All Activity
- Past hour
-
தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட படகில் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்!
தெற்கு ஆழ்கடலில் பாரிய சுற்றிவளைப்பு: போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் 10 பேர் கைது! 13 Mar, 2026 | 01:16 PM இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் இரண்டு பலநாள் மீன்பிடிப் படகுகள்கைப்பற்றப்பட்டுள்ளன. இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 10 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 'முழு நாடும் ஒன்றாக' எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையினர் மேற்கொண்ட இந்தத் துல்லியமான சுற்றிவளைப்பின் போது, சந்தேகத்திற்குரிய உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகொன்று முதலில் சோதனையிடப்பட்டது. அதன்போது கடத்தலில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தொடர் சோதனையில், கடத்தலுக்குத் துணைபோன மற்றுமொரு படகுடன் மேலும் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட படகுகள் நேற்று வியாழக்கிழமை (12) திக்கோவிட்டை மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரின் விரிவான ஆய்வின் போது,478 கிலோகிராமுக்கும் அதிக ‘ஐஸ்’ போதைப்பொருள், 176 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின், 03 இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் 08 தொடர்பாடல் சாதனங்கள் எனபன மீட்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், "தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முப்படைகள் மற்றும் பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முனையும் குற்றவியல் வலையமைப்புகளுக்கு இனி எவ்வித இடமும் அளிக்கப்படமாட்டாது. கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 75,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 14 படகுகள் முற்றுகையிடப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார். மேலும், போதைப்பொருள் ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளைப் பாராட்டிய அமைச்சர், கடத்தல் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் 1818 மற்றும் 1997 ஆகிய அவசரத் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/240869
-
84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!
Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு! Mar 13, 2026 - 12:41 PM இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படை வீரர்களின் சடலங்கள் இன்றைய தினம் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சடலங்களை ஏற்றிய விசேட விமானம் ஒன்று இன்று (13) மத்தல சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஈரான் நோக்கிப் புறப்படத் தயாராக உள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த கடற்படை வீரர்களின் உடல்களை அனுப்பி வைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. https://adaderanatamil.lk/news/cmmok612u000e356pemk928t3
-
-
நேபாளத்தில் இன்று பொதுத் தேர்தல்; மக்கள் வாக்களிப்பில் மும்முரம்
நேபாளத் தேர்தலில் ரெப் பாடகர் பாலேந்திர ஷாவின் கட்சி வெற்றி Published By: Digital Desk 3 13 Mar, 2026 | 09:00 AM நேபாளத்தில் கடந்த ஆண்டு வெடித்த இளைஞர் போராட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தலில், பாரம்பரிய அரசியல் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி ராஷ்டிரிய சுதந்திர கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாராளுமன்னறத்தின் கீழவையில் 182 இடங்களை அக்கட்சி கைப்பற்றியுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு வெறும் 2 இடங்களே குறைவாக உள்ள போதிலும், கடந்த பல தசாப்தங்களில் நேபாளத்தில் ஒரு தனி கட்சி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். தேர்தலின் முக்கிய முடிவுகள் ராஷ்டிரிய சுதந்திர கட்சி : 182 இடங்கள் நேபாளி காங்கிரஸ்: 38 இடங்கள் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி : 25 இடங்கள் 1 கோடியே 90 இலட்சம் வாக்காளர்களில் சுமார் 60 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் நேபாளத்தின் அடுத்த பிரதமராக ரெப் பாடகரும் காத்மண்டு மாநகர மேயருமான பாலேந்திர ஷா பதவியேற்கவுள்ளார். 2022 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இளம் கட்சி, நேபாளத்தின் அரசியலமைப்பு ரீதியாக வடிவமைக்கப்பட்ட 'விகிதாசார பிரதிநிதித்துவ' முறையையும் மீறி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது உலக அரசியலையே வியக்க வைத்துள்ளது. கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது போராட்டகாரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது சொந்தக் கோட்டையான ஜாப்பா 5 தொகுதியில் பாலேந்திர ஷாவினால் படுதோல்வியைச் சந்தித்தார். அதேபோல், நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ககன் தாப்பாவும் தனது ஆசனத்தை வேட்பாளரிடம் இழந்துள்ளார். வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் வாரிசுரிமை ஆகியவற்றுக்கு எதிராக கடந்த ஆண்டு வீதிக்கு இறங்கிய இளைஞர்களின் போராட்டமே இந்த மாற்றத்திற்குக் காரணமாகும். 77 பேரின் உயிர்த்தியாகத்திற்குப் பின் கிடைத்துள்ள இந்த வெற்றி, நேபாளத்தின் புதிய சகாப்தத்தின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. அடுத்த ஒரு வார காலத்திற்குள் பாலேந்திர ஷா தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/240849
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும் பெண் : சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் ஆண் : கூடும் காவிரி இவதான் என் காதலி குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும் ஹோய் பெண் : கட்டுமரத் தோணி போல கட்டழகன் உங்க மேல சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ பெண் : பட்டுடுக்க தேவையில்ல முத்துமணி ஆசை இல்ல பாசம் நெஞ்சோடு வந்தல்லோ ஆண் : பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது பாய் மேல நீ போடு தூங்காத விருந்து பெண் : நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ ஹோ ஆண் : வெள்ளி அலை தாளம் தட்ட சொல்லி ஒரு மேளம் கொட்ட வேளை வந்தாச்சு கண்ணம்மா ஆண் : மல்லியப்பூ மாலை கட்ட மாலையிட வேளை கிட்ட மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா பெண் : கடலோரம் காத்து ஒரு கவி பாடும் பாத்து தாளாம நூலானேன் ஆளான நான்தான் தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான் ஆண் : தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ பெண் : கூடும் காவிரி இவதான் என் காதலி குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும்........! --- அந்தியில வானம் ---
-
இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்
இரான் போரில் அமெரிக்காவின் 4வது விமானம் நொறுங்கியது - என்ன நடந்தது? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,(கோப்புப் படம்) கட்டுரை தகவல் கிளேர் கீனன் 13 மார்ச் 2026, 10:26 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் இராக்கில் அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த ஆறு பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது. கேசி-135 விமானம் விழுந்து நொறுங்கியதில் எதிரிகளின் தாக்குதலோ அல்லது தவறுதலான நட்பு நாடுகளின் தாக்குதலோ காரணமல்ல என்றும் அமெரிக்கா கூறியது. முன்னதாக விமானத்தில் இருந்த 6 பேரில் 4 பேர் உயிரிழந்ததாக அமெரிக்கா கூறியிருந்த நிலையில், தற்போது மேலும் இருவர் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. இரானுக்கு எதிரான அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகளில் இந்த எரிபொருள் நிரப்பும் விமானம் ஈடுபட்டிருந்ததாகவும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு விமானங்களில் இது ஒன்று என்றும் சென்ட்காம் தெரிவித்துள்ளது. மேலும், இரண்டாவது விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது என்று அமெரிக்கா கூறியது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,(கோப்புப் படம்) இரான் கூறியது என்ன? போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள், நடுவானில் மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் திறன் கொண்டவை. இவை அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. போர் விமானங்கள் பறக்கும் தூரத்தை அதிகரிப்பதற்காக முதல் வளைகுடா போரின்போது இவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. கேசி-135 விமானத்தில் வழக்கமாக ஒரு விமானி, ஒரு துணை விமானி மற்றும் விமானத்தின் எரிபொருள் நிரப்பும் பகுதியை இயக்குவதற்குப் பொறுப்பான ஒரு பூம் ஆபரேட்டர் (boom operator) என குறைந்தது மூன்று பணியாளர்கள் இருப்பார்கள். இந்த விபத்து நட்பு நாடுகளின் வான்பரப்பில் நடந்ததாக சென்ட்காம் விவரித்துள்ளது. இருப்பினும், இராக்கின் இந்தப் பகுதியில் இரான் ஆதரவு போராளிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு கூட்டணி குழு ஏவுகணை மூலம் இந்த விமானத்தை இலக்கு வைத்ததாக இரானின் அரசுத் தொலைக்காட்சி கோரியுள்ளது. இரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் வெடித்ததில் இருந்து, இதுவரை ஏழு அமெரிக்க வீரர்கள் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய போரின்போது அமெரிக்க ராணுவம் இதுவரை குறைந்தது நான்கு விமானங்களை இழந்துள்ளது. 4வது விமானம் இந்த மாத தொடக்கத்தில், குவைத் வான் பரப்பில் "தவறுதலான நட்பு நாட்டுத் தாக்குதலில்" மூன்று F-15 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அதிலிருந்த ஆறு பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறினர். போயிங் நிறுவனம் 1950-கள் மற்றும் 1960-களின் தொடக்கத்தில் அமெரிக்க ராணுவத்திற்காக கேசி-135 ஸ்ட்ரேடோடேங்கர் விமானங்களைத் தயாரித்தது. இது அமெரிக்க ராணுவத்தின் வான்வழி எரிபொருள் நிரப்பும் பிரிவின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. மேலும், போர் விமானங்கள் தரை இறங்க வேண்டிய அவசியம் இல்லாமல் நீண்ட தூரப் பணிகளை மேற்கொள்ள இது அனுமதிக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg8yknyn4po
-
15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின் கடந்த வருட வெற்றிக்கு பதிலடி கொடுக்குமா இந்து கொழும்பு?
