்தார்கள். முழு சுதந்திரமில்லை; அதே நேரத்தில் வாழ்வை கைவிடவும் இல்லை. தடைப்பட்ட சூழலில் கூட உயிர் வாழ்வதற்கான ஒழுங்கை அவர்கள் கற்றிருந்தார்கள். ஒருகாலத்தில் மாணவர்களை நேரத்திற்கு வகுப்புக்குள் அனுப்பியவன், இப்போது தன் உடலை ஒழுங்குக்குள் வைத்திருக்க வேண்டிய நிலையில் இருந்தான். நாற்பது வயது தொப்பை விழுகுது கருத்த முடி நரை விழுகுது ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது சோர்வான உடல் எதோ கேட்குது ஐம்பதில் எறியதில் மகிழ்ச்சி அடையுது! ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது வேலையில் இருந்து ஒய்வைக் கேட்குது அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது தலைமுதல் கால் விரல்கள் வரை படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது! கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது தோள்மூட்டு வலி குந்தி இருக்குது பச்சைக் காய்கறி பழக் கலவையுடன் [சாலட்] விரலை குத்தி சீனி பார்க்குது நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது! யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரியில் படித்த காலத்தில், கல்வி என்பது ஒரு நம்பிக்கை. வளைந்த வரலாற்றை நேராக்கும் கருவி. சிதைந்த சமூகத்தை மீண்டும் நிமிர்த்தும் சக்தி என்று முழுமையாக உணர்ந்தான் . வரலாறு கூட புத்தகங்களில் சீராக எழுதப்பட்டால், இனப்பிரச்சனை கூட மாறிவிடும் என்று நினைத்தான். அவனுக்கு அங்கே அமைதியைப் பயிற்றுவித்த கல்வி, அவனுக்கு ஒழுக்கமும் கற்றுக் கொடுத்தது. அதுமட்டும் அல்ல, ஒழுக்கமும் அறிவும் போதுமானால் அநீதிக்கு ஒரு முடிவு உண்டு என்று அவனை நம்ப வைத்தது யாழ் மத்திய கல்லூரி. அப்போது அவன் நம்பினான்— படித்தால் போதும். அறிந்தால் மாற்றம் வரும். வரலாறு கூட தன் பிழைகளைச் சீர்செய்து கொள்ளும் என்று. ஆனால் பேராதனையில் பல்கலைக்கழகத்தில் அந்த நம்பிக்கை மெதுவாக உரசியெடுக்கப்பட்டது. அவன் வேறு ஒன்றைக் அங்கு கற்றான்— அறிவு மனதை கூர்மையாக்குகிறது. ஆனால் அதிகாரத்தை மென்மையாக்குவதில்லை. அறிவு கேள்வி எழுப்பச் சொல்லுகிறது. ஆனால் பதில் கிடைக்குமா என்பது அதிகாரத்தின் விருப்பம். அங்கே தான் அவன் உணர்ந்தான்— கல்வி ஒடுக்குமுறையை விளக்கக் கற்றுத் தருகிறது. அதை நிறுத்துவதில்லை. உண்மை சொல்லப்படலாம். ஆனால் அது கேட்கப்பட வேண்டியதில்லை அந்த வளாகத்தில்தான் அகல்விழி அவன் வாழ்க்கைக்குள் முழுமையாக நுழைந்தாள். பாடசாலை காலத்தில், அவர்களின் பாடசாலை அருகருகே இருந்ததாலும், அவள் அழகு யாரையும் திரும்பி பார்க்க வைத்ததாலும், அவன் ஒரு சிறப்பு வாய்ந்த கிரிக்கெட் மற்றும் கால்பந்து வீரர் என்பதாலும், ஒருவரை