All Activity
- Past hour
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சரி. எற்றுக்கொள்கிறேன். களவிதிகளை மீறும் நோக்கம். எனக்கு. சிறுதுளியும் கிடையாது. இல்லை மேலும் களவிதிக்கு. முரண்பாடாபத் தான் இந்த திரி. களத்தில் அனுமதிக்கப்பட்டதா ? ஏன். அதை அனுமதித்து. மூன்று. பக்கங்கள். வரை. கருத்துகள். பதித்து. இருக்கிறார்கள். ? மேலும். ஒரு. மட்டுநிறுத்தினர். ஒரு. திரியில். கருத்தையும். எழுதிக்கொண்டு. அதே. திரியில். மட்டுநிறுத்தவும். முடியுமா. ? இதுபற்றி. களவிதிகள். என்ன சொல்கிறது. ?நன்றிகள். பல. வணக்கம்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
எங்களுக்கு சாத்திரம், ஜோதிடத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் பிள்ளைகளின், சொந்தக்காரரின் சாதகத்தை ஊர் ஊராய் அனுப்புவம். வரன் தேட!- Today
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Bharath Reddy (1978-1979), Hemang Badani (2001-2004), Lakshmipathy Balaji (2003-2005), Thangarasu Natarajan (2021), Washington Sundar (from 2020) இதில்Hemang Badani இன் பெற்றோர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள். ஆனால் Hemang Badani பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில்தான்!- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
முன்பு சோதிடம் பற்றி ஒரு திரியில் விவாதித்துள்ளோம். கள விதிகளில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: சாத்திரம் போன்ற மூட நம்பிக்கைகளை ஊட்டும் பதிவுகளை யாழ் ஊக்குவிக்கவில்லை, அவை நீக்கப்படும்.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இது ஒரு தனிநபர் மீதான வெறுப்பு தாக்குதல், இதற்கு எந்த நொண்டிச்சாட்டுகளாலும் நியாயப்படுத்த முடியாத செயல். இதற்காக நீங்கள் பெருமைப்படுபவராக இருந்தால் உங்களுக்காக வருந்துகிறேன்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை அணி இருந்த குழுதான் மிகவும் பலவீனமான அணிகள் கொண்ட குழு, அதிர்ஸ்டவசமாக மோசமான அவுஸ்ரேலியாவும் அந்த குழுவில் இருந்து விட சிம்ப்பாவே இலங்கை அணிகள் அவுஸ்ரேலியாவினை வீழ்த்தி வென்றுவிட; இரசிகர்கள் மனதில் ஒரு மிகைப்படுத்தப்பட்ட அளவீடு உருவாகிவிட்டது. இதனை Anchoring bias என்பார்கள், சாம்பியன் அணி அவுஸ்ரேலியாவினை வீழ்த்தியமையால் இலங்கை அணியினையும் சிம்ப்பாவேயினையும் சாம்பியனாக இரசிகர்கள் பார்க்க தொடங்கினார்கள். ஒரு அணியினை வெறும் பெயரிற்காக இன்னொரு அணியுடன் ஒப்பீடு செய்யும் போது தவறான புரிதல்கள் ஏற்படுகின்றது, இறுதியில் சுப்பர் 8 போட்டிகள் அனைத்திலும் இலங்கை அணி தோற்கும் யதார்த்தத்தினை ஏற்றுக்கொள்ள இயலாத இரசிகர்கள் இவ்வாறான சாக்கு போக்குகளிற்கு வருகிறார்கள். ஒரு அணி நாட்டிற்கு வெற்றி தேடி பெருமை ஏற்படுத்தாத நிலையில், எதற்காக நாட்டின் பொருளாதாரத்தினை பற்றி யோசிக்கவேண்டும்? குறைந்த பட்சம் ஒரு நாகரிகமான தோல்வியின் மூலம் தமது பெயர்களையாவது காப்பாற்றவே விரும்புவார்கள் (அது அவர்களின் வேலையும் இல்லை), அதுவே நடந்தது. ஆனால் இது ஒரு மனவழுத்தம், சோர்வு, துக்கம், கோபம் என பல உளவியல் வெளிப்பாடுகள் ஏற்படுத்தும், இரசிகர்கள் தமக்குள் சண்டையிடுதல், பொது சொத்துக்களை சேதப்படுத்தல் போன்ற மற்றவர்களையும் பாதிக்கும் செயல்களிலிலும் ஈடுபடுவார்கள். விளையாட்டு மனதிற்கு ஒரு உற்சாக உணர்ச்சியினை கொடுப்பதற்கு பதிலாக எதிர்பாராத பக்கவிளைவுகளையும் சிலரில் ஏற்படுத்திவிடுகிறது, மனம் ஒரு விந்தையானது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார்கள்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்குள்ளும் ஒரு அன்னியனா?????????? சாம்பியன் அணிகள் மோசமாக தொடங்கினாலும் போட்டியின் போக்கில் (தொடர்ந்து விளையாட) அவர்கள் மெருகேறுவார்கள், ஆனால் இந்தியணி நொக்கவுட் போட்டிகளில் சொதப்புகின்ற அணி (இந்தியர்கள் பயப்படும் அணி நியுசிலாந்து🤣).- கருத்து படங்கள்
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இவை இனவாதம் (racism) /இனவெறி ( race hatred) அல்ல. இவை கறுவியத்தீர்வு ( settling a grudge) ஆகும். ஐயனே, என்று தென் தமிழீழத்தில் முஸ்லீம் ஊர்காவல்படையும் காடையரும் செய்தவற்றை அறிந்தனோ அன்று தொடக்கம் இப்படித்தான் ... அதான் இந்த வடிவமைப்பில் இருக்கிறேன்: வாய்ப்பின் போது சோனகரை வெளுத்தல்😁 மற்றது, வட தமிழீழத்தவர் தென் தமிழீழ சோகமெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறிந்தாலும் (தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற இழி கொள்கையுடையோர்/ பிரதேசவாதிகள்) ஒற்றுமை வேண்டும் என்று கூறி இவற்றை மறைத்திடுவர்... இவரே சிங்களக் காடையரும் ஊர்காவல்படையினரும் வட தமிழீழத்தில் செய்தவற்றை கூறி ஒப்பாரி வைப்பர். கிஞ்சித்தும் தென் தமிழீழ படுகொலை பற்றி வாய் திறார். வாய் திறந்தால் - படுகொலைகளில் முஸ்லீம்கள் பங்காற்றியிருந்தாலும் / செய்திருந்தாலும் - சிங்களப்படை என்று செய்தியிடுவர்! ஏன் இந்தப் பாகுபாடு...? முஸ்லீம் என்டு போட வேண்டியது தானே?- யாழ். பல்கலை புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு!
