All Activity
- Past hour
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
எல்லாப் புகழும் அல்லாவுக்கே உரியது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவி இந்தியா அரை இறுதிக்குப் போய்விட்டது.
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 119 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 119 / பின் இணைப்பு - "புத்தரின் பண்புநலனுக்கும் அல்லது நடத்தைக்கும் இலங்கை நாளேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் " புத்தர் 29 வயதில் அரச வசதிகளையும், புதிதாகப் பிறந்த மகனையும், இளம் மனைவியையும் துறந்த மற்றும் மிகவும் கருணையுள்ள மாமனிதர் என்று இன்று பலராலும் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த உலக வாழ்க்கையின் துயரத்தால் அல்லற்பட்டு, வருத்தமடைந்து, அந்தத் துயரத்திலிருந்து விடுபட ஒரு வழியைக் கண்டுபிடிக்க விரும்பினார். தீபவம்சம் புத்தரை முனிவர்களில் முதன்மையானவர், மகிழ்ச்சியைத் தருபவர், இரக்கமுள்ளவர், கருணையுள்ளவர் என்று விவரிக்கிறது. புத்தர் 2400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார். மேலும் இலங்கையின் வரலாற்றுக் குறிப்புகள், புத்தர் வாழ்ந்த காலத்தில் மனிதர்கள் அல்லாதவர்கள் இலங்கையில் இருந்தனர் என்று நம்மை நம்ப வைக்க முயல்வதும் வெளிப்டையாகத் தெரிகிறது; புத்தர் காலத்தில் இலங்கையில் இரத்த தாகம் கொண்ட இயக்கர்கள், காட்டுமிராண்டி பிசாசுகள் மற்றும் கடுமையான இராட்சதர்கள் [blood thirsty Yakkhas, savage Pisacas and Rakkhasas] போன்ற மனிதர் அல்லாத உயிரினங்கள் வாழ்ந்ததாக பண்டைய இலங்கை நாளேடுகளில், இலங்கையின் அசல் குடிமக்களை, புத்தரின் கருணையை உண்மையை பொய்யாக்கி, தாம் புத்த துறவி ஆசிரியர்கள் என்று சொல்லிக்கொண்டு வர்ணிக்கிறார்கள். ஆனால் உண்மையில், இந்தக் கதைகள், அந்த நிலத்தின் அசல் மக்களை ஆபத்தானவர்களாகவோ அல்லது தீயவர்களாகவோ காட்டிட புத்த துறவிகளால் அபத்தமாக சித்தரிக்கப் படுகின்றன. அதாவது, இதன் மூலம், இந்த பூர்வீக சமூகங்களின் பாரம்பரிய நிலங்களைக் கையகப்படுத்துவதை நியாயப்படுத்த முயன்றனர் என்பதே உண்மை. அதை இன்றும் குறிப்பாக இலங்கை தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம், புத்த குருக்களுடனும், ராணுவ வீரர்களுடனும் இணைந்து, அரச ஆதரவுடன் செய்துகொண்டே இருக்கின்றன. வங்கத்திலிருந்து [Vanga] இலங்கைக்கு வரவிருக்கும் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களுக்கு [chosen followers] வழி வகுக்கும் வகையில், மேற்கூறிய துணை மனிதர்களை [sub-humans] இலங்கையில் இருந்து அகற்ற புத்தர் விரும்பினார் என்றும் அவர் மூன்று முறை இலங்கைக்கு காற்றில் பறந்து வந்தார் என்றும் இலங்கை நூல்கள் கூறுகின்றன. புத்தர் ஒரு மனிதப் பிறவி. எனவே அவர் கட்டாயம் பறந்திருக்க முடியாது என்பதே உண்மை! மேலும் அவரது பறத்தல் பற்றிய வர்ணனை அல்லது சம்பவம் இராமாயண காவியத்தில், அனுமான் இலங்கைக்கு பறந்ததாக கூறும் கதையின் திருட்டு என்று இலகுவாக எவரும் கூறலாம். காரணம் தீபவம்சத்துக்கு அல்லது மகாவம்சத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது இராமாயணத்தின் ஆரம்ப கட்டம் கிமு 7-5 மற்றும் 5-4 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்டிருக்கலாம் என் இன்று ஊகிக்கப்படுகிறது. எனவே அதில் இருந்து இந்த சம்பவ பிரதி எடுக்கப்பட்டு இருக்கலாம் என்பது நம்பக்கூடிய ஒன்றே ஆகும். தீபவம்சம் 1- 51 இன் படி, கூடியிருந்த இயக்கர்களின் கூட்டத்தினர் சம்புத்தர் [Sambuddha means the ‘Perfectly Enlightened One’, sammā = perfectly; saṁ = by himself without a teacher; buddha = Enlightened or Awakened One, by realisation