stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
சமூகப் பார்வை (பயம்)??¿
விசுகரின் எழுத்தில் சில குழப்பங்கள் இருக்கின்றன. மாதாந்த இரத்தப் போக்கை சில ஹோர்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் பிற்போடலாம் (period delaying pills). இந்தக் குளிசையை நிறுத்தியவுடன் 3 நாட்களில் மாதாந்த இரத்தப் போக்கு ஆரம்பிக்கும். ஆனால், இந்த நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தப் படும் மாத்திரை கருத்தடை மாத்திரை அல்ல. இதை எடுத்துக் கொண்டு உடலுறவு கொண்டால், கருத் தரிக்கும். பக்க விளைவுகள் சில உண்டு: உடலில் நீர் சேர்தல் (இதனால் வயிறு ஊதியது போல உணர்தல்), தலை வலி, நிறுத்தியவுடன் அதிக இரத்தப் போக்கோடு மாதாந்த இரத்தப் போக்கு உருவாதல் என்பன பரவலான பக்க விளைவுகள். ஆபத்துக்கள்: இரத்தம் இலகுவாக உறையக் கூடிய கண்டறியப் படாத நோய் நிலை (blood clotting disorders) சிலரில் இருக்கலாம். அத்தகைய நோய் நிலை இருப்போரில் இரத்தக் கட்டிகள், மூளை இரத்த அடைப்பு என்பன ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால் தான் மருத்துவர் சில பரிசோதனைகளைச் செய்த பின்னர் மட்டுமே இந்த மருந்தைப் பரிந்துரைப்பர். மருத்துவ ஆலோசனை இல்லாமல் இவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது.
-
இலங்கையில் எரிவாயு விலை அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வு Published By: Vishnu 11 Mar, 2026 | 09:07 PM லாஃப்ஸ் Gas நிறுவனம் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இந்த புதிய விலை புதன்கிழமை (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலை ரூ.300 அதிகரிக்கப்பட்டு ரூ.4,630 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு இது ரூ.4,330 ஆக இருந்தது. மேலும், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலை ரூ.120 உயர்த்தப்பட்டு ரூ.1,862 ஆக விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் முந்தைய விலை ரூ.1,742 ஆக இருந்தது. https://www.virakesari.lk/article/240750
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சலே
சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள்! Mar 11, 2026 - 09:48 PM உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 பிரதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (11) நீதிமன்றத்தில் தெரிவித்தது. கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த 25 பக்கங்கள் கொண்ட மேலதிக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2018 நவம்பர் 29 அன்று வவுணதீவில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமை மற்றும் 2019 ஏப்ரல் 26 அன்று சாய்ந்தமருது வீட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளைத் திட்டமிட்டு திசைதிருப்பியமை. இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் ஒருவரைப் பயன்படுத்தி, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குச் சுரேஷ் சலே அடையாளம் காட்டிக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பாணந்துறைப் பகுதியில் உள்ள மற்றுமொரு புலனாய்வாளர் இவ்வாறான தாக்குதல் ஒன்று நடைபெறவுள்ளதாக முன்னரே எச்சரித்தும், புலனாய்வுப் பிரிவு அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. தாக்குதலுக்குப் பின்னர், அந்த புலனாய்வாளர் விடுதலையான போது, சுரேஷ் சலே அவரை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து நன்றி தெரிவித்துள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் போது உயிரிழந்ததாகக் கூறப்படும் சாரா ஜஸ்மின் என்பவரின் உடல் பாகங்கள் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட DNA பரிசோதனைகளிலும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், மூன்றாவது முறையும் DNA பரிசோதனை செய்யுமாறு சுரேஷ் சலே விசாரணை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது. முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர். சுரேஷ் சலே சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த போது சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை எனவும் அவர் மலேசியாவில் இருந்தார் எனவும் குறிப்பிட்டார். ஏற்கனவே 25-க்கும் மேற்பட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது பக்கச்சார்பானது என தெரிவித்தார். சுரேஷ் சலே மிகவும் கொடூரமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது மகனைப் பார்க்கக் கூட பொலிஸ் சான்றிதழ் கேட்கப்படுகிறது. சட்டத்தரணிகளுடன் அவர் பேசும் விபரங்கள் இரகசியமாகப் பதிவு செய்யப்படுகின்றன. இது அடிப்படை உரிமை மீறலாகும் என சுட்டிக்காட்டினார். இந்த விசாரணை அதிகாரிகள் என்ன பேசுகிறார்கள்? அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளராக இருந்த எனது கட்சிக்காரர், எவ்வாறு பாதுகாப்புச் சபையைக் கூட்டி, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்? அரச புலனாய்வுச் சேவையும் பொலிஸ் மா அதிபரின் கீழேயே இயங்குகின்றது. நீங்கள் குறிப்பிடும் அந்த பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் அக்காலத்தில் சீருடை அணிந்துதானே கடமையாற்றினார்கள்? இது வெட்கக்கேடானது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த போது இந்த மூன்றாவது சந்தேகநபர் இலங்கையில் இருக்கவே இல்லை. அவர் மலேசியாவில் இருந்தார். அவர் 2018 ஜனவரி மாதமே இலங்கையை விட்டு வெளியேறிவிட்டார். அதுமட்டுமன்றி, இதுவரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து 25-க்கும் மேற்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து முன்னெச்சரிக்கை தகவல் கிடைத்ததாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இப்போது யாரோ ஒருவர் புலனாய்வுப் பிரிவுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கியதாகக் கூறுகிறார்கள். யார் தகவல் கொடுத்திருந்தாலும், அந்தத் தகவல் கிடைத்தும் தாக்குதலைத் தடுக்கத் தவறிய அன்றைய CID அதிகாரிகள் தான் இன்றும் இந்த விசாரணைகளை வழிநடத்துகிறார்கள். அவர்கள் அன்றே தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரானை கைது செய்திருந்தால் இந்த எந்த விசாரணைகளுமே தேவையில்லையே! இந்த ஜயகி டி அல்விஸ் அறிக்கையை வாசித்துப் பாருங்கள். இதை வாசித்தால் யார் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்பது புரியும். இவ்வாறானவர்கள் இந்த விசாரணையை முன்னெடுக்கும் போது, இது எவ்வாறு ஒரு பக்கச்சார்பற்ற விசாரணையாக அமைய முடியும்? இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதவான் இசுரு நெத்திகுமார, சுரேஷ் சலே தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் நேரடியாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவை. இந்தச் சாட்சிகள் போதுமானதா என்பதை மேலதிக விசாரணைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும் என்று குறிப்பிட்டார். சுரேஷ் சலே தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கின் மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க மார்ச் 25ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள்!
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இது உங்களிடம் நான் அவதானித்த ஒரு பிரச்சினை: Deduction என்பது சுத்தமாகக் கிடையாது. அத்தோடு ஒரு விடயத்தை ஒரு துவாரத்தினூடாக (tunnel vision) மட்டும் பார்த்து , அப்படியே நம்பி, இங்கே கொண்டு வந்து ஒட்டுவதை மட்டும் செய்வீர்கள்😂. 2015 JCOPA ஒப்பந்தப் படி மருத்துவத் தேவைகளுக்கான யுரேனியச் செறிவாக்கல் உதவிகள் (அது 60% வீதமாக இருக்க வேண்டியதில்லை என்பது வேறு விடயம்) ரஷ்யா உட்பட்ட சில ஐரோப்பிய நாடுகளால் வழங்கப் படும். எனவே, மருத்துவத் தேவைகளுக்காக ஈரான் செறிவாக்கவில்லை. ஈரானிடம் அணுசக்திக் கடற்கலம் ஒன்று கூட இல்லை, அவை தயாரிப்பு நிலையிலும் இல்லை. எனவே அதற்கும் 60% செறிவாக்கல் பயன்படவில்லை. இந்தத் தகவல்களைத் தொடர்பு படுத்தி நிலைமையைப் புரிந்து கொள்ள உங்களால் முடியவில்லையா, அல்லது புரிந்து கொண்டால் உங்கள் தரப்பான ஈரானுக்கு ஆதரவாக எழுத இயலாது என்பதால் தவிர்க்கிறீர்களா என்பது உங்களுக்கே வெளிச்சம். இந்த நிலையில், ஓட்டையினூடாகப் பார்ர்க்காமல் எல்லா விடயங்களையும் கணக்கிலெடுத்து இங்கே பகிர்வோருக்கு அட்வைஸ் மழை வேற😂!