புதிய துணைவேந்தர் வேல்நம்பிக்கு வாழ்த்துக்கள்! இப்போதைய துணைவேந்தருக்கு வடமராட்சி ஆட்கள் என்றால்தான் மண்டைகாய்கள் என்று ஒரு பிடிப்பு உள்ளதாம். புதியவரும் எப்படியோ.- லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்
லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் Published By: VISHNU 02 MAR, 2026 | 08:50 AM "லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரால் வடக்கு இஸ்ரேலிய நகரமான ஹைஃபாவிற்கு அருகிலுள்ள ஒரு இராணுவத் தளத்தின் மீது ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை வீசியதாகக் கூறியதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலைக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா குறித்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலிய போர் விமானங்கள் உடனடியாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலக்குகள் மீது தொடர்ச்சியான கடுமையான குண்டுவீச்சுகளைத் தொடங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/239935- கொழும்பு போர்ட் சிட்டி கடலில் வல்வெட்டித்துறை இளைஞரின் சடலம்
கொழும்பு போர்ட் சிட்டி கடலில் வல்வெட்டித்துறை இளைஞரின் சடலம் திங்கள், 02 மார்ச் 2026 07:45 AM கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து ஆணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வல்வெட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் கடந்த 28ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தவர் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் https://jaffnazone.com/news/55313- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு
வாழும் முறையால் வழிகாட்டிய தோழர் நல்லகண்ணு March 1, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — சென்னையில் கடந்த புதன்கிழமை தனது 101 வயதில் காலமான இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு அஞ்சலி செய்து ‘தினமணி’ பத்திரிகை மறுநாள் எழுதிய ஆசிரிய தலையங்கத்துக்கு ‘இனி யாருண்டு இது போல…’ என்று தலைப்பிட்டிருந்தது. அவரின் மறைவுக்கு பிறகு பொதுவாழ்வில் நேர்மைக்கும் கண்ணியத்துக்கும் எடுத்துக்காட்டாக உலகில் உயிருடன் இருக்கும் எவரையாவது காட்டமுடியும் என்பது சந்தேகமே. நல்லகண்ணுவின் மறைவு தமிழ்நாட்டு அரசியலில் தனிப்பட்ட அர்ப்பணிப்பு, கொள்கைப்பற்று மற்றும் சமூகநீதி மீதான நீடித்த பற்றுறுதி ஆகியவற்றினால் வரையறை செய்யப்பட்ட பொதுவாழ்வைக் கொண்ட — தனித்துவமான அடையாளச் சின்னங்களாக விளங்கிய ஒரு தலைமுறைத் தலைவர்களினால் வடிவமைக்கப்பட்ட ஒரு யுகத்தின் முடிவைக் குறித்து நிற்கிறது. நல்லகண்ணு தமிழ்நாட்டில் தனது மார்க்சிய சமகாலத்தவரும் தோழருமான என். சங்கரையாவுக்கு பிறகு நூறு வருட வாழ்க்கையையும் பல தசாப்தகால அரசியல் வாழ்வையும் கொண்ட இரண்டாவது முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவராவார். சங்கரையா அவரது 101 வயதில் 2023 ஆம் ஆண்டு காலமானார். நல்லகண்ணுவின் எளிமை, நேர்மை மற்றும் கண்ணியம் நிறைந்த வாழ்க்கை தார்மீக வெற்றிடத்தைக் கொண்டதாக விளங்கும் நவீன அரசியல் பரப்பில் முற்றிலும் மாறுபட்டதாக விளங்கியது. பகட்டாரவாரமும் பணமும் அதிகார வேட்கையும் ஆக்கிரமித்து நிற்கும் ஒரு யுகத்தில் அவர் அரசியலில் எளிமை, ஔிவுமறைவற்ற தன்மை மற்றும் நேர்மையான அணுகுமுறையை நியாயப்படுத்திக் குரல்கொடுத்தார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறும் நல்லகண்ணுவின் வாழ்வும் சமாந்தரமானவை. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி நல்லகண்ணு பிறந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி தாபிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் தொண்டர்களினால் ‘தோழர் ஆர்.என்.கே.’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட நல்லகண்ணுவின் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவாகவும் அமைந்தமை அவரின் வாழ்வும் கம்யூனிஸ்ட் இயக்கமும் இணை பிரிக்கமுடியாதவை என்பதை காட்டியது. பெரும்பாலும் இந்தியாவின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்கள் அனைவரையும் போன்று நல்லகண்ணுவின் அரசியல் வாழ்வும் சுதந்திரப் போராட்டத்திலும் காங்கிரஸ் இயக்கத்திலும் தான் ஆரம்பித்தன. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பமும் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடும் பண்பும் நல்லகண்ணுவிடம் வளரத் தொடங்கியது. அநீதிகளுக்கு எதிராகப் போராடும் இயல்புணர்ச்சி கொண்டவரான நல்லகண்ணுவினால் காங்கிரஸ் இயக்கத்தில் நீண்ட நாட்கள் பயணம் செய்ய முடியவில்லை. தூத்துக்குடியில் இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட அவர், தனது பள்ளி ஆசிரியர் ஒருவரின் வழிகாட்டுதலில் 1943 ஆம் ஆண்டில் தனது 19 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டார். தோழர் ஜீவாவின் உரைகளும் தொ.