Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. முன்பள்ளிகளின் கற்பித்தல் முறைகள் சீர்படுத்தி, ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது - வடக்கு மாகாண ஆளுநர் Published By: Vishnu 25 Jan, 2026 | 09:52 PM இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதில் விசேட அக்கறை செலுத்தி வருகின்றார். இத்திட்டம் முழுமையடையும்போது முன்பள்ளி தொடர்பான பல குறைபாடுகள் தீர்க்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். காரைநகர், புதுவீதியில் அமைந்துள்ள அம்பாள் முன்பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (25.01.2026) காலை 9 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: பிள்ளைகளின் ஆளுமை விருத்தியில் முன்பள்ளிக் கல்வியே முக்கிய பங்காற்றுகின்றது. அதுவே சிறந்ததொரு எதிர்காலச் சமூகத்துக்கான அத்திவாரமுமாகும். பெற்றோர்கள் பாடங்களைக் கற்பிக்கும் இடங்களை விட, நல்ல பழக்கவழக்கங்களைப் போதிக்கும் இடங்களிலேயே தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும். சிறுபராயத்தில் அவர்கள் பழகும் நற்பண்புகளே அவர்களைச் சமூகத்தில் சிறந்தவர்களாக வழிநடத்தும். இலங்கையில் முன்பள்ளிகள் வெவ்வேறு கற்பித்தல் முறைகளைக் கொண்டுள்ளன. இதனைச் சீர்படுத்தி, ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு மாகாண சபையால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு போதாது என்பதை நான் அறிவேன். தற்போதைய நிலையில் அதனை உடனடியாக அதிகரிக்க முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் அரசாங்கம் இதனை ஒரு நிரந்தரக் கட்டமைப்புக்குள் கொண்டு வரும்போது இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும். 1970ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இம்முன்பள்ளி, இன்று மக்களின் பங்கேற்புடன் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் எப்போதும் நிலைத்து நிற்கும். காரைநகர் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதேசத்தில், நவீன வசதிகளுடன் கூடிய இக்கட்டடம் அமைந்தமை மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். முன்பள்ளியின் எஞ்சியுள்ள தேவைகளை மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். பிள்ளையார் சனசமூக நிலையம் மற்றும் அம்பாள் முன்பள்ளி நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில், சனசமூக நிலையத் தலைவர் நா.பாலகிருஷ;ணன் தலைமையில் இந் நிகழ்வில் நடைபெற்றது. 107 பேரின் 142 லட்சம் ரூபா பங்களிப்பில் இந்த முன்பள்ளிக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236996
  3. புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபு ஆபத்தானது : பாதுகாப்புத் துறைக்கு அதீத அதிகாரம் - அம்பிகா சுட்டிக்காட்டு! Published By: Digital Desk 3 25 Jan, 2026 | 03:05 PM தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு ( PTA) பதிலாக கொண்டுவரப்பட உள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்ட வரைவு (PSTA) தொடர்ந்தும் பாதுகாப்பு துறையினருக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் சட்ட வரைவாக காணப்படுவதாக இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் (PSTA) தொடர்பாக சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் 1979 ஆம் ஆண்டு தற்காலிகமாக கொண்டுவருகிறோம் எனக்கூறி கொண்டுவரப்பட்டாலும் 1982 இல் நிரந்தரமாக்கப்பட்டு இன்று வரை பயங்கரவாத தடைச் சட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதம் என்றால் என்ன என்பது தொடர்பில் சரியான வரவிலக்கணம் தெரியாத ஒரு சட்டமாக பாதுகாப்பு துறையினர் தாங்கள் விரும்பிய அர்த்தத்தில் வழக்குத் தாக்கல் செய்கின்ற ஒரு சட்டமாக பயங்கரவாத தடைச் சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த சட்டம் வடக்கு கிழக்கு பகுதிகளில் பிரயோகிக்கப்பட்டாலும் கொழும்பில் இடம்பெற்ற அரகளையை அடக்குவதற்காக கடந்த அரசாங்கத்தில் பலர் குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். அப்போதுதான் இந்தச் சட்டத்தின் ஆபத்து தொடர்பில் தெற்கில் உள்ளவர்கள் உணரக்கூடியதாக சூழ்நிலை உருவாகியது. தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் தன்னிடம் ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி ஒரு வருடம் கடந்த நிலையிலும் நீக்கப்படவில்லை. தற்போது சில திருத்தங்களை மட்டும் மேற்கொண்டு அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்ற பெயருடன் ஒரு வரவை தயாரித்து முடித்திருக்கிறார்கள். தற்போது பயன்பாட்டில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்களை அடக்கும் ஒரு சட்டமாக செயற்பட்டு வந்திருக்கின்ற நிலையில் தற்போது புதிய வரைவும் அதே செயற்பாட்டை மேற்கொள்ளக்கூடிய விதத்தில் தயாரிக்கப்பட்டமை ஆபத்தான விடயம். தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை பார்த்தால் இந்தச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் அநேகமானவர்களிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் இலங்கைச் சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளன. உதாரணமாக கூறினால் 18 வருடங்கள் சிறையில் இருந்த சந்திர போஸ் என்ற நபர் தன்னை சிறையில் சித்திரவதை செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெற்றார்கள் என 2021 ஆம் ஆண்டு மேன்முறையீடு செய்த நிலையில் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அவரின் உடல் பகுதிகளில் அனேகமான இடங்களில் தழும்புகள் காணப்பட்டமை சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதை காட்டுவதாக அமைந்தது. பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) பின்னர் 2018 (CTA) , பின்னர் (ATA) வரைபுகள் கொண்டுவரப்பட்டு எதிர்ப்புக்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் தற்போது (PSTA) அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்ற பெயருடன் சட்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்றப்படவில்லை. 2018 ல் கொண்டுவரப்பட்ட வரைவில் நீதித்துறையை பலவீனப்படுத்தி பொலிசாரின் அதிகாரங்களை உயர்த்துவதான சட்ட வரைப்பு தயாரிக்கப்பட்டது. அதேபோன்று தற்போது தயாரிக்கப்பட்ட புதிய சட்ட விரைவில் தடை செய்யப்படும் ஒரு இடத்தினை அறிக்கும் அதிகாரம் ஜனாதிபதியைத் தாண்டி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்படுகிறது. இந்த புதிய சட்ட விரைவில் ஒரு மனிதனுடைய நடமாடம் சுதந்திரத்தை பொலிசார் தீர்மானிப்பது மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் செயல்பாடுகளை தடுப்பதற்கான ஒரு உத்தியாகும் அதேபோன்று பயங்கரவாதம் என்ற சொல் வரையறுக்கப்படாத நிலையில் குற்றம் ஒன்றை ஒருவர் செய்ய பார்க்கிறார் என்ற காரணத்தின் அடிப்படையில் அவரை கைது செய்யும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்படுகிறது. கைது செய்யும் அதிகாரம் புதிய சட்டத்திலும் ஆயுதம் தாங்கிய படைகளிடம் காணப்படுகின்ற நிலையில் 24 மணித்தியாலங்கள் வரை அவருக்குரிய பாதுகாப்புகள் தொடர்பில் சந்தேகங்கள் எழுவதாக அமைகிறது. ஏனெனில் ஆயுதப் படைகளால் கைது செய்யப்படும் நபர் ஒருவரை 24 மணித்தியாலத்திற்கு முன்னர் பொலிஸ் நிலையம் ஒன்றில் ஒப்படைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது. புதிய சட்ட வரைவில் ஏற்கனவே தடுத்து வைக்கும் அதிகாரத்தை நீதித்துறையில் இருந்து நிர்வாகத்துறை தீர்மானித்த நிலையில் சிறு திருத்தமாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால் பிணையில் விடுவிக்கலாம் என்ற ஒரு விடயத்தை சேர்த்திருக்கிறார்கள். அதேபோன்று குற்றம் ஒப்புதல் வாக்குமூலத்தை பொலிசார் தாங்கள் நினைத்தவாறு எழுதி வாங்கும் நிலையை மாற்றி நீதிமன்றத்தின் முன் வரவேண்டும் வீடியோ பதிவு மேற்கொள்ளப்பட வேண்டுமென கூறப்படுகிறது. இது எவ்வாறாக இருந்தாலும் புதிய சட்டத்தில் நீதிமன்றம் பிணை வழங்க முடியுமே அல்லாமல் அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதற்கான அதிகாரம் அற்ற நீதித்துறையாகவே காணப்படுகிறது. ஆகவே பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்ட வரைவும் அடிப்படை உரிமை மீறல்களை புரிவதற்கான ஒரு வரைவாகவே காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்கா, சுவிஸ் , ஆஸ்திரேலியா மற்றும் ஐநாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/236959