15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின் கடந்த வருட வெற்றிக்கு பதிலடி கொடுக்குமா இந்து கொழும்பு? Published By: Vishnu 13 Mar, 2026 | 01:26 AM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் நடைபெற்ற இந்துக்களின் சமர் 14ஆவது அத்தியாயத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து அத் தோல்வியை நிவர்த்திசெய்யும் குறிக்கோளுடன் இராமநாதன் தேஷ்கர் தலைமையில் இந்து கல்லூரி கொழும்பு அணியும் தொடர்ச்சியான வெற்றிக்கு குறிவைத்து கடந்த வருட நாயகன் எஸ். சுபர்னன் தலைமையில் யாழ். இந்து கல்லூரி அணியும் 15ஆவது அத்தியாயத்தில் களம் இறங்கவுள்ளன. இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான 15ஆவது இந்துக்களின் சமர் இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டரங்கு பி. சரவணமுத்து (சரா) ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் (13ஆம், 14ஆம் திகதிகள்) நடைபெறவுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான அங்குரார்ப்பண ஒருநாள் கிரிக்கெட் போட்டி 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. இப் போட்டிக்கு ஜனசக்தி இன்சூரன்ஸ் பிறைவேட் லிமிட்டெட் கம்பனி தொடர்ச்சியாக 4ஆவது வருடமாக அனுசரணை வழங்குவதுடன் இப் போட்டி ஜனசக்தி லைவ் இந்துக்களின் சமர் என அழைக்கப்படுகிறது. இலங்கை பாடசாலைகள் மாபெரும் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இந்துக்களின் சமர் தனித்துவம் மிக்க போட்டியாக கருதப்படுகிறது. ஏனெனில் இரண்டு மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலைகள் பங்குபற்றும் ஒரே ஒரு மாபெரும் கிரிக்கெட் இதுவாகும். வடக்கு மற்றும் தெற்கு கலாசாரங்களைப் பகிர்ந்துகொள்ள இப் போட்டி வழிவகுப்பதுடன் மாகாணங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் அடையாமாகவும் இது அமைகின்றது. இது வெறுமனே கிரிக்கெட் போட்டியுடன் நின்று விடாமல் நட்பு, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு நிகழ்வாகவும் அமைகின்றது. வழமைபோல் இரண்டு கல்லூரிகளினதும் மாணவர்களுக்கு இடையிலான சொல்லாடல் (விவாதம்) போட்டியும் நடைபெறவுள்ளது. இந்த வருடம் இந்து கல்லூரி கொழும்பு தனது 75ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுவதால் இரண்டு கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டியும் பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 75ஆவது ஆண்டு விழாவை இந்துக்களின் சமர் வெற்றியுடன் கொண்டாடும் வகையில், இந்து கல்லூரி கொழும்பு அணி பல்வேறு வியூகங்களைப் பிரயோகிக்க உள்ளதாக அறியக் கிடைக்கிறது. யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் அணித் தலைவரும் தேசிய அணியில் இடம்பெற்றவருமான தமிழ் யூனியன் அணியின் சுழல்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த், சரா ஓவல் ஆடுகளத்தின் தன்மை குறித்து இந்து கொழும்பு கல்லூரி அணிக்கு சில முக்கிய குறிப்புகளை வழங்கியுள்ளார். இந்து கல்லூரி கொழும்பு அணி முகாமைத்துவத்தினரின் அழைப்பின் பேரிலேயே வியாஸ்காந்த் குறிப்புகளை வழங்கி அணி வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இதுவரை நடந்து முடிந்த 14 இந்துக்களின் சமர்களில் யாழ். இந்து கல்லூரி 4 வெற்றிகளையும் இந்து கல்லூரி கொழும்பு 3 வெற்றிகளையும் ஈட்டியுள்ளன. ஏனைய போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன. இந்த வருட போட்டியின் ஆரம்ப விழாவுக்கு விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர்நாயகம் எஸ். அர்ச்சுதன், பிரதம விருந்தினராகவும் 1996 உலக சம்பியன் இலங்கை அணியின் உப தலைவர் அரவிந்த டி சில்வா, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கௌரவ பொருளாளர் சுஜீவ கரலியத்த ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர். அணிகள் விபரம் யாழ். இந்து கல்லூரி: எஸ். சுபர்னன் (தலைவர்), எஸ். ஹரிகரன் (உப தலைவர்), ரி. பிரேமிகன், ஆர். ஆதித்தியன் (விக்கெட் காப்பாளர்), என். நிருஜன், கே. நிதீஸ், எஸ். அபிவர்னன், எஸ். சிவகஜீசன், எஸ். செல்வஜன், ரி. பிரீதிகன், ஜீ. லக்சிகன், எம். டனிலாஷ், ஜெ. பவானன், எஸ். அஷ்வின், பி. அனிஷ், ஜீ. செந்தூரன். தலைமைப் பயிற்றுநர்: எஸ். அலன்ராஜ். உதவி பயிற்றுநர்கள்: டி. ஜோய் ஆகாஸ், ஆர். நியூட்டன். இந்து கல்லூரி கொழும்பு: ஆர். தேஷ்கர் (தலைவர்), எம். அபிஷேக் (உப தலைவர்), எஸ். மிதுஷேகன் (விக்கெட் காப்பாளர்), எஸ். ஹர்ஷ, கே. யஷுராஜன், ரி. சந்தோஷ், ஜீ. தூயவன், ரி. யாதவ், எஸ். சதுர்ஷன், எஸ். சர்விஷ், வி. யுவராஜ், எஸ். ஆகாஷ், ஆர். அகிலேஷ், வி. அபினேஷ், எஸ். சபேஷன், ஆர். தக்ஷேஸ். பயிற்றுநர்: எஸ். கோபிநாத், உதவி பயிற்றுநர்கள்: பி. ஷஷிதரன், சி. ஜேசன். https://www.virakesari.lk/article/240832
-
பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் - அவதானத்துடன் இருக்குமாறு விசேட வைத்திய நிபுணர் அறிவுறுத்தல்
பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் - அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் Mar 13, 2026 - 08:30 PM தற்போதைய வெப்பமான வானிலைக்கு மத்தியில் நடத்தப்படும் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளின் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். வெப்பமான வானிலையினால் ஏற்படும் சுகாதார அபாயங்களைக் குறைப்பது எப்படி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில், இன்று (13) பிற்பகல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது கருத்துத் தெரிவித்த வைத்திய நிபுணர், பாடசாலை விளையாட்டு நடவடிக்கைகளின் போது இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு விளையாட்டுப் போட்டிகளைக் குறைத்தல், மாணவர்களுக்குத் தொடர்ச்சியான ஓய்வு வழங்குதல், பிள்ளைகளைக் குளிர்ச்சியான இடங்களில் தங்கவைத்தல் மற்றும் நீர் அல்லது உப்பு கலந்த பானங்களை