ஒருவர் தூரத்தில் ரசித்துள்ளார்கள். அந்த அறிமுகம் தான் அவர்களை பல்கலைக்கழகத்தில் ஒன்று சேர்த்தது. அவள் யாழ்ப்பாணத்தின் ஒரு அமைதியான மாலை போல அழகாக அமைதியாக இருந்தாள். அவளிடம் சத்தம் இல்லை. ஆனால் உள்ளே உறுதி இருந்தது. அவர்கள் இருவரும் கூடுதலான கவனம், படிப்பில் செலுத்தியதால், அவர்கள் காதல் தீவிரமாக இல்லை; அது அவசரமாகவும் இல்லை. அவன் பேசினான். அவள் கேட்டாள். அவன் கனவுகளைச் சொன்னான். அவள் அவற்றை நிலத்தில் பதிய வைத்தாள். அவர்களுடைய காதல் இன்றைய பாடல் போலவும் இல்லை. அன்றைய கவிதை போலவும் இல்லை. ஒரு நீண்ட நடைபாதை உரையாடல்கள் போல இருந்தது. மெதுவான சம்மதங்கள், ஒரே கனவின் இரு குரல்கள் மட்டுமே. பேராதனையில் தான் அவன் உடல் முதன்முறையாக அரசியலைச் சந்தித்தது. கூட்டங்கள், முழக்கங்கள், காவலர்கள், ஓட்டம், தடியடி —அந்த நாட்களில் அவன் தோள்கள் வலிக்கவில்லை. இருவரும் தங்கள் தங்கள் பட்டப்படிப்பு முடிந்ததும், இலங்கையின் மாற்றப்பகுதிகளில் வேலைக்குப் போகாமல், வடக்கிற்கு திரும்பியது நிலம் குணமடைந்ததால் அல்ல. அது இன்னும் காயமுற்றிருந்தது; மண் நிம்மதி அற்று உறங்க முடியாமல் இருந்தது. பல உத்தியோகத்தர்கள் வடக்கு மண்ணை விட்டு வெளியே போய்க்கொண்டு இருந்தார்கள். அங்கே அவர்களின் பணி [சேவை] தேவையாக இருந்தது; அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு, அழிந்த வீடுகள். மாறாத முகாம்கள். சாதாரணமாக்கப்பட்ட அநீதிகள் எல்லாம் ஒன்றாக காணப்படும் அந்த நிலத்தில் அவர்கள் வேலை பார்த்தார்கள். ஆனால் நிம்மதி இல்லை. அடிக்கடி ஊரடங்கு, சோதனைகள், சந்தேகப் பார்வைகள்— அவை நாளாந்த வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்தன. அவன் உடல் அதையெல்லாம் தாங்கியது. அப்போது தோள் வலிக்கவில்லை. அவர்களுக்கு ஒரு மகன். ஒரு மகள். அவர்கள் படித்தார்கள். திருமணம் ஆனது. பிள்ளைகள் பிறந்தார்கள். இப்போது பேரக்குழந்தைகள் அவனை “தாத்தா” என்று அழைக்கிறார்கள். அந்தச் சொல் அவனை வயதானவனாக்கவில்லை. மாறாக முழுமையாக்கியது. அவன் அவர்களை தூக்கினான். தோளில் அமர வைத்தான். அப்போது கூட அவன் தோள் சத்தமில்லாமல் அதை சகித்துக் கொண்டிருந்தது. வலது தோள்பட்டை வலி அவன் ஓய்வு பெற்ற பிறகுதான் தெளிவாகத் தோன்றியது. இப்போது மட்டும் ஏன் என்று அவன் கேட்டபோது, மருத்துவர் சிரித்தபடி சொன்னார்: “இதெல்லாம் இப்போ ஆரம்பிச்சது இல்லை. பல வருடங்களின் தேக்கம்.” - அவன் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திய பக்கம் தான் வலது பக்கம். கணினியில் தட்டச்சு செய்ய , தூக்க, சுமக்க, பந்து வீச, பந்து அடிக்க .... யாழின்பன் சிரித்தான். வடக்கில் இப்போது நடப்பவை எல்லாம் இப்போது ஆரம்பித்தது இல்லை. எல்லாமே பல தசாப்தங்களின் தேக்கம் தான். 