மு. சிதம்பர ரகுநாதனின் நட்பும் அவர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு கட்டத்தில் ஜீவாவின் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் நாழிதளான ‘ஜனசக்தி’ யில் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவமும் நல்லகண்ணுவுக்கு இருந்தது. அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், நேர்த்தியான பேச்சாளர். மக்களை உணர்ச்சிவசத்துக்கு உள்ளாக்காமல் முதிர்ச்சியை நோக்கி நகர்த்தும் வகையில் தான் அவரது பேச்சும் எழுத்தும் இருக்கும். தொடக்க காலத்தில் மார்க்ஸ், லெனின் போன்ற கம்யூனிஸ்ட் பிதாமகர்களின் நூல்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் ஜவஹர்லால் நேருவின் நூல்களின் மூலமாகவே கம்யூனிஸட் இயக்கம் பற்றி அறிந்து கொண்டதாகவும் நல்லகண்ணு கூறியிருக்கிறார். அதே நேருவின் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சியை 1948 ஆம் ஆண்டில் தடை செய்தபோது நல்லகண்ணு தலைமறைவாக வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு முன்னதாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை தடைசெய்த வேளையிலும் அவர் தலைமறைவாக இயங்கினார். தலைமறைவாக இருந்த வேளையில் கைது செய்ப்பட்ட நல்லகண்ணு பொலிசாரின் கொடூரமான சித்திரவதைக்கு ஆளானார். மற்றைய கம்யூனிஸ்ட் தோழர்கள் மறைந்திருந்த இடங்களை காட்டித் தருமாறு கேட்டு சித்திரவதை செய்த பொலிஸ் அதிகாரி நல்லகண்ணுவின் அடர்த்தியான மீசையைச் சிகரெட்டினால் சுட்டுப் பொசுக்கியதனால் அன்று தொடக்கம் மீசைவைக்கும் வழக்கத்தை அவர் கைவிட்டுவிட்டார். 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக வந்தார்கள். அப்போது இந்தியா பூராவும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக தொடரப்பட்ட சதி வழக்குகளை இரத்துச் செய்யக்கோரிய போராட்டங்கள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தீவிரமடைந்தன. வேறு வழியின்றி பெரும்பாலான சதி வழக்குகளை காங்கிரஸ் அரசாங்கம் மீளப்பெற்றது. அதன் விளைவாக நெல்லை சதிவழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட நல்லகண்ணு மற்றும் பாலதண்டாயுதம் உட்பட. கம்யூனிஸ்டுகள் பலர் விடுதலையாகினர். ஆனால், வெடிகுண்டு வைத்திருந்த வழக்கும் நல்லகண்ணு மீது இருந்ததால் அவர் மேலும் ஐந்து வருடங்கள் சிறையில் தண்டனைக் காலத்தை கழிக்க வேண்டியிருந்தது. ஏழு வருடங்கள் சிறைவாழ்வுக்கு பின்னர் 1956 டிசம்பரில் மதுரை சிறையில் இருந்து விடுதலையான நல்லகண்ணு முன்னரை விடவும் தீவிரமாக கட்சிப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். இரண்டு வருடங்களுக்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஒருவரின் மகளானா பள்ளி ஆசிரியர் ரஞ்சிதத்தை திருமணம் செய்து கொண்டார். அது ஒரு சாதிக்கலப்பு திருமணமாகும். இந்திய — சீனப்போர் மற்றும் சோவியத் யூனியனுக்கும் சீனாவுக்கும் இடையிலான தத்துவார்த்தப் போரைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1964 ஆம் ஆண்டில் பிளவுபட்டபோது பிரிந்து சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தவர்களுடன் நல்லகண்ணு செல்லவில்லை. 1992 ஆம் ஆண்டில் இருந்து. மூன்று பதவிக் காலங்களுக்கு மொத்தமாக 13 வருடங்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக நல்லகண்ணு பணியாற்றினார். அறுபது வருடங்களுக்கு முன்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்படுவதற்கு காரணமாக இருந்த பிரச்சினைகள் இனிமேலும் பொருத்தமற்றவை என்று நம்பிய நல்லகண்ணு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இணைப்பதற்கு கடுமமையாகப் பாடுபட்டார்.ஆனால், அவரின் வாழ்நாளில் அது சாத்தியமாகவில்லை. சிக்கனத்துடன் கூட சீராக வாழமுடியும் என்று நிரூபித்துக் காட்டிய நல்லகண்ணு சமூகத்தின் நலன்களுக்கும் கட்சியின் வளர்ச்சிக்கும் தான் முன்னுரிமை அளித்தார். தனது அரசியல் நடவடிக்கைகளினால் மனைவிக்கும் மகள்மாருக்கும் நெருக்கடி வந்துவிடக் கூடாது என்பதற்காக குடும்பத்தில் இருந்து அவர் விலகியிருந்த நாட்களும் உண்டு. தனது கோட்பாட்டின் மீது வலிமையான பற்றுறுதி கொண்டவரான நல்லகண்ணு மிகவும் எளிமையான மனிதர். மென்மையான சுபாவம் கொண்டவர். அதிகாரத்துக்கும் சொத்துக்கும் அவர் ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை. தமிழ்நாடு அரசாங்கம் நல்லகண்ணுவுக்கு 2022 ஆம் ஆண்டில் ‘தகைசால் தமிழர் ‘ விருதை வழங்கிக் கௌரவித்த போது 15 இலட்சம் ரூபா பணப்பரிசும் கொடுக்கப்பட்டது. அவர் அந்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதியத்துக்கு நன்கொடையாக வழங்கினாரே தவிர, வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் நல்லகண்ணுவுக்கு ஒரு கோடி ரூபாவையும் கார் ஒன்றையும் பரிசாக வழங்கிய போது அவற்றை அவர் கட்சிக்கே நன்கொடையாக வழங்கிவிட்டார். சென்னையில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட அளவான வீடு ஒன்றுக்கு 5,700. ரூபா வாடகை செலுத்தி வாழ்ந்துவந்த நல்லகண்ணுவின் குடும்பம் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு வழங்கிய 2,500 ரூபா சம்பளத்திலும் மனைவியின் 4,500 ரூபா