of the four Noble Truths. According to Buddhist scriptures, there have been four Sammā Sambuddhas including Lord Gautama Buddha in the present world cycle, and a fifth Sammā Sambuddha named Maithriya is expected to appear sometime in the future. / சம்புத்தர் என்றால் 'முழுமையான ஞானம் பெற்றவர்', சம்மா = பரிபூரணமாக; சாம் = ஒரு ஆசிரியர் இல்லாமல் தானே; புத்தர் = நான்கு உன்னத உண்மைகளை உணர்ந்து ஞானம் பெற்றவர் அல்லது விழித்தெழுந்தவர். பௌத்த சாஸ்திரங்களின்படி, தற்போதைய உலகச் சுழற்சியில் பகவான் கௌதம புத்தர் உட்பட நான்கு சம்மா சம்புத்தர்கள் இருந்துள்ளனர், மேலும் மைத்ரியா என்ற ஐந்தாவது சம்மா சம்புத்தர் எதிர்காலத்தில் எப்போதாவது தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.] அங்கே, நடுவானில் இயக்கர்களின் தலைகளுக்கு மேல் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள், ஆனால் அவர் புத்தர் என்று அவர்கள் நினைக்கவில்லை; அவரை வேறொரு இயக்கர் என்றே தவறாக நினைத்தார்கள். Part: 119 / APPENDIX – "Conflict between buddha's characters and the events mentioned in Ceylon chronicles" Buddha is understood to be a very kind person who renounced the royal comforts, his just born son and his young wife when he was 29 years of age. He was saddened by the misery of this worldly life and wanted to find a way out of this misery. Dipavamsa describes Buddha as; the chief among Sages, the bringer of Happiness, the compassionate, and merciful grate Sage. Buddha was born more than 2400 years ago, and the Ceylon chronicles wanted us to believe that there were non- humans; blood thirsty Yakkhas, savage Pisacas and Rakkhasas during his life time in Lanka. The monkish authors branded the original inhabitants of Lanka as above to misappropriate their traditional land. The Buddha wanted to clear Lanka of the above sub-humans to make way for his chosen followers yet to come to Lanka from Vanga, and he came, flying to Lanka thrice. Buddha is a Human, and couldn’t have flown, and his flying is a plagiarism from the Epic Ramayana. When he came he was hovering over the heads of Yakkhas in mid air! Yakkahs mistook Buddha as one of theirs, the Dipavamsa, 1- 51. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 120 தொடரும் / Will follow துளி/DROP: 2066 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 119 https://www.facebook.com/groups/978753388866632/posts/34067398726242005/?
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இவ்விரண்டு பத்திகளுமே ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறதே! முதலில் கையெழுத்திட்ட நான்கு நாடுகளும் உதவாமல் எப்படி பின்னர் இந்தியா, பாக்கிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணுஆயுதங்களை உற்பத்திசெய்தன! அத்துடன் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத இந்தியா, பாக்கிஸ்தான், இஸ்ரேல் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை! ஏனென்றால் அவர்களிடம் அணுஆயுதம் இருக்கிறது அதனால் ஒருவராலும் வாலாட்ட முடியாது! எதுவுமே இல்லாத ஈராக், ஈரான் போன்ற நாடுகளுடன்தான் வீரத்தை காண்பிக்க முடியும்! அதுவும் ஐநாவின் எந்தவித அனுமதியுமின்றி!
- Today
-
பண்டைய தமிழரின் ஆயுதங்கள் & படைக்கலன்கள்
முழு ஆவணம்:
-
பொன்னியம்மன் கோவில், ஆலங்குப்பம், ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம்.