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியிலிருந்து இலங்கை அரசியல் சுதந்திரம் பெற்றதுடன், நாட்டின் அதிகார அமைப்புகள் புதிய வடிவம் பெற்றன. ஆனால் அந்த மாற்றம், தமிழர்களுக்குச் சம உரிமையும் பாதுகாப்பையும் வழங்கவில்லை. மாறாக, சிங்கள–பௌத்த ஆதிக்க அரசியல் கோட்பாடுகள் வலுப்பெற்று, மொழி, கல்வி, வேலைவாய்ப்பு, குடியுரிமை, மண் உரிமை, சமய உரிமை, சம உரிமை ...... ஆகிய தளங்களில் எல்லாமே சேர்ந்து சேர்ந்துதான், தமிழர்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட அடக்குமுறை உருவாகத் தொடங்கியது. அவரது எக்ஸ்-ரே “கிழிவும் தேய்வும்” உண்டு என்றது. ஆனால் “இடைவெளி இன்னும் உள்ளது.” மருத்துவர் சொன்னார்: “முழுமையான குணம் இல்லை. ஆனால் கையாளலாம்.” ஆனால், யாழின்பன் மருத்துவத் தீர்ப்பைத் தாண்டி ஒரு அர்த்தம் கண்டான். மண்ணுக்கும் கிழிவும் தேய்வும் உண்டு. பல தசாப்தங்களின் அழுத்தம். கண்காணிப்பு. சுரண்டல். ஆனால் அங்கேயும் இடைவெளி உண்டு— பயத்துக்கும் மரியாதைக்கும் இடையில், இழப்புக்கும் நினைவுக்கும் இடையில். “பின்னாளில் மூட்டு வாதம் வரலாம்,” மருத்துவர் எச்சரித்தார். அரசியல் சிதைவுபோல்— தவிர்க்க முடியாதது அல்ல; அலட்சியம் செய்தால் நிச்சயம். “வழக்கமான உடற்பயிற்சி அவசியம்,” மருத்துவர் சொன்னார். “இயக்கம் முக்கியம்.” யாழின்பன் உள்ளுக்குள் சிரித்தான். இயக்கம் எப்போதும் முக்கியம் தான். வேலி போட்டபோது மனம் நகர்ந்தது. வாய் மூடப்பட்டபோது உண்மை பாடல்களிலும் சடங்குகளிலும் மௌனங்களிலும் நகர்ந்தது. வலி அதிகமானால் ஊசி போடவேண்டும். இல்லாட்டி வலி நிவாரணி எடுக்கவேண்டும்.” யாழின்பன் மீண்டும் சிரித்தான். அவன் மனதில் ஒரே எண்ணம் ஓடியது— உடலுக்கும் நிலத்துக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை. குணமடையாதது. கட்டுப்படுத்துவது. வலியை பழக்குவது. வலி அவனை முன்கூட்டியே ஓய்வுக்கு தள்ளியது. வேலைக்கு செல்லும் திறன் இருந்தாலும், உடல் ஒத்துழைக்கவில்லை. நாள் முழுவதும் கணினி முன் உட்கார முடியவில்லை; தோள் எரிந்தது. சில நாட்கள் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டை மீறியது. மருந்துகள் உதவின; ஆனால் முழுமையாகக் குணப்படுத்தவில்லை. அவன் மெதுவாக வாழ கற்றுக்கொண்டான். வேகமாக நடக்கவில்லை. கனமான பொருட்களைத் தூக்கவில்லை. ஆனால் வாழ்க்கையின் பாரத்தையும் தனது மனக்குமுறலையும் சேர்த்து அகல்விழியோடு சுமந்தான். விழியற்ற தராசு நீதி தராது அழிவுற்ற சமூகத்துக்கு விடை கொடுக்காது! வலியற்ற வாழ்க்கை உண்மை அறியாது நலிவுற்ற மக்கள் கவலை புரியாது! ஈரமுள்ள மனையாள் கருணை காட்டிட பாரமான