ஓய்வூதியத்திலும் வாழ்க்கையை நடத்தியது. சிக்கனத்தை ஆதாரமாகக் கொண்ட கோட்பாடு ஒன்று இல்லாமல் சமூக மாற்றம் இடம்பெற முடியாது என்பதில் அவர் உறதியான நம்பிக்கை கொண்டவர். சமரசமற்ற நேர்மைக்கு பிரகாசமான உதாரணமாக அவர் விளங்கினார். சென்னை தியாகராஜ நகரில் நல்லகண்ணு வாடகைக்கு வசித்துவந்த வீட்டின் கட்டிடத் தொகுதியை இடித்து புதிதாக நிர்மாணம் செய்வதற்காக அங்கிருந்து வெளியேறுமாறு 2019 மே மாதம் மாநில அரசாங்கம் அவரைக் கேட்டுக் கொண்டது. அப்போது மனைவியை மூன்று வருடங்களுக்கு முன்னர் இழந்த அவர் அமைதியாக அங்கிருந்து வெளியேறி சென்னையில் வேறு பகுதியில் வாழ்ந்த ஒரு மகளின் வீட்டுக்கு சென்றுவிட்டார். அந்த சம்பவம் குறித்து தெரிய வந்ததும் கடுமையான கண்டங்கள் கிளம்பின. அது குறித்து செய்தியாளர்கள் நல்லகண்ணுவிடம் கேட்டபோது வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது வேதனைக்குரியது என்ற போதிலும், இன்னொரு வீட்டை தனக்கு அரசாங்கம் ஒதுக்கித் தராததால் பிரச்சினை எதுவுமில்லை என்று பதிலளித்தார். ஆனால், தன்னைப் போன்று வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட காலஞ்சென்ற காங்கிரஸ் அமைச்சர் பி. கக்கனின் குடும்பத்தவர்களுக்கு மாற்று வீடு ஒன்றை வழங்குமாறு நல்லகண்ணு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். பொதுவாழ்வில் சுயநலமின்றி எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அந்த விவகாரத்தை அவர் கையாண்ட முறை ஒரு சிறந்த உதாரணம். ஆனால், இத்தகைய அர்ப்பணிப்புச் சிந்தையுடைய — வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களின் நலன்களுக்காக பாடுபட்ட நல்லகண்ணுவை தமிழ்நாட்டு மக்கள் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பாராளுமன்றத்துக்கோ அல்லது மாநில சட்டசபைக்கோ ஒருபோதும் தெரிவு செய்யவில்லை. அவரது உடலை குடும்பத்தினர் மருத்துவ ஆராய்ச்சிக்காக கையளித்தனர். உயிரோடிருந்தபோது மக்களுக்கு ஒரு பாடமாக விளங்கிய நல்லகண்ணு இறந்த பின்னரும் மருத்துவ மாணவர்களுக்கு பாடமாக அமையப் போகிறார். மகாத்மா காந்தி இறந்த போது அல்பேர்ட் அயன்ஸ்டீன் “எலும்புடனும் சதையுடனும் இவ்வாறு ஒரு உருவம் உலகில் நடமாடியது என்று சொன்னால் எதிர்காலச் சந்ததிகள் நம்ப மறுக்கும்” என்று சொன்னார். நல்லகண்ணு விடயத்திலும் அதுவே உண்மை. https://arangamnews.com/?p=12708- வேலையற்ற பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!
ரிஸ்க் எடு கொண்டாடு - நிலாந்தன் கடந்த வாரம் யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வழமையாக சமூகவலைத்தளங்களில் பட்டம் பெற்றவர்களின் கொண்டாட்டப் படங்கள் பகிரப்படும். ஆனால் இம்முறை வேலையற்ற பட்டதாரிகளை முன்வைத்து ஒரு விவாதப் பரப்பு திறக்கப்பட்டது. பல்கலைக்கழகங்கள் ஆண்டு தோறும் பட்டதாரிகளை உருவாக்குகின்றன. ஆனால் நாட்டில் இப்பொழுது 42000க்கும் குறையாத வேலையற்ற பட்டதாரிகள் உண்டு. நாட்டில் வேலையில்லாத 365,951 தனி நபர்களில், பட்டதாரிகள் அல்லது அதையொத்த கல்வித் தகமையுடையவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 42,254 என்று பிரதமர் ஹரிணி கடந்தநொவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கூறினார். அவர்களை வேலையற்ற பட்டதாரிகள் என்று அழைப்பதை விடவும் அரச வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகள் என்று அழைப்பது நல்லது என்று எனது நண்பர் ஒருவர் கூறுவார். கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் நிகழ்ந்த வாதப்பிரதிவாதங்களும் அந்த வகைப்பட்டவைதான். பட்டதாரிகள் பட்டம் பெற்ற பின் வேலை இன்றி தெருவில் நிற்கப் போகிறார்கள் அல்லது அரச வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறார்கள் என்ற பொருளில் வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. இத்தகையதோர் பின்னணியில்,புதிய தொகுதி பட்டதாரிகள் வெளியேறுவது என்பது வெளியேற்றப் பட்டதாரிகளின் எண்ணிக்கையில் ஒரு புதிய தொகுதி இணைவதைக் குறிக்கும் என்றும் அங்கு விமர்சிக்கப்பட்டது. பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும்பொழுது வாழ்வின் முக்கிய பேறு ஒன்றை அடைந்து விட்டதாக ஒவ்வொரு பிள்ளையும் பெருமைப்படுகிறது. அது உண்மைதான். பொன்னிறக் கனவுகளோடு அவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் வருகிறார்கள். பட்டம் கிடைத்ததும் அவர்கள் அதைக் கொண்டாடும் விதத்தில், எடுக்கும் ஒளிப்படங்களில் அதை அவர்கள் எந்தளவு பெருமைக்குரியதாகக் கொண்டாடுகிறார்கள் என்பது தெரியும். ஆனால் பட்டம் எடுத்த பின் வேலை தேடி அலையும் போதுதான் அவர்களுடைய பொன் நிறக் கனவுகள் நிறமிழக்கத் தொடங்குகின்றன. ஆனால் அதற்கு அவர்கள் மட்டும் பொறுப்பல்ல. பின்வரும் அடிப்படைக் காரணங்கள் உண்டு. முதலாவது,சந்தைப் பெறுமதி மிக்க, தொழில் வாய்ப்புகள் அதிகமுடைய பட்டதாரிகளை உருவாக்கும் விதத்தில் கல்விக் கொள்கை திட்டமிடப்படாமை. இரண்டாவது, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதில் தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் தோல்வியடைந்தமை. மூன்றாவது, தொழில் தொடர்பாக