-
வாடமங்களம், கிருஷ்ணகிரி மாவட்டம்.jpg
-
பொம்மிடி அருகில் கோட்டை மேடு.jpg
-
திண்டுக்கல் மாவட்டம், பெரும்புள்ளி நடுகற்கள் - 10th centuary.jpg
-
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகில், கொண்டகரஹள்ளி கிராமத்தின் மலையடிவாரத்தில் , கஞ்சான் குளத்தையொட்டி.jpg
-
தர்மபுரி மாவட்டம் , மேச்சேரி வட்டம் , பெரும்பாலையில் இருந்து பூச்சூர் செல்லும் வழியில் , சாமத்தாள் கிராமத்தில்.jpg
-
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் செக்கோடியில் சாலையின் ஓரத்தில் மண்டு எனும் இடத்தில் கங்க மன்னன் சிவமாரனின் 15 நடுகற்கள் ஒரே இடத்தில் காணப்படுகிறது..jpg
-
rajendra chola with sword.jpg
-
pole weapon - வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள மூங்கபட்டு கிராமத்தில்.jpg
-
krishnakiri.jpg
-
fe.jpg
-
assa.jpg
-
தண்டராம்பட்டை அடுத்த ராதாபுரம் கிராமத்தில் நடுகல் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.jpg
-
முருகமங்கலம் ஏரியில் உள்ள ஒரு வீரனின் நடுகல்.jpg
-
தேவிகாபுரம் போளுர் செல்லும் சாலையில் வேடர் பறி மண்டபம் அருகே இந்நடுகல் உள்ளது.jpg
-
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் பெண்ணேஸ்வர மடம் என்ற ஊரில் உள்ள பெண்ணேஸ்வரர் கோயிலுக்கு அருகிலும் அந்த ஊரிலும் ஏராளமான நடுகற்கள் உள்ளன அந்த நடுகல்லில் இது ஒன்று.jpg
-
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல் சிறுநாகலூர் - around 5th cent.jpg
-
ஆலம்பாடி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள வேடியப்பன் கோயில்.jpg
-
img_1_1766844394856.jpg
-
img_2_1766844408694.jpg
-
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அதுக்கு காரணம் பிரான்சில் உள்ளவரின் அதிமேதாவித்தனம்! ஏதோ தன்னால்தான் யாழ் களம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற மிதப்பு!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
WIவீரர்கள் இலகுவாகத்தடுக்கக் கூடிய பல பவுண்டரிகளை தடுக்காமால் ஏனோதானே என்று விட்டார்கள். இந்தியா செமிபைனலுக்கு வராவிட்டால் ICCக்கு வருமானம் படுத்து விடும் என்று செய்தார்களா என்று சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாமல் இருக்கிறது. இது இந்திய அணியில் எப்போதும் நடப்பதுதான் அவர்களுக்கு கபில்தேவ் தலைமையில் முதல் உலகப் கோப்யை வென்றதையே இன்னும் சகிக்க முடியாமல் இலருக்கிறார்கள். இருந்தாலும் இந்திய அணியில் தமிழர்களுக்கும் இடம் உன்டு. ஆனால் இலங்கை அணியில் சிங்களவர்களைத்தவிர யாருக்கும் இடம் இல்லை.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இது விஜையின் தனிப்பட்ட குடும்ப விடயம். அவரருடைய மனைவிக்கு விவாகரத்து கோருவதற்கு முழு உரிமையுண்டு.இந்த வழக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னே போடப்பட்டது. அதை இந்த நேரத்தில் கசிய விட்டது யார்? அதனால் ஆதாயம் அடையப் போவதுயார்?வியையின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறேன். ஆனால் விஜையை ஆதரிக்கப் போவதில்லை. அதற்குள் வேறு கணக்குகள் இருக்கின்றன.விஜையின் கொள்கைத்தலைவராக பெரியாரை வைத்திருப்பது சரியாகத்தான் இருக்கிறது. பெரியாரிஸ்ட்டுகள் திருமணம் கடந்த உறவு என்று அதற்கு நல்ல பெயரும் வைத்திருக்கிறார்கள்.இந்திய அரசியல் கட்சிகளின் வரலாறு இப்படித்தான் அமைந்திருக்கின்றது. (ஒரு சில கட்சிகள் விதிவிலக்கு) எப்படி ஒரு கட்சித்தலைவருக்குப் பிறகு அந்தக்கட்சியின் தலைவராக அவரது மனைவி அல்லது அதற்குச் சமமானவர்கள் அல்லது தலைவரின் வாரிசுகள் தான் கட்சிப் பொறுப்பை உயில் எழுதுகிறார்கள். ஏனென்றால் கட்சியின் சொத்து தங்கள் குடும்பத்திடமே இருக்க வேண்டும் என்ற சுயநல நோக்கம்தான். நாளை தவெக ஒரு ஈழத்து தமிழிச்சியின் கைகளில் போவதை விட ஒரு இந்திய அதுவும் ஒரு பாப்பாத்தியின் கைகளுக்குப் போக வேண்டும் என்று சில பார்ப்பனர்கள் வேலை பார்த்திருக்கலாம். எது எப்படியோ விஜை அரசியல் கட்சி தொடங்கியதிலிருந்து பெரும் சறுக்கல்களையே சந்திக்கிறார். பிரச்சினைகளை எதிர்கொள்ளத்தயங்குகிறார்.