வலியும் மறைந்து போகுமே! நிறைவுள்ள நட்பு அன்பைக் கொட்டிட கறைபிடித்த அரசியலிலும் நிமிர்ந்து நிற்கலாமே! அவள் அவனை ஒருபோதும் பலவீனன் என்று நினைக்கவில்லை. “நீ எல்லாவற்றையும் ஒரே தோளில் சுமக்கிறாய்,” என்று ஒருநாள் மெதுவாகச் சொன்னாள். அது உடலைப் பற்றியதல்ல. குடும்பம், குழந்தைகள், நினைவுகள், ஒரு நிலத்தின் வலி—அவை எல்லாம் அவன் வலது தோளில் கூடிவிட்டதுபோல் இருந்தது. அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் இளமை இருந்தது; வலியும் இருந்தது. பேரக்குழந்தைகள் வந்தபோது வீடு உயிர் பெற்றது. அவர்கள் ஓடினார்கள், சிரித்தார்கள், அவன் மடியில் ஏறினார்கள். அவன் அவர்களைத் தூக்கினான்—இரு கைகளாலும், மெதுவாக. வலி வந்தது; ஆனால் அவன் முகத்தில் அது தெரியவில்லை. அவன் நினைத்தான்: இவர்களுக்கு நான் என்ன கொடுக்கிறேன்? ஒரு காயமுற்ற நிலத்தின் கதையா, அல்லது அதையும் தாண்டி நிற்கும் பாசத்தின் உதாரணமா? அகல்விழி அலுவலகத்திலிருந்து ஒரு மாலை தாமதமாக வந்தாள். யாழின்பன் வீட்டின் முன் தோட்டம் சுத்தம் செய்துகொண்டிருந்தான். “இன்னும் முன்போல் வேலை செய்யாதே,” என்று சொன்னாள். அவன் நின்று அவளை பார்த்தான். அந்த பார்வையில் இளம் வயது காதலும் முப்பத்தி மூன்று ஆண்டுகளின் உடன்பாடும் ஒன்றாக இருந்தது. “நம்ம வாழ்க்கையும் இந்த நிலம் மாதிரி தான்,” என்று அவன் சொன்னான். “காயமிருக்கு. ஆனா இன்னும் வாழுது.” அகல்விழி சிரித்தாள்.அவள் கை அவனது வலது தோளில் மெதுவாக அமர்ந்தது. ஒரு இரவு பேரக்குழந்தைகள் அவனிடம் கதை கேட்டார்கள். அவன் போரைக் கூறவில்லை. வலியைச் சொல்லவில்லை. அவன் சொன்னது— ஒரு பள்ளி. ஒரு பல்கலைக்கழகம். ஒரு பெண். ஒரு வாழ்க்கை. அவன் முடித்தபோது அவனது தோள் வலித்தது. ஆனால் அவனது மனம் அமைதியாக இருந்தது. அந்த இரவு யாழின்பன் அகல்விழியின் அருகில் அமைதியாக படுத்துக்கொண்டான். ஆனால் அவன் தோள் இன்னும் வலித்துக் கொண்டே இருந்தது. சில நேரம் மனமும் கூட. அகல்விழியின் கை அவன் வலது தோளில் மெதுவாக அமர்ந்தபோதும், அவன் வலி குறையவில்லை; ஆனால் அர்த்தம் மாறியது. அது இனி தனிப்பட்ட வலி அல்ல; பகிரப்பட்ட வாழ்க்கையின் ஒரு பகுதி. யாழின்பன் புரிந்துகொண்டான்—சில காயங்கள் குணமடையாது. உடலில். நிலத்தில். ஆனால் காதல் இருந்தால் அவை மனிதனை முறிக்காது. மெதுவாக வாழவும், வலியோடு கூட நேசிக்கவும் கற்றுத்தரும். காயமுற்ற தோளோடும், குணமடையாத நிலத்தோடும், அவன் இன்னும் வாழ்ந்துகொண்டிருந்தான்— அகல்விழியுடன். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 2093 [சிறு கதை - 203 / காயமுற்ற தோளும் குணமடையாத நிலமும் https://www.facebook.com/groups/978753388866632/posts/34309069208741621/?