  4. புலர் அறக்கட்டளையின் ஐந்தாவது வருடாந்தப் பொதுக்கூட்டம் மூத்தோர் சங்கத்தில் 25/01/2026 நடைபெற்றது தொடர்புகளுக்கு +94 77 777 5448 இந்நிகழ்வில் நிர்வாகிகள் தலைவர் திரு தேவகுமாரன், செயலாளர் திரு மோகனறூபன், பொருளாளர் திரு பாலகிஸ்ணா, திருமதி அபிராமி சிவபவன், திரு இராமலிங்கம், திரு சிவறூபன், திரு இந்திரகுமார் மற்றும் பொதுச்சபை உறுப்பினர்கள் திரு ஜெகஜீவகன், திரு அமிர்தகணேசன், திரு சிறீதரன், திரு ரஞ்சித், திரு கோகிலராஜன், திரு சேந்தன், திரு கரிதாசன், திரு சிறீரங்கன், வீடமைப்பு அதிகாரசபை தொழிநுட்ப உத்தியோகத்தர் திரு சுரேஸ்குமார், திரு சுரேன் தொண்டர்கள் திரு அறிவுக்குமரன், திரு மகிந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். ஆதரவளித்து உறுதுணையாக இருக்கும் உங்களுக்கு எமது நன்றிகள்.
  5. மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க Published By: Digital Desk 3 25 Jan, 2026 | 01:50 PM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க கண்டிக்கு விஷயம் செய்து மல்வத்தை பீடம் மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெற்றார். மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் வண.திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கள் தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின்மகாநாயக்கர் வண. வரகாகொடை ஞானரத்ன தேரர் ஆகியோரைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினார். https://www.virakesari.lk/article/236952
  6. "இலங்கை ராணுவ முகாமில் பாலியல் வன்கொடுமை" - பாதிக்கப்பட்ட பெண்ணும் சர்வதேச அமைப்புகளும் கூறுவது என்ன? பட மூலாதாரம்,UNHR கட்டுரை தகவல் ஆர்.யசிஹரன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன) "இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் வெறுமனே சாதாரண குற்றங்களாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல. மாறாக, அவை வேண்டுமென்றே, திட்டமிட்டு பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும்" என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. ஆனால், ராணுவம் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கின்றோம் என, ராணுவ ஊடகப்பேச்சாளர் வருண கமகே தெரிவித்துள்ளார். அதேபோன்று, ராணுவம் இத்தகைய குற்றங்களில் ஒருபோதும் ஈடுபடவில்லை என, இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கூறுவது என்ன? "இறுதிக்கட்ட போரின்போது ராணுவத்தில் சரணடைந்த பின்னரே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். ராணுவத்தினரால் நேரடியாக பாலியல் கொடுமைக்கு உள்ளாகிய நான் பின்னர் எனது சமூகத்தினாலும் ஓரங்கட்டப்பட்ட ஒருவராக நடத்தப்பட்ட போது அந்த வேதனையில் பல தடவைகள் தற்கொலை செய்துகொள்ள முயன்றேன் " என, இறுதிக்கட்ட போரின் பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான முன்னாள் போராளி ஒருவர் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் போராட்ட அமைப்புடன் இணைந்து மருத்துவ போராளியாக செயற்பட்ட பெண்ணொருவர் பிபிசி தமிழுக்கு வழங்கிய பேட்டியில் இந்த விடயங்களை பகிர்ந்துகொண்டார். அக்காலகட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த வேதனையான சம்பவத்தால் பல ஆண்டுகள் நான் மீள முடியாத அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்" என்றார். ராணுவத்தினரால் நேரடியாக பாலியல் கொடுமைக்கு உள்ளானதாக குற்றச்சாட்டும் அவர், தமது சமூகத்தினாலும் ஓரங்கட்டப்பட்ட ஒருவராக நடத்தப்பட்டதாக தெரிவித்தார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது பாகிஸ்தானில் தயாராகும் போர் விமானத்தை வாங்க இந்த நாடுகள் ஆர்வம் காட்டுவது ஏன்? "கடன் வாங்கி வீடு கட்டினோம்" கோவையில் இந்த நிலங்களை கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது ஏன்? டிரம்பின் அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் இணைவது இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்? அணு ஆயுத சூட்கேசை செயல்படுத்திய ரஷ்ய அதிபர் - உலகம் பேரழிவின் விளிம்பு வரை சென்ற திகில் நிமிடங்கள் End of அதிகம் படிக்கப்பட்டது உயர்தரம் படிக்கும்போது வடக்கு கிழக்கில் அப்போது நிகழ்ந்த போர்க்கால சூழ்நிலைகள் காரணமாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மருத்துவ போராளியாக இணைந்துகொண்டதாக தெரிவித்தார். நேரடியாக போராட்ட களத்தில் இருக்காவிட்டாலும் போராளிகளுக்கு மருத்துவ உதவிகளை செய்து தன்னை ஒரு மருத்துவ போராளியாக மாற்றிக்கொண்டதாக கூறுகிறார் அவர். பின்னர் இறுதிக்கட்ட போர் முடிவில் ராணுவத்திடம் சரணடைந்தபோது பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்ததாக தெரிவித்த அவர், வாழ்நாளில் முகங்கொடுக்க முடியாத வேதனையான நாட்களை ராணுவ முகாமில் கடத்தியதாகவும் கூறினார். "புனர்வாழ்வின் பின்னர் வெளியில் வந்தபோதும் பல்வேறு இன்னல்களை சந்தித்தேன், பின்னர் உறவினரின் உதவியுடன் லண்டனுக்கு வந்த பின்னர் நீண்ட நாட்களாக இந்த மன வேதனையுடன் காலத்தை கடத்திய நிலையில், இப்போது எனக்கான வாழ்க்கையை வாழ ஆசைப்படுகின்றேன்" என கூறினார். "வடக்கு-கிழக்கில் திட்டமிட்டே பாலியல் வன்கொடுமைகள்" - ஐ.நா பட மூலாதாரம்,Getty Images ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளது. "அக்காலகட்டத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகள் வெறுமனே சாதாரண குற்றங்களாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல. மாறாக, அவை வேண்டுமென்றே, திட்டமிட்டு பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும். இந்த நடவடிக்கைகள் போர்க்குற்றங்கள் அல்லது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களாக அடையாளப்படுத்தப்படக்கூடியவையாகும்" என அதில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், அந்த அறிக்கையில், இவை அந்தந்த நபர்களின் ஊடாக தகவல்களைத் சேகரிப்பதற்கும், மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களை ஒடுக்குவதற்கும், பரவலான அச்ச மற்றும் அவமான உணர்வை அந்த சமூகத்திடையே வேரூன்றச் செய்வதற்குமான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வன்முறை சம்பவங்கள் கட்டமைப்பு ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், மோதலினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அதனூடாக வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டன எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது. "இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான பதிவுகள் நீண்டகாலமாகப் பேணப்பட்டாலும், இலங்கை அரசாங்கங்கள் மோதலின் போதான பாலியல் வன்முறைகள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு, வழக்குத் தாக்கல் செய்வதற்குத் தவறியிருப்பதுடன், வன்முறைகளின் தீவிரத்தன்மையைக் குறைத்துக்கூறி அல்லது மறுத்து