வழங்குதல் மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: "தற்போது நிலவும் இந்த நிலைமையின் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளவும், சூழ்நிலையை அடையாளம் கண்டறிந்து தேவையான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளவும் முன்வருவது மிகவும் அவசியம். குறிப்பாகப் பாடசாலைகளில் காலை மற்றும் பகல் வேளைகளிலேயே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடும் வெயில் நிலவும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்வதும், பிள்ளைகளுக்கு அடிக்கடி ஓய்வு வழங்குவதும் முக்கியமாகும். பிள்ளைகள் தொடர்ச்சியாக விளையாட விரும்புவார்கள், ஆனால் அதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது; இடைவேளை அவசியம். விளையாட்டிற்கு இடையே அவர்களுக்கு ஓய்வு வழங்கி, நிழலான அல்லது குளிர்ச்சியான இடங்களில் அவர்களைத் தங்கவைப்பதோடு அதிகளவு நீர் மற்றும் ஆரோக்கியமான பானங்களை வழங்க வேண்டும். இதனைச் செய்யத் தவறினால் உடல் வெப்பம் அதிகரித்து மயக்கம், சோர்வு போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். அத்துடன் தசைப்பிடிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த அறிகுறிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டால், உடல் வெப்பம் மேலும் அதிகரித்து 'வெப்ப அதிர்ச்சி' (Heat Stroke) போன்ற உயிருக்கு ஆபத்தான சிக்கலான நிலைக்கு இட்டுச் செல்லும். ஒரு பிள்ளைக்கு மயக்கம், சோர்வு, தலைச்சுற்றல் அல்லது குழப்பமான நிலை ஏற்பட்டால், உடனடியாக அவரை வெயில் உள்ள இடத்திலிருந்து அகற்றி குளிர்ச்சியான இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நீர் அருந்த முடியுமானால் அதனை வழங்கவும். நிலைமை தொடருமானால் தாமதிக்காது அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வது அவசியமாகும்" எனத் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmmp0wgbg000b356pg8cd32a8
-
போரை ஆதரித்த இரானியர்கள் இப்போது சந்தேகப்படும் விஷயம் என்ன?
போரை ஆதரித்த இரானியர்கள் இப்போது சந்தேகப்படும் விஷயம் என்ன? பட மூலாதாரம்,Reuters கட்டுரை தகவல் சோரூஷ் நெகாதார்தாரி இரான் நிபுணர், பிபிசி மானிட்டரிங் 13 மார்ச் 2026, 11:02 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் "அவர்கள் ஆட்சியின் அனைத்து உயர்நிலை நபர்களையும் கொன்றுவிடுவார்கள், ஒரு சில நாட்களில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் இப்போது இரண்டாவது வாரம் நடக்கிறது. ஒவ்வொரு இரவும் வெடிப்புச் சத்தங்களைக் கேட்டு நான் விழிக்கிறேன்," என்று தெஹ்ரானில் குடியிருப்பவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். அவர் ஆரம்பத்தில் இந்தப் போரை ஆதரித்தார். ஆனால் இப்போது அவரது ஏமாற்றம் அதிகரித்து வருகிறது. தங்கள் நாட்டின் தலைமையை எதிர்க்கும் சில இரானியர்களுக்கு, அரசியல் மாற்றத்தை துரிதப்படுத்தும் என்று அவர்கள் ஆரம்பத்தில் நம்பிய இந்தப் போர், இப்போது ஒரு வேதனையான மறுபரிசீலனைக்கு அவர்களைத் தள்ளுகிறது. மேலும் இந்த மோதலின் விலை, இறுதியில் கிடைக்கும் எந்தவொரு அரசியல் முடிவையும் விட அதிகமாக இருக்குமோ என்று அவர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், மற்றவர்கள் இன்னும் வெளிநாட்டு ராணுவ அழுத்தமே இந்த அமைப்பை பலவீனப்படுத்துவதற்கான ஒரே யதார்த்தமான வழியாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர். பட மூலாதாரம்,AFP via Getty Images மக்கள் மனநிலை என்ன? பல அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள், இந்த நடவடிக்கையை பெரும்பாலும் இரான் நாட்டின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திறன்கள் மற்றும் அச்சுறுத்தல்களைக் குறைப்பதற்கான ஒரு முயற்சியாகவே கட்டமைத்துள்ளனர். ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட சிலர், இதன் இறுதி நோக்கம் ஆட்சி மாற்றமாக இருக்கலாம் என்றும் சூசகமாகத் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் இந்த வெளிப்புற அழுத்தம் அந்த மாற்றத்தை கணிசமாக துரிதப்படுத்தக்கூடும் என்ற நம்பிக்கையை இரான் மத குருமார்களின் ஆட்சி அமைப்பை விமர்சிப்பவர்கள் சிலருக்கு ஏற்படுத்தியது. இருப்பினும், நாட்டிற்குள் இருக்கும் சில இரானியர்களுடனான உரையாடல்கள், இப்போது நிலைமை மிகவும் சிக்கலானது என்று உணர்த்துகின்றன. பிப்ரவரி 28 முதல் அரசு மீண்டும் ஒரு முழுமையான இணைய முடக்கத்தை அமல்படுத்தியுள்ளதால், மோதல் தொடங்கியதிலிருந்து இரான் நாட்டிற்குள் இருப்பவர்களைத் தொடர்பு கொள்வது பத்திரிகையாளர்களுக்கு பெரிதும் கடினமாகியுள்ளது. தகவல் தொடர்பு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், இஸ்லாமியக் குடியரசிற்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் எதிர்க்காத, அரசை எதிர்க்கும் பல இரானியர்களிடம் பிபிசியால் பேச முடிந்தது. குறிப்பாக மற்றொரு எழுச்சி முயற்சியும் நாடு தழுவிய போராட்டங்களும், இஸ்லாமியக் குடியரசு வரலாற்றிலேயே மிகக் கொடூரமான போராட்ட ஒடுக்குமுறையாகக் கருதப்படும் நிகழ்வில் ஒடுக்கப்பட்ட பிறகு அவர்களின் எண்ணம் இவ்வாறு இருந்தது. பட மூலாதாரம்,Getty Images இரான் நாட்டில் மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்துவது கைது அல்லது சிறைவாசத்திற்கு வழிவகுக்கும் என்பதால், அவர்களின் பாதுகாப்பிற்காகப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. தெஹ்ரானில் வசிக்கும் 31 வயது பொறியாளர் சமா, தாக்குதல்கள் பற்றிய செய்தி முதலில் வந்தபோது அவர் ஒரு கணம் நம்பிக்கையை உணர்ந்ததாகத் தெரிவித்தார். "பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம்," என்று அவர் கூறினார். "ஒவ்வொரு முறையும் அவர்கள் எங்களை மௌனமாக்குகிறார்கள், எங்களைக் கொல்கிறார்கள்." "தாக்குதல்கள் தொடங்கியபோது, இந்த ஆட்சி தப்பிக்க முடியாது என்று