All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏனண்ணை என்னைத் தவிர்த்துவிட்டீர்கள்?!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எங்கேயும் போக வேண்டாம். ஐபிஎல் நெருங்கிவிட்டது. @கிருபன் கேள்விக் கொத்துகளை தயாரிக்க தொடங்கிவிட்டார்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டி முடிஞ்சும், இங்க வாறது, உந்த முசுப்பாத்திகளைப் பார்க்கத்தான்- கறையான் புற்று
நீங்கள் குறிப்பிட்ட பின்னர் தான் கவனித்தேன். 2004 இற்கு முன்னர் இருவருக்கு அவர்கள் உயிர்வாழும் போதே மாமனிதர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு எல்லாம் இறந்த பின்னர் தான் கொடுக்கப் பட்டிருக்கிறது.- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
"ட்ரம்ப் ஐயா" வும் அவரது கூட்டுக்களும் அமெரிக்கா அல்ல! அவர்களிடம் தற்போது ஒலி வாங்கி இருக்கிறது, எனவே அவர்களது குரல்கள் தான் பெரிதாகக் கேட்கிறது. இதன் அர்த்தம் "அமெரிக்காவில் மதவாதம் ஓங்கியிருக்கிறது" என்பது அல்ல! 2024 இல் எடுக்கப் பட்ட கணக்கெடுப்பின் படி, அமெரிக்காவில் மத நம்பிக்கையில்லாதோரின் வீதம் மெதுவாக அதிகரித்து வருகிறது. கீழே ஆதாரம்👇. Gallup.comHow Religious Are Americans?Most Americans have a religious preference -- predominantly a Christian one -- but less than half say religion is "very important" to them.- Today
- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
1. வத்திக்கான் எந்த நாட்டு மக்களை மத அடிப்படைவாதத்தினை வைத்து கொடுங்கோலாட்சி புரிகிறது? ஆசிய ஆபிரிக்க அமெரிக்க நாடுகளில் அத்து மீறி பிரவேசித்து அந்த மண் மக்கள் மீது கொடுங்கோல் ஆட்சி செய்து மதமாற்றத்தை கடுமையாக்கிய வரலாறுகள் தெரியவில்லையா? இலங்கையில் கூட மதம் மாறியவர்களுக்கு அரச வேலை என ஆசை காட்டிய வரலாறுகள் தெரியுமா? 2. ஆது எந்த நாட்டில் அணுவாயுத உற்பத்தியை உருஇவாக்க முயற்சிக்கிறது? அணு ஆயுதம் வைத்திருக்கும் கிறிஸ்தவ நாடுகள் எத்தனை? முஸ்லீம் நாடுகள் எத்தனை? 3. அது எந்த நாட்டினை உலக வரைபடத்திலிருந்து முற்றாக இல்லாதொழிப்போம் என்பதை தனது கொள்கையாகக் கொண்டு இயங்குகிறது? பலஸ்தீனமண் கறையான் அரித்துக்கொண்டு போவது போல் அரிக்கப்படுகின்றது. இது உங்களுக்கு உறுத்தவில்லையா? 4. அது எந்த மத அடிப்படைவாத அ,மைப்புக்களுக்கு ஆயுதங்களும் பணமும் வழங்கி இன்னொரு நாட்டிற்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுங்கள், அந்நாட்டு மக்களைக் கொல்லுங்கள் என்று உசுப்பெற்றி வருகிறது? வத்திக்கானில் இருந்து மாதா மாதம் சம்பளமாக உலகம் முழுவதும் இருக்கும் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு போய்க்கொண்டிருக்கின்றது. அதை விட இதர கிறிஸ்தவ அமைப்புகளும் பணம் அனுப்பிய வண்ணமே இருக்கின்றன. 5. அது எந்த நாட்டினை அழிப்பதற்காக நீண்டதூர ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் தயாரித்து வருகிறது? நேற்றைய செய்தியில் அதிக ஆயுத உற்பத்தியிலும் விற்பனையிலும் முக்கிய நாடுகள் பட்டியலில்..... 1)அமெரிக்கா 2)பிரான்ஸ் 2)ஜேர்மனி என முன்னணி நாடுகள் என அறிவிக்கப்பட்டது.எதற்காக இவ்வளவு ஆயுத உற்பத்தியும் விற்பனையும்? மக்கள் மீது பூ தூவவா? 6. எந்த நாட்டினை பெரிய சாத்தான் என்று சிறிய சாத்தான் என்று அடையாளப்படுத்தி அந்நாடுகளுக்கு மரணத்தினை வழங்குவோம் என்று சூளுரைத்து வருகிறது? சாத்தான்கள் பற்றி கிறிஸ்தவமும் அதிகமாக பேசுகின்றதல்லவா? அது எந்த நாட்டில் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதி அடக்கி வருகிறது? தவறுதான். இருந்தாலும் முஸ்லீம் நாடுகளில் இருக்கும் பெரிய பிரச்சனை. தனியே ஈரான் மீது பழியை போட முடியாது. அது எந்த நாட்டில் தனது குடிமக்களையே கொடுங்கோலாட்சிக்கெதிராக கோஷமிட்டதற்காக பல்லாயிரக்கணக்கில் கொன்றுகுவித்து வருகிறது? பிழைகள் உண்டு. இதற்கு முன்னுதாரணமாக அமைந்தவர்கள் சுரண்டல் மன்னர்களாகிய மேற்குலகினர் மட்டுமே. தொடர்ந்து பேசுவோமாக......- எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
சிறித்தம்பி! யாழ்ப்பாணீஸ் உந்த பதுக்கல்,அமுக்கல் விசயத்திலை விண்ணாதி விண்ணர்கள்.🤣 கோயில் படையல் புக்கை மோதகம் தொடக்கம் பாதி வாழைப்பழம் எல்லாத்தையும் கதவுக்கு பின்னாலை ஒளிச்சு வைக்கிறதில வலு கெட்டிக்காரங்கள்.40,50 வருசத்துக்கு முதலே மண்ணெண்ணை தகரத்தை கிடங்கு வெட்டி மண்ணுக்கை பதுக்கி வைச்ச பரம்பரை நம்ம பரம்பரை.😂 பதுக்கல் எண்டது யாழ்ப்பாணத்து மண்வாசனையோட சேர்ந்தே இருக்கும்.😎- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
அமெரிக்காவிலும் இப்போது மதவாதம் மேலோங்கி உள்ளது. வெளிப்படையாகவே டிரம்ப் ஐயாவும், அவர் குழுவும் புதிய பாணியில் அமெரிக்காவின் அரசியலை மதத்தின் அடிப்படையில் நிறுவுகின்றனர்.- உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
டிரம்ப் ஐயா ஈரான் மீது திடீரென அவசரமாக போர் தொடுக்க காரணமே தன் வண்டவாளங்களை இந்த கோப்புக்கள் மூலம் வெளிப்படுத்தப்படுமோ என கருதி மக்களின், ஊடகங்களின் கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கை தான் என அமெரிக்க பகுதி சமூக ஊடகத்து அபிப்பிராயங்களை பார்க்கும்போது தெரிகின்றது.- எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
ட்றம்பின் நேற்றைய அறிவிப்பைத் தொடர்ந்து இன்று பெற்றோல் 10 வீதத்தால் வீழ்ச்சியடைந்தது. எரிவாயுவின் விலையும் 15 வீதத்தால் வீழ்ந்துள்ளதாம்.- தேசிய வாய் சுகாதாரக் கணக்கெடுப்பு மார்ச் 10 ஆரம்பம்; இலங்கையர் ஒருவரின் வருடாந்த சீனியின் நுகர்வு 34 கிலோவாக அதிகரிப்பு
ஒரு நாளைக்கு 93 கிராம் சீனி - 5 கிராம் படி ஏறத்தாள 20 சீனிக் கட்டிகள். 372 கிலோ கலோரிகள் சீனியின் மூலம் மட்டும் ! நான் நினைக்கிறேன் சோடா போன்ற இனிப்புப் பானங்கள் மூலமே இந்த அளவிலான சீனியை உட்கொள்ள முடியும்.- ரோஜா முள்.