வந்திருக்கின்றன." எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச சமூகம் இதுபற்றி தீவிர கரிசனையை வெளிப்படுத்தி, நம்பத்தகுந்த பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி வந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் நீதியை அணுகுவதற்கான வாய்ப்பு தொடர்ந்து மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது எனவும் அவ்வறிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், "மோதலின் போதான பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மிக மோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டனைகளில் இருந்து விடுபடும் போக்கு இந்த ஆட்சியிலும் தொடர்வதுடன், இந்த விவகாரங்களில் இன்னமும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் எட்டப்படவில்லை. இந்த மீறல்களிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களில் பெரும் எண்ணிக்கையானோருக்கு நீதி மறுக்கப்பட்டிருப்பதுடன், அத்தகைய மீறல்களுக்கு இடமளித்த கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் இன்னமும் தொடர்கின்றன" எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் கரிசனை வெளியிட்டுள்ளது. மிக மோசமான பாலியல் வன்முறை சம்பவங்கள் தற்போது வரை கவனத்தில்கொள்ளப்படாமலும், பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமலும் இருப்பதானது பாதிக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், அவர்களைப் பெரிதும் நலிவடையச் செய்திருக்கிறது என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. போர்க்கால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அதன் பின்னர் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தவறியிருப்பது பாலியல் வன்முறைகளிலிருந்து நலிவுற்ற சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதில் அரசுகள் அடைந்திருக்கும் தோல்வியையும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதையுமே பிரதிபலிக்கின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. "அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக, 'கடந்த காலங்களில் அரச படையினர் மற்றும் ஏனைய தரப்பினரால் பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன' என்ற விடயத்தை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, பொறுப்புக்கூறலை இலக்காகக்கொண்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மோதல்கால பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டோர் முகங்கொடுத்துவரும் துன்பத்தைப் புரிந்துகொண்டு, அவர்களை மேலும் மன உளைச்சலுக்குள் தள்ளுவதைத் தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் வாழும் இடங்களில் நிறுவப்பட்டுள்ள யுத்த வெற்றிச்சின்னங்களை அகற்ற வேண்டும்" என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. "குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரம்" பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பேச்சாளர் ஜெரெமி லோரன்ஸ், "யுத்த காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல், அந்த உண்மையை அங்கீகரித்தல் மற்றும் இழப்பீடு வழங்கல் என்பன உறுதி செய்யப்படாமையானது, இந்த மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தை உருவாக்கியுள்ளது" என குறிப்பிட்டிருந்தார். 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டு வரப்பட்ட மோதலினால் பாதிக்கப்பட்ட பலர் தற்போதும் நாற்பட்ட உடலியல் உபாதைகள், உளவியல் தாக்கங்கள், தற்கொலை எண்ணங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், பல்வேறு சர்வதேச சட்டங்கள் மற்றும் பிரகடனங்களின்படி மோதல்களின் போதான பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கும், அவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை வழங்குவதற்குமான சட்டக்கடப்பாடு இலங்கைக்கு இருக்கிறது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். "தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட அநீதி" இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை, மோதல் கால பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கான நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு விடுக்கும் தெளிவான அழைப்பாக அமைய வேண்டும் என, சர்வதேச மன்னிப்புச்சபையும் வலியுறுத்தியுள்ளது. மோதலின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதற்கான தூண்டுதலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார், சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங். "தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் வேண்டுமென்றே, பரந்துபட்டளவில், திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை என்ற யாவரும் அறிந்த உண்மை இவ்வறிக்கையில் மீளுறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இவற்றில் சில சம்பவங்களை போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களாக வகைப்படுத்த முடியும்" எனவும் ஸ்மிரிதி சிங் தெரிவித்துள்ளார். "நம்பகமான சர்வதேச பொறுப்புக்கூறல் அவசியம்" பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இந்நிலையில், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (ITJP) வெளியிட்டுள்ள அறிக்கையிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் போர்க்கால சூழலில் பாதிக்கப்பட்ட பின்னர் அகதிகளாக லண்டனில் வசிக்கும் தமிழர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுக்கு அமைய சில தகவல்களை வெளியிட்டுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிர்தப்பிய தமிழர்களுடன் இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட கலந்தாய்வுகளின் முடிவுகளே இந்த அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு ஆய்வு செய்கிறது. அத்துடன் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களில் பலர், போர் முடிந்த பிறகு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கையில் வாழ்ந்தவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்குத் தேவையான ஆதரவுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், முழுமையான உளவியல் மற்றும் மருத்துவ ஆதரவு, பாதுகாப்பான குடியிருப்பு, சமூகத்தில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள், சட்ட ரீதியான தீர்வுகள், குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது போன்றவை இதில் அடங்குவதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது. இலங்கையில் இருந்தபோதும் அல்லது வெளிநாட்டில் அகதியாக வாழ்ந்தபோதும், பயம், அவமானம், தனிமை ஆகியவை தங்கள் வாழ்க்கையை ஆட்கொண்டதாக சாட்சியமளித்த நபர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், பலர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப போராடி வருகின்றதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வன்முறைகள் தமிழர்களின் தனித்துவம், கலாசாரம், மனநிலை ஆகியவற்றை அழிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். பட மூலாதாரம்,SALP படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட ஒருவர் நெருக்கடிக்கு முன்பாகவும், நெருக்கடி காலகட்டம் மற்றும் அதற்கு பின்பு தன் வாழ்க்கை எப்படி மாறியுள்ளது என்பதை வரைந்துள்ளார். தன் உடலில் உள்ள காயங்களைப் பற்றி குழந்தை கேட்டபோது என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை என ஒரு தந்தை வேதனையுடன் பகிர்ந்தார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "இந்த கலந்தாய்வில் கலந்துகொண்ட பிறகு, பாலியல் வன்முறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தேன். இது