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
“தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலை வீசுகிறது” - திருச்சியில் பிரதமர் மோடி நம்பிக்கை தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் பேச்சு திருச்சி: “தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலை இப்போது வீசுகிறது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர். என்டிஏ கூட்டணி அந்த மாற்றத்தை தரும்” என்று திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளம் மாநிலம் கொச்சியில் இருந்து ராணுவத்துக்குச் சொந்தமான விமானம் மூலம் மாலையில் திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தந்தார். ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டிய பின்னர், பஞ்சப்பூரில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசியல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது: “ஆடி மாதத்தில் காவிரி பெருகுவதுபோல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலை இப்போது வீசுகிறது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர். என்டிஏ கூட்டணி அந்த மாற்றத்தை தரும். ஆட்சி அதிகாரத்தில் இருந்து திமுகவை தூக்கி எறியும் நேரம் வந்துவிட்டது. தமிழகத்தில் ஒரு குடும்பத்துக்காக மட்டுமல்ல, மாநிலத்தில் அனைத்து குடும்பங்களுக்காகவும் உழைக்கும், செயல்படும் அரசை மக்கள் விரும்புகின்றனர். அது என்டிஏ-வால் மட்டுமே தர முடியும். திருச்சியை சேர்ந்த தமிழக அமைச்சர் ஒருவர் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்துள்ளார். பணத்துக்காக வேலைகள் விற்கப்படும்போது நேர்மையான இளைஞர்களின் அரசு பணி கனவு பாழாகிறது. இந்த மோசடி பணமெல்லாம் எங்கே போகிறது? தமிழகத்தின் ஊழல் பணமெல்லாம் ஒரு குடும்பத்துக்கு சென்று சேர்கிறது. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு: திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து சட்டம் - ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. என்டிஏ ஆட்சி அமைந்தால் பெண்கள் அச்சமின்றி வாழலாம். ஆனால், குற்றவாளிகள்தான் அஞ்சுவார்கள். மேற்காசிய போர்: மேற்காசிய போர் குறித்த வதந்திகளை நம்பி மக்கள் பீதியடைய வேண்டாம். போர் காரணமாக எரிவாயு விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமை எப்படியானாலும் இந்திய மக்களின் நலன் பாதுகாக்கப்படும்” என்று பிரதமர் மோடி பேசினார். “தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலை வீசுகிறது” - திருச்சியில் பிரதமர் மோடி நம்பிக்கை
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
IPL 2026 | முதற்கட்ட அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் ஆர்சிபி - சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை! மும்பை: ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசனின் முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சீசனுக்கான போட்டிகள் வரும் 28-ம் தேதி முதல் மே 31 வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் 84 லீக் போட்டிகள், அதை தொடர்ந்து பிளே-ஆஃப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த சீசனின் முதற்கட்ட ஆட்ட அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. எஞ்சிய ஆட்டங்களுக்கான அட்டவணை தமிழகம், கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் அட்டவணை அறிவிப்புக்கு ஏற்ப திட்டமிடப்படும் என தகவல். வரும் 28-ம் தேதி அன்று இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. இந்த ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் 2026: முதற்கட்ட அட்டவணை… >மார்ச் 28: ஆர்சிபி vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பெங்களூரு >மார்ச் 29: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை >மார்ச் 30: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கவுஹாத்தி >மார்ச் 31: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - முல்லான்பூர் >ஏப்.1: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ >ஏப்.2: கொல்கத்தா vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா >ஏப்.3: சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ் - சென்னை >ஏப்.4: டெல்லி vs மும்பை - டெல்லி >ஏப்.4: குஜராத் vs ராஜஸ்தான் - அகமதாபாத் >ஏப்.5: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ - ஹைதராபாத் >ஏப்.6: கொல்கத்தா vs பஞ்சாப் - கொல்கத்தா >ஏப்.7: ராஜஸ்தான் vs மும்பை - கவுஹாத்தி >ஏப்.8: டெல்லி vs குஜராத் - டெல்லி >ஏப்.9: கொல்கத்தா vs லக்னோ - கொல்கத்தா >ஏப்.10: ராஜஸ்தான் vs பெங்களூரு - கவுஹாத்தி >ஏப்.11: பஞ்சாப் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - முல்லான்பூர் >ஏப்.11: சிஎஸ்கே vs டெல்லி - சென்னை >ஏப்.12: லக்னோ vs குஜராத் - லக்னோ >ஏப்.12: மும்பை vs ஆர்சிபி - மும்பை IPL 2026 | முதற்கட்ட அட்டவணை வெளியீடு
-
எண்ணெய் பீப்பாய் விலை 200 டொலரை தாண்டும் - ஈரான் எச்சரிக்கை
400 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விடுவிப்புக்கு IEA அனுமதி Mar 11, 2026 - 07:55 PM ஹோர்முஸ் நீரிணை செயலற்ற முறையில் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடையைச் சமாளிக்க, 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிக்க சர்வதேச எரிசக்தி முகவரகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாத்திஹ் பிரோல் அறிவித்துள்ளார். சர்வதேச எரிசக்தி முகவரகம், தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான மூலோபாய எண்ணெய் இருப்புக்களை சந்தைக்கு விடுவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, மொத்தம் 400 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்கும், எரிபொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது IEA அமைப்பின் வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளப்பட்டிராத மிகப்பெரிய எண்ணெய் விடுவிப்பாகக் கருதப்படுகிறது. ஈரானின் அண்மைக்கால எச்சரிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் 32 உறுப்பு நாடுகளும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இந்த அவசரகால இருப்புகள், ஒவ்வொரு உறுப்பு நாட்டின் தேசிய சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான காலக்கெடுவுக்குள் சந்தைக்குக் கிடைக்கும் என IEA தெரிவித்துள்ளது. 1991, 2005, 2011 மற்றும் 2022 இல் இரண்டு முறை என இதற்கு முன்னர் ஐந்து தடவைகள் இவ்வாறான கூட்டு எண்ணெய் விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது ஆறாவது தடவையாக எண்ணெய் விடுப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmm4r78x000z356pcr1vpw05
-
விளையாட்டின் மூலம் தடைகளை உடைக்கும் Siddi பெண்கள்
முன்னே வரட்டும் . .....முன்னேறி வரட்டும் . ........! 👍
-
செங்கல்பட்டு: சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது
செங்கல்பட்டு: சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது பட மூலாதாரம்,Getty Images 25 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் மதுராந்தகம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை அன்று நள்ளிரவு நேரத்தில் சிறுமி மற்றும் அவரது நண்பர்கள் சென்ற இருசக்கர வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த சிலரால் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் காவல்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. காவல்துறை அளித்துள்ள தகவல்படி, மதுராந்தகம் அருகே சிறுவன் மற்றும் இரண்டு சிறுமிகள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவர்களின் வாகனத்தை இரண்டு பேர் தங்களின் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவர்கள் வேகமாக வருவதைப் பார்த்து தனது வாகனத்தை சிறுவன் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி சிறுவனும் சிறுமிகளும் கீழே விழுந்துள்ளனர். அப்போது வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவர்களைத் தாக்கி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து சென்றதும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமி சென்றுள்ளார். அங்கு தனக்கு நேர்ந்த கொடுமையை மருத்துவர்களிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து மருத்துவமனை மூலமாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் நேரடி தொடர்புடைய காக்கா பாலாஜி என்கிற பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்' எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. காக்கா பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், தாமு என்கிற தாமோதர பெருமாள் என்ற நபரை புதன்கிழமையன்று கைது செய்துள்ளதாக, காவல்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Devaneyan படக்குறிப்பு,குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு. இதுதொடர்பாக மூன்று காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காக ஆவடியில் வசித்து வரும் காக்கா பாலாஜியின் வீட்டுக்கு மேல்மருவத்தூர் போலீசார் சென்றுள்ளனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். முடிவில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காக்கா பாலாஜியை காவல்துறை கைது செய்துள்ளது. காக்கா பாலாஜியிடம் தனிப்படை காவலர்கள் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக, புதன்கிழமையன்று தாமு என்கிற தாமோதர பெருமாளை கைது செய்துள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது. "சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை, குழந்தைகள் நலக் குழு எனப் பலமுனைகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. மற்றொரு சிறுமியும் சிறுவனும் பற்றிய விவரங்கள் காவல்துறை விசாரணை முடிவில் விடை தெரியவரும்" எனக் கூறுகிறார் குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், உதவி செய்வதற்குக் கூட ஆள் இல்லாமல் அரசு மருத்துவமனைக்கு சிறுமி நடந்தே சென்றதாகக் கூறியுள்ளார். இதே தகவலை சில நாளேடுகளும் வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக மதுராந்தம் டிஎஸ்பி தீபக் ரஜினியை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. ஆனால், அவரிடம் இருந்து உரிய விளக்கம் பெற முடியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c98qvlpj42mo
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அண்ணை, அப்ப கேள்விக் கொத்தையும் பிச்சு பிச்சு தயாரிக்க வேண்டுமோ?! எல்லாம் @கிருபன் அண்ணையின் கையில் தான்!