‘அடப்பாவி’ நான் ஒரு நேர்சு என்றுதான் எண்ணினேன்.🧐 வயித்தைப்பற்றி எரியுது.😩Paanch started following ரோஜா முள்.- விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை
நல்ல விழிப்புணர்வுக் கதைக்கு நன்றி . ....... பவுன், நகை விடயங்களில் போலிகள் நிறைந்து விட்டதால் யாரையும் நம்ப முடிவதில்லை..... எனக்கும் பவுன் சம்பந்தமான சில வேலைகள் இது போன்ற நம்பிக்கையீனங்களால் தாமதமாகிக் கொண்டு போகிறது . ......! பகிர்வுக்கு நன்றி கவி . படங்கள் நன்று . ......!- எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
எரிபொருள் விலை உயர்வுக்கான உண்மையான காரணம் Mar 10, 2026 - 01:46 PM நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை பணிப்பாளர் மயூரு நெத்தி குமாரகே இன்று (10) விளக்கமளித்துள்ளார். எரிபொருள் விலைகள் ஒரே அடியாக பெருமளவு உயர்வதைத் தவிர்ப்பதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: "பொதுவாக முந்தைய மாதத்தின் விலைகளை சரிசெய்தே நாங்கள் விலைகளை அதிகரிக்கிறோம். தற்போது எங்களிடம் 30 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு நிலையாக இருந்தபோதிலும், அடுத்த மாதத்திற்காக வரும் கப்பல்களின் எரிபொருள் விலை பெருமளவு அதிகரித்து வருகின்றது. எனவே, தற்போதுள்ள இருப்புகளைப் பாதுகாத்து, விலையை சமநிலைப்படுத்த நாங்கள் எதிர்பார்த்தோம். அதன்படி, எரிபொருள் விலைகள் ஒரே நேரத்தில் மிக அதிகளவில் உயர்வதைத் தவிர்க்கவும், இருக்கும் இருப்புகளை மாதங்களுக்கு இடையில் கவனமாகப் பகிர்ந்து பயன்படுத்தவும் விலையை சமநிலைப்படுத்தினோம். எரிபொருள் பதுக்கல் மாஃபியாக்களைக் கட்டுப்படுத்துவதுடன், வரிசைகள் உருவாகாமல் பொதுமக்கள் நீண்ட காலத்திற்கு ஒரே விலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்கவும் எதிர்பார்க்கிறோம். உலகச் சந்தையில் விலை குறைந்தால், அடுத்த சில நாட்களில் நிச்சயமாக எமது எரிபொருள் விலைகளைக் குறைக்க முடியும்" எனத் தெரிவித்தார். மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு இணங்க, கடந்த மார்ச் முதலாம் திகதி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலைகளைத் திருத்திய போதிலும், அதிலிருந்து 9 நாட்களின் பின்னர் நேற்று (09) இரவு மீண்டும் அனைத்து எரிபொருட்களினதும் விலைகளை அதிகரித்துள்ளது. புதிய எரிபொருள் விலைப் பட்டியல்: ஒக்டேன் 92 பெட்ரோல்: 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 317 ரூபா. ஒக்டேன் 95 பெட்ரோல்: 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 365 ரூபா. லங்கா வெள்ளை டீசல்: 22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 303 ரூபா. லங்கா சுப்பர் டீசல்: 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 353 ரூபா. மண்ணெண்ணெய்: 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 195 ரூபா. https://adaderanatamil.lk/news/cmmkc501r000l356pl8ddnpp5- விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை
சில விடயங்களுக்கு உள்ளூர் அனுபவ ஆட்டக்காறரரைத் தான் களத்தில இறக்கவேணும் ஐயா. இந்த வில்லங்கத்தால எங்களுக்கு ஒரு கதை கிடைச்சதே! அது சரி @Kavi arunasalam ஐயா அந்த நகல் தாலிக்கொடி தவறாகவில்லை தானே?!- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
இந்தியாவின் டி20 உலக்கோப்பை வெற்றி 2026 - சில எண்ணங்கள் By ஆர். அபிலாஷ் March 10, 2026 ஒருதலைப்பட்சமாக இப்போட்டி மாறியதற்கு ஆடுதளம் முக்கியமான காரணம். கடந்த 12 ஆண்டுகளாகவே அகமதாபாத் மைதானத்தின் ஆடுதளத்தில் டி20 இன்னிங்ஸின் ம்ட்டையாட்ட சராசரி 165-175தான். கறுப்பு மண்ணால் ஆன ஆடுதளம் சற்று மெத்தனமாக, பவுன்ஸ் குறைவாக இருக்கும். நியுசிலாந்து அதற்காகவே தயாராகி வந்தார்கள். அதனாலே அது ஒரு இறுதிப் போட்டிக்கு ஏற்றதாக இருக்காது என நினைத்தேன். இம்மாதிரி கோரிக்கைகள் ஆடுதளத் தயாரிப்பாளரிடமும் சென்றிருக்கும். ஆகையால் அவர் செம்மண்ணும், கறுப்பு மண்ணும் கலந்த ஒரு ஆடுதளத்தைத் தயாரித்தார். அதில் பந்துக்கு ஓரளவுக்கு வேகமும் பவுன்ஸும் இருந்தது. பந்து பழையதானதும் ரொம்பவே நின்று வந்தது. அதாவது ஆரம்பத்தில் செம்மண்ணும், கடைசிப் பகுதியில் கறுப்பு மண்ணும் தத்தம் வேலைகளைச் செய்தன. இந்தியாவின் ஆரம்பத்திலேயே குண்டு மழை பொழியும் ஆட்டபாணி இதற்குத் தோதாக இருந்தது. கறுப்பு மண் தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தபோது நம் ஸ்கோர் 15வது ஓவரில் 203ஆக இருந்தது. இதுவே 120ஆக இருந்திருந்தால் நம்மால் 160-170தான் எடுக்க முடிந்திருக்கும். நியுசிலாந்து பெங்களூர் டிராபிக்கில் நகர்ந்து நகர்ந்து பைக் ஓட்டி சிக்னலை வெறித்துப் பார்த்து, பச்சை விளக்கு விழுந்ததும் பறக்க முயன்று ஒரளவு வேகத்தில் ஓட்டுவதைப் போல ஆடி வென்றிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. பெங்களூர் டிராப்பிக்கில் ஓடிப் பழகியவரை ரேஸ் டிராக்கில் இறக்கி விட்டதைப் போலாகிவிட்டது இப்போட்டி. நியுசிலாந்து குழம்பிப் போனது. அவர்களுடைய உலகக்க்கோப்பைத் தொடர் சாதனைகளுக்கு (அதாவது பாவமான அணியை வைத்துக் கொண்டு அரை இறுதி, இறுதி நிலைகளை எட்டுவது) அவர்களுடைய உளவியல் தயார்நிலையால்தான் என்று சில கட்டுரைகளைப் படித்தேன். அவர்களுடைய உள்ளூர் கிரிக்கெட் படிநிலையிலேயே அமைதியாக, நிதானமாக ஆடுவது, பரஸ்பரம் நட்புடன் பழகுவது வலியுறுத்தப்பட்டு, போட்டியால் விளையும் அழுத்தம் தவிர்க்கப்படுகிறது எனப் பேசியிருந்தார்கள். ஆனால் இந்த முறை மட்டும் நியுசிலாந்து அணி சற்று தன் இயல்பில் இருந்து பிறழ்ந்து கடுமையான நெருக்கடியை தன் மீது சுமத்திக் கொண்டது. இந்திய ரசிகர்களின் இதயங்களை நொறுக்க வேண்டி வரும் என அவர்களுடைய அணித்தலைவர் சாண்ட்னர் சொன்னபோதே இது ஆரம்பித்தது. அவர் அதற்குப் பதிலாக "நாங்கள் பலவீனமான அணி, இந்தியாவே பலமான அணி. நாங்கள் நன்றாகப் போட்டியிடுவோம். வெற்றி பெற்றேயாக வேண்டிய அழுத்தம் எங்கள் மீது இல்லை" எனச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தமக்குப் பழக்கமில்லாத மனநிலையை வரித்துக் கொண்டார்கள். ஆட்டத்திலும் கூட ஆப் ஸ்பின்னர் ஒருவரைக் (மெக்கோஞ்சி) குறைத்து வேகவீச்சாளரை எடுத்தது, ஹென்ரிக்கும், பிலிப்ஸுக்கும் தொடர்ச்சியாக ஓவர் கொடுக்காதது எனத் தவறுகள் செய்தார்கள். மெக்கோஞ்சியும் பிலிப்ஸும் மூன்று ஓவர்கள் சேர்ந்தும், ஹென்ரி இரண்டு ஓவர்களும் வீசியிருந்தால் இந்திய அணியின் வேகம் குறைந்திருக்கும். நேராக நல்ல நீளத்தில் வீசி பவுண்டரிகளை, க்ஸர்களைக் கட்டுப்பாட்டி இருந்தாலே அவர்கள் ஆட்டத்தில் இருந்திருக்க முடியும். பந்து பழசானதும் ஆட்டத்துக்குள் வந்திருக்க முடியும். நியுசிலாந்தின் தடுமாற்றத்தை இந்திய நன்கு பயன்படுத்திக் கொண்டது. இப்போட்டித் தொடரில் இந்தியா செய்த உருப்படியான விசயம் ஒரே டெம்பிளேட்டை கடந்த ஒராண்டாகப் பின்பற்றினார்கள், அதை அவர்கள் உலகக்கோப்பைத் தொடருக்காக முழுமையாக மாற்றவில்லை என்பது. சற்று சிரமமான ஆடுதளங்களில் கூட பவர் பிளேயில் முரட்டு அடி அடித்தார்கள். மத்திய ஓவர்களிலேயே நிதானமாக ரன்களைச் சேகரித்தார்கள். சாதகமான ஆடுதளங்களில் எல்லா ஓவரிலுமே அடித்தார்கள். அதாவது இந்தியாவுக்கு என்று ஒரு அடையாளம், சந்தைப்படுத்தத்தக்க USP, இருந்தது. இந்தியாவில் சில சிக்ஸர்கள் அடித்தாலே இது எதிரணிகளுக்கு நினைவு வந்து அச்சத்தை விளைவித்தது. இந்தியாவின் மட்டையாட்டம் நல்ல ஆட்டநிலையில் உள்ளபோது இந்த அடையாளமே பாதி போட்டியை வென்றளித்தது. இது இம்முறை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மே.