எதுவாகிலும் அவர் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை இந்தத் தேர்தலில் ஏற்படுத்துவார்( தேர்தலுக்கு முகம் கொடுத்தால்). பிற்குறிப்பு-நான் நாம்தமிழர்கட்சி தொடர்பான எந்த செய்தியைப்பகிர்ந்தாலும் யாழ்நிர்வாகம் உடனே அதைத்தூக்குகிறது. இதன்காரணத்தை அறியலாமா? நாம்தமிழர்கட்சிக்கு யாழில் தடை என்றால் அதன் தலைவர் சீமான் சம்பந்தபடாத இந்த விடயத்தில் அவரது பெரை வலிந்து உள்நோக்கத்துடன் தினிக்கப்படும் கருத்துக்களை எப்படி நிர்வாகம் அனுமதிக்கிறது.அதுமட்டுமல்ல நாம்தமிழர்பற்றிய எதிர்மறையான செய்திகளை யார்பதிந்தாலும் அனுமதிக்கும்நிர்வாகம் நான்பதியும் செயதிகளைத் தூக்குவது என் அதன்காரணம்பற்றி எனக்கு அறியத்தரப்படுவதும் இல்லை.
-
ஈரானின் இடைக்கால உயர் தலைவராக அலிரேசா அராபி நியமனம்!
இப்ப வருமோ.., எப்ப வருமோ….. இஸ்ரேல் நினைச்சா…. அப்ப வருமோ…
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் 2012 இல் போன போது உச்ச மாடியில் இருந்தது. நீங்கள் வருவதை அறிந்து பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பார்கள் போலும்😂.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
King of conspiracy என்டு சொல்லுவாங்கள். இப்பிடி போட்டுத் தள்ளுறியலே. முடியல. 😉
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உங்களுக்காக இன்று 154 மாடிக்குப் போய் வெண்டிங் மெஷினைத் தேடினேன்.. காணவில்லை. வெளியே பல்கனியில் நின்று கீழே உள்ள கட்டடங்களைப் பார்த்தபோது ஒரு பாரிய வெடிச்சத்தம் கேட்டது. துறைமுகத்தில் தாக்குதல் நடந்தது என்று நினைக்கின்றேன்! கீழே 148 மாடியில் வெண்டிங் மெஷினைக் கண்டுபிடித்தேன்.. ரவுண்டான பிஸ்கட்! தங்கம் என்று உரசிப் பார்க்கவா முடியும்!
-
ஆடுகளம்
-
பண்டைய தமிழர்களால் போரில் பயன்படுத்தப்பட்ட கேடயங்கள்
பல வடிவ கேடயங்களும் அவற்றோடு பாவிக்கப்பட்ட வாள்களும்:
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Error
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் அணிகளின் நிலைகள்:
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சஞ்சு கிறீஸ்தவ மாடுதின்னி என்பதால் அவரை முடிந்தவரை ஒதுக்கி வைத்தார் சங்கி கம்பீர். தொடர் சொதப்பலால் பிரெஷர் அதிகமாகி சாம்சனை வேண்டா வெறுப்பாக அணியில் சேர்த்தார். இண்டைக்கு சாம்சன் இல்லாவிட்டால் இந்தியா வீட்டை. அதுவும் ஆட்ட முடிவில் முட்டுகாலிட்டு சஞ்சு செலிபிரேட் பண்ணியது, மைதானத்தில் வந்து “ஜெய் ஶ்ரீராம்” கோசம் போடும் காவாலிகளுக்கு செம்ம கடுப்பை கொடுத்திருக்கும்😂. என்னதான் சப்பாத்திகள் உருட்டினாலும் உலக கோப்பையை வெல்ல மாட்டுகறி தேவை (பதான்ஸ், சஞ்சு, சிக்கா, ஷமி). இந்திய வெண்டது சோகம் எண்டாலும் இப்படி சில சின்ன சந்தோசங்கள், எனக்கும் புள்ளி வேற எனவே அதிக சோகம் இல்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, அணித்தலைவர் சிகண்டர் ராசாவின் அதிரடியான 73 (43 பந்துகள்) ஓட்டங்களின் உதவியுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் டெவால்ட் பிறெவிஸின் விளாசலான 42 (18 பந்துகள்) ஓட்டங்களுடன், றயான் றிக்கெல்டனின் வேகமான 31 (22 பந்துகள்) ஓட்டங்களுடனும் , ஜோர்ஜ் லிண்டியின் ஆட்டமிழக்காமல் விரைவாக எடுத்த 30 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும் 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த ஐந்து பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சுப்பர் 8 சுற்றில் விளையாடாத அவுஸ்திரேலியா மற்றும் இன்றைய போட்டியில் விளையாடாத நியூஸிலாந்து அணிகள் வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, றொஸ்டன் சேஸின் வேகமான 40 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜேஸன் ஹோல்டரின் ஆட்டமிழக்காமல் விரைவாக எடுத்த 37 (22 பந்துகள்) ஓட்டங்களுடனும், றொவ்மன் பவலின் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 34 (19 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் நிதானமான 32 (33 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிம்ரோன் ஹெட்மயரின் மின்னல்வேக 27 (12 