- Today
-
விளையாட்டின் மூலம் தடைகளை உடைக்கும் Siddi பெண்கள்
இந்தியாவில் ஆப்ரிக்க வம்சாவளியை சேர்ந்த சுமார் 20,000 பேர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சித்தி சமூகமாக அறியப்படுகின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இவர்களில் பெரும்பாலானோர் அடிமைகளாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டவர்கள். காலப்போக்கில், அவர்கள் சமூக விளிம்பில் தள்ளப்பட்டவர்களாகவே இருந்து, வறுமை மற்றும் பாகுபாடுகளை எதிர்கொண்டு வந்துள்ளனர்.ஆனால் இன்றைய சூழலில், சித்தி சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் இந்த தடைகளை எதிர்கொள்ள ஒரு சக்திவாய்ந்த வழியை கண்டுபிடித்துள்ளனர். விளையாட்டு வழியாக, அவர்கள் தனிமைப்படுத்துதலை உடைத்து, பாகுபாட்டை எதிர்த்து, தங்களுடைய வாழ்க்கையை மாற்றி வருகின்றனர். #BBCISWOTY #Changethegame இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
பெண்களின் ‘ஊதியமற்ற’ உழைப்பு அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றது - மணிலாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு
பெண்களின் ‘ஊதியமற்ற’ உழைப்பு பொருளாதாரத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மணிலாவில் தெரிவிப்பு Published By: Digital Desk 3 11 Mar, 2026 | 12:58 PM பெண்கள் குடும்பத்திற்காக ஆற்றுகின்ற, எனினும் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத ‘ஊதியமற்ற’ வீட்டுப் பணிகள், குடும்பத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் பாரிய பங்களிப்பை வழங்குகின்றன என்பதைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார். பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைமையகத்தில் இன்று (மார்ச் 10) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் முதன்மை உரை நிகழ்த்திய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். பெண்களின் பணிகளை உரிய முறையில் இனங்கண்டு அதனை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், பெண்களைப் பொருளாதார நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கெடுக்கச் செய்யக்கூடிய பெண் நேய கொள்கைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் அவசியத்தையும் இங்கு வலியுறுத்தினார். இத்துறையில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கு அரசாங்கங்களும் சர்வதேச அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வலுவூட்டுவதற்குத் தரமான கல்வியை வழங்குவது அவசியமானது எனவும், இலங்கை எப்போதும் கல்விக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் பிரதமர் நினைவு கூர்ந்தார். குறிப்பாக, தீர்மானம் எடுக்கும் மட்டத்திலான அரசியல் செயல்முறைகளில் பெண்கள் உள்வாங்கப்படுதல், வேலைவாய்ப்புச் சந்தையில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் சமவாய்ப்புகளைக் கொண்ட கல்வி முறையைப் பேணுதல் ஆகியன நிலையானதும் நீதியானதுமான அபிவிருத்திக்கு அவசியமானவை என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார். பெண் தலைமைத்துவம் மற்றும் பெண் வலுவூட்டலுக்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆற்றிவரும் விசேட அர்ப்பணிப்பைப் பாராட்டி, அவருக்கு "ஷிரீன் லத்தீப் பெண் தலைமைத்துவ விருது" (Shireen Lateef Women’s Leadership Award) வழங்கி வைக்கப்பட்டது. இந்த விழா ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் உள்ளிட்ட சிரேஷ்ட நிர்வாகத்தினர், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் எனப் பலரின் பங்கேற்புடன் நடைபெற்றது. https://www.virakesari.lk/article/240708
-
எண்ணெய் பீப்பாய் விலை 200 டொலரை தாண்டும் - ஈரான் எச்சரிக்கை
எண்ணெய் பீப்பாய் விலை 200 டொலரை தாண்டும் - ஈரான் எச்சரிக்கை Mar 11, 2026 - 07:16 PM ஈரான் தமது தாக்குதல் கொள்கையில் புதிய வியூகத்தை வகுத்துள்ளதாக தெஹ்ரானின் காதம் அல்-அன்பியா இராணுவ தலைமையகத்தின் ஊடகப்பேச்சாளர் இப்ராஹிம் சோல்பகாரி தெரிவித்துள்ளார். அதற்கமைய பரஸ்பர தாக்குதல் கொள்கை முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இனிமேல் தாக்குதலுக்குத் தாக்குதல் என்ற புதிய கொள்கையைப் ஈரான் பின்பற்றப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு லீற்றர் எண்ணெயைக் கூட கொண்டு செல்ல ஈரான் அனுமதிக்காது. அவர்களை நோக்கிச் செல்லும் எந்தவொரு கப்பலும் அல்லது தாங்கியும் ஈரானின் இலக்காக அமையும். எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 200 அமெரிக்க டொலர் வரை உயர்வதற்குத் தயாராக இருங்கள். ஏனெனில் எண்ணெய் விலை பிராந்திய பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது. அந்தப் பாதுகாப்பை நீங்கள்தான் சீர்குலைத்துள்ளீர்கள் என அவர் எச்சரித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmmm39vdm000x356pmxdl6613
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
படங்கள் @வாத்தியார் அண்ணா. @goshan_che அண்ணை உங்கள் நண்பரிடமும் அவர்களின் வீட்டின் சூழலை காட்டும் படங்களை பகிருங்கள். தற்போது ஒரு மேசன் தம்பி முன் வந்திருக்கிறார், நேரடியாக வந்து பார்த்து தமது சம்பளம் பற்றி கதைப்பதாக கூறியுள்ளார். @வாத்தியார் அண்ணையும் தனக்கு அறிமுகமான மேசன் ஒருவரிடம் கேட்டுச் சொல்வதாக கூறினார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வழமை போல கூடுதலானவர்கள் பங்கு கொள்வார்கள். போட்டிக்கு ஏற்பாடுகளை செய்யுங்கள்.
-
மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை
மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை Mar 11, 2026 - 11:38 AM வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் NTNSP தனியார் நிறுவனத்தின் தலைவர் நுசித் குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: தொழிற்சங்கங்கள் முன்வைத்த 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இதில் 59 கோரிக்கைகள் ஆரம்பக் கட்டத்திலேயே நிர்வாகத்தினால் வழங்கப்பட்டன. எஞ்சிய 5 கோரிக்கைகளில் 3 விடயங்கள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட்டது. தற்போது நிலுவையிலுள்ள இறுதி இரண்டு கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை வழங்கிய அதே போனஸ் கொடுப்பனவை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவாக 11,000 ரூபாவும், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவையும் சேர்த்து சராசரியாக 17,000 ரூபா வழங்கப்படுகின்றது. 40% சம்பள உயர்வு என்பது மாதத்திற்கு 1.8 பில்லியன் ரூபா மேலதிக செலவாகும், இது ஆண்டொன்றுக்கு 22 பில்லியன் ரூபாவாகும். 2025 டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி மின்சார சபையின் நட்டம் 35 பில்லியன் ரூபாவாக உள்ளது. இந்த நிலையில் சம்பளத்தை உயர்த்தினால், மக்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது சுமையை ஏற்றி மின் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டியிருக்கும். 2024 ஓகஸ்ட் முதல் நிலவிய 25% சம்பள முரண்பாடு களையப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் ஏற்கனவே 25% உயர்வைப் பெற்றிருந்த நிலையில், கீழ்நிலை ஊழியர்களுக்கு 7% - 10% மாத்திரமே கிடைத்திருந்தது. இது 2025 ஜனவரி 1 முதல் சீர்செய்யப்பட்டது. தற்போது இச்சலுகையை 2024 ஜனவரி முதல் அமுல்படுத்தக் கோருகின்றனர். இது அமைச்சரவை தீர்மானம் என்பதால், இது குறித்து ஜனாதிபதியுடன் பேசுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், எதற்காக இந்த வேலைநிறுத்தம் தொடர்கிறது என்பது புரியவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmmlmade0000e356p07g1jutt
-
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் இரானை எளிதாக வீழ்த்த முடியாதது ஏன்?