நான் நினைத்தேன்." அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதல்களில் இரான் நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தபோது, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியதாகவும் சமா கூறினார். "அந்தப் பெரிய செய்தி உறுதியானபோது நான் மகிழ்ச்சியில் கூச்சலிட்டேன்," என்று அவர் கூறினார். ஆனால் மோதல் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆன நிலையில், தன்னை சுற்றியுள்ள மற்றும் பலரின் மனநிலை மாறியுள்ளதாக அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்த இரான் நாட்டினர், இப்போது தங்கள் நாடு சீர்குலைந்து குழப்பத்தில் ஆழ்ந்துவிடுமோ என்று கவலைப்படுகிறார்கள். கவலை என்ன? "இப்போது சிலர் பீதியடைந்துள்ளனர், எனக்குத் தெரிந்தவர்கள் தங்கள் பகுதி அடுத்த இலக்காக இருக்குமோ என்று பயப்படுகின்றனர்," என்று சமா கூறினார். "என்னால் இப்போது தூங்க முடியவில்லை. வெடிப்புச் சத்தத்தைக் கேட்டோ அல்லது அவற்றைப் பற்றிய கனவுகள் கண்டோ நான் விழிக்கிறேன்." ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, நடந்து வரும் மோதலின் விளைவாக 6,00,000 முதல் ஒரு மில்லியன் வரையிலான இரானியக் குடும்பங்கள் இப்போது இரான் நாட்டிற்குள்ளேயே தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா அகதிகள் முகமை தெரிவிக்கிறது. அதாவது இதில் 3.2 மில்லியன் மக்கள் வரை இருக்கலாம். போர் நீடிப்பதால் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்றும், இது மனிதாபிமானத் தேவைகள் கவலைக்குரிய வகையில் அதிகரிக்கப்போவதை குறிக்கிறது என்றும் அது கூறியுள்ளது. பட மூலாதாரம்,Getty Images ஒரு வடக்கு நகரத்தைச் சேர்ந்த 28 வயது ஆசிரியை மினா, தான் இன்னும் ஆளும் மதகுருமார்களின் ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவதாகவும், ஆனால் போரின் நீண்டகால விளைவுகளைக் கண்டு அஞ்சுவதாகவும் கூறினார். "எனக்குத் தெரியும் இந்த ஆட்சிதான் இந்தப் போரை நமக்குக் கொண்டு வந்தது," என்று அவர் கூறினார். "ஆனால் நீங்கள் பிரமாண்டமான தீப்பிழம்புகளைப் பார்த்து, வெடிப்புகளைக் கேட்கும்போது, சிறு குழந்தைகள் பயந்து அழுவதைப் பார்க்கும்போது, நீங்கள் நேசித்து வாழும் நாட்டை இது அழித்துவிடுமா என்று நீங்கள் நினைக்கத் தொடங்குகிறீர்கள்." ஆட்சி கவிழ்ப்புக்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஒரு காலத்தில் பகிரங்கமாக விவாதித்த சில நண்பர்கள், போர் நீடிப்பதாலும் பல உயர் அதிகாரிகள் இன்னும் பதவியில் இருப்பதாலும் இப்போது எச்சரிக்கையுடன் இருப்பதாக மினா கூறினார். "நமக்குக் கிடைப்பது இடிபாடுகளும் அதே முல்லாக்களும் அதே அரசாங்கமும் மட்டுமென்றால் என்ன செய்வது? அது இன்னும் ஒடுக்குமுறை நிறைந்ததாகவும் இன்னும் சவாலானதாகவும் இருந்தால் என்ன செய்வது?" மற்றவர்களுக்கு அரசாங்கம் வீழுமா என்பது மட்டுமே கவலையாக இல்லை, அது வீழ்ந்தால் எத்தகைய சூழல் ஏற்படும், குறிப்பாக கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளில் என்ன நடக்கும் என்பதும் கவலையாக உள்ளது. பட மூலாதாரம்,Getty Images 'ஒரு நாடு மிஞ்சியிருக்க வேண்டும்' ஜனவரி மாதப் போராட்டங்களின் போது காயமடைந்த 31 வயது கடைக்காரர் அலி, ஸ்திரமின்மை அல்லது உள்நாட்டு மோதலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து தான் கவலைப்படுவதாகத் தெரிவித்தார். "ஆட்சி மாற்றம் என்பது எளிமையான ஒரு மாற்றம் என்பதைப் போல் அனைவரும் பேசுகிறார்கள்," என்று அவர் கூறினார். "ஆனால் யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள்? ஏதோ ஒரு வகையில் அவர்கள் ஆட்சியை வீழ்த்தினாலும், நாடு குழப்பத்தில் வீழ்வதை எது தடுக்கும்?" இந்த நிச்சயமற்ற தன்மை, அரசைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் மீது கூட பெரும் சுமையாக உள்ளது என்று அவர் கூறினார். "எனக்கு சுதந்திரம் வேண்டும்," என்று அவர் கூறினார். "ஆனால் இது முடியும் போது ஒரு நாடு மிஞ்சியிருக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்." போராட்டம் மற்றும் மாற்றுக்கருத்துகளை ஒடுக்கும் விஷயத்தில், அதிகாரிகளை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக போர் அவர்களைப் பலப்படுத்தியுள்ளது என்றும் சிலர் வாதிட்டனர். 27 வயது கிராஃபிக் டிசைனர் பாத்திமா, வெளிநாட்டுத் தாக்குதல்கள் பெரும்பாலும் "எதிரி" பற்றிய அரசின் நீண்டகால கதையை உறுதிப்படுத்துகின்றன என்று கூறினார். "அவர்கள் இதை விரும்புகிறார்கள்," என்று அவர் கூறினார். "பார்த்தீர்களா? இதெல்லாம் எதிரியின் திட்டம் என்று நாங்கள் சொன்னோமே என்று இப்போது அவர்கள் சொல்கிறார்கள். விமர்சனம் என்பது தேசத் துரோகமாகிவிட்டது, அதை அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள்." போர் தொடங்கியதிலிருந்து தெருக்களில் துணை ராணுவ படைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். "மக்கள் குரல் கொடுப்பது மென்மேலும் கடினமாகி வருகிறது" பட மூலாதாரம்,Getty Images 'வேறு வழியில்லை' இருப்பினும், உள்நாட்டு மாற்றத்தை ஏற்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை இத்தகைய கவலைகள் கவனிக்கத் தவறிவிடுகின்றன என்று மற்றவர்கள் வாதிடுகின்றனர். பல தசாப்த கால ஒடுக்குமுறைகள் வேறு வழியில்லாமல் செய்துவிட்டதாகக் கூறி, இந்த ராணுவ நடவடிக்கையை இவர்கள் தொடர்ந்து ஆதரிக்கின்றனர். மத்திய நகரமான இஸ்ஃபஹானைச் சேர்ந்த 40 வயது பொறியாளர் ரேசா, வெளிப்புற அழுத்தம் அவசியம் என்பது மட்டுமல்ல, அது மட்டுமே சாத்தியமான ஒரே வழி என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார். "ஏதோ நாங்கள் முயற்சி செய்யவில்லை என்பது போல் மாற்றம் உள்ளிருந்து வர வேண்டும் என்று சொல்கிறார்கள்," என்று அவர் கூறினார். "கடவுள் ஆணையாக சொல்லுங்கள், கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் பிணப் பைகளின் குவியல்களை இந்த மக்கள் மறந்துவிட்டார்களா? அது இரண்டு மாதங்களுக்கு முன்புதானே