இ தீவுகள் போன்ற அணிகளுக்கு இருக்கவில்லை. நியுசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளின் பாணி என்னவென்று அவ்வணிகளுக்கே சரியாகத் தெரியவில்லை. நியுசிலாந்தும் இங்கிலாந்தும் ஒவ்வொரு போட்டியிலும் தேவையான அளவுக்கு தம் ஆட்டத்தைத் தகவமைத்து வென்றனர். தென்னாப்பிரிக்கா தன் மட்டையாட்டத் திறனைக் கொண்டு ஆதிக்கம் செய்தது, பந்து வீச்சிலும் சரியான வியூகத்துடன் வந்தது. இதை ஒரு தென்னாப்பிரிக்க பாணியென்றாலும் இதை எல்லா போட்டிகளிலும் ஒரே போலப் பயன்படுத்தினார்களா? இல்லை. நியுசிலாந்துக்கு எதிராக அரை இறுதியில் பந்து மட்டைக்கு வரவில்லை என்றதும் அவர்களுடைய மத்திய வரிசை நிதானமாகவும் அதிரடியாகவும் அடித்து அவர்களைக் காப்பாற்றி இருக்க வேண்டும். பிரெவிஸ், மில்ல்லர், யான்ஸன் ஆகியோர் இதை ஒரு டெம்பிளேட்டாகக் கொண்டு வந்து எதிரணியை அச்சுறுத்தியிருக்க வேண்டும். இதைத் தம் ஊடகங்களின் வழி அவர்கள் வலியுறுத்தி இருக்க வேண்டும். அதையே நம்பி ஒவ்வொரு போட்டியிலும் அவர்கள் முன்னெடுத்திருக்க வேண்டும். இந்த உலகக்கோப்பைத் தொடரின் சேதி இதுதான் என நினைக்கிறேன். கம்பீர்-சூர்யகுமாரின் முக்கியமான பங்களிப்பு இந்த ஆட்ட பாணியை முன்னிறுத்தி அதையே கடைசி வரை எல்லாரையும் (அதாவது எதிரணியையும் நம்மையும் சேர்த்து) நம்ப வைத்தது. இந்த டெம்பிளேட் சொதப்பியதும் அவர்கள் இஷான் கிஷனைக் கொண்டு வந்தார்கள். சாம்ஸனைக் கடைசி வரை ஆதரித்தார்கள். திலக்கை கடைசி ஐந்து ஓவர்கள் அடிக்க அனுப்பினார்கள். ஆனால் டெம்பிளேட் மட்டும் மாறவில்லை. இந்த உலகக்கோப்பையில் சொந்த ஊர் ரசிகர்கள் முன்னர் நடந்தது இந்தியாவுக்கு ஒரு 'பின்னடைவுதான்'. இதுவரை எந்த அணியும் அந்த அழுத்தத்தைக் கடந்து உலகக்கோப்பையை வென்றதில்லை. இந்தியா இதைச் சாதித்தது மெச்சத்தக்கது. சூர்யகுமார் யாதவ் இந்த அழுத்தத்தை ஒரு மகிழ்ச்சியான வாய்ப்பாகப் பார்க்கும்படி தன் அணியினரிடம் கேட்டதாக ஊடகங்களிடம் சொல்லி இருக்கிறார். நான் கவனித்தபோது அணியிடம் ஒருவித நெர்வஸான ஆற்றல் இருந்தது. தம் மீதான அழுத்தத்தை மிகை உணர்வு வெளிப்பாடாக, ஆவேசமாக அவர்கள் வெளிப்படுத்தினார்கள். இதற்கு ஆடுதளமும் எதிரணியின் பந்து வீச்சும் உதவிட அவர்கள் அந்த விசையைப் பற்றிக் கொண்டு ஆதிக்கம் செய்தார்கள். ஜிம்மி நிஷமின் ஓவரில் மூன்று விக்கெட்டுகள் விழுந்தபோதுதான் அவர்கள் கொஞ்சமாவது நின்று யோசித்தார்கள். இது ஒரு விளையாட்டு, இது உலகக்கோப்பை இறுதிப்போட்டி என நினைவுகொண்டார்கள். ஆனால் நீஷமின் கடைசி ஓவரில் துபே இருபது ரன்களுக்கு மேல் அடித்ததில் அந்த பின்னடைவும் காணாமல் போனது. நியுசிலாந்து ஒருவேளை கடைசி ஓவரை வென்றிருந்தால் இந்தியாவின் ஸ்கோர் 230க்குள் இருந்திருந்தால் அது அவர்கள் இன்னும் நேர்மறையாக ஆட ஊக்கம் கொடுத்திருக்கும். இலக்கை நெருங்கிக் கூட ஒருவேளை வந்திருப்பார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் எந்தக் கட்டத்திலும் நேர்மறையாக மட்டுமே சிந்திக்க வேண்டும் எனும் தீர்மானம் உதவியது. இதற்கும் சூர்யகுமார் யாதவையும் கம்பீரையும் பாராட்ட வேண்டும். ஆனால் இந்தியா இந்த வெற்றியுடன் திருப்தி அடையாமல் மட்டையாட்ட ஆல்ரவுண்டர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். எல்லா ஆட்டங்களிலும் 3-4 ஓவர் சுழல் பந்து வீசுவதற்கு ஒரு மட்டையாளர் வேண்டும். துபெ ஒன்று தன் மிதவேகப் பந்து வீச்சை மேம்படுத்த வேண்டும் அல்லது அவரை முழுநேர மட்டையாளராகக் கருதி மற்றொருவரை ஆல்ரவுண்டராக அணிக்குள் கொண்டு வர வேண்டும். ஆறாவது, ஏழாவது பந்து வீச்சாளர்கள் அவசியம். அவர்களால் ரன்களைக் கட்டுப்படுத்தவோ விக்கெட் எடுக்கவோ முடிய வேண்டும். அதே போல மட்டையாடும் திறன்பெற்ற ஒரு வேகவீச்சாளரைக் கொண்டு வர வேண்டும். அதாவது ஹர்ஷித் ரானாவுக்கு மாற்றாக. இம்முறை ரானா காயமாகி வெளியேறியதும் சிராஜ் வந்தாலும் சிராஜை நம்மால் சுலபத்தில் ஆட வைக்க முடியவில்லை. அவரை ஒரு மட்டையாளரின் இடத்தில் ஆட வைத்தால் மட்டையாட்டம் பலவீனமாகும். ஆனால் ரானா இருந்திருந்தால் சில போட்டிகளில் சுலபமாக ஆறாவது வீச்சாளரை ஆட வைக்க முடியும். அதேபோல வாஷிங்டன்னின் மட்டையாட்டத்தையும் பந்து வீச்சையும் மேம்படுத்த வேண்டும். அவருக்கு அந்த அறிவுறுத்தல் தெளிவாக வழங்கப்பட வேண்டும். பவர் பிளேயில் மட்டுமல்ல மத்திய ஓவர்களிலும் கட்டுப்படுத்த அவர் கற்க வேண்டும். வந்ததும் சிக்ஸர் அடிக்கப் பழக வேண்டும். இது அக்ஸர் காயம்பட்டால் மாற்று வீரரைப் பெற உதவும் (குல்தீப்பை அங்கு கொண்டு வர முடியாது என்பதால்). இந்திய அணி தன் களத்தடுப்பையும் மேம்படுத்த வேண்டும். திலக்கும் துபேயும் ஆடுவதைப் பார்க்கையில் ரிங்குவுக்கு அணியில் இடமில்லை என்பது தெளிவு. ரிங்கு ஒரு ஆல்ரவுண்டராக அணிக்குள் வர முயல வேண்டும். அவருடைய போட்டி துபேயுடன் தான். துபேயின் போட்டி திலக்குடன். ஹர்த்திக் பாண்டியா காயமுற்றால் அவரிடத்தில் யார் ஆடுவார்கள்? இது மற்றொரு தலைவலி. நிதீஷ்குமாரிடம் போகாமல் உள்ளூர் அணிகளில் தேட வேண்டும். தேடி வாய்ப்பளித்தால் புதிய ஆல்ரவுண்டர்கள் தாமே வருவார்கள். ஹர்த்திக்குக்கு போதிய ஓய்வு கொடுத்ததாகவும் இருக்கும். இந்த வெற்றியுடன், இந்தக் கோப்பையுடன் இந்திய டி 20 அணி ஒரு சூப்பர் பவராக மாறுகிறது. அயலுறவில் இந்திய அவமானப்பட்டிருக்கும் நிலையில் இந்த வெற்றி ஒரு நல்ல கவனத் திருப்பமாக இருக்கும். கம்பீர் மீதான பல விமர்சனங்களை இது மறக்கடிக்கும். 35 வயதாகிவிட்ட, கடந்த ஓராண்டாகவே ஆட்டநிலையில் தலைகுப்புற விழுந்து வரும் சூர்யகுமார் யாதவின் ஆட்டவாழ்வின் ஆயுளை இரண்டாண்டுகள் கூட்டும். சஞ்சு சாம்ஸனின் மீள்வருகையை, நாயகத் திண்மையை காலம் நினைவில் வைத்திருக்கும். அடித்தாடுவதை, அதிக மட்டையாளர்களை முக்கியத்துவத்துப்படுத்தும் இந்தியாவின் டி20 ஆட்டக் கொள்கையை இக்கோப்பை நியாயப்படுத்தும். இந்த ஆட்டப் பாணியின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் ஒரு துவக்க மட்டையாளரையோ 3வது, 5வது எண்ணில் ஆடுபவரையோ ஒரு சுழலரையோ மாற்றினாலோ கூட அணி இப்படியே அதிரடியாக ஆடி வெற்றி பெறும். அதேநேரம் ஹர்த்திக்கும் பும்ராவும் இல்லாவிடில் ஐந்து வீச்சாளர்களை வைத்துச் சமாளிப்பது சிரமமாகும். வரும் ஆண்டுகளில் முதல் 10 ஓவர்களில் 150 என்பது சராசரி ஸ்கோராகும். 300 இலக்கையும் விரட்டிச் சென்று வெல்வார்கள். இன்னும் பல நாடுகள் சர்வதேச டி20 ஆடுவார்கள். அப்போது இரண்டு மூன்று நாடுகள் ஆதிக்கம் செய்வது சாத்தியப்படாது என நினைக்கிறேன். கிரிக்கெட் யுடியூபைப் போல ஆகும். இன்றைய வெற்றியாளர் நாளை இருக்க மாட்டார். அதனால் இப்போதுள்ள இக்காலம் நிலைக்காது என்றாலும் கொண்டாடத்தக்கது. இந்திய அணிக்கு வாழ்த்துகள்! https://www.writerabilash.in/2026/03/20-2026_10.html- ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தெரிவு?