இரானை எளிதாக வீழ்த்த முடியாதது ஏன்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் லூயிஸ் பார்ருச்சோ பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் கடந்த 1979-ஆம் ஆண்டு புரட்சி, இரானின் ஆட்சியாளர்களை அதிகாரத்திற்குக் கொண்டு வந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அவர்கள் இப்போது தங்களுடைய மிக மோசமான தருணத்தை எதிர்கொள்கின்றனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதல்களில் அதிஉயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி மற்றும் பிற உயர்மட்ட ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர். மேலும் முக்கிய உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுமே ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகச் சமிக்ஞை அளித்துள்ளன. மேலும் இரானியர்கள் தங்கள் ஆட்சியை தூக்கியெறியுமாறு இருநாடுகளும் வலியுறுத்துகின்றன. ஆயினும், இரானின் ஆட்சியானது நீடித்திருக்கக்கூடிய மற்றும் எளிதில் வீழ்த்தப்பட முடியாத ஓர் அதிகாரக் கட்டமைப்பைத் திட்டமிட்டு உருவாக்கியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் அதன் வலிமைக்கு என்ன காரணம்? மத்திய கிழக்கின் பிற நாடுகளில் இருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது? பட மூலாதாரம்,Morteza Nikoubazl/NurPhoto via Getty Images படக்குறிப்பு,மொஜ்தபா காமனெயி, தனது தந்தையின் கடுமையான ஆட்சியைத் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'அழிக்க முடியாத அமைப்பு ' இரானின் முடியாட்சியை வீழ்த்தியதில் இருந்து, இஸ்லாமியக் குடியரசு அதிர்ச்சிகளைத் தாங்கி நீடித்து நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஓர் அரசியல் அமைப்பைப் படிப்படியாகக் கட்டியெழுப்பியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்கள், கருத்தியல் போதனைகள், தலைமைகளின் ஒற்றுமை மற்றும் சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகள் ஆகியவை இதற்கு காரணமாகும். "இது அழிக்க முடியாத அமைப்பு. நீங்கள் ஒரு தலையை வெட்டினால் புதிய தலைகள் மீண்டும் வளரும்," என்கிறார் பெல்ஜியத்தில் உள்ள ஐரோப்பிய உலக அரசியல் நிறுவனத்தின் மத்திய கிழக்கு ஆய்வாளர் செபாஸ்டியன் பூசோயிஸ். ஞாயிற்றுக்கிழமையன்று, அலி காமனெயியின் மகன் மொஜ்தபா காமனெயி, அவரது தந்தை கொல்லப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் இரான் அதிஉயர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தனது தந்தையின் தீவிரமான மற்றும் கடுமையான ஆட்சியைத் தொடருவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,Majid Asgaripour/WANA (West Asia News Agency) via REUTERS 'பன்முனை சர்வாதிகாரம்' துனிசியா, எகிப்து மற்றும் சிரியா போன்ற பிற நாடுகளில் தலைவர்கள் தூக்கியெறியப்பட்டதைப் போலல்லாமல், இரான் அதன் கருத்தியல் ரீதியிலான பாதுகாப்பு கட்டமைப்பின் காரணமாக அழுத்தங்களை சிறப்பாக எதிர்கொள்ள முடிந்தது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இரான் ஒரு தனி நபரை மையமாகக் கொண்ட ஒரு பொதுவான சர்வாதிகாரத்தின் கீழ் இயங்குவதற்குப் பதிலாக, ஒரு 'பன்முனை சர்வாதிகாரத்தைக்' கொண்டுள்ளது. இது ''அரசியல் இஸ்லாத்தின் ஆதரவாளர்களுக்கும் தீவிர இரானிய தேசியவாதத்திற்கும் இடையிலான ஒரு கூட்டணி" என்கிறார் டெஹ்ரானை சேர்ந்த இரானுக்கான பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பெர்னார்ட் ஹூர்கேட். மதகுருமார்களின் அமைப்புகள், ஆயுதப் படைகள் மற்றும் முக்கிய பொருளாதார அமைப்புகள் எனப் பல மையங்களில் அதிகாரம் பரவிக் கிடக்கிறது. ஒற்றைத் தலைமை கொண்ட சர்வாதிகாரத்தை விட இந்த அமைப்பை வீழ்த்துவதை இது மிகவும் கடினமாக்குகிறது. சட்டங்களை நிராகரிக்கும் அதிகாரம், தேர்தலுக்கான வேட்பாளர்களை ஆய்வு செய்ய அதிகாரம் கொண்ட பாதுகாவலர்கள் சபை போன்ற பிற அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளது. இது, எந்தவொரு தனிப் பிரிவினரும் அரசுக்கு ஒரு தீவிர சவாலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. இரான் எதேச்சதிகார ஆட்சி முறை கொண்ட நாடாக பரவலாகக் கருதப்பட்டாலும், அது இரானியர்களுக்கு அதிபர் தேர்வு உள்ளிட்ட சில தேர்தல்களில் வாக்களிப்பதற்கான அடையாளப்பூர்வ வாய்ப்பை வழங்குகிறது. இருப்பினும், இந்த செயல்முறை மிகவும் இறுக்கமாக நிர்வகிக்கப்படுகிறது. இஸ்லாமியக் குடியரசின் மீதான அர்ப்பணிப்பு உள்ளிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் பாதுகாவலர்கள் சபையால் வேட்பாளர்கள் ஆய்வு செய்யப்படுகிறார்கள். பட மூலாதாரம்,NurPhoto via Getty Images புரட்சிகர காவல்படையின் மையப் பங்கு அரசு நிறுவனங்கள் இந்த ஆட்சிமுறையின் அடிப்படை அமைப்புகளாகச் செயல்படுகின்றன என்றால், பாதுகாப்புப் படைகள் அதன் வலிமையாகக் கருதப்படுகின்றன. வழக்கமான ராணுவத்துடன் இணைந்து செயல்படும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, பெரும்பாலும் "ஆட்சியின் முதுகெலும்பாக" கருதப்படுகிறது என்று ஹூர்கேட் கூறுகிறார். தனது ராணுவப் பங்கிற்கு அப்பாற்பட்டு, இது ஒரு அரசியல் மற்றும் பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது. முக்கியமாக, தொடர்ச்சியான அமைதியற்ற சூழ்நிலைகளின் போதும் பாதுகாப்புப் படைகள் ஒற்றுமையாகவே இருந்துள்ளன. இந்த விசுவாசத்தை கருத்தியலுடன் பூசோயிஸ் தொடர்புபடுத்துகிறார். "ஷியாக்கள் [இஸ்லாத்தின் இரண்டு முக்கிய பிரிவுகளில் ஒன்றைப் பின்பற்றுபவர்கள்] மற்றும் ஹமாஸ், ஹெஸ்பொலா போன்ற குழுக்களிடையே காணும் இந்த தியாக கலாசாரம், வாழ்வின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது," என்று அவர் கூறுகிறார். தொடர்ச்சியையும் உறுதி செய்வதற்காக ஒவ்வொரு இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளபதிக்கும் அடுத்து வரக்கூடிய மாற்று தளபதிகள் தயாராக இருப்பதாக இரானின் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ரெசா தலையினிக் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார். இரானின் பரவலாக்கப்பட்ட இந்த கட்டமைப்பு, 2003-இல் அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படைகளின் படையெடுப்பின்போது இராக் படைகள் சரிந்ததிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களால் உருவானது என்று 'அணுசக்தி இரானுக்கு எதிராக ஒன்றுகூடல்' அமைப்பின் காவல்படை ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் கஸ்ரா ஆராபி கூறுகிறார். மேலும், இந்த ஆட்சி நீடித்தால், "காவல்படையினர் இன்னும் முக்கியமான பங்கைக் கொண்டிருப்பார்கள்." என்று அவர் கருதுகிறார். பட மூலாதாரம்,Morteza Nikoubazl/NurPhoto via Getty Images படக்குறிப்பு,இரானின் அதிகாரக் கட்டமைப்பு, அந்த ஆட்சிமுறை தொடர்ச்சியான பல அதிர்ச்சிகளைத் தாங்கி நிற்பதற்கு வழிவகுத்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆதரவு வலையமைப்புகள் மற்றும் உயரடுக்கு ஒற்றுமை இரான் பொருளாதாரத்தின் பெரும்பகுதிகள் 'போனியாட்ஸ்' போன்ற அரசுடன் தொடர்புடைய அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவை பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்ட அறக்கட்டளைகளாக உருவெடுத்துள்ளன. இந்த வலைப்பின்னல்கள் ஆட்சிக்கு விசுவாசமாக இருக்கும் பிரிவினருக்கு வேலைகளையும் ஒப்பந்தங்களையும் வழங்குகின்றன. காதம் அல்-அன்பியா கூட்டு நிறுவனம் உள்ளிட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் வணிக சாம்ராஜ்யம், இந்த வணிக "ஆதரவு" முறையை வலுப்படுத்துகிறது. மேற்கத்திய நாடுகளின் தடைகள் இரானின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ள போதிலும், இந்த வலைப்பின்னல்கள் முக்கிய உயரடுக்கினரைப் பாதுகாக்கவும், இந்த ஆட்சிமுறை நீடிப்பதில் அவர்களுக்குள்ள பங்கினை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த அமைப்பு "மிகவும் உறுதியானது, இதில் பிளவுகள் ஏற்பட்டு வெளியேறுபவர்களை நாம் காண்பதே இல்லை," என்று பூசோயிஸ் கூறுகிறார். சித்தாந்தமும் புரட்சியின் மரபும் அதிகாரத்தைத் தக்கவைப்பதில் மதமும் ஒரு வலிமையான பங்கினை