சமூகத்திடம் இருக்கும் அளவுகோல்கள், பிரமைகள். நான்காவது,தொழில் முனைவோரை உருவாக்காத கல்வி முறை. இதை வேறு வார்த்தைகளில் சொன்னால் அரசு அலுவலர்களை அதிகமாக உற்பத்தி செய்யும் கல்வி. அதாவது ரிஸ்க் எடுக்கக் கற்றுக் கொடுக்காத கல்வி. எனவே பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பதற்கு தனிய அவர்கள் மட்டும் பொறுப்பல்ல. மேற்சொன்ன காரணங்களும் பொறுப்பு அது ஒரு கூட்டுத் தோல்வி. பட்டதாரிகளில் பெரும் பகுதியினர் ஏன் அரச வேலையை நாடுகிறார்கள் ? அதற்குப் பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவதாக அங்கே கஷ்டப்பட்டு வேலை செய்யத் தேவையில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு. சும்மா இருந்து சம்பளம் எடுக்கலாம்,தடை தாண்டிப் பரீட்சைகளில் சித்தி பெறுவதன் மூலம் பதவி உயர்வுகளையும் சம்பள உயர்வுகளையும் பெறலாம் என்று பட்டதாரிகள் நம்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டு. இரண்டாவது காரணம்,ஓய்வூதியம் கிடைக்கும். எனவே முதிய வயதில் பாதுகாப்பு உண்டு. மூன்றாவது காரணம், அரசாங்கம் என்றால் பலமானது. மக்களைப் பாதுகாப்பது. அதிகாரம் மிக்கது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அரச ஊழியராக இருப்பது அதாவது அரச அதிகாரத்தை சமூகத்தில் அமுல்படுத்துவோராக இருப்பது கௌரவமானது, உயர்வானது என்ற சமூக நம்பிக்கை. நான்காவது காரணம், அரசாங்கத்தை மட்டுமல்ல யாரையும் பார்த்துக் கொண்டிருக்காமல்,யாரிடமும் கையேந்தாமல் தன் திறமைகளை நம்பி, தான் கற்றவைவைகளை அடிப்படையாக வைத்து தொழில் முனைவோராக மேல் எழத் தேவையான துணிச்சலும் வைராக்கியமும் இல்லாமல் இருப்பது. இந்த நான்கு காரணங்களிலும் முக்கியமானது நாலாவது. பட்டதாரிகள் ஏன் தொழில் முனைவோராக மேலெழ முடியவில்லை? அல்லது மேலெழ விரும்பவில்லை? இந்தக் கேள்விக்குப் பதில், கல்வி முறையின் தோல்விக்குள் இருக்கிறது. நமது கல்வி முறைமை தொழில் முனைவோருக்குத் தேவையான துணிச்சலையும் படைப்புத்திறனையும் தெரிவுகளையும் பட்டதாரிகளுக்கு வழங்கத் தவறிவிட்டதா? அரச ஊழியத்துக்குள் கிடைக்கும் பாதுகாப்பு,அரசு ஊழியர் என்பதால் கிடைக்கும் மரியாதை இவை இரண்டையும் தவிர ஒரு தொழில் முனைவோர் அல்லது புதிதாகச் சிந்திக்கும் ஒரு பட்டதாரி அதிகம் சம்பாதிக்கலாம், அதிகம் சாதிக்கலாம், அதிகம் பிரபல்யமாகலாம் என்பதற்கு நமது சமூகத்துக்குள்ளேயே உதாரணங்கள் உண்டு. ஆனால் பட்டங்கள் தொடர்பாகவும் தொழில் தெரிவுகள் பொறுத்தும் தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் இறுகிக் கட்டிபத்திய சிந்தனைகளை உடைத்துக் கொண்டு வெளிவர பெரும்பாலான பட்டதாரிகள் தயாராக இல்லை. ஒரே வசனத்தில் சொன்னால் ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை. ஒரு காலம் யுத்த களத்தில் அதி உச்ச ரிஸ்க் எடுத்த ஒரு சமூகம். அதைவிட முக்கியமாக அவ்வாறு ரிஸ்க் எடுக்கலாம் என்ற முன்னுதாரணத்தை காட்டிய பெரும்பாலானவர்கள் முறைசார் கல்விக்கூடாக வந்தவர்கள் அல்ல. ஆயுதப் போராட்டம் தமிழ் சமூகத்தில் பல வெடிப்புகளை ஏற்படுத்தியது. சமூகத்தின் பாரம்பரியக் கல்வி தொடர்பான நம்பிக்கைகளை அது தகர்த்தெறிந்தது. கல்வித் தகமைக்கும் துணிச்சலுக்கும், கல்வித் தகமைக்கும் சாதனைகளுக்கும் இடையே கண்டிப்பாகத் தொடர்பு இருக்கத் தேவையில்லை என்பதையும் அது நிரூபித்தது. பட்டப் படிப்புக்களை அடிப்படைத் தகைமைகளாகப் போற்றாத விடுதலை இயக்கங்கள் சமூகத்தின் தலைவிதியைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டன. சமூகத்தின் மூன்றில் ஒரு பகுதியை புலம்பெயர வைத்தன. உலகமே வியக்கும் தியாகங்களையும் வீரத்தையும் நிரூபித்த ஒரு போராட்டம் அது. ஆயுதப் போராட்டத்தின் தொடக்கத்தில் “சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது”, “கல்வித் தகுமையற்ற போராளிகள் வெற்றிபெற மாட்டார்கள்” என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்கு நூற்றாண்டு காலப்பகுதிக்குள் அரசற்ற தமிழ் மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் நிலைத்திருந்த கருநிலை அரசானது மேற்படி நம்பிக்கைகளை விவாதத்துக்கு உள்ளாக்கியது. எனினும் ஆயுதப் போராட்டத்தின் தோல்விக்கு பின் மீண்டும் படிப்பு,செல்வம்,செல்வாக்கு… போன்றவை தலைமையைத் தீர்மானிக்கும் அளவுகோல்களாக மேலெழுந்தன. அதிகம் பட்டப் படிப்புகள் இல்லாதவர்கள் நடத்திய போராட்டம் தோல்வியடைந்தது என்று கூறுவோர் இப்பொழுது உண்டு. ஆனால் அவர்கள் வசதியாக மறந்துவிடும் ஒரு விடயம் என்னவென்றால், ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் பின்னருமான அப்புக்காத்துக்களின் அரசியல் தமிழ் மக்களை மட்டுமல்ல, அவர்களுடைய கட்சிகளையே எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது? என்பதுதான். ஆங்கிலம் தெரிந்த, சிங்களம் தெரிந்த, கற்றறிந்த தமிழ்த் தலைவர்களும் இறுதி வெற்றியைப் பெறவில்லை. அவர்களை மீறி எழுந்த ஆயுதப் போராட்டமும் இறுதி வெற்றியைப் பெறவில்லை. இப்படிப்பட்டதோர் அரசியல், பொருளாதார,சமூக உளவியல் பின்னணிக்குள், கடந்த 