மிக முக்கியமான உண்மை," என ஒருவர் கூறியுள்ளார் என பல சாட்சியங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பகமான சர்வதேச பொறுப்புக்கூறல் அமைப்புகள், முழுமையான இழப்பீட்டு திட்டங்கள், நீடித்த மனநல ஆதரவு ஆகியவை அவசியம் என வலியுறுத்தியுள்ளது. "தொடர் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகின்றனர்" பட மூலாதாரம்,AMBIKA படக்குறிப்பு,அம்பிகா சற்குணநாதன் இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கையில், "இலங்கையில் யுத்த காலத்தில் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றமையும், அம்மீறல்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை ஊடாக மீளுறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுளார். மேலும், " மீறல்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமல் இருப்பது ஒருபுறமிருக்க குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இதனை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி மனிதப்புதைகுழி பற்றியும், அதற்கு அப்பாலும் பல உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள போதிலும், அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு, உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு அரசாங்கம் இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று தெரிவித்தார் அம்பிகா. "யுத்த காலத்தில் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானவர்கள் அதன் நீட்சியாக தற்போதுவரை பல்வேறு உளவியல் தாக்கங்களுக்கு முகங்கொடுத்துவருவதாகவும், அம்மீறல்கள் பற்றி முறைப்பாடு அளிப்பவர்கள் காவல்துறை மற்றும் ராணுவத்தினரின் தொடர் கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு இலக்காவதாகவும்" அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். இவ்வாறானதொரு பின்னணியில் 'இப்புதிய அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறது என்பது பற்றி தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் அரசாங்கம் உண்மையாகவே ஒரு நியாயமான தன்முனைப்பைக் கொண்டிருக்குமாயின், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகள் இலங்கைக்கு வருவதற்கும், இங்கு அவர்களது பணியை முன்னெடுப்பதற்கும் இடமளிக்கப்பட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். "இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையில் பாரப்படுத்தப்போகிறோமா?" படக்குறிப்பு,வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி 'இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மிக மோசமான அட்டூழியங்கள் இடம்பெற்றதாக நாம் கூறியபோது, அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எனப் பலரும் மறுத்துவந்தார்கள். ஆனால், இப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின் மூலம் நாம் கூறிய அனைத்து விடயங்களும் உண்மை என்பது உறுதியாகின்றது,' என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் பல்வேறு தரப்பினரால் மறுக்கப்பட்டுவந்த பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மீறல்கள் உண்மையிலேயே நிகழ்ந்திருக்கின்றன என்ற உண்மை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை மூலம் நிரூபணமாகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியதுடன், இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஆராய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதேவேளை, "இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு அடுத்தகட்டமாக எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போகிறோம்? இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்தப் போகிறோமா? அப்படி என்றால் அதனை எவ்வாறு செய்வது என்பன தொடர்பில் ஆராய வேண்டும்" எனவும் லீலாதேவி குறிப்பிட்டார். 'ராணுவம் ஒருபோதும் குற்றங்களில் ஈடுபடவில்லை' - ஜெனரல் சவேந்திர சில்வா படக்குறிப்பு,ஜெனரல் சவேந்திர சில்வா தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தின் போது, 53ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக செயற்பட்டிருந்தவரும் முன்னாள் ராணுவத் தளபதியும், பின்னர் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக கடமையாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். "இலங்கையில் மிக நீண்டகாலமாக நிலவிய யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததில் இருந்தே இலங்கை அரசாங்கம் மீதும், ராணுவம் மீதும் தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவது புதிதல்ல. இலங்கை ராணுவம் மீதான போர் குற்றச்சாட்டுகள் இன்னமும் நீங்கவில்லை என தெரிவித்த அவர், ராணுவம் ஒருபோதும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்றார். புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்காகவும், வேறு சில செயற்பாடுகளுக்காகவும் தொடர்ச்சியாக முன்வைக்கும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை கண்டித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். அதேபோல், ராணுவம் மீது களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக இவ்வாறான பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதை தான் முழுமையாக நிராகரிக்கின்றேன் என்றும் எப்போதும் தான் ராணுவத்தின் பக்கம் நின்று குரல் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்தார். "குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கின்றோம்" - ராணுவ ஊடகப்பேச்சாளர் படக்குறிப்பு,ராணுவ ஊடகப்பேச்சாளர் வருண கமகே ராணுவம் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கின்றோம் என, ராணுவ ஊடகப்பேச்சாளர் வருண கமகே தெரிவித்துள்ளார். "இதுவொரு பாரதூரமான குற்றச்சாட்டாகும், ஆனால் எந்தவித அடிப்படையும் இல்லாத முழுக்க முழுக்க போலியாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றே நாம் கூறுவோம். முதலில் இந்த குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது" என்றார் ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே. இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலகட்டத்தில் ராணுவத்தினால் திட்டமிடப்பட்டு இவ்வாறான பாலியல் கொடுமைகள் இடம்பெற்றதாக எந்தவித வழக்கு விசாரணைகளும் இதுவரை இடம்பெறவில்லை என்றார். "சர்வதேச நாடுகளில் உள்ள புலம்பெயர் அமைப்புகளின் நோக்கங்களுக்காக தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன, அவற்றை நாம் கருத்தில் கொள்ளப்போவதில்லை, அதேநேரம் இலங்கைக்குள் தற்போது அமைதியான சூழல் காணப்படுகின்ற நிலையில் அதனை குழப்பவும் நாம் இடமளிக்க மாட்டோம்" என தெரிவித்த ராணுவ பேச்சாளர் வருண கமகே இவ்வாறான திட்டமிடப்பட்ட செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார். முக்கிய குறிப்பு தற்கொலை செய்துகொள்ளும் மனநிலை உருவாகுமேயானால், உடனடியாக தொடர்புகொள்ளும் தொலைபேசி இலக்கங்கள் இலங்கையில் தற்போதும் நடைமுறையில் உள்ளன. 707 308 308, 1333, 1926 போன்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாக, தமது மனநிலையை சரி செய்துகொள்ள முடியும். இந்த இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாக தற்கொலைகளை தடுக்க முயற்சி செய்ய முடியும். இந்தியாவில் உதவியை நாடுபவர்கள் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019 - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y5731rdpeo
  7. சிங்கப்பூரைச் சேர்ந்த ரி.ரி.துரை தம்பதிகள்இ மற்றும் சரசீஜா ராமன் ஆகியோரின் இந்த முயற்சிக்கு பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக.