வகிக்கிறது. இரான் புரட்சியானது மத, அரசியல் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஒரு நிலையான வலைப்பின்னலை உருவாக்கியது. இது இன்றும் அரசின் உலகளாவிய பார்வையை வடிவமைத்து வருகின்றது. "கருத்தியல், அதிகாரத்துவ மற்றும் நிர்வாக ரீதியான இந்த மிகப்பழமையான, மிகவும் சக்திவாய்ந்த கட்டமைப்பு இந்த அமைப்பை வலுவாக்குகிறது," என்று கூறும் பூசோயிஸ், இந்தக் கருத்தியலானது "ஒற்றுமை, தொழில்முறை அர்ப்பணிப்பு மற்றும் ஆள்சேர்ப்புக்கான உண்மையான ஆதாரமாகச் செயல்படுகிறது," என்றும் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,KHOSHIRAN/Middle East Images/AFP via Getty Images பிளவுபட்ட எதிர்க்கட்சி வரலாற்று ரீதியாக, இரானின் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு காணப்படுகின்றன. அவற்றில் சீர்திருத்தவாதிகள், முடியாட்சி ஆதரவாளர்கள், இடதுசாரி குழுக்கள், இரானின் தேசிய எதிர்ப்பு கவுன்சில் போன்ற புலம்பெயர்ந்தோர் இயக்கங்கள் மற்றும் பல்வேறு இன அமைப்புகள் அடங்கும். இந்த பிளவு நீண்டகாலமாக நிலவி வருவதாக பிரிட்டனைச் சேர்ந்த ஐரோப்பிய வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் என்ற சிந்தனைக் குழுவின் மூத்த கொள்கை ஆய்வாளர் எல்லி கெரன்மயே கூறுகிறார். புரட்சிக்குப் பிறகு, அரசியல் கட்சிகளை உருவாக்குவது குறித்த விவாதம் ஓரங்கட்டப்பட்டது என்றும் 1980-இல் துவங்கி எட்டு ஆண்டுகள் நீடித்த இராக் உடனான போர் ஒரு காரணமாக கூறப்பட்டது என்றும் அவர் கூறுகிறார். பல்வேறு காலகட்டங்களில் மிதவாத பிரிவினர் ஆட்சி அதிகாரத்தாலும் கடும்போக்காளர்களாலும் "ஒதுக்கப்பட்டனர், இழிவுபடுத்தப்பட்டனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர்," என்று கெரன்மயே விளக்குகிறார். கடந்த காலங்களில் 2009-ஆம் ஆண்டின் கிரீன் மூவ்மெண்ட் மற்றும் 2022-இல் மஹ்சா அமினியின் மரணத்தால் வெடித்த போராட்டங்கள் என ஆட்சிக்கு எதிராகப் பெரிய அளவிலான போராட்ட இயக்கங்கள் தோன்றின. ஆனால் அந்தப் போராட்டங்களுக்கு ஒரு மையத் தலைமை இல்லை, மேலும் அவை அரசின் கடுமையான ஒடுக்குமுறையை எதிர்கொண்டன. இருப்பினும், இந்த ஆண்டு இறுதியில் துவங்கிய சமீபத்திய போராட்ட அலைகள், மறைந்த ஷா மன்னரின் வெளிநாட்டில் வாழும் மகனின் "உலகளாவிய செயல்பாட்டு தினத்திற்கான" அழைப்பைத் தொடர்ந்து நிகழ்ந்தன. இரான் இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளில் ஒன்றைக் கொண்டுள்ளது. தொடர்ந்து இணைய முடக்கம் செய்தல், செயற்கை நுண்ணறிவு மூலம் கண்காணித்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள செயல்பாட்டாளர்களைக் குறிவைக்கும் இணையப் பிரிவுகள் ஆகியவற்றையும் அது இயக்குகிறது. பட மூலாதாரம்,Getty Images எச்சரிக்கை என்ன? ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் அமெரிக்கத் தலைமையிலான தலையீடுகளின் விளைவுகளைக் கண்ட பிறகு, பல ஆண்டுகளாக பல இரானியர்கள் ஆட்சி மாற்றத்திற்காக அழுத்தம் கொடுக்கத் தயங்கினர் என்று கெரன்மயே கூறுகிறார். மேலும், அரபு எழுச்சிகளின் பின்விளைவுகள் இந்த எச்சரிக்கை உணர்வை மேலும் ஆழப்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார். ஆனால், வேலை வாய்ப்பு முதல் சுத்தமான குடிநீர் வரை அடிப்படைத் தேவைகளைக் கூட அரசால் இனி வழங்க முடியாது என்றும், அதே சமயம் எதிர்ப்பை ஒடுக்க மிருகத்தனமான சக்தியைப் பயன்படுத்துவதாகவும் பல இரானியர்கள் கருதுவதால், இப்போது இந்த கணக்கீடு மாறியுள்ளதாக அவர் கூறுகிறார். புதியதாக உருவான போராட்ட அலைக்கு எதிராக ஜனவரியில் நடைபெற்ற கடுமையான அடக்குமுறையும், நாட்டில் இதுவரை காணப்பட்ட மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாக இருந்த அந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதும், இந்த மாற்றத்தை மேலும் வேகப்படுத்தியது என்று அவர் கூறுகிறார். உயர் கல்வி கற்றவர்கள், உலகளாவிய தொடர்புகளைக் கொண்டவர்கள் மற்றும் சமூக ஊடகங்களால் ஈர்க்கப்பட்ட இளைய தலைமுறை இரானியர்கள், இந்த ஆட்சிமுறையை "ஊழல் நிறைந்தது, ஒடுக்குமுறையானது மற்றும் தங்கள் கனவுகளுக்கு தொடர்பற்றது" என்று கருதி நிராகரிக்கிறார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள் இரானின் முக்கிய உள்கட்டமைப்பு தளங்களைக் குறிவைத்துள்ளன. 'ஒவ்வொரு ஆட்சியும் இறுதியில் முடிவடைகிறது' மக்கள் திரள் போராட்டம், ஆளும் உயரடுக்கினரிடையே பிளவு மற்றும் பாதுகாப்புப் படைகளின் விலகல் ஆகிய மூன்று நிலைகளும் ஒன்றிணையும் போதுதான் சர்வாதிகார ஆட்சிகள் வீழ்ச்சியடையும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த காலங்களில், இரான் பெரும்பாலும் முதல் நிலையை அனுபவித்துள்ளது, ஆனால் மற்ற இரண்டையும் சந்திக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இஸ்லாமியக் குடியரசின் முடிவு தவிர்க்க முடியாதது, ஆனால் அது உடனடியானது அல்ல என்று ஹூர்கேட் கருதுகிறார். "ஒவ்வொரு ஆட்சிமுறையும் இறுதியில் முடிவுக்கு வரும். உண்மையான கேள்வி அதன் காலம்தான்." என்று கூறும் அவர், காமனெயியின் மரணம் இந்த ஆட்சிமுறைக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்று குறிப்பிடுகிறார். "அவரைப் போன்ற ஒருவர் இனி இருக்க மாட்டார். அவருக்குப் பின் வருபவருக்கு காமனெயிக்கு இருந்த அதிகாரம் ஒருபோதும் இருக்காது" என்கிறார். ஆனால் இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சி என்பது உறுதிப்படுத்த முடியாத ஒன்று என பூசோயிஸ் கூறுகிறார். ஒருவேளை அது நிகழ்ந்து, அதற்கு வெளிநாட்டு ராணுவத் தலையீடு காரணமாக இருந்தால், அதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கலாம் என்று அவர் விளக்குகிறார். முன்னாள் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைபிடித்தது போன்ற ஒரு "சரியான சூழலே" இரானுக்கும் அமையும் என்று டிரம்ப் முன்பு நியூயார்க் டைம்ஸிடம் கூறியிருந்தார். ஆனால், இதற்கு நேர்மாறாக "வடகொரியா அல்லது கியூபாவில் இருப்பது போல ஆட்சி மேலும் வலுவடையலாம்.'' என்கிறார் பூசோயிஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78xg6l52v7o
-
இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம்
நடக்கிற கதையா இது?!
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
பிக் ப்ரோ, இங்கே நாம் பேச எடுத்து கொண்ட விடயம்😂😂😂… இந்து முறைப்படி செய்த திருமணம், பதிவு திருமணம் செய்யாதபோதும், இலங்கை, இந்தியாவில் சட்ட வலு உள்ளதாக ஏற்கப்படுமா? என்பதே. நான் ஓம் என்றேன். நீங்கள் இல்லை என்றீர்கள். ஆதாரபூர்வமாக நான் சொன்னது சரி, நீங்கள் சொன்னது பிழை என நிறுவி உள்ளேன். விசயம் விக்கினம் ஆகிவிட்டதை கண்ட நீங்கள்… தலைப்பில் இருந்து தாவி…😂 இப்படியான மூட நம்பிக்கைகளை, சட்டம் அங்கீகரிப்பது சரியா, பிழையா என ஒரு புதிய முனையை திறக்கிறீர்கள். இது சரியா, பிழையா என்ற வாதத்துக்கு நான் வரவில்லை…. அது சும்மா வீண் பேச்சு. ஆனால் சட்டதில் எப்போதும் நம்பிக்கைகள், தார்மீக கோட்பாடுகள், சமூக பழக்கவழக்கங்களுக்கு உரிய இடம் கொடுக்கப்பட்டே வந்துள்ளது. உதாரணமாக பல நாடுகள் ஏனையவர் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை வைத்திருப்பதை அனுமதிக்காவிடிலும், முஸ்லிம்கள் 4 மனைவியரை அவர்கள் மதம் சொல்லும் வழிமுறையில் வைத்து கொள்ள அனுமதிக்கிறன. இவை customary law எனப்படும். சட்டம் என்பது வானத்தில் இருந்து விழுந்ததல்ல. ஒரு மக்கள் கூட்டம் தமக்குத்தானே வகுத்து கொள்ளும் நடைமுறைகளுக்கான விதிக்களின் கோர்வையே சட்டம். இந்திய மக்கள் இந்து, இஸ்லாமிய திருமணங்களுக்கும் சட்ட வலு உள்ளது என தீர்மானித்தால், அல்லது அவர்கள் சார்பில் பாராளுமன்றமோ, அரசியல் சட்ட ஆக்க சபையோ, நீதிமன்றமோ அப்படி தீர்மானித்தால் அதுதான், இந்தியாவில் சட்டம். இதில் குசா, கோஷா வின் மூடநம்பிக்கை பற்றிய கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப் படாது.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இல்லை…. ஆனால் நான் வீட்டில் தயாரித்து கொண்டு வந்தே விற்பனை செய்வது வழக்கம். ஆதாரம் தேவைப்படின் சுட்டிகளை சேர்ப்பேன். ஆனால் அது என்ன என்பதை இட்டு என் சொந்த கருத்தை பதிந்துவிடுவேன்.