பந்துகள்) ஓட்டங்களோடும் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் சஞ்சு சாம்சனின் ஆட்டமிழக்காமல் மின்னல்வேகத்தில் எடுத்த 97 (50 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் வேகமான 27 (15 பந்துகள்) ஓட்டங்களோடும் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்தோடு அரையிறுதிப் போட்டிக்கும் தெரிவானது. அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சப்பாத்தி கடைசி நேரத்தில் வென்றுவிட்டது. தாங்கள் கோப்பையை தூக்க வேண்டும் எனும் உள் நோக்கத்துடன் அரை இறுதி போட்டிகளை தமது மண்ணில் வைத்து உள்ளார்கள். இறுதி போட்டியும் அங்கு தானே.
-
குட்டிக் கதைகள்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், டெல்லியில் விஷமுள்ள கோப்ராக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அதிகாரிகள் கவலைப்பட்டனர். இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க, இறந்த ஒவ்வொரு பாம்பிற்கும் ஒரு பரிசுத் தொகையை அறிமுகப்படுத்தினர். முதலில், இந்தக் கொள்கை வெற்றிகரமாகத் தோன்றியதாகத் தோன்றியது, பல கோப்ராக்கள் கொல்லப்பட்டன. ஆனால் விரைவில், எதிர்பாராத விளைவு தோன்றியது. வெகுமதியைப் பெறுவதற்காக ஆர்வமுள்ள உள்ளூர்வாசிகள் கோப்ராக்களை இனப்பெருக்கம் செய்யத் தொடங்கினர். அரசாங்கம் இந்தக் குறைபாட்டை உணர்ந்து, கோப்ரா திட்டத்தை ரத்து செய்தவுடன், வளர்ப்பாளர்கள் இப்போது பயனற்ற தங்கள் பாம்புகளை விடுவித்தனர். விளைவு? கோப்ராக்களின் எண்ணிக்கை முன்பை விட அதிக அளவில் அதிகரித்தது. இந்த அத்தியாயம் கோப்ரா விளைவு (🐍THE COBRA EFFECT🐍) என்று நினைவுகூரப்படுகிறது, இது நல்ல நோக்கத்துடன் வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் எவ்வாறு பின்வாங்கும், நோக்கம் கொண்ட விளைவுக்கு நேர் எதிரான விளைவை ஏற்படுத்தும் என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தற்சார்பு வாழ்கை
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மிக்க நன்றிங்க....உங்க மந்திரம்...எனக்காகிவிட்டது ...சஞ்சு ..மலையாளியல்லே...லேசாக அசைக்க முடியாது
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
இரான் அதன் அண்டை இஸ்லாமிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கத்தார் தலைநகர் தோஹாவுக்கு அருகிலுள்ள அல் உதெய்த் விமானப்படைத் தளம் 1 மார்ச் 2026, 08:20 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின, இதை ஈரானுக்கு எதிரான "பெரிய இராணுவ நடவடிக்கை" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விவரித்தார். தாக்குதல்களின் போது, இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி அலுவலகமும் குறிவைக்கப்பட்டது. அதில், காமனெயி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவிக்க, பின்னர் இரானிய அரசு ஊடகமும் அதனை உறுதிப்படுத்தியது. இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, இரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைக்கத் தொடங்கியுள்ளது. "பஹ்ரைனில் உள்ள ஒரு அமெரிக்க கடற்படைத் தளம் தாக்கப்பட்டுள்ளது. இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய பெரிய அளவிலான மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரான் பிராந்தியம் முழுவதும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது," என்று இரானிய ராணுவம் கூறியது. இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஒரு அறிக்கையில், "அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக 'உண்மையான வாக்குறுதி 4' நடவடிக்கையின் கீழ் அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துகளைக் குறிவைக்கிறோம்" என்று கூறியது. அதே நேரத்தில், மத்திய கிழக்கில் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்கா ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. "ஐக்கிய அரபு அமீரகம், தோஹா மற்றும் பஹ்ரைனில் உள்ள தனது குடிமக்களை 'உள்ளேயே பாதுகாப்பாக இருக்க' அமெரிக்க அரசாங்கம் வலியுறுத்துகிறது," என்று அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்கள் படக்குறிப்பு,இரான் குறிவைத்த