நடந்தது?" அரசாங்கத்தின் ராணுவ மற்றும் பாதுகாப்பு இயந்திரத்தை பலவீனப்படுத்துவது அதிகாரத்தின் சமநிலையை மாற்றக்கூடும் என்று ரேசா நம்புகிறார். "இந்த அமைப்பு நாளை கவிழ்ந்துவிடாவிட்டாலும், அதன் ஆற்றலைக் குறைப்பது சமன்பாட்டை மாற்றும்," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,Reuters டிரம்பின் வாக்குறுதி குறித்து கேள்வி தற்போதைய அமைப்பு அதிகாரத்தில் நீடிப்பதற்கு கொடுக்கும் விலை, போரிற்கான விலையை விட இறுதியில் அதிகமாக இருக்கும் என்று மற்றவர்கள் வாதிடுகின்றனர். தெற்கு மாகாணமான குசெஸ்தானைச் சேர்ந்த மென்பொருள் உருவாக்குநர் மிலாட், இந்த அரசு தப்பிப் பிழைத்தால் அதன் கொள்கைகள் இன்னும் பெரிய அழிவுக்கு வழிவகுக்கும் என்று தான் அஞ்சுவதாகத் தெரிவித்தார். "இவர்கள் பதவியில் இருந்தால், அமைதி நிலவும் அல்லது இந்தப் போரில் நாம் காண்பதை விடக் குறைவான அழிவுதான் ஏற்படும் என்று இந்த மக்கள் நினைக்கிறார்களா?" என்று அவர் கேட்டார். "'அமைதி' காலத்தில் அவர்கள் என்ன செய்தார்கள் என்று பாருங்கள். பொருளாதாரம் இல்லை, தண்ணீர் இல்லை, பெண்களுக்கு உரிமைகள் இல்லை, எதிர்காலம் இல்லை." "எங்கள் நாட்டிற்கு இதைச் செய்தவர்கள் என்னுடன் சேர்ந்து இறப்பதாய் இருந்தால், இந்தத் தாக்குதல்களில் நான் சாகத் தயார்." ராணுவ நடவடிக்கையை இன்னும் ஆதரிப்பவர்களில் சிலர் டிரம்பின் வாக்குறுதிகள் குறித்துச் கேள்வி எழுப்புகின்றனர். போர் தொடங்கிய பிறகு இரானியர்களுக்கு வழங்கிய செய்தியில், "நாங்கள் முடித்த பிறகு, உங்கள் அரசை பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். அது உங்களுடையதாக இருக்கும். இது அநேகமாக பல தலைமுறைகளுக்கு உங்களுக்குக் கிடைக்கும் ஒரே வாய்ப்பாக இருக்கலாம்" என்று டிரம்ப் கூறினார். ஜனவரி மாதம் நடந்த ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற மற்றொரு இளைஞரான சயீத், தான் இப்போது ஆழ்ந்த சந்தேகத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். "இந்த ஆட்சிக்கு எதிராகப் போரைத் தவிர வேறு வழியில்லை," என்று அவர் கூறினார். "ஆனால் இந்த டிரம்ப் உண்மையிலேயே இன்னும் ஆட்சி மாற்றத்தைத்தான் தேடுகிறாரா? வேலையை முடிப்பதில் அவர் தீவிரமாக இருக்கிறாரா?" "எனக்கு இப்போது ஒன்றும் தெரியவில்லை. அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகப் பேசுகிறார்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx24z074k23o
-
பேரன் 'இசை'யின் இனிய பிறந்தநாள் வாழ்த்து / A Blessing for Grandson 'Isai' (மார்ச் 13, 2026 / March 13th, 2026)
உங்கள் பேரனை நாங்களும் வாழ்த்துகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
109 ஆவது பொன் அணிகளின் சமர்
ஹார்மிஷன் துடுப்பாட்டத்திலும் ஆதித்தியா பந்துவீச்சிலும் அபாரம்; யாழ்ப்பாணம் கல்லூரி 176 - 10, சென் பட்றிக்ஸ் 40 - 0 Published By: Vishnu 12 Mar, 2026 | 08:22 PM (நெவில் அன்தனி) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான சென். பட்றிக்ஸ் அணிக்கும் யாழ்ப்பாணம் கல்லூரி அணிக்கும் இடையிலான 109ஆவது பொன் அணிகளின் போர் மாபெரும் கிரிக்கெட் போட்டி கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருக்கிறது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த யாழ்ப்பாணம் கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் சென் பட்றிக்ஸ் அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. எஸ். நிஷாந்தன் ஹரின் ஏட்றியன் 24 ஓட்டங்களுடனும் சிவநாதன் ஷெஹான் 13 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். முன்னதாக யாழ்ப்பாணம் கல்லூரியின் ஆரம்பம் சிறப்பாக இருந்தபோதிலும் முதல் 4 விக்கெட்கள் 30 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் கடைசி 6 விக்கெட்கள் 30 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வீழ்ந்ததால் அவ்வணியினால் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற முடியாமல் போனது. ரொபின்சன் உதயகுமார் ஜோன்சன் (41), சுபீசன் தக்சிகன் (7) ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 47 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்தனர். ஆனால், 4 விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்ததால் யாழ்ப்பாணம் கல்லூரி தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. (77 - 4 விக்.) இந்நிலையில், ஹமிஷ் ஹார்மிஷன், உதயராஜா கென்றிக்சன் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர். ஆனால், கடைசி 6 விக்கெட்கள் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன. ஹார்மிஷன் 5 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களையும் கென்றிக்சன் 31 ஓட்டங்களையும் பெற்றனர். அனுஷாந்தன் ஹார்மிஷன் 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் மதியழகன் ஸ்டீவ் ஆதித்தியா 5 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 18 ஓவர்களில் 25 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்களையும் ஜெபின்சன் கெமிஷன் 6 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 17 ஓவர்களில் 29 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இரண்டாம் நாள் ஆட்டம் நாளைக் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும். https://www.virakesari.lk/article/240826
- Today
-
ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்; வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு எச்சரிக்கை
உலகின் மிகப்பெரும் இராணுவ சக்தி, மதியாகலிகாகின் மிகப்ப்பெறும் இராணுவ சக்தியால் முடியாததை? வேறு எவரால் முடியும்? அரபு நாடுகளால் மட்டுமே நிறுத்த முடியும். அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்கா, இன்றேல் படை மற்றும் உளவு நிலைகளை அகற்றுவதன் மூலம். கெதியாக, கு,,,, வ,, வாயிலும் , மண்டையில் அடுத்தஅடி விழ முதல் ...