  8. Today
  9. அமெரிக்காவில் கடும் பனிப்புயல் ; மின்சாரம் துண்டிப்பு ; 14,000 விமானங்கள் இரத்து Published By: Digital Desk 3 25 Jan, 2026 | 11:34 AM அமெரிக்காவின் டெக்சாஸ் முதல் நியூயோர்க் வரை பரவியுள்ள 'ஃபெர்ன்' பனிப்புயல் காரணமாக நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சுமார் 23 கோடி மக்கள் (அமெரிக்க மக்கள் தொகையில் 40%) இந்தப் பேரழிவின் பிடியில் சிக்கியுள்ளனர். பனிப்பொழிவு மற்றும் கடும் காற்றினால் சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை சுமார் 14,500 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் முடங்கியுள்ளனர். கடும் பனிக்கட்டிகள் மின் கம்பிகள் மீது விழுந்ததால், டெக்சாஸ் மற்றும் லூசியானா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 1,60,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இருளில் மூழ்கியுள்ளன. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெற்கு கரோலினா, வெர்ஜீனியா, ஜோர்ஜியா உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு மத்திய அவசர கால நிதி உதவியை (Federal Disaster Assistance) வழங்க அனுமதி அளித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 21 மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்குக் கீழே (மைனஸ் டிகிரி) சென்றுள்ளது. பனிப்புயலுடன் சேர்ந்து 'உறைபனி மழை' பெய்வதால் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுகின்றன. மீட்புப் பணிகளுக்காக 12 மாநிலங்களில் நூற்றுக்கணக்கான தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/236938
  10. வடக்கு மாகாணத்தில் ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் - ஜெயசேகரம் Published By: Vishnu 25 Jan, 2026 | 07:38 PM வடக்கு மாகாணத்தில் ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டமொன்றை சிங்கப்பூரைச் சேர்ந்த புலம்பெயர் தமிழ் குடும்பத்தினர் வழங்க முன்வந்துள்ளனர். என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யாழ் வணிகர் கழக முன்னாள் தலைவருமான இ.ஜெயசேகரம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய வாழ்வாதார சவால்களை எதிர்கொண்டுள்ள சுமார் 1000 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இத்திடத்தின் முதல் கட்ட நிகழ்வு எதிர்வரும் 28ம் திகதி புதன்கிழமையன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சு.முரளிதரனின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 181 பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தக் கூடிய வகையில் அவர்களுக்கு ஏற்ற வாழ்வாதார பொறிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. கடந்தகால போர்சூழ்நிலை காரணமாகவும், அண்மையில் ஏற்பட்ட புயல் அனர்த்தம் காரணமாகவும் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு இந்த உதவித் திட்டம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அவர்களின் குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இத்திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பை சிங்கப்பூரைச் சேர்ந்த ரி.ரி.துரை தம்பதிகள், மற்றும் சரசீஜா ராமன் உள்ளிட்டோர் வழங்க முன்வந்துள்ளனர். இலங்கையில் அதிக வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் கிளிநொச்சி, இரண்டாவது இடத்தில் முல்லைத்தீவு, ஐந்தாவது இடத்தில் மன்னார் மற்றும் பதினொன்றாவது இடத்தில் வவுனியா ஆகிய மாவட்டங்கள் உள்ளதாக அறிகிறோம். அந்த வகையில் உதவித் திட்டம் முதலில் கிளிநொச்சி, இரண்டாவது முல்லைத்தீவு, அதன் பின்னர் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் என்ற ஒழுங்கில் வழங்கப்படவுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/236993
  11. தயவு செய்து அரசியல்வாதிகளையோ அல்லது அரசியல் சார்ந்த கருத்துக்களையோ யாரும் இதற்குள் விதைக்காமல் இருந்தால் நன்று..காரணம் இந்த அரசியல் வாதிகள் நினைத்திருந்தால் கஸ்ரப்பட்ட மக்களுக்கு எவ்வளவோ செய்திருக்கலாம்..அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களையும், தங்களையும் மட்டுமே வளர்த்துக் கொண்டு வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள், வாழவும் போகிறார்கள்.ஆகவே ஏராளனுக்கும் மற்றவர்களுக்கும் இது ஒரு பணிவான வேண்டுகோளாக இருக்கும் என்று நினைக்கிறேன்.நன்றி.
  12. சீலன் தன்னுடைய சம்பளம் 10000 ரூபா, அசிட் வாங்கிய 3200 ரூபா பெற்றுவிட்டார். குடிநீர் தாங்கிக்கான செலவு கணிப்பு கேட்டுள்ளேன். காரைநகர் மலசலகூடம் புதிதாக கட்டுவதற்கான அளவுத்திட்ட மாதிரியை கேட்டுள்ளேன், இன்னும் கிடைக்கவில்லை.
  13. அண்ணை, என்னால் நேர்மையாகச் செயற்பட முடியும் என்ற தற்துணிவில் தான் இந்தப் பணிகளில் ஒரு தொடர்பாளராகச் செயற்பட முன்வந்தேன். இந்தப்பணிகளுக்கு என்னை முன்மொழிந்த @குமாரசாமி அண்ணைக்கு எனது நன்றிகள். இரண்டிரண்டு மலசலகூடங்களாக கட்டிக்கொடுக்கலாம். தேவைக்கு அதிகமாக வங்கியில் நிதியை வைத்திருக்காமல் வேலை முடிய முடிய சேர்க்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக யாழிணைய உறவுகள் தான் நன்றிக்குரியவர்கள். பலரும் தற்போது தயக்கத்துடன் இருப்பார்கள், இனிவரும் காலங்களில் உதவுவார்கள் என நம்புகிறேன்.
  14. வாசித்து பகிர்ந்தபோது புரிந்ததை விட தற்போது அதன் ஆழம் இன்னும் அதிகமாகிறது. இயலாமையுடையவர்களை பாவிகள் என்போர் மன்னிக்கப்படட்டும். அவர்களுடைய சந்ததிகள் நல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளோடும் வாழட்டும். மதிக்கப்படுவது செய்யும் நற்செயல்களால் மட்டுமே. பேராசான் @சுப.சோமசுந்தரம் ஐயாவின் விருப்பக்குறி இத்திரியை மீள வாசிக்க உதவியது. நன்றி ஐயா.