இரானின் புதிய தலைவர் முன்னுள்ள மிகப்பெரிய சவால் - அமெரிக்கா, இஸ்ரேல் கூறியது என்ன? பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,மொஜ்தபா காமனெயி கட்டுரை தகவல் லைஸ் டூசெட் பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரான் இஸ்லாமிய குடியரசு ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளும் போது, இதுவரை சோதனைகளை சந்திக்காத ஒருவர் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். இந்த போரின் முதல் வார தாக்குதல்களில் அவரது தந்தை ஆயதுல்லா அலி காமனெயி படுகொலை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள் 56 வயதான மொஜ்தபா காமனெயியை உயர்மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன. 1979 புரட்சிக்குப் பிறகு இரானின் மூன்றாவது உச்ச தலைவராகப் பொறுப்பேற்கும் அவர், இஸ்லாமியக் குடியரசு தனது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான போரை எதிர்கொள்ளும் தருணத்தில் பொறுப்பேற்கிறார். 88 ஷியா முஸ்லிம் மதகுருக்களைக் கொண்ட அமைப்பான நிபுணர்கள் சபையால் (Assembly of Experts) அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒட்டி, பெருந்திரளான மக்கள் உடனடியாக வீதிகளில் இறங்கி 'அல்லாஹு அக்பர்' - 'கடவுள் மிகப்பெரியவர்' - என்று முழக்கமிட்டுக் கொண்டாடினர். அனைத்துப் பாதுகாப்புப் படைகளும் தங்களின் புதிய தலைமைத் தளபதிக்கு தங்களின் 'உடலில் கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரை' சேவை செய்வதாக உறுதி அளித்தன. அரசுத் தொலைக்காட்சி அவரது பெயரில் ஏவப்பட்ட முதல் ஏவுகணைகளின் படங்களைக் காட்டியது, அதன் பக்கவாட்டில் "உங்கள் சேவையில், செய்யது மொஜ்தபா" என்ற செய்தி எழுதப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் - ஜனவரி மாதம் அவரது தந்தையை 'சர்வாதிகாரி' என்று கண்டித்து அவருக்கு மரணம் கோரி வீதிகளில் திரண்ட எதிர்ப்பாளர்களில் சிலர், நேற்றிரவு (மார்ச் 9) தங்கள் குடியிருப்புகளில் இருந்து 'மொஜ்தபாவுக்கு மரணம்' என்று முழக்கமிடுவதைக் கேட்க முடிந்தது. போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரின் இழப்பை இன்னும் நினைத்து வருந்துவோருக்கு, ஒரு கடுமையான ஆட்சி சூழலை இன்னும் கடுமையானதாக மாற்றப்போவதாகத் தோன்றுகிறது. காமனெயி மற்றும் அவரது அமைப்பின் இறுதி நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக அவர்கள் இன்னும் துணிச்சலுடன் நம்புகிறார்கள். மொஜ்தபா காமனெயி - யார் இவர்? மறைந்த ஆயதுல்லாவின் இரண்டாவது மகனான மொஜ்தபா, அவரது தந்தையின் தீவிர பழமைவாத வார்ப்பில் உள்ளவர். மொஜ்தபா காமனெயி பல ஆண்டுகளாகத் தனது தந்தையின் நிழலில் பணியாற்றினார்; வெளிப்புற அச்சுறுத்தல்கள் மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களை எதிர்கொள்ளும் போது 'அரசு அமைப்பு' எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த அனைத்து விவரங்களையும் அவர் அறிவார். அவர் சக்தி வாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) இணைந்து பணியாற்றியுள்ளார். உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்த உடனேயே ஒரு இளைஞனாக அதில் சேர்ந்தார். பின்னர் ஷியா இஸ்லாமிய படிப்புக்கான முதன்மையான மையமாக அறியப்படும் கோம் (Qom) நகருக்குப் படிக்கச் சென்றார். 1979-இல் புரட்சியைப் பாதுகாப்பதற்கும் பேணுவதற்கும் நிறுவப்பட்ட ஐஆர்ஜிசி, இப்போது பல அடுக்கு பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஒரு மிகப்பெரிய பொருளாதார சாம்ராஜ்யத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. அதன் தளபதிகள் இப்போது முடிவுகளை எடுக்கிறார்கள். மொஜ்தபா காமனெயி அவர்களின் வேட்பாளர் என்று கூறப்பட்டது. இந்தப் போர் இப்போது வெறும் அரசியல் சண்டை மட்டுமல்ல; இது மிகவும் தனிப்பட்ட ரீதியிலானது. இது பழிவாங்குவதைப் பற்றியதுமாகும். உச்ச தலைவரின் வளாகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மொஜ்தபா காமனெயி தனது தந்தையை மட்டுமல்லாமல், தனது தாய் மன்சூரே கோஜஸ்தே பாகெர்சாதே, மனைவி ஜஹ்ரா ஹதாத்-ஆடெல் மற்றும் ஒரு மகனையும் இழந்தார். அவரும் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்த விவரங்களோ அல்லது அதன் பிறகு அவரைப் பற்றிய எந்த அறிகுறியும் கூட இல்லை. பட மூலாதாரம்,EPA/Shutterstock படக்குறிப்பு,தெஹ்ரானில் நடந்த பேரணியின் போது இரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமனெயியின் படத்தை ஏந்திய ஒரு பெண். (9 மார்ச் 2026) அமெரிக்கா, இஸ்ரேல் கூறியது என்ன? அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இது மிகவும் தனிப்பட்ட விஷயமாகும். அவர் தனது உத்தரவுகளை எதிர்ப்பவர்களை சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை என்பதைத் தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகிறார். காமனெயியின் 'அரசியல் வாரிசு' குறித்து ஊகங்கள் பரவியபோது, அலி காமனெயி மகனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று டிரம்ப் பல முறை அறிவித்தார். இப்போது மொஜ்தபா காமனெயி 'நீண்ட காலம் நீடிக்க மாட்டார்' என்று டிரம்ப் எச்சரிக்கிறார். மொஜ்தபா இஸ்ரேலின் இலக்காகவும் இருக்கிறார், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் 'மொஜ்தபா சந்தேகத்திற்கு இடமில்லாத இலக்கு' என்று விவரிக்கிறார். எனவே மொஜ்தபா காமனெயி இன்னும் சிறிது காலம் மறைந்திருக்கலாம். இது அவரைச் சுற்றியுள்ள மர்மத்தை இன்னும் அதிகப்படுத்தும். அவர் பகிரங்கமாகப் பேசியதற்கான எந்தப் பதிவும் இல்லை, அவர் அரிதாகவே பொது இடங்களில் தோன்றியுள்ளார். அவர் இதுவரை முறையாக எந்த அரசாங்கப் பதவிகளையும் வகித்ததில்லை. அவரது புகைப்படம் இரான் எங்கும் நிறைந்திருந்த அவரது தந்தையின் உருவப்படங்களுடன் ஒருபோதும் தோன்றியதில்லை. 