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
ஈரானிய யுத்தத்தில் வெற்றி பெறுவதாக ட்ரம்ப் உரிமை கோரல்: தெளிவான 'வெளியேறும் திட்டம்' இல்லையென சர்வதேச நாடுகள் கவலை! அமெரிக்கா - ஈரானிய யுத்தம் ஆரம்பமாகி 12 நாட்கள் கடந்துள்ள நிலையில், கள யதார்த்தம் மற்றும் யுத்தத்தின் இறுதி இலக்கு குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை மற்றும் உள்நாட்டில் சரிந்து வரும் செல்வாக்கு ஆகியவற்றிற்கு மத்தியில், இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தெளிவான 'வெளியேறும் திட்டம்' (Exit Strategy) வெள்ளை மாளிகையிடம் இல்லை என எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேசக் கூட்டாளிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். மாறிவரும் யுத்த இலக்குகளும் காலக்கெடுவும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது "ஈரான் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும்" என முழங்கிய அதிபர் ட்ரம்ப், தற்போது ஒரு புதிய ஆட்சி மாற்றத்தை (Regime Change) ஏற்றுக்கொள்வது போன்ற மென்மையான தொனியில் பேசத் தொடங்கியுள்ளார். யுத்தத்தின் தற்போதைய நிலை குறித்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், "இது யுத்தத்தின் ஆரம்பமா, நடுப்பகுதியா அல்லது முடிவா என்பதை அதிபர் ட்ரம்ப்பே தீர்மானிப்பார்" எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தெளிவற்ற அறிக்கைகள், 12 நாட்களைக் கடந்து நீடித்து வரும் இந்த மோதல் ஒரு முடிவற்ற திசையை நோக்கிச் செல்கின்றதோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார முடக்கம் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை அமெரிக்கப் படைகள் ஈரானியக் கடற்படையை முற்றுமுழுதாக அழித்துள்ளதாகக் கூறினாலும், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியான ஹோர்மூஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் குண்டுவீச்சுகள் நிறுத்தப்படாத வரை, ஒரு லீற்றர் எரிபொருளைக் கூட குறித்த கடல் வழியாகச் செல்ல அனுமதிக்கப்போவதில்லை என ஈரானியப் புரட்சிகரக் காவல் படை சூளுரைத்துள்ளது. ஈரானின் தேசிய பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், "ட்ரம்பின் வெற்று மிரட்டல்களுக்கு ஈரானிய மக்கள் அஞ்சப்போவதில்லை; எங்களை அழிக்க நினைப்பவர்கள் தாமே அழிந்து போவார்கள்" எனப் பதிலடி கொடுத்துள்ளார். உள்நாட்டு எதிர்ப்பு மற்றும் சர்வதேசக் கூட்டாளிகளின் அதிருப்தி. யுத்தத்தைத் தொடங்கியதன் மூலம் அமெரிக்கா தற்போது பாதுகாப்பு அற்ற நாடாக மாறியுள்ளதாக 50 சதவீதமான அமெரிக்க மக்கள் கருத்துக்கணிப்புகளில் தெரிவித்துள்ளனர். மேலும், ட்ரம்பின் முடிவுகளை 60 சதவீதமான மக்கள் நம்பத் தயாராக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ட்ரம்ப்பின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், யேர்மனிய அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், "இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கூட்டுத் திட்டம் ஏதும் அமெரிக்காவிடம் இல்லை என்பது கவலையளிக்கின்றது" எனத் தெரிவித்துள்ளார். பாடசாலைத் தாக்குதலும் ஏவுகணை சர்ச்சையும் யுத்தத்தின் முதல் நாளில் தெற்கு ஈரானில் உள்ள பெண் பிள்ளைகள் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 165 பேர் உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தாக்குதலை ஈரான் மீது சுமத்த அதிபர் ட்ரம்ப் முயற்சித்த போதும், அமெரிக்காவின் 'டோமாஹாக்' (Tomahawk) ஏவுகணையே அங்கு வீழ்ந்து வெடித்ததாக ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானிடம் டோமாஹாக் ஏவுகணைகள் இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தவறான தகவலை வெளியிட்டமை குறித்து அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "உண்மை என்னவென்று தெரியாமல் வாய்க்கு வந்ததைப் பேசுவது ஒரு வல்லரசு நாட்டின் அதிபருக்கு அழகல்ல" என எதிர்க்கட்சித் தலைவர்கள் சாடியுள்ளனர். TubeTamil Media
-
பேரன் 'இசை'யின் இனிய பிறந்தநாள் வாழ்த்து / A Blessing for Grandson 'Isai' (மார்ச் 13, 2026 / March 13th, 2026)
பேரன் 'இசை'யின் இனிய பிறந்தநாள் வாழ்த்து / A Blessing for Grandson 'Isai' (மார்ச் 13, 2026 / March 13th, 2026) கனடா நாட்டுப் பனிவெளியில் - மார்ச் பதின்மூன்றில் பிறந்த இசை பாப்பா! மதுரா ஹரிப்பிரசாந்த் தம்பதியர்க்கு - நீ மூன்றாவது செல்லப் பிள்ளையப்பா! ஜெயா அக்கா, கலை அண்ணன் - என உற்றார் சூழப் பிறந்தாயே! ஏழாவது பேரப்பிள்ளை நீயென - தாத்தா உன்னை அணைத்துக் கொண்டாரே! அகிலம் போற்றும் யாழ்ப்பாணத்து - நம் அத்தியடி மண்ணின் வேரப்பா! அந்நிய நாட்டில் பிறந்தாலும் - நீ அழகிய தமிழின் பரம்பரையப்பா! பெற்றோர் கூட்டிச் சென்றானரே - நம் தாயக மண்ணை முத்தமிட! பதினான்கு ஆகஸ்ட், 2025 - நீ யாழ்ப்பாண மண்ணைக் கண்டாயே! மறைந்தும் எம்மைக் காக்கின்ற - உன் அம்மம்மா ஜெயகுமாரியின் ஆசியப்பா! பிறக்கும் முன்னே பிரிந்தாலும் - அவர் தெய்வமாய் உன்னை வாழ்த்துவாரே! படிப்பினில் உயர்ந்து பாரினிலே - நீ உயர்ந்ததோர் நிலைமை அடையணும்! பெற்றோர் பெருமை போற்றிடவே - பெரும் சாதனை பலவும் புரியணும்! கனடா நாட்டின் நல்லதொரு - நற்பிரஜையாய் வளர்ந்து நீ ஜொலிக்கணும்! தமிழர் பண்பாடு கலாச்சாரம் - எந்நாளும் தவறாது நீயும் காக்கணும்! யாழ்ப்பாணத்து நேர்மையுடன் - நீ ஆயிரம் புகழைக் குவிக்கணும்! தாத்தாவின் ஆசை இதுவேயென - என் இசையை என்றும் வாழ்த்துவனே! In the winter’s hold of Ottawa, where the maple leaves rest, Was born a boy named Isai, the fifth grandson, our best! Third child of Mathura and Hariprasanth’s loving care, The baby brother to Jeya and Kalai, a bond beyond compare. Though born in the North, your roots are deep in Jaffna’s gold, The spirit of Athiady in your young heart is bold. In August’s warmth, you walked the soil of our motherland, Guided by your Granddad’s love and his steady hand. From the heavens above, a silent blessing softly flows, Where your Grandma Jeyakumary’s eternal spirit glows. She left us long ago, before your mother’s wedding day, But her prayers are the stars that guide you on your way. Study hard, dear Isai, reach the peaks of height and fame, Bring pride to your parents and to our family name. Be a noble citizen of Canada, loyal, true, and bright, But keep the Tamil flame within, a never-dying light. May the integrity of our ancestors be your guiding star, Whether you stay in Ottawa or travel very far! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம். [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] இன்று, எங்கள் அன்பான பேரன் 'இசை பத்மநாதனின்' 3வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம்! மார்ச் மாதம் தொடங்கும் போது, எங்கள் இதயங்கள் நன்றியுணர்வால் நிறைந்துள்ளன. ஒட்டாவாவில் பிறந்தாலும், யாழ்ப்பாணத்தின் பெருமையில் வேரூன்றிய இசை, நமது பாரம்பரியத்திற்கும் நமது எதிர்காலத்திற்கும் இடையிலான பாலத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். குறிப்பாக அவரது மறைந்த அம்மம்மா திருமதி ஜெயகுமாரி தில்லைவிநாயகலிங்கத்தின் ஆசீர்வாதங்கள் எப்போதும் அவருடன் இருக்கும். வலுவாக வளருங்கள், நன்றாகப் படியுங்கள், உங்கள் முன்னோர்களின் அறத்தை (நேர்மை) எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், அதே நேரத்தில் கனடாவில் ஒரு நல்ல குடிமகனின் பிரகாசமான எடுத்துக்காட்டாக இருங்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள், குட்டி 'இசை'! Today, we celebrate the 3rd birthday of our dear Isai Pathmanathan! As his month of March begins, our hearts are full of gratitude. Born in Ottawa but rooted in the pride of Jaffna, Isai represents the bridge between our heritage and our future. We especially feel the presence of his late Grandmother, Mrs Jeyakumary Thillaivinayagalingam, whose blessings are always with him. Grow strong, study well, and always remember the Aram (Integrity) of your ancestors, while being a shining example of a good citizen in Canada. Happy Birthday, Master Isai! பேரன் 'இசை'யின் இனிய பிறந்தநாள் வாழ்த்து / A Blessing for Grandson 'Isai' (மார்ச் 13, 2026 / March 13th, 2026) https://www.facebook.com/groups/978753388866632/posts/34265939603054582/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 131 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 131 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" மகாவம்சம் 36 – 133 ,'அரசுரிமை, பெருமைக்குரிய பல காரியங்களைச் செய்வதற்கு ஆதாரமாக' இருப்பதுபோலவே பல அநீதிகளுக்கும் காரணமாக இருக்கிறது. இதை உணர்ந்து நடக்கும் பக்திமான்கள் அரச போகம் குறித்து ஆனந்தம் கொள்ள மாட் டார்கள். நஞ்சுடன் [விசத்துடன்] கலந்த இனிய உணவாகக் கருதியே நடப்பார்கள் எனக் கூறுகிறது. சிலப்பதிகாரத்தில், வஞ்சிகாண்டம் – காட்சிக் காதை (Canto 25), 93 முதல் 106 வரையிலான வரிகள், அரச வாழ்க்கை சோகத்தால் நிறைந்தது [full of tragedy] என்று இதே போன்ற உணர்வுகளைக் கூறுகின்றன. "தென்னர் கோமான் தீத் திறம் கேட்ட மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்: ‘எம்மோரன்ன வேந்தற்கு’ உற்ற செம்மையின் இகந்த சொல், செவிப்புலம் படாமுன், ‘உயிர் பதிப் பெயர்த்தமை உறுக, ஈங்கு’ என, வல் வினை வளைத்த கோலை மன்னவன் செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது: மழைவளம் கரப்பின், வான் பேர் அச்சம்; பிழை உயிர் எய்தின், பெரும் பேர் அச்சம்; குடி புரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி, மன்பதை காக்கும் நன் குடிப் பிறத்தல் துன்பம் அல்லது, தொழுதகவு இல்’ என, துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த நல் நூல் புலவற்கு நன்கனம் உரைத்து-" [வஞ்சிக் காண்டம் / 2. காட்சிக் காதை] அதாவது, பாண்டியனுக்கு நேர்ந்த தீங்கினைக் கேட்ட சேரன் வருந்திக் கூறலானான். பாண்டியன் செங்கோல் தவறியது என் போன்ற மன்னர் செவிக்கு எட்டுவதற்கு முன்னர் பாண்டியன் உயிர் சென்றுவிட்டது. அந்த உயிர் அவனது வளைந்த கோலை நிமிர்த்தி நிறுத்திச் செங்கோலாக மாற்றிவிட்டது. மழை பொழியாவிட்டால் அச்சம். மக்களுக்குத் துன்பம் நேர்ந்தால் அச்சம். இப்படி அஞ்சிக்கொண்டு மக்களைக் காக்கும் பொறுப்புள்ள அரசர் குடியில் பிறத்தலானது, துன்பமே அல்லாமல் தொழும் தகைமை உடையது அன்று - என்று சாத்தனாரிடம் சேரன் கூறினான். மேற்கூறியது மிகச் சில சிறந்த தமிழ் மன்னர்களில் ஒருவரின் கருத்து ஆகும். அதன் கடைசி பகுதி மகாவம்சம் 36 – 133 உடன் தெளிவாக எதிரொலிக்கிறது. மேலும் சிலப்பதிகாரத்தில், 11 ஆம் காண்டத்தின் [காடுகாண் காதையில்] 18 முதல் 20 வரையிலான கீழ்க்காணும் வரிகள் உள்ளன. "வடிவேல் எறிந்த வான்பகை பொறாது, பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள," அதாவது, ' பாண்டிய மன்னனானவன் தனது வடிவேலைக் [ஈட்டியை] கடல்மீது எறிந்திட, அந்தப் பெரிய பகையினைப் பொறுக்கமாட்டாமல், அது பழிவாங்கும் நோக்கத்தில், கடலானது பொங்கி எழுந்து, பஃறுளி ஆற்றுடன் குமரி மலை அடுக்குகளையும் தன்னுள் விழுங்கியது' என்கிறது. மேலே உள்ளவை பண்டைய பஃறுளி நதி மற்றும் மலைகள் கொண்ட குமரி நிலத்தைப் பற்றிய ஒரு குறிப்பு. இந்தக் கடல் வெள்ளம் அல்லது சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை, தமிழின் பிற இலக்கியப் படைப்புகளிலும் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. Part: 131 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" The Mahavamsa 36 – 133 says ‘Thus, reflecting that sovereignty, being the source of manifold works of merit, is at the same time the source of many an injustice, a man of pious heart will never enjoy it as it were sweet food mixed with poison’. In Silappathikaram, Vanjikaandam – Kaadchik Kaathai (Canto 25), verses 93 to 106, says similar sentiments that the royal life is full of tragedy. The Tamil verses are not given but the English abstract of these verses are: Quote: ‘When he heard the cruel deed of the king of the Pandiyan country, the Cera, the king of kings, was anguished and said: ‘Before these words, which well deserve condemnation from any monarch of our status, reached our ears, it is good that the Pandiyan laid down his life. For it is the departing soul of the king that has straightened the sceptre, which was bent by this irrestible act of destiny. ‘If rains fail, great havoc is caused (to the country). If living beings suffer unrighteousness, widespread fear is caused. Paying due regards to the welfare of his subjects, wary of tyrannical rule, a protecting king born of a noble line occupies a position which is suffering and is not to be sought after’. Unquote The above is the opinion from one of the very few great Tamil kings. The last portion clearly resonates with the Mahavamsa 36 – 133. The following verses in Tamil also from the Tamil Epic Silappathikaram. The English translation of these verses 18 to 20 of Canto 11 is given below and it is from the Reference 28. வடி வேல் எறிந்த வான் பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பல் மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள ‘by standing on the shore of the sea and throwing his spear upon the fierce waters which, in a sprit of revenge, consumed the river Pahruli and the Kumari with their adjoining group of hills’. The above is a reference to an ancient River Pahruli and the Kumari Land with hills. This sea deluge is very often mentioned in other literary works in Tamil. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 132 தொடரும் / Will follow துளி/DROP: 2090 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 131 https://www.facebook.com/groups/978753388866632/posts/34269844655997410/?