16ஆண்டுகளையும் தொகுத்துப் பார்த்தால் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் இருந்து அடுத்து வந்த தலைமுறை கற்றுக்கொண்டவை எவை? என்று கேள்வி வலிமையாக மேல் எழுகிறது. ஆயுதப் போராட்டம் கற்றுக்கொடுத்த துணிச்சல், தியாக முன்னுதாரணம்,ரிஸ்க் எடுக்கும் மனோநிலை போன்றவற்றில் இருந்து பட்டதாரிகள் எந்தளவுக்குக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம். பெரிய அளவில் அர்பணிக்கவும் வேண்டாம். தொழில் ரீதியாக ரிஸ்க் எடுத்தாலே, துணிகர தொழில் முயற்சிகளில் இறங்கினாலே போதும். செல்வந்தர்களாகலாம். புதிய முன்னுதாரணங்கள் ஆகலாம். ஆனால் ஏன் தங்களுடைய சௌகரிய வலையங்களை விட்டு வெளியே வரப் பயப்படுகிறார்கள்? “துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிற்பது கப்பலுக்குப் பாதுகாப்பானது. ஆனால் கப்பல் அதற்காகக் கட்டப்படுவதில்லை” என்று ஆங்கில மேற்கோள் ஒன்று உண்டு. அது போலவே “அமைதியான கடல் சிறந்த படகோட்டிகளை உருவாக்குவதில்லை” என்றும் ஆங்கிலம் மேற்கோள் ஒன்று உண்டு. இந்த இரண்டு மேற்கோள்களில் இருந்தும் கற்றுக் கொண்டால் பட்டதாரிகளுக்கு அவர்களுடைய பட்டங்களே சிறைகளாக மாறாது. https://www.nillanthan.com/8161/- அப்பத்தை எப்படிப் பங்கிடுவது? அப்பத்தை யார் சாப்பிடுவது ? - நிலாந்தன்
அப்பத்தை எப்படிப் பங்கிடுவது? அப்பத்தை யார் சாப்பிடுவது ? - நிலாந்தன் தமிழ் நாடு,திருச்சியில், கடந்த வாரம் சீமான் நடத்திய கூட்டம் ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள சீமானின் ஆதரவாளர்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அதை ஒரு பிரம்மாண்டமான தமிழ்த் தேசிய வெற்றியாக அவர்கள் போற்றுகிறார்கள். அண்மை மாதங்களாக சீமானுக்கும் விஜய்க்கும் ஈழத் தமிழர்கள் மத்தியில் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். தமிழகத்தில் சீமானும் விஜேயும் ஒருவர் மற்றவருக்கு எதிராகக் காணப்படுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் மத்தியில் அவர்களுக்கு ஆதரவாளர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் நடந்த சீமானின் கூட்டத்தோடு அவருடைய ஆதரவாளர்கள் மிகவும் நம்பிக்கையோடு காணப்படுகிறார்கள். ஈழத் தமிழர்கள் தமிழகத்தைக் கையாள வேண்டும். ஈழத் தமிழ் ராஜிய நடவடிக்கைகளில் அது முதன்மையானது. ஆனால் அது எப்படி என்பதுதான் இங்குள்ள கோட்பாட்டு அடிப்படையிலான கேள்வி. தமிழகத்தில் பல கட்சிகள் உண்டு. அந்தக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளுக்குள் ஈழத் தமிழர்கள் சிக்கக்கூடாது. அது தமிழ்நாட்டு வாக்காளர்களுடைய பிரச்சினை. அதில் ஈழத் தமிழர்கள் தலையிடத் தேவையில்லை. ஈழத்தமிழ் நோக்கு நிலையில் தமிழகத்தில் உள்ள ஈழ அபிமானிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் ஒன்றுதான், தமிழ் நாட்டவர்கள்தான். எனவே தமிழகத்தைக் கையாள்வது என்பது கட்சி பேதங்களைக் கடந்து தமிழக மக்களைக் கையாள்வதுதான். அங்கே காணப்படும் கட்சி முரண்பாடுகளுக்குள் ஈழத் தமிழர்கள் சிக்கக்கூடாது என்பது முக்கிய முன் நிபந்தனை. சீமானோ,விஜயோ,திமுகவோ,அதிமுகவோ,பாரதிய ஜனதாவோகாங்கிரசோ எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் யார் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களை ஈழத் தமிழர்கள் அணுக வேண்டும். அது தமிழ்நாட்டு அரசு. தமிழ்நாட்டு மக்களின் தெரிவு. அதை ஈழத் தமிழர்கள் மதிக்க வேண்டும். அதைக் கட்சியாகப் பார்க்கத் தேவையில்லை. அப்படித்தான் புதுடில்லியிலும் இந்திய மக்களால் யார் ஆட்சியாளர்களாகத் தெரிவு செய்யப்படுகிறார்களோ அவர்களை அணுக வேண்டும். அதை பாரத அரசாக பார்க்க வேண்டுமே தவிர கட்சியாகப் பார்க்கக் கூடாது. இந்தியாவை, தமிழகத்தை கையாளும்போதும் அணுகும்போதும் இந்தத் தெளிவு மிக அவசியம். அரசுகளைக் கையாள்வது. அதுதான் அரச தந்திரம். சமூகவலைத்தளங்களில் ஆளுக்காள் மோதிக் கொள்ளும் ஈழத் தமிழர்களிடம் இந்தத் தெளிவு மிகக்குறைவாக இருப்பதை உணர முடிகிறது. அதுமட்டுமல்ல சீமான் திரட்டிய கூட்டத்தைப் பார்த்து வியந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள், தாங்கள் ஒரு தேசமாகத் திரள முடியாமல் இருப்பதைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் ? இங்குள்ள பெரிய கட்சி இரண்டாக உடைந்து நீதிமன்றத்தில் நிற்கிறது. ஒருவர் மற்றவரை எப்படித் துரோகி ஆக்குவது என்ற போட்டி.அதேசமயம் இரண்டாவது முக்கிய கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை அரசாங்கத்தின் புதிய யாப்புருவாக்க முயற்சியை நோக்கி குடிமக்கள் சமூகங்களை ஒருங்கிணைத்து வருகிறது. ஒருபுறம் அவர்கள் தமிழகத்தை நோக்கியும் ஐரோப்பாவை நோக்கியும் சென்றார்கள். இன்னொருபுறம் தாயகத்தில் குடிமக்கள் சமூகங்களை நோக்கி வருகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விகளிலிருந்து அவர்கள் கற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அவர்கள் முன்னெடுக்கும் எல்லா நகர்வுகளுக்கும் போட்டியாக புலம்பெயர்ந்த தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் தொடர்ச்சியாகக் காய்களை நகர்த்தி வருகிறார். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள குறிப்பிட்டுச் செல்லக்கூடிய புத்திஜீவிகளில் அவர் ஒருவர். ஒரு காலம் ராஜதந்திரிகளால் ஆர்வத்தோடு பார்க்கப்பட்ட ஆங்கில இணையதளத்தை இயக்கியவர். அவருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான முரண்பாடு கோட்பாட்டு ரீதியிலானதா? ஈகோ சம்பந்தப்பட்டதா? என்ற விவாதத்தை தனியாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த முரண்பாடு தமிழ்த் தேசிய ஆன்மாவின் இதயத்தைத் தாக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு கோட்பாட்டு விளக்கமுடைய இரண்டு தரப்புகளுக்கும் உண்டு. சில மாதங்களுக்கு முன்பு ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு முன்னணி தாயகத்தில் உள்ள குடிமக்கள் சமூகங்களை ஒருங்கிணைத்து கடிதம் ஒன்றை ஐநாவுக்கு அனுப்பியது. ஆனால் அந்தக் கடிதம் அனுப்பப்பட்ட சிறிது காலத்தில் மற்றொரு கடிதம் அரசியல் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் கையொப்பமிடப்பட்டு ஐநாவுக்கு அனுப்பப்பட்டது. இக்கடிதத்தின் பின்னணியில் மேற்சொன்ன புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளரே இருப்பதாக முன்னணி குற்றம் சாட்டியது. அதன் பின் தமிழ்த் தேசியப் பேரவை தமிழகத்துக்குப் போனது. அங்கே மூத்த ஈழத் தமிழ் உணர்வாளர்களில் ஒரு பகுதியினர் அவர்களைச் சந்திக்க மறுத்து விட்டார்கள். தமிழ்நாட்டு விஜயத்தின்போது,தமிழ்த் தேசியப் பேரவை முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக விமர்சித்து அங்குள்ள ஈழ உணர்வாளர்களில் ஒரு பகுதியினர் அறிக்கையும் விட்டார்கள். மேற்சொன்ன புலம் பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்தான் அதற்கும் பின்னணியில் இருந்ததாக முன்னணி குற்றம் சாட்டியது. அதன்பின் தமிழ்த் தேசியப் பேரவை, இரண்டு வாரங்களுக்கு முன்பு மற்றொரு நகர்வை முன்னெடுத்தது. யாழ்ப்பாணம் இளங் கலைஞர் மண்டபத்தில் குடிமக்கள் சமூகங்களுடான ஒரு சந்திப்பு அது. அந்தச் சந்திப்புக்கு சரியாக ஒரு நாள் முன்னதாக திருமலையில் ஒரு சந்திப்பு இடம் பெற்றது. அதுவும் குடிமக்கள் சமூகங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளூடான சந்திப்பு. அந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தியது திருமலையைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர். அவரை பின்னிருந்து இயக்கியது மேற்சொன்ன புலம்பெயர்ந்த தமிழ் செயற்பாட்டாளரே என்று முன்னணி குற்றம்சாட்டியது. திருமலையைச் சேர்ந்த அந்த அரசியல் செயற்பாட்டாளர் முன்பு முன்னணியின் உறுப்பினராக இருந்தவர். இப்பொழுது இல்லை. திருமலைச் சந்திப்பில் திருமலைப் பிரகடனம் முன்வைக்கப்பட்டது. இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு தொடர்பான கோட்பாட்டு விவாதங்களை அது புதுப்பித்திருக்கிறது. திருமலைச் சந்திப்பைப்போல மற்றோரு சந்திப்பு அதன்பின் மட்டக்களப்பிலும் நடந்தது. அதில் முன்னணியின் செயலாளர்,கஜேந்திரன் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்திருந்தார். எனினும் அதன் பின் வெளி வந்த காணொளிகள், அந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களுக்கும் முன்னணிக்கும் இடையிலான முரண்பாடுகளைப் பிரதிபலிப்பவை. மேற்சொன்ன புலம்பெயர்ந்த தமிழ்ச் செயல்பாட்டாளர் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள பெரும்பாலான அமைப்புகளை ஒரு மெய் நிகர் சந்திப்பில் ஒருங்கிணைந்திருக்கிறார். இதில் தாயகத்திலிருந்தும் சிலர் கலந்து கொண்டதாக ஒரு தகவல். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இந்த மெய்நிகர் சந்திப்பும் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கியதுதான். இதில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கிடையில் நிகழும் வாதப் பிரதிவாதங்களின் சாராம்சம் எதுவென்றால், கோட்பாட்டு ரீதியாக யார் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தை தீவிரமாகவும் விட்டுக்கொடுப்பின்றியும் முன்னெடுக்கிறார்கள்? இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு பொறுத்து யார் கோட்பாட்டு ரீதியாக மிகச் சரியான,பொருத்தமான தீர்வை முன்வைக்கின்றார்கள்? என்பதுதான். ஒருபுறம் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள் தூதரகங்களை அல்லது வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சந்திக்கு இழுக்கும் ஒரு நிலைக்கு வந்துவிட்டது. கட்சிகள் தாங்களாக ஒற்றுமைப்படாத ஒரு பின்னணியில்,தூதரகங்கள் தலையிட்டு முன்முயற்சி எடுத்தாலும் அதையும் ஒரு கட்சி குழப்புகிறது. இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையே எக்கிய ராஜ்யவா? சமஸ்ரியா என்ற வாதப்பிரதிவாதம். இன்னொரு புறம் சமஸ்டி வேண்டாம் பொதுஜன வாக்கெடுப்புத்தான் வேண்டும் என்ற கோரிக்கை. சிறிய ஈழத் தமிழ்ச் சமூகத்தில் நாலில் ஒரு பகுதிக்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே புலம்பெயர்ந்து விட்டார்கள். புலப்பெயர்ச்சி தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது. அனேகமாக எல்லா ஈழத் தமிழ் கிராமங்களும் ஒரு பகுதி ஆளில்லா வீடுகளைக் கொண்ட கிராமங்களாக மாறிவருகின்றன. இளைய தலைமுறையின் ஒரு பகுதி நாட்டில் வேர் கொண்டு பூத்துக் குலுங்குவதை விடவும் நாட்டை விட்டு எப்படித் தப்பியோடுவது என்றுதான் சிந்திக்கின்றது. அதாவது தாயகத்தில் சனத்தொகை தொடர்ச்சியாக மெலிந்து வருகிறது. ஒருபுறம் சனத்தொகை மெலிகிறது. இன்னொருபுறம் இருக்கின்ற ஜனத்தொகையைத் திரட்டுவதற்குக் கட்சிகளால் முடியவில்லை. கட்சிகள் ஒருவர் மற்றவரைத் துரோகியாக்கிக் கொண்டிருக்க,தேசிய மக்கள் சக்தி உற்சாகமாக, எதிர்பார்ப்போடு அனுர குமாரவை தமிழ்மக்கள் மத்தியில் கதா நாயகனாகக் கட்டியெழுப்புகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த அதேயளவு ஆசனங்கள்தான் அரசாங்கத்துக்கும். இந்த லட்சணத்தில் தீர்வை நோக்கி ஒருங்கிணைய வேண்டிய தமிழ்த் தரப்போ சிதறிக்கொண்டு போகிறது. பலஸ்தீனர்களுக்கிடையிலான அக முரண்பாடுகளை விமர்ச்சிப்பவர்கள் கூறுவார்கள்…”பாலஸ்தீனர்கள் அப்பத்தை எப்படிப் பங்கிடுவது என்று விவாதித்துக் கொண்டிருக்க, யூதர்களோ அப்பத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்று. இது ஈழத் தமிழர்களுக்கும் பொருந்துமா? https://www.nillanthan.com/8159/- அநுர கட்சியின் ஆயுதப் போராட்டத்திற்கு மூல வேரான ஈழத்தமிழனின் இரகசியம் | ஊடறுப்பு
யாழ்க்கள உறவுகளே,தமிழீழ மக்களின் தற்போதைய அரசியற்கையறுநிலைகுறித்த உரையாடலாக உள்ளதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அரை இறுதிப் போட்டிகள் புதனும் வியாழனும். தேவைப்பட்டால், ஒவ்வொரு போட்டிக்கும் இன்னும் ஒரு நாளும் ஒதுக்கியிருக்கு. முதல் போட்டி - புதன் - தென்னாபிரிக்கா எதிர் நியுசிலாந்து - ஈடன் காடன் மைதானம் இரண்டாவது போட்டி - வியாழன் - இங்கிலாந்து எதிர் இந்தியா - வெங்கடே மைதானம்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சாம்ஜு இன்றைக்கு ஆடினது, ஒரு தரமான ஆட்டம். அவர் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரர். சும்மா அடிச்சுத் தொங்க விடுற ஆள் இல்லை. அடிக்கவும் தெரியும், அடக்கமா ஆடவும் தெரியும். சர்வசாதரணமா நாலு அடிப்பார்.- ஈரானின் இடைக்கால உயர் தலைவராக அலிரேசா அராபி நியமனம்!
ஓமோம் ... நசரெல்லாவிற்குப் பிறகும் இதே முடிவு தான் இரண்டாம் கட்ட தலைவருக்கும். 🤣- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சீமானை கூட ஒரு காலத்தில் வரவேற்றேனே? களை என தெரிந்தால் புடிங்கி விடுவதே என் இயல்பு. உங்களை போல் தெரிந்து கொண்டே பாம்புக்கு பால்வாப்பவனல்ல நான்.- ஈரானின் இடைக்கால உயர் தலைவராக அலிரேசா அராபி நியமனம்!
இதென்ன ஈரான் இங்கிலாந்து டொப் ஓடர் மாதிரி ஆடுது😂. இதே போல் ஒரு வேலையை இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கும் செய்தது என நினைக்கிறேன்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அசார் கேப்டனாக தொடர அவர் நரசிம்மராவின் மாநிலம் என்பதும் காரணம். கபில் கடைசியில் ஹட்லியின் ரெக்கோர்ட்டை உடைக்க என்றே டீமில் தொத்தி கொண்டு இருந்தார். அப்போதே இப்படி ஒரு அவமானம் தேவையா என நினைப்பேன். 92/93 இலங்கை சுற்று பயணத்தில் எஸ் எஸ் சி 2ம் டெஸ்டில் ரெக்கோர்ட்டினை உடைத்தார் என நினைக்கிறேன். முதலாவது டெஸ்ட் அஸ்கிரியவில். மழை பெய்தும் இங்கையை இந்தியா ஊதி தள்ளியது. மனோஜ் பிரபாகர் வில்கெட்டுகளை அள்ளினார்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தமிழ் நாட்டில் இருந்து இதுவரை பிராமணர் அல்லாதோர் எவரும் டெஸ்ட் விளையாடவில்லை என நினைக்கிறேன். ரோபின் சிங். கரீபியன் வழி வந்த வட நாட்டவர். இலங்கையில் முரளி, ரவீந்திர புஷ்பகுமார (பாதி தமிழ்), ரசள் ஆர்னோல்ட், அங்ஜெலோ மத்யூஸ் (பாதி தமிழ்) ஆகியோர் ஆடியுள்ளனர். மரியோ வல்லவராயன் எனவும் ஒருவர் இருந்தார் ஒருநாள் போட்டிகள் சிலதில் ஆடி இருக்கலாம். டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த பின் ஆடியவர்கள் எனில் இவர்களோடு வினோதன் ஜோனையும் சேர்க்கலாம். அதற்கு முன் சதாசிவம், சரவணமுத்து நாட்டின் நம்பவர் 1 ஆட்டகாரராக இருந்துள்ளனர். இந்தியாவை இட இலங்கையில் பிராமணர் அல்லாத தமிழர் மீதான ஒடுக்கல் குறைவு. கபில்தேவ் ஆங்கிலம் பேச தெரியாத ஹரியானா நாட்டுப்புறத்த்தான் என மும்பை மேட்டுக்குடி அவரை ஏற்க கஸ்டப்பட்டது. இப்போதும் கபில் ஆங்கிலம் கதைக்கும் போது இலக்கண விதிகள் நொருங்கும். ஆனால் அவர் அதை சட்டை செய்வதில்லை. சனத் ஜயசூரியவும் இப்படித்தான் 95-97 வரை உடைந்த ஆங்கிலத்தில் கதைப்பார்…ஆனால் கிரிகெட்டை போலவே இதையும் கிரமாமா பயிற்சி செய்து இப்போ சரளமாக பேசுகிறார். ஆங்கிலேயர் கண்டுபிடித்த விளையாட்டு எனபதாலோ என்னவோ கிரிகெட் ஜமீன்களுக்கு ஆங்கிலம் பேச வராதவர் மீது கொஞ்சம் இளக்காரம். ஆனால் இம்சமாம் உல் ஹக் எல்லாம் வரும்போதே மொழிபெயர்பாளரோடு வருவார் - ஆனால் மைதானத்தில் ஆங்கிலம் நுனிநாக்கில் பேசுவோரை தோய்த்து தொங்க விடுவார்😂 - "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.