1979 புரட்சியில் தூக்கியெறியப்பட்ட முடியாட்சியின் பரம்பரை முறையைத் தவிர்க்க விரும்பி, அவரை வாரிசுப் பொறுப்பிலிருந்து மறைந்த ஆயதுல்லா காமனெயி விலக்கி வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான இரானியர்கள் அவரது குரலைக் கேட்டதே இல்லை. ஆனால் அவரது அரசியல் பார்வை குறித்த சில அறிகுறிகள் தென்பட்டுள்ளன. மொஜ்தபா காமனெயி எழுச்சி 2005-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் பழமைவாத வேட்பாளர் அஹ்மதிநிஜாத்தின் தேர்தல் வெற்றியை ஒரு முக்கிய தருணமாக இப்போது குறிப்பிடுகிறார்கள். அவரது வெற்றியை உறுதி செய்ய மொஜ்தபா காமனெயி திரைமறைவில் சதி செய்ததாக சீர்திருத்தவாதப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டினர். 2009-இல் அஹ்மதிநிஜாத் சர்ச்சைக்குரிய வகையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது 'பச்சை புரட்சி' (Green Revolution) என்று இப்போது நினைவுகூரப்படும் போராட்டங்களைத் தூண்டியது. முக்கிய சீர்திருத்தவாத அரசியல்வாதிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர், அவர்கள் இன்றும் அதே நிலையில் உள்ளனர். இரானின் புதிய உச்ச தலைவருக்கான பிற போட்டியாளர்களில் ஒருவர் வேறுபட்ட புரட்சிகர சிந்தனைகளுக்காக அறியப்படும் ஒரு வேட்பாளர் ஆவார். முதல் உச்ச தலைவர் ஆயதுல்லா ருஹொல்லா கோமேனியின் பேரனான ஹசன் கோமேனி, சீர்திருத்தவாதிகளின் போக்கில் இருந்தவர். காமனெயியின் எழுச்சி, இரானின் பிளவுபட்ட அரசியல் சூழலில் ஒப்பீட்டளவில் மிதவாதிகளாக இருக்கும் சீர்திருத்தவாதிகள் (தற்போதைய அதிபர் மசூத் பெசெஷ்கியன் உட்பட) இப்போது இன்னும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் என்பதைக் குறிப்பதாகத் தெரிகிறது. அரசியல் ரீதியாக, காமனெயி புரட்சிகர பாதுகாப்புப் படைகளுடன் தொடர்புடைய இரண்டு முன்னணி நபர்களுக்கு நெருக்கமானவர். உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்குத் தலைமை தாங்கும் மூத்த அரசியல்வாதி அலி லாரிஜானி மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரியும் அரசியல்வாதியுமான முகமது பாகர் கலிபாஃப், இவர் இப்போது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக உள்ளார். மறைந்த ஆயதுல்லா அலி காமனெயியின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளான இவர்கள், சமீபத்திய மாதங்களின் உயர்மட்டத் திட்டமிடலில் பெரும் பொறுப்புகளை ஏற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர், இதில் கத்தார் மூலம் டிரம்பின் தூதர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது மற்றும் இரானின் மிகப்பெரிய எதிரிகளின் ராணுவ மற்றும் உளவுத்துறை வலிமையுடன் ஒரு முழுமையான மோதலுக்குத் தயாராவது ஆகியவை அடங்கும். கடந்த மாதம் இரான் மற்றும் அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான (கைவிடப்பட்ட) பேச்சுவார்த்தைகளின் போது லாரிஜானியைச் சந்தித்த ஒரு மேற்கத்திய அதிகாரி, அவரை ஒரு யதார்த்தவாதி (pragmatist) என்று விவரித்தார். தங்கள் அமைப்பைப் பாதுகாப்பதற்காகத் தங்களை 'கொள்கையாளர்கள்' என்று அழைத்துக் கொள்ளும் கடும்போக்குவாதிகள் மைய இடத்தைப் பிடித்துள்ள இந்தத் தருணத்தில், இது இன்னும் வேறு திசையில் திரும்பக்கூடும் என்று கூறும் குரல்களும் உள்ளன. மொஜ்தபா காமனெயிக்கு நெருக்கமான ஒரு அரசியல்வாதியான அப்துல்ரேசா தவாரி - பொது அறிக்கைகளிலும் நியூயார்க் டைம்ஸின் சமீபத்திய நேர்காணலிலும் 'அவரை மிகவும் முற்போக்கானவர்' என்றும் 'கடும்போக்குவாதிகளை ஓரம்கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பவர்' என்றும் விவரித்தார். ஆட்சியில் தனது பிடியை இறுக்கமாக வைத்திருந்த அதே வேளையில், நாட்டில் சமூக சுதந்திரங்களை கணிசமாக விரிவுபடுத்திய சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானைப் போன்றவர் அவர் என்றும் அப்துல்ரேசா தவாரி கூறினார். இப்போது, அத்தகைய பெரிய மாற்றத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. குறிப்பாக இந்த அபாயகரமான மற்றும் கணிக்க முடியாத காலங்களில். மத்திய கிழக்கை உலுக்கி, அதன் அண்டை நாடுகளுடனான உறவுகளை அழித்து, நீண்டகால பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு தீவிரமடைந்து வரும் மோதலின் பிடியில் இரான் தற்போது சிக்கியுள்ளது. மொஜ்தபா காமனெயியின் எழுச்சி 'மிக மோசமான ஒரு சூழல்' என டிரம்பால் குறிப்பிடப்பட்டது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் படைகள் இதனை முறியடிக்க தங்களின் சிறந்த வாய்ப்பாக அவரைக் கருதுகின்றன. https://www.bbc.com/tamil/articles/clyx8zl0v2xo- தேசிய வாய் சுகாதாரக் கணக்கெடுப்பு மார்ச் 10 ஆரம்பம்; இலங்கையர் ஒருவரின் வருடாந்த சீனியின் நுகர்வு 34 கிலோவாக அதிகரிப்பு
நாடளாவிய ரீதியில் தேசிய வாய் சுகாதார கணக்கெடுப்பு ஆரம்பம்: பொதுமக்களின் ஒத்துழைப்பை கோருகிறது சுகாதார அமைச்சு! Published By: Digital Desk 1 10 Mar, 2026 | 10:39 AM இலங்கையின் 5-வது தேசிய வாய் சுகாதார கணக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமை (10) முதல் ஆரம்பிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விசேட கணக்கெடுப்பு நடவடிக்கை இன்று முதல் எதிர்வரும் நவம்பர் மாத இறுதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இக்கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதன்போது தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் வீடுகளை மையமாக வைத்து தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன. தேசிய வாய் சுகாதார கணக்கெடுப்பை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக, பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்கு வருகை தரும் எமது வைத்தியக் குழுவினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு, தேசிய வாய் சுகாதார கணக்கெடுப்பின் பிரதான ஆய்வாளர், விசேட வைத்திய நிபுணர் நிலந்த ரத்நாயக்க, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/240604- "பெண்களின் தலைமைத்துவம் - செழிப்பான தேசத்தின் பெருமை": மாத்தறையில் பிரம்மாண்டமான மகளிர் தின விழா!