  15. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026 கேள்விக்கொத்து (பங்களாதேஷுக்குப் பதிலாக ஸ்கொட்லாந்து அணி விளையாடுவதால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.) அதிகபட்ச புள்ளிகள் 208 போட்டி முடிவு திகதி வெள்ளி 06 பெப் 2026 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. கூகிள் ஷீற்: https://docs.google.com/spreadsheets/d/1H2HazXerKgB9Ts372VbC-dq8hvn6F9BWuRdki4K_pQc/edit?usp=sharing முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED எதிர் PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCOT எதிர் WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND எதிர் USA 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG எதிர் NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG எதிர் NEP 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL எதிர் IRE 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT எதிர் ITA 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA எதிர் ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN எதிர் SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM எதிர் NED 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ எதிர் UAE 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK எதிர் USA 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG எதிர் SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS எதிர் IRE 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG எதிர் WI 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL எதிர் OMA 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA எதிர் NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND எதிர் NAM 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS எதிர் ZIM 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN எதிர் UAE 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED எதிர் USA 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE எதிர் OMA 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து SCOT எதிர் ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ எதிர் SA 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP எதிர் WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM எதிர் USA 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG எதிர் UAE 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG எதிர் ITA 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS எதிர் SL 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN எதிர் NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE எதிர் ZIM 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT எதிர் NEP 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA எதிர் UAE 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM எதிர் PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND எதிர் NED 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA எதிர் WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL எதிர் ZIM 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG எதிர் CAN 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? USA ?? NED ?? NAM ?? 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ?? SL ?? IRE ?? ZIM ?? OMA ?? 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG ?? WI ?? SCOT ?? NEP ?? ITA ?? 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ ?? SA ?? AFG ?? CAN ?? UAE ?? 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. X1 IND USA NED NAM X2 AUS IRE ZIM OMA X3 WI SCOT NEP ITA X4 SA AFG CAN UAE Y1 ENG BAN NEP ITA Y2 NZ AFG CAN UAE Y3 PAK USA NED NAM Y4 SL IRE ZIM OMA 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) Y2 எதிர் Y3 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத் X1 எதிர் X4 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல Y1 எதிர் Y3 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) Y2 எதிர் Y4 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத் X3 எதிர் X4 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) Y1 எதிர் Y2 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM டெல்லி, X2 எதிர் X4 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ் X1 எதிர் X3 சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) X1 ?? X2 ?? X3 ?? X4 ?? 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) Y1 ?? Y2 ?? Y3 ?? Y4 ?? 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), சுப்பர் 8 குழு 1 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் * பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள் 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, சுப்பர் 8 குழு 2 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் * பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி?
  16. பாகிஸ்தான் விளையாட ஒத்துக்கொண்டுள்ளது. அத்துடன் வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. பங்களாதேஷுக்குப் பதிலாக ஸ்கொட்லாந்து விளையாடும். எனினும் வீரர்களின் பட்டியல் இன்னமும் வெளியிடப்படவில்லை. கூகிள் ஷீற் புதுப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இனி யாழ்களப் போட்டியில் பங்குபற்றுவர்களுக்கு சிரமம் இருக்காது! கூகிள் ஷீற்: https://docs.google.com/spreadsheets/d/1H2HazXerKgB9Ts372VbC-dq8hvn6F9BWuRdki4K_pQc/edit?usp=sharing
  17. அலிபாபாவும், நாற்பது திருடர்களும் கொண்ட தமிழ் ஆயுதக்குழு/அரசியல் கட்சியின் செயல்களில் ஒன்றோ? இலங்கை படைகளின் தேவைகளுக்கு இவ்வாறு மீன் பிடிக்கப்பட்டதோ? சாதாரண மீனவர்கள் இலங்கை கடற்படைக்கு தெரியாமல் வெளிச்சம் பாய்ச்சி, வெடிவைத்து எல்லாம் மீன் பிடிக்க முடியுமா?
  18. ஐரோப்பாவில் புலிக்கொடியேந்தி தனிநாட்டு காணப்புறப்பட்ட தீவிர தேசியர்கள் சிலர் சூரிச்சில் பிரதமர் ஹரணியுடன் போட்டி போட்டு செல்பி எடுத்தார்களே! களவாக முதலீட்டு ஒப்பந்தங்கள் ஏதும் செய்தார்களோ? டம்ப பண்ணிய தமிழ் மக்களின் பணங்கள் ஈரோக்கள் இலங்கை ரூபாகளாக வெள்ளையாக சலவை செய்யப்படுகிறதோ யாரறிவார். 😂 அதை திசை திருப்பதான் சுமந்திரன் காவடி இங்கு ஆடப்படுகிறதோ?
  19. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  20. விக்கியர் காலத்தில் மாகாண சபை நிதிகள் பல துறைகளிலும் மக்களுக்கு உதவாமல் அரச திறைசேரிகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டது அதைக் கூற வந்தேன் கு சா அண்ணை
  21. 🚀 அதிசயம் ஆனால் உண்மை – விண்வெளியில் ஒரு வரலாற்று சாதனை: பூமியிலிருந்து ‘ஒரு ஒளி நாள்’ தொலைவில் வொயேஜர் 1! adminJanuary 25, 2026 சுமார் 48 ஆண்டுகால நெடிய பயணம்… மனிதகுலத்தின் அறிவியலுக்குச் சான்றாக விண்வெளியின் எல்லையில் பயணித்துக் கொண்டிருக்கும் வொயேஜர் 1 (Voyager 1), தற்போது ஒரு புதிய மைல்கல்லை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 🌌 பூமியிலிருந்து சுமார் 16 பில்லியன் மைல்கள் (25.4 பில்லியன் கிலோமீட்டர்) தொலைவைக் கடந்துள்ள இந்த விண்கலம், விரைவில் “ஒரு ஒளி நாள்” (One Light-Day) தொலைவை எட்டவுள்ளது. நாம் அனுப்பும் ஒரு ரேடியோ சிக்னல் (ஒளியின் வேகத்தில் பயணிப்பது) வொயேஜர் 1-ஐ அடைய முழுதாக 24 மணிநேரம் ஆகும். அங்கிருந்து பதில் வர மீண்டும் ஒரு நாள் ஆகும். அதாவது, ஒரு தகவலைப் பரிமாறிக்கொள்ள இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும்! 🛰️ 1977-இல் ஏவப்பட்ட போது, இதன் ஆயுட்காலம் சில ஆண்டுகள் மட்டுமே என கணிக்கப்பட்டது. ஆனால் 48 ஆண்டுகளைக் கடந்தும் இது இன்றும் தகவல்களை அனுப்பி வருகிறது. இது தற்போது சூரிய குடும்பத்தைத் தாண்டி நட்சத்திரங்களுக்கு இடையிலான விண்வெளியில் (Interstellar Space) பயணித்துக் கொண்டிருக்கிறது. (Golden Record): வேற்று கிரகவாசிகள் யாராவது ஒருவேளை இந்த விண்கலத்தைக் கண்டெடுத்தால், பூமியைப் பற்றித் தெரிந்துகொள்ள இதில் மனிதர்களின் குரல், இசை மற்றும் படங்கள் அடங்கிய தங்கத் தட்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. முடிவில்லா இந்த பிரபஞ்சத்தில் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை இந்த விண்கலத்தின் பயணம் நமக்கு உணர்த்துகிறது. மனிதனின் விடாமுயற்சிக்கு இதுவே ஆகச்சிறந்த உதாரணம்! 🌟 https://globaltamilnews.net/2026/227429/
  22. பொதுவாக எமது தமிழ் அரசியல்வாதிகளையே குறிப்பிட்டிருந்தேன், சிறிதரனை மட்டும் குறிப்பிடவில்லை. தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நாளாந்த பிரச்சினைகளை தமது அதிகாரத்திற்குட்பட தீர்த்தல் (தமது வேலையினை ஒழுங்காக செய்தல்), மற்றது வெளிநாடுகளிலிருந்து வரும் சமூக நலன் உதவிகள் மற்றும் எதிர்கால பொருளாதார வள திட்டத்திற்கு உதவி செய்தல், மூன்றாவது தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் உதவுதல். வட கிழக்கு தமிழ் மக்களின் இவ்வாறான மோசமான நிலைக்கு இலங்கை பெரும்பான்மை அரசு மட்டும் காரணம் அல்ல, தமிழ் அரசியல்வாதிகளும்தான். மக்களுக்கு உதவி செய்ய வருபவர்களிடம் இலஞ்சம் கேட்டால் அவர்கள் எவ்வாறு அதனை மேற்கொண்டு செய்வார்கள்? இவர்களை மக்கள் ஏன் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கவில்லை? எதற்காக தொடர்ந்து தெரிவு செய்கிறார்கள்?