-
அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்! சென்னை: நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் சென்னையில் இன்று (மார்ச் 13) காலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பி.காளியம்மாள். தன்னுடைய அதிரடி பேச்சால் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 60,000 வாக்குகள் பெற்றார். அந்தத் தேர்தலின்போது அவரின் பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார். அப்போது, “தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும்” என அறிவித்திருந்தவர், எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்தார். அவருடன் திமுக, அதிமுக, தவெக என அனைத்துக் கட்சிகளுமே பேச்சுவார்த்தையில் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இன்று காலை அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்தப் பேட்டியில், “ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அதிமுகவில் இணைந்தேன். ஒரு சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்துவந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று நான் இன்று அதிமுகவில் இணைந்துள்ளேன்” என்றார். நாகையைச் சேர்ந்த காளியம்மாள் தனது ஆரம்ப காலத்தில் கடலோரப் பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், 15 கடலோர மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ‘தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்தக் கட்சிக்கும் பிடி கொடுக்காமல் இருந்த காளியம்மாள் அதிமுகவில் இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது. காளியம்மாள் மேடைப் பேச்சுத் திறன் கொண்டவர். நாதகவில் இருந்தபோதே அவரது பேச்சால் அக்கட்சியின் தொண்டர்களைக் கட்டிப் போட்டதிலும், பெண்களை ஈர்த்ததிலும் அவருக்கு பங்கு இருந்தது. அதனாலேயே கட்சிக்குள் சீமான் அவருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க, பின்னாளில் அந்த முக்கியத்துவமே உரசலுக்கும் வித்திட்டது. பின்னர் நாதகவில் இருந்தே விலகினார். இப்போது அவர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். இது, அவரது ஆதரவாளர்களையும், நாதக அதிருப்தியாளர்களையும் ஈர்த்திட துணைபுரியும் என்பது அதிமுகவின் நம்பிக்கை. அத்துடன், அதிமுகவில் பெண் முகத்துக்கு பற்றாக்குறை என்பதைவிட துடிப்பான இளம் பெண்ணாக காளியம்மாள் இருப்பது மகளிரணிக்கு பெரும் பூஸ்டாக இருக்கும் என்று கட்சி கணித்துள்ளது.மகளிர் வாக்குகளைக் கவர, காளியம்மாளின் பேச்சு மிக முக்கிய அஸ்திரம் என்பதாலே அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வரை கொடுக்க அதிமுக தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. https://www.hindutamil.in/news/tamilnadu/ntk-former-cadre-kaliammal-joins-admk
-
சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
இவரது மரண அறிவித்தல் லங்காசிறியிலும் குடும்பத்தினரால் பகிரப்பட்டுள்து. சாதரணமாக நடந்த ஏதோ விபத்தாக இருக்கலாம் என்று நினைத்தேன்.ஆழ்ந்த இரங்கல்கள்.🙏
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
- இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்
நான் அறிந்தது, இரு விமானங்கள் தரை இறங்கியதாக. ஓன்று தாக்குதல் ஏவுகணையில் இருந்து விலத்த, மற்ற்றத்தை எகனை தாக்கியது என்று. அதை விட , இன்னோர் நாட்டின் அமெரிக்கா விமான தளத்தில் நின்று இருந்த இப்படியான சில விமானங்களும் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக. என்றாலும், எந்த உறுத்திப்படுத்தலும் இல்லை.- இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!
இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்! தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு அகழ்வின் போது, இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்திற்குப் பொறுப்பான புவியியலாளர் இந்திரஜித் கமகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஒரு நிமிடத்திற்கு 10,000 லீற்றர் தொடர்ச்சியான நீர்வரத்தைக் கொண்ட நீர் ஊற்று ஒன்று இலங்கையில் கண்டறியப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் இலங்கையில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய நீர் ஆதாரம் மடு பகுதியில் அமைந்திருந்தது. அதன் நீர்வரத்து ஒரு நிமிடத்திற்கு 7,000 லீற்றராகக் காணப்பட்டது. பாறை அடுக்குகளை ஆய்வு செய்து, அந்த அடுக்குகளுக்கு இடையிலான இடைவெளிகள் ஊடாக நிலத்தடி நீர் இருக்கும் இடங்களை நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் இனங்கண்ட பின்னரே இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலம் பிட்டபெத்தர, மொரவக்க மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர்த்தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிர்காலத்தில் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1468315- புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் உதவியலாளரான வி.கே. சசிகலா இன்று (13) தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளான கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி புதிதாக கட்சியை தொடங்கி உள்ளதாக சசிகலா அறிவித்தார். இந்த நிலையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, கட்சியின் பெயரை அறிவித்தார். அதன்படி, தனது கட்சியின் பெயர் அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் (All India Puratchi Thalaivar Makkal Munetra Kazhagam) என்று தெரிவித்ததுடன், தனது கட்சியின் சின்னம் தென்னந்தோப்பு என்றும் அறிவித்தார். தனது புதிய கட்சியின் பெயரை அறிவிக்கும் போது அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர், அக்கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்களை அன்புடன் நினைவு கூர்ந்தார். மக்களுக்கு சேவை செய்வதற்கும், திமுகவை எதிர்த்து நிற்பதற்கும் எம்.ஜி.ஆர். கட்சியை நிறுவினார் என்றும், ஏழைகளின் நலனுக்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் நிறுவப்பட்ட கட்சி அது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராகவும், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளராகவும் இருந்த சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1468304- யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானம்: இடைக்காலத் தடையை நீடித்தது மேல் நீதிமன்றம்
சும் "லவ்வர்ஸ்" மனக்குரல்: "இப்ப நாங்க பழைய பூங்கா உள்ளக விளையாட்டு அரங்கை ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா, அல்லது மௌனமாக மொள்ளக் கடந்து போவதா🤔?- இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்
மிக அண்மையில் மகளின் குழு ஆளில்லாத எரிபொருள் நிரப்பும் விமானத்தை வெற்றிகரமாக இயக்கினார்கள். அதன் காணொளியைத் தேடினேன் காணவில்லை.- இரசித்த.... புகைப்படங்கள்.
- நாம் தமிழரில் எந்தெந்த ஜாதிக்கு எவ்வளவு சீட்? யாருக்கு அதிகம்? இஸ்லாமியர்களுக்கு ஜாக்பாட்
சீமானால் பிசிறு என்று அழைக்க பட்ட நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி காளியம்மாள் சாமானிய தமிழரும் தலைவராகும் ஜனநாயகம் திராவிட கட்சியான அதிமுகவில் தான் உள்ளது என்று அதிமுகவில் இணைந்துள்ளார்.- இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்
ஈராக் வான்வெளியில் அமெரிக்க எரிபொருள் நிரப்பு விமானம் விபத்து : தாக்குதல் காரணமல்ல என அறிவிப்பு Published By: Priyatharshan 13 Mar, 2026 | 09:58 AM அமெரிக்காவின் United States Central Command (USCENTCOM) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அமெரிக்காவின் Boeing KC-135 Stratotanker எரிபொருள் நிரப்பு விமானம் ஒன்று ஈராக் நாட்டின் மேற்குப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. USCENTCOM வெளியிட்ட செய்திக்குறிப்பில், “Operation Epic Fury” என்ற நடவடிக்கையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு விமானங்கள் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றான KC-135 விமானம் மேற்கு ஈராக் பகுதியில் விழுந்ததாகவும், மற்றொரு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் எதிரி தாக்குதல் அல்லது நட்பு படையினரின் தவறான தாக்குதல் காரணமாக ஏற்பட்டதல்ல எனவும் அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் தெளிவுபடுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தைச் சேர்ந்த பணியாளர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும், சம்பவத்தின் முழுமையான விவரங்களைத் திரட்டுவதற்கு அதிகாரிகளுக்கு கால அவகாசம் வழங்குமாறு USCENTCOM பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து சேவையாற்றும் இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தெளிவான தகவல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/240856 - இராக்கில் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.