-
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” [பத்து பாகங்கள்]
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 9 பாடம் 9 / “அந்த நாள் அமைதி கலைந்தது” அந்த நாள் உடப்பு பள்ளி, கோபத்துடன் தொடங்கவில்லை. அது காலைக் கூட்டத்துக்கான அழைப்பை ஒரு மணி மூலம் வழங்கித் தொடங்கியது. மாணவர்கள் நேராக வரிசையில் நின்றனர், சீருடைகள் இறுக்கமாக இருந்ததுடன், முகங்கள் அமைதியாக இருந்தன. ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அறைக்கு அருகில் கூடினர். ஆதன் அவர்களுக்குப் பின்னால் நின்றான். இதற்கு முதல் மூன்று வாரங்களாக, கல்வி அதிகாரிகள் ஆதனது வகுப்புகளில் அமர்ந்திருந்தனர். அவர்கள் கற்பிக்க அங்கு வரவில்லை, ஆனால் ஆதனை கவனிக்க வந்திருந்தார்கள். ஆதன் படிப்பிக்கும் பொழுது பேசிய ஒவ்வொரு வார்த்தையும் எழுதப்பட்டது. ஆதன் படிப்பிக்கும் பொழுது எங்கெங்கே இடை நிறுத்தம் செய்தாரோ, அதையும் குறிப்பிட்டார்கள். அன்று காலை, கூடுதல் கல்வி அதிகாரியும் மீண்டும் வந்திருந்தார். இந்த முறை, கூட்டம் அமைதியாக இருக்கவில்லை. கூடுதல் கல்வி அதிகாரி கூட்டத்தின் போது முதல்வரின் அருகில் நின்றார். மைக்ரோஃபோன் சத்தமிடத் தொடங்கியது. “மாணவர்களே,” அதிகாரி கூறினார், “கல்வி உணர்ச்சிகளைத் தூண்டுவதற்காக அல்ல - இது ஒழுக்கம் மற்றும் நல்லிணக்கத்திற்காக.” அதைக் கேட்ட சில மாணவர்கள் ஆதனை திரும்பி பார்த்தார்கள். ஆனால், ஆதன் அதற்கு முகத்தாலோ அல்லது வேறு ஏதாவது சைகைகளாலோ பதில் அளிக்கவில்லை. அதிகாரி தொடர்ந்தார்: "ஒற்றுமையை விட அடையாளத்தை ஊக்குவிக்கும் சில பாடங்களை நாங்கள் இந்த மூன்று கிழமையில் கவனித்துள்ளோம். அத்தகைய விடயங்கள் நிறுத்தப்பட வேண்டும்." அதன் பின் ஒரு இடைநிறுத்தம் செய்தபின்னர், "இன்று முதல், திரு ஆதன் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திலிருந்து கண்டிப்பாக, அதில் இருந்து விலகாமல் கற்பிப்பார் என்றார். அப்பொழுது மணியும் அடித்தது. அதைத் தொடர்ந்து எல்லா வகுப்புகளும் தொடங்கியது. ஆதனும் பதினொன்றாம் வகுப்பிற்கு மூன்றாம் பருவத்துக்கான பாடங்களை கற்பித்தற்கு வகுப்பறைக்குள் நடந்தான். அங்கு அப்பொழுது இருந்த எல்லா முப்பத்தாறு மாணவர்களும் எழுந்து நின்றனர். உடனே, அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு, ஆதன் பாடப் புத்தகத்தைத் திறந்தான். முன்பு வகுப்பறையில் அமைதியாக இருந்த மாணவர்களின் போக்கில் இன்று ஏதோ ஒன்று மாறிவிட்டது. இரண்டாவது வரிசையில் இருந்த ஒரு மாணவி எழுந்து நின்றாள். "சார்," அவள் குரல் நடுங்கியது, "நேற்று என் அப்பா பள்ளியில் நான் என்ன கற்றுக்கொண்டேன் என்று கேட்டார். நான் அவரிடம் சொன்னேன்: பண்டைய கலப்பு இல்லா தனி மொழிகளில் ஒன்றான தமிழுக்கு நினைவாற்றல் இருக்கிறது என்றேன்." என்றாள். அதைக் கேட்ட வகுப்பறை பயத்தை விட அடர்த்தியான அமைதியில் மூழ்கியது. அவள் தொடர்ந்தாள்: "அப்பா அழுதார். - சத்தமாக அல்ல, எதிர்ப்பாக அல்ல - மேலும் எந்த ஆசிரியரும் இதற்கு முன்பு அப்படிச் சொன்னதில்லை என்றும், அவர் அழுதார்" தமிழ் என்பது வெறும் தேர்வுகளுக்காகக் கற்பிக்கப்படும் ஒரு பாடம் அல்ல, அது வாழ்ந்த அனுபவத்தைத் தாங்கிச் செல்லும் பாடம், மக்கள் மறக்க நிர்ப்பந்திக்கப்பட்டதை மொழி நினைவில் கொள்கிறது. அதாவது, தனிநபர்கள் அல்லது சமூகங்கள் அதிர்ச்சிகரமான, சிரமமான அல்லது வேதனையான வரலாறுகள் மற்றும் அனுபவங்களை அடக்கலாம், புறக்கணிக்கலாம் அல்லது அதிகாரப்பூர்வமாக அழிக்கலாம், இந்த நிகழ்வுகளின் தடயங்கள் குறிப்பிட்ட சொற்களஞ்சியம், மொழிச்சொற்கள், கதைகள் அல்லது கலாச்சார நுணுக்கங்கள் மூலம் மொழியிலேயே பதிக்கப்பட்டுள்ளன. மொழி ஒரு வரலாற்றுக் காப்பகமாகச் செயல்படுகிறது, மக்கள் உணர்வுபூர்வமாக மறக்க முயற்சிக்கும் கடந்த காலத்தின் கூறுகளைப் பாதுகாக்கிறது என்பதே ஆகும். அதைத்தான் ஆதன் தமிழுக்கு நினைவாற்றல் இருக்கிறது என்றான். ஒரு குழந்தைக்கு, இது புரட்சிகரமானது: மொழி இனி இலக்கணம் அல்ல - அது மரபுரிமை. மாணவியை தொடர்ந்து ஒரு மாணவன் எழுந்து நின்றான். “சார் , வரலாற்றைப் பற்றிப் பேசக் கூடாதுன்னு என் அம்மா சொல்றாங்க. ஆனா நாம பேசாம இருந்தா, நாம யாருன்னு நமக்கு எப்படித் தெரியும்?” இன்னொரு குரல்: “நீங்க எங்களுக்கு வெறுப்பைக் கற்றுத் தரல, சார். நீங்க எங்களுக்கு வார்த்தைகளைக் கற்றுத் தந்தீங்க.” கல்வி அதிகாரி [இன்ஸ்பெக்டர்] எழுந்து நின்றார். “இது போதும்,” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டு, மாணவர்களை “உட்காருங்க.” என்று கையால் காட்டினார். ஆனால், யாரும் உட்காரவில்லை. பல ஆண்டுகளில் முதல் தடவையாக, ஒரு வகுப்பறை அதிகாரத்தை மறுத்தது. உடனே ஆதன் கையை உயர்த்தி, “உட்காருங்க,” என்று மெதுவாகச் சொன்னான். அவர்கள் எல்லோரும் உடனடியாக இருந்து அவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள் - அதிகாரிக்கு அல்ல. ஆதன் பாடப்புத்தகத்தை மூடினான். அவன் கல்வி அதிகாரியை பார்த்தான். "நீங்கள் ஒழுக்கத்தை விரும்பினீர்கள்," என்று ஆதன் அமைதியாக அவருக்கு கூறினார். "இதுதான் மரியாதை எப்படி இருக்கும் என்பது." [“You wanted discipline,” he said calmly. “This is what respect looks like.”]” என்றான். வெளியே - நடைபாதை வழியே வேகமாக செய்தி பரவியது. பெற்றோர் அங்கு கூட்டமாக வந்தனர். சில ஆசிரியர்கள் பயத்தில் எழுந்து நின்றனர். மதிய உணவு நேரத்தில், பள்ளி வாசலில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் கோஷங்கள் இல்லை. கூச்சல் இல்லை. மக்கள் மட்டுமே அங்கு நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு பெற்றோர் சத்தமாக கூறினார்: "நம் குழந்தைகளுக்கு அவர்கள் யார் என்று சொல்வது ஒரு குற்றம் என்றால், நாம் அனைவரும் குற்றவாளிகள்." அவரைத் தொடர்ந்து மற்றொருவர் கூறினார்: "நாங்கள் செய்ய பயந்ததைச் செய்ததற்காக ஒரு ஆசிரியரைத் தண்டிக்காதீர்கள்." முதல்வர் நடுங்கினார். இது இனி ஒரு கோப்பாக இருக்கவில்லை. அது பொதுவான பிரச்சனையாக மாறியது. அதே மதியம், சிலாபம் மருத்துவமனையில், ஒரு நோயாளி அமைதியாக சமந்தியிடம் [செந்தூரி], அவரின் பணிநேரத்தின் போது கூறினார்: "உங்கள் நண்பர் ... தமிழ் ஆசிரியருக்கு ... ஆதரவாக இன்று பள்ளிக்கு முன்னால் ஏராளமான மக்கள் கூடி நிற்கிறார்கள்." என்றார். அவள் சிரிக்கவில்லை. அவள் தன் கண்களை மூடினாள். முதல் முறையாக, பயம் தன் உடலை விட்டு வெளியேறுவதை அவள் உணர்ந்தாள். ஆபத்து நீங்கியதால் அல்ல - ஆனால் உண்மை இனி தனியாக இல்லாததால். அன்று மாலை - வழமைபோல் கடற்கரைக்கு, ஆனால் சூரிய மறைவிற்குப் பிறகு, ஆதனும் சமந்தியும் சென்று, ஒருவரை ஒருவர் சந்தித்தார்கள். ஆதன் கடல் அலைகளை பார்த்தபடி, மெதுவாகச் சொன்னான்: "மக்கள் கத்தவில்லை. ஆனால் நாங்கள் எல்லோரும் உண்மைக்காக இங்கு நிற்கிறோம் என்று அங்கு அமைதியாக நின்றார்கள்.[“They didn’t shout. They just stood.”]" ஆதனுக்கு சமந்தி [செந்தூரி] பதிலளித்தார்: "அப்படித்தான் உண்மையில் அமைதி உடைகிறது. [“That’s how silence breaks.”]" அவன் மீண்டும் கடலை பார்த்தான். "சிலவேளை, நான் என் பதவியை இழக்க நேரிடும்," என்று அவன் கூறினான். அவள் பதிலளித்தாள்: "ஆனால் நீங்கள் ஒரு தலைமுறையை உண்மை அறிய செய்துவிட்டீர்கள் - அவர்களை உங்களுடன் பெற்றுவிட்டீர்கள்" அதன் பிறகு ஒரு நீண்ட இடைநிறுத்தம் நிலவியது. அந்த இடை வெளியில் அலைகள் வந்து போயின. பின்னர் அவள் சொன்னாள்: "நாளை என்னை அமைதியாக இருக்கச் சொன்னால், இனி எப்படி என்று எனக்குத் தெரியாது.[If they ask me to be quiet tomorrow, I won’t know how anymore.]" அவன் தலையசைத்தான். அன்று இரவு, ஆதன் தனது நாட்குறிப்பில் எந்த கருத்தும் எழுதவில்லை. அவனுக்கு அது தேவை இருக்கவில்லை. அந்த நாள் ஏற்கனவே பல மக்களின் உயிர்களில், ஆதன் தன்னை எழுதிவிட்டான். சத்தத்தால் அமைதி தோற்கடிக்கப்படவில்லை. அது தலைவணங்க மறுத்த மக்களால் தோற்கடிக்கப்பட்டது [Silence had not been defeated by noise. It had been defeated by people who refused to bow.]. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 10 தொடரும் துளி/DROP: 2085 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 9 https://www.facebook.com/groups/978753388866632/posts/34239047785743764/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 129 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 129 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" 🪵 1. ஒரு கெலியா (கொம்பு விளையாட்டு) இந்த விளையாட்டில், ஒரு உறுதியான கம்பம் (பெரும்பாலும் தென்னை மரத்தின் தண்டு) செங்குத்தாக அமைக்கப்படுகிறது. கொம்புகளைப் போன்ற ஒரு முள் குச்சியுடன் பொருத்தப்பட்ட இரண்டு அணிகள், கயிறுகளைப் பயன்படுத்தி தங்கள் குச்சிகளை கம்பத்தில் இணைக்கின்றன. பின்னர் அணிகள் ஒரு கயிறு இழுப்பதில் ஈடுபடுகின்றன, குச்சிகளில் ஒன்று உடையும் வரை இழுக்கின்றன. இந்த விளையாட்டு வலிமை மற்றும் ஒற்றுமையைக் குறிக்கிறது. 🥥 2. பொல் கெலியா (தேங்காய் விளையாட்டு) பொல் கெலியாவில் இரண்டு அணிகள் பங்கேற்கின்றன, ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேங்காய்களைக் கொண்டிருக்கும். வீரர்கள் தங்கள் தேங்காய்களை எதிரணி அணியினர் மீது வீசி, அவற்றை உடைக்கும் நோக்கில் விளையாடுகிறார்கள். எதிராளியின் அனைத்து தேங்காய்களையும் வெற்றிகரமாக உடைக்கும் அணி வெற்றி பெறுகிறது. இந்த விளையாட்டு துல்லியத்தையும் உத்தியையும் சோதிக்கிறது. 🍊 3. தோடன் கேலியா (தோடம்பழம் / ஆரஞ்சு விளையாட்டு) பொல் கேலியாவைப் போலவே, தோடன் கேலியாவும் தேங்காய்களுக்குப் பதிலாக தோடம்பழங்களைப் பயன்படுத்துகிறது. விதிகள் மற்றும் நோக்கங்கள் அப்படியே இருக்கின்றன, எதிராளியின் பழங்களை உடைப்பதில் கவனம் செலுத்துகின்றன. தோடம்பழங்களின் மென்மையான தன்மை காரணமாக இந்த மாறுபாடு வேறுபட்ட அளவிலான சவாலைச் சேர்க்கிறது. 🌸 4. மல் கேலிய (மலர் விளையாட்டு) மல் கேலியத்தைப் பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் குறைவாக இருந்தாலும், இது பத்தினி வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு மலர் விளையாட்டு என்று அறியப்படுகிறது. இது அழகு மற்றும் பக்தியை வலியுறுத்தும் ஒரு சடங்கு அல்லது போட்டி சூழலில் பூக்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியிருக்கிறது. அந்தக் கால சிங்களவர்கள் பத்தினி தெய்வமான நல்லொழுக்கமுள்ள கண்ணகிக்கு ஒருபோதும் முழுமையான திருமண வாழ்க்கை அல்லது அதைப் போன்ற வாழ்க்கை இல்லை என்று வருத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே, அவர்கள் அவளை பால குருன்னன்சே அல்லது பலங்காவுக்கு [Pala Gurunnanse or Palanga] திருமணம் செய்து, அவளை தங்களில் ஒருவள் ஆக்கினார். அதாவது, சிங்கள நாட்டுப்புறக் கதைகளில், பத்தினி தேவி (தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகியின் தெய்வீக வடிவம்) மற்றும் அவரது கணவர் பலங்கா (பால குருன்னன்சே என்றும் அழைக்கப்படுகிறார்) ஆகியோரின் கதை உள்ளூர் கலாச்சார மற்றும் மத சூழல்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தழுவல் அவர்களின் உறவைக் குறிக்கும் பல்வேறு சடங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளில் தெளிவாகத் தெரிகிறது. கீழே காட்டப்பட்டுள்ள படம், இடது மார்பகம் இல்லாத பத்தினி தெய்வம், அவளுடைய இலங்கை கணவர் பலங்காவுடன் [Palanga]. இது பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த மரச் சிலை. இது நிகவேவாவில் உள்ள ஆரம்பகால மடாலயத்தின் குகைகளில் [caves at the early monastery at Nikawaeva] ஒன்றில் காணப்படுகிறது; ''Ancient Ceylon by Henry Parker ' என்ற நூலின் பக்கம் 631 ஐப் பார்க்கவும். ஹென்றி பார்க்கரின் பண்டைய இலங்கையில், "நிகாவேவா" ["Nikawaeva"] என்று குறிப்பிடப்படும் இடம் இலங்கையின் குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள நிகாவேவாவுடன் [Nikawewa] ஒத்திருக்கிறது. இந்தப் பகுதி மொரகொல்லாகம மற்றும் மடகல்ல [Moragollagama and Madagalla] நகரங்களுக்கு இடையில் நிகாவேவா மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு பழங்கால புத்த மடாலயமான ஸ்ரீ நாகலா ராஜமஹா விஹாரயாவின் தாயகமாகும். குறிப்பாக, இந்த மடத்தின் குகைகளுக்குள் இரண்டு பழங்கால மரச் சிலைகளை பார்க்கர் ஆவணப்படுத்தியுள்ளார். இந்த சிலைகளில் ஒன்று பத்தினி தேவியாக அடையாளம் காணப்பட்டுள்ளது, அவரது இடது மார்பகம் இல்லாமல், பலங்காவுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் கி.பி 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. இதற்கிடையில், கோவலனின் முன்னாள் காதலி அல்லது துணைவியான மாதவி ஒரு பெண்ணைப் பெற்றெடுத்தாள். மேலும் கடல் தெய்வமான மணிமேகலை பற்றிய பல குறிப்புகள் காவியங்களில் உள்ளன. மாதவி தனது மகளுக்கு கடல் தெய்வமான மணிமேகலை என்ற பெயரையே சூட்டினாள். இராசாவலியாவும் (மன்னர் வரிசை எனப் பொருள்படும்) கூட, அதே பெயரில் ஒரு கடல் தெய்வத்தை மணிமேகலை என்று குறிப்பிடுகிறது. இராசாவலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரளயத்தின் போது இந்த கடல் தெய்வம் விகாரதேவியைக் காப்பாற்றி, தனது வருங்கால கணவரான துட்டைகைமுனு அல்லது துட்டகாமினியின் தந்தையிடம் அழைத்துச் செல்கிறது. மாதவி தனது மகள் ஒரு துறவியாக இருப்பதை விரும்பவில்லை. தலையை மொட்டையடித்து அவளை ஒரு புத்த கன்னியாஸ்திரியாக்கினாள். மணிமேகலையின் உயிரியல் தாயான மாதவி, கோவலனின் துயரக் கொலைக்குப் பிறகு மணிமேகலையை கண்ணகியின் மகள் என்று குறிப்பிடுகிறாள்; தனது சொந்த மகள் என்று அல்ல. மாதவி, நடனத்துடனான தமது தொடர்பை அழிக்க விரும்பியிருக்கலாம், இதனால் தனது உயிரியல் மகளை கண்ணகியின் மகள் என்று அழைக்க விரும்பினாள் என்று நினைக்கிறன். "அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப் பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள் ஆயர் முதுமகள் மாதரி என்போள் கவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும்" தமிழில் உள்ள மேற்கூறிய ஐந்து வரிகள், சிலப்பதிகாரத்தின் 15வது காண்டத்தின் 115 முதல் 119 வரையிலான வசனங்களாகும். அதாவது: 'அப்போது, நகர வாயில்களுக்கு வெளியே தர்மம் செய்து கொண்டிருந்த, அறத்தை விரும்பிய உள்ளத்தினையுடைய துறவிகளின் அறையில் வைக்கப்பட்டிருந்த, பூப்போலும் கண்களையுடைய இயக்கிக்கு வழக்கமாக, முறையான பாற்சோறு படைத்து காணிக்கை செலுத்திவிட்டு திரும்பி வந்த, இடையர் குடிப் பிறந்த முதியோள் மாதரி எனப்படுபவள், கவுந்தியடிகளைக் கண்டு, அவருடைய அடிகளை வணங்கினார்’ என்கிறது. மேற்கண்ட வசனங்களும் மொழிபெயர்ப்பும் தமிழ் காவியங்கள் மற்றும் இலங்கை நாளிதழ்களுக்கும் [நாளாகமம்களுக்கும்] இடையே இயங்கும் பொதுவான தொடர்புகளைக் காட்ட இங்கு நாம் தந்துள்ளோம். மொழிபெயர்ப்பில் உள்ள இயக்கினி அல்லது இயக்கி என்ற சொல் இலங்கை நாளிதழ்களில் யட்சப் பெண்ணைக் அல்லது இயக்கர் சமூக பெண்ணைக் [the female of the Yakkhas] குறிக்கிறது. இலங்கை நாளிதழ்களின்படி யக்காக்கள் அல்லது இயக்கர்கள் துணை மனிதர்கள். இருப்பினும், இது தமிழ் காவியத்தில் கடவுள்கள் மற்றும் தெய்வங்களை (யக்கினி / Yakkini) குறிக்கிறது. இலங்கை நாளிதழ்களின் துறவி ஆசிரியர்களின், மத சகிப்பின்மை [Religious intolerance], தமிழ் காவியத்தின் தெய்வீக பிம்பத்தை ஒரு துணை மனிதனாக கேவலப்படுத்துது அல்லது தரம் குறைக்குது. எச். பார்க்கர் தனது "பண்டைய இலங்கை" [H. Parker in his book, Ancient Ceylon] என்ற புத்தகத்தில், இந்தியாவில் உள்ள சைவ கோயில்களில் இயக்கர்களை காவல் தெய்வங்கள் என்று கூறுகிறார்கள் என பதிவிட்டு உள்ளார். Part: 129 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" The Sinhalese of that time must have felt sorry for the Pattini Goddess, virtuous Kannaki, that she never had a consummated married life or similar. Therefore, they had her married to Pala Gurunnanse or Palanga. The picture shown below is the Goddess Pattini without her left breast along with her Ceylonese husband Palanga. This is the wooden statue of eleventh century A. D., and found in one of the caves at the early monastery at Nikawaeva; see plate facing page 631 of Reference ''Ancient Ceylon by Henry Parker '. In the mean time Madhavi, former consort of Kovalan, gave birth to a girl. There