  23. டிரம்பிடம் கிரீன்லாந்து: எங்கள் கனிமங்களை விட்டுவிடுங்கள் அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான ஒப்பந்தம் கிரீன்லாந்தின் கனிமங்களைத் தொடக்கூடாது என்று அமைச்சர் கூறுகிறார். கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. "இறையாண்மைக்காக நாம் கனிமங்களை வர்த்தகம் செய்யத் தொடங்க முடியாது" என்று கிரீன்லாந்தின் கனிம வள அமைச்சர் நாஜா நதானியேல்சன் கூறுகிறார். | ஜேம்ஸ் மானிங்/பிஏ படங்கள் கெட்டி இமேஜஸ் வழியாக பிரத்தியேகமானது ஜனவரி 23, 2026 மாலை 6:30 மணி CET மரியான் க்ரோஸ் மற்றும் ஜேக்கப் வெய்ஸ்மேன் எழுதியது பிரஸ்ஸல்ஸ் - கிரீன்லாந்தின் சுரங்க அமைச்சர், தனது தீவின் கனிம வளங்களை அபகரிக்கும் அமெரிக்காவின் முயற்சிகளை நிராகரித்துள்ளார், ஆர்க்டிக் பிரதேசத்தின் பரந்த இயற்கை செல்வத்தின் தலைவிதியை எந்த வெளிப்புற சக்தியும் தீர்மானிக்கக்கூடாது என்று கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே ஆகியோர் மூடிய கதவு பேச்சுவார்த்தைகளை நடத்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு, தீவின் வளங்கள் குறித்த ஒப்பந்தம் உள்ளடக்கியதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியதாக, கனிம வள அமைச்சர் நயாஜா நதானியேல்சன் POLITICO க்கு அளித்த பேட்டியில், “[எங்கள்] இறையாண்மையைத் தவிர மற்ற அனைத்தும் மேசையில் உள்ளன,” என்று கூறினார். இதைச் செய்வதற்கான அவர்களின் உரிமையை நதானியேல்சன் சவால் செய்தார், "எங்கள் கனிமத் துறையின் எதிர்கால மேம்பாடு கிரீன்லாந்திற்கு வெளியே முடிவு செய்யப்படுவதை அவரது நாடு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை" என்று கூறினார். டென்மார்க் நாட்டின் அரை தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்காவிட்டால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது பாரிய வரிகளை விதிப்பதாக டிரம்ப் வாரத்தைத் தொடங்கினார், ஆனால் புதன்கிழமை ரூட்டேவுடன் "எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை" எட்டியதாகக் கூறி பின்வாங்கினார் . ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கிரீன்லாந்தைத் தவிர வேறு எந்த நாடும் அதன் கனிமங்களைக் கட்டுப்படுத்த அனுமதிப்பதும் அடங்கும் என்றால், அது நூக்கிடமிருந்து "வேண்டாம்" என்று அமைச்சர் கூறினார். உலகின் தேவையில் கால் பங்கைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு அரிய மண் தனிமங்கள் , அதிக அளவு எண்ணெய், எரிவாயு, தங்கம் மற்றும் சுத்தமான எரிசக்தி உலோகங்கள் ஆர்க்டிக் தீவில் உள்ளன - ஆனால் அவற்றில் எதையும் பிரித்தெடுக்கவில்லை. கிரீன்லாந்தின் நூக்கில் ஒரு கிரீன்லாந்து கொடி பறக்கிறது. | கெட்டி இமேஜஸ் வழியாக பென் பிர்ச்சால்/பிஏ படங்கள் கட்டமைப்பின் சரியான விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், தீவின் கனிமங்களை மேற்பார்வையிட ஒரு மேற்பார்வைக் குழுவை இது சேர்க்கலாம் என்று ஐரோப்பிய அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை POLITICO இடம் தெரிவித்தார். அந்த சாத்தியத்தை நதானியேல்சன் நிராகரித்தார். "அது இறையாண்மையை விட்டுக்கொடுப்பதற்குச் சமம், அதுதான் நமது அதிகார வரம்பு, நமது கனிமங்களுக்கு என்ன நடக்கிறது," என்று அவர் கூறினார், பலதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் கிரீன்லாந்தின் வளங்கள் தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை பரிந்துரைத்தார். "எந்த ஒப்பந்தமும் இல்லை என்று நான் கூறவில்லை," என்று கிரீன்லாந்து அரசியல்வாதி கூறினார், "கிரீன்லாந்தில் [நேட்டோ] திறனை வளர்ப்பதற்கோ அல்லது எந்த வகையான கண்காணிப்பிற்கோ அரசாங்கத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என்றும், அமெரிக்காவுடன் 2019 சுரங்க ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை உருவாக்கவும் திறந்திருக்கிறது என்றும் கூறினார். "ஆனால் நாம் இறையாண்மைக்காக கனிமங்களை வர்த்தகம் செய்யத் தொடங்க முடியாது," என்று அவர் கூறினார். வெள்ளிக்கிழமை நூக்கில் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃபிரடெரிக் நீல்சனை சந்தித்து டிரம்ப் ஒப்பந்தம் குறித்துப் பேசிய பிறகு, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், நிலைமை மோசமாக இருந்தாலும், "அமெரிக்கர்களுடன் சேர்ந்து முயற்சிக்கும் ஒரு பாதையை நாங்கள் கொண்டுள்ளோம்" என்று கூறினார். நேட்டோ தலைவர் டிரம்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விவரங்களைப் பற்றி விவாதிக்க, வெள்ளிக்கிழமை முன்னதாக பிரஸ்ஸல்ஸில் ருட்டேவை ஃபிரடெரிக்சன் சந்தித்தார். ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்து தான் இன்னும் இருளில் இருப்பதாக வியாழக்கிழமை நீல்சன் கூறினார். கிரீன்லாந்தின் பிரதம மந்திரி ஜென்ஸ் ஃபிரடெரிக் நீல்சன் மற்றும் டேனிஷ் பிரதம மந்திரி மெட்டே ஃபிரடெரிக்சென் நியூக், ஜனவரி 23, 2026. | கெட்டி இமேஜஸ் வழியாக ஜொனாதன் நாக்ஸ்ட்ராண்ட்/AFP நண்பர்கள் அல்ல, கூட்டாளிகள் உலகளாவிய கூட்டணிகள் முறிந்து வருவதால், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் இராணுவ உபகரணங்களை சுத்தம் செய்வதற்கு அவசியமான பொருட்களுக்கான உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் உறுதியற்றதாகி வருவதால், ஐரோப்பிய ஒன்றியம் புதிதாக மூலப்பொருட்கள் விநியோகச் சங்கிலியை உருவாக்க பீதியடைந்துள்ளது. கிரீன்லாந்து ஒரு சாத்தியமான தீர்வாகக் கருதப்படுகிறது, மேலும் 2023 இல் கனிமங்கள் தொடர்பான ஒரு மூலோபாய கூட்டாண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் அதனுடன் கையெழுத்திட்டது. உலகெங்கிலும் உள்ள டஜன் கணக்கான நாடுகளுடன் டிரம்ப் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் தேசிய சட்டங்களை சீரமைப்பதன் காரணமாக, கனிம விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதில் அமெரிக்கா அதிக "விரைவு" காட்டியுள்ளதாக நதானியேல்சன் கருதுகிறார். ஐரோப்பிய ஒன்றியம் "அதைச் செய்வதில் சற்று மெதுவாக உள்ளது, ஏனெனில் இது மிகவும் கடினம்" என்று அமைச்சர் கூறினார். தற்போது, கிரீன்லாந்து தீவில் இராணுவத் தலையீட்டிற்கான சாத்தியக்கூறுகளை டிரம்ப் விலக்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா முன்வைக்கும் ஆபத்து நிலைகளை கிரீன்லாந்து எச்சரிக்கையுடன் மதிப்பாய்வு செய்து வருகிறது . "மக்கள் இன்னும் நெருக்கடியில் உள்ளனர், ஆனால் நாங்கள் மோதல் ஏணியில் இருந்து இறங்கிவிட்டோம்," என்று நதானியேல்சன் கூறினார். ஆனால், "அமெரிக்கா இப்போது ஒரு நட்பு நாடு, அவசியம் ஒரு நண்பர் அல்ல," என்பது தெளிவாகியுள்ளது, அவர் மேலும் கூறினார். https://www.politico.eu/article/greenland-to-trump-hands-off-our-minerals/
  24. உக்கிரேன் ஒரு ஊசலாடும் பலம் கொண்ட ஒரு நாடாக இப்பிராந்தியத்தில் உள்ளது, ஆனால் செலன்ஸ்கி அதனை அரசியல், இராணுவ மற்றூம் பொருளாதார ரீதியாக தோல்வியான நாடாக மாற்றிவிட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தினை பொறுத்தவரை உக்கிரேன் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்தின் இறுதி துருப்பு சீட்டு. இரஸ்சியாவினை பொறுத்தவரை ஒரு நட்டமான முதலீடுதான் உக்கிரேன் (ஐரோப்பாவில் தனது வகிபாகத்தினை பெறுவதற்கு), நீண்ட போரில் தற்போது நிலத்தினை கையகப்படுத்துவதன் மூலம் தனது முகத்தினை காக்க விரும்புகிறது. அமெரிக்கா ஆரம்பித்த பல மோசமான விளைவுகளில் உக்கிரேனும் ஒன்று ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் போலில்லாமல் இலாவகமாக வெளியேறிவிட்டது (not doubling down accept the lost - stop loss). உக்கிரேன் போர்; நேட்டோ, அமெரிக்க கூட்டுத்தோல்வி, இனிவருங்காலத்தில் அதன் சிந்திய விளைவுகள் அதிகமாக பாதிக்கப்பட போவது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்புரிமை நாடுகள், அமெரிக்காவும் தான். உக்கிரேனிற்கு ஒரு அரசியல் அறிவு கொண்ட ஒரு தலைமைத்துவம் எதிர்காலத்தில் ஏற்பட்டால் உக்கிரேன் உள்ளடங்கலாக அனைத்து தரப்பிற்கும் பாதிப்பு குறைவாகும்.
  25. இந்த உக்கிரேன் ஐரோப்பிய ஒன்றிய இணைவில் இரஸ்சியாவின் பங்கு எதுவும் இல்லை (இது உக்கிரேனிற்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் அங்கத்துவ நாடுகளுக்கிடஒஇயேயான பிரச்சினை). உக்கிரனை ஐரோப்பிய ஒன்றிய இணைப்பு ஏற்படுத்துவது யானையினை கட்டி தீனி போடுவது போன்ற பெரும் செலவிலான விடயம், உக்கிரேனிற்கு வெறும் பெயரளவிலான உறுப்புரிமை ஒன்றினை வழங்குவதே அவர்களது நோக்கமாக இருக்கலாம். உண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதற்கேற்ப சூழ்நிலை இல்லை (பொருளாதார பலம்), அத்துடன் இது ஒரு பேச்சளவில் உள்ள திட்டம் என கருதுகிறேன், இவ்வாறு ஒரு பெரிய தொகையினை காட்டி உறுப்பு நாடுகளுக்கு பேதியினை உருவாக்கி அதற்கெதிராக எதிர்ப்பினை ஏற்படுத்தி விட்டு பின்னர் ஒரு பெயரளவான உறுப்புரிமையினை கொடுப்பது நோக்கமாக இருக்கும், உக்கிரேன் அதற்கு காரணம் என சில உறுப்புரிமை நாடுகளின் மீது வன்மத்தினை வளர்த்துக்கொண்டு திரிய ஐரோப்பிய ஒன்றியம் இதில் தந்திரமாக தப்பிவிடும் நோக்கமாக இருக்கும் என கருதுகிறேன்.
  26. பதவி வெறி பிடித்து திரியும் சுத்துமாத்து சுமந்திரனுக்கு, தான் ஏதோ… எம். ஜி. ஆர். என்ற நினைப்பு. 😁 தங்களுக்கு பின்னால் திரியும் ஒரு சில அல்லக்கைகளைப் பார்த்து, தங்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று முதல் அமைச்சர் கனவில் திரிகிறார். 😡 பிச்சைக்காரனுக்கு…. “செக்குருட்டி” வேலை வேணுமாம். 😂 த்தூ…. என்று காறித் துப்பி 💩, மீண்டும் 👡 செருப்படி 🩴 கொடுக்க, தமிழ் மக்கள் தயாராக இருக்கிறார்கள். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.