நாடுகள் இதற்கிடையில், இரான் தற்காப்புக்காக அனைத்து ராணுவ வழிகளையும் பயன்படுத்தும் என்று இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார். சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் இராக் போன்ற நாடுகளில் உள்ள தனது சகாக்களை அராக்சி அழைத்துப் பேசியதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இரான் தனது இறையாண்மையைப் பாதுகாக்க "தன்னுடைய சுய பாதுகாப்புக்கான சட்டப்பூர்வ உரிமையின் கீழ் அதன் அனைத்து தற்காப்பு மற்றும் ராணுவ திறன்களையும்" பயன்படுத்தும் என்று அந்த அறிக்கை இந்த நாடுகளிடம் கூறியது. அந்த அறிக்கையின்படி, "அமெரிக்காவும், இஸ்ரேலும் இரான் மீதான தாக்குதல்களுக்கு உங்கள் நாட்டிலுள்ள தளவாட வசதிகள் மற்றும் நிலப்பரப்பை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது" அவர்களின் பொறுப்பு என்பதை அராக்சி இந்த நாடுகளுக்கு "நினைவூட்டினார்". இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் இந்த அறிக்கைக்கு முன், கத்தாரின் தலைநகர் தோஹாவில் தாக்குதல்கள் மற்றும் சைரன்களின் சத்தம் கேட்டது. "நாட்டை குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன." என்று கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் மேற்கோள் காட்டி அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. "அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பு இரானிய ஏவுகணையை இடைமறித்தது," என்று ஒரு கத்தார் அதிகாரி ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் கூறினார். கத்தார் தலைநகரான தோஹாவுக்கு அருகிலுள்ள அல் உதெய்த் விமானத் தளமானது, மத்திய கிழக்கில் அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் வான் நடவடிக்கைகளின் தலைமையகமாகும். படக்குறிப்பு,குவைத் நெடுஞ்சாலையில் நடந்த தாக்குதலின் புகைப்படம் குவைத்தில் ஒரு நெடுஞ்சாலையில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் தாக்குதலின் பின்விளைவுகளைக் காட்டும் படங்களை பிபிசி பெற்றுள்ளது, அதில் எரிந்த லாரியும் அடங்கும். முன்னதாக, குவைத்தின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் சவுத் அப்துல்அஜிஸ் அல்-அத்வான் ஒரு பேஸ்புக் பதிவில், "அலி அல்-சலேம் விமானத் தளம் (அமெரிக்க விமானப்படை இருக்கும் இடம்) பல பாலிஸ்டிக் ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டது, ஆனால் குவைத் விமானப் பாதுகாப்புப் படைகள் அவற்றை வெற்றிகரமாகத் தடுத்தன." என்று கூறினார். இதற்கிடையில், பஹ்ரைனின் உள்துறை அமைச்சகம் தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் அவசர நிலை எச்சரிக்கை பற்றிய தகவலை வெளியிட்டது. பஹ்ரைனும் அதன் குடிமக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தது. "அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் சேவை மையம் ஏவுகணைத் தாக்குதலின் இலக்காக இருக்கிறது," என்று பஹ்ரைனின் தேசிய தகவல் தொடர்பு மையம் தெரிவித்துள்ளது. "கூடுதல் தகவல்கள் சரியான நேரத்தில் வழங்கப்படும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "குடிமக்கள் அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." பஹ்ரைனில் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் சேவை மையம் உள்ளது. இது வளைகுடா, செங்கடல், அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளைக் கண்காணிக்கிறது. படக்குறிப்பு,பஹ்ரைனில் பதிவான காட்சி பஹ்ரைன் மீதான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக குடிமக்களை வெளியேறுமாறு அமெரிக்க தூதரகம் முன்னர் எச்சரித்திருந்தாலும், அமெரிக்க இராணுவத்திடமிருந்து எந்தக் கருத்தும் இல்லை. ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில், "இரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளின் தாக்குதலால்" நாடு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது. "ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த ஏவுகணைகளை திறம்பட எதிர்கொண்டு பல ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்தன." "அபுதாபியின் குடியிருப்புப் பகுதியில் ஏவுகணை சிதைவுகள் விழுந்ததால், சில சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது மற்றும் ஒரு ஆசிய நாட்டவரின் உயிரிழந்தார்" என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அமைச்சகம், இது ஆபத்தை தூண்டும் செயல் என்றும் இதற்குப் பதிலடி கொடுக்கும் உரிமை தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் தெற்கே அல் தஃப்ரா அமெரிக்க விமானப்படைத் தளம் அமைந்துள்ளது. அந்த தளத்திலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படையுடன் இணைந்து அமெரிக்க விமானப்படை செயல்படுகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ தளங்கள் எங்கே உள்ளன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் சேவை மையம் பஹ்ரைனில் அமைந்துள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்கா பல இராணுவ தளங்களைக் கொண்டுள்ளது. வளைகுடா மற்றும் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் தலைமையகம் பஹ்ரைன் ஆகும். கத்தாரின் தலைநகரான தோஹாவுக்கு அருகிலுள்ள அல் உதெய்த் விமானத் தளம், மத்திய கிழக்கில் அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் விமான நடவடிக்கைகளின் தலைமையகமாகும். இது மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க விமானப்படைத் தளமாகும். சுமார் 10 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இங்கு உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமானப்படைத் தளமும் அமெரிக்க விமானப்படைக்கு ஒரு முக்கியமான தளமாகும். துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகம் ஒரு அதிகாரப்பூர்வ அமெரிக்க இராணுவத் தளம் அல்ல, ஆனால் பிராந்தியத்தில் முக்கிய அமெரிக்க கடற்படைத் துறைமுகமாகும். இராக்கில் உள்ள ஐன் அல்-அசாத் விமானப்படைத் தளத்தில் அமெரிக்கா தனது இருப்பைப் பேணுகிறது. வடக்கு இராக்கில் உள்ள எர்பில் விமானத் தளமும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு முக்கிய அமெரிக்க தளமாகும். சௌதி அரேபியாவில், 2,300-க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புகள் சௌதி அரசாங்கத்துடன் இணைந்து வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பை வழங்குகின்றன. பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய இடமாகும். ஜோர்டானில் உள்ள முவாஃபாக் அல் சால்டி விமானப்படைத் தளம் லெவண்ட் பிராந்தியத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க விமானப்படை மையத்தின் 332வது விமானப் பயணப் பிரிவுக்கு முக்கியமானது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு இரான் அதன் அண்டை இஸ்லாமிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
டிவிக்கு சேதம் இல்லை, வாங்கோ வெண்டிட்டியள் 😂
-
மத்திய கிழக்கு போர் சூழல்: நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உறுதி
37 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது; எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - எரிபொருள் விநியோகஸ்தர் சங்கம் 01 Mar, 2026 | 06:07 PM (இராஜதுரை ஹஷான்) மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவியபோதிலும் தற்போது நாட்டில் 37 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா குறிப்பிடுகையில், ஞாயிற்றுக்கிழமை (01) என்ற போதிலும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதோடு, நாளை பௌர்ணமி தினத்திலும் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். சாதாரணமாக இந்நிலைமை உருவாவதற்கு முன்னர், இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு விடுமுறை தினமாகும். நீண்ட வார இறுதி விடுமுறை என்பதால், ஐ.ஓ.சி நிறுவனம் ஏற்கனவே தீர்மானித்தபடி வழமை போலவே எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கும். பொதுவாக பௌர்ணமி தினங்களில் எரிபொருள் போக்குவரத்து இடம்பெறுவதில்லை என்றாலும், முன்னரே தீர்மானித்தபடி நாளை (02) எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காகத் தேவையான அளவு பௌசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் தொடர்பாக எந்தவித தேவையற்ற அச்சமும் கொள்ள வேண்டியதில்லை என்றார். https://www.virakesari.lk/article/239911