"பெண்களின் தலைமைத்துவம் - செழிப்பான தேசத்தின் பெருமை": மாத்தறையில் பிரம்மாண்டமான மகளிர் தின விழா! Published By: Digital Desk 1 10 Mar, 2026 | 10:27 AM "பெண்களின் தலைமைத்துவம் - செழிப்பான தேசத்தின் பெருமை" எனும் தொனிப்பொருளின் கீழ், பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் மண்டபத்தில் ற தேசிய மகளிர் தினக் கொண்டாட்டம் நேற்று முன்தினம் (08) நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள இலங்கை மகளிர் பணியகம் ஆகியவற்றினால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வருடத்தின் மகளிர் தினமானது "பெண்களின் தலைமைத்துவம் - செழிப்பான தேசத்தின் பெருமை" என்ற கருப்பொருளை முன்னிலைப்படுத்தி கொண்டாடப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை மகளிர் பணியகத்தினால் வெளியிடப்பட்ட "காந்தா சவிய" சஞ்சிகையின் விசேட இதழ் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிதிகளுக்கு இதன்போது வழங்கப்பட்டது. அத்துடன், மாவட்ட ரீதியாக சிறந்த தொழில்முனைவோர்களாகத் தெரிவு செய்யப்பட்ட 25 பெண் தொழில்முனைவோர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையானது (JICA), மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பங்களிப்புடன் வலுவூட்டப்பட்ட பெண் தொழில்முனைவோர்களைப் பாராட்டி கௌரவித்தது. காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை மகளிர் பணியகத்தின் 1500 உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தென் மாகாண ஆளுநர் சுசிரிபால மானாவடு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர்; நாமல் சுதர்ஷன, அமைச்சின் செயலாளர் தரங்கனி விக்ரமசிங்க, மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள், அமைச்சின் அதிகாரிகள், தேசிய மகளிர் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், இலங்கை மகளிர் பணியகத்தின் பணிப்பாளர் மற்றும் பல பெண் தொழில்முனைவோர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/240601- விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை
விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை விடுமுறைக்கு நாட்டுக்குப் போவதாக இருந்தால் பொதுவாக என் குடும்பத்தைத் தவிர வேறு யாரிடமும் அதை ப் பற்றி நான் கதைப்பதில்லை. “எதற்கு வில்லங்கத்தைச் சும்மா வாங்க வேண்டும்?” என்ற உயரிய எண்ணம்தான் அதன் காரணம். ஆனால், சில சமயம் வில்லங்கம், நாங்கள் தேடாமல் எங்களைத் தேடித் தானாக வந்து விடும். அடுத்த நாள் எனது பயணம். செய்ய வேண்டிய வேலைகள் சில இருந்தன. அப்போது அலைபேசி அழைத்தது. அழைப்பு நியூசிலாந்தில் இருந்து வந்திருந்தது. அங்கு வசிக்கும் எனது உறவினர் ஒருவர். என்னை “தம்பி” என்று உரிமையோடு அழைப்பார். நானும் அவரின் பெயரின் பின்னால் “அக்கா” சேர்த்துஅழைப்பேன். “என்ன, சிறீலங்கா போறியாம்?” “சிறீலங்காவுக்கா? யார் சொன்னது?” “விடாதை . கதை விடாதை . எனக்குத் தெரியும். சிறீலங்காவிலையிருந்து எனக்கொரு தாலிக்கொடி வாங்கி அனுப்பிவிடுறியே?” தங்கம் விற்கும் விலையில் தாலிக்கொடி வாங்க வேண்டுமா என்ற எண்ணத்தில் தலை சுற்ற ஆரம்பித்தது. நல்லவேளை அவர் அடுத்ததாகச் சொன்னவார்த்தைகளில் நான் தப்பித்தேன். “பவுணில இல்லை. இமிட்டேஷன் தாலிக்கொடி. இஞ்சை எனக்குத் தெரிஞ்ச ஒருத்தியின்ரை மகளுக்கு கொஞ்ச நாளைக்கு முன் கல்யாணம் நடந்தது. அவையள் ஹொலிடேக்குப் போயினம். போற இடத்திலை சொந்தக்காரர்கள் வீட்டுக்கும் போவினம். பவுண் தாலிக்கொடியை போட்டுக் கொண்டு போய் எதுவும் நடந்தாலும் எண்டு பயப்படுயினம். அதுக்குத்தான். வெள்ளவத்தையில வாங்கலாம். ‘யாழ்ப்பாணத் தாலிக்கொடி’ என்று கேள். வட்டமா இருக்கும்.” நான் பயணத்தை யாரிடமும் சொல்லாமல் இருக்க முயன்றாலும், வில்லங்கம் எப்படியோ என்னைத் தேடி வந்துவிடும் போல. இந்த இமிட்டேஷன் யாழ்ப்பாணத் தாலிக்கொடியே அதற்கான ஆரம்பமாக இருக்கப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. கொழும்பில் நான் வழமையாகத் தங்குவது என் நண்பன் கணேசனின் வீட்டில். அவன் சட்டத்தரணியாக இருந்த காலத்தில் மாலை நேரத்தில் மட்டும் “தீர்த்தம்” அருந்துவான். இப்போது வயதும் ஓய்வும் சேர்ந்து, மதியம் ,மாலை இரு வேளைகளிலும் தீர்த்தக் களிப்பில் இருக்கிறான். இந்த வருடப் பொங்கலை அவனுடனேயே கொண்டாடினேன். 40, 45 வருடங்களுக்கு பிறகு நான் காணும் பொங்கல் அது. பொங்கல் முடிந்து இரண்டுநாட்களுக்குப் பிறகு நியூசிலாந்து அக்கா கேட்ட யாழ்ப்பாணத் தாலிக்கொடி நினைவுக்கு வந்தது. அதை வாங்கி அனுப்பிவிட்டு அடுத்த வேலையைப்பார்க்கலாம் என்று கடைகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். நான் வாங்கி வந்த தாலிக்கொடியைப் பார்த்து கணேசனின் மனைவி உடனேயே சொன்னார், “பிழையா வாங்கிட்டீங்கள். இது இமிட்டேஷன் என்று அப்பிடியே காட்டிக்குடுக்கும்.” சொன்னதோடு மட்டும் நின்று விடாமல், தனது கழுத்தில் இருந்த தடித்த தாலிக்கொடியைக் காட்டினார். “இது செய்து எத்தினை வருசமாச்சுது . செத்த பாம்பு மாதிரி இருக்குது. அவன் வாங்கினது சரிதான். யாழ்ப்பாணத் தாலிக்கொடி இப்பிடித்தான். இதுதான் இப்ப பாஷன்” என்று கணேசன் என்னைக் காப்பாற்றினான். “சிவபெருமான் கழுத்தில சுத்தியிருக்கிற பாம்பு மாதிரி…” என்று முணுமுணுத்தபடி கணேசனின் மனைவி எங்களை விட்டு அகன்றார். அடுத்த நாள் அந்த யாழ்ப்பாணத் தாலிக்கொடியை நியூசிலாந்துக்கு அனுப்பி வைத்தேன். அந்தத் தாலிக்கொடி வாங்கச் சென்றபோது ஒரு கடையில் பார்த்த ஒரு விளம்பரம் என்னைச் சற்று யோசிக்க வைத்தது. “மாணிக்கக்கற்கள் பொருந்திய நகைகள் 40% முதல் 60% வரை தள்ளுபடி” என்று ஒரு கண்காட்சி விளம்பரம். சும்மா போய் பார்த்து வரலாம் என்று நினைத்து அந்த கண்காட்சிக்குச் சென்றேன். இடம் கொள்ளுப்பிட்டிய. அங்கு சென்றபோது, மூன்று ஊழியர்களும் ஒரு காவலாளியும் தவிர வேறு யாரும் இல்லை. அப்போதே திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால் மாறாக உள்ளேபோனேன். அங்கு சபையர் கல் பதித்த ஒரு மோதிரம் என்னைக் கவர்ந்தது. அவர்கள் சபையரை பரிசோதித்து காட்டினார்கள். மோதிரம் 14 கரட் என்று சொன்னார்கள். விலையையும் குறைத்துத் தந்தார்கள். நான் வாங்கிவிட்டேன். யேர்மனிக்குத் திரும்பினேன். சிறீலங்காவில் +30°C யேர்மனியில் -12°C என காலநிலை இருந்தது. நேரமாற்றமும் குளிரும் சேர்ந்து நீண்ட நேரம் தூங்கிக்கொண்டிருந்தேன். எழுந்தபோது சூட்கேஸ் எல்லாம் திறந்து ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. உடுப்புகள் தோயலுக்குப் போயிருந்தன. கொண்டு வந்தபொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குள் மோதிரப் பெட்டியும் இருந்தது. மனைவியை ஆச்சரியப்படுத்த வாங்கி வந்த மோதிரம். “நல்ல வடிவான மோதிரம்,” என்றாள். கண்காட்சியில் வாங்கிய விபரத்தைச் சொன்னேன். ஆனால் அந்த மோதிரத்தை நான் மீண்டும் பார்த்தபோது, வாங்கிய போது இருந்த கவர்ச்சி கல்லில்இப்போது குறைந்திருப்பது போல எனக்குத் தோன்றியது. தவறு கல்லிலா? இல்லை நீண்ட நித்திரையில் இருந்த என் கண்களிலா? அந்தச் சந்தேகத்தை அப்போது மனைவியிடம் சொல்லவில்லை. அவளது மகிழ்ச்சி வீணாகிவிடக் கூடாது என்று நினைத்தேன். இரண்டு நாட்களுக்கு பிறகு வழமையான வாழ்க்கைக்கு திரும்பியபோது என் சந்தேகத்தை மனைவியிடம் கூறினேன். “கடையில குடுத்துக் கேட்டால் அதன் பெறுமதி சொல்லிவிடுவினம். வேணுமென்டால் நான் கேட்டுப் பார்க்கிறன்,” என்றாள். அடுத்த நாள் முடிவு தெரிந்தது. மோதிரம் 14 கரட் தங்கம். அதில் பொருத்தியிருந்தது உண்மையிலேயே சபையர் கல்லுதான். ஆனால் அதன் தரம் வெறும் 0.9 கரட் மட்டுமே. வாங்கி வந்தேன் ஒரு வாழைமரம் வந்தபின்னே அது தாழைமரம் அதாவது நான் கொடுத்த பணத்தின் மதிப்புக்கு ஏற்ற கல் இல்லை. நான் பார்த்த மோதிரத்தை மாற்றி வேறு ஒன்றைத் தந்திருக்கலாம் என்ற சந்தேகம்உறுதியாகியது. அவர்களின் விவரங்களை இணையத்தில் தேடியபோது, நான் தனியாளாக