are many references to the sea goddess, Mannimeghalai, in the epics. Madhavi named her daughter with the name of the sea goddess Mannimeghalai. Rajavaliya also makes reference to a sea goddess by the same name, Mannimeghalai. This sea goddess saves the Viharadevi during the deluge referenced in the Rajavaliya, and takes her to her future husband, the father of Duttha Gemunu. Madhavi didn’t want her daughter to be a nautch, and shaved her head and made her a Buddhist nun. Madhavi, the biological mother of Mannimeghalai, refers Mannimeghalai as the daughter of Kannaki; not as her own daughter after the tragic murder of Kovalan. Madhavi, perhaps, wanted to erase her connection with dancing to call her biological daughter as the daughter of Kannaki. "அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப் பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள் ஆயர் முதுமகள் மாதரி என்போள் கவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும்" The above five lines in Tamil are the verses 115 to 119 of Canto 15 of the Epic Silappathikaram. The translation is : Quote ‘Just then, Matari, an old woman of the cowherd caste, who was returning after making the usual offering of milk to the flower eyed Yakkini, enshrined outside the city gates in the quarters of monks practising Dharma, saw and prostrated herself before the saint Kavundi’. The above verses and the translation are given to show the common threads run among the Tamil epics and the Ceylon chronicles. The word Yakkini in the translation is the female of the Yakkhas in the Ceylon chronicles. Yakkhas are sub-humans as per the Ceylon chronicles. It represents, however, gods and goddesses (Yakkini) in the Tamil epic. The religious intolerance of the monkish authors of the Ceylonese chronicles distorted the godly image of the Tamil epic into a sub-human being. H. Parker in his book, Ancient Ceylon, says that Yakkhas are guardian deities in Saiva temples in India. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 130 தொடரும் / Will follow துளி/DROP: 2086 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 129 https://www.facebook.com/groups/978753388866632/posts/34239285532386656/?
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
😂 கிறிஸ்மஸ் தாத்தா…. மூட்டை மூட்டையாக ரஸ்ய ஆதரவு கட்டுரைகளை அவிழ்த்து விடுவார் என ஆவலோடு எதிர்பார்க்கும் குழந்தை நான்😂. நான்மட்டும் அல்ல, யாழ்களத்தில் கருத்து எழுதும் இன்னும் பலரும் இப்படியான குழந்தைகளே😂. ஒரு விசயம் சொல்லட்டுமா… மேலே உள்ளவருக்கும், யாழில் யூடியூப் இணைப்போருக்கும் முன்பே சொன்னதுதான்… Keep an eye on your engagement figures…. இது கருத்துக்களம் - சொந்த சரக்குத்தான் - விற்பனை ஆகும். கூகிள் டிரான்சிலேடரின் கொச்சை தமிழில், பந்தியில் கடைசி வரிக்கு வரும் போது முதல் வரியில் என்ன வாசித்தோம் என்பதே மறந்து போகும் அளவுக்கு எழுத்து நடை உள்ள கட்டுரைகளை எவரும் வாசிக்க போவதில்லை. தலையங்கத்தை வாசித்து விட்டு போவார்கள். சொல்ல வேண்டியது என் கடன்… இல்லை… கதவை தட்டும் யெஹொவா சாட்சிகள் போல - நற்போதனை செய்து, மக்களுக்கு ரஸ்யாவின் அருமை பெருமைகளை புகட்டியே ஆவேன் என்றாலும் ஓக்கேதான்.
-
யாழ்.தென்மராட்சியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்: நால்வர் கைது: இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
யாழ்.தென்மராட்சியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்: நால்வர் கைது: இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு! யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் ஆயுதங்கள் தாங்கிய குழுவினரால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் இன்று(11) அதிகாலை 1.00 மணிக்கும் 2.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளன. சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு வீட்டின் மீதும்,கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 வீடுகள் மீதும் குறித்த ஆயுதக் குழுவினர் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிலுள்ள மீசாலை மேற்கு, வங்களா வீதியிலுள்ள வீடொன்றில் புகுந்த ஆயுதக்குழுவினர் வீட்டிலிருந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை தட்டான்குளம் வீதியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதோடு,மினிபஸ் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரிக்கப்பட்டுள்ளன. மேலும், கொடிகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள மீசாலை வடக்கு ஞானவைரவர் வீதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த குழுவினர் அங்கு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதன்போது வீட்டிலிருந்த பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதேடு இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிக் காயப்படுத்தப்பட்டுள்ளார். அதனையடுத்து கொடிகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள மீசாலை, வடக்குக் கிழக்கு ஊரொல்லையிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த குழுவினர் அங்கிருந்த இரண்டு கார்கள், பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அடித்து நெருக்கியுள்ளனர். இதன்போது கிராமத்து இளைஞர்களால் தாக்குதல் மேற்கொண்டவர்களில் 4 பேர் பிடிக்கப்பட்டனர். ஏனையவர்கள் தப்பியோடிய நிலையில், அவர்கள் விட்டுச் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள், இரண்டு வாள்கள் மற்றும் கொட்டன்கள் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளன. சம்பவ இடங்களுக்கு வருகை தந்த தடவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2026/1468030
-
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி! 13 ஆண்டுகளுக்கு முன்பு கீழே விழுந்து மூளையில் பலத்த காயமடைந்த நிலையில் கோமாவில் இருந்த 32 வயதான ஹரிஷ் ராணாவை கருணை கொலை செய்வதற்கு இந்திய உயர் நீதிமன்றம் இன்று (11) அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கருணைக்கொலைக்கு முதல் முதலாக அனுமதி வழங்கப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும். கருணைக்கொலையின் சட்டப்பூர்வத்தன்மையை அங்கீகரித்த உயர் நீதிமன்ற தீர்ப்பின் பல அம்சங்களை தெளிவுபடுத்தியது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய நீமன்ற அமர்வால் அனுமதி வழங்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் 32 வயதான ஹரிஷ் ராணா. 2013 ஆம் ஆண்டு கல்லூரி மாணவராக இருந்தபோது விடுதியின் 4 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கோமா நிலைக்கு சென்றார். கடந்த 13 ஆண்டுகளாக ஹரிஷ் ராணா கோமா நிலையில் இருந்து வருகிறார். அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. உணவுக் குழாய்கள் மூலமே அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த நியூட்ரிஷன் உணவு மற்றும் தண்ணீர் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மட்டுமே அவர் உயிர் வாழ்கிறார். ராணாவை கருணைக் கொலை செய்ய 2024 இல் அவரது பெற்றோர் டெல்லி மேல் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். நோயாளி வெண்டிலேட்டர் உதவியில் இருந்தால் மட்டுமே கருணை கொலை சட்டப்படி சாத்தியம் என நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. அதே ஆண்டு அவர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினர். உயர் நீதிமன்றம் அவரது உடல்நிலை குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தகத்து. இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெபி பர்திவாலா, கேவி விஸ்வநாதன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. https://athavannews.com/2026/1467951