-
முறையற்ற வகையில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை
எரிபொருள் சேகரித்து வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ; ஜனக்க ராஜகருணா 01 Mar, 2026 | 05:51 PM (எம்.ஆர்.எம்.வசீம்) ஒரு மாதத்துக்கும் அதிகளவில் எரிபாெருட்கள் கைவசம் இருக்கின்றன. அதனால் மக்கள் தேவையற்ற வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டாம். அதேநேரம் யாராவது எரிபொருள் சேகரித்து வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக்க ராஜகருணா தெரிவித்தார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக மக்கள் பதற்றமடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் இருக்கிறார்கள். ஆனால் தேவையற்ற பதற்றத்துக்கு ஆளாக தேவையில்லை. ஏனெனில் எங்களிடம் ஒரு மாதத்துக்கும் அதிக எரிபொருள் கைவசம் இருக்கிறது. பெற்றோலை பொறுத்தவரை தற்போது கைவசம் இருக்கும் தொகையுடன் தற்போது நாட்டை நெருங்கிவரும் பெற்றோல் கப்பலுடன் 37 நாட்களுக்கு தேவையான பெற்றோல் எம்மிடம் இருக்கிறது. அதேபோன்று டீசல் 31 நாட்களுக்கும் சுப்பிரி டீசல் 72 நாட்களுக்கும் விமானங்களுக்கான டீசல் 47 நாட்களுக்கும் எங்களது கைவசம் இருக்கிறது. அதனால் மக்கள் பதற்றமடைய எந்த தேவையும் இல்லை. அதேநேரம் இந்த மாதம் வரை நாங்கள் கொள்வனவு கட்டளை பிரப்பித்து, எங்களுக்கு வழங்குவதாக உறுதியளித்திருக்கும் எரிபொருள் கப்பல்கள் எதுவும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருவதில்லை. அவை அனைத்தும் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்தே வருகின்றன.அதனால் தற்போதைக்கு எரிபொருள் நிறைவடையும் எந்த பிரச்சினையும் எங்களுக்கு எற்படப்போவதில்லை. என்றாலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நாங்கள் எரிபொருள் விநியோகிப்பதில்லை. என்றாலும் மக்கள் வழமைக்கு மாற்றமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வந்தமையாமல் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுத்தோம். இன்று பொயா விடுமுறை தினமாக இருந்தாலும் இன்றும் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும். அதனால் மக்கள் தேவையில்லாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்ல தேவையில்லை. அதேநேரம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சில வியாபாரிகள் முன்னர்போன்று போத்தல்களுக்கு எரிபொருளை கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர். அதனால் போத்தல்களுக்கு எரிபொருள் எடுத்துச்செல்வதை நிறுத்துமாறு நாங்கள் உத்திரவிட்டிருக்கிறோம். அதற்காக பொலிஸாருக்கும் உத்தரவிட்டிருக்கிறோம். யாராவது இந்த நடவடிக்கையில் ஈடுபட்டால் பொலிஸார் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள். எனவே மக்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு மாட்டிக்கொள்ளக்கூடாது, சிலவேளை சிறைத்தண்டனைக்கும் உள்ளாகலாம். அதேநேரம் யாராவது போத்தல்களுக்கு எரிபொருள் எடுப்பதை கண்டால், அவர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு நாங்கள் மக்களை கேட்டுக்கொள்கிறோம். அதேநேரம் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எதாவது, போத்தல்களுக்கு எரிபொருள் வழங்கியது உறுதிப்படுப்பத்தப்பட்டால், அந்த நிலையத்தின் அனுமதிப்பத்திரத்தை தடை செய்யவும் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இதுதொடர்பில் தேடிப்பார்க்க இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். எனவே யாராவது தேவையில்லாமல் எரிபொருள் சேகரித்து வைத்திருப்பதை கண்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்போம். அனைவரும் சட்டத்துக்கு சமமானவர்கள். அதனால் யாராவது சட்டத்துக்கு மாற்றமாக எரிபொருள் சேகரித்து வைத்திருந்தால், அவர்களின் வீடுகளுக்கு சென்றாவது சேகரித்து வைத்திருக்கும் தொகைக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றார். எரிபொருள் சேகரித்து வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ; ஜனக்க ராஜகருணா