  21. "மூன்று கவிதைகள் / 30" 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' அன்பு இதயத்தின் திறந்த வாசல் பண்பு காட்டும் உயரிய நேசம் தாழ் இன்றி தழுவும் பாசம் வாழ்வு செழிக்க ஊட்டும் நேயம் கண்ணீர் துளியும் கதவு திறக்கும் மண்ணில் அன்பே என்றும் நிலைக்கும் [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] ......................................................... 'பக்கத்து வீட்டு பருவ நிலா' பக்கத்து வீட்டு பருவ நிலா வெட்கத்தை விட்டு ஆடிப் பாடுது தூக்கத்தை கலைத்து துடிப்பைத் தந்து ஏக்கத்தை கூட்டி மனதை வாட்டுது ஊக்கத்தை கெடுத்து கனவில் கிடத்துது! கேட்காத இனிமை காதில் ஒலித்தது வாட்டாத நிலவு வானத்தில் ஒளிர்ந்தது மொட்டு விரிந்து வாசனை தந்தது ஒட்டி உடையில் அழகு காட்டி எட்டிப் பார்த்து இன்பம் பொழிந்தது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. 'புகைப்படக் கவிதை ' யாழ்ப்பாணக் கோட்டை நிமிர்ந்து நிற்குது பண்ணைக் கடலும் அலை வீசுது அன்புத் தோழன் அருகில் நின்றவன் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டான்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 2091 ["மூன்று கவிதைகள் / 30" https://www.facebook.com/groups/978753388866632/posts/34292290643752811/?
  22. பனிப்போர் என்ற பதத்தின் பொருள் தெரியாமலா இத்தனை காலம் குப்பை கொட்டுறம்😂 ஆனால் அந்த பனிப்போருக்கு ஈடுபடும் இருதரப்புக்கும் உலகளாவிய ரீச் இருக்க வேண்டும். வலு சமநிலையும் இருக்க வேண்டும். இப்போ ஈரானில் நடப்பது சமச்சீர் அற்ற யுத்தம். Asymmetrical warfare. அதனால்தான் அமெரிக்கா முக்குகிறது. ஆனால் ஈரான் போன்ற ஒரு நாட்டால் பனிப்போர் வலுச்சமநிலையை அமெரிக்காவோடு ஏற்படுத்த முடியாது. அது செத்த கிளியாலும் இனி முடியாது. சீனாவால் மட்டுமே முயற்சிக்க கூடியது. ஆனால் சீனா தனக்கான நேரம் வந்ததாக கருதவில்லை போல் படுகிறது. இவை என்றும் ஈரானுடன் சண்டைக்கு போனதில்லை. ஒபாமா கொண்டு வந்த அணு சோதனை உடன்படிக்கையை கூட நிண்டு செய்தவர்கள் பிரான்ஸ். ஈராக்குக்கு கூட இவர்கள் போகவில்லை . ஐரோப்பாவின் முதன்மை ஆபத்து ரஸ்யா என்பதில் ஐரோப்பா தெளிவாக உள்ளது. ஆகவே அவர்கள் இந்தியா, சீனா போல் ஈரானை அணுக விரும்புகிறார்கள். இதை சாட்சிகாரன், சண்டை காரன் என பார்க்க முடியாது என நினைக்கிறேன். ஐரோப்பாவுக்கு சண்டைகாரன் செத்த கிளிதான். ஈரான் ஐரோப்பாவின் நிலங்களை விழுங்கபோவதில்லை.
  23. தேர்தலுக்கு காசு கொடுப்போர் ஒருவகை, தேர்தலுக்கு காசு வாங்குவோர் ஒருவகை, இரெண்டும் உலகில் சம நீதி😂 -பேராசான் செவத்தி-
  24. உலக நாடுகள் அனைத்தும் - தம்பருக்கு கையை விரித்து விட்டன😂. நல்ல வேளையாக இங்கே கன்சேவேடிவ் கட்சி ஆட்சியில் இல்லை. இல்லாட்டில் எம்மையும் கொண்டுபோய் இதில் மாட்டி விட்டிருப்பார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.