இல்லை. எனக்குத் துணைகளும் இருப்பது தெரிந்தது. என்னைப் போல சிலவெளிநாட்டவர்களும் ஏமாற்றப்பட்டிருப்பது அங்கே பதியப்பட்டிருந்தன. யேர்மனியில் என்றால் இப்படிப்பட்ட விஷயங்களைச் சட்டப்படி சுலபமாக கையாளலாம். ஆனால் சிறீலங்காவில் நடந்த விஷயம். அதுவும் நான் யேர்மனியில்இருந்து கொண்டே முடியுமா? “விட்டு விடலாமா?” என்ற எண்ணம் ஒரு கணம் வந்தது. உடனேயே அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். என்னைப் போல இன்னும் எத்தனை பேரை இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள்? குறைந்தபட்சம் சிலருக்காவது இது பற்றி எச்சரிக்கையைத் தரவேண்டும் முதலில் யேர்மனியில் உள்ள சிறீலங்கா தூதரகத்துக்கு முழு விவரத்தையும் எழுதினேன். அவர்கள் உடனடியாக பதில் அனுப்பினார்கள், “இந்த தீவிரமானவிஷயத்தை எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு நன்றி. உங்கள் புகாரை விசாரணைக்காக இலங்கையில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்குஅனுப்பியுள்ளோம். தகவல் கிடைத்தவுடன் தெரிவிப்போம்.” அடுத்ததாக என் வங்கியையும் தொடர்புகொண்டேன். அவர்கள் சொன்னது, “நீங்கள் வாங்கிய பொருள் உங்களிடம் இருக்கிறது. ஆகவே நேரடியாக பணத்தைத் திரும்பப் பெற முடியாது. அந்தப் பொருளைஅவர்களிடம் ஒப்படைத்து அவர்கள் பெற்றுக்கொண்டதாக உறுதிப்பத்திரம் கிடைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.” மோதிரம் வாங்கிய ரசீதைப் பார்த்தேன். அதில், “Goods once sold can be exchanged only” என்று இருந்தது. ஆனால் நான் விடவில்லை. அவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினேன், “வாங்கிய பொருள் தரமற்றது. கொடுத்த பணத்தின் மதிப்புக்கு ஏற்ப இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளைத் திருப்பி அனுப்புகிறேன். பணத்தை என் வங்கி கணக்கில் வரவு வைக்கவும். 14 நாட்களில் பதில் வரவில்லை என்றால் சட்ட நடவடிக்கைஎடுப்பேன்.” காத்திருந்து சரியாக 14வது நாள் அவர்கள் பதில் அனுப்பினார்கள். “நாங்கள் விற்ற பொருள் தரமானது. திருப்பிப் பெற முடியாது.” எதிர்பார்த்த பதில்தான். “அப்படியானால் நான் சட்ட நடவடிக்கை எடுக்கிறேன். உங்களின் இறுதிப் பதிலுக்கான கால எல்லை நாளை சிறீலங்கா நேரம் 14:00வரை” எனப் பதில் அனுப்பினேன். மீண்டும் நான் எதிர்பார்ததபடி நேர எல்லைக்குள் அவர்களிடம் இருந்து பதில் வந்தது, “நேரடியாக எங்கள் நிறுவனத்துக்கு வாருங்கள். நாங்கள் பேசித்தீர்க்கலாம்” “நன்றி. நான் இந்த விவகாரத்தை சட்டப்படி அணுகுகிறேன்” என அவர்களுக்கு பதிலைத் தந்துவிட்டு, அடுத்து நான் நாடியது சிறீலங்காவின் Tourist Police. மறுநாள் மாலை நேரம், கணேசனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “எதுக்கு உன்னுடைய Power of Attorneyயை எனக்கு அனுப்பியிருக்கிறாய்? அதென்ன மோதிரம்? எப்ப வாங்கினனீ? ” விஷயத்தைச் சொன்னேன். அவன் போனில் கன நேரம் என்னைத் திட்டிக் கொண்டிருந்தான். மாலை நேரமாக இருந்ததால் அவன் தமிழ் தறி கெட்டு ஓடிக் கொண்டிருந்தது.- இந்தியா - சீனா எதிரிகள் அல்ல: சீன அமைச்சர் வாங் யீ பேச்சு
இந்தியா - சீனா எதிரிகள் அல்ல: சீன அமைச்சர் வாங் யீ பேச்சு புதுடெல்லி: சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பேசியதாவது: பிரதமர் மோடியும், அதிபர் ஷி ஜின்பிங்கும் வகுத்துக் கொடுத்த பாதையில் இரு நாடுகளும் பயணிக்க வேண்டும். கடந்த ஆண்டு தியான்ஜினில் நடைபெற்ற சந்திப்பு இருநாட்டு உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல. வளர்ச்சிக்கான நல்வாய்ப்புகளை இருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், எல்லைப் பகுதியில் அமைதியைப் பேணுவதுடன், இரு நாடுகளும் பரஸ்பரம் நம்பிக்கையுடன் செயல் பட வேண்டும். மேலும், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டிற்கு சீனா தனது ஆதரவை அளிக்கும். இவ்வாறு வாங் யீ கூறினார். இந்தியா - சீனா எதிரிகள் அல்ல: சீன அமைச்சர் வாங் யீ பேச்சு- ஈரான் போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது - ட்ரம்ப்
'இரான் போர் விரைவில் முடிவுக்கு வரலாம்': டிரம்ப் - புதின் பேசியது என்ன? பட மூலாதாரம்,NATALIA KOLESNIKOVA,NICHOLAS KAMM/AFP via Getty Images படக்குறிப்பு,சில ஊடக அறிக்கைகளின்படி, இரான் போர் காரணமாக உலகம் முழுவதும் உயர்ந்து வரும் எண்ணெய் விலையைக் கண்டு அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானுக்கு எதிரான போர் 'விரைவில் முடிவுக்கு வரக்கூடும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை இரவு (இந்திய நேரப்படி) தெரிவித்தார். அவரது கூற்றைத் தொடர்ந்து, உலகளாவிய பங்குச் சந்தைகளில் உடனடி நேர்மறையான தாக்கம் ஏற்பட்டதுடன், கச்சா எண்ணெய் விலையும் சரிந்தது. பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நிறுவனத்திடம் அவர் பேசுகையில், "இந்தப் போர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்" எனக் கூறினார். இந்த போருக்கான அமெரிக்காவின் திட்டம் 'கால அட்டவணையை விட முன்னதாக' செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இரானின் ராணுவ பலம் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டது அல்லது நடுநிலையாக்கப்பட்டுவிட்டது என்றும் டிரம்ப் கூறினார். "அவர்களிடம் இப்போது கடற்படை இல்லை, தகவல் தொடர்பு இல்லை, விமானப் படையும் இல்லை. அவர்களின் ஏவுகணைகள் சிதறிக் கிடக்கின்றன. அவர்களின் டிரோன்கள் மற்றும் அவற்றின் தொழிற்சாலைகள் என அனைத்தும் எல்லா இடங்களிலும் அழிக்கப்பட்டு வருகின்றன. நீங்கள் சுற்றிப் பார்த்தால், ராணுவ ரீதியாக அவர்களிடம் எதுவும் இல்லை" என்று டிரம்ப் கூறினார். போர் 'விரைவில் முடிவுக்கு வர முடியுமா' என்ற கேள்விக்கு, 'எனக்கும் அதே எண்ணம் தான் உள்ளது' என்று அவர் பதிலளித்தார். இருப்பினும், பின்னர் புளோரிடாவில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், "எங்களது இரான் நடவடிக்கை விரைவில் முடியும், ஆனால் இந்த வாரம் அல்ல" என்று தெரிவித்தார். "இரானிடம் இருந்த அனைத்தும் போய்விட்டன. அதன் தலைமை உட்பட" என்று அவர் கூறினார். மேலும், "நாங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனக்குத் தெரியவில்லை. அது சூழ்நிலையைப் பொறுத்தது. இதன் முடிவு எனது மனதில் இருக்கிறது, வேறு யாருடைய மனதிலும் இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டார். பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கக்கூடும் என்று சில நாட்களுக்கு முன்புதான் வெள்ளை மாளிகை மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தை மற்றும் எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட மாற்றம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரான் போர் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக எண்ணெய் விலை அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது. டிரம்பின் இந்த கூற்றுகள் பங்குச் சந்தைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின. திங்கட்கிழமை அன்று அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. இரான் மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்ற டிரம்பின் கருத்து சந்தைக்கு நிம்மதி அளித்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில், டபிள்யூ.டி.ஐ மற்றும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலைகள் திங்கள்கிழமை காலையில் ஒரு பேரலுக்கு 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்திருந்தது. ஆனால் பகல் நேரத்தில் பேரலுக்கு சுமார் 90 டாலராகக் குறைந்தது. உலக அளவில் எண்ணெய் விலையைத் தீர்மானிப்பதில் டபிள்யூ.டி.ஐ மற்றும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஆகியவை மிகப்பெரிய அளவுகோல்களாக உள்ளன. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகிய இரண்டும் திங்கள்கிழமை சுமார் 1.75 சதவீத இழப்புடன் முடிவடைந்தன. இந்திய பங்குச் சந்தைகள் மூடப்பட்ட பிறகே டிரம்பின் கருத்து வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 'புதினுடன் பேசினேன்' பட மூலாதாரம்,Roberto Schmidt/Getty Images படக்குறிப்பு,புளோரிடாவில் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த டொனால்ட் டிரம்ப், "இரானின் தலைமையை நாம் அழித்துவிட்டோம்" என்றார். இதற்கிடையில், திங்கள்கிழமை டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த ஆண்டில் இருவருக்கும் இடையே நடந்த முதல் உரையாடல் இதுவாகும். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் புதினுடன் ஒரு நல்ல உரையாடலை மேற்கொண்டேன். அவர் எங்களுக்கு உதவ விரும்புகிறார். யுக்ரேனுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் நீங்கள் எங்களுக்கு இன்னும் அதிகமாக உதவ முடியும் என்று நான் அவரிடம் சொன்னேன். ஆனால் எங்களிடையே நல்ல உரையாடல் நடந்தது. அவர் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைக்க விரும்புகிறார்" என்றார். சில ஊடக அறிக்கைகளின்படி, இரான் போர் காரணமாக உலகம் முழுவதும் உயர்ந்து வரும் எண்ணெய் விலையைக் கண்டு அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. எனவே ரஷ்யா மீதான எண்ணெய் தொடர்பான தடைகளைத் தளர்த்துவது குறித்து அது பரிசீலித்து வருகிறது. கடந்த வாரம் தான், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவிற்கு அமெரிக்கா '30 நாள் விலக்கு' அளித்தது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகத்தைப் பராமரிக்க, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அமெரிக்க கருவூலத் துறை 30 நாள் விலக்கு அளித்துள்ளதாக அதன் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். திங்கள்கிழமை புதினுடனான டிரம்பின் உரையாடலின் போது, இரானின் உச்ச தலைவராக மொஜ்தபா காமனெயி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு புதின் வாழ்த்து தெரிவித்ததாகவும், இரானுக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் கிரெம்ளின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி தெரிவிக்கிறது. இருப்பினும், மொஜ்தபா உச்ச தலைவராக நியமிக்கப்பட்டதில் தனக்கு 'மகிழ்ச்சியில்லை' என்று டிரம்ப் கூறியிருந்தார். சமீபத்தில் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரானின் முன்னாள் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயியின் மகன் தான் மொஜ்தபா. இரானுக்கு எச்சரிக்கை பட மூலாதாரம்,Morteza Nikoubazl/NurPhoto via Getty Images படக்குறிப்பு,டெஹ்ரானில் உள்ள ஒரு எண்ணெய் வயலில் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு புகை எழுகிறது. (படம் மார்ச் 9, 2026 அன்று எடுக்கப்பட்டது) இரானிய ஏவுகணைகள் குறித்து டிரம்ப் கூறுகையில், "அவர்கள் ஏவ வேண்டிய அனைத்தையும் ஏவிவிட்டார்கள். இனி அவர்கள் புதிய உத்திகள் எதையும் முயற்சி செய்யக்கூடாது, இல்லையெனில் அந்த நாடு அழிந்துவிடும்" என்றார். "அவர்கள் ஏதேனும் தவறு செய்தால், இரான் முற்றிலுமாக அழிக்கப்படும், அதன் பெயர் மீண்டும் ஒருபோதும் கேட்காது" என்று அவர் மிரட்டல் விடுத்தார். ஹோர்முஸ் நீரிணை குறித்துப் பேசிய டிரம்ப் , அமெரிக்கா "அதன் கட்டுப்பாட்டை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறது" என்றும் "அமெரிக்காவால் நிறைய செய்ய முடியும்" என்றும் கூறினார். உலகளாவிய கடல்வழி எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்தப் பாதை வழியாகவே செல்கிறது. இந்தப் போர், கடல்வழி போக்குவரத்துப் பாதையைத் தடுத்துள்ளதால், சமீபத்திய நாட்களில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. போர் தொடங்கியபோது, இரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும், அதன் வழியாகச் செல்லும் எந்தக் கப்பலையும் தகர்த்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தது. இருப்பினும், பின்னர் இரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் காதிப்சாதே தாங்கள் ஹோர்முஸ் நீரிணையை மூடவில்லை என்று தெரிவித்தார். இரானின் புதிய தலைவரைப் பற்றி டிரம்ப் என்ன சொன்னார்? பட மூலாதாரம்,Arezoo / Middle East Images / AFP via Getty Images படக்குறிப்பு,மார்ச் 9 அன்று இரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா காமனெயிக்கு ஆதரவாக மக்கள் ஒரு பேரணியில் கலந்து கொள்கிறார்கள். மொஜ்தபா முன்னாள் உச்ச தலைவர் அலி காமனெயி மகன் ஆவார். இரானுக்காக ஏதேனும் புதிய தலைவரை மனதில் வைத்திருக்கிறீர்களா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டபோது, "அது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை, ஆனால் ஆம், என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது" என்று அவர் கூறினார். பேட்டிக்குப் பிறகு, புளோரிடாவில் குடியரசுக் கட்சியினரிடயே உரையாற்றிய டிரம்ப், இரான் மோதல் குறித்துக் கூறுகையில், "பல வழிகளில் நாம் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டோம், ஆனால் அது இன்னும் முழுமையடையவில்லை. இறுதி வெற்றியை அடையவும், இந்த நீடித்த அச்சுறுத்தலை முழுமையாக ஒழிக்கவும் முன்னெப்போதையும் விட அதிக உறுதியுடன் நாம் முன்னேறி வருகிறோம்" என்றார். நீண்ட கால அடிப்படையில் அமெரிக்கா, இஸ்ரேல் அல்லது அமெரிக்காவின் எந்தவொரு கூட்டாளியையும் தாக்குவதற்கான ஆயுதங்களை இரான் உருவாக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த விரும்புவதாக அவர் கூறினார். பிபிசியின் வட அமெரிக்க செய்தியாளர் அந்தோணி ஜூர்ச்சரின் கூற்றுப்படி, இந்த இலக்கை அடைய இரானில் ஆட்சி மாற்றம் தேவைப்படும், அதை டிரம்பால் இதுவரை சாதிக்க முடியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy8e27kzn1o- உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
ட்ரம்ப் மீது பாலியல் புகார் - புதிய ஆவணங்கள் வெளியீடு வாஷிங்டன்: மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பாலியல் வழக்கில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தமக்கு உடல்ரீதியாக தொல்லை அளித்ததாகப் பெண் ஒருவர் தெரிவித்துள்ள புதிய புகார்கள் அடங்கிய எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வியாழக்கிழமை வெளியிட்டது. மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் மூலம் ட்ரம்ப் தமக்கு அறிமுகமானதாகவும், அதன் பிறகு அவர் தமக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்ததாகவும் அந்தப் பெண் எப்பிஐ அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு அந்தப் பெண்ணிடம் எப்பிஐ நடத்திய பலகட்ட விசாரணைகளின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், தமக்கு 13- 15 வயது இருக்கும்போது எப்ஸ்டீன் மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவராலும் தாம் பாதிக்கப்பட்டதாக அந்தப் பெண் கூறியுள்ளார். எப்ஸ்டீன் தன்னை நியூஜெர்சிக்கு அழைத்துச் சென்று ட்ரம்ப்புக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும், அப்போது தமக்கு நேரிட்ட பாலியல் அத்துமீறலைத் தடுக்க முயன்றபோது தாம் அவரை கடித்ததாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் மிரட்டல் அழைப்புகள் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், ட்ரம்ப் இந்த குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனிடையே, ட்ரம்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எப்ஸ்டீன் விசாரணை விவரங்களை ட்ரம்ப் நிர்வாகம் மறைப்பதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். https://www.hindutamil.in/news/world/sexual-harassment-allegations-against-trump-new-documents-released